இலக்கிய சிந்தனை - சென்னை அளித்த ரூ.50

28 views
Skip to first unread message

Narayanan Kannan

unread,
Feb 11, 2011, 10:09:47 PM2/11/11
to மின்தமிழ்
அது 2000.
 
தமிழ் மரபு அறக்கட்டளை இன்னும் உருவாகவில்லை.
 
ஜெர்மனியிலிருந்து சென்னை வந்திருந்தேன். அப்போது வரும்போதெல்லாம் எழுத்தாளர் சுஜாதாவை அவர் வீட்டிற்குப் போய் பார்ப்பேன்.
 
‘ஆறாம்திணை’ எனும் கருதுகோளை, மின்வெளியின் இலக்கணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ‘சரி இதை, நம் இலக்கிய சிந்தனை அமைப்பில் பேசி விடுங்களேன்!’ என்றார்.
 
ஒரு மாலை வேளை. ஸ்ரீநிவாஸா காந்தி நிலையம். நான் அச்சில் மட்டும் கண்டிருந்த பல இலக்கியவாதிகள். பாதிக்கு மேல் ஈழத்து இலக்கியகர்த்தாக்கள்.
 
அவர்களுக்கு மின்திணையை அறிமுகப்படுத்தினேன். சுஜாதா புரவலராக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பின் இனிய கலந்துரையாடல். அப்போதுதான் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களை அறிந்து கொண்டேன். அவர் நா.பார்த்தசாரதி பற்றிப் பேசுவதைக் கேட்க வேண்டும். மிக இனிய நினைவுகள்.
 
‘ஏதோ ஏழைக்கு ஏற்ற எள்ளு உருண்டை’ என்று சென்னை இலக்கிய சிந்தனை எனக்கு ரூ.50/- சன்மானமாகக் கொடுத்தது. அதை இன்றுவரை செலவழிக்கவில்லை. தமிழ் அன்றும், இன்றும் இம்மாதிரி இலக்கிய ஆர்வலர்களால்தான் வாழ்கிறது. அவர்கள் தரும் சன்மானமே ஒரு இலக்கியவாதிக்கு ஞானபீடப்பரிசு!
 
 LiteraryThought_2000_Rs.50.jpg
 
நா.கண்ணன்
 
 
--
"Be the change you wish to see in the world." -Gandhi
 
 
LiteraryThought_2000_Rs.50.jpg

Mohanarangan V Srirangam

unread,
Feb 11, 2011, 10:22:14 PM2/11/11
to mint...@googlegroups.com
நல்ல நினைவு கண்ணன். பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த இலக்கியச் சிந்தனை அமைப்பில்தான் 2003ல் நான் திருலோக சீதாராம் பற்றிப் பேசியதும். அதை சைதை முரளி (அவரும் நானும் அன்று பேசினோம். அவர் வேறு ஒரு விஷயத்தைப் பேசினார்) அன்று பேசியதை அவருடைய ப்ளாக்கில் போட்டிருக்கிறார். 

அந்த 50 ரூ இன்னும் நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் ஒளிக்காட்டில். 
:-)

2011/2/12 Narayanan Kannan <nka...@gmail.com>
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

LiteraryThought_2000_Rs.50.jpg

N. Kannan

unread,
Feb 11, 2011, 11:02:35 PM2/11/11
to mint...@googlegroups.com
நன்றி ரங்கன்!
 
அன்று ‘மல்லிகை’ ஆசிரியர் டோமினிக் ஜீவா, செங்கை ஆழியான் மற்றும் பல ஈழத்து இலக்கிய கர்த்தாக்களையும், சென்னை வாழ் இலக்கியவாதிகளையும் கண்ணுற முடிந்தது.
 
மீட்டிங்க் முடிந்த பின் திருப்பூர் கிருஷ்ணனின் நகை உணர்வை பெரிதும் ரசிக்க முடிந்தது!
 
க.>

2011/2/12 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

shylaja

unread,
Feb 11, 2011, 11:44:58 PM2/11/11
to mint...@googlegroups.com
இலக்கிய சிந்தனை தேர்ந்த்டுக்கும் சிறுகதைகள் சிறப்பாகவே இருக்கும். ஒரு முறை எனக்கு ஒருமாதத்தின் சிறந்த சிறுகதையை தேர்ந்தெடுக்கும் பணி கொடுக்கப்பட்டது! அதற்காக  கிட்டத்தட்ட 60சிறுகதை படித்தேன் ஒரே மூச்சில்!மாதாந்திர கூட்டத்திற்கும் போனேன்.  எண்ணி ஏழுபேர் இருந்தார்கள்.

2011/2/12 N. Kannan <navan...@gmail.com>

meena muthu

unread,
Feb 12, 2011, 2:38:14 AM2/12/11
to mint...@googlegroups.com
இலக்கிய சிந்தனை அமைப்பால் (2008ல்)என்னுடைய சிறு கதையும் தேர்ந்தெடுக்கப்பட்டதை
பெருமையாக நினைக்கிறேன். :)

மீனா

2011/2/12 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Feb 12, 2011, 2:40:58 AM2/12/11
to mint...@googlegroups.com
யுகமாயினியில் வந்த  கதைதானே  அது  மீனா   ?மறுபடி வாழ்த்துகள்!

2011/2/12 meena muthu <ranga...@gmail.com>

Subashini Tremmel

unread,
Feb 12, 2011, 2:43:38 AM2/12/11
to mint...@googlegroups.com
அன்புள்ள கண்ணன்,
இனிய அனுபவம் இல்லையா?  இந்த படத்தையும் இந்தக் குறுஞ்செய்தியையும் நமது மரபுப்படங்கள் வலைப்பூவில் இணைத்து விடுங்களேன்.
-சுபா
 
2011/2/12 Narayanan Kannan <nka...@gmail.com>
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

LiteraryThought_2000_Rs.50.jpg

meena muthu

unread,
Feb 12, 2011, 2:43:45 AM2/12/11
to mint...@googlegroups.com
அதேதான் ஷைலு! மறுபடியும் நன்றி :)

2011/2/12 shylaja <shyl...@gmail.com>

meena muthu

unread,
Feb 12, 2011, 2:52:01 AM2/12/11
to mint...@googlegroups.com
நல்லயோசனை சுபா! 

2011/2/12 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 12, 2011, 9:41:13 AM2/12/11
to mint...@googlegroups.com
பகிர்வுக்கு நன்றி.  ஐம்பது ரூபாய் ஐம்பது கோடியை விடவும் பெரியது. 

2011/2/12 Narayanan Kannan <nka...@gmail.com>
 

--
LiteraryThought_2000_Rs.50.jpg

N. Ganesan

unread,
Feb 12, 2011, 9:47:15 AM2/12/11
to மின்தமிழ்

On Feb 11, 10:02 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நன்றி ரங்கன்!
>
> அன்று ‘மல்லிகை’ ஆசிரியர் டோமினிக் ஜீவா, செங்கை ஆழியான் மற்றும் பல ஈழத்து
> இலக்கிய கர்த்தாக்களையும், சென்னை வாழ் இலக்கியவாதிகளையும் கண்ணுற முடிந்தது.
>
> மீட்டிங்க் முடிந்த பின் திருப்பூர் கிருஷ்ணனின் நகை உணர்வை பெரிதும் ரசிக்க
> முடிந்தது!
>

திருப்பூரார் தமிழ் படித்தது வாகீச கலாநிதி கிவாஜ அவர்களிடம்.

> க.>
>
> 2011/2/12 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>


>
>
>
> > நல்ல நினைவு கண்ணன். பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த இலக்கியச் சிந்தனை
> > அமைப்பில்தான் 2003ல் நான் திருலோக சீதாராம் பற்றிப் பேசியதும். அதை சைதை முரளி
> > (அவரும் நானும் அன்று பேசினோம். அவர் வேறு ஒரு விஷயத்தைப் பேசினார்) அன்று
> > பேசியதை அவருடைய ப்ளாக்கில் போட்டிருக்கிறார்.
>
> > அந்த 50 ரூ இன்னும் நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் ஒளிக்காட்டில்.

> > :-)- Hide quoted text -
>
> - Show quoted text -

Mohanarangan V Srirangam

unread,
Feb 12, 2011, 10:17:19 AM2/12/11
to mint...@googlegroups.com
அட முக்கியமான ஒன்று விடுபட்டுவிட்டதே! 

என்னைத் திருலோக சீதாராம் பற்றிப் பேச ஏற்பாடு பண்ணதே இந்த திருப்பூர் கிருஷ்ணன் தான்

2011/2/12 N. Ganesan <naa.g...@gmail.com>

Hari Krishnan

unread,
Feb 12, 2011, 10:40:31 AM2/12/11
to mint...@googlegroups.com
2011/2/12 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
என்னைத் திருலோக சீதாராம் பற்றிப் பேச ஏற்பாடு பண்ணதே இந்த திருப்பூர் கிருஷ்ணன் தான்

பாரதிதான் பொதுவாக நேரடியாக அழைப்பார்.  அப்படி இருமுறை பேசினேன்.  முதன்முறை (டிசம்பர் மாதம்....91 அல்லது 92 இருக்கலாம்) அந்த மாதச் சிறுகதைகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்தேன்.  இரண்டாவது முறை பாரதி கவிதைகளைப் பற்றி.  பிறகு திருப்பூர் கிருஷ்ணன் பாரதியிடம் (இலக்கியச் சிந்தனை பாரதியைச் சொல்கிறேன்) சொல்லி மூன்றாம் முறையாக, இணைய மடற்குழுக்களைப் பற்றிப் பேசினேன்.)  இணையத் தமிழ் என்றால் ஏதோ தந்தி பாஷையைச் சுருக்குவதுபோல் சுருக்குவார்கள் போலிருக்கிறது என்றெல்லாம் பாரதி முன்னுரையாற்றினார்!  98-99ல் அவ்வளவுதான் இணையத்தைப் பற்றித் தெரியும். ஆக, மூன்று முறை ஐம்பது ரூபாய் வாங்கியிருக்கிறேன்.

மூன்றாவது முறை பேசும்போது, யாரையும் இரண்டாவது முறைகூட பேச அழைப்பதில்லை.  மூன்றாவது முறையாக இவர் அழைக்கப்பட்டிருக்கிறார் என்று பாரதி, நான் அதற்கு முன்பு பேசிய ஒவ்வொரு தேதியையும் குறிப்பிட்டுச் சொன்னார்.  என்னமோ அவங்களுக்குப் போறாத காலம்.... மூணு தடவ என்கிட்ட சிரமப்பட நேர்ந்திருக்கிறது.  :))

--
அன்புடன்,
ஹரிகி.

Innamburan Innamburan

unread,
Feb 12, 2011, 10:46:00 AM2/12/11
to mint...@googlegroups.com
கண்ணன்,
உங்கள் இடுகையை ரசித்தேன். சுபாஷிணி சொல்வதை வழி மொழிகிறேன்.
இன்னம்புரான்

2011/2/12 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

shylaja

unread,
Feb 12, 2011, 10:50:27 AM2/12/11
to mint...@googlegroups.com


2011/2/12 Hari Krishnan <hari.har...@gmail.com>
போறாத காலமெல்லாம் ஒண்ணுமில்ல மூணு தடவ ் கூப்பிட்றாங்கன்னா அது எவ்வளவு சிறப்பு! ஆமா 50 இப்போ எவ்ளோ உயர்ந்திருக்காம்?:)

Hari Krishnan

unread,
Feb 12, 2011, 11:00:01 AM2/12/11
to mint...@googlegroups.com


2011/2/12 shylaja <shyl...@gmail.com>

மூணு தடவ ் கூப்பிட்றாங்கன்னா அது எவ்வளவு சிறப்பு!

எவ்வளோ syrupனு சமையல் ராணி கீதாம்மாவும் சொல்லலாம்...இல்லாட்டி இடாக்குடர்கள் யாரனும் சொல்லலாம். :D
 
ஆமா 50 இப்போ எவ்ளோ உயர்ந்திருக்காம்?:)
 
அதெல்லாம் அன்னிக்கொரு பேச்சு இன்னிக்கொரு பேச்செல்லாம் கிடையாது.  மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு.  இ சி க்கு என்றும் அம்பது.  இஹி இஹி :P



--
அன்புடன்,
ஹரிகி.

shylaja

unread,
Feb 12, 2011, 11:03:49 AM2/12/11
to mint...@googlegroups.com


2011/2/12 Hari Krishnan <hari.har...@gmail.com>


2011/2/12 shylaja <shyl...@gmail.com>
மூணு தடவ ் கூப்பிட்றாங்கன்னா அது எவ்வளவு சிறப்பு!

எவ்வளோ syrupனு சமையல் ராணி கீதாம்மாவும் சொல்லலாம்...இல்லாட்டி இடாக்குடர்கள் யாரனும் சொல்லலாம். :D<<<<<>.கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு:)  (உங்க syrup க்கு இருமலோட சென்றிருக்கணும்):)
 
ஆமா 50 இப்போ எவ்ளோ உயர்ந்திருக்காம்?:)
 
அதெல்லாம் அன்னிக்கொரு பேச்சு இன்னிக்கொரு பேச்செல்லாம் கிடையாது.  மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு.  இ சி க்கு என்றும் அம்பது.  இஹி இஹி :P
<<<>ஆனா வருடச்சிறந்த சிறுகதைக்கு   கொடுக்கிற தொகையை உயர்த்தி இருக்காங்கன்னு கேள்வி..பாக்லாம் ஒருதடவையாவது நான் வாங்கிட்டு உறுதி பண்றேன்:):)


--
அன்புடன்,
ஹரிகி.

geeyes

unread,
Feb 12, 2011, 12:26:19 PM2/12/11
to மின்தமிழ்
மாதாந்திர சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுக்க இருமுறை வாய்ப்பு நல்கினார்
பாரதி. இருமுறையும் அவர்கள் அளித்த அன்பளிப்புக்கு எழுத்தாளர்களைப்பற்றி
அவர்கள் வெளியிடும் நூல்கள் வாங்கிக்கொண்டேன்.
ஆமாம், அன்பருக்குத் திடீரென ’இலக்கிய ’ச்’ சிந்தனை’ நினைவுக்கு வந்ததன்
காரணம் என்னவோ.
-அன்புடன்,
ஜி.ஸன்தானம்

N. Kannan

unread,
Feb 12, 2011, 6:26:30 PM2/12/11
to mint...@googlegroups.com
நன்றி!

பழசைப் புரட்டும் போது இந்தக் கவர் அகப்பட்டது. அதைப் பத்திரமாக
வைத்திருந்து ஊர், ஊராகச் சுற்றுகிறேன்! :-)

சும்மா ஒரு ஆவணத்திற்கு நீங்கள் கேட்டுக்கொண்டபடி நமது வலைப்பதிவில்
போட்டுவிட்டேன்.

http://image-thf.blogspot.com/

ஹரிஜீ சொல்வது போல் இதில் syrup ஏதும் உண்டா என்று தெரியவில்லை ஆயினும்
கோடி, கோடிகளே மதிப்பிழந்துவரும் இந்தியாவில் மொட்டைத்தலை காந்தி ப்டம்
போட்ட ரூ50 விரைவில் காலாவதியானாலும் ஆகலாம். அப்போது அதற்கு அரும்பொருள்
அந்தஸ்து வந்துவிடும். அதற்காவது இது ஆவணமாகும் :-))

ஹரிஜீ மடலாடற்குழுக்கள் பற்றி என்ன பேசியிருப்பார் என்று
யூகிக்கமுடிகிறது. அங்கு இருந்திருந்தால் கேட்டு மகிழ்ந்திருக்கலாம்!

க.>

2011/2/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Innamburan Innamburan

unread,
Feb 12, 2011, 10:40:41 PM2/12/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
"காந்தி படம் போட்ட ரூ50 விரைவில் காலாவதியானாலும் ஆகலாம். அப்போது

அதற்கு அரும்பொருள்
அந்தஸ்து வந்துவிடும். அதற்காவது இது ஆவணமாகும் :-))."

நல்லது தான் காந்தி தலைப்போட்ட எல்லா கரன்ஸி நோட்களும் காலாவதி
செய்யப்படவேண்டும். மத்திய அரசு, நாட்டின் தந்தையின் படத்தை இங்கு
போட்டு, கருப்புப்பண முதலைகளுக்களிடம், அவரை பணயம் வைத்து விட்டது.

இத்துடன் இணைக்காமல், தனிப்பட்ட ஊகம்: ரிஸர்வ் வங்கி தன் வசமிருந்தால்,
தன் படத்தை போட்டு இருப்பார் திரு எம்.கருணாநிதி.

சான்று: தமிழ் நாட்டு மக்கள் சபையில் பதிவான உரையாடல்:

டாக்டர் ஹாண்டே: "குடும்பகட்டுப்பாடு விளம்பரங்களில், அரசு ஏன் திரு
எம்.கருணாநிதியின் படத்தை போடவேண்டும்?

திரு எம்.கருணாநிதி: "பின்ன என்ன ஹாண்டே படமா போடுவாஹ?

(சபை கைக்கொட்டி சிரித்தது: தி.மு.க. மெஜாரிடி. ஹாண்டேக்கு பதில் கிடைக்கவில்லை.)

இன்னம்பூரான்

13 02 2011

2011/2/13 N. Kannan <navan...@gmail.com>:

N. Kannan

unread,
Feb 12, 2011, 11:11:22 PM2/12/11
to mint...@googlegroups.com
பழசையெல்லாம் குடைந்து கொண்டு இருக்கிறேன்!
 
மாணவனாக இருந்தபோதே பத்திரிக்கைகளில் வந்திருக்கிறேன் என்று தெரிகிறது.
 
மதுரைப் பல்கலைக்கழகம் பற்றி வந்த ஒரு விகடன் ரிபோர்ட்டு. நம்ம படம் வந்திருக்கிறது ;-)
 
க.>
MKU.pdf

Innamburan Innamburan

unread,
Feb 12, 2011, 11:27:06 PM2/12/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
"இந்த திகைப்பும், நமக்கு வழக்கமாகிவிட்டதே" உண்மையான ஆதங்கம்.
இன்னம்பூரான் 13 02 2011

2011/2/13 N. Kannan <navan...@gmail.com>:

N. Kannan

unread,
Feb 13, 2011, 2:13:54 AM2/13/11
to mint...@googlegroups.com
அப்போ! இப்ப அதுவே வழக்கமாகிவிட்டது! என்ன சார் லட்சத்துசொச்சம் கோடி ஊழல்ன்னா?
பயமா இருக்கு! ஒரே தாவலா இருக்கே!
 
க.>

2011/2/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>
"இந்த திகைப்பும், நமக்கு வழக்கமாகிவிட்டதே" உண்மையான ஆதங்கம்.

Geetha Sambasivam

unread,
Feb 13, 2011, 3:09:19 AM2/13/11
to mint...@googlegroups.com
நாம படிக்கிறதோட சரி, சிறப்போ சிரப்போ தெரியாது! :D  பேசினதைப் பகிர்ந்துக்கலாமே?? ஒரு வேண்டுகோள் தான் . இணையத் தமிழ் பற்றிப் பேசினது பகிர்ந்து கொண்டால் அதை ஒரு ஆவணமாக ஆக்கலாமே.

என்னைக் கூப்பிடாமலேயே எனக்கு முடிசூட்டுவிழாவும் எடுத்தாச்சு போல!

2011/2/12 Hari Krishnan <hari.har...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages