இந்த வேத ஓசையில் மதுரை எழுவது பற்றி ரங்கனார் முன்பு ஒரு அழகியசங்கச்சித்திரம் தீட்டினார்!
ஆஹா ! தருகிறேனே. அந்த இழை நெடு நாளுக்கு முந்தையது. ‘சங்க இலக்கியம் போற்றும் வேதங்கள்’ என்ற தலைப்பு. அந்தத் தலைப்பிலேயே ஆரம்பிக்கலாமா? அல்லது இங்கேயே தரவா?இப்படி ஓர் அக்கா கட்டளையிடக் கொடுத்துவைத்திருக்க அன்றோ வேண்டும்!!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ராஜம் அக்கா கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ராஜம் அக்கா கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். திரு கண்ணன் குறிப்பிட்ட இழை ‘சங்க இலக்கியம் போற்றும் வேதங்கள்’ என்பது.அதில் ஒரு பகுதி ---*சங்கப் புலவர் பாடும் 'பொலிக பொலிக' !*****'பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்' என்று பாடியது நம்மாழ்வார் மட்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்னொருவரையும் அந்த அணியில் சேர்க்க வேண்டும் போல் இருக்கிறது. அவர்தான் பரிபாடலின் முதற்பாடலைப் பாடிய பெருமகனார். எதையோ எதற்கோ முடிச்சு போடுகிறேன் என்றுதானே நினைப்பீர்கள். பொறுங்கள். அப்புறம் நீங்களே சொல்வீர்கள்.திருமாலைப் பாடுகிறார் புலவர் முதல் பரிபாடலில். ஏதோ கோவிந்தா கிருஷ்ணா திருமாலே என்று தனக்குத் தோன்றியதைப் பாடக்கூடாதோ? அது என்ன?வேதம் எப்படி எப்படியெல்லாம் திருமாலைத் துதித்ததோ அப்படியே சாயை பிடித்தா பாடுவது? பிற்காலத்தில் யாராவது ஆரிய மாயை என்று சாடமாட்டார்களோ? சரி பாடத்தான் பாடினாரே இப்படியா அப்பட்டமாக 'நான் வேதங்கள் புகழ்ந்த நெறிப்படியே பாடுகிறேன்' என்று பதிவு செய்து வைப்பது?சரி அது அந்தக்காலம். உள்நோக்கத்துடனான வெற்று அரசியலும், பிளவுகளில் அடைகாக்கும் வெறுப்பின் சூழ்ச்சியும் புலவர்கள் மத்தியில் இல்லாத காலம். மதத்தின் பெயரால் சில விஷமிகள் திரிவினைகள் செய்யத்துணியாத காலம். அவ்வளவு ஏன்? தமிழுக்கு ஒருநல்லடிக்காலம்.தமிழ்ப்புலவர்களும் எம்மொழியும் கற்று, எப்பொருளிலும் பெய்ப்பொருள் காண முயன்ற காலம். சரி நமது கருத்துக்கு வருவோம்.ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், திருமாலைப் பற்றி மறை கண்ட முடிவு,அவன் அன்றலர்ந்த செந்தாமரை அன்ன கண்ணினன்,'தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ' (அந்தப் பரமபுருஷனுக்கு சூரியனால் மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள) ---காயாவின் மலர்ந்த பூவை ஒத்தக் கருநிறம் உடையவன் ---அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்ற படி திரு விரும்பி வாழும் மார்பினை உடையவன் --மார்பில் கௌஸ்துபம் என்ற மணியினைப்பூண்டவன் --நீலமலை ஒன்றைச் செந்நெருப்புச் சூழ்ந்துகொண்டிருப்பது போன்ற பொன்னாலான பீதாம்பரத்தை உடையவன் ---அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாய்நிறைந்து அனைத்துப் பொருட்களையும் நியமிப்பவனாய் இருப்பவன் -- என்று இவையெல்லாம் வேதங்கள் திருமாலைப் பற்றி உரைக்கும் புகழ்.இப்பொழுது சங்கப் புலவரிடம் வருவோம்:எரிமலர் சினைஇய கண்ணை!பூவை விரிமலர் புரையும் மேனியை!மேனித் திரு ஞெமர்ந்து அமர்ந்த மார்பினை!!மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை!!மால்வரை எரி திரிந்தன்ன பொன்புனை உடுக்கையை!!(ஞெமர்ந்து -- பரந்து, விரும்பி, நிறைந்து)சரி இத்தனையும் சங்கப் புலவர் பாடிவிட்டுப் பேசாமல் போகக்கூடாதா?நாங்கள் பாட்டுக்கு இப்பொழுது, இவர் பாடித்தான் வேதமே அதைக் காப்பியடித்தது என்று சொல்லி மகிழ்ந்து போவோமே! என்ன செய்வது? அது சங்கப் புலவருக்கு உடன் பாடில்லை.உடனேயே கூறுகிறார்,சேவல் அம் கொடியோய் !நின் வலவயின் நிறுத்தும்ஏவல் உழந்தமை கூறும்நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே!!!
சரி ஏதாவது தெரியாமல் சொல்லியிருப்பார், போகப் போகப் பார்க்கலாம் என்றால் இவர் என்ன ஆழ்வாரா அன்றேல் சங்கப் புலவரா என்று வேறுபாடு தெரியாத அளவிற்கு அவருடைய வரிகள் சுழலிடுகின்றன.இப்படியே போனால் ஆழ்வார் சங்கப் புலவரோ என்ற நிலைக்குத்தான் வருவோம். ( அய்யய்யோ யாரும் கோபத்தில் முறைக்காதீங்கோ!)புலவரின் பொற்குரல் தொடர்கிறது:'பொருவேம்' என்றவர் மதம் தபக் கடந்து,செருமேம்பட்ட செயிர் தீர் அண்ணல் !இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!தெருள நின் வரவு அறிதல்மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே!!'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்' என்றாள் சங்கத் தமிழ்மாலை முப்பதும் தந்த கோதை.அது என்ன இருவருக்கும் மட்டும் தாதை?'நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே' (நாராயணோபநிஷத்)'நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்' என்று திருமழிசையார் தமிழ்ப்படுத்திய வேத வாக்கியத்தைச் சங்கப் புலவர் இரு சொற்களிடைத் தேக்கி வெளியிடும்அழகே தனி!'இருவர் தாதை'. சரி அவ்வாறு சொன்னவுடன்அது என்ன 'இலங்கு பூண் மா அல்' ?சாந்தோக்கியம் கூறுகிறது,'ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:' 'நகத்திலிருந்து எல்லாம்பொன்மயமானவன்'.அடுத்த வரிதான் மிக உச்சக் கட்டமான வரி!'தெருள நின் வரவுஅறிதல் மருளறி தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே'.'வரவு அறிதல்' என்றால்?அவதாரக் கொள்கை என்பது திருமால் நெறிக்கேஉரித்தான கருத்து. உயர்வற உயர்நலம் கொண்டவன், ஒத்தாரை மிக்காரை இலையாய மாமாயன்எப்படி எந்நின்ற நீர்மையுமாய்ப் பிறக்கிறான்? என்பது ஞானிகளுக்கும் பெரும் புதிர் என்கிறது திருமால் நெறி.இனிவருவது சங்கப் புலவர்உரைக்கும் திருமால் நெறி:அருமை நற்கு ஆயினும்ஆர்வம் நின்வயின் பெருமையின்,வல்லாய்! யாம் இவண் மொழிபவைமெல்லிய எனாஅ வெறாஅதுஅல்லி அம் திரு மறு மார்ப!நீ அருளல் வேண்டும்சரி தன்னோடு விட்டாரா? சுற்றம் புடை சூழ, உற்றார் நட்டார்அனைவரையும் சேர்த்துத்தானே சங்க காலத்திலிருந்து கோதை உரைத்த மறைத்தமிழ் வரையில் பழக்கம். கூட்டு சேர்த்துக் கொண்டுதானே கோவிந்தனை வழிபடச் சொல்லுகிறாள் கோதை.சங்கப் புலவர்,ஆங்கு,காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறையாம் இயைந்து ஒன்றுபுவைகலும் பொலிக' என,ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் ---வாய்மொழிப் புலவ!நின் தாள் நிழல் தொழுதே.கடல்வண்ணன் பூதங்கள் மலியப் புகுந்து உழிதரக் கண்டேன் என்று இறும்பூது எய்திய நம்மாழ்வார் சங்க காலத்தை நினைத்துத்தான் பாடினாரோ?'பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்'ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்***2011/3/1 rajam <ra...@earthlink.net>
க.>
2011/3/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> அதாவது எங்க ஊரு சம்ஸ்க்ருதத்துல கோபிச்சுக்காதீங்கன்னு சொன்னா
> கோபிச்சுக்குங்கன்னு அருத்தம்.
> ராஜம் அக்கா கோபிச்சுண்டா அது தனி அழகு.
> அதுக்குத்தான் இப்படி சீண்ட்றது :-)))))
> (ஆ காது வலிக்கிறது....:-) )
>
ஆதரவுக்கு நன்றி, பேராசிரியர் ஐயா! உங்கள் ஆதரவு இல்லாவிட்டால் இந்தக் குழந்தைகள் (?!) என்னை விழுங்கிவிடுவார்கள்!
தேவ்
On Mar 1, 12:13 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> ராஜம் அக்கா கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். திரு கண்ணன்
> குறிப்பிட்ட இழை ‘சங்க இலக்கியம் போற்றும் வேதங்கள்’ என்பது.
>
> அதில் ஒரு பகுதி ---
>
> **சங்கப் புலவர் பாடும் 'பொலிக பொலிக'* !
> ***
> **
> 'பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்' என்று பாடியது நம்மாழ்வார் மட்டும்
> என்று நினைத்தேன். ஆனால் இன்னொருவரையும் அந்த அணியில் சேர்க்க வேண்டும் போல்
> இருக்கிறது. அவர்தான் பரிபாடலின் முதற்பாடலைப் பாடிய பெருமகனார். எதையோ
> எதற்கோ முடிச்சு போடுகிறேன் என்றுதானே நினைப்பீர்கள். பொறுங்கள். அப்புறம்
> நீங்களே சொல்வீர்கள்.
>
> திருமாலைப் பாடுகிறார் புலவர் முதல் பரிபாடலில். ஏதோ கோவிந்தா
> கிருஷ்ணா திருமாலே என்று தனக்குத் தோன்றியதைப் பாடக்கூடாதோ? அது என்ன?
> வேதம் எப்படி எப்படியெல்லாம் திருமாலைத் துதித்ததோ அப்படியே சாயை பிடித்தா
> பாடுவது? பிற்காலத்தில் யாராவது ஆரிய மாயை என்று சாடமாட்டார்களோ? சரி
> பாடத்தான் பாடினாரே இப்படியா அப்பட்டமாக 'நான் வேதங்கள் புகழ்ந்த நெறிப்படியே
> பாடுகிறேன்' என்று பதிவு செய்து வைப்பது?
>
> சரி அது அந்தக்காலம். உள்நோக்கத்துடனான வெற்று அரசியலும், பிளவுகளில்
> அடைகாக்கும் வெறுப்பின் சூழ்ச்சியும் புலவர்கள் மத்தியில் இல்லாத காலம்.
> மதத்தின் பெயரால் சில விஷமிகள் திரிவினைகள் செய்யத்துணியாத காலம். அவ்வளவு
> ஏன்? தமிழுக்கு ஒரு
> நல்லடிக்காலம்.
>
> தமிழ்ப்புலவர்களும் எம்மொழியும் கற்று, எப்பொருளிலும் பெய்ப்பொருள் காண
> முயன்ற காலம். சரி நமது கருத்துக்கு வருவோம்.
>
> ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், திருமாலைப் பற்றி மறை கண்ட முடிவு,
>
> அவன் அன்றலர்ந்த செந்தாமரை அன்ன கண்ணினன்,
> 'தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ' (அந்தப் பரமபுருஷனுக்கு சூரியனால்
> மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள) ---
>
> காயாவின் மலர்ந்த பூவை ஒத்தக் கருநிறம் உடையவன் ---
>
> அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்ற படி திரு
> விரும்பி வாழும் மார்பினை உடையவன் --
>
> மார்பில் கௌஸ்துபம் என்ற மணியினைப்
> பூண்டவன் --
>
> நீலமலை ஒன்றைச் செந்நெருப்புச் சூழ்ந்துகொண்டிருப்பது போன்ற பொன்னாலான
> பீதாம்பரத்தை உடையவன் ---
>
> அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாய்
> நிறைந்து அனைத்துப் பொருட்களையும் நியமிப்பவனாய் இருப்பவன் --
> என்று இவையெல்லாம் வேதங்கள் திருமாலைப் பற்றி உரைக்கும் புகழ்.
>
> இப்பொழுது சங்கப் புலவரிடம் வருவோம்:
>
> *எரிமலர் சினைஇய கண்ணை! *
> *பூவை விரிமலர் புரையும் மேனியை! *
> *மேனித் திரு ஞெமர்ந்து அமர்ந்த மார்பினை!! *
> *மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை!! *
> *மால்வரை எரி திரிந்தன்ன பொன்புனை உடுக்கையை!! *
> (ஞெமர்ந்து -- பரந்து, விரும்பி, நிறைந்து)
>
> சரி இத்தனையும் சங்கப் புலவர் பாடிவிட்டுப் பேசாமல் போகக்கூடாதா?
> நாங்கள் பாட்டுக்கு இப்பொழுது, இவர் பாடித்தான் வேதமே அதைக் காப்பியடித்தது
> என்று சொல்லி மகிழ்ந்து போவோமே! என்ன செய்வது? அது சங்கப் புலவருக்கு உடன்
> பாடில்லை.
>
> உடனேயே கூறுகிறார்,
>
> *சேவல் அம் கொடியோய் ! *
> *நின் வலவயின் நிறுத்தும் *
> *ஏவல் உழந்தமை கூறும் *
> *நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே!!! *
> *
> *
> சரி ஏதாவது தெரியாமல் சொல்லியிருப்பார், போகப் போகப் பார்க்கலாம் என்றால்
> இவர் என்ன ஆழ்வாரா அன்றேல் சங்கப் புலவரா என்று வேறுபாடு தெரியாத அளவிற்கு
> அவருடைய வரிகள் சுழலிடுகின்றன.
> இப்படியே போனால் ஆழ்வார் சங்கப் புலவரோ என்ற நிலைக்குத்தான் வருவோம். (
> அய்யய்யோ யாரும் கோபத்தில் முறைக்காதீங்கோ!)
>
> புலவரின் பொற்குரல் தொடர்கிறது:
>
> *'பொருவேம்' என்றவர் மதம் தபக் கடந்து, *
> *செருமேம்பட்ட செயிர் தீர் அண்ணல் ! *
> *இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்! *
> *தெருள நின் வரவு அறிதல் *
> *மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே!! *
>
> 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்' என்றாள் சங்கத் தமிழ்மாலை முப்பதும் தந்த
> கோதை.
>
> அது என்ன இருவருக்கும் மட்டும் தாதை?
>
> 'நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே' (நாராயணோபநிஷத்)
> 'நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்
> படைத்தான்' என்று திருமழிசையார் தமிழ்ப்படுத்திய வேத வாக்கியத்தைச் சங்கப்
> புலவர் இரு சொற்களிடைத் தேக்கி வெளியிடும்
> அழகே தனி!
>
> 'இருவர் தாதை'. சரி அவ்வாறு சொன்னவுடன்
> அது என்ன 'இலங்கு பூண் மா அல்' ?
>
> சாந்தோக்கியம் கூறுகிறது,
> 'ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:' 'நகத்திலிருந்து எல்லாம்
> பொன்மயமானவன்'.
>
> அடுத்த வரிதான் மிக உச்சக் கட்டமான வரி!
>
> *'தெருள நின் வரவு *
> *அறிதல் மருளறி தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே'. *
>
> 'வரவு அறிதல்' என்றால்?
> அவதாரக் கொள்கை ...
>
> read more »
ஹி ஹி ஹி ஹி என்றாலும் கிரந்த எதிப்பாளர்களுக்காக இ இ இ இ இ என்றாலும் இளிப்புதானே
நாகராசன்
On Mar 3, 1:01 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/3/2 rajam <ra...@earthlink.net>
>
>
>
>
>
> > சரி, நான் தொடங்கிய இந்த இழையின் முதல் பதிவை மீண்டும் சொல்லுகிறேன்,
> > ஏனென்றால் அது இழையின் தலைப்பை ஒட்டியது, "மதுரை" பற்றியது!
> > சரி, இங்கே பழைய விருந்து ஒன்று. *பரிபாடல் திரட்டில் மதுரை* பற்றிய பகுதி:
> இங்ஙனதான் ஒரு சந்தேகம்.
>
> மாயோன் கொப்பூழ் மாதிரிங்கறார். அண்ணல் கோயில் என்கிறார்.
>
> அப்ப ஊருக்கு நடுப்பற கோயில். அது மாயோன் கொப்பூழ் மாதிரி இருக்கு. அந்தக்
> கோயில் அண்ணல் கோயில். அப்படித்தானே?
>
> அப்ப இந்தப் பரிபாடல் திரட்டு பாடப்பட்ட போது அங்க இருந்த கோயில் திருமால்
> கோயில். மீனாட்சி கோயில் இல்ல. அப்படித்தானே?
>
> சொக்கன் கோயிலும் இல்ல. பாட்டு என்ன சொல்லுது?
> ‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை-ப்
> பூவொடு புரையும் சீர் ஊர்’
>
> ’பூவின்
> இதழகத்து அனைய தெருவம், இதழகத்து
> அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்’
>
மேலும்.
அண்ணல் = அருகன், புத்தர் என்ற பொருள்களைச்
சென்னை லெக்சிகன் அளிக்கிறது.
கணேசன்
> மதுரையில் திருமால் கோயில் இருந்தது என்பதுதானே பொருத்தம். ஸ்ரீகிருஷ்ணனுடன்
> சம்பந்தப்பட்ட ஊரில் நடுப்பொகுட்டாய் இருந்தது திருமால் கோயில் என்பதுதான் என்ன
> புதிய தகவல்! ஏன் மாறியது? எப்பொழுது மாறியது? எப்படி எப்படியெல்லாம் மாறியது?
> என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
>
> ஆனால் பரிபாடல் திரட்டுப் பாடல் ஒன்று இப்படிக் காலம் எதிர்த்துவந்து சாட்சி
> சொல்கிறதே என்ன ஆச்சரியம்!!!!
>
> ***
>
>
>
> > On Mar 1, 2011, at 9:13 PM, karuannam annam wrote:
>
> > 2011/3/2 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
’இ’ ஐயா காதில் விழ ’இ’ன்னும் சிலமணிநேரமாகும். ‘இ’ அவர்கள் ‘இ’ந்திய நேரத்தில் ‘இ’ல்லாமல் ‘இ’ங்கிலாந்தில் ‘இ’ருப்பதால்.
ஹி ஹி ஹி ஹி என்றாலும் கிரந்த எதிப்பாளர்களுக்காக இ இ இ இ இ என்றாலும் இளிப்புதானே
1 மார்ச், 2011 11:41 pm அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:
ஹி ஹி ஹி ஹி என்றாலும் கிரந்த எதிப்பாளர்களுக்காக இ இ இ இ இ என்றாலும் இளிப்புதானே
ஹி ஹி ஹி ஹி என்றால் ஹிளிப்புனு வச்சுக்கலாம். நத்திங் ராங்.
On Mar 3, 8:05 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> அண்ணல் = திருமால், பரிபாடல் 30 காண்க...
>
> read more »
>
> அண்ணல் = ஆதிசேடன். பரிபாடல் திரட்டு 80 காண்க
>
> அண்ணல் = முல்லைநிலத்தலைவன்
>
> அண்ணல் = சிவன்
>
> எனவே அண்ணல் என்றால் அருக்கன், புத்தன் மட்டுமே என்ற பார்வைக் கோளாறுகளை
> விட்டொழிக்கவும்.
>
அண்ணல் என்றால் பலபொருள் உண்டு. அருகன், புத்தர்
என்று மாத்திரம் என்று நான் கொள்ளவில்லை, அவ்வாறு
என் மடல் தொனித்தால் மன்னிக்கவும்.
புறம் -
ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
*கறை மிடற்று அண்ணல்* காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல,
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!
நா. கணேசன்
> 2011/3/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > > முயல்வோம் என்பது கேலிக்கோ நகைப்புக்கோ உரியதில்லை என்பதை அன்புடன்- Hide quoted text -
On Mar 3, 7:26 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> க்ளாரன்ஸ் மலோனி
http://www.jstor.org/pss/2943246
> குறிப்பில் இனங்கைக்கு அருகில் இருந்து தலைநகர் (மதுரை?) இடம் மாறிய குறிப்பு
> உள்ளது. பரிபாடல் மதுரைக் குறிப்பு ரங்கனார் கேள்விக்கு என்ன தகவல் தருகிறது?
> 1960-களில் மதுரையி மாணவனாக இருந்தபோது மதுரைபற்றிய தொல்லியல் சான்றுகளை
> மாணவர்களுக்கு விளக்க ஒரு பட்டறை நிகழ்ந்தது. எங்களை நாகமலிஅ ஆனைமலை,
> திருப்பரங்குன்றம் எனப் பலைடங்களுக்கும் நேரில் அழைத்துச் சென்று
> காட்டினார்கள். தலைமை ஏற்றவர்கள் ஐராவதம் மஹாதேவன் ஐ.ஏ.எஸ் பணிடில் இருந்த
> காலம். மற்றவர் டாக்டர்.செண்பகலட்சுமி
> நிறைய சமணச் சான்றுகளும், திருப்பரங்குன்றத்தில் மொகலாயச் சான்றுகளும் பார்த்த
> நினைவு உள்ளது. பெளத்தம் வைனவம் பற்றிய சான்றுகள் இன்றைய மதுரை அருகில்
> உள்ளதா?
> நாகராசன்...
>
சமணர்களின் கல்வெட்டுக்கள் நிறையக் கிடைப்பது மதுரையைச்
சுற்றித்தான். ஐராவதத்தின் எர்லி தமிழ் எப்பிகிராபி படிக்கலாம்.
வடமதுரை, கண்ணன், பாண்டியர், ... மீனாட்சி தொடர்புகள்
வடமொழிப் பேராசிரியர் ஒருத்தர் பார்வையில்:
http://dakshinatya.blogspot.com/2010/08/parpola.html
நா. கணேசன்
On Mar 3, 11:25 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Mar 3, 7:26 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
> wrote:> க்ளாரன்ஸ் மலோனி
>
> http://www.jstor.org/pss/2943246
>
நாற்பது வருஷத்துக்கு முன்வந்த சிறந்த பேப்பர்.
நான் படித்து 20-25 வருஷம் இருக்கும்.
க்லாரன்ஸின் இன்னொரு பேப்பர் -
(நீங்கள் கொடுத்த லிங்க் எழுதியபோது அவருக்கு தெரியாதது):
http://www.iias.nl/iiasn/iiasn5/insouasi/maloney.html
மாலைத்தீவில் த்ராவிட சப்ஸ்றேற்றம் பற்றியது.
நா. கணேசன்
நா. கணேசன்
இங்ஙனதான் ஒரு சந்தேகம்.மாயோன் கொப்பூழ் மாதிரிங்கறார். அண்ணல் கோயில் என்கிறார்.
அப்ப ஊருக்கு நடுப்பற கோயில். அது மாயோன் கொப்பூழ் மாதிரி இருக்கு. அந்தக் கோயில் அண்ணல் கோயில். அப்படித்தானே?அப்ப இந்தப் பரிபாடல் திரட்டு பாடப்பட்ட போது அங்க இருந்த கோயில் திருமால் கோயில். மீனாட்சி கோயில் இல்ல. அப்படித்தானே?
ஒரு சார்அணிமலர் வேங்கை, மராஅ, மகிழம்,பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி,மணி நிறம் கொண்ட மலை.ஒரு சார்தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடைவண்ண வரி இதழ்ப் போதின் வாய் வண்டார்ப்ப,விண் விற்றிருக்கும் கயமீன் விரிதகையின்கண் வீற்றிருக்கும் கயம்.ஒரு சார்சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு உற்றுஉழவின் ஓதை பயின்று, அறிவிழந்துதிரிநரும், ஆர்த்து நடுநரும், ஈண்டி,திரு நயத்தக்க வயல்.கவிதை என்பதைக் காண வேண்டினால் மிகச்சிறந்த கவிதைப் பகுதியாகும் இந்தப் பகுதி பரிபாடல் திரட்டின் முதல் பாட்டில்.மலை, குளம், வயல் என்ற இந்த மூன்றும் திருமால் கோயிலின் மருங்கு எப்படி திகழ் சிறப்பின் முயக்கம் பெற்றுத் திகழ்ந்தன என்கிறார் புலவர்.மூன்று மரங்கள் அழகிய மலர்களை அணிந்திருக்கின்றன. வேங்கை, வெண்கடம்பு என்னும் மராஅ மரம், மகிழ மரம் இந்த மூன்று மரங்களில் மலர்கள் அணிந்திருக்கின்றன.மலர்கள் அணிந்திருத்தால்தான் மரத்திற்கு அழகோ?அழகு என்பது அணிவதிலும் இருக்கிறது; கட்டவிழ்வதிலும் இருக்கிறது என்கிறார் புலவர். அணிந்த மலர்களால் அழகு என்பதை வேங்கை, மராஅ, மகிழம் காட்ட, கட்டவிழ்ந்த மலர்களால் அழகு என்பதை பிணி நெகிழ் பிண்டி என்னும் அசோக மரம் காட்டுகிறது.(தொடரும்)
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்***
--
எது எதுவாக தோற்றமுறுகிறது என்று சொல்வது கடினம்.
ஐந்திணை பற்றிச் சொல்லவரும் தொல்காப்பியன் எடுத்தவுடனே `மாயோன் மேய
காடுறை உலகமும்` எறுதான் ஆரம்பிக்கிறான். திருமால் வழிப்பாட்டின்
தொன்மையை அறிய வேண்டுமெனில் முனைவர் ஆ.க.பார்த்தசாரதி (ஔவை நடராஜன்
அவர்களிடம் பட்டமேற்படிப்புக் கொண்டார்) யின் முனைவர் ஆய்வேட்டைப்
பயிலுதல் நலம்.
இதே தொன்மைத்தெய்வம் மாயோன் சங்க காலத்தில் `மாயோள்` என்று
அறியப்படுகிறாள்/ன். தற்போதும் அம்பாள் என்பவன் சங்கு சக்கரதாரியாக
விஷ்ணு மாயையாகவே இருக்கிறாள். இன்றும் மதுரை மீனாட்சியை வைஷ்ணவி
தேவியாகக் காணும் தொன்மை மரபுள்ளது.
நா.கண்ணன்
2011/3/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
பேராசிரியரே!
எது எதுவாக தோற்றமுறுகிறது என்று சொல்வது கடினம்.
On Mar 14, 9:47 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> தென் கோடியில் இருந்த மதுரையில் திருமால் கோவிலா?
> சங்க காலத்தில் மீனாக்ஷி கோவிலா?
> சங்க காலத்திய தமிழர் வாழ்வியல் மரபில் வேத சாரம் எப்போது சேர்ந்தது?
> அதன் காலகட்டம் என்ன?
> சங்க இலக்கியத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என
> அனுமானிக்கப்பட்டுள்ளது.
> கி.மு 8ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தோன்றிய வேத மறைகள் குறிப்பிடும் இறைவன்
> பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் (கி.பி 2-ஆம் நூற்றாண்டில்)
> இடம்பெற்றுள்ளதா?
Veda chanting brahmins moved South in the megalithic period -
along with VeLir from Dwaraka and upper Deccan, Sangam literature
has many references to Vedas and brahmins. Siva himself is
called 'antaNan'.
One good reference is ParithimAl Kalaignar's nephew,
Prof. of History (Udumalpet, near Palani), Sri. N. Subramanian's
classic book: The brahmin in the Tamil country (Madurai: 1989).
Tamil Nadu in megalithic era, some data can be got from:
http://dakshinatya.blogspot.com/2010/08/parpola.html
Hope this helps,
N. Ganesan
> சான்ஸ்கிரிடிசேஸன் என்ற வேதங்களின் தாக்கம் தமிழர் வாழ்வியலில் வேதசாரம்
> சங்க்காலத்திலேயே இடம் பெற்றுவிட்டதா?
> பழங்குடிகளாக வேடுவர்களாகவும் பரதவர்களுமாக வாழ்ந்த மதுரை மக்கள் பெண்
> தெய்வங்களை வணங்கினார்கள். சேர, சோழ, பாண்டிய நாடுகளில் பாண்டிய நாட்டில்
> பெண்களின் ஆட்சி மேலோங்கி நின்றது.
>
> சிதம்பரத்தில் சிற்றம்பலம் பேரம்பலம் என்றிருந்தது சிதம்பரம் ஆனது கி.பி 7-ஆம்
> நூற்றாண்டு என்றும் அதற்கு முன்னர் பழங்குடி மரபின் அடிப்படியில் பெண் தெய்வமே
> பேரம்பலத்தில் இருந்தது என்றும் ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது
> அது போன்றே மதுரையில் (மதுரை நெய்தல் நிலத்தில் இருந்து குறிஞ்சி நிலத்துக்கு
> மாறி) அங்கே பெண்தெய்வ வழிபாடு இருந்திருக்களாம்
>
> சான்ஸ்கிரிடிசேஸன் இப் பெண்தெய்வத்தை ஆண் தெய்வத்தின் கட்டுப்பாட்டுக்குள்
> கொண்டுவந்து பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவள் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கலாம்
> என்பது அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி, புலந்திரன் களவு போன்ற நூல்கள் மூலமும்
> பேச்சு வழக்கில் குடும்பத்தில் ஆண்களின் நிலை என்பதைக் குறிப்பிட அவர்தம்
> வீட்டின் ஆட்சி சிதம்பரமா மதுரையா என்று சொல்வதன் அடிப்படையில் மதுரையில்
> மீனாக்ஷி ஆட்சி என்பது தெளிவாகும்
>
> மதுரையில் சங்ககாலதில் சான்ஸ்கிரிடிசேஸன் நிகழ்ந்தது தெளிவாகிறதுhttp://books.google.co.in/books?hl=en&lr=&id=QVA0JAzQJkYC&oi=fnd&pg=P...
> ஆயினும் அது தோன்றிய காலம் பற்றிய தெளிவு பெண் வழி நடந்த குடும்ப வாழ்வியல்
> மரபு matriarchal மரபு மாறி ஆண்கள் வழி patriarchal குடும்பவழிக்கு மாறியதும்
> (அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி, புலந்திரன் களவு போன்ற நூல்கள் மூலம்) பற்றிய
> ஆய்வு தேவை. அத்தச்கைய ஆய்வே திருமாலுக்குக் கோவில் இருந்ததா?
> மீனாட்ஷி சங்ககாலப் பெழ்ந்தெய்வமா?
> என்ற அனுமானங்களைத் ஏற்றுக்கொள்ள வழிசெய்யும்
> நாகராசன்
>
> 2011/3/14 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
> > ஒரு சார்
>
> > *அணிமலர் வேங்கை, மராஅ, மகிழம், *
> > *பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி, *
> > *மணி நிறம் கொண்ட மலை. *
> > *
> > *
> > *ஒரு சார் *
> > *
> > *
> > *தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை *
> > *வண்ண வரி இதழ்ப் போதின் வாய் வண்டார்ப்ப, *
> > *விண் விற்றிருக்கும் கயமீன் விரிதகையின் *
> > *கண் வீற்றிருக்கும் கயம். *
> > *
> > *
> > *ஒரு சார் *
> > *
> > *
> > *சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு உற்று *
> > *உழவின் ஓதை பயின்று, அறிவிழந்து *
> > *திரிநரும், ஆர்த்து நடுநரும், ஈண்டி, *
> > *திரு நயத்தக்க வயல். *
> > *
> > *
> > கவிதை என்பதைக் காண வேண்டினால் மிகச்சிறந்த கவிதைப் பகுதியாகும் இந்தப் பகுதி
> > பரிபாடல் திரட்டின் முதல் பாட்டில்.
>
> > மலை, குளம், வயல் என்ற இந்த மூன்றும் திருமால் கோயிலின் மருங்கு எப்படி திகழ்
> > சிறப்பின் முயக்கம் பெற்றுத் திகழ்ந்தன என்கிறார் புலவர்.
>
> > மூன்று மரங்கள் அழகிய மலர்களை அணிந்திருக்கின்றன. வேங்கை, வெண்கடம்பு என்னும்
> > மராஅ மரம், மகிழ மரம் இந்த மூன்று மரங்களில் மலர்கள் அணிந்திருக்கின்றன.
>
> > மலர்கள் அணிந்திருத்தால்தான் மரத்திற்கு அழகோ?
>
> > அழகு என்பது அணிவதிலும் இருக்கிறது; கட்டவிழ்வதிலும் இருக்கிறது என்கிறார்
> > புலவர். அணிந்த மலர்களால் அழகு என்பதை வேங்கை, மராஅ, மகிழம் காட்ட, கட்டவிழ்ந்த
> > மலர்களால் அழகு என்பதை பிணி நெகிழ் பிண்டி என்னும் அசோக மரம் காட்டுகிறது.
>
> > (தொடரும்)
>
> > ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> > ***
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
சான்ச்க்ரிடைஸேஷன் --- அனைததையும் சம்ஸ்க்ருத மயமாகப் புரிதல் சங்க காலத்திற்கு ஒட்டுமா?
சம்ஸ்க்ருதம் வடக்கிலிருந்து இங்கு வந்த மொழி என்று சங்க காலத்தில் கருதினார்களா?அனைத்து இந்திய அறிஞர்களும் தம்முள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு விவாதிக்க ஒரு மீப்பொது மாறிலி மொழியாக வனைந்ததுதான் சம்ஸ்க்ருதமா? அல்லது ஏதேனும் பிரதேச, இன மொழியா?சங்க இலக்கியத்தில் காணும் வாழ்வு சார்ந்த ஆர்வம் வந்து சேர்ந்த துறவற ஆவேசம் மிக்க வாழ்வின் வெறுப்பு படர்ந்த சமண பௌத்த தாக்கங்களினால் அடைந்த நிலை என்ன?தமிழ் என்னும் அகத்திணையே மறைந்தது என்பதுதான் விளைவு என்பதை சங்ககாலத்துக்குப் பிற்றைய சமுதாயம் எண்ணி ஏங்கவில்லையா?சங்க காலத்தின் வாழ்வூக்கத்தைத் தொலைத்த சமுதாயம், தன் ’தமிழ்’ என்னும் அக்த்திணையையே தொலைத்துத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளிய சமண பௌத்தக் கையோங்கல்களுக்கு ஈடுகொடுக்க அதைப் போலவே விரக்திமிக்க சூழலில் அந்த இரண்டு மதங்களையும் சமாளிக்க எழுந்த சைவம், பல பௌத்த தீர்த்தங்கரர் கதைகளைத் தம்முள் உருமாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கவில்லையா?சங்க காலத்தில் பாஞ்சராத்திர ஆகம வழிபாட்டுக் கருத்துகள் மிகுந்திருப்பதன் காரணம் என்ன?திருமாலின் உயர்வற உயர்ந்த நிலை சங்கப் புலவர்களால் ஏன் வெளிப்படையாகப் பாடப்படவேண்டும்?சங்கத் தமிழின் இலட்சியக் காதல் திருமாலின்பால் உயிரானது பூண்ட தெய்வப் பெருங்காதலாக மீட்டெடுக்கப்பட்டு, பாஞ்சராத்திரக் கருத்துகளும், வேதாந்தமும் இணைந்து, சங்க இலக்கிய கத்திணை நெறிகளைச் செம்புலப் பெயனீர்போல் உள் கலந்து செழித்ததன் விளைவே திருமால் நெறி என்றால் அதற்குப் பெயர் சங்க காலத் தமிழ் வேதாந்தமாக புத்துயிர்ப்பு அடைந்தது என்பதுதானே?இத்தனை கேள்விகளும் எழும் கண்ணன். எழுந்தால்......படிக்க வேண்டியது...என் நூலான ‘அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன்’ , தமிழினி, டிசம்பர் 2010.இனி ஒரு நூல் வருகிறது ’சங்கத் தமிழை மீட்ட சடகோபன்’ எனும் பெயரில். இந்த வருஷக் கடைசிக்குள் வந்துவிடும்.அப்பொழுது பல கேள்விகள் விடை பெறும். பல கேள்விகள் முளைக்கும்.
On Mar 15, 9:53 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> அன்புடையீர்
> ஜார்ஜ் மலோனி என்ற மானுடவியலார் குறிஞ்சித்திணை (குறிஞ்சிமலர்) பற்றியும் மதுரை
> பற்றியும் அய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.
Publication details please. If you have the papers,
can you pl. send scans?
Buddhism did come via the sea. For example, Sinhalese
are said to have to come from Gujarat region
(not the popular perception of Bengal).
N. Ganesan
> மூவேந்தர் ஆட்சியில் சங்க
> காலத்தில் நெய்தல் நிலத்தில் கடல் தொடர்பு காரணமாக சமஸ்கிரித இறை மறை இலக்கிய
> வெளிப்பாடுகள் வேகமாகப் பரவியது என்றும் பெளத்தம் தரை வழியே பரவியதால் அது
> அப்பகுதியில் விரைவாகவும் வேகமாகவும் பரவ இயலவில்லை என்று குறிப்பிடுகிறார்
> பழங்குடி மரபியலில் நடுகல் திணைசார் இறைவழிபாட்டு முறையில் இருந்தவர்கள்
> சமஸ்கிரிதத் தாக்கத்தால் வடபுல உயர்நிலைக் கடவுளரை இலக்கியத்தில் வாழ்வியலில்
> ஏற்றுக்கொண்டனர் என்ற குறிப்புகள் காணக்கிடைக்கும்.
> இந்து மதம் (ஆங்கிலேயர் இட்ட பெயர்) என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட வேத
> உபநிஷத் குறிப்பிடும் கடவுளர் தமிழ் இலக்கியத்தில் பரவிய வேகத்தில் சமண புத்த
> சமய சாரங்கள் பரவவில்லை என்று அனுமானித்தால் அது சரியாக இருக்குமா?
> பெளத்தம் புத்த மதம் என்பதில் எது சரியான தமிழ்ச்சொல்?
> சங்க காலத்திலோ அல்லது சங்க காலத்துக்க்ப் பின் தமிழகத்தில் உருவான பெளத்த மத
> விளக்கங்கள் வடக்கே அமராவதியிலிருந்தும் தெற்கே இலங்கையிலிருந்தும் வந்து போதி
> தருமர் போன்றவர்கள் சமஸ்கிரிதம், பாலி (ப்ரகிரிதம்) தந்த கருத்துக்களை
> உள்வாங்கி தமிழுக்கு ஏற்ற புத்த கருத்துருவை உருவாக்கினார்களா?
> மதுரையில் புத்தம் வேர்விட ஆரம்பித்த காலம் சங்க காலமா? அல்லது
> ஐம்பெரும் காப்பியங்கள் தோன்றிய கி.பி 6-ஆம் நூற்றாண்டு அளவிலான காலகட்டமா?
> நாகராசன்...
>
> read more »
>
> 2011/3/15 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
> > 2011/3/15 N. Kannan <navannak...@gmail.com>
>
> > பேராசிரியரே!
>
> >> எது எதுவாக தோற்றமுறுகிறது என்று சொல்வது கடினம்.
>
> >> ஐந்திணை பற்றிச் சொல்லவரும் தொல்காப்பியன் எடுத்தவுடனே `மாயோன் மேய
> >> காடுறை உலகமும்` எறுதான் ஆரம்பிக்கிறான். திருமால் வழிப்பாட்டின்
> >> தொன்மையை அறிய வேண்டுமெனில் முனைவர் ஆ.க.பார்த்தசாரதி (ஔவை நடராஜன்
> >> அவர்களிடம் பட்டமேற்படிப்புக் கொண்டார்) யின் முனைவர் ஆய்வேட்டைப்
> >> பயிலுதல் நலம்.
>
> >> இதே தொன்மைத்தெய்வம் மாயோன் சங்க காலத்தில் `மாயோள்` என்று
> >> அறியப்படுகிறாள்/ன். தற்போதும் அம்பாள் என்பவன் சங்கு சக்கரதாரியாக
> >> விஷ்ணு மாயையாகவே இருக்கிறாள். இன்றும் மதுரை மீனாட்சியை வைஷ்ணவி
> >> தேவியாகக் காணும் தொன்மை- Hide quoted text -
தேவ்
On Mar 15, 9:58 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> சான்ச்க்ரிடைஸேஷன் --- அனைததையும் சம்ஸ்க்ருத மயமாகப் புரிதல் சங்க காலத்திற்கு
> ஒட்டுமா?
>
> சம்ஸ்க்ருதம் வடக்கிலிருந்து இங்கு வந்த மொழி என்று சங்க காலத்தில்
> கருதினார்களா?
>
> அனைத்து இந்திய அறிஞர்களும் தம்முள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு விவாதிக்க
> ஒரு மீப்பொது மாறிலி மொழியாக வனைந்ததுதான் சம்ஸ்க்ருதமா? அல்லது ஏதேனும்
> பிரதேச, இன மொழியா?
>
> சங்க இலக்கியத்தில் காணும் வாழ்வு சார்ந்த ஆர்வம் வந்து சேர்ந்த துறவற ஆவேசம்
> மிக்க வாழ்வின் வெறுப்பு படர்ந்த சமண பௌத்த தாக்கங்களினால் அடைந்த நிலை என்ன?
>
> தமிழ் என்னும் அகத்திணையே மறைந்தது என்பதுதான் விளைவு என்பதை சங்ககாலத்துக்குப்
> பிற்றைய சமுதாயம் எண்ணி ஏங்கவில்லையா?
>
> சங்க காலத்தின் வாழ்வூக்கத்தைத் தொலைத்த சமுதாயம், தன் ’தமிழ்’ என்னும்
> அக்த்திணையையே தொலைத்துத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளிய சமண பௌத்தக்
> கையோங்கல்களுக்கு ஈடுகொடுக்க அதைப் போலவே விரக்திமிக்க சூழலில் அந்த இரண்டு
> மதங்களையும் சமாளிக்க எழுந்த சைவம், பல பௌத்த தீர்த்தங்கரர் கதைகளைத் தம்முள்
> உருமாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கவில்லையா?
>
> சங்க காலத்தில் பாஞ்சராத்திர ஆகம வழிபாட்டுக் கருத்துகள் மிகுந்திருப்பதன்
> காரணம் என்ன?
>
> திருமாலின் உயர்வற உயர்ந்த நிலை சங்கப் புலவர்களால் ஏன் வெளிப்படையாகப்
> பாடப்படவேண்டும்?
>
> சங்கத் தமிழின் இலட்சியக் காதல் திருமாலின்பால் உயிரானது பூண்ட தெய்வப்
> பெருங்காதலாக மீட்டெடுக்கப்பட்டு, பாஞ்சராத்திரக் கருத்துகளும், வேதாந்தமும்
> இணைந்து, சங்க இலக்கிய கத்திணை நெறிகளைச் செம்புலப் பெயனீர்போல் உள் கலந்து
> செழித்ததன் விளைவே திருமால் நெறி என்றால் அதற்குப் பெயர் சங்க காலத் தமிழ்
> வேதாந்தமாக புத்துயிர்ப்பு அடைந்தது என்பதுதானே?
>
> இத்தனை கேள்விகளும் எழும் கண்ணன். எழுந்தால்......படிக்க வேண்டியது...என் நூலான
> ‘அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன்’ , தமிழினி,
> டிசம்பர் 2010.
>
> இனி ஒரு நூல் வருகிறது ’சங்கத் தமிழை மீட்ட சடகோபன்’ எனும் பெயரில். இந்த
> வருஷக் கடைசிக்குள் வந்துவிடும்.
>
> அப்பொழுது பல கேள்விகள் விடை பெறும். பல கேள்விகள் முளைக்கும்.
> :-)
>
> 2011/3/15 N. Kannan <navannak...@gmail.com>
>
> > பேராசிரியரே!
>
> > எது எதுவாக தோற்றமுறுகிறது என்று சொல்வது கடினம்.
>
> > ஐந்திணை பற்றிச் சொல்லவரும் தொல்காப்பியன் எடுத்தவுடனே `மாயோன் மேய
> > காடுறை உலகமும்` எறுதான் ஆரம்பிக்கிறான். திருமால் வழிப்பாட்டின்
> > தொன்மையை அறிய வேண்டுமெனில் முனைவர் ஆ.க.பார்த்தசாரதி (ஔவை நடராஜன்
> > அவர்களிடம் பட்டமேற்படிப்புக் கொண்டார்) யின் முனைவர் ஆய்வேட்டைப்
> > பயிலுதல் நலம்.
>
> > இதே தொன்மைத்தெய்வம் மாயோன் சங்க காலத்தில் `மாயோள்` என்று
> > அறியப்படுகிறாள்/ன். தற்போதும் அம்பாள் என்பவன் சங்கு சக்கரதாரியாக
> > விஷ்ணு மாயையாகவே இருக்கிறாள். இன்றும் மதுரை மீனாட்சியை வைஷ்ணவி
> > தேவியாகக் காணும் தொன்மை மரபுள்ளது.
>
> > நா.கண்ணன்
>
> > 2011/3/15 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:
> ...
>
> read more »
இப்பதிவில் அரங்கனார் ஒன்பது வினாக்களை எழுப்பியுள்ளார்.
தமிழினி வெளியீட்டைப் படித்தால்தான் விடை தெரியுமா ?
சங்க இலக்கியத்தில் தேர்ந்தவர் விடை கூறமுடியாதா ?
வேந்தனார் ஒன்பதில்கூட மொழியியல் ஆய்வு நடத்தியவர்;
சங்கநூல்களில் புலமை வாய்ந்தவர். அவர் விடை கூற முயலலாமே
-
சான்ச்க்ரிடைஸேஷன் --- அனைததையும் சம்ஸ்க்ருத மயமாகப் புரிதல் சங்க காலத்திற்கு ஒட்டுமா?
சம்ஸ்க்ருதம் வடக்கிலிருந்து இங்கு வந்த மொழி என்று சங்க காலத்தில் கருதினார்களா?
ஒரு சார்அறத்தொடு வேதம் புணர்தவம் முற்றி,விறல்புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்திறத்தின் திரிவில்லா அந்தணர் ஈண்டி,அறத்தின் திரியா பதி.மரங்கள், வயல்கள், உழவின் ஓதை, உழைப்பவர், உழைப்பின் பயனில் களிப்பவர் என்று சித்திரம் தீட்டிய புலவர் அறம் பொருள் காமம் என்று முப்பாலின் திறத்ததாகிய உலக இயற்கையைக் கடந்து, நில்லா உலகில் நிலைத்தது எது என்ற தேட்டம் பிறப்ப, அதனால் வீடு பேறு என்னும் உயர்ந்த உறுதிப்பொருளில் நாட்டம் சென்ற அந்தணர்களின் காட்சியைக் காட்டுகிறார்.அந்தணர் என்போர் வேதமே தமது வீடுபேறு என்னும் தேட்டத்திற்குச் சிறந்த கண்ணாய்க் கொண்டவர்கள். வேதங்களில் வேள்விகள் என்றும், பரம்பொருளைப்பற்றிய வர்ணனை என்றும் பகுதிகள் உண்டே. அதில் வேள்வியைக் கைக்கொண்டு அதனால் சொர்க்கம் முதலிய நெடுங்கால சுக உலகுகளை ஆசைப்பட்டு அதற்கு உறுப்பாக, பல காம்ய யாகங்களை இயற்றிச் செல்லுபவரும் உண்டு. அவரும் வேதம் என்ற கண்ணைக் கொண்டு சரியான பார்வையை அடையாமல் வழி தவறியவரே. ஏனெனில் சிறந்த பொருளை இழிந்த நோக்கத்திற்குப் பயன் படுத்துவோர் அறியாதார் தாமே!பின் வேதம் எதற்கு ஏற்பட்டது? சின்னாள் இருந்து பின் மறைந்து படும் உலக சுகங்களை அடைய வேதம் எதற்கு? நிலையாமையே நிலைத்த உலகின் தாழ்வை உணர்ந்து நிலைத்த பரம்பொருளை அடைவது அன்றோ வேதங்களைக் கற்றலின் பயன்.வேதாத்யயன முகத்தாலே பகவத் லாபத்திற்கு உறுப்பு என்று பிராம்மணர்க்கு சிறப்பு கூறப்பட்டதே அன்றி, அவ்வாறு பகவானிடம் பக்தியை அடையாமல், வெறுமனே சாதிச் செருக்கு கொள்வதற்கு அந்த பிராம்மணத்வம் பயன்பட்டது என்றால் அந்த பிராம்மண்யத்தால் ஆய பயன் ஒன்றும் இல்லை; அந்த வேதாத்யயனம் செருப்பு குத்த கற்றவோபாதி எந்தச் சிறப்பும் இல்லையாகிவிடும் -- என்று முக்கோல் பகவர்களான ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் கூறியதும் அதனாலன்றோ!அவ்வாறு வேதாத்யயனம் செய்து தம் கல்வியை வீணடிப்பவர்கள் அங்கு எவரும் இலர். வேதம் கூறுகின்ற பல விக்ருதி யாகங்களை, பல உபாஸனைகளை உலக நன்மைக்காக பரம்பொருள் இட்ட ஆணை என்று கொண்டு பரம்பொருளின் வழிபாடாகக் கருதி இயற்றும் புகழ் மிக்கவர்கள் அந்தணர்கள். வேதம் அறத்தொடு புணர் தவம் முற்றி, விறல் புகழ் நிற்ப -- (விறல் --ஆணை).கேள்வி என்பது சுருதி. ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் என்னும் பகுதியைச் சிறப்பாக சுருதி என்பது மரபு. வேதாந்தம் என்பதும் இவையேயாம்.வேதாந்தக் கல்வி பிரஸித்தமாக இருந்தது மதுரையம்பதி. -- விளங்கிய கேள்வி.பெரியாழ்வார் வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்ததும் இந்தப் பதியிலன்றோ!ஏனெனில் வேதாந்தக் கல்வியின் திறத்தின் திரிபு இல்லாத பழுத்த அறிஞர்கள் பல ஊர்களிலிருந்தும் விரும்பி வந்து வதியும் இடமாக அது திகழ்ந்தது.வேதாந்தக் கல்வியைக் கற்று, வேதம் வெறும் கர்ம காண்டம், உலகம் வெறும் மாயை, நானும் பொய் நீயும் பொய், என்றெல்லாம் திறத்தின் திரிந்து போனவர்களாய் இல்லாமல்,விளங்கிய கேள்வித் திறத்தின் திரிவில்லா அந்தணர் ஈண்டி --வேத அறத்தின் திரியா மதுரையம்பதி.வேதத்தை விட்ட அறம் இல்லைவேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாம் உள --என்று கூறினார் அன்றோ திருமூலர்.*(தொடரும்)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
விறல் - இணையத் தேடலில் விறலுக்கு ஆணை என்னும் பொருளை யாரும் பதியவில்லை;
வெற்றி, வலிமை, வீரம், புறத்தோற்றம் போன்று பொருள் கொள்ளப்படுகிறது.
ஆனால் ‘ஆணை’ என்பதே இங்கு பொருத்தமாகவும், அழகாகவும் உள்ளது. வேரளவில்
ஆழமாகச் சென்று
பொருள் கூற வல்லோர் உதவுக
தேவ்
On Mar 27, 2:02 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *ஒரு சார் *
> *
> *
> *அறத்தொடு வேதம் புணர்தவம் முற்றி, *
> *விறல்புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித் *
> *திறத்தின் திரிவில்லா அந்தணர் ஈண்டி, *
> *அறத்தின் திரியா பதி.*
>
> மரங்கள், வயல்கள், உழவின் ஓதை, உழைப்பவர், உழைப்பின் பயனில் களிப்பவர் என்று
> சித்திரம் தீட்டிய புலவர் அறம் பொருள் காமம் என்று முப்பாலின் திறத்ததாகிய உலக
> இயற்கையைக் கடந்து, நில்லா உலகில் நிலைத்தது எது என்ற தேட்டம் பிறப்ப, அதனால்
> வீடு பேறு என்னும் உயர்ந்த உறுதிப்பொருளில் நாட்டம் சென்ற அந்தணர்களின்
> காட்சியைக் காட்டுகிறார்.
>
> அந்தணர் என்போர் வேதமே தமது வீடுபேறு என்னும் தேட்டத்திற்குச் சிறந்த கண்ணாய்க்
> கொண்டவர்கள். வேதங்களில் வேள்விகள் என்றும், பரம்பொருளைப்பற்றிய வர்ணனை என்றும்
> பகுதிகள் உண்டே. அதில் வேள்வியைக் கைக்கொண்டு அதனால் சொர்க்கம் முதலிய
> நெடுங்கால சுக உலகுகளை ஆசைப்பட்டு அதற்கு உறுப்பாக, பல காம்ய யாகங்களை இயற்றிச்
> செல்லுபவரும் உண்டு. அவரும் வேதம் என்ற கண்ணைக் கொண்டு சரியான பார்வையை
> அடையாமல் வழி தவறியவரே. ஏனெனில் சிறந்த பொருளை இழிந்த நோக்கத்திற்குப் பயன்
> படுத்துவோர் அறியாதார் தாமே!
>
> பின் வேதம் எதற்கு ஏற்பட்டது? சின்னாள் இருந்து பின் மறைந்து படும் உலக
> சுகங்களை அடைய வேதம் எதற்கு? நிலையாமையே நிலைத்த உலகின் தாழ்வை உணர்ந்து
>> வேதம் அறத்தொடு புணர் தவம் முற்றி, விறல் புகழ் நிற்பவிறல் - இணையத் தேடலில் விறலுக்கு ஆணை என்னும் பொருளை யாரும் பதியவில்லை;
-- (விறல் --ஆணை).<<
வெற்றி, வலிமை, வீரம், புறத்தோற்றம் போன்று பொருள் கொள்ளப்படுகிறது.
On Mar 28, 9:14 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/3/29 devoo <rde...@gmail.com>
>
> > >> வேதம் அறத்தொடு புணர் தவம் முற்றி, விறல் புகழ் நிற்ப
> > -- (விறல் --ஆணை).<<
>
> > விறல் - இணையத் தேடலில் விறலுக்கு ஆணை என்னும் பொருளை யாரும் பதியவில்லை;
> > வெற்றி, வலிமை, வீரம், புறத்தோற்றம் போன்று பொருள் கொள்ளப்படுகிறது.
>
> தேவ்,
>
> யாருக்கு விடையிறுக்கிறீர்கள் என்பது புரியும்படியாக, சம்பந்தப்பட்டவருடைய
> பெயரை விட்டு வைக்கலாமே!
>
> விறல்மாறன் ஐந்து மலர்வாளி தூவ
> மிகுவானில் இந்து வெயில்காய
>
விறல் - ஆணை என்கிறார் ஸ்ரீ ரங்கன். நிகண்டிலிருந்து.
எந்த நிகண்டு? பாடல் முழுக்க தருவார்.
விறல்மாரன் என்பது தான் சரியோ? அப்படி உள்ள முழுப்பாடல்:
http://thirupugazh.blogspot.com/2007/12/23.html
மாறன் - மன்மதன் என்று
லெக்ஸிகனில் காணோம். மாறன் - பாண்டியன்.
நா. கணேசன்
விறல்மாரன் என்பது தான் சரியோ? அப்படி உள்ள முழுப்பாடல்:
http://thirupugazh.blogspot.com/2007/12/23.html
மாறன் - மன்மதன் என்று
லெக்ஸிகனில் காணோம். மாறன் - பாண்டியன்.
மாரன் = காமன் (ம்ர்த்யு என்னும் வடசொல் > மாரன்)
மாறன் = பாண்டியன் (மறம் என்னும் தமிழ்ச்சொல்
>
> > என்று தொடங்கும் திருப்புகழில், விறல்மாறன் என்றால் என்ன பொருள் என்பதைத்
> > தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஆணை மன்மதன்? அப்ப பெண்ணை ரதியா?
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
மாரனின் தூதோ? - சினிமாப்பாட்டில் கேட்க:
http://groups.google.com/group/mintamil/msg/8b14faa95216bc82
ஓகோகோ! ஓகோகோ!
ஓகோகோ! ஓகோகோ!
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜெகம் மெங்கணும் உறவாடிடும்
ஜாலமிதேதோ! - (கொஞ்சும்)
பொங்கும் நிலாவே மங்கையர் போலே
புரளும் கடல் உனைக் கண்டதும்
பூரிப்பதேனோ! (கொஞ்சும்)
வெண்டாமரையே செங்கதிரோனின்
கண்வீச்சிலே விண்ணோக்கிநீ
சிரிப்பதும் ஏனோ? (கொஞ்சும்)
சோலைக் குயிலே ஜோடி கண்டாலே
பண்ணோடு காதல்
பாடுவதேனோ? (கொஞ்சும்)
மனம் செயும் சூதோ? மாரனின் தூதோ?
மாயமிதேதோ?
ஓகோகோ! ஓகோகோ!
ஓகோகோ! ஓகோகோ! (கொஞ்சும்)
அன்புடன்,
நா. கணேசன்
“ஏவல் மெய்ப்பாடு இலாஞ்சனை சூளே ஆவயின் விறல் செயல் ஆணைக் கிளவி” (திவாகர நிகண்டு: 11: 242)
On Mar 28, 9:42 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/3/29 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
> > On Mar 28, 9:14 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> > > 2011/3/29 devoo <rde...@gmail.com>
>
> > > > >> வேதம் அறத்தொடு புணர் தவம் முற்றி, விறல் புகழ் நிற்ப
> > > > -- (விறல் --ஆணை).<<
>
> > > > விறல் - இணையத் தேடலில் விறலுக்கு ஆணை என்னும் பொருளை யாரும் பதியவில்லை;
> > > > வெற்றி, வலிமை, வீரம், புறத்தோற்றம் போன்று பொருள் கொள்ளப்படுகிறது.
>
> > > தேவ்,
>
> > > யாருக்கு விடையிறுக்கிறீர்கள் என்பது புரியும்படியாக, சம்பந்தப்பட்டவருடைய
> > > பெயரை விட்டு வைக்கலாமே!
>
> > > விறல்மாறன் ஐந்து மலர்வாளி தூவ
> > > மிகுவானில் இந்து வெயில்காய
>
> > விறல் - ஆணை என்கிறார் ஸ்ரீ ரங்கன். நிகண்டிலிருந்து.
> > எந்த நிகண்டு? பாடல் முழுக்க தருவார்.
>
> விறல் --ஆணை -- “ஏவல் மெய்ப்பாடு இலாஞ்சனை சூளே ஆவயின் விறல் செயல் ஆணைக்
> கிளவி” (திவாகர நிகண்டு: 11: 242)
>
இதிலிருந்தா விறல் = ஆணை?
நகைச்சுவை ஆராய்வு.
அன்புடன்,
நா. கணேசன்
>
>
>
>
>
>
> > விறல்மாரன் என்பது தான் சரியோ? அப்படி உள்ள முழுப்பாடல்:
> >http://thirupugazh.blogspot.com/2007/12/23.html
>
> > மாறன் - மன்மதன் என்று
> > லெக்ஸிகனில் காணோம். மாறன் - பாண்டியன்.
>
> > நா. கணேசன்
>
> > > என்று தொடங்கும் திருப்புகழில், விறல்மாறன் என்றால் என்ன பொருள் என்பதைத்
> > > தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஆணை மன்மதன்? அப்ப பெண்ணை ரதியா?
> > > --
> > > அன்புடன்,
> > > ஹரிகி.
>
இதற்கு முன்னோடியான ஹிந்தி பாட்டு,
தண் தென்றல் இதன் மையம் -
http://www.youtube.com/watch?v=-ki6Mzkb0GY
விவாதம் சூடேறாமல் வகை செய்யும்
தேவ்
விறல். இச்சொல் தமிழ்ச் சொல்,
எனவே சம்ஸ்க்ருத வார்த்தைகளுக்கும்
விறல் என்னும் தமிழ்ச்சொல்லுக்கும்
என்ன தொடர்பு என்று விளங்கமாட்டேன் என்கிறது.
விறலும் வென்றியும் உடைய வேந்தன்
= வல்லமையும், வெற்றியும் கொண்ட வேந்தன்.
விறல் என்னும் *தமிழ்ச்*சொல் வேர் விறு-/வீறு-.
வீறாப்பு, வீற்றிருத்தல் என்பதில் எல்லாம்
கம்பீரம் (Majesty) என்ற பொருள் தெளிவாக
உள்ளது. விறல் என்றால் வெற்றி, வலிமை,
ஆற்றல், கம்பீரம் என்று பொருள் சொல்லல்
பொருத்தமாய் உரையாசிரியர்கள் கையாளுகின்றனர்.
நிகண்டின் வாக்கியப்படி விறல் என்னும் சொற்பொருள்
ஆணை என்று காணோம்.
நா. கணேசன்
- மதுரைக் காஞ்சி.
’தொல் ஆணை நல் ஆசிரியர்’ என்றாலும்
‘வெல் விறல் நல் வேந்தன்’ என்றாலும்
பொருந்துகிறது.
விறல் = ஆணை என்று கொண்டு
இடம் மாற்றினால் சிறப்பாக இல்லை.
On Mar 29, 1:26 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/3/29 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > பல் சாலை முது குடுமியின்,
> > நல் வேள்வித் துறை போகிய 760
> > தொல் ஆணை நல் ஆசிரியர்
> > புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்,
> > நிலம் தரு திருவின் நெடியோன் போல,
>
> > - மதுரைக் காஞ்சி.
>
> > ’தொல் ஆணை நல் ஆசிரியர்’ என்றாலும்
> > ‘வெல் விறல் நல் வேந்தன்’ என்றாலும்
> > பொருந்துகிறது.
>
> > விறல் = ஆணை என்று கொண்டு
> > இடம் மாற்றினால் சிறப்பாக இல்லை.
>
> ஆம் இந்தக் கஷ்டம் நானும் நினைத்தேன்.
>
> ஆனால் அனைத்து இடங்களிலும் விறல் என்பது வெற்றி, பெருமை என்பது
> பொருந்திவருவதாய்க் கருதமுடியவில்லை.
>
> ராஜம் அக்காவும் கருத்து சொல்லட்டும்.
>
ஆம்.
> இல்லையேல் விறல் சம்பந்தமாக ஒரு கட்டுரை எழுதினால் பிறகு அலசி ஆராய சௌகரியமாய்
> இருக்கும்.
>
ஆம்.
> பார்ப்போம். திவாகர நிகண்டு விறல் செயல் என்பதற்கு ஆணை என்ற பொருளைத் தருவதாய்
> முர்ரே ராஜம் சாந்திசாதனா போட்ட வரலாற்று முறைத் தமிழிலக்கிய அகராதி
> கருதுகிறது.
>
> .
இது பிழை என்று நினைக்கிறேன்.
ஆணை என்ற பொருள் விறலுக்கு இருந்தால்
வேரிலோ, பிற இலக்கண இலக்கியங்களிலோ
மற்ற இடங்களில் தெளிவாய்க் காட்டி இருக்கும்.
தொல் விறல் நல் ஆசான் என்பது அபத்தமாக
எனக்குப் படுகிறது.
நா. கணேசன்
>
>
>
>
>
> > On Mar 29, 12:51 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> > > அன்பின் தேவ், ரங்கன், ஹரிகி,
>
> > > விறல். இச்சொல் தமிழ்ச் சொல்,
> > > எனவே சம்ஸ்க்ருத வார்த்தைகளுக்கும்
> > > விறல் என்னும் தமிழ்ச்சொல்லுக்கும்
> > > என்ன தொடர்பு என்று விளங்கமாட்டேன் என்கிறது.
> > > விறலும் வென்றியும் உடைய வேந்தன்
> > > = வல்லமையும், வெற்றியும் கொண்ட வேந்தன்.
>
> > > விறல் என்னும் *தமிழ்ச்*சொல் வேர் விறு-/வீறு-.
> > > வீறாப்பு, வீற்றிருத்தல் என்பதில் எல்லாம்
> > > கம்பீரம் (Majesty) என்ற பொருள் தெளிவாக
> > > உள்ளது. விறல் என்றால் வெற்றி, வலிமை,
> > > ஆற்றல், கம்பீரம் என்று பொருள் சொல்லல்
> > > பொருத்தமாய் உரையாசிரியர்கள் கையாளுகின்றனர்.
>
> > > நிகண்டின் வாக்கியப்படி விறல் என்னும் சொற்பொருள்
> > > ஆணை என்று காணோம்.
>
> > > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
கணேசர் ஐயா,
தமிழ் என்பதில் தாங்கள் குறியிட்டுக் காட்டுவதற்கான தேவை
என்ன புரியவில்லை; அது அருந்தமிழ்ச் சொல்லே.
” ஸத்யம், ஸத்யம், புந: ஸத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே”
வேரைப் பிடித்து ஆராயும் வழக்கம் நம்மில் எப்போதிலிருந்து ?
பகுதி, விகுதியாகப் பகுக்கும் முறைதான் உண்டு.
பகுபத, பகாபதத் தொகுப்புகள் இருந்தனவா தெரியவில்லை.
விறல் - ஆணை, மேலாண்மை என்னும் பொருள் தரும் என *மேலோர்
ஒப்புக்கொண்டிருந்தால்* அதன்படிப் பொருள் கொள்வதில் என்ன தடை ?
நிகண்டுத் தொகுப்பு நெடிய ஆய்வின் விளைவு.
மறை ஆண்டையைப்போல் ஆணையிடும் தன்மையது - யஜமாந ஸம்ஹிதை,
நல்ல இலக்கியம் மனையாள் இன்மொழி பகர்வதுபோல்
நயமாக அறம் புகட்டும் தன்மை கொண்டது - காந்தா ஸம்ஹிதை .
பருத்தோற்றமற்ற - சப்தமே ஸ்வரூபமாகக் கொண்ட மறைக்கு
வெற்றி, வலிமை, ஆற்றல், கம்பீரம் போன்ற பண்புகள் ஒருபுறம் இருக்க
அரங்கனார் சுட்டும் பொருளே நன்கு பொருத்தமாக அமைந்துள்ளது.
நிகண்டு குறிப்பிடும் பக்ஷத்தில் அதுவே மரபை ஓட்டிய அழகிய பொருத்தமான
பொருள்
தேவ்
On Mar 29, 1:43 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >> விறல் -என்னும் *தமிழ்ச்*சொல் வேர் விறு-/வீறு <<
> > நிகண்டு குறிப்பிடும் பக்ஷத்தில் அதுவே மரபை ஓட்டிய
> > அழகிய பொருத்தமான பொருள்
>
நிகண்டில் இல்லை.
> தேவ்
>
On Mar 29, 10:58 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
>> இல்லை. அதெல்லாம் தமிழில் எதுவும் இந்த மாதிரி விஷயமே கிடையாது. எல்லாம் இந்த
> உலக வாழ்க்கையே போதும்னு இருந்தாங்க; குடி மீனு இராலு ஊன்பொதி சோறு.....ம்ம்
> ம்ம் அதுதான் சங்க காலத்து சொர்க்கம்.....இல்லன்னா எதுனாச்சும் விளக்குமாத்து
> மடல்னு தூக்கிகிட்டு வந்து பாரு பாரு தமில்ஸ் எல்லாம் உலகாயதம
> இருந்திருக்காங்க. சார்வாகம்தான் தமில் தத்துவம்னு தாண்டவம் ஆடவேண்டியது.
> இப்படித்தான் பொழுது போவுது. சரி அதை விடுவோம்.
>
எல்லோரும் லோகாயதம் என்று யார் சொன்னார்கள்? லோகாயதம் ஒரு பிரிவினர்க்கு
தத்துவமாக இருந்திருக்கிறது.
இந்தியாவில் இருந்த லோகாயத நூல்கள் பல அழிக்கப்பட்டுவிட்டன.
தமிழில் ஒன்றும், வடமொழியில் ஒன்றும் அழிவிலிருந்து தப்பியுள்ளன.
-------------
’விறல்புகழ்’ என்பதற்கு சங்க இலக்கியங்களில் வரும் விறல்மலை,
விறல்வெற்பு (விறல்வெற்பன்) என்பவற்றோடு ஒப்பிடலாம்.
வல்லமை பொருந்திய, பெரிய, அடர்ந்த புகழ், வெற்பு, மலை, ...
நா. கணேசன்
> [இந்த இடமெல்லாம் ராஜம் அக்கா பார்த்தால் பரவாயில்லை. இல்லையெனில் இந்த ‘விறல்’
> ஐச் சுற்றிப் பெரிய கட்டுரை தந்துவிடுவேன் என்று மிரட்டுகிறேன். :-)) ]
On Mar 29, 1:43 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >> விறல் -என்னும் *தமிழ்ச்*சொல் வேர் விறு-/வீறு <<
>
>> பருத்தோற்றமற்ற - சப்தமே ஸ்வரூபமாகக் கொண்ட மறைக்கு
> வெற்றி, வலிமை, ஆற்றல், கம்பீரம் போன்ற பண்புகள் ஒருபுறம் இருக்க
> அரங்கனார் சுட்டும் பொருளே நன்கு பொருத்தமாக அமைந்துள்ளது.
> நிகண்டு குறிப்பிடும் பக்ஷத்தில் அதுவே மரபை ஓட்டிய அழகிய பொருத்தமான
> பொருள்
>
நிகண்டு குறிப்பிடும் பொருள் விறலுக்கு ஆணை அன்று.
”பெருங்கதையில் ஓரிடம் --- 1 உஞ்சைக் காண்டத்தில் 151,152 வரிகள்.
“வென்றியும் விறலும் விழுத்தகு விஞ்சையும்
ஒன்றிய நண்பும் ஊக்கமும் உயர்ச்சியும்
ஒழுக்க நுனித்த உயர்வும் இழுக்கா
அமைச்சின் அமைதியும் அளியும் அறனும்”
என்று வருமிடத்தில் வென்றியும், விறலும் வேறு வேறு என்று தெளிவாய்க்
காட்டித்
தனியாய்ப் படித்திருக்கிறார்கள். ஆனாலும் பொருள் சொல்லும் போது
வென்றியும்
விறலும் ஒன்றுதான். ”
அவ்வாறில்லை.
கொங்குவேள் செய்த சமணக் காப்பியத்தில்
வென்றியும் விறலும் - வெற்றியும், வலிமையும் எனப் பொருள்.
கணேசன்
> தேவ்
>
> On Mar 29, 12:51 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > அன்பின் தேவ், ரங்கன், ஹரிகி,
>
> > விறல். இச்சொல் தமிழ்ச் சொல்,
> > எனவே சம்ஸ்க்ருத வார்த்தைகளுக்கும்
> > விறல் என்னும் தமிழ்ச்சொல்லுக்கும்
> > என்ன தொடர்பு என்று விளங்கமாட்டேன் என்கிறது.
> > விறலும் வென்றியும் உடைய வேந்தன்
> > = வல்லமையும், வெற்றியும் கொண்ட வேந்தன்.
>
> > விறல் என்னும் *தமிழ்ச்*சொல் வேர் விறு-/வீறு-.
> > வீறாப்பு, வீற்றிருத்தல் என்பதில் எல்லாம்
> > கம்பீரம் (Majesty) என்ற பொருள் தெளிவாக
> > உள்ளது. விறல் என்றால் வெற்றி, வலிமை,
> > ஆற்றல், கம்பீரம் என்று பொருள் சொல்லல்
> > பொருத்தமாய் உரையாசிரியர்கள் கையாளுகின்றனர்.
>
> > நிகண்டின் வாக்கியப்படி விறல் என்னும் சொற்பொருள்
> > ஆணை என்று காணோம்.
>
> > நா. கணேசன்- Hide quoted text -
விறற்புகழ் என்று தமிழில் வரும் இடங்களைப் பாருங்கள்.
விறற்புகழ் என்றால் என்ன? என்று உரையாசிரியர்
(கழகம்) பார்க்கலாம். விறல் = ஆணை என்பதை விட
இப்பொருள் பொருத்தமாய் உள்ளது. வேறு இடங்களிலும்
விறல் = ஆணை நான் பார்த்த அளவில் காணோம்.
நீங்கள் அப்படி இருக்கும் இடங்கள் இருந்தால் தரவும்.
விறற்புகழைப் பொருத்தவரை உரையாசிரியர்
விளக்கத்தை ஏற்கிறேன்.
பரிபாடல் - உரையுடன், கழகம்,
விறற்புகழ் என்றது, இவ் வறவொழுக்கத்தும், வேதப் பயிற்சியினும்,
தவவொழுக்கத்தினும் இவரை ஒப்பார் பிறரிலர் என உலகம் புகழும்படி
விளங்கிநிற்றல். இவ்வெற்றிகளைத் தமிழ்நூலோர் வாகை என்பர். ஈண்டுக்
கூறப்பட்ட புகழ் பார்ப்பன வாகை எனப்படும்.
நா. கணேசன்
---------------------
18 - 21: ஒருசார். . . . . . .பதி
(இ-ள்.) ஒருசார் - பெருமானே! நினது திருப்பதியின் மற்றொரு
பக்கத்தே, அறத்தொடு வேதம் புணர்தவம் முற்றி - தத்தமக்குரிய அறநெறிக்கட்
பிறழாது நின்று வேதங்களைக் கடைபோக நன்கு பயின்று இவற்றாலே பொருந்துவதாகிய
தவவொழுக்கத்திலே முதிர்ந்தமையாலே எய்தாநின்ற, விறல் புகழ நிற்ப விளங்கிய
- வெற்றிப் புகழ் யாண்டும் பரந்து நிலைத்து நிற்பத் திகழாநின்ற,
கேள்வித்திறத்தில் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - வேதங்கூறிய ஒழுக்கத்தே
ஒரு சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிக்கு வாழ்தலானே, அறத்தில் திரியா
பதி - ஏனையோரும் தத்தமக்குரிய அறவொழுக்கத்தே பிறழா தொழுகுதற் கிடமான
நகரம் உளது;
(வி-ம்.) அறத்தொடு வேதம் தவம் முற்றிய அந்தணர், விறற்புகழ்
விளங்கிய அந்தணர், கேள்வித்திறத்தில் திரிவில்லா அந்தணர்,
கேள்வித்திறத்தில் திரிவில்லா அந்தணர் எனத் தனித்தனி கூட்டுக.
ஈண்டி என்னும் செய்தெனெச்சத்தை ஈண்ட எனச் செயவெனெச்சமாக்கி
ஏதுவாக்குக.
அந்தணர் ஈண்டுதலானே ஏனையோரும் அறத்திற் றிரியாது
ஒழுகுதற்கு இடமான பதி என்க. பதி - நகரம்.
அறத்தொடு என்புழி அறம். அந்தணர்க்கு நூலோர் வகுத்த
அறுவகைப்பட்ட ஒழுக்கம் என்க. அவையாவன: ஓதல், ஓதுவித்தல்,
வேட்டல், வேட்பித்தல், ஈதல் என்பனவாம். இதனை,
"ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந் தொழுகும்
அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி" (24)
எனவரும் பதிற்றுப்பத்தானும் உணர்க.
வேதம் முற்றி என்றது வேதங்களைப் பொருளுணர்ச்சியோடே
கசடறக் கற்று நிரம்பி என்றவாறு. தவம் முற்றி என்றது கற்றதனால் உணர்வு
பெருகிப் பொறிபுலனடங்க நின்று என்க.
விறற்புகழ் என்றது, இவ் வறவொழுக்கத்தும், வேதப் பயிற்சியினும்,
தவவொழுக்கத்தினும் இவரை ஒப்பார் பிறரிலர் என உலகம் புகழும்படி
விளங்கிநிற்றல். இவ்வெற்றிகளைத் தமிழ்நூலோர் வாகை என்பர். ஈண்டுக்
கூறப்பட்ட புகழ் பார்ப்பன வாகை எனப்படும்.
அஃதாவது,
ஓதங் கரை தவழ்நீர் வேலி யுலகினுள்
வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்--ஏதம்
சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி யகத்து" (புறப்பொருள் வெ - 163)
எனவரும்.
பார்ப்பனர் தம் அறத்திலே பிறழாது நிற்பவே, அவர் வழிப்பட்ட
ஏனை அரசர் வணிகர் வேளாண்மாந்தர் ஆகியோரும் தத்தம் அறத்திலே பிறழாது
நிற்றல் ஒருதலையாகலின், 'அந்தணர் ஈண்ட அறத்திற்றிரியாபதி' என்றார். ஈண்டு
அறம் என்றது,
"ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்" (தொல். புற. சூ. 19)
என வகுக்கப்பட்ட அரசரும், வணிகரும் வேளாளருமாகிய ஏனையோர்க்குரிய
ஒழுக்கங்களை என்க.
“விறற்புகழ்” பல நூல்களில் காணமுடிகிறது.
புறநானூறு 159-லிலும் உண்டு. அதற்கு
உவேசா ஒரு குறிப்புக் கொடுத்துள்ளார்.
”மறம்வீங்கு பல்புகழ்” (பதிற். 12:8) என்பதனுரையைப்
பார்க்க” என்கிறார் உவேசா.
விறற்புகழ் வேறு, விறற்செயல் வேறு
என்பதாகத் தோன்றுகிறது.
கணேசன்
> 15 மார்ச், 2011 9:58 am அன்று, Mohanarangan V Srirangam <
> ranganvm...@gmail.com> எழுதியது:
>
> > சான்ச்க்ரிடைஸேஷன் --- அனைததையும் சம்ஸ்க்ருத
> > மயமாகப் புரிதல் சங்க காலத்திற்கு ஒட்டுமா?
>
> > சம்ஸ்க்ருதம் வடக்கிலிருந்து இங்கு வந்த மொழி என்று
> > சங்க காலத்தில் கருதினார்களா?
>
> அப்படித்தான் தோணுது.
சிவபெருமானை இமயமலை அந்தணன் என்கிறது சங்கம்.
தென்மொழி, வடமொழி என்ற பகுப்பு அவர்களுக்கு
தெரிந்திருக்கிறது.
தொல்காப்பியம் செய்வதற்கான காரணத்தை விளக்கும்போது
தென்மொழி வடமொழி வேறுபாடுகளைக் கூறி
இலக்கணம் செய்துள்ளார்.
”தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் 20ஆம் சூத்திரம் வருமாறு:
எல்லா எழுத்தும்
வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி
உறழ்ச்சி வாரத்து
அகத்து எழுவளி இசை
அரில்தப நாடி
அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே;
அஃது இவண் நுவலாது எழுந்து
புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு
நுவன்றிசினே
'(உயிர், மெய், உயிர்மெய் முதலிய) எல்லா எழுத்துக்களும் (பிறக்கும்
முறையை முன்னைய நூலாசிரியர்கள்) விளக்கியிருப்பதனால் மேற்கூறிய (தலை,
மிடறு, நெஞ்சு, பல், இதழ் நாக்கு, மூக்கு, அண்ணம் என்னும்) எட்டு
இடங்களிலும் உந்தியில் இருந்து எழுகின்ற உதானன் என்னும் காற்றினால்
பிறக்கின்றன. (பரை, பைசந்தி, மத்திமை என்னும்) ஓசைகளின் பிறப்புடன்
எழுத்துகளின் பிறப்பைச் சொல்லுமிடத்து (மேற்கூறிய எட்டு உறுப்புகளும்
உதானன் என்னும் காற்றும்) வெவ்வேறாக மாறுபட்டு அமையும் தன்மையால்,
மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையைக் குற்றமற ஆராய்ந்து, எடுத்தல்,
படுத்தல், நலிதல், விலங்கல் என்னும் தன்மை உடையனவாகக் கொள்ளும் முறைமை,
பார்ப்பனர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட முறைமை உடையதே ஆகும்.
அவ்வியல்பினை இங்கு கூறாமல், நெஞ்சத் தானத்தில் இருந்து எழுந்து வெளியே
நம் காதுகளில் கேட்கும்படி ஒலித்துப் பொருளை உணர்த்துகின்ற வைகரி
ஓசையினது (எழுத்தினது) தன்மை அல்லது மாத்திரையினை மட்டுமே கூறுகின்றன.'
தமிழ்ப் பேரறிஞர் ந.ரா. முருகவேள் இவ்வாறு பதப்பொருள் கூறியுள்ளார்.
இந்தச் சூத்திரத்திற்கு வேதங்களின் தொன்மையையும், அவற்றால் விளக்கப்பட்ட
ஓசைகளின் நுட்பங்களையும் தொல்காப்பியர் நன்கு அறிந்திருந்தார்.“
http://www.tamilauthors.com/01/144.html
நா. கணேசன்
2011/3/29 N. Ganesan <naa.g...@gmail.com>
பல் சாலை முது குடுமியின்,
நல் வேள்வித் துறை போகிய 760
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்,
நிலம் தரு திருவின் நெடியோன் போல,
- மதுரைக் காஞ்சி.
’தொல் ஆணை நல் ஆசிரியர்’ என்றாலும்
‘வெல் விறல் நல் வேந்தன்’ என்றாலும்
பொருந்துகிறது.
விறல் = ஆணை என்று கொண்டு
இடம் மாற்றினால் சிறப்பாக இல்லை.
ஆம் இந்தக் கஷ்டம் நானும் நினைத்தேன்.
ஆனால் அனைத்து இடங்களிலும் விறல் என்பது வெற்றி, பெருமை என்பது பொருந்திவருவதாய்க் கருதமுடியவில்லை.
கலை = பாஷை, மொழி. கலி = ஆணை என்ற சொல் பிறப்பைச்
சற்று ஆராய்வோம். இலக்கியச் சான்றுகள்
முன்னர் அளித்தேன். கலி = ஒலித்தல்,
இதனில் இருந்து அரசனின் கட்டளை ஆணைக்கு
ஒரு சொல்லாகி இருக்கிறது.
லெக்சிகன் தரும் கலி-
கலி¹-த்தல் kali
-, 11 v. intr. 1. prob. கல் onom. To sound, clamour, roar; ஒலித்தல்.
கட வுட் பராவி நமர்கலிப்ப (திருக்கோ. 279). 2. To sound, as yāḻ;
யாழொலித்தல். (திவா.) 3. To grow luxuriantly; செழித்தல். ஆர்பெயற்
கலித்த . . . நெல்லின் (நெடுநல். 21). 4. To sprout, come into being;
உண்டாதல். களியிடைக் கலித்த தென்ப (ஞானா. 11). 5. To appear, become
manifest; எழுதல். (யாப். வி. 55, 207.) 6. To increase; பெருகு தல்.
செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப (பொருந. 134). 7. cf. களி-. To rejoice;
மகிழ்தல். கலித்த வியவர் (மதுரைக். 304). 8. To swell, to be proud, to
grow arrogant; செருக்குதல். கராஅங் கலித்த . . . அகழி (புறநா. 37, 7).
9. To be swift, quick; வேக மாதல். (யாப். வி. 55, 207.) 10. To be
dense, crowded; நெருங்கியிருத்தல். (யாப். வி. 55, 207.)--tr. cf. kal.
To cause to go, move; செலுத்துதல். (சி. போ. பா. 151.)
கலி² kali
, n. < கலி¹-. 1. Sound; ஒலி.(தொல். சொல். 349.) 2. Sea; கடல். (பிங்.)
3. Strength, force; வலி. (பிங்.) 4. Haughtiness, conceit, self-esteem;
செருக்கு. இக்கலிகேழூரே (கலித். 52). 5. Flourishing, thriving,
prospering; தழைக்கை. கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை (புறநா. 66, 6) 6.
Perturbation; discomposure; uneasiness; துளக்கம். கலியி னெஞ்சினேம்
(பரிபா. 2, 74). 7. Spiritedness, sprightliness, animation; மன
வெழுச்சி. கலிமாப் பலவுடன் பூட்டி (பு. வெ. 12, வென் றிப். 14). 8. See
கலிப்பா. (தொல். பொ. 53.) 9. A poem of the Middle Sangam period, not
extant; இடைச்சங்ககாலத்து இயற்றப்பட்ட ஒருநூல். (இறை. 1, உரை.) 10. See
கலித்தொகை. கலியே யகம்புற மென்று (புறநா. முகவுரை). 11. War, dissension,
strife; போர். (W.)
கலி (< கலி- ‘ஒலித்தல்’) = ஆணை போல, இன்னொரு சொல்
கலை = பாஷை. கலை = மொழி (கலித்தல் - ஒலித்தல்
என்பதை மொழிதல், பேசுதல் என்று எடுத்திருப்பதால்.)
கலை = மொழி, பாஷை.
வடகலை = சம்ஸ்கிருதம், தென்கலை = தமிழ்.
வடகலையுந் திகழ்ந்த நாவர் (திவ். பெரியதி, 7, 7, 7).
தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன
- பெரியபுராணம்.
தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை
தேர்ந்தான் - கம்பர்
தென்கலை = தமிழ் (கம்ப ராமாயணம்).
வடமொழி. வடகலை தென்கலை வடுகு கன்னடம் (கம்பரா. பாயி.).
தென்கலையே முதலுள்ள பல்கலை (கந்தபு. நகரப். 49).
(லெக்சிகன் இதைக் காட்டி, கலை = Language என்கிறது.)
கொங்குநாட்டு சமணமுனி தந்த நன்னூல் பாயிரத்தில்
ஆதரித்த சீயகங்கன் புகழ்ப்படுகிறான்.
’அருங்கலை வினோத னமரா பரணன்’ (நன். சிறப்புப்.).
அருங்கலை வினோதன் - பல பாஷைகள் பற்றிய அரிய ஆராய்ச்சிகளில்
விருப்பமுடையவன். அவனது கல்வெட்டு காளத்தியில் உண்டு. ஆக, கொங்கு, அருவா
நாடு, தழைக்காடு ... எல்லாம் வாழ்ந்து செம்மொழிகள் பல தெரிந்தவனாய்,
ஆர்வமுடையோனாய் வாழ்ந்திருப்பான்.
கலை = பாஷை என்பது வடகலை - தென்கலை பிரிவு
ஆகி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு உள்ளேயா, இந்தியா முழுமைக்குமா?
”வட - தென் ஜியாகிரபி” தியாலஜி டெவெலப்மெண்ட்டில்
என்று தெரியவில்லை. வேதாந்த தேசிகரை
‘வடமார்க்கத்துக்கு எல்லாம் சிரேஷ்டர்’ என்கிறது
பெரிய திருமொழி அடைவு என்னும் நூல்.
நா. கணேசன்
Scholars of Srivaisnavism have generally traced
the origin of the Tenkalai/Vatakalai schism to a
breakup of the Ubhaya Vedanta synthesis when the
northern school began giving relatively more
importance to Sanskrit sources -- the Sribhashya
and/or dharma-sastra -- while the southern school
stressed the Tamil scriptures -- the Nalayira Divya
Prabandham. However, certain anomalies suggest
that the doctrinal differences between the two
schools cannot be satisfactorily explained by
their differing emphases on Sanskrit vs. Tamil,
Sribhashya vs. Nalayira Divya Prabandham, or
dharma-sastra vs. Nalayira Divya Prabandham. The
Nalayira Divya Prabandham does not obviously
support the Tenkalai position against that of the
Vatakalai on most issues -- at least not without
a great deal of selective interpretation. The
Srirangam acaryas themselves admit that there are
many passages in the Alvars' hymns which seem at
variance with their views. The Srirangam acaryas
seem to make more use of the Sanskrit epics and
puranas than do the Kanci acaryas. Pancaratra
scriptures are quoted frequently by both schools;
they figure more prominently in the disputed
issues than dharma-sastra per se and at least
as prominently as the Sribhashya.
[Patricia Y. Mumme, p. 7, The Srivaisnava Theological Dispute]
விறல் = ஆணை இல்லை. ஆனால், கலி = ஆணை
என்று பாடல்களில் தெளிவாக தெரிவதால் குறிப்பிட்டேன்.
கலி = ஆணை, கட்டளை என்று லெக்சிகனில் சேர்த்த
வேண்டிய அவசியம் இருக்கிறது. தெளிவாகக் குறிப்பிட
விட்டுவிட்டேனா? தேவார உரை, தருமபுர ஆதீனப்
பதிப்பு பாருங்கள். இப்பொருளால் பல பழைய பாடல்களுக்குத்
தெளிவு கிடைக்கும்.
கலி = கட்டளை, ஆணை, ஆக்ஞை, royal command/order
என்றால் மிகப் பொருந்துகிறது. கண்டராதித்த சோழ மன்னரின்
(கி.பி. 947-957) ஆட்சிக் காலத்தில் தோன்றிய கல்வெட்டில், `கலி விசயன்’
தருணேந்து சேகரன்` என்ற தொடர்கள் காணப்படுகின்றன.
கலி விசயன் = ஆணை வேந்தன். இரு பழைய உதாரணங்கள்
தருகிறேன்.
(1)
பெரிய புராணத்தில் ஒரு பாடல் பார்ப்போம்
தந்தமர்கள் ஆயினார்
தமக்கெல்லாந் தனித்தனியே
எந்தையார்க் கமுதுபடிக்கு
ஏற்றியநெல் இவையழிக்கச்
சிந்தையால் தாம்நினைவார்
திருவிரையாக் கலியென்று
வந்தனையால் உரைத்தகன்றார்
மன்னவன்மாற் றார்முனைமேல்
திருவிரையாக் கலி - சிவபெருமானின் ஆணை.
திருவிரையாக்கலி - நெற்கட்டை அழிக்க உள்ளத்தால் நினைவாரேனும், அவர்
சிவபெருமானின் ஆணையைப் பிழைத்தவ ராவீர் என்பது கருத்து.
(2) பெற்ற முயர்த்தோன் விரையாக்
கலிபிழைத் தோர்தமது
சுற்ற மறுக்குந் தொழில்திரு
நாட்டியத் தான்குடிக்கோன்
குற்ற மறுக்கும்நங் கோட்புலி
நாவற் குரிசிலருள்
பெற்ற வருட்கட் லென்றுல
கேத்தும் பெருந்தகையே. - நம்பியாண்டார் நம்பி
விரையாக் கலி - ஒருவராலும் கடக்கலாகாத ஆணை.
இது சிவபெருமான் மேல் இடப்படும் ஆணைக்கே பெயராய் வழங்கும்.
``தனது`` என்பதில் `தன்` சாரியை.
`தமது` என்பது பாட மன்று.
`பிழைத்தோராகிய தனது சுற்றம்` என்க.
பிழைத்தோர் - கடந் தோர்.
சுற்றத்தாரை, ``சுற்றம்`` என்றது உபசார வழக்கு.
திருநாட்டியத் தான்குடி, ஊர்ப்பெயர்.
குற்றம் அறுக்கும் - ஏனையயோரது குற்றங் களையும் நீக்கவல்ல.
நாவல் - நாவலூர்.
குரிசில் - தலைவன்.
நாவலூர்த் தலைவன் சுந்தரமூர்த்தி நாயனார்.
அவரது அருளாவது, ``கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி``
எனப் புகழ்ந்தருளிய புகழ்த்தொடர்.
கலி = ஆணை என்று நல்ல லெக்சிகனில் ஏறவேண்டும்.
(நல்ல லெக்சிகன் என்பது காலனிய வக்கீல்கள் குழு + தமிழறிஞர்கள்
பாவாணர், அருளி, மதிவாணன், ... எல்லோரும் சேர்ந்து
தயாரிக்கும் லெக்சிகன் ஆகும். இன்னும் பல தமிழ்ச்
சொற்களும் பொருளும் லெக்சிகனில் இல்லை.
ஆனால், ஐரோப்பா பல்கலைகள் (உ-ம்: பர்ரோ- எமனோ அகராதி)
அதுவே ஆதாரம். )
லெக்சிகன் தருவதைப் பார்ப்போம்.
கன்றல் - Luxuriance; எழுச்சியின் மிகுதி. (திவா.)
திருமங்கை ஆழ்வார் தன்னை மிகப்பெருமையாகப்
பல இடங்களில் கலிகன்றி என்றே சொல்கிறார்.
ஆணைமிகுந்தான் = கலிகன்றி என்று பொருள் சொல்லலாம்.
கன்று - ஆணைவேந்தர் குலக்கொழுந்து என்றும்
கொள்ளக் கூடும். கலி = ஆணை தமிழ்ப்பொருள்,
கலி யுகம் போன்ற வடசொல் பயிலும் ‘கலிகன்றி’ என்று
கோடலைவிடச் சிறப்பாய் உள்ளது. கலியன் = ஆணைவேந்தன்
கலிகன்றி - பெரியோர் எழுதியிருப்பதில் ஆணை
என்ற பொருளைச் சொல்லியுள்ளனரா?
கலிகன்றி என்று வைஷ்ணவத்தில் வரும் இடங்களைப்
பார்த்து கட்டுரை இருக்கிறதா? என்று அறியத்
தாருங்கள்.
சைவத்தில் சம்பந்தர் போல, கலிகன்றி ஆழ்வார்
பல ஆணைகளை நிறைவேற்றினவர். சம்பந்தர்
சமணருக்கு என்றால், கலிகன்றி பௌத்தருடன்
போர் புரிந்தவர் அல்லவா?
”கடமாரும் கருங்களிறு வல்லான் வெல்போர்க்
கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார்
தீவினையை முதலரிய வல்லார்தாமெ”
ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை,
காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர்
நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும்,
நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே
காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை,.
நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே
இதேபோல் ஆணை இட்டு சொல்லும்
கலிகெழு கவுணியன் தேவாரத்தில் பார்க்கலாம்.
நம்பிள்ளை மங்கை ஆழ்வார் அவதாரம்
என்கிறது வாழித் திருநாமம்:
கார்த்திகையில் கார்த்திகையுதித்த கலிகன்றி வாழியே
ஆணை நமதே என்று அறுதியிட்டுக் கூறும் இன்னொருவர்
ஞானசம்பந்தர். 8000 சமணர்களை கழுவில் ஏற்றி அருளிய
பெரியவர். முருகனின் சாக்ஷாத் அவதாரம் என்று ஏராளமான
தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்களால் புகழப்படுபவர்.
(உ-ம்: ஒட்டக்கூத்தர்)
சைவத் திருமுறை:
வழிகெழு குண்டர்க்கு வைகைக்
கரையன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர்
தீபன், கடலுடுத்த
ஒலிதரு நீர்வை யகத்தை
யுறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்,மட
மாதினை வாட்டுவதே.
கலிகெழு சம்பந்தன் - ஆணை மிகுத்த சம்பந்தன்
நா. கணேசன்
*மெய்ப்பாடு*
உள்ளத்திலெழும் தொண்சுவை (நவரசங்களும்) குறிப்பு விறல் (சத்துவம்)
மெய்ப்பாடு செய்கை முதலியனவாகப் பேச்சோடு வெளிப்படுவதும் அவிநயம் என்னும்
நடிப்பாதலானும், ஒருவகை யுணர்ச்சியுமின்றி ஒருவர் பேச்சுமிராதாகலானும்,
பேச்சு இசையொடு மட்டுமன்றி நடிப்பொடுங் கூடியதென்பது தெள்ளத் தெளிவாம்.
இதில் தேர்ந்தவர் விறலியர்.
காண்பாருக்கு மெய்ப்பாடு தோன்றுமாறு ஆடுதலின் கூத்தி் விறலி எனப்பட்டாள்.
விறல்-மெய்ப்பாடு.
விறல் (சத்துவபாவம்)
http://www.noolaham.net/project/04/325/325.htm
விறல் மெய்ப்பாடு எனும் பொருளைத் தருவதில் யாருக்கும் விப்ரதிபத்தி இல்லை
எனத் தெரிகிறது; ஆணை எனும் பொருள் இல்லை உண்டா என்பதில் ஐயப்பாடு
தேவ்
On Apr 1, 10:34 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>விறல் --ஆணை -- “ஏவல் மெய்ப்பாடு* இலாஞ்சனை சூளே ஆவயின் விறல் செயல் ஆணைக் கிளவி” (திவாகர நிகண்டு: 11: 242) <<
>
> *மெய்ப்பாடு*
>
> உள்ளத்திலெழும் தொண்சுவை (நவரசங்களும்) குறிப்பு விறல் (சத்துவம்)
> மெய்ப்பாடு செய்கை முதலியனவாகப் பேச்சோடு வெளிப்படுவதும் அவிநயம் என்னும்
> நடிப்பாதலானும், ஒருவகை யுணர்ச்சியுமின்றி ஒருவர் பேச்சுமிராதாகலானும்,
> பேச்சு இசையொடு மட்டுமன்றி நடிப்பொடுங் கூடியதென்பது தெள்ளத் தெளிவாம்.
> இதில் தேர்ந்தவர் விறலியர்.
>
> காண்பாருக்கு மெய்ப்பாடு தோன்றுமாறு ஆடுதலின் கூத்தி் விறலி எனப்பட்டாள்.
> விறல்-மெய்ப்பாடு.
>
> விறல் (சத்துவபாவம்)http://www.noolaham.net/project/04/325/325.htm
>
> விறல் மெய்ப்பாடு எனும் பொருளைத் தருவதில் யாருக்கும் விப்ரதிபத்தி இல்லை
> எனத் தெரிகிறது; ஆணை எனும் பொருள் இல்லை உண்டா என்பதில் ஐயப்பாடு
>
> தேவ்
viRal in viRali is strength/power. what's the "Power" of viRali?
have written on this - the "power" to control dangrous forces, evil
eyee etc.,
Saskia Kersenboom-Story (Zvelebil's old student, has a nice book
on Tolkappiyam) has written an important paper: viRali as precursor to
Devadasi.
Dr. Saskia K. studied KuuttiyaaL/devaraDiyaar culture, her book
- Nityasumangali - is a great one. Ins Sangam literature, paaNans &
viRalis
getting "oil" from patrons, casting off "evil eye", what is meant by
"saanthik kuuthu"? why viRal is called "satvam" (pacifying dangerous
forces)
- lot more can be done with Saskia, Hart books and study of Sangam
literature.
The genesis of caste, Dravidian contributions to it. Saiva agamas
prescribing devadasi quarters next to brahmins homes near the temples.
Pallavas and their followers developing devaradiyaaLs culture with
royal grants in river delta districts.
viRal in viRali - can be seen in the Kumbhaarathi taken in front
of zamindar chiefs, deities in garbhagRhas, ...by Devadasis until
recently.
(now role taken over by cine actresses :) B. M. Sundaram has a nice
book on early Tamil cinema actresses from Devadasi background.
Scores of them indeed!
N. Ganesan
On Apr 1, 11:35 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> >>>viRal in viRali is strength/power. what's the "Power" of viRali?
>
> have written on this - the "power" to control dangrous forces, evil
> eyee etc.,<<<<
>
> >>>>Saskia Kersenboom-Story (Zvelebil's old student, has a nice book
>
> on Tolkappiyam) has written an important paper: viRali as precursor to
> Devadasi.<<<<<
>
> உளறல் என்பதற்கு ஓர் அளவில்லையா?
>
> கஷ்ட காலம் :-(((
>
> இந்த மாதிரியான ஆட்கள் எழுதும் இடத்தில்
> நாமும் எழுதுகிறோமே!
> என்ன தலைவிதியோ :-((
>
> யாரைச் சொல்லியும் குற்றமில்லை
> நம்மைத்தான் நாம் நோகவேண்டும்.
> :-((
>
முனைவர் ஐயா,
உங்கள் ஆராய்ச்சிகளை நீங்கள் நடத்துங்கள்.
உங்களின் இப்படியான மடல்களை படிக்கும்
பேறு வாய்த்தது எங்கள் பாக்கியம் அன்றோ?
நான் குறிப்பிடுவது தமிழ்ப் புலவர்களின் ஆராய்ச்சிகளை.
விட்சல் போன்றவர்களை உங்கள் ‘இன்வேடிங் தெ
ஸேக்ரட்’ டீம் செய்யும் ஆராய்ச்சிகளையும்,
அவர்களின் பல்கலைக்கழக் வெளியீடுகளின்
தரங்களையும் ஒப்பிட்டால் ஒருவாறு புரிந்துகொள்ளலாம்.
நா. கணேசன்
*மெய்ப்பாடு*
////// உள்ளத்திலெழும் தொண்சுவை (நவரசங்களும்) குறிப்பு விறல்
(சத்துவம்) மெய்ப்பாடு செய்கை முதலியனவாகப் பேச்சோடு வெளிப்படுவதும்
அவிநயம் என்னும் நடிப்பாதலானும், ஒருவகை யுணர்ச்சியுமின்றி ஒருவர்
பேச்சுமிராதாகலானும்,பேச்சு இசையொடு மட்டுமன்றி நடிப்பொடுங் கூடியதென்பது
தெள்ளத் தெளிவாம். இதில் தேர்ந்தவர் விறலியர்.
காண்பாருக்கு மெய்ப்பாடு தோன்றுமாறு ஆடுதலின் கூத்தி் விறலி எனப்பட்டாள்.
விறல்-மெய்ப்பாடு.
விறல் (சத்துவபாவம்)
http://www.noolaham.net/project/04/325/325.htm /////////
இணையத்தில் பதிவாகியுள்ள இவை யார் செய்த ஆராய்ச்சிகள் ?
தேவ்
On Apr 2, 11:34 am, devoo <rde...@gmail.com> wrote:
> Apr 2, 8:31 am, "N. Ganesan"
>
> >> நான் குறிப்பிடுவது தமிழ்ப் புலவர்களின் ஆராய்ச்சிகளை. <<
>
> *மெய்ப்பாடு*
>
> ////// உள்ளத்திலெழும் தொண்சுவை (நவரசங்களும்) குறிப்பு விறல்
> (சத்துவம்) மெய்ப்பாடு செய்கை முதலியனவாகப் பேச்சோடு வெளிப்படுவதும்
> அவிநயம் என்னும் நடிப்பாதலானும், ஒருவகை யுணர்ச்சியுமின்றி ஒருவர்
> பேச்சுமிராதாகலானும்,பேச்சு இசையொடு மட்டுமன்றி நடிப்பொடுங் கூடியதென்பது
> தெள்ளத் தெளிவாம். இதில் தேர்ந்தவர் விறலியர்.
>
> காண்பாருக்கு மெய்ப்பாடு தோன்றுமாறு ஆடுதலின் கூத்தி் விறலி எனப்பட்டாள்.
> விறல்-மெய்ப்பாடு.
>
> விறல் (சத்துவபாவம்)http://www.noolaham.net/project/04/325/325.htm /////////
>
> இணையத்தில் பதிவாகியுள்ள இவை யார் செய்த ஆராய்ச்சிகள் ?
>
> தேவ்
>
நீங்களே சொல்லுங்கள் ஐயா.
இவ்வாறு வேத அறத்தின் ஆணை கடவாத வேத ஒழுக்கத்தின் புகழை நிலைநிறுத்தி, உணர்வின் சுருக்கம் நீங்கி விளங்கிய உணர்வைத் தரும் கேள்வியாகிய வேதாந்தத்தின் நேரிய தத்துவ விசாரத்தில் திரியாத அந்தணர்கள் ஈண்டித் தம் அறத்தில் மாறுபடாமல் வதிந்த தெருக்களை உடைத்தாய் இருந்த பதி மதுரை என்பதைக் கூறினார் புலவர்.(”வைதிக ஸித்தாந்தமே மிகச் சிறந்தது; வேதத்தில் புகழப்படும் திருமாலே பரம்பொருள்” என்று நிலைநாட்டி, அவ்வெற்றியின் புகழ் நிலைநிற்கும்படியாக இருந்தார்கள். பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததும் இவ்வூரிலன்றோ -- இவ்வாறு கூறுவர் ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், ) ?
ஆங்கு ஒரு சார் --உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை,மண்ணுவ, மணி பொன் மலைய, கடல,பண்ணிய, மாசு அறு பயம் தரு காருகப்புண்ணிய வணிகர் புனை மறுகு ஒரு சார்;விளைவதை வினை எவன் மென் புல வன் புலக்களமர் உழவர் கடி மறுகு பிறசார்;ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்இயல் கொள நண்ணியவை.வேத ஒழுக்கமும், வேதாந்த விசாரமும் நிறைந்த அந்தணாளர்கள் ஒரு சார் ஈண்டிய பதி என்றால், அதனோடு வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துச் சிறப்புகளும், அத்தியாவசியமான பொருட்களும் குற்றம் இல்லாமல் நிறைந்த பயனுடன் கிடைக்கும் கடைவீதிகளும், தொழில் செய்வோர் பலரின் சார்புகளும் திகழ்ந்ததைக் கூறுகிறார்.உண்பதற்கான சிறந்த பண்டங்களும், பூசும் நற்சாந்து போன்ற போகப் பொருடகளும், அழகு மிகப் பூணத்தக்க நகை முதலியவைகளும், தம் ஆளுமை மிக உடுக்கத்தக்க உடைவகைகளும், நீராடுங்கால் உடலில் தேய்த்துக்கொள்ளத்தக்க வாசனை திரவியங்களும், மலையில் உண்டான மணி பொன் முதலியவை, கடலில் உண்டான முத்து, பவழம் போன்றவை, கைத்திறமையால் பண்ணப்பட்டவை ஆகியவை எல்லாம் மாசு அறு நிறைந்த பயனோடு செறிந்த மறுகுகள் ஒரு சார்; புண்ணியச் செயல்கள் நிறைந்த ஆடை நெய்யும் தொழில் வல்லாரும், வணிகரும் நிறைந்த மறுகு ஒருசார்;மென்புலம் எனப்படுவன மருதமும் நெய்தலும். வன்புலம் எனப்படுவன குறிஞ்சியும் முல்லையும். இந்த மென்புலம் வன்புலம் இரண்டிலும் களத்தில் வேலை செய்யும் களமரும், அவர்களைக் கொண்டு பயிர் முதலியன விளைத்துப் பயனுண்டாக்கும் உழவரும் கூடி வாழும் மறுகுகள் ஒரு சார்.ஆங்கு அவ்வாறு அத்தகைய நல்லவை அனைத்தும் இயல்பு தவறாமல் மிகச் செறிந்து இன்பம் கூடும் பதியாகக் கூடல் மாநகர் இருக்கும் பொழுது அங்கு தீவினை எப்படி விளையும்? என்று கேட்கிறார் புலவர்.பொருட்களின் இயல்பு தவறச் செய்து பண்டம் விற்பாரும் இலர்; பண்ணிய தொழில்களின் இயல்பு தவற வாணிகம் செய்வாரும் இலர்; மென்புல வன்புலங்களில் உழைப்பவர்களும் இயல்புற உழைத்துக் களித்ததை முன்னரும் காட்டினார் திரு நயத்தக்க வயல் என்னும் கொச்சகத்தில். வேத ஒழுக்கத்திலும் வேத தர்மங்களின் ஆணை கடவாத புகழிலும், வேதாந்த நிர்ணயத்திலும் திரியாத அந்தணர்களும் இயல்பு தவறாமல் இருந்தார்கள். இவ்வாறு அனைத்துத் தரப்பினரும் இயல்பு தவறாமல் இன்பம் துய்க்கும் இடத்தில் தீவினை எவன் விளைவதை? என்பது புலவர் காட்டும் நிச்சயம்.***--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Apr 3, 9:38 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> >மண்ணுவ, மணி
>
> மண்ணப்படுவதால் மணி??
>
இருக்கலாம். ராஜ்ய பட்டாபிஷேகத்தின்போது
நவமணிகளையும் இடுவது.
"மண்ணி யறிப மணிநலம்" (நான்மணி. 5)
"மண்ணுறு மணியும்" (பெருங்.2-5: 123)
"மண்ணுறு மணியின்" (புறம். 147)
நா. கணேசன்
திரு வேந்தன் சார்,மண்ணுவ என்றால் குளிக்கும் போது பூசும் தைலம் வாசனைப் பொருட்கள் முதலியன.
”மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்; 41-32
மண்ணா மணி போலத் தோன்றும் - என் மேனியைத்
துன்னான் துறந்தான் மலை”
தலைவி:
நீல மணியை போல தோன்றும்; நீல மணியை போல தோன்றும்;
கழுவாத நீல மணியை போல தோன்றும்; என் மேனியை
தழுவாது துறந்தவனுடைய மலை.
உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை,
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல,
உண்ணுவ – eatables
பூசுவ – smearing items like sandal paste.
பூண்ப – those that are worn such as garlands and jewels.
உடுப்பவை – cloths
மண்ணுவ – cosmetic items and perfumes used for bathing
மலைய - things procured from hilly tracts
கடல - things procured from seas.
பகுப்பு மிகத் தெளிவாக உள்ளது;
மண்ணிய என்பதோடு மணியை இணைக்க இடமில்லை.
மணிக்கான ‘மண்’ -
மண்ணுதல் = கழுவுதல்;
மண்-மண்ணி-மணி = கழுவப்பெற்ற ஒளிக் கல்.
"மண்ணி யறிப மணிநலம்" (நான்மணி. 5)
தேவ்
On Apr 3, 9:38 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> >மண்ணுவ, மணி
>
> மண்ணப்படுவதால் மணி??
>
> 3 ஏப்ரல், 2011 9:32 am அன்று, Mohanarangan V Srirangam <
> ranganvm...@gmail.com> எழுதியது:
>
>
>
> > இவ்வாறு வேத அறத்தின் ஆணை கடவாத வேத ஒழுக்கத்தின் புகழை நிலைநிறுத்தி,
> > உணர்வின் சுருக்கம் நீங்கி விளங்கிய உணர்வைத் தரும் கேள்வியாகிய வேதாந்தத்தின்
> > நேரிய தத்துவ விசாரத்தில் திரியாத அந்தணர்கள் ஈண்டித் தம் அறத்தில் மாறுபடாமல்
> > வதிந்த தெருக்களை உடைத்தாய் இருந்த பதி மதுரை என்பதைக் கூறினார் புலவர்.
>
> > (”வைதிக ஸித்தாந்தமே மிகச் சிறந்தது; வேதத்தில் புகழப்படும் திருமாலே
> > பரம்பொருள்” என்று நிலைநாட்டி, அவ்வெற்றியின் புகழ் நிலைநிற்கும்படியாக
> > இருந்தார்கள். பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததும் இவ்வூரிலன்றோ --
> > இவ்வாறு கூறுவர் ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், ) ?
> > *ஆங்கு ஒரு சார் -- *
> > *
> > *
> > *உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை, *
> > *மண்ணுவ, மணி பொன் மலைய, கடல, *
> > *பண்ணிய, மாசு அறு பயம் தரு காருகப் *
> > *புண்ணிய வணிகர் புனை மறுகு ஒரு சார்; *
> > *விளைவதை வினை எவன் மென் புல வன் புலக் *
> > *களமர் உழவர் கடி மறுகு பிறசார்; *
> > *ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் *
> > *இயல் கொள நண்ணியவை.*
>>> மண்ணப்படுவதால் மணி?? <<<உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை,உண்ணுவ – eatables
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல,
பூசுவ – smearing items like sandal paste.
பூண்ப – those that are worn such as garlands and jewels.
உடுப்பவை – cloths
மண்ணுவ – cosmetic items and perfumes used for bathing
மலைய - things procured from hilly tracts
கடல - things procured from seas.
பகுப்பு மிகத் தெளிவாக உள்ளது;
மண்ணிய என்பதோடு மணியை இணைக்க இடமில்லை.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Apr 3, 12:53 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 3 ஏப்ரல், 2011 10:44 am அன்று, Mohanarangan V Srirangam <
> ranganvm...@gmail.com> எழுதியது:
>
> > திரு வேந்தன் சார்,
>
> > மண்ணுவ என்றால் குளிக்கும் போது பூசும் தைலம் வாசனைப் பொருட்கள் முதலியன.
>
> நீங்க சொல்லுவடு சரியே
>
> இந்த பாடலில் நீராடு பொருட்கள்தான்
>
> ஆனால் மண்ணுதல் என்றால் கழுவுதல்.
>
துணி துவைத்துக் கழுவுபவன் மண்ணான் (மலைநாடு).
On Apr 3, 1:23 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/4/3 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > On Apr 3, 12:53 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > 3 ஏப்ரல், 2011 10:44 am அன்று, Mohanarangan V Srirangam <
> > > ranganvm...@gmail.com> எழுதியது:
>
> > > > திரு வேந்தன் சார்,
>
> > > > மண்ணுவ என்றால் குளிக்கும் போது பூசும் தைலம் வாசனைப் பொருட்கள் முதலியன.
>
> > > நீங்க சொல்லுவடு சரியே
>
> > > இந்த பாடலில் நீராடு பொருட்கள்தான்
>
> > > ஆனால் மண்ணுதல் என்றால் கழுவுதல்.
>
> > துணி துவைத்துக் கழுவுபவன் மண்ணான் (மலைநாடு).
>
> குளித்தல் என்பதும் கழுவுதல் சேர்ந்ததுதானே
>
ஆம்.
>
>
> > > அதனால் மணி அந்த பேரை பெற்றிருக்கலாம்
>
> > > ”மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்; 41-32
> > > மண்ணா மணி போலத் தோன்றும் - என் மேனியைத்
> > > துன்னான் துறந்தான் மலை”
>
> > > தலைவி:
>
> > > நீல மணியை போல தோன்றும்; நீல மணியை போல தோன்றும்;
> > > கழுவாத நீல மணியை போல தோன்றும்; என் மேனியை
> > > தழுவாது துறந்தவனுடைய மலை.
> > > --
> > > வேந்தன் அரசு
>
> > > எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
> > > ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
2011/4/3 N. Ganesan <naa.g...@gmail.com>
> ranganvm...@gmail.com> எழுதியது:
On Apr 3, 12:53 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 3 ஏப்ரல், 2011 10:44 am அன்று, Mohanarangan V Srirangam <
>துணி துவைத்துக் கழுவுபவன் மண்ணான் (மலைநாடு).
> > திரு வேந்தன் சார்,
>
> > மண்ணுவ என்றால் குளிக்கும் போது பூசும் தைலம் வாசனைப் பொருட்கள் முதலியன.
>
> நீங்க சொல்லுவடு சரியே
>
> இந்த பாடலில் நீராடு பொருட்கள்தான்
>
> ஆனால் மண்ணுதல் என்றால் கழுவுதல்.
>
குளித்தல் என்பதும் கழுவுதல் சேர்ந்ததுதானே
வண்டு பொரேரென எழ,வண்டு பொரேரென எழும்;கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டி,கடிப்பு இகு காதில் கனங்குழை தொடர ---மிளிர் மின் வாய்ந்த விளங்கொளி நுதலார்ஊர் களிற்றன்ன செம்மலோரும்வாய் இருள் பனிச்சை வரிசிலைப் புருவத்துஒளி இழை ஒதுங்கிய ஒண்ணுதலோரும்புலத்தோடு அளவிய புகழணிந்தோரும்,நலத்தோடு அளவிய நாணணிந்தோரும்,விடையொடு இகலிய விறல் நடையோரும்,நடை மடம் மேவிய நாணணிந்தோரும்,கடல் நிரை திரையின் கரு நரையோரும்,சுடர்மதிக் கதிரின் தூ நரையோரும் --மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி,இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி,விளைந்தார் வினையின் விழுப்பயன் துய்க்கும்துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும் ---இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்வரை கெழு செல்வன் நகர்.இருந்தையூரில் இருந்த ஆதிசேஷன் சந்நிதியில் பலவகை மக்கள் திரண்டிருந்த காட்சியைப் படமாக்குகிறார் புலவர்.கடிப்பு என்பது மகளிர் காதுகளைப் பெருக்கிக்கொள்ள அணியும் ஆபரணம். கனங்குழை என்பது பெருக்கிய காதுகளில் மகளிர் அணியும் ஆபரணம்.கடிப்பு இகு காதில் கனங்குழை தொடர, வண்டு பொரேரென எழ -----காதைப் பெருக்கிக்கொள்ள மகளிர் காதில் தொங்கிய கடிப்பு என்னும் ஆபரணத்தைக் கழட்டிவிட்டு, கனங்குழை ஆபரணத்தைக் காதுகளில் இட்டுக் கொள்ளும் போது கைவளைகள் பொரேரென ஓசையிடுகின்றன.(வண்டு -- வளைகள்; இகு -- தொங்கு; தொடர -- அணிய; தொடுதல் -- அணிதல்; முன்னர் கலந்தொடா மகளிர் பாட்டிலும் வந்த ’தொடா’வை இங்கு நினைவு கொள்க)கடி வேரி தோட்டிக் கதவம் புகு இல் வண்டு பொரேர் என எழும் ---மணமும் தேனும் மாறாமல் விளங்கும் இதழ்களே மனைவாயில் கதவுகள் பூ என்னும் இல்லிற்கு. அந்த பூ இல்லத்தில் படிந்த வண்டுகள் வளையொலியைக் கேட்டுப் பொரேர் என எழுந்திருப்பன.மிளிர்கின்ற மின் ஒளிர்வது போன்ற விளங்கிய நெற்றியை உடைய பெண்கள் படர்ந்து செல்லும் கொடி போல் தம் நடையின் மெய்ப்பாடால் தமது காதலர்களாகிய களிறுகளில் ஊர்ந்து செல்லுவது போல் அவர்தம்மைச் சர்ந்து செல்கின்றனர்.இருள் போன்ற முன்மயிர்த் தொகுதி, வளைந்த வில்லொத்த புருவம், மிகுந்த ஒளிவிளங்கும் அணிகள் இவை பொருந்தச் செல்லும் ஒண்ணுதலோர்கள்.அறிவினால் புகழ் பெற்று அந்தப் புகழையே தமக்குற்ற ஆபரணமாய் அணிந்தோரும்;கற்பு, முதலிய நலங்களுடன் கலந்து ஒளிரும் நாணம் என்பதையே ஆபரணமாய்க் கொண்டவர்கள்;விடையோடு இகலிய விறல் நடையோர் ---நடையின் மெய்ப்பட்டால் எருதோடு போட்டியிடும் நடை வாய்ந்த இளஞர்கள்;(விறல் -- மெய்ப்பாடு என்ற பொருள் இங்கு சிறக்கும். ஆனால் உரைகளுக்கு ஒரே பல்லவி விறல் என்றால் இங்கும் வெற்றி)நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும் --தாம் ஒழுக்கத்தால் சிறந்திருந்தும் அதனால் சிறிதும் தருக்குறாமல் தம் சிறப்பைப் பற்றிய சுய பெருமித உணர்ச்சி காட்டாமல் இயல்பான நாணம் திகழச் செல்பவர்கள்.(இங்கு உரைகளிலிருந்து வேறு படுகிறேன்)கடலில் வரிசையாய் எழுகின்ற திரைகளைப் போன்ற கருமையும், வெண்மையும் கலந்த நரைகளை உடைய நடுத்தர வயதினரும்,சுடருகின்ற சந்திரனின் கதிர்கள் போன்று முழுதும் நரைத்த தலைமயிர் உடைய முதியவர்களும்ஆதிசேஷனின் அமுதுபடியாக பிரஸாதத் தட்டுகளும்.குடைகளும்,தூபக்கால் புகைகளும்,புஷ்பங்களையும் ஏந்தியவராய்;(மடை -- சோறு)இடைவெளியின்றி, ஓய்வுக்காலம் இன்றி மக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர் அவனது திருவடி நிழலில் வாழவேண்டித் திரளும் அடியவர்கள்.எங்கே?இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் வரை கெழு செல்வன் நகரில்.நகர் -- கோயில்இரண்டு கருநிறப் புள்ளிகள் திகழும் பணாமண்டலம் அணிந்த தலையை உடையவனான, மலை போன்ற வடிவை உடையவனான ஆதிசேஷனுடைய கோயிலிலே இவ்வாறு அடியவர்கள் திரண்டு உள்ளார்கள்.அவ்வாறு திரண்ட மக்கள் தம் வாழ்வின் பயனை எய்திய களிப்பில் அங்கு திரண்டிருப்பதைக் காணுங்கால் அந்தக் கோயிலானது எதைப் போன்று இருக்கிறது என்னில்,விளைந்தார் வினையின் விழுப்பயன் துய்க்கும்துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும்.(புரையும் --ஒக்கும்)தன் பயனைக் கொடுக்கும் காலம் முதிர்ந்து ஜீவர்களைப் பொருந்தி வரும் இருவினைப் பயன்களைக் காட்டிலும் சிறந்த நல்ல பயனைத் துய்க்கும் இடமானதும், மாறுபாடுகள், திரும்பி வருதல் முதலிய குற்றங்கள் ஏதுமற்றதும், நிலைத்த பேரின்பம் முதலிய விழுச்சீர் வாய்ந்ததுமான மோக்ஷ உலகமான ஸ்ரீவைகுண்டத்தை ஒத்து இருக்கிறது ஸ்ரீஆதிசேஷனின் கோயில்.***(தொ)
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆதிசேஷனே மலை என்ற வடிவில் இருக்கிறான் என்பது அடியார்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை பரிபாடல் காலத்தும் இருந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது.திருமலை (திருவேங்கடம்) ஸ்ரீஆதிசேஷனின் திரு உருவமே என்ற நம்பிக்கையின் காரணமாகவே ஸ்ரீராமானுஜர் அந்த ம்லையின் மீது கால்மிதித்து ஏறத் தயங்கியதும், இரவு மலை மீது தங்காமல் தாம் திரும்பி வந்ததும் என்பது அவர்தம் வாழ்க்கைக் குறிப்புகள் உணர்த்தும் செய்தி.
2011/4/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அருமை அருமை”வரைகெழு செல்வன் நகர்” எனும் அடியில்வரைகெழு நகர் என்றும் கொள்ளலாம். வரைபோல் நிவந்த நகர்.
ஆதிசேஷனே மலை என்ற வடிவில் இருக்கிறான் என்பது அடியார்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை பரிபாடல் காலத்தும் இருந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது.திருமலை (திருவேங்கடம்) ஸ்ரீஆதிசேஷனின் திரு உருவமே என்ற நம்பிக்கையின் காரணமாகவே ஸ்ரீராமானுஜர் அந்த ம்லையின் மீது கால்மிதித்து ஏறத் தயங்கியதும், இரவு மலை மீது தங்காமல் தாம் திரும்பி வந்ததும் என்பது அவர்தம் வாழ்க்கைக் குறிப்புகள் உணர்த்தும் செய்தி.
இங்கும் அந்த நம்பிக்கை சுட்டப்படுவதாகக் கொள்வது பொருத்தம்.இந்த, தமிழ் மக்களின் சமய வாழ்வியல் சார்ந்த செய்தி ஊருக்கு மலை உவமை என்று கொள்ளும் போது மறைந்துவிடும்.
On Apr 11, 7:43 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/4/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > அஹோபிலம் மலை கருடாழ்வார் என்பது இன்றும் ஒரு நம்பிக்கையாகக்
> > கொள்ளப்படுகிறது. ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது.
> > இது குறித்து சற்று முன்னர் அனுப்பிய பின்னூட்டம் போகவில்லையோ?? [?][?][?]
>
> இல்லையே! இங்க ஏற்கனவே கருட தரிசனம் ஆயிடுத்தே
> :-))
>
>
>
திரு ராஜசங்கர்!ஐயய்யோ! அவ்வளவு மோசமாகவா இருக்கிறது நான் எழுதிக்கொண்டிருக்கும் விளக்கம்? :-))
உரைகளில் விறல்நடை = பீடுநடை, செம்மாந்த நடை, மிடுக்கான நடை என்ற பொருள்
இருக்கிறது.
”விடையோடு இகலிய விறல் நடையோரும் - ஆனேற்றின்
நடையோடு மாறுபட்ட வெற்றியையுடைய *பீடுநடையினை*
உடையவரும்” பரிபாடல் உரையுடன் - கழகம்.
விறல்நடைக்கு செம்மாந்த நடை என்பதற்கு
உவேசா அவர்கள் நளவெண்பாப் பாடலைக் கொடுத்துள்ளார்கள்.
”செல்லு மழவிடைபோற் செம்மாந்து - (நள. சுயம். 156)” - உவேசா
விடையோடு இகலிய விறல்நடையோரும் -
காளையை வெல்லும் மிடுக்கான நடை கொண்டோரும்.
நா. கணேசன்
ஆமாம். பாணர், விறலியர் கள்ளும், ஊனும் அருந்தி
ஆடுவதைப் பரிபாடல் பாடுகிறது. அதைப் பார்ப்போர்
சிலர் ஊனும், மட்டும் தவிர்த்திருக்கலாம்.
உதாரணம்:
[1]
” குறு முயல் *கொழுஞ் சூடு* கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, “ புறநானூறு - 34
[2]
சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை - பதிற்றுப்பத்து 85
இப் பரிபாடலுக்கு வருவோம்:
தண்டா அருவியோ டிருமுழ வார்ப்ப
அரியுண்ட கண்ணாரோ டாடவர் கூடிப்
புரியுண்ட பாடலொ டாடலுந் தோன்றச்
சூடு நறவொடு காமமுகிழ் விரியச் 55
சூடா நறவொடு காமம் விரும்ப
இனைய பிறவு மிவைபோல் வனவும்
அனையவை எல்லா மியையும் புனையிழைப்
பூமுடி நாகர் நகர்;
உரை - சை. சி. நூ. கழகம்:
”திறத்தல். அது வாய்திறத்தல் என்னும் பொருள்பட்டு அதன் காரியமாகிய
பிளிற்றொலியை ஈண்டுக் குறித்து நின்றது என்க. தண்டா அருவி - இடையறாத
அருவி. இருமுழவு - பெரிய முழவு. அரியுண்ட கண்ணார் என்றது ஆடன் மகளிராகிய
விறலியரை. விறலியர்க்குரிய ஆடலும் பாடலும் அழகுமாகிய மூன்றனுள்
அழகுடைமையை அரியுண்ட கண்ணார் என்றதனால் உணர்த்தினார். அரி - வரி. செவ்வரி
கருவரிபடர்ந்த கண்ணார் மையுண்ட கண்ணார் எனத் தனித்தனி கூட்டுக. ஆடவர்
என்றது கூத்தரை. தோன்ற - தோன்றுவிக்க. சூடு நறவு. சூடா நறவு என்பன
வெளிப்படை. முன்னது நறவமொட்டு. பின்னது கள். அம் மைந்தரும் மகளிரும்
சூடிய நறவ மொட்டலரும் போதே அவர் தம் உளத்தே காமம் முகிழ்த்து மலர என்க.
"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரும்இந் நோய்" என்றார்
வள்ளுவனாரும். கள் காமவின்பத்தை மிகுவித்தலின் கள்ளொடு காமம் விரும்ப
என்றார். இனைய என்றது உவமம் கருதாமல் கட்டுப் பெயர் மாத்திரையாய்
நின்றது. அனையவை என்பது மது. புனையிழை முடிநாகர் பூமுடி நாகர் எனத்
தனித்தனி கூட்டுக. பூ - பூமகள். நாகர் -ஆதிசேடனார். நகர் - அவர் தந்
திருக்கோயில். இங்ஙனமன்றி நாகர் நகர் என்றது, உவமையாகக் கருதிப்
"போகத்திற் சிறந்ததாகலின் நாகருடைய நகரை ஒக்கும் என்றார்" என உரை
கூறினாருமுளர். ”
நா. கணேசன்
விடையோடு இகலிய விறல் நடையோர் ---நடையின் மெய்ப்பட்டால் எருதோடு போட்டியிடும் நடை வாய்ந்த இளஞர்கள்;(விறல் -- மெய்ப்பாடு என்ற பொருள் இங்கு சிறக்கும். ஆனால் உரைகளுக்கு ஒரே பல்லவி விறல் என்றால் இங்கும் வெற்றி)
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும் --தாம் ஒழுக்கத்தால் சிறந்திருந்தும் அதனால் சிறிதும் தருக்குறாமல் தம் சிறப்பைப் பற்றிய சுய பெருமித உணர்ச்சி காட்டாமல் இயல்பான நாணம் திகழச் செல்பவர்கள்.(இங்கு உரைகளிலிருந்து வேறு படுகிறேன்)கடலில் வரிசையாய் எழுகின்ற திரைகளைப் போன்ற கருமையும், வெண்மையும் கலந்த நரைகளை உடைய நடுத்தர வயதினரும்,சுடருகின்ற சந்திரனின் கதிர்கள் போன்று முழுதும் நரைத்த தலைமயிர் உடைய முதியவர்களும்ஆதிசேஷனின் அமுதுபடியாக பிரஸாதத் தட்டுகளும்.குடைகளும்,தூபக்கால் புகைகளும்,புஷ்பங்களையும் ஏந்தியவராய்;(மடை -- சோறு)இடைவெளியின்றி, ஓய்வுக்காலம் இன்றி மக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர் அவனது திருவடி நிழலில் வாழவேண்டித் திரளும் அடியவர்கள்.எங்கே?இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் வரை கெழு செல்வன் நகரில்.நகர் -- கோயில்இரண்டு கருநிறப் புள்ளிகள் திகழும் பணாமண்டலம் அணிந்த தலையை உடையவனான, மலை போன்ற வடிவை உடையவனான ஆதிசேஷனுடைய கோயிலிலே இவ்வாறு அடியவர்கள் திரண்டு உள்ளார்கள்.அவ்வாறு திரண்ட மக்கள் தம் வாழ்வின் பயனை எய்திய களிப்பில் அங்கு திரண்டிருப்பதைக் காணுங்கால் அந்தக் கோயிலானது எதைப் போன்று இருக்கிறது என்னில்,விளைந்தார் வினையின் விழுப்பயன் துய்க்கும்துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும்.(புரையும் --ஒக்கும்)தன் பயனைக் கொடுக்கும் காலம் முதிர்ந்து ஜீவர்களைப் பொருந்தி வரும் இருவினைப் பயன்களைக் காட்டிலும் சிறந்த நல்ல பயனைத் துய்க்கும் இடமானதும், மாறுபாடுகள், திரும்பி வருதல் முதலிய குற்றங்கள் ஏதுமற்றதும், நிலைத்த பேரின்பம் முதலிய விழுச்சீர் வாய்ந்ததுமான மோக்ஷ உலகமான ஸ்ரீவைகுண்டத்தை ஒத்து இருக்கிறது ஸ்ரீஆதிசேஷனின் கோயில்.***(தொ)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அது இங்கு பொருந்தாது.:-)
On Apr 16, 8:04 am, coral shree <cora...@gmail.com> wrote:
> அன்பின் திரு கணேசன் ஐயா
>
> தாங்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் பலப்பல அர்த்தங்கள் கொடுப்பது எம் போன்று தமிழ்
> ஆழமாகக் கற்க விரும்புவோருக்கு மிகவும் பயனுடையதாக அமைகிறது. இருந்தாலும் ஒரு
> வேண்டுகோள் ஐயா, இறுதியில் தொகுப்பாக ஒரு பதில் கொடுத்தால் எம்மைப்
> போன்றோருக்கு எளிமையாக புரியும். தவறு இருப்பின் பொறுத்தருள்க. நன்றி ஐயா.
>
அன்பின் பவளா & வேந்தர்,
வேந்தன் ஐயா,
சூடு நறவு X சூடா நறவு (எதிர்ப்பதங்கள்)
சூடாநறவு - இத் தொடரைப் புரிந்துகொள்ள நாம் பார்க்கவேண்டியது:
வாடா வஞ்சி (= ஒரு ஊர்), வாடா வள்ளி (= ஒரு கூத்து
வகை. லூஸியானாவில் ஜாஸ் ம்யூஸிக் தோற்றத்தை
நினைவுகூர்க.)
சேரர் வஞ்சியை - கருவூரை - வாடா வஞ்சி என்பார்
இளங்கோ. (அவர் அவ்வூரினரோ?)
வஞ்சிக்கொடி வாடும். வாடா வஞ்சி என்றால்
24 மணி நேரமும் உறங்காத நகரம், எப்பொழுதும்
முசுவாய் இருக்கும் வஞ்சி எனப் பொருள்.
வாடு வஞ்சி X வாடா வஞ்சி.
வாடாவள்ளி என்றால் என்ன? சங்க இலக்கியத்தின்
ஒரு முக்கியமான சொல் இது.
சூடா நறவுடன் புறச்சேரிகளில் ஆடுவது வாடாவள்ளி.
”பன்மர நீளிடைப் போகி நன்னகர்
விண்டோய் மாடத்து விளங்கு சுவருடுத்த
வாடா வள்ளியின் வளம்பல தரூஉம்
நாடு பல கழிந்த பின்றை” - பெரும்பாணாற்றுப்படை
’பலவகை மரங்கள் வளர்ந்த இடத்திலே போய்,
விளங்குகின்ற மதில் சூழ்ந்த விண்ணைத் தீண்டும் மாடங்களையுடைய நன்றாகிய
ஊர்களிலே வாடுங் கொடியினையுடைய வள்ளி அல்லாத வள்ளிக் கூத்தின்
வளப்பம்பலவற்றையும் தருதற்குக் காரணமாகிய புறநாடுகள் பலவற்றையும் போன
பின்பு’ என்பது பொருள்.
புறச்சேரிகளை வாடாவள்ளி என்று சொல்லாலே உருத்திரங்கண்ணனார்
குறித்துவிடுகிறார். வேறு
வண்ணனைகள் அவசியமில்லை என்னும் கருத்தால்.
நச்சினார்க்கினியர் உரை:
”சிறப்புடைய நாடுகளைப் பாடி தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தோர் உறையும்
நாடுகளைப் பாடாமல் தொகுக்கிறார். அவை புறநாடென்பது தோன்ற. அவர்கள்
காண்டற்குரிய வள்ளிக் கூத்தினையும் கூறி அதனை வெளிப்படுத்தினார்” மற்ற
உரையாசிரியர்கள் விளக்கம். ”வாடாவள்ளி - வாடுங் கொடியல்லாத வள்ளிக்
கூத்து, அஃது இழிகுலத்தார் காணும் கூத்து.”
முருகனுக்கு துணைவி (மனைவி ஆகா நிலை) - வள்ளி
என்று தேர்ந்தெடுத்ததற்கும் வாடாவள்ளி கூட்டங்களின்
பெண் என்பது ஒரு காரணம். அடிநிலை சமூகம்
ஆடுவது வாடாவள்ளி, அங்கேயிருந்து வள்ளி் உற்பத்தி ஆகிறாள்.
குறிஞ்சி நிலத்தின் வளமைக்கு ஒரு சின்னம் வள்ளி.
முருகனுக்கும் வள்ளிக்கும் ஏற்பட்ட களவுக் காதலை
’முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல’ - நற்றிணை 82
காணலாம்.
சூடா நறவொடு வாடா வள்ளிக் கூத்துகள்
----------------------------------------------------
நாகர் நகர் - என்பதை ஆதிசேடன் அம்சமாகிய பலராமன் நகரில்
காமம் மிக்க களியாட்டங்கள் என்று பொருள்கொள்ளலாம்.
பலராமனுக்கு நாகராஜா என்ற பெயர் இருக்கிறது.
ஹோலி (ஊளி விழவு) - ஹோளாதிகரணம் போன்ற
Carnival பரிபாடல் பாடுகிறது. நாகராஜா பற்றி எஸ். ராமச்சந்திரன் எழுதிய
கட்டுரை (யூனிகோட் வடிவில்) கொடுத்த இழையில் காண்க. நாகர்நகர் - பெயர்
விளக்கம் அடையும்.
வேதம் பாடும் களியாட்ட நாள் ஒன்று:
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?
A2=ind9602&L=INDOLOGY&P=R5529
பரிபாடலுக்கு தமிழ்ப் புலவரின் உரை:
http://groups.google.com/group/mintamil/msg/a01cdd0e5ae75045
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நச்சினிக்கினியார் காலம் எது?
குலம் தாழ்ச்சி, உயர்ச்சி சங்க காலம் தொட்டு தமிழ் மண்ணில் இருப்பதைக்
கண்ணுற வேண்டும். தீண்டாமை உள்ளூர் சரக்கு என்று காண்க!
'சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்! - பாரதி
அதே நேரத்தில் முருகனுக்கு வள்ளியை மனைவியாக வைத்த பாங்கும் நோக்கத்தக்கது!
க.>
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்;மணி புரை மா மலை ஞாறிய ஞாலம்அணி போல் பொறுத்தாரும் தாஅம்;மிகுந்த வேகம் கொண்டு காற்றுத்தேவன் ஆகிய வாயு வீச, அந்த வேகத்தில் சிறிதும் அசையாதவாறு முன்னொரு காலத்தில் மேருமலையைக் காத்து நின்ற விறல் மிக்கவரும் ஸ்ரீஆதிசேஷனேயாகும்.முன்னொரு காலம் வாயுவுக்கும், ஸ்ரீஆதிசேஷனுக்கும் போட்டி ஏற்பட மேரு மலையின் சிகரங்கள் மூன்றைத் தான் ஊதித் தள்ளுவதாகவும், முடிந்தால் அவற்றைக் காப்பாற்றி ஆதிசேஷன் தன் வலிமையைக் காட்டலாம் என்று ஏற்பட்ட போட்டியில், ஸ்ரீஆதிசேஷன் அந்த மலைச் சிகரங்களைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி அந்தச் சிகரங்களைக் கொண்ட மேருமலை, அந்த மேருமலையைத் தாங்கி நிற்கும் இவ்வுலகம் என்ற அனைத்தையும் விளங்கி நிற்கும் படைப்புக் காலம் முழுதும் தம் சிரத்தில் ஓர் அணிகலனைப் போன்று தாங்கி நிற்பவரும் ஸ்ரீஆதிசேஷனே என்க.***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
2011/6/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக்கால், வெற்புத்திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி,மகர மறி கடல் வைத்து நிறுத்து,புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி,மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க,உகாஅ வலியின் ஒரு தோழம் காலம்அறாஅது அணிந்தாரும் தாம்;மிகாஅ மறலிய மே வலி எல்லாம்புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்;மணி புரை மா மலை ஞாறிய ஞாலம்அணி போல் பொறுத்தாரும் தாஅம்;பணிவுஇல சீர்ச்செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி,கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித்தொல் புகழ் தந்தாரும் தாம்.*திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக்கால் -- திகழும் ஒளி மிகுந்த முந்நீர்களை உடைய பாற்கடலை முன்னொரு கால் கடைந்த பொழுது,முந்நீர் -- ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர்; இங்கு பாற்கடல் ஆகையாலே ச்ருஷ்டிக்கு முன்னிருந்த நீர், படைப்பில் சேரும் நீர், சம்ஹாரத்தில் வெளிப்படும் நீர் எனல்.வெற்புத் திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி ---- மந்த்ரமலையை நன்கு விளங்கும்படி எடுத்துத் தன் சிறப்புமிக்க தலையிலே ஏற்றிசீர்ச்சிரம் -- உலகத்தைத் தாங்கி நிற்கும் சிரம்மகர மறி கடல் வைத்து நிறுத்து -- மகரங்கள் உலவாநிற்கும் கடலில் நன்கு பொருந்த வைத்து நிலைப்படுத்தி,புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்அமுது கடைய ---- தேவர் அசுரர் ஆகிய இரு திறத்தர்களுமே புகழும், அதற்கேற்ற சிறப்பும் மிக்கவர்கள். அந்த இரு திறத்தோர்க்கும் அமுதம் பெற வேண்டிக் கடையும் பொழுதுஇரு வயின் நாண் ஆகி ---- இரண்டு பக்கமும் நன்கு பலம் பொருந்திய நாண் கயிறாகத் தானே ஆகி,மலையைக் கடைய நாண் கயிறாக ஆனது வாசுகி என்றும் புராணம் கூறினாலும், அந்த வாசுகியின் உள்ளே ஆதிசேஷனே நின்று பலம் தந்தான் என்பது சங்கப் புலவரின் கொள்கை.மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க --- சக்கிராயுதம் ஏந்திய மஹாவிஷ்ணுவானவர் அந்த இருபுறமுமான வடத்தைத் தாம் ஒருவரே பிடித்துக் கடையஉகாஅ வலியின் ஒரு தோழம் காலம்அறாஅது அணிந்தாரும் தாஅம் ------சிறிதும் அயர்வு ஏற்படாமல் மிக நீண்ட காலமான தோழம் என்னும் அளவைக் கொண்ட காலம் மலை கடையப்பட்ட பொழுதும் பொறுமையாக அந்த மலையைத் தம் சிரத்தில் ஓர் அணிகலனைப் போன்று சிறிதும் ஆயாசம் இல்லாமல் அணிந்தாரும் யார் என்றால் இந்த ஆதிசேஷனே ஆகும்.வாசுகியின் உள்ளே ஆவிர்பவித்து நாண் ஆகி நின்றும், மலயைத் தன் சிரத்தே தாங்கியும் நின்றதும் மட்டும் அன்றி வேறொரு பெருமையும் ஸ்ரீஆதிசேஷனுக்கு உண்டு. அது --பணிவு இல் சீர்ச்செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி,கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித்தொல் புகழ் தந்தாரும் தாம் -----பணியுமாம் என்றும் பெருமை என்பதுதான் பொதுவாக வழங்கும் வழக்கு. ஆனால் செல்விடைப் பாகனாகிய சிவபெருமான் விஷயத்திலோ என்னில் பணியாமல் இருப்பதுதான் சிவனுக்குப் பெருமை.‘நில்லாதோடும் நெடுந்தேர் உருட்டி’ ஏகும் பரிதி போன்று செல்விடைப் பாகன் சிவன்.சென்று கொண்டே இருக்கும் தனமையதான எருதை வாகனமாக உடையவர். அதாவது காலத்தை வாகனமாக உடையவர் என்று பொருள்.அந்தச் சிவனார் திரிபுரம் அழித்தபோது உயர்ந்த சிகரத்தை உடைய மலையான இமய மலையையே வளைத்து வில்லாகப் பயன்படுத்தினார். ஆனால் அதில் பூட்ட சரியான நாண் வேண்டுமே! என் செய்வது?முன்னர் ஒரு கால் இவ்வாறு வில் வளைக்க நாண் கயிற்றைக் கரையான்கள் அரித்துவிட்டதால் வில் நிமிர்ந்து ருத்ரனின் சிரத்தை அறுத்துவிட்டது என்று வேதம் கூறுகிறதே. இந்திரன் அன்றோ அன்று கரையானாகி அவ்வாறு நாண் கயிற்றை அறுத்தது. (தைத்திரிய ஆரண்யகம் 1--5)அது போல் இப்பொழுது ஆகாமல் சிவன் தலையைக் காத்து, இமயத்தை வில்லாக்கித் திரிபுரம் அழித்தார் சிவன் என்ற தொன்மையான புகழைச் சிவனுக்கு ஏற்படுத்தித் தந்தது ஸ்ரீஆதிசேஷனே என்கிறார் சங்கப் புலவர்.பணிவுஇல சீர்ச்செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி,கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித்தொல் புகழ் தந்தாரும் தாம்.***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அரங்கர் ஐயாசங்கத்தமிழ் எனக்கு ஓரளவு புரியும் என்றாலும் பரிபாடல் எனக்கு கடுமையாகவே இருந்தது. இந்த பின்னணி கதைகள் நான் அறிந்தவன் அல்லனால்!விளக்கங்களுக்கு மிக நன்றி
நன்று வேந்தன். ஏதோ நீங்களாவது பரிபாடலுக்கு நான் எழுதும் உரையை விடாது படித்து வருகிறீர்களே. மிக்க நன்றி.எழுதச் சொன்ன ராஜம் அக்கா உள்பட யாரும் இதைப் படிக்கின்றார்களா என்பது எனக்குச் சந்தேகமே. போகட்டும் நாம் போட்டு வைப்போம். பின்னொரு காலத்தில் யாருக்கேனும் பயன்படக் கூடும். குறைந்த பட்சம் எனக்காவது.உங்கள் பாராட்டும் நன்றியும் சரிபாதி ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களுக்குப் போக வேண்டியது. ஏனேனில் அவரின் விளக்கத்தால்தான் என்னாலும் மேற்கொண்டு உள்ளே போக முடிகிறது. என்னுடைய சிந்தனைப்படி நான் சில விளக்கங்கள் எழுதினாலும் அடிப்படை அவர் போட்டுத் தரவில்லையேல் தடுமாட்டம்தான்.***
பரிபாடல் திரட்டு முதல் பாட்டிற்கான உரையைத் தொடர்ச்சியாகப் படிக்க இந்தச் சுட்டியில் காணவும்நன்றி.***
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil