தினகரன்: கலைஞர் குடும்பத்து கால்களில் புரண்டெழுந்த பிரமுகர்கள்

25 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Aug 21, 2010, 7:05:15 PM8/21/10
to மின்தமிழ்

மன்னர் கால புலவர்களை ஞாபகப்படுத்தும் வகையில்

கலைஞர் குடும்பத்து கால்களில் புரண்டெழுந்த பிரமுகர்கள்

அருள்சத்தியநாதன்

 

சுமார் 350 கோடி ரூபா செலவில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதை தமிழர்கள் பொதுவான அடிப்படையில் வரவேற்றிருக்கின்ற போதிலும் இதைக் கடுமையாக விமர்சித்தவர்களும் இல்லாமலில்லை. நமது பேராசிரியர் கா. சிவத்தம்பியும் இவ்விமர்சனத்தில் இருந்து தப்ப வில்லை. ‘தீரா நதி’யில் அ. மார்க்ஸ் எழுதும் போது, இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்தபோது இடைக்கால அரசு ஒன்றை வடக்கில் அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்ட தாகவும் அதற்கு சிவத்தம்பியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டதாகவும் அதே சமயம் அவரை வெளி நாட்டுத் தூதுவராக அரசு நியமிக்க முன்வந்தபோது பேராசிரியர் அதை ஏற்கவில்லை என்றும் எழுதுகிறார். செம்மொழி மாநாட்டில் சிவத்தம்பிக்கு அளிக்கப்பட்ட இடம் குறித்து எழுதும் போது அவரைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.

கலைஞர் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரும் குற்றச் சாட்டு அவர் குடும்ப மாநாடு நடத்துகிறார் என்பதா கும். மாநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக் கப்பட்டதற்கு ‘அரச குடும்பத்தின் மீதும் மாநாடு குறித்தும் விமர்சனங்கள் எதுவும் பதிவாகிவிடக் கூடாது என்பதில் ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருந்துள் ளார்கள்’ என்று காரணம் காட்டுகிறார் அ. மார்க்ஸ்.

கலைஞர் குடும்பம் மிகப் பெரியதுதான். இராஜாஜி, பக்தவத்சலம் ஆகியோர் தத்தமது குடும்பத்தை அரசியலில் புகுத்தாத கொள்கையை கொண்டிருந்தனர். பின்னர் பதவிக்கு வந்த காமராஜர் ஒரு பிரம்மச்சாரி. அண்ணாதுரைக்கு குழந்தைகள் கிடையாது. அப்படியே இருந்திருந்தாலும் அவர் அவர்களைத் தனது வாரிசாக அங்கீகரித்திருக்கமாட்டார். அவரிடம் அப்படி ஒரு நேர்மையும் நாணயமும் இருந்தது. எம். ஜி. ஆருக்கும் வாரிசு அரசியல் நடத்த வாரிசுகள் இருக்கவில்லை. ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் கிடையாது. இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் அரசியலைத் தமது தொழிலாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆக தமிழக முதலமைச்சர் வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஓமத்தூர் ரெட்டியாரில் இருந்து கலைஞர் வரையில் பெருங் குடும்பத்துக்காரராக விளங்குபவர் கலைஞர் மட்டுமே. இந்தக் கலைஞர் காலத்தில்தான் தமிழக அரசியல், தியாகம் - சேவை என்ற இடத்தில் இருந்து நழுவி பணம் கொழிக்கும் வியாபாரமாக உருமாறியது. தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமலா இருப்பான் என்ற புதுமொழி - அரசியலில் ஊழலையும் மோசடியையும் நியாயப்படுத்தும் துணிச்சல் - இக்காலத்தில் தான் உரம் பெற்றது.

தமிழக அரசியலில் மட்டுமின்றி அரசியலுக்கு மிக நெருக்கமான ஊடகத்துறையிலும் கலைஞர் குடும்பமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கலைஞரின் மகன்களான ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோருடன் மாறன் மகன் தயாநிதி மாறன் ஆகியோர் அரசியலில் ஆதிக்கம் செலுத்திவர, கலாநிதி மாறன் இந்தியாவின் மிகப் பெரும் தொலைக்காட்சி வலையமைப்பை நடத்தி வருகிறார். அவர் திரைப்படங்களை வாங்கி திரையிட்டு வருவதோடு 150 கோடி ரூபா முதலீட்டில் எந்திரன் படத்தையும் தயாரித்துள்ளார். இன்று தமிழ்த் திரையுலகில் அவர் பெரும் புள்ளி. கலைஞர் காலில் எப்படிப் பிரபலங்கள் விழுந்து புரள்கின்றனரோ அதே அளவுக்கு தமிழ்த் திரையுலக பிரமுகர்களும் கலாநிதி மாறன் காலில் விழுந்து புரள்வதை கோலாலம்பூர் எந்திரன் இசைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் காணமுடிந்தமை, இங்கே குறிப்பிடத்தக்கது. கலாநிதி விரைவிலேயே தமிழ்ப் படங்களுக்கான ஐரோப்பிய, மலேசிய, சிங்கப்பூர் உரிமைகளை வென்றெடுத்து தனதாக்கிக் கொள்வார் என்று சென்னை வர்த்தக வட்டாரங்களில் உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தற்போது ஏகபோகம் செலுத்திவரும் ஐங்கரன் தன் செல்வாக்கை இழந்து விடலாம் என்றும் ஆரூடம் கூறப்படுகிறது.

கலாநிதிக்கென ஒரு எப். எம். ரேடியோ நிலையம் உள்ளது. ‘சன் டிரெக்ட்’ என்ற செய்மதித் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது. தினத்தந்தி நாளிதழுடன் மோதும் அளவுக்கு விற்பனையும் செல்வாக்கும் கொண்ட தினகரன் நாளிதழ், குங்குமம் உள்ளிட்ட வார இதழ்கள் அவருக்குச் சொந்தம். திரைப்படம், அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சி என அனைத்திலும் ஆதிக்கம் கொண்டிருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்திலும் ஈடுபடப் போகிறார். ‘சன் எயார்’ விமானங்கள் விரைவிலேயே வானில் உதயசூரியனை ஞாபகப்படுத்திக் கொண்டு பறக்கப் போகின்றன.

இத்தகைய அசுர அரசியல், வர்த்தக வளர்ச்சிக்கு கால் கோள் நாட்டியவர், ஒரு சாதாரண இசைவேளாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பெரியார். அண்ணா வழிவந்த கலைஞர் கருணாநிதி தான். இதானல்தான் கலைஞருடன் சில வருடங்களுக்கு முன்னர் மோதிப் பார்த்த மாறன் குடும்பத்தார் தாம் தவறு செய்துவிட்டதாக உணர்ந்து கலைஞரிடமே வந்து கலந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்வலத்தைப் பார்வையிட வந்த கலைஞர் குடும்பம். நின்று கொண்டிருப்பவர் (வட்டம்) இலக்கியவாதி வ. சேதுராமன்

இனி, இப்பெரும் ‘அரச’ குடும்பம் செம்மொழி மாநாட்டில் செல்வாக்கு செலுத்தாமலா இருக்கும்? அடிவருடிக் கூட்டமொன்று அவர்களைப் பின்தொடர்ந்து வந்து காலில் விழுந்து புரளாமலா இருக்கும்.

செம்மொழி மாநாட்டில் தமிழர் தம் வீர பாரம்பரியம் பற்றி பேசப்பட்டது. அதை ஊர்வலத் திலும் கட்சிப்படுத்தினார்கள். முறத்தால் புலியை அடித்து விரட்டும், கணவன் போரில் வீழ்ந்ததும் தன் மகனை உச்சி மோந்து களம் அனுப்பும், மகன் வீர சொர்க்கம் அடைந்ததைக் கேள்விப்பட்டதும் அவள் மாண்டது முதுகில் பட்ட காயத்திலா அல்லது நெஞ்சில் பட்ட காயத்திலா என்பதை ருசுப்படுத்திக் கொள்ள முயலும் வீரம் செறிந்த புற நானூற்றுத் தாய்மார்களைப் பற்றி எல்லாம் நாம் நிறையவே கேள்விப்பட்டு விட்டோம்.

இது ஒரு பக்கமென்றால் மறுபுறத்தில் அரசர்களை துதிபாடி பொருள் பெற்றுச் செல்லும் தமிழ்ப் புலவர்களைச் சாரி சாரியாகப் பார்க்கிறோம், இதே தமிழ் இலக்கிய ஏடுகளில், விவேகானந்தர் மகாத்மா காந்திக்குப் பின்னரும் கூட, வீரம் என்பதன் பொருள் தமிழர் மத்தியில் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டு வருகின்றது. வீரத்துக்குள் இராஜதந்திரமும் அடக்கம் என்பதை புரிந்து கொள்ளாததால் இலங்கையில் நிகழ்ந்த மிகப் பெரும் மனித அவலத்தையும் நாம் பார்த்து விட்டோம்.

தமிழர்கள் இனியாவது தமது போலியான மதம், கலாசாரம், பாரம்பரியம் என்பன தொடர்பான நம்பிக்கைகளைக் கைவிட்டுவிட வேண்டும் என்பதற்காக உண்மையாகவே போராடியவர் இ. வெ. ரா. ஆனால் கலைஞர் காலில் விழும் கலாசாரத்தில் இருந்து எல்லாவற்றையும் மீண்டும் வளர்த்தார். கலைஞர் மாத்திரமின்றி வை. கோ., பழ. நெடுமாறன், விடுதலைப் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சீமான் ஆகியோரின் உரைகளைக் கேட்கும் போது சங்க காலத்தைக் கடந்து அவர்கள் இன்னும் வரவில்லை, அங்கே இருந்து கொக்கரிப்பதுதான் தமிழர்களை வலுப்படுத்த உதவும் என்பதை வியாபார ரீதியாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகவே காணமுடிகிறது.

சங்க காலத்தின் இரந்து வாழும் புலவர்களை எடுத்துக் கொண்டாலும் அது இன்றும் தொடர்கிறது என்பதையும் இந்த பாரம்பரியத்தில் இருந்து கவிப்பேரரசு வைரமுத்துவோ, கவிக்கோவோ விதிவிலக்கு அல்ல என்பதையும் உன்னிப்பாகக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இதே பழந்தமிழ் இலக்கியத்தில் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. சிலப்பதிகாரத்தில் கோவலன் - கண்ணகிக்கு அடைக்கலம் தருகிறாள் ஆயர்குலப் பெண் மாதரி, கோவலன் கொலையுண்டதும் தன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனைக் காப்பாற்ற முடியாமல் போனதே என மனம் பதைக்கிறாள் மாதரி. ‘அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்கள்’ எனக் கதறி உயிர் துறக்கிறான். மற்றொரு இடத்தில் குலோத்துங்க சோழனின் அதிகாரத்துக்கு அடிபணிய மறுக்கிறான் கம்பன், ‘உன்னை நம்பியா தமிழை ஓதினேன்?’ எனக் குரல் எழுப்புகிறான் கம்பன். ஆனால் இவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்டால் துட்டு கிடைக்குமா என்ன? எனவே இந்த அரசியல்வாதிகளும் அடிவருடிகளும் இந்த விதிவிலக்குகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தயாரில்லை.

எனவே இரந்து பிழைப்போர் கூட்டம் செம்மொழி மாநாட்டில் அடித்துப் புரண்டதில் ஆச்சரியம் இல்லை. முதல் நாள் பொது மாநாட்டில் சமுகமளித்திருந்த கரைவேட்டிகள் ஆடு மாடுகளைப் போல அங்குமிங்குமாகத் திரிந்து சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். பலர் அணிந்திருந்த ஷர்ட்டுகளில் முன்பக்கமாக கலைஞர் படமும் முதுகு பக்கமாக ஸ்டாலின் படமும் காணப்பட்டன. எனவே பொலிஸாரும் வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டனர். இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களுக்கு மேடையில் என்ன நடக்கிறது. என்ன பேசுகிறார்கள் என்பதை எலக்ட்ரானிக் திரைகள் மூலமாகவும் பார்த்துத் தெரிவித்து கொள்ள கரை வேட்டிகள் கூட்டம் விடவில்லை.

மேடையில், கருத்தரங்குகளில் ஆய்வரங்குகளில் பேசியவர்களில் பெரும் பாலானோர் கலைஞரே நாணும் அளவுக்கு புகழ்ந்து தள்ளினார்கள். ஒரு முறை தன்னைப் புகழ வேண்டாம் என இடைமறித்து சொல்லும் அளவுக்கு புகழ்ச்சி விண்ணைத் தொட்டபோது செம்மொழிக்கு சொந்தக்காரர்கள் என்ற மிதப்பில் இருந்தவர்களுக்கு இந்தக் கேடு கட்டத்தனம் கூடவே வருகிறதே என்ற கவலையும் எழத்தான் செய்தது. அதிகாரத்துக்கு எதிரான தம் அழிவுத் தகுதியை நிறுவ வேண்டிய தருணம் வாய்ந்திருக்கும் போது அதிகாரத்துக்கு அடிபணியும், அடியொற்றிப் போகும் இந்த இழிநிலையை ஒருவர் வர்ணிக்கிறார் இப்படி:

‘கும்பிடுகின்ற என் கைகள் ஒரே கைகள்தான்

கால்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றன’

இது, அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்கும் ஒரு கவிஞர் பற்றிய பார்வை:

‘மற்றவர்களை விமர்சிக்கையில்

அவருடைய நாக்கில் வாளிருந்தது

கலைஞர் கருணாநிதிக்கு அவருடைய

நாக்கில் மயில் தோகை இருந்தது’

கலைஞரைப் புகழ்ந்தவர்கள் ஸ்டாலினைப் புகழ்ந்தார்கள். கனிமொழியைப் புகழ்ந்தார்கள். செம்மொழி வளாகத்தில் கலைஞர் படம். கோவை எங்கும் கலைஞர், ஸ்டாலின், கனிமொழி படங்கள். மேடைகளின் முன்வரிசை இருக்கைகளில் அரச குடும்பத்துப் பெண்கள்... இனி விமர்சகர்கள் குடும்ப மாநாடு எனச் சொல்லாமல் இருப்பார்களா?

மூன்றாம் தினம் மாலை பிரதான மாநாட்டில் ஒரு பட்டிமன்றம் நிகழ்ந்தது. தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பை வெள்ளித் திரைக்கே சின்னத் திரைக்கே, அச்சுத் துறைக்கே என்பது கொடுக்கப்பட்டிருந்த சிறுபிள்ளைத்தனமான தலைப்பு. லியோனி, நக்கீரன் கோபல், பாரதிராஜா, எஸ். வி. சேகர், திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். சாலமன் பாப்பையாதான் நடுவர். பேச வந்தவர்கள் தமது இருபது நிமிடங்களில் 15 நிமிடங்களை கூச்ச நாச்சம் பாராமல் கலைஞரைப் புகழ்வதிலேயே காலம் கடத்தினார்கள். திருப்பூர் கிருஷ்ணன் மாத்திரமே தமது வாதத்தை செம்மொழியில் முன்வைத்தார். இந்தப் பட்டி மன்றம் முதலில் எதிர்பார்ப்பையும் பின்னர் எரிச்சலையும் ஏற்படுத்தியது. முக்கால்வாசியில் ஏராளமானோர் பந்தலைவிட்டு எழும்பிச் செல்லத் தொடங்கினார்கள். இதைக் கவனித்த சொலமன் பாப்பையா பார்வையாளர்கள் எழுந்து செல்வதை குறிப்பிட்டுச் சொல்லவும் செய்தார்.

அரச குடும்பத்து கால்களில் பிரபலங்கள் கூச்சமில்லாமல் விழுந்து புரண்டு தமது ‘பாரம்பரிய’த்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது தமிழனின் உண்மையான வீரத்தையும், எழுச்சியையும், தொன்மையையும் சிலர் வெளிப்படுத்தி மானம் காத்தார்கள். செம்மொழியும் பெருமை பெற்றது. ஆனால் அவர்களில் எவருமே தமிழர்களாக இருக்கவில்லை. அங்கோ பர்போலா, அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி, ஜோர்ஜ் ஹார்ட் .....

(தொடரும்)
நன்றி: தினகரன் வாரமஞ்சரி
 
 

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Aug 22, 2010, 2:16:29 AM8/22/10
to mint...@googlegroups.com
நான் ஒன்றும் சொல்லவில்லை.
 
ஒருவேளை இந்தக் கட்டுரை எழுதிய மனிதரும்  மாநாட்டுக்கு அழைக்க வில்லை - பங்கேற்கவில்லை என்னும் வயிற்றெரிச்சலில் எழுதுகிறாரோ என்னவோ.
 
 
பென்னேஸ்வரன்
 
 
 
 

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/8/22 Sri Sritharan <ksth...@hotmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Sri Sritharan

unread,
Aug 22, 2010, 2:37:45 AM8/22/10
to மின்தமிழ்
மாநாட்டுக்குச் சென்று கலந்து கொண்ட ஒருவர் தான் இத்தொடரை எழுதுகிறார்.
 
http://www.thinakaran.lk/vaaramanjari/2010/08/22/?fn=f1008229
 

Date: Sun, 22 Aug 2010 11:46:29 +0530
Subject: Re: [MinTamil] தினகரன்: கலைஞர் குடும்பத்து கால்களில் புரண்டெழுந்த பிரமுகர்கள்
From: penne...@gmail.com
To: mint...@googlegroups.com

srirangammohanarangan v

unread,
Aug 22, 2010, 2:41:37 AM8/22/10
to mint...@googlegroups.com
பென்னேஸ்வரன் சார், ஒரு சின்ன சந்தேகம் --
வால் அறுந்த நரிக்கும், திராட்சைப் பழம் கிடைக்காத நரிக்கும்
வித்யாசம் வால் மட்டும் தானே?
:--)

 

N. Kannan

unread,
Aug 22, 2010, 3:24:23 AM8/22/10
to mint...@googlegroups.com
2010/8/22 Sri Sritharan <ksth...@hotmail.com>

>
> மாநாட்டுக்குச் சென்று கலந்து கொண்ட ஒருவர் தான் இத்தொடரை எழுதுகிறார்.
>

ஸ்ரீதரன், இதிலொன்று கவனித்தீர்களா? செம்மொழி மாநாட்டிற்கு விமர்சனம்
வைப்பவர்களும் பொதுபந்தல் மாநாட்டை வைத்தே விமர்சிக்கின்றனர். அவர்களது
விமர்சனத்திற்கும் ஆதாரமாக கழகக்குடும்பம் நடத்தும் ஊடகமே அமைகிறது. இது
ஒருவகையில் அவர்களின் வெற்றி. இந்த விமர்சகர் உண்மையான தமிழாய்வு பற்றி
வெளிநாட்டார் மட்டுமே பேசினார்கள் என்று சொல்வது பொதுபந்தல் மாநாடு
(முதல் நாள் நிகழ்ச்சி). ஆயின் யாருமே உண்மையான செம்மொழி மாநாடு பற்றி
இதுவரை பேசவில்லை. திவாகர் சொல்வது போல் தமிழனின் சிந்தனைப் போக்கை
ஊடகங்கள் எப்படி வழி நடத்துகின்றன என்பதற்கு விமர்சன ரீதியான
இத்தாக்குதல் கூட துணை போவது யாருடைய வெற்றி? ;-)

எல்லா வெளிநாட்டு ஆய்வாளர்களும் தமிழ்ப் பெரியவர்கள் தலைமையேற்று நடத்திய
அமர்வுகளில்தான் கட்டுரை வாசித்தனர். அஸ்கோ பர்ப்போலா அமர்விற்குத் தலைமை
திரு.ஐராவதம் மகாதேவன்.

உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு பட்டமளிக்கக் காத்திருக்கிறார்கள். எனவே
ஊடகக்காட்சியே உண்மை!! நூற்றுக்கு நூறு உண்மை :-))

க.>

Dhivakar

unread,
Aug 22, 2010, 3:35:08 AM8/22/10
to mint...@googlegroups.com
இது ’தினகரன்’ வாரமஞ்சரியா?
அல்லது
தினமலர்
தினமணி வாரமஞ்சரியா

சரி பார்த்துச் சொல்லவும்.

தி..

2010/8/22 Sri Sritharan <ksth...@hotmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Dhivakar

unread,
Aug 22, 2010, 3:39:41 AM8/22/10
to mint...@googlegroups.com
>>உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு பட்டமளிக்கக் காத்திருக்கிறார்கள். எனவே
ஊடகக்காட்சியே உண்மை!! நூற்றுக்கு நூறு உண்மை :-))<<

கண்ணன்..
ஒரு விஷயம் மனதில் பதிந்துவிட்டாலோ, அல்லது அப்படித்தான் இருக்கும் என்று தோன்றிவிட்டாலோ, அந்த எண்ணத்தை மாற்றி அமைப்பது சிரமம். இது மனித இயல்புதான்..

ஆனால் ஊடகத்தால் முடியாதது இல்லை என சாதித்துக் காட்டிவிட்டார்கள் என்பது என்னவோ உண்மைதான்.

2010/8/22 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Aug 22, 2010, 4:06:48 AM8/22/10
to mint...@googlegroups.com
ஆனால் ஊடகத்தால் முடியாதது இல்லை என சாதித்துக் காட்டிவிட்டார்கள் என்பது என்னவோ உண்மைதான்.
 
ஊடகம் என்ன சாதித்துக் கிழிக்கப்போகிறது? 
 
செம்மொழி மாநாட்டுக்கு பேட்ச் குத்திக் கொள்ளாமல் கலந்து கொண்ட விசுவாசிகள் இருக்கும் வரை எந்த ஊடகமும் யாரையும் ஒன்றும் செய்துவிட முடியாது. 
 
நம்முடைய வசதிக்கு கண்களை மூடிவைத்துக் கொண்டு அடுத்தவர்கள் மனதில் பதிந்து போனதைப் பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.   இருக்கட்டும்.
 
அறுந்ததாகவே இருந்தாலும் அது என்னுடைய வால்.  என்னிடமே பத்திரமாக  வைத்துக கொள்கிறேன்.  திராட்சைப் பழம் கிடைத்தவர்கள் சாப்பிட்டுக் கொள்ளட்டும்.  இன்னும் கிடைக்கப்போகும் திராட்சைகளையும் அனுபவிக்கட்டும்.
 
செந்தமிழ் வாழ்க.  தமிழறிஞர்கள் வாழ்க.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 
 
 
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/
 
 
 
2010/8/22 Dhivakar <venkdh...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 22, 2010, 7:35:54 AM8/22/10
to mint...@googlegroups.com
iஇரண்டு கருத்துக்கள்
1) முடியுள்ள சீமாட்டி விதவிதமாகக் கொண்டை போடலாம். 
காந்தி திரைப்படம் எடுத்த அட்டென்பரோ ஒரு பேட்டியில் நிருபர் இத்திரைப்படம் எடுத்ததில் மறக்கமுடியாத் நிகழ்வு என்று எதைக்குறிபிடுகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்
இது போன்ற படத்தை இந்தியாவைத் த்விர வேறு எங்கும் எடுத்திருக்கமுடியாது என்று சொல்லி ஒரு எடுத்துக் காட்டையும் சொன்னார்
அண்ணல் காந்தியாரின் இறுதி ஊர்வலத்திக் பல லட்ச்க்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்வைத் திரைப்படத்திலும் பல லட்சம் பேர் 1940 களில் அணிந்த ஆடைகளை அணிந்து (உடையமைப்புக்கான ஆஸ்கார் கிட்டியது) நடிக்க வைக்க முடிந்தது.  இது இந்தியா தவிர உலகில் வேறு எங்குமே சாதிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இங்கே கிடைப்பது மக்கள் கூட்டம்.  திரட்டுவது கலைஞரின் திறமை.  அதைத் தமிழுக்குச் செய்தது பெருமையே.  ஆயினும் தொகை உண்டு தரம் இல்லை என்பது உண்மை.  செந்தமிழ் மாநாட்டுக் கூட்டத்துக்கும் கண்காட்சிக்கும் வந்தவர்களில் பெரும்பாலோர் மொழ ஆர்வலர்கள் இல்லை.
2) காலில் விழும் கலாச் சாரம் பற்றிய ஆய்வு தேவை.  அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது அவர் அன்னையின் காலில் விழுந்து வணங்கி ஆட்சிப் பொறுப்பேற்றார். அண்ணா காலம் வரை பொது இடத்தில் அரசியல்வாதியின் காலைப் பிடிக்கும் வழக்கம் இருந்ததில்லை.  சிறப்பான நாட்களில் பெற்றோர், ஆசிரியர் மூத்தோர் கால்களில் விழுந்து ஆசி பெறும் வழக்கம் நம் மக்களிடம் இருந்தது. 
அரசியல் தாளடி வணங்கல் தோற்றுவிக்கப்பட்டது யாரால்?
நாகராசன்


2010/8/22 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Sri Sritharan

unread,
Aug 22, 2010, 7:38:37 AM8/22/10
to மின்தமிழ்
இது தினகரன் (இலங்கையில் இருந்து வெளிவரும் ஓர் அரசு சார்புத் தினசரி). 1932 ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகிறது. பேராசிரியர் க. கைலாசபதி இதன் ஆசிரியராக 1960களில் பணியாற்றிய காலம் இதன் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் வாரமஞ்சரியாக வெளிவருகிறது.
 
அன்புடன்
சிறீதரன்

Innamburan Innamburan

unread,
Aug 22, 2010, 8:13:43 AM8/22/10
to mint...@googlegroups.com
"முடியுள்ள சீமாட்டி விதவிதமாகக் கொண்டை போடலாம்."
சற்றே விலகி, ஒரு தனி ஆவர்த்தனம்: "முடி குறைந்தாலும், சவுரி வைத்து சமாளிக்கலாமே"
இன்னம்பூரான்

2010/8/22 Sri Sritharan <ksth...@hotmail.com>
>
>

Nagarajan Vadivel

unread,
Aug 22, 2010, 8:22:22 AM8/22/10
to mint...@googlegroups.com
நீங்கள் காங்கிரஸைச் சொல்லவில்லையே
நாகராசன்

2010/8/22 Innamburan Innamburan <innam...@googlemail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Innamburan Innamburan

unread,
Aug 22, 2010, 8:26:15 AM8/22/10
to mint...@googlegroups.com
சொல்லாமல் சொன்னாலும், சொல்லி மழுப்பினாலும்...

2010/8/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Aug 22, 2010, 10:36:51 PM8/22/10
to mint...@googlegroups.com
காலில் விழுந்து புரண்டது தொடர்பான குறிப்பு. 
அண்ணாவின் வளர்ப்பும்கன் பரிமளம் மருத்துவ டாக்டர் சான்றிதழ் பெற்றவுடன் அதைத் தந்தையின் காலடியில் வைத்து வாழ்த்துப் பெற விரும்பினார்.  ஆனால் அண்ணா அவர்களுக்கு காலில் விழுந்து வணங்குவது பிடிக்காது- யாராயிருந்தாலும் தடுத்துவிடுவார்.  இதை உணர்ந்த பரிமளம் அன்னையின் காலடியில் சான்றிதழை வைத்து வணங்கி வாழ்த்துப் பெற்றதும், அப்பா எங்கே அம்மா என்றார்
அவருக்குக் காய்ச்சல் என்றும் மேல்மாடியில் ஓய்வெடுப்பதையும் தெரிந்துகொண்தடு டாக்டர் பரிமளம் மாடிக்குச் சென்றார்,  சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அண்ணா காலடியில் சான்றிதழை வைத்து வணங்கி எடுத்தபோது அண்ணா விழித்துப் பார்த்து என்ன பரிமளம் என்று கேட்டபோது உங்களுக்குக் காய்ச்சல் என்று அம்மா சொன்னார்கள்.  கால்களைப்பிடித்து விட வந்தேன் என்றார் டாக்டர் பரிமளம்.  காலை அமுக்கியது போதும் அது என்ன கையில் என்று அண்ணா கேட்க பட்டத்திற்குரிய சான்றிதழை அண்ணா கையில் கொடுத்து வணங்கி நின்றார் பரிமளம்
இதைத்தான் என் காலடியில் வைத்து எடுத்தாயா என்று வினவி நீ பட்டம் பெற்றது மகிழ்ச்சி ஆயினும் நான் விரும்பாத ஒன்றை அதுவும் நீ செய்யலாமா என்று கேட்டுவிட்டு சரி சரி நல்ல நேரத்தில் டாக்டராக வந்திருக்கிறாய் என் உடம்புக்கு என்ன என்று சோதித்துச் சொல்லுமாறு கேட்டார்.  உடம்பில் காய்ச்சல் இல்லை. உடல் வலிக்கு மாத்திரை தருகிறேன் என்ற பரிமளத்திடம் பட்டம் வாங்கி வந்தவுடன் முதன் முதலாக எனக்கு வைத்தியம் பார்த்திருக்கிறாய் என்று கூறி அவரது சட்டைப் பையிலிருந்து ஒரு உரூபாயைக் கொடுத்தார்.
வைத்தியம் பார்த்ததற்கு பீஸா அப்பா என்று பரிமளம் கேட்க எனக்கு வைத்தியம் பார்த்தது போன்று எளிய மக்களுக்கு நீ வைத்தியம் பார்க்கும்போது ஒரு உரூபாய் தான் வாங்கவேண்டும் என்று உன் மனதில் பதிய வைக்கவே இந்த்ப் பணம் என்று கூறினார்
ஆதாரம் - அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு மலர் 2009 குறிப்பாளர் கயல் தினகரன்

Swaminathan Venkat

unread,
Aug 23, 2010, 12:15:01 AM8/23/10
to mint...@googlegroups.com
அண்ணாவின் இந்த முகம் தெரிந்தது தான். ஆனால் அவரது ஒரு கால அரசியல்
முகம், நாஸ்திக முகம் இந்த முகத்தோடு எப்படி சேர்ந்தது என்பது
புரிவதில்லை. அதே போல ஈ.வே.ரா வின் தனிப்பட்ட மரியாதைப் பண்புகள் எப்படி
அவரது ஆரம்ப வாழ்க்கையின் அடாவடித்தனம், பின்னர் போயும் போயும் 45-46வது
வய்தில் வந்து சேர்ந்த துவேஷங்கள், அடாவடித்தனமான பேச்சுக்க்ள் அவரது
இயல்பு. அதில் எப்படி தனிப்பட்ட் மனித உறவுகளில் மரியாதை எப்படி
ஒட்டிக்கொள்கின்றன என்பது புரிவதில்லை. இன்றைய தலைமை இந்த
கஷடங்களையெல்லாம் நமக்கு வைப்பதில்லை ஒரே முகம் தான். நாக்கு தான்
பல்லாயிரம்.

Nagarajan Vadivel

unread,
Aug 23, 2010, 8:40:16 AM8/23/10
to mint...@googlegroups.com
aஅண்ணா அவர்கள் ஒரு நாத்திகர் அல்ல.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனபது அவர் இறுதிவரை கடைபிடித்த கொள்கை.
நாகராசன்


2010/8/23 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

Swaminathan Venkat

unread,
Aug 23, 2010, 10:49:15 AM8/23/10
to mint...@googlegroups.com
அது அண்ணா சொன்னது பின்ன்னால். அதைத்தான் நானும் அண்ணாவின் இரண்டு
முகங்கள் பற்றிச் சொன்னேன். அது “இறுதி வரை கடைப்பிடித்த் கொள்கை” அல்ல.
இறுதியில் கடைப்பிடித்த கொள்கை. அல்லது வெளிப்படுத்திய கருத்து.
கருத்து, நம்பிக்கை, கொள்கை, பின் எனக்கு தமிழில் சொல்லத் தெரியாத
ப்ரிசிபில். எல்லாம் வேறு வேறு அர்த்தங்களைக் கொண்டதல்லவா. அது அண்ணா
கடைப்பிடித்த கொள்கை என்றால், பாலிசி என்றாகிறது. I am talking about
principles'/ beliefs.

You have reacted to only one sentence. what about the rest? periyaar,
kalaingnar and even anna.?

Nagarajan Vadivel

unread,
Aug 23, 2010, 11:39:59 AM8/23/10
to mint...@googlegroups.com

I did not react to second part because of your language.  It is obnoxious.  When you present yourself to the public you must be decent.
Nagarajan

2010/8/23 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Aug 23, 2010, 12:02:37 PM8/23/10
to mint...@googlegroups.com
வெசா சார் இது வேணுமா உங்களுககு?
 
உங்கள் அருமை தெரியாத சபையை என்ன சொல்வது?
 
உங்கள் முதுமைக் காலத்தில் யார் யாரிடமிருதெல்லாம் உங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டிப்போனது.
 
வேதனையாக இருக்கிறது.  உங்கள் வழமையான நக்கல் எல்லாம் என்னிடம் வேண்டாம்,  உண்மையிலேயே வேதனைப் படுகிறேன்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 
பென்னேஸ்வரன்
 

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/8/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

விஜயராகவன்

unread,
Aug 23, 2010, 12:03:55 PM8/23/10
to மின்தமிழ்
On 23 Aug, 16:39, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> I did not react to second part because of your language.  It is obnoxious.
> When you present yourself to the public you must be decent.
> Nagarajan

????

Ve.Sa. has raised only pertinent questions in a decent way

Anna was an oppurtunist who said something on the spot to come out of
difficulties. Neither his atheism nor his belief in god should be
taken seriously. He was ambivalent to most issues.


Vijayaraghavan


srirangammohanarangan v

unread,
Aug 23, 2010, 12:16:17 PM8/23/10
to mint...@googlegroups.com
Prof Nagarajan Vadivel,
 
You are insinuating that Mr Venkat Swaminathan has not presented himself in public decently.
In what way Sir? I am at a loss to understand where Ve Sa has failed in public decency. 
 
Simply because he has asked for your reactions to specific portions pinpointedly, 
do you think this is nice on your part to spew your emotions like this? 
 
Sorry Sir, this is not right. 
 
Srirangam V Mohanarangan 


 

Nagarajan Vadivel

unread,
Aug 23, 2010, 2:09:23 PM8/23/10
to mint...@googlegroups.com
இந்த மாதிரி ஆராய்ச்சியெல்லாம் தமிழ் மண்ணுக்கு, தமிழினத்துக்கு, தமிழ்
மரபுக்கு ஒத்து வராது. பார்ப்பனீய விஷ நாக்குகள் என்னவெல்லாம் பேசத்
தொடங்கிவிட்டன.
I had no opportunity to know personally Mr.Venkat Swaminathan and when communicate in a space where when we mention people and personalities and when we talk about controversial issues difference of opinion is bound to occur. 

When I encountered the responses such as the one mentioned above I am hurt.  I personally knew Anna and in that capacity I mentioned some incidents. 

அதே போல ஈ.வே.ரா வின் தனிப்பட்ட மரியாதைப் பண்புகள் எப்படி
அவரது ஆரம்ப வாழ்க்கையின் அடாவடித்தனம், பின்னர் போயும் போயும் 45-46வது
வய்தில் வந்து சேர்ந்த துவேஷங்கள், அடாவடித்தனமான பேச்சுக்க்ள் அவரது
இயல்பு. அதில் எப்படி தனிப்பட்ட் மனித உறவுகளில் மரியாதை எப்படி
ஒட்டிக்கொள்கின்றன என்பது புரிவதில்லை. இன்றைய தலைமை இந்த
கஷடங்களையெல்லாம் நமக்கு வைப்பதில்லை ஒரே முகம் தான். நாக்கு தான்
I do not know much about Periyar and therefore I am not in a position to react. Therefore I refrained from reacting to the opinion.of one person about other personalities.
It will not be appropriate to compel me to react to
You have reacted to only one sentence. what about the rest? periyaar,
kalaingnar and even anna.?
உங்கள் அருமை தெரியாத சபையை என்ன சொல்வது?
 
உங்கள் முதுமைக் காலத்தில் யார் யாரிடமிருதெல்லாம் உங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டிப்போனது.
I too a senior citizen  (sixty five years) and I understand from the above that Mr.Venkat Swaminathan is highly regarded and respected by the community.  I have neither insulted him nor made any insinuating comments about him.  Similarly he never insulted me personally as an individual

இறுதியில் கடைப்பிடித்த கொள்கை. அல்லது வெளிப்படுத்திய கருத்து.
கருத்து, நம்பிக்கை, கொள்கை, பின் எனக்கு தமிழில் சொல்லத் தெரியாத
ப்ரிசிபில். எல்லாம் வேறு வேறு அர்த்தங்களைக் கொண்டதல்லவா. அது அண்ணா
கடைப்பிடித்த கொள்கை என்றால், பாலிசி என்றாகிறது. I am talking about
principles'/ beliefs.

The clear message delivered to me is that what I have done is wrong and unacceptable to this community
I understand that this community expects me not to reflect and respond to few terms and phrases used here against researchers and leaders of Tamilnadu
I leave it to the moderator to judge whether I breached the codes and etiquette of this great community.  Until a decision is made I will refrain from participating in the discussions
Thanks
Nagarajan
 


2010/8/23 srirangammohanarangan v <ranga...@gmail.com>

விஜயராகவன்

unread,
Aug 23, 2010, 4:37:52 PM8/23/10
to மின்தமிழ்
On 23 Aug, 19:09, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> community.  I have neither insulted him nor made any insinuating comments
> about him.  Similarly he never insulted me personally as an individu

That Ve.Sa.'s innocuous and ordinary remarks about ordinary matters,
can make one hurt and to call him obnoxious and indecent is somewhat
bizarre. And to say it is not a slight against him is even more
bizarre. And in the process attack many others is out of ordinary


> I will refrain
> from participating in the discussions

Thanks.


Vijayaraghavan


Swaminathan Venkat

unread,
Aug 23, 2010, 9:29:35 PM8/23/10
to mint...@googlegroups.com
இது காலை நேரம் மணி 6.10. எழுந்து வந்து பார்க்கிறபோது, ஒரு பெரிய ரகளயே
நடந்திருப்பது தெரிகிறது.

நாகராஜன் இந்த சர்ச்சையில் ஒரு புதிய வேண்டாத விஷ்யத்தைப்
புகுத்துகிறார். கம்யூனிட்டி என்ற பார்வை இந்த சர்ச்சையில் எங்கிருந்து
வந்தது? இது தான் டிபிகல் தமிழ் அரசியல் எதிர்வினை. இந்த் பார்வையே
எனக்கு நாகராஜனைப் பற்றி நிறைய சொல்கின்றது. இவரோடும் இவர போன்றவரோடும்
வாதிடுவது வியர்த்தமான காரியம்.

இந்த பார்வையை வளர்த்துக்கொண்டிருப்பவர் (அறுபது வருட்ங்களுக்கும் மேலாக)
பெரியாரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்கிறார். இதை யார் நம்புவது?
சங்கடமான விஷயங்கள் எதிர்ப்படும்போது, ”அது பற்றி எனக்குத் தெரியாது”
என்று சொல்வது
ந்ழுவுகிற சமாசாரம்.

நாகராஜன் குறிப்பாக ஹைலைட் செய்து காட்டியிருக்கும் “பார்பனீய விஷ
நாக்குகள்” என்ற வார்த்தைகள் நான் இங்கு பயன்படுத்தியிருந்தாலும் அவை
என் வார்த்தைகள் அல்ல. உலகத் தமிழினத் தலைவர், சங்கத் தமிழ் காவலர்,
டாக்டர் கலைஞர், இன்ன் பிற எண்ணற்ற பட்டங்களை சொந்தமாக்கிக்
கொண்டுள்ளவர் (அவர் பெயரைச் சொல்வது பண்பற்ற செயல் என்று பலமுறை மிகவும்
வேதனைப் பட்டிருக்கிறார்) அடிக்கடி பயன்படுத்தும் சொல். ஆகவே
அப்னாக்‌ஷ்யஸ் என்று நாகராஜன் சொல்லும் வார்த்தைகள் ரொம்ப பெரிய
இடத்திலிருந்து வந்த் அவருடைய் ப்ராண்ட் “வாதம்”. நாகராஜன் மிகப் பெரிய
இடத்தில் தான் வீற்றிருக்கிறார்.

(நாகராஜன் அவர்களை என்ன பட்டம் சூட்டி விளிப்பது என்று தெரியவில்லை. அவர்
எனக்குத் தெரிவித்தால் அதன் படி இங்கு எல்லோரும் நடந்து கொள்வார்கள்) ஆக,
இப்பொதைக்கு, நாகராஜன்,
உங்கள் எதிர்வினை எனக்குப் புதிதல்ல. மின் தம்ழில் இருக்கும்
ஒருவ்ரிடமிருந்து வருவது தான் புதிது.

நான் வெளிப்படுத்திய சில கருத்துக்களுக்காக் பேராசிரியர்கள், எழுத்தாளர்
பெருமக்கள் கூடிய ஒரு கூட்டம் “இந்த ஆள் எழுதும் எழுத்துக்கள் மலம்
துடைக்கத்தான் லாயக்கு” என்று தீர்மானம் நிறைவேற்றி, என் எழுத்தின்
பக்கங்களைக் கிழித்து மலம் துடைத்து இந்தியா டுடே அலுவலகத்துக்கு
அனுப்பினார்கள். அவர்கள் இன்றைய தமிழ்கத்தின் அறிஞர் எழுத்தாளர்
பெருமக்கள்.

கலைஞர், தம்ழினத் தலைவர் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய
பேச்சுக்கள் பற்றிய பத்திரிகைத் துணுக்கு வேண்டுமானால் யாருடைய தயவிலாவது
அதை ஸ்கான் செய்து தரமுடியும். என்னிடம் அந்த வசதி இல்லை. அதில் பேசிய
மந்திரி ஒருவர் அவர் பெயர் இப்போது நினைவுக்கு வர மறுக்கிறது.
பொதுத்துறையும் சட்டமும் அவரிடம் இருந்தது இப்போது அவரிடமிருந்து
இரண்டும் பறிக்கப்பட்டுள்ளன. அடையாளம் காண்பதற்காக இதைச் சொல்கிறேன்.
பெர்யர் நினைவுக்கு வந்ததும் சொல்கிறேன்.

நக்கீரன் என்று ஒரு பத்திரிகை இருக்கிறது தெரியுமா? அவர்கள் என் வீடு
தேடி வந்து, ஒரு புகைப்படக் காரரையும் அனுப்பி, என்னை எழுதச்
சொன்னார்கள். எழுதினேன். கலைஞர் மிக கோபம் கொண்டு நக்கீரன உதவி ஆசிரியர்
அகப்பட்டார் திட்டு வாங்குவதற்கு. இதை எனக்குச் சொன்னது, பெரியார்
திராவிட கழகத்தின் தலைவருடைய மாப்பிள்ளை. எனது நண்பர். அவர் எனக்கு
சொன்னது “ உங்க ஆளை (அதாவது என்னை) கொஞ்ச நாளைக்கு வெளியே எங்கேயும்
போகவேண்டாம்னு சொல்லி வை. ரொம்ப கோபத்திலே இருக்காங்க” என்று என்
மாமனார் சொல்லச் சொன்னார். நீங்க ஏன் இந்த நக்கீரன் மாதிரி
பத்திரிகைகெல்லாம் எழுதறீங்க” என்று என்னை எச்சரித்தார் அந்த நண்பர்.
அவர் என் கம்யூனிட்டியை ( நாகராஜன் அவர்கள் ப்ராண்ட் வாதம்) சேர்ந்தவர்
இல்லை. ப்க்கா திராவிட கழக அனுதாபி. ஆயினும் என் நண்பர்.

ஆமாம், நாகராஜன், இந்த மாதிரி பார்வை கொண்டவர்கள் தமிழ் நாட்டில்
பக்கத்தில் இருந்தால் தோளைத் தடவி மிக அன்னியோன்ய பாவத்துடன், பூணூல
இருக்கிறதா என்று பார்ப்பார்கள். நீங்கள் எப்படி இங்கிருப்பவர்கள் எந்த
கம்யூனிட்டி என்று முத்லில் கண்டுபிடித்துக் கொள்கிறீர்கள்? ரொம்ப
அவசியமாக இருக்கிறதல்லவா உங்கள் வாதங்களுக்கு இதெல்லாம்?

தமிழ் நாடும் தமிழும் உருப்பட்டுவிடும். .

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Aug 24, 2010, 12:07:15 AM8/24/10
to mint...@googlegroups.com
 
 
அடுத்தவர்களை இங்கிதத்தோடு நடக்கச் சொல்லி அறிவுறுத்தும் மனிதர், தானும் 65 வயதானவர் என்று பெருமையுடன் சுட்டிக்காட்டும் ஒரு மனிதர் இந்த சபையில் தேவை எதுவும் இல்லாமல் பார்ப்பனீய விஷநாக்கு போன்ற மிகவும் அநாகரிகமான, தேவையற்ற ஒரு தாக்குதலில் இறங்குகிறார்,  இப்படிப் பேசிப்பேசியே ஒருதலைமுறையை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார்கள்.  விரிவான விவாதங்கள் எவற்றுக்கும் வழி தராமல் வழியை அடைத்து வைத்திருக்கிறார்கள்.

நாகராஜன் - உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது இங்கே யாருக்கும் எதுவும் கிடையாது.  கற்றுக் கொள்ளத்தேவையற்றவை பலவும் உங்களிடம் இருக்கின்றன.

தயவு செய்து Decency பற்றி எங்காவது பேசும்போது கொஞ்சம் கூச்சப்படுங்கள்.

இப்படிப்பேசும் ஒருவருடைய வயதுக்கு மரியாதை அளிக்கத் தேவை இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

நாகராஜன், வெசா பற்றி ஒன்று தெரியாது என்கிறீர்கள்.  இதில் இருந்தே உங்களுடைய சமூக அறிவும் இலக்கியப் பரிச்சயமும் தமிழ்ச் சமூகத்தின் கடந்த 30 ஆண்டுகளின் செயல்பாடுகளையும் பற்றியும் ஒன்றும் அறியாதவர் என்று தெரிகிறது.

நீங்கள் தமிழ்ப்  பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றிருந்தால் உங்களிடம் படித்தவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.

என்னிடமும் நீங்கள் சொல்லும் பார்ப்பன விஷநாக்கு இருக்கிறது.  கவலைப் படவேண்டாம்.   உங்கள் தாக்குதலை என்மீதும் தொடரலாம்.  எனக்கும் வெட்கம் எல்லாம் கிடையாது.

பென்னேஸ்வரன்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/8/24 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

Chandrasekaran

unread,
Aug 26, 2010, 12:34:54 PM8/26/10
to mint...@googlegroups.com
அவ்வப்பொழுது மின் தமிழ் மேல் கண் விழுந்து விடுகிறது! வெ.சா சார் உங்கள் சிலேடை எழுத்துக்களை அறிந்தவர்கள் இப்படி பேச மாட்டார்கள். பென் சார் சொன்ன மாதிரி சாதி இனம் தேவை இல்லாமல் இங்கு ஒரு நபரால் இழுக்கப்பட்டது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ப்ரச்னை என்ன என்றால், தைரியமாக வெ.சா பக்கம் நின்றவர்கள் எல்லாரும் எழுத்துலகில் ப்ளாக் பெல்ட் (க்ராஸ் பெல்ட் என்று நீங்கள் படித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல). சப்தம் அதிகமாகிறது.
 
சந்திரா 

Nagarajan Vadivel

unread,
Aug 26, 2010, 5:10:28 PM8/26/10
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
தங்களின் விளக்கத்துக்கு நன்றி. 
1) நான் கம்யூனிட்டி என்று குறிப்பிட்டது மின் தமிழில் பங்கு பெறுபவர்களைக் குறிப்பிடுவதாகும். நான் சாதி மதம் என்ற எல்லையைக் கடந்தவன்.  நான் தமிழன் என்ற சிறு வட்டத்துள் என்னை அடைத்துக் கொள்ளும் வகையில் என் வாழ்வு அமையவில்லை. எனவே என்னை இந்தத்  தமிழர்கள் சாதி சமயச் சாக்கடையிலோ தமிழக அரசியலிலோ இணைத்துப் பார்க்க வேண்டாம். 
2)அண்ணாவைத் தெரிந்த அளவுக்கு எனக்குப் பெரியாருடன் தனித்தொடர்பு 1967 க்குப் பின் இருந்த்ததிலை.  ஆய்வு அடிபடையிலும் கற்றல் அடிப்படையிலும் அவரைப்பற்றி எனக்கு ஓரளவு தெரியும்.  அவருடன் இருந்தவர்கள் வாழ்ந்தவர்கள் அவரின் உறவினர்கள் என்ற பெரிய வட்டத்துள் இருந்துள்ளேன்.  எனது ஆய்வுக் குறிப்புகள் திராவிட இயக்கம் நாத்திகக் கோட்பாட்டில் அமைந்த்து அல்ல என உணர்த்துவதால் பெரியாரை ஒரு நாத்திகவாதி என்று நான் வாதிடுவதில்லை. 
3) அது போலவே கடந்த நாற்பது ஆண்டுகளில் கலைஞர் அவர்களை மூன்றுமுறை சந்திதிருக்கிறேன்.  ஒருமுறை எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பட்டம் வழங்கப்ப்டுவதற்கு முதல்நாள் ந்ல்லிரவிலும், இல்ங்கைக்கான அரசியல் சட்ட வடிவமைப்பு தொடர்பாகவும் இணையப் பல்கலைகழக அறிக்கை அளித்தபோதும் சண்டித்திருக்கிறேன். எனவே அவரைப்பற்றியும் எனக்கு அதிகம் தெரியும் வய்ப்பு இல்லை
3)என்னுடைய கம்யூனிட்டி என்ற வார்த்தை மின் தமிழ் சமூகத்தைக் குறிப்பிட்டு எழுதியிருக்கும்போது நான் ஒரு பிராமண் எதிர்ப்பாளன் என்று குற்றம் சாட்டுவது உண்மைக்கு மாறானது.

நான் ஒரு ஆதிவாசி பழங்குடி வீட்டு மருமகன்
என் குடும்பத்தில் கலப்புத் திருமணத்தால் அந்தணர் குடும்ப உறவுகளும் இருகிறது. எனவே நீங்கள் என்னைப் பற்றி தவறாகக் கருதிக் கொண்டீர்கள்

ஆமாம், நாகராஜன்,  இந்த மாதிரி பார்வை கொண்டவர்கள் தமிழ் நாட்டில்
பக்கத்தில் இருந்தால் தோளைத் தடவி மிக அன்னியோன்ய பாவத்துடன், பூணூல
இருக்கிறதா என்று பார்ப்பார்கள். நீங்கள் எப்படி இங்கிருப்பவர்கள் எந்த
கம்யூனிட்டி என்று முத்லில் கண்டுபிடித்துக் கொள்கிறீர்கள்?

என்னை பார்ப்பன விரோதி என்று பிராண்ட் செய்து விட்டீர்கள்.  முழுக்கத் தெரிந்து கொள்ளாமல் என்ன பட்டம் சூட்டி விளிப்பது என்று கேட்கிறீர்கள்
உங்களின் மேல் பாச்முள்ளவர்கள் ஒரு படி மேலே போய்
தேவை எதுவும் இல்லாமல் பார்ப்பனீய விஷநாக்கு போன்ற மிகவும் அநாகரிகமான, தேவையற்ற ஒரு தாக்குதலில் இறங்குகிறார்,  

உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது இங்கே யாருக்கும் எதுவும் கிடையாது.  கற்றுக் கொள்ளத்தேவையற்றவை பலவும் உங்களிடம் இருக்கின்றன.

இப்படிப்பேசும் ஒருவருடைய வயதுக்கு மரியாதை அளிக்கத் தேவை இல்லை.

 உங்களுடைய சமூக அறிவும் இலக்கியப் பரிச்சயமும் தமிழ்ச் சமூகத்தின் கடந்த 30 ஆண்டுகளின் செயல்பாடுகளையும் பற்றியும் ஒன்றும் அறியாதவர் என்று தெரிகிறது.

நீங்கள் தமிழ்ப்  பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றிருந்தால் உங்களிடம் படித்தவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.

இவை அனைத்தும் உண்மைக்கு மாறானது
நன்றி
கிங் கோப்ரா
2010/8/24 Swaminathan Venkat <vswaminat...@g.mail.com>

Swaminathan Venkat

unread,
Aug 26, 2010, 10:13:16 PM8/26/10
to mint...@googlegroups.com
அன்புள்ள நாகராஜன்,

இத்துடன் இந்த சச்சரவை நிறுத்திக்கொள்ள்லாம். உங்கள் பதிலில் நெருடலான பல
விஷ்யங்கள் இருந்த போதிலும், நான் அவற்றைத் தொடர விரும்பவில்லை.

இரண்டே இரண்டு விஷ்யங்கள். இந்த்ப் பழம் சச்சர்வைத் தாண்டி.

1) நாகராஜன் என்பது அழகான பெயர். பெற்றோர் வைத்த பெயர்.என்னளவில்
ஒலிவடிவில் கேட்க இனிமையான பெயர். அதை கிங் கோப்ரா என்று மாற்றாமல்
இருந்திருக்கலாம். இனி இது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

தில்லியில் என் அறிமுகக் வட்டத்தில், மகாலிஙகம் என்ற் இயற்பெயரும்
அதிகார பூர்வமான பெயரும் கொண்ட ஒரு தீவிர தமிழ்ப் பற்றாளர் ’கவிஞர்’
இருந்தார். த்மிழ்ப் பற்றாளர் என்றால் மொழியோடு வரம்பிட்ட பற்று அல்ல.
தமிழ் அரசியல் தளத்தில் தமிழ்ப் பற்று நிறைய அர்த்தங்களைக் கொண்டது அந்த
விரிந்த அர்த்தத்தில் அவர் தமிழ்ப் பற்றாளர். அந்த வளமுறைப்படி அவர் தன்
பெயரை தம்ழில் நேரடியாக மொழிபெயர்த்து வைத்துக்கொள்ளவில்லை. அந்த
அர்த்தம் அவருக்கும் திருமதி மகாலிங்கத்துக்கும் பெருத்த சங்கடமாக
இருந்திருக்கிறது. பின் இதற்கெல்லாம் சம்பந்தமில்லாது, சாலை இளந்திரையன்
என்று ஒரு புதிய பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். என்னவோ இதெல்லாம்
நினைவுக்கு வந்தது.

2) மின் தமிழ் அன்பர்களைக் குறிக்க என்ற குடும்பம் என்று சொல்லலாம்.
fraternity என்றும் சொல்லலாம். brotherhood என்றும் சொல்லியிருக்கலாம்.
Community என்ற சொல்லுக்கு அகராதி அர்த்தம் என்னவாக இருந்தாலும், இன்றைய
வரலாற்று நீட்சியில் க்கு ஒரே ஒரு பொருள் தான் உண்டு. அது சாதி/ஜாதி.
அது தான் பல குழ்ப்பங்களுக்கு வழி செய்துள்ளது.

> படித்தவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.இவை அனைத்தும் உண்மைக்கு மாறானது

Nagarajan Vadivel

unread,
Aug 26, 2010, 10:24:53 PM8/26/10
to mint...@googlegroups.com
அன்புடையீர்
த்ங்களின் கருத்தை முழுமையாக் ஏற்றுக் கொள்கிறேன்.  இத்துறையில் விவாதங்கள் எல்லை மீறிவிடுவதைத் தடுக்க இயல்வதில்லை.
தி.க தி.மு.க வின் தாகக்த்தால் எனது அண்ணன்மார் அனைவரும் சைவப் பெயரை எல்லாம் தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டார்கள் அது போன்றே என் பெயரும் அரவரசன் என்று மாறப்பட்ட்டது
என்னுடைய இன்னொரு சகோத்ரர் தங்கராஜ் என்பதைத் தூய தழிழில் பொன்னரசன் என்று மாற்றிக் கொண்டு தூய தமிழில் பேசுவது வழக்கம்.  ஆயினும் அவர் பார்த்த பணி ஆங்கிலப் பேராசிரியர் பணி
உங்கள் விருப்பம் போலவே நான் நாகராஜனாகவே இருப்பேன்

நன்றி
அன்புடன்
நாகராசன்

2010/8/27 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

N. Kannan

unread,
Aug 26, 2010, 11:57:34 PM8/26/10
to mint...@googlegroups.com
இவ்விழை முழுவதும் வாசித்தீர்களா? அதில் தாங்கள் காணவிட்ட சில முக்கிய
தடயங்கள் உள்ளன.

1. பார்ப்பனர்களைப் பற்றிய நேரடியான வர்ணனையை முதலில் வைத்தவர் வெ.சா.
அதை அவர் அரசியல் நையாண்டி என்ற தோரணையில் வைத்ததாக எனக்குப் பட்டதால்
சிரிப்புக் குறி போட்டு பின்னூட்டம் தந்தேன். பின்னால்தான் தெரிந்தது
அவ்வரிகள் இன்றைய முதல்வர் முன்னாள் சொன்னது என்று.

2. பேரா.நாகராஜன் இதில் வருவதற்குக் காரணம் அவர் முன்பு சொன்ன ஒரு
கருத்தை நான் மேற்கோள் காட்டி என் கருத்தைச் சொன்னேன்.

3. பேரா.நாகராஜன் தமிழ்ப் பேராசியர் அல்ல. அவர் தொழில்துறைப்
பேராசிரியர். எனவே அவர் இலக்கியத் திறனாய்வாளரான வெ.சாவை அறிந்திருக்க
நியாயமில்லை.

4. அவரிடம் தனியாக விசாரித்த போது தெரிந்தது, அவர் 'community' என்று
சொன்னது பிராமண சமூகத்தை அல்ல. மின்தமிழ் குழுமத்தை என்று.

5. வெ.சாவின் வரிகளை அவரது கூர்மையான விமர்சனப் பாங்கை அறியாதோர் கண்டு
திக்குறுவது அதிசயமில்லை. அப்படித்தான் பேரா.நாகராஜன் துக்குற்று தன்
கருத்தை வைத்தார்.

6. இந்த விஷயத்தில் பலர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டது போல்
படுகிறது. ஜாதி என்பது இன்னும் உயிருள்ள மின்சாரக் கம்பி என்பதையே அது
காட்டுகிறது. எவ்வளவுதான் வள்ளுவரையும், பாரதியையும் இன்ன பிறரையும்
மேற்கோள் காட்டினாலும் அவரவர் பதப்படுத்தலை அவரவர்தான் களைதல் வேண்டும்
என்று தோன்றுகிறது.

7. பெரியவர்கள் வெ.சாவும், நாகராஜனும் இது சம்மந்தமாக நாம் இனி அதிகம்
பேச வேண்டாம் என்று இவ்விழையை முடித்து வைத்து விட்டதால், இதை இத்தோடு
விடுவோம்.

நன்றி,

கண்ணன்

2010/8/27 Chandrasekaran <plastic...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Aug 27, 2010, 4:04:53 AM8/27/10
to mint...@googlegroups.com
Dear Prof.Nagarajan,
I appreciate your gesture.
Regards,
Innamburan

2010/8/27 N. Kannan <navan...@gmail.com>:

Madhurabharathi

unread,
Aug 28, 2010, 12:12:56 AM8/28/10
to mint...@googlegroups.com


2010/8/27 N. Kannan <navan...@gmail.com>

இவ்விழை முழுவதும் வாசித்தீர்களா? அதில் தாங்கள் காணவிட்ட சில முக்கிய
தடயங்கள் உள்ளன.

1. பார்ப்பனர்களைப் பற்றிய நேரடியான வர்ணனையை முதலில் வைத்தவர் வெ.சா.
அதை அவர் அரசியல் நையாண்டி என்ற தோரணையில் வைத்ததாக எனக்குப் பட்டதால்
சிரிப்புக் குறி போட்டு பின்னூட்டம் தந்தேன். பின்னால்தான் தெரிந்தது
அவ்வரிகள் இன்றைய முதல்வர் முன்னாள் சொன்னது என்று.
 
இதை நான் தொடக்கத்திலேயே கவனித்துவிட்டேன். ஆனால், எது மேற்கோளில் வருவது, எது எழுதியவர் கூறியது என்பவற்றை மடலிடுவோர் சரியாகக் காட்டவோ, வாசிப்பவர் சரியாக கவனிக்கவோ தவறுவது, ஒருவர் கூறியதை மற்றொருவர் கூறியதாகப் புரிந்துகொள்ள ஏதுவாகி விடுகிறது.
 
நாகராஜன், வெ.சா. இருவருமே கைகுலுக்கிக் கொண்டு விட்டது நல்ல முன்னுதாரணம். கருத்து மாறுபாடு வேறு, சகவாழ்வு வேறு. இரண்டு முடியும், நாகரீகமாகச் செய்ய முடியும், என்பதைப் புரிந்துகொள்வது இங்கே முக்கியம்.
 
இதில் எனக்குப் புரியாதது ஒன்றுதான் :-) திக்குறுதல் துக்குறுதல் என்றெல்லாம் கண்ணன் எழுதியிருக்கிறாரே, அது என்னவென்பதுதான். எனக்குத் தெரிந்து 'துணுக்குறுதல்' என்றொரு சொல் உண்டு. அதன் பொருள் 'எனக்கு ஜோக் புரிந்துவிட்டது' என்பதல்ல :-)
 
அன்புடன்
மதுரபாரதி

Swaminathan Venkat

unread,
Aug 28, 2010, 2:08:52 AM8/28/10
to mint...@googlegroups.com
பார்ப்பன விஷ நாக்குகள்” -  என்னும் தமிழ் கூறு நல்லுகம முழுதும் புகழ் பெற்ற சொற்றொடர், நம் தமிழ்க ஐம்முறை முதல்வர், டாக்டர், உலகத் தமிழினத் தலைவர், முத்தமிழ் காவலர், க்ல்லக்குடி கொண்டான், குடமுருட்டி குண்டு பிழைத்தான், இத்யாதி, இத்யாதி, (நிறைய விட்டுப் போயிற்று) கலைஞர் மன்னித்தருள வேண்டும்,) ஆக் இவ்வளவு பெருமையுடைய திருக்குவளை/கோபாலபுரத்தாருக்கே உரிய அவரது படைப்பாக்கத்தில் பிறந்த சொற்றொடர். அவர் ப்ராண்ட் நயத்தகு நாகரீக, தமிழ்ப் ப்ண்பார்ந்த சொற்றொடர். அவருக்கே காப்புரிமை உரித்தான சொற்றொடர். இததொடரை எங்கு கேட்டாலும், படித்தாலும், அது யாருக்குரியது என்பது எல்லா தமிழ்ருக்கும், உலகத்தில் எந்த மூலையில் அவர் வாழ்பவராக இருந்தாலும் சரி தெள்ளெனத் தெரிந்திருக்க வேண்டும்.  ஒவ்வொரு முறையும் அதை நான் மேற்கோள் காட்டும்போது அது என்னதாகக் கண்டு யாரும் தவறிழைக்க வேண்டாம். “அகர முதல எழுத்தெல்லாம்” என்று நான் எழுதினால் அது என் வாக்கு என்று எண்ணி யாரும் மயங்கலாகாது. இதெல்லாம் பால பாடம். இது தெரியாதவர்களோடு நான் வாதாட் விரும்பவில்லை.  இந்தத் தவறு மற்றவர் செய்ய ப்ழிசும்பபது நானாகிவிட்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் தானே. பட்டது போதும்பபா, திருக்குவளையானே, ரக்ஷித்தருளப்பா. 
 
 

devoo

unread,
Aug 28, 2010, 2:28:42 AM8/28/10
to மின்தமிழ்
>> திக்குறுதல் துக்குறுதல் என்றெல்லாம் கண்ணன் எழுதியிருக்கிறாரே, அது
என்னவென்பதுதான்....<<

மனோ நிலை, ப்ரச்ணம், இலச்சிணை ,விளையாண்டு, விளையாண்டான் என்பனவெல்லாம்
இங்கு சகஜமாக விளையாடும் சொற்கள். ”வேத இலக்கியத்தில் வ்யாகரணம்
பார்க்கக் கூடாது” . அப்படியே ஓட்ட வேண்டியதுதான்.

நகையுணர்வு மிகுந்த நம் முனைவர் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்

தேவ்


On Aug 27, 11:12 pm, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> 2010/8/27 N. Kannan <navannak...@gmail.com>

N. Kannan

unread,
Aug 28, 2010, 4:01:21 AM8/28/10
to mint...@googlegroups.com
2010/8/28 devoo <rde...@gmail.com>:

>
> நகையுணர்வு மிகுந்த நம் முனைவர் தவறாக எடுத்துக்கொள்ள  மாட்டார்
>
உண்மையைச் சொல்லப்போனால், இந்த இழையில் எழுதவே பயமாக இருந்தது. அந்த
பயத்தில் ஏதோ உளறிவிட்டேன். அது ’துணுக்குற’ என்ற சொல்தான் என்று
கண்டுகொள்ளும் அளவிற்கு அருகில் நிற்பதே மொழிக்கு spelling முக்கியமில்லை
என்பதைக் காட்டுகிறது (நகையுணர்வு மிகுந்த நண்பர்கள் தவறாக
எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்).

ரெ.கா அப்படியொரு மடல் முன்பு எழுதியிருந்தார். எல்லாம் தப்பு, தப்பாக
இருக்கும் (ஆங்கிலத்தில்). ஆனால் என்ன சொல்றான் என்பது புரியும் :-))

க.>

பேரா.நாகராசன்

unread,
Aug 30, 2010, 1:48:42 PM8/30/10
to மின்தமிழ்
கால்களில் புரண்டெழுந்த சம்பவம் =1
புரட்சித்த்லைவி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றபோது நிகழ்ந்தது.
அமைச்சருக்கான பதவிப்ப்ரமானம் முடிந்தபின் ஒரு அஞ்சா நெஞ்சம் கொண்ட
அமைச்சர் அம்மையாரின் காலில் விழ முயற்சிக்க, அம்மையாரின் இஜட் ப்ளஸ்
பாதுகாப்புப் படை அவர் அம்மையாரைத்தாக்க முயற்சிக்கிறாறோ என்று கருதி
ஏ.கே 47 -ல் குறி பார்க்க அவர் நடுங்கியதையும் அம்மையார் தடுத்ததையும்
பார்த்திருக்க வேண்டுமே. பின்னர் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு இந்த
உடற்பயிற்சி அளவு கடந்த மரியாதையின் வெளிப்பாடு என்று புரியவைக்க
வேண்டியதாயிற்று
கால்களில் புரண்டெழுந்த சம்பவம் =2
ஜெர்மனியில் இருந்து புரிந்த்ணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிடவந்த
தொழிலதிபருக்கு பார்க் செராட்டனில் விருந்து. அதை ஒட்டி சோபனாவின் பரத்
நாட்டிய நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிந்தவுடன் சோபனா மரியாதையின் பொருட்டு
அவர் காலைத் தொட முயல அவர் ஏதோ அந்த அம்மையார் அவர் காலை இழுக்க
முயல்வதாக எண்ணித் துள்ளிக் குதிக்க சில் நிமிடங்கள் பரபரப்பில்
முடிந்தது.
நான்கு ஆண்டுகள் கல்கத்தாவில் நேதாஜி சுபாஸ் பல்கலையில்
ஆட்சிமன்றக்குழுவில் இருந்த போது தெரிந்துகொண்டது- வயதில்
மூத்தவர்களையும் அறிஞர்களையும் காலைத்தொட்டு வணங்குவது மிக இயல்பான ஒரு
நிகழ்வு.
திருமணத்தில் பெண் கொடுப்பதிலும் எடுப்பதிலும் ஜாதி வேறுபாடு கிடையாது.
ஆனால் கீழ் ஜாதி மாமனாரின் காலில் மேல்ஜாதி மருமகன் விழுந்து மரியாதை
செய்வதில்லை என்று கூற கேள்விப்பட்டிருக்கிறேன்.
நாகராசன்

செல்வன்

unread,
Aug 30, 2010, 2:01:58 PM8/30/10
to mint...@googlegroups.com
உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தமக்கு கீழே இருப்பவர்களின் காலில் விழுந்து வணங்கினால் அது நல்ல பண்பாடாக கருதலாம்.கீழே இருப்பவர்கள் தமக்கு மேலே இருப்பவர்களின் காலில் விழுந்து வணங்குவது எதையோ எதிர்பார்த்து செய்கிறார்கள் என்பதை மட்டுமே காட்டும்.

ஏசு தம் பக்தர்களின் காலை நீரால் கழுவிவிட்டு தன் சீடர்களை பார்த்து "இனிமேல் நீங்களும் இதை செய்யவேண்டும்" என கூறினார்.இன்றுவரை ஈஸ்டரோ அல்லது புனிதவெள்ளியோ ஏதோ ஒரு நாளில் பொதுமக்களின் காலை போப் கழுவுவது வழக்கம்.

மதுரை சின்னபிள்ளை காலில் வாஜ்பாய் விழுந்ததும் அவரது மரியாதையை உயர்த்தியது.

முதல்வர்கள் காலில் மந்திரிகளும், தொண்டர்களும் விழும் அருவருப்பான கலாசாரம் தமிழகத்தை தவிர வேறு எங்காவது உள்ளதா?

jaya-feet_070102.jpg
--
செல்வன்

www.holyox.blogspot.com

கடவுள் இல்லை என்றேன்
நான் கடவுள் என்பதை உணரும் வரை



பேரா.நாகராசன்

unread,
Aug 30, 2010, 1:48:25 PM8/30/10
to மின்தமிழ்

S.Partha sarathy

unread,
Aug 30, 2010, 9:36:41 PM8/30/10
to mint...@googlegroups.com
படம் அருமை. என்னதொரு அன்னையின் கனிவு. ‘அம்மா’வை வணங்குவதை ஏன் தான் அனைவரும் விமர்சிக்கின்றனரோ?!

அன்புடன்
சே. பார்த்தசாரதி

2010/8/30 செல்வன் <hol...@gmail.com>

விஜயராகவன்

unread,
Aug 31, 2010, 6:08:23 AM8/31/10
to மின்தமிழ்
On 27 Aug, 03:24, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>

wrote:
> அன்புடையீர்
> த்ங்களின் கருத்தை முழுமையாக் ஏற்றுக் கொள்கிறேன்.  இத்துறையில் விவாதங்கள்
> எல்லை மீறிவிடுவதைத் தடுக்க இயல்வதில்லை.
> தி.க தி.மு.க வின் தாகக்த்தால் எனது அண்ணன்மார் அனைவரும் சைவப் பெயரை எல்லாம்
> தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டார்கள்

நாகராஜன் அவர்களே

சில நாள் முன் வந்த சச்சரவு ஃபைல் க்ளோஸ், அது அதைப் பத்தி அல்ல.

"சைவப் பெயரை எல்லாம் தமிழ்ப் பெயராக " என்கிறீர்கள், சைவம் என்றால்
தமிழ் இல்லை , "தமிழ்" என்றால் நமக்கு வழக்கமாக தெரிந்தது இல்லை என
பெரிய பிரச்சாரமே நடந்தது, அந்த பிரச்சாரத்தின் அடிமை ஆகி விட்டீர்கள்

இதைப் போல் உள்ள தீய பிரச்சாரங்கள் யாருக்கும் நல்லதல்ல, தமிழுக்கும்
நல்லதல்ல. இது உங்களை தனிமனிதாக செய்யும் விமர்சனம் அல்ல, ஒரு கலாசாரப்
போக்கின் விமர்சனம். இதை ஆங்கிலத்தில் சொன்னால் cultural perversion

விஜயராகவன்

Nagarajan Vadivel

unread,
Aug 31, 2010, 6:26:11 AM8/31/10
to mint...@googlegroups.com
அன்புடையீர்
ஒரு காலகட்டத்தில் பெற்றோர் இட்ட பெயரை மாற்றி புதுப்பெயரில் அழைத்துக்கொள்ளும் வழக்கம் தோன்றியபோது பல குடும்பங்களில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தது என்பது உண்மை.
என்னைப் பொருத்தவரை மீண்டும் மீண்டும் கூறுவது ஒன்றே.  நீங்களாக என்னைப்பற்றி ஒரு உருவகப்படுத்திக் கொண்டு தாக்குதல் தொடுப்பது முறையல்ல
நடந்த சம்பவங்களைத் தொட்டுக்காட்டுவத்ற்காக என்னை ஒரு கல்சுரல் பொவர்ட் என்று கூறுவது பொருத்தமற்றது  பகுத்தறிவு வாதிகளிடம் எவ்வளவு தொடர்பு இருந்ததோ அதே அளவு தொடர்பு ஆன்மீக வாதிகளிடமும் இருந்தது.
அருள்கூர்ந்து கருத்துப்பிழையை எடுத்துக் கூறுங்கள்
எனனை எடைபொடும் எடை மேடையல்ல இது
நட்புடன்
நாகராசன்


2010/8/31 விஜயராகவன் <vij...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Swaminathan Venkat

unread,
Aug 31, 2010, 6:33:55 AM8/31/10
to mint...@googlegroups.com
அன்புள்ள நாகராஜன்,
 
நீங்கள் இப்படி எழுதுவது வேதனையாக இருக்கிறது.  பொதுவாக தமிழ்நாடு முழுதும் பரவலாக இந்த பாதிப்பு இருந்திருக்கிறது. அரசியல் காரனங்கள், ஜாதிக் காய்ச்சல்கள், மொழிவெறி எல்லாம் சேர்ந்திருக்கிறது. இது சூரிய நாராயண சாஸ்திரியாரிடமிருந்தும்(பரிதி மார் கலைஞர்),வேதாசலம் (மறைமலை அடிகள்) அவர்களிடமிருந்தும் தொடங்குகிரது. வெறும் தமிழ்ப் பற்றாகத் தொடங்கியது அரசியல், மொழிக்காழ்ப்புணர்ச்சி, ஒரு மாதிரியான பேட்டை ரௌடித் தனம் எல்லாம் சேர்ந்து அது பின் காலத்தில் என்னென்னவோவாக வெல்லாம் ஆகிவிட்டது.  அது தமிழ் நாட்டில் பொது நிகழ்வு. இதில் உங்களைத் தனிப்பட்டு குற்றம் சாட்டுவது எப்படி?  இதையெல்லாம்  எந்த ஒரு தனிமனிதரின் மீதும் வைக்கபடும் குற்றச் சாட்டாக நினைக்காதீர்கள். வேறோரு இழையில் இந்த ஆப்த்தை நினைத்தே நான் சில வரிகளைச் சேர்த்திருக்கிறேன்.  

 

விஜயராகவன்

unread,
Aug 31, 2010, 6:43:33 AM8/31/10
to மின்தமிழ்
நாகராஜன் அவர்களே

எவ்ருக்கும் அவர்கள் பெயரை மாற்றுவது உரிமை. நான் சொன்னது பேர் மாற்றியது
பற்றி அல்ல. பெயர் மாற்றிய "காரணம்" . நீங்கள் சொல்லிய காரணத்தில்
"சைவம்" என்பது "தமிழ்" என்பதின் எதிராக இருந்தது, அதைத்தான்
சுட்டிக்கட்டினேன். அதற்கு நீங்கள் - அதாவது "நாகராஜன்" பொறுப்பு என
சொல்லவில்லை.

யார் என்ன பெயர் வைத்திருந்தாலும், எழுதினாலும் நான் எல்லோரையும்
மதிக்கின்றவன்.

நான் உங்களை தனி மனிதனாக தாக்கினேன் என நினைத்தால், மன்னிக்கவும், அது
நோக்கம் அல்ல.

விஜயராகவன்

On 31 Aug, 11:26, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


wrote:
> அன்புடையீர்

> ஒரு காலகட்டத்தில் பெற்றோர் இட்ட பெயரை மாற்றி புதுப்பெயரில் அழைத்துக்கொள்ளும்
> வழக்கம் தோன்றியபோது பல குடும்பங்களில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தது என்பது
> உண்மை.
> என்னைப் பொருத்தவரை மீண்டும் மீண்டும் கூறுவது ஒன்றே.  நீங்களாக என்னைப்பற்றி
> ஒரு உருவகப்படுத்திக் கொண்டு தாக்குதல் தொடுப்பது முறையல்ல
> நடந்த சம்பவங்களைத் தொட்டுக்காட்டுவத்ற்காக என்னை ஒரு கல்சுரல் பொவர்ட் என்று
> கூறுவது பொருத்தமற்றது  பகுத்தறிவு வாதிகளிடம் எவ்வளவு தொடர்பு இருந்ததோ அதே
> அளவு தொடர்பு ஆன்மீக வாதிகளிடமும் இருந்தது.
> அருள்கூர்ந்து கருத்துப்பிழையை எடுத்துக் கூறுங்கள்
> எனனை எடைபொடும் எடை மேடையல்ல இது
> நட்புடன்
> நாகராசன்
>

> 2010/8/31 விஜயராகவன் <viji...@gmail.com>

> visit :www.elearning.eduwww.radiusconsultancy.comwww.elearninglive.tv- Hide quoted text -
>
> - Show quoted text -

Innamburan Innamburan

unread,
Aug 31, 2010, 6:52:23 AM8/31/10
to mint...@googlegroups.com
நாகராஜன் ஐயாவை 'முத்துப்பட்டன் கதை' படிக்க வேண்டுகிறேன். தமிழகத்து
17ம் நூற்றாண்டு. நாட்டுப்புறவியல், வாழ்வியலை அணுக்கமாக அறிந்த இயல்.
வாஜ்பேயி அந்தணர். மதுரை சின்னபிள்ளை, பெண்பால், பார்ப்பனத்தி அல்ல,
வயதில் சிறியவர்.

இன்னம்பூரான்

2010/8/31 விஜயராகவன் <vij...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Aug 31, 2010, 7:08:22 AM8/31/10
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
 என் தமிழில் உள்ள தடுமாறத்தினால் நான் சொல்லவந்தது தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.  எனது குடும்பத்தில் நான்கு தலைமுறையாக சைவமும் கிறித்துவமும் இழைந்தே நின்றிருக்கிறது.  நான் வளர்ந்த பின்புலமும் வாழ்வும் என்னை ஒரு பொதுமனிதனாகவே நிலைக்க வைத்திருக்கிறது
எனது முயற்சியெல்லாம் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்வதே.  அதில் எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்
நாகராசன்

2010/8/31 விஜயராகவன் <vij...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Aug 31, 2010, 7:16:57 AM8/31/10
to மின்தமிழ்
நாகராஜன் அவர்களே

நீங்கள் சொல்வது சரியாகத்தான் உள்ளது, நாம் அவசரத்தில் எழுதும் போது நம்
எண்ணத்தில் இல்லாதது வர வாய்ப்புண்டு

தமிழ்மொழி சைவம், வைணவம், கிருத்துவம், இஸ்லாம் அல்லது நாத்திகம்,
கம்யூனிசம், முதலாளித்துவம் எதற்க்கும் "எதிரி" அல்ல, நம் மனத்தில்
உள்ளதை சொல்லுவதுதான் தமிழ்


விஜயராகவன்

On 31 Aug, 12:08, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> அன்புடையீர்,
>  என் தமிழில் உள்ள தடுமாறத்தினால் நான் சொல்லவந்தது தவறாகப் புரிந்துகொள்ளும்
> வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.  எனது குடும்பத்தில் நான்கு தலைமுறையாக சைவமும்
> கிறித்துவமும் இழைந்தே நின்றிருக்கிறது.  நான் வளர்ந்த பின்புலமும் வாழ்வும்
> என்னை ஒரு பொதுமனிதனாகவே நிலைக்க வைத்திருக்கிறது
> எனது முயற்சியெல்லாம் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்வதே.  அதில் எந்த
> உள்நோக்கமும் எனக்கு இல்லை என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்
> நாகராசன்
>

> 2010/8/31 விஜயராகவன் <viji...@gmail.com>

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

N. Kannan

unread,
Aug 31, 2010, 7:24:05 AM8/31/10
to mint...@googlegroups.com
2010/8/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> அன்புடையீர்,
>  என் தமிழில் உள்ள தடுமாறத்தினால் நான் சொல்லவந்தது தவறாகப் புரிந்துகொள்ளும்
> வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.

ஒரு முக்கியமான வேண்டுகோள்.
மிகவும் சென்ஸிடிவ்வான சப்ஜெக்ட் பேசும் போது சிறிய எழுத்துப் பிழைகள்,
மொழித்தடுமாற்றம் இவைகளை நாம் பொருட்படுத்தாது, ஒருவர் என்ன சொல்ல
வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளப் பார்ப்போம். ராகவன் சார் சொல்வது லா
பாயிண்ட். என் முதல் வாசிப்பில் நாகராஜன் சார் சொல்வதை என்னால் அப்படியே
உள்வாங்க முடிந்தது. ஆயினும் ராகவன் சொல்வது மிகவும் subtle social
conditioning பற்றியது. எனவே எல்லோரும் Mind our language :-))

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages