அன்பு நண்பர்களே!

13 views
Skip to first unread message

பவள சங்கரி

unread,
Aug 29, 2011, 6:53:02 AM8/29/11
to மின்தமிழ், ksuba...@gmail.com
திரு தமிழ்த்தேனீ அவர்களின், பயன்மிகு குறிப்புகள் - அதாவது அன்றாட நம்
பாரம்பரிய உணவு வகைகளில் அடங்கியுள்ள சத்துகள் எத்தனை...எத்தனையோ!
அதையெல்லாம் நாம் உணருகிறோமோ இல்லையோ? தமிழ்த்தேனீ அவர்கள் இது பற்றிய
ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதோடு, நம் பாட்டி வைத்திய முறைகளையும்
தெள்ளத் தெளிவாக சுவையான சம்பவங்களுடன் விளக்கியுள்ளார். நல்ல அனுபவ
மொழிகள். பாதுகாக்ப்பட வேண்டிய குறிப்புகள்.

”உணவும் அனுபவமும் மருந்தாகும்” என்ற தலைப்பில் இரு பகுதிகளாக நம் மரபு
விக்கியில் பதிவேற்றப்பட்டுள்ளது. சுட்டி கீழே.......

http://tinyurl.com/3s3jahj
[Open in new window]

http://tinyurl.com/3kqheqp
[Open in new window]

shylaja

unread,
Aug 29, 2011, 8:18:08 AM8/29/11
to mint...@googlegroups.com
அருமையான பதிவு

2011/8/29 பவள சங்கரி <cor...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
 
 ஷைலஜா
 
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
-----பாரதி

Tthamizth Tthenee

unread,
Aug 29, 2011, 9:00:29 AM8/29/11
to mint...@googlegroups.com
பாரட்டுக்கு நன்றி
 
வெகு நாட்களாயிற்று உங்கள் எழுத்தைப் பார்த்து
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/8/29 shylaja <shyl...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Aug 30, 2011, 6:56:11 AM8/30/11
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
ஐயா தமிழ்த்​தேனீ அவர்களுக்கு வணக்கம்.

பயனுள்ள நல்ல​தொரு கட்டு​ரை,
நல்லசாப்பாட்டுடன் 
பாயாசத்​தையும்,
முடிவில் 
​தாம்பூலத்​தையும் ​சேர்த்துக் ​கொள்ள​வேண்டும்.
அப்பத்தன்தான் கூட்டத்தில் அதிகம் ​பேசாமல் நல்லபிள்​ளையா வீடு வந்து ​சேர முடியும்,

அன்பன்
கி.கா​ளைராசன்

Tthamizth Tthenee

unread,
Aug 30, 2011, 7:46:31 AM8/30/11
to mint...@googlegroups.com
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஅ
 
அதுவும் உண்மைதான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/8/30 கி.காளைராசன் <kalair...@gmail.com>

shylaja

unread,
Aug 30, 2011, 7:55:02 AM8/30/11
to mint...@googlegroups.com
வாய் சிவக்க  தாம்பூலம் போட்டுட்டு சிலபேர் பாடவே செய்றாங்களே!!!!!  அப்றோம் தேனிசார்  வெற்றிலை வச்சிக்கிற பெட்டியை ஏன் வெற்றிலை செல்லம் என்றார்கள் அந்தகாலத்துல? !

2011/8/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 30, 2011, 8:33:12 AM8/30/11
to mint...@googlegroups.com
சரி. அவரே சொல்லட்டும்.

2011/8/30 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Aug 30, 2011, 8:37:22 AM8/30/11
to mint...@googlegroups.com
(இ)ஈயோ தேனியோ பறந்துவந்து விஷயத்தைக்கொட்டினா சரி!!

2011/8/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 30, 2011, 9:24:50 AM8/30/11
to mint...@googlegroups.com
தேனிசார்  வெற்றிலை வச்சிக்கிற பெட்டியை ஏன் வெற்றிலை செல்லம் என்றார்கள் அந்தகாலத்துல? !

திருமண விசேடங்களில் நண்பர்கள் உறவினர்கள் சேர்ந்து கேளிக்கையும் ஆர்ப்பரிப்பும் நிலவும் போது வெற்றிலை செல்லம் அனைவர் முன்னும் வைக்கப்படும்.
வெ.சுப்பிரமணியன்,ஓம்

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

http://www.treasurehouseofagathiyar.net/38300/38330.htm

நாட்டுக்கோட்டை செட்டியார் மரபும் யாதவ மரபும் சிக்கனத்துக்குப் பேர் போனவை. திருமண முன்நிகழ்ச்சியாக பெண்பார்க்கும் படலத்தில் வந்திருக்கும் மணமகன் வீட்டார் வருங்கால மருமகளிடம் "மகளே எங்களுக்கு வெற்றிலைப் பாக்கு எடுத்துவா" என்பர். அவள் கொண்டு வந்த சுண்ணத்தின் அளௌ அங்கு வந்திருப்போரின் தேவைக்குத் தகுந்தார்போன்று சரியான அளவினதாக இருக்க வேண்டும் என்பது எழுதாத சட்டம்.

அடைப்பை என்று இலக்கியம் பேசுவது இந்த வெற்றிலைப் பையினைத் தான். சோழன் இறுமாந்து கவிச் சக்கரவர்த்தி கம்பனிடம்." கண்ணில் தெரியும் இந்த பூமி என்னுள் அடக்கம் " என்று கூறக்கேட்ட கவி " அந்த பூமிப் பரப்பையாளும் சோழ வேந்தன் கம்பருள் அடக்கம் " என்று மறுமொழி கூற, வெகுண்ட மன்னன் அவரை முனிந்து தூற்ற வேகங் கொண்ட கம்ப்ர் சூளுரைத்து சேரனின் அடைப்பைக் காரனாய் யாரும் அறியாது பணிக்கு அமர்ந்து மீளவும் சோழனால் அழைக்கப் பட்டார் என்று கதை கூறுகின்றது.
வெ.சுப்பிரமணியன்,ஓம்

tambula.jpg
நாகராசன்
2011/8/30 shylaja <shyl...@gmail.com>
tambula.jpg

Tthamizth Tthenee

unread,
Aug 30, 2011, 10:34:52 AM8/30/11
to mint...@googlegroups.com
கும்பகோணத்து மக்கள் வெற்றிலை போடும்போது பார்த்ததுண்டோ?
 
நல்ல விருந்தை உண்டுவிட்டு, சாவகாசமாக திண்ணையில் காற்றாட வந்து உட்கார்ந்து
இடுப்பில் வேட்டி மடிப்பில் இருக்கும் அந்தச் செல்லத்தை ,அந்த வெற்றிலைப் பெட்டியை எடுத்து கனிவோடு ஒரு முறை அதைப் பார்த்துவிட்டு,  கையால் அன்பாக இதமாக அந்தப் பெட்டியைத் தடவிக்கொடுத்துவிட்டு
 
வலிக்காமல் மெல்லத் திறந்து  அதன் உள்ளே இருக்கும் வெற்றிலையை
ஒவ்வொன்றாக எடுத்து  உள்ளங்கையால் சுத்தமாக  ,இதமாக  தடவி , வெகு லாவகமாக மனதுக்கு  இதமான சொற்களை, கலைகளை, ஆராய்ந்து கொண்டே, சங்கீத ஞானத்தையும்  விவரித்துக்கொண்டே, கூடவே சில குறும்புக்காரர்கள்
பாடிய  பெண்மணியின் சாரீரத்தையும் ,கூடவே  சரீரத்தையும் பற்றி  மிக லாவகமாக நுணுக்கமான சொற்களால் குறும்புடன் ஸ்லாகித்துக்கொண்டே
 
இதமாக  சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையில் தடவி, லாவகமாக நடு நரம்பில் மடித்து முன் பக்கமாக நடு நரம்பை மட்டும் கிழித்து, மடித்து மடித்து, கையில் வைத்துக்கொண்டு, மணக்கும் தூள் பாக்கை வாயில் போட்டுக்கொண்டு, மடித்த வெற்றிலையை வாயில் போட்டு வெற்றிலைக்கு வலிக்காமல் இதமாக மென்று அதன் சாறை வாயில் குதப்பிக்கொண்டே
 
பன்னீர் புகையிலையையும்  வாயில் போட்டு அதோடு சுவைத்து  கடைவாயில் அதை அடக்கிக்கொண்டு  சிவந்த  உமிழ் நீர் வழிய எதிரே இருப்பவர்மீது தெறிக்காமல் பேசும் நளினம் இருக்கிறதே அடடா!
 
இத்தனை கலைகளும்  அந்த வெற்றிலைப் பெட்டியில்தான்  இருக்கிறது என்று நம்பும் அவர்களுக்கு
 
இந்த வெற்றிலைப் பெட்டி  செல்லம்தான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2011/8/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
tambula.jpg

Innamburan Innamburan

unread,
Aug 30, 2011, 10:57:44 AM8/30/11
to mint...@googlegroups.com
இவ்வாறு செல்லபுராண காலக்ஷேபம் செய்வது ஶ்ரீவில்லிபுத்தூரார். அங்கு வெற்றிலை தடிமன், அடர்த்தி; அழுத்தம் திருத்தமான கரும்பச்சை நிறம்.
இன்னம்பூரான்
30 08 2011

2011/8/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
tambula.jpg

shylaja

unread,
Aug 30, 2011, 11:19:55 AM8/30/11
to mint...@googlegroups.com
நன்றி தேனி சார்...ஸ்ரீவில்லிபுத்தூரார்  என்று உங்களையா  இ சார் சொல்றார்?

2011/8/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

rajam

unread,
Aug 30, 2011, 2:15:11 PM8/30/11
to mint...@googlegroups.com, Subashini Tremmel, Tthamizth Tthenee, Dr. K. Kalairajan, Innamburan Innamburan
ஒரு சின்ன கொசுறு:
-----------------------
மணிமேகலைக் காப்பியத்தில் படித்தது.  
மணிமேகலை கச்சி மாநகரில் இருந்துகொண்டு "காணார் கேளார் கால்முடப்பட்டோர் ..." இன்ன பிற உயிர்களின் பசித்துயர் தணித்து வருகிறாள் என்ற செய்தியைக் கேட்டு அறவண அடிகள் மணிமேகலையின் "தாயர்" ஆகிய மாதவி, சுதமதி இருவருடனும் மணிமேகலையின் "நல்லறச் சாலை"க்குப் போகிறார்.
அப்போது என்ன செய்கிறாள் மணிமேகலை?
வந்தவரின் திருவடிகளை வணங்கி, 
விருப்பத்தோடு அவருடைய அடிகளை / பாதங்களைக் கழுவி, 
உயர்ந்த ஓர் இருக்கையில் ஏறி இருக்கச் செய்து, 
ஆறு சுவைகளைக் கொண்ட நான்கு வகை உணவுகளை ஏந்திக் கொடுத்து, 
அவர் (அறவண அடிகள் + தாயர்) உணவு உண்ணுவதற்குத் தகுந்த நேரத்தில் உண்டபின் ...
பச்சை இலைக் கற்றையும் ("வெற்றிலைக் கட்டு") பச்சைக் கற்பூரமும் படைக்கிறாள்.

shylaja

unread,
Aug 30, 2011, 2:21:04 PM8/30/11
to mint...@googlegroups.com
சும்மா  ஒரு வெற்றிலைக்கவிதை!
 
வெற்று இ்லையாமே
யார் சொன்னது?
 
வெற்றிகொண்ட இலைதான்
பெயர் சொல்கிறதே
 
அனுமனின் அங்கமேறிய
அபூர்வ இலை இதுதான்
 
ஆண் என்றும் பெண் என்றும்
இரண்டு ரகம் உண்டு
 
காரம் மணம் குணத்தோடு
கவர்ச்சியான நிறமும் உண்டு
 
மங்கலப்பொருட்களில்
முதலிடம் வெற்றிலைக்கு
 
விருந்திற்குப் பின்னேவந்தாலும்
விரைந்திதையும் உணவாகச் சிலருண்பர்
 
மருந்தாகும் மாதருக்குப்
பிரசவத்திற்குபின்.
பாக்குப்புருஷனைப்பார்த்துவிட்டால்
மேனிக்கு சுண்ணாம்பு ஸ்னோபூசும்
வெற்றிலையைபோட்ட வாய்களுக்கு
எல்லா கிழமைகளும் ;செவ்வாய்; தான்!
 
--
 
2011/8/30 shylaja <shyl...@gmail.com>

rajam

unread,
Aug 30, 2011, 2:28:50 PM8/30/11
to mint...@googlegroups.com
ஜோர்! ஜோர்! நல்ல கவிதை!
வெற்றிலையைபோட்ட வாய்களுக்கு
எல்லா கிழமைகளும் ;செவ்வாய்; தான்!
 
நானும் கொஞ்சம் சேந்துக்கலாமா?
"வெற்றிலையை மென்றுவிட்ட வாய்கள்
வெவ்வாய் எனத் திட்டுவாங்கும்
செவ்வாய்க்கும் மகிமை தரும்"

shylaja

unread,
Aug 30, 2011, 4:10:13 PM8/30/11
to mint...@googlegroups.com

2011/8/30 rajam <ra...@earthlink.net>
ஜோர்! ஜோர்! நல்ல கவிதை!
வெற்றிலையைபோட்ட வாய்களுக்கு
எல்லா கிழமைகளும் ;செவ்வாய்; தான்!
 
நானும் கொஞ்சம் சேந்துக்கலாமா?
"வெற்றிலையை மென்றுவிட்ட வாய்கள்
வெவ்வாய் எனத் திட்டுவாங்கும்
செவ்வாய்க்கும் மகிமை தரும்<<<<<<<<ஆஹா! செவ்வாய்க்குப்பெருமை சேர்த்துவிட்டீர்களே! அதென்னவோ செவ்வாயோ வெவ்வாயோ என்று சொல்கிறார்கள் இதுல செவ்வாய்க்கு  மங்கலவாரம் என்று கன்னடத்தில் ஹிந்தில மங்கள்வார் என்று பேரு!! தோஷம் செவ்வாய்க்குதான் பாவம்!

Innamburan Innamburan

unread,
Aug 30, 2011, 4:34:30 PM8/30/11
to mint...@googlegroups.com
தமிழில் மூன்று வகைகளுண்டு. எழுத்திலக்கியம், வர்ணஜால பேசும் மொழியும் அதன் கிளை மொழிகளும், செல்லத்தமிழ். எதித்தாத்து ஜோஸ்யர் மாமா எப்பப்பாத்தாலும் வெத்தலைச்சீவல். ஒரு உரையாடல்:
*
நான்: மாமா! பிள்ளையார் சதுர்த்தி வரது. கொழுக்கட்டை நைவேத்யம் எத்தனை மணிக்கு பண்ணனும்?
ஜோ: ஒம்ம என்னெ கொஷ்கொத்தெ பன்ரிக்கா?
நா: வெல்லகொழுக்கட்டை, உப்புக்கொழக்கட்டை, பால் கொழுக்கட்டை.
ஜோ: அதென்னா பாஷ் கொஷ்கொத்தெ. புச்ஷா இருக்கே? கொஷ்கொத்தெ கொண்திர்ஷ்க்கையா?
நா: உப்புக்கொழக்கட்டை கொண்டு வந்திருக்கிறேன்
ஜோ: ஓக்ர்ன்னு குதப்பி துப்பி விட்டு கேக்கறார்," ஏண்டா அசத்து? அத்த்னையும் தின்னுட்டையே. வவுறு வலிக்கும்டா?
(இதுவே கும்போணம் துளிர் இளம்பச்சை வெற்றிலையாகவும், நெய்ச்சீவலாகவும், சிவபுரி ப்ரும்மபத்ர்அமாகவும், டீ.எஸ்.ஆர். வாசனை சுண்ணாம்பாகவும் இருந்துட்டாக்க...!

2011/8/30 shylaja <shyl...@gmail.com>

rajam

unread,
Aug 30, 2011, 5:01:07 PM8/30/11
to mint...@googlegroups.com

On Aug 30, 2011, at 1:10 PM, shylaja wrote:

2011/8/30 rajam <ra...@earthlink.net>
ஜோர்! ஜோர்! நல்ல கவிதை!
வெற்றிலையைபோட்ட வாய்களுக்கு
எல்லா கிழமைகளும் ;செவ்வாய்; தான்!
 
நானும் கொஞ்சம் சேந்துக்கலாமா?
"வெற்றிலையை மென்றுவிட்ட வாய்கள்
வெவ்வாய் எனத் திட்டுவாங்கும்
செவ்வாய்க்கும் மகிமை தரும்<<<<<<<<ஆஹா! செவ்வாய்க்குப்பெருமை சேர்த்துவிட்டீர்களே! அதென்னவோ செவ்வாயோ வெவ்வாயோ என்று சொல்கிறார்கள் இதுல செவ்வாய்க்கு  மங்கலவாரம் என்று கன்னடத்தில் ஹிந்தில மங்கள்வார் என்று பேரு!! தோஷம் செவ்வாய்க்குதான் பாவம்!
எனக்கு அந்தச் செவ்வாயெப் பத்தி ஒண்ணும் தெரியாது, முதலிலேயெ ஒத்துக்கொள்கிறேன்.
செவ்வாய்க் கிழமைக்கு "மங்கல வாரம்" என்ற வழக்கா? ... அது ... அது ... என் கருத்துலெ ... "சுகப் பிரசவம்" என்ற சொல் வழக்கு மாதிரி-னு வெச்சுப்பேன். (எந்தப் பெண் தன் பிரசவம் 'ஆகா, மிகவும் சுகமாக இருந்தது' என்று சொன்னாள்/சொல்கிறாள் என்று கணக்கெடுக்கத் தொடங்கினால் ... இந்த இழை பிச்சுப் பறந்து போயிடும். அதனால் அது இங்கே வேண்டாம்! :-) )  

அந்த ... "செவ்வாயோ வெவ்வாயோ" என்ற பேச்சு தமிழ் இலக்கணத்தில் சொல்லுகிற "தகுதி" வழக்காக ("socially accepted utterance," perhaps?) இருக்கலாம்; எனக்குத் தெளிவாகத் தெரியாது. இங்கெ ... எனக்கு ஞானம் கொஞ்சம் போதாது. ஹரி, மோகன் இவங்களெக் கேக்கலாம். ஆனா அவங்க ரெண்டுபேருக்கும் வேற முக்கியமான வேலைகள் இருக்கலாம்.

rajam

unread,
Aug 30, 2011, 5:54:18 PM8/30/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

(இதுவே கும்போணம் துளிர் இளம்பச்சை வெற்றிலையாகவும், நெய்ச்சீவலாகவும், சிவபுரி ப்ரும்மபத்ர்அமாகவும், டீ.எஸ்.ஆர். வாசனை சுண்ணாம்பாகவும் இருந்துட்டாக்க...!

இ சார், இந்த இழையின் தொடக்கத்திற்கு இந்த என் இடுகை எந்த வகையில் குறுக்கிடுகிறதோ தெரியவில்லை. இழையின் பொருளுக்கு அப்பாற்பட்டதாயின், எல்லாரும் என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
ஒரே ஒரு படம் மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: புகையிலை, பாக்குச் சீவல் பற்றி -- அது தமிழ்கத்தில் எவ்வளவு ஊடூறி இருக்கிறது என்று தெரிவிக்க மட்டுமே ... 
1995 உலகத் தமிழ் மாநாடு, தஞ்சையில்.
யாரோ ஒருத்தி என்ற நிலையில்தான் போய்ப் பங்கெடுத்தேன். முதன் முதலாக .. தமிழ் இலக்கியங்களை மின்னாக்கம் செய்யும் முறையை நான் செய்துவந்ததைப்பற்றிச் சொன்னேன். சிலருக்கு மட்டும் புரிந்திருக்கலாம்.
சும்மா சொல்லக்கூடாது -- மிக அருமையாகவே, தேவையில்லாத பரபரப்பும் ஆடம்பரமும் இல்லாமல் நடந்தது அந்தத் தமிழ்க் கூட்டம். அதை என்றும் மறவேன்.
அந்த நாளில் ... சிறப்பு விருந்தினருக்கு என்று கொடுக்கப்பட்ட சில அரிய பொருட்களை இன்றுவரை காப்பாற்றி வைத்திருக்கிறேன் -- முதல்வர் திரு செல்வி ஜெயலலிதா படம் உள்ள கைக்கடிகாரத்துடன்!
அவற்றுள் ஒன்றின் படம் மட்டும் இங்கே (புகையிலை, பாக்குச் சீவல்):

முதல்வர் திரு செல்வி ஜெயலலிதா படம் போட்ட கைக்கடியாரம் பார்க்கணுமா? வேண்டுகோள் விடுக்க! :)

N. Kannan

unread,
Aug 30, 2011, 7:19:01 PM8/30/11
to mint...@googlegroups.com
2011/8/31 rajam <ra...@earthlink.net>:

> அவர் (அறவண அடிகள் + தாயர்) உணவு உண்ணுவதற்குத் தகுந்த நேரத்தில் உண்டபின் ...
> பச்சை இலைக் கற்றையும் ("வெற்றிலைக் கட்டு") பச்சைக் கற்பூரமும் படைக்கிறாள்.
>

உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று கண்ணீ உருகி

திருவாய்மொழி

shylaja

unread,
Aug 30, 2011, 7:22:11 PM8/30/11
to mint...@googlegroups.com

2011/8/30 N. Kannan <navan...@gmail.com>
நினச்சேன்  வெற்றிலை என்றதும்  இந்த திருவாய்மொழிவரிகள் உங்க கணினிவாயிலிருந்துவரும் என்று! வெற்றிலையைமட்டும்’தின்னும்;என்கிறார் ஆழ்வார் பெருமான் பாருங்கள்! அசைபோடுவதாலோ?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shylaja

unread,
Aug 30, 2011, 7:24:22 PM8/30/11
to mint...@googlegroups.com

2011/8/30 rajam <ra...@earthlink.net>

(இதுவே கும்போணம் துளிர் இளம்பச்சை வெற்றிலையாகவும், நெய்ச்சீவலாகவும், சிவபுரி ப்ரும்மபத்ர்அமாகவும், டீ.எஸ்.ஆர். வாசனை சுண்ணாம்பாகவும் இருந்துட்டாக்க...!
இ சார், இந்த இழையின் தொடக்கத்திற்கு இந்த என் இடுகை எந்த வகையில் குறுக்கிடுகிறதோ தெரியவில்லை. இழையின் பொருளுக்கு அப்பாற்பட்டதாயின், எல்லாரும் என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
ஒரே ஒரு படம் மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: புகையிலை, பாக்குச் சீவல் பற்றி -- அது தமிழ்கத்தில் எவ்வளவு ஊடூறி இருக்கிறது என்று தெரிவிக்க மட்டுமே ... 
1995 உலகத் தமிழ் மாநாடு, தஞ்சையில்.
யாரோ ஒருத்தி என்ற நிலையில்தான் போய்ப் பங்கெடுத்தேன். முதன் முதலாக .. தமிழ் இலக்கியங்களை மின்னாக்கம் செய்யும் முறையை நான் செய்துவந்ததைப்பற்றிச் சொன்னேன். சிலருக்கு மட்டும் புரிந்திருக்கலாம்.
சும்மா சொல்லக்கூடாது -- மிக அருமையாகவே, தேவையில்லாத பரபரப்பும் ஆடம்பரமும் இல்லாமல் நடந்தது அந்தத் தமிழ்க் கூட்டம். அதை என்றும் மறவேன்.
அந்த நாளில் ... சிறப்பு விருந்தினருக்கு என்று கொடுக்கப்பட்ட சில அரிய பொருட்களை இன்றுவரை காப்பாற்றி வைத்திருக்கிறேன் -- முதல்வர் திரு செல்வி ஜெயலலிதா படம் உள்ள கைக்கடிகாரத்துடன்!
அவற்றுள் ஒன்றின் படம் மட்டும் இங்கே (புகையிலை, பாக்குச் சீவல்):

முதல்வர் திரு செல்வி ஜெயலலிதா படம் போட்ட கைக்கடியாரம் பார்க்கணுமா? வேண்டுகோள் விடுக்க! :)

<<<<<<>வெத்திலைக்கு சீவல்தான் ஜோடி போலும்!!  ஜெயலலிதா படம் பார்க்கணுமே ராஜம்மா போடு்்க சீக்கிரமா.
அதோட வெத்திலைக்கு மங்களம் சொல்லிடலாம்
30 08 2011

--
 
cIvalpukaiyilai_1.JPG

N. Kannan

unread,
Aug 30, 2011, 7:59:19 PM8/30/11
to mint...@googlegroups.com
ஷைலூ

இதில் ஆச்சர்யம் என்னவெனில் வெற்றிலை என்பதை போகப்பொருள் என்று
சொல்கிறார் நம்மாழ்வார்.
ஆனால் அறவண அடிகளுக்கு வெற்றிலை கொடுத்ததாகச் சொல்லப்படுவது ஆச்சர்யம்.
மரியாதைக்கான தாம்பூலம் என்று கொள்ள வேண்டுமோ என்னவோ?

நா.கண்ணன்

2011/8/31 shylaja <shyl...@gmail.com>:>>

shylaja

unread,
Aug 30, 2011, 8:37:57 PM8/30/11
to mint...@googlegroups.com

2011/8/30 N. Kannan <navan...@gmail.com>

ஷைலூ

இதில் ஆச்சர்யம் என்னவெனில் வெற்றிலை என்பதை போகப்பொருள் என்று
சொல்கிறார் நம்மாழ்வார்.
ஆனால் அறவண அடிகளுக்கு வெற்றிலை கொடுத்ததாகச் சொல்லப்படுவது ஆச்சர்யம்.
மரியாதைக்கான தாம்பூலம் என்று கொள்ள வேண்டுமோ என்னவோ?

நா.கண்ணன்<<<<>>>
 
தெரியலயே   மோகனரங்கன்  இதற்கு  விளக்கம் அளிக்க நேரமிருந்தால் சொல்லுவார்.

2011/8/31 shylaja <shyl...@gmail.com>:>>
>> திருவாய்மொழி<<<<<<>>>
>
> நினச்சேன்  வெற்றிலை என்றதும்  இந்த திருவாய்மொழிவரிகள் உங்க
> கணினிவாயிலிருந்துவரும் என்று! வெற்றிலையைமட்டும்’தின்னும்;என்கிறார் ஆழ்வார்
> பெருமான் பாருங்கள்! அசைபோடுவதாலோ?
>>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Aug 31, 2011, 1:32:21 AM8/31/11
to mint...@googlegroups.com
எந்ததொரு இழையிலும் ராஜத்தின் இடுகை தாம்பூலமென்க. விருந்துக்கு நிறை தாம்பூலம். ஜாதிபத்ரியும் போனஸ். ராஜத்தின் இடுகையும் இலக்கிய போனஸ். கடிகாரத்துக்கு டைம் எப்போ வருமோ? தெரியவில்லை. ஷைலஜா. போகப்பொருளுக்கும், லாகிரி வஸ்துவுக்கும் வித்தியாசம் யாது?, கண்ணன்.
இன்னம்பூரான்
31 08 2011

shylaja

unread,
Aug 31, 2011, 6:59:48 AM8/31/11
to mint...@googlegroups.com

2011/8/31 Innamburan Innamburan <innam...@gmail.com>

எந்ததொரு இழையிலும் ராஜத்தின் இடுகை தாம்பூலமென்க. விருந்துக்கு நிறை தாம்பூலம். ஜாதிபத்ரியும் போனஸ். ராஜத்தின் இடுகையும் இலக்கிய போனஸ். கடிகாரத்துக்கு டைம் எப்போ வருமோ? தெரியவில்லை. ஷைலஜா.
 
<<<>>>>
 
ரொம்ப டைம் ஆச்சே  இ சார்! ஆனாலும் விடறதில்லை  வாட்சுமனா காத்திருக்கபோறேன்!
 
Innamburan Innamburan

unread,
Aug 31, 2011, 7:24:34 AM8/31/11
to mint...@googlegroups.com
யூ மீன் வாட்சுமனி

2011/8/31 shylaja <shyl...@gmail.com>
B05.gif

shylaja

unread,
Aug 31, 2011, 7:29:27 AM8/31/11
to mint...@googlegroups.com
;0;:):) யெஸ்!!

2011/8/31 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
B05.gif

rajam

unread,
Aug 31, 2011, 5:00:30 PM8/31/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan, shylaja
கொஞ்சம் லேட்டு, மன்னிச்சுக்கோங்க. இந்த இழையின் தொடக்க நோக்கத்திற்குத் தடையிருக்கவேண்டாம் என்று நினைத்து வேற இழையில் போட்டிருக்கிறேன். உங்களுக்கும் வந்து சேரும்.

On Aug 31, 2011, at 4:29 AM, shylaja wrote:

;0;:):) யெஸ்!!

2011/8/31 Innamburan Innamburan <innam...@gmail.com>
யூ மீன் வாட்சுமனி<B05.gif>

shylaja

unread,
Aug 31, 2011, 9:23:58 PM8/31/11
to rajam, mint...@googlegroups.com, Innamburan Innamburan
வந்துவிட்டது. மணியான அந்த அரியபொருள்!  அருமை!

2011/8/31 rajam <ra...@earthlink.net>
Reply all
Reply to author
Forward
0 new messages