மகாராட்டிரம், கர்நாடகம், கொங்குநாடு, ...
மின்சார பம்ப்செட்களும், அணைகளும்
அதிகமாகா முன்னர் புன்செய் தானியங்களே
மிகுதி. கம்பு, வரகு, சாமை, தினை, சோளம், ராகி (அரக்கு - சிவப்பு
என்னும் சொல் என்று நினைக்கிறேன்) புஞ்செய் வேளாண்மையே
மிகுதி.
எட்டு வகைக் கூலம்: "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரையொடு
கழைவிளை நெல்லே'' (சிலப். 5. 23. அடியார்க்கு நல்லார் மேற்கோள்).
கொங்குநாட்டாருக்கு
புஞ்சை தானியம் தெரியணுமே? சாமைச் சோறும், தயிரும் பற்றி பழமைபேசி,
கதிர், ஆரூரன், ...
எழுதிப் படிக்க ஆவல். கொங்கின் இறைவனுக்கு பள்ளியறை சாத்தும்போது
இன்றும் சாதுசாமி மடத்தில் இருந்து இராக்கால பூசைமுடிவில்
வள்ளிப் புனத்தின் தேனும் தினைமாவும் படைக்கப்படுகிறது.
தோரை - துவரை.
கழைவிளைநெல் - மூங்கிலரி.
இப்பொழுது வெள்ளை அரிசிக்குப் போய், உடலுழைப்பும் போக
சர்க்கரை, இரத்த அழுத்தம் மக்களை அழிக்கிறது.
அன்புடன்,
நா. கணேசன்
2010/11/2 N. Ganesan <naa.g...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Oct 30, 9:44 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> நான் அடிக்கடி millet என்ற
> தானியத்தைச் சமைத்துப்
> பிறருடனும் பகிர்ந்து
> உண்டிருக்கிறேன்.
>
> Millet விளக்கம் இங்கே பார்க்க:
>
> http://en.wikipedia.org/wiki/Millet
>
> http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=53
>
> இன்று திரு தாரகை அவர்கள்
> அதன் பெயர் "சாமை" என்று
> சொன்னார்கள்.
> அவர்க்கு என் நன்றி!
>
இந்த புஞ்சைக் கூலத்தின் பேர்: கம்பு.
ஆப்பிரிக்காவில் இருந்து 4000 ஆண்டுகளுக்கு
முன்னர் வந்த தானியம்.
http://en.wikipedia.org/wiki/Pearl_millet
நா. கணேசன்
நவதானியம்
நெல்
செய்முறை: கைகுத்தல் அரிசி சோறு/ கஞ்சி
வகைகள்: பெருநெல், மொட்டைநெல், கோட்டநெல்.......
கோதுமை
செய்முறை:சோறு /இரவை / கஞ்சி/கூழ்
வகைகள்:பெரிய கோதுமை, சம்பா கோதுமை, மொட்டைக் கோதுமை........
வரகு
செய்முறை:சோறு /கூழ்
வகைகள்:திரிவரகு, பனிவரகு, கொத்துவரகு.......
கேழ்வரகு(ராகி)
செய்முறை:ராகிக்களி / கஞ்சி/கூழ்
வகைகள்:பெரியராகி, சின்னராகி, சேந்துராகி, தூவல்ராகி, கருணசுரட்டை,
வெல்லசுரட்டை....
தினை
செய்முறை:சோறு /தினை உருண்டை
வகைகள்:கொரத்தினை, கருந்தினை, வெள்ளத்தினை.....
கம்பு
செய்முறை:களி / கஞ்சி/ கூழ்
வகைகள்:மலக்கம்பு, பொட்டுக்கம்பு, காட்டுக்கம்பு.......
சாமை
செய்முறை:களி /கூழ்
வகைகள்:வெள்ளச்சாமை, சம்பாச்சாமை, கொத்துச்சாமை, கருணச்சாமை.....
எள்ளு
செய்முறை:உருண்டை
வகைகள்:காட்டு எள்ளு, பொடி எள்ளு ................
கொள்ளு
செய்முறை:பள்ளயம்(அவியல்)
வகைகள்:மலக்கொள்ளு, நாட்டுக்கொள்ளு, செங்கொள்ளு.....
http://maniyinpakkam.blogspot.com/2008/06/blog-post_08.html
சாமை சோத்துக்கு எருமைத் தயிர்
இராகிக் களியும் கீரையும்
தினஞ்சோறுக்கு தெவரம்பருப்பும் கத்திரிக்காயும்
வரகுச் சோறும் கொள்ளுப்பருப்பும்
கம்பஞ்சோறும் காடைக்கறியும்
கோதும்பி இரவையும் இரசதாளிப்பழமும்
எனப் பட்டியல் நீளும்.... பிறிதொரு நாளில் எழுதுவமுங் அண்ணா... வேலையில
இருக்கிறேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil