"அப்பாக்கள் தினம்".............ருத்ரா

26 views
Skip to first unread message

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jun 18, 2013, 5:50:04 PM6/18/13
to mint...@googlegroups.com
"அப்பாக்கள் தினம்"
========================================ருத்ரா

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
இது
யாருக்கு யார் சொன்னது?
தெரியவில்லை.
மறந்து போனது.
ஒண்ணாங்கிளாஸில்
படித்தது.

"ஃபாதர்ஸ் டே"
பளிச்சென்று கண்ணைப்பறிக்கிறது
கடைகளில் கண்ணாடிக்குள்
அடுக்கப்பட்டிருக்கும்
வர்ண வர்ண அட்டைகள்.
ஊடுருவித்தேடினேன்.
என் முக பிம்பங்களின்
வழியாக 
என் அப்பாவுக்கு தேடினேன்.

அன்று
என் முதுகில் அவர்
"பளார்" என்று போட்டதை
நான் என்ன 
"புறமுதுகு"காட்டிய கோழையா?
என்று  இன்று
புறநானூற்று வீர மீசை முறுக்கவில்லை.

அவசரப்பட்டு
நான் எழுதத்துடித்திருக்கும்
"அக நானூறு"க்கு
பிழை திருத்தம் போட்டிருப்பார்
அவ்வளவு தான்.

பிறகு
அவரே தோழனாக மாறிய 
விந்தைத்தருணங்கள்
எத்தனை?எத்தனை?

அம்மா என்றால்
அவளுக்குள்
நான் இருந்த இடம் தெரியும்.
அந்த வலி தரியும்.
அதனால் அவள் விரல்கள்
எனக்கு அன்னத்தூவிகள்.

அப்பா என்றால்
என்னைத்
தடம் பதித்தது
மட்டும் தானே தெரியும்.

ஆனல்
தான் கூழாங்கல் உயரம் இருந்தாலும்
தன் நிழல்
ஒரு பேரொளியின்
இமயம் ஆக இருக்கவேண்டும்
என்ற தவிப்பே
அவர் விரல்களை
அப்படி
"உருட்டுக்கட்டைகள்"
ஆக்கி இருக்கலாம்.

அந்த முரட்டு அன்பில் 
என்னை
"அவையத்து முந்தி இருப்ப"எனும்
செயலுக்கு
அவர் இழுத்த செக்குகள் எத்தனை?
நுரை தள்ள நுரை தள்ள‌
இந்த வாழ்க்கைப்பாறாங்கல்லில்
நைந்து பிழிந்த காட்சிகள்
எத்தனை?

அப்பர் இல்லை நான்.
இருந்தாலும்
"அப்பா நான் வேண்டுதல் கேட்டேன்"
உங்களிடம் ஒன்றை!

என்னை 
அடிக்கு முன்
அல்லது
அடிக்கும்போது
உங்கள் கை எவ்வளவு
வலித்திருக்கும்
என்று
இன்று தான் புரிந்து கொண்டேன்.
வலிக்கும் மனத்தைத்தான்
உருட்டித் திரட்டினீர்கள்
உருட்டுக்கட்டைகளாக என்று
இன்று தான் புரிந்து கொண்டேன்.

இன்னொன்றும் கேட்கிறேன்
அந்த பிரம்புகளை
என்னிடம் தந்து விடுங்கள்.
என் பிள்ளைகளுக்கு
அதிலிருந்து தான்
பூச்செண்டுகள்
நான் தயார் செய்ய வேண்டும்.

==============================================ருத்ரா 

Pandiyaraja

unread,
Jun 18, 2013, 11:43:44 PM6/18/13
to mint...@googlegroups.com
>>
தான் கூழாங்கல் உயரம் இருந்தாலும்
தன் நிழல்
ஒரு பேரொளியின்
இமயம் ஆக இருக்கவேண்டும்
என்ற தவிப்பே
அவர் விரல்களை
அப்படி
"உருட்டுக்கட்டைகள்
ஆக்கி இருக்கலாம்
>>
எத்துணை உண்மை! - குறைந்தது என் விஷயத்தில்!!
ப.பாண்டியராஜா

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jun 19, 2013, 1:33:42 AM6/19/13
to mint...@googlegroups.com





மதிப்பிற்குரிய திரு.ப.பாண்டியராஜா அவர்களே.

உண்மை தான்.நீங்கள் ஒரு இலக்கிய சிகரத்திலிருந்து அதன் உயரத்திலிருந்து ஒலிக்கும் எதிரொலிதான் அது.

அன்புடன் ருத்ரா

Rathinam Chandramohan

unread,
Jun 19, 2013, 6:43:05 AM6/19/13
to mint...@googlegroups.com
இன்னொன்றும் கேட்கிறேன்
அந்த பிரம்புகளை
என்னிடம் தந்து விடுங்கள்.
என் பிள்ளைகளுக்கு
அதிலிருந்து தான்
பூச்செண்டுகள்
நான் தயார் செய்ய வேண்டும்

arumai.

Chandramohan


2013/6/19 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jun 19, 2013, 2:01:01 PM6/19/13
to mint...@googlegroups.com
பாராட்டுக்கு நன்றி 
திரு.ரத்தினம் சிதம்பரம் அவர்களே

அன்புடன் ருத்ரா

On Tuesday, June 18, 2013 2:50:04 PM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jun 20, 2013, 1:23:44 AM6/20/13
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் Dr ரத்தினம் சந்திரமோகன் அவர்களே

தங்கள் பெயரை "ரத்தினம் சிதம்பரம்" என்று மடல் இழையூட்டம் இட்டதற்கு மிகவும் வருந்துகிறேன்.
என் கவிதையை பாராட்டிய தங்களுக்கு மிக்க‌ நன்றி.

அன்புடன் ருத்ரா


On Tuesday, June 18, 2013 2:50:04 PM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages