தஞ்சை ராமையாதாஸ் ரம்பையின் காதல் திரைப்படத்தில் சுடுகாட்டைச் சமரசம் உலாவும் இடம் என்று பாட்டெழுதினார்.
1970-ல் சமரசம் உலாவும் இடமாக இருந்த இடுகாடும் சுடுகாடும் சாதி வேறுபாட்டை வெளிக் காட்ட ஆரம்பித்தது
அரசியல் சாசனச் சிற்பிகள் இந்தியா சமதளமாக் மாறும் என்று கூறிய உறுதி மொழி இன்னும் ஏட்டளவில்
இணையம் வந்ததும் ஏற்றதாழ்வில்லாத மெய்நிகர் உலகம் தோன்றிவிட்டதாகக் கொண்டாடியோர் விரைவில் மெய்யுலகில் உள்ள முரண்பாடுகள் இணையத்தில் இன்னும் தீவிர முகம் காட்டும் தளமாக அமைந்துவிட்டதை எண்ணி வருந்துவர்
கடந்த மூன்றாண்டுகளாக மடலாடலில் மாறாமல் ஓயாமல் எழும் முரண் கருத்துக்கள் தமிழா சங்கதமா எதன் கையூட்டில் எந்தமொழி வளர்ந்தது என்ற தொடர் மடலாடல்தான்
தனித்தமிழா சங்கதமா மணிப்பிரவாளமா என்று கச்சை கட்டுவதைவிட ஏன் ஒரு சமரச உடன்பாட்டை ஏற்படுத்தக்கூடாது என்று சிலநேரங்களில் சிலமனிதர்கள் சிந்திக்கிறார்கள்
கி.பி 7-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இந்திய இறையாண்மைத் தத்துவங்கள் வேர்விட்டுப் பரவின. ஆதிசங்கரர் என்ற பகுத்தறிவாளர் துணைக்கண்டம் முழுதும் நடந்து கருத்துப்பரலை சங்கத மிழியில் நிகழ்த்திக் காட்டினார். ஸ்ரீராமானுஜரும் சங்கதத்தையே கருத்துப்பரவலுக்குத் தேர்ந்தெடுத்தார்
ஏழாம் நூறாண்டுக்குமுன் 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் என்ற கால அடிப்படையைக் கருத்தில்கொண்டு 7-ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழ் சங்கதத்திலிருந்து உள்வாங்கியதும் தமிழ் சங்கதத்துக்கு அளித்த கொடையும் பட்டியலிட்டால் அது தமிழுக்குச் சிறப்பாக அமையுமல்லவா
தமிழக வரலாற்றில் 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாறு இன்னும் நம்பகத்தன்மையுள்ள தகவலின் அடிப்படையில் அமையவில்லை. அதில் உள்ள புனைவுகள் தவறுகள் ஆய்வின் அடிப்படையில் சரிசெய்யப்படல் வேண்டும்
சங்கதம் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றல்ல. தமிழர்களில் சிலர் அதன் அழகில் மயங்கி தாய்மொழியைக்கைவிட்டுச் சங்கதத்தைத் தூக்கிப் பிடித்தனர். அதனால் தமிழின் வளர்ச்சி குன்றி அம்மொழியின் வளங்கள் எல்லாம் சங்கததீன் தொடர்பால் உருவானது என்ற கருத்தை ஓங்கி ஒலித்து அதையே ஆங்கிலேயர்களும் நம்பி இன்று உலகமே இந்த இடியாப்பச் சிக்கலில் இருந்து விடுபட இயலாமல் தவிக்கிறது
இணையதளத்தில் இரு மொழிகளீடையே சமரசம் உலவ அறிஞர்கள் உதவுவார்களா
ஆராய்ச்சிக் குஞ்சு