அந்த செய்திற்கு "விடுதலை" கொடுத்துள்ள விளக்கம் விஷமத்தனமானது. ஆகவே
உண்மை அறிய -
இதில் சொல்லப்பட்டுள்ள தீர்ப்புகளின் முழு விவரம் என்ன?
அந்த தீர்ப்பு பிரதிகள் யாரிடமாவது உள்ளதா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வடகலை, தென்கலை சண்டை: இதோ ஒரு தீர்ப்பு
மன்னார்குடி சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் திரு.வி. பொன்னுசாமிப் பிள்ளை
வடுவூர் வழக்கு என்று பிரசித்தி பெற்ற வழக்கில் தீர்ப்புக் கூறினார்.
இவ்வடு-வூர் மன்னார்குடியிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. இவ்வூரில்
வாழும் அய்யங்கார் எனப்படும் வகுப்பினரில் வைணவ மதத்தின் இரு
பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். உள்ளூர்ப் பெருமாள்
கோயிலின் தர்மகர்த்தா தென்கலைப் பிரிவைச் சேர்ந்தவர். கோயிலில் திருவிழா
நடைபெற்றது. உற்சவ விக்கிர-கம் வழக்கமான ஆள், அம்புகளுடன் ஊர்வலமாக
எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட புனிதப் பெருமாள்களுக்குச் சேதம்
விளைவித்ததாகவும் தர்மகர்த்தாவைத் தடுத்ததாகவும் வடகலைப் பிரிவைச்
சேர்ந்த 16 பேர் மீது நீடாமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் மன்னார்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.
வடகலையினரின் குற்றச்சாட்டு
குற்றச்சாட்டு இதுதான் - கோயிலில் வணங்கப்படும் சிலைகளில் மணவாளசாமி
என்னும் வைணவ முனிபுங்க-வரின் சிலையும் ஒன்று. இந்தச் சிலை ஊர்வலமாகத்
திருவிழாவின்போது எடுத்துச் செல்லப் பட்டது. ஊர்வலம் தென்கலைச்
சம்பிரதாயப்படி நடத்-தப்-பட்டது. இதை வடகலையினர் எதிர்த்தனர். வட-கலைச்
சம்பிரதாயப்படியே விழா நடத்தப் பட்டிருக்க வேண்டும், ஊர்வலம் எழுந்தருளப்
பண்ணியிருக்க-வேண்டும் என்பது வடகலையினரின் வாதம்.
வடகலையினர்க்கே உரிமை
போலீஸ் தரப்புச் சாட்சிகளை விசாரணை செய்த பின் அறிவார்ந்த நீதிபதி
வழக்கைத் தள்ளுபடி செய்தார். தமது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டதாவது:
தென்கலையினருக்கு மணவாளசாமியின் சிலையைத் தென்கலைச் சம்பிரதாயப்படி
ஊர்வலமாக எழுந்-தருளப் பண்ணி எடுத்துச் செல்ல எந்த உரிமையும் கிடையாது.
இப்படிச் செய்தது, நன்கு நிலைபெற்ற சம்பிர-தாய பழக்கத்துக்கு முரண்பட்ட
செயலாகும். சிவில் கோர்ட்டுகளின் முந்திய தீர்ப்புகளுக்கும் இது
முரணானதாகும். கோயிலினுள்ளே மணவாளசாமி வடகலைச்
சடங்காச்சாரங்களுக்கிணங்கவே வழிபாடு செய்யப்படுகிறார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் செய்ததாகக் கூறப்பட்ட புகார்களை நிறுவிக்
காட்டுவதற்குப் போதிய சான்று-களும் இல்லை. எனவே, குற்றஞ்
சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுகிறேன்.
-இந்தச் செய்தியைப் படிக்கும் நமது வாசகர்கள் அனைவருக்கும் தென்னிந்திய
மதப் பழக்க வழக்கங்களின் நுட்பங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. எனவே,
இத்கைய வாசகர்களுக்காக கீழ்க்காணும் விளக்கத்தை வெளியிடுகிறோம்.
பிளவுபடுத்தும் கோடு
இந்து மதத்தின் பெருங்கடவுளர் மூவர். இவர்களுள் ஒருவர் விஷ்ணு. இந்த
விஷ்ணுவைக் கும்பிடுகிற-வர்கள் வைஷ்ணவர்கள். வைஷ்ணவ பக்தர்களை வழி
நடத்தும் பார்ப்பனப் பூசாரிகள் அய்யங்கார்கள் எனப்படுவார்கள்.
இந்துக்களில் ஏறத்தாழ பாதிப்பேர் வைஷ்ணவர்களே. மற்ற இந்து மதப்
பிரிவுகளிலிருந்து வைஷ்ணவர்-களைத் தனிமைப்படுத்திக் காட்டுவது அவர்கள்
தங்கள் நெற்றியில் அணியும் மதக்குறி. இந்தக் குறியின் பெயர் நாமம்
என்பது.
லிங்கத்துக்குப் போட்டி - நாமம்
நாமக்குறியின் உட்பொருள் சிருஷ்டி தத்துவம்தான். சைவர்களின்
லிங்கத்துக்கு இணையான வைணவக் குறியே நாமம். சைவர்கள் என்பவர்கள் சிவன்
என்னும் இந்துக் கடவுளை வழிபடுபவர்கள். சிவன் இந்துக்களின் முப்பெரும்
கடவுள்களில் இன்னொரு கடவுள். லிங்க வழிபாடு என்பது பிறப்பு உறுப்பு
வழிபாடாகும்.
நெற்றியில் செங்குத்தான இரண்டு வெள்ளைக் கோடுகள்; இந்த இரண்டுக்கும்
இடையே ஒரு சிவப்புக்-கோடு - இதுதான் நாமம்! இரண்டு வெள்ளைக் கோடு-களும்
மகாவிஷ்ணுவின் தொடைகளைக் குறிக்கும். மத்தியில் உள்ள சிவப்புக் கோடு
சிருஷ்டி தத்துவத்தைக் குறிக்கும். (அதாவது தொடைகள் இரண்டுக்கும் இடையிலே
தொங்கும் உறுப்பு - ஆண்குறி).
வடகலை, தென்கலையைப் பிரிப்பது எது?
வைணவர்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை ஒன்றுக்கு ஒன்று எதிரும்
புதிருமானவை. இவர்-களை ஒருவரிலிருந்து மற்றவரைப் பிரித்து அறிந்து
கொள்வது எப்படி? இவர்கள் நாமம் தீட்டிக் கொள்ளும் விதத்தின்
அடிப்படையில்தான் - அதாவது நாமத்தின் இரண்டு வெள்ளைக் கோடுகளையும் எப்படி
இணைப்-பது என்பதில்தான்!
வடகலையினர் எனப்படுவோர் இரண்டு வெள்ளைக் கோடுகளையும் இணைக்கப் பரவளைவு
ஒன்றினைத் தீட்டுகிறார்கள். தென்கலையினரோ இதற்குக் கீழே தனியான ஒரு
தாங்கு காலைத் தங்கள் மூக்கின் மீதுவரைந்து கொள்கிறார்கள்.
கொட்டப்பட்ட குருதி கொஞ்சமா நஞ்சமா?
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுகளாகத் தென் கலையினரும்
வடகலையினரும் தங்களுக்குள் கலகம் செய்து வருகிறார்கள். மதவெறி பிடித்த
இவர்-களது உற்சாகம் காரணமாக தென்னகத்தின் வரலாற்றில் கொட்டப்பட்ட
குருதிக்குக் கணக்கே இல்லை.
குருதி கொட்டும் இந்துக் கலகங்களை விட மோசமானது இவர்கள் பெரும் பணம்
செலவிட்டு நீதிமன்றங்களில் நடத்தியிருக்கும் வழக்குகள்தாம். இந்த
வழக்குகளின் பயன் என்ன? வழக்குரைஞர்களுக்கு நல்ல சம்பாத்தியம்;
அய்ரோப்பிய நீதிபதிகளுக்கு நல்ல தமாஷ் பொதுமக்களுக்கோ ஓயாத தலை வேதனை!
மாஜிஸ்டிரேட் செய்திருக்க வேண்டியது என்ன?
மன்னார்குடி சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் இந்தக் குறிப்பிட்ட வழக்கில்
வடகலையினருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறியிருக்கிறார். ஆனால், ஊரில்
அமைதி நிலவ வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட ஒரு நீதிபதி என்ன செய்திருக்க
வேண்டும் - என்ன செய்திருப்பார்?
இரண்டு தரப்பினரையும் கட்டுப்படுத்தி இருப்பார். தற்குறிப்பிண்டங்களான
மக்களின் கீழ்த் தரமான உணர்ச்சிகளைக் கிண்டிக் கிளறித் தீ மூட்டி அனல்
கக்கச் செய்யவல்ல கேடுகெட்ட சாமிச் சிலைகளை எழுந்தருளச் செய்யும்
ஊர்வலத்துக்கே தடையல்லவா விதித்திருப்பார் - விதித்திருக்க வேண்டும்.
மன்னார்குடி மாஜிஸ்திரேட் இவ்வாறு செய்யாமல் தவறிவிட்டது ஏன்? அவர்
தம்மைப் பொறுத்த-மட்டி-லும் இவ்வாறு செய்யக்கூடிய மனவெழுச்சி படைத்-
தவர்தான். ஆனால் ஓட்டை உடைசலான சட்டங்-கள்தாம் அவரது கையைக் கட்டிப்
போட்டிருக்கும்.
பிரிட்டிஷாரின் நடைமுறை
பிரிட்டிஷ் நிருவாகிகள் கையாண்டு வரும் நடைமுறைதான் என்ன? பூசாரிக்குலம்
மக்கள் மீது பிடித்திருக்கும் பிடியை மேலும் இறுகச் செய்யும்படி அல்லவா
பிரிட்டிஷ் நிருவாகிகளின் நடைமுறை அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட
கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கு அவர்கள் காட்டும் காரணம் என்ன? மத
விவகாரங்களில் நடுநிலையைக் கடைப் பிடிக்கும் கொள்கையும் நினைவுக்கெட்டாத
காலம் தொட்டு நிலவி வரும் மக்களின் பழக்க வழக்கங்கள் அப்படியே போற்றிக்
காக்க வேண்டும என்னும் கொள்கையும் அல்லவா காரணம்!
மன்னார்குடியிலே நடைபெற்றதாகக் கூறப்படுவது போன்ற காட்டுமிராண்டித்தனமான
காரியங்களில் தன்னையொத்த இந்துச் சோதரர்கள் ஈடுபட்டு அவற்றை வெளிச்சம்
போட்டுக் காட்டிக் கொள்வதைக் கண்டு இந்து ஒவ்வொருவனும் - துளியத்தனை
சுயமரியாதையுள்ள இந்து ஒவ்வொருவனும் வெட்கித் தலை குனிய
வேண்டியதிருக்கிறதே!
சுயமரியாதை உணர்ச்சி படைத்த இந்துக்கள் இந்தச் சட்டங்களை மாற்றியமைக்க
வேண்டும் என்று கோரிப் போராடுவதற்காகக் கச்சை வரிந்து கட்டி, களங்காண
உடனே கிளம்புவார்கள்என்று நம்புவோமாக! மாற்றியமைக்கப்பட்ட புதிய
சட்டங்கள் இத்தகைய மத மவுடீகங்களைத் தண்டனைக்குரியவை-களாக ஆக்கும். இல்லை
யென்றால், இந்த மத மவுடீகங்கள் இந்நாட்டின் பெருமை மிக்க பெயரைப்
புதைச்சேற்றுக்குள்ளே இழுத்துப் போட்டு அமுக்கி விடாதா?
நன்றி: ‘‘மெயில்’’ - 26-2-1929)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் வலையுலகை உலாவினால் தினம் தினம் வருத்தப்பட வேண்டி வரும்.. :-)
எனவே தான், நான் வலைப்பதிவுகளை படிப்பதில்லை. தமிழ்மணம் பக்கமும்
தலைவைத்து கூட படுப்பதில்லை !!
மின் தமிழோடு நிறுத்திக்கொள்கிறேன்.
பொதுவாக தமிழ் வலையுலகில் பரவியிருக்கும் விஷமும்.. துவேஷமும்.. நேரடியாக
கூட எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள் ... ஹ்ம்ம்ம்ம்
V
On Nov 8, 6:49 pm, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> நாமத்திற்கு (திருமண்) இப்படி ஒரு விளக்கத்தை என் ஆயுளில் கேட்டதில்லை.
>
> முதன்முறையாக ஏன் இணையத்திற்கு வந்தோம் என வருத்தப்படுகிறேன். இதெல்லாம் படிக்க
> நேர்வதே, அப்படி யோசிக்கக் காரணம்.
>
> அந்த பத்திரிகையில் எழுதியவர் கொஞ்சமாவது நாமம் என்றால் என்னவென்று விசாரித்து
> விட்டாவது எழுதியிருக்க கூடாதா?
>
> என் சிற்றறிவுக்கு தெரிந்தவரை, திருமண் இரண்டும் நாராயணரின் பாதங்கள்;(தொடைகள்
> அல்ல). நடுவே இருக்கும் ஸ்ரீசூர்ணம் பெயரிலேயே தெரிவது போல் பாதத்திடையிலே
> இருக்கும் மஹாலக்ஷ்மியைக் குறிக்கும்.
>
> விமர்சிப்பதோ, நையாண்டி செய்வதோ தவறில்லை. சரியாக விசாரித்து விட்டு அதை
> செய்யக்கூடாதா?
>
> 2009/11/8 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
> > என்னும் இந்துக் கடவுளை வழிபடுபவர்கள். சிவன்...
>
> read more »
’கேசவ’ முதலான பன்னிரண்டு திரு நாமங்களை உச்சரித்து அணிந்து கொண்டு,
பின்னர் அப்பன்னிரு இடங்களையும் கரம் குவித்துத் தொழும் மரபும்
உள்ளது.அப்பழக்கத்தால் அதற்கு நாமம் என்றே கூறும் வழக்கமும் தோன்றியது.
மனம் போனபடி எழுதுவது நாகரிகம் ஆகாது.
தேவ்
இந்த விடுதலை கட்டுரை 80 வருடம் முன்னாடி வந்தது. இதன் கற்பனைகளை சுலமாக
காட்டிவிடலாம். ஆனால் 80 வருட பழைய குப்பைகளை கிளறி ஒரு பயனும் இல்லை.
வடகலை-தென்கலை வேற்றுமைகள் என்ன என்று வைணவ தளமே சொல்லட்டும்.
http://sriramanujar.tripod.com/tVsv.html
விஜயராகவன்
On 8 Nov, 12:29, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
> இன்றைய "விடுதலை"யில் [08-11-2009], பக்கம்.2ல், கீழ்காணும் பழைய செய்தி
> பிரசுரிக்கப் பட்டுள்ளது.
>
> அந்த செய்திற்கு "விடுதலை" கொடுத்துள்ள விளக்கம் விஷமத்தனமானது. ஆகவே
> உண்மை அறிய -
> இதில் சொல்லப்பட்டுள்ள தீர்ப்புகளின் முழு விவரம் என்ன?
> அந்த தீர்ப்பு பிரதிகள் யாரிடமாவது உள்ளதா?
>
> ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
> கொள்வது எப்படி? இவர்கள் நாமம் தீட்டிக் கொள்ளும் விதத்தின் ...
>
> read more »
என்னாலும் வாசிக்க முடியவில்லை. கூசுகிறது.
இன்வேடிங் தி சேக்ரட் என்று ரங்கன் வெள்ளையரை ஏன் குற்றம் சொல்ல
வேண்டும். இவர்கள் பண்ணும் அநியாயத்திற்கு தண்டனையே இல்லையா?
உண்மையில் தொடர்ந்து விடுதலைப் பத்திரிக்கையிலிருந்து விவகாரமான
விஷயங்களை வேதப்பிரகாஷ் ஏன் இங்கு வெளியிடுகிறார் என்று தெரியவில்லை.
தமிழ் மரபு அறக்கட்டளை மரபின் சிறப்பைச் சொல்ல வந்திருக்கும் அமைப்பு.
அங்கு போய் இப்படி சாரமில்லாத, ரசமில்லாத விஷயங்களை ஏன் போடவேண்டும்?
நான் மீண்டும், மீண்டும் சொல்வது இந்த மின்னரங்கம் நம் மனதுதான். நம்
மனதில் சத் விஷயங்களைப்பற்றிப் பேசப்பேச நிர்மலமாகி, ஆனந்தம் பிறக்கும்.
வேண்டாத குப்பைகளை இங்கு கொண்டுவந்து ஏன் கொட்ட வேண்டும்? இதுவொரு
சந்நிதானம் என்று கொள்க.
காணச்சகிக்காத எழுத்தும், கேட்கச் சகிக்காத பேச்சும் இங்கு எதற்கு?
நாம் அரசியல் இங்கு பேசுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். இந்த
வம்பான அரசியல் இங்கெதற்கு?
மட்டுறுத்த வேண்டாமே என்று பார்த்தேன்.
ராம, ராமா!
க.>
தூங்குபவனைத்தான் எழுப்பமுடியும்!
தூங்குவது போல் பாவனை செய்பவனை எழுப்பமுடியாது!
இது அரசியல்! வேண்டுமென்று தூண்டுவது! இவர்களுக்கு விளக்கம் சொல்லப்போன
வாரியாரை இவர்கள் அடிக்கவில்லையா?
அறிவிற்கு மதிப்புக் கொடுப்பவர்கள் அல்ல. அடிதடிக்கு, அகௌரவத்திற்கு
மதிப்புக் கொடுப்போர்.
துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்பது முதுமொழி.
ஏனெனில் இவர்களுடன் சண்டை போட்டு நமது பழைய விலங்கியல் வாசனைகளை
கிளறிவிடுவதாக ஆகிவிடும்.
எத்தனையோ ஜென்மங்களுக்குப் பிறகுதான் ஒரு சத்சங்கம் வாய்க்கிறது.
அதைப் பூரணமாக அனுபவிக்கமுடியாமல் செய்யும் இந்த ஒப்பாரிகளை நாம் ஏன்
கேட்க வேண்டும்?
இங்குள்ள அறிஞர்களுக்கு இவையெல்லாம் தெரியாதா? நாம் யாருக்கு பதில்
சொல்லிக்கொண்டு இருக்கிறோம்?
மின்தமிழ் நண்பர்களுக்கா, இல்லை விடுதலை பத்திரிக்கைக்கா?
மின்தமிழ் விடுதலை இயக்கத்தின் 'எதிர் பாசறை' அல்ல.
"எமக்குத்தொழில் கவிதை இமைப்பொழுதும் சோறாதிருத்தல்"
எனும் போது கிடைக்கும் ஆனந்தம் இவர்களுக்கு பதில் சொல்லிக்
கொண்டிருப்பதில் கிடைக்குமா? என யோசிக்க வேண்டும்!
கண்ணன்
2009/11/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
This is not the platform for it!
It's a waste of our professional time to spend on such silly issues.
இங்கு யாரும் சும்மா உட்கார்ந்துகொண்டு ஈ ஆட்டிக்கொண்டு இருக்கவில்லை.
பொழுது போகாதவர்களின் போக்கிடம் சாக்கடை!
க.>