வாடை நெடுநல் வாடை

76 views
Skip to first unread message

vnagarajan

unread,
Aug 29, 2011, 1:54:15 AM8/29/11
to mint...@googlegroups.com
தமிழ்க் குடி மூத்தகுடி மட்டுமல்ல பல காரணிகள் அடிப்படையில் சிறு குழுக்களாக அதே நேரம் ஒரு  ஒன்றினைந்த குமுகமாக வழிவழியாக வாழ்ந்துவரும் சமுதாயம்.
 
முன்னைப் பழமைக்கும் பழமையாய் நல்மரபுகளைத் தலைமுறை தலை முறையாய் முன் எடுத்துச் சென்றாலும் வெளித்தாக்கத்தால் அந்நியர் படையெடுப்பால் வெள்ளையர் ஆட்சியால் பல்வேறுபட்ட வெளிப்புற மரபுகளை உள்வாங்கிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டது
 
பழங்குடிகளின் வாழ்வியல் மரபுத்தகவல் பண்பாடு எனப்படும்  அமைதி மொழி (சைலண்ட் லாங்குவேஜ்) யான செப்புமொழி மூலம் வழங்கப்படுவதைப் பதிவு செய்வதன் மூலம் தோற்றத்தையும் மாற்றத்தையும் அறிவியல் அடிப்படையில் பதிவு செய்ய முடியும்
 
ஏட்டில் எழுதாத வரலாறு வரலாறே சரியாகப் பதிவுறாத தமிழகத்தில் புதிய தரவுகள் தகவலைத் தரவியலும்
 
ஒவ்வொரு குடும்பத்தையும் சிறு குழுவையும் அவர்கள் செப்புமொழி சார்ந்த நிகழ்வுகளைப் பதிந்து பகுப்பாய்வு செய்வதன்மூலம் புதிய செய்திகளைப் பெறலாம்
 
ஒரு சமுதாயம் அதன் வரலாறைப் பதிவு செய்வதன் முழுமுதல் நோக்கம் வரும் தலைமுறை தம் முன்னோர் செழுமையான செம்மையான வழ்வு வாழ்ந்தனர் என்பதை அறியச் செய்வதே
 
ஆயினும் எழுத்தில் உள்ள வரலா்று எழுதியவர்களின் பார்வைக் கோனத்தில் கோனல் பார்வையில் திரிக்கப்பட்டு வரலாறு மீள்பார்வைக்குள்ளாகும் நிலை நேரிடுகிறது
 
என்னை மையமாகக் கொண்டு பார்த்தால் வெள்ளயர் கல்வி வெளிநாட்டு வணிகத்தொடர்பு போன்ற காரணிகள் இடைக்கால்த்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதிமத வேறுபாடுகளில் இருந்து எங்களை விலக்கி மாற்றத்தை நோக்கிப் பயணிக்க உதவியது
 
முன்னோர்களில் ஒருவர் இருதார மணம் செய்ய ஒரு பிரிவு கல்வியை நாடும் கிறிஸ்துவப் பிரிவாகவும் மற்றொன்று பொருள் தேடும் வணிகர்களாகவும் பிரிய நேர்ந்தது
 
என்னையும் சேர்த்து நாங்கள் ஐவர் ஆண்கள் உடன் பிறந்தவர்கள்
 
என் மூத்த அண்ணனின் முதல் மனைவி இலங்கையில் கொழும்புவில் வணிகம் செய்த பெரும்தனக்கார நாடார் ஒருவரின் மகள். இலங்கை அரசியலைப் பணபலம் கொண்டு ஆட்டிப்படைத்த சில தமிழர்களில் ஒருவர்
 
இரண்டாவது அண்ணன் பேரிச் செட்டி என்று சென்னையில் அழைக்கப்படும் குழுவில் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் (மறைமலை அடிகள் பரிதிமாற் கலைஞரின் சமகாலத்தவர்) ஆங்கிலப் பேராசிரியராக இருந்து நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த ராவ் பஹதூர் ஓ.கந்த சாமி செட்டியாரின் பேத்தி
 
மூன்றவது அண்ணனின் மனைவி கோவைப் பக்கம் தமிழ்ப் புலவரான கிறித்தவரான சாலமன் மதிவாணன் செட்டியார் (ஜாதிப்பெயர்க்கொண்ட கிறித்த்வர்கள் பலர். எ.கா. சென்னை மேயராகவும் தொழிற்சங்கத்தலைவராகவும் இருந்த சர்க்கரைச் செட்டியார் ஒரு கிறித்தவர்)
 
நான் திருமணம் செய்துகொண்டபெண் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பழங்குடிகள் இனத்திலிருந்து.  கிறித்துவ மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.  அவர்களின் தனி மாநிலத்துக்காகவும் மரபுக் காப்புக்காகவும் போரிடும் போராளி
 
என் தம்பி இலங்கையில் வடபகுதியில் பெண் எடுத்தவர்
 
ஒரு காலத்தில் மணுதர்மத்தையும் சனாதன தர்மத்தையும் போற்றி வளர்த்த குடும்பங்கள் இதுபோன்ற மாற்றங்களுக்குள்ளானதற்கான காரணங்கள் எவை? எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும் என் ஜாதி என் மதம் என்ற அடிப்படையிலிருந்து பலர் விடுபட விரும்பாததின் காரணம் என்ன?
 
மானுடவியலார் தமிழ்ச் சமுதாயத்தின் சமூக மாற்றங்களையும் அதே நேரம் மாற்றம் இல்லாது மரபுசார் பண்புக்கூறுகள் தலைமுறை தலை முறையாக தொடர்ந்ததையும் ஆய்வு செய்திருக்கிறார்கள். 
 
சென்னைப் பல்கலைக் கழக மானுடவியல் மாணவர்கள் சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் மேலை நாட்டு ஆய்வாளர்கள் போல் ஆழ்ந்த நோக்குடன் ஆய்வுசெய்யாமல் மேம்போக்காகவே ஆய்வுசெய்துள்ளார்கள்
 
சென்னை ஜார்ஜ் டவுன்  பேரிச் செட்டியார்களைப் பற்றி மேற்கொண்ட ஆய்வு தமிழர்களின் மனப்பாங்கைப் பற்றிய அரிய செய்திகளைத்தருகிறது.  அவர்களின் குழு அமைப்புமுறை வணிகமுறை ஆளுமை பற்றிய தகவல் தருகிறது
 
இதுபோன்றே கொங்குப் பகுதியில் போராளி வணிகர்களாக இருந்த கைக்கோளர் பற்றிய ஆய்வு பிறபகுதிகளுக்கு வணிகம் செய்யச் சென்றவர்கள் தங்களுக்கெனப் போர்ப்படை வைத்திருந்ததாகவும் போர்க்காலங்களில் மன்னருக்குப் போரில் உதவத் தங்கள் படைகளைக் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறது
 
கணி்னி வளர்ச்சி வலைப்பூக்களின் சாகுபடி  முகநூல் எழுது சுவர்களின் அளப்பரிய வளர்ச்சி அமோகம் என்ற நிலை்யில் ஏட்டில் எ்ழுதாத வரலாறு கிராம அளவிலும் மரபியல் வரலாறூகுமுக அடிப்படையிலும் உருவாக தமிழகத்தின் ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தயார் செய்யலாம்
வரும் ஆண்டுகளில் தமிழக மாணவர்களின் கையில் மடிக்கணினி ஸ்மார்ட் போன் என்று புதிய தொழில் நுணுக்கம் அவர்களின் கைப்பிடியில் இருக்கும்
 
அவர்களைத் தமிழகத்தின் எழுத்தில் இல்லாத வேரடி வளங்களை அகழ்ந்தெடுத்துக்கொண்டுவரும் ஆற்றலுடையவர்களாக ஆக்குவதை மின் தமிழ் தன்னுடைய பதினொன்றாம் ஆண்டுத் திட்டங்களின் ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும்
நாகராசன்

செல்வன்

unread,
Aug 29, 2011, 2:50:50 AM8/29/11
to mint...@googlegroups.com
2011/8/29 vnagarajan <radius.co...@gmail.com>

மானுடவியலார் தமிழ்ச் சமுதாயத்தின் சமூக மாற்றங்களையும் அதே நேரம் மாற்றம் இல்லாது மரபுசார் பண்புக்கூறுகள் தலைமுறை தலை முறையாக தொடர்ந்ததையும் ஆய்வு செய்திருக்கிறார்கள். 
 
சென்னைப் பல்கலைக் கழக மானுடவியல் மாணவர்கள் சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் மேலை நாட்டு ஆய்வாளர்கள் போல் ஆழ்ந்த நோக்குடன் ஆய்வுசெய்யாமல் மேம்போக்காகவே ஆய்வுசெய்துள்ளார்கள்
 
சென்னை ஜார்ஜ் டவுன்  பேரிச் செட்டியார்களைப் பற்றி மேற்கொண்ட ஆய்வு தமிழர்களின் மனப்பாங்கைப் பற்றிய அரிய செய்திகளைத்தருகிறது.  அவர்களின் குழு அமைப்புமுறை வணிகமுறை ஆளுமை பற்றிய தகவல் தருகிறது

சுவாரசியம்.
--
செல்வன்

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

www.holyox.blogspot.com

http://twitter.com/#holyox

https://profiles.google.com/holyape/buzz

https://www.facebook.com/holyape

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2011, 3:12:03 AM8/29/11
to mint...@googlegroups.com
எங்களின் மாற்றங்களைவிட எங்கள் குழந்தைகள் எதிர்கொண்ட மாற்றங்கள் வேகம் மிக்கதாக இருந்தது
என் மூத்த அண்ணன் சாக்குத்துணியில் வடிகட்டிய நாத்திகர்.  அவர் மகள் காதலித்துக் கைப்பிடித்தது ஐயரை. எந்தவித எதிர்ப்புமில்லாமல் பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்ட திருமணமாக நடந்தது
என் திருமணம் நடந்தபோது என் மனைவியின் உறவினர்களில் சிலரிடம் சமவெளியில் வாழும் நரிப்பயலைக் கட்டிக்கொண்டாளே என்ற முனுமுனுப்பு இருந்தது.  ஆயினும் அவர்கள் வங்காளிகளை வெறுத்ததுபோல் என்னை வெறுக்கவில்லை
வங்காளிகள் அனைவரும் மாநிலத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்று போரிட்டு 75 வருட காலம் அவர்கள் வீட்டருகே வாழ்ந்த வங்காளிக் குடும்பம் வெளியேற்ப்பட்டது
என்மகள் காதலித்தது ஒரு வங்காளியை
அதுவும் பெரியோர் நிச்சயித்த திருமணமாக நடந்தது
இந்தத்தலைமுறையில் எல்லாம் கலப்பு எல்லாம் காதல் என்று மாற்றத்தின் தாக்கம் குமுகத்தில் ஏற்பட்டுள்ளது
சுயமரியாதை-கலப்புத்திருமணம் என்று திராவிட இயக்கம் கத்திக் கதிச் சாதிக்க முடியாததைத் தகவல் தொழில் நுட்பம் பத்தாண்டுகளில் சாதித்தது
காதல் என்றாலே மீன் வெட்டும் கத்தியில் சாதல் என்ற எழுதப்படாத விதி இருந்த நாகபட்டினம் மீனவர் குழுமங்களில் ஒரு சுனாமி வியக்கத்தக்க மனமாற்றத்தை ஏற்படுத்திக் காதலை அந்தக் கல்மனம் ஏற்றுக்கொள்ளச் செய்தது
வர்ணங்கள் வேறானாலும் உள்ளுறையும் ஒளி ஒன்றே என்று இளைய சமுதாயம் ஜாதி சமய இனத் தளைகக்ளைக் கட்டவிழ்த்து முன்னேறிக்கொண்டிருக்கிறது
1950 வரைக்கும் அந்நியருக்குப் பெண்கொடுப்பதில்லை என்ற கட்டுப்பாட்டில் இருந்த பேரிச் செட்டியார்கள் அமெரிக்கப் பெண்களையே மருமக்களாக ஏற்றுக்கொள்ளும் மாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றுக்கோண்டது
நாகராசன்

2011/8/29 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Aug 29, 2011, 3:19:57 AM8/29/11
to mint...@googlegroups.com
கலப்பு திருமணம் பண்டைய சமூகத்தில் சர்வசாதாரணம்.

18, 19ம் நூற்றாண்டில் ஜாதி முறை இறுக தொடங்கியபோது கலப்புமண சதவிகிதம் குறைந்திருக்கலாம்.இன்று அது இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது என கருதுகிறேன்.

வடகிழக்கில் வங்காளிகளை யாரும் லைக் செய்வதில்லை என அறிவேன். கம்யூனிச ஆட்சியின் விளைவால் வங்காளிகளும்/மலையாளிகளும், மாயாவதி/முலாயம்/லாலு புண்ணியத்தில் உபி, பிகாரிகளும் பஞ்சம் பிழைக்க நாடெங்கும் அகதிகளாக ஓடியதில் பல மாநிலங்களில் அவர்கள் மேல் வெறுப்புணர்வு தோன்றிவிட்டது.பணகாரர்கள் குடிபெயர்ந்தால் வரவேற்பார்கள்,அகதிகளாக ஓடினால் வெறுப்பார்கள்.

நிதீஷ்,தீதி புண்ணியத்தில் நிலை மாறும் என நம்பலாம்.

Subashini Tremmel

unread,
Aug 29, 2011, 5:44:48 AM8/29/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
சுவாரசியமான் இடுகை. அருமையான உதாரணம். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இதே வகை கலப்பு நிலை தான் மேற்கத்திய நாடுகளில் இப்போது. ஜெர்மனியில் “சுத்த” ஜெர்மன் குடும்பத்தைத் தேடுவது என்பது மிகச் சிரமம். பல்வேறு கலவைகள் இங்கு..!
 
சுபா 

2011/8/29 vnagarajan <radius.co...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Nagarajan Vadivel

unread,
Aug 29, 2011, 12:34:51 PM8/29/11
to mint...@googlegroups.com

ஜெர்மனிக்கும் தமிழகத்திற்கும் ஒரு சிறு வேறுபாடு இர்ப்பதாகக் கருதுகிறேன்.  நீங்கள்தான் உறுதிசெய்ய வேண்டும்
21ஆம் நூற்றாண்டில் குடும்ப அளவிலான திருமண முறைகளில் இருந்த தளைகள் விலகி மென்பொருள் தகவல் தொழில் கைநிறைய்ச் சப்பளம் கொடுத்ததில் இளைய சமுதாயம் சாதி வேறுபாடுகளைப் புறம்தள்ளி காதல் மணம் புரிவது எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.
அதே நேரம் குடும்ப உறவில் விரிசலும் உடனே தொடங்கி குடும்ப நீதிமன்றத்தில் மண்விலக்கு வழக்குகளும் அதிகரித்து வருகிறது
அதற்கான காரணிகள் பல்வாக இருக்கலாம்
அவற்றில் ஒன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது
தொழிலில் முன்னேற வேண்டும் இருவரும் உழைக்கவேண்டும் என்ற சூழல் பலர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடச் செய்கிறது.  குழந்தைகள் இல்லாததே அவர்கள் குடும்ப வாழ்வில் பிரச்சினை ஏற்ப்டுத்துகிறது என்பதை உணருவதில்லை
இன்னும் சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள உடல் ரீதியாக இயலாமை
என்னுடை்ய இரண்டாவது அண்ணனின் மகளுக்கும் மகனுக்கும் குழந்தைபேற் இல்லை
மகனுக்கு குழந்தையைத் தத்துடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னதை அனைவரும் மனமுவந்து ஏற்றூக்கொண்டனர்.  முதல் குழந்தை வீட்டில் வளர அனைவருக்கும் அது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.  அதன் அடிப்படையில் அவர் இன்னொரு குழந்தையையும் தத்தெடுத்துக்கொண்டார்.
அவரது தங்கையும் தத்தெடுக்க விரும்பினாலும் அவரின் கணவர் குடும்பம் தடை செய்தது.  அவர்கள் சென்னைக் கந்தசாமி கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாககள் அவர்கள் குடும்பத்தில் அடையாலம் தெரியாத குழந்தை வளருவதா என்று தொடர்ந்து மறுத்து வந்தனர்.  மெதுவாக அவர்கள் மனதை மாற்ற மூன்றாண்டுகள் ஆனது
எவ்வ்வோ எடுத்துச் சொல்லி ஆதாரங்கள் காட்டி (எங்கள் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியர் வேலை பார்த்த வேலைக்காரியின் மகளைத் தத்தெடுத்துக்கொண்டார்.  இன்னொரு பேராசிரியர் பல்கலிக் கழகத்தில் கழிவறையைச் சுத்தம் செய்யும் பெண்ணின் மகனைத் தத்தெடுத்துக்கொண்டார்) அங்கும் குழந்தையைத் தத்தெடுக்க வழி வகுத்தோம்
என் மகளுக்கும் குழந்தையில்லை. தத்தெடுக்க விருப்பமின்றி பூனைகளைச் செல்லக் குழந்தையாகக் கொஞ்சி மகிழ்ந்துகொண்டிருக்கிறார்.
எங்கெல்லாமோ வெற்றிபெறும் என்னால் அவரின் மனதை மாற்றத் தொடர் முயற்சி மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது
பூனைக்குச் செய்யும் செலவில் இரண்டு குழந்தைகளுக்கு வளமான வாழ்வு கொடுக்கலாம்
இன்றைய இளைஞரில் சிலர் இந்தப் பக்கம் கவனம் செலுத்துவதையே தவிர்க்கிறார்கள்
இண்றைய இளைய தலைமுறைக்குத் தத்தெடுப்பதின் அவசியம் சிறப்பு பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியது இன்றையமையாத் கடமை
நாகராசன்
2011/8/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Aug 29, 2011, 3:44:17 PM8/29/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
எவ்விதமான வேறு பாட்டை மனதில் நினைத்து குறிப்பிடுகின்றீர்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை.
 
ஆனாலும் சில விஷயங்கள்..
 
ஜெர்மனியைப் பொறுத்தவரை ஜாதி போன்ற சமாச்சாரங்கள் இல்லையென்றாலும் 19ம் நூற்றாண்டில் ஒரு வகையான 2 குடும்பங்களுக்குள் பார்த்து வைக்கும் திருமணங்கள் இருந்திருக்கின்றன. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே காதல் திருமணங்கள் தான். 17, 18ம் நூற்றாண்டு கால வாக்கில் ப்ராங்கன் மன்னர்கள் ரஷ்ய இளவரசியை மணந்துது கொண்டது போல பொது மக்கள் மத்தியிலும் ஓரளவு ஜெர்மானிய, ரஷ்ய, டச்சு, ஆங்கிலேய, ப்ரெஞ்சு கலப்பு மணங்கள் முன்பு நிகழ்ந்திருக்கின்றன.
 
எனது மாமனாரின் அப்பா காதல் திருமணம் செய்தவர் தான். இதனை என் மாமனார் கூறி கேள்விப்பட்டிருக்கின்றேன். என் மாமனார் காலத்தில் பெற்றோர் பார்த்து வைப்பது என்பதெல்லாம் கேலிக்குறியான விஷயம். திருமணம் காதல் செய்து பண்ணிக் கொள்வதுதான் என்ற நிலை 50களிலேயே இங்கு சகஜமாகிட்டது. இன்றைய நிலையில் 20 வயது ஆணுக்கோ பெண்ணுக்கோ காதலர் இல்லையென்றால் தான் பெற்றோருக்கு கவலை. நம் குழந்தையை யாரும் விரும்பவில்லையே என்று. தமிழகத்துக்கும் ஜெர்மனிக்கு நடைமுறை வாழ்க்கை விஷயத்தில் இந்த வகையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.  இது ஒப்பிட முடியாத வித்தியாசம்.
 
ஜெர்மானியர்களுக்கு அடுத்து இந்த நாட்டில் அதிகம் இருப்பவர்கள் துருக்கியர்கள். பல்லண்டுகளாக இங்கு வாழ்ந்து வந்தாலும் துருக்கிய ஜெர்மானிய மக்கள் கலப்பு என்பது மிக மிக மிக குறைவு. இதற்கு மிக முக்கிய காரணம் துருக்கியர்களுக்குள் இருக்கும் இருக்கமான சமய கட்டுப்பாடுகள், தங்கள் இனத்தைவிட்டு மற்ற இனத்தாருடன் பழகாத தன்மை ஆகியவை என்பது பலரும் அறிந்த உண்மை. ஆனால் தற்போதைய படித்த இளைஞர்களுக்குள் பல வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் தங்கள் வட்டத்தை விட்டு வெளியேறி ஜெர்மன் மகக்ளுடனும் பிறருடனும் சகஜமாகப் பழகுகின்றனர். அந்த வகையில் சில திருமணங்கள் நிகழ்கின்றன. ஆனால் துருக்கியர் குடும்பத்தில் இதனை வரவேற்பதில்லை.
 
ஐரோப்பா தவிர்த்த தாய்லாந்து, சீன, வியட்நாமிய பெண்களை மணந்த ஜெர்ம்னானியர்கள் பலர். இந்தியப் பெண்களுடனும் ஜெர்மானியர்கள் மணம் புரிந்திருக்கின்றனர். ஆனாலும் எண்ணிக்கை குறைவு.  
 
பொதுவாகவே ஜெர்மனியில் மக்கள் மத்தியில் திருமணம் என்ற ஒரு பந்தத்தில் நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றனர் (இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் தான்). இரண்டு பேர் அன்பு செலுத்த எதற்கு சடங்கு என்பது தற்போதைய பலரது சிந்தனை. பலருக்கு திருமணம் என்று நினைத்தால் விவாகரத்து டாப்பிக் தான் முதலில் ஞாபகம் வருகின்றது. குறிப்பாக ஆண்களுக்கு. அதிலேயே பயந்து போய்விடுகின்றனர். ஏனென்றால் பொருளாதார ரீதியில் ஆணுக்கு பெரிய பாதிப்பு இருப்பதால். அப்படியே திருமணம் செய்தாலும் பல்வேறு கலவைகள். ஜெர்மானிய இத்தாலிய யுகோஸ்லாவிய, சீன, மங்கோலிய, கிரேக்க, டச்சு, போலிஷ் என பல பல கலவைகள். யாரும் இதனை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பது உண்மை.  
 
சுபா
 
2011/8/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2011, 3:49:57 PM8/29/11
to mint...@googlegroups.com
//எவ்விதமான வேறு பாட்டை மனதில் நினைத்து குறிப்பிடுகின்றீர்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை. //
குழந்தைப்பேறு அடைய விரும்பாத குழந்தைபெற இயலாத இளைஞர்கள் மத்தியில் பிற குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ளுவது பாற்றிய தகவல்
நாகராசன்
2011/8/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Aug 29, 2011, 4:07:25 PM8/29/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் பெரும்பாலும் தங்களை வேலையில் அல்லது ஆய்வில் ஈடுபடுத்திக் கொள்பவர்களாக இருப்பவர்கள். வயதான காலத்தில் இவ்வகையினோர் பலர் தங்களை சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். எனக்குத் தெரிந்து சிலர் க்வாயர் குழு. நாடகக் குழு என ஈடுபடுத்திக் கொள்பவர்கள் சிலர் இருக்கின்றனர்.  ஒரு விருந்து நிகழ்வில் ஒரு ~60 வயது தம்பதியரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களை பற்றி சற்று அறிந்து கொண்டேன். ஒருவர் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு உழைக்கின்றார். கணவர் சம்பளமில்லாமல் தான் வாழும்  நகரில் சுற்றுலா பயணிகளுக்கு கைடாக இருக்கின்றார். இருவரும் படித்து நல்ல தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற 67 வயது 66 வயது தம்பதிகள். 
 
சில தனியாக வாழும் பெண்கள்  கூட குழந்தைகளை விரும்பி தத்தெடுத்துக் கொண்டு வளர்க்கின்றனர். குறிப்பாக பலர் ஆப்பிரிக்க குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்கின்றனர். இதுவும் இங்கு நிகழ்கின்றது.
 
திருமணம் செய்து குழந்தை இல்லாதவர்களோ குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்களோ குழந்தை இருந்தும் மேலும் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கோ நிறைய வாய்ப்புக்கள் இங்கு உண்டு. சட்ட ரீதியாக ஆப்பிரிக்க ரஷ்ய குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளும் வழிகள் பற்றி நான் செய்திகள் வாசித்திருக்கின்றேன். டாக்குமெண்டரிகளும் பார்த்திருக்கின்றேன். முன்னாள் சான்ஸலர் ஷ்ரூடர் கூட ஒரு ரஷ்யக் குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டார். அப்போது ஏற்கனவே அவருக்கு சொந்தக் குழந்தைகள் இருந்தன.

செல்வன்

unread,
Aug 29, 2011, 4:11:08 PM8/29/11
to mint...@googlegroups.com
ஐரோப்பாவில் சர்ச்சுக்கு போகிறவர்கள் எண்ணிக்கை குறைவு. கூடவே இடதுசாரி முற்போக்குவாதிகள் கன்சர்வேடிவ் கோட்பாடுகளான தேசபக்தி, குடும்பம், திருமணத்துக்கு பின் செக்ஸ் போன்றவற்றை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.இதற்கு ஈடுகொடுத்து போரிடகூடிய வலுவான கன்சர்வேடிவ் கட்சிகள் ஐரோப்பாவில் இல்லை.ஐரோப்பா இடதுசாரிகளிடம் சரணடைந்து விட்டது.

அமெரிக்காவில் சர்ச்சுக்கு போகிரவர்கள் சதவிகிதம் அதிகம். ஃபேமிலி வேலியுக்களில் நம்பிக்கை உள்ள கன்சர்வேடிவ்கள் அதிகம். கட்டின மனைவிக்கு துரோகம் இழைத்த,விவாகரத்து செய்த ஒருவரும் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது. (ரேகனின் முதல் மனைவி ரேகனின் விருப்பத்தை மீறி அவரை விவாகரத்து செய்தார்).

குடும்பத்தையும், மரபையும், கலாசாரத்தையும் தொலைத்தால் அனைத்தையும் இழப்போம் என ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு புரியவில்லை.தே வில் ரிக்ரெட் இட்.

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2011, 10:49:26 PM8/29/11
to mint...@googlegroups.com
கருத்துக்கு நன்றி
இன்னொரு இழையில் சங்க இலக்கியங்கள் திருமணத்துக்கு முன் உறவு குடும்பத்திலிருந்து பிரிதல் போன்ற நிகழ்வுகலைச் சுட்டிக்காட்டியிருந்தார்
மானுடவியலார் ஆய்வுசெய்த சில பழங்குடிகளில் தமிழ் இலக்கியக் குறிப்பில் உள்ளதுபோன்ற வாழ்வுமுறை இருப்பதை அறிந்துள்ளனர்
பழங்குடிக கன்னியருக்கும் கன்னத்தன்மைக்கும் அவர்கள் கொண்டாடும் விழாக்களிலும் நடனங்களிலும் முக்கிய இடம் அளித்துள்ளனர்
மரபு வழித் திருமணம் இல்லாமல் குடும்பத்தை விட்டு வெளியேறி குடும்பமாக வாழ்வதும் குழந்தை பெற்றுக்கொள்வதும் உண்டு.  குழந்தையின் தந்தை அது என் குழந்தை இல்ல என்று மறுக்க இயலாது
கற்பு என்பது மண்வாழ்வில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது என்ற கட்டுப்பாடு கடைப்பிடிக்கப் படுகிறது.  மண் விலக்குப் பெற்று மற்றொரு கணவனை மணந்துகொள்ளலாம்.  ஒரே நேரத்தில் இருவரிடம் தொடர்பில் உள்ளதைக் குமுகம் ஏற்றூக்கொள்வதில்லை
புதிய தலைமுறை இரண்டும் கெட்டானாக் குறிப்பாக தகவல் தொழில் துறையில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது என்று நிலையில் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  இது ஒரு புதிய வாழ்வுமுறை வளர்ந்துவரும் நிலையில் அதை என்னவென்று அழைப்பது
நாகராசன்

2011/8/30 செல்வன் <hol...@gmail.com>
--

Raja sankar

unread,
Aug 29, 2011, 11:49:51 PM8/29/11
to mint...@googlegroups.com
ஜனாதிபதி என்ன, மாநில கவர்னராக கூட இருக்க முடியாது சரியா?

இன்றைக்கும் அமெரிக்காவில் நீண்ட நாள் திருமணம் தான் ஸ்டேட்டஸ் சிம்பல். :-)))

ராஜசங்கர்

2011/8/30 செல்வன் <hol...@gmail.com>
. கட்டின மனைவிக்கு துரோகம் இழைத்த,விவாகரத்து செய்த ஒருவரும் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது.

செல்வன்

unread,
Aug 29, 2011, 11:59:56 PM8/29/11
to mint...@googlegroups.com

2011/8/29 Raja sankar <errajasa...@gmail.com>

ஜனாதிபதி என்ன, மாநில கவர்னராக கூட இருக்க முடியாது சரியா?

இன்றைக்கும் அமெரிக்காவில் நீண்ட நாள் திருமணம் தான் ஸ்டேட்டஸ் சிம்பல். :-)))

மாநில சட்டசபை உறுப்பினர் கூட ஆகமுடியாது.

நீண்டநாள் திருமணம் செய்துகொண தம்பதிகள் அமெரிக்காவில் நிறைய உண்டு.இந்தியா அளவுக்கு வராது.ஆனால் பிற மேற்கத்திய நாடுகளை ஒப்பிட்டால் இது ஆரோக்கியமான அளவாகவே இருக்கும்.

செல்வன்

unread,
Aug 30, 2011, 3:57:34 AM8/30/11
to mint...@googlegroups.com
கலப்பு திருமணம் என்பது திருமணத்தில் ஒரு வகை.அது ஒரே ஜாதியில் நடக்கும் திருமணத்தை விட உயர்ந்தது என கருத இயலவில்லை.தற்போது நடக்கும் நிச்சயிக்கபட்ட மணங்களீல் பெண்,மாப்பிளைகளுக்கு வீட்டோ அதிகாரம் தரப்படுகிறது. இவ்வகையான மணங்கள் காதலிக்க தெரியாத அசடுகளுக்கு நல்ல வரன் கிடைக்க வழிவகுக்கின்றன.பஸ் ஸ்டாண்டில் கால் கடுக்க நின்று அழகை மட்டுமே பார்த்து பின்புலம் தெரியாமல் துரத்தி பிடிப்பதை விட இது பல மடங்கு சேஃப்.ஆனால் இதில் காதல் மணத்தில் வரும் த்ரில் இல்லை.ஆனால் வாழ்க்கையில் பலதும் கிவ் அன்ட் டேக் தான்.நிச்சயிக்கபட்ட மணத்திலும் காதல் வரும்.ஜாதி,மதம்,பொருத்தம்,நாள் நட்சத்திரம் பார்த்து செய்யப்படும் மணங்களில் மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வாழும் தம்பதியினர் பலர் உண்டு.

பணியிடங்களில், கல்லூரியில் வரும் காதல் காதல் மணத்தில் இருக்கும் ரிஸ்க்கை பெருமளவு குறைக்கிறது.அத்தகைய காதல் மணங்களை பெற்றோரும் பெரும்பாலும் ஏற்றுகொள்கிறார்கள்.இது மிக நல்லதொரு மாற்றமே.

Subashini Tremmel

unread,
Aug 30, 2011, 6:19:57 AM8/30/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
2011/8/29 செல்வன் <hol...@gmail.com>
ஐரோப்பாவில் சர்ச்சுக்கு போகிறவர்கள் எண்ணிக்கை குறைவு.
ஓரளவு உண்மை. ஜெர்மனியில் சர்ச்சில் சாமி கும்பிட போறவர்கள் எண்ணிக்கை குறைவு. ஆனால் சுற்றிப்பார்க்க செல்பவர்கள் அதிகம்.  
 
கூடவே இடதுசாரி முற்போக்குவாதிகள் கன்சர்வேடிவ் கோட்பாடுகளான தேசபக்தி, குடும்பம், திருமணத்துக்கு பின் செக்ஸ் போன்றவற்றை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
ஜெர்மனியை மட்டும் வைத்து குறிப்பிட்டால்.. உங்கள் விளக்கம் சற்று அதிகப்படுத்திய விளக்கம் செல்வன்.  இடதுசாரி தாக்கி வரவில்லை. பல மாற்றங்கள் மகக்ளிடையே ஏற்பட்டு விட்டன. இது நடைமுறையாகிவிட்டது. தேசபக்தி, குடும்பத்தின் மேல் உள்ள உணர்வு ஆகியவை நீங்கவில்லை. ஆனால் நாம் எதிர்பார்க்கும் வகையில் இல்லை. வேறு வகையில் வெளிப்படுத்தப்படுகின்றன.
திருமணத்துக்கு முன் செக்ஸ், திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் ஐரோப்பா முழுதும் பரவாலாக இருந்தாலும் ஜெர்மனியிலும் ப்ரான்ஸிலும் குறிப்பிடத்தகக் வகையில் மிக அதிகம்.
 
பொதுவாகவே ஐரோப்பாவில் இடது சாரியோ பசுமை விரும்பிகளோ மாற்றங்களை செய்கின்றார்கள் என நினைப்பது உண்மையல்ல. ப்ரெஞ்சு புரட்சி அதற்குப் பின் ஜெர்ம்னியில் ஏற்பட்ட புரட்சிகள் ஆகியன மக்கள் மத்தியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இது பெரிய கதை.  இதனை ஒரு மடலில் விளக்க முடியாது. நேரமும் வாய்ப்பும் அமைந்தால் விவரித்து எழுதுகிறேன்.
 
பொதுவாகவே நாம் இது தான் நல்லது இது ஏற்றதல்ல என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்க பழகி விட்டோம். எல்லா நாடுகளிலும், மக்கள் மத்தியிலும், சமூகத்திலும், சமயத்திலும் நல்லவையும் இருக்கின்றன.. பிரச்சனைகளும் இருக்கின்றன.. !
 
சுபா
 
இதற்கு ஈடுகொடுத்து போரிடகூடிய வலுவான கன்சர்வேடிவ் கட்சிகள் ஐரோப்பாவில் இல்லை.ஐரோப்பா இடதுசாரிகளிடம் சரணடைந்து விட்டது.

அமெரிக்காவில் சர்ச்சுக்கு போகிரவர்கள் சதவிகிதம் அதிகம். ஃபேமிலி வேலியுக்களில் நம்பிக்கை உள்ள கன்சர்வேடிவ்கள் அதிகம். கட்டின மனைவிக்கு துரோகம் இழைத்த,விவாகரத்து செய்த ஒருவரும் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது. (ரேகனின் முதல் மனைவி ரேகனின் விருப்பத்தை மீறி அவரை விவாகரத்து செய்தார்).

குடும்பத்தையும், மரபையும், கலாசாரத்தையும் தொலைத்தால் அனைத்தையும் இழப்போம் என ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு புரியவில்லை.தே வில் ரிக்ரெட் இட்.

--
செல்வன்

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

www.holyox.blogspot.com

http://twitter.com/#holyox

https://profiles.google.com/holyape/buzz

https://www.facebook.com/holyape

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Aug 30, 2011, 10:30:35 PM8/30/11
to mint...@googlegroups.com

2011/8/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

ஜெர்மனியை மட்டும் வைத்து குறிப்பிட்டால்.. உங்கள் விளக்கம் சற்று அதிகப்படுத்திய விளக்கம் செல்வன்.  இடதுசாரி தாக்கி வரவில்லை. பல மாற்றங்கள் மகக்ளிடையே ஏற்பட்டு விட்டன. இது நடைமுறையாகிவிட்டது. தேசபக்தி, குடும்பத்தின் மேல் உள்ள உணர்வு ஆகியவை நீங்கவில்லை. ஆனால் நாம் எதிர்பார்க்கும் வகையில் இல்லை. வேறு வகையில் வெளிப்படுத்தப்படுகின்றன.
திருமணத்துக்கு முன் செக்ஸ், திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் ஐரோப்பா முழுதும் பரவாலாக இருந்தாலும் ஜெர்மனியிலும் ப்ரான்ஸிலும் குறிப்பிடத்தகக் வகையில் மிக அதிகம்.
பொதுவாகவே ஐரோப்பாவில் இடது சாரியோ பசுமை விரும்பிகளோ மாற்றங்களை செய்கின்றார்கள் என நினைப்பது உண்மையல்ல. ப்ரெஞ்சு புரட்சி அதற்குப் பின் ஜெர்ம்னியில் ஏற்பட்ட புரட்சிகள் ஆகியன மக்கள் மத்தியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இது பெரிய கதை.  இதனை ஒரு மடலில் விளக்க முடியாது. நேரமும் வாய்ப்பும் அமைந்தால் விவரித்து எழுதுகிறேன்.

சுபா,

இதற்கான என் பதிலை விரிவாக, சித்தாந்த ரீதியில் எழுதுகிறேன்.படித்து விட்டு டென்சனாக வேண்டாம்:-).

குடும்பத்தின் மீதான இடதுசாரிகளின் தாக்குதல் மிக தொன்மையானது.உலகை கட்டுக்குள் கொண்டுவரும் இடதுசாரிகளின் திட்டத்தில் குடும்பம் என்ற அமைப்பை சிதைத்தல் மிக முக்கியமானது. காரல் மார்க்ஸின் காலத்திலேயே குடும்பத்துகெதிரான கம்யூனிஸ்டுகளின் யுத்தம் துவங்கிவிட்டது.எங்கெல்ஸின் சித்தாந்தப்படி குடும்ப அமைப்பு தான் தனியுடமையும் முதலாளித்துவ சமூகமும் நீடிக்க ஒரே காரனம்.தகப்பன் சொத்து பிள்ளைக்கு என்ற அமைப்பு நீடிப்பதால் தான் பனகாரர்கள் தம் பிள்ளைகளுக்கு கோடிகணக்கில் சொத்து சேர்க்கின்ரனர்.பிள்லைகள் இருப்பதால் தான் சொத்து சேர்க்கவே மக்கள் தூண்டபடுகின்றனர்.அதனால் குடும்பத்தை ஒழிக்காமல் தனியுடமையையும், முதலாளித்துவத்தையும் ஒழிக்க முடியாது.

19ம் நூற்றாண்டில் குடும்பத்தை ஒழிக்க எங்கெல்ஸ் கையில் எடுத்த ஆயுதம் "ப்ரீ லவ்".ஒவ்வொரு உரிமைபோரின் இறுதியிலும் "ப்ரீ லவ் கான்செப்ட் மலர்வது தவிர்க்க இயலாதது" என எங்கெல்ஸ் எழுதினார்.இந்த கோட்பாட்டை பல ஜெர்மானிய இடதுசாரிகள் முன்னெடுத்தனர்.ஜெர்மானிய சோஷலிஸ்டு கட்சி பிதாமகர் ஆகஸ்ட் பெபல் எழுதிய Die Frau und der Sozialismus எனும் நூலில் குடும்ப அமைப்பை கடுமையாக சாடிடியிருப்பார்.இதற்கு அன்றைய ஜெர்மன் சமூகமும், அரசும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.1849,1874,1876 அன்ட் 1894 ஆகிய நான்கு ஆண்டுகளில் "சோஷலிச தாக்குதலிலிருந்து குடும்பத்தை பாதுகாக்கும் சட்டங்கள்" அன்றைய பிரஷ்ய மற்றும் ஜெர்மானிய அரசுகளால் இயற்ரபட்டன.

குடும்பத்துகெதிரான இந்த நீண்ட நெடும்போரை பற்றி இன்னும் விரிவாக எழுத முடியும்.ஆனால் மடல் நீண்டுவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.இரண்டாம் உலகபோருக்கு பின்னர் குடும்ப அமைப்புகெதிரான ஜெர்மானிய சோஷலிஸ்டுகளின் தாக்குதல் கிட்டத்தட்ட முழு வெற்றியை அடைந்தது.திருமணம் என்ற அமைப்பு ஜெர்மனியில் சிதைய ஆரம்பித்தது.

தாய்,தந்தை,பிள்ளைகள்...இவர்கள் கொண்டது தான் டிரெடிஷனல் குடும்பம்.இத்தகைய குடும்ப அமைப்பு வெற்றி அடைய மொனோகமி (ஒரே ஒருவரை திருமணம் செய்தல்) முறை மிக அவசியமானது.இந்த குடும்ப அமைப்பு தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளம்,ஆதாரம் எல்லாம்.குழந்தைகள் தான் நாட்டின் ஆதாரம்.அந்த குழந்தைகளின் வளர்ப்பு சிறப்பாக அமைய அடிப்படை தேவை அவர்களை பெற்றவர்கள் அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை அவர்களை ஒன்றாக ஒரே கூரையின் கீழே இருந்து வளர்ப்பதே ஆகும்.ஸ்டெப் மதர், ஸ்டெப் ஃபாதர், மற்றும் தனியாக ஒரே ஒரு பெற்றொரால் வளர்க்கபடும் குழந்தைகள் பெரும்பாலும் தறுதலைகளாக,கிரிமினல்களாக அல்லது ஏழைகளாக வளர்வது தான் யதார்த்தம்.இது நான் கூறுவது அல்ல.ஆராய்ச்சி முடிவுகள் கூறூவது.

http://www.thelocal.de/society/20100729-28831.html

The figures are worrying because single parent families are more likely to live in poverty than those with both a mother and father. In 2009, some 31 percent of single-mother families lived on incomes of less than €1,100 per month – with mothers of children younger than three-years-old especially hard hit.Some 62 percent had incomes of between €1,100 and €2,600 per month. For 31 percent of single mothers, welfare such as Hartz IV unemployment benefits was the main source of income.A separate report from the Federal Statistics Office, titled “Life in Europe,” found that in 2008, nearly one in five single-parent families could not afford to properly heat their homes. Nearly three quarters said they were not in a position to pay unexpected bills such as a broken washing machine. More than half said they could not afford a one-week holiday requiring travel once a year.

ப்ரி லவ் கான்செப்ட் இத்தகைய டிரெடிஷனல் குடும்ப அமைப்பை முற்றிலும் சிதைத்து அழிக்கிறது.டீனேஜ் வயதில் அல்லது திருமனமாகாமல் கர்ப்பமுறும் பெண்கள் தம் குழந்தைகளுடன் ஒன்று தனியாக அல்லது இன்னொருவருடன் வாழ்க்கை நடத்தும் நிலைக்கு ஆளாகின்றனர். குழந்தைகளை ஒருவரிடம் பெற்றுவிட்டு இன்னொருவருடன் நடத்தும் வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்.அந்த வாழ்க்கை வெற்றி அடையும் வாய்ப்பு, அல்லது ஸ்டெப் ஃபாதர் தந்தையை ரிப்ளேஸ் செய்யும் வாய்ப்பு மிக குறைவு.வழக்கமாக இத்தகைய குடும்ப அமைப்புகளில் ஒரு 10 வருட காலகட்டத்தில் ஒரு குழந்தை தன் தாய் நாலைந்து பார்ட்னர்களை மாற்றிகொள்வதை பார்த்துவிடுகிறது.இது அதன் வாழ்வில் சகிக்க இயலாத மன அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.

இத்தகைய குழந்தைகள் ஏழ்மையிலும், கிரைமிலும் வளர்ந்து நாட்டுக்கு பாரமாக மாறும் வாய்ப்புகளே அதிகம். பெற்ர தாய், தந்தையர் சேர்ந்து வளர்க்கும் குழந்தைகளை விட இந்த குழந்தைகள் மிக டிஸட்வான்டேஜான நிலையில் வளர்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக ஜெர்மனியில் இத்தகைய பாரம்பரிய குடும்ப அமைப்பு முரை சிதைந்து வருகிறது.இதன் விளைவுகள்:

The number of single-parent families in Germany has risen over the past decade, with nearly one in five mothers and fathers now raising their children on their own, a national “microcensus” revealed Thursday.

திருமணம், கற்பு (ஒருவனுக்கு ஒருத்தி), குடும்ப அமைப்பு ஆகியவற்றை தொலைப்பது ஜெர்மனி எனும் தேசத்தையே தொலைப்பதற்கு சமம்.பாரம்பரிய குடும்ப அமைப்பு முரை வலுவாக இருந்தால் தான் எந்த தேசமும் வெற்றியைடைய முடியும்.அந்த முறை அழிந்தால் எதிர்காலத்தை தொலைத்த தறுதலைகளாக - இப்போது லண்டன் நகரில் வன்முரையை நிகழ்த்தும் ரவுடிகள் போல- தான் பிள்ளைகள் வளரும்.

துரதிர்ஷ்டவசமாக பாரம்பரிய குடும்ப அமைப்பை கட்டிகாக்கும் கன்சர்வேடிவ் கட்சிகள் ஜெர்மனியில் வலுவாக இல்லை.ஜெர்மானிய கன்சர்வேடிவ் கட்சியை "சோஷலிஸ்ட் லைட்" என தான் அழைக்க இயலும்

குடும்பம், கலாசாரம்,பண்பாடு அனைத்துக்கும் அடிப்படை எது? இறைவன். பக்தி..ஜெர்மானியர்கள் அதையே இழந்து வருகின்றனர். ஆண்டவனையும், பக்தியையும், ஆன்மிகத்தையும் இழந்தால் ஒரு தேசம் அனைத்தையும் இழக்கும். வேறு எதை இழந்தாலும் ஒரு தேசத்தை மீட்க முடியும். ஆண்டவனை இழந்தால் அதை மீட்பது இயலாது.

Nagarajan Vadivel

unread,
Aug 30, 2011, 10:54:36 PM8/30/11
to mint...@googlegroups.com
நெருங்கிய உறவில் மணம்புரிதல் (ஆரிய மாயயை காரணமாக தங்கை முறையில் உள்ளவர்களுடனும் திருமணம்) போர் வீரர்களுக்காக உருவான காதல் களம் (லவ் கேம்ப்) வேலைக்காரர்கள் என்ற அடிமை முறை ஆகிய நாட்சிய சிந்னைகளை இடதுசாரிச் சிந்தாத்தங்களுடன் இணைத்துப் பார்த்தால் உங்கள் அலசல் முழுமை பெறும்
நாகராசன்
2011/8/31 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Aug 30, 2011, 11:16:00 PM8/30/11
to mint...@googlegroups.com
நாகராசன் ஐயா

நிலவுடமை சமூகத்தில் சொத்து பாதுகாப்புக்காக நெருங்கிய உறவில் மணம் முடித்தனர். தங்கை உறவு எது என்பது கலாசாரரீதியானது. ஒரே தகப்பன், தாய் ஆகியோருக்கு பிறந்தவர்கள் பயலாஜிக்கல் பிரதர் அன்ட் சிஸ்டர்.இவர்கள் திருமணம் செய்ய எந்த நாட்டிலும், எந்த கலாசாரத்திலும் அனுமதி இல்லை (நானறிந்தவரை)

சித்தப்பன் மகள்,சித்தி மகள் தமிழ்நாட்டில் அண்ணன் -தங்கை உறவு. இஸ்லாமிய நாடுகளில் இந்த திருமணம் அனுமதிக்கபடுகிறது.தமிழ்நாட்டில் நிலவும் அக்கா மகளை தம்பி மணக்கும் முறை வடநாட்டிலும், மேலைய நாடுகளிலும் சட்டவிரோதம்.

யார் யாரை திருமனம் செய்வது என்பது கலாசார ரீதியானது.போர்வீரர்களின் லவ் கேம்ப் நீங்கள் சொன்னதுபோல போர்க்கால அடக்குமுரையில் வரும்.கிழக்கு ஜெர்மனியை ரஷ்யர்கள் பிடித்தபோது கணக்கற்ர ஜெர்மானிய பெண்கள் கற்பழிக்கபட்டு கொல்லபட்டனர்.பாலியல் அடிமைகளாக பிடித்து செல்லபட்டனர்.மாறாக மேற்கு ஜெர்மனியை அமெரிக்கா பிடித்தபோது மிகுந்த மனிததன்மையுடன் மேற்கு ஜெர்மனியை நடத்தியது.நாஜிகள் இழைத்த குற்றங்களை ஜெர்மன் மக்கள் மேல் அமெரிக்கா சுமத்தவில்லை.மேற்கு ஜெர்மனியை மிக வலுவான முதலாளித்துவநாடாக மாற்றிய பெருமை அமெரிக்காவையே சாரும்.

Nagarajan Vadivel

unread,
Aug 30, 2011, 11:26:13 PM8/30/11
to mint...@googlegroups.com
//மேற்கு ஜெர்மனியை மிக வலுவான முதலாளித்துவநாடாக மாற்றிய பெருமை அமெரிக்காவையே சாரும்//.
இதுதான் இதுதான் இதாங்குறேன்
ஜப்பானில் அணுகுண்டப் போட்டாக.  அப்புறம் அந்தநாட்டை மிக வலுவான தொழில்வளர்ர்சியுற்ற நாடாக ஆக்கினாக
ஜெர்மனில குண்டுபோட்டாங்க அப்புறம் வலுவான முதலாளித்துவ நாடாக மா்த்தினாக
ஒன்னுமே புரியலியே
ஏன் குண்டுபோடனும் அப்பறம் ஏன் அவங்களத் தூக்கி வளக்கனும்?
நாகராசன்
2011/8/31 செல்வன் <hol...@gmail.com>
நாகராசன் ஐயா

செல்வன்

unread,
Aug 30, 2011, 11:39:43 PM8/30/11
to mint...@googlegroups.com

2011/8/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இதுதான் இதுதான் இதாங்குறேன்
ஜப்பானில் அணுகுண்டப் போட்டாக.  அப்புறம் அந்தநாட்டை மிக வலுவான தொழில்வளர்ர்சியுற்ற நாடாக ஆக்கினாக
ஜெர்மனில குண்டுபோட்டாங்க அப்புறம் வலுவான முதலாளித்துவ நாடாக மா்த்தினாக
ஒன்னுமே புரியலியே
ஏன் குண்டுபோடனும் அப்பறம் ஏன் அவங்களத் தூக்கி வளக்கனும்?

ஐயா,

ஜப்பான் மேல் அணுகுண்டு வீசபடாமல் இருந்திருந்தால் பெரும் மனித இழப்புகள் நேர்ந்திருக்கும். அன்றைய ஜப்பான் போர் வெறி மிகுந்த நாடு. சீனாவை பிடித்த ஜப்பானியர் சீனாவில் இழைத்த கொடூரங்கள் சொல்லி மாளாதவை. "ரேப் ஆஃக் நான்கிங்" எனும் நூலில் இந்த கொடூரங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தபட்டுள்ளன.சுமார் ஏழரை லட்சம் சீனர்களை நான்கிங் நகரில் கொன்றனர் ஜப்பானியர். கணக்கற்ற பாலியல் பலாதத்காரங்களை நிகழ்த்தினர்.தந்தையை விட்டு மகளையும், மகனை விட்டு தாயையும் பலாத்காரம் செய்ய சொல்லி மகிழ்ந்தனர். போர் அடித்தால் தலைவெட்டும் போட்டிகளை நடத்தினர். (அதிக தலைகளை வெட்டும் வீரனே வெற்றி பெற்றவன்)

பிலிப்பைன்ஸில்,கொரியாவில் இதுபோல ஜப்பானியர் ஆடிய வெறியாட்டம் நாஜிகளுக்கே பயத்தை விளைவித்தது. மாதம் ஒன்றுக்கு 2 லட்சம் ஆசியர்கள் ஜப்பானால் கொல்லபட்டுகொண்டிருந்தனர். ஜப்பானில் நேசநாடுகளின் படை இறங்கினால் ஒட்டுமொத்த ஜப்பான் இளைஞர்கள் அனைவர் கையிலும் ஆயுதத்தை கொடுத்து நாலைந்து கோடி பேரை களபலியாக்கி தற்கொலை யுத்தம் நடத்த ஜப்பான் அரசு தீர்மானித்திருந்தது.

இப்படி ஒரு ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்கவே அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.அணுகுண்டு வீச்சில் 2 லட்சம் ஜப்பானியர்கள் மரணமடைந்தனர்.ஆனால் குண்டு வீசவில்லையெனில் போர் மேலும் இரு வருடங்கள் நடந்திருக்கும்.சுமார் நாலைந்து கோடி ஆசியர்களும் ஜப்பானியர்களும் உயிரிழந்திருப்பர்.

ஜப்பானிஅயும், ஜெர்மனியையும் பிடித்த அமெரிக்கா அந்த நாடுகளை மனிதாபிமானம் மிக்க முறையில் நடத்தி, வலுவான பொருலாதாரத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்தியது.கிழக்கு ஜெர்மனியை பிடித்த ரஷ்யர்கள் அங்கே கனக்கில் அடங்காத கொடூரங்களை நிகழ்த்தி, கைக்கு கிடைத்த ஜெர்மானியரின் சொத்துக்களையும், தொழிற்சாலைகளையும்,மக்களையும் ரஷ்யாவுக்கு கொண்டு சென்று தம் நாட்டை வளப்படுத்தினர்.அமெரிக்கா அப்படி செய்யவே இல்லை.

Nagarajan Vadivel

unread,
Aug 31, 2011, 12:02:32 AM8/31/11
to mint...@googlegroups.com
ஜப்பானிய ராணுவத் தளபதிகள் போரை நிறுத்த விரும்புவவில்லை.  ஜப்பானிய அரசர் வானொலிச் செய்தியாக ராணுவத்தலைவர்களின் விருப்புக்கெதிராக (பல தள்பதிகள் ஒரே இரவில் தற்கொலை செய்துகொண்டார்கள்) ஜப்பான் சரணடைய வேண்டும் என்று கட்டளையிட்டார்
மன்னரின் கட்டளையைத் தலைமேல் ஏற்றுக்கொண்டு சரணடைந்த ஜப்பானுக்குள் நுழைந்த ஜெனரல் மக் ஆர்தர் ஜப்பானியர்கள் சரணடைந்ததையும் அமெரிக்க ராணுவத்துக்கு எவ்வித எதிர்ப்புமின்றி அவர்களை வரவேற்றதையும் குறிப்பிட்டு இது ஒரு நம்மமுடியாத நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்
ஜப்பானியர்கள் நீங்கள் சொல்வதுபோன்ற கொடுமைக்காரர்கள் அல்ல.  அமெ்ரிக்கா ஆணுகுண்டு பரிசோதனைக்கு ஒரு சல்ஜாப்பு. 
அவர்கள் மட்டும் சில மணி நேரம் இந்தியாவின் வடகிழக்கில் தங்கி ராணுவத்தை முன் நகர்த்தியிருந்தால் இந்தியா போரின் அடிப்படையில் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கும்.  இதுவே ஜப்பானில் நடந்துகொண்டிருந்த இந்தியாவின் புலம் பெயர்ந்த தேசிய அரசின் நோக்கம்.  சுபாஸ் சந்திரபோசின் அவா.
 ஏன் ஜப்பானியப் படை பின்வாங்கியது என்பது இன்றூவரை புரியாத புதிர்?
நாகராசன்
2011/8/31 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Aug 31, 2011, 12:10:48 AM8/31/11
to mint...@googlegroups.com

2011/8/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஜப்பானியர்கள் நீங்கள் சொல்வதுபோன்ற கொடுமைக்காரர்கள் அல்ல.  அமெ்ரிக்கா ஆணுகுண்டு பரிசோதனைக்கு ஒரு சல்ஜாப்பு. 

நேரம் கிடக்கும்போது படியுங்கள்

http://en.wikipedia.org/wiki/Nanking_Massacre

http://en.wikipedia.org/wiki/Korea_under_Japanese_rule#During_World_War_II

Nagarajan Vadivel

unread,
Aug 31, 2011, 1:05:27 AM8/31/11
to mint...@googlegroups.com
நான் ஆங்கிலத்தில் எழுதிய கருத்துக்களைவிட அந்நாட்டுமக்களுடன் பேசி உண்மையை அறிந்துகொள்வதே முக்கியம் என்று நினப்பவன்
தினம் காலையில் கட்டாயம் டைவானுக்கும் சீனாவுக்கும் ஸ்கைப்பவேண்டும். 
டைவான்காரர் வணிகம் பற்றிச் சொல்வதைவிட அவர்தான் அயன் கந்தவிலாஸ் சீனர் என்றும் மெயின்லேண்ட் சீனர்கள் அயோக்கியர்கள் என்று கூறுவதைக் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன்
 
வீட்டுக்கு வீடு வாசப்படி
எல்லாமே சொந்தக்கதை சோகக்கதை
எதை எடுப்பது எதை விடுவது
நம் அரசர்களுக்குப் பிரச்சினையில்லை
சின்னப் போரில் சிலரைக்கொன்றால் ஒரு சின்னக்கோவில். 
பெரிய போர் என்றால் அது தஞ்சைப் பெரிய கோவில்
ஆமா தெரியாமக் கேக்குறேன் அப்படி அமெரிக்கா கோவில் கட்டினால் எம்மாம்பெரிசு கட்டனும்
நாகராசன்

2011/8/31 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Aug 31, 2011, 1:26:30 AM8/31/11
to mint...@googlegroups.com
2011/8/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

நான் ஆங்கிலத்தில் எழுதிய கருத்துக்களைவிட அந்நாட்டுமக்களுடன் பேசி உண்மையை அறிந்துகொள்வதே முக்கியம் என்று நினப்பவன்
தினம் காலையில் கட்டாயம் டைவானுக்கும் சீனாவுக்கும் ஸ்கைப்பவேண்டும். 
டைவான்காரர் வணிகம் பற்றிச் சொல்வதைவிட அவர்தான் அயன் கந்தவிலாஸ் சீனர் என்றும் மெயின்லேண்ட் சீனர்கள் அயோக்கியர்கள் என்று கூறுவதைக் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன்
 
வீட்டுக்கு வீடு வாசப்படி
எல்லாமே சொந்தக்கதை சோகக்கதை
எதை எடுப்பது எதை விடுவது

1937ல் என்ன நடந்தது என்பதை அந்த நாட்டு மக்களிடம் பேசி கண்டுபிடிக்க போகிறீர்களா?:-)

குறைந்தது 80 - 90 வயது நபர்களிடம் தான் கேட்கணும்.நல்வாழ்த்துக்கள்.

Nagarajan Vadivel

unread,
Aug 31, 2011, 1:45:25 AM8/31/11
to mint...@googlegroups.com
செல்வன் ஐயா
நீங்களும் நானும் ஆய்வாளார்கள். 
நீங்கள் செல்வத்தை ஆய்வதற்குச் செல்வந்தனாக இருக்கவேண்டும் என்று கூறுவீர்களா?
 மானுடவியல் மரபியலாய்வுப்படி ஒரு குமுகாயத்தின் ஏட்டில் எழுதாத வரலாற்றை குறைந்தது நூறாண்டுகளுக்குமேல் திரட்ட முடியும்
எழுத்தில் உள்ள வ்ரலாறுக்குப் பலநேரம் காமாலைக் கண்ணும் மாலைக்கண் நோயும் வந்துவிடும்
பல ஆண்டுகளுக்குமுன் இந்தப்பகுதிபற்று நூல் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளை விக்கிப்பீடியா வருவதற்குமுன் படித்திருக்கிறேன்.  ஹிட்லர் பற்றி அமெரிக்கப் பற்வைக்கு மாறான ஆவணங்கள் கொண்டு எழுதப்பட்ட நூல்களையும் படித்திருக்கிறேன்.  சீனம் பற்றி அமெரிக்காவின் டிப்ளமசி மீள்பார்வைக்குள்ளாகியிருக்கிறது.  இப்போது இந்தியாவின் இலங்கை டிப்ளமசி போல் இருந்தது முன்னர் அமெரிக்காவின் கீழை நாடுகள் பற்றியபார்வை
நாகராசன்
நாகராசன்

2011/8/31 செல்வன் <hol...@gmail.com>
2011/8/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 31, 2011, 1:48:48 AM8/31/11
to mint...@googlegroups.com
சுருக்கமும், பொருத்தமும் ஆன கருத்துக்கள், பேராசிரியரே. 

செல்வன்

unread,
Aug 31, 2011, 1:55:20 AM8/31/11
to mint...@googlegroups.com
ஐயா,

இரண்டாம் உலகபோரின் வரலாறு 60 ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள வரலாற்று ஆசிரியர்களால் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.இதில் புதிதாக எதையும் சேர்ப்பது சாத்தியமே.ஆனால் அதை செய்யுமுன் இதற்குமுன் ஆவணப்படுத்தப்பட்டவற்றை படிப்பது அவசியம்.ஆய்வில் லிடரேச்சர் ரிவ்யூ எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

Innamburan Innamburan

unread,
Aug 31, 2011, 2:16:38 AM8/31/11
to mint...@googlegroups.com
Amen

2011/8/31 செல்வன் <hol...@gmail.com>
ஐயா,

Nagarajan Vadivel

unread,
Aug 31, 2011, 3:25:20 AM8/31/11
to mint...@googlegroups.com
இதில் தமிழர் தொடர்பான இன்னொரு கோணமும் உண்டு. 
தமிழர்கள் சீனர்கள் யூதர்களுக்கு இணையாகப் புலம்பெயர்ந்தபோதிலும் அவர்கள் தங்கள் குடும்பமரபைக் காக்க வேற்றுஇனப் பெண்களை மணம் முடிப்பதைத் தவிர்த்தே வந்துள்ளனர். 
அந்நாட்டில் ஒரு தொடுப்பு இருந்தால் போதும் என்ற அளவிலேயே அம்மக்களுடன் தொடர்பில் இருந்துவந்தனர். 
எங்கள் செல்வம் வேண்டும் ஆனால் எங்களுடன் மண உறவுமட்டும் கூடாது என்று போடும் கபடவேடமே அவர்களை உள்ளூரில் ஒரு உழைப்பைச் சுரண்டும் சின்னமாக அடையாளம் காட்டியுள்ளது.
என்னுடைய சொந்த அனுபவத்தில் என் ஆஃப்ரிக்க நணபர் முதல் முதல் என் குடுப்பத்தைச் சந்தித்ததும் என் மனைவியிடம் கேட்ட முதல் கேள்வி நான் உங்கள் மகளை மருமகளக்கிக் கொள்ள விரும்புக்றேன் சம்மதமா என்பதே
இப்போது இந்திய ஜெர்மனி வணிகக்குழுவில் உறுப்பினராக இருப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் ஏற்பட்ட அனுபவம்.
தமிழகத்தில் என்னுடன் கூட்டாளியாக இருந்தவர் பன்னாட்டு வணிகத்தில் சிறந்தவர்.  நான்கு சகோதரர்கள்.  ஒருவர் ஹாங்காங்கிலும், ஒருவர் அமெரிக்காவிலும், ஒருவர் ஜெர்மணியிலும் பெரும் வணிகர்கள்.  நாங்கள் இருவரும் ஹாங்காங்க் சென்றபோது அவர் எங்களை அவர் வீட்டுக்குள் அழைத்துச் செல்லாதது ஒரு மர்மமாகவே இருந்தது.  மலையின்மேல் ஜாக்கி சான் வீட்டுக்கு அருகில் என்று தூர இருந்து காட்டினாரே ஒழிய வீட்டுக்குள் அழைத்துச் செல்லவில்லை.
அப்பொதுதான் என் கூட்டாளி இவனும் ஜெர்மன் அண்ணன் மாதிரித் தெரிகிறது என்றூ சொன்னார்
மேலும் தூண்டிக்கேட்டபோது ஜெர்மனில் அண்ணன் ஒரு ஜெர்மன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் சாலைவிபத்தில் இறந்துபோக அவரின் இறுதி மரியாதைக்குச் ஜெர்மனி சென்று அத்தோடு அந்தக் குடும்பத்தை மறந்துவிட்டதாகவும் சொன்னார்
இதுமாதிர்ச் சான்ஸ் கிடச்சா விட்டுருவமா. ஒரு சதித் திட்டம் உருவானது
ஒருமுறை ஜெர்மனியில் ஒரு மரப்பொருட்கள் உருவாக்கும் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு என் நன்பரையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.  அன்றே திரும்பவேண்டியதற்குப் பதிலாக ஒரு நாள் பயனத்தைத் தள்ளிவைத்துவிட்டு  தொழிற்சாலை அலுவல் முடிந்ததும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் எங்களைக் காரில் ப்ரெமனில் இறக்கிவிடவும் பிரமனில் ஒரு ஹோட்டலில் அறைக்கு ஏற்பாடு செய்ய வேண்டினேன்.  ஏற்பாடு முடிந்ததும்  நண்பர் வண்டி ப்ரான்க்பர்ட் போகாமல் வேறுபக்கம் போவதை உணரவில்லை.  வண்டி பிரமனில் நின்றதும்தான் அவருக்குச்  சதித்திட்டம் புரிந்தது. 
மறுநாள் காலை அவரும் நானும் ஒரு வாடகை வண்டியில் ஏறி பிரமனுக்கு அருகில் உள்ள சிறு நகருக்கு அவர் வழி சொல்லச் சென்றடைந்தோம்.  அவருக்குத் தெரு தெரிந்தது வீடு தெரியவில்லை.  சிலமுறை தெருவலம் வந்து இறுதியாக வீடு இதுவாகத்தான் இருக்கும் என்ற அனுமானத்துடன் அழைப்புமணியை அழுத்த கதவை திறந்தவர் அதிர்ச்சியடைய பின்னர் பதிய உணவுக்கு எங்கள் ஹோட்டலுக்கு வருமாறு அழைத்தோம்.  அவரின் பெண்ணிடம் பேசியபோது அந்த இளம்பெண்னுக்குச் சென்னை கலாசேத்திராவில் சேர்ந்து நடனம் கற்றுக்கொள்ளும் ஆசை இருப்பதை அறிந்தேன்.  பிரமென், ஹனோவர் வழியே ப்ரன்க்பர்ட் வந்து இந்தியா திரும்பியதும் அந்தப்பெண் கலாசேத்திராவில் சேர்ந்து நடனம் கற்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன் பிரிந்த குடும்பம் மீண்டும் இணந்தது.
 இதைச் சொல்வதற்குக் காரணம் தமிழர்களுக்கு வேற்றுநாட்டுப்பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கம்.  என் மாணவர் ஒருவருக்கு தென்ஆஃப்ரிக்கப் பல்கலைக்கழகத்தில் வேலைவாங்கிக்கொடுத்தபோது என்னைக் கை எடுத்துக்குப்பிட்ட குடும்பம் அவர் ஒரு ஆஃப்ரிக்கப் பஎண்ணை மணந்துகொண்டபோது என்னைக் காறித்துப்பாத குறையாகத் திட்டித் தீர்த்தனர்
எனக்கு நிறையக் கொங்கு நாட்டுத் தொடர்புண்டு. என்னுடன் ஆராய்ச்சி மாணவராக இருந்தவர் ஆந்திரப் பெண்ணைக் காதலித்து மணம்ப்ரிந்துகொண்டபோது நண்பரின் தந்தை அரிவாளும் கையுமாக கருப்பணசாமி ஆட்டம் ஆடியது பயங்கரமாக இருந்தது
இன்னொருவர் நாயுடு.  அவர் மணந்துகொண்டது ஜப்பானியப் பெண்ணை.  தேவி என்ற பெயர்கொண்டு தமிழராகவே வாழ்ந்த அவர் நாயுடு சமூகத்தில் சந்தித்த எதிர்ப்பு கடுமையானது.  அவனுக கிடக்குறாங்க பொக்கிப் பசங்க என்று என் நண்பர் எதிர் நீச்சலடித்துத்தான் வாழ முடிந்தது
ஆப்ரிக்காவில் அங்கிருக்கும்வரை ஏதாவது ஒரு தொடுப்பை வைத்துகொல்வது தமிழருக்குக் கைவந்த கலை.  என்னுடன் பணிபுரிந்தபல் பேராசிரியகளின் கதை இப்படித்தான் ஒரு பேராசிரியர் அடிக்கடி பணி இடத்தை மாற்றியதற்குக் காரணம் கேட்ட்போது குழந்தை வளர்ந்து அப்பா என்று சொல்வதற்குமுன் தப்பிப்பதே விவேகம் என்று சொல்லுவார்
கொங்குப் பகுதியில்  நான் பார்ர்த்த இன்னொரு பழக்கம் பணக்காரர்கள் ஏதாவது சினிமா அல்லது கலையுலகத் தொடுப்பு வைத்துக்கொள்வது
என் மரியாதைக்குரிய மூத்தவர் ஒருவர் அவர் வீட்டில் எல்லாரும் உட்கார்ந்து தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்க்கும்போது அவர் தொடுப்பாக இருந்த ஆந்திரப்பைங்கிளி தொலைக்காட்சியில் பாடல் காட்சியில் தோன்றும் உடனே அவரைத்தவிர எல்லோரும் பாடல் முடியும்வரை அம்பேல்
இப்போது கோவை கொஞ்சம் பரவாயில்லை. கொங்குத் தமிழர்கள் வீடுகளில் வடநாட்டு அந்நியநாட்டுச் சம்பந்தம். 
கணேசனாரைக்கேட்டால் நிறையச் சொல்லுவார்
ஜெர்மனிபற்றி சுபாவும் அமெரிக்கா பற்றிச் செல்வனும் சொல்ல வேண்டும்
நாகராசன்

2011/8/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Aug 31, 2011, 3:46:59 AM8/31/11
to mint...@googlegroups.com
2011/8/31 செல்வன் hol...@gmail.com

...

ஜப்பானிஅயும், ஜெர்மனியையும் பிடித்த அமெரிக்கா
 
”பிடித்த” என்பது இந்த சூழ்நிலையில் பொறுத்தமான ப்ரயோகம் இல்லை.
 
எப்போதும் போல செல்வனின் அமெரிக்க ப்ரியம் நன்கு வெளிப்படுகின்றது. சரி அமெரிக்காவில் உள்ளவர்கள் எங்கிருந்து சென்றவர்கள்..???????
 
அடுத்து அமெரிக்கா வியட்நாமில் செய்த மனிதாபிமானமிக்க செயல்கள் ..??
 
அடுத்து.. பிடித்து வரும் ஈராக்கிய/ ஆப்கானிஸ்தான் கைதிகளை அமெரிக்க  வீரர்கள் எவ்வளவு அன்பாக நடத்துகின்றார்கள் ??
 
சுபா
 
அந்த நாடுகளை மனிதாபிமானம் மிக்க முறையில் நடத்தி, வலுவான பொருலாதாரத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்தியது.கிழக்கு ஜெர்மனியை பிடித்த ரஷ்யர்கள் அங்கே கனக்கில் அடங்காத கொடூரங்களை நிகழ்த்தி, கைக்கு கிடைத்த ஜெர்மானியரின் சொத்துக்களையும், தொழிற்சாலைகளையும்,மக்களையும் ரஷ்யாவுக்கு கொண்டு சென்று தம் நாட்டை வளப்படுத்தினர்.அமெரிக்கா அப்படி செய்யவே இல்லை.

--
செல்வன்

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

www.holyox.blogspot.com

http://twitter.com/#holyox

https://profiles.google.com/holyape/buzz

https://www.facebook.com/holyape

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Aug 31, 2011, 3:55:49 AM8/31/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/8/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இதில் தமிழர் தொடர்பான இன்னொரு கோணமும் உண்டு. 
தமிழர்கள் சீனர்கள் யூதர்களுக்கு இணையாகப் புலம்பெயர்ந்தபோதிலும் அவர்கள் தங்கள் குடும்பமரபைக் காக்க வேற்றுஇனப் பெண்களை மணம் முடிப்பதைத் தவிர்த்தே வந்துள்ளனர். 
அந்நாட்டில் ஒரு தொடுப்பு இருந்தால் போதும் என்ற அளவிலேயே அம்மக்களுடன் தொடர்பில் இருந்துவந்தனர். 
எங்கள் செல்வம் வேண்டும் ஆனால் எங்களுடன் மண உறவுமட்டும் கூடாது என்று போடும் கபடவேடமே அவர்களை உள்ளூரில் ஒரு உழைப்பைச் சுரண்டும் சின்னமாக அடையாளம் காட்டியுள்ளது.
என்னுடைய சொந்த அனுபவத்தில் என் ஆஃப்ரிக்க நணபர் முதல் முதல் என் குடுப்பத்தைச் சந்தித்ததும் என் மனைவியிடம் கேட்ட முதல் கேள்வி நான் உங்கள் மகளை மருமகளக்கிக் கொள்ள விரும்புக்றேன் சம்மதமா என்பதே
இப்போது இந்திய ஜெர்மனி வணிகக்குழுவில் உறுப்பினராக இருப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் ஏற்பட்ட அனுபவம்.
தமிழகத்தில் என்னுடன் கூட்டாளியாக இருந்தவர் பன்னாட்டு வணிகத்தில் சிறந்தவர்.  நான்கு சகோதரர்கள்.  ஒருவர் ஹாங்காங்கிலும், ஒருவர் அமெரிக்காவிலும், ஒருவர் ஜெர்மணியிலும் பெரும் வணிகர்கள்.  நாங்கள் இருவரும் ஹாங்காங்க் சென்றபோது அவர் எங்களை அவர் வீட்டுக்குள் அழைத்துச் செல்லாதது ஒரு மர்மமாகவே இருந்தது.  மலையின்மேல் ஜாக்கி சான் வீட்டுக்கு அருகில் என்று தூர இருந்து காட்டினாரே ஒழிய வீட்டுக்குள் அழைத்துச் செல்லவில்லை.
அப்பொதுதான் என் கூட்டாளி இவனும் ஜெர்மன் அண்ணன் மாதிரித் தெரிகிறது என்றூ சொன்னார்
மேலும் தூண்டிக்கேட்டபோது ஜெர்மனில் அண்ணன் ஒரு ஜெர்மன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் சாலைவிபத்தில் இறந்துபோக அவரின் இறுதி மரியாதைக்குச் ஜெர்மனி சென்று அத்தோடு அந்தக் குடும்பத்தை மறந்துவிட்டதாகவும் சொன்னார்
இதுமாதிர்ச் சான்ஸ் கிடச்சா விட்டுருவமா. ஒரு சதித் திட்டம் உருவானது
ஒருமுறை ஜெர்மனியில் ஒரு மரப்பொருட்கள் உருவாக்கும் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு என் நன்பரையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.  அன்றே திரும்பவேண்டியதற்குப் பதிலாக ஒரு நாள் பயனத்தைத் தள்ளிவைத்துவிட்டு  தொழிற்சாலை அலுவல் முடிந்ததும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் எங்களைக் காரில் ப்ரெமனில் இறக்கிவிடவும் பிரமனில் ஒரு ஹோட்டலில் அறைக்கு ஏற்பாடு செய்ய வேண்டினேன்.  ஏற்பாடு முடிந்ததும்  நண்பர் வண்டி ப்ரான்க்பர்ட் போகாமல் வேறுபக்கம் போவதை உணரவில்லை.  வண்டி பிரமனில் நின்றதும்தான் அவருக்குச்  சதித்திட்டம் புரிந்தது. 
மறுநாள் காலை அவரும் நானும் ஒரு வாடகை வண்டியில் ஏறி பிரமனுக்கு அருகில் உள்ள சிறு நகருக்கு அவர் வழி சொல்லச் சென்றடைந்தோம்.  அவருக்குத் தெரு தெரிந்தது வீடு தெரியவில்லை.  சிலமுறை தெருவலம் வந்து இறுதியாக வீடு இதுவாகத்தான் இருக்கும் என்ற அனுமானத்துடன் அழைப்புமணியை அழுத்த கதவை திறந்தவர் அதிர்ச்சியடைய பின்னர் பதிய உணவுக்கு எங்கள் ஹோட்டலுக்கு வருமாறு அழைத்தோம்.  அவரின் பெண்ணிடம் பேசியபோது அந்த இளம்பெண்னுக்குச் சென்னை கலாசேத்திராவில் சேர்ந்து நடனம் கற்றுக்கொள்ளும் ஆசை இருப்பதை அறிந்தேன்.  பிரமென், ஹனோவர் வழியே ப்ரன்க்பர்ட் வந்து இந்தியா திரும்பியதும் அந்தப்பெண் கலாசேத்திராவில் சேர்ந்து நடனம் கற்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன் பிரிந்த குடும்பம் மீண்டும் இணந்தது. 
 
நல்ல உதவி. சாஸ்திரீய நடனம், சித்தார், தப்லா, வீணை என கற்பதில் சில ஜெர்மானியர்களுக்கு விருப்பம் உண்டு. எனது தோழி ஒருவர் இங்கேயே ஒரு இலங்கைத் தமிழ் ஆசிரியரிடம் பரதம் கற்று நடனம் ஆடியவர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு முதுகில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. ஆனாலும் தீபாவளிக்கு வீட்டில் சிறப்பாக நான் அழைக்கும் போது வந்து தன் கைகளாலும் தலை அசைப்பாலுமே சில அபிநயங்களை செய்து எங்களை மகிழ்ச்சி படுத்துவார்.
 
 இதைச் சொல்வதற்குக் காரணம் தமிழர்களுக்கு வேற்றுநாட்டுப்பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கம்.  என் மாணவர் ஒருவருக்கு தென்ஆஃப்ரிக்கப் பல்கலைக்கழகத்தில் வேலைவாங்கிக்கொடுத்தபோது என்னைக் கை எடுத்துக்குப்பிட்ட குடும்பம் அவர் ஒரு ஆஃப்ரிக்கப் பஎண்ணை மணந்துகொண்டபோது என்னைக் காறித்துப்பாத குறையாகத் திட்டித் தீர்த்தனர்.
 
இந்த தீமில் கண்ணன் நெடு நாட்களுக்கு முன்னர் ஒரு கதை எழுதியிருந்தார். படிக்கும் போது ஞாபகம் வருகின்றது.
 
சுபா

விஜயராகவன்

unread,
Aug 31, 2011, 4:43:15 AM8/31/11
to மின்தமிழ்
On Aug 31, 9:46 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> 2011/8/31 செல்வன் holy...@gmail.com

>
>
>
> > ...
> > ஜப்பானிஅயும், ஜெர்மனியையும் பிடித்த அமெரிக்கா
>
> ”பிடித்த” என்பது இந்த சூழ்நிலையில் பொறுத்தமான ப்ரயோகம் இல்லை.

”பிடித்த” என்றால் கைப்பற்றிய, captured, occupied

விஜயராகவன்

செல்வன்

unread,
Aug 31, 2011, 11:07:15 AM8/31/11
to mint...@googlegroups.com

2011/8/31 Subashini Tremmel <ksuba...@gmail.com>

”பிடித்த” என்பது இந்த சூழ்நிலையில் பொறுத்தமான ப்ரயோகம் இல்லை.
 
எப்போதும் போல செல்வனின் அமெரிக்க ப்ரியம் நன்கு வெளிப்படுகின்றது. சரி அமெரிக்காவில் உள்ளவர்கள் எங்கிருந்து சென்றவர்கள்..???????
 
அடுத்து அமெரிக்கா வியட்நாமில் செய்த மனிதாபிமானமிக்க செயல்கள் ..??
 
அடுத்து.. பிடித்து வரும் ஈராக்கிய/ ஆப்கானிஸ்தான் கைதிகளை அமெரிக்க  வீரர்கள் எவ்வளவு அன்பாக நடத்துகின்றார்கள் ??

பிடித்த என்பது பொருந்தவில்லை என்றால் "மீட்ட" என மாற்றி படித்து கொள்ளலாம்.

ஜெர்மனியை அமெரிக்கா பிடிக்க கூட இல்லை.நாஜிகளிடமிருந்து மீட்டு ஜெர்மன் மக்களீடம் அளித்துவிட்டது.

ஜப்பானில் அமெரிக்க படைகள் இறங்கவே இல்லை.அதனால் ஜப்பானை பிடித்தது என கூற முடியாது.

வியட்னாம் யுத்தத்தில் மக்களோடு கலந்திருந்து கொரில்லா தாக்குதல் நடத்திய வடவியட்னாம் படைகள் தான் அங்கு நிகழ்ந்த மரணங்களுக்கு பொறுப்பேற்கவேண்டும்.

ஆப்கான்/இராக்கிய கைதிகள் அல்கொய்தா அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் க்வாண்டனாமோவில் நல்ல தட்பவெட்ப நிலையில் மூன்று வேளை உணவு, உடல்பயிற்சி,படிக்க புத்தகங்கள் என ஜாலியாக தம் விடுமுறையை கழித்து வருகின்றனர்:-)
Reply all
Reply to author
Forward
0 new messages