எனது நோக்கம் தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்துவது கிடையாது! ஆனால்
தமிழர்களாகிய நீங்கள் வந்தேமாதரம் பாடலுக்க எதிர்ப்பு தெரிவித்த
இஸ்லாமியர்களை எதிர்த்து பேசியுள்ளீர்கள், சாதாரணமாக மனிதர்களை
எதிர்த்திருந்தால் பரவாயில்லை மாறாக எங்கள் இறைவன் அல்லாஹ், இறைவேதம்,
இஸ்லாமிய பண்பாட்டை வம்புக்கு இழுத்து பேசியுள்ளீர்கள். இதில் வேத
பிரகாஷ் அவர்களின் போக்கும், ஜடாயு அவர்களின் போக்கும் மிகவும் கேவலமாக
இருந்ததால்தான் நான் வாக்குவாதத்தில் ஈடுபட முனைப்பு காட்டியது!
உங்களுடைய இந்த 2 சகோதரர்களும் பவ்யமாக நடந்துக்கொண்டு முஸ்லிம்களை
எதிர்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்குமா? உங்கள் உள்ளங்களில்
சிந்தித்துப் பாருங்கள்!
முஸ்லிமாகிய நான் வேண்டுமென்றே இந்துக்களை வம்புக்கு இழுத்தேனா? என்னுடைய
தீன் எனும் இஸ்லாமிய மார்க்கத்தை உங்கள் தமிழ் சகோதரர்கள் தரக்குறைவாக
பேசியதால்தான் சற்று பதில் கொடுத்திருந்தேன். எனது பதில் உங்களை
புண்படுத்தி யிருக்கும் என்ன செய்வது வேறு வழி இல்லையே! காரணம் வாதி,
பிரதிவாதி ஆகிய இருவரும் தம் தரப்பு வாதங்களை முன் நிறுத்த வேண்டிய
கட்டாயம்தானே! எனவேதான் இவ்வாறு நான் நடந்துக்கொண்டேன்! எனினும் உங்கள்
தமிழ் சகோதரர்கள் மீண்டும் மீண்டும் வரம்பு மீறிக்கொண்டு வருகின்றனர்
எனவே தமிழர் பண்பாட்டை வளர்க்க ஆசையுடன் இருக்கும் நீவீர் உங்கள்
சகோதரர்களுக்கு அறிவுரை கூறுங்கள் இப்போது அவர்களுக்கு இது முக்கிய
தேவையாகிறது.
வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பதற்கு எமக்கும் உரிமை உள்ளது
வந்தே மாதரம் பாடலுக்க முஸ்லிம்களாகிய நாம் எதிர்ப்பது எதன் அடிப்படையில்
என்று புரிந்துக்கொள்ளுங்கள்! நாம் வணக்குவது அல்லாஹ் ஒருவனைத் தான்
அவனைத் தவிர யாரை வணங்கக்கூடாது என்று தடை உள்ளது! எனவே பாரத மாதாவை
வணங்குவது போன்ற பாடல் எங்களுக்கும் எங்கள் இஸ்லாமிய கொள்கைக்கும்
மாற்றமானதாகும்! எனவே நாம் எதிர்க்கிறோம்.
தமிழ் செய்யுள்களைப் புரட்டிப் பார்த்தால் நக்கீரர் உங்கள் தெய்வம்
சிவபெருமானின் பாடலில் குற்றம் இருந்தது கண்டு நெற்றிக்கண் திறந்தாலும்
குற்றம் குற்றமே என்றால் அவருடைய பாணியில்தான் நாம் வந்தே மாதரம் பாடலில்
பொருள் குற்றம் உள்ளதால் புலவர் நக்கீரன் பாணியில் இந்த பாடலை
எதிர்க்கிறோம்.
இந்தியாவில் 1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு
போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. 1960களில்
திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் உங்கள் கண்முன்னே உள்ளன
ஆனால் ஒரு திராவிடர்கள் ஒரு தேசிய மொழியான இந்தியையே எதிர்த்து குரள்
கொடுக்கம் போது முஸ்லிம்களாகிய நாம் வந்தே மாதரம் என்ற இந்தி பாடலை
எதிர்க்க ஏன் உரிமையில்லை! என்ன சகோதரர்களே உங்களுக்கு ஒரு நியாயம்!
ஊருக்கு ஒரு நியாயமா?
எங்களுக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளனவே! அதன் அடிப்படையில் வந்தே மாதரம்
பாடலை எதிர்க்கிறோம்! எதிர்ப்புக் குரள் கொடுக்க வேண்டாம் என்றால்
எங்களுக்கு இந்தியாவில் வாழ்வுரிமை இல்லையா? நாம் இந்தியாவில் வழ்வதற்கு
தகுதியற்றவர்களா? அப்படியானால் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றி
இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்ற முனைப்பு காட்டுங்கள்
உங்கள் தெய்வங்களுக்கு இது பிடித்தமாக இருந்தால் உங்களுக்கு
உதவுவார்கள்!
இந்தியாவின் அடிப்படை உரிமைகள்
இந்தியாவின் வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பின்
பகுதி 3 ல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் படி அனைவரும் அடிப்படை உரிமைகள்
பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது,
ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு
சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை
மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும்
உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக
இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.
தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக்
குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை
உரிமைகள் இனப்பாகுபாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி
வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க
கடமைபட்டவர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு
அவற்றை பெற்றுத்தர தயங்காது.
இந்த அடிப்படை உரிமைகள் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள அடிப்படை
உரிமைகளைச் சார்ந்து, அதன் வழித் தோன்றலாக இங்கும்
பயன்படுத்தப்படுகின்றது.
ஆறு அடிப்படை உரிமைகளாவன
1. சம உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை
4. சமய சார்பு உரிமை
5. கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
6. அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை
இந்திய தேசிய கொடி
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான
இந்திய தேசிய காங்கிரஸ், 1921ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று
வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம்
இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய
பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன.
மத சுதந்திரம்
அரசியல் சட்டத்தின் 25,26,27,28 பிரிவுகள் மத சுதந்திரம் குறித்தவை.
அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்கள் மத சுதந்திரம் குறித்து விரிவாக
விவாதித்துள்ளனர். மத சுதந்திரம் என்ற கருத்து இப்போது
இந்திய சட்டம்
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்
1. இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்
2. குற்றவியல் சட்டம்
3. ஒப்பந்தச் சட்டம்
4. தொழிலாளர்ச் சட்டம்
5. பொல்லாங்கு குற்றவியல் சட்டம் (டோர்ட் லா)
6. குடும்பச் சட்டம்
7. இந்துச் சட்டம்
8. இசுலாமியச் சட்டம்
9. கிருத்துவச் சட்டம்
10. பொதுச் சட்டம்
11. தேசியச் சட்டம்
12. அமலாக்கச் சட்டம்
குறிப்பு
இத்துடன் உங்கள் குழுமத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன்!
எனக்குப் பின்னால் நீங்கள் இஸ்லாத்தை இகழ்வீர்கள் என்பது தெரிந்த விஷயமே
ஆனால் எல்லா விஷயங்களும் அல்லாஹ் கண்காணித்து மறுமையில் பதில் தருவான்
என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இதோ திருக்குர்ஆன் வசனங்கள் படியுங்கள்!
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ
قَعِيدٌ
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு
(வான)வர் எடுத்தெழுதும் போது- (திருக்குர்ஆன் 50:17)
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில்
(அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி,
அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும்,
முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இதுதான் நீங்கள்
உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச்
சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்). (திருக்குர்ஆன் 9:35)
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள்
விரும்புகிறார்கள் - ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த
போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
(திருக்குர்ஆன் 9:32)
இறுதியாக ஒரு எனது வருத்தப் பாடல்
மின் மினிக்கும் மீன்விழியால் தன் கண்வழியால்
தமிழ்ழகனை கண்டு கண் சிமிட்ட! கார் மேகமே
அவள் கண்கள்தனில் வீற்றிருக்க! மெல்லிய
பூங்காற்று அவள் புருவம்தனில் அலைமோத!
வந்ததுவே மாரி மழை அவள் கண்கள்தனில்!
அய்யகோ தமிழழகன் தன் நாவினால் கெட்டுவிட!
பதறியவளோ பைந்தமிழாம் எம் செம்மொழியே!
தமிழன் எங்கே! தமிழன் எங்கே! செந்தமிழன் எங்கே!
வேதமே-பிரகாஷமே நின் வேதமெங்கே! நின் பிரகாஷமெங்கே!
பைந்தமிழின் பாசம்தனை மறந்துவிட்ட ஒளி மங்கிய பிரகாஷமே! நின்
ஒளியும்! ஒலியும் அணைந்ததுவே!
தமிழன் எங்கே! தமிழன் எங்கே! செந்தமிழன் எங்கே!
நீங்கள் நுழைந்தவுடனேயே சொன்னேன் இது உங்களுக்கு ஏற்ற சபை அல்லவென்று.
மின்தமிழின் நாடி பார்த்த பிறகு எழுதுங்களென்று.
நீங்கள் வரும் போதே இஸ்லாம் பேனருடன் வந்தீர்கள்.
இது 'தமிழ் மரபு அறக்கட்டளைதான்" அரபு மரபு அறக்கட்டளை அல்ல.
தங்களுக்கு ஊடாட எத்தனையோ மடற்குழுக்குள் இருக்கும் போது இங்கு வந்து
வம்பு செய்வது நலமா?
தமிழ் மரபுடன் ஒன்றிப்போகும் போக்கை தாங்கள் 'உமறுப்புலவரை' ஓரம்
கட்டியதிலிருந்தே ஒதுக்கிவிட்டீர்கள்.
நாங்கள் உங்களுக்குக் கோடி காட்டினோம், மின்தமிழ் இயக்கத்தின் ஆணிவேர்
மின்னாக்கமென்றும், உங்களால் முடிந்த இஸ்லாமிய இலக்கியங்களை மின்னாக்கம்
செய்யுங்கள் என்று. அரபி மொழியில் எழுதிய தமிழ் நூல்கள் உண்டு.
அதையெல்லாம் இங்கு கொண்டுவந்து கொட்டினால் உங்களை எல்லோரும் மெச்சுவர்.
அதைவிடுத்து அருதப்பழசான, உஞ்சாமி பெருசா, எஞ்சாமி பெருசா எனும்
வாக்குவாதம் மின் தமிழின் ஆக்கபூர்வமான சமனிலையை குலைக்கும்.
நான் முன்பே உங்களுக்கு ஒருமுறை சொல்லியுள்ளேன்.
உங்களுக்கு மதம் மட்டுமே பேச ஆசையாய் உள்ளதென்றால் எத்தனையோ குழுக்கள் இருக்கின்றன.
இது இந்தியர்களின் அடிப்படை உரிமை பேசும் சட்டக்குழுவுமல்ல.
தாங்கள் எவ்விதத்திலும் ஒட்டாமல், சமனிலை குலைப்பானாக இருப்பது
யாருக்கும் நல்லதல்ல.
உங்களை ஒரு நொடியில் இக்குழுவிலிருந்து அகற்ற முடியும். ஆனால் உங்களுக்கு
இன்னொரு வாய்ப்புத்தருகிறேன்.
இது பெரும்பாலான குழு போன்ற அபிப்பிராயப் பரிமாற்றம் 'மட்டும்' செய்யும் குழுவல்ல.
ஆக்கபூர்வமாக வாழும் நாட்களில் ஏதாவது தமிழுக்கு செய்துவிட்டுப் போக
வேண்டும் என்ற எண்ணமுள்ள குழு.
உங்கள் முடிவை உங்கள் கையில் முதலில் விடுகிறேன்.
அன்புடன்
நா.கண்ணன்
2009/11/12 சிராஜ் அப்துல்லாஹ் <internatio...@gmail.com>:
1. இது என்ன வேடிக்கையாக இருக்கிறது?
2. எங்கு, "அவர்களின் போக்கும் மிகவும் கேவலமாக இருந்ததால்தான்" -
அவ்வாறு இருந்தது?
3. உண்மையைச் சொல்லப்போனால், இப்போக்குதான் மிகவும் ஆணவத்துடன்
இருக்கிறது.
4. மேலும் அந்த தீதத், ஜகீர் மாதிரி கேட்டக் கேள்விகளுக்கு பதில்
சொல்லாமல், "சுத்திவிட்டுக் கொண்டிருக்கிறார்".
5. இத்தகைய போக்கை யாரும் ஒப்புக் கொள்ளமுடியாது.
6. சொல்லப்போனால், விவாதம் போகும் போக்கை கவனித்துதான், நான் பதில்
சொல்லாமல் இருந்தேன்.
7. என்னுடைய மற்றொரு தளத்தைக் கொடுத்து அங்கு விவாதிக்கச் சொன்னேன்.
8. இப்பொழுதுகூட, விவாதம் இந்த வலையில் தேவையில்லை என்றால்,
நிறுத்திவிடுகிறேன். ஆனால், இந்து-எதிர்ப்பு, இந்திய-எதிர்ப்பு முதலியன
நாத்திகம், முகமதிய / இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதம் (இவ்வாறான
வார்த்தை பயங்கரவாதம் கூட) என்ற முகமூடிகள் அணிந்து கொண்டு வந்தால்,
இந்தியர்கள், இந்துக்கள் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.
"புனிதத்தின் மீதான தாக்குதல்கள்" என்பதில் கூட விளக்கியுள்ளேன்.
அன்பின் பென்னேஸ்வரன்:
எனது வேண்டுகோளை ஏற்று நண்பர் சிராஜ் இம்மன்றத்திலிருந்து விலகிவிட்டார்.
அவரது முடிவை நான் பாராட்டுகிறேன்.
அதே நேரத்தில் நம்மில் பலர் இவ்வளவு பதட்டப்பட்டதும் கொஞ்சம் அதிகமென்று
தோன்றியது. பதறுவதற்கு என்ன இருக்கிறது இங்கே? எல்லாம் இலத்திரன்
(electronic) மாயைதானே! இந்த மண்ணில் பிறந்த எல்லோரையும் அரவணைத்து
நல்வழிப்படுத்துவது நம் கடமை அல்லவா? இவ்வகையில் வள்ளலாரை எனக்குப்
பிடித்திருக்கிறது. மதமெனும் பிடியிலிருந்து விடுபடாதவரை அது நடக்காது.
சில நாள் முன் எனது கொரிய சகா கேட்ட கேள்வி என்னைக் கொஞ்சம் யோசிக்க
வைத்தது. மதம் என்பது அவசியமா? என்று. கொரியர்களில் 40% மேல்
மதமற்றவர்களாக உள்ளனர். அவரவர் கடமை அவர்களுக்கு. இது ஜப்பானுக்கும்
பொருந்தும். ஒரு நாடு பொருளாதார வளத்தில் முன்னேறும்போது மதங்களின் தேவை
குறைகிறது. நெதர்லாந்தில் கிறிஸ்துமஸ் அன்று பூட்டிய தேவாலயத்தைக்
கண்ணுற்றவன் நான். பற்றுவதற்கு ஒன்றுமே இல்லை எனும் அவலநிலையில்தான் மதம்
மனிதனை ஆட்டிப்படைப்பதில் முக்கிய பங்களிக்கிறது.
மின்தமிழின் முக்கிட நோக்கிலொன்று தமிழர்களை எல்லாத்தளைகளிலிருந்து
விடுவித்து உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க வைப்பது என்பது. நாம்
படிநிலைகளில் உயர்வுற வேண்டுமே அன்றித் தாழ்வுறக்கூடாது. சிவன், விஷ்ணு
போன்ற குறியீடுகள் இருந்தாலும் இந்து தர்மம் மனித விடுதலையையே
பிரதானமாகக்கொள்கிறது. சிவன் என்ற குறியீட்டிற்கும், ஏசுவின்
சிலுவைக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. சிலுவை சரித்திர, பௌதீக உண்மை.
அதைக்கடந்து செல்ல அனுமதிப்பதில்லை. ஆயின் சிவன் எனும் குறியீடு
ஸ்படிகம். நாம் மேவிக்கடந்து செல்லலாம். நாரணன் என்பதின் உட்பொருள்
அறிந்தால் இதே விளக்கம் கிடைக்கும்.
எனவே காலையில் விடிந்தால் பிரச்சனை, தலைவேதனை என்பது போன்ற பிரச்சனைகளைக்
கிளப்பக்கூடிய மடல்களைத் தவிற்க. கோரமான படங்களை அனுப்பாதீர்கள்.
மின்தமிழ் எனும் போது ஒரு மணிமண்டபத்திற்குள் வரும் உணர்வைத்தாருங்கள்.
கட்டற்ற விடுதலையை நோக்கிய பயணத்தின் அடிச்சுவடுகளாக உங்கள் மடல்கள் அமைய
என் வாழ்த்துக்கள்.
நா.கண்ணன்
On Nov 13, 8:20 pm, காமேஷ் <kames...@gmail.com> wrote:
> //
> கொரியர்களில் 40% மேல்
> மதமற்றவர்களாக உள்ளனர். அவரவர் கடமை அவர்களுக்கு. இது ஜப்பானுக்கும்
> பொருந்தும். ஒரு நாடு பொருளாதார வளத்தில் முன்னேறும்போது மதங்களின் தேவை
> குறைகிறது.
> //
>
> சீனாவில் 80% மதமற்றவர்கள்னு சொல்லலாம்...
சீனாவில் நாஸ்திக மதங்களான பௌத்தம், கம்யூனிஸம்
வளர அவர்கள் அடிப்படையிலேயே நாஸ்திகர்கள் ஆக
இருப்பதால் என்று கேள்விப்படுகிறேன்.
பாரதப் பண்பாட்டை உலகிலேயே இறைவனைப்
பற்றி அதிகம் சிந்தித்த சமூகம் என்பார்கள்.
நா. கணேசன்
> நல்ல குணங்களை குழந்தை பருவத்தில் வளர்த்தால் போதும்..
>
> சாமி, பேய், பூதம் என்று பயமுறுத்த வேண்டிய அவசியமில்லை.
>
> ~காமேஷ்~
>
> 2009/11/14 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
> > 2009/11/13 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>:
> > நா.கண்ணன்- Hide quoted text -
>
> - Show quoted text -
2. "பாரதப் பண்பாட்டை உலகிலேயே இறைவனைப் பற்றி அதிகம் சிந்தித்த சமூகம்
என்பார்கள்" -
ஏன் அத்தகைய சந்தேகம்?.
எனவே காலையில் விடிந்தால் பிரச்சனை, தலைவேதனை என்பது போன்ற பிரச்சனைகளைக்கிளப்பக்கூடிய மடல்களைத் தவிற்க. கோரமான படங்களை அனுப்பாதீர்கள்.மின்தமிழ் எனும் போது ஒரு மணிமண்டபத்திற்குள் வரும் உணர்வைத்தாருங்கள்.
அன்புள்ள பென்னேஸ்வரன்
என்ன இது
உங்கள் நகைச்சுவை உணர்வு எங்கே போனது
என்னை நாகையாவுடன் ஒப்பிட்டு எழுதியதை நினைத்து நினைத்து அன்று முழுவதும் சிரித்தேன் .
நாங்கள் நாகையா ரங்காராவ் போன்றோரின் நடிப்பை அந்த நாளில் அவ்வளவு கிண்டல் செய்வோம் .
அவர்களுக்கு கையை ஆட்டிஆட்டி பேசுவதால் இசை இயக்குனர் என்று பட்டம் தந்திருந்தோம் .
இப்போ நீங்க என்னவென்றால் இப்படி பேசுகிறீர்களே
கண்ணன் முன்பே சொல்லி இருக்கிறார்
அவர் சிந்தனையை உரக்க செய்பவர் என்று .
அவர் உங்களில் ஆரமித்து எங்கோ முடித்து விட்டார் .
அவர் கூறியவை எதுவும் உங்களுக்கு அல்ல .
நமக்குள் இந்த பிரிவினை வந்தால் வந்து சென்றவரின் வெற்றி என்றுதான் கூறவேண்டும்.
நீங்கள் இந்த குழுவுக்கே கலகலப்பூட்டுபவர் .
அன்புடன்
ஏ சுகுமாரன்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
என்ன பென்னேஸ்வரன், உங்களை அப்படியெல்லாம் சொல்வேனா? நான் உங்கள் ரசிகன்
என்றுதெரியாதா?
நரசய்யாவும், சுகுமாரனும் சொல்லியிருப்பது போல் அதுவொரு முடிவுப்பேச்சு.
உங்கள் மேற்கோள் கொண்டதால் அப்படி எழுதினேன். அது உங்களுக்கே அல்ல. பொதுவானதுதான்.
என் பேச்சு பெரும்பாலும் உரத்த சிந்தனைதான்.
உண்மையில் நான் ஜே.கிருஷ்ணமூர்த்தி வழியில் There is no such thing as
individual என்று நம்புவன். நாம்தான் இருக்கிறோம்.
மின்தமிழ் தமிழர்தம் மனவெளி. இதுவொரு பொது ஓடை. இங்கு காண்பதுதான் தமிழன்
இதயம், மனது.
அதன் படி நிலைகள் வெளிப்படும் நபரைப் பொறுத்து மாறலாம்.
ஆனால் இருப்பது ஒன்றுதான்.
கொஞ்ச நேரமேனும் உங்களை வதைத்த பாவத்திற்கு மன்னிப்பு.
நா.கண்ணன்
2009/11/14 annamalai sugumaran <amirth...@gmail.com>:
அன்புள்ள சுகுமாரன் சார்,கண்ணன்
Classic!
ஏன் சார்! உங்களையெல்லாம் அப்படிப்பேச மனசு வருமா!
இங்கே பாருங்க பென்னேஸ்வரன் என்று சொல்லிவிட்டு ஊர் வம்பு பேசும்
கிராமத்து வழக்கு இது. எங்க சித்தப்பா ஜோஸ்யம் பார்ப்பார் அவரிடம்
வருபவர்களில் எல்லா மதத்தினரும் இருப்பர் (எங்கள் ஊரில் முஸ்லிம்கள்
நிறைய உண்டு). சில நேரம் அவர் பேர் சொல்லி விட்டு யாரையோ திட்டிக்கொண்டு
இருப்பர். அது போல் ஆகிவிட்டது. இன்னொருமுறை மன்னிப்பு. அடுத்தமுறை
கவனமாக இருக்க முயற்சிக்கிறேன் ;-)
க.>
அன்புள்ள கண்ணன்
கவலைப்பட வேண்டாம்.
சின்ன வருத்தம் இருந்தது. அதை வெளிப்படுத்தினேன். இந்த நல்ல குழுவை விட்டு வெளியே போக யாருக்காவது மனசு வருமா?
இந்த வசதியை விட்டு நகர மனம் வருமா? ஏதோ வருத்தத்தில் பேசி விட்டேன்.
மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
இன்றைய நாகையாவாக தேனீ சார் வந்தாச்சு.
அன்புடன்
பென்னேஸ்வரன்
(குழுமத்தில்) சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
தேவ்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
(குழுமத்தில்) சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
தேவ்
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள
> தமிழ்த்தேனீ
>
--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-