தேவன் - தமிழ் எழுத்துலக ஜாம்பவான்

13 views
Skip to first unread message

V, Dhivakar

unread,
Nov 25, 2009, 6:16:01 AM11/25/09
to minT...@googlegroups.com

shivan .

unread,
Nov 25, 2009, 6:50:28 AM11/25/09
to mint...@googlegroups.com
ம். எனக்கு தெரிந்து இப்போது இரண்டு பெரியவர்கள் தேவனுடைய இரசிகர்கள் என்று தெரிகிறது. :)

2009/11/25 V, Dhivakar <venkdh...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 25, 2009, 6:52:50 AM11/25/09
to mint...@googlegroups.com
 
அட.. நீங்களும்மா.. வணக்கம்!
மின் தமிழில் நிறைய பேர் இருப்பார்கள்..
 
திவாகர்

 

Geetha Sambasivam

unread,
Nov 25, 2009, 9:03:15 AM11/25/09
to mint...@googlegroups.com
நாங்களும் தான்! உங்க விமரிசனம் ஏற்கெனவே படிச்சாச்சு. :D

2009/11/25 V, Dhivakar <venkdh...@gmail.com>

devoo

unread,
Nov 25, 2009, 9:29:03 AM11/25/09
to மின்தமிழ்
திவாகர் சார்,
லட்சுமி கடாட்சம், மிஸ்டர் வேதாந்தம் போன்ற நாவல்களையும்
இதே நடையில் இளைய தலமுறையினருக்கு அறிமுகம் செய்யலாமே.
ஒரு பயணக் கட்டுரையும் அவர் எழுதியிருப்பதாக நினைவு.

தேவ்

Tirumurti Vasudevan

unread,
Nov 25, 2009, 11:49:55 AM11/25/09
to mint...@googlegroups.com
இன்னொரு தேவன் விசிறி இங்கே!
வாசுதேவன்

2009/11/25 devoo <rde...@gmail.com>

--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 25, 2009, 12:01:00 PM11/25/09
to mint...@googlegroups.com

இதோ இன்னொருவனும் இங்கே.

பென்னேஸ்வரன்

2009/11/25 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

N. Ganesan

unread,
Nov 25, 2009, 12:07:49 PM11/25/09
to மின்தமிழ்

On Nov 25, 11:01 am, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:


> இதோ இன்னொருவனும் இங்கே.
>
> பென்னேஸ்வரன்

Me too. started reading Devan in early teens (70s).

But I was never interested in fiction
(too mathematically oriented - do engineers make good fiction writers
in Tamil or English).

Hope some team puts his writings & many others
- first as PDF/DjVu in the web & later as plain-text html page.

N. Ganesan

>
> 2009/11/25 Tirumurti Vasudevan <agnih...@gmail.com>


>
>
>
> > இன்னொரு தேவன் விசிறி இங்கே!
> > வாசுதேவன்
>
> > 2009/11/25 devoo <rde...@gmail.com>
>
> > --
> > My blogs: [all in Tamil]
> >http://anmikam4dumbme.blogspot.com/

> >http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text


> > too!
> >http://kathaikathaiyaam.blogspot.com/
>
> > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>

> --http://www.vadakkuvaasal.com/

Innamburan Innamburan

unread,
Nov 25, 2009, 7:22:42 PM11/25/09
to mint...@googlegroups.com
தேவன் விசிறிகள் சங்கத்தில் நானும் உளேன், ஐயா. அந்தக்காலத்தில், ஆனந்த விகடனை, 'சிறுசு' என்று கொடுக்கமாட்டார்கள். (அவாளுக்கு தெரியாது, ஸ்கூல்லே 'இந்துநேசன் அடிக்கும் சுற்று). பவ்ய்மா, பெரியவா தூங்கினப்பறம், விகடன் பாடங்கள். தேவன், ஓபென்னாவே படிக்கமுடிந்தது. 
இன்னம்பூரான்

2009/11/25 N. Ganesan <naa.g...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 25, 2009, 8:00:42 PM11/25/09
to mint...@googlegroups.com
மிஸ்டர் வேதாந்தத்தை சீரியல் எடுக்கிறேன் பேர்வழினு தாறுமாறா எடுத்து தேவன் பெயரையே கெடுத்துட்டாங்க. டைட்டிலில் டைரக்டர் ஸ்ரீதர் பெயரைப் பார்த்துட்டு அதைப் பார்த்து மனசு நொந்து போனது. என்னோட சாய்ஸிலே ஜஸ்டிஸ் ஜகந்நாதனும், கோமதியின் காதலனும் தான். அதுக்கப்புறம் மிஸ்ஜானகி, கல்யாணி. கல்யாணியில் கதாநாயகன் சுந்தரம் போலீஸ் ஸ்டேஷனில் கலக்கல்!! இப்போவும் படிச்சுச் சிரிக்கிறதுண்டு. நன்றி, நினைவூட்டலுக்கு.
2009/11/25 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Nov 25, 2009, 8:40:45 PM11/25/09
to மின்தமிழ்
*ஜஸ்டிஸ்
ஜகன்னாதன்*

சாட்சிகளை விசாரணை செய்யும் அழகு; அவர்கள் அப்பாவித்தனமாக மாட்டிக்
கொண்டு முழிக்கும்
நகைச்சுவை, ஜூரர்களின் பின்னணி, அவர்களின் மனநிலை,கோபுலுவின் கைவண்ணம்,
ஜகன்னாதனின் கூரிய நாசி, அதில் கை வைத்துக் கொண்டு அவர் குறுக்கு
விசாரணையை
ஆழ்ந்து கவனிக்கும் விதம். எல்லாமே காவியம், தேவனின் எழுத்து அற்புத
அனுபவம் !


தேவ்

Geetha Sambasivam

unread,
Nov 26, 2009, 1:32:30 AM11/26/09
to mint...@googlegroups.com
ஸ்ரீமான் சுதர்ஸனம், காத்தாடி ராமமூர்த்தியின் நடிப்பால் ஓரளவுக்குப் பார்க்கும்படி அமைந்தது. அவருக்கு ஜோடியாக நடித்தவரும், (யார் அந்தப் பெண்மணி? ஸ்ரீகலாவோ என்னமோ சொன்னாங்க) ஈடு கொடுத்து நடித்திருந்தார். முக்கியமாய் அந்தப் பல்டாக்டர் தேர்வு அருமை.தேவனின் வர்ணனைக்கு வரைந்த  கோபுலுவின் சித்திரத்தை அப்படியே பிரதிபலித்தார் சாயல், நடிப்பு எல்லாவற்றிலும்.

2009/11/26 devoo <rde...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 26, 2009, 3:16:54 AM11/26/09
to mint...@googlegroups.com
கீதாம்மா
 
வயசுலே எனக்குப் பெரியவங்களா இருந்தா உங்க காலைக் காண்பிங்க.
 
விழுந்து கும்பிடணும். 
 
(என்னை விட வயதில் பெரியவராக இருந்தால் - ஒரு கணக்குக்காக -  இப்போது எனக்கு ஐந்து கழுதை வயது)
 
அந்த சீரியல் கண்றாவியைப் பற்றிச் சொல்லணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  நீங்க அழகாகச் சொன்னீங்க. 
 
தமிழில் பல நல்ல இலக்கியப் படைப்புக்களை இப்படி நாசமாக்கி இருக்கிறார்கள்.  (தேவனை மிக உயர்ந்த இலக்கியம் என்று சொல்லவில்லை என்றாலும் ஒரு தரமான நகைச்சுவை எழுத்துக்கு அவரை அடித்துக் கொள்ள இதுவரை யாரும் வரவில்லை).
 
திஜாவின் மோகமுள் புதினத்தை நம்ம ஆட்கள் கேவலப்படுத்தியது போல வேறு எந்த மொழிக்காரனாலும் செய்ய முடியாது.  பொன்னியின் செல்வன் நல்ல வேளை இதுவரை தப்பித்து இருக்கிறது.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 


 
2009/11/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 26, 2009, 3:20:24 AM11/26/09
to mint...@googlegroups.com
காத்தாடி ராமமூர்த்தியின் நாடகங்கள் மற்றும் சின்னத்திரையில் பார்த்து இருக்கிறேன்.
 
அதைவிடக் கண்றாவியான நடிப்பை வேறு யாராலும் எந்தப் பாடுபட்டாலும் செய்ய முடியாது.
 
அவருடைய கண்களைப் பாருங்கள்.  அவர் எவ்வளவு மோசமான நடிகர் என்று தெரியும்.  ஒரு நடிகனுடைய அடிப்படைத் தகுதியே எதிரில் நடிப்பவரின் கண்களை நேராக சந்தித்து பாத்திரங்களுக்குள் நுழைவது.  ஆனால் தமிழில் நடிப்பின் இயங்கள் சிகரங்கள் என்று போற்றப்பட்ட பலரும் இதே போல eye contact என்கிற அடிப்படையான விஷயம் தெரியாமல் நடிப்பார்கள்.  இயக்குநர் இமயங்களும் சிகரங்களும் அவர்களை இயக்கிக் கொண்டு இருப்பார்கள்.
 
எல்லா கண்றாவியும் தமிழில்தான் காணக் கிடைக்கும்.  எல்லாக் கண்றாவிகளும் தமிழில்தான் கொண்டாடப்படும்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/11/26 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
2009/11/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 26, 2009, 3:28:31 AM11/26/09
to mint...@googlegroups.com

//இப்போது எனக்கு ஐந்து கழுதை வயது)//

ஒரு கழுதைக்கு எத்தனை வயசு???? அதைச் சொல்லுங்க முதல்லே!
 

2009/11/26 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
கீதாம்மா

Geetha Sambasivam

unread,
Nov 26, 2009, 3:32:53 AM11/26/09
to mint...@googlegroups.com
ஹிஹிஹி என் கணவரைக் கேட்டேன், உத்தேசமாப் பதினைந்து வருஷம்னு சொல்றார். அப்போ உங்களுக்கு 15 into 5???நீங்க தான் பெரியவர் என்னை விட.

அப்புறம் காத்தாடி ராமமூர்த்தியோட கண்றாவியை ஹூஸ்டனிலே இரண்டு வருஷம் முன்னாலே நேரிலேயே பார்த்திருக்கோம். சகிக்கலை. எங்க பையருக்குக் கொலைவெறியே வந்துடுத்து. சமாதானம் செய்து கிளம்பினோம். ஆனால் இந்த ஸ்ரீமான் சுதர்ஸனம் நிஜமாவே பரவாயில்லை ரகம். பொதிகையில் ஒளிபரப்பினாங்க. பத்துவருஷம் முன்னால்????? ஆமாம்னு நினைக்கிறேன். நல்ல டைரக்டர், பெயர் மறந்துடுச்சு. வாஷிங்டனின் திருமணம் எடுத்ததும் இப்படித் தான் கொலை பண்ணிட்டாங்க. கதையின் உயிர்நாடியே போயிட்டது சீரியல்லே. நல்லவேளையா சாவி அதுக்கு முன்னாலேயே இறந்துட்டார்னு நினைக்கிறேன்.

2009/11/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 26, 2009, 3:34:07 AM11/26/09
to mint...@googlegroups.com
ஓ.. காத்தாடியின் முகம் சாம்புவுக்கு கொஞ்சம் சூட் ஆனதுதான் (!!??), கதைப்படி ஸ்ரீமான் சுதர்சனம் கூட ஏறத்தாழ சாம்பு மாதிரி உள்ள முகவாட்டு என நினைக்கிறேன்.
 
கோமதியின் காதலன் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளிவந்தது, ஓடவில்லை என நினைக்கிறேன். (ஜெமினி கணேசன கதாநாயகன்?)
 
ஆனால் இந்தக் கதை இரண்டாம் உலகப்போரின் போது சென்னையின் மீது விமான குண்டு வீச்சு பற்றி தேவன் எழுதி ஆரம்பித்ததாக நினைவு. ஆனால் கதை வேறு மாதிரி ஹாஸ்ய ஸ்டைலில் போகும்.
 
நம்முடைய வரிசைப்படி முதல் பரிசு மிஸ் ஜானகிக்குதான், ஸ்பெஷல் ப்ரைஸ் சாம்புவுக்கு. வேதாந்தம், கல்யாணி, சுதர்ஸனம், சிஐடி சந்துரு, இன்ஸ்பெக்டர் கோபாலன், ஈஸ்வரன் இவர்களெல்லாம் மறக்கமுடியாத உயிருள்ள பாத்திரமாக காண்பித்தவர். இதில் இன்ஸ்பெக்டர் கோபாலனும், சந்துருவும் 'கல்யாணி'யில் மறுபடியும் வருவார்கள்.
 
இன்னொரு முக்கிய விஷயம், தேவன் கதைகளின் பாத்திரங்களில் ஒருவித மேன்னரிஸம் காணலாம். 'சுத்த பாஷ்..' என்பார் அடிக்கடி ஹரன் (மிஸ்.ஜானகி), 'ஹே.. என்ன..' என்பது நாகநாத ஐயர் (மிஸ் ஜானகி).   நரசிம்மன் அடிக்கடி திட்டும் ஆங்கில கலப்பு (கல்யாணி) ராட்டன் கோஸ்.. -  இப்படி ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம்.
 
அதே போல நாயை வைத்து ஒரு குட்டி நாடகமே ஆடிக்காட்டுவார் மிஸ் ஜானகியில்.. நாடகத்தில் தேவலோகத்து கணக்கன் சிதரகுப்தனுக்கு கூட ஒரு பாத்திரம் உண்டு. படித்தால்தான் அதன் அருமை புரியும். திருச்செந்தூர் முருகனையும், அந்த டௌனையும் நம் கண் முன்னே கொண்டுவந்துவிடுவார்.
 
சொல்லிக் கொண்டே போகலாம்தான்..
 
தி 
 


 

Geetha Sambasivam

unread,
Nov 26, 2009, 3:39:35 AM11/26/09
to mint...@googlegroups.com
(ஜெமினி கணேசன கதாநாயகன்?)//
T.R. Mahalingam/ Heroine Rukmini னு நினைக்கிறேன்.

//ஹே.. என்ன..' என்பது நாகநாத ஐயர் (மிஸ் ஜானகி)//

"ஹே! என்ன ஹே!"  பிரணதார்த்திஹர ஐயர், எள் வியாபாரி, கோமதியின் காதலன்.

நாகநாத ஐயர் மிஸ் ஜானகி சரியே, ஆனால் அவர் இதைச் சொல்ல மாட்டார்.





V, Dhivakar

unread,
Nov 26, 2009, 3:44:18 AM11/26/09
to mint...@googlegroups.com
ஓ.. இன்னும் பழஸோ..
 
நாகநாத ஐயரையும் அப்படி சொல்ல வைக்கிறாரே தேவன்..
 
என்ன.. ஹே -  இப்படி மாத்தியிருக்கார் (:-
 
தி

 
On 11/26/09, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:

Tirumurti Vasudevan

unread,
Nov 26, 2009, 4:01:44 AM11/26/09
to mint...@googlegroups.com
நல்ல நாவல்கள் படமா வந்தா அதை பாக்கிறதில்லை. ஜுராசிக் பார்க் மட்டுமே
அப்பவும் அசத்தியது. மத்தபடி இதை காணுமே அதை காணூமே ந்னு மனசு
அடிச்சுக்கும். ஏமாத்தம்தான் மிஞ்சும்.
நல்ல வேளை நீங்க எல்லாம் சொல்கிற ஒண்ணுத்தையுமே பாக்கலை.
:-))
திவாஜி

2009/11/26 V, Dhivakar <venkdh...@gmail.com>:

vj kumar

unread,
Nov 26, 2009, 4:05:46 AM11/26/09
to mint...@googlegroups.com
"பொன்னியின் செல்வன் நல்ல வேளை இதுவரை தப்பித்து இருக்கிறது"


விரைவில் cartoon ஆக வரப்போகிறது

http://www.youtube.com/watch?v=ogws4vhRhaM

விஜய்

http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/11/26 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
கீதாம்மா

Geetha Sambasivam

unread,
Nov 26, 2009, 4:20:14 AM11/26/09
to mint...@googlegroups.com
அநிருத்தரும், ஆழ்வார்க்கடியானும் நல்லா இருக்காங்க. :D

2009/11/26 vj kumar <vj.ep...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 26, 2009, 12:14:46 PM11/26/09
to mint...@googlegroups.com
சரி.  மீண்டும் கழுதைக்கு வருவோம்.

கிருஷ்ணகிரியில் என்னுடைய நண்பன் - சலவைத் தொழிலாளியின் மகன்.  என்னுடன் படித்தவன்.

அவன் சொன்ன கணக்கு ஒரு கழுதைக்கு பத்து வருஷங்கள். 

தேவனுடைய ஒரு கதையில் கழுதையின் அழும்புகள் பற்றிக் கூட அழகாக எழுதியிருப்பார். 
 
மிஸ்டர் வேதாந்தம் என்று ஒரு கதை.  அதற்கு கோபுலு படம் வரைந்து இருப்பார்.  மிஸ்டர் வேதாந்தம் குடுமி வைத்துக்கொண்டு அநியாயக் களையுடன் இருப்பார்.

என் பக்கத்து் வீட்டு அக்காவுக்கு அந்தப் படத்தைக் காண்பித்து இது மாதிரி ஒரு பாவா (அத்திம்பேர்) வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி அவள் விட்ட அறையில் பல நாட்கள் இடது காதின் பக்கம் ஙொய்ய்ய் என்று ஒருவித வலி வேதனைப் படுத்திக் கொண்டிருந்தது.

எனவே தேவன் சாரையும் கோபுலுவையும் மிஸ்டர் வேதாந்தத்தையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது.

கிருஷ்ணகிரி தெலுங்கு பிராமணாள் வீதியில் ஒரு அய்யங்கார் மாமாவுக்கு துப்பறியும் சாம்பு மாதிரியே மூக்கு இருக்கும்.  ராஜாஜியின் கிராமம் என்றும் அவருக்கு நெருங்கிய உறவினர் என்றும் சொல்லிக் கொள்வார்.  எங்கள் ஊரில் யாருக்கும் ராஜாஜியிடம் இதைப்போய்க் கேட்க தைரியம் இல்லாததால் அவர் ராஜாஜியின் உறவினராகவே பல ஆண்டுகள் தொடர்ந்து வந்தார்.

அந்த அய்யங்கார் மாமா தன்னை   ஒரு டாக்டர் என்று அறிவித்துக் கொண்டு எங்கள் ஊரில் பெரிய டாக்டர்களுக்குப் பணம் தரக் கஞ்சத்தனம் பண்ணிக் கொண்டிருந்த பல கோமுட்டி செட்டியார்களை பரலோகம் அனுப்பிக் கொண்டிருந்தார். 

அப்பாவைப் பார்க்க அந்த மாமா வரும்போதெல்லாம் சாம்பு மாமா வர்றார் என்று சொல்லி அம்மாவைக் குழம்ப வைப்பேன்.  சாம்பு மாமாவிடமே  துப்பறியும் சாம்பு கதை  பற்றி ஏதாவது பேச்சுக் கொடுத்து நானும் என் மருமானும் ரகசியமாக சிரித்துக் கொள்வோம்.

அவருடைய மகன் இப்போது பெங்களூருவில் அதே மூக்குடன் ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறான்.

N. Kannan

unread,
Nov 27, 2009, 3:46:47 AM11/27/09
to mint...@googlegroups.com
சார்!

காத்து கீதம்மா பக்கம்தான் வேகமா வீசுது!

Q: How long can a donkey live?
25 to 30 years, depends on how much you love it and care for it.

Wiki Answers: http://wiki.answers.com/Q/How_long_can_a_donkey_live

அப்ப 5 கழுதை வயசென்றால் 5 x 30 = 150

போனாபோறது நீங்க சொல்லற கழுதை அல்ப ஆயுசிலே போற கழுதைன்னு வச்சுப்போம் ;-)

க.>

2009/11/27 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Nov 27, 2009, 5:17:19 AM11/27/09
to mint...@googlegroups.com
அதானே, கழுதையோட வயசைச் சொல்லாமா வேறே ஏதோ சொல்றாரேனு நினைச்சேன். இப்போப் புரியுது 5 கழுதை வயசோட மர்மம்!

2009/11/27 N. Kannan <navan...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 27, 2009, 5:56:48 AM11/27/09
to mint...@googlegroups.com
கழுதையின் வயசு வண்ணானுக்கு அதிகம் தெரியும் என்று நினைத்தேன்.
 
விக்கி பீடியா அவர்களை விட புத்திசாலி என்று இப்போது தெரிந்து கொண்டேன்,
 
மொத்தத்தில் காத்தாடி நடித்த அந்த தொடர் பற்றி கீதாம்மா சரியாக சொன்னபோது அவர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுவதற்குத் தான் கழுதையை வம்புக்கு இழுத்தது.
 
கழுதை அப்படியே இருக்க கீதாம்மா சொன்ன விஷயமும் அப்படியே தான் இருக்கு.
 
ஆயிரம் சொன்னாலும் தேவன் கதாபாத்திரத்தில் காத்தாடி ராமமூர்த்தியை பார்க்க சகிக்வில்லை என்பதைத்தான் திரும்பத் திரும்ப சொல்ல விரும்புகிறேன்.
 
எல்லோரும் குரங்குப் பிடிவாதம் என்று சொல்வார்கள்.  இங்கே கழுதைப் பிடிவாதம்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
2009/11/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 27, 2009, 9:45:17 AM11/27/09
to mint...@googlegroups.com

பென்னண்ணா!
 
காத்தாடி பறந்தோடிவிட்டது (டீல் ல விட்டுடுவோம்).
 
மோட்டார் சுந்தரம் பிள்ளை பார்த்தீர்களா.. சாம்புவின் கதைகளை மாத்திரம் வைத்து நாகேஷின் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கும். கடைசியில் ஒவ்வொருமுறை அதிர்ஷ்டம் தன்னைத் தட்டும்போதெல்லாம் நாகேஷின் முகத்தில் அழகான அசட்டுத்தனம் வருமே. 
 
தேவன் காலத்தில் வரவில்லை இந்தப் படம். தேவன் மட்டும் இந்த அசட்டுத்தனத்தைப் பார்த்தால் தான் படைத்த சாம்புவின் உண்மையான உணர்ச்சி ஒத்துப் போனதைப் பார்த்து அசந்திருப்பார்.
 
நாகேஷ் அருமையாக செய்திருந்தார்.
 
தி
2009/11/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 27, 2009, 10:23:26 AM11/27/09
to mint...@googlegroups.com

ஆமாம் திவாகர்.

சரியான ஒரு படத்தையும் கலைஞனையும் நினைவு படுத்தினீர்கள்.

அதே போல கொடியேற்றம் என்று ஒரு மலையாளப் படம்.  அரவிந்தன் இயக்குநர் என்று ஞாபகம்.  கோபி என்ற நடிகன்.  பிளந்து கட்டியிருப்பார்.  ஞாபகங்களைப் புளி போட்டுத் தேய்க்க வேண்டியிருக்கிறது.  அதுவும் (என்னைப் போலக் கொஞசம்) அசட்டுப் பாத்திரம்.  (ஒரு காட்சி நினைவில் இருக்கிறது - கோவில் வளாகத்தில் பஞ்ச வாத்தியம் ஜமாய்த்துக் கொண்டிருப்பார்கள்.  இவர் அங்கே நின்று தப்புத் தாளத்தை கைகொட்டிப் போட்டுக் கொண்டிருப்பார்.  ஜெண்டை வாசிக்கிற ஆள் மஹா எரிச்சலில் அந்தக் குச்சியாலேயே இவரை அடிக்க வருவார்.  அந்தப் படம் முழுக்க அசட்டுத் தனமாகவே நடந்து கொள்ளும் பாத்திரம்.  அவரை அறியாமலேயே பலமுறை அதிருஷ்டம் அடிக்கும்.

பல வருடங்கள் முன்பு ஒரு திரைப்பட விழாவில் அந்தப் படம் பார்த்தபோது ஏனோ என்னை அறியாமல் தேவன் கதாபாத்திரங்களின் நினைவு வந்தது.

எங்கள் ஊர்ப்பக்கம் தெருக்கூத்தில் பபூன் என்று அழைக்கப்படும் கோமாளிகள் இதுபோன்ற அசட்டுத்தனங்களின் ஊடே ஏதோ ஒரு அதிருஷ்டம் அவர்களுக்கு அடிக்கும்.

காண்டவ வனதகனம் என்கிற மிக அரிதான ஒரு கூத்து சில வருஷங்களுக்கு முன்பு பார்த்தேன். அந்தக் கூத்தில் இந்திரன் மனைவிக்கும் எமதர்மனுக்கும் உறவு இருக்கும்.  அதை இந்த பபூன் எதிர்பாராத விதமாகக் கண்டுபிடித்துவிடுவான்.  ஆனால் புரியாது.  எமதர்மனும் இந்திரனின் மனைவியும் அவனுக்கு மாறி மாறி ரெண்டு ஏக்கரா நிலம், தையல் மிஷின், சைக்கிள் எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள்.  அவன் சரியான சந்தர்ப்பத்தில் போகும்போதெல்லாம் அவனுக்கு பெரிய பரிசுகளாகக் கிடைக்கும்.  அப்போது அந்தக் கதாபாத்திரம் மிக அருமையாக முகத்தை வைத்துக் கொள்ளும்.

செல்லம் வாத்தியார் என்று நல்ல கலைஞர் இந்தக் கூத்தில் நடித்துப் பார்த்து இருக்கிறேன். 

நம்முடைய பல கதைகளும் இவை போன்ற பொக்கிஷங்களில் இருந்து பெறும் உத்வேகத்தில் பிறப்பவைதானே.  தேவன் எத்தனை நாடகங்கள் அந்தக் காலத்தில் பார்த்து இருப்பார்?

பென்னேஸ்வரன்

2009/11/27 V, Dhivakar <venkdh...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 27, 2009, 10:28:58 AM11/27/09
to mint...@googlegroups.com
பென்னேஸ்வரன்,
கழுதை பிடிவாதம் பிடிக்காது; அழுச்சாட்டியம் பண்ணும்.

இன்னம்பூரான்

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 27, 2009, 11:00:00 AM11/27/09
to mint...@googlegroups.com

இன்னம்பூர் ஐயா

அப்போ யாரைக் கழுதை என்று சொல்ல வருகிறீர்கள்?

நான் ஏதும் அழிச்சாட்டியம் பண்ண மாதிரி ஞாபகம் இல்லையே.

அன்புடன்

பென்னேஸ்வரன்

2009/11/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Nov 27, 2009, 7:25:42 PM11/27/09
to mint...@googlegroups.com
நீங்கள் கழுதை அல்ல (வேறு என்னமோவோ!) என்பதை மென்மையாக, உணர்த்தினேன், பென்

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 28, 2009, 11:29:43 AM11/28/09
to mint...@googlegroups.com

இன்னம்பூரான் ஐயா

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒரு பிரபல எழுத்தாளர் -   அவர் ஒரு நூல் எழுதினார்.  தலைப்பு - நான் கழுதையாக இருந்த போது.

எங்கள் ஊரில் (அதாவது டெல்லியில்) இருந்த ஒரு விமர்சனப் பெரியவர் நேர்ப்பேச்சில் நண்பர்களிடம் கிண்டலாகக் கேட்டது -

இவர் எப்போது மனிதனாக இருந்தார்?

அன்புடன்

பென்னேஸ்வரன்

2009/11/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Nov 28, 2009, 6:47:15 PM11/28/09
to mint...@googlegroups.com
கிண்டல் ஒரு புறமிருக்க, எனக்கு மிருகாபிமானத்தளவு, மனிதாபிமானம் இல்லையோ? பாருங்கள், என் அனுபவத்தில், மிருகங்கள் தவறான எண்ணங்கள் நினைப்பதில்லை, பென்னேஸ்வரன்.
இன்னம்பூரான்

2009/11/28 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>



--

Venkatachalam Subramanian

unread,
Nov 29, 2009, 12:15:45 PM11/29/09
to mint...@googlegroups.com
ஓம்
பார்த்திபன் கனவு திரைப்படத்தில் நடிகர் ஆஜானுபாகுவாய் என் ரங்காராவ் வந்ததால் துறவியாக அவர் வெளிப்படுவதில் இரகசியமின்றி கதை  சப்பென்று ஆகிவிட்டது..
அதனால் புதினங்களில் கிடைக்கும் சுவை திரைகளில் கிடைப்பதில்லை. மேலும் என்னைப் பொருத்தவரை சிறப்பான வசதிகள் இல்லாத அன்னாளில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் கறுப்பு வெள்ளையில் கிடைத்த இயன்பான அமைப்பு வண்ணப்படங்களில் கிடைக்கவில்லை என்பதே.
வெ. சுப்பிரமணியன் ஓம்.

2009/11/29 Innamburan Innamburan <innam...@googlemail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 29, 2009, 9:04:10 PM11/29/09
to mint...@googlegroups.com

மதிப்புக்குரிய சுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு

காட்சி ஊடகமான திரைப்படத்தை தமிழில் நாம் கதைகள் சொல்லியே பாழ்படுத்தி விட்டோம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.  நாடகங்களின் நீட்சியாக திரைப்படங்கள் இங்கே அமைந்ததால் அப்படி இருக்கலாம் என்று திரைப்பட ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.  வங்காளம், கேரளா போன்ற இடங்களி்ல் கலைஞர்களிடம் சினிமா சென்றது.  தமிழகத்தில் அரசியல்வாதிகளிடம் சற்று ஆபத்தான ஆயுதமாக சினிமா மாட்டிக் கொண்டது. 

புதினங்களையும் புத்திசாலித்தனமாக திரைப்படம் ஆக்கும் கலையை நாம் மேற்கில் இருந்து கற்றுக் கொள்ளவில்லை.  மேற்கு என்னத்துக்கு நம்முடைய ஊரிலேயே ரே அல்லது ரித்விக் கட்டக் அளவுக்கு புதினங்களை அதன் மூலத்தை சிதைக்காமல் திரைப்படம் செய்யும் வித்தையை நாம் கற்றுக் கொள்ளவி்ல்லை.

திரைப்படங்களை விடுங்கள்.  நடனத்திலும் அதே பிரச்னைதான் தொடர்ந்தது.  நல்ல சில பாடல்களை அதன் உயிரை அழித்து நடன வடிவமைத்தோம் தமிழில்.  உதாரணத்துக்கு பாரதியின் பாடல்கள்.

அவருடைய பாடல்களுக்கு நம்முடைய நடனமணிகள் அமைத்துள்ள நடன அமைப்புக்களை பார்க்க பாரதிக்கு வாய்ப்பு இருந்திருந்தால் இவர்களை விட திருவல்லிக்கேணி யானையே எத்தனையோ தேவலை என்று அவர் நினைத்திருப்பார்.

இன்னம்பூர் ஐயா - இவ்வளவு பூடகமாகப் பேசினீர்கள் என்றால் சில சமயம் புரிவதில்லை.  எனக்குப் பல நேரங்களில் கற்பூர வாசனை தெரிவதில்லை.


அன்புடன்


பென்னேஸ்வரன்

2009/11/29 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 30, 2009, 12:29:55 AM11/30/09
to mint...@googlegroups.com
பூடகமில்லை, பென்னேஸ்வரன்,

விலங்கினங்கள், அவற்றின் உளவியல் பற்றி கொஞ்சம் எனக்கு தெரியும். வீட்டில், பூனைகளின், நாய்களின் பரிவையும், தன்னலமற்ற அன்பையும் நாங்கள் அனுபவித்தவர்கள். வனவிலங்குகளுடன் சற்றே அறிமுகமுண்டு. ஒரு காலம், ஆந்திரப்பிரதேச அரசின் விருப்பத்தை மதித்து, அம்மாநில வனவிலங்கு பாதுகாப்பு ஸ்தாபனத்தில் கெளரவ அங்கத்தினராக இருந்தேன். மானுட சமுதாயத்தில் வாழ்வதால், அதை பற்றி கொஞ்சம் அறிவேன். எனவே, தரம் குறைந்த மனிதர்களை, விலங்குகளுடன் ஒப்பிட்டால், எனக்கு சினம் பொங்கும். புலி எத்தனை ஆசையுடன் வருகிறது தெரியுமா? சிங்கம் கலவியில் இயங்கும் போது, அதன் கம்பீரமான தோரணையை, காட்டிலே கண்டு வியந்திருக்கிறேன். நாம் அடிக்காவிட்டால், தன் வழியே போகும் ராஜநாகத்தையும், முத்தமிட வரும் முதலைகளையும் பார்த்திருக்கிறேன். எனவே, கழுதையும் எனக்கு பிரியமான விலங்கு. அதற்கு கற்பூரவாசனை தெரியும். கழுதைக்குட்டிக்கு இணையான அழகு, குரங்குக்குட்டிக்கும், யானைக்குட்டிக்கும் தான்.

இன்னம்பூரான்

2009/11/30 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 30, 2009, 1:03:01 AM11/30/09
to mint...@googlegroups.com


2009/11/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

எனவே, கழுதையும் எனக்கு பிரியமான விலங்கு. அதற்கு கற்பூரவாசனை தெரியும். கழுதைக்குட்டிக்கு இணையான அழகு, குரங்குக்குட்டிக்கும், யானைக்குட்டிக்கும் தான்.

இன்னம்பூரான்


உண்மைதான்.  கடயத்தில் நடத்திக் காட்டினான் இல்லையா?  


--
அன்புடன்,
ஹரிகி.

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 30, 2009, 1:09:00 AM11/30/09
to mint...@googlegroups.com
இன்னம்பூரான் ஐயா
 
இனி தமிழ் நடிகர்களுடனும் என்னுடனும் கழுதையை ஒப்பிட மாட்டேன்.  மன்னித்துக் கொள்ளுங்கள்.
 
(சிரிக்கும் முகத்தை (ஸ்மைலி) இங்கே தட்டச்சு செய்ய வரவில்லை.  அதனால் பல நேரங்களில் என்னுடைய சில அஞ்சல்கள் சீரியஸாக இருப்பது போல் இருக்கும்.  என்னுடைய முகமும் கொஞ்சம் சிடுசிடு என்றுதான் இருக்கும்.  நேர்ப்பேச்சிலு்ம் இதே பிரச்னை தான் எனக்கு).
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/11/30 Hari Krishnan <hari.har...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 30, 2009, 2:32:41 AM11/30/09
to mint...@googlegroups.com


2009/11/30 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
இன்னம்பூரான் ஐயா



--
Reply all
Reply to author
Forward
0 new messages