ஔவை பிள்ளையவர்களின் உரையைப் பார்த்த
வீடூர் பூரணசந்திர நயினாரவர்கள் அதனை மறுதலித்து
திரு வி.க., வையாபுரிப் பிள்ளை ஆகியோரிடம் காட்டி
சைன சமய உரை ஒன்றை அருமையாக வெளியிட்டார்.
அது 2005-ல் மறுபதிப்பு சென்னையில் ஆகியுள்ளது.
நாமக்கல் பெருமாள் முருகன் என்று நினைக்கிறேன்.
ஜனவரி 2006 காலச்சுவடு வந்த இதழ். இணையத்தில்
பூர்த்தியாக இல்லை.
[இக்கட்டுரை தரும் நாககுமார காவியம் பற்றிய
தகவல் சரியானதல்ல. அதுபற்றி நாளை சொல்கிறேன்.
யாரிடமாவது பெருமாள் முருகனின் போன்,
இ-மெயில் முகவரி உண்டா?]
நா. கணேசன்
தீதற விளங்கிய திகிரியோன்
ùTÚUôsØÚLu
தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்: பதிப்புகளில் சமயக் கண்ணோட்டம்
தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் பல சிறந்த நூல்கள் மறைந்துபோய்விட்டன.
ஐம்பெரும் காப்பியங்களுள் வளையாபதி, குண்டலகேசி ஆகிய இரண்டும்
கிடைக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பழந்தமிழ் நூல்
பதிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தபோது வளையாபதியின்
ஓலைச்சுவடிகள் இருந்தன என்பதற்கு மூன்று சான்றுகள் உள்ளன.
முதலாவது, உ.வே. சாமிநாதையர் தம் என் சரித்திரம் நூலில் வளையாபதியைப்
பற்றிக் குறிப்பிடுவதாகும். 'திருவாவடுதுறை மடத்துப் புத்தகசாலையில்
வளையாபதி ஏட்டுச் சுவடியை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில்
அத்தகைய பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாகவில்லை. அதனால் அந்நூலை
எடுத்துப் படிக்கவோ பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை
ஆராய வேண்டுமென்ற மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப் பார்த்தபோது அந்தச்
சுவடி மடத்துப் புத்தகசாலையில் கிடைக்கவில்லை' (ப. 626) என்று உ.வே.சா.
எழுதுகிறார். சமணக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியை அவர் பதிப்பித்தபோது
அதற்குப் பல இடங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதற்கும்
பெரும்பான்மைக் காரணம், சைவ மடத்தவரோடு தொடர்புடையவராக இருந்தும் சமண
நூலை எப்படி அவர் பதிப்பிக்கலாம் என்னும் சமயக் கண்ணோட்டமே.
திருவாவடுதுறை மடத்திற்குள்ளிருந்து எழுந்த எதிர்ப்பை உ.வே.சா. தம்
நூலில் ஓரளவு பதிவு செய்திருக்கிறார். வளையாபதியும் சமணம் சார்ந்த
காப்பியமே. அந்நூல் உ.வே.சா.வுக்குக் கிடைக்கக் கூடாது என்னும் நோக்கில்
மடத்துப் புத்தகசாலையில் இருந்த வளையாபதி ஏடு காணாமல் போயிருக்கக்கூடும்.
பதிப்பு முன்னோடிகளுள் ஒருவரான ஆறுமுக நாவலர் வளையாபதியை வெளியிட
இருந்தார் என்பது இரண்டாவது சான்று. அவர் 1860ஆம் ஆண்டு திருக்கோவையாரைப்
பதிப்பித்தார். அந்நூலின் பின்பகுதியில் 'அச்சுக்குச் சித்தமாக இருக்கும்
நூல்கள்' என்று பட்டியல் ஒன்றைத் தந்துள்ளார். அப்பட்டியலில்
வில்லிபுத்தூரார் பாரதம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை,
வளையாபதி முதலியவை இடம்பெற்றிருந்தன (அச்சும் பதிப்பும், ப. 187).
அச்சுக்குச் சித்தம் செய்து தயாராகவைத்திருந்த நூல், மறைந்துபோன
நூற்பட்டியலுக்கு மாறிய காரணம் என்னவாக இருக்கக்கூடும்? பத்தொன்ப தாம்
நூற்றாண்டில் சைவ சமயம் புத்தெழுச்சி பெறக் காரணமாக இருந்தவர்களுள்
ஒருவர் ஆறுமுக நாவலர். சைவ சமய வினா விடை முதலிய நூல்களை எழுதியதோடு
சைவம் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தியும் வந்தார். சைவத்தை
வலுப்படுத்தும் பொருட்டு சைவ தூஷண பரிகாரம் முதலிய மறுப்பு நூல்களையும்
எழுதினார். 'சைவப் பற்று மிக்க ஆறுமுக நாவலர், எவரேனும் தம் சமயத்தைப்
பற்றி அவதூறாகப் பேசினாலோ அல்லது எழுதினாலோ அதற்கெல்லாம் சுடச்சுடப்
பதிலிறுப்பதைத் தம் கடனாகக் கொண்டு மறுப்புரைகளைத்
தந்துகொண்டேயிருந்தார்' என மா.சு. சம்பந்தன் (ப. 183) கூறுகிறார்.
அச்சுக்குச் சித்தப்படுத்திய வளையாபதி வெளியிடப்படாமலே போனமைக்கு ஆறுமுக
நாவலரின் சைவப் பற்று காரணமாகியிருக்கலாம்.
வளையாபதி ஏட்டுச் சுவடி பற்றிய மூன்றாவது சான்று செவிவழிச் செய்தி
ஓன்றாகும். கொங்கு மண்டல சதகம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்த
தி.அ. முத்துசாமிக் கோனார், ஏராளமான ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து
வைத்திருந்தார். அவற்றுள் வளையாபதிச் சுவடியும் இருந்தது. கோனாரின்
வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றினால் மனவிரக்தி அடைந்த அவர்,
தம்மிடமிருந்த சுவடிகள் அனைத்தையும் நெருப்பில் போட்டு எரித்துவிட்டார்.1
அதில் வளையாபதியும் ஒன்று (தகவல்: புலவர் செ. இராசு, ஈரோடு). இந்தத்
தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள எழுத்துச் சான்று எதுவுமில்லை. எனினும்
தி.அ. முத்துசாமிக் கோனார் பற்றிய சில செய்திகளை அறிவது அவசியம். அவர்
மிகுந்த சைவப் பற்றாளர். உ.வே. சாமிநாதையர், சீவக சிந்தாமணியைப்
பதிப்பித்தபோது கடும் கண்டனம் தெரிவித்தவர்களுள் அவரும் ஒருவர்.
சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களை உ.வே.சா.
பதிப்பித்தபோது மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகித் தாம் நடத்திய
திருச்செங்கோட்டு விவேக திவாகரன் என்னும் இதழில் உ.வே.சா.வைக் கேலிசெய்து
எழுதியவர். 'பெüத்த சமயப் பிரபந்த பிரவர்த்தனாசிரியர்' என்று அவருக்குப்
பட்டம் கொடுத்து எழுதித் தம் சைவப் பற்றைக் காட்டிக்கொண்டவர். ஆகவே அவர்
நெருப்பிலிட்ட சுவடிகளுள் வளையாபதியும் இருந்தது என்பது
வியப்புக்குரியதல்ல.
சமயப் பற்றின் காரணமாக நூல்கள் அழிக்கப்பட்டமை ஒருபுறமிருக்க, கிடைத்த
நூல்களின் பதிப்புகளிலும் உரைகளிலும் நேர்ந்த குளறுபடிகள் சுவாரஸ்யமானவை.
உரைவேந்தர் என்று சிறப்பிக்கப்படும் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை மிக
முக்கியமான பல நூல்களுக்கு உரை கண்டவர். ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து,
புறநானூறு, நற்றிணை உள்ளிட்ட நூல்களுக்குச் செம்மையான உரை எழுதியுள்ளார்.
அவரும் சைவப் பற்று மிகுந்தவர். அது அவரது உரையிலும் பதிப்பிலும்
ஒருசார்பை உருவாக்கிவிட்டது.
துரைசாமிப் பிள்ளை உரை எழுதிய முக்கியமான சங்க இலக்கியம் நற்றிணை. அதன்
கடவுள் வாழ்த்துப் பாடல் திருமாலைப் பாடுவது. 'வேத முதல்வன் என்ப தீதற
விளங்கிய திகிரியோனே' என்னும் இறுதியடிகள் திருமால் என்பதை வெளிப்
படையாகக் காட்டுவன. திகிரியோன் - சக்கராயுதத்தை உடையவன் எனப்
பொருள்படும். இதற்குத் துரைசாமிப் பிள்ளை, 'தீதற விளங்கிய திகிரியோன் -
உயிர்கள் மலமாசு நீங்கி ஞான வாழ்வு பெறுமாறு இலங்குகின்ற திருவருளாகிய
ஆணையையுடையனாகிய முதல்வன்' (பக். 3, 4) என உரை எழுதியுள்ளர். தீதற
விளங்குதல் என்பதற்குச் சைவ நோக்கில் 'மலமாசு நீங்கி' எனவும் திகிரியோன்
என்பதற்கு 'திருவருளாகிய ஆணையை உடையவன்' எனவும் உரை கூறிப் படிப்போர்
'சிவபெருமான்' எனக் கருதுமாறு செய்துள்ளார். வெளிப்படையாகப் பொருள்
விளங்கும் ஒரு பாடலுக்கே இந்தக் கதி என்றால் பொதுநிலையில் உள்ள பாடல்கள்
பல என்ன கதியாயிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
துரைசாமிப் பிள்ளை, யசோதர காவியத்திற்கு உரை எழுதிப் பதிப்பித்துள்ளார்.
இது ஐஞ்சிறுங் காப்பியங்களுள் ஒன்று எனக் கருதப்படுவது. இது சமண சமயம்
சார்ந்தது. சைவப் பற்று மிக்க தமிழறிஞர்கள் பலர், சமண, பெüத்த
இலக்கியங்களைத் தமிழிலிருந்து அகற்றவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும்
இயலாமல் பெருத்த சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை
நூற்றாண்டு வாரியாக எழுதிய மு. அருணாசலம், யசோதர காவியம் குறித்துத் தம்
நூலில் விரிவாக எழுதியுள்ளார். அவ்விடத்தில் 'அவர்கள் (சமணர்கள்),
காவியம் என்று எடுத்த இடமெல்லாம் தோல்விதான்' எனவும் சிந்தாமணி, சூளாமணி,
நீலகேசி ஆகிய காவியங்கள் காவியக் கட்டுக்கோப்புச் சிறிதும் உடையன அல்ல.
ஆனால் ஒவ்வொன்றும் ஏதோ கதை உடையதாக இருக்கிறது' (ப. 379) எனவும்
கூறுகின்றார். யசோதர காவியத்தைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, ஏன்தான்
இந்த நூல் கிடைத்ததோ என்னும் மனச்சுழிப்பு வெளிப்படையாகவே தெரிகிறது. இது
'கீழ்த்தரமான நூல்' என்றும் 'எந்தக் கதைப் பண்பும் இல்லாத ஒரு
விசித்திரப் படைப்பு' என்றும் கூறுகிறார். இது சமணம் சார்ந்த நூல் என்பது
மட்டுமல்ல, இந்நூலின் கதைப் போக்கும் அவருக்கு ஒவ்வாமையைக்
கொடுத்துள்ளது.
அமிர்தமதி என்னும் அரசி யானைப் பாகனாகிய அட்டபங்கன் என்பவனுடன் கூடா
ஒழுக்கம் கொண்டிருந்தாள். அதனை அறிந்த கணவன் யசோதரனையும் மாமி
சந்திரமதியையும் விஷம் கலந்த லட்டுகளை உண்ணக் கொடுத்துக் கொன்றாள்.
அவற்றின் காரணமாகப் பல பிறவியெடுத்துக் பெருந்துன்பம் அடைந்தாள் என்பது
கதைப் போக்கு. பெண் ஒருத்தி கணவனல்லாத வேறோர் ஆடவனுடன் உறவு
கொண்டிருந்தாள் என்பதையும் கணவனையே ஒரு பெண் கொன்றாள் என்பதையும்
ஏற்றுக்கொள்ள இயலாத 'தமிழ் மனம்' கொண்டவர் அருணாசலம். 'எல்லா வகையாலும்
பெண்கள் சிறப்புப் பெற்றிருந்த தமிழ்நாட்டில் இப்படி ஒருவர் 'காவியம்'
பாட வந்தது விசித்திரமான நிலை' (ப. 383) என்பது அவர் கணிப்பு.
இந்த யசோதர காவியம் 1887இல் காஞ்சி பாகுபலி நயினார் என்னும் சமணரால்
முதலில் பதிப்பிக்கப்பட்டது. 1908இல் தில்லையம்பூர் வேங்கடராமையங்கார்
மீண்டும் பதிப்பித்தார். அவ்விரு பதிப்புகளிலும் உரை இல்லை. பிறவி
குறித்த சமணக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட இந்நூலுக்கு உரை எழுதுவது
கடினம். சமணக் கோட்பாடுகளில் மிகுந்த பரிச்சயம் உடையவர்களே இந்நூலை
விளக்க முடியும். அக்கடினமான பணியை துரைசாமிப் பிள்ளை 1944இல் செய்தார்.
ஐம்பெரும் காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் என்னும் மரபு தமிழில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் பாடத் திட்டத் தேவைக்காக அவர் இவ்வுரை
செய்திருக்கக் கூடும். ஐஞ்சிறு காப்பியங்களுள் நீலகேசியும் சூளாமணியும்
அளவால் பெரியவை. நாககுமார காவியம் கிடைக்கவில்லை. ஆகவே
பாடத்திட்டத்திற்கு ஏற்புடையவை உதயகுமார காவியமும் யசோதர காவியமுமே.
இவற்றுள் யசோதர காவியமே சிறப்புடையது என்னும் கருத்து இருந்துள்ளது.
யசோதர காவியம் பல ஆண்டுகள் பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்ததை அறிய
முடிகிறது.
இந்நூலை உரை எழுதிப் பதிப்பித்த துரைசாமிப் பிள்ளை தம் விமர்சனங்களையும்
முன்வைத்துள்ளார். அரசியாகிய அமிர்தமதி, யானைப் பாகன்மீது காதல்
கொண்டமைக்குக் காரணமாக, அவன் பாடிய மாளவபஞ்சமம் என்னும் பண்ணிசை அரசியின்
நெஞ்சை உருக்கியதை ஆசிரியர் கூறுகிறார். நூலில் இசை பற்றிய கடுங்குறிப்பு
எதுவும் இல்லை. ஆனால் 'இந்நூலாசிரியர் இசையினைப் பழிதூற்றியுள்ளார்' எனக்
கொண்டு துரைசாமிப் பிள்ளை விரிவான விளக்கம் எழுதுகிறார். அருணாசலமும்
சரி, துரைசாமிப் பிள்ளையும் சரி சைவ சமய நூல்கள்மீது சிறு
விமர்சனத்தையும் வைத்தவர்கள் அல்லர். சைவ நூல்களைப் பதிப்பித்தவர்கள்
பற்றி அருணாசலம் குறைபட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மூலநூல்களை
எவ்விடத்திலும் குறைகூறி எழுதியதில்லை. சைவம் தொடர்பான துண்டுப்
பிரசுரமாக இருப்பினும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் அருணாசலம்.
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ வடிகள் சமணர் அல்ல என்று நிறுவுவதில்
பெருவிருப்புடையவர் அவர்.
சைவ நூல்களின் மீது விமர்சனம் வைக்காதது மட்டுமல்ல, பிற நூல்களையும்
பாடல்களையும் சைவச் சார்பானதாக மாற்ற முயற்சி மேற்கொண்டவர்கள்
இவ்விருவரும். 'சார்பின்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது, நூல் செய்ய
முடியாது. எனினும் இங்கு சமயச் செய்திகளைக் கூறுமிடத்தும் நூல்களை
ஆராயுமிடத்தும் இயன்றவரையில் எந்தச் சார்புமின்றி நடுநிலையில் நின்று
விருப்பு, வெறுப்பு இன்றிப் பொதுநோக்காக உண்மைகாணவும் வரலாறு கூறவும்
நூல்களை மதிப்பிடவும் முயன்றிருக்கிறோம்' (ப. 11) என அருணாசலம்
கூறினாலும் சைவச் சார்புப் பார்வையிலிருந்து அவரால் பெரிதாக விடுபட
முடியவில்லை. துரைசாமிப் பிள்ளை, தமக்குப் புலமையில்லாத பிற சமய
நூல்களுக்கு உரையெழுதும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக்கூடக்
கைக்கொள்ளவில்லை. யசோதர காவியத்திற்கு அவர் எழுதிய உரையில், சமண சமயக்
கோட்பாடுகளுக்கு முரணான விளக்கம் உள்ளது என்னும் விமர்சனம் எழுந்தது.
தமிழிலும் வடமொழியிலும் மிக்க புலமையும் சமண சமயக் கோட்பாடுகளில்
ஈடுபாடும் கொண்ட சமணராகிய வீடூர் பூர்ணசந்திரன் என்பவர் அவ்விமர் சனத்தை
வைத்தார்.
துரைசாமிப் பிள்ளையின் உரையில் யசோதர காவிய மூலத்திற்கு மாறாகத் தவறான
பாடம் கொண்டு இயைபில்லாமல் விளக்கம் கூறப்பட்டிருக்கும் இடங்களைச்
சுட்டிப் பூர்ணசந்திரன் கடிதம் ஒன்றைத் துரைசாமிப் பிள்ளைக்கு எழுதினார்.
நேரில் துரைசாமிப் பிள்ளையைச் சந்தித்து மாறுபட்ட உரையுள்ள இடங்களைப்
பற்றியும் கூறினார். ஆனால் துரைசாமிப் பிள்ளையின் பதில்: 'ஒரு நூலுக்குப்
பலர் உரை எழுதலாம். ஆதலின் தாங்களும் இதற்கு ஓர் உரை எழுதுங்கள்.' அவரது
உரை மறு பதிப்பாகப் பலமுறை வந்தபோதும், தவறான இடங்களைச் சரிசெய்ய அவர்
முயலவில்லை. ஏறத்தாழ இருபத்தைந்து முரண்களைப் பூர்ண சந்திரன்
சுட்டியுள்ளார்.
'இந்நிலவுலகத்தைச் சூழ மூவகைக் காற்று மண்டல முண்டென்பது சமண சமயக்
கொள்கை. அம்மண்டலத்தின்மேல் உளது மேக மண்டலம்' என்றோர் இடத்தில்
துரைசாமிப் பிள்ளை எழுதியுள்ளார். சமண சமயக் கொள்கை அப்படியானதல்ல.
பூர்ணசந்திரன் காட்டிய இடங்களில் பெரும்பாலானவை இப்படிப்பட்டவை.
துரைசாமிப் பிள்ளை தவறுகளைத் திருத்தத் தயாராக இல்லாமையால்,
பூர்ணசந்திரனே தனி ஒரு பதிப்பு வெளியிட வேண்டியதாயிற்று. துரைசாமிப்
பிள்ளையின் பதிப்பு முறையிலிருந்தும் உரையிலிருந்தும் வேறுபட்டு மிகவும்
திருத்தமான முறையிலும் சமணக் கொள்கைகளுக்கு முரண்படாத வகையிலும்
பூர்ணசந்திரனின் பதிப்பு அமைந்துள்ளது. இப்பதிப்பை வையாபுரிப்பிள்ளை,
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் முதலியோர்
பாராட்டி அணிந்துரை வழங்கியுள்ளனர்.
துரைசாமிப் பிள்ளைக்கு நேர்ந்ததுபோல அக்காலத்துச் சீவக சிந்தாமணி
உரையாசிரியரான நச்சினார்க்கினியருக்கும் நேர்ந்தது. முதலில் அவர் சீவக
சிந்தாமணிக்கு எழுதிய உரையைச் சமண அறிஞர்கள் அங்கீகரிக்கவில்லை. பின்னர்
சமண அறிஞர்களிடம் சென்று சமணக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்து புதிதாக உரை
எழுதினார்; அதையே சமணர்கள் அங
[கட்டுரை இணையத்தில் முழுதுமாக இல்லை.]
சவால்!
வளையாபதி ஓலைச் சுவடிகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக மீட்டுத்தருபவர்களுக்கு
கொரியன் வொன் 100,000 இனாம்.
இது என் சொந்தச் செலவு!
நா.கண்ணன்
On Sep 10, 7:25 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/9/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:
> வளையாபதியின் ஓலைச்சுவடிகள் இருந்தன என்பதற்கு மூன்று சான்றுகள் உள்ளன.
>
> சவால்!
>
> வளையாபதி ஓலைச் சுவடிகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக மீட்டுத்தருபவர்களுக்கு
> கொரியன் வொன் 100,000 இனாம்.
> இது என் சொந்தச் செலவு!
>
பெருமாள் முருகன் சொல்வது 3 செய்திதான். அதற்கு மேலே இரண்டு பேர்
வளையாபதிச் சுவடிகளை வைத்திருந்தனர் - நூல்களிலும் பதிவாகியுள்ளன.
அதை இன்னொருமுறை தருகிறேன். ஏற்கெனவே எழுதியும் உள்ளேன்.
இனிமேல் கிடைப்பது கடினமே.
நா. கணேசன்
> நா.கண்ணன்
100 000 South Korean won = 3 968.13833 Indian rupees
கூகிள் கரென்சியையும் மாற்றுகிறது, கணிதமும் போடுகிறது !
V
On Sep 10, 5:58 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> எங்கூரு ரூபாய்ல என்ன கணக்கு ஆவுதுங்கோ?
>
> On 9/10/09, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
>
>
> > 2009/9/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:
க.>
2009/9/10 Vinodh Rajan <vinodh...@gmail.com>: