அதிகாலை எழு.
ஆகாயம் தொழு.
இருதயம் துடிக்க விடு.
ஈறழுந்தப் பல் தேய்.
உடல் வேர்வை கழி.
ஊளைச்சதை ஒழி.
எருதுபோல் உழை.
ஏழைபோல் உண்.
ஐம்புலன் பேணு.
ஒழித்துவிடு புகைமது.
ஓட்டம் போல் நட.
ஒளடதம் பசி.
அஃதாற்றின் எஃகாவாய்.
~ வைரமுத்து
http://kolipaiyan.blogspot.com/2009/09/blog-post_18.html
(எழுத்துப்பிழை. திருத்தியுள்ளேன். ~ கணேசன்)
> ஆகாயம் தொழு.
இது என்ன சிதம்பர ரகஸ்யம்?
> இருதயம் துடிக்க விடு.
இவரென்ன துடிக்கவிட? அதுபாட்டுக்கு துடிக்குது. உண்மையில் யோக முறைப்படி
துடிப்பைக்குறை என்று வரவேண்டும்!
> ஈறழுந்தப் பல் தேய்.
ஈறு அழுந்தப் பல் தேய்த்தால் புண்தான் வரும்! பல்லைத்தான் அழுத்த வேண்டும்.
> உடல் வேர்வை கழி.
குளி என்றே சொல்லலாம் இதற்குப்பதில்.
> ஒளடதம் பசி.
அது என்னது? பசித்து உண்ணுவதல்லவே ஔடதம்.
> அஃதாற்றின் எஃகாவாய்.
>
என்னப்பா பொருள் இதற்கு?
இப்படி எழுதுபவருக்கு "கவிப்பேரரசு" பட்டம் வேறு. கொடுமை!
க.>
க.>
On Oct 4, 8:52 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/10/5 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> > உயிர்வருக்க ஆத்திசூடி
>
> > ஆகாயம் தொழு.
>
> இது என்ன சிதம்பர ரகஸ்யம்?
>
பலர் வீடு, ஆபீஸ் என்று வெளியிலே பார்க்காமல், நடக்காமல்
இருப்பதைச் சொல்கிறார்.
> > இருதயம் துடிக்க விடு.
>
> இவரென்ன துடிக்கவிட? அதுபாட்டுக்கு துடிக்குது. உண்மையில் யோக முறைப்படி
> துடிப்பைக்குறை என்று வரவேண்டும்!
>
வியர்க்க, விறுவிறுக்க நடப்பதால் இதயத் துடிப்பு அதிகம் ஆகணும்.
Treadmill துடிப்பை அதிகம் ஆக்குகிறதே.
நா. கணேசன்
கடுமையான
விமர்சனம்.நமக்கு
வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம். (இன்னொரு பாடலில் ஈறுகளுக்குத் தொட்டு அழுத்தும் சுகம் அளி என்று கவிஞர் எழுதியிருந்தார்.இரசித்தேன்)அன்புடன்
சொ
.வினைதீர்த்தான்| ஆம்..இதைப்போய் ஆகா ஓஹோ என்று எப்படிப்பாராட்டினார் கணேசன் என்றே தெரியவில்லை..யானும் சுப்ரமணியம் கட்சிதான்.. பல இடங்களில் அபத்தம்..கவி அரசு(?)-க்கே பொருள் தெளிவில்லை.. யோகியார் --- On Mon, 10/5/09, Venkatachalam Subramanian <v.dot...@gmail.com> wrote: |
On Oct 5, 8:42 am, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:
> > ஒளடதம் பசி.
>
> அது என்னது? பசித்து உண்ணுவதல்லவே ஔடதம்.
>
> > அஃதாற்றின் எஃகாவாய்.
> >-=-=-=-=
>
> ஓம்
> பசித்திருத்தல் (ஏகாதசி விரதம் போன்றவை) உடல் நலத்திற்கு ஒத்துழைப்பதால்
> ஔடதமாகக் கொள்ளலாம்.
> அந்த வழிமுறைகள் கைவந்தால் உடல் எஃகு போன்று உறுதியுறும் என்று சொல்கிறாரோ?
>
> வெ.சுப்பிரமணியன் ஓம்.
>
yes.
NG
ஒரிஜினல் ஐடியா பாட்டியோடது. நாம எல்லோரும் ஆத்திச்சூடி படித்திருக்கிறோம்.
அப்புறம், ஆயிரம் வருஷத்திற்கு அப்புறம் 'புதிய ஆத்திச்சூடி' பாடினான்
பாரதி. அது தேவையாக இருந்தது.
இப்போது என்ன புதுப்புது ஆத்திச்சூடி? (கவியரசர் கண்ணதாசன் என்றால் இவர்
கவிப்பேரரசு என்று போட்டுக்கொள்வது போல்).
எல்லாமே சீப் பப்ளிசிடியாகப்பட்டது. வரைமுத்து சொன்னார் என்பதற்காக
அதிலிருந்து கற்க வேண்டியது ஒன்றுமில்லை என்று காட்டினேன்.
தமிழக இலக்கிய சூழல் பலநேரம் இப்படி என்னை வெறுப்பேத்தும். என்ன செய்ய?
க.>
2009/10/6 karthi <karth...@gmail.com>: