திருவாய்மொழி - தனியன்கள்

695 views
Skip to first unread message

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Feb 21, 2009, 7:27:50 AM2/21/09
to minT...@googlegroups.com
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
 
தனியன்கள் என்பது வைணவ மரபில், ஒவ்வொரு ஆழ்வாரையோ அல்லது நாதமுனிகள் முதல் மணவாள மாமுனிகள் ஈறான ஆச்சார்யர்களையோ அல்லது அவர்கள் பாசுரங்களையோ புகழ்ந்துரைக்கும் ஒரு தனி செய்யுள். ஒருவருக்கு ஒன்றோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தனியன்களோ உள்ளன.
 
இவற்றை அப்பாசுரங்களை ஓதும் முன்னர் ஓதுவது வழக்கம்
 
நம்மாழ்வாருடைய திருவாய்மொழிக்கு வடமொழியில் ஒரு தனியனும், தமிழில் 5 தனியன்களும் உள்ளன.
 
1. நாதமுனிகள் அருளிச்செய்தது (வடமொழியில்)
 
ப(4)க்தாம்ருதம் விஸ்வஜநாநு மோத(3)நம்
ஸர்வார்த்த(2)த(3)ம் ஸ்ரீஸட(2)கோபவாங்மயம்
ஸஹஸ்ரஸாகோ(2)பநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் த்(3)ராவிட(3) வேத(3)ஸாக(3)ரம்
 
"தொண்டர்க்கு அமுதமாகவும், அனைவருக்கும் ஆனந்தத்தை அளிப்பதாகவும், ஆயிரக்கணக்கான சாகைகளை உடைய உபநிஷ்த்துக்களின் திரட்சியாகவும் இருக்கும் நம்மாழ்வாருடைய அருள்வாக்கான தமிழ் வேதக் கடலை அடியேன் ஸேவிக்கிறேன்" என்கிறார், வைணவ குருபரம்பரையின் முதல் ஆச்சார்யரான நாதமுனிகள்.
 
2. ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது
 
திருவழுதி நாடென்றும் தென் குருகூரென்றும்
மருவினிய வண்பொருநலென்றும் - அருமறைகள்
அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே! தெளி
 
"நம்மாழ்வார் அவதரித்த திருவழுதி நாட்டையும், அந்நாட்டில் உள்ள குருகூரையும், ஆசைப்படும் படி அழகியதாய் இருக்கும் பொருநல் (தாமிரபரணி ஆறு) நதியையும் அருமையான வேதங்களை அந்தாதியாக இசைத்த ஆழ்வாரின் திருவடிகளையும் தெளிவுடனே சிந்திக்கக் கடவாய், நெஞ்சே" என்கிறார். அதாவது அடையத் தக்கவரான ஆழ்வாருடைய சம்பந்தம் பெற்ற அனைத்துமே அடையத் தக்கது என்றபடி
 
3) சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது
 
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை அல்லாது இறைஞ்சேன் - தனத்தாலும்
ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று
 
"நம்மாழ்வார் அவதரித்த திருகுருகூர் என்ற ஊரை, மனத்தாலும் வாயாலும் ஆதரிக்கின்றவர்களை அல்லாது வேறு ஒருவரையும் வணங்கமாட்டேன், எந்தையாரான நம்மாழ்வாரின் திருவடிகள் நம்முடைய தஞ்சமாயிருக்கும்போது தனத்தாலும் ஒரு குறைவும் இலேன்" என்கிறார்,
 
4) அனந்தாழ்வான் அருளிச்செய்தது (இவர் எம்பெருமானாரின் மற்றொரு சீடர்)
 
ஏய்ந்தபெருங்கீர்த்தி இராமனுசமுனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்தபெருஞ்
சீரார்சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராதவுள்ளம் பெற
 
முன்னுரையில் கூறியபடி, திருவாய்மொழியை வளர்த்த "இதத்தாய்"-ஆன எம்பெருமானாரை, இப்பிரபந்தத்தை தன் மனதிலே தரிப்பதற்கான சக்தியைக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறார். அனந்தாழ்வானுடைய ஆச்சார்யர் எம்பெருமானார் என்பதனால், ஒன்றை அறிவதற்கு ஆச்சார்யருடைய அருள் அவசியம் வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் இத்தனியன் உள்ளது
 
"செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற - இராமானுச முனிதன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகிறேன்" - என்றதனால் எம்பெருமானாருக்கும் திருவாய்மொழிக்கும் உள்ள தொடர்பு நன்கு வெளிப்படுகிறது. மேலும் அனந்தாழ்வான் எம்பெருமானாருடைய நேரடி சீடர் என்றபடியால், எம்பெருமானார் தமிழில் ப்ரபந்தம் அருளிச்செய்யாததால், அவர்க்கு தமிழில் ப்ரவேச்ம் இல்லை என்ற சிலர் வாதம் அடிபட்டுப் போகின்றது.
 
5) பட்டர் அருளிச்செய்தது (2 தனியன்கள்)
 
வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமனுசன்
 
 இதன் பொருளை முன்னுரையில் முன்னரே பார்த்தோம். கண்ணனை தேவகி பெற்று, யசோதை வளர்த்தது போல், கண்ணனை நோக்கிப் பாடப்பட்ட திருவாய்மொழியையும் ஒருவர் (நம்மாழ்வார்) ஈன்றார், மற்றொருவர் (எம்பெருமானார்) வளர்த்தார்.
 
எம்பெருமானாரின் சீடரான கூரத்தாழ்வானின் புதல்வரான் பட்டரும் எம்பெருமானார் காலத்திலேயே வாழ்ந்திருந்தார் என்பதனால், எம்பெருமானாருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு நன்கு வெளிப்படுகிறது.
 
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்
 
குருகையர்கோனான நம்மாழ்வாரின் யாழினிசை போன்ற திருவாய்மொழியானது, பரமாத்மாவான இறைவனின் நிலையையும், ஜீவாத்மாவின் உண்மையான நிலையையும், ஆறும் பேறும் அவனே என்றிருக்கிற சரணாகதி நெறியையும், அவனை அடைவதற்குத் தடையாக இருப்பவை எவை என்பதையும் (பொய்யான ஞானம், பொல்லா ஒழுக்கம் மற்றும் அழுக்கான இவ்வுடம்பு), ஒழிவில்லாமல் அவனுக்கு அடிமை செய்வதே நமக்கு ஸ்வபாவம் என்றதையும், தெரிவிக்கிறது என்கிறார்.
 
தொடரும்......
 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிக்ளே சரணம்
வேங்கடேஷ்


Get perfect Email ID for your Resume. Get before others grab.

Kumaran Malli

unread,
Feb 21, 2009, 10:24:20 AM2/21/09
to minT...@googlegroups.com


வேங்கடேஷ் ஐயா,

//அவர்க்கு தமிழில் ப்ரவேச்ம் இல்லை என்ற சிலர் வாதம் அடிபட்டுப் போகின்றது//

இந்தப் பகுதி புரியவில்லை.

 

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Feb 21, 2009, 11:26:23 AM2/21/09
to minT...@googlegroups.com
குமரன் சார்,
 
<//அவர்க்கு தமிழில் ப்ரவேச்ம் இல்லை என்ற சிலர் வாதம் அடிபட்டுப் போகின்றது//

இந்தப் பகுதி புரியவில்லை.>

 
 
ப்ரவேசம் என்றால் பரிச்சயம் என்று சொல்லலாம். அதாவது இராமனுசர் தமிழில் எதுவும் இயற்றாததால் அவர் தமிழின் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லை என்பது சிலர் கருத்து. இக்கருத்துடையோர் பலர் இருக்கின்றனர். அது யாரென்பது சற்று வம்பை வளர்க்கும், மேலும் இப்பொழுது அது அவசியமும் இல்லை என்பதால் அதை கூறாமல் விடுகிறேன்.
 
வேங்கடேஷ்

 


Add more friends to your messenger and enjoy! Invite them now.

Kumaran Malli

unread,
Feb 21, 2009, 1:01:56 PM2/21/09
to minT...@googlegroups.com
திருவாய்மொழிக்கு இதத்தாய் இராமானுஜர். திருப்பாவை ஜீயர் இராமானுஜர். இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். அப்படி இருக்க அவருக்குத் தமிழில் பரிச்சயமோ ஈடுபாடோ இல்லை என்று சொல்பவர்கள் புரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

2009/2/21 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>

Narayanan Kannan

unread,
Feb 21, 2009, 7:54:15 PM2/21/09
to minT...@googlegroups.com
2009/2/22 Kumaran Malli <kumara...@gmail.com>:


எனது அமெரிக்க நண்பன் சொல்லுவான். நமக்கு தனியாக பகைத்துக்கொள்ள
வேண்டியது இல்லை. நாம் பிரபலமாகிவிட்டால் பகைவர்கள் தானாக உருவாவர்
என்று. ராஜராஜன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஒரு சந்நியாசியை
யாராவது 'யதி ராஜன்' என்று சொல்லக்கேள்விப்படிருக்கிறோமா? அது
எம்பெருமானார் கீர்த்தி.

க.>

Tthamizth Tthenee

unread,
Feb 22, 2009, 3:44:17 AM2/22/09
to minT...@googlegroups.com
திருவாய்மொழி  என்று பெயரிட்டதைப் பார்த்தேலே அவருக்கு தமிழிலே பரிச்சியம் உண்டு என்பதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமோ

வையகமெண் பொய்கைபூ தம்பே யாழ்வார்
மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுர கவிகள்
பொய்யில்புகழ்க் கோழியர் கோன்விட்டு சித்தன்
பூங்கோதை தொண்டரடிப் பொடி பாணாழ்வார்
ஐய்யனருட் கலியனெதிராஜர் தம்மோ
டாறிருவர் ஓரொருவர் அவர்தாஞ் செய்த
துய்ய தமிழிருபத்து நான்கிற் பாட்டின்
தொகை நாலாயிரமுமடி யோங்கள் வாழ்கவே

என்று ப்ரபந்த சாரம் பேசுகிறது

         



2009/2/22 Narayanan Kannan <nka...@gmail.com>



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ
peopleofindia.net@gmail.com
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

LNS

unread,
Feb 22, 2009, 8:58:00 AM2/22/09
to மின்தமிழ்
தமிழ்த்தேனீ அவர்கள் இராமானுசரைப்பற்றி சொல்வதாகத்தெரிகிறது. ஈடு
வியாக்கியானத்திலிருந்து அவரின் தமிழ் ஈடுபாட்டையும் தமிழ் ஞானத்தையும்
எடுத்துக்காட்ட பல மேற்கோள் காட்டலாம். அது நிற்க.

ஒரு சின்ன விஷயம்: திருவாய்மொழி என்ற பெயர் இராமானுசர் காலத்திற்கு
முன்னமே வழங்கி வந்தது என்பது தெளிவு: ஸ்ரீமன் நாதமுனி அவர்கள் தம்
தனியனில் குறிப்பிடும் சொற்றொடர் 'ஸ்ரீ சடகோப வாங்மயம்' என்பது
சந்தேகமில்லாமல் சடகோபர் திருவாய்மொழி என்பதின் வடமொழியாக்கம் என்று


சொல்லலாம்.

இந்தத் தனியனில் கையாளப்பட்ட ஏறக்குறைய எல்லா சொற்றொடர்களும் ஆழ்வார்
தாமே தம் பிரபந்தத்தில் திருவாய்மலர்ந்தருளியது தான்.

1. பக்தாம்ருதம் - 'தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன்
(திருவாய்மொழி 9.4.9)
2. விச்வஜநாநுமோதநம் - 'எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்கும்' (7.9.11)
மற்றும் 'அடியார்க்கு இன்ப மாரியே' (4.5.10). அநுமோதநம் என்றால் இன்பம்.

anumodana n. pleasing , causing pleasure , applauding ; assent ,
acceptance ; sympathetic joy.
3. சர்வார்த்ததம் - 'மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள், நிற்கப் பாடி
என் நெஞ்சுள் நிறுத்தினான்' (கண்ணி நுண் சிறுத்தாம்பு)
4. ஸ்ரீசடகோப வாங்மயம் - மேற்படி
5. ஸஹஸ்ர சாகோபனிஷத்சமாகமம் - 'சந்தங்கள் ஆயிரத்து' (10.9.11). சந்தம்
என்றால் வேதம்.
chandas n. the sacred text of the Vedic hymns

சாமவேதத்திற்கு 1000 கிளைகள் (சாகா - கிளை) உண்டென மரபு. திருவாய்மொழி
இசைப்பா என்றதால் சாமவேதத்தைச் சொல்லி சாமவேதமும் உபநிஷத்தும் கூடி வந்த
தமிழ் வேதக்கடல் என்றும் சாமவேதமும் உபநிஷத்தும் கூடிய ஆகமம் என்றும்
பொருள் காணலாம். ஆகமம் என்ற சொல்லினால் ஆகமம் சார்ந்த கோயிலில் ஓதவல்லது
என்று பறைசாற்றுகிறார்.

Agama mf(%{A})n. coming near , approaching AV. vi , 81 , 2 ; xix ,
35 , 3 ; m. (ifc. f. %{A}) arrival , coming , approach R. &c. ; origin
Mn. viii , 401 R. &c. ; appearance or reappearance MBh. ii , 547 ;
course (of a fluid) , issue (e.g. of blood) Mn. viii , 252 Sus3r. ;
income , lawful acquisition (of property , %{artha} , %{dhana} , %
{vitta} , %{draviNa}) Mn. MBh. &c. ; reading , studying Pat. ;
acquisition of knowledge , science MBh. Ya1jn5. &c. ; a traditional
doctrine or precept , collection of such doctrines , sacred work ,
Bra1hmana Mn. xii , 105 MBh. &c. ; anything handed down and fixed by
tradition (as the reading of a text or a record , title-deed , &c.)

6. த்ராவிடவேதஸாகரம் - தமிழ்வேதக்கடல்

என்று இவ்வாறு தமிழ் சொல்லை வடமொழியாக்கி தமிழ்புலவரை வணங்குகிறார்
ஸ்ரீமன் நாதமுனி.

LNS

On Feb 22, 3:44 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> திருவாய்மொழி  என்று பெயரிட்டதைப் பார்த்தேலே அவருக்கு தமிழிலே பரிச்சியம்
> உண்டு என்பதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமோ
>
> வையகமெண் பொய்கைபூ தம்பே யாழ்வார்
> மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுர கவிகள்
> பொய்யில்புகழ்க் கோழியர் கோன்விட்டு சித்தன்
> பூங்கோதை தொண்டரடிப் பொடி பாணாழ்வார்
> ஐய்யனருட் கலியனெதிராஜர் தம்மோ
> டாறிருவர் ஓரொருவர் அவர்தாஞ் செய்த
> துய்ய தமிழிருபத்து நான்கிற் பாட்டின்
> தொகை நாலாயிரமுமடி யோங்கள் வாழ்கவே
>
> என்று ப்ரபந்த சாரம் பேசுகிறது
>

> 2009/2/22 Narayanan Kannan <nkan...@gmail.com>
>
>
>
> > 2009/2/22 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>:


> > > திருவாய்மொழிக்கு இதத்தாய் இராமானுஜர். திருப்பாவை ஜீயர் இராமானுஜர். இப்படி
> > > இன்னும் நிறைய சொல்லலாம். அப்படி இருக்க அவருக்குத் தமிழில் பரிச்சயமோ
> > ஈடுபாடோ
> > > இல்லை என்று சொல்பவர்கள் புரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
>

> > > 2009/2/21 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor_venkat...@yahoo.com>


>
> > >> ப்ரவேசம் என்றால் பரிச்சயம் என்று சொல்லலாம். அதாவது இராமனுசர் தமிழில்
> > >> எதுவும் இயற்றாததால் அவர் தமிழின் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லை
> > >> என்பது சிலர் கருத்து. இக்கருத்துடையோர் பலர் இருக்கின்றனர்.
>
> > எனது அமெரிக்க நண்பன் சொல்லுவான். நமக்கு தனியாக பகைத்துக்கொள்ள
> > வேண்டியது இல்லை. நாம் பிரபலமாகிவிட்டால் பகைவர்கள் தானாக உருவாவர்
> > என்று. ராஜராஜன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஒரு சந்நியாசியை
> > யாராவது 'யதி ராஜன்' என்று சொல்லக்கேள்விப்படிருக்கிறோமா? அது
> > எம்பெருமானார் கீர்த்தி.
>
> > க.>
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள
> தமிழ்த்தேனீ

> peopleofindia....@gmail.comhttp://www.peopleofindia.net
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com

Narayanan Kannan

unread,
Feb 22, 2009, 5:28:59 PM2/22/09
to minT...@googlegroups.com
அற்புதம் LNS !
நன்றி.

க.>

2009/2/22 LNS <lns2...@gmail.com>:

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Feb 23, 2009, 12:30:28 AM2/23/09
to minT...@googlegroups.com
LNS சார்

<தாமே தம் பிரபந்தத்தில் திருவாய்மலர்ந்தருளியது தான்.

1. பக்தாம்ருதம் - 'தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன்
(திருவாய்மொழி 9.4.9)
2. விச்வஜநாநுமோதநம் - 'எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்கும்' (7.9.11)
மற்றும் 'அடியார்க்கு இன்ப மாரியே' (4.5.10). அநுமோதநம் என்றால் இன்பம்.
>

அற்புதம். நேற்று இதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம்.
 
அடியேன்
வேங்கடேஷ்

Narayanan Kannan

unread,
Feb 23, 2009, 12:36:34 AM2/23/09
to minT...@googlegroups.com
வேங்கடேஷ்:

LNS சார் காட்டியபடி, தமிழுக்கும், வடமொழிக்கும் நடந்த கொடுக்கல் வாங்கல்
அக்கா, தம்பிக்குள் நடக்கும் பரிமாற்றம் போல் மிகவும் அந்நியோந்நியமாக
இருந்திருக்கிறது!

ஸ்ரீபாஷ்யம் வாசித்தால்தான் புரியும் எம்பெருமானார் எவ்வளவு
தமிழ்ப்பாக்களை வடமொழி வடிவில் எடுத்தாண்டுள்ளார் என்று! நம்மவர் அதையும்
எழுதி வைத்திருப்பர்!

க.>

2009/2/23 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>:

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Feb 23, 2009, 12:53:50 AM2/23/09
to minT...@googlegroups.com
கண்ணன் சார்,
 
<LNS சார் காட்டியபடி, தமிழுக்கும், வடமொழிக்கும் நடந்த கொடுக்கல் வாங்கல்
அக்கா, தம்பிக்குள் நடக்கும் பரிமாற்றம் போல் மிகவும் அந்நியோந்நியமாக
இருந்திருக்கிறது!
>

ஆமாம். ஒரு தமிழ் பாசுரத்திற்கு வடமொழியில் தனியன் ஏன் என்றும் சிலர் நினைக்கலாம். அக்காலங்களில் வடமொழியும் மிகப் பரவலாக இருந்ததால் தான் 'மணிப்ரவாள' நடையில் உரைகள் பெரும்பாலும் அமையப் பெற்றன. சிலர் வடமொழிதான் சிறந்தது என்று கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்தவர்களுக்கு ஆழ்வார்களின் தேன் போன்ற தமிழ் பாசுரங்களை உணர்த்தும் பொருட்டே வடமொழியில் தனியன் ஏற்பட்டது.
 
தமிழை சற்று தாழ்வாகப் பார்த்தவர்கள் வாழ்ந்த காலகட்டம் அது. அதனால்தான் அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் (இவர் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் இரண்டாவது புதல்வராவார்) தான் எழுதிய ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் தமிழின் பெருமை எவ்விதத்திலும் குறைந்தது அல்ல என்றுணர்த்த ஒரு சூத்திரத்தில், " ஆகையால் ஆகத்தியமும் அநாதி" என்று எழுதி வைத்தார். ஆகத்தியம் என்ற வார்த்தையின் மூலம் தமிழை குறித்தார், அநாதி என்றதன் மூலம், இதுவும் மிகப் பழமையான மொழி என்றும் அதனால் அதன் சிறப்பு எதற்கும் தாழ்ந்ததல்ல என்றும் நிறுவினார்.
 
அடியேன்
வேங்கடேஷ்


Check out the all-new Messenger 9.0! Click here.

devoo

unread,
Feb 23, 2009, 3:49:06 AM2/23/09
to மின்தமிழ்
Feb 23, 10:53 am, Thirumalai Vinjamoor Venkatesh

" ஆகையால் ஆகத்தியமும் அநாதி"

’பரமனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே’
என்னும் வரி பரம வ்யோமத்தில் ஸாம கானத்தோடு
திருப்பல்லாண்டும் இசைக்கப் படுவதைத் தெரிவிக்கிறது.

தேவ்

Reply all
Reply to author
Forward
0 new messages