> 2009/8/12 devoo <rde...@gmail.com>:
> > ஆழிப்படைக்கு - ஸுதர்சனருக்கு
> > ‘எண் தள அம்புயத்தில் இலங்கும் அறுகோண மிசை
> > வெண் பணிலம் , திகிரி.....’ முதலான ஆயுதங்களுடன்
> > தேவ வடிவம் கொடுத்து வழிபடும் முறை இன்றளவும் உள்ளது.
> > அரனாரின் படையான திரிசூலத்திற்கும் இத்தகைய வழிபாடு
> > இருந்திருக்கக் கூடும்.
> மிகச்சரியான அணுகல். பெரும்பாலனவற்றிற்கு விடை வைணவ
> மரபில் இருப்பது மீண்டும் அதன் தொன்மையை நிலை நிறுத்துவதாக உள்ளது.
> அறவாழி அந்தணன்
> ஆழிப்படை அந்தணன்
> என்று வள்ளுவமும், அதற்கு முந்திய தமிழக இலக்கியங்களும் பேசும்
> அறவாழி அந்தணன் யார் என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார்
> விடை பகர்கிறார்.
> மேலும் கற்க:
> http://thirumozi.blogspot.com/2007/08/074.html
திருமூலர் அறவாழி பற்றிப் பேசுகிறார்:
பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந்தானே! - திருமந்திரம் - 1803
---------------------
நம்மாழ்வார் திருவாய்மொழியில் பெருமாளின்
சக்கராயுதத்தை “தரும சக்கரம்” என்பதில்லை.
அது பெருமாளின் படை ஆயுதம் என்கிறார்.
இதனை முக்கியமாய் அவதானிக்கவேண்டும்.
பிறவித் துயர்அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக்கம்தலைப் பெய்வார்
அறவனை, *ஆழிப் படை* அந்தணனை
மறவியை இன்றி மனத்துவைப் பாரே (1.7.1)
அறவாழி அந்தணன் யார்?
மயிலை சீனி. வேங்கடசாமி
http://www.treasurehouseofagathiyar.net/27800/27809.htm
”ஆழிப்படையையுடைய திருமால் அறவாழி அந்தணன் அல்லரோ எனின், அல்லர்.
அவர் மறவாழியை யுடையவராகலின் அறவாழி அந்தணன் ஆகார். என்னை?
திருமாலின் திருத்தொண்டர்களான ஆழ்வார்கள் எல்லோரும், அவரை அறவழி
அந்தணன் என்று கூறாமல் மறவாழிப் படையான் என்றே கூறியுள்ளனர்.
"அடலாழி ஏந்தி அசுரர் வன்குலம் வேர் மறுங்கறுத்தாய்" என்றும்,
"அமர்கொள் ஆழி" என்றும்
"காய்சின ஆழி" என்றும்
"கொலை ஆழி" என்றும்
"கூர் ஆழி" என்றும்
"கனலாழிப் படையுடையவன்" என்றும்
"பேராழி கொண்ட பிரான்" என்றும்,
"ஊன் திகழ் நேமி" என்றும்,
"ஈர்க்கின்ற சக்கரத் தெம்மான்" என்றும் திருமாலின் ஆழி(சக்கரம்)
மறவாழி என்றே ஆழ்வார்கள் கூறியிருப்பதை அவர்கள் பாடல்களிலே நெடுகக்
கானலாம். ஆகவே, அறவாழி அந்தணன் என்னும் பெயர் திருமாலுக்கும்
பொருந்தாது. ”
நா. கணேசன்
> நான் பாசுர மடல்கள் தொடங்கி காலத்தில் மலேசிய அறிஞர் கி.லோகநாதன்
> பெருமாளின் பஞ்சாயுதங்கள் பற்றி எழுதுங்கள் என்று அடிக்கடி சொல்லுவார்.
> அவர் உளவியல் அறிஞர். ஆயுதங்கள்தான் பௌத்த மதத்தில் யந்திரங்களாக
> உருப்பெறுகின்றன. மனித பரிமாணத்தின் உயர்நிலைக்குத் தள்ளும் கற்றளிகள்
> அவை.
> இன்னொரு உதாரணத்தையும் தேவ் சொல்லும் கருத்திற்கு பலமாகச்
> சொல்லலாம். பெருமாளின் ஆயுதங்களும், ஆபரணங்களுமே புவியில்
> ஆழ்வார்களாக பிறப்பதாக மரபு. ஆழ்வார்கள்தானே அக்கற்றளிகள்?
> அவர்கள் இல்லையேல் பெருமாள் பற்றி
> நமக்கென்ன தெரியும்? (புருஷாகார தத்துவங்களும் கூட)
> எனவே ஆயுதங்கள் என்பவை பயமுறுத்த நிற்பவை அல்ல. அவை
> இறைப்பேச்சில் `நெம்புகோல்கள்`!! அவைதான் நம் ஆதார சக்கரங்களை
> ஒவ்வொரு தளத்திற்கும் நகர்த்தும் நெம்புகோல்கள். எனவேதான்
> கி.லோகநாதன் அதனைக் `கற்றளி` என்ற
> அழகான பதத்தால் சுட்டுகிறார்.
> அது துவாரபாலகராக இருந்தாலும், திரிசூலராக இருந்தாலும் நம் `மலங்களை`
> சந்நிதியில் நுழையும் முன் களைந்து நிர்மலன் சபைக்கு நம்மைத்
> தயார்படுத்தும் புண்ணியவான்கள். எனவேதேன் நாம் நிலைப்படியில் காலை
> வைப்பதில்லை.
> க.>
*அறவாழி அந்தணன் என்னும் பெயர் திருமாலுக்கும் பொருந்தாது.*
அசுரர் வன்குலம் வேர் மறுங்கறுப்பதற்காகவே ஆழிப்படை காய்சின ஆழியாகவும்,
கொலை ஆழியாகவும், கூர் ஆழியாகவும், கனலாழியாகவும், ஊன் திகழ்வதாகவும்
விளங்குகிறது.
பகைவர் கண்களுக்கு அது படைக்கலம்; அடியார் கண்களுக்கு அது ஓர் அணிகலன்.
மறக்கருணை பற்றி நீங்கள் நன்கறிவீர்கள்.மறச்செயலும் ஒரு கருணையே,
மருத்துவர் செய்யும் அறுவைச் சிகிச்சை போல .
’திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும்’
என்பதை ஒப்புக் கொண்ட நீங்கள் உபய விபூதியின் ஏக நாயகனான நாரணனுக்கு
ந்ருப ஸாம்யம் கொடுக்கத் தயங்குவது ஏன் என்பது புரியவில்லை. மறத்தொழில்
மாந்தரைக் காப்பதற்கு அங்கம்தானே ?
அறத்தை வாழ்விக்கவே அது மறவாழியாக ஒளிர்கிறது.
‘உறகல் உறகல் உறகல் , ஒண் சுடராழியே ....’என
ஆழ்வார்களும் அதற்குக் கடமையை உணர்த்துகின்றனர்.
’ந தே ரூபம் ந சாகாரம் ...’ என்று தொடங்கும் ஜிதந்தே ஸ்தோத்ரம்
ஊனிடை ஆழி உத்தமனின் உண்மை நிலையைப் பேசும்.
இப்பெயர் அவனுக்குப் பொருந்தாமல் வேறு யாருக்குப் பொருந்தும் ?
தேவ்
On Aug 12, 2:09 pm, devoo <rde...@gmail.com> wrote:
> Aug 12, 5:09 pm, "N. Ganesan"
>
> *அறவாழி அந்தணன் என்னும் பெயர் திருமாலுக்கும் பொருந்தாது.*
>
கூறுவது மயிலை. சீனி. வேங்கடசாமி.
"அறவாழி அந்தணன்" என்கிறது குறள்.
சற்றே மாற்றி இருக்கிறார் நம்மாழ்வார்.
மறஆழி.
கணேசன்:
தேவின் கேள்வி முக்கியமானது.
மயிலை சீனி.வேங்கிடசாமி போன்ற பெரியோர்கள் நம்மை எச்சரிப்பது ஒரு
காரணத்திற்காக. இந்து தர்மம் எனும் பேராற்று வெள்ளத்தில் சமணம், புத்தம்
போன்ற நெறிகள் அடையாளம் தெரியாமல் அடித்துச் செல்லப்படுகின்றன எனச் சொல்ல
வருகிறார். அது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே. ஜைன, புத்தக்
குறியீடுகள், அவர்களின் தந்திர/யந்திர முறைகள், வழிபாடுகள் இவைகளைப்
பின்னால் சைவமும், வைணவமும் உள்வாங்கிக் கொண்டன என்பதும் உண்மைதான்.
ஆனால் இந்நெறிகளுக்கு முற்பட்டதாக பன்னெடும் காலமாக இந்தியப்
பெருவெளியில் வேதம் நிற்கிறதே. அங்குள்ள தத்துவ விசாரங்களின்
நீட்சியாகத்தானே (இது எதிர்குரலாக, விமர்சனமாக, போர்க்குரலாக இருக்கலாம்)
ஜைனமும், பௌத்தமும் வருகின்றன. இதனால்தானே ‘கடவுள் இல்லை’ என்று
சித்தார்த்தன் சொல்லவில்லை. மௌனம் சாதித்தான். நம் தட்சிணாமூர்த்தி
போதித்தது போல் இறைவனை வாய்மொழியில் வருணித்துவிடமுடியுமா? என்ன?
எனவே வேதம் என்ன சொல்கிறது எனப்பார்க்க வேண்டும். மயிலையாருக்கு எவ்வளவு
வேதப்பரிட்சயம் உண்டு என்று தெரியவில்லை. ஆனால் நான்கு வேதமும் கற்ற
ஆன்றோர், |வேதம் தமிழ் செய்த மாறன்| என்று சடகோபனைச் சொல்கின்றனர் எனில்,
திருவாய்மொழி வேதம்தானே? அங்குதானே அறவாழி அந்தணன் யார் என்று விளக்கம்
கிடைக்கும்? அதில் நமக்கு சம்சயம் வரலாமா? சடகோபன் வார்த்தைகளில்
விளையாடுபவர் அல்லவே. திருவாய்மொழிக்கு தமிழ்ப்பெரியோர் இட்ட பெயர்
‘பகவத் விஷயம்’ என்பது. அங்கு ஒரு சொல்கூட அனாவசியமாக பிற விஷயம் பேசாது
என்பது பொருள். அப்படி இருக்கும் போது அறவாழி அந்தணன் எனும் பதத்தை
சடகோபன் மேலோட்டமாக பிரயோகித்து இருக்க வாய்ப்பில்லை! திருமூலரையும்
(உங்கள் மேற்கோள்) அவ்வாறே காண்கிறேன். இருவரும் ஒரு மெய்பொருளைப்
பற்றித்தான் பேசுகின்றனர்.
க.>
On Aug 12, 5:45 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அப்படி இருக்கும் போது அறவாழி அந்தணன் எனும் பதத்தை
> சடகோபன் மேலோட்டமாக பிரயோகித்து இருக்க வாய்ப்பில்லை!
நம்மாழ்வார் ‘அறவாழி அந்தணன்’ என்னும் பதத்தைப் பிரயோகிக்கவில்லை.
---------
தர்மச் சக்கரம் தீர்த்தங்கரர்களின், புத்தரின் சின்னமாக இந்தியாவில்
முதலிலே வருகிறது.
ஆதியில் பெருமாளின் சக்கரம் பூமெராங் (வளரி, வளைதடி).
பிறகுதான் ஆழி ஆகிறது. (பார்க்க: நந்திதா கிருஷ்ணாவின்
விஷ்ணு iconography book). கம்பனிலும் விஷ்ணு கையில்
இருப்பது வளரி (boomerang) என்ற குறிப்பு உள்ளதாய்
நந்திதா (சி. பி. ராமசாமி ஐயர் பேர்த்தி) குறிப்பிடுகிறார்
அவர் முனைவர் ஆய்வேட்டு நூலில்.
நா. கணேசன்
இதனால்தான் ஐராவதம், க.நா.சு., சுவலெபில் போன்றோர் அருகக்கடவுளைக்
குறிக்கும் குறள்கள் இவை என்பர்.
http://www.treasurehouseofagathiyar.net/27800/27809.htm
ஜைனரின்
அருகக் கடவுள், அறவாழியை(தரும சக்கரத்தை) உடையவர் என்று அவர்களின்
நூல்கள் கூறுகின்றன.
அவற்றில் சிலவற்றை ஈண்டுக்காட்டுவோம்.
"ஆதியங் கடவுள் அறவாழி அந்தணன்
அரியணைச் செல்வன் அருளாழி வேந்தன்.." என்பது திவாகரம்.
"அருகன் எண்குணன் நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்.." என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது.
"அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்" என்று பிங்கல நிகண்டு பேசுகிறது.
**"மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே"
(திருக்கலம்பகம், 25)
**:--> இப்பாடலை சிந்தை செலுத்திப் படிக்க சிந்தை விரியும்.
"மகரவா ருதிவயத் துலக மேழும்
வந்திறைஞ்ச அருளாழி வலங்கொண்டு ஏந்துஞ்
சிகரமா மணிநீல வண்ண வெற்பைத்
தேராதார் தாந்தம்மைத் தேராதாரே" (திருக்கலம்பகம் 31)
"ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை
ஓரருள் அழியை உலகுடை ஒருவனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
சீரருள் மொழிய நிந்திருவடி தொழுதனம்" (சூளாமணி, 98)
அறவாழியை யுடைய அருகக்கடவுளைச் சீவகச்சாமி தலையுற வணங்கின
செய்தியைச் சீவக சிந்தாமணி கூறும் செய்யுள் இது.
"நிலவிலகி உயிரோம்பி நிமிர்ந்தொளிர்ந்து பசிபகைநோய்
உலகமிருள் கெடவிழிக்கும் ஒண்மணி அறவாழி
அலகையிலாக் குணக்கடலை அகன்நான வரம்பனை
விலையிலா முடியான் விண்வியப்ப இறைஞ்சினான்" (முத்தியிலம்பகம்,
425)
மற்றும், "தண்மதி போல் நேமி", "மலமறுதிகிரி", "அறவாழி வேந்தன்"
என்று சீவக சிந்தாமணியில் அருகக் கடவுளின் அறவாழி கூறப்படுகிறது.
மேலும், " அருட்சக்கரம் ஏந்திய சங்கரன்" என்றும், "பொருளாக என்னை ஆண்டு
கொண்டாய் அறவாழி கொண்டேவென்ற அந்தணனே" என்றும் திருனூற்றந்தாதி
முழங்குகின்றது.
**"அந்தரத் துருளும் நின் அலர்கதிர் அறவாழி
இந்திரனும் பணிந்தேத்த இருவிசும்பில் திகழ்ந்தன்றே" என்பதும்,
"மறவாழி இறையவரும் மாதவரும் புடைசூஉழ
அறவாழி வலனுயரி அருள்னெறியே அருள்யோய்" என்பதும் யாப்பருங்கல
விருத்தி மேற்கோள் செய்யுள்கள்.
ஆழிப்படைக்கு ஸுதர்சநம் என்று பெயர்.
தர்சநம் என்பது மெய்யியலின் ஒரு துறை.
அது மறை நெறியாகிய அற நெறிக்கு ஒளி பாய்ச்சுவதால்
அப்பெயர்.
’நிகம ஸத் தர்ம தர்சந’ என்று சுதர்சனாழ்வாரை விளிப்பார் வேதாந்த தேசிகர்.
சமணர்கள் பெரும்பான்மையாக ஆனபோது எல்லாப் பெயர்களையும் அருகருக்கு
உரியதாக்கிக் கொண்டனர்,
தற்போது பிக்குகள் கதிர்காமத்தைச் செய்ததுபோல்.
அமரகோசம் புத்தர், ததாகதர் போன்ற புத்தபிரானின்
பெயர்களையெல்லாம் மஹாவீரருக்கு என்றாக்கி விட்டது.
காஞ்சிப்பெரியவர் இதைச் சுட்டியுள்ளார்.
தேவ்
இதைத்தான் தலைவர் காணத்தவறுகிறார் ;-)
எது பழசு? வேதமா? அருகமா?
எதன் நீட்சி எது?
இப்போது இலங்கையில் வேதக்காரர்கள் என்றால் கிறிஸ்தவர்கள். அதற்காக
விவிலியமும், வேதமும் ஒன்றாகிவிடுமா?
சிந்திக்க..தலைவரே ;-)!
க.>
கூறுவது மயிலை. சீனி. வேங்கடசாமி.
On Aug 12, 2:09 pm, devoo <rde...@gmail.com> wrote:
> Aug 12, 5:09 pm, "N. Ganesan"
>
> *அறவாழி அந்தணன் என்னும் பெயர் திருமாலுக்கும் பொருந்தாது.*
>
தேவ்
இப்போதைய நமது நிலமை என்னவென்றால் நமது வேதாந்த வழிமுறையும், சங்கம்
வைத்து திறனாய்வு செய்த முறைகளும் மறைந்துவிட்டன.
ஒரு விஷயத்தை முன்னிருத்த அக்காலத்தில் உயிரைக்கூட கொடுக்க வேண்டியிருந்தது.
ஆழ்வார்களின் அருளிச்செயல்களை வேதத்துடன் ஒப்பிட்டு அவைகள் ஸ்ரீசூக்திகள்
என நிருவ ஏறக்குறைய 2 நூற்றாண்டுகள் எடுத்துக்கொண்டது (நாதமுனி தொடக்கம்
எம்பெருமானார் வரை). அவர்கள் ஆழ்வார்களைக் குடைந்தது போல் யார்
குடைந்திருப்பார்கள்? அவர்கள் கண்னிலிருந்து எதுவுமே தப்புவதில்லையே.
ஆய்ந்த தமிழ்ப் புலமையும், நேர்ந்த வடமொழிப்புலமையும் கொண்டு, வாளினும்
கூர் மதி கொண்டு அவர்கள் செய்திருக்கும் ஆய்வுகளைக் கேள்விப்படும் போது
குலை நடுங்குகிறது. அப்படி அவர்கள் நிருவிய பின்னும் நாம் அதன் பின்னணி
அறியாது கேள்வி கேட்பது வருத்தமாகவே உள்ளது.
அது சரி, சங்கம் நம்மாழ்வாரையும், வள்ளுவனையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொண்டதா?
க.>
- முழுத் திருமந்திரம் தெரியுமா?
குறளுக்கும் என்ன தொடர்பு? அந்தணன் என்று அருகக் கடவுளுக்கும்
சமண நூல்களில் உள்ளது.
பாரதக் கலைவரலாற்றைப் பார்த்தால் தர்மச்சக்கரம் சமண பௌத்தங்களில்
காட்டப்பட்டுப் பல நூற்றாண்டுகள் கழிந்தே திருமாலுக்கு உண்டு.
தர்மசக்கரம் - புத்தர்/அருகர். சக்கராயுதம் - விஷ்ணு.
இரண்டும் வெவ்வேறு தொழில்கள் உடையன. அருகருக்கு அற ஆழி,
விஷ்ணுவுக்கு மற ஆழி. இரண்டையும் இணைத்துப் பொருள்
சொல்வது பொருள் சொல்வது பல நூற்றாண்டுகள் கழிந்தபின்.
திருவாய்மொழி: “அறவனை, ஆழிப்படை அந்தணனை” என்கிறதே.
வியாக்கியானங்கள் என்ன விளக்கம் சொல்கின்றன? திருக்குறளை
மேற்கோள் காட்டுகின்றனவா என்று பார்க்கணும். வியாக்கியானங்களில்
என்ன விளக்கியிருக்கிறார்கள் என்று அறிய ஆவல்.
பழைய வேதத்தில் (ரிக்) விஷ்ணுவுக்கு சக்கராயுதம் என்றுள்ளதா?
மகாபாரதத்தில் சக்கரப்படை இருக்கும்.
சுதர்சனத்தின் வரலாற்றுக்கு ‘பெக்லி நூலும், சுவீரா ஜெயஸ்வால்,
விஷ்ணுயிஸம், நந்திதா கிருஷ்ணா - மும்பை ஆய்வேடு பார்க்கணும்.
நா. கணேசன்
> --
>
> ஆமாச்சு
//பாரதக் கலைவரலாற்றைப் பார்த்தால் தர்மச்சக்கரம் சமண பௌத்தங்களில்
காட்டப்பட்டுப் பல நூற்றாண்டுகள் கழிந்தே திருமாலுக்கு உண்டு. //
இது மெய்யியல் அறியாத மேல் நாட்டினரின் எடுபடாத வாதம்.
முழைகளிலும், காடுகளிலும் இருந்த சமண, பவுத்த மதங்களுக்கு
அரசியல் செல்வாக்குக் கிடைத்து நிறுவன அந்தஸ்து ஏற்பட்டவுடன்
‘Logo' தேவைப்பட்டது.அது போது ஏற்பட்டவை ஸ்வஸ்திகமும், சக்கரமும்.
அவை ஜின - புத்தர்களோடு தோன்றவில்லை.
சிலுவை கிறித்தவரின் சின்னமானது எப்போது ?
நேமிப்படை, அச்சுதனுக்கு ‘அப்ருதக் ஸித்த விசேஷணம்’;
ஏதோ ஒரு வடிவில் அவதாரம் தோறும் தோன்றுவது.
அதை வளரியோடு ஒப்பிடுவது ஒரு புரிதலுக்காக.
தேவ்
-------
ஒரு நினைவு:
பெஞ்சமின் ப்லெமிங் என்ற மாணவர் இப்போது பிஎச்டி முடித்து
போஸ்ட்-டாக்க்காக பிலடெல்பியாவில் உள்ளார்.
அவரது தியரி லிங்க வழிபாடு 8-9 நூற்றாண்டில் பிரபலம்
ஆனது, தோற்றம் 5-6 நூற்றாண்டு என்று :)
ராமேஸ்வரம் ராமர் மணல் லிங்கம், தல புராணம்,
தேவாரம், சங்க இலக்கியத்தில் பல இடங்களில்
அண்ணமலையில் ஜோதிலிங்கமாய்
அருணாசலேவரர் தோற்றம் “பெருவிறல் மூதூர்”
என்று போற்றப்படுவது என்னவாயிற்றாம்?
இரா. நாகசாமியிடம் பேசும்போது பலகுறிப்புகள்
கொடுத்து வேத இலக்கியங்களைக் காட்டினார்.
சிவபக்தி நூலிலும், முக்கியமாக அண்மைக் காலத்தில்
வந்த நூலில் முதற்கட்டுரையாக விரிவாக
எழுதியுள்ளேன் என்றார். அதைப் பார்க்கணும்.
டோரிஸ் ஸ்ரீனிவாசன் பெஞ்சியின் தியரியைக்
கேட்டுச் சிரித்தார். இந்து சமயத்திற்கும், பண்டைக்
கலைவரலாற்றுக்கும் இன்னும் தொடர்புகள்
செய்ய கலைநிபுணர்கள் இல்லை. ஆனந்த
குமாரசாமி, டோரிஸ் ஸ்ரீனிவாசன், .. விதிவிலக்கு.
சக்கராயுத வரலாறு, தருமச்சக்கரம் அதிலி இருந்து
பிறந்ததா? என்றெல்லாம் பார்க்க இன்னும் நிறைய
இடமுண்டு என்பதுண்மை.
நா. கணேசன்
On Aug 12, 10:31 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/13 devoo <rde...@gmail.com>:
>
>
>
> > அமரகோசம் புத்தர், ததாகதர் போன்ற புத்தபிரானின்
> > பெயர்களையெல்லாம் மஹாவீரருக்கு என்றாக்கி விட்டது.
> > காஞ்சிப்பெரியவர் இதைச் சுட்டியுள்ளார்.
>
> இதைத்தான் தலைவர் காணத்தவறுகிறார் ;-)
>
> எது பழசு? வேதமா? அருகமா?
> எதன் நீட்சி எது?
இது மிகக் கடினமான கேள்வி.
எழுத்தில் வேதம் முதல் தான்.
ஆனால் அதற்கு முன்பே அருகம் ஸப்ஸ்ட்ரேற்றம் ஆக
அருஹம் இருந்திருக்கும், பதிவாவது பின்னரே
இந்தியாவின் மிகப் பழைய சமயம் ஆசீவகம்/சமணம்
என்று மேல்நாட்டறிஞர் கூறுவர்.
நாட்டார் கலைகள் பலவும் பதிக்கப்படாமலே
மக்களிடை வழங்கி வருவதைப் பார்க்கிறோமே.
நா. கணேசன்
பூஜா (இந்தச் சொல் பற்றி எழுதவேண்டும். பூ-செய் என்ற 1924 மேற்கோள்
திவா காட்டினார். பூசு- என்ற வினையடிப் பிறந்த சொல் பூசை).
யாரவது இதற்கு ஏதாவது பண்ணினால் தேவலை. ஒவ்வொரு ஆண்டும் மலை மலையாக இந்த
மாதிரி நூல்கள் குவிகின்றன.//
The use of the cross as a symbol was condemned by at least one church
father of the 3rd century CE because of its Pagan origins. The first
appearance of a cross in Christian art is on a Vatican sarcophagus
from the mid-5th Century. It was a Greek cross with equal-length arms.
Jesus' body was not shown. The first crucifixion scenes didn't appear
in Christian art until the 7th century CE. The original cross symbol
was in the form of a Tau Cross. It was so named because it looked like
the letter "tau", or our letter "T". One author speculates that the
Church may have copied the symbol from the Pagan Druids who made
crosses in this form to represent the Thau (god). They joined two
limbs from oak trees. The Tau cross became associated with St. Philip
who was allegedly crucified on such a cross in Phrygia. May Day, a
major Druidic seasonal day of celebration, became St. Philip's Day.
Later in Christian history, the Tau Cross became the Roman Cross that
we are familiar with today.
The shape of the original crucifixion device is a matter for
speculation. Sometimes, the Romans executed people on a Tau cross,
sometimes on a Roman cross and sometimes on a simple stake. The
gospels, which were originally written in Greek, use the word
"stauros" to refer to the execution structure. (see Mark 15:21, Mark
15:32, Matthew 27:32, Luke 23:26, John 19:17). This appears as the
word "cross" in all but one of the English versions that we have
examined.
http://in.answers.yahoo.com/question/index?qid=
சிலுவையின் அமைப்பை உள்ளபடி மேற்கத்திய அறிஞர் குழாம் முடிவு
செய்யட்டும்; பிறகு பாரதீய மதங்கள் குறித்து ஆராயலாம்.
பிறமதச் சின்னங்களை மட்டும் விமர்சிக்கவில்லை.
ஹிந்துமத அமைப்புகள் அன்ன இலைச்சினையை அடையாளச் சின்னமாக
ஏற்றன.அல்லிருமைக் கோட்பாட்டை ஏற்கும் மடங்கள் ஹம்ஸ முத்ரையைப்
பயன்படுத்தும்.அஹோபில மடத்துக்கும் அதுவே சின்னம்; பின்னர் ஸ்ரீ
ராமக்ருஷ்ண மடமும் ஹம்ஸ முத்ரையை ஏற்றது. பிற்காலத்தில் ஏற்பட்ட அடையாளப்
படுத்திக்கொள்ளும் ஒரு முயற்சி. அவ்வளவுதான்.தொன்மைக்கு அது அளவுகோல்
ஆகாது.
தேவ்
> எழுத்தில் வேதம் முதல் தான்.
> ஆனால் அதற்கு முன்பே அருகம் ஸப்ஸ்ட்ரேற்றம் ஆக
> அருஹம் இருந்திருக்கும், பதிவாவது பின்னரே
> இந்தியாவின் மிகப் பழைய சமயம் ஆசீவகம்/சமணம்
> என்று மேல்நாட்டறிஞர் கூறுவர்.
>
குழப்புகிறது கணேசனாரே! ஒரு இந்தியனாகப் பிறந்து வளர்ந்து கேட்ட
கதைகளும், இப்போது வெளிநாட்டு அறிஞர்கள் சொல்லும் புதுக்கதைகளும்
குழப்புகின்றன.
கண்ணனின் சக்ராயுதம் எவ்வளவு புகழ் பெற்றது? தீபாவளிப் பட்டாசில் கூட
`விஷ்ணுச் சக்கரம்` உண்டு. ஸுதர்சன வழிபாடு காலம், காலமா உள்ளது. ஒவ்வொரு
பெருமாள் கோயிலிலும் அவருக்கு சந்நிதி. `ஆதிமூலமே!’ என்று யானை கூவிய
போது நாரணன் சக்ராயுதத்துடன் வருவதாகப் புராணம் கூறுகிறது. இப்படி
விஷ்ணுவும், சக்கரமும் ஒன்றுடன் ஒன்றாக இருக்கும் இந்துக் குறியீட்டை
ஒட்டியே தருமச் சக்கரம் வருகிறது. ஏனெனில், பௌத்தம் என்பதே இந்து
மதத்தின் ஒரு கிளையாகத்தான் உதிக்கிறது. சித்தார்த்தன் ஒரு ரிஷி.
அவ்வளவுதான். அந்த அளவிலேயே அவனை சிறப்பித்து அவதாரம் என்று சொல்வது.
வியாசரை விஷ்ணுவின் அவதாரம் என்று சொல்வதில்லையா?
எனவே, இந்தியத்தத்துவங்கள், குறியீடுகள் இவையெல்லாம் ஒரு ஆதித் தாய்
மதத்தின் வெளிப்பாடுகளே. இந்து மதம் என்று சொல்லாமல், இந்து தர்மம் என்று
சொல்வது இந்நிலப்பரப்பின் விஸ்தாரணத்தைக் குறிக்கத்தான். பௌத்தமும்,
சமணமும் `வேறு ஏதோ` சமாச்சாரம் போல் பேசுவது வெளிநாட்டாருக்கு உவப்பாக
இருக்கலாம். நமக்கு அது உவப்பல்ல. வெறும் குழப்பமே!
க.>
On Aug 13, 6:18 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/13 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> > எழுத்தில் வேதம் முதல் தான்.
> > ஆனால் அதற்கு முன்பே அருகம் ஸப்ஸ்ட்ரேற்றம் ஆக
> > அருஹம் இருந்திருக்கும், பதிவாவது பின்னரே
> > இந்தியாவின் மிகப் பழைய சமயம் ஆசீவகம்/சமணம்
> > என்று மேல்நாட்டறிஞர் கூறுவர்.
>
> குழப்புகிறது கணேசனாரே! ஒரு இந்தியனாகப் பிறந்து வளர்ந்து கேட்ட
> கதைகளும், இப்போது வெளிநாட்டு அறிஞர்கள் சொல்லும் புதுக்கதைகளும்
> குழப்புகின்றன.
>
> கண்ணனின் சக்ராயுதம் எவ்வளவு புகழ் பெற்றது? தீபாவளிப் பட்டாசில் கூட
> `விஷ்ணுச் சக்கரம்` உண்டு. ஸுதர்சன வழிபாடு காலம், காலமா உள்ளது. ஒவ்வொரு
> பெருமாள் கோயிலிலும் அவருக்கு சந்நிதி. `ஆதிமூலமே!’ என்று யானை கூவிய
> போது நாரணன் சக்ராயுதத்துடன் வருவதாகப் புராணம் கூறுகிறது. இப்படி
> விஷ்ணுவும், சக்கரமும் ஒன்றுடன் ஒன்றாக இருக்கும் இந்துக் குறியீட்டை
> ஒட்டியே தருமச் சக்கரம் வருகிறது.
தரும சக்கரத்தின் குறியீடு வேறு.
சமண, பௌத்தர்களின் சின்னம் அது,
http://en.wikipedia.org/wiki/Dharmacakra
விஷ்ணுவின் சக்கரப் படை அல்ல அது,
பௌத்தம் இந்துமதக் கிளையல்ல என்கிறார்கள்
பௌத்தம் படிப்பவர்கள்.
இதோ இந்த வாரத்தில் ஜப்பானில் எடுத்த படம்!
http://mintamil.googlegroups.com/web/symbol_buddha.JPG?gsc=86FCrgsAAADLQvTyifuHoJFFWb3uxZ10
இதைப் பார்த்தவுடன் உங்களுக்கு இந்தியா நினைவிற்கு வருகிறதா? பௌத்தம்
நினைவிற்கு வருகிறதா? எனச் சொல்லுங்கள்.
எது, எதிலிருந்து கிளைத்தது என்பது புரியும்.
நம் உணர்வுகளை, நம் மரபை, நம் மண்னின் வாசனையை நம்மைவிட வேறு யார்
புரிந்து கொண்டு நமக்குச் சொல்லமுடியும்?
நம் பெரியோர் சொல்வதைக் கேட்கும் முன் மற்றோர் சொல்லே நமக்குப் பெரிதெனப் படுகிறது!
சித்தார்த்தன் இந்துதானே? நேபாளம் இன்றும் இந்து நாடுதானே?
க.>
On Aug 13, 7:44 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/14 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> > விஷ்ணுவின் சக்கரப் படை அல்ல அது,
> > பௌத்தம் இந்துமதக் கிளையல்ல என்கிறார்கள்
> > பௌத்தம் படிப்பவர்கள்.
>
> இதோ இந்த வாரத்தில் ஜப்பானில் எடுத்த படம்!
>
> http://mintamil.googlegroups.com/web/symbol_buddha.JPG?gsc=86FCrgsAAA...
>
> இதைப் பார்த்தவுடன் உங்களுக்கு இந்தியா நினைவிற்கு வருகிறதா? பௌத்தம்
> நினைவிற்கு வருகிறதா? எனச் சொல்லுங்கள்.
>
> எது, எதிலிருந்து கிளைத்தது என்பது புரியும்.
>
> நம் உணர்வுகளை, நம் மரபை, நம் மண்னின் வாசனையை நம்மைவிட வேறு யார்
> புரிந்து கொண்டு நமக்குச் சொல்லமுடியும்?
>
> நம் பெரியோர் சொல்வதைக் கேட்கும் முன் மற்றோர் சொல்லே நமக்குப் பெரிதெனப் படுகிறது!
>
> சித்தார்த்தன் இந்துதானே? நேபாளம் இன்றும் இந்து நாடுதானே?
>
புத்தர் இந்துதான் என்றும், அற ஆழி (தர்மசக்கரம்) விஷ்ணுவின்
சக்கரப்படைதான்
என்றும் இக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதா?
> க.>
On Aug 13, 8:25 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> கண்ணரே! கணேசரே! என்னால் ஆன உபகாரம்-- ஸ்ரீராமகிருஷ்ணரின் சொற்கள்
> சில ஞாபகத்திற்கு வருகின்றன. புத்தரைப் பற்றிப் பேச்சு வரும்
> பொழுது, 'புத்தர் சொன்னது வேதாந்தம்தான் என்றும், புத்தர்
> சநாதன தர்மத்தின் வளர்ச்சியே என்றும்' சொன்னதாக நினைவு. உங்கள்
> விவாதத்திற்கு உதவுமா என்று தெரியவில்லை.
>
வேதங்களைப் பயின்றவர்களில் முக்கியமானவரும்,
வேதத்தின் வெளியாகாப் பகுதிகளை அச்சிட்டவரும் ஆனவர்
மாதவ தேஷ்பாண்டே. அவரது பாட்டனார் புனேயில்
முதல் ஸம்ஸ்கிருத பேராசிரியர்.
அவர் பௌத்தம் வேதங்களைப் பற்றிக் கொடுக்கும்
குறிப்புகளைக் குறிப்பிடுவார்:
The clearest evidence from the early Buddhist texts for the rejection
of the Vedas, not just of the caste of the Brahmans or their
sacrifices, is found in the TevijjaSutta of the Diighanikaaya among
other sources. It specifically refers not only to the three Vedas, but
to a number of specific Vedas and their Shaakhaas: Addhariya,
Tittiriya, Chandoka, Bahvarijjha. These are brought up in the context
of the Brahmans belonging to these Vedic schools teaching paths "into
a state of union with Brahmaa" (brahmasahabyataaya maggam
pa~n~naapenti), which is a reference to the Upanizad-like teachings of
these different branches. The specific Rizis mentioned are ATThaka,
Vaamaka, Vaamadeva, Vessaamitta, Yamataggi, Angirasa, Bhaaradvaaja,
VaaseTTha, Kassapa, and Bhagu. These Brahmans and their Rizis are then
ridiculed as claiming to show a path to the union with Brahmaa which
none of them have ever seen: "Verily, VaaseTTha, that Braahmans versed
inthe Three Vedas should be able to show the way to a state of union
with that which they do not know, neither have seen - such a condition
of things has no existence. Just, VaaseTTha, as when a string of blind
men are clinging one to the other, neither can the foremost see, nor
can the middle one see, nor can the hindmost see - just even so,
methinks, VaaseTTha, is the talk of the Braahmans versed in the Three
Vedas but blind talk: the first sees not, the middle one sees not, nor
can the latest see. The talk then of these Braahmans versed in the
Three Vedas turns out to be ridiculous, mere words, a vain and empty
thing." (Rhys Davids, Buddhist Suttas, p. 173). "And you further say
that even the Rizis of old, whose words they hold in such deep
respect, did not pretend to know, or to have seen where, or whence, or
whither Brahmaa is." (Ibid, 178). The positive significance of
expressions like Vedagu and Vedantagu in early Nikaaya texts is more
like the positive significance of a redefined term like BraahmaNa =
baahitapaapadhammo, not in reference to any presumed Vedic texts or
traditions for which either the Buddha himself or his followers had
great respect, not unlike the redefinition of a good sacrifice
(ya~n~na) as daana in the Nikaayas. In all likelihood the terms Vedagu
and Vedaantagu indicate the early Buddhist appropriation of current
terms, with redefined content. The Tevijja Sutta interestingly has an
assertion of the Three Siilas (ibid, p. 188). Rhys Davids suggests in
his note: "These three Siilas may perhaps have been inserted in the
Sutta as a kind of counterpoise to the Three Vedas."
Madhav Deshpande
----------
புத்தர் எந்த அளவு இந்து? என்பது ஸ்ரீ லங்காவின் பாலி இலக்கியங்களைப்
படித்தால் தெரியவரும். தர்மசக்கரம் விஷ்ணுவின் சக்கராயுதமா? ஐயமுண்டு.
நா. கணேசன்
> 2009/8/14 N. Ganesan <naa.gane...@gmail.com>
வழக்கம் போல் இழை திசை திரும்புகிறது.
அறவாழி அந்தணன் நாரணனே.
நேமி (ஆழிப்படை) அவனது ஆயுதம்.
சக்ராயுதபாணி, சக்ரபாணி எம் கண்ணனே!
அவ்வளவுதான்.
க.>
On Aug 13, 9:43 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/14 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> >> > புத்தர் இந்துதான் என்றும், அற ஆழி (தர்மசக்கரம்) விஷ்ணுவின்
> >> > சக்கரப்படைதான்
> >> > என்றும் இக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதா?
>
> வழக்கம் போல் இழை திசை திரும்புகிறது.
> அறவாழி அந்தணன் நாரணனே.
பலர் அவ்வாறு கொள்வதில்லை.
ஜோசப் கேம்பல், ஜே.கிருஷ்ணமூர்த்தி இவர்கள் பார்வையும் கிளைக்கும்
தத்துவவியல் என்றே இந்திய மெய்யியலைக் காண்கின்றன.
ஜோசப்கேம்பல் இதை மிக அழகாக விளக்குவார் எப்படி குறியீடுகள், தத்துவங்கள்
ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்து இந்திய மண்ணில் மெருகேறுகின்றன என்று.
இதனால்தானோ என்னவோ பாரதி ஆதி சங்கரரை 'பிரசன்ன புத்தர்' என்கிறான்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி எப்படி மிக, மிக subtle விஷயங்களில் வேறுபட்டு இந்திய
மெஞ்ஞானம் கிளைக்கிறது என்பார். அந்த அளவிற்கு நுண்ணிய பார்வை அவர்களிடம்
உண்டு என்று பெருமை கொள்வார்.
க.>
> திருவாய்மொழி: “அறவனை, ஆழிப்படை அந்தணனை” என்கிறதே.
> வியாக்கியானங்கள் என்ன விளக்கம் சொல்கின்றன? திருக்குறளை
> மேற்கோள் காட்டுகின்றனவா என்று பார்க்கணும். வியாக்கியானங்களில்
> என்ன விளக்கியிருக்கிறார்கள் என்று அறிய ஆவல்.
>
ஈடு தமிழ் செய்த புருஷோத்தம நாயுடு, “அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் பிற ஆழி நீத்தல் அரிது” என்ற திருக்குறளின் , `அற ஆழி அந்தணன்`
என்ற சொற்றொடருக்குப் பொருள் கூருவார் போன்று `அறவனை ஆழிப்படை அந்தணனை`
என்று அருளிச்செய்கிறார். என்று பொருள் தருகிறார். வடமொழி, தமிழ்
இரண்டிலும் புலமை பெற்ற நாயுடுகாரு எம்மைப் போலவே சிந்திப்பது வலு
சேர்க்கிறது.
ஈடு:
/அறவனை - அவர்கள் படியையும், காரியம், பலன் கொடுக்கின்றவன் என்கிறது./
இதற்கு கீதையிலிருந்து மேற்கோள் வருகிறது. நால்வகையில் இறைவனை வேண்டுவோர்
பற்றிய குறிப்பு வருகிறது. `கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்` எனும்
கண்ணதாசன் வரிகள் போல்.
/ஆழிப்படை அந்தணனை - ஆத்தும அனுபவ விரோதியைப் போக்கைக்குக் கருவியான
திருச்சக்கரத்தை கையிலேயுடையவன்.
அந்தணன் - பிராமணன்/
இங்கு இரண்டு கருத்துக்கள் புலப்படுகின்றன.
1. ஆழி என்பது நமது ஆத்ம அனுப விரோதியைப் போக்கும் ஆயுதம் என்பது
(கொல்லுதல் அல்ல அதன் குறி)
2. `கையுந்திருவாழியுமான அழகைக் கண்டாலே அதில் கால் தாழும்` எனும் பாவம்.
`ஆழியோடும், பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்!` என்று
திருமங்கை மன்னனும் உத்தேசயமான பொருளையும் மறக்கும்படி கலக்குவார். என்று
மேலே போகிறது.
எனவே ஆழியில்லாமல் அண்ணலை அனுபவிக்கவே முடியாது என்பது பெரியோர் முடிவு.
ஆதாரமில்லாமல் இப்பாவம் அங்கு உதிக்காது எனக்கொள்க.
> பழைய வேதத்தில் (ரிக்) விஷ்ணுவுக்கு சக்கராயுதம் என்றுள்ளதா?
> மகாபாரதத்தில் சக்கரப்படை இருக்கும்.
>
தேவ் அவர்கள் இதற்கு உதவலாம். எனக்கு வேதபாடமில்லை.
க.>
On Aug 13, 10:41 pm, amachu <ramada...@amachu.net> wrote:
> On Thu, 2009-08-13 at 04:21 -0700, N. Ganesan wrote:
> > > அந்தணர் வேதியர் பார்ப்பனர் பிராமணர் எல்லாம் ஒரே பொருளில்
> > > திருமந்திரத்தால் எடுத்தாளப்பட்டுள்ளதை நோக்குக.
>
> > பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
> > - முழுத் திருமந்திரம் தெரியுமா?
>
> பாதி நினைவுக்கு வருகிறது. முழுவதையும் தேடித் தருகிறேன்.
>
தமிழருக்கு நன்கு தெரிந்த திருமந்திரப் பாட்டுதான்:
பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட வேந்தர்க்கும் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாமென்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே
-
திருமூலர்
வேதம் முதலில் எப்போது எழுதப்பட்டது ? மனப்பாடம் செய்தே வேதம்
காப்பாற்றப் பட்டு வந்தது இல்லையா ?!
On Aug 14, 5:24 am, v4vijayakumar <vijayakumar.subbu...@gmail.com>
wrote:
ஆம். ஒரு டேப் ரிக்கார்டர் மாதிரி தலைமுறை தலைமுறைக்குச்
சொல்லிக் கற்பிக்கப்பட்டது. இவ்வாறு மனப் பாடம் செய்ததால்
தான், இந்தியாவின் ஒலியனியல் (ஃபோனெடிக்ஸ்) அறிவு மிகுதியானது.
இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் எழுத்துமாலையைக் கொடுக்க
முடிந்தது. அது தென்கீழ் ஆசியாவிலும் பரவிற்று.
http://dakshinatya.blogspot.com/2008/12/staal-sanskrit.html
மனனம் செய்வதும், வாய்விட்டுச் சொல்லுவதும்
இன்றும் வாக் > வாசகர் என்ற சொல்லில் இருக்கிறது.
மனதுக்குள்ளே படிப்பது எல்லாம் பரவலானது
அச்சுத் தொழில், அனைவர்க்கும் கல்வி என்றானபின்தான்.
தென்னாட்டில் தான் வேதம் முதல்முதலாய எழுத்தில்
நிர்ணயிக்கப்பட்டது. மாயணர் வழிவந்த சாயணர் பாடியம்
எழுதினார். இசுலாமியர் தந்த நெருக்கடிகள் ஒரு காரணமாகலாம்.
பழைய கற்பு (=கல்வி) சிதையப் பல காரணிகள்,
இருப்பதை எழுதுவோம் என்ற முயற்சியாகலாம்.
------------
தென்னாட்டில் எழுத்துக்கு இருந்த மதிப்பு வடக்கே இல்லை.
இந்தியாவின் 60-65 % கல்வெட்டுக்கள் தமிழ்க் கல்வெட்டுக்களே.
எழுதாமறை, எழுதாக் கிளவி என்று வேதங்கள் புகழப்பெற்றன.
ஆனால், எழுதுமறை என்றே தன்னைத் தேவாரம் குறிக்கிறது.
11, 12-ஆம் நூற்றாண்டில் சங்கச் சான்றோர் பெயரை வைத்து
எழுதப்பெற்ற திருவள்ளுவ மாலையில் எழுதாமறையைச்
செய்யாமொழி - மனிதர் யாராலும் செய்யாத மொழி
என்று இந்துக்கள், பிராமணர்கள் புகழ்ந்த வேதம்
அபௌருஷேயத்வம் என்ற கோட்பாடு.
(ஆனால், இன்று வேதவியல் நிபுணர்கள் ஓவ்வொரு வரியும்
எந்தக் காலகட்டத்தில் மனிதனால் பாடப்பெற்றது
என்று ஆய்கின்றனர் என்பது வேறு விஷயம்!)
என் மூன்றாண்டு பழைய பதிவில் சில செய்திகள் உங்களுக்கு உதவலாம்:
http://nganesan.blogspot.com/2006/10/blog-post.html
”
குறிப்பு 1: செய்யாமொழி
பேரா. கி. நாச்சிமுத்து (கேரளப் பல்கலை)
"திருவள்ளுவர் அடிப்படையில் சமணர். திருக்குறள் சமண நூலாகவே கருதப்பட்டு
வந்தது. அவரும் அவருடைய குறளும் சமணரல்லாதாரால் தம் சார்பினதாக ஏற்றுக்
கொள்ளப்பட்டுச் சமணருக்கு அன்னியமாக்கப்பட்ட வரலாற்றையே வள்ளுவமாலை
காட்டுகிறது" என்பார். 11-ஆம் நூற்றாண்டு வள்ளுவமாலைப் பாடல், செய்யாமொழி
என்று அபௌருஷேயத்வம் என்னும் வைதீக தத்துவத்தை மொழிபெயர்க்கிறது.
செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
அதற்குரியர் அந்தணரே; ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல் (வள்ளுவமாலை 28)
ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நால்மறையைப்
போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர்வு இன்று (வள்ளுவமாலை 15)
செய்யாமொழியை எழுதத் தடை இருந்திருக்கிறது. எனவே, தெற்கில் எழுத்து
முதலில் தோன்றியதோ?
“
நா. கணேசன்
On Aug 13, 10:41 pm, amachu <ramada...@amachu.net> wrote:
> அது சரி,
>
> அறவாழி அந்தணர் என்ன tense?
>
> past, present, present continuous, future?
>
ஓ! என்ன டென்ஸாக இருக்கும்?
On Aug 13, 10:42 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/13 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> > திருவாய்மொழி: “அறவனை, ஆழிப்படை அந்தணனை” என்கிறதே.
> > வியாக்கியானங்கள் என்ன விளக்கம் சொல்கின்றன? திருக்குறளை
> > மேற்கோள் காட்டுகின்றனவா என்று பார்க்கணும். வியாக்கியானங்களில்
> > என்ன விளக்கியிருக்கிறார்கள் என்று அறிய ஆவல்.
>
> ஈடு தமிழ் செய்த புருஷோத்தம நாயுடு, “அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு
> அல்லால் பிற ஆழி நீத்தல் அரிது” என்ற திருக்குறளின் , `அற ஆழி அந்தணன்`
> என்ற சொற்றொடருக்குப் பொருள் கூருவார் போன்று `அறவனை ஆழிப்படை அந்தணனை`
> என்று அருளிச்செய்கிறார். என்று பொருள் தருகிறார். வடமொழி, தமிழ்
> இரண்டிலும் புலமை பெற்ற நாயுடுகாரு எம்மைப் போலவே சிந்திப்பது வலு
> சேர்க்கிறது.
>
> ஈடு:
>
> /அறவனை - அவர்கள் படியையும், காரியம், பலன் கொடுக்கின்றவன் என்கிறது./
>
> இதற்கு கீதையிலிருந்து மேற்கோள் வருகிறது. நால்வகையில் இறைவனை வேண்டுவோர்
> பற்றிய குறிப்பு வருகிறது. `கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்` எனும்
> கண்ணதாசன் வரிகள் போல்.
>
> /ஆழிப்படை அந்தணனை - ஆத்தும அனுபவ விரோதியைப் போக்கைக்குக் கருவியான
> திருச்சக்கரத்தை கையிலேயுடையவன்.
>
So, I take it that the original IiDu does not quote the Tirukkural at
all here, is that correct?
Hope Srivaishnava community puts the vyakhyana literature in the web
(in original scripts), and for that private foundations (say,
TVS, ... ), universities (Indian and/or Western)
can be collaborated to put error-free web mounting.
I've heard in 1950s or around, Kanchi Periyavar said "thiik kuRaLai"
of AaNDaaL tiruppaavai
refers to Tirukkural. A big controversy arose, and Prativadi
Bhayangaram Swami (of Kanchipuram)
wrote a long rebuttal. Is Prativadi Annan's book available in the web,
If not people here
can locate and place it in the web. I think that book will deal a lot
with KuRaL
and 4000 commentarial tradition.
Is there any paper or thesis or book that deals with
(a) KuRaL and Azvaars
(b) Tirukkural quotes (any??) in Periyavachan pillai and others'
vyakhyaanams?
If sources can be mentioned, they can be found.
NG
ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானங்களில் `பகவத் விஷயத்தை` “மட்டும்” தெளிவாகப்
பேசும் நூல்களையே மேற்கோள் காட்டிப்பேசுவது வழக்கம். இவ்வகையில்
இராமாயணம், பாகவதம், கீதை, வேதம், உபநிஷத் இவையே அடிக்கடி மேற்கோளில்
வரும். இப்படி மேற்கோள் காட்டும் போதும் மகாபாரதம், இராமாயணம் இவைகளை
`அதிகப்படியான தேவையில்லாத விஷயங்களை`ப் பேசுகின்றன என்ற குறிப்புடன்தான்
பேசுவர். எனவே திருக்குறள் வர நியாயமே இல்லை. அவர்களுக்கு அருமருந்து
ஆழ்வார்களின் ஸ்ரீசுக்தி. அவை தெள்ளெனப் பேசும் பனுவல்கள். அங்கு மருட்சி
கிடையாது. எனவே நிறைய cross reference ஆழ்வார் பாசுரங்களுக்குள்ளேயே
வரும்.
ஆனால் ஈடு தமிழ் செய்த புருஷோத்தம நாயுடு தமது பாரிய தமிழ்ப்புலமை
காரணமாக பரவலாக கலித்தொகை, சிலம்பு, திருக்குறள் இன்னபிற தமிழ்
நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அது அவரது தனிப்பட்ட நிர்வாகம்
(ஆளுமை).
காஞ்சி மடம் வேதத்திற்கும், வடமொழி இலக்கியத்திற்கும் மட்டும்
முக்கியத்துவம் தரும் சம்பிரதாயம். நீங்கள் மேற்கோள் காட்டிய
(மதுராஷ்டகம்) பகுதியில் ஆச்சார்யர் பாசுரங்களை மேற்கோள் காட்டியது கண்டு
அதிசயத்தேன். அவர்கள் ஆழ்வார்களில் ஆழங்காட்பட்டவர்கள் அல்லர். திருவரங்க
சம்பிரதாயம் சங்கத்திற்கு முந்திய ஒரு பழம் தமிழ் சம்பிரதாயம். ஆளவந்தார்
தொடங்கி மணவாளமாமுனிவரை தமிழ்ப் பிரபந்தங்களில் கரைகண்டவர்கள். அவர்கள்
தமிழ் ஆளுமை ஆச்சர்யமானது, மண்ணின் குணம் பேசுவது.
தாங்கள் சொல்வது போல் அந்த அழகிய வியாக்கியான சம்பிரதாயம், மூல வடிவில்
மின்னுலகிற்கு வர வேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம். ஸ்ரீரங்கம்
மோகனரங்கன் துணையுடன் சில புத்தகங்களை வலையேற்றம் செய்துள்ளோம். இவை
அனைத்தும் ஒருங்குறியில் அச்சேற்றப்பட வேண்டும். தேடுவதற்கு வசதியாக
இருக்கும். நல்லவேளையாக அக்காலம் தொட்டு வைணவர்களுக்கு தங்கள்
சம்பிரதாயத்தைப் பேணும் மனோநிலை வாய்த்திருக்கிறது. கொஞ்சமேனும் தங்கள்
முதுசொம் பற்றிய அறிவு இருக்கிறது. எனவே வரும் காலங்களில் நிரம்ப
வலையேறும் என்று எதிர்பார்க்கலாம்.
க.>
2009/8/15 N. Ganesan <naa.g...@gmail.com>:
> ஆனால் ஈடு தமிழ் செய்த புருஷோத்தம நாயுடு தமது பாரிய தமிழ்ப்புலமை
> காரணமாக பரவலாக கலித்தொகை, சிலம்பு, திருக்குறள் இன்னபிற தமிழ்
> நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அது அவரது தனிப்பட்ட நிர்வாகம்
> (ஆளுமை).
பேரா. புருஷோத்தம நாயுடுவைப் பற்றி அவர் மாணவர்கள் இருவர்
விதந்து உரைத்துப் பலமுறை கேட்டிருக்கிறேன். நெடுமால் போலவே
பட்டுப் பீதக ஆடைதரித்து, அங்கவஸ்த்ரம் பூண்டு, குடை ஒன்று
ஆதிசேஷன் போல் நிழற்ற, ராஜநடையில் வருவாராம்.
அவரது ஞாபகசக்தியும், அளவிறந்த பாடல்களை அப்படியே
சொல்லும் திறனும் இப்போது யாரிடமும் இல்லை என்று
கம்பராமன் ஐயா, மு. சண்முகம் பிள்ளை போன்றோரிடம்
கேட்டிருக்கிறேன்.
நா. கணேசன்
க.>
2009/8/15 N. Ganesan <naa.g...@gmail.com>:
> பேரா. புருஷோத்தம நாயுடுவைப் பற்றி அவர் மாணவர்கள் இருவர்
> விதந்து உரைத்துப் பலமுரை கேட்டிருக்கிறேன். நெடுமால் போலவே
On Aug 14, 8:19 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நாம் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளைக்கும், பேரா.புருஷோத்தம
> நாயுடுவிற்கும் கடன் பட்டிருக்கிறோம். சேதுப்பிள்ளையார்
> சொல்லவில்லையெனில் இன்று ஈடு தமிழ் கண்டிருக்காது. வியாக்கியானங்களுக்கு
> புருஷோத்தம நாயுடு தரும் நிர்வாகம் (சிறப்பு உரை) கிடைத்திருக்காது.
> தமிழ் செய்த பாக்கியம்.
சென்ற கோடையில் முனைவர் மு. இளங்கோவன், தமிழ்மணம் காசி, ... உடன்
ரா. பி. சேதுப்பிள்ளை ஊர் (ராசவல்லிபுரம்) செப்பறைக்குப் போயிருந்தேன்.
அவரது உறவினர் இருவர் கூட வந்தார்கள்.
> க.>
> 2009/8/15 N. Ganesan <naa.gane...@gmail.com>:
நெல்லை தந்த வகுளம் அல்லவோ சடகோபன். பிள்ளைவாளுக்குத் தெரியாதா என்ன?
க.>
அபௌருஷேயத்வம் என்றால் பெண்கள் எழுதியதாகவும் இருக்கலாம், இல்லையா ? :-)
ம்..எனக்கு சிக்கலா?
யோசித்தால் இல்லையென்று தோன்றுகிறது.
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே
(மதுரைத்திட்டப் படி அழகிய முறையில் சீர் பிரிக்கப்படவில்லை! இரண்டாவது
கோப்பு (தொகுப்பு) அடிபிரிக்கப்படாமல் ஒரே எழுத்தோட்டமாக இருக்கிறது.
யாராவது உதவலாம்)
என வள்ளுவர் போல் ஆரம்பித்து மெல்ல, மெல்ல யார் அந்த அமரர்கள் அதிபதி
என்பதை வேதம் தமிழ் செய்த மாறன் விளக்கிவிடுகிறான். இதில் ஈசனும்
அடக்கும் என்பதுதான் தெளிவாய் இருக்கிறதே. நான் யார் எனக் கேட்கும் போது
நெஞ்சைத்தொட்டுச் சொன்னாலும், என் தலையும் நான் தான், காலும் நான் தான்
என்பது புரியாமலா இருக்கிறது ;-)
ஆனால், ஆழிப்படை அந்தணன் ஒருவன்தான். அவன் நாரணன் என்று சொல்ல வந்தேன். அம்மட்டே!
க.>
புருஷன் – ஆள் (ஆணாகவோ,பெண்ணாகவோ இருக்கலாம்)
இது பொதுப்பெயர், common noun
இந்த இடத்தில் ஆணை மட்டும் குறிக்கவில்லை.
ஆளரவமற்ற இடம் - மனித நடமாட்டமற்ற இடம்
ஆடவர் மட்டும் இல்லாத இடம் என்று பொருள் படாது.
அபௌருஷேயம் – மாந்தரால் இயற்றப்படாதது
தேவ்
ப்ரஜா மேம்² ஸா²ந்தி பை²லே, ராஜா த⁴ர்மநிஷ்ட² ஔர ப³லவாந் ப³நே, ஹமேஸா²
டீ²க ஸமய பர வ்ரு²ஷ்டி ஹோ, ஸப³ வ்யாதி⁴யாம்³ நஷ்ட ஹோ ஜாயம்³,
து³ர்பி⁴க்ஷ, ட³கேதீ, மஹாமாரீ ஆதி³ து³:க² ஸம்²ஸார கே கிஸீ ஜீவ கோ ந
ஹோம்², ததா² ஜிநேந்த்³ர ப⁴க³வாந் கா சலாயா ஹுஆ, ஸப³கோ ஸுக² தே³நே வாலா
த⁴ர்மசக்ர ஸதா³ பை²லதா ரஹே॥ (உரை)
பிரஜைகளிடம் சாந்தி பரவட்டும். ராஜா தர்மநிஷ்டனாகவும் பலவானாகவும்
ஆகட்டும். எப்போதும் தக்க நேரத்தில் மழை பொழியட்டும். எல்லா வியாதிகளும்
நஷ்டமாகட்டும். பஞ்சம், டகேதி(?), நோய்கள் முதலிய துக்கங்கள்
சம்சாரத்தில் உள்ள எந்த ஜீவனுக்கும் வராமல் இருக்கட்டும். அப்படியே
ஜினேந்திர பகவானால் சுழற்றிவிடப்பட்ட எல்லாருக்கும் சுகத்தை தரும்
தர்மசக்கரம் எப்போதும் பரவிக்கொண்டே இருக்கட்டும் (ஹிந்தி உரையின் எனது
அரைகுறை மொழிபெயர்ப்பு :) )
|| ஓம் நமோ ஜிநேந்த்ராய || ;)
---
புத்த மதத்திலும் தர்மசக்கரம் மிகவும் முக்கிய இடத்தைக்கொண்டது.
அஷ்டமங்கள சின்னங்களில் தர்மசக்கரமும் ஒன்று. புத்த பகவானின் முதலில்
பேருரை "தர்மசக்கர பிரவர்த்தன சூத்திரம்" என்றழைக்கப்படுகிறது. அதாவது,
புத்தரின் பேருரை, பண்டைய புத்தர்களின் போதனைகளின் மறைவால் நின்றுவிட்ட,
தர்மசக்கரத்தை மீண்டும் சுழற்றியதாக கருதப்படுகிறது.
மஹாயானம்/வஜ்ரயானம் மூன்று தர்மசக்கரபிரவர்த்தனங்களை குறிப்பிடும்:
1. ஆகமங்கள்
2. பிரக்ஞாபாரமிதை சூத்திரங்கள் (அ) அனைத்து மஹாயான சூத்திரங்கள்
3. ததாகதகர்ப்ப சூத்திரங்கள் (அ) தந்திரங்கள்
பல போதிசத்துவர்களும் புத்தர்களின் சம்போக-காய ரூபங்களும் கையில்
தர்மசக்கரத்தை ஏந்தியவாறு காட்சியளிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
|| நமஸ்தஸ்மை ப⁴க³வதே அர்ஹதே ஸம்யகஸம்பு³த்³தா⁴ய ||
----
ஏனோ பலர் வைதீகத்திலே ஆரம்பித்து வைதீகத்திலேயே முடித்து விடுகின்றனர்.
நடுவில் ஏதோ ஜைனம், பௌத்தம் தோன்றியது, வளர்ந்தது, மறைந்தது என்ற
ரீதியில் தான் சிரமண சமயங்கள் பேசப்படுகின்றன. (பாவம், ஆஜீவகத்தை யாரும்
கண்டுகொள்வது கூட இல்லை :( )
வைதீகத்தை ஒத்த பழமை கொண்டவை சிரமண சமயங்கள் (பௌத்தம் தவிர்த்து.
சித்தார்த்தரான சாக்கியமுனிக்கு முற்பட்ட புத்தர்கள் வரலாற்று
காலங்களுக்கு முற்பட்டவர்கள்). புத்தர் காலத்திலேயே பல சிரமண சமயங்கள்
இருந்தது பாளி சூத்திரங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதில் தென்னாடு வரை
பரவியவை பௌத்தமும், ஜைனமும், ஆஜீவகமும் மட்டும் தான்.
ஆதியும் அந்தமும் வைதீகமே என்ற கண்ணோட்டத்தில் இருந்து விடுபட்டு, சிரமண
சமயங்களின் புராதனம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
---
மயிலை சீனி.வேங்கடசாமி, புத்த கோவில்களும் விகாரங்களும்
வைஷ்ணவமயமாக்கப்பட்ட போது, தர்மசக்கர சின்னங்கள் மஹாவிஷ்ணுவுக்குரிய
சுதர்சன சக்கரமாக மாற்றப்பட்டதாக கூறியதாக ஞாபகம்
---
|| இதி விநோத³ஸ்ய த⁴ர்மசக்ரப்ரவர்த்தந: ஸமாப்தம்² || :)))
On Aug 15, 3:11 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/15 amachu <ramada...@amachu.net>:
> > க.>- Hide quoted text -
>
> - Show quoted text -
//அஷ்டமங்கள சின்னங்களில் தர்மசக்கரமும் ஒன்று//
மங்கலச் சின்னங்கள் பாரத மரபுக்கே சொந்தமானது.
ஸூர்ய-சந்த்ரர்கள், யானை,ரிஷபம் ,பசு/காமதேனு,
சத்ரம், சாமரம், நிறை குடம், தாமரை போன்ற சின்னங்களுள்
சிலவற்றை எல்லா ஆலயங்கள், கல்வெட்டுக்களிலும் காணலாம்.
அஷ்டமங்கலம் என்பதற்கு பௌத்தர் முதன்மை கொடுத்தனர்.
கனவுக்குப் பலன் சொல்லும் கலையும் தொன்மையானதுதான்.
தேடலின் பகுதியாகத் தவமியற்றச் செல்வதும், கழுவாய் தேடி
வடக்கிருப்பதும் எல்லோருக்கும் பொது.
//ஆதியும் அந்தமும் வைதீகமே என்ற கண்ணோட்டத்தில் இருந்து விடுபட்டு,
சிரமண சமயங்களின் புராதனம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.//
மறுப்பாக எழுந்த மதம் என்றால், எதற்கு மறுப்பு என்னும் கேள்வி எழும்;
புராதனம் எது என்று தானே விளங்கி விடும்.
தனி அங்கீகாரம் தேட வேண்டாம்.
உண்டு என்று சொன்னபின்தானே இல்லை என்று கூற முடியும் !
* இதி விநோத³ஸ்ய த⁴ர்மசக்ரப்ரவர்த்தந: ஸமாப்தம்²*
ஸமாப்தமாகவில்லையே; ஸமாரம்பமாக அல்லவோ
ஆகியுள்ளது !
தர்ம சக்கரத்தின் மீது முழு உரிமை புத்தருக்கா, மஹா வீரருக்கா, ஆதி
தீர்த்தங்கரர் ரிஷப தேவருக்கா ?
”ம்² ” - முடிவில் superscript எதற்கு ?
தேவ்
ம்² - அனுஸ்வாரம்
ம்³ - சந்திரபிந்து
> மறுப்பாக எழுந்த மதம் என்றால், எதற்கு மறுப்பு என்னும் கேள்வி எழும்;
> புராதனம் எது என்று தானே விளங்கி விடும்.
> தனி அங்கீகாரம் தேட வேண்டாம்.
> உண்டு என்று சொன்னபின்தானே இல்லை என்று கூற முடியும் !
வைதீகவாதிகளுக்கு அனைத்தையும் வேதங்களில் இருந்து தருவிக்க வேண்டும்.
இல்லையெனில் அவர்களுக்கு தூக்கம் பிடிக்காது.
பௌத்தம் பிரதானமாக வேத-விருத்³த⁴மாக எழுந்தது கிடையாது. புத்தர் போகிற
போக்கில் மற்ற தத்துவங்களுடன் சேர்த்து வைதீகத்தையும் விமர்சித்தார்
அவ்வளவே. அவர் நிக்ரந்தர்களையும்(ஜைனர்கள்) அவர்களின் கடுமையான
நோன்புகளையும் கர்ம தத்துவத்தையும், ஆஜீவகத்தையும், லோகாயவாதிகளையும்
முதலியவர்களையும் தான் முற்றிலும் மறுத்து விமர்சித்தார்.
அதனால் பௌத்தம் ஜைன-விருத்தமாக தோன்றியதாகவோ, ஆஜீவக-விருத்தமாக
தோன்றியதாகவோ அல்லது லோகாயத-விருத்தமாக தோன்றியதாகவோ கருதுதல் தகுமா ?
இதை முற்றிலும் மறுத்த ஒரு ஆய்வுக்கட்டுரையை எங்கோ வாசித்தேன். இணைப்பு
கிடைப்பின் இங்கு இடுகிறேன்.
பௌத்தம் வேத-விரோதமாகத்தான் எழுந்தது என்பது வைதீகவாதிகள் கிளப்பியது.
வைதீகவாதிகளுடைய வேத-மைய கண்ணோட்டம், அவர்களைச்சொல்லி குற்றமில்லை. இதே
வைதீகவாதிகள் தான், பின்னர் புத்தர் வேதாந்தத்தை போதித்தார் என்றும்
கூறினர் !!
வேத-விரோத புத்தர், வேதாந்த போதகரானது எப்படி என்று இவர்களுக்கே
வெளிச்சம் !!
ஜின சாசனத்தை அறியேன். எனினும், நீலகேசியில், நீலகேசி மீமாம்சவாதியுடன்
வாதிடும் போது, வேதங்களை அநாதியானது என்று ஜைனர்கள் கருதவில்லை
என்றாலும், முன்னோர்களின் நூல்களாக வேதங்களை ஏற்றுக்கொள்வதாக
கூறுகிறாள்.
> * இதி விநோத³ஸ்ய த⁴ர்மசக்ரப்ரவர்த்தந: ஸமாப்தம்²*
>
> ஸமாப்தமாகவில்லையே; ஸமாரம்பமாக அல்லவோ
> ஆகியுள்ளது !
புத்த சாசனம் இவ்வுலகில் மறையாத வரை தர்மசக்கரம் சுழலும் :))
> தர்ம சக்கரத்தின் மீது முழு உரிமை புத்தருக்கா, மஹா வீரருக்கா, ஆதி
> தீர்த்தங்கரர் ரிஷப தேவருக்கா ?
சரித்திர நோக்கில் ஜைன தீர்த்தங்கரர்ளுக்கு. அது மஹாவீரரா, பார்ஸ்வநாதரா
(அ) நேமிநாதரா அல்லது அதற்கும் முற்பட்டவர்களுக்கா என்பது தான் கேள்வி.
ஆதி பகவனான ரிஷப தேவர் வரலாற்றுகாலங்களுக்கு முற்பட்டவர்.
On Aug 15, 7:52 pm, devoo <rde...@gmail.com> wrote:
> Aug 15, 6:43 pm, வினோத் ராஜன்
>
> //அஷ்டமங்கள சின்னங்களில் தர்மசக்கரமும் ஒன்று//
>
> மங்கலச் சின்னங்கள் பாரத மரபுக்கே சொந்தமானது.
> ஸூர்ய-சந்த்ரர்கள், யானை,ரிஷபம் ,பசு/காமதேனு,
> சத்ரம், சாமரம், நிறை குடம், தாமரை போன்ற சின்னங்களுள்
> சிலவற்றை எல்லா ஆலயங்கள், கல்வெட்டுக்களிலும் காணலாம்.
> அஷ்டமங்கலம் என்பதற்கு பௌத்தர் முதன்மை கொடுத்தனர்.
> கனவுக்குப் பலன் சொல்லும் கலையும் தொன்மையானதுதான்.
>
> தேடலின் பகுதியாகத் தவமியற்றச் செல்வதும், கழுவாய் தேடி
> வடக்கிருப்பதும் எல்லோருக்கும் பொது.
>
> //ஆதியும் அந்தமும் வைதீகமே என்ற கண்ணோட்டத்தில் இருந்து விடுபட்டு,
> சிரமண சமயங்களின் புராதனம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.//
>
>
>
>
> தேவ்
PostPosted: Sun May 27, 2007 12:24 am Post subject: Valluvar and
Prabandam Reply with quote
I am reproducing what is one of the articles in Tirukural Conference
for reading, and though I am perfectly aware Valluvar is Vedic, to put
him as Saivaite or Vaishnavite is wrong; this is just for a reading
and grosping
திருக்குறளும் திவ்ய்யபிரபந்தமும ; தே.இந்திரகுமார்.
முனனுரை: ஒரு தனிமனிதன் அறவழியில் நின்று வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்தால் வானுலகின் தெய்வத்துள் வைக்கப்பட்டுவான் என்று அறம்
உணர்த்தும் இலக்கியமே திருக்குறளாகும். ஒரு தனிமனிதன் பக்தியில் திளைத்து
நாத்தழும்பேற நாராயணா என்றுரைத்தால் மீண்டும் பிறாவாப் பேரின்ப நிலையை
அடைவான் என்று அறிவுரைப்பது ஆழ்வார்களின் திவ்யபிரபந்தமாகும். இறைவன்
அறவடிவாய்த் திகழ்பவன் என்பதாலும் ஒரே கடலில், சங்கமிக்கும் ஆறுகளைப்
போலத் திருக்குறளும் திவ்யபிரபந்தமும் மானுடம் சிறத்தலையே
வலியுறுத்துவதாலும், சமயநூலாகிய
திவ்யபிரபந்தமும் அறநூலாகிய திருக்குறளும் பல இடங்களில் ஒன்றையொன்று
ஒத்திருக்கும் தன்மையினைச் சுட்டிக்காட்டுவதே இவ்வாய்வுக் கட்டுரையின்
நோக்கமாகும்.
சமயநூலும் அறநூலும்:
சமயம் என்பது கடவுட் கொள்கையைப் பின்பற்றுவோர் வகுத்துக் கொண்ட ஒரு
ஒழுக்கநெறியாகும். ஐம்புலன்களின் மூலமாகத் தோன்றுகின்ற வேட்கைகளைக்
களைந்த நிலையில் இந்நெறியைப் பெறலாம் என்பது சமயவாதிகளின் கோட்பாடாகும்.
அதாவது கடவுள் இருப்பில் நம்பிக்கை கொண்டு உலகப் படைப்பின் உட்பொருளை
உணர்ந்து ஒழுகும் வாழ்க்கை நெறியே சமயம் அல்லது மதம் எனக்
குறிப்பிடப்படுகிறது.
திவ்ய்யபிரபந்த்தம் : மனிதன் இறையாற்றலின் மீது கொண்டிருக்கும் அளவற்ற
நம்பிக்கையினை சடங்குளாலும், மந்திரங்களாலும் பலவகைப் பாடல்களாலும்
புலப்டுத்துகிறான். அவ்வகையில் திருமாலின் மீது அளவற்ற பக்தி கொண்டு
அவனது திருக்குணங்களில் ஆழங்காற்பட்டு பன்னிரு ஆழ்வார்கள் பாடிய
பாசுரங்களின் தொகுப்பே நாலாயிரதிவ்யபிரபந்தம் எனப்படுகிறது.
திருக்குறள் :
இவ்வுலகில் மானிடராய்ப் பிறந்தவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறியின்
அடிப்படையே அறம் எனப்படுகிறது. இத்தகைய அறத்திற்கு வழிகாட்டுவது எண்ணமே
ஆகும். எண்ணம் தூய்மையானால் மட்டுமே சொல்லும் செயலும் சிறப்படையும்,
எண்ணங்களுக்கு நிலைக்களனாய் இருப்பது மனம். எனவே மனம் மாசற்று தூய்மையாக
இருக்கும் நிலையே அறநிலையாகும். ஒவ்வொருவரும் இந்நிலையைப் படிப்படியாக
அடைவதற்கு சிறந்த வழிகாட்டும் நூலே திருக்குறளாகும்.
சமயமும் அறமும் ஒன்றே : வாழ்வியல் நெறிகளைக் கண்ணன் அர்சுனனுக்கு
எடுத்துரைக்கும் கீதை தா;மஷேத்ரே" எனும் சொல்லுடனே தொடங்குகிறது.
~எப்பொழுதெல்லாம் தாமம் நிலைகுலைந்து அதாமம் ஓங்குகிறதோ அப்பொழுதெல்லாம்
நான் பிறவியெடுப்பேன் எனும் கண்ணபிரானின் வாக்கின்படி இறை அவதாரங்கள்
வலியுறுத்துவதும், காக்க முற்படுவதும் அறமே என உணரலாம். தமிழ்
இலக்கியங்கள்
பலவற்றிலும் சமயமும் அறமும் ஒன்றென நமது முன்னோர் குறிப்பிட்டுள்ளதைக்
காணமுடிகிறது.
அறுதொழில் அந்த்தணர் அறம்பூந்து
அறந்து;துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
அன்றியும் அரசனும் ஒன்றெ அரசன் யான்
எனவே சமயமும் அறமும் ஒன்றையொன்று சார்ந்தும். கருத்துக்களில் ஒன்றியும்.
வாழ்வியல் கொள்கைகளை உள்ளடக்கியும் உள்ளன எனலாம். காலத்தை வென்றவை
எந்த வொரு இலக்கியத்தின் சிறப்பும் அது தோன்றிய காலத்தின் அடிப்படையில்
ஆய்வு செய்யப்படும் மட்டுமே முழுமையாக வெளிப்படுகிறது. களப்பிரா;
காலத்தில் மக்களிடையே பொய், களவு. ஊழல், ஒழுக்கமின்மை போன்றவை
மேலோங்கிவிட்ட காரணத்தால் நீதிக் கருத்துகளை வலியுறுத்தும் இலக்கியங்கள்
தேவைப்பட்டன. இவ்வகையில் தோன்றிய அறநூல்கள் பலவற்றுமள்
திருக்குறளே மிகச்சிறந்த நூலாய் எக்காலத்திலும் எந்நாட்டவருக்கும் ஏற்ற
ஒப்பற்ற பொதுநூலாய்த் திகழ்வதால்.
எப்ப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்ப்பால் மொழிந்த மொழி
எனப் பாராட்டப்படுகிறது. சமண பெளத்த மதங்களுக்கு ஆதரவளித்து வந்த
களப்பிரான் அரசியல் செல்வாக்கு ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வலுவிழக்க,
தெற்கே பாண்டியர்களும் வடக்கே பல்லவர்களும் அவர்களை வென்று இருந்து
சமயத்திற்கு புத்துயிரளித்தனர். சமயகாலமாகிய பல்லவர் காலத்தில்
தோன்றியவர்களே ஆழ்வார்கள் என்றாலும் இதற்கான சான்றுகள்
கிடைக்கப்பெறவில்லை. மக்களுக்கு சமய சமூகம் பொருளாதாரம் அரசியல் ஆகியனப்
பற்றி தெளிவான கருத்து தேவைப்பட்டதையும் வள்ளுவர் அறிந்தார். மக்களின்
தேவையைப் பூர்த்தி செய்ய எழுந்ததே திருக்குறள். வள்ளுவர் சமயத்தைப்
புறக்கணிக்கவோ அல்லது வெறுக்கவோ பயனற்றது என்றொ கருதவில்லை7 இன்றளவும்
உலகப் பொதுமறையாய் அறிஞர் உள்ளங்களில் தெள்ளமிழ்தாய்த் திருக்குறள்
தித்திப்பதாலும், பாலேய்த் தமிழ் என வைணவர்களால் போற்றப்படும் ஆழ்வார்ப்
பாசுரங்கள் வைணவ இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் பாராயணம்
செய்யப்படுவதாலும் காலத்தை வெல்லும் தன்மையில் இரண்டு இலக்கியங்களும்
ஒத்துள்ளன.
திருக்குறள் மொழியும், திருவாய் மொழியும்:
திருக்குறள் காலத்திற்குப்பிற்பட்டவரான, ஓதாதுணர்ந்த ஞானச் செல்வரான
நம்மாழ்வார் நான்மறைகளுடன் திருக்குறளையும் நன்கு கற்றறிந்தவர் என்பதை
அவரது திருவாய் மொழிப் பாசுரங்கள் உணர்த்துகின்றது. பல குறட்பாக்களின்
தொடர்களும், பொருள் ஒப்புமைகளும் திருவாய்மொழியில் இடம்பெற்றுள்ள தன்மையே
இதற்குச் சான்றாகும்.
தொல்காப்பியர் காலத்திலேயே வாழ்க்கைப் பயணத்திற்குத் துணையாகச் சேயோன்,
மாயோன், வேந்தன், வருணன; போன்ற கடவுளர்கள் வணங்கப்பட்டனர் என
அறியமுடிகிறது. காலம் செல்லச் செல்ல அந்தந்த நிலத்தில் வாழுகின்ற மக்கள்
தத்தம் நிலவளத்திற்கு ஏற்பப் பெயரமைந்த கடவுள்கள் யாவும் ஓரே பரம் பொருளை
உணர்த்துகின்றன என்ற கொள்கையை மறந்து தெய்வங்களுக்குள் ஏற்றத்தாழ்வினை
விளைவித்தனர். இச்சூழலில் வள்ளுவரோ இறைவன், மெய்பொருள், செம்பொருள் எனும்
பொதுப் பெயர்களால் இறைவனைக் குறிப்பிடுகிறார்.
ஆதிபகவன் :
அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும்
விலக்கியன ஒழிதலுமாம் என்பது பரிமேலழகரின் கூற்று. அதன்படி மனிதராய்ப்
பிறந்தவர்கள் கடவுளை வாழ்த்தி வணங்குவதையே தமது தலையாய் அறமாகக்
கொள்ளவேண்டும் என உணர்த்த விரும்பிய வள்ளுவர் எல்லாம் வல்ல இறைவனை
ஆண்பால் விகுதியுடன் ‘ஆதிபகவன்’ என்றழைக்கிறார். அறத்தை வலியுறுத்துவதையே
தனது குறிக்கோளாகக் கொண்ட வள்ளுவர் அறவடிவாய்த் திகழும் இறைவனது
சிறப்புகளை விளக்க முற்படும்போது ‘அறம’; எனும் சொல்லின் முதலெழுத்தாகிய
அகரத்துடன் ஒப்பிடுவது நயமிக்க ஒன்றாகும். அகரம் தனித்தும் உயிர்
எழுத்துக்களுடன் நுட்பமாய்க் கலந்தும், மெய்யெழுத்துக்களுடன் இணைந்தும்
இயங்குகிறது. இறைவனும் சார்பு ஒன்றின்றித் தனித்தும். உலக உயிர்களுடன்
கலந்தும், அவற்றின் வினைகளுக்குமச் சான்றாய் நின்றும் உலகினை
இயக்குகிறான்.
திருமாலின் இத்தன்மையை நம்மாழ்வார்.
புலனொடு புலன் அவன் ஒழிவிலன் : பரந்தஅந்
நலனுடை ஒருவன்
எனப் பாராட்டுகிறார் எழுத்துக்களில் நான் அகரமாயிருக்கிறேன் என்பது
கண்ணபிரான் கூற்று. வைணவத் திருவெட்டெழுத்து மந்திரத்தின் முதல் பதமான
ஓம் என்பதில் அடங்கியுள்ள அ, ம, உ எனும் எழுத்துகளில் முதன்மையாவதும்
அகரமேயாகும். மேலும் பகவான் எனும் வடசொல் விகாரமாய் பகவன் என முதற்
குறளில் இடம்பெற்றுள்ளது. பேராளுமை, வீர்யம்,; புகழ் செல்வம், அறிவு,
பேரறிவு இவை ஆறு குணங்களையும் கொண்டவரே ‘பகவான’; எனப்படுகிறார். திருமாலே
இத்தகைய குணங்களைக் கொண்டவன் என்பதை நம்மாழ்வார்.
கணக்கறு நலத்தினன் அந்தமில்
ஆதிஅம் பகவன்
எனும் பாசுரவடிகளில் உணர்த்துகிறார். ஆதிமூலமாய்த் திகழும் திருமால்
திருப்பாற்கடலில் ஆதிசேடனாகிய பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கிறான்.
திருமாலின் இத்தன்மையினை.
முழுமூ வுலகாதிக் கெல்லாம் முதல்தனி உன்னை
ஆதியான் வானவர் ஆதி என்கோ
எனப் பலவாறாக நம்மாழ்வார் பாடிமகிழ்கிறார்.
அறவாழி அந்தணன் :
அறக் கடவுளாகிய திருமாலின் திருக்கரத்திலுள்ள சக்கரம் அறச்சக்கரம்
எனப்படுகிறது. அண்டங்கள் அனைத்தையும் உருவாக்குதலும் நிலைபெறச் செய்தலும்
பின்பு அவற்றை நீக்குதலுமாகிய முத்தொழில்களையும் இடைவிடாமல் அவன் செய்து
வருவதையே அச்சக்கரச் சுழற்சி உணர்த்துகிறது.
அத்தகைய பேராற்றல் மிக்கவனின் திருவடிகளை அடைந்தவர்களைத் தவிர
மற்றவர்களால் பொருட்கடலையும் அதனால் உண்டாகும் சிற்றின்பக் கடலையும்
கடக்க இயலாது என உணர்த்துகிறார் வள்ளுவர். அறச்சக்கரத்தை ஏந்திய அறவோனாய்
திகழும் திருமாலையே அறவாழி
அந்தணன் என்கிறார்.
அந்தணர் என்போர் அறவோர் என மற்றொரு குறளில் வள்ளுவர் இக்கருத்தினைத்
தெளிவுபடுத்துகிறார். பிறவித் துயர் நீங்க பற்றறுத்து ஞானநிலையில் ஊன்றி
நின்று ஆன்ம ஒளியைக் காண விரும்புவோர் அறவோனாய் ஆழிப்படை ஏந்திய
அருளாளனாகிய மாயவனை மறதியின்றி மனதில் வைத்துப் போற்றுவர் என்பது
நம்மாழ்வா¡¢ன் கூற்று.
அறவனை ஆழிப்படை அந்தணனை
மறவியை யின்றி மனத்துவைப் பாரே
எனும் பாசுரவடிவகளில் இவ்வாறு வள்ளுவா¢ன் கருத்தினை ஆழ்வார்
வழிமொழிகின்றார். திருமாலின் திருக்கையிலுள்ள ஆழி தீயவர்களைத்
தண்டிக்கும் இயல்புடையதால் ஆழிப்படை எனப்பட்டது.
மூலம் தஸ்கி வடிவில்: http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1017307
மிக அருமையான கட்டுரை.
அகிம்சை என்பதன் ஆழ்பொருள் புரிந்தது.
உணவு என்பது சக்தி. உயிரோட்டம், உலகோட்டம் (அண்டங்களையும் சேர்த்து)
எல்லாமே சக்தி விளையாட்டுதானே! எங்கெங்கு காணினும் சக்தியடா! என்பதுதானே
நிதர்சனம்.
உணவு என்பதே நம் கர்மச்சுழற்சியின் அடிவேர் என்பதுதான் எவ்வளவு உண்மை.
ஆயினும், உடலைப் பேணாமல் உயிர் எப்படி வளர்க்க முடியும்? உயிர் வளர்த்தலே
பாவம் எனில், அது எப்படி இயற்கைக்கு ஒத்துப்போகும்? எவ்வளவோ அபூர்வமான
நற்கருத்துக்களை இந்நெறி கொண்டிருந்தாலும் இயற்கைக்கு முரணான
கருத்தாக்கம் கொண்டதால் இது புறம் தள்ளப்பட்டதோ?
உணவு உண்ணாமல் வாழமுடியும், அதுவும் பட்டினிச்சாவு என்றில்லாமல்,
அன்புடனும், ஆசையுடனும் வாழமுடியுமென்று ஸ்வாமி பரமஹம்ச யோகாநந்தர் தமது
யோகியின் சரிதம் எனும் நூலில் விளக்குகிறாரே!
ஊனுடம்பு ஆலயம் எனும் திருமூலர் கருத்தும்,
எல்லாவற்றிலும் வாசுதேவனைக் கண்டு உருகும் ஆழ்வார்களின் பாவமும், உம்.
உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்
என்று கண்ணீர் மல்கி (தி.மொ)
என்பது எவ்வளவு ஆறுதலாக, இயற்கையாக அமைந்துள்ளது. `ஊழிதோறும் தன்னுள்ளே
படைத்து காத்து கெடுத்து உழலும்` எனும் பாசுரத்தின் கடைசி வரி
முக்கியமாகப்படுகிறது. அது என்ன, `உழற்சி`? ஆம்! இச்சக்தி சுழற்சிக்கு
பொருளேதும் சொல்லமுடியாது. எனவே அது உழற்சி. எனவே உண்ணுதல் `கருமம்`
எனக்கொண்டு அதனை ஒதுக்க முற்படுதல் நலமோ?
இவர் (Padmanabh Jaini) கருத்தை வைத்துப் பார்த்தால் காம இன்பத்தை மிக
உயர்வாகப் பேசும் வள்ளுவனை எப்படிச் சமணன் என்று வாய்கூசாமல்
சொல்லமுடிகிறதோ?
வள்ளுவன், தமிழன், நல்ல தந்தை, நல்ல காதலன், நல்ல அறவான், நல்ல அந்தணன்
(ஜாதி அடிப்படையில் அல்ல), நல்ல இந்து என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
க.>
திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதி பகவன்:
http://www.jainworld.com/JWTamil/jainworld/sripalbooks/tvalluvar_adibhagavan_1.html
(TSCII)
அப்பாடி! அங்கே போனால் ஆழிப்படை நிற்கிறதே! இது என்ன கர்மம்?
க.;-)
எச்சரிக்கையை புறக்கணியுங்கள். :-)
On Aug 16, 7:57 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/16 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>:
>
> > திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதி பகவன்:
>
> >http://www.jainworld.com/JWTamil/jainworld/sripalbooks/tvalluvar_adib...
> > (TSCII)
>
> அப்பாடி! அங்கே போனால் ஆழிப்படை நிற்கிறதே! இது என்ன கர்மம்?
>
> க.;-)
>
> attack site!.jpg
> 44KViewDownload
நீங்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வைதீக சமயங்களுக்கு முற்பட்ட சமயங்கள்
என்று நீங்கள் காணும் சமயங்கள் பற்றி எங்களுக்குச் சொல்ல வேண்டும்.
இது நம் வேர்களைப் பற்றி அறியும் முயற்சியாகக் காண்கிறேன். சிறிய, சிறிய
அறிமுகம் கூடப் போதும். நமது மெய்யியல் வரலாறு எமக்கு என்றும் பாடமாக
இருந்ததில்லை. கேட்டால் செகிலுலர் என்று சொல்கிறார்கள் ;-)
நன்றி.
க.>
2009/8/16 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
சமயம் என்ற சொல்லின் வேர் 'சமை' (பக்குவப்படுதல்) ஆகும். உணவை பக்குவப்
படுத்தும் முறை சமையல். அறம் என்பதும் மக்களை நல்வழிப் படுத்தும்
பொருட்டு சொல்லப் பட்டதுதான். ஒரு சமயத்தை பின்பற்றுவோர்க்கு மற்ற சமயக்
கொள்கைகள் தவறாகத் தெரிவது இயல்பு. இதனாலேயே இது மதமாகிறது.
ஒரு சூழலில் நடைபெறும் ஒரு செயல் குறிப்பிட்ட சமயத்தை பொறுத்து தவறாகவோ,
சரியாகவோ அமையலாம்; ஆனால் அறத்தின் வழியில் இது சரி, இல்லை தவறு என
இரண்டில் ஒன்றைக் கூற முடியும். சமயம் மக்களைப் பிரிக்கிறது, அல்லது
சமயத்தின் பெயரால் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். அறம் மக்களைச்
சேர்க்கிறது.
சமயம் என்பது பக்குவமில்லாதவர்களுக்காக, இவர்கள் பக்குவமடைந்து விட்டால்
இவர்களை மேலும் எதற்கு சமைக்க வேண்டும் ? அறம் என்பது அடுத்த நிலை;
பக்குவமானவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது.
பக்குவமில்லாதவர்களுக்கு அறத்தை போதிக்க முடியாது; இவர்களிடம்
கோயிலுக்குப் போ, அங்கே சாப்பிட பிரசாதம் கொடுப்பார்கள் என்றுதான்
சொல்லமுடியும்.
சமயம் திருக்குறள் எந்த சமயம் என்று தேடும், அறம் எந்த நீதி / சமய நூலாக
இருந்தாலும் அதிலுள்ள அறத்தை பார்க்கச் சொல்லும். அறம் சிந்திக்க
சொல்லும்; சமயம் நம்பச் சொல்லும்.
அறமும் சமயமும் வேறு வேறாகத்தான் தோன்றுகிறது...
பாகவதத்திலேயே வேள்விகள் நடத்துவது எதிர்த்து நாரதர் வாதம் புரிகிறார். பூமி முழுவது தர்ப்பைபுல்லால் நிரப்பிய மன்னனுக்கு (பெயர் ஞாபகம் வரவில்லை) அறிவுரை கூறும் படலம் உண்டல்லவா? அது என்ன இடைச்சேர்க்கையா?
//பாகவதத்திலேயே வேள்விகள் நடத்துவது எதிர்த்து நாரதர் வாதம்
புரிகிறார்//
உள்நோக்கம் அறிந்துகொள்ளாமல் சடங்காகவும், ஆடம்பரமாகவும் செய்யப்படும்
வேள்விகள் எக்காலத்திலும் நிந்தனைக்குரியவை.துறவு நிலைக்கு ஒருவனை
மேம்படுத்துவதே
விரிவான, கடினமான கர்மங்களின் நோக்கம்.
‘க்ருபணா: பல ஹேதவ:’- பலனில் நோக்குடன் செய்யும் கர்மங்களைக் கண்ணனும்
நிந்திக்கிறான்.
வயிற்றுப் பிழைப்புக்காகத் துறவு மேற்கொள்வதை ஆதி சங்கரர்
நிந்திக்கிறார்.
கர்மமே பலன் தந்துவிடும் என்று ஈசுவரனை மறுத்த/மறந்த தாருகவனத்து
ரிஷிகளின் செருக்கை
சிவ பெருமான் அழித்தார்.
தெய்வத்தின் குரலில் அழகாக விளக்கப்படுள்ளது.
தேவ்
இது நிச்சயம் சுவாரசியமான கேள்வி.
ஆதி மனிதர்களை இன்றும் கண்ணுறும் வண்ணம் இருப்பதால், கற்காலம்,
இரும்புகாலம், பொற்காலமென வளர்ச்சியுற்றிருப்பது தெரிகிறது. ஆயினும்,
இந்தியாவின் மிக ஆழமான தத்துவப்புரிதல் சில கேள்விகளையும் நம் முன்னே
வைக்கிறது. அது உண்மையில் பரிணாம வளர்ச்சியா? இல்லை ரிஷிகள் என்பவர்கள்
எப்போதும் உயர் ஞான நிலையில் இருந்து, பாமர (சம்சாரிகள்) ஜனங்களைத்
திருத்தி வந்திருக்கிறார்களா? இந்திய மெஞ்ஞானம் இறைவனே அவதாரங்கள் மூலம்
இச்செயலில் பங்கேற்பது போல்தான் காட்டப்படுகிறது. நம்மாழ்வார்
திருவாய்மொழியைப் புரிந்து கொண்டால் கலி காலமே எக்காலத்திலும் உயர்வானது
என்பது புரியும். இறைவன் ஊர்க்கோடியில், தெரு முனையில், மூலை முடுக்கு
என்ற அர்ச்சாவதாரத்தில் நிற்கிறான். நமக்குத்துணையாக லடசோபலட்சம்
சாதுக்கள் (அடியார்கள்) உள்ளார்கள். இவ்வளவு இருந்தும் நாம் இறை வழி
செல்லாமல் 'டேக்கா' கொடுத்துக் கொண்டு இருப்பதே வியாக்கியானங்களில்
பிரஸ்தாபிக்கப்படுகிறது. எனவே ஆதிமனிதனும், உயர்நிலை கண்ட மனிதனும் சமகால
சிருஷ்டிகளே. எனவே வேதம் மணற்கேணி போல் என்றும் நிற்பது புரியும்.
தாகமெடுத்தவனுக்கு நீர் கொடுக்க அது என்றும் நிற்கும் மடு (இதுவே
இறைமையின் ஆகச்சிறந்த நீர்மை)
வர, வர பரிணாமக்கோட்பாடே என்னுள் சந்தேகத்தை உருவாக்கி வருகிறது.
நம் பார்வையில் ஏதோ கோளாறு என்று தெரிகிறது. பாரதி பேசும் தோற்றப்பிழையோ?
(எனக்குத்தான் சொல்லிக்கொள்கிறேன். இப்போதெல்லாம் யாரையும் சுட்டுவதற்கு
முன் என்னைச் சுட்டும் பிற விரல்களே கண்ணில் படுகின்றன ;-)
கண்ணன்
தாங்கள் என்னுடைய கேள்வியை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்
கர்ம காண்டம், ஞான காண்டம் என்ற பதமே எப்போது வந்தது? வேதம் ஞானம் என்றால் எங்கேயிருந்து கர்மம்?
அப்படியாயின் கர்மம் முக்தியை தராதா என்ன?
ஒரு பக்கம் வேள்வித்தீ வழிபாடுகள், கர்மத்தின் அவசியம், மேலும் கர்மரஹஸ்யம் என்றெல்லாம் ஆராய்ச்சிகள். மற்றோரு பக்கம் உலகின் மூலமாக இறைவனை அறிய, உடம்பை ஆதாரமாக வைத்து அறிவை பெருக்கி இறைவனை/இயற்கையை அடையும் வழிகள்.
நிலமை இப்படி இருக்க வேதம் ஞானம் என்றால் அதிலிருந்து மூன்று தத்துவங்களுக்கும் மேற்கோள் காட்டுவது எவ்வாறு?? மூன்று விதமான விஷ்ணு சகஸ்கர நாமங்கள் இருப்பது போலா?
எனக்கு வேண்டிய மாதிரி நான் அர்த்தம் பண்ணிக்கொள்வதா?
வேதாந்தம் எனும் நுணுக்கவியலை (analytical methodology) இவ்வளவு
எளிமைப்படுத்த (கொச்சைப்படுத்த என்பது கடுமையாகத் தோன்றும்) முடியுமா?
வேதாந்த சாகரம் என்றுதான் அதில் ஆழங்காட்பட்ட எல்லோரும் சொல்கிறார்கள்.
கடல் விஸ்தாரமானது, ஆழமானது. கடலை முழுவதும் ஆராய்ந்து அறிந்துவிட்டோம்
என்று அறிவியல் கூடச் சொல்வதில்லை!
வேதம் மிகத்தெளிவாகச் சொல்கிறது, இறைமை அறிவினால் எட்டமுடியாதது என்று.
வேதாந்தம் என்பது ஞானவழி. அது வெறும் pointer தான். கைகாட்டியை
கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதோ, குற்றம் சொல்வதோ வேடிக்கையாக உள்ளது!
வேதாந்தம் என்பது சும்மா திண்ணைப்பேச்சு அல்ல. உண்மையை அறிந்து கொள்ளும்
தீவிரம் உள்ளோருக்கு மட்டுமே அதன் அருமை புரியும். அந்தத் தீவிரமும்,
வீச்சும் இந்த மின்வெளியில் உள்ளதா? வேதாந்த விசாரங்களில் மூழ்கி,
அதற்காக உயிர் துறந்தோர் வரலாறு எல்லாம் இந்திய மண்ணில் உண்டு.
அவரவர் போக்குக்கு, அவரவர் அர்த்தம் பண்ணுவது எனும் எள்ளல் கூடாது. பாரதி
கவிதை எளிமையானது என்று சொல்கிறார்கள். ஆனாலும் அதில் ஆயிரம் உள்ளர்த்தம்
உண்டு என்கிறார் ஹரிகி. இது ஏளனமானதா? பாரதி கவிதையில்தான் குறையா?
க.>
வேதம் சொல்வதெல்லாம் உண்மை என்றால் ஆராய்ச்சி தேவையில்லை.