பொது மன்னிப்பு :-)

0 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Nov 12, 2009, 11:51:05 PM11/12/09
to mintamil, santhavasantham, Madhurabharathi, Venkateswaran T A, P Vanchinathan
அன்புள்ள நண்பர்களே,

கடந்த சுமார் பத்து நாளாக இணையத் தொடர்பு, உடல் நலம் போன்ற சில காரணங்களால் (நெருங்கிய உறவின் ஒருவர் வீ்ட்டுத் திருமணமும் சேர்ந்து கொண்டது) என்னால் இணையத்தில் பங்கேற்க முடியவில்லை.  மடல்கள் எதையும் பார்க்கம் முடியவில்லை.  காலைப் போதுகளில் வந்து சேரும் தலைவலியால், சென்னையில் நல்லூர் இலக்கிய வட்டம் (என்னுடைய கல்லூரி நாளில் நடத்தி வந்த இலக்கியக் குழு--ஆரம்ப காரணர்களில் நானும் ஒருவன்) இன்று காலை சென்னைக்குப் போவதற்காக எடுத்து வைத்திருந்த பயணச் சீட்டை ரத்து செய்யவேண்டியதாகிவிட்டது.  I miss the wonderful gathering of old friends very badly.  நல்லூர் இலக்கிய வட்டம் இனிமேல் மாதமோர் கவியரங்குகளை மறுபடியும் நடத்த இருப்பதால், இந்த மாதம் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த மாதங்களில் இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போகாது என்று ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்.  மஹாபாரதத்தைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை நண்பர் வ வே சு ஏற்பாடு செய்திருந்தார்.  என் அடுத்த சென்னைப் பயணத்தில் இதை நடத்திக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறேன்.  

இந்தப் பத்து நாளில் சுமார் 3000 கடிதங்கள் என்னுடைய இன்பாக்ஸில் வந்து விழுந்திருக்கின்றன.  ஆரோக்கிய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் இவ்வளவையும் பார்த்து, உங்களுடைய தனிப்பட்ட மடல்கள் ஏதேனும் இருந்திருப்பின் அவற்றுக்கு விடை எழுதுவது என்பது சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது.  அவை அனைத்தையும் ஒரு ஃபோல்டருக்குள் தள்ளிவிட்டிருக்கிறேன்.  இந்த இடைப்பட்ட காலத்தில் (சுமார் 10 நாளுக்கு முன் சில உணர்ச்சிகரமான பறிமாறல்கள் நடந்திருந்தன.  நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாக சிலர் கருதுவதாக எனக்குச் சென்னையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகள் தோற்றம் தருகின்றன.  உண்மை அப்படி இல்லை.) எனக்கு நீங்கள் ஏதாவது எழுதியிருந்தால், அருள்கூர்ந்து எனக்கு இன்னொருமுறை அந்தக் கடிதங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வளவு மடல்களுக்கு நடுவில் உங்களுடைய மடல் கவனத்திலிருந்து தப்பிவிடலாம்.   எனவேதான் இந்த வேண்டுகோள்.  

தென்றல் இதழில் ஆசிரியர் நாகநந்தியைப் பற்றிய ஒரு சிறு தொடரைத் தொடங்க இருக்கிறேன்.  யாரிடமாவது அவருடைய புகைப்படம், நினைவுகள் போன்ற பகிர்ந்துகொள்ளக்கூடிய தகவல்கள் இருந்தால் எனக்கு ஒரு தனிமடல் அனுப்பவும்.  தொடர்பு கொள்ளலாம்.  


--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Nov 13, 2009, 12:11:03 AM11/13/09
to மின்தமிழ்
மடல் கண்டு மகிழ்ச்சி, அரோகத்ருடகாத்ரராக
நீங்கள் எழுதிக்கொண்டிருக்க வேண்டும்; நாங்கள் படித்துக் கொண்டிருக்க
வேண்டும். உடல் நலம் பாதி்த்துள்ளதோ என்னும் கவலை எற்பட்டது உண்மை.

தேவ்

N. Kannan

unread,
Nov 13, 2009, 3:51:27 AM11/13/09
to mint...@googlegroups.com
உடல் நலம் பேணுக!
10 நாளில் மூவாயிரம் மடல்களா! தேவுடா!
நான் டிசம்பரில் ஜெர்மன் போகிறேன்.
இதை நினைத்தால் பயமாக இருக்கிறது!

க.>

2009/11/13 devoo <rde...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Nov 14, 2009, 10:28:48 AM11/14/09
to mint...@googlegroups.com
திரு  ஹரிகி  அவர்களே
 
நீங்கள் கூடிய சீக்கிரம் பூரண குணமாகி  புதிய உற்சாகத்துடன்
 
பவனி வருவீராக
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
13-11-09 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
Reply all
Reply to author
Forward
0 new messages