நம்மாழ்வாரும், மாணிக்கவாசகரும்!

22 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Nov 21, 2009, 5:49:59 PM11/21/09
to Min Thamizh
தமிழ்நாட்டில் சைவம், வைணவம் என்னும் இருபெரும் சமயங்களும் இரண்டு கண்கள் போலச் சிறந்து விளங்குவன. இவ்விரண்டும் பழமையும், பெருமையும் வாய்ந்தவை. 

ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் இலக்கண நூலிலேயே,"மாயோன் மேய காடுறை உலகம்" என்று முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் "திருமால்" என்பது சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதைத் தழுவிப் பிற்காலத்தில் "அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்" என்று சேக்கிழார் பெருமானும் வழி மொழிந்துள்ளார். 

"திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன்" என்று நம்மாழ்வார் பாடுவதற்கு அடிப்படையாக,"மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில், தாவா விழுப்புகழ் பூவை நிலை" என்று தொல்காப்பியம் விதித்திருத்தலும், திருமால் நெறியின் தொன்மையினை வலியுறுத்தப் போதிய சான்றாகும்.

"சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது" என்று விளக்கிய திருவள்ளுவரும், தாம் எந்த சமயத்தையும் வெளிப்படையாகக் கூறாத இயல்பினராயினும்,"மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடியால்" அளந்த திருமாலைப் பற்றிக் (குறள் - 610) குறிப்பிட்டுள்ளார். 

இன்றைக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே, சங்க காலத்தில் திருவேங்கடத் திருப்பதியில், வேங்கடேசப் பெருமாள் நின்ற கோலத்தில் விளங்கிக் காட்சி தரும் சிறப்பு, சிலப்பதிகாரத்தில் எழிலுற இனிது விளக்கப்பட்டுள்ளது. இதனால் 2,000 ஆண்டுகளுக்கும் முன்னரே வைணவ சமயம் தமிழ்நாட்டில் தழைத்தோங்கியிருந்த தன்மையும், தொன்மையும் புலனாகின்றன. 

முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வார், சிவபெருமானும், திருமாலும் பிரிவறக் கலந்து பிணைந்து, இணைந்து, திருவேங்கடமலையின் கண் ஓருருவாய்க் காட்சி தருவதைத் தம் செய்யுளில் இப்படி அழகுறப் பாடி அருளியுள்ளார்:-

"தாழ் சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
 சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
 திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
 இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து
."

இப்பாடல் வழி பண்டைக்காலத்தில், தமிழக மக்களிடையில் பரவி, நிலவியிருந்த சைவ - வைணவ சமரச மனப்பான்மை தெளிவுறத் தெரிகிறது. சமயம் மக்களைப் பிரிக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள நல்லறிஞர்கள் பலரும், இந்நாளில் இதனையே பெரிதும் வற்புறுத்தி வருகின்றனர். அத்தகையதொரு சிறந்த நல்விருப்பத்துடனும், குறிக்கோளுடனுமே நம்மாழ்வாரும் - மாணிக்கவாசகரும் வாழ்ந்தார்கள். 

பாண்டிய நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் "திருக்குருகூர்" என்னும் தலத்தில், காரியார் - உடையார்நங்கையார் எனும் தம்பதிக்கு மைந்தராகத் தோன்றியருளினார் நம்மாழ்வார்.

http://www.dinamani.com/Images/article/2009/11/22/22tamilgod.jpg

ஆழ்வார்கள் அனைவருமே மிகவும் சிறப்புடையவராயினும் பெரிதும் போற்றப்படுபவர் நம்மாழ்வார்.
  • திருவிருத்தம்
  • திருவாசியம்
  • பெரியதிருவந்தாதி
  • திருவாய்மொழி
என்னும் நான்கு நூல்களை நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார். 

பாண்டிய நாட்டில், மதுரைக்கு அருகில் உள்ள "திருவாதவூர்" என்னும் திருத்தலத்தில், சம்புபாதாசிரியர் - சிவஞானவதி அம்மையார் தம்பதிக்கு மைந்தராகத் தோன்றியவர் மாணிக்கவாசகர். அவர் இளமையிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். அரிமர்த்தணன் என்னும் பாண்டிய மன்னனின் முதலமைச்சராகத் திகழ்ந்தார்.
  • திருவாசகம்
  • திருக்கோவையார்
என்னும் இருபெரும் நூல்களை இயற்றினார். 

நம்மாழ்வார், மாணிக்கவாசகர் என்னும் இருபெரும் சான்றோர்களும் வேறு, வேறு இடத்தில், வேறு வேறு சமயத்தைச் சேர்ந்தவர்களாகத் தோன்றியிருப்பினும், "சான்றோர் சான்றோர் பாலர் ஆவர்" என்று புறநானூறு பாடுவது போல, தம்முள் பலவகைகளில் ஒப்புமைத் தன்மைகள் உடையவராகத் திகழ்கின்றனர். 

ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளையும், உணர்ச்சித் திறன்களையும் திருவாசகம் அழகிய பாடல்களினால் விளக்கிக் காட்டுகிறது என்று ஜி.யு.போப் முதலிய பேரறிஞர்கள் கூறுவர். அம்முறையில், நம்மாழ்வார் பாடிய "திருவாய்மொழி"யும் கூட, ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளையும், உணர்ச்சித் திறன்களையும் அழகிய இனிய பாடல்களினால், அருமையான சொல்லோவியங்களாக அமைத்துக் காட்டுகிறது. "ஆசாரிய இருதயம்" என்னும் அரும்பெரும் வைணவத் திறனாய்வு நூல் இதை அழகுற ஆராய்ந்து, விரிவாக விளக்குகிறது. 

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியையும், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம், திருக்கோவையார் என்பனவற்றையும் பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் பெரிதும் போற்றிப் புகழ்ந்து, வியந்து, துதித்துள்ளனர். 

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியில், ஐந்துவகையான சிறந்த பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன என்று வைணவப் பெருஞ்சான்றோர்கள் கூறுவர். அந்த ஐந்து பொருள்களும் "அர்த்த பஞ்சமம்" எனப்படும்.

அவை:-
  1. இறைவனது தன்மை
  2. உயிரின் தன்மை
  3. உயிர்கள் இறைவனின் அருளைப்பெறும் நெறியின் தன்மை
  4. உயிர்கள் அருளைப்பெற ஒட்டாமல் செய்யும் தடையின் தன்மை
  5. அருளால் எய்தும் பேரின்பத்தின் தன்மை.
இவ்வைந்து பொருள்களை நம்மாழ்வார் தம்முடைய "திருவாய்மொழி"யின் ஆயிரம் பாடல்களால் விளக்கி அருள்கிறார். 

மாணிக்கவாசகரின் நூல்களிலும் கூட,
  1. இறைவனின் நிலை
  2. உயிரின் இயல்பு
  3. தளையாகிய பாசங்களின் தன்மை
  4. அருள் நலம்
  5. பேரின்பம்
என்னும் இந்த ஐந்து வகைப் பொருள்கள் ஆங்காங்கே அழகுற விளக்கப் பெற்றிருக்கக் காண்கிறோம்.

இவ்வாறே மாணிக்கவாசகர் பாடல்களில் விளக்கப்படும், "இறை-உயிர்-தளை" (பதி-பசு-பாசம்) எனப்படும் மூன்று பொருள்களும், நம்மாழ்வாரின் பாடல்களில், "சித்து-அசித்து-ஈஸ்வரன்" என்று வழங்கப்படும். 

நம்மாழ்வாரின் பாடல்களில் வைணவ சமயத்துக்குரிய தத்துவக் கொள்கைகள் பலவும் பெரிதும் நிறைந்திருக்கும். அவர் அருளிச் செய்த "திருவாய்மொழி" முதலிய திவ்யப்பிரபந்தப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டே வைணவ சமயத் தத்துவக் கொள்கைகள் தொகுத்து, வடித்துத் தரப்பட்டுள்ளன.

"உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்" என்னும் "திருவாய்மொழி"ப்பாடலின் ஒரு வரியை அடிப்படையும், ஆதாரமுமாகக் கொண்டே, "விசிஷ்டாத்வைதம்" என்னும் பெருமாளிகை
ராமானுஜரால் எழுப்பப்பட்டது எனின், நாம், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பெருமையைச் சிந்தித்து உணரலாம். 

அவ்வாறே, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், "சைவசித்தாந்தம்" என்னும் தத்துவக் கொள்கைகள் பலவற்றிற்கு அடிப்படையும், ஆதாரமும் ஆக அமைந்தது என்பதை நாம் சிந்தித்து உணர்ந்து இன்புறலாம். 

"சிவஞான போதம்" என்னும் சைவசித்தாந்த சாத்திரத்தில் அதன் 8ஆம் சூத்திரச் செய்யுள் இப்படி நவில்கிறது:-

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனைத்
 தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
 அந்நியம் இன்மையின் அரண்கழல் செலுமே
."

இதையே, "இறைவனே குருவாக வருவான், குருவும் இறைவனும் வேறல்லர், இறைவனும் குருவும் ஒன்றே" என்று கூறுவதற்கு, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகப் பாடல்கள் சிறந்த அடிப்படையும், ஆதாரமும் ஆகும். 

இவ்வாறு தத்தம், சமய தத்துவக் கொள்கைகளை விளக்கும் திறனில், நம்மாழ்வாரும், மாணிக்கவாசகரும் தம்முள் ஒப்புமை பெரிதும் உடையவராகத் திகழ்கின்றனர்.

வித்துவான் உ.கருணைச்சிவப்பிரகாசம்

நன்றி:- தினமணி

N. Kannan

unread,
Nov 21, 2009, 7:13:06 PM11/21/09
to mint...@googlegroups.com
மிக நல்ல கட்டுரை. மிகச்சுருக்கமாக, ஆனால் ஒரு சிறப்பும் விட்டுப் போகாமல் எழுத முடிந்திருக்கிறதே! தமிழ் புலவர்களுக்கு பெரும்பாலும் மெய்யியல் ஞானம் குறைவாய் இருக்கும். எனவே மேம்போக்காக ஏதாவது சொல்லிப் போவர். புருஷோத்தம நாயுடுவுடன், இலக்கியத்திலும், மெய்யியலும் ஆழங்காட்படும் தன்மை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தேன்! `இல்லை` என நிருவும் கட்டுரை!
 
எங்கிருந்து எடுத்தார் அப்படியொரு நம்மாழ்வார் சிலையை? பார்த்ததே இல்லை. பெரிய படமாகப் போடக்கூடாதோ? மாறன் அழகை ரசித்திருக்கலாமே!
 
கண்ணன்

2009/11/22 Kannan Natarajan <thar...@gmail.com>

"சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது" என்று விளக்கிய திருவள்ளுவரும், தாம் எந்த சமயத்தையும் வெளிப்படையாகக் கூறாத இயல்பினராயினும்,"மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடியால்" அளந்த திருமாலைப் பற்றிக் (குறள் - 610) குறிப்பிட்டுள்ளார். 

நம்மாழ்வார், மாணிக்கவாசகர் என்னும் இருபெரும் சான்றோர்களும் வேறு, வேறு இடத்தில், வேறு வேறு சமயத்தைச் சேர்ந்தவர்களாகத் தோன்றியிருப்பினும், "சான்றோர் சான்றோர் பாலர் ஆவர்" என்று புறநானூறு பாடுவது போல, தம்முள் பலவகைகளில் ஒப்புமைத் தன்மைகள் உடையவராகத் திகழ்கின்றனர். 

"உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்" என்னும் "திருவாய்மொழி"ப்பாடலின் ஒரு வரியை அடிப்படையும், ஆதாரமுமாகக் கொண்டே, "விசிஷ்டாத்வைதம்" என்னும் பெருமாளிகை
ராமானுஜரால் எழுப்பப்பட்டது எனின், நாம், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பெருமையைச் சிந்தித்து உணரலாம். 

Innamburan Innamburan

unread,
Nov 21, 2009, 8:29:57 PM11/21/09
to mint...@googlegroups.com
இன்றைய பொழுது கதிரவன் ஒளிக்கதிர்களின் கூட்டமாக, ஆய்வும், ஆன்மீகமும்,ஆனந்தமும் கலந்து மின் தமிழில் உதித்தது. அவ்வாறே, என்றென்றும் தொடரவேண்டும் என்று அவா.

இன்னம்பூரான்

2009/11/22 N. Kannan <navan...@gmail.com>



-

Satheesh kumar R

unread,
Nov 22, 2009, 12:55:14 AM11/22/09
to mint...@googlegroups.com
அருமையானதொரு கட்டுரை,
 
ஆனால் ஒரு சந்தேகம், உண்மையிலேயே தொல்காப்பியம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதா? அப்படியெனின், அதில் உள்ள எழுத்துக்கள் எந்த வடிவத்தில் இருந்தன?
 
நன்றி,
சதீஷ்

V, Dhivakar

unread,
Nov 22, 2009, 5:23:59 AM11/22/09
to mint...@googlegroups.com
ஐயா,
 
இருவருக்குமே பெயர் மட்டுமே வேறு வேறு, இவர் வாதவூரார்.. அவர் காரிமாறனார். அவ்வளவுதான்..
இவருடைய பார்வையும் அவருடைய பார்வையும் இரண்டுமே ஒரே நோக்கில்தான்.
சங்கத்தமிழிலிருந்து நாயகா B'பாவம்' வரை ஒரே வரிசைதான்
என்ன, இந்த இரண்டு தென்பாண்டியரும் தலைவன் பேரை சொல்லும்போது மட்டும் பெயரை சற்று மாற்றிக் கொண்டார்கள். இவர் சிவன் என்றார், அவர் கண்ணனென்றார்.
 
திருவாசகத்துக்குருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
திருவாய்மொழி கேளாதார் ஒரு மொழியும் கேளார்
 
திவாகர்
Reply all
Reply to author
Forward
0 new messages