சத் சங்கம் என்பது என்ன என்றால் திருக்கோவலூர் இடைகழி.ஒருவர் படுக்கும் இடம், இருவர் இருக்க இடம் தந்து, இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்க விரிந்து, நால்வரும் நல்ல கூட்டுறவாய் ஆகும் உணர்வு ஸ்தானம் என்பதுதான் சத் சங்கம்.சாதுக்கள் ஒன்று சேர்ந்தால் அங்கு தெய்வம் முன்னாலேயே வந்து துண்டு போட்டு உட்கார்ந்துவிடுகிறது.ஆன்மிகத்தின் முதல் நுழைவாயிலே சாது சங்கம் தான்.சத் சங்கத்தின் மஹிமை சொல்லும் அளவன்று.பகவத் பாதர்கள் பாடும்பொழுது ‘சத் சங்கத்தினால் பற்றுகளின் சங்கம் விட்டுப் போகிறது. பற்றுகள் விட்டால் நிலைத்த தத்துவம் தூய மனத்தில் தெரிகிறது. தத்வ தரிசனத்தால் வாழும் போதே ஒருவன் முக்தி அடைந்தவனாய் ஆகிவிடுகிறான்’.விண்ணுலகை மண்ணுலகில் கொண்டு வரும் வல்லமை சத் சங்கத்திற்குத்தான் உண்டு.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் நம் அகந்தை என்னும் காளியன் தலையில் ஆடி அடக்கும் பரம்பொருளின் அடிகள்தாம் சாதுக்கள் சங்கம்.ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் ஓர் உரையில் கூறுவார் --“சொந்த பந்தம் இல்லை. நண்பர்கள் கூட்டம் இல்லை. கூட துணைக்கு ஆளில்லை என்று ஏன் வருத்தப் படுகிறாய்? சாதுக்களின் நூல்களை எடுத்துப் படி. அதில் தோய்ந்திருக்கக் கற்றுக் கொள். பாகவதத்தை எடுத்துப் படி. சுகர் வந்து அருகில் அமர்ந்து உன்னிடம் பேசுவார். உன் கஷ்டங்களையெல்லாம் கேட்பார். சமயத்தில் உனக்கு வேண்டிய வழிகளைக் காட்டுவார். ஸ்ரீராமாயணத்தை எடுத்துப் படி. ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் சங்கம் உனக்குக் கிட்டும். ஸ்ரீஹனுமானின் சஹவாஸம் உனக்குக் கிட்டும்.”ஸ்ரீ ப்ரேமிகள் சத்தியத்தைத்தான் பேசியிருக்கிறார்.அந்தக் காலத்திலாவது நூல்கள் மட்டும்தான். ஆனால் நம் காலத்திலோ சத் சங்கத்திற்கு எவ்வளவு சௌகரியங்கள் !! அடேயப்பா !!
கலிகாலத்திற்கு என்று சர்வ மங்களமான முகம் ஒன்று உண்டு. அதைத் தேடிப்பிடித்துப் பார்க்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் சத் சங்க மஹிமை.ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்னும் நிமாய் பண்டிதர். அவரிடம் போனால் மஹாபாவம், பிரேமை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.துளஸிதாஸரிடம் போனால் ஸ்ரீராம நாம மஹிமை என்ன என்று புரியும்.துக்கா ராம், விட்டோபா, மீராபாய் என்று எவ்வளவு மஹான்கள் !!!இந்த விதத்தில் சினிமா நல்ல அருந்துணையாக இருக்கிறது. குறிப்பாக அந்தக் காலப் படங்கள்.ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்னும் நிமாய் பண்டிதரைப் பற்றி அருமையான படங்கள் ‘நடேர் நிமாய்’ என்பதும், ‘நீலாச்சலத்தில் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்’ என்பதும்.1) நடேர் நிமாய் -- http://www.youtube.com/watch?v=GPlnBayQKuE2) நீலாச்சலத்தில் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் -- http://www.youtube.com/watch?v=_wAidByu60U&feature=relmfu3) துளஸி தாஸர் -- http://www.youtube.com/watch?v=JUtVErMfbSY&feature=related4) துக்கா ராம் -- http://www.youtube.com/watch?v=X-4mvbeOOpE&feature=related5) த்யானேஸ்வர் -- http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=jg5oT5qfm7I6) கோரா கும்பர் -- http://www.youtube.com/watch?v=-OQbtAePlcM&feature=related7) பக்த மீரா --http://www.youtube.com/watch?v=7HtID2cORmY&feature=relatedஇன்னும் தொடரும்.சத் சங்கத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் அமைதியாகக் கண்டு பயன் பெறவும், மற்றவர்கள் அவர்களுக்கு இடைஞ்சல் செய்யாமல் அமைதி காக்கவும் ப்ரார்த்தனையோடு நாம் இதில் பங்கு கொள்வோமாக.பக்தர்களின் பெருமை புகலவும் அரிதே !ஜய ஜய ஸ்ரீராமகிருஷ்ண !ஜய ஜய ஸ்ரீராமகிருஷ்ண !!***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்





சத் சங்கம் என்பது என்ன என்றால் திருக்கோவலூர் இடைகழி.ஒருவர் படுக்கும் இடம், இருவர் இருக்க இடம் தந்து, இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்க விரிந்து, நால்வரும் நல்ல கூட்டுறவாய் ஆகும் உணர்வு ஸ்தானம் என்பதுதான் சத் சங்கம்.சாதுக்கள் ஒன்று சேர்ந்தால் அங்கு தெய்வம் முன்னாலேயே வந்து துண்டு போட்டு உட்கார்ந்துவிடுகிறது.ஆன்மிகத்தின் முதல் நுழைவாயிலே சாது சங்கம் தான்.சத் சங்கத்தின் மஹிமை சொல்லும் அளவன்று.
சத் சங்கத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் அமைதியாகக் கண்டு பயன் பெறவும், மற்றவர்கள் அவர்களுக்கு இடைஞ்சல் செய்யாமல் அமைதி காக்கவும் ப்ரார்த்தனையோடு நாம் இதில் பங்கு கொள்வோமாக.பக்தர்களின் பெருமை புகலவும் அரிதே !ஜய ஜய ஸ்ரீராமகிருஷ்ண !ஜய ஜய ஸ்ரீராமகிருஷ்ண !!***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
புரி ஜகந்நாதம் ஆன்மிக மங்களமே உருக்கொண்ட க்ஷேத்ரம்.எத்தனையோ பக்தர்கள் மண்டிய இடம்.
புரி ஜகந்நாத ப்ரசாதம் என்பது மஹா விசேஷம் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் மஹா ப்ரேமையில் படுகாடு கிடந்து ஆடிப்பாடிய பூமி ஜகந்நாத்.அனைத்து மக்களும் இறைவன் முன் சமம் என்பதை எத்தனையோ காலத்திற்கு முன்னிருந்தே காட்டிவரும் இடம்.ஜகந்நாதன் தேர் என்பது ஆடிவரும் ஆன்மிகம்.அதைப்பற்றிய இந்தக் காட்சித் தொகுப்புகள் நன்றாக இருந்தன.ஹரே ராம ஹரே ராமராம ராம ஹரே ஹரேஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ணக்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
2012/2/12 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சத் சங்கம் என்பது என்ன என்றால் திருக்கோவலூர் இடைகழி.ஒருவர் படுக்கும் இடம், இருவர் இருக்க இடம் தந்து, இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்க விரிந்து, நால்வரும் நல்ல கூட்டுறவாய் ஆகும் உணர்வு ஸ்தானம் என்பதுதான் சத் சங்கம்.சாதுக்கள் ஒன்று சேர்ந்தால் அங்கு தெய்வம் முன்னாலேயே வந்து துண்டு போட்டு உட்கார்ந்துவிடுகிறது.ஆன்மிகத்தின் முதல் நுழைவாயிலே சாது சங்கம் தான்.சத் சங்கத்தின் மஹிமை சொல்லும் அளவன்று.
பகவத் பாதர்கள் பாடும்பொழுது ‘சத் சங்கத்தினால் பற்றுகளின் சங்கம் விட்டுப் போகிறது. பற்றுகள் விட்டால் நிலைத்த தத்துவம் தூய மனத்தில் தெரிகிறது. தத்வ தரிசனத்தால் வாழும் போதே ஒருவன் முக்தி அடைந்தவனாய் ஆகிவிடுகிறான்’.விண்ணுலகை மண்ணுலகில் கொண்டு வரும் வல்லமை சத் சங்கத்திற்குத்தான் உண்டு.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் நம் அகந்தை என்னும் காளியன் தலையில் ஆடி அடக்கும் பரம்பொருளின் அடிகள்தாம் சாதுக்கள் சங்கம்.ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் ஓர் உரையில் கூறுவார் --“சொந்த பந்தம் இல்லை. நண்பர்கள் கூட்டம் இல்லை. கூட துணைக்கு ஆளில்லை என்று ஏன் வருத்தப் படுகிறாய்? சாதுக்களின் நூல்களை எடுத்துப் படி. அதில் தோய்ந்திருக்கக் கற்றுக் கொள். பாகவதத்தை எடுத்துப் படி. சுகர் வந்து அருகில் அமர்ந்து உன்னிடம் பேசுவார். உன் கஷ்டங்களையெல்லாம் கேட்பார். சமயத்தில் உனக்கு வேண்டிய வழிகளைக் காட்டுவார். ஸ்ரீராமாயணத்தை எடுத்துப் படி. ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் சங்கம் உனக்குக் கிட்டும். ஸ்ரீஹனுமானின் சஹவாஸம் உனக்குக் கிட்டும்.”ஸ்ரீ ப்ரேமிகள் சத்தியத்தைத்தான் பேசியிருக்கிறார்.அந்தக் காலத்திலாவது நூல்கள் மட்டும்தான். ஆனால் நம் காலத்திலோ சத் சங்கத்திற்கு எவ்வளவு சௌகரியங்கள் !! அடேயப்பா !!
கலிகாலத்திற்கு என்று சர்வ மங்களமான முகம் ஒன்று உண்டு. அதைத் தேடிப்பிடித்துப் பார்க்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் சத் சங்க மஹிமை.ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்னும் நிமாய் பண்டிதர். அவரிடம் போனால் மஹாபாவம், பிரேமை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.துளஸிதாஸரிடம் போனால் ஸ்ரீராம நாம மஹிமை என்ன என்று புரியும்.துக்கா ராம், விட்டோபா, மீராபாய் என்று எவ்வளவு மஹான்கள் !!!இந்த விதத்தில் சினிமா நல்ல அருந்துணையாக இருக்கிறது. குறிப்பாக அந்தக் காலப் படங்கள்.ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்னும் நிமாய் பண்டிதரைப் பற்றி அருமையான படங்கள் ‘நடேர் நிமாய்’ என்பதும், ‘நீலாச்சலத்தில் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்’ என்பதும்.1) நடேர் நிமாய் -- http://www.youtube.com/watch?v=GPlnBayQKuE2) நீலாச்சலத்தில் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் -- http://www.youtube.com/watch?v=_wAidByu60U&feature=relmfu3) துளஸி தாஸர் -- http://www.youtube.com/watch?v=JUtVErMfbSY&feature=related4) துக்கா ராம் -- http://www.youtube.com/watch?v=X-4mvbeOOpE&feature=related5) த்யானேஸ்வர் -- http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=jg5oT5qfm7I6) கோரா கும்பர் -- http://www.youtube.com/watch?v=-OQbtAePlcM&feature=related7) பக்த மீரா --http://www.youtube.com/watch?v=7HtID2cORmY&feature=related
இன்னும் தொடரும்.
சத் சங்கத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் அமைதியாகக் கண்டு பயன் பெறவும், மற்றவர்கள் அவர்களுக்கு இடைஞ்சல் செய்யாமல் அமைதி காக்கவும் ப்ரார்த்தனையோடு நாம் இதில் பங்கு கொள்வோமாக.பக்தர்களின் பெருமை புகலவும் அரிதே !ஜய ஜய ஸ்ரீராமகிருஷ்ண !ஜய ஜய ஸ்ரீராமகிருஷ்ண !!***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆஹா ! சொல்லுங்கோ பாலு சார் !உங்களைத் தூண்டி விட்றதுக்கு இப்படி வழி இருக்குன்னு தெரியாம போச்சே :-))
எப்படி ஆரம்பிக்கலாம்
வருடம் முழுவதும் எரிந்து கொண்டு இருக்கும் புரி கடற்கரையின் சொர்க்க துவரா பற்றியாபுபநேஸ்வரில் இறந்த பல தமிழர்களை நண்பர்களோடு சென்று அவர்கள் குடும்பத்திற்கு சென்னையில் சொல்லிபூரியில் நங்கள் தகனம் செய்த அனுபவத்தை விட
ஐயர் பெண்ணை காதல் திருமணம் செய்த என்னை ,
மகன் போல் நினைத்தவன் மருமகனை ஆகி விட்டானே என்ற கோபத்தில்
தனியாக மிகவும் ஆச்சாரமாய் இருந்து சென்னையில் இருந்து இறுதி காலத்தில் எங்களோடு இருந்து இறந்த என் மாமியாரைஎன் மனிவியுடன் மற்றும் புபனேஸ்வர் தமிழ் நண்பர்களுடன் சென்று அவருக்கு உரிய மரியாதைகள் கொடுத்து தகனம் செய்ததை பற்றியா
இறைவனை தொட்டு வழிபடும் இடம் பற்றியா
சொல்லுங்கள் எப்படி ஆரம்பிக்கலாம் ரங்கன் சார்அன்புடன்சிவ ப்லசுப்ரமணி
ஆஹா! ஶ்ரீரங்கத்திலே லா காலேஜ் வருதாம். அதற்கு முன்னாலேயே ஶ்ரீரங்கம் மோஹன சித்திரகூடம் வந்து சேர்ந்தோமே. ஆமாம். நானும் பூரி யாத்ரைகள் பற்றி எழுத வேண்டாமா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
‘ஜய் ஜகந்நாத் ‘







பிருந்தாவனத்தே கண்டோமே - என்கிறாள் ஆண்டாள்.ஸ்ரீகிருஷ்ணனுடைய வீக்ஷண்யம் பட்டவாறே வெறும் நெருஞ்சிக்காடாய் இருந்த ப்ருந்தாவனம், பசுகு பசுகு என்று அறுக்கத்தொலையாத பசும்புல் மண்டிய நிலமாக ஆகிப்போயிற்று - என்கிறார்கள் வ்யாக்யானக் காரர்கள்.ப்ருந்தாவனத்து மண்ணைக் கொண்டு வந்து தக்ஷிணேஸ்வரத் தவத்தோட்டத்தில் போட்டுக் கொண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நாம் பார்த்தால் நமக்கு அங்கு ஓடும் கார், பஸ், ஒய்யாரமாகச் சாய்ந்திருக்கும் குரங்கு இவை கண்ணில் படுகின்றன.ஒன்றுமில்லை அகக்கண்ணை மூடிக் கொண்டுவிட்டோம். திறக்கவும் மறந்துவிட்டோம்.உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உள் நின்று அறியும் பிரான் ஊதி மலர்த்தும் பொழுது‘போது மலர்ந்தோங்கி வரட்டும் - கண்ணாபோதுதயமாகி வரட்டும்’என்று அகக்கண் மலரும். மலர வேண்டும். மலரட்டும்.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
இன்று மணவாள மாமுனிகள் திருநாடு எழுந்தருளிய தினம். எவரைக் கொண்டல்
வண்ணன், அரங்கத்து அமுதன் தன் ஆச்சர்யன் என்று உலகு அறிய அறிவித்தானோ
அவரின் திருநாடு எழுதல். பெரும்பாலான வைணவ கோயில்களில் பெருமாளே மூத்தோர்
கடன் செய்யும் நியதிகள் பின்பற்றப்படுவதாக மரபு.
மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்!
நா.கண்ணன்
அழகின் மயக்குஅனைவரும் எனக்கு ஏங்கிடுவர்அழகின் உருவெனத் தாம்புகழ்வர்ஆயினும் உன்னை அணைதலே வாழ்வெனஆயிழை வந்தேன் ஹரிதாஸா !அன்பெனை ஏற்பாய் ஹரிதாஸா !
அழகின் மயக்குஅனைவரும் எனக்கு ஏங்கிடுவர்அழகின் உருவெனத் தாம்புகழ்வர்ஆயினும் உன்னை அணைதலே வாழ்வெனஆயிழை வந்தேன் ஹரிதாஸா !அன்பெனை ஏற்பாய் ஹரிதாஸா !
நிச்சயம் ஏற்பேன் பெண்மணியே !தீக்ஷை இதுவும் முடிந்தவுடன்மூன்று லக்ஷம் ஜபம் ஹரிநாமம்முடிந்ததும் உன்மனம் நிறைவேறும்.அதுவரை பெண்ணே துளஸியை வணங்கிஅமர்ந்து உரைத்திடு ஹரிநாமம்ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல்ஹரி ஹரி ஹரி போல் ஹரி போல் போல்முனிவனே உன் ஜபம் முடிந்ததுவா?கனிந்திட நேரம் பிறந்ததுவா ?பெண்ணே ! பொறுமை. முடிந்துவிடும்.எண்ணத்தில் நீயும் ஹரிபோல் போல்.மூன்று நாட்களும் கழிந்தனமுதல்வன் நாமமே ஒலித்ததுமுனிவன் எழுந்தான்மாதவ முரளியின் ப்ரேமையினில்மங்கை எழுந்தாள்மனமாசு அகன்றாள்முனிவன் திருப்பதம் தான் பணிந்தாள்‘ஐயனே ! என்னை மன்னிப்பாய்.ஆசைக்கும் காசுக்கும் விலையானேன்வேசையெனும் சொலுக்கிலக்கானேன்.பொறாமைகே நான் பணியானேன்.பொறுத்தருள்க எம் புண்ணியனே !’ஹரியின்நாமம் உரைத்ததும் உன்னைகோவிந்தன் ஏற்றான் அஞ்சாதே !பொய்மை அகன்றது புண்ணியம் பிறந்ததுஉய்வகை ஆகும் ஹரிநாமம்தெய்வத் திருவருள் வாழ்வு தொடர்ந்திடதொடர்ந்திடு என்றும் ஹரிநாமம்இவ்விடம் உன்னிடம் ஆகிட என்றும்பவபயம் பொன்றப் பாவனம் ஆம்.ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல்ஹரிஹரி ஹரிஹரி ஹரிபோல்போல்***(ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் மிகுந்த அன்புக்கும், மதிப்பிற்கும் பாத்திரமான ஹரிதாஸர் ஒரு யவனர் )
தனதனன தனதனன தனதனன தனதனனதனதனன தனதனன.................. தனதான தானதன
கண்ணை மூடு! கண்ணைத் திற !பக்தி என்றால்அது கண்ணை மூடிக்கொண்டு செய்வதா?அல்லது கண்ணைத்திறந்து கொண்டு செய்வதா?அனைத்து உலகும் அவனுடைய திருமேனி என்றால் கண்ணை மூடினால் என்ன? கண்ணைத் திறந்தால் என்ன?கண்ணுக்குப் புலப்படும் காட்சி ப்ரபஞ்சம்; அகத்தில் துலங்கும் மானத ப்ரபஞ்சம்எல்லாம் அவன் விபூதிதானே.இங்கு விபூதி என்றால் சாம்பல் அன்று. விபவம் என்றால் அவனுடைய வெளிப்படையான தோற்றம்.விபூதி என்றால் அவனுடையவெளிப்பட்ட சம்பத்து.உலகம் என்ற அவன் உருவைக் காணப் பயின்றுவிட்டால்பின்னர் வாழ்பவன்,வாழப்படும் உலகம்,உலகத்துப் பொருள்கள் எல்லாம்அவன் ஆகிய ஒன்றில் அமிழ்ந்து விடுகின்றன.***
கண்ணை மூடு! கண்ணைத் திற !
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரேஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே.
அரங்கன் அண்ணா அருமையாகநடத்தி வருகிறார்;
குறுக்கிடும் நமநமப்பு;
ஒருபுறம் நம்மால் பாவஹாநி ஏற்படுமோ
எனும் பயம் வேறு.
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன.................. தனதான தானதன
சீர்பாத வகுப்பு -
மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு
முறியுமலர் வகுளதள .......... முழுநீல தீவரமும்
சீரரங்கன் வகுப்பு -
இருளிரிய ஒளிவிரிய புலரியெழ உவகைதரு
கருவிமழை எனவரும்நல்........ அருள்கூர்ந்த கீதமென
பொருள்விரிய மருளகல மகிதலத்தில் மனமகிழ
செறியுமுளம் சிறுமைவிட....... திருமாலுக் கேநமது
----------------------
அரங்கனாரின் முயற்சி சீர்பாத வகுப்பை ஒட்டியது
என எண்ணத் தோன்றியது; சீர்பாத வகுப்பின்
இரண்டு அடிகளும் அகத்தியர் குழுமத்தில்
ஹரி அண்ணா கொடுத்திருப்பவைதான்;
ஒப்பீட்டில் தவறிருந்தால் மன்னிக்க
ஹரே, பாஹி !
க்ருஷ்ணா, தாடநாத் த்ராஹி !!
தேவ்
சீரரங்கன் வகுப்பு -
இருளிரிய ஒளிவிரிய புலரியெழ உவகைதரு
கருவிமழை எனவரும்நல்........ அருள்கூர்ந்த கீதமென
அரங்கனார் முன்பு தந்த ‘அழகின் மயக்கு’
பாடலும் இவ்வுண்மையைச் சொல்ல வருகிறது.
சற்று அப்பாடலை உற்று நோக்குவோம் -
அழகின் மயக்கு
அனைவரும் எனக்கு ஏங்கிடுவர்
அழகின் உருவெனத் தாம்புகழ்வர்
ஆயினும் உன்னை அணைதலே வாழ்வென
ஆயிழை வந்தேன் ஹரிதாஸா !
அன்பெனை ஏற்பாய் ஹரிதாஸா !
***************
இதில் வரும் ’ஆயிழை’ யார் ?
அவள் யாரை ’ஹரிதாஸா’ என விளிக்கிறாள் ?
இரண்டாம் பகுதி சொல்லும் ‘தீக்ஷை’ எது ?
அன்பர்கள் யாரும் வினவவில்லை;
அரங்க னாரும் சொல்லவில்லை;
அநுமதி அளித்தால் அடியேன் தொடர்வேன்
தேவ்
மடிப்பாக்கம்வரை போய் மீண்டேன். நடை.வரும்பொழுது நட்டநடு ரோடில் இருட்டு கலந்த ட்யூப் லைட் ஒளியிலும் கண்ணைக் கட்டும் ஒரு படம், பழைய காலண்டராகக் கிடக்கிறது.எனக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவரின் படம். ஆனால் அப்படி ஒரு தெளிவான அச்சில் இதுவரை நான் அவர் படத்தைப் பார்த்ததில்லை.படத்தைப் பார்த்து யார் படம் என்பதை உணர்ந்து, அதன் தெளிவான அச்சை ரசித்து, எல்லாம் பின்ன கணம்தான் ஆகியிருக்கும்.‘ஐயோ!’ என்று வயிறு பகீர் என்றிடக் குனிந்து அதைப் பொறுக்கிக்கொண்டேன்.அக்கம் பக்கம் கடையில் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரி லுக் விட்டதை அப்புறம்தான் கவனித்தேன்.யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?என் தோழரின் படம் தெருவில் கிடக்க எப்படி நான் போகமுடியும்?ஸ்நேகம் மானாபிமானங்களை அறியுமா?கூடவே வந்து என்னோடும் என் குப்பைகளுக்கிடையிலும் ஜம்மென்று அமர்ந்துகொண்டு விட்டார் தோழர், வயதான தோற்றத்திலும் அதே சிரிப்பு. விட்டால் படம் பேசி விடுமோ என்ற துல்யம்.காலண்டர் என்று போட்டுவிட்டு இப்படியா தெருவில் கடாசுவது?பின் எதற்கு இப்படிப்பட்ட படங்களைப் போட்டு விநியோகிக்க வேண்டும்?சரி, தவறு சொல்ல எனக்குத் தெரியவில்லை.படத்தில் உள்ள தோழர், பகவான் ஸ்ரீரமண மஹரிஷி.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



மடிப்பாக்கம்வரை போய் மீண்டேன். நடை.வரும்பொழுது நட்டநடு ரோடில் இருட்டு கலந்த ட்யூப் லைட் ஒளியிலும் கண்ணைக் கட்டும் ஒரு படம், பழைய காலண்டராகக் கிடக்கிறது.
தப்பித்தீர்கள் !முன்னெப்பொழுதோ திருப்புகழில் ஏற்பட்ட உற்சாகத்தில் இப்படி ஓர் அதிகப்ரசங்கித்தனம் ஆரம்பித்தேன்.அப்புறம் தொடரவில்லை. இனித் தொடராது என்றுதான் நினைக்கிறேன். (அப்பா! தப்பித்தீர்கள் )எழுதிய வரை இங்கே --***
தனதனன தனதனன தனதனன தனதனனதனதனன தனதனன.................. தனதான தானதன
கண்ணை மூடு! கண்ணைத் திற !
பக்தி என்றால்அது கண்ணை மூடிக்கொண்டு செய்வதா?அல்லது கண்ணைத்திறந்து கொண்டு செய்வதா?அனைத்து உலகும் அவனுடைய திருமேனி என்றால் கண்ணை மூடினால் என்ன? கண்ணைத் திறந்தால் என்ன?கண்ணுக்குப் புலப்படும் காட்சி ப்ரபஞ்சம்; அகத்தில் துலங்கும் மானத ப்ரபஞ்சம்எல்லாம் அவன் விபூதிதானே.இங்கு விபூதி என்றால் சாம்பல் அன்று. விபவம் என்றால் அவனுடைய வெளிப்படையான தோற்றம்.விபூதி என்றால் அவனுடையவெளிப்பட்ட சம்பத்து.உலகம் என்ற அவன் உருவைக் காணப் பயின்றுவிட்டால்பின்னர் வாழ்பவன்,வாழப்படும் உலகம்,உலகத்துப் பொருள்கள் எல்லாம்அவன் ஆகிய ஒன்றில் அமிழ்ந்து விடுகின்றன.
மூன்று மனங்கள் அளவளாவுகின்றன, அருமையாக, இயல்பு நிலை அமர்ந்திருக்க. நான்காவது என் மனம். வாசற்படியில் தவமிருக்கிறது. அதனுடைய தனிமொழி கேளும். ‘ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் மெய் மறந்து பாடுகிறார். பக்தி பரவசம். ‘அவன் மறந்தானோ’ என்ற ஏக்கம். அவரது மூர்ச்சை, தோளை அழுத்திய பட்டிக்காட்டுப்பெண்ணை, கண்டுகொள்ளவில்லை, ஸ்தூல தேகமாக. சூக்ஷ்மமோ கூடு விடாமல், கூடு பாய்ந்து, இரு நிலைகளிலும் நித்ய வாசம். அதனால் தான், அவள், ‘வாருமய்யா வாஞ்சையில.... ‘ என்று கொஞ்சும் போது,் ஶ்ரீகிருஷ்ண சைதன்யர், ‘நின்பாத தூளிதனை நான் பெறவே கொடுத்துவைத்தேன்’ என்கிறார்."உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை, பருகு நீர்" எல்லாமே கண்ணன். பக்தையின் பாத தூளியும் அவனது திருவடியே என்க. ‘கன்னய்யாவைக் காணவேண்டி கண்மறைச்சக் குத்தம், பிரபஞ்சத்தின் கண்மலர்களை அன்றோ திறக்கிறது.
இன்னம்பூரான்
ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தன் நிலை இழந்து ஸ்ரீகிருஷ்ணனுக்காக ஏங்கி, ஸ்ரீஜகந்நாதனின் கொடிமரத்தின் பக்கமாக நின்றபடி பாடிக்கொண்டிருக்கிறார்.*
ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தன் நிலை இழந்து ஸ்ரீகிருஷ்ணனுக்காக ஏங்கி, ஸ்ரீஜகந்நாதனின் கொடிமரத்தின் பக்கமாக நின்றபடி பாடிக்கொண்டிருக்கிறார்.*
என்று உனைக் காண்பேன் ஜகந்நாதா?இன்று எனக்கருளாய் மமநாதாராதாகாந்தா வ்ரஜ பாலாகேசவ முகுந்த முரளி மனோஹரா
| ஐயா வணக்கம்,சைத்தன்யர் பாடலில் கண் எதிரே கண்ணனை கொண்டு வ்ந்து விட்டார் சத்ஸ்ங்கேவே,நித்சங்கஸ்த்வம் --- On Sun, 4/3/12, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote: |
|
பக்தி ஒரு உளவியல் பலவீனமோ, உளவியல்
குறைபாட்டின் வெளிப்பாடோ அன்று என்பது
நன்கு புலனாகிறது. குணத்தொகுதியான
பருஉடலை மறந்த ஆன்மிக முதிர்ச்சி என்பதை
கௌராங்க தேவரின் சரிதம் நிகழ்ச்சி தோறும்
உணர்த்தி வருகிறது.
‘மத்ஸேவாயாம் து நிர்குணா’ என்று ஐயனும்
திருவாய் மலர்ந்தருளியுள்ளான்
தேவ்
On Mar 3, 10:54 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தன் நிலை இழந்து ஸ்ரீகிருஷ்ணனுக்காக ஏங்கி,
> ஸ்ரீஜகந்நாதனின் கொடிமரத்தின் பக்கமாக நின்றபடி பாடிக்கொண்டிருக்கிறார்.
>
> *
>
> என்று உனைக் காண்பேன் ஜகந்நாதா?
> இன்று எனக்கருளாய் மமநாதா
>
> ராதாகாந்தா வ்ரஜ பாலா
> கேசவ முகுந்த முரளி மனோஹரா
>
> அன்று நீ திரிந்தாய் பன்னிருவனங்களில்
> கன்று காலிகள் மேய்த்துத் திரிந்தாய்
> என்றும் துலாலியின் இனிமையுகந்தாய்
> இன்று எனை நீயும் ஏனோ மறந்தாய் ?
>
> பிரிவினில் துடிப்பேன் கோவிந்தா
> பரிவுடன் அருள்வாய் கோபாலா
> எரிகின்றது உடலெங்கும் கோவிந்தா
> என் கண்காண வருவாய் ஸ்ரீகிருஷ்ணா
>
> கிருஷ்ண முராரீ ! முகுந்த முராரீ !
> கோபால கோவிந்த ராதா விஹாரீ !
>
> *
>
> (பட்டிக்காட்டுப் பெண் ஒருத்தி ஸ்ரீஜகந்நாதனைப் பார்க்க வேண்டி ப்ரயாசை
> பட்டுக் கூட்டமாக இருந்ததால், அங்கு ஏறி இங்கு ஏறி, ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின்
> தோளில் கால் வைத்துக் கொண்டு கொடிமரத்தின் பக்கம் எம்பி ஜகந்நாதனை
> தரிசிக்கிறாள்.....)
>
> ஐயா கன்னய்யா
> சுகமா சொல்லய்யா?
> வெய்யில் கொளுத்தையிலே
> காடு மேடு திரியாமல்
> எண்ணை தேச்சு குளிக்கிறியா?
> என்னைக் கொஞ்சம் நினைக்கிறியா?
> மண்ணைக் கொஞ்சம் தின்னுப்பிட்டு
> மாமிகிட்ட உதை வாங்குறியா?
>
> ஐயா கன்னய்யா !
> அண்ணாரு தான் சுகமா?
> ஒய்யாரமாக நீரு
> எங்க காட்டுப்பக்கம் வருவியளே !
> ஏனய்யா காணவில்ல?
> எங்க எண்ணம் தோணவில்ல?
>
> வேகாத வெய்யில்ல நான்
> உனக்காக இங்கு வந்தா
> ஊர்கூடி வச்சுகிட்டே
> ஓராட்டம் போடுறீரு
> மாராப்பு போடையிலே
> உன் நினைப்பு குத்துதய்யா
> என் நினைப்பு முள்ளாச்சோ?
> எங்களை நீ வெறுத்தாச்சொ?
> கண்களையே வெறுத்துகிட்டுக்
> காணத்தான் ஆகிடுமோ?
>
> கூட்டத்துல கூட்ட குரல்
> கேட்டதுவோ கேக்கலையோ
> வாட்டத்துல பாட்ட மழை
> உன்முகத்தைப் பார்த்துப் புட்டேன்
> ஏட்டெழுதி படிக்காக
> என்னமோ உனைப் பாடுறாக
> காட்டுமணல் குஞ்சத்துல
> கண்டதெல்லாம் மறக்காத
> வாட்டம் மிகுந்திருச்சா
> வாருமய்யா வாஞ்சையில....
> *
>
> (அணுக்கன் கோவிந்தன் விரட்டப் போக, ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தடுத்துத் தம் தோளை
> அலுங்காமல் வைத்திருந்து தீனசுரத்தில் பாடுகிறார்)
> *
>
> கார்மேக வண்ணைக் கண்டாயோ அம்மா?
> பார்புகழும் மன்னனைப் பார்த்தாயோ அம்மா?
> யார்பெற்ற புண்ணியளோ?
> எங்குற்ற விண்ணியலோ?
> நின்பாத தூளிதனை
> நான் பெறவே கொடுத்துவைத்தேன்.
>
> *
>
> ஐயய்யோ சாமீ ! அபசாரம் சாமீ !
> அடியள் நான் பாக்கலையே, ஆகாது சாமீ !
> மன்னிக்கணும் சாமீ!
> மனமறிஞ்ச குத்தமில்ல
> கன்னய்யாவைக் காணவேண்டி
> கண்மறைச்சக் குத்தமிது
>
> பெரும்பெரிய பண்டிதரு
> அரும்பெரிய ஞானியரு
> தருமதுரை செல்வந்தரு
> தரணிவேந்தர் வீரர் எல்லாம்
> கூடி யிருக்கையிலே
> கோவாலு உள்ளிருக்க
> பட்டிக்காட்டாள் நானும் வந்து
> எட்டிஎட்டிப் பார்த்திருக்க
> கன்னய்யன் கண்டுகிட்டான்
> கண்ணடிச்சுப் போகச் சொன்னான்
> எண்ணம்போல் வருவமின்னான்
> என்னிக்குன்னு சொல்லல்லியே
> உன்னிடம் ஏதும் சொன்னா -- சாமீ
> ஊருக்கு சேதி சொல்லு
> கண்ணனைக் கண்ணிமையா
> கவனிச்சுக்க சாமீ நீயும்
> கண்ணு முண்ணு தெரியாம
> காலு வச்சு நின்னுப்புட்டேன்
> கால்விழுந்து கும்பிடுறேன்
> கருணை வையி சாமீ !
> கண்ணின் இமையாகக்
> கண்ணனைக் கருத்து வையி சாமீ !
>
> ***
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> *
>
> On Fri, Mar 2, 2012 at 8:09 PM, Mohanarangan V Srirangam <
>
>
>
>
>
>
>
> ranganvm...@gmail.com> wrote:
> > (ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் அந்திம லீலையில், அவர் ஸ்ரீகிருஷ்ண விரஹ தாபத்தால்
> > (ஸ்ரீ கிருஷ்ணைக் காணாத பிரிவின் வேதனை) ராதையின் மனோபாவத்தில் முற்றித் தன்னை
> > மறந்து துடித்துக் கொண்டிருந்தார். அணுக்கச் சீடர்கள், பக்தர்கள் கண்ணில்
> > வைத்துக் காப்பாற்றிய பொழுதினும் ஒரு நாள் காணவில்லை.
>
> > எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
>
> > அணுக்கன் கோவிந்தனுக்கும், ஸ்வரூப தாமோதரருக்கும் ஒரு சந்தேகம். கடலின் கருமை
> > வண்ணத்தைக் கண்டு கிருஷ்ணன் என்று மயங்கி கடலில் விழுந்து விட்டாரோ என்று
> > துணுக் என்றது.
>
> > கடல் பக்கம் பார்க்கலாம் என்று வரும் பொழுது பீதியடைந்து ஒரு மீனவன் வாய்
> > குழறியபடித் தனனை மறந்து கிருஷ்ண நாமம் உரக்கக் கூவியவாறு ஏதேதோ உளறியபடித்
> > தள்ளாடி வந்ததை நின்று கேட்கின்ற சமயம்......)
>
> > *
> > *
>
> > வலையில் சிக்கிய பூதம்*
>
> > கட்டுமரம் செலுத்திவந்தோம்
> > ஏலேலோ எலேலோ
> > கண்ணிவலை வீசிநின்றோம்
> > ஏலேலோ எலேலோ
> > பெரியமீனு சிக்கிருச்சோ
> > ஏலேலோ எலேலோ
> > அரியபரிசு நமக்கல்லவோ
> > ஏலேலோ எலேலோ
>
> > சாதுமீனு போல இருக்கு
> > ஏலேலோ எலேலோ
> > ஏதும்வம்பு பண்ணலையே
> > ஏலேலோ எலேலோ
> > கள்ளவகை மீன்தானோ
> > ஏலேலோ எலேலோ
> > உள்ளமெல்லாம் துள்ளுவதேன்
> > ஏலேலோ எலேலோ
>
> > வயிறுநிறைஞ்சு பார்த்ததில்ல
> > ஏலேலோ எலேலோ
> > வாழ்க்கைநிறைஞ்சு காண்பதென்ன
> > ஏலேலோ எலேலோ
> > உயிருக்குள்ள ஒளிர்வதென்ன
> > ஏலேலோ எலேலோ
> > மயிலிறகு ஆடக்கண்டால்
>
> ...
>
> read more »
:-)
க.>
2012/3/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> சத்சங்க மஹிமை -- இரண்டாம் பகுதி
>
> http://thiruvarangan.blogspot.in/2012/03/2.html
தெரியுமா? தெரியாதா?போதகர் முகத்தில் ஒரு திருப்தியின் ரேகை. மெல்லிய முறுவல்.“பரவாயில்லியே. இந்த வகுப்பில் வேதாந்தம் சொன்னால் புரியும் போல இருக்கே....இனி ஆரம்பிப்போம்.”வகுப்பு நடந்தது.
தெரியுமா? தெரியாதா?
சார்! அதெல்லாம் வேண்டாம். உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? இரண்டில் ஒன்று. தெரியும்னா தெரியும்னு சொல்லுங்க. தெரியல்லன்னா தெரியல்லன்னு சொல்லுங்க.
-- இது போன்று பட்டுக் கத்தரித்தாற்போல் சில சமயம் சொல்லிவிட முடிகிறதா?ஒரு வேதாந்த வகுப்பு. கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியுள்ளனர்.காரணம் மிகச்சிறந்த வேதாந்த ஞானி ஒருவர் வந்து வகுப்பு எடுப்பதாக ஏற்பாடு.அவர் வகுப்பு எடுத்தால் சித்யந்தே சர்வ சம்சயா: தான். அதாவது சந்தேகங்கள் பொடிப்பொடியாக ஆகிவிடும்.கற்பதில் தாகம். காத்திருக்கும் ஆர்வம். சொன்னதைப் பற்றிக் கொள்ளும் கற்பூர புத்தி.போதும். இதைவிட என்ன வேண்டும் ஒரு வேதாந்த வகுப்பிற்கு?அந்த வேதாந்த போதகர் கொடுத்து வைத்தவர்தான்.ஆனால் நடந்தது என்ன?போதகர் வந்தார்.தொடங்கும் பொழுதே ஒரு கேள்வியைக் கேட்டார்.“நான் இப்பொழுது எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?”“அறிவோம். அறிவோம்..”
“அப்படியென்றால் உங்களுக்கு அதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. நன்றி”எழுந்து போய்விட்டார் போதகர்.
கற்க வந்தோர் புரியாமல் விழித்தார்கள். ‘நாம் ஏதாவது தவறாகக் கூறிவிட்டோமா?’ என்று கவலையுற்றனர்.எப்படியோ அவரிடம் போய் மீண்டும் வருமாறு ஒரு நாள் அழைத்து வந்தனர்.மீண்டும் அதே கேள்வி.அதெல்லாம் ஒரு தடவை சூடு. இரண்டு மடங்கு உஷார் அல்லாவா!“நான் இப்பொழுது எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?”“தெரியாது....தெரியாது...தெரியாது..”“அப்படியென்றால் உங்களுக்கு அதைப்பற்றி நான் எந்த விதத்திலும் கூறி விளக்கவே முடியாது. வீண்வேலை. நன்றி.”எழுந்து போய்விட்டார் போதகர்.
என்னடா இது கஷ்ட காலம்!!இப்படிச் சொன்னாலும் தப்பு. அப்படிச் சொன்னாலும் தப்புன்னா என்னதான் பண்றது. ஆனால் மிகப்பெரிய ஞானி அவர். அவரிடம் கற்பது என்பது அவ்வளவு பாக்கியம். எப்படியும் நாம் நழுவ விடக்கூடாது என்று முழுமூச்சாய் இறங்கி மீண்டும் அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்தனர். ஆனால் பலத்த முன் யோசனை, முன் ஏற்பாடு.வந்தார். தொடங்கும் போது மீண்டும் அதே கேள்வி.ஐயய்யோ.......உஷார் உஷார்....பாதி பேர் தெரியும் என்றார்கள். பாதி பேர் தெரியாது என்றார்கள்.
அப்பாடா! ஒரு வழியாக சமாளித்து விட்டோம்.“அப்படி என்றால் ‘தெரியாது’ என்று சொன்னவர்கள், ‘தெரியும்’ என்று சொன்னவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.”எழுந்து போய்விட்டார் போதகர்.
கற்க விழைந்தோர் அழாக்குறையாகச் சோர்ந்து அமர்ந்துவிட்டனர்.நம்பிக்கை போய்விட்டது.எப்படி வேதாந்த பாடம் கேட்பது என்றே தெரியவில்லையே!மகாஞானி ஒருவர் நமக்குக் கிடைத்தும் நம் துர்பாக்கியம் இவ்வளவுதானா?சரி. கடைசி வாய்ப்பு ஒன்று பார்க்கலாம். பிறகு தெய்வம் விட்ட வழி.பெரும்பாடு பட்டு அழைத்து வந்தார்கள்.யாருக்கும் எந்த முன்னேற்பாடும் இல்லை. எந்த பதைபதைப்போ எதிர்பார்ப்போ எதுவும் இல்லை.என்ன நடக்குமோ! நம் கையில் என்ன இருக்கிறது? நடந்தால் சரி. இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது நம் தலையெழுத்து.நிராசையின் உச்சத்தில் இருந்தார்கள் அனைவரும்.தொடக்கம். மீண்டும் அதே கேள்வி.யாருக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை.தங்களுக்குப் பதில் சொல்லத் தெரிந்த விதத்தில் எல்லாம் சொல்லிப் பார்த்தாயிற்று.இனி தங்கள் பாக்கெட் காலி.யோசனை கூட எதுவும் இன்றி அமைதியாக இருந்தார்கள் அனைவரும்.
போதகர் முகத்தில் ஒரு திருப்தியின் ரேகை. மெல்லிய முறுவல்.“பரவாயில்லியே. இந்த வகுப்பில் வேதாந்தம் சொன்னால் புரியும் போல இருக்கே....இனி ஆரம்பிப்போம்.”வகுப்பு நடந்தது.
*** அருமை ஐயா
“பரவாயில்லியே. இந்த வகுப்பில் வேதாந்தம் சொன்னால் புரியும் போல இருக்கே....இனி ஆரம்பிப்போம்.”
வகுப்பு நடந்தது.
2012/3/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> தற்கால மனிதனின் தவிப்பு
நல்வரவு ஆகுக. साकेत (ஸாகேத்) எழுதிய मैथिलीशरण गुप्त (மைதிலி சரண்
குப்தா அவர்கள்) சீதையின் பாதாரவிந்தத்தில் அமர்ந்துள்ளவர் அல்லவா!
அதனால் தான் நீங்கள் அருமையாக தமிழாக்கம் செய்த
இந்த அமர காவியத்தை
எழுதினார். இதே முதல் சர்க்கத்தில் நான்காவது பக்கத்தில் ஒரு செய்யுள்:
"जागरण है स्वप्न से अच्छा कहीं?" "प्रेम में कुछ भी बुरा होता नहीं!"
‘கனவை விட நனவு என்று தான் நன்றாக இருந்தது? அன்பு கெட்டுப்போகவே போகாது...’
இந்த இலக்கியமும், ஹரிவம்ஶ்ராய் பச்சனின் ‘மதுசாலாவும்’, த்விஜேந்தரலால்
ராய் அவர்களின் ‘சிக்கந்தரும்’ என்னை மிகவும் கவர்ந்த நூல்கள்.
ஸூர்யகாந்த நிராலா அவர்களின் படைப்புகள் (சாயாவாத்) தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு உள்ளனவா?
இன்னம்பூரான்
2012/3/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> தற்கால மனிதனின் தவிப்பு
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
கடவுள் மனிதனாய் வந்ததைப் பாடினார் துளஸி. மனிதனின் கடவுள் தன்மையைப் பாடினார் குப்தா - என்கின்றனர் Danuta Stasik போன்ற அறிஞர்கள்.
ஸூர்யகாந்த் த்ரிபாடீ ஜீ வங்க நூல்களை ஹிந்தியில்
மொழிபெயர்த்தார். ‘ஸ்ரீ ராமக்ருஷ்ண வசநாம்ருதம்’
அவற்றுள் முக்கியமானது; அவரது படைப்புகள்
தமிழில் வந்துள்ளனவா , தெரியவில்லை.
ஏதேனும் வசதியற்ற அறிஞரிடம் கையெழுத்துப்
பிரதியாக உறங்கிக் கொண்டிருக்கலாம்
தேவ்
On Mar 15, 2:05 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> 2012/3/15 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>:
தற்கால மனிதனின் தவிப்பு
கடவுள் என்பது இருக்கா இல்லையா? -- தற்கால மனிதனின் தவிப்பு.இந்தத் தவிப்பில் நிலை கொண்டு ராமனை ஒருவன் அணுகினால் எப்படி இருக்கும்...!அதுவும் ஒரு பக்தர் இந்தத் தவிப்பைக் காவிய வஸ்துவாக ஆக்கினால் அந்தக் காவியம் எப்படி இருக்கும்...!அப்படிப்பட்ட ஒரு காவியம்தான் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த மைதிலி சரண் குப்தாவின் ‘சாகேத்’லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவின் சொல்லாடலாகவே கவி இந்தக் காவியத்தைப் படைத்து ஹிந்தி இலக்கியத்தைப் பெரும் உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார் என்பர்கள்.முகப்பில் அவர் பாடும் தனிச்செய்யுள் கதாவத்துவைக் காட்டி நிற்கிறது.
ராமனை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம்.
’ஏ பச்சை’ என விளித்தான் ஒரு படகோட்டி;
‘பரம்பொருளே’ என விளித்தனர் தவ முனிவர்கள்.
இருவருக்கும் முகம் கொடுத்தான்
தேவ்
On Mar 15, 1:28 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *தற்கால மனிதனின் தவிப்பு*
>
> கடவுள் என்பது இருக்கா இல்லையா? -- தற்கால மனிதனின் தவிப்பு.
>
> இந்தத் தவிப்பில் நிலை கொண்டு ராமனை ஒருவன் அணுகினால் எப்படி இருக்கும்...!
>
> அதுவும் ஒரு பக்தர் இந்தத் தவிப்பைக் காவிய வஸ்துவாக ஆக்கினால் அந்தக் காவியம்
> எப்படி இருக்கும்...!
>
> அப்படிப்பட்ட ஒரு காவியம்தான் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த *மைதிலி
> சரண் குப்தா*வின் *‘சாகேத்’*
>
> லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவின் சொல்லாடலாகவே கவி இந்தக் காவியத்தைப் படைத்து
> ஹிந்தி இலக்கியத்தைப் பெரும் உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்
> என்பர்கள்.
>
> முகப்பில் அவர் பாடும் தனிச்செய்யுள் கதாவத்துவைக் காட்டி நிற்கிறது.
>
> राम, तुम मानव हो? ईश्वर नहीं हो क्या?
> विश्व में रमे हुए नहीं सभी कहीं हो क्या?
> तब मैं निरीश्वर हूँ, ईश्वर क्षमा करे;
> तुम न रमो तो मन तुम में रमा करे।
> --- தமிழில்
> ராமா நீ மனிதன் தானோ?
> கடவுள்தான் நீயலையோ?
> உலகெங்கணும் உள்நிற்கும்
> கடவுள்தான் நீயலையோ?
> கடவுளற்றவனே நானோ?
> கடவுளால் மன்னிக்கப் படுவேனோ?
> மனத்திற்கு நீ வசமில்லையென்றாலும்
> மனமோ உன்வசமன்றி யிலையன்றோ?
> *
> (தமிழாக்கம் என் முயற்சி. ஹிந்தி அறிஞர்கள் மன்னிப்பார்களாக)
>
> ராமா நீயே கவிமய மானவன்.
> உனைப் பாடும் நான் கவியாதல் வியப்போ?
> -- என்று தொடங்கியவர் ஹிந்தியில் புதுயுகம் படைத்தது ‘சாகேத்’ என்னும்
> காவியத்தினால்.
>
> கடவுள் மனிதனாய் வந்ததைப் பாடினார் துளஸி. மனிதனின் கடவுள் தன்மையைப் பாடினார்
> குப்தா - என்கின்றனர் Danuta Stasik போன்ற அறிஞர்கள்.
>
> ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே.
>
> ***
ராமனை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம்.
’ஏ பச்சை’ என விளித்தான் ஒரு படகோட்டி;
‘பரம்பொருளே’ என விளித்தனர் தவ முனிவர்கள்.
இருவருக்கும் முகம் கொடுத்தான்
தற்கால மனிதனின் தவிப்புகடவுள் என்பது இருக்கா இல்லையா? -- தற்கால மனிதனின் தவிப்பு.இந்தத் தவிப்பில் நிலை கொண்டு ராமனை ஒருவன் அணுகினால் எப்படி இருக்கும்...!அதுவும் ஒரு பக்தர் இந்தத் தவிப்பைக் காவிய வஸ்துவாக ஆக்கினால் அந்தக் காவியம் எப்படி இருக்கும்...!
அப்படிப்பட்ட ஒரு காவியம்தான் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த மைதிலி சரண் குப்தாவின் ‘சாகேத்’
http://sivamgss.blogspot.in/2006/12/blog-post_11.html//
என்னோட அபிமான கவிதைத் தொகுப்புகளில் சாகேத் ராமாயணமும் ஒன்று. அனுபவிச்சுப் படிக்கணும். எங்கேயோ மிதப்போம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2012/3/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>
http://sivamgss.blogspot.in/2006/12/blog-post_11.html//
என்னோட அபிமான கவிதைத் தொகுப்புகளில் சாகேத் ராமாயணமும் ஒன்று. அனுபவிச்சுப் படிக்கணும். எங்கேயோ மிதப்போம்.
தமிழகம் வந்தாச்சா திருமதி கீதா?சுபா
சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்குமான வேறுபாட்டை,
சிறிய வார்த்தைகளால் பெரியதொரு விளக்கம் அளித்து, உணரச் செய்துவிட்டீர்கள்,
நன்றி ஐயா,
அன்பன்
கி.காளைராசன்
--
அன்பன்
கி.காளைராசன்
http://thiruppuvanam1.**blogspot.com<http://thiruppuvanam1.blogspot.com/2012/01/5.html>
--ஆனால் எல்லா அகல் விளக்குகளும் வெளிச்சம் தருவது என்னவோ கோளத்தின் உள்ள இருக்கிற பிரதேசத்துக்குத்தான்.கோளத்துக்கு வெளியிலன்னு கேட்டா....இன்னும் பெரிசா கோளம் போட்டுக் காட்றாங்க.என்ன வழி....?***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்.*
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
| மோஹன் எப்போதாவது வந்தாலும் அப்போதைக்கப்போது ஞான் மகிழ்ந்து படிக்கும் இழை மோஹனின் எழுத்துக்கள். நிங்ஙளின் வலைப்பதிவை தேடிப் பிடித்து படித்தேன். எல்லாம் சரி, இன்றைய நிங்ஙளின் கோளம், ஒளி-- அருமையாக எழுதுகிறீர்கள். சிந்திக்க வைக்கிறீர்கள், கண்ணனின்[ஆழ்வாரின்] கவிதையே காணோம், நிங்ஙளின் கவிதை எங்கே? வாசிக்க ஆவலாக உள்ளது. அன்புடன் சேச்சி கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Thu, 29/3/12, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
|
|
|
மூலைக்கு மூலை அப்படி ஒளி வந்த நினைவுக்கு அகல் விளக்குகள் எரிகின்றன.ஆனால் எல்லா அகல் விளக்குகளும் வெளிச்சம் தருவது என்னவோ கோளத்தின் உள்ள இருக்கிற பிரதேசத்துக்குத்தான்.
ஸோலோன் ஸோலோன் !கோபத்தில் துடித்தான் புதுவெற்றியாளன்.தாபத்தில் சிரித்தான் பழம்நன்றியாளன்.ஆபத்து என்று அமைச்சுகள் ஓடிச்சோபன முனிவரன் பெயரது என்றார்.ஸோலோனை அறிந்த சைரஸ் வியந்தான்.
என்ன வழி? என்று முடித்திருந்தேனா.எல்லாரும் என்ன வழி என்று என்னையே திருப்பிக் கேட்கிறாங்க.எனக்கு மாத்திரம் என்னத்தைத் தெரியும்?சரி. ஒன்று செய்வோமே.அவரவர்கள் தமக்கு மனத்தில் பட்ட விதமாகச் சொல்லிப் பார்ப்போமே. என்ன வழி என்று.யாரும் அவங்க என்ன சொல்வாங்க இவங்க என்ன சொல்வாங்கன்னு யோசிக்காம தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதுங்களேன் பார்ப்போம்.வழி கிடைச்சா நல்லது. கிடைக்கலைன்னாலும் லாபம்தான். வேலை மும்முரமா நடக்குதுன்னு ஒரு தெம்பு கிடைக்கும் இல்ல. என்ன நான் சொல்றது....***
On Fri, Mar 30, 2012 at 12:23 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
ஒரு குகை.குகைன்னு சொல்ல முடியாது.
கோளம்.24 பொருட்களால் ஆனது.எங்க எங்கயாவது வெளியில் தொங்குதா? இல்ல கீழ விழுந்து கொண்டிருக்கிறதா? இல்ல மேல எங்கயோ போகுதா? தெரியவில்லை.வெளியில் ஏதாவது இருக்கிறதா? இல்லை வெளி என்று ஏதாவது இருக்கிறதா? தெரியவில்லை.ஏனென்றால் காலம், தேசம், வர்த்தமானம் ஆகிய மூன்றும் இந்தக் கோளத்துக்குள்தான் தாங்கிகளாக இருக்கின்றன.கோளம் எல்லாப் பக்கத்துலயும் மூடிக் கிடக்கு.கோளத்துக்கு வெளியில் யாரும் போனது இல்ல. போக வழியும் இல்ல.வெளியிலிருந்து யாரோ எந்தக் காலத்துலயோ வந்து போனதாகவும், உள்ளிருப்பவங்க யாரோ எப்பவோ வெளியில் போய்த் தெரிந்து வந்ததாகவும் உள்ள இருக்கிறவங்க சேதி சொல்லிக்கிட்டு இருக்காங்க.இன்னிக்கும் பல பேர் வெளியில் போக எம்பிக்கிட்டு இருக்காங்க.சில பேரை வெளியில் இருந்து வந்தவங்கன்னு பலர் சொல்லிச் சுற்றி உட்கார்ந்து கேட்டுகிட்டு இருக்காங்க.ஆனால் வெளியில் போகவும் வழியில்லை. உள்ள வரவும் வழியில்லை.வந்ததா போனதா சொல்றது என்னவோ ஒரு திருப்தியா இருக்கு.எங்கயோ உடைச்சு விட்டு வெளியில் இருந்து ஓர் ஒளி உள்ளாற வந்ததா அகல் விளக்கு ஏற்றி வச்சுருக்காங்க.
மூலைக்கு மூலை அப்படி ஒளி வந்த நினைவுக்கு அகல் விளக்குகள் எரிகின்றன.ஆனால் எல்லா அகல் விளக்குகளும் வெளிச்சம் தருவது என்னவோ கோளத்தின் உள்ள இருக்கிற பிரதேசத்துக்குத்தான்.
ஆகா, ஸ்ரீராம ராம ராம ராம
அல்லின் நாப்பண் - வெகு அருமை !
என்ன எழுத்து , என்ன ஆழம் !!
ஸ்ரீராமகுணம் இப்படியே தொடரும் என
எதிர்பார்க்கிறேன்.
அருமறையின் அடிப்படையான வேள்வி, அறம்
இரண்டும் இராம காதையில் மேலும் பொலிவுற்று
விளங்குவதையும் விவரிக்க வேண்டுகிறேன்
தேவ்
On Apr 1, 10:07 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *ஸ்ரீராமநவமிச் சிந்தனைகள்*
>
> ஸ்ரீராமனின் நினைவு எழும் போது அஃது ஒரு ப்ரத்யேகமான பாவனத்தையும், வாழ்வின்
> அற முடிச்சுகளால் ஆய தீவிர அக்கறையின் கனத்தையும், தன் வாழ்வில் தர்மத்தின்
> பாற்பட்ட தயவு தாட்சண்யமற்ற கடுமையையும், அதே நேரம் பிற உயிர்கள் பால்,
> மனிதர், மனிதரல்லாத என்ற வித்யாசமின்றி, எழும் தங்கு தடையற்ற கருணை, புரையறக்
> கலந்து பழகும் நீர்மை என்ற குணங்களையும் ஒருங்கே சிந்தனையில் உருவப்படுத்தி
> நிறுவிவிடுகிறது.
>
> வான்மீக முனிவனின் தியானமாகிய மலைச் சிகரத்தின் கொடு முடியினின்றும் பொங்கி
> எழுந்து வந்து நிலம் தோயும் புனித அருவிப் புனல் பாயும் புண்ணிய நதியாக
> ஸ்ரீராமாயணத்தைக் கூறுவது மிகவும் ஆழ்ந்து தோய்ந்த ரசிகனின் கூற்று என்பது
> அப்பொழுதுதான் புரியும்.
>
> பிரச்சனைகளையெல்லாம் தீர்த்த நிவாரணங்களாகத் தந்து தியான விஷயமாக ஆகும் தெய்வ
> வருகைகள் நிகழ்த்தும் மனத்தூய்மையை, ஸ்ரீராமன் எதிர்கொண்ட ப்ரச்சனைகளே நம்
> மனத்தில் ஏற்படுத்திவிடுகின்றன. தர்ம சங்கடங்கள் என்ற மனப்பயிற்சிகளில்
> தேரும் போது அங்கு நிகழும் சித்த சுத்திதான் பலன் என்பது புரிகிறது, அந்தத்
> தர்மச் சங்கடங்களில் கண்டெடுத்ததாக இதிஹாசம் காட்டும் தீர்வுகளில் நாம்
> அப்பொழுதைக்கு உடன்பட்டாலும் சரி, அன்றி உடன் படாது போயினும் சரி.
>
> சுமந்திரனை விடுத்துக் காட்டிற்குள் அண்ணலும், தேவியும், இளவலும் ஏகும்
> கட்டத்தைக் கம்பர் கவியாக்கும் போது
>
> தையல் தன் கற்பும், தன்
> தகவும், தம்பியும்,
> மையறு கருணையும்,
> உணர்வும், வாய்மையும்,
> செய்யதன் வில்லுமே,
> சேம மாகக்கொண்டு
> ஐயனும் போயினான்,
> அல்லின் நாப்பணே.
>
> என்று கூறுகிறார்.
> *
> *
> *அல்லின் நாப்பண்* படித்த காலம் தொட்டு என் மனத்தில் அரற்றும் தீஞ்சொற் கோவை.
>
> தேவியின் கற்பு, அதற்கேற்ற தன் தகவு, தம்மின் நிழலும் அடியிணைகளுமாகத் தொண்டு
> செய நோற்ற தம்பி.
>
> மையறு கருணை -- இன்னார், இனையார், மனிதர், விலங்கு என்று பாராத கருணை.
>
> ப்ரதிபலன் எதிர்பார்க்காத கருணை.
>
> தான் தெய்வம் என்று காட்டாது உலக உயிர்களோடு ஒன்றுற, காடும் வேடும் கலந்து
> பழகத் திரிந்த கருணை;
>
> அந்தக் கருணைக்கு அடிப்படையாக நிற்கும் விரிந்து பரந்த உணர்வு.
>
> ப்ரபஞ்சம் தழுவிய உணர்வின் செழுமைக்கு வேர்க் காலாய் நிற்கும் சத்திய தர்சனம்.
>
> இந்தக் கருணைக்கும், உணர்வுக்கும், வாய்மைக்கும் உருவகமாகத் திகழும் செய்ய
> வில்.
>
> கருணையின் காரணமாக மட்டுமே குவிகின்ற வில்.
>
> உணர்வு போல் சேய்மையைச் சிறிதும் கருதாது சென்று எய்யும் வில்.
>
> வாய்மைபோல் பொய்க்காது இலக்கினை அடைவிக்கும் வில்.
>
> தையல்தன் கற்பு, தன் தகவு, தம்பி --
>
> மையறு கருணை, உணர்வு, வாய்மை --
>
> மூன்று மூன்றாக அடுக்கிய கம்பர் செய்ய வில் என்ற ஒரே உருவகத்தில், ஒற்றைப்
> படிமத்தில் இந்த இரு மூன்றுகளைக் காட்டித் தரும் நேர்த்தி.
>
> செய்ய வில்லாகச் சேமம் செய்யும் தையல்தன் கற்பு, தன் தகவு, தம்பி -- இவர்தாம்
> துணை.
>
> செய்ய வில்லாகச் சேமம் செய்யும் மையறு கருணை, உணர்வு, வாய்மை -- இவைதாம் துணை.
>
> எதற்கு?
>
> அல்லின் நாப்பண் செல்வதற்கு.
>
> இருட்டுக்குள் போவதற்குத் துணையா?
>
> காட்டின் இருட்டுக்குள் போகக் கருணை, உணர்வு, வாய்மை, கற்பு, தகவு இதெல்லாம்
> எதற்குத் துணையாக?
>
> அப்பொழுது இந்தத் துணைகளுடன் ஐயன் புகுந்த அல்லின் நாப்பண் என்பது அந்த வெறும்
> கானக இருட்டா?
>
> கதையின் *போக்கு*, கானகத்தைக் காட்டும் எனினும், கதையின் *நோக்கு* காட்டும்
> அல்லின் நாப்பண் என்ன?
>
> தெய்வமே அவதாரம் எடுத்து வரும் பொழுது பவத்தின் இருளில் சேமம் செய்து வரும்
> துணைகளாக இவற்றைக் கவி காட்டுகின்றார் என்னும் பொழுதுதான் இந்த அல்லின்
> நாப்பண் எனபது ஸம்ஸாரக் கானகத்தின் பவ இருள் என்பது அர்த்தமாகிறது.
>
> ஸ்ரீமத் பாகவதத்தில் தர்மம் என்பது கலியினால் நலியப்பட்டு அவதியுறும் நிலையைப்
> பசுவின் கால்கள் வெட்டுண்ணும் சித்திரமாகக் காட்டப் பட்டிருக்கும்.
>
> தர்மம் நலிவெய்தத் தெய்வம் வந்து உயர்த்துகிறது என்ற கருத்தைக் கம்பரும்
> கட்டுகின்ற இடம் அருமை.
>
> மருமத்துத் தன்னை ஊன்றும்
> மறக்கொடும் பாவம் தீர்க்கும்
> உருமொத்த சிலையி னாரை
> ஒருப்படுத் துதவி நின்ற
> கருமத்தின் விளைவை உன்னிக்
> களிப்பொடு காண வந்த
> தருமத்தின் வதனம் என்னப்
> பொலிந்தது தனிவெண் திங்கள்.
>
> தர்மம், தன் மருமத்திலேயே கொண்டு வந்து தன்னை ஊன்றும் வன்முறையும், கொடுமையும்
> ஆன பாவத்தைத் தீர்க்கும் வழி அறியாது திகைத்த தருமம்;
>
> நெளிந்து நெளிந்து பாம்பு போல் தருமத்தின் மர்மத்தில் நோவு படுத்தும்
> பாவத்தின் உயிர் முடிக்கும் இடி போன்ற வில்லினை ஏந்தியவர்களைக் கண்டதும்
> தர்மம் உள்குளிரக் காண்கிறது போன்று இருக்கிறதாம் எது?
>
> பொலிகின்ற தனி வெண் திங்கள்.
>
> கூடாக் கூட்டத்தால் இதுகால் நலிந்து பனிபடு காரடைந்த திங்களாய் இருந்த தர்மம்,
> மர்மத்தில் புகுந்த நோய்க்கு மருந்தாக வந்து நிற்பாரைக் கண்டதும் பொலிகின்ற
> தனி வெண் திங்களாக ஒளிர்கிறது.
>
> (தர்மத்தைத் தம் மருமத்தே கொண்டு இலங்கும் மாட்சியினார் பாவத்தை முடிக்கும்
> உரும் என்ன சிலையைத் தாங்கி வந்தார் என்பதும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளத்
> தக்கதே.
>
> ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்ற முனி வாக்கியத்திற்குப் பொருள் காட்டுவதாய்
> இருக்கும்)
>
> அது வரையில் அற நெறி என்ற கடுமையில் பரிதி போல் வெம்மை காட்டி நின்ற தர்மம்,
> அறத்தின் சிறப்பு தண்ணளி என்ற மருந்தால் நோய் தீர்க்கும் நீலவான் நிறத்து
> அண்ணலைக் கண்டு நெஞ்சு குளிரத் தண்மை ஊட்டி ஒளிரும் தனி வெண் திங்களாய்ப்
> பொலிந்தது.
>
> இது போன்று பல சிந்தனைகள் ஸ்ரீ ராம நவமியில் தோன்றுகின்றன.
>
> கம்ப ராமாயணத்தில் மிகைப் பாடல்களில் கருத்து செலுத்தும் பொழுது சில பாடல்கள்,
> சில வரிகள் சிந்தையைக் கவர்கின்றன.
>
> கம்பர் பாடினாரா, இடைச் செறுகலா, வெள்ளியா, பித்தளையா அந்த வாதங்கள் ஒரு புறம்
> இருக்க, யாரோ காவியத்தைக் கற்ற மாந்தர் தம் கருத்துகளை, உணர்ச்சிகளைப்
> பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், மார்ஜினல் நோட்ஸ், கோடபத்ரம் என்ற வகையில்
> எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
>
> ’நாராயணாய நம’ என்னும் நல்நெஞ்சர்
> பார் ஆளும் பாதம் பணிந்து ஏத்தும் ஆறு அறியேன்;
> கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
> ஆராதனை என் அறியாமை ஒன்றுமே.
>
> நாரணன் விளையாட்டு எல்லாம்
> நாரத முனிவன் கூற
> ஆரணக் கவிதை செய்தான்,
> அறிந்த வான்மீகி என்பான்;
>
> நாடிய பொருள் கைகூடும்;
> ஞானமும் புகழும் உண்டாம்;
> வீடு இயல் வழி அது ஆக்கும்;
> வேரி அம் கமலை நோக்கும்;
> நீடிய அரக்கர் சேனை
> நீறுபட்டு அழிய, வாகை
> சூடிய சிலை இராமன்
> தோள் வலி கூறுவோர்க்கே.
>
> எங்கும் பொலியும் பரஞ்சுடர் ஆகி,
> எவ்வுயிரும்
> மங்கும் பிறவித் துயரற,
> மாற்று நேசம்
> தங்கும் தருமத்து உரு ஆகி,
> தரணி மீது
> பொங்கும் கருணைப் புத்தேள் கருத்து
> யாம் எவன் புகல்வோம்?
>
> வேதம் அதனுள் விளை பொருள்
> விகற்பத்துள் அடங்காச்
> சோதி மயமாய்த் துலங்கி,
> தொல்லுயிர்த் தொகை பலவாய்,
> ஓது புவனம் உதரத்துள்
> ஒடுக்கியே, பூக்கும்
> ஆதி முதல்வன் அமர் இடம்
> அயோத்தி மா நகரம்.
>
> உந்தி அம்புயத்து உதித்தவன்
> உறைதரும் உலகும்,
> இந்திராதியர் உலகமும்,
> நடுக்குற இரைத்து,
> வந்து தோன்றினள் வரநதி;
> மலைமகள் கொழுநன்
> சிந்திடாது, ஒரு சடையினில்
> கரந்தனன் சேர.
>
> புல் நுனித் தரு பனி என,
> வர நதி, புனிதன்
> சென்னியில் கரந்து ஒளித்தலும்,
> வணங்கினன், திகைத்து
> மன்னன் நிற்றலும், ‘வருந்தல்; நம்
> சடையள், வான் நதி இன்று’
> என்ன விட்டனன், ஒரு சிறிது;
> அவனி போந்து இழிந்தாள்.
>
> ***
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> *
ஸ்ரீராமநவமிச் சிந்தனைகள்
தையல் தன் கற்பும், தன்தகவும், தம்பியும்,மையறு கருணையும்,உணர்வும், வாய்மையும்,செய்யதன் வில்லுமே,சேம மாகக்கொண்டுஐயனும் போயினான்,அல்லின் நாப்பணே.
என்று கூறுகிறார்.
அல்லின் நாப்பண் படித்த காலம் தொட்டு என் மனத்தில் அரற்றும் தீஞ்சொற் கோவை.
தேவியின் கற்பு, அதற்கேற்ற தன் தகவு, தம்மின் நிழலும் அடியிணைகளுமாகத் தொண்டு செய நோற்ற தம்பி.மையறு கருணை -- இன்னார், இனையார், மனிதர், விலங்கு என்று பாராத கருணை.ப்ரதிபலன் எதிர்பார்க்காத கருணை.
தான் தெய்வம் என்று காட்டாது உலக உயிர்களோடு ஒன்றுற, காடும் வேடும் கலந்து பழகத் திரிந்த கருணை;
அந்தக் கருணைக்கு அடிப்படையாக நிற்கும் விரிந்து பரந்த உணர்வு.
ப்ரபஞ்சம் தழுவிய உணர்வின் செழுமைக்கு வேர்க் காலாய் நிற்கும் சத்திய தர்சனம்.
இந்தக் கருணைக்கும், உணர்வுக்கும், வாய்மைக்கும் உருவகமாகத் திகழும் செய்ய வில்.
கருணையின் காரணமாக மட்டுமே குவிகின்ற வில்.உணர்வு போல் சேய்மையைச் சிறிதும் கருதாது சென்று எய்யும் வில்.வாய்மைபோல் பொய்க்காது இலக்கினை அடைவிக்கும் வில்.தையல்தன் கற்பு, தன் தகவு, தம்பி --மையறு கருணை, உணர்வு, வாய்மை --
மூன்று மூன்றாக அடுக்கிய கம்பர் செய்ய வில் என்ற ஒரே உருவகத்தில், ஒற்றைப் படிமத்தில் இந்த இரு மூன்றுகளைக் காட்டித் தரும் நேர்த்தி.செய்ய வில்லாகச் சேமம் செய்யும் தையல்தன் கற்பு, தன் தகவு, தம்பி -- இவர்தாம் துணை.செய்ய வில்லாகச் சேமம் செய்யும் மையறு கருணை, உணர்வு, வாய்மை -- இவைதாம் துணை.எதற்கு?
அல்லின் நாப்பண் செல்வதற்கு.இருட்டுக்குள் போவதற்குத் துணையா?காட்டின் இருட்டுக்குள் போகக் கருணை, உணர்வு, வாய்மை, கற்பு, தகவு இதெல்லாம் எதற்குத் துணையாக?அப்பொழுது இந்தத் துணைகளுடன் ஐயன் புகுந்த அல்லின் நாப்பண் என்பது அந்த வெறும் கானக இருட்டா?
கதையின் போக்கு, கானகத்தைக் காட்டும் எனினும், கதையின் நோக்கு காட்டும் அல்லின் நாப்பண் என்ன?
தெய்வமே அவதாரம் எடுத்து வரும் பொழுது பவத்தின் இருளில் சேமம் செய்து வரும் துணைகளாக இவற்றைக் கவி காட்டுகின்றார் என்னும் பொழுதுதான் இந்த அல்லின் நாப்பண் எனபது ஸம்ஸாரக் கானகத்தின் பவ இருள் என்பது அர்த்தமாகிறது.
நீண்ட நாட்களுக்குப்பின் இணையத்திற்குள் நுழைந்தபோது நண்பர் திரு மோகனரங்கனின் இழையைப் படிக்கும் நல் வாய்ப்புக்கிடைத்தது.
என்பது அயோத்தியா? இல்லை உம் எழுத்தா?
க.>
2012/4/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> எழுதியும் எழுதாதும் உள்ளத்தால் கலக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றியும்,
> வணக்கங்களும்.
>
> ஷைலஜா, தேவ் சார், காருண்ணம் ஐயா ஆகியோரெல்லாம் நெடுநாளாக இந்தப் பக்கமே
> காணவில்லை.
>
> இன்று இந்த இடுகையால் ’ஈட்டம் கண்டிடக் கூடிக் காணும் கண்பயன்’ ஆகிறது. நன்றி.
ஸ்ரீராமநவமிச் சிந்தனைகள்
தேவ்
On Apr 2, 2:37 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> வழக்கம் போல் ஓரமாய் நின்று படித்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
>
> On Mon, Apr 2, 2012 at 10:37 AM, Mohanarangan V Srirangam <
>
>
>
>
>
>
>
> ranganvm...@gmail.com> wrote:
> > *ஸ்ரீராமநவமிச் சிந்தனைகள்*




ஓயா ஊஞ்சல்உணர்த்திக்கும் உணரா நிலைக்கும்ஊஞ்சல் ஒன்றினை ஆட்டிடும் மனமே***(jânh, cet acet khambh dôû என்ற கபீர் பாடலின் மொழிபெயர்ப்பு )
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
உணர்த்திக்கும் என்றிருப்பது உணர்வுக்கும் என்று வந்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு எளிதாகப் புரியும்.
மூலத்தையும் கொடுத்திருக்கலாமோ? என்றாலும் இதைப் படிக்கையில் மன ஊஞ்சல் ஆட ஆரம்பிச்சதை இன்னும் நிறுத்தவில்லை. உணர்த்திக்கும் என்றிருப்பது உணர்வுக்கும் என்று வந்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு எளிதாகப் புரியும்.
தப்பாய்ச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும். <35B.gif><35B.gif><35B.gif><35B.gif>
On Tue, Apr 3, 2012 at 1:44 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:ஓயா ஊஞ்சல்உணர்த்திக்கும் உணரா நிலைக்கும்ஊஞ்சல் ஒன்றினை ஆட்டிடும் மனமே***(jânh, cet acet khambh dôû என்ற கபீர் பாடலின் மொழிபெயர்ப்பு )--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil




நீங்கள் தப்பாய்ச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன், கீதா.உணர்த்திக்கும் என்றிருப்பது உணர்வுக்கும் என்று வந்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு எளிதாகப் புரியும்.இங்கே நம்ம கவிஞரின் தமிழ் இலக்கணம் புகுந்திருக்கிறது என்று நினைக்கிறேன். உணர்த்திக்கும் என்பதை "உணரச் செய்யும்" என்று நான் புரிந்துகொள்கிறேன்.மத்தபடி, உங்கள்பாடு, உங்கள் கவிஞர்பாடு! எனக்கு விடுதலை.On Apr 2, 2012, at 5:08 PM, Geetha Sambasivam wrote:மூலத்தையும் கொடுத்திருக்கலாமோ? என்றாலும் இதைப் படிக்கையில் மன ஊஞ்சல் ஆட ஆரம்பிச்சதை இன்னும் நிறுத்தவில்லை. உணர்த்திக்கும் என்றிருப்பது உணர்வுக்கும் என்று வந்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு எளிதாகப் புரியும்.தப்பாய்ச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும். <35B.gif><35B.gif><35B.gif><35B.gif>
எனவே உணர்த்தி என்பது பொருத்தமாக வரும் என்று நினைத்தேன்.




On Tue, Apr 3, 2012 at 5:38 AM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
மூலத்தையும் கொடுத்திருக்கலாமோ? என்றாலும் இதைப் படிக்கையில் மன ஊஞ்சல் ஆட ஆரம்பிச்சதை இன்னும் நிறுத்தவில்லை. உணர்த்திக்கும் என்றிருப்பது உணர்வுக்கும் என்று வந்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு எளிதாகப் புரியும்.
உணர்வுக்கும் என்றா?......முதலில் அப்படித்தான் போடப் போனேன். ஆனால் உணர்வு என்பது எப்பொழுதும் இருப்பது. எல்லா நிலைகளிலும்.இங்கு கபீர் பேசுவது becoming aware and going out of awareness என்ற தொனியில் பேசுகிறார்.
எனவே உணர்த்தி என்பது பொருத்தமாக வரும் என்று நினைத்தேன்.
கர்ர்ர்ர்ர்ருத்துகளுக்கு நன்றி. :-)***


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உணர்த்தி -- இந்தச் சொல் என் படைப்பன்று. ஏற்கனவே இதே பொருளில் ஈடு வியாக்கியானத்தில் ஆளப்பட்ட பெயர்ச்சொல் வடிவம்.ஏதோ என்னால் ஆன தொண்டு என்று கிடங்கிலிருந்து எடுத்துப் பயன் படுத்தினேன். கற்றோர் களியாது போயினும் முனியாதிருப்பரேல் நன்று.***"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
உணர்த்தி -- இந்தச் சொல் என் படைப்பன்று. ஏற்கனவே இதே பொருளில் ஈடு வியாக்கியானத்தில் ஆளப்பட்ட பெயர்ச்சொல் வடிவம்.
மெட்ராஸ் யுனிவர்ஸிடி தமிழ் லெக்ஸிகன், உணர்த்தி என்ற பெயர்ச்சொல் வடிவத்தைக் காட்டி அதற்குப் பயன்பாட்டு உதாரணமாக ஈடு வியாக்கியானம் திருவாய்மொழி 6 ஆம் பத்தைக் காட்டுகிறது.Being aware என்ற பொருளில் அவண் ஆளப்பட்டிருப்பது நல்ல தத்துவப் பொலிவுடைய சொல்லாட்சிகள் தமிழிலிருந்து மறைந்துபடுகின்ற அவலத்தைக் காட்டுகிறது.
ஏதோ என்னால் ஆன தொண்டு என்று கிடங்கிலிருந்து எடுத்துப் பயன் படுத்தினேன். கற்றோர் களியாது போயினும் முனியாதிருப்பரேல் நன்று.***
On Tue, Apr 3, 2012 at 9:28 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
உணர்த்திக்கும் என்பது புதிய வடிவப் படைப்பு.2012/4/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
எனவே உணர்த்தி என்பது பொருத்தமாக வரும் என்று நினைத்தேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கார்டோனாவுடன் நீங்கள் பழகியதைக் குறிப்பிடும் போதெல்லாம் என் கண்கள் வியப்பிலும், பொறாமையிலும் அகல விரிகின்றன.பாணினி வ்யாகரணத்தைப் பற்றிய அவருடைய எழுத்துகள் -- ஓ ! அவற்றைப் படிக்குங்கால் அவருக்கு நான் மானஸிக மாணவனாக இருந்திருக்கிறேன். What a piece of work !!***




கீதம்மாவோட சேர்ந்து நானும் அவர்கள் பின்னால் ஒளிந்து கொண்டு வாய் பிளந்து பார்க்கிறேன்
சந்திரா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
ஆஹா, அருமை.
ஆறும் பேறுமாய் அரங்கன்,
ஆகாரத்ரய ஸம்பந்நையாய்ப்
பிராட்டியார் !
கத்யத்தைக் கண்முன் நிறுத்துகிறது.
வாழ்க
தேவ்
On Apr 5, 9:38 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *ஸ்ரீராம நவமிச் சிந்தனைகள்*
>
> *ஒரு பங்குனி உத்திரம்*
>
> ஒரு பங்குனி உத்திரம்.
>
> அதற்கு முதல் நாள்.
> நல்ல இரவு.
>
> நிலவு காய்கிறது.
>
> காய்தல் கதிரவரின் செயல் அன்றோ !
>
> நிலவுக்கு ஏன் செயல் மாறாட்டம்?
>
> நல்ல தாகம்.
> நீர் நிலை கண்ணுக்குத் தெரிகிறது.
> ஆனால் இறங்கும் வழி எதுவும் புலப்படவில்லை.
> அந்த நிலையில் இருக்கிறாள்
> ஓர் ஆடக வளைக்குயில்.
>
> உயிர் நிலை இறங்கித் தெருவில் நடந்தது ஒப்ப நம்பியைப் புறத்தே கண்டவள்
> அகத்திலும் கண்டால் அமைதி ஏது?
>
> இரவோ இளைத்தவரை நலியும் இழிதகைமை கொண்டது போல் நின்று நலிந்து
> நகர மாட்டேன் என்கிறது.
> இரவு நகர்ந்தால்,
> விடிவு புலர்ந்தால்,
> விரிகதிர் எழுந்தால்
> ஒரு புதுமையான சூரிய உதயம் ஆகுமே !
>
> என்னது ! கதிரோன் உதித்த பின்னையும் ஒரு புது ஞாயிறா?
>
> ஆம் ஒளி ஞாயிறு உதிப்பதைத்தானே உலகம் கண்டிருக்கிறது.
>
> கரு ஞாயிறு உதிப்பதைக் கண்டிருக்குமா உலகம்?
>
> உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்னும்படி மறைபொருள் தெளிந்தாரை அன்றோ உலகம்
> என்று சொல்வது !
>
> மறைகளே அவனைக் காண்பம், அவனைக் காண்பம் என்னும் பெருநசையாலே சென்று இன்னும்
> தொடர்ந்த வண்ணமே இருப்பன அன்றோ !
>
> அந்த மறையில் வல்லவர்களுக்கு இது அபூர்வ வாய்ப்பாயிற்றே !
>
> மறை காணாத பரம்பொருளை மன்னுலகில் அடி பயிலக் காணும் கரு ஞாயிறாய்க் கண்டு
> விடலாமே !
>
> ஆயினும் அவன் காட்டினால்தானே அவன் பரம்பொருள் என்பதைக் காணவும் முடியும்.
>
> உரு ஞாயிறை ஊனக்கண் கொண்டு காணலாம்.
>
> பத்துடை அடியவர்க்கு எளியவன்;
> பிறர்களுக்கு அரிய வித்தகன்
> என்னும் படியான கரு ஞாயிறைக் காண
> அவன் அன்றோ விழியும், பார்வையுமாகி
> நிற்க வேண்டும்.
>
> ஆனால் என் மனமோ பெரும் துப்பு துலக்குவதில் மிகத் திறமை சாலி போலும் !
>
> அவனுடைய திருவடிகளே கதி என்று பிடித்துக்கொண்டால் ஒரு நாளும் இழவோம், அவனும்
> நமை விட்டு மறையான் என்பதை உணர்ந்தன்றோ,
>
> *‘கரு நாயிறு போல்பவர் காலொடு போய் *
> *வரு நாள் அயலே வருகிறது *இந்த மனம்*’ *
>
> ஆம் மனம் அவருடைய திருவடிகளையே பற்றாசாகக் கொண்டு வரும்.
>
> இன்னும் ஒரு நாழிகைதான் இருக்கிறது விடிய.
>
> ஆனால் அந்தோ அது ஒரு நாழிகையா?
>
> பொங்கிப் பொங்கி அலை வீசா நிற்கும் ஏழ் கடலின் வேலையையும் இந்த ஒரு நாழிகையே
> காட்டிவிடும் போலன்றோ உளது !
>
> இது ஒரு நாழிகைப் போதில் பல்லூழிக் காலத்தையே காட்டி நிற்கும் கரு நாழிகை.
>
> கடல்களோ தாம் நீரை கார்மேகத்திற்குக் கொடுத்துப் பின் அவற்றிடமிருந்து
> வளையமாகப் பெற்று நீர் அளவு மிகுந்து அதனால் இன்னும் அலையெறியும் முடியா
> புணரி.
>
> *அது போல் இந்தக் கரு நாழிகையும் என் வினைகளோடு கொடுக்கல் வாங்கல்
> வைத்துக்கொண்டு தம் காலத்தின் நீட்சியை முடிவின்றி ஆக்கிகொண்டு விட்டன. அதனால்*
> *இது ஒரு நாழிகை இல்லை. *
> *கரு நாழிகை.*
>
> *கனை ஏழ் கடல் போல், கரு நாழிகைதான், *
> *வினையேன் வினையால் விடியாவிடின் *
>
> என் செய்வது?
>
> நிலவுக்கென்று ஒரு வெய்யில் உண்டு.
> வேல் என நீளும் அதன் கதிருக்கென்று
> ஓர் அனலும் உண்டு.
>
> இப்பொழுதோ நிலவு காய்கிறது. ஆம் கதிரவன் போன்று வெம்மை மிகுந்து காய்கிறது.
>
> *அயில்வேல் அனல் கால்வன ஆம்; *
> *நிழல் ஆய் *
> *வெயிலே என நீ விரிவாய், நிலவே ! *
>
> விடியாத கொடிய இரவு.
> வெய்யிலாகிக் காயும் நிலவு
> அயில் வேல் என நுழையும்
> கதிர்வாய் அனல் ஆகிப் புகும் நேரம்
> மிக மோசமான புலி ஒன்று
> தென்றல் என்னும் பெயர் கொண்டு
> இரை தேடுகிறது.
> தென்பொதிகைக் குகையில் அதன் வாசம்;
> மணமும் குளிர்ச்சியும் அதன் வாய்
> என்பது அதனைக் காணாதார் கூற்று;
> நெருப்புமிழும் வாய் கொண்ட அந்தப் புலி
> ஒளியுடைய நிலாக்கற்றைப்
> பற்களைக் காட்டி
> இரை தேடிய வண்ணம் திரிகிறது.
>
> ஆனால் என்ன இவர்!
> குல மன்னவர்தானே !
> இப்படியா கன்னியரை விடாமல்
> பகலும் இரவும் பக்கமும் எதிருமாகிச்
> சுற்றிக் கொண்டே இருப்பது !
> பகலில் கண்காண நடந்தும்
> இரவில் கண்ணுக்குள் நடந்தும்
> என்ன இவர்!
> குல மன்னவர் போன்றா நடந்து கொள்கிறார்?
> வீரருக்கும் வீரனாகிச் சேவை புரியும்
> ஒரு சேவகனாக அன்றோ
> விடாமல் நம்மைத் தொடர்கிறார்
> அல்லும் பகலும்.
> ஆனாலும் *ஒரு சேவகனார்* அன்றோ !
>
> *ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து *
> *உலகங்கள் உய்ய *
> *செருவிலே அரக்கர் கோனைச் செற்ற *
> *நம் சேவகனார்*
>
> அன்றோ!
>
> நம்பியும் விடியலை நினைத்து ஏங்கிப் பின் திரு மஞ்சனம் ஆடி மணக்கோலம்
> பூண்கின்றான்.
>
> மணக்கோலத்தை யாங்ஙனம் கூறுவது?
>
> *முப்பரம் பொருளிற்குள் முதலை *
> *மூலத்தை *
> *இப்பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை *
> *அப்பனை *
> *அப்பினுள் அமிழ்தைத் *
> *தன்னையே ஒப்பனை *
> *ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ?*
>
> மணத்தவிசில் வந்து பெருமாளும் பிராட்டியும் எய்தி இருந்த கோலம் எப்படி
> இருந்தது என்று எப்படி உரைப்பது?
>
> உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒன்றுரைக்கலாம்.
>
> நம்பியின் கையது ஒரு மா வீடு.
>
> அந்த முத்திப் பேரின்பத்தை அவன் அளிக்க வேண்டும் எனில் நங்கை நல்லாளின்
> பரிவும், நமக்கு அவன் அருளும் முனைப்பில் அவன் மனத்தை யோகிக்கச் செய்யும்
> பரிந்துரையும் வேண்டும்.
>
> இப்பொழுது சேர்த்தியாய் அமர்ந்த கோலம் முத்தி தரும் அவன் அருளும், அவன் அருளப்
> பரிந்துரைக்கும் அன்னையின் கனிவும் இணைந்து அமர்ந்த கோலம் இஃதன்றோ !
>
> முக்தி ப்ரதானமும், புருஷகாரமும் சேர்த்தியாய் அமர்ந்த நல்லடிப் போது இதுவன்றோ
> !
>
> *மன்றலின் வந்து, *
> *மணத் தவிசு ஏறி, *
> *வென்றி நெடுந்தகை வீரனும், *
> *ஆர்வத்து இன் துணை அன்னமும், *
> *எய்தி இருந்தார்; *
> *ஒன்றிய *
> *போகமும் யோகமும் ஒத்தார்.*
>
> ஆயிர நாமச் சிங்கம் -- என்பது ஆயிர நாமம் கொண்ட அண்ணல்.
>
> ஆயிர நாமங்களுக்கும் தன் ஒரு நாமமே ஈடாக உடைய சிங்கம்.
>
> எழுந்திடு நரர்களில் புலியே -- உத்திஷ்ட நரசார்த்தூல -- என்று கூப்பிட்டு
> இன்புற்றான் ரிஷி.
>
> ஆயிர நாமச் சிங்கம் என்று அழைத்துத் தன் அகம் குளிர்கிறான் இங்கு கவி.
>
> *பங்குனி உத்திரம் ஆன பகற்போது, *
> *அங்க இருக்கினில், *
> *ஆயிர நாமச் சிங்கம் *
> *மணத் தொழில் செய்த திறத்தால், *
> *மங்கல அங்கி, *
> *வசிட்டன் வகுத்தான்.*
>
> போகமும் யோகமும் ஒத்தாராம் திவ்ய தம்பதிகளின் சேர்த்தியில் இன்று அடிக்கீழ்
> அமர்ந்து புகுவோம்.
>
> ஸ்ரீராம ஸ்ரீராம ஜெய சீதா ராம.
>
> ***
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்.
>
> *
ஸ்ரீராம நவமிச் சிந்தனைகள்
ஸ்ரீராம நவமிச் சிந்தனைகள்ஒரு பங்குனி உத்திரம்
‘கரு நாயிறு போல்பவர் காலொடு போய்
வரு நாள் அயலே வருகிறது இந்த மனம்’
ஆம் மனம் அவருடைய திருவடிகளையே பற்றாசாகக் கொண்டு வரும்.இன்னும் ஒரு நாழிகைதான் இருக்கிறது விடிய.ஆனால் அந்தோ அது ஒரு நாழிகையா?பொங்கிப் பொங்கி அலை வீசா நிற்கும் ஏழ் கடலின் வேலையையும் இந்த ஒரு நாழிகையே காட்டிவிடும் போலன்றோ உளது !இது ஒரு நாழிகைப் போதில் பல்லூழிக் காலத்தையே காட்டி நிற்கும் கரு நாழிகை.கடல்களோ தாம் நீரை கார்மேகத்திற்குக் கொடுத்துப் பின் அவற்றிடமிருந்து வளையமாகப் பெற்று நீர் அளவு மிகுந்து அதனால் இன்னும் அலையெறியும் முடியா புணரி.
அது போல் இந்தக் கரு நாழிகையும் என் வினைகளோடு கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டு தம் காலத்தின் நீட்சியை முடிவின்றி ஆக்கிகொண்டு விட்டன. அதனால் இது ஒரு நாழிகை இல்லை.
கரு நாழிகை.
கனை ஏழ் கடல் போல், கரு நாழிகைதான்,
வினையேன் வினையால் விடியாவிடின்
என் செய்வது?நிலவுக்கென்று ஒரு வெய்யில் உண்டு.வேல் என நீளும் அதன் கதிருக்கென்றுஓர் அனலும் உண்டு.இப்பொழுதோ நிலவு காய்கிறது. ஆம் கதிரவன் போன்று வெம்மை மிகுந்து காய்கிறது.
அயில்வேல் அனல் கால்வன ஆம்;
நிழல் ஆய்
வெயிலே என நீ விரிவாய், நிலவே !
ஆனாலும் ஒரு சேவகனார் அன்றோ !
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து
உலகங்கள் உய்ய
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற
நம் சேவகனார்
அன்றோ!
நம்பியும் விடியலை நினைத்து ஏங்கிப் பின் திரு மஞ்சனம் ஆடி மணக்கோலம் பூண்கின்றான்.மணக்கோலத்தை யாங்ஙனம் கூறுவது?
முப்பரம் பொருளிற்குள் முதலை
மூலத்தை
இப்பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை
அப்பனை
அப்பினுள் அமிழ்தைத்
தன்னையே ஒப்பனை
ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ?
மணத்தவிசில் வந்து பெருமாளும் பிராட்டியும் எய்தி இருந்த கோலம் எப்படி இருந்தது என்று எப்படி உரைப்பது?உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒன்றுரைக்கலாம்.நம்பியின் கையது ஒரு மா வீடு.அந்த முத்திப் பேரின்பத்தை அவன் அளிக்க வேண்டும் எனில் நங்கை நல்லாளின் பரிவும், நமக்கு அவன் அருளும் முனைப்பில் அவன் மனத்தை யோகிக்கச் செய்யும் பரிந்துரையும் வேண்டும்.இப்பொழுது சேர்த்தியாய் அமர்ந்த கோலம் முத்தி தரும் அவன் அருளும், அவன் அருளப் பரிந்துரைக்கும் அன்னையின் கனிவும் இணைந்து அமர்ந்த கோலம் இஃதன்றோ !முக்தி ப்ரதானமும், புருஷகாரமும் சேர்த்தியாய் அமர்ந்த நல்லடிப் போது இதுவன்றோ !
மன்றலின் வந்து,
மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந்தகை வீரனும்,
ஆர்வத்து இன் துணை அன்னமும்,
எய்தி இருந்தார்;ஒன்றியபோகமும் யோகமும் ஒத்தார்.
ஆயிர நாமச் சிங்கம் -- என்பது ஆயிர நாமம் கொண்ட அண்ணல்.ஆயிர நாமங்களுக்கும் தன் ஒரு நாமமே ஈடாக உடைய சிங்கம்.எழுந்திடு நரர்களில் புலியே -- உத்திஷ்ட நரசார்த்தூல -- என்று கூப்பிட்டு இன்புற்றான் ரிஷி.ஆயிர நாமச் சிங்கம் என்று அழைத்துத் தன் அகம் குளிர்கிறான் இங்கு கவி.
பங்குனி உத்திரம் ஆன பகற்போது,
அங்க இருக்கினில்,
ஆயிர நாமச் சிங்கம்
மணத் தொழில் செய்த திறத்தால்,
மங்கல அங்கி,
வசிட்டன் வகுத்தான்.
போகமும் யோகமும் ஒத்தாராம் திவ்ய தம்பதிகளின் சேர்த்தியில் இன்று அடிக்கீழ் அமர்ந்து புகுவோம்.ஸ்ரீராம ஸ்ரீராம ஜெய சீதா ராம.***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்.
*
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
ஸ்ரீராம நவமிச் சிந்தனைகள்ஒரு பங்குனி உத்திரம்
ரசிப்பதற்கும், ருசிப்பதற்கும் கூட பிராப்தி வேண்டும்!
க.>
2012/4/6 shylaja <shyl...@gmail.com>:
குலசேகர ஆழ்வார் பாசுரம் நினைவுக்கு வந்தது.
கண்ணால் எப்படிப்பருகுவது என நினைத்தேன்..நடந்ததைப் பார்ப்பதுபோலவே வடித்தால் அது கண்ணால்பருகினதாய் அர்த்தம் தானே?! உங்கள் யாவர் எழுத்தும் அப்படித்தான் இருக்கிறது இங்கு. ரசிக்கிற மனசாவது இருக்கேன்னு சின்ன திருப்திதான் கண்ணன்!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவலை. ஷைலஜ்ஜா என்றால் மொக்கைப் புகழ் என்பது மாறி, அழகான கேள்விகள் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சு. மிக்க மகிழ்ச்சி.( :-)) தப்பா எடுத்துக்காதீங்க தாயீ ! சும்மா தமாஷுக்குச் சொன்னேன். ஓர் ஆதங்கம்தான்)கண்பயன் --ஒரு விஞ்ஞானி இருக்கிறார். விலை உயர்ந்த ஒரு மைக்ராஸ்கோப் கண்டு பிடித்துப் பெரும் செலவில் உருவாக்குகிறார். எதற்கு மிக நுண்ணிய ஒரு உயிரியின் வடிவைக் காண. அவ்வளவு பெருக்கத்திறன் எண்ணிக்கை கொண்ட மைக்ராஸ்கோப்புக்குத்தான் அந்த நுன் உயிரி அகப்படும். ஒரு நாள் பரிசோதனையைத் தொடங்குகிறார். பார்த்தால் என்ன என்னவெல்லாமோ நுண் உலகத்தில் கண்ணுக்குப் படுகிறது. ஆனால் அந்த உயிரி மட்டும் காணவே காணோம்.சரி செய்த செலவெல்லாம் வ்யர்த்தம் போலும் என்று சோர்ந்த ஒரு நாளில் எதேச்சையாக அந்த ஆடியில் டான்ஸ் ஆடிக்கொண்டு வருகிறது அந்த நுண் உயிரி.ஆஹா...! அதன் வடிவம் தெளிவாகத் தெரிகிறது.! இவ்வளவு நாள் காத்திருந்தது வீண் போகவில்லை. இதைக் காணவேண்டும் என்று உருவாக்கிய இந்தக் கண் இன்றுதான் பயனுடையதாக ஆனது.காணும் கண் பயன் ஆவதே !அது போல் இறைவனைக் காணத்தான் இந்தக் கண் பயன்படவேண்டும்.ஆனால் ஊனக்கண்ணிற்கு இறைவன் ஒரு நாளும் புலப்படான்.அவனைக் காண வேண்டுமென்றால் ஞானக் கண் என்று சொல்லப்படும் சாத்திரமாகிய திருஷ்டி தேவை. ஆனால் சாத்திரத்தைக் கைக்கொண்டும் பலர் அதனால் தேவையற்ற பலவற்றையும் காண்பார்களாய், குறை பார்வையாளர்களாய், குதிருஷ்டிகளாய் ஆகின்றனரே அன்றி காண வேண்டியதைக் காண்பார் இல்லை.அபூர்வமான அந்தக் கண் பயனின்றிக்கே ஒழிகிறது. என்னே !ஆனால் என்று அடியாருக்குள் பகவான் உறைகிறான் என்பதை நன்கு ஒருவன் உணர்கிறானோ, அந்த அடியார்கள் பெருக்கமாய்க் குழுமியிருக்கக் காண்கிறானோ அன்றுதான் அந்த சாத்திரமாகிய திருஷ்டி, காணும் கண் பயனுடையாத ஆகிறது.காணும் கண் பயன் ஆவதே !(தெள்ளிய சிங்கம் தொடரும்)
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
அரங்கத்தின் அடுக்குமொழி நன்றாக உள்ளது;
பனுவல் வாசிப்புச் சரியில்லையெனில்
அரங்கர் சற்றுச் சீற்றம் கொள்வது
உண்மைதான்; ஒரு நூலைச் சரியாகப்
புரிந்துகொள்ளாமல் பேசுவது அந்த
நூலாசிரியருக்குச் செய்யும் துரோஹம்
என அவர் நினைக்கிறார்.
சீற்றத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
கோபத்தைக் குணகோடியில் சேர்த்துவிட்டு வார்த்தை
சொல்ல வேண்டியதுதான் :))
மனத்தால் நிருமித்த மணத்தூணே பற்றி
நிற்கிறேன்
தேவ்
On Apr 6, 11:36 pm, shylaja <shylaj...@gmail.com> wrote:
> எங்கும் சுற்றி ரங்கனைச்சேரு(உங்களை அல்ல அந்தரங்கத்தில் உள்ள ரங்கனை
> சொல்கிறேன்:))) என்பதுபோல வார்த்தைகள் வடிவங்கள் எண்ணங்கள் எங்கெங்கு
> சுழன்றாலும் இறுதி இலக்கு எம்பெருமானைக்காண ஞானக்கண்வேண்டும் என்பதே! நதி
> செல்லும்போது பலவற்றைக்கடப்பதுபோல என் வார்த்தைகள் உங்களுக்கு பழையபடியா என
> வினவத்தோன்றலாம்! பழசின்றி புதுசு ஏது?:)
> மாயோனை மணத்தூணே பற்றி நின்று என்வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே என்ற
> குலசேகரப்பெருமானின் வரிகளை நினைவில்கொண்டுள்ளேன் அரங்கனாரே!(இந்த அரங்கன்
> நீங்கதான்:)
>
> சிறிய விண்ணப்பம்..இந்த மணத்தூணுக்கும் சற்றே விளக்கம் அளித்தால் எற்றைக்கும்
> ஏழேழ்பிறவிக்கும் நன்றி மறவேன்!!
> 2012/4/6 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > இப்பத்தான் தேவலையேன்னு சந்தோஷப்பட்டேன். பழையபடியா :-)))
>
> > ***
>
> > On Sat, Apr 7, 2012 at 8:08 AM, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
> >> சீரிய சிங்காசனமிருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளியமைக்கு நன்றி.
> >> கேள்விகள் கேட்டால் ஹரேராமா ஹரே கிருஷ்ணா என்கிறீர்கள் பிறகு எப்படிக்கேட்பது
> >> எனத்தயங்கினாலும் இங்கு மோதிரைக்கைகளால் குட்டு பெற ஏதாவது கேட்டுவிடுவது
> >> வழக்கம். ஷைலஜா என்றால் மொக்கப்புகழா?:) ஏதோ சில மைபா பதிவுகளில் மயங்கி
> >> நீங்கள் இப்படிச்சொல்வதற்காக நானும் ஹரேராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே ,ஹரே
> >> கிருஷ்ணஹரேஹரே சொல்லப்போவதில்லை:) வாழ்வில் நவரசமும் வேணும் சுவாமி:)
> >> தப்பால்லாம் எடுத்துக்கல தமாஷாய் நான் பேசும்போது அப்படி மற்றவர்
> >> பேசுவதையும் எடுத்துத்தான் கொள்வது வழக்கம். ஏற்கனவே இ சார் வேறு தன்
> >> இழையில் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது என்கிறார் கோபமாக:)
> >> கண்பயனை கண்டுற்றேன் இங்கு! காணவேண்டியதைக்காணும் நாளில் கண்பயனுறும்
> >> அந்நாள்தான் எந்நாளோ? ஆயினும் அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்கிறோம் ! நன்றி
> >> அடுத்து தெள்ளிய சிங்கத்தையும் சீற்றமின்றி அருளப்போவதற்கு!!!
>
> >> 2012/4/6 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
> >>> On Fri, Apr 6, 2012 at 1:45 PM, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
> >>>> கண்பயன் ஆகிறது என முன்னே மோகனரங்கன் எழுதியதும்
>
> >>>> குலசேகர ஆழ்வார் பாசுரம் நினைவுக்கு வந்தது.
> >>>> : எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம்
> >>>> இன்றே
> >>>> என்றார் ஒரு பாசுரத்தில்.
>
> >>>> ராமாயணத்தை குலசேகர ஆழ்வார்போல் கேட்டார் கிடையாந்தாம். தேவலோகமிருந்து
> >>>> இந்திரன் அமிர்தம் தருகிறேன் என்றானாம் ‘இன்னமுதம் மதியோம் இன்றே’ என்றாராம்.
>
> >>>> கண்ணால் எப்படிப்பருகுவது என நினைத்தேன்..நடந்ததைப் பார்ப்பதுபோலவே
>
> ...
>
> read more »
> சீற்றத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
> கோபத்தைக் குணகோடியில் சேர்த்துவிட்டு வார்த்தை
> சொல்ல வேண்டியதுதான் :))
>
பக்கத்து வீட்டுக்காரா! சொந்த பந்தம்..அப்படித்தான் இடிச்சுக்கும்
பின்னால ஈஷிக்கும் :-))
க.>
இடிக்கவும் இல்ல. ஈஷவும் இல்ல. நீங்க வேற கண்ணன்.நல்ல கேள்வியா இருக்கேன்னு பாராட்டினதுக்கு இவ்வளவு கரகாட்டம்.ராம் ராம். ஹனுமான் கவசமே சொல்லணும் போல இருக்கு.:-)))
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஈஷவும் இல்ல.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


தெள்ளிய சிங்கமாகிய தேவை --எனவேதான் தெள்ளிய சிங்கமாம் தேவை.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
https://www.google.co.in/#hl=en&sugexp=frgbld&gs_nf=1&cp=8&gs_id=85&xhr=t&q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95&pf=p&output=search&sclient=psy-ab&oq=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95&aq=f&aqi=&aql=&gs_l=&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_cp.r_qf.,cf.osb&fp=917db3fff837333b&biw=1525&bih=692&bs=1
தேவ்
On Apr 7, 7:20 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> தெள்ளத் தெளிவாய் ஒரு விளக்கம்.[?][?]
>
> On Sat, Apr 7, 2012 at 7:41 PM, Mohanarangan V Srirangam <
>
>
>
>
>
>
>
> ranganvm...@gmail.com> wrote:
> > தெள்ளிய சிங்கமாகிய தேவை --
>
> > எனவேதான் தெள்ளிய சிங்கமாம் தேவை.
>
> > ***
> > ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> > *
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> 35B.gif
> < 1KViewDownload
எங்குமுளன் கண்ணன் என்றான் மகன்.
ஹரிகி.--
அன்புடன்,
--
தெள்ளிய சிங்கமாகிய தேவை --தெளிதல் என்பது கலக்கத்தினின்றும், மயக்கத்தினின்றும் தெளிதல் என்பது பொதுவானது. பயத்தினின்றும் தெளிதல்.ஆனால் தெளிதல் என்பதற்கு ஆராய்தல். முடிவுக்கு வருதல், நிரூபித்தல் போன்ற பொருள்களும் உண்டு.எங்குமுளன் கண்ணன் என்றான் மகன்.அந்தச் சாது வார்த்தையைத் தெளிவாக்கி வந்த சிங்கம் இந்தத் தேவன்.ப்ரகாலதன் சொன்னாலும், சொல்வதற்கு முன்னும், என்றும் ஸர்வகதன், ஸர்வத்திற்கும் அந்தர்யாமி விஷ்ணு. ஆனால் என்ன நம்பிக்கையில் சொன்னான் மகன் !இந்தத் தூணில் இல்லையா? என்று கேட்ட தகப்பனுக்கு சாது வார்த்தை பொய்க்காது என்று நிரூபிக்க வந்த சிங்கம், தெளிவாக்க வந்த சிங்கம் அன்றோ தெள் அழகிய சிங்கன்.!எனவேதான் தெள்ளிய சிங்கமாம் தேவை.இரண்டு கேள்விகளுக்கும் ஷைலஜாவுக்கு நமஸ்காரமும் நன்றியும்.ஏதோ ஹாஸ்யமாகச் சொன்னதில் மனம் வருத்தப்படும்படி இருந்தால் பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
On Fri, Apr 6, 2012 at 8:57 PM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
தேவலை. ஷைலஜ்ஜா என்றால் மொக்கைப் புகழ் என்பது மாறி, அழகான கேள்விகள் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சு. மிக்க மகிழ்ச்சி.( :-)) தப்பா எடுத்துக்காதீங்க தாயீ ! சும்மா தமாஷுக்குச் சொன்னேன். ஓர் ஆதங்கம்தான்)கண்பயன் --
ஒரு விஞ்ஞானி இருக்கிறார். விலை உயர்ந்த ஒரு மைக்ராஸ்கோப் கண்டு பிடித்துப் பெரும் செலவில் உருவாக்குகிறார். எதற்கு மிக நுண்ணிய ஒரு உயிரியின் வடிவைக் காண. அவ்வளவு பெருக்கத்திறன் எண்ணிக்கை கொண்ட மைக்ராஸ்கோப்புக்குத்தான் அந்த நுன் உயிரி அகப்படும். ஒரு நாள் பரிசோதனையைத் தொடங்குகிறார். பார்த்தால் என்ன என்னவெல்லாமோ நுண் உலகத்தில் கண்ணுக்குப் படுகிறது. ஆனால் அந்த உயிரி மட்டும் காணவே காணோம்.
சரி செய்த செலவெல்லாம் வ்யர்த்தம் போலும் என்று சோர்ந்த ஒரு நாளில் எதேச்சையாக அந்த ஆடியில் டான்ஸ் ஆடிக்கொண்டு வருகிறது அந்த நுண் உயிரி.
ஆஹா...! அதன் வடிவம் தெளிவாகத் தெரிகிறது.! இவ்வளவு நாள் காத்திருந்தது வீண் போகவில்லை. இதைக் காணவேண்டும் என்று உருவாக்கிய இந்தக் கண் இன்றுதான் பயனுடையதாக ஆனது.
காணும் கண் பயன் ஆவதே !
அது போல் இறைவனைக் காணத்தான் இந்தக் கண் பயன்படவேண்டும்.
ஆனால் ஊனக்கண்ணிற்கு இறைவன் ஒரு நாளும் புலப்படான்.
அவனைக் காண வேண்டுமென்றால் ஞானக் கண் என்று சொல்லப்படும் சாத்திரமாகிய திருஷ்டி தேவை. ஆனால் சாத்திரத்தைக் கைக்கொண்டும் பலர் அதனால் தேவையற்ற பலவற்றையும் காண்பார்களாய், குறை பார்வையாளர்களாய், குதிருஷ்டிகளாய் ஆகின்றனரே அன்றி காண வேண்டியதைக் காண்பார் இல்லை.
அபூர்வமான அந்தக் கண் பயனின்றிக்கே ஒழிகிறது. என்னே !
ஆனால் என்று அடியாருக்குள் பகவான் உறைகிறான் என்பதை நன்கு ஒருவன் உணர்கிறானோ, அந்த அடியார்கள் பெருக்கமாய்க் குழுமியிருக்கக் காண்கிறானோ அன்றுதான் அந்த சாத்திரமாகிய திருஷ்டி, காணும் கண் பயனுடையாத ஆகிறது.
காணும் கண் பயன் ஆவதே !
(தெள்ளிய சிங்கம் தொடரும்)
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
“எங்குமுளான் யாவும் வலான் யாவுமறிவான்” என்று எழுதியவன் இறந்த வீடு இருக்கும் தெருவின் பெயர் என்ன தெரியுமோ? டி.பி. கோவில் ஸ்ட்ரீட். தெளிசிங்கப் பெருமாள் கோவில் தெரு. இதுவும் பொருத்தந்தானோ!<<<>>>
கம்பன் கூற்று --கூற்றம் இல்லைஓர் குற்றம் இலாமையால்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
diirgha aayuSo naraaH sarve dharmam satyam cha sa.nshritaaH |
sahitaaH putra pautraiH cha nityam striibhiH purottame || 1-6-18Longevity is there for all of the people, all are with virtuosity and truthfulness, and they lived in that best city along with their sons, grandsons and their ladies. [1-6-18]Valmiki Ramayana, Balakanda (parallel to Kamban)http://www.valmikiramayan.net/bala/sarga6/bala_6_frame.htm
--
அன்புடன்,
ஹரிகி.
--
நம்ம ரங்கன் சொல்வது இருக்கட்டும், நாம் மின் மடலாடல் என்று ஏன்
அழைக்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யாரும் கேள்வியே
கேட்கக்கூடாது என்றால் அது மடலாடல் அல்ல. It defies the basics. அதற்குப்
பதில் பத்திரிக்கையில் எழுதிவிடலாம். The dynamics of e-forums are quite
different from other journalistic structures. நான் அடிக்கடி சொல்வது
போல் ஒரு எண்ணத்தின் வளர்ச்சியைக் காட்டுவதுதான் மடலாடல். எண்ணம்
கிளைக்கும் போது காலம், காலமாக ஒரு மண்ணில் கிடக்கும் எண்ணங்கள் கூட
மீட்டுயிர் கொள்கின்றன. எண்ணங்கள் எப்போதும் சார்புடையவை. தொடர்பில்லாத
தனித்த எண்ணம் என்று ஏதும் கிடையாது. ஒரு எண்ணம் இன்னொரு எண்ணத்தைச்
சார்ந்துள்ளது. எனவே ஒரு மடல் பல எண்ணங்ளைக் கிளர்ந்து எழச் செய்வது
தவிர்க்க இயலாதது. எனவே இதை முதலில் ரசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
மடலாடலுக்கு ஒரு ரசனை வேண்டும். நிறையப் பொறுமை வேண்டும். நம்மில்
பலருக்கு பொறுமையும், திறந்த மனதும், மன்னிக்கும் குணமும் வாய்க்கப்
பெறுவதில்லை. மன்னித்து மறத்தல் என்பது மிக உயரிய குணம். இது யாருக்கு
உதவுகிறதோ இல்லையோ மன்னிப்பவனுக்கு உதவுகிறது. மன்னித்துவிட்டால்
ஆசுவாசப்படுகிறான்.
மடலாடலை பொதுவான தமிழ் எண்ணம் என்று பார்த்துப் பழக வேண்டும். அதை
திரும்பத்திரும்ப personalize செய்யும் போது மனக்குறைகள் தோன்றுகின்றன.
மடலாடலை ஒரு உளவியல் உத்தியாகக் காண வேண்டும். நாம் இங்கு காண்பது நம்
பொது மனம். இங்குள்ள குறைகளும், நிறைகளும் நம்முடையவை. குறை களைந்து நிறை
மிளிர ஒத்துழைப்போம்!
நா.கண்ணன்
2012/4/9 shylaja <shyl...@gmail.com>:



பாமரத் தனமாய்த் தான் நாம் எல்லாருமே அணுகுகிறோம்; ரங்கனாரையும், ஹரிகி, திவா, தேவ் போன்றவர்களைத் தவிர. ஆகவே இதில் வருத்தம் அடைய வேண்டாம். எதுவுமே சொல்லாமல் இழை செல்லவேண்டுமென்று ஆணையிட்டால் எட்டிக்கூடப்பார்க்க அச்சமாகிவிடும்! இழைப்பொருளை நான் தெய்வமாய் நினைப்பதால் பாமரத்தனமாய் அணுகுவது சரி இல்லையென்றால் விலகிவிடுகிறேன். ஏற்கனவே மொக்கைப்புகழ் என்று பேர் எடுத்தாகிவிட்டது.
அன்பின் ஷைலூ:
நம்ம ரங்கன் சொல்வது இருக்கட்டும், நாம் மின் மடலாடல் என்று ஏன்
அழைக்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யாரும் கேள்வியே
கேட்கக்கூடாது என்றால் அது மடலாடல் அல்ல. It defies the basics. அதற்குப்
பதில் பத்திரிக்கையில் எழுதிவிடலாம். The dynamics of e-forums are quite
different from other journalistic structures. நான் அடிக்கடி சொல்வது
போல் ஒரு எண்ணத்தின் வளர்ச்சியைக் காட்டுவதுதான் மடலாடல். எண்ணம்
கிளைக்கும் போது காலம், காலமாக ஒரு மண்ணில் கிடக்கும் எண்ணங்கள் கூட
மீட்டுயிர் கொள்கின்றன. எண்ணங்கள் எப்போதும் சார்புடையவை. தொடர்பில்லாத
தனித்த எண்ணம் என்று ஏதும் கிடையாது. ஒரு எண்ணம் இன்னொரு எண்ணத்தைச்
சார்ந்துள்ளது. எனவே ஒரு மடல் பல எண்ணங்ளைக் கிளர்ந்து எழச் செய்வது
தவிர்க்க இயலாதது. எனவே இதை முதலில் ரசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
மடலாடலுக்கு ஒரு ரசனை வேண்டும். நிறையப் பொறுமை வேண்டும். நம்மில்
பலருக்கு பொறுமையும், திறந்த மனதும், மன்னிக்கும் குணமும் வாய்க்கப்
பெறுவதில்லை. மன்னித்து மறத்தல் என்பது மிக உயரிய குணம். இது யாருக்கு
உதவுகிறதோ இல்லையோ மன்னிப்பவனுக்கு உதவுகிறது. மன்னித்துவிட்டால்
ஆசுவாசப்படுகிறான்.
மடலாடலை பொதுவான தமிழ் எண்ணம் என்று பார்த்துப் பழக வேண்டும். அதை
திரும்பத்திரும்ப personalize செய்யும் போது மனக்குறைகள் தோன்றுகின்றன.
மடலாடலை ஒரு உளவியல் உத்தியாகக் காண வேண்டும். நாம் இங்கு காண்பது நம்
பொது மனம். இங்குள்ள குறைகளும், நிறைகளும் நம்முடையவை. குறை களைந்து நிறை
மிளிர ஒத்துழைப்போம்!
Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மிக அழகான வரிகள். இதனால்தான் உங்கள் பின்னூட்டத்தை சிலாகித்து
எழுதினேன். ரசிப்பு என்பதே ஒரு அதிர்ஷ்டம்தான்!
க.>
அப்படி இருக்கும் பொழுது கல்வியில் பெரியவரான கம்பர் சர்வ மக்களுக்கும் ஆதிகாலம் தொட்டு அனுபவ சித்தமாக இருக்கும், தவிர்க்க இயலா கூற்றம் என்பது, குற்றம் இல்லாமையினால் இல்லாது போயிற்று என்கிறார். அது எப்படி? என்னதான் கவிக்கூற்று என்றாலும்.