நல்ல மனிதர்!
திரு.வி.க. - தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தனிப் பெருமையை அளித்த இந்த அறிஞருக்கு நாளை ஆகஸ்ட் 25-ந் தேதி அறுபதாம் ஆண்டு நிறைகிறது. அதை வெகு சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார், ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் முதலிய பிர முகர்களின் முயற்சியால் நடைபெற்று வருகின்றன என்பதையறிந்து நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.
திரு.வி.க-வின் தமிழ்ப் புலமையும், ஆராய்ச்சித் திறனும் பிரசித்தி பெற்றவை.அவர் இயற்றியிருக்கும் 'பெண்களின் பெருமை', 'இந்தியாவும் விடுதலையும்', 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' முதலிய உயர்ந்த நூல்களும், திருக்குறளுக்கும் பெரிய புராணத்திற்கும் அவர் எழுதியிருக்கும் விளக்கமும் என்றும் அழியாத இலக்கியங்கள். தொழிலாளர் நன்மைக்காக அவர் செய்துள்ள சேவைகளும், அரசியல் துறையில் அவர் காண்பித்த ஆர்வமும் போற்றற் குரியவை.
அத்தகைய பெரியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை மிக்க விமரிசையாகக் கொண்டாடுவது பொருத்தமேயாகும். இறைவன் அவருக்கு ஆரோக்கியத்தையும் தீர்க்க ஆயுளையும் தந்து, இன்னும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் சேவை செய்வதற்குத் தேவையான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அருளுமாறு பிரார்த்திக்கிறோம்
நல்ல மனிதர்!
திரு.வி.க. - தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தனிப் பெருமையை அளித்த இந்த அறிஞருக்கு நாளை ஆகஸ்ட் 25-ந் தேதி அறுபதாம் ஆண்டு நிறைகிறது. அதை வெகு சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார், ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் முதலிய பிர முகர்களின் முயற்சியால் நடைபெற்று வருகின்றன என்பதையறிந்து நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.
திரு.வி.க. வின் காலம்: திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தனார் (திரு. வி. க., ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953)
அன்புடன்
சிறீதரன்