ஒட்டகம்

82 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 19, 2009, 9:08:29 AM8/19/09
to மின்தமிழ்
வே. ரா. மாதவன் அவர்கள் அருமையான
சுவடித்துறைப் பதிப்பாசிரியர்.
அண்ணாகண்ணன் வாயிலாக வேலூர் ரா. மாதவன் ஐயா
நீரோட்டகம் என்று நீர் + ஒட்டம் என்ற பொருள்
சொல்லியுள்ளார் என்பதறிந்தேன் :) ஆனால்,
பழைய வடசொல் இது. துறைமங்கலம்
சிவப்பிரகாசர் போன்றோர் சுவடிகளைப்
பதிப்பித்த ஆறுமுக நாவலர் போன்றோர்
கொள்வது: நிரொட்டம்:நிரோட்டகம் என்று
negative prefix (Sanskrit) நிர்- பயன்படுத்தியதை
இதழகல் வெண்பா என்று தமிழில் வருதலால் உணரலாம்.
இதழகல் வெண்பா என்ற தமிழ்ச் சொல் கொடுத்தவர்
வண்ணச்சரபம் சாமி என்று நினைக்கிறேன்.
வண்ணச்சரபத்தின் பலநூல்களை முதலில்
பதிப்பித்தவர் வே. ரா. மாதவன். வண்ணச்சரபம்
இட்டவி என்று இட்லிக்கு வழங்கியிருப்பதை
கமலம் சேச்சி இங்கே சொன்னார்
(முழுப்பாடலும் அவருக்கு நேரம் கிடைக்கையில்
தட்டெழுதினால் உபயோகமாயிருக்கும்.
அல்லது சுபாவிடம் கொடுத்தால் ஸ்கான் செய்யலாம்.)
நீரோட்டம் என்றால் பல பாட்டுகளுக்கும்
பொருந்தும். நிரோஷ்டகத்துக்கு மாத்திரம்
ஏன்? என்றும் சிந்திக்கலாம்.

ஒட்டை, ஒட்டகை, ஒட்டகம்
- இந்த விலங்குக்குப் பெயரும்
இந்த உதட்டால் வருவதுதான்.
http://www.youtube.com/watch?v=7wFt8KIpDIs
ஒட்டை பற்றிய அரிய செய்திகள்
சங்க இலக்கியத்தில் இருக்கிறது.

ஒட்டை > ஒஷ்ட (or, the other way around?)

நா. கணேசன்

devoo

unread,
Aug 19, 2009, 11:25:38 AM8/19/09
to மின்தமிழ்
Aug 19, 6:08 pm, "N. Ganesan"

வே. ரா. மாதவன் அவர்கள் அருமையான சுவடித்துறைப் பதிப்பாசிரியர்.
அண்ணாகண்ணன் வாயிலாக வேலூர் ரா. மாதவன் ஐயா நீரோட்டகம் என்று நீர் +
ஒட்டம் என்ற பொருள்
சொல்லியுள்ளார் என்பதறிந்தேன் :) //

”உதடு ஒட்டாமல் ஒரு பாடல்”

அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும் என்று ஒரு புதிர் உண்டு. அதற்கு
விடை, 'உதடு' தான். அண்ணன் என்று உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டா. தம்பி
என்கிற போது ஒட்டும்.

திருக்குறளில் சில பாடல்கள், உதடு ஒட்டாமல் வருபவை -
"எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்" என்பது அவற்றுள் ஒன்று.

"யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இல"
என்பதையும் உதடு ஒட்டாத பாடலுக்குக் காட்டாகக் கூறுவது உண்டு. ஆயினும்
இதில் நோதல் என்ற சொல் வருகிறது. நோ என்று உச்சரிக்கையில் உதடு
ஒட்டாவிட்டாலும் குவிகிறது. உதடு குவியாமலும் இருக்குமேயானால் அதுவே இந்த
வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய எழுத்துகளோ, அதன் இன எழுத்துகளோ, கூட்டு
எழுத்துகளோ இடம் பெறாமல் ஒரு பாடலை இயற்றினால் அது, இயல்பாகவே உதடு
ஒட்டாத பாடலாக இருக்கும். மேலும், வ என்ற எழுத்தினை உச்சரிக்கையில் உதடு
ஒட்டவில்லை. ஆனால், கீழுதடு, மேல்வரிசைப் பற்களில் படுகின்றது. இந்த
வகையான ஒட்டுறவு கூட இல்லாமல் பாடவேண்டும் என்பது என் விருப்பம்.

உதடு ஒட்டாத பாடல், சித்திரக் கவிகளுள் ஒரு வகையாக இடம் பெற்றுள்ளது.

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு 44 அடிகளில் இத்தகைய பாடல் ஒன்றை
எழுதினேன். இன்று அதை எடுத்துப் பார்த்தேன். அதில் சில திருத்தங்கள்
செய்து, 12 அடிகள் கொண்ட பாடலாகச் சுருக்கினேன். உதடு ஒட்டாமலும்
குவியாமலும் கலி வெண்பாவில் அமைந்துள்ள அந்தப் பாடல் இங்கே:

காதல் இசை

காதல் இசையே! கனாக்கணையே! என்திசையே!
நாதக் கடலே! நன்னதியே! என்நிதியே!
ஆசைக் கிளியே! அதியெழிலி ஆயிழையே!
நாசிநிறை காற்றே! நடையழகி நாயகியே!
கண்ணே! கனியே! கனகநிகர் கன்னிகையே!
தண்ணீர்த் தனலே! தயைநிறை தாயே!
அலையே! அலையில் கயலே! கயலின்
கலையே! கலையின் நிலையே! நிலையேன்நீ!
நீசென்றால் அங்கே நிழலாய் நிறைகின்றேன்
நீசிரித்து நின்றாலே நெஞ்சே சிரிக்கின்றேன்!
தித்திக்க ஐயன் திளையாய்த் திளைத்திட
இத்திக்கைக் காண்நீ இனி!

http://annakannan-kavithaigal.blogspot.com/2007/01/blog-post_21.html


தேவ்

Hari Krishnan

unread,
Aug 19, 2009, 12:51:57 PM8/19/09
to mintamil


2009/8/19 N. Ganesan <naa.g...@gmail.com>


சங்க இலக்கியத்தில் இருக்கிறது.

ஒட்டை > ஒஷ்ட (or, the other way around?)

நா. கணேசன்

 
அன்புள்ள கணேசன்,
 
உங்களுடைய முந்தைய மடலைப் பார்த்ததும் எனக்கும் இதேதான் தோன்றியது. இதற்கும் அதற்கும் தொடர்பு இருக்கிறது என்று தோன்றியதை எழுத கை துறுதுறுத்து, எழுதி, எழுதியதை டிஸ்கார்ட் செய்துவிட்டேன்.  இப்போது என்னைப் போலவே இன்னொருவருக்கும் தோன்றியிருக்கிறது என்றறிந்து ஆறுதலாக இருக்கிறது. 
 
ஏன் டிஸ்கார்ட் செய்துவிட்டேன் என்று கேட்கத் தோன்றலாம்.  வேறொன்றுமில்லை.  ஆஷ்டுகுஷ்டி நினைவுக்கு வந்துவிட்டது.  புரிகிறதோ? :-)

--
அன்புடன்,
ஹரிகி.



--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Aug 19, 2009, 9:01:23 PM8/19/09
to மின்தமிழ்

On Aug 19, 11:51 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/8/19 N. Ganesan <naa.gane...@gmail.com>

நிரொட்டக/நிரோட்டக வெண்பாவை
*ஒட்டிலி வெண்பா* என்றும் தமிழில் அழைக்கலாம்.

இமையிலி (கருடன்), நிறையிலி:இறையிலி (வரி நீக்கிய நிலம்),
கெழீஇயிலி (நண்ணார்), செவியிலி (செவியறை),
நுலையிலி (ஊமை), பிணையிலி (அநாதை),
பொறியிலி (அறிவிலி), வினையிலி (கடவுள்),
உருவிலி, திருவிலி (ஏழை), புனைவிலி,
கேடிலி (அக்‌ஷயன்), ... புலவரைப் போட்டியில்
வென்ற நம்மாழ்வார் அகவல் த.ம.அ. தளத்தில்
ரா.ரா. உரையுடன் உள்ளது. அதில்
வேதம் இறைவனை முலையிலி என்பதை
நம்மாழ்வார் தமிழ் செய்துள்ளார்.

non-, pre-, post-, போன்ற ஆங்கில முன்னொட்டுகள்
தமிழ்ச்சொல் ஆக்கினால் பின்னொட்டாக இயையும்.

non-fiction: அ-புனைவு, புனைவிலி
non-duality: அத்வைதம், அ-இருமை, ஈரிலி (தத்துவம்).

அல்வழக்கு - (நேர்) அல்லாத வழக்கு என்றும்,
அல்வழி - (14 வகையான வேற்றுமைப்புணர்ச்சி)
அல்லாத வழி என்றும் தமிழில் பொருள்.
அல்லிருமை என்றால் ”அல்லாத இருமை”
என்று பொருள் தரும். இருமை என்ற மூலப்
பொருள் போகாது. எனவே, பொருள் தர வேண்டுமாயின்,
இருமையிலி, ஈரிலி தத்துவம் என்பது சாலும்.

இதேபோல்,
post-modernism: பின்-நவீனத்துவம்
(-ஐ கவனிக்கவும்.)
பின்நவீனத்துவம் என்று
எழுதினால், பின்கோடை (கோடையின் பின்பகுதி),
பிற்பகுதி X முற்பகுதி, ..., போல் பொருள்
மாறிவிடுகிறது. பின்நவீனத்துவம் = நவீனத்துவத்தின்
பிற்பாகம். அதுவா போஸ்ட்மாடர்னிஸம் என்பதன் பொருள்??

This could be because Tamil is a left-branching language:
http://www.reference.com/browse/left-branching
I'd be interested in reading any linguistics paper, thesis
on this aspect of Tamil. Must be a lot of this phenom
is published journals. will check with experts.

நா. கணேசன்

devoo

unread,
Aug 19, 2009, 11:44:18 PM8/19/09
to மின்தமிழ்
Aug 20, 6:01 am, "N. Ganesan"

*கேடிலி (அக்‌ஷயன்)*

இது பொருத்தமுடையதுதான் எனினும் ‘அவிநாசி’ என்பதற்கான தமிழாகவே கேடிலி
வழக்கத்தில் உள்ளது.

தேவ்

N. Ganesan

unread,
Aug 20, 2009, 6:49:44 AM8/20/09
to மின்தமிழ்

அவிநாசி அப்பருக்கு கேடிலி என்ற பெயர் இருக்கிறதா?

-------

ஆரூர் அருகே கீழ்வேளூரில்(கீவளூரில்) கேடிலியப்பர் - அக்‌ஷயநாதர்.
http://www.shivatemples.com/sofct/sct084.html

அப்பர் அடிகள் ஒருபதிகம் முழுக்க ஈற்றடியில் பாடுகிறார்:
” கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. ”
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_067.htm

அந்த நினைவு வந்ததால் எழுதினேன்.

இத்தலத்தைப் பற்றிய பிரபந்தத்தின் அச்சுவரலாறு
பற்றி ஒன்றும் சொல்லவேண்டும்.

நா. கணேசன்

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=93

இறைவரது திருப்பெயர் கேடிலியப்பர். இப்பெயர் இவ்வூர்த்
திருத்தாண்டகத்துள் எடுத்தாளப்பட்டுள்ளது. இறைவியாரது திருப் பெயர்
வனமுலைநாயகி.
இத்திருப்பெயரை ஞானசம்பந்தப் பெருந்தகையார் இவ் வூர்ப்பதிகம் இரண்டாம்
திருப்பாட்டில் ``வாருலாவிய வனமுலையவ ளொடு`` என்று எடுத்து
ஏத்தியிருப்பது பெருமகிழ்ச்சிக்கு உரியதாகும்.
தீர்த்தம் சரவணப்பொய்கை.
முருகவேள் பூசித்துப் பேறுபெற்ற பதி. அவருடைய பூசைக் கும் தவத்துக்கும்
கெடுதியுண்டாகாதவாறு இறைவியார் துர்க்கையின் அம்சமாகக் காவல்
பூண்டிருந்தார். அவர்க்கு அஞ்சு வட்டத்து அம்மை என்றுபெயர். அவருடைய
திருக்கோயில் முதல் பிராகாரத்தில் வட பக்கத்தில் இருக்கின்றது.
இச்செய்தி,
``மண்டுபே ரொளியான கேடிலியை
யர்ச்சித்த வள்ளிநாயகன் வருகவே
மாகாளிகாத்த கீழ்வேளூரில் மாதவம்
வளர்த்த வேலவன் வருகவே``
என்னும் இத்தலத்தைப்பற்றிய கே்ஷத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழால்
அறியலாம்.


> தேவ்

N. Ganesan

unread,
Aug 20, 2009, 2:56:44 PM8/20/09
to மின்தமிழ்

On Aug 19, 10:44 pm, devoo <rde...@gmail.com> wrote:

Akshaya linga vibho

தீக்‌ஷிதரின் சங்கராபரணக் கிருதி கேட்க,
http://www.hummaa.com/player/popcheck.php?id=71300&pltype=song&param=&plrtype=lc&plsrc=

akṣaya liṅga vibhō swayambhō
akhilāṇḍa kōṭi prabhō pāhi śambhō


Anupallavi

akṣara swarūpa1 amita pratāpa
ārūḍha vṛṣa vāha2 jaganmōha
dakṣa śikṣaṇa dakṣa-tara sura lakṣaṇa
vidhi vilakṣaṇa lakṣya lakṣaṇa
bahu vicakṣaṇa sudhā bhakṣaṇa
guru kaṭākṣa vīkṣaṇa
akṣara swarūpa1 amita pratāpa
ārūḍha vṛṣa vāha2 jagat-mōha
dakṣa śikṣaṇa dakṣa-tara sura lakṣaṇa
vidhi vilakṣaṇa lakṣya lakṣaṇa
bahu vicakṣaṇa sudhā bhakṣaṇa
guru kaṭākṣa vīkṣaṇa

Charanam
badarī vana mūla nāyikā sahita
bhadra kāḷīśa bhakta vihita
madana janakādi dēva mahita
māyā kārya kalanā rahita

badarī vana mūla nāyikā sahita
bhadra kāḷīśa bhakta vihita
madana janaka-ādi dēva mahita
māyā kārya kalanā rahita

sadaya guru guha tāta guṇātīta
sādhu janōpēta śaṅkara
navanīta hṛdaya vibhāta tumburu saṅgīta
hrīṃkāra saṃbhūta hēma giri nātha

sadaya guru guha tāta guṇa-atīta
sādhu jana-upēta śaṅkara
navanīta hṛdaya vibhāta tumburu saṅgīta
hrīṃkāra saṃbhūta hēma giri nātha

sadāśrita kalpaka mahī ruha
padāmbuja bhava ratha gaja turaga-
3padāti saṃyuta caitrōtsava
sadāśiva saccidānanda-maya

sadā-āśrita kalpaka mahī ruha
pada-ambuja bhava ratha gaja turaga-
padāti saṃyuta caitra-utsava
sadāśiva sat-cit-ānanda-maya


* 1akṣara swarūpa - akṣaya swarūpa
* 2vṛṣa vāha - vṛṣa vāhō
* 3padāti - padādi (padādi - seems to be error)

[edit] References
[edit] Commentary

* Kshetram - Keevalur

[edit] Renditions
Retrieved from "http://sahityam.net/wiki/Akshaya_linga_vibho"

Categories: Sankarabharanam | Misra Chapu | Dikshitar | Sanskrit |
Kriti

N. Ganesan

unread,
Aug 20, 2009, 3:19:41 PM8/20/09
to மின்தமிழ்

On Aug 19, 11:51 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/8/19 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>

> > சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
>
> > ஒட்டை > ஒஷ்ட (or, the other way around?)
>
> > நா. கணேசன்
>
> அன்புள்ள கணேசன்,
>
> உங்களுடைய முந்தைய மடலைப் பார்த்ததும் எனக்கும் இதேதான் தோன்றியது. இதற்கும்
> அதற்கும் தொடர்பு இருக்கிறது என்று தோன்றியதை எழுத கை துறுதுறுத்து, எழுதி,
> எழுதியதை டிஸ்கார்ட் செய்துவிட்டேன்.  இப்போது என்னைப் போலவே இன்னொருவருக்கும்
> தோன்றியிருக்கிறது என்றறிந்து ஆறுதலாக இருக்கிறது.
>
> ஏன் டிஸ்கார்ட் செய்துவிட்டேன் என்று கேட்கத் தோன்றலாம்.  வேறொன்றுமில்லை.
> ஆஷ்டுகுஷ்டி நினைவுக்கு வந்துவிட்டது.  புரிகிறதோ? :-)
>

அன்பின் ஹரிகி,

இன்னும் பல சொற்களை மொழியியலாளர்கள் பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

மாதவ தேஷ்பாண்டே/பீற்றர் ஹுக் எழுதிய Aryyan and Non-Aryan என்னும் 1979-
ஆம்
ஆண்டு புத்தகத்தில் காஷ்ட - என்பதைத் கட்டை என்னும் தமிழ்ச் சொல்லோடு
தொடர்பு படுத்திக் காட்டியிருக்கின்றனர். அந்தவகையில்,
ஒட்ட : ஒஷ்ட (ஓஷ்ட, வடமொழியில் குறில் ஒகரம் இல்லாததால்).

இன்னும் சில:
(1) முட்டி : முஷ்டி (மூட்டுதல் joint ).
முடக்கு: முடக்கல், கையை மடக்கிச் சண்டை.
முஷ்டாண்ட ,..
(2) வீட்டுக் கூரைக்கு வைக்கும் விட்டம் (> விஷ்ட),
விடு- என்னும் வினைச் சொல். (சங்க இலக்கியம்)
(3) விரல் போன்றவற்றை அழுகச்செய்து
குட்டை ஆக்கும் குட்டம் (> குஷ்டம்)
(4) இடு- என்னும் வினைச்சொல்லில் இருந்து
இட்டு எழுப்பும் சுவர். எனவே செங்கல்லுக்கு
இட்டி, இட்டிகை என்ற பெயர் (சங்க இலக்கியம்).
வேள்வியில் யாக குண்டங்கள் கட்ட
எழுப்புவது இட்டி (> இஷ்டி).
விரும்புவதை வேண்டும் வேள்வி வேட்பதாகையால்
இஷ்டம் என்றால் “விருப்பம்” என்ர பொருள்
இட்டி/இஷ்டி என்னும் செங்கல், வேள்விக் குண்ட்ம்
- இதன் நீட்சிப் பொருள் எனலாம்.

சிந்து சமவெளியில் லட்சக் கணக்கான இட்டிகளால்
கட்டிடங்கள் எழுந்தன. பின்னர் வேள்விக்குண்டங்களுக்கும்
அஃது பயன் பட்டது. ஆக்ஸஸ் என்னும் நதிக்கரைக்கும்,
சிந்துக்கும் தொடர்புகள் உண்டு. சிந்தின்
இட்டிகள் பற்றிய தொழில்நுட்பம் அங்கிருந்து போய்
இஸ்தி என்று வழங்கும். இந்தியாவுக்கு வெளியே
நா-வளை (retroflexes) ஒலிகள் அத்தன்மையை இழக்கும்.
(சோழர்: சோலர் ஆகின்றனர்! அதுபோல.)

-ஷ்ட- : -ட்ட- தொடர்புகள் - மொழியியல் நிபுணர்கள்
பார்க்க வேண்டும்.

அன்புடன்
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Aug 21, 2009, 12:07:41 AM8/21/09
to mint...@googlegroups.com


2009/8/21 N. Ganesan <naa.g...@gmail.com>


-ஷ்ட- : -ட்ட- தொடர்புகள் - மொழியியல் நிபுணர்கள்
பார்க்க வேண்டும்.

சரியாப் போச்சு.  பாரதிதாசன், ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள்தான் இப்படியெல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கிண்டல் செய்திருப்பதைச் சொல்ல வந்தேன்.  வேட்டியை வேஷ்டியாக்கினார்கள்.  விட்டால் ஆட்டுக்குட்டியை ஆஷ்டு குஷ்டியாக்கிவிடுவார்கள் என்றெல்லாம் போகும் அந்த எழுத்து (கவிதையா, கட்டுரையா என்பதெல்லாம் நினைவில்லை) நினைவில் வந்ததால் நான் நிறுத்திக் கொண்டேன் என்று சொல்ல நினைத்தேன்.  நான் இந்த முயற்சியை விஷ்டு விஷாமல் தொஷரஷ்ஷுமா......:-))

devoo

unread,
Aug 21, 2009, 12:27:37 AM8/21/09
to மின்தமிழ்
Aug 21, 12:19 am, "N. Ganesan"

வீட்டுக் கூரைக்கு வைக்கும் விட்டம் (> விஷ்ட)//

அப்படியில்லை;விஷ்டா அழுக்கைக் குறிப்பது.
லோஷ்டம்,கஷ்டம்,அஷ்டமம்,விஷம்,பிஷ்டம்,
ப்ருஷ்டம் ( प्रुष्टं-எரிந்தது), ப்ரேஷ்டம் போன்ற சொற்களைத் தமிழோடு
எப்படித் தொடர்பு படுத்துவது ?

தேவ்

N. Ganesan

unread,
Aug 21, 2009, 8:30:27 AM8/21/09
to மின்தமிழ்

On Aug 20, 11:27 pm, devoo <rde...@gmail.com> wrote:
> Aug 21, 12:19 am, "N. Ganesan"
>
> வீட்டுக் கூரைக்கு வைக்கும் விட்டம் (> விஷ்ட)//
>

தமிழ் லெக்ஸிகன்: விட்டம்¹ viṭṭam , n. < viṣṭa. 1. Cross beam
என்று குறிக்கிறது. ஆனால் மோனியர்-வில்லியம்ஸ் போன்றவற்றில் இல்லை,
(மோனியர்-வில்லியம்ஸ் அகராதி காட்டும் விஸ்ட என்ற சொற்பொருளும்
தமிழோடு தொடரபுடையதே).

திராவிட மொழிகளில் இருந்து சென்ற சொல் என்று கருதுகிறேன்:
விட்டம் > விஷ்டம்.

> அப்படியில்லை;விஷ்டா அழுக்கைக் குறிப்பது.
> லோஷ்டம்,கஷ்டம்,அஷ்டமம்,விஷம்,பிஷ்டம்,
> ப்ருஷ்டம் ( प्रुष्टं-எரிந்தது), ப்ரேஷ்டம் போன்ற சொற்களைத் தமிழோடு
> எப்படித் தொடர்பு படுத்துவது ?
>

நான் தொடர்புபடுத்தவில்லையே.

ஆனால், திராவிடச் சொற்கள் ஸம்ஸ்க்ருதமும்
இந்த pattern-ல் உருவாகியுள்ளன சில உதாரணங்கள்
கொடுத்துக் குறிப்பிட்டேன். இன்னும் பார்க்கவேண்டும்.

நா. கணேசன்

> தேவ்

devoo

unread,
Aug 21, 2009, 1:54:44 PM8/21/09
to மின்தமிழ்
Aug 20, 6:01 am, "N. Ganesan"

//அல்வழக்கு - (நேர்) அல்லாத வழக்கு என்றும்,


அல்வழி - (14 வகையான வேற்றுமைப்புணர்ச்சி) அல்லாத வழி என்றும் தமிழில்
பொருள்.
அல்லிருமை என்றால் ”அல்லாத இருமை”என்று பொருள் தரும். இருமை என்ற

மூலப்பொருள் போகாது. எனவே, பொருள் தர வேண்டுமாயின்,இருமையிலி, ஈரிலி
தத்துவம் என்பது சாலும். //


புரிகிறது. அல்லிருமை முழுமையான நேரான பொருளைத் தரவில்லை.

தேவ்

N. Ganesan

unread,
Aug 21, 2009, 2:04:01 PM8/21/09
to மின்தமிழ்

அல்லிருமை இராமகி ஐயா கொடுத்தது என்பதாக நினைவு.

நிச்சயமாக, அத்வைதம் என்ற பொருள் தராது. அத்வைதம் = அ-இருமை, இருமையிலி
தத்வம்.
non-fiction = அப்புனைவு பொருந்தாது, அ-புனைவு என்றால் ஓரளவுக்குச் சரி.

postmodernism = பின்-நவீனத்துவம். - எடுத்தால் பொருளே தமிழில்
போய்விடும்.
நவீனத்வத்தின் பிற்பகுதி என்றாகுமே தவிர, நவீனத்தவ்த்தின் பிற்பாடு என்று
ஆகாது.

10 ஆண்டுகளாய் தமிழின் இந்த இடம்-பிரியும் தன்மை
(left-branching nature of Tamil) குறிப்பிட்டுள்ளேன்:
http://groups.google.to/group/anbudan/msg/416026a3e28e0c22

அன்புடன்,

Reply all
Reply to author
Forward
0 new messages