பார்ப்பனர் மாமிசம் சாப்பிடுவார்களா?

91 views
Skip to first unread message

Santhanam Swaminathan

unread,
May 23, 2012, 3:50:04 AM5/23/12
to mint...@googlegroups.com
நான் சொல்லுவது பழந்தமிழகப் பிராமணர்களைப் பற்றியது. இப்பொழுதுள்ள பிராமணர்களைப் பற்றி அல்ல.

புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று கற்றோராலும் மற்றோராலும் புகழப்படும் கபிலர் பாடிய சில பாடல்களில் (புறம் 113, புறம் 14) மாமிச உணவு பற்றிய செய்திகள் வருகின்றன. இதனால் பழைய தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் மாமிசம் (இறைச்சி) உண்டனரா என்ற கேள்விகள் எழுந்தன. உலகப் புகழ் காளிதாசனும் விதூஷகன் வாயிலாக வரும் வசனத்தில் மாமிசம் பற்றிப் பேசுவான். இதற்கெல்லாம் நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் ஆன்றோர்களும் சான்றோர்களும் பதில் கூறிவிட்டனர்.

அதாவது ஒருவன் இறைச்சி உணவு பற்றிப் பாடியதால் அவர்கள் உண்டதாகாது என்றும் பல தமிழ்ப் புலவர்கள் தங்களையே பாணர்கள் போல உருவகித்துப் பாடியபோதிலும் அவர்கள் பாணர் சாதியினர் அல்ல, அந்தணரே என்றும் விடை கூறி, எடுத்துக் காட்டுகள் தந்து சமாதானப் படுத்திவிட்டனர்.
பத்துப் பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் பார்ப்பார் வீட்டை கோழியும் நாயும் கூட நெருங்காது என்று அவர்கள் தூய்மை பெரிதும் போற்றப்படுகிறது. அதே நூல் வரிகள் 302-310 ஐயர் வீட்டில் என்ன என்ன கிடைக்கும் என்ற “மெனு” வையும் கொடுக்கிறது:

இராசன்னம் (அரிசிச் சோறு)
வெண்ணெயில் வெந்த கொம்மட்டி மாதுளைத் துண்டு
(மிளகு பொடியும் கருவேப்பிலையும் கலந்தது)
மாவடு

இதைப் பாடிய உருதிரங்கண்ணானார் ஒரு அந்தணரே.
இது இப்படி இருக்க, நீண்ட நாட்களாக எல்லா உரைகளிலும் வரும் ஒரு வரி புதிராகவே இருக்கிறது:

கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்
பார்ப்பாரும் திண்பர் உடும்பு

பொருள்: அருவி உடைய மலைநாடனே! பார்ப்பனரும் நாய் கவ்வியதாயினும் உடும்பின் தசையை அதன் உயர்வை எண்ணித் தின்பர். அதுபோல கள்ளியிடம் தோன்றும் அகிலையும் கரிய காக்கையின் சொல்லையும் அவை தோன்றிய இடத்தை எண்ணி இகழாது உயர்வாய்க் கருத வேண்டும்.

உடும்பு என்னும் பல்லி இனப் பிராணியை எந்த எந்த இனத்தினர் சாப்பிடுவர்? உடும்புக் கறிக்கு ஏதேனும் மருத்துவ சக்தி இருப்பதால் இப்படிச் சொன்னார்களா? அல்லது இதை அப்படியே பொருள் கொள்ளாது வேறு வகையில் பொருள் கொள்ள வேண்டுமா?
இது நீண்ட காலமாக என் மனதை உறுத்தும் ஒரு கேள்வி. விடை தெரிந்தால் எழுதுங்கள்.
 
Swami
020 8904 2879
07951 370 697

Geetha Sambasivam

unread,
May 23, 2012, 4:00:03 AM5/23/12
to mint...@googlegroups.com
அருமையான சந்தேகம்.  ஹரிகி, தேவ், மோகனரங்கன் போன்றவர்கள் தெளிவிப்பார்கள் என எண்ணுகிறேன்.  ஆவலுடன் காத்திருக்கேன்.

2012/5/23 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்
பார்ப்பாரும் திண்பர் உடும்பு

பொருள்: அருவி உடைய மலைநாடனே! பார்ப்பனரும் நாய் கவ்வியதாயினும் உடும்பின் தசையை அதன் உயர்வை எண்ணித் தின்பர். அதுபோல கள்ளியிடம் தோன்றும் அகிலையும் கரிய காக்கையின் சொல்லையும் அவை தோன்றிய இடத்தை எண்ணி இகழாது உயர்வாய்க் கருத வேண்டும்.

உடும்பு என்னும் பல்லி இனப் பிராணியை எந்த எந்த இனத்தினர் சாப்பிடுவர்? உடும்புக் கறிக்கு ஏதேனும் மருத்துவ சக்தி இருப்பதால் இப்படிச் சொன்னார்களா? அல்லது இதை அப்படியே பொருள் கொள்ளாது வேறு வகையில் பொருள் கொள்ள வேண்டுமா?
இது நீண்ட காலமாக என் மனதை உறுத்தும் ஒரு கேள்வி. விடை தெரிந்தால் எழுதுங்கள்.
 
Swami
020 8904 2879
07951 370 697

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Karuannam Annam

unread,
May 23, 2012, 11:53:13 AM5/23/12
to mint...@googlegroups.com, Geetha Sambasivam


2012/5/23 Santhanam Swaminathan <swam...@yahoo.com>


பத்துப் பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் பார்ப்பார் வீட்டை கோழியும் நாயும் கூட நெருங்காது

பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா என்று இன்னா நாற்பதும் மனையுறை கோழியோடு ஞமலி துன்னாது என்ற வரியுடன் சேர்ந்துகொள்கிறது.
என்று அவர்கள் தூய்மை பெரிதும் போற்றப்படுகிறது. அதே நூல் வரிகள் 302-310 ஐயர் வீட்டில் என்ன என்ன கிடைக்கும் என்ற “மெனு” வையும் கொடுக்கிறது:

இராசன்னம் (அரிசிச் சோறு)
வெண்ணெயில் வெந்த கொம்மட்டி மாதுளைத் துண்டு
(மிளகு பொடியும் கருவேப்பிலையும் கலந்தது)
மாவடு
அந்தணர்இல் லிருந்து ஊணின் இன்னா என்றும் இன்னா நாற்பது சொல்கிறது. அன்று அந்தணர், துறவியர் ஓரிடத்து இருந்து உண்ணுதல் இல்லையாதலாலும் இரந்து வாழ்ந்ததாலும் அவர் வீட்டில் உண்ணுதல் பற்றி நூல் உரைக்கிறது என்று உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

கோழியும் நாயும் புகுதல் சொல்லும்போது பார்ப்பனர் என்ற சொல்லாட்சியும் விருந்து உண்ணுதல் பற்றிப் பேசும்போது அந்தணர் என்ற சொல்லாட்சியும் கவனிக்கத்தக்கது.

 

 நீண்ட நாட்களாக எல்லா உரைகளிலும் வரும் ஒரு வரி புதிராகவே இருக்கிறது:

கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்
பார்ப்பாரும் திண்பர் உடும்பு

பொருள்: அருவி உடைய மலைநாடனே! பார்ப்பனரும் நாய் கவ்வியதாயினும் உடும்பின் தசையை அதன் உயர்வை எண்ணித் தின்பர். 

உடும்பு என்னும் பல்லி இனப் பிராணியை எந்த எந்த இனத்தினர் சாப்பிடுவர்? உடும்புக் கறிக்கு ஏதேனும் மருத்துவ சக்தி இருப்பதால் இப்படிச் சொன்னார்களா?
 
 
  நண்பர் சொன்னது உடும்புக் கறி மிகுந்த கவிச்சியுள்ளது. அதனைப் பொறுத்துக்கொண்டு உண்ண வேண்டும். தன் முயற்சியின்றி மற்றவர் முயற்சியால் வந்தால் எந்த உயர் நிலையில் இருப்பாரும் எதனையும் கொள்வர் என இவ்வரி உணர்த்துகிறது என எண்ணுகிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Hari Krishnan

unread,
May 23, 2012, 10:36:27 PM5/23/12
to mint...@googlegroups.com, Geetha Sambasivam


2012/5/23 Karuannam Annam <karu...@gmail.com>

கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்
பார்ப்பாரும் திண்பர் உடும்பு

இந்தப் பாடலுக்கு அண்மையில் திரு சேசாத்திரி எழுதி, நான் பொருள் விளக்கியிருந்தேன்.  அதுக்குள்ள மறந்துட்டாங்களா இல்ல, மக்களுக்குப் பாப்பான் உடும்பு தின்னே ஆகணும்னு உள்ளுக்குள்ள விடாப்பிடியா ஏதோ ஒண்ணு மரங்கொத்தி மாதிரி கொத்திக்கிட்டே இருக்குதா?  மூன்றாமடி நான்காம் சீர் தொடங்கி, ஈற்றுச்சீர் வரையில் தொடரும் வாக்கியத்தை முழுமையாக மனத்தில் வாங்கிக் கொண்டு புரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

12.8.2011 அன்று திரு சேசாத்திரிக்குச் சொன்னது:

பொருளுக்குச் சின்ன க்ளூ கொடுக்கிறேன்.

பாப்பாரப் புள்ள நண்டு புடிச்ச மாதிரி அப்படின்னும் பழமொழி இருக்கு.  நாம என்ன சொல்வோம்னா, ‘நண்டு பிடிக்கத் தெரியாத பாப்பாரப் பிள்ளை போய், நண்டைப் பிடிக்க முயன்றால், அது எவ்வளவு முடியாதோ அவ்வளவு இவனுக்கும் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது.  He is unfit, inefficient for this work.  As inefficient as a Brahmin boy trying to catch a crab.

சேசாத்திரி என்ன சொல்வார்னா,‘பாப்பாரப் பசங்க நண்டு தின்னுவாங்க’ அப்படின்னு பழமொழியே இருக்கு. :))

புலவர் என்ன சொல்றாரு?

கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத்—தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு

(காப்பி பேஸ்ட் பண்ணினா அதுல இருக்கும் எழுத்துப் பிழையைக் கூடவா திருத்த மாட்டாங்க!  இல்லாட்டி எழுத்துப் பிழை இருப்பதாகவே தெரியவில்லையா, அப்படியும் இல்லாட்டி, பாட்டைப் படிக்காமலே மொட்டையா ஒரு முடிவுக்க வந்துடறாங்களா!  ஒண்ணுமே புரிய மாட்டேங்குது சாமி!)  பழமொழி நானூற்றில் வரும் பாடல் இது.  ஈற்றடி ஒரு பழமொழி. 

அரசனுக்கு அறிவுரை கூறுகிறார்.  
 
‘அப்பா!  அறிவுரை சொல்பவர் யாராக இருந்தாலும் சரி.  அவர் உருவத்தால் பெரிய அறிஞர் என்ற இம்ப்ரெஷனை ஏற்படுத்தினா மட்டும்தான் அவர் சொல்லும் நல்ல அறிவுரையைக் கேட்கவேண்டும் என்பதில்லை.  உனக்கு அறிவுரை சொல்பவன் பார்ப்பதற்குக் கள்ளிச் செடியைப் போல, முண்டும் முடிச்சுமாய், கொத்துக் கொத்தாய் முள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பவனாக இருந்தாலும் சரி; இல்லை, சந்தனம் மாதிரி இல்லாம, அகில் மாதிரி கொஞ்சம் (சந்தனத்துக்கு) இரண்டாந்தரமாக இருந்தாலும் சரி; கன்னங் கருக்க ஒரு காக்கா வந்து கத்தின மாதிரி அவர் குரல் இனிமையாக இல்லாமலும் உருவம் அழகற்றதாகவும் இருந்தாலும் சரி.  அவர் சொல்கிற நல்லுரையை மனத்தில் வாங்கிக்கொள்.  ஏனெனில், பகையால் நசியாமல் நாட்டைக் காக்கவேண்டும் என்ற பொறுப்புள்ளவனுக்கு, அவர் சொல்லும் சொல்தான் முக்கியமே ஒழிய, அவருடைய உருவம் முக்கியமன்று.

அப்படி நீ ஒரு வேளை கேட்கவில்லை என்று வைத்துக்கொள்.  என்ன ஆகும்?  உன்னுடைய பகைவர்கள் உனக்குத் தெரியாமல் அங்கங்க இன்ஃபில்ட்ரேட் பண்ணுவாங்க. நாட்டை அங்கங்க கடிச்சுக் கொதறி வைப்பாங்க. மக்கள் மனசை கொஞ்சம் கொஞ்சமா அரிப்பாங்க.  அப்புறம் உன்னை வெல்வது யாருக்கும் எளிது.  எப்படியென்றால்,

ஆட்டை மிக எளிதில் யாரும் வெட்டலாம்; மாட்டையும் அப்படியே; மானையும் அப்படியே.  இந்த உடும்பு இருக்கிறதே உடும்பு, அதைக் கையால பிடிக்கிறதே முடியாத காரியம்.  திமிறும்.  என்னதான் இறுகப் பற்றினாலும் தப்பிவிடும்.  அதைப் பற்றி, கறி சமைத்து உண்பது என்பது, அதற்கென்றே பயிற்சிபெற்ற சிலரால் மட்டுமே முடியும்.  ஆனா பாரு, உடும்பு ஏமாந்த சமயத்துல ஒரு நாய் அதைக் கடிச்சுப் போட்டதுன்னு வையி.  (இங்கே காட்டுநாய்களை மனத்தில் கொள்ள வேண்டும். A pack of wild dogs can overpower and kill even a tiger.) நாயோ நாய்க்கூட்டமோ, இவ்வளவு வலிமையான உடும்பைக் கடித்துவிட்டது என்றால், அசைய முடியாமல் கிடக்கும் உடும்பைக் கொல்லவோ தின்னவோ மறவனும் வேடுவனும் வேணாப்பு.  தோ இல்ல, மாமிசம்னா என்னன்னே தெரியாத பாப்பாரப் புள்ள, அதுகூட அவ்வளவு வலிமையான உடும்பைத் தின்னுடும்.  (எளியார்கூட வெல்லக்கூடியதாக, எவ்வளவு வலியதாக இருக்கும் நாடும் மாறிப்போகும்.)

இதச் சொல்லவந்தா, தோசய உட்டுட்டு தொளய எண்ணிட்டு ஒக்காந்திருக்காங்க. போகவர போகவர அடிச்சிட்டே இருக்க பாப்பான் ஒருத்தன் மாட்டினான் இல்ல?  அவன அடிச்சா திருப்பி அடிக்க யோசிப்பான் இல்ல?  அப்ப போட்டுத் தாக்கேய்!  அவ்ளதான் மேட்ரு.  (அதுவும் ஆனைக்கு இந்த மேட்டர்ல படு குஷி.  ம்க்கும்.)

காட்டு நாய்கள் லஞ்ச் தின்பதை இங்கே பார்க்கலாம்:

http://www.youtube.com/watch?v=8yUROJMAo7Y

கழுதைப் புலியைக் காட்டு நாய்கள் கொல்வதை இங்கே பார்க்கலாம்:

http://www.youtube.com/watch?v=YiqAxa1tJ5g

இப்படிப்பட்ட நாய் உடும்பைக் கடிச்சுப் போட்டா, கௌவ வேற கௌவிக்கிட்டு வந்துட்டா, அப்படிப்பட்ட பலவீனமான தருணத்தில் அதைக் கொல்ல வீராதி வீரன் வேணுமா என்ன?  பச்சப் புள்ள போதாது?

அதுதான் இந்த ஈற்றடிக்கு அர்த்தம்.  இல்ல பாப்பான் மாமிசம் தின்னத்தான் தின்னான், நீதான் டுமீல் உட்ற அப்படிங்கறீங்களா?  சரி வச்சுக்கங்க.  அப்படியே இருந்துட்டுப் போவுது.  நான் தின்பதில்லை.  அவ்ளதான் சொல்ல முடியும்.


--
அன்புடன்,
ஹரிகி.

Geetha Sambasivam

unread,
May 23, 2012, 11:27:44 PM5/23/12
to Hari Krishnan, mint...@googlegroups.com
தெளிவான விளக்கத்துக்கு நன்றி.

2012/5/24 Hari Krishnan <hari.har...@gmail.com>


2012/5/23 Karuannam Annam <karu...@gmail.com>
கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்
பார்ப்பாரும் திண்பர் உடும்பு


Santhanam Swaminathan

unread,
May 24, 2012, 12:47:45 AM5/24/12
to mint...@googlegroups.com, Geetha Sambasivam
உங்கள் விளக்கம் ஏற்பதாக உள்ளது. அவி சொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று (குறள் 259)
 என்ற குறளுக்கும் காஞ்சி பெரியவர் இது போல ஒரு விளக்கம் தந்துள்ளார். ஆயிரம் யாகங்கள் செய்து கிட்டும் புண்ணியத்தைவிட ஒரு உயிரைக் கொல்லாமல் இருப்பதால் கிடைக்கும் புண்ணியம் பெரிதே என்று. அதையும் இதையும் அருகருகே வைத்துப் படிக்கையில் உங்களுடைய வாதம் சரியே என்பது தெள்ளிதின் விளங்கும். நன்றி
Swami
020 8904 2879
07951 370 697



From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mint...@googlegroups.com
Cc: Geetha Sambasivam <geetha...@gmail.com>
Sent: Thursday, May 24, 2012 3:36 AM
Subject: Re: [MinTamil] பார்ப்பனர் மாமிசம் சாப்பிடுவார்களா?

anba

unread,
May 24, 2012, 2:43:56 AM5/24/12
to mint...@googlegroups.com

வணக்கம்,

 

இங்கு முதலில் பார்ப்பனன் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

 

நன்றி

அனபானந்தன் ரெங்கா

 

From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of Geetha Sambasivam
Sent: Wednesday, May 23, 2012 4:00 PM
To: mint...@googlegroups.com
Subject: Re: [MinTamil]
பார்ப்பனர் மாமிசம் சாப்பிடுவார்களா?

 

அருமையான சந்தேகம்.  ஹரிகி, தேவ், மோகனரங்கன் போன்றவர்கள் தெளிவிப்பார்கள் என எண்ணுகிறேன்.  ஆவலுடன் காத்திருக்கேன்.

Karuannam Annam

unread,
May 24, 2012, 3:48:45 AM5/24/12
to mint...@googlegroups.com


2012/5/24 Hari Krishnan <hari.har...@gmail.com>




புலவர் என்ன சொல்றாரு?

கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத்—தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு
  பழமொழி நானூற்றில் வரும் பாடல் இது.  ஈற்றடி ஒரு பழமொழி. 


 சந்தனம் மாதிரி இல்லாம, அகில் மாதிரி கொஞ்சம் (சந்தனத்துக்கு) இரண்டாந்தரமாக இருந்தாலும்
 
விளக்கத்திற்கு நன்றி திரு ஹரிகி.
 
 கன்னங் கருக்க ஒரு காக்கா வந்து கத்தின மாதிரி அவர் குரல் இனிமையாக இல்லாமலும் உருவம் அழகற்றதாகவும் இருந்தாலும் சரி.  அவர் சொல்கிற நல்லுரையை மனத்தில் வாங்கிக்கொள்.  

 இந்த உடும்பு இருக்கிறதே உடும்பு, அதைக் கையால பிடிக்கிறதே முடியாத காரியம்.  திமிறும்.  உடும்பு ஏமாந்த சமயத்துல ஒரு நாய் அதைக் கடிச்சுப் போட்டதுன்னு வையி அசைய முடியாமல் கிடக்கும் உடும்பைக் கொல்லவோ தின்னவோ மறவனும் வேடுவனும் வேணாப்பு.  தோ இல்ல, மாமிசம்னா என்னன்னே தெரியாத பாப்பாரப் புள்ள, அதுகூட அவ்வளவு வலிமையான உடும்பைத் தின்னுடும்.  (எளியார்கூட வெல்லக்கூடியதாக, எவ்வளவு வலியதாக இருக்கும் நாடும் மாறிப்போகும்.)



இப்படிப்பட்ட நாய் உடும்பைக் கடிச்சுப் போட்டா, கௌவ வேற கௌவிக்கிட்டு வந்துட்டா, அப்படிப்பட்ட பலவீனமான தருணத்தில் அதைக் கொல்ல வீராதி வீரன் வேணுமா என்ன?  பச்சப் புள்ள போதாது?

முதல் கருத்தையும் பழமொழிக் கருத்தையும் நன்கு விளக்கியுள்ளீர்கள். ஆனால் பழ்மொழிக்கருத்து முதல் கருத்துடன் பொருத்துதல் எளிதாக இல்லை என்பது என் எண்ணம்.
பார்ப்பாரும் என்பதில் வருகிற உம் அவர்கள் மாமிசம் உண்பதில்லை என்பதையே குறிக்கிறது. தன் முயற்சி இன்றி வரும்போது உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் வேண்டாததைக் கொள்ளக் கூடும் என்பதைப் பழ்மொழி குறிக்கிறது. பார்ப்பனர் மாமிசம் உண்பது என்பது பாடல் கருத்தல்ல. அறிஞ்ர்கள் விளக்க வேண்டும்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Hari Krishnan

unread,
May 24, 2012, 4:06:51 AM5/24/12
to mint...@googlegroups.com


2012/5/24 Karuannam Annam <karu...@gmail.com>

முதல் கருத்தையும் பழமொழிக் கருத்தையும் நன்கு விளக்கியுள்ளீர்கள். ஆனால் பழ்மொழிக்கருத்து முதல் கருத்துடன் பொருத்துதல் எளிதாக இல்லை என்பது என் எண்ணம்.
பார்ப்பாரும் என்பதில் வருகிற உம் அவர்கள் மாமிசம் உண்பதில்லை என்பதையே குறிக்கிறது. தன் முயற்சி இன்றி வரும்போது உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் வேண்டாததைக் கொள்ளக் கூடும் என்பதைப் பழ்மொழி குறிக்கிறது. பார்ப்பனர் மாமிசம் உண்பது என்பது பாடல் கருத்தல்ல. அறிஞ்ர்கள் விளக்க வேண்டும்.

மிக்க உண்மை.  அருமையான குறிப்பு.

ஒரு நாடு பலங்குன்றிப் போனால், ‘நாடு பிடிக்கவேண்டும்’ என்ற ஆவலற்றவனுக்குக் கூட அதன்மேல் ஆர்வம் உண்டாகலாம்.  You become susceptible, vulnerable even to the weak and invalid, தேவையே இல்லாதவன் கூட ‘அதை எடுத்துக் கொண்டாத்தான் என்ன’ என்று எண்ணத் தலைப்படலாம் என்ற குறிப்பையே முதல் கருத்தையும் பழமொழிக் கருத்தையும் பொருத்தம் vital link என்று கருதுகிறேன்.

சரிதானா?  மேலும் கேட்டால் மேலும் சிந்திக்க வாய்ப்புக் கிடைக்கும்.  (நான்தான் சிந்திக்க வேண்டுமென்பதில்லை.  இதெல்லாம் ஒரு கூட்டு முயற்சிதானே?  ‘கூடியிருந்து குளிர்ந்து‘. அவ்ளவுதான் வேண்டும்.)

தங்களைப் போன்ற பெரியவர்கள் எடுத்துச் சொல்வது பெரிய கௌரவம்.

Sethuraman Muthusamandi

unread,
May 24, 2012, 11:39:15 PM5/24/12
to mint...@googlegroups.com
parppar means younger.pariyar senior. palppar means pal like coloue
people. parppar means kaniyar or jothidar.

Reply all
Reply to author
Forward
0 new messages