நண்பர்களுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இணையத்திலும் வடக்கு வாசல் இதழிலும் டெல்லித் தமிழ்ப் பள்ளிகள் பற்றிய என் கட்டுரை மற்றும் டெல்லி கல்வி அமைச்சகத்துக்கு எதிராக நான் திட்டமிட்டிருக்கும் பொதுநல வழக்கு குறித்தும் நிறைய தொலைபேசிகள் வரத் துவங்கி விட்டன. டெல்லியின் மிகப் பெரிய வழக்கறிஞர்கள் கூட தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். இந்த வழக்கை இலவசமாக நடத்தித் தருவதற்கு முன்வந்திருக்கிறார்கள்.
ஒரு நியாயமான இடத்துக்குப் போய் நிற்கும் நாள் வெகு அருகில் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
--
http://www.vadakkuvaasal.com/
ஒரு சினிமாவில் பார்த்த ஞாபகம். வடிவேலு செமத்தியாக அடி வாங்கிக் கொண்டு ஒரு மதகின் மீது உட்கார்ந்திருப்பார். அந்தப் பக்கமாகப் போகும் ஒருவன் அடி வாங்கின நம்ம கைப்பிள்ளையே ரத்த களரியா இருக்கறப்போ இவன் கிட்டே அடிவாங்கினவன் கதி என்ன ஆகி இருக்கும்? என்று.
வடிவேலு பரிதாபமாகக் கதறுவார். டேய்... ஏண்டா இப்படி பில்டப் கொடுத்து உசுப்பேத்தியே என்னிய அடி வாங்க விடுறீங்க... என்று
அந்த நிலையில் நான்.
அந்த மதகைத் தாண்டிச் செல்லும் ஆளின் நிலையில் கமலம் அம்மையார்.
மேடம். வீரம் எல்லாம் இல்லை. எங்கள் ஊரில் இதை வெட்கம் கெட்ட தனம் என்று சொல்வார்கள். இதற்காக என் மீது என்னவெல்லாம் பழி சுமத்துகிறார்கள் - எப்படி எல்லாம் என்னை அமைதியாக்க விரும்புகிறார்கள் என்பது இங்கே டெல்லிக்கு வந்து பார்த்தீர்கள் என்றால் தெரியும்.
என் நல்ல நேரம். இதுவரை ஏதோ ஆரோக்கியமாக நடமாடிக் கொண்டு இருக்கிறேன்.
ஆனால் இந்தத் தடவை கண்டிப்பாக ஏதாவது நல்லது நடந்தே தீரும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
என் பக்கம் நிறைய பேர் சேர்ந்து விட்டார்கள் இப்போது.
எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை பராசக்தி அருள் புரிந்து வருகிறாள்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
நேற்று தஞ்சை- கும்பகோணம் அய்யம்பேட்டை வழியாக போனேன். உங்களை நினைத்துக்கொண்டேன்!
திவாஜி
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
என் பாக்கியம். திவாஜி நினைவில் நான் நின்றது.
இப்போது அமைதியாக இருக்கிறேன் பார்த்தீர்களா? சந்தைப் பேட்டைப் பக்கமாக இன்னும் யாரும் போகவில்லை.
பென்னேஸ்வரன்