அரசுப் பணிக்கான தமிழ்த் தேர்வுக் கேள்விகளில் எளிதில் வெற்றி பெற
16 views
Skip to first unread message
தேமொழி
unread,
Nov 30, 2025, 6:42:07 PM (3 days ago) Nov 30
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
Magudeswaran Govindarajan (கவிஞர் மகுடேசுவரன் )
அரசுப் பணிக்கான தமிழ்த் தேர்வுக் கேள்விகளில் எளிதில் வெற்றி பெற வேண்டுமெனில் இரண்டு துறைகளில் ஒருவர் பேரறிவு பெற்றவராதல் வேண்டும். ஒன்று இலக்கணத்துறை. இன்னொன்று இலக்கியத்துறை.
அ). இலக்கணத்தைப் பழுதறக் கற்பதற்குச் சுருக்குவழியே இல்லை. முழுமையாக மொழியினைக் கற்றறிதலே வழி. எழுத்துகளில் தொடங்கவேண்டும். புணர்ச்சி இலக்கணத்தில் ஊன்றி நிற்கவேண்டும். யாப்பையும் அணியையும் செய்தியறிவு மட்டத்திலாவது தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
ஆ). ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற தலைப்பினில் பல்வேறு தமிழறிஞர்கள் எழுதிய நூல்கள் இருக்கின்றன. அவற்றை மனப்பாடம் செய்யுமளவிற்குப் படித்து முடிக்கவேண்டும். ’தமிழ் இலக்கிய வரலாறு’ குறித்த நூல்களில் தமிழண்ணல் எழுதிய நூல் மிகவும் சிறந்தது, எளியது. எண்ணற்ற செய்திப் படிவுகள் அடங்கியது. இணையத்தில் இலவயமாகவே கிடைக்கும். அதனை எப்படியாவது படித்துவிடுங்கள்.