கண்ணனுக்குப் பிறந்தநாள்

5 views
Skip to first unread message

maraimalai

unread,
Nov 7, 2009, 9:17:53 PM11/7/09
to min Tamil

அன்பு நண்பர் கண்ணனுக்கு,
வணக்கங்கள்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
அன்பு நண்பருக்குப் பல்லாண்டு
அறிவியல் அறிஞருக்குப் பல்லாண்டு
இணையத் தமிழ் வல்லுநர்க்குப் பல்லாண்டு
பழந்தமிழ் போற்றுவோர்க்குப் பல்லாண்டு
புதுவன புனைவோர்க்குப் பல்லாண்டு
கருத்து வேற்றுமையை மதிப்பவர்க்குப் பல்லாண்டு
வாழ்த்துகள்.
அன்புடன்,
மறைமலை இலக்குவனார்



Please have a glance of my sites below.
 
 

 

N. Kannan

unread,
Nov 7, 2009, 9:34:48 PM11/7/09
to mint...@googlegroups.com
மிக்க நன்றி பேராசிரியரே:

இவ்வாழ்த்துக்களையெல்லாம் அறிஞர் பெருமக்களிடமிருந்து பெற என்ன பாக்யம் செய்தேன்.
பல்லாண்டு, பல்லாண்டு என்று அன்று வாழ்த்திய பிள்ளைத்தமிழ் கவிஞன்
விட்டுசித்தன் என்ன பெறும் பேற்றை நமக்கு அள்ளித்தந்துவிட்டுப்
போயிருக்கிறான்.
நம் மரபு போற்றுதும்! நம் மரபு போற்றுதும்.
வாழ்க!

கண்ணன்

2009/11/8 maraimalai <marai...@yahoo.com>

shylaja

unread,
Nov 7, 2009, 9:51:47 PM11/7/09
to mint...@googlegroups.com
மின் தமிழில் சிலகாலம் காத்துவந்த மௌனவிரதத்தை உடைத்து வெளிவந்து   அண்ணலின் பக்தர் கண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் பெருமைப்படுகிறேன்!

2009/11/8 N. Kannan <navan...@gmail.com>

இம்மையே ராமா என்று இரண்டு எழுத்தினால்//

கம்பர்

தாரகை

unread,
Nov 8, 2009, 3:56:04 AM11/8/09
to மின்தமிழ்
பிறந்த நாள் வாழ்த்துகள் முனைவர் நா.கண்ணன் அவர்களே.

பிள்ளை மொழியோ அது, கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ

முத்து சிரிப்போ அது, முல்லை விரிப்போ
நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோ!

கண்ணன் பிறந்தார், எங்கள் அண்ணன் பிறந்தார்
(மின்)தமிழுக்கு புது மண(ன)ம் பிறந்ததம்மா
அண்ணன் பிறந்தார், எங்கள் அண்ணன் பிறந்தார்
"தமிழ் மரபு விக்கி" மின் நிலம் மலர்ந்ததம்மா:-))

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Annakannan

unread,
Nov 8, 2009, 4:01:57 AM11/8/09
to மின்தமிழ்
கண்ணன் இனியன் கணியன் தமிழிணையன்
வண்ணன் புகழுயர்க வான்.

வாழ்த்துகளுடன்,
அண்ணாகண்ணன்.

N. Kannan

unread,
Nov 8, 2009, 5:38:41 AM11/8/09
to mint...@googlegroups.com
எங்க அம்மாவை இன்று நினைத்துக் கொள்கிறேன்.
கண்ணன் என்று பெயர் வைத்தாளே (எட்டாவது பிள்ளை என்பதும் இறைத்திட்டமோ?)
எப்படியெல்லாம் வாழ்த்த முடிகிறது!
பெரியாழ்வாரை ஒட்டி கண்ணதாசன் இயற்றிய அப்பாடல் எனக்கும் பிடிக்கும்!

நன்றி, தாங்களும் கண்ணனே!

க.>

N. Kannan

unread,
Nov 8, 2009, 5:39:48 AM11/8/09
to mint...@googlegroups.com
2009/11/8 Annakannan <annak...@gmail.com>:

> கண்ணன் இனியன் கணியன் தமிழிணையன்
> வண்ணன் புகழுயர்க வான்.
>

சுபாவை தாங்கள் இன்கவியால் வாழ்த்திய பிறகு, ஒரு சின்ன சபலம் ;-)
இன்று தீர்ந்தது ;-)

க.>

Thiruvengada Mani T K

unread,
Nov 8, 2009, 6:04:37 AM11/8/09
to mint...@googlegroups.com

முனைவர் கண்ணனெனும்

மூதறிஞர் இவ்வுலகில்

இன்னுமோர் நூற்றாண்டு

இனிதிருந்து தமிழ் வளர்த்து

மாயவன் கண்ண னவன்

மாவருளால் வளம் பெற்று

பல நூறு தமிழ் நூல்கள்

பாங்குடனே காத்தவைக்கு

சாவாநல் வரமளித்து

சரித்திரம்  படைத்தருள

மின்தமிழர்  யாம்கூடி

இன்தமிழால் வாழ்த்துகிறோம் !

           

முனைவர் தி.க.திருவேங்கடமணி

 




From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sun, 8 November, 2009 4:09:48 PM
Subject: [MinTamil] Re: கண்ணனுக்குப் பிறந்தநாள்

The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

shylaja

unread,
Nov 8, 2009, 6:36:17 AM11/8/09
to mint...@googlegroups.com
புன்னகைதவழ்கின்றமுகத்தவர்
பொங்கும் நகைச்சுவை மேவிடும் சொல்லினர்
இன்னிசைதன்னை விரும்பும் மனத்தவர்
இலக்கியங்களை ஆயும் திறத்தவர்
கன்னிச்செந்தமிழ் நன்கறிந்த கண்ணன்(ர்)
கருதுவதைச்சொல்வதிலே மன்னன்(ர்)
கற்றவர்க்குக் கற்பகம் அன்னவர்
கலைகளிலே நாட்டம்கொண்டவர்
காண்கின்றார் பிறந்த நாளினை இன்று,
களிப்புடன் வாழ்த்துவோம்
 ’கண்ணன் அவர்கள்
 
பல்லாண்டு வாழவேண்டும்’ என்று!
*******************************************************
 
(என்பங்குக்கு நானும்!:)))
 
 


 
2009/11/8 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Nov 8, 2009, 7:00:52 AM11/8/09
to mint...@googlegroups.com
இம்மையே ராமா என்று இரண்டு எழுத்திப்பார்த்தால் இப்படியெல்லாம் பாட்டு
வரும் போலும். அதுவும் இன்சொல் மொழியாள், மைதிலி எனும் பெயருடையாள்!

அடேங்கப்பா! ஆதங்கமெல்லாம் போயிடுச்சுங்க ;-))

நன்றி, நன்றி.

க.>


2009/11/8 shylaja <shyl...@gmail.com>:

N. Kannan

unread,
Nov 8, 2009, 7:03:41 AM11/8/09
to mint...@googlegroups.com
2009/11/8 Thiruvengada Mani T K <thiruv...@yahoo.com>:

> மின்தமிழர்  யாம்கூடி
> இன்தமிழால் வாழ்த்துகிறோம் !
>
நன்றி முனைவர் தி.க.திருவேங்கடமணி.
இன்னுமொரு ஆண்டு வேலைக்கு பேட்டரியில் சார்ஜ் ஏறிடுச்சு ;-)
வாழ்க! வாழ்க ;-)

க.>

Suresh sundaresan

unread,
Nov 8, 2009, 9:49:21 AM11/8/09
to mint...@googlegroups.com
கவிதை அபாரம் மிகவும் அருமை 

அன்புடன் 
சுந்தரேசன் 

2009/11/8 தாரகை <thar...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages