ஜெயமோகன், தமிழ்ப் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி
எழுதியிருக்கிறார்கள்.
http://jataayu.blogspot.com/2008/02/blog-post_22.html
திராவிட மொழிக்குடும்பம் என்ற கோட்பாட்டை முதலில் வடித்துத் தந்த
சென்னை கலெக்டர் எல்லிஸ் வள்ளுவரைச் சமண முனிபுங்கவராகக்
காட்டும் பொற்காசுகளை மதறாஸ் மிண்ட்டில் (அக்கசாலை) வெளியிட்டுள்ளார்.
கலாரசிகர் விஜயகுமாரின் நண்பர் ஒருவர் சிலைகளில் இருந்து அருமையாக ஓவியம்
வரைபவர். எல்லிஸ் தங்கக் காசை தியானரூபமாக எடுத்து
ஐராவதம் மகாதேவனாரின் ஆங்கில, தமிழ்க் கட்டுரைகளைப்
படித்தபின் திருவள்ளுவரை சமணமுனியாகக் காட்டும் நல்ல சித்திரம்
வரைய வேண்டும்.
இப்போது அரசாங்க தபால்தலை உருவம் மயிலையில் வாழ்ந்த
வேணுகோபால சர்மா சினிமாத்துறையில் இருந்தவர் வரைந்தது.
அது மயிலை வள்ளுவர் கோயில் சிலையை செக்குலர் வடிவம்
ஆக்கி திருநீறு, உருத்திராட்சம் களைந்தது. பாரதிதாசன் போன்றோர்
வேண்டுகோளால் செய்தது (பாரதிதாசனும் சினிமாத் துறையில் ஈடுபட்டவர்).
அதுவே, வேணுகோபால சர்மாவின் சித்திரமே வள்ளுவர் கோட்டம்,
குமரிமுனையில்.
சமணமுனியாகக் காட்டும் வள்ளுவர் சித்திரமும் ஏற்பட்டுப் புழங்க வேண்டும்.
அதற்கு மாதிரியாக சென்னை அரசாங்கத்தின் வள்ளுவர் பொற்காசைக்
கொள்ளல் ஆகும். பொற்காசு 200 ஆண்டுகள் சரிதம் உடையது. இதுபற்றி
மேலும் எழுதுவேன்.
------------
ஹரி கிருஷ்ணன் எழுதினார்:
”திருவள்ளுவரை எந்த மதச் சிமிழுக்குள்ளும் அடைப்பதில் எனக்குச்
சம்மதமில்லை என்றாலும், இந்த வாதங்களில் உள்ள இன்னொரு அம்சத்தையும்
காட்டுவதற்காக நண்பர் ஜாவா குமார், திருவள்ளுவர் ஒரு இந்துவே என்று
நிறுவி எழுதியதிலிருந்து குறிப்பிட்ட சில பகுதிகளைக் கீழே தருகிறேன்: ”
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802217&format=print
http://jataayu.blogspot.com/2008/02/blog-post_22.html
> 4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
> பைங்கூழ் களை கட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை
>நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும்
>சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை
>தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள
> வேண்டும்.
என் பழைய மடல்:
திருவள்ளுவர் மரண தண்டனையையா வலியுறுத்தினார்?
கேப்பிட்டல் பனிஷ்மென்ட் என்று தூக்கில் இடுவதை
முன்னேறிய நாடுகள் பல தடை செய்துவிட்டன. நாகரீகமற்ற
நாடுகளுக்கு (உதாரணமாக இன்றும் சௌதியில்) கல்லால் எறிந்தும்,
சிரச்சேதம் பொதுமக்கள் முன்னிலையிலும் நடப்பதைப் பார்க்கிறோம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை உரை:
"550. கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனோடு நேர்.
பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல்
பைங்கூழ் களை கட்டதனோடு நேர் = கொலை செய்யும்
கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
களை பறிப்பதோடு ஒத்தது.
பொழிப்புரை: கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி
விடுவது, பயிர்களைக் களையெடுப்பதற்குச் சமானம்.
விளக்கம்: "வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்"
என்று வலிந்து பதங்களைச் சேர்த்து 'கொடியவர்களை
எல்லாம் கொன்ற்விடவேண்டும்" என்று பொருள் கொள்ளுவது
திருவள்ளுவர் கருத்துகளுக்கு முற்றிலும் விரோதமானது.
மேலும் தீவைப்பவர் , விஷம் கொடுப்பவர், ஆயுதங்களால்
கொலை செய்பவர், பிறர் மனைவியிடம் விபசாரம் செய்பவர்
ஆகிய இவர்களெல்லாம் கொன்றுவிடத்தக்க கொடியார்
என்று குறிப்பது திருக்குறளின் பெருமைக்குத் தீங்கானது.
கொலை செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை
என்று சொல்லவும் கூசி 'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல்
'ஒறுத்தல்' என்று சொல்லுகிறார். 'ஒறுத்தல்' என்பது
'கொல்லுவது' என்பது அல்ல. சமயோசிதம் போல் 'தண்டிப்பது'
என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை சரியான
தண்டனை என்று சொல்லவும் கூசினார் என்பதை அனுமானிக்க
இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்து'
என்று பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும்
என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவருடைய கருத்தாக
இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற உவமானத்திலும்கூட,
களைகளைப் பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது
காரியமேயல்லால் அவற்றை அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல.
பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத வேறு இடத்தில்
விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக் களைபறித்தவன்
கவலைப்பட மாட்டான்."
(பக். 290, திருக்குறள் - நாமக்கல் கவிஞர் உரை, 2004, பூம்புகார்
பிரசுரம்).
குறளின் பழைய ஜைந உரைகளில் கொலைத்தண்டனை என்று
கூறப்படவில்லை. கட்டல் என்பதற்குக் கொல்லல் என்பது முதன்மைப்
பொருள் அன்று. சிறையில் அடைத்துக் கட்டி வைக்கலாம்தானே.
கால்கட்டு = திருமணம் அல்லவா? அப்புறப்படுத்தி சிறையில் அடைக்கலாமே.
”ஒன்றாக நல்லது கொல்லாமை” - வள்ளுவம். எனவே,
வள்ளுவர் தூக்குதண்டனை தரச் சொல்லிக் குறள்
ஒன்றை எழுதியுள்ளார் என்பது நம்ப முடியாததாக உள்ளது.
அன்புடன்,
நா. கணேசன்
திருக்குறளைச்சமண
நூல் என்று சொன்னால் "இன்பத்துப் பாலை" நீக்கிவிட வேண்டும். எனவே திருக்குறள் சமண நூல் அன்று எனப் படித்ததாக நினைவு. பெரியோர்கள் இந்த நோக்கிலும் கருத்துச்சொல்லக் கேட்டுக்கொள்கிறேன்நன்றி
சொ
.வினைதீர்த்தான்http://nvkashraf.co.cc/valluvar/jaina1.htm
V
On Sep 9, 5:43 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> வள்ளுவர் சமணர் என்று பல தமிழ் அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளார்கள்.
> சமணர் என்ற கொள்கையுடையோர் யாரென்று பல முறை கொடுத்துள்ளேன்.
> இப்போது நினைவுக்கு வருவது: சு. வையாபுரிப்பிள்ளை, மே. வீ. வேணுகோபாலப்
> பிள்ளை, மயிலை வேங்கடசாமி, சுவெலெபில், ஐராவதம் மகாதேவன், கே. ஸ்ரீனிவாச
> ஐயங்கார், க. நா. சுப்பிரமணியம், ஜெயமோகன், இந்திரா பார்த்தசாரதி,
> .... இணையத்தில் இவர்களின் எழுத்துக்களையெல்லாம் தமிழன்பர்கள் தொகுக்க
> வேண்டும், இதற்கு நானும் உதவமுடியும்.
>
> ஜெயமோகன், தமிழ்ப் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி
> எழுதியிருக்கிறார்கள்.http://jataayu.blogspot.com/2008/02/blog-post_22.html
> இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற உவமானத்திலும்கூட, ...
>
> read more »
V
On Sep 9, 6:51 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> திருக்குறளைச்சமண நூல் என்று சொன்னால் "இன்பத்துப் பாலை" நீக்கிவிட வேண்டும்.
> எனவே திருக்குறள் சமண நூல் அன்று எனப் படித்ததாக நினைவு. பெரியோர்கள் இந்த
> நோக்கிலும் கருத்துச்சொல்லக் கேட்டுக்கொள்கிறேன்
>
> நன்றி
>
> சொ.வினைதீர்த்தான்
>
தற்போதைய தமிழ்ச் சமணர்களை தங்களை எப்படி அழைத்துக் கொள்கின்றனர்?
அவர்கள் பெயர்களெல்லாம் இந்துப் பெயர்களாகவே இருக்கின்றனவே?
சமணர்களிடையே ஜாதி வேறுபாடு உண்டா?
சமணர்களை தமிழக அரசு Forward, Backward, Schedule இதில் எங்கு நிறுத்துகிறது?
அறம் கூறும் அன்னை விஜயலக்ஷிமி அம்மாவைப் பார்த்த போது அப்படியே
எம்.எஸ்.சுப்புலக்ஷிமியைப் பார்த்தது போல் இருந்தது. அவர்களை ஐயர் வீட்டு
அம்மா இல்லை என்று நம்புவது கடினம். சமீபத்தில் இன்னொரு சமணப் பெண்ணைப்
பார்த்தேன். அவர் பயந்து, பயந்து தன்னை சமணர் என்று சொல்லிக் கொண்டார்.
Fear against discrimination.
யார் கண்டது, இங்குள்ளோரில் எத்தனை விழுக்காடு மூதாதையர் சமணர்களாக
இருந்தார்களோ? காலம் மாறும் போது அவர்களும் மாறுதல் இயற்கைதானே?
யூதர்களுடன் ஒப்பு நோக்கி ஏதாவது நூல்கள் வந்துள்ளனவா?
சமணர்களுக்கு எம்மொழி இரண்டாவது, மூன்றாவது மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது?
சமண திருவெம்பாவையில் 'வேதம்' என்ற சொல் வருகிறது. அவர்கள் வேதம் எது?
அதை ஏன் வேதம் என்கின்றனர்? பைபிள், விவிலியம் என்பதையும் வேதம் எனச்
சொல்லும் வழக்கம் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது. அது போன்ற முயற்சியா?
நான் சிறுவனாக இருந்த போது 'நயினார்' என்றொரு சித்த மருத்துவர். அவர்
சமணர் என்று பின்னால் அறிந்தேன்.
இவர்கள் exotic-ஆக இருப்பது போல் படுகிறது!
க.>
2009/9/9 Vinodh Rajan <vinodh...@gmail.com>:
உண்மையான சமணர்களை யாரையாவது மின் தமிழுக்கு அழைத்து வாருங்களேன். இணைய
சமணர்களிடமிருந்து ஜைன தர்மத்தை காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு வந்து
சேரும் :-))))))) உங்களுக்கு "பவ்ய ஜீவன்" என்ற பட்டத்தையும் கொடுக்கவும்
ஆவன செய்வோம் !
>
> சமண திருவெம்பாவையில் 'வேதம்' என்ற சொல் வருகிறது. அவர்கள் வேதம் எது?
> அதை ஏன் வேதம் என்கின்றனர்? பைபிள், விவிலியம் என்பதையும் வேதம் எனச்
> சொல்லும் வழக்கம் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது. அது போன்ற முயற்சியா?
>
அருகபகவானை வேதன், வேதியன் என்றும் அழைக்கின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் வேதநிந்தனையாளர்கள் என்று
பழிக்கப்பட்டவர்கள் தான் ஜைனர்கள் !
ஒரு கட்டுரையில், இடைக்கால ஜைனம் தன்னை வைதீகத்துக்கு மிக நெருக்கமாக,
மாற்றிக்கொண்டதாக படித்தேன். அதாவது வைதீக விரோதமாக இல்லாமல்,
வைதீகத்துக்கு மிக ஒத்ததாக பிறகால ஜைனம் மாறியதாக ஆசிரியர்
கூறியிருப்பார். அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கலாம்.
கட்டுரை இணைப்பு எங்கோ படித்தது, வழக்கம் போல் மறந்து விட்டேன். இணைப்பை
தேடி இங்கு இடுகிறேன்.
V
On Sep 10, 5:49 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> சமணர்கள் பற்றிய சமகாலப் புரிதலுக்கு சில கேள்விகள்:
>
> தற்போதைய தமிழ்ச் சமணர்களை தங்களை எப்படி அழைத்துக் கொள்கின்றனர்?
> அவர்கள் பெயர்களெல்லாம் இந்துப் பெயர்களாகவே இருக்கின்றனவே?
>
> சமணர்களிடையே ஜாதி வேறுபாடு உண்டா?
>
> சமணர்களை தமிழக அரசு Forward, Backward, Schedule இதில் எங்கு நிறுத்துகிறது?
>
> Fear against discrimination.
>
> யார் கண்டது, இங்குள்ளோரில் எத்தனை விழுக்காடு மூதாதையர் சமணர்களாக
> இருந்தார்களோ? காலம் மாறும் போது அவர்களும் மாறுதல் இயற்கைதானே?
>
> யூதர்களுடன் ஒப்பு நோக்கி ஏதாவது நூல்கள் வந்துள்ளனவா?
>
> சமணர்களுக்கு எம்மொழி இரண்டாவது, மூன்றாவது மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது?
> நான் சிறுவனாக இருந்த போது 'நயினார்' என்றொரு சித்த மருத்துவர். அவர்
> சமணர் என்று பின்னால் அறிந்தேன்.
>
>
> க.>
>
> 2009/9/9 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>:
http://www.treasurehouseofagathiyar.net/33300/33346.htm
On Sep 10, 11:43 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:
> டாக்டர் கமலி ஸ்ரீபால், அவங்க குடும்பம் சமணமதமே. ஸ்ரீபால் சென்னை போலீஸ்
> கமிஷனராய் இருந்தார்னு நினைவு! திருச்சிக்கு அருகே சித்தன்னவாசலுக்குப் பக்கம்
> ஒரு கிராமம் இருந்ததுனு கேள்விப் பட்டிருக்கேன். உறுதியாத் தெரியாது.
>
> 2009/9/10 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>
அடியேன்! பவ்யமாகத்தான் சொல்கிறேன் ;-)
உவேசாவின் என் சரித்திரம் வலையில் இருக்கிறது.
ஆறாம் திணையில். அதனை யூனிகோடில் த.ம.அ.யில்
அவர்களுக்கு நன்றி பாராட்டி வைக்கலாம்.
பவ்ய ஜீவன் என்ற தொடரை ஒரு ஜைன விதூஷி
உவேசாவுக்கு வழங்கியதாக சீவக சிந்தாமணி
பதிப்பு வரலாற்றில் கூறியுள்ளார். அந்த அத்தியாயத்தை
இங்கே தரலாம்.
“பவ்ய ஜீவன்” என்ற தொடர் ஜைந சமயத்தில் மிக முக்கியமானது.
நா. கணேசன்
அடடா! இந்த டைட்டிலுக்காவது 10 இணைய ஜைனர்களை மின்தமிழுக்குக் கொண்டு
வரலாம் போலருக்கே! அவங்களை எப்படிக் கண்டு பிடிக்கிறதுன்னுதான்
தெரியலை;-)
க.>
தமிழ்நாட்டில் 85,000 மக்கள் சமண சமயத்தை பின்பற்றுகின்றார்கள்.
ஒரு வருஷமாக அவரோட வலைப்பதிவும் அப்டேட் செய்யப்படவில்லையே !!
On Sep 10, 4:02 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/9/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:
On Sep 10, 6:25 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> இந்த பானுகுமார் ராஜேந்திரன் என்ன ஆனார் ?
>
> ஒரு வருஷமாக அவரோட வலைப்பதிவும் அப்டேட் செய்யப்படவில்லையே !!
>
பானு இரண்டு குட்டிப் பையன்களின் தந்தை. சென்னைவாசி.
வேலையில் முசுவாக இருக்கலாம். நான் எழுதி உங்களுக்கு
அறிமுகம் செய்கிறேன். ஒரு வார இறுதியில் சந்திக்கலாமே.
ஜீவபந்து வலைத்தளம் திறந்தால் வைரஸ் வருகிறது.
யூனிக்கோடுக்கு மாற்றணும். வைரஸ் இல்லாமல் செய்யணும்.
ஜைந சாத்திரம், தோத்திரம், காப்பியங்கள், சமயக் கட்டுரைகள்
இணையத்தில் வரவேண்டும். அவர்கள் எண்ணிக்கையில்
மிக அருகிவிட்டதால் அதனை ஏற்றுச் செய்ய மற்றவர்கள்
உதவ வேண்டும்.
----------
பானு போன், இ-மெயில் தருகிறேன். கொங்குவேளிர் ஊரான
விஜயமங்கலம் ஆதிநாதர் (ரிஷபதேவர்) தீர்த்தங்கரர்
கோயில் கும்பாபிடேகத்துக்கு என்னை அழைத்து
சிறப்புச் செய்தனர். விழாவில் பேசினேன், அன்னதானத்துக்கு
உதவினேன். அப்போது பார்க்க வந்து என்னுடன் ஒருநாள்
இருந்தார் பானுகுமார்.
செ. ராசுவின் கொங்குநாடும் சமணமும்
புத்தகம் பார்த்துள்ளீரா? ராசுவின் மதுரை பிஎச்டி தீஸிஸ்.
அதனை பிடிஎப் செய்து த.ம.அ.வில் வைக்கலாம்.
நான் வெளியிட்டது. அனுமதி நானும், ராசுவும் தருகிறோம்.
அந்த புத்தகத்துக்கு எடுத்த சமணச் சிலைகள் போட்டோ
ஒரு சிடி ஆக உள்ளது. அதையும் வைக்கலாம்.
நா. கணேசன்
(முசு = busy என்பதற்கான
கொங்குச் சொல். பழமைபேசியின் வலைப்ப்பதிவில் பயன்படுத்துகிறார்.
பெருமாள் முருகனின் கொங்குச் சொல்லகராதியில் இருக்கலாம்.)
தொல்லியல் நோக்கில் சங்ககாலம்
http://bharani.dli.ernet.in/thf/text/etext/nirutha/thol.html
திருக்குறளும் கொங்குநாடும்
http://bharani.dli.ernet.in/thf/text/etext/nirutha/thiru.html
சென்னைக் கல்வெட்டுகள் - சில குறிப்புகள்
http://bharani.dli.ernet.in/thf/text/etext/nirutha/chennai.html
தமிழ் நாட்டில் பஞ்சகாலத்து அடிமை ஓலை
http://www.tamilheritage.org/old/video/moindex.html
செப்பேடுகள், கல்வெட்டுக்கள்
http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html
செ. ராசுவின் கொங்குநாடும் சமணமும் எனும் நூலும் வந்தால் இன்னும்
சிறப்பாக அமையும். நா.கணேசன்தான் உதவ வேண்டும்.
க.>
http://www.jainworld.com/JWTamil/jainworld/sripalbooks/index.html
இப்ப ஒழுங்காகத்தான் வருகிறது.
என்ன திஸ்கியில் இருக்கின்றன.
ஜைன உலக வலைத்தளமே கவனிப்பாரற்று இருப்பதாக தோன்றுகிறது. (பலவற்றை
ஆர்ச்சீவில் சென்று பார்க்க வேண்டியதாக உள்ளது. (எ.டு) ஜைன திருவெம்பாவை)
எல்லாவற்றையும் யூனிகோடில் மாற்றி வருங்காலத்துக்கு பிரயோஜனப்படும்.
http://www.jainworld.com/JWTamil/
V
On Sep 10, 4:36 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Sep 10, 6:25 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
>
> > இந்த பானுகுமார் ராஜேந்திரன் என்ன ஆனார் ?
>
> > ஒரு வருஷமாக அவரோட வலைப்பதிவும் அப்டேட் செய்யப்படவில்லையே !!
>
> பானு இரண்டு குட்டிப் பையன்களின் தந்தை. சென்னைவாசி.
> வேலையில் முசுவாக இருக்கலாம். நான் எழுதி உங்களுக்கு
> அறிமுகம் செய்கிறேன். ஒரு வார இறுதியில் சந்திக்கலாமே.
>
>
On Sep 10, 9:21 am, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> கருதகேவலி என்று ஒரு மாதாந்திர இதழ் சமண மதத்துக்காக வெளிவருகிறதே.
>
> சமீபத்தில் ஒரு நண்பர் சமண சமய இலக்கியங்கள் நிறைய நூல்கள் அனுப்பினார்.
>
> தமிழ் தெரிந்த சமண நண்பர் யாரையாவது பிடித்து வைத்துக் கொண்டு படிக்கத் துவங்க
> வேண்டும்.
>
> கருதகேவலி முகவரி வேண்டும் என்றால் நாளை அலுவலகம் சென்று அனுப்பி வைக்கிறேன்.
>
சுருதகேவலி
> அன்புடன்
>
> பென்னேஸ்வரன்
>
> 2009/9/10 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>
> --http://www.vadakkuvaasal.com/- Hide quoted text -
>
> - Show quoted text -
ச்ருத கேவலி - மாத இதழ். வெளியிடும் நிறுவனம் வந்தவாசியில் உள்ளதுபோல்
தெரிகிறது.வந்தவாசி பின்கோட் . இவர்களின் வெளியீடுகள் குறித்து
வடக்குவாசல் வலை மனை தெரிவிக்கிறது.தொடர்பு கொண்டு பார்ப்போம்.
பென்னேஸ்வரன் அவர்களுக்கு நன்றி.
தேவ்
எதோ "அறம்" என்று இருந்ததாக ஞாபகம். அதன் சரியான பெயர்
மறந்துவிட்டது !! :-(
அப்போதெல்லாம் வைதீகத்தில் அதீத ஈடுபாடு இருந்ததால் சிரத்தை எடுத்து
படிக்கவில்லை. :-/. ஸ்ரீமத் பாகவதத்தையும், உபநிஷத்துகளையும், வைஷ்ணவ
தத்துவங்களையும், கர்போதக விஷ்ணு, காரணோதக விஷ்ணு என்றெல்லாம் எல்லாம்
விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருடந்த காலம் :-))
V
> > --http://www.vadakkuvaasal.com/-Hide quoted text -
Friday, September 11, 2009
தாமரைக் கண்ணான் உலகு!
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு – திருக்குறள் (1103)
பரிமேலழகர் உரை:
தாம் வீழ்வார் மென் தோள்துயிலின் இனிதுகொல் – ஐம்புலன்களையும்
நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும்
துயில்போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு – அவற்றைத் துறந்த
தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது.
இப்பெற்றித்தாய் துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின்,
எம்மனோர்க்கு ஆகாது என்னும் கருத்தால் “இனிது கொல்” என்றான். இந்திரன்
உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப்
பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.
(அப்பா! எப்படியெல்லாம் மழுப்புகிறார் ;-)
http://banukumar_r.blogspot.com/
அகத்திய குழுமத்தில் எழுதும் போது இக்குறள்ப் பற்றி விவாதிக்கப்பட்டது.
குறளின் சமயத்தை இக்குறளில் ஏன் தேடுகிறார்கள் என்று நினைத்துச்
சிரித்ததுண்டு :-)
நேற்று முன்தினம் நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்து ”தாமரைக் கண்ணான்
உலகு” பற்றிச் சொல்ல சொன்னார். ஏதோ ஒரு யாஹீ குழுமத்தில் மடலாடல்
நடந்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அவர் அப்படித்தான்! திடீரென்று
கைப்பேசியில் அழைப்பார். ஏதாவது கேட்பார்? எங்காவது எழுதுகிறீர்களா?
என்றால் சிரித்துவிட்டு கட் செய்து விடுவார்.
************* *************** ******************* **************
******************
யாஹூ குழுமத்தில் இது பற்றிப் பேசுகிறார்களா ?
அன்பர் பானு குமாருடன் பேசியது யார் ?
தேவ்
ஆர்.நடராஜ்
First Published : 17 Sep 2009 01:09:38 AM IST
Dinamani
சராசரி மனிதன் சட்டங்களை மதித்து நடப்பதற்கு முக்கியக் காரணம் சட்டத்தை
மீறினால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற பயம் ஒன்றுதான். ""நாம்
அனைவரும் நமது மனதில் தூக்குமேடையைச் சுமந்து கொண்டிருக்கிறோம்'' என்பது
உண்மையே. தூக்கிலிடும் தண்டனையை நினைத்தாலே எல்லோருக்கும் ஒரு பயம்
வருவது இயற்கை. "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார் ஒளவைப்
பிராட்டி. அத்தகைய உயர்ந்த பிறப்பினை மாய்ப்பதோ மாய்த்துக்கொள்ளத்
துணிவதோ கொடுமையிலும் கொடுமை. ஆனால் சட்டப்படி நிறைவேற்றப்படும் இந்தத்
தண்டனை சமுதாய நலன் கருதி வைக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்பது
சர்ச்சைக்குரிய விஷயம்.
திருமணமான இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்தி, கொலைசெய்த வழக்கில்,
கொலைசெய்த கொடுமைக்காரர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்
சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தது செய்தியாக வந்தது. மரண தண்டனைச்
சட்ட ஏடுகளில் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல மேலைநாடுகளில்
மரணதண்டனை, சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சுவது, உடம்பை நாலுபாகமாகக் கிழிப்பது போன்ற கோரமான முறையில்
குற்றம்புரிந்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பற்றி சரித்திர
ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தண்டனையின் அடிப்படை நோக்கம்
மற்றவர்களுக்கு இது படிப்பினையாக இருக்க வேண்டும், குற்றவாளி புரிந்த
குற்றத்திற்கு பிராயச்சித்தமாக வேதனையுற்று மடிய வேண்டும் என்பதே ஆகும்.
மைக்கேல் போக்கால்ட் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் "ஒழுக்கமும் தண்டனையும்'
என்ற பிரசித்தி பெற்ற புத்தகத்தில், பிரான்ஸ் நாட்டில் "குவார்டரிங்'
என்ற கொடூர முறையில் தண்டிக்கப்பட்டவரின் கை, கால்களை நான்கு குதிரைகளில்
கட்டி, நான்கு திசைகளில் அந்தக் குதிரைகள் இழுக்கத் துடிதுடித்து அங்கம்
அங்கமாகச் சிதையுறுவதை வர்ணித்துள்ளார். வதையுறுபவர் அருகில் சென்று
பாதிரியார், "என்ன சொல்லுகிறாய்' என்று வினவ, "கடவுளே என்னை
அழைத்துக்கொள், பாவியாகிய என்னை ரட்சிப்பாய்' என்று கூக்குரலிடுவார்
என்று, பொது இடத்தில், மக்கள் பார்வையில் 1757-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட
ஒரு தண்டனை விவரிக்கப்பட்டுள்ளது.
தலையை ஒரே வெட்டில் துண்டிக்கும் "கில்லட்டின்' முறையும் பிரான்ஸ்
நாட்டில் மக்கள் புரட்சியின்போது கையாளப்பட்டது. மரண தண்டனை கோரத்தின்
எல்லை தாண்டியதால் அம்முறை முற்போக்குச் சிந்தனையாளர்களால்
வெறுக்கப்பட்டு மரண தண்டனை சட்ட ஏடுகளிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
இந்திய தண்டனைச் சட்டப்படி கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனை அல்லது
ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான
கொலைகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்க வேண்டும். மிக அரிதான
வழக்குகளில் மட்டும் இந்த அதிகபட்சத் தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்ச
நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருப்பதால் இது ஒரு
விதியாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுவரை சுதந்திர இந்தியாவில் சுமார் 1500 கொடுங்குற்றம் புரிந்தவர்கள்
தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். இதுபற்றிய ஆதாரமான புள்ளிவிவரம் இல்லாததால்,
மனித உரிமை அமைப்புகள் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 4500-க்கு மேல்
இருக்கும் என்று கணக்கிட்டிருக்கின்றன.
தமிழகத்தில் இதுவரை 292 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். வேலூர்
பெண்கள் சிறையில் 1947-ல் இருந்து 71 பெண் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
விதிக்கப்பட்டு 68 பெண்களுக்கு மேல்முறையீட்டு மனுவில் தண்டனை
குறைக்கப்பட்டது. மூன்று பெண்கள் மட்டும் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் கடைசியாக 1995-ம் ஆண்டு ஆட்டோ சங்கர்
தூக்கிலிடப்பட்டார். சேலம் மத்திய சிறையில்தான் அதிகபட்சமாக 102
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சென்னை, மதுரை,
கோயமுத்தூர் சிறைகளில் தலா சுமார் 60 மரண தண்டனைகள்
நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது 18 மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் தமிழகச்
சிறைகளில் உள்ளனர். அவர்களது மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.
இந்தியாவில் கடைசி மரண தண்டனை 2004-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஒரு
சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற குற்றத்துக்காக தனஞ்சய சாட்டர்ஜி என்பவர்
கோல்கத்தா சிறையில் தூக்கிலிடப்பட்டார். இந்தியக் குற்றவியல் நடைமுறைச்
சட்டம் 366(1) பிரிவின்படி மரண தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம் தனது
தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். உயர்
நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்யலாம் அல்லது சட்டத்தில் உள்ளபடி வேறு
குறைந்த தண்டனை விதிக்கலாம் அல்லது தண்டனையை ரத்து செய்யலாம். மரண தண்டனை
உறுதி செய்யப்பட்ட நிலையில் விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துத்
தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரண தண்டனையை எதிர்த்துத் தண்டிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்யலாம்.
அதற்கு மேல் கருணை மனு அனுப்பலாம். கருணை மனு பரிசீலிக்கப்பட்டு முடிவாக
நிராகரிக்கப்பட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும். இந்த இடைப்பட்ட
காலத்தில் தண்டிக்கப்பட்டவர் நிலை விநோதமானது. அவர் தண்டனை அனுபவிக்கும்
இல்லவாசி அல்ல. அவரைப் பாதுகாப்பாக ஆரோக்கியமாக உயிரோடு சிறையில்
வைக்கும் நோக்கம் அவரது தண்டனை, முடிவாக உறுதி செய்யப்பட்ட பிறகு
சட்டப்படி மரண தண்டனை நிறைவேற்ற அவர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அவரை உயிரோடு பாதுகாப்பதே சட்டப்படி உயிரை மாய்ப்பதற்காக!
ஒவ்வொரு நாட்டிலும் மரண தண்டனை நிறைவேற்றும் முறை மாறுபடுகிறது.
அமெரிக்காவில் முதலில் மின்சார நாற்காலியில் தண்டனையுற்றவரை உட்கார
வைத்து உயிர் எடுக்கப்பட்டது. இப்போது அம்முறை இல்லை. விஷஊசி மூலம்
நினைவிழக்கச் செய்து வலியில்லாமல் உயிரை எடுக்கும் முறை. சில நாடுகளில்
துப்பாக்கியால் சுடும் முறை. நமது நாட்டில் உயிர் போகும்வரை தூக்கிலிடும்
முறை அமலில் உள்ளது. இந்த முறையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச
நீதிமன்றம் 1983-ம் ஆண்டு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் வழி
கொடுமைப்படுத்தும் முறையல்ல என்று தீர்ப்புக் கூறியிருக்கிறது.
மரண தண்டனையுற்றவர்கள் சிறைவிதிகளின்படி சிறையில் தனியாக ஓர் அறையில்
வைக்கப்பட வேண்டும். முழுநேரப் பாதுகாப்புக் கொடுக்கப்பட வேண்டும். அவரது
உயரம், எடை எவ்வளவு என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு தூக்குமேடைக் கயிறு
அளவோடு கட்டப்படும். நெம்புகோலால் நகர்த்தக்கூடிய இரும்புத் தடத்தில்
தண்டனையுற்றவரை நிற்கவைத்து, கழுத்தில் கயிறு சரியான அளவில்
இறுக்கப்படும். கருப்புத்துணியால் முகம் மூடப்படும். நெம்புகோலை
இயக்குவதற்குப் பணிக்கப்பட்டிருக்கும் சிறை அலுவலர் மனதிடத்தோடு
சட்டென்று நெம்புகோலை இழுக்க வேண்டும். தண்டனையாளி நின்று கொண்டிருக்கும்
இரும்புத்தளம் திடீர் இயக்கத்தால் விலகி தண்டனையாளி முழுமையாக உடம்பு
பளுவில் தொங்கி உயிர்விடுவார். பணியில் இருக்கும் மருத்துவர் உயிர்
பிரிந்துவிட்டது என்று உறுதி செய்த பிறகு, உடல் வெளியே எடுத்துச்
செல்லப்படும். உடலை வெளியே எடுத்துச் செல்வதற்குப் பிரத்யேக வழி.
ஐக்கிய நாடுகள் சபை பலமுறை தனது தீர்மானங்கள் மூலம் மரண தண்டனை, சட்ட
ஏடுகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. பலஇதற்கு
இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று மரண தண்டனை
மனிதகுலத்தின் கண்ணியத்தைக் குலைப்பதாகும். மற்றொன்று மனிதாபிமானமின்றி
கொடூரமான தண்டனைக்கு எவரையும் உள்படுத்தக்கூடாது என்ற மனித உரிமை மரண
தண்டனை விதிப்பதால் மீறப்படுகிறது என்ற காரணமும் உண்டு. மேலும் சர்வதேச
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் பிரிவு 6-ல் மரண தண்டனை
பொதுவாக விதிக்கக்கூடாது. அப்படி விதித்தாலும் உரிய நீதிமன்ற விசாரணையின்
முடிவில் குற்றவாளிக்குத் தகுந்த வாய்ப்பு அளித்த பிறகு தான் உறுதி
செய்யப்பட வேண்டும் என்றும், 18 வயதுக்கு உள்பட்டவர்க்கு மரண தண்டனை
விதிக்கக்கூடாது; கர்ப்பமுற்ற பெண்களைத் தூக்கிலிடக் கூடாது என்று பல
முக்கிய விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. நமது நாட்டிலும் கர்ப்பமுற்ற
நிலையில் பெண்கள் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது.
1945-ல் ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டபோது ஏழு நாடுகள் தான் மரண
தண்டனை இல்லாத நாடுகள். ஆனால் இன்று பல நாடுகளில் இந்தத் தண்டனை
நீக்கப்பட்டுவிட்டன. ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் உள்ளன. அதில்
142 நாடுகளில் மரண தண்டனை நீக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதம்
டோகோ என்ற நாடு மரண தண்டனை நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
"ரெஜிûஸட்' என்ற இந்த அரசுக் கொலை தொடர வேண்டுமா நீக்கப்பட வேண்டுமா
என்ற கேள்விக்குப் பல மனித உரிமை அமைப்புகள் இந்தக் கொடூரமான அரசே
செய்யும் மனித உரிமை மீறல் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி வருகின்றன.
ஆனால் கொடுங்குற்றங்கள் பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எத்தகைய தண்டனை கொடுக்க
வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில்
சோப்ரா குழந்தைகளைக் கொன்ற பில்லா ரங்கா இருவரும் தூக்கிலிடப்பட்டபோது
எல்லோரும் ஒருமித்து ஆமோதித்தனர். வேறுவிதமான தண்டனை திருப்தி
அளித்திருக்காது.
ஆனால் மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் அரசே கொலையாளியாகக் கூடாது, இத்தகைய
உச்சகட்ட தண்டனைகள், குற்றங்கள் குறைவதற்கு மாறாக சமுதாயத்தில் எதிர்மறை
உணர்வுகள், பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்பது போன்ற வன்முறையைத்
தூண்டக்கூடிய மனநிலை உருவாக வழிவகுக்கின்றன என்ற வாதங்களை
முன்வைக்கின்றனர். காலம்தான் இந்தச் சர்ச்சைக்கு முடிவு கொடுக்கும்
On Sep 9, 7:43 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> வள்ளுவர் சமணர் என்று பல தமிழ் அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளார்கள்.
> சமணர் என்ற கொள்கையுடையோர் யாரென்று பல முறை கொடுத்துள்ளேன்.
> இப்போது நினைவுக்கு வருவது: சு. வையாபுரிப்பிள்ளை, மே. வீ. வேணுகோபாலப்
> பிள்ளை, மயிலை வேங்கடசாமி, சுவெலெபில், ஐராவதம் மகாதேவன், கே. ஸ்ரீனிவாச
> ஐயங்கார், க. நா. சுப்பிரமணியம், ஜெயமோகன், இந்திரா பார்த்தசாரதி,
> .... இணையத்தில் இவர்களின் எழுத்துக்களையெல்லாம் தமிழன்பர்கள் தொகுக்க
> வேண்டும், இதற்கு நானும் உதவமுடியும்.
>
> ஜெயமோகன், தமிழ்ப் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி
> எழுதியிருக்கிறார்கள்.http://jataayu.blogspot.com/2008/02/blog-post_22.html
> http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802217&format=...http://jataayu.blogspot.com/2008/02/blog-post_22.html
>
> > 4.குறள்550-ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
> இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற உவமானத்திலும்கூட, ...
>
> read more »
2) சுருதகேவலி (ஜைன தத்துவ மாத இதழ்),
3) அருகன் தத்துவம் (ஜைன தத்துவ மாத இதழ்)
4) ஸ்ரீ தவளம் மாத இதழ். (திருமலை ஜைன மட பதிப்பு)
தமிழில் சேவை அடிப்படையில், ஜைன இளைஞர் மன்றம் பதிப்பித்து உள்ள
புத்தகங்கள் பல. திரு.க. ப. அறவாணன் அவர்கள் எழுதிய "ஜைனர்களின்
தமிழிலக்கண நன்கொடை" என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கதாகும். தற்ப்போது
கிடைக்கும் நூல்களை, "தினமலர்" இணைப்பில் காண்க:
http://books1.dinamalar.com/PublicBooks.aspx?id=55
மிக நீண்ட புத்தக பட்டியல் என்னிடம் உள்ளது. ஆனால் வேலையின் பொருட்டு
நான் வெளி நாட்டில் உள்ளதால், டிசம்பர் மாத வாக்கில் நான் பட்டியல்
தருகிறேன். ஜைனர்கள் "சாஸ்திர தானம்" என்பதை மிக முக்கியமாக
கருதுபவர்கள். எனவே, பெரும்பாலான புத்தகங்கள் லாப நோக்கில் அல்லாமல் ஒரு
சேவையாக கருதி வெளியிடப்படும். எனவே விலைக்கு கிடைப்பது அரிது.
அன்புடன்,
DV
> > > --http://www.vadakkuvaasal.com/-Hidequoted text -
ஆம். அதன் பெயர் “நல்லறம்” தான். இப்போது தான் நினைவுக்கு வருகிறது .
மேற்கண்ட இதழ்கள் எவையேனும் ஆன்லைனில் வாசிக்கக்கூடியாதாக இருக்கிறதா ?
V
> > > > --http://www.vadakkuvaasal.com/-Hidequotedtext -
சமணர்களின் அரும்பணி பாராட்டுக்குரியது.
தேவ்
Link: http://www.scribd.com/doc/20369268/Jain-Dharma-in-Tamil
Blog address: http://tamiljinavani.blogspot.com/
ஆங்கிலத்தில் ஆன் லைன் ஜைன நூலகம் ஒன்று உள்ளது. அதையும் அடுத்த
மின்மடலில் தெரிவிக்கிறேன்.
அன்புடன்,
DV
இப்போதுள்ள தலைமுறை யாரும் பெயருக்கு பின்னால் எதுவும் எழுதுவதில்லை.
வேண்டுவோர், Standardaize" பண்ண ,ஜெயின் என்று எழுதுகிறார்கள்.
2) பெயர்கள் பெரும்பாலும் ஜைனம் சார்ந்த பெயர்களாக இருந்தாலும், பொது
பெயர் பயன்பாடு அதிகரித்துள்ளதால்,இந்து பெயர்கள் மாதிரி உங்களுக்கு
தெரிய கூடும்
3) தமிழ் ஜைனர்களிடம் ஜாதியே இல்லை. எனவே வேறுபாடும் இல்லை. ஆனால்
கோயிலில் பூஜை செய்யும் "வாத்யார்" எனப்படும் ஜைன பிராமணர்கள் என்ற ஒரு
பிரிவு உண்டு. ஆனால் அது இந்து மதத்தில் உள்ள "ஜாதி" அல்ல. கொடுக்கல்
வாங்கலில் எந்த வேறுபாடும் இல்லை. ஜைன வேதங்கள் அல்லது ஆகமங்கள்,
புராணம், பூஜை விதி முறைகள் முதலிய கற்றறிந்தவர்கள், ஜைன பிராமணர்கள்
என்று அழைக்க படுவார்கள். இவர்கள் பெயருக்கு பின்னால் "சாஸ்திரி" என்று
இருக்கும். இதற்காக பல்கலை கழகங்கள் முதல் மடங்கள் வரை "ஜைன வேத பாட
சாலை" உண்டு. தென்னிந்தியாவில் "சரவணபெலகோல"வில் உள்ளது. இவர்கள் ஹிந்தி
மற்றும் சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். ப்ராக்ருத மொழி ஓரளவு
அறிந்தவர்கள். அனுபவத்தில் (தந்தையிடம் இருந்து கற்றல்) "வாத்யார்"
ஆனவர்களும் உண்டு.
தமிழ்நாட்டில் "சான்றிதழ்" தகுதியில், "திருமலை" ஜைன மடம்(வேலூர் -
போளூர் இடையில் உள்ளது) மற்றும் பொன்னூர் (வந்தவாசி-சேத்துபட்டு
சாலையில் ) ஆசிரமங்களில் ஓரளவு (பூஜை விதி முறைகள் மட்டும்) சொல்லி
தருகிறார்கள். என்றாலும், கால ஓட்டத்திலும், வருமானம் குறைவாலும், பலர்
"வாத்யார்" ஆக விரும்புவதில்லை.
4) தமிழ் நாட்டு அரசு, தமிழ் ஜைனர்களை, "Forward caste" ஆக வகைபடுத்தி
உள்ளது.
5) தற்போதைய சூழ்நிலையில் "discremination" இருப்பதாக எனக்கு படவில்லை.
ஆனால் ஜைன மதத்தை தவறாக புரிந்து கொள்வோர் மிகவும் அதிகம். முக்கியமாக
பெரும்பாலோருக்கு "தமிழ் ஜைன" சமூகம் ஒன்று உண்டு என்று நம்புவதே கடினமாக
உள்ளது. அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, உங்களுக்கு எவ்வாறு தமிழ் தாய்
மொழியாய் இருக்க முடியும் என்பதுதான்.(எல்லாம் வட நாட்டு ஜைன அன்பர்களின்
பொருளாதார தாக்கத்தினால் வந்ததாக இருக்க கூடும்). அவர்களுக்கு சொல்லி
புரிய வைப்பது பெரும்பாடு. அதனால் அந்த சமண தமிழ் பெண் தன்னுடைய மதத்தை
சொல்ல தயங்கிருக்க கூடும்.
மேலும், தமிழ் ஜைனர்களின் பழக்க வழக்கங்கள் நகரங்களில் மட்டும் அவர்களை
ஒரு "பிராமணர்களாக" அல்லது " சௌராஷ்ட்ர" அல்லது வேற்று தாய்மொழியை
கொண்டவராக நினைக்க வைத்துள்ளன. பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டு, என்னுடன்
பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் "புரிந்து" கொள்ளுவதால்
ஏற்பட்ட சிக்கலில் அல்லது "புரிய" வைக்காததால் ஏற்பட்டது.
6) யூதர்களை ஒப்பு நோக்கி எனக்கு தெரிந்து புத்தகம் வந்ததாக
தெரியவில்லை.
7) அரசாங்கம் சொல்லும் இரண்டாம் மொழி என்ற நோக்கில் (ஆங்கிலத்திற்கு
அடுத்து), தமிழ்தான் "தமிழ் ஜைனர்கள்" பயில்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள்
மட்டும் , சமஸ்க்ருதம் மற்றும் ஹிந்தி எடுத்து எல்லோர் மாதிரிதான்
படிக்கிறார்கள்.
8) ஜைன ஆகமங்களைதான் "வேதம்" என்று சுட்டப்படுகிறது. வேதம் என்றால்
"அறிவு" அல்லது "பழைய அறிவு சார் நூல்" என்ற அர்த்தத்தில்தான்
பயன்படுத்தப்படுகிறது. வேதம் என்பது ஒரு சொல். அவ்வளவே. அதை யார்
வேண்டுமானாலும் சரியான அர்த்தத்தில் பயன்படுத்தலாம். வைதீகத்தில் அதை
பெரும்பாலோர் கேட்டு பழக்கபட்டுவிட்டதனால், வேதம் என்றாலே "ரிக், யசுர்,
சாம, அதர்வண" வேதங்களைத்தான் என்று எண்ணுகிறார்கள். இந்துக்களின் வேதம்
அல்லது வைதீகர்களின் வேதம் என்று சொல்லுவதுதான், சரியான சொல்லாடல்.
9) நீங்கள் ஆரணி அல்லது வேலூர் பகுதியை சேர்ந்தவரா? அங்கும் நீங்கள்
சொல்வது போல் ஒரு சித்த மருத்துவர் இருந்தார்.
anbudan,
DV
> 2009/9/9 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>:
>
>
>
> > மண நூலை இயற்றியதும் ஜைனர்கள் தானே ? :-)- Hide quoted text -
வர்த்தமானன் இவ்வாறு எழுதியிருந்தார்:
<<8) ஜைன ஆகமங்களைதான் "வேதம்" என்று சுட்டப்படுகிறது. வேதம் என்றால்
"அறிவு" அல்லது "பழைய அறிவு சார் நூல்" என்ற அர்த்தத்தில்தான்
பயன்படுத்தப்படுகிறது. வேதம் என்பது ஒரு சொல். அவ்வளவே. அதை யார்
வேண்டுமானாலும் சரியான அர்த்தத்தில் பயன்படுத்தலாம். வைதீகத்தில் அதை
பெரும்பாலோர் கேட்டு பழக்கபட்டுவிட்டதனால், வேதம் என்றாலே "ரிக், யசுர்,
சாம, அதர்வண" வேதங்களைத்தான் என்று எண்ணுகிறார்கள். இந்துக்களின் வேதம்
அல்லது வைதீகர்களின் வேதம் என்று சொல்லுவதுதான், சரியான சொல்லாடல்.>>>
ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர். அவை பூர்வாகமம், அங்காகமம்
எனப்படும். பூர்வாகமம் என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால்
அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால் எழுதப்பட்டது. ஆதி பகவானால்
அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை ஜைன வேதங்கள் அல்லது சதுர்
ஆகமங்கள் எனறழைக்கப்படும். அவை
1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்
இவை சமண வேதங்கள். அன்றும்,என்றும் அவை நான்குத் தான்.
நச்சினார்க்கினியர் தமது சீவக சிந்தாமணி உரையில் குறித்திருக்கிறார் என்று நினைவு.
-
திரு. வர்த்தமானன் யூ-டியூபில் என்னுடைய புரொஃபைலில் எழுதியது தாங்கள்
தானா ?
V
On 8 Oct, 20:08, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அன்பின் பெரியோர்களே,
>
> வர்த்தமானன் இவ்வாறு எழுதியிருந்தார்:
> <<8) ஜைன ஆகமங்களைதான் "வேதம்" என்று சுட்டப்படுகிறது. வேதம் என்றால்
> "அறிவு" அல்லது "பழைய அறிவு சார் நூல்" என்ற அர்த்தத்தில்தான்
> பயன்படுத்தப்படுகிறது. வேதம் என்பது ஒரு சொல். அவ்வளவே. அதை யார்
> வேண்டுமானாலும் சரியான அர்த்தத்தில் பயன்படுத்தலாம். வைதீகத்தில் அதை
> பெரும்பாலோர் கேட்டு பழக்கபட்டுவிட்டதனால், வேதம் என்றாலே "ரிக், யசுர்,
> சாம, அதர்வண" வேதங்களைத்தான் என்று எண்ணுகிறார்கள். இந்துக்களின் வேதம்
> அல்லது வைதீகர்களின் வேதம் என்று சொல்லுவதுதான், சரியான சொல்லாடல்.>>>
>
> ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர். அவை பூர்வாகமம், அங்காகமம்
> எனப்படும். பூர்வாகமம் என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால்
> அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால் எழுதப்பட்டது. ஆதி பகவானால்
> அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை ஜைன வேதங்கள் அல்லது சதுர்
> ஆகமங்கள் எனறழைக்கப்படும். அவை
>
> 1. பிராதமானுயோகம்
> 2. கரணானுயோகம்
> 3. சரணானுயோகம்
> 4. திரவியானுயோகம்
>
> இவை சமண வேதங்கள். அன்றும்,என்றும் அவை நான்குத் தான்.
>
> நச்சினார்க்கினியர் தமது சீவக சிந்தாமணி உரையில் குறித்திருக்கிறார் என்று நினைவு.
>
> ...
>
> read more »
On Oct 8, 8:53 am, DV <d.varthama...@gmail.com> wrote:
> Shri.Ganesan,
DV sir, You're addressing Dr. N. Kannan's questions.
He comes from TiruppUvaNam in Madurai district,
& is now in S. Korea.
BTW, Appar in his Tevaram calls Sivan as Vardhmanan.
Appar was in Jain religion for a while. Tamil Saivism
has absorbed many Jaina rituals. R. H. Davis has written
about these, (from memory. See John E. Cort's Open Boundaries, SUNY
book.)
> 9) நீங்கள் ஆரணி அல்லது வேலூர் பகுதியை சேர்ந்தவரா? அங்கும் நீங்கள்
> சொல்வது போல் ஒரு சித்த மருத்துவர் இருந்தார்.
>
No. I come from Pollachi in Coimbatore district. My relatives have
owned
100s of acres land for a long, long time in Kongunad.
anbudan,
N. Ganesan
> anbudan,
> DV
>
> On Sep 10, 8:49 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
>
>
> > சமணர்கள் பற்றிய சமகாலப் புரிதலுக்கு சில கேள்விகள்:
>
> > தற்போதைய தமிழ்ச் சமணர்களை தங்களை எப்படி அழைத்துக் கொள்கின்றனர்?
> > அவர்கள் பெயர்களெல்லாம் இந்துப் பெயர்களாகவே இருக்கின்றனவே?
>
> > சமணர்களிடையே ஜாதி வேறுபாடு உண்டா?
>
> > சமணர்களை தமிழக
>
> ...
>
> read more »- Hide quoted text -
ரெ.கா.
----- Original Message -----
From: "Vinodh Rajan" <vinodh...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Thursday, October 08, 2009 11:34 PM
Subject: [MinTamil] Re: குறள் 550
> திடீரென்று மின் தமிழில் ஜைன பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது :-)
>
> -
>
அன்பின் ரெ.கா.
நாம் இங்கு பேசுவது அனைத்தும் இந்திய மண்ணில் உருவாகி இந்திய மண்ணில்
முடியும் சமாச்சாரங்கள். இதில் வேற்றுமை கண்டு சிறு அகப்பாட்டை
குளிர்ச்சியூட்டுவதைக் காட்டிலும் இவற்றுள் ஒற்றுமை கண்டு நாம் ஒரு தாய்
வயிற்றுப்பிள்ளைகள் என நோக்கக் கற்றுக்கொண்டால் நமது அறிவு
'கண்டத்திலிருந்து அகண்டத்திற்கு' பாயும்.
63 திருதங்கரர்கள். 63 நாயன்மார்கள். சமண, சைவ ஒற்றுமைகள்.
திருவடி சம்பந்தம் வைணவத்தில் மிகமுக்கியம். ஏ.கே.இராமானுஜன் எப்படி
புத்தநிலை - சத்சங்கம் - அடியார்கள் விடுதலை என்பது வைணவத்தில் இறைவன் -
குரு - சத்சங்கம் - அடியார் விடுதலை என்று மலர்கிறது என்று காட்டுவார்.
ஜோசப் கேம்பல் தனது உரைகள் அனைத்திலும் எப்படி படிப்படியாக இந்திய
மெய்யியல் பல்வேறு நாம, ரூபங்களில் பரிணாமமுறுகிறது என்று காட்டுவார்.
எனது ஆசையெல்லாம் இதுதான். பழமையைத் தூண்டித்துளாவும் போது இம்மாதிரி
ஒற்றுமைகளைக் கண்டு சமகாலத்தமிழனுக்கு அனைத்து வளங்களையும்
அள்ளித்தருவதோடு நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். பண்டைய சரக்குகளை
அள்ளிவரும் போது கூட பண்டைய பிணக்குகளையும் அள்ளி வந்துவிடக்கூடாது.
உண்மையில் அன்றைய காலக்கட்டத்தில், அன்றைய மனிதனின் தேவைக்கேற்றவாறு
மெய்யியல் மலர்ந்திருக்கிறது. ஜெட் வேகத்தில், சூப்பர் கம்யூட்டர்
உதவியுடன் துள்ளிப்பாயும் 21ம் நூற்றாண்டு மனிதனை இச்சரக்குகள் மீண்டும்
10 நூற்றாண்டிற்கு தள்ளிக்கொண்டு போய் விடக்கூடாது.
அடையாளங்கள் முக்கியம்தான். ஆனால், மானுடம் என்பது அனைத்து
அடையாளங்களுக்கும் மேல் நிற்கிறது.
என்றென்றும் நம்மை ஆச்சர்யப்படுத்தும் மானுட நோக்கு கணியன் பூங்குன்றனின்
நோக்கு. அதை நாம் பின்புலமாகக் கொண்டு எல்லாவற்றையும் ஆராயலாம்.
ஆர்ப்பாட்டங்களெல்லாம் முடிந்தவுடன் அமைதிகொள்ளும் பள்ளி (படுக்கை)
மானுடமாக இருக்க வேண்டும்.
அன்புடன்
நா.கண்ணன்
என்ன! நமது மூலையிலிருந்து நாம் பார்க்கிறோம். அந்தக் காட்சிகளில்
பெருமிதம் கொள்ளுகிறோம். நம்மில் சிலருக்கு இந்தக் காட்சிகளும்
பெருமிதங்களும் மற்றவர்களுக்கும் உண்டு என்ற ஞானம் இருக்கிறது.
சிலருக்கு இல்லை. அவர்கள் மூலையே அவர்களுக்கு உலகம்.
இப்படிப்பட்டவர்களுக்கும் இணையம் மெது மெதுவாக ஒளிபாய்ச்சி வரும்.
அவர்களுக்கும் இந்த ஞானம் உண்டாகும் என நம்பியிருப்போம்.
"இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?"
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Friday, October 09, 2009 12:56 PM
Subject: [MinTamil] Re: குறள் 550
BTW, Appar in his Tevaram calls Sivan as Vardhmanan. //
வர்தந: வர்தமாந: - ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்
Oct 9, 9:56 am, "N. Kannan"
அனைத்து வளங்களையும் அள்ளித்தருவதோடு நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பண்டைய சரக்குகளை அள்ளிவரும் போது கூட பண்டைய பிணக்குகளையும் அள்ளி
வந்து விடக்கூடாது.//
ஆம், இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தேவ்