அன்றொருநாள்: ஃபெப்ரவரி 13
அரியணையும், சிலுவையும்
லக்னெள
செப்டம்பர் 29, 1929
என்னருமை ஜவஹர்,
இந்தியா முழுவதில் உன் தந்தையின் செயலாற்றும் இதயம்/ உன்னுடைய கனத்துப்போன இதயம் போல் யாருக்காவது இருந்திருக்குமா என்பது ஐயமே. எனது இதயமோ அவருடைய பெருமையையும் உன்னுடைய மனவலியையும் ஒருசேர அனுபவிக்கிறது. உன்னுடைய அதியாச்சிரியமான பலியிடுதலை பற்றி அடிக்கடி நான் சொன்னதுண்டு. அதை நினைத்து நேற்றிரவு படுத்திருந்தேன். உன் தலைமைக்கு பாராட்டுகள் குவிந்தன. அப்பொழுது உன் முகத்தை பார்த்து நான், ‘இவனுக்கு பட்டாபிஷிகேமும் இது தான்; அறையப்படும் சிலுவையும் இது தான்’ என்று நினைத்துக்கொண்டேன். இரண்டும் இரட்டை; பிரிக்கமுடியாது; சில சமயங்களில், சில சூழ்நிலைகளில். இரண்டும் ஒன்றிப்போய் விடுகின்றன. நீயோ மென்மையானவன்; உன்னுடைய ஆன்மீகம் கட்டுக்கோப்பானது. உன்னை விட தரம் தாழ்ந்தோர், புரிதல் அற்றவர்கள்,பலவீனம், பொய், புறம் சொல்லுதல், வஞ்சகம் ஆகியவற்றை கண்டு மன அழுத்தம் அடையாதவர்களை விட, நீ மிகவும் இன்னலுக்குள்ளாவாய். எனக்கு என்னமோ உன்னுடைய அப்பழக்கற்ற வாய்மையிலும், விடுதலை பரவசத்திலும் அசையாத நம்பிக்கை இருக்கிறது. நீ தனக்கு மனோபலம் போதாதோ, தன்னுடைய இலக்ஷியங்களை இயற்ற ஆற்றல் போதாதோ என்று என்னிடம் கவலைப்பட்டது உண்டு. எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமோ? இது உனக்கு சவால்; இதுவே உனக்கு சடாரி மரியாதை. உன்னுடைய உன்னத குணாதிசயங்களை பாயும் சக்தியாக, தைரியலக்ஷ்மியாக, காணும் தெய்வமாக, புத்திமதியாக, இந்த சவால் மாற்றி, வரன் அளிக்கும். என் நம்பிக்கையில் எனக்கு அச்சமில்லை. ஏதாவது ஒரு வகையில் நான் உனக்கு உதவமுடியுமானால், உன் மகத்தான பணியில் தொண்டு செய்யமுடியுமானால், ஒரு வார்த்தை போதும்; ஓடோடி வருவேன். அப்படியில்லை என்றாலும், என் அன்பும், கனிவும் எப்போதும் உனக்கு உண்டு. “ஒருவனின் மனோசித்திரம் மற்றவனுக்கு சிறகடிக்காது.” என்று கஹ்லீல் கிப்ரான் சொல்லியிருந்தாலும், ‘ ஒருவனின் ஆத்ம நம்பிக்கை மற்றவனுக்கு ஒளியும், உலகுக்கு பிரகாசத்தையும் அளிக்க வல்லது.’ என்று கருதும்,
உன் சிநேகிதியும், அக்காவும் ஆன,
சரோஜினி நாயுடு.
*
அன்றாட வரலாறு நன்றாக பிடித்து ஆட்டுகிறது. நேற்று கீதாவின் வரவு. இன்று பவளாவின் வரிசை. சரோஜினி நாயுடுவின் பிறந்த நாள். அவரது வாழ்க்கை வரலாற்றை மின் தமிழர் பவளசங்கரி 11 02 2012 அன்று மின் தமிழில் ~ இந்தியாவின் கோகிலம், வானம்பாடி!~ பதிவு செய்திருக்கிறார். ஜவஹருக்கு சரோஜினி எழுதிய மடலின் தமிழாக்கம், ஒரு அனுபந்தமே. அது அந்தக்காலத்தை பிரதிபலிக்கிறது. கொசுறு: ‘tranquil’ என்ற சொல்லுக்கு எனக்கு உள்ளர்த்தம் சொல்லிக்கொடுத்தது சரோஜினி நாயுடுவின், ‘...On the tranquil brow of a woodland stream...’ in The Bangle Sellers.
இன்னம்பூரான்
13 02 2012
http://www.thehindu.com/multimedia/dynamic/00029/07SMLCJAIN_29734f.jpg
சரோஜினி நாயுடு & ஜவஹர்லால் நேரு.
சித்திரம் ஹிந்து காப்புரிமை. அதனால், லின்க் மட்டும். க்ளுக்கி பார்க்கவும்.
‘இவனுக்கு பட்டாபிஷிகேமும் இது தான்; அறையப்படும் சிலுவையும் இது தான்’ என்று நினைத்துக்கொண்டேன். இரண்டும் இரட்டை; பிரிக்கமுடியாது; சில சமயங்களில், சில சூழ்நிலைகளில். இரண்டும் ஒன்றிப்போய் விடுகின்றன.
நீயோ மென்மையானவன்;
உன்னுடைய ஆன்மீகம் கட்டுக்கோப்பானது.
உன்னை விட தரம் தாழ்ந்தோர், புரிதல் அற்றவர்கள்,பலவீனம், பொய், புறம் சொல்லுதல், வஞ்சகம் ஆகியவற்றை கண்டு மன அழுத்தம் அடையாதவர்களை விட, நீ மிகவும் இன்னலுக்குள்ளாவாய்.
எனக்கு என்னமோ உன்னுடைய அப்பழக்கற்ற வாய்மையிலும், விடுதலை பரவசத்திலும் அசையாத நம்பிக்கை இருக்கிறது.
நீ தனக்கு மனோபலம் போதாதோ, தன்னுடைய இலக்ஷியங்களை இயற்ற ஆற்றல் போதாதோ என்று என்னிடம் கவலைப்பட்டது உண்டு.
எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமோ? இது உனக்கு சவால்; இதுவே உனக்கு சடாரி மரியாதை. உன்னுடைய உன்னத குணாதிசயங்களை பாயும் சக்தியாக, தைரியலக்ஷ்மியாக, காணும் தெய்வமாக, புத்திமதியாக, இந்த சவால் மாற்றி, வரன் அளிக்கும். சரோஜினி நாயுடு.
அன்றாட வரலாறு நன்றாக பிடித்து ஆட்டுகிறது.
இன்னம்பூரான்
என் பாட்டி பவுனாம்பால் ,மிக பெரிய மேதை
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
செயலை அடிப்படை கொள்கையாகவும் பேச்சை பிரச்சார யுக்தியாகவும் கொண்டவர்கள் தங்கள் இலக்கை எளிதில் அடையலாம்.
Regards,






அன்றொருநாள்: ஃபெப்ரவரி 13
அரியணையும், சிலுவையும்
லக்னெள
செப்டம்பர் 29, 1929
என்னருமை ஜவஹர்,
அன்றாட வரலாறு நன்றாக பிடித்து ஆட்டுகிறது. நேற்று கீதாவின் வரவு. இன்று பவளாவின் வரிசை. சரோஜினி நாயுடுவின் பிறந்த நாள். அவரது வாழ்க்கை வரலாற்றை மின் தமிழர் பவளசங்கரி 11 02 2012 அன்று மின் தமிழில் ~ இந்தியாவின் கோகிலம், வானம்பாடி!~ பதிவு செய்திருக்கிறார். ஜவஹருக்கு சரோஜினி எழுதிய மடலின் தமிழாக்கம், ஒரு அனுபந்தமே. அது அந்தக்காலத்தை பிரதிபலிக்கிறது. கொசுறு: ‘tranquil’ என்ற சொல்லுக்கு எனக்கு உள்ளர்த்தம் சொல்லிக்கொடுத்தது சரோஜினி நாயுடுவின், ‘...On the tranquil brow of a woodland stream...’ in The Bangle Sellers.
இன்னம்பூரான்
13 02 2012
http://www.thehindu.com/multimedia/dynamic/00029/07SMLCJAIN_29734f.jpg
சரோஜினி நாயுடு & ஜவஹர்லால் நேரு.
சித்திரம் ஹிந்து காப்புரிமை. அதனால், லின்க் மட்டும். க்ளுக்கி பார்க்கவும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.