சங்கத்தமிழ் நாள்காட்டி: சங்க இலக்கியப்பாடல்கள் — விளக்கங்கள் ஓவியங்களுடன்

23 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 30, 2025, 7:52:23 PM (3 days ago) Nov 30
to மின்தமிழ்
Screenshot 2025-12-01.jpg

எங்கும் முல்லைப் பூக்களே!

அவரோ வாரார்! முல்லையும் பூத்தன!
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறுபசு முகையே! (குறுந். 221)
        உறையூர் முதுகொற்றனார்

பொருள்:
அவர் இன்னும் வரவில்லை. முல்லையும் பூக்கத் தொடங்கிவிட்டது.
பனைஓலையால் ஆன குடையைக் கையில் வைத்திருக்கும் இடையர்கள்,
தங்கள் ஆட்டு மந்தையை விட்டு, ஆட்டுப் பாலை விற்கச்சென்று
பாலுக்குப் பதிலாகக் கூழைப் பெற்று வருவார்கள்.
அவர்கள் தலையில் சூடியிருப்பவையும் முல்லைப் பூக்களே.

Our lover has not yet returned,
But the mullai vines have blossomed;
The herdsmen, who carry palm fronds as rain guards
And exchange milk for porridge,
Wear in their head the tiny mullai buds.

தேமொழி

unread,
Dec 1, 2025, 9:18:17 PM (2 days ago) Dec 1
to மின்தமிழ்
Screenshot 2025-12-02.jpg
திரும்பத் தந்துவிடு

விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நேர்ந்தனை ஆயின், தந்தனை சென்மோ!
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடல் சேர்ப்ப! நீ உண்ட என் நலனே! (குறுந். 236)
        நரிவெரூஉத்தலையார்

பொருள்:
மணல் நிறைந்த கடற்கரையானது குன்றைப் போல் தோன்றும்.
அதில் நின்ற புன்னை மரத்தின் தாழ்ந்த கிளையில்
புதிய நாரை  வந்து தங்குகின்ற குளிர்ந்த கடற்கரையின் தலைவனே!
தலைவியை, நீ கைவிடும் நாள் வரும் என்றால், நீ நுகர்ந்த
அவளது பெண்மை நலத்தை மீண்டும் எம்மிடம் தந்துவிட்டுச் செல்.

O' lord of the cool shores where a newly arrived stork
Roosts on a low branch of a punnai tree
On sand dunes as tall as mountains!
When the day of departure comes
And you are willing to leave her,
Please return her femininity that you partook!

தேமொழி

unread,
Dec 2, 2025, 9:06:51 PM (2 days ago) Dec 2
to மின்தமிழ்
Screenshot 2025-12-03.jpg 

ஒளி திரும்பியதா?

இனமயில் அகவும் மரம்பயில் கானத்து,
நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்ப,
படுமழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்ற நோக்கினென், தோழி!
பண்டை யற்றோ, கண்டிசின், நுதலே! (குறுந். 249)
        கபிலர்

பொருள்:
தோழி, மயில்கள் தோகையை விரித்து ஆரவாரிக்கும் காட்டில்,
குரங்கு தன் குட்டியுடன் குளிரால் நடுங்கும்படி
பெருமழை பொழிந்த மலைச் சாரலை உடையது தலைவனின் நாடு.
ஒளியிழந்து பசலை படர்ந்திருந்த என் நெற்றி, அவர் நாட்டின்
குன்றத்தைப் பார்த்ததும், ஒளி பொருந்தியிருக்கும் பழைய
நிலையில் இருப்பதைக் காண்!

O' friend! Has my brow become lovely like
It used to be in the past,
Since I looked at his mountain
Where heavy rain pours down,
Peacocks cry and white-faced monkeys
Tremble in the cold with their young?

தேமொழி

unread,
Dec 3, 2025, 9:24:17 PM (8 hours ago) Dec 3
to மின்தமிழ்
Screenshot 2025-12-04.jpg

குருகு மட்டுமே சாட்சி

யாரும் இல்லை, தானே கள்வன்!
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே! (குறுந். 25)

        கபிலர்

பொருள்:
தலைவன் என்னுடன் கூடியிருந்தபோது, அதற்குச்
சான்றாக அந்த இடத்தில் யாரும் இல்லை.
அப்போது அங்கே கால்வாயில் ஓடிய நீரில் நீந்தும்
ஆரல் மீனை உண்பதற்காகப் பார்த்துக் கொண்டு,
தினைத்தாள் போன்ற கால்களைக் கொண்ட
குருகு மட்டுமே இருந்தது. தலைவன் கூறிய
உறுதிமொழிகள் பொய்யானால் நான் என்ன செய்வேன்.

There was no one else but himself;
And, if he refutes his words, what can I do?
Only a Heron, with millet stalk like tender legs,
Was there watching for slippery eels in running water,
When we were together.
Reply all
Reply to author
Forward
0 new messages