புதிய தலைமுறையில் எமது பள்ளி

66 views
Skip to first unread message

kavi senguttuvan

unread,
Jan 25, 2010, 12:51:51 PM1/25/10
to anbudannilavan, ARIVUDAINAMBI S, ad...@balavasanthapathippagam.com, Amudam Editor, thin...@yahoo.com, msmuthu...@yahoo.co.in, dir...@tn.nic.in, d...@tn.nic.in, editor....@gmail.com, edi...@keetru.com, edi...@pudhucherry.com, fmu...@tamilcultureandcivilization.org, N. Ganesan, pugazhenthi henthi, K N.SHANTHI LAKSHMANAN, Natkeeran L.K., mint...@googlegroups.com, Maalan, senthil nathan vidthya, rathina pugazhendi, puthiya thalaimurai, Rathina Vengadesan, rajend...@yahoo.co.in, spd_...@yahoo.co.in, tamil-inaiya...@googlegroups.com, uthang...@gmail.com, P.Srini vasan
அன்பிற்கினியீர் வணக்கம்.
                     இத்துடன் இவ்வார புதிய தலைமுறை இதழில் இடம்பெற்ற எமது பள்ளி பற்றிய சிறப்புக் கட்டுரையை இணைத்துள்ளேன். தாங்கள் அதை வாசித்து பின்னர் அது தொடர்பான கருத்துக்களை அந்த இதழுக்கும், எனக்கும் தெரிவிக்கவும்.

அன்புடன்............
 
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி : 9842712109 / 9965634541,
தொலைபேசி : 04341- 223011 / 223023.
மின்னஞ்சல் :
rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ :  http//pumskottukarampatti.blogspot.com


இதழ் முகவரி :
ஆசிரியர்,
புதிய தலைமுறை,
அஞ்சல் பெட்டி :4990,
சென்னை - 600017.
Raji.pdf

PENNESWARAN KRISHNA RAO

unread,
Jan 25, 2010, 1:52:04 PM1/25/10
to mint...@googlegroups.com

அருமை செங்குட்டுவன்.

மிகவும் பெருமையாக இருக்கிறது.  கிருஷ்ணகிரியில் எங்கள் நண்பர் சனத்குமார் நடத்தும் கேம்பிரிட்ஜ் பள்ளி பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

உங்கள் ஊர் எனக்கு மிகவும் பிடிக்கும்.  ஊருக்கு வரும்போதெல்லாம் அனுமன் தீர்த்தத்துக்கு வந்து போவேன். 

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/1/25 kavi senguttuvan <kavi.sen...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
http://www.vadakkuvaasal.com/

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 25, 2010, 9:26:16 PM1/25/10
to mint...@googlegroups.com
kavi senguttuvan wrote:
தாங்கள் அதை வாசித்து பின்னர் அது தொடர்பான கருத்துக்களை அந்த இதழுக்கும், எனக்கும் தெரிவிக்கவும்.

நேற்றைய தினம் வாசித்தேன்.

சிறப்பாக இருந்தது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

--

ஆமாச்சு

N. Kannan

unread,
Jan 25, 2010, 9:29:51 PM1/25/10
to mint...@googlegroups.com
கவி செங்குட்டுவனுக்கு எம் வாழ்த்துக்கள்.

நாங்கள் படித்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய அணிகளென்று மானவர்களைப்
பிரித்து, பள்ளி ஆரம்பிக்கும் முன் குப்பை கூளங்களை சுத்தம் செய்யச்
சொல்வர். எங்கள் பள்ளி எப்போதும் பளிச்சென்று இருக்கும். அப்போது (திமுக
ஆட்சிகளுக்கு முன்) பள்ளி ஆசியர்கள் (அதுவும் தமிழாசிரியர்கள்) வேலை
ரொம்ப டிமாண்டு. அவர்கள் மதிக்கப்பாட்டார்கள். பொதுவாக பள்ளி வாழ்வு
இனிமையாக இருந்தது.

கண்ணன்

2010/1/26 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:

devoo

unread,
Jan 25, 2010, 11:07:21 PM1/25/10
to மின்தமிழ்
செங்குட்டுவன் அவர்களுக்கு நன்றி;
ஊக்கமூட்டும் செய்தி, அரசுப் பள்ளிகளைத் தனியார் பொறுப்பேற்று நடத்தும்
திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரிகிறது; கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில்
இதற்கு வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் இதன் நிலை என்ன? சற்று
விரிவாகக் கூற முடியுமா ?

தேவ்

kavi senguttuvan

unread,
Jan 28, 2010, 5:27:45 AM1/28/10
to mint...@googlegroups.com
அய்யா, தேவ் அவர்களுக்கு வணக்கம். தாமத பின்னூட்டத்திற்கு மண்ணிக்கவும்.
அரசு பள்ளிகளை தனியார் ஏற்று நடத்துவது தொடர்பாக கருத்து
கேட்டுள்ளீர்கள். மற்ற மாநிலங்களில் இதன் நிலை பற்றி ஆய்வதை விட நமது
தமிழகத்தின் எதார்த்த நிலை பற்றி மட்டும் ஆய்ந்தால் எனது முழு முதல்
கருத்து தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் மயம் ஆக வாய்ப்புகளே இல்லை.
காரணம் இன்றைய நிலையில் தமிழகத்தில் 34180 துவக்கப் பள்ளிகளும், 9938
நடுநிலைப் பள்ளிகளும், 4574 உயர்நிலைப் பள்ளிகளும், 5030 மேல் நிலைப்
பள்ளிகளுமாக மொத்தம் 53722 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,50,26,241
மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் பெண் குழந்தைகள் மட்டும்
73,65,444 பேர் ஆவர். இந்நிலையில் அரகப் பள்ளிகள் தனியாரிடம்
ஒப்படைக்கும் நிலை ஏற்படுமேயானால் இவ்வளவு மாணவர்களின் கல்வி கேள்விக்
குறியே! கவி. செங்குட்டுவன்

devoo

unread,
Jan 28, 2010, 5:47:11 AM1/28/10
to மின்தமிழ்
விடை கூறியதற்கு நன்றி,
கல்வியை வணிகமாக்குவதற்கு எந்தத் தரப்பிலிருந்தும் என்றும் ஆதரவு இருக்க
வாய்ப்பில்லை; நான் வினவியது கொடையுள்ளம் கொண்ட ஆர்வலர்கள் பொறுப்பேற்று
நடத்துவது பற்றி. அண்மையில் வெளியான செய்தி ஒன்றுதான் இக்கேள்விக்குக்
காரணம் –

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உ.சகாயம் இணையத்தில் சொத்துக் கணக்கை
பஹிரங்கமாக வெளியிட்டவர்; ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் இவர் ஒருவரே முதல்
முறையாக இவ்வாறு செய்தவர். இவர் திடீர் விஜயமாகக் கல்பாளையம் நடுநிலைப்
பள்ளிக்குச் சென்றார். மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் நேதாஜி போஸ்
பற்றிக் கேட்டாராம்; விடை இல்லை. பின்னர் ’காமராஜர் யார் ?’ என்று
கேட்டிருக்கிறார்; அதற்கும் விடை இல்லை. நடிகர் விஜய் பற்றிக்கேட்டதும்
கோரஸாக விடை வந்தது.

நொந்துபோன சகாயம் தேசத்தொண்டு செய்த பெரியோரின் படங்களை மாட்டி,
அவர்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆலோசனை கூறிச் சென்றார். இவர்
காட்டும் நேர்மையால் வருமானத்தை இழந்த மற்ற அதிகாரிகள் வழக்கம்போல் இவரை
டம்மி போஸ்டில் மாற்ற முயன்று வருவது கொசுறுத் தகவல்

தேவ்

On Jan 28, 4:27 am, kavi senguttuvan <kavi.senguttu...@gmail.com>
wrote:


> அய்யா, தேவ் அவர்களுக்கு வணக்கம். தாமத பின்னூட்டத்திற்கு மண்ணிக்கவும்.
> அரசு பள்ளிகளை தனியார் ஏற்று நடத்துவது தொடர்பாக கருத்து
> கேட்டுள்ளீர்கள். மற்ற மாநிலங்களில் இதன் நிலை பற்றி ஆய்வதை விட நமது
> தமிழகத்தின் எதார்த்த நிலை பற்றி மட்டும் ஆய்ந்தால் எனது முழு முதல்
> கருத்து தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் மயம் ஆக வாய்ப்புகளே இல்லை.
>  காரணம் இன்றைய நிலையில் தமிழகத்தில் 34180 துவக்கப் பள்ளிகளும், 9938
> நடுநிலைப் பள்ளிகளும், 4574 உயர்நிலைப் பள்ளிகளும், 5030 மேல் நிலைப்
> பள்ளிகளுமாக மொத்தம் 53722 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,50,26,241
> மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் பெண் குழந்தைகள் மட்டும்
> 73,65,444 பேர் ஆவர். இந்நிலையில் அரகப் பள்ளிகள் தனியாரிடம்
> ஒப்படைக்கும் நிலை ஏற்படுமேயானால் இவ்வளவு மாணவர்களின் கல்வி கேள்விக்
> குறியே!                கவி. செங்குட்டுவன்
>
> On 1/26/10, devoo <rde...@gmail.com> wrote:
>
> > செங்குட்டுவன் அவர்களுக்கு நன்றி;
> > ஊக்கமூட்டும் செய்தி, அரசுப் பள்ளிகளைத் தனியார் பொறுப்பேற்று நடத்தும்
> > திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரிகிறது; கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில்
> > இதற்கு வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில்  இதன் நிலை என்ன? சற்று
> > விரிவாகக் கூற முடியுமா ?
>
> > தேவ்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post

Geetha Sambasivam

unread,
Jan 28, 2010, 6:54:15 AM1/28/10
to mint...@googlegroups.com
அரசு என்ன செய்யப் போகிறது இதற்கு??? மனம் நொந்து போக வைக்கும் தகவல்.

2010/1/28 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
320.gif

devoo

unread,
Jan 28, 2010, 10:22:25 AM1/28/10
to மின்தமிழ்

மனம் நொந்து பயனில்லை கீதாம்மா; அரசு இயந்திர மரபு காக்கப்படுவதாகப்
பெருமிதம் கொள்ள வேண்டியதுதான். பல நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் கதி
இதுவே.

ஷீலா ராணி சுங்கத் விருது பெற்றார் எனினும் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிப்
பொறுப்புகளில் நியமிக்கப் படவில்லை; புதுக்கோட்டை மாவட்டத்தில்
குவாரிகளில் கல் உடைக்கும் அன்றாடக் கூலிகளாக வேலை செய்த பெண்களின்
பொருளாதார நிலையை குவாரி கான்ராக்ட் எடுக்கும் அளவு உயர்த்தியவர்.

அரசு பள்ளிகளைத் தனியார் நிறுவனங்களும், அயலக இந்தியரும் தத்து எடுத்துக்
கொள்ள வழிவகை செய்யலாம்

தேவ்

On Jan 28, 5:54 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> [?][?][?][?][?]அரசு என்ன செய்யப் போகிறது இதற்கு??? மனம் நொந்து போக வைக்கும்

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit


> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost
> > > > to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>

>  320.gif
> 1KViewDownload

kavi senguttuvan

unread,
Jan 28, 2010, 11:27:32 AM1/28/10
to mint...@googlegroups.com
அய்யா, வணக்கம்.
           அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவணங்களும், அயலக இந்தியர்களும் தத்து எடுக்கலாம் என்ற தங்களின் கருத்து அறிந்தேன்.
           இது தொடர்பாக சில விபரங்களைத் தர விரும்புகிறேன்.
                  தற்போது தமிழக அரசு,  அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓர் தனிநபர் அல்லது நிறுவணம் அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பினால் 5 ஆண்டுகளில் அப்பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூபாய் 3 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பினால்  அவர்கள் அப்பள்ளிகளின் அடிப்படை வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில்5 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும். இதற்கு விருப்பம் உள்ளவர் எவரும் இருப்பின் அவர்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம்.
           அவர்கள் நிதி முழுமையும் பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்கு மட்டுமே பயண்படுத்தப்படும். பள்ளி நிர்வாகத்தில் எவ்விதத் தலையீடும் சேய இயலாது.

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.
அலைபேசி : 9842712109.

2010/1/28 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Jan 28, 2010, 1:15:57 PM1/28/10
to mint...@googlegroups.com
5 ஆண்டுகளில் அப்பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூபாய் 3 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பினால்  அவர்கள் அப்பள்ளிகளின் அடிப்படை வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில்5 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும்.


இங்குதான்  ப்ரச்சனையே  ஆரம்பிக்கிறது

அரசு  சொல்லும்   பணத்தை  செலவு  செய்கிறேன்

என்று  வாக்குறுதி  அளித்துவிட்டு  அதைச் சொல்லி சொல்லியே
பிள்ளைகளை சேர்க்க வரும்  பெற்றோரிடம்  அதிகப்  பணம் கேட்பார்கள்  (மறைமுகமாக)

ஏன்  அரசுப் பள்ளிகளை  அடிப்படை  வசதிகள் கூட  இல்லாமல்  இவ்வளவு  வருடங்களாக  அரசு வைத்திருக்கவேண்டும்

அதன் பின்னர்  தனியாரை  அழைத்து  தத்தெடுக்கவேண்டுமானால்  மூன்று லக்ஷம், ஐந்து  லக்ஷம்  செலவழிக்கவேண்டும்  என்று நிபந்தனை  போடவேண்டும்

எல்லாப் பள்ளிகளையும்  தரமாக  வைத்திருக்கவேண்டியது  அர்ரசின் கடமையல்லவா

அன்புடன்
தமிழ்த்தேனீ



28-1-10 அன்று, kavi senguttuvan <kavi.sen...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages