நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக்கச் சுற்று அறல் மேவி - திருப்புகழ்

330 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 23, 2010, 10:04:24 PM2/23/10
to மின்தமிழ்
ஹரிகி எழுதினார்:
" I am reminded of the usage நெச்சு by Arunagiri.
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கற்று அறன்மேவி.....
It took me a long and laboured search to understand that what
Arunagiri
actually intends to convey by நெச்சு is நெய்த்து. நெய் தடவப்பட்டு.
"

’நெச்சு’ என்பது ’nessu' என்று பேச்சில் வழங்குவதை,
அதாவது - நெச்சு = ’பின்னல் சடையிட்டு’ என்ற
பொருளில் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
நெச்சு = நெஸ்ஸு, கொய்சகம் = கொஸ்ஸகம் > கொச்சகம்,
வய்தான்/வைதான் = வஸ்ஸான், சச்சரி = சஸ்ஸரி
என்றும் சிலர் உச்சரிப்பதைக் கேட்கிறோம் அல்லவா?
பெரி. சந்திரா 2002-ல் இப் பேச்சு வழக்கைக் குறித்துள்ளார் [1].

இந்தப் பேச்சுத் தமிழ் ஒலிப்பை அருணகிரியார் ஆவணப்படுத்தியதாலே,
நெய்த்து என்று பயிலும் சில இடங்களுக்குச் ’சடைபின்னிய’ என்ற
பொருள் விளங்குகிறது.

கைத் தரும் கவரி வீசிய காலால்,
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில்
தத்தி வீழ் அருவியின் திரள் சால,
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ - கம்பர்

[உரை: இருண்ட பெரிய மலையில் சடைபோல்
ஒன்றையொன்று பின்னி அறுதிகளைக்
கொண்டுள்ள அருவிகளின் திரள்போல,
உத்தரீயம் காற்றில் அலைந்தது.]

இனி, திருப்புகழில் நெய்த்து எனப் பயிலும்
இடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

-------

முதலில் ஒரு சொல்லின் பொருள்: ”அறல்”
’நெய்த்து’ என்று பயிலும் திருப்புகழ்களில்
‘அறல்’ என்று வந்தால் உடனே ‘கரு மணல்’
என்று பொருள் எழுதி விடுகின்றனர்.
இது, பொருந்தாது. கருமணலுக்கும்
கூந்தலுக்கும் என்ன தொடர்பு?
மதறாஸ் லெக்ஸிகன் அறலுக்குக் கொடுக்கும்
பல பொருள்களில் ஒன்றுதான் ‘கரு மணல்’

MTL:
அறல் aṟal
, n. < அறு¹-. 1. Becoming detached by cutting; அறுகை. 2. Flowing
water; அறுத்துச் செல்லும் நீர். எக்கர் போழ்ந்தறல் வார (கலித். 29). 3.
Laving;

அரித்தோடுகை. மட்டறனல் யாற்று (புறநா. 177). 4. Water; நீர். (மாறன.
மேற்கோ. 723.) 5. Wave, ripple; நீர்த்திரை. (திவா.) 6. Black sand found
on the sea-

shore; கருமணல். தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி (மணி. 20, 41). 7. Curl;
மயிர்நெறிப்பு. (பெரும்பாண். 162, உரை.) 8. Low jungle; சிறுதூறு.
(திவா.)

9. Happiness, prosperity; கலியாணம். (மாறன. பக். 438.)

இதில் (6) கரு மணல் என்பதை விட ’தண்ணீரால் பலவகை வளைவுகள் தோன்றச்
செய்த மணல்குவியல்’ என்றால் பொருந்தும். (7) Curl; மயிர்நெறிப்பு.
(பெரும்பாண். 162, உரை.)
அதற்குப் பொருந்தும். (2), (3), (4),(5), (7), (8) எல்லாம் இந்த வளைவுப்
பொருள் உள்ளதால்
(6) தண்ணறல் தண்ணீரின் அடியில் தெரியும் அறுதியையுடைய வளைவுகள். வெறும்
‘கரு மணல்’
என்று எழுதினால் வளைவு, பின்னல், திருகுதல் பொருள் மறைந்துவிடுகிறது.

கலித்தொகையில் ‘தண்ணறல்’ உண்டு. அதையும், நச்சினார்க்கினியர்
உரையும் படித்தால், தண்ணறல் (மணிமேகலை) கருமணல் அல்ல என்று விளங்கும்.
[மணிமேகலைக்குப் பழைய உரை இல்லை.]

பாலைக் கலி 26:
“காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப்போல் கழல்குபு
தாதொடுந் தளிரொடுந் தண்ணறல் தகைபெற”

கூடிய காதலரின் முடி போல வளைந்து நெளிந்து
அழகுற்றது என்று பொருளுரைக்கிறார் நச்சினார்க்கினியர்:
“தண்ணிதாகிய அறுதியினையுடைய மணல்
கழன்று வீழ்ந்த தாதாலுந் தளிராலுங் காதலரைக்
கூடினவருடைய மயிர்போல அழகு பெற” என்கிறார்.

அதனால், திருகித் திருகி சுருளாய், வளைந்து
அறுதியுடன் இருக்கும் எந்த ஒரு பொருளுக்கும் ‘அறல்’
என்று சொல்லலாம். முசு என்னும் கருங்
குரங்கின் வளைந்த கைகள் போல இருப்பதும்
அறல் தான். இதனை அருணகிரியாரே
திருப்புகழில் பாடியுள்ளார். ‘அறல்’ என்னும் சொல்
வரும் இடங்களை எல்லாம் ஆய்ந்தால்
இன்னும் நன்கு விளங்கும்.

-------------

இனி ‘நெய்த்து’ என்றால் கூந்தலை
பல பகுதிகளாக அறுதியிட்டுப் பிரித்து,
பின்னல் சடையிட்டு முடிதல் என்னும்
பொருளைத் திருப்புகழ்ப் பாக்களுக்குச்
சொல்லலாம் என்று எண்ணுகிறேன்.
நெய்த்தை அடுத்து வரும் அறலுக்கு
’கருமணல்’ என்று சொல்லத் தேவையில்லை.
[மணிமேகலையில் வரும் தண்ணறல்
என்பதற்கு நச்சினார்க்கினியர் பொருள்
பொருந்தும் எனப் பார்த்தோம்.]

கலி. 55
மின்னொளிர் அவிர் அறல் இடைபோழும் பெயலேபோல்
‘ஒளிர்கின்ற மின்னினது விளங்குகின்ற அறுதிகள்
இடையே பிளந்தோடும் மேகங்கள் போலே’ (நச். உரை)

பெரும்பாண். 162 உரை: ‘குறிதாகிய அறலைத் தன்னிடத்தே
கொண்ட மயிரினையுமுடைய’ (நச்.)

அறல் குழல் பாணி தூங்கியவரொடு (சிறு. 162)
இங்கே வரையறுத்த (அறுதியிட்ட) தாள அறுதி - மகளிர் ஆடல்
குறிப்பிடப்படுகிறது.

விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் - சிலம்பு

அறல் நறுங் கூந்தலும், அளக வண்டு சூழ்
நிறை நறுந் தாமரை முகமும், - கம்பன்

‘உண்தேன் அறற்கூந்தல்’ - நளவெண்பா.
ஐம்பால் போல் பகுத்துப் பின்னிய கூந்தல்.
ஆப்பிரிக்க பெண்கள் தம் நாடுகளிலும்,
அமெரிக்காவிலும் மயிரைப் பகுத்துப்
பல்சடையாகத் திரித்து அதன்மேல் பல்வண்ண
(செயற்கை) முத்துக்களால் அலங்கரிப்பதைக் காணலாம்.

அதேபோல்,
ஐம்பால் என்று பல்சடைகளாகப் பிரிந்துப் பின்னி
அழகூட்டுவது பழந்தமிழர் வழக்கம். சங்க இலக்கியத்தில்
ஐம்பால் என்று பார்க்கலாம். காராணை விழுப்பரையன் வளமடலிலும்
இச்செய்தி உண்டு: "ஓதி வலம்புரி முத்து ஊசலும்ஆட முகச்
சீத நகைத் தரளத் திங்கள் வியர்ப்ப" (கண்ணி 188).
கஜபுரி என்னும் எலிபண்டா குகைகளில்
ஈசன் அருகே நிற்கும் பார்வதி சிற்பத்தில் கொண்டையில்
இருந்து முத்துச் சரங்கள் தூங்கும்.

இரும்புச் சீப்பால் சுருட்டை முடியை ஐந்தாகப் பகுப்பது:
’எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால்’ -கலி.
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு -கலி. 59
மணி கட்டிய ஐம்பால்:
வரை வளர் முழவு விம்ம மணி கிளர் ஒலி ஐம்பால் - சீவ.

-----

திருப்புகழ் உதாரணங்கள்

(அ) நெச்சு - nessu எனும் நாட்டார்வழக்கு என்று கொள்வோம்.

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்
கச்சிக்கச் சுற்று அறல் மேவி - திருப்புகழ்

சுருள்கள் சுற்றிய கற்றைச் சடைகளாக
நெய்யப்பட்டு (நெச்சு), குளிர்ந்த பிச்சிப்பூக் கச்சிதமாய்ச் சூடி,

http://www.kaumaram.com/thiru_uni/tpun0526.html
(ஆ)

நிறத்து மதர்த்து *நெய்த்த அறல் ஓதி* நிழற்குள் அளி குலத்துடன்
ஒன்றி ...

பொருள்: ஒளிவிட்டு, செழிப்புற்று,
*பின்னி நெய்யப்பட்ட சுருள்சடைகள் நிரம்பிய கூந்தல்* நிழலில் மொய்க்கும்
வண்டுகளின் கூட்டத்துடன் பொருந்தி,

(ஓலை தரித்த குழைக்கும் - திருப்புகழ்)

(இ) இதமுறு விரைபுனல் முழுகி .... திருப்புகழில்

வளர் கொண்டல் என, அறல் என, இசை அளி என, நள் இருள் என நிறம் அது கருகி,
நெடுகி
நெறிவு பட நெய்த்து முசுவின் திரி கை ஒத்த சுருள் குந்தளமும் ..

(கரும்) குரங்காகிய முசுவின் கைகள் போல், பின்னப்பட்ட (நெய்த்து) சுருள்
கூந்தல் அறல்
விளங்கியது.

(ஈ) நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ - திருப்புகழ்

பின்னிய சடைச்சுருள்கள் ஆற்றுத் தரையில் பார்க்க முடிகிற அறல்களோ? மேகமோ?

நா. கணேசன்

Reference 1"
http://www.treasurehouseofagathiyar.net/15400/15450.htm
பெரி. சந்திரா 2002-ல் காட்டியுள்ளார்:
"> நெய்த்து என்பதை நெச்சு என்று சொல்ல முடியும் என்றால்,

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
யகரம் சகரமாவது இயல்பான திராவிட ஒலியியல்.
நெயவு > நெசவு.
இங்கே நெச்சு என்பது நெய்த்து என்பதன் சிதைவுதான் என்று
கருதவேண்டியில்லை.
நெய்/நெசு வினை; நெச்சு > வினையெச்சம்.
புகு > புக்கு; தொகு > தொக்கு என்பதுபோல்.
எங்கள் வட்டாரமாகிய வடகொங்குநாட்டில்
"வேலையை செஸ்ஸு..." என்று சொல்வதைக் கேட்கலாம்.
அது செய் > செசு என்ற மாற்றம்.
அதேபோல் "நெஸ்ஸு" (நெய்து) என்றும் சொல்வார்கள்.

இல்லாவிட்டாலுமே யகர/தகரங்கள் சகரமாவது இயல்பு. "

Hari Krishnan

unread,
Feb 24, 2010, 10:51:47 PM2/24/10
to mint...@googlegroups.com


2010/2/24 N. Ganesan <naa.g...@gmail.com>


இந்தப் பேச்சுத் தமிழ் ஒலிப்பை அருணகிரியார் ஆவணப்படுத்தியதாலே,
நெய்த்து என்று பயிலும் சில இடங்களுக்குச் ’சடைபின்னிய’ என்ற
பொருள் விளங்குகிறது.

கைத் தரும் கவரி வீசிய காலால்,
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில்
தத்தி வீழ் அருவியின் திரள் சால,
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ - கம்பர்

[உரை: இருண்ட பெரிய மலையில் சடைபோல்
ஒன்றையொன்று பின்னி அறுதிகளைக்
கொண்டுள்ள அருவிகளின் திரள்போல,
உத்தரீயம் காற்றில் அலைந்தது.]

இனி, திருப்புகழில் நெய்த்து எனப் பயிலும்
இடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.



-து என்ற விகுதிக்கு ‘உடையது’ என்ற பொருள் வரும்.  நெய்த்து என்றால் நெய்யை உடையதாக, அல்லது நெய்யைப் பூசப்பட்டதாக என்பது பொருள்.  சீதைக்கு ராமனுடைய தோற்றத்தை (அடையாளம் சொல்லும் முகமாக) அனுமன் விவரிக்கும்போது இப்படிச் சொல்கிறான்: 


'நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்
பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ?

நீண்டு=நீளமானதாகவும், 
குழன்ற=திரண்டதாகவும், 
நெய்த்து=நெய்பூசப்பட்டு நிகுநிகுப்பு (பளபளப்பு) உடையாதகவும்
இருட்டைப்போல் அடர் கருப்பாகவும்,  
நெறிந்து=ஒழுங்குபட்டு (சீவப்பட்டு)
செறிந்து=அடர்த்தியானதாக விளங்கி
நெடுநீலம் பூண்டு=இயற்கையாகவே கருநிறத்தை உடையதாகி
புரிந்து=முறுக்கப்பட்டு
சரிந்து=(பின்பக்கமாகத்) தாழ்ந்து
கடைசுருண்டு=நுனியிலே சுருட்டப்பட்டு
புகையும் நறும் பூவும்=நறும் புகை ஊட்டப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு

இப்படியெல்லாம் விளங்குவதுதான் பொதுவான ஆண்களுடைய தலைமுடியாகிய குஞ்சி.

ஆனால், அம்மா, என் பிரபு ராமன் இருக்கிறானே, அவன் கானகம் வந்த நாள் முதலாக இவை எதையும் செய்வதில்லை.  ஆகவே, இவையெல்லாம்

வேண்டும்அல்ல=அவனுக்கு இவை எவையுமே வேண்டுவன அல்ல.
தெய்வவெறியே கமழும் நறுங்குஞ்சி=அவனுக்கே உரிய, மற்ற நறுமணமூட்டிகளின் துணை தேவைப்படாத இயற்கையான மணத்தை உடைய சிகை,
சடை ஆயினது=எருக்கம்பால் பூசப்பட்டு, திரிக்கபட்டு, சடையாகிக் கிடக்கிறது.

இனிமேதான் இருக்கிறது ஸ்ட்ரோக்.

மழை என்றுரைத்தல் இழிவன்றோ?

இப்படி எந்த நறுமணங்களும் ஊட்டப்படாமல், பராமரிக்கப்படாமல், எருக்கம்பாலைத் தடவி சடையாக்கிக் கொண்ட அவனுடைய இருண்ட சிகையை மேகம் என்று சொல்வது, அவனுடைய முடியின் அடர்த்தியையும், இருட்சியையும், திரட்சியையும், தன்மையையும் குறைத்துக் கூறுவதாக ஆகும் தாயே.  

இப்ப சொல்லுங்க.  நெய்த்து என்றால் பின்னப்பட்டு என்று பொருளா, நெய் தடவப்பட்டு என்று பொருளா?

-து என்ற விகுதி, உடையது என்ற பொருளில் பற்பல இடங்களில் ஆளப்பட்டுள்ளது.  ‘வெங்கட்டு’ என்று யானைகளைக் குறிப்பது வழக்கம்.  (எங்க அப்பா வெங்கட்ராமனையும் வெங்கட்டு என்றுதான் குறிப்பார்கள்.  அவர் வேற வெங்கட்டு.  நல்ல மனுசன் பாவம்.)  வெங் கண் து.  சிவந்த கண்களை உடையது என்பது பொருள்.  

நினைவுக்கு வரும் திருக்குறளைச் சொல்கிறேன்: 

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

யமன் என்பவன் எப்படி இருப்பான்னு இதுவரைக்கும் எனக்குத் தெரியாது.  இதோ என்னுளத்தில் பெரும்போரை உண்டாக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்ணால் அறிந்தேன்.  கூற்று என்பது பெரிய பெரிய கட்டு.  கண்து.  கண்களை உடையது.  

இப்படிப் பலநூறு காட்டுகளைத் தர முடியும்.  -து என்ற விகுதிக்கு, உடையது என்பது பொருள்.  கட்டு என்று முடியும் இந்தக் குறளுக்குக் ‘கண்களை உடைத்து’ என்றுதான் பரிமேலழகர் உரைகண்டிருக்கிறார்.  நெய்த்து என்றால் பின்னப்பட்டு என்றால், கட்டு என்றால் இமைகள் மூடப்பட்டு என்று பொருள் வருமா?  Because that is the only natural and possible corollary.  



-------

முதலில் ஒரு சொல்லின் பொருள்: ”அறல்”
’நெய்த்து’ என்று பயிலும் திருப்புகழ்களில்
‘அறல்’ என்று வந்தால் உடனே ‘கரு மணல்’
என்று பொருள் எழுதி விடுகின்றனர்.
இது, பொருந்தாது. கருமணலுக்கும்
கூந்தலுக்கும் என்ன தொடர்பு?

நான் நகர்ப்புறத்தவன்.  ஆறுகளை எப்போதோ ஒருமுறை சென்று பார்த்து அறிந்தவன்.  இருந்தாலும், என்னுடைய பார்வைக்கு அகப்பட்டதைச் சொல்கிறேன்.  ஆற்றின் அடிப்பரப்பில், கருமணல் வரிவரியாக ஓடியிருக்கும்.  குவிந்து கிடக்காது.  மணல் நிறத்தோடு கருமை வரிவரியாக ஓடும்.  சென்னை மெரீனா பீச்சில் கூட இப்படிக் கருமணல் கலந்து பரந்து கிடப்பதைக் காணலாம்.  கரிமண்நிலம் என்பது வெள்ளைக்காரன் வாயில் கோரமண்டல் என்று திரிந்தது.  (நரசையா சிரி்க்கிறார்தானே?)

சென்னைக் கடற்கரை மணலில்கூட, வரிவரியாகத்தான் ஓடியிருக்கும்.  செவ்வரியோடிய கண்களிரண்டினில்.... என்று சொல்வதைப்போல், மணற்பரப்பு கருவரி ஓடித்தான் கிடக்கும்.  கருமணலுக்கும் கூந்தலுக்கும் உள்ள தொடர்பு இதுதான்.  ராமனுடைய சிகை, சடைத்துக் கிடக்கும் சிகைக்கு ஒப்பிட மேகத்தை எடுத்தால், அது சிகைக்கு இழுக்கு என்ற கம்பன் வாக்கையும், மேற்படி அறல் விளக்கத்தையும் இன்னொருமுறை மனத்தில் நிறுத்திப் பார்க்கவும்.  

கிருபாநந்நத வாரியார் இந்தப் பாடலுக்கு உரை எழுதும்போது, கருமணல் என்றுதான் உரைகண்டிருக்கிறார்.  வாரியாருக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லிவிடுங்கள்.  நீங்கள் சொல்லும் மேகமேமேகமே பொருளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.  

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Feb 25, 2010, 1:25:48 AM2/25/10
to மின்தமிழ்

On Feb 24, 9:51 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> கரிமண்நிலம் என்பது வெள்ளைக்காரன்
> வாயில் கோரமண்டல் என்று திரிந்தது. (நரசையா சிரி்க்கிறார்தானே?)

இல்லை, ஐயா. ’மண்டல்’ என்ற சொல் காட்டிக் கொடுத்துவிடுகிறதே.
மண்டலம், கருமணல் அல்ல சோழமண்டலம் (Coromandel).
சோர- என்று வடமொழியில் கூட சோழன் ஆகிவிட்டான் :-)

சிறந்த ஓவியர் கே.சி.எஸ். பணிக்கர் ஆரம்பித்த
சோழமண்டல் ஓவிய கிராமம் நாம் அறிவோம் அல்லவா?
http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=109d7818-06dc-4a42-b3ba-9e538aba217b&CATEGORYNAME=nirma

ஹாப்ஸன் - ஜாப்ஸன் அகராதி தரும் விளக்கம்:
The name is in fact Chôṛamaṇḍala, the Realm of Chôṛa; this being the
Tamil form of the very ancient title of the Tamil Kings who reigned at
Tanjore. This correct explanation of the name was already given by
D'Anville (see Éclaircissemens, p. 117), and by W. Hamilton in 1820
(ii. 405), by Ritter, quoting him in 1836 (Erdkunde, vi. 296); by the
late M. Reinaud in 1845 (Relation, &c., i. lxxxvi.); and by Sir Walter
Elliot in 1869 (J. Ethnol. Soc. N.S. i. 117). And the name occurs in
the forms Cholamaṇḍalam or Solamaṇḍalam on the great Temple
inscription of Tanjore (11th century), and in an inscription of A.D.
1101 at a temple dedi<->

J.R.A.S., N.S. v. 148. He had said the same in earlier writings, and
was apparently the original author of this suggestion. [But see
above.]

cated to Varāhasvāmi near the Seven Pagodas. We have other quite
analogous names in early inscriptions, e.g. Ilamaṇḍalam (Ceylon),
Cheramaṇḍalam, Tondaimaṇḍalam, &c.

Chola, as the name of a Tamil people and of their royal dynasty
appears as Choḍa in one of Asoka's inscriptions, and in the Telugu
inscriptions of the Chālukya dynasty. Nor can we doubt that the same
name is represented by *SW=RA of Ptolemy who reigned at *)ARKATOU=
(Arcot), *SW/R-NAC who reigned at *)/ORQOURA (Wariūr), and the *SW=RAI
NOMA/DES who dwelt inland from the site of Madras.*

The word Soli, as applied to the Tanjore country, occurs in Marco Polo
(Bk. iii. ch. 20), showing that Chola in some form was used in his
day. Indeed Soli is used in Ceylon.† And although the Choromandel of
Baldaeus and other Dutch writers is, as pronounced in their language,
ambiguous or erroneous, Valentijn (1726) calls the country Sjola, and
defines it as extending from Negapatam to Orissa, saying that it
derived its name from a certain kingdom, and adding that mandalam is
'kingdom.'‡ So that this respectable writer had already distinctly
indicated the true etymology of Coromandel.

Some old documents in Valentijn speak of the 'old city of Coromandel.'
It is not absolutely clear what place was so called (probably by the
Arabs in their fashion of calling a chief town by the name of the
country), but the indications point almost certainly to Negapatam.

The oldest European mention of the name is, we believe, in the Roteiro
de Vasco da Gama, where it appears as Chomandarla. The short Italian
narrative of Hieronymo da Sto. Stefano is, however, perhaps earlier
still, and he curiously enough gives the name in exactly the modern
form "Coromandel," though perhaps his C

See Bp. Caldwell's Comp. Gram., 18, 95, &c.

See Tennent, i. 395.

"This coast bears commonly the corrupted name of Choromandel, and is
now called only thus; but the right name is Sjola-mandalam, after
Sjola, a certain kingdom of that name, and mandalam, 'a kingdom,' one
that used in the old times to be an independent and mighty empire." --
Val. v. 2.

e.g. 1675. -- "Hence the country . . . has become very rich, wherefore
the Portuguese were induced to build a town on the site of the old
Gentoo (Jentiefze) city Chiormandelan." -- Report on the Dutch
Conquests in Ceylon and S. India, by Rykloof Van Goens in Valentijn,
v. (Ceylon) 234.
had originally a cedilla (Ramusio, i. f. 345v.). These instances
suffice to show that the name was not given by the Portuguese. Da Gama
and his companions knew the east coast only by hearsay, and no doubt
derived their information chiefly from Mahommedan traders, through
their "Moorish" interpreter. That the name was in familiar Mahommedan
use at a later date may be seen from Rowlandson's Translation of the
Tohfat-ul-Mujāhidīn, where we find it stated that the Franks had built
fortresses "at Meelapoor (i.e. Mailapur or San Tomé) and Nagapatam,
and other ports of Solmundul," showing that the name was used by them
just as we use it (p. 153). Again (p. 154) this writer says that the
Mahommedans of Malabar were cut off from extra-Indian trade, and
limited "to the ports of Guzerat, the Concan, Solmondul, and the
countries about Kaeel." At page 160 of the same work we have mention
of "Coromandel and other parts," but we do not know how this is
written in the original Arabic. Varthema (1510) has Ciormandel, i.e.
Chormandel, but which Eden in his translation (1577, which probably
affords the earliest English occurrence of the name) deforms into
Cyromandel (f. 396b). [Albuquerque in his Cartas (see p. 135 for a
letter of 1513) has Choromandell passim.] Barbosa has in the
Portuguese edition of the Lisbon Academy, Charamandel; in the Span.
MS. translated by Lord Stanley of Alderley, Cholmendel and Cholmender.
D'Alboquerque's Commentaries (1557), Mendez Pinto (c. 1550) and Barros
(1553) have Choromandel, and Garcia De Orta (1563) Charamandel. The
ambiguity of the ch, soft in Portuguese and Spanish, but hard in
Italian, seems to have led early to the corrupt form Coromandel, which
we find in Parkes's Mendoza (1589), and Coromandyll, among other
spellings, in the English version of Castanheda (1582). Cesare
Federici has in the Italian (1587) Chiaramandel (probably pronounced
soft in the Venetian manner), and the translation of 1599 has
Coromandel. This form thenceforward generally prevails in English
books, but not without exceptions. A Madras document of 1672 in
Wheeler has Cormandell, and so have the early Bengal records in the
India Office; Dampier (1689) has Coromondel (i. 509); Lockyer (1711)
has "the Coast of Cormandel"; A. Hamilton (1727) Chormondel (i. 349);
ed. 1744, i. 351; and a paper of about 1759, published by Dalrymple,
has "Choromandel Coast" (Orient. Repert. i. 120-121). The poet Thomson
has Cormandel:

"all that from the tract
Of woody mountains stretch'd through gorgeous Ind
Fall on Cormandel's Coast or Maiabar."
Summer.

The Portuguese appear to have adhered in the main to the correcter
form Choromandel: e.g. Archivio Port. Oriental, fasc. 3, p. 480, and
passim. A Protestant Missionary Catechism, printed at Tranquebar in
1713 for the use of Portuguese schools in India has: "na costa dos
Malabaros que se chama Cormandel." Bernier has "la côte de
Koromandel" (Amst. ed. ii. 322). W. Hamilton says it is written
Choramandel in the Madras Records until 1779, which is substantially
correct. In the MS. "List of Persons in the Service of the Rt. Honble.
E. I. Company in Fort St. George and other places on the Coast of
Choromandell," preserved in the Indian Office, that spelling continues
down to 1778. In that year it is changed to Coromandel. In the French
translation of Ibn Batuta (iv. 142) we find Coromandel, but this is
only the perverse and misleading manner of Frenchmen, who make Julius
Caesar cross from "France" to "England." The word is Ma'bar in the
original. [Alboquerque (Comm. Hak. Soc. i. 41) speaks of a violent
squall under the name of vara de Coromandel. ]

----

’தண் அறல்’ என்பதற்கு ’அறுதியுடைய குளிர்ந்த மணல்’
என்று பொருள். கருமணல் என்று மதறாஸ் லெக்சிகன் சொல்வது
மணிமேகலையில் அடுத்துள்ள வார்த்தைகளை வைத்தே.
எனவே அதை எல்லா இடங்களிலும் திருப்புகழில் சொல்ல
வேண்டியதில்லை.

இதை வாரியாருக்கு முதலில் செய்தவர் வ. சு. செ. பிள்ளை.
லெக்சிகனின் தாக்கம்.

அறல் (அறுதி அறுத்தது) எதற்கும் வரும் என்று காட்டுகள்
கொடுத்தேனே.

(அ) கலி. 55


மின்னொளிர் அவிர் அறல் இடைபோழும் பெயலேபோல்
‘ஒளிர்கின்ற மின்னினது விளங்குகின்ற அறுதிகள்
இடையே பிளந்தோடும் மேகங்கள் போலே’ (நச். உரை)

(ஆ) விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் - சிலம்பு

(இ) அறல் குழல் பாணி தூங்கியவரொடு (சிறு. 162)


இங்கே வரையறுத்த (அறுதியிட்ட) தாள அறுதி - மகளிர் ஆடல்
குறிப்பிடப்படுகிறது.

இங்கெல்லாம் - 3 எடுத்துக்காட்டுகளிலும் -, அறல் என்றால் கருமணல் என்றா
எழுதமுடியும்?
அதைத்தான், அறல் என்று வரும் எல்லா இடங்களிலும்
ஸ்ரீ வ. சு. செ. பிள்ளை செய்கிறார். (அதை, வாரியார்
தொடர்கிறார் என்பது உங்கள் மடலால் தெரிகிறது.)

நச்சினார்க்கினியரின் உரையில் இருந்து காட்டியும் உள்ளேன்.
அறுதி உடையது அறல் என்றால் போதும்.

பாலைக் கலி 26:
“காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப்போல் கழல்குபு
தாதொடுந் தளிரொடுந் தண்ணறல் தகைபெற”

கூடிய காதலரின் முடி போல வளைந்து நெளிந்து
அழகுற்றது என்று பொருளுரைக்கிறார் நச்சினார்க்கினியர்:
“தண்ணிதாகிய அறுதியினையுடைய மணல்
கழன்று வீழ்ந்த தாதாலுந் தளிராலுங் காதலரைக்
கூடினவருடைய மயிர்போல அழகு பெற” என்கிறார்.

அதனால் தான் எழுதினேன்:


>> முதலில் ஒரு சொல்லின் பொருள்: ”அறல்”
> ’நெய்த்து’ என்று பயிலும் திருப்புகழ்களில்
> ‘அறல்’ என்று வந்தால் உடனே ‘கரு மணல்’
> என்று பொருள் எழுதி விடுகின்றனர்.
> இது, பொருந்தாது. கருமணலுக்கும்
> கூந்தலுக்கும் என்ன தொடர்பு?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 25, 2010, 2:58:50 AM2/25/10
to மின்தமிழ்

On Feb 24, 9:51 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

>-து என்ற விகுதிக்கு ‘உடையது’ என்ற பொருள் வரும். நெய்த்து என்றால் நெய்யை
> உடையதாக, அல்லது நெய்யைப் பூசப்பட்டதாக என்பது பொருள்.

ஆம். நெய் + து. நெய் நெசவு என்ற பொருளில் நெசவினை உடைய
என்றும் சொல்லலாமே.

> [வெங்கட்டு] வெங் கண் து. சிவந்த கண்களை உடையது என்பது பொருள்.

ஆம்.

எய் என்ற பெயர்ச்சொல் - முள், அம்பு. முள்ளம்பன்றிக்கு எய் என்றே பெயர்.
எய்த்து = முள்ளம்பன்றியினுடைய.

கலியாணத்தில் மொய்விருந்து உண்டு.
மொய்த்துக் கொடுக்கும் பரிசில் மொய் என்னும் பெயர்ச்சொல்.

காய்த்து (< காய் + து) = காயினை உடைய

முய் < முய்த்தல், முசுமுசு என்று இருத்தல்.
முயல், முயல்தல் எல்லாம் இந்த வேர்ச்சொல் தான்.
‘அவர் முசுவாய் இருக்கிறார்’ - கொங்குநாட்டு வழக்கு
(தினந்தோறும் கேட்பது) என்றால் 'he's busy now' எனப்
பொருள். பழமைபேசி மணி ‘முசுவாய் இருக்கிறார்’
போன்ற தொடர்களை அடிக்கடி தன் பதிவில் ஆள்வதைப்
பாருங்கள். busy ஆக உள்ள குரங்குவகை முசு.
சோழர்களின் முன்னோன் முசுகுந்தன் குரங்காகச்
சித்தரிக்கப்படுகிறான். கையில் குந்தம் உள்ள
முசுகுந்தன் (சிலம்பு). கோயில் புராண சிற்ப, சித்திரங்களில்
குரங்காக முசுகுந்தன் காட்டப்படுகிறான்.
busy person = முயவன், முசுவன்.

அடுத்து, குய் என்னும் பெயர்ச் சொல்லைப் பார்ப்போம்.
kuy - prob. onom. 1. Seasoning with spices; தாளிப்பு. கமழ்குய் யடிசில்
(புறநா. 10). 2. Spicy, seasoned curry; தாளித்த கறி.

பொரியுங் குய்யும் வறைகளு நிவந்த வாசம் (சீவக. 2971). 3 3. Burnt odours,
incense, odorous smoke; நறும்புகை. (பிங்.) 4.

Frankincense; சாம்பிராணி. (தைலவ. தைல. 94.)

குய்த்து = குய் + து, தாளிப்பை உடைய கறி எனலாம்.

முய் : முசுமுசு தொடர்பு போல, குய் : குசுகுசு.
பானையைச் சூளையில் சுடுகையில் குயவன்
grog எனப்படும் வைக்கோல், மரப்பொடி உபயோகிப்பான்.
இதனால் தாளிப்பதுபோன்ற சத்தமும், சில வாயுக்களும்
வெளிப்படுகின்றன. இக்காரணத்தால், குயவன், குசவன் (potter)
என்ற மக்கட்பெயர் .

நெசவன் < நெய்-/நெசவு.

நெய் = நெசவு என்ற பொருள் உடைய பெயர்ச் சொல்.
நெய்யின் அடிப்படைப் பொருள் பின்னுவது, பிணைப்பதுதான்.
நெய் = இரத்தம். உடலெங்கும் ஓடி எல்லா உறுப்பிலும்
பின்னிக் கிடப்பது. 6, 7 ஆயிரம் ஆண்டுக்கு முன்னமே
இந்தியாவில் நெசவு கண்டுபிடித்தாயிற்று. அதற்கான
தொழிற்பெயர் நெய் (இரத்தம், ghee) இவர்றில் இருந்து
நெய்தல் என்று போயிருக்கிறது. அண்மையில்,
சிந்து நாகரிகத்தில் பட்டு நெய்தல் இருந்ததை,
பட்டைக் கண்டுபிடித்துள்ளனர். பட்டு என்ற தமிழ்ச்
சொல் வட இந்தியாவில் பரவலாக உள்ளது.
பள, பள என்று பட்டொளி வீசுவதால் பட்டு.
திருமணம் போன்றவற்றில் நெற்றியில் கட்டப்படுவதால்
பட்டம், பட்டை.

நெய் = நெசவுக்கான பெயர்ச்சொல்.
நெய் + து = நெசவு (பின்னல்) உடைய என்றும் பொருள்
உண்டு.

அறல் என்றால் கருமணல் என்ற பொருளை
எல்லா இடங்களிலும் திருப்புகழில் கொள்ளத் தேவையில்லை
என்பது நச்சினார்க்கினியர் உரைகொண்டு
கருதுகிறேன்.

தமிழ் இலக்கியத்தில் பெண்களின் சுருட்டை முடி
ஆப்பிரிக்கக் கரும்பெண்கள் சிகையலங்காரம்
பல சடையாகிச் செய்வதுபோல் செய்வது
- பின்னிச் செய்யும் அறலுக்கும் நெய்த்துச்
செய்கிற சடை என்று கொள்ளலாம்.
அப்படிப்பட்ட உரையை 4 திருப்புகழ்களுக்குச்
சொல்லியுள்ளேன்.
http://groups.google.com/group/mintamil/msg/1fdb9aa1f9c86b11

மெய்த்த திருவள்ளுவனார் (சோமேச. முது. 41).
மெய் = உண்மை என்னும் பெயர்ச்சொல்.
அதுபோல்.
நெய் = நெசவு என்னும் பெயர்ச்சொல்

நெய்த்து < நெய்+து = நெசவினை (அதாவது, பின்னலை, சடையை) உடைய

நெய்த்து என்பதன் ஒப்பு கை + து = கைத்து என்பது போல் எனக் கொள்க.
திருக்குறளில் “தன்கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை” என்பதில் “தன்
கையில் உள்ளதாக ஒன்று இருக்கச் செய்பவன் வினை”

நிறத்து மதர்த்து *நெய்த்த அறல் ஓதி* நிழற்குள் அளி குலத்துடன்

ஒன்றி ... (ஓலை தரித்த குழைக்கும் - திருப்புகழ்)


பொருள்: ஒளிவிட்டு, செழிப்புற்று,
*பின்னி நெய்யப்பட்ட சுருள்சடைகள் நிரம்பிய கூந்தல்* நிழலில்
மொய்க்கும்

வண்டுகளின் கூட்டத்துடன் பொருந்தி,

நெய்த்த அறல் ஓதி = ’நெய்பூசிய, கருமணல் கூந்தல்’
- இப்பொருள் பொருந்தவில்லை என்று நினைக்கிறேன்.

அன்புடன்
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Feb 25, 2010, 3:45:37 AM2/25/10
to mint...@googlegroups.com


2010/2/25 N. Ganesan <naa.g...@gmail.com>




நெய்த்த அறல் ஓதி = ’நெய்பூசிய, கருமணல் கூந்தல்’
- இப்பொருள் பொருந்தவில்லை என்று நினைக்கிறேன்.

அன்புடன்
நா. கணேசன்


இதை ஒப்புக்கொள்கிறேன்.  நெய்த்து என்றால் நெய் தடவப்பட்டு என்று பொருள்தான்.  ஆனால், நெய்த்த பிறகு நிகழும் செயலையும் தன்னுட்கொண்டதாக இந்தச் சொல் ஆளப்பட்டிருக்கிறது என்பது மெய்தான்.  

பாடல் முழுவதையும் நினைவுக்குக் கொண்டுவரும் போது, இன்னொரு து அகப்பட்டது.

நச்சுத் துச்சொப்பிதச்சுக் குட்டத்
          துட்டக் கட்டத் தசிகாண
     நடத்தி விடத்தை யுடைத்தபடத் தினில்
        நடநவில் கடலிடை படுபடை தொடுமுகில்
          நகைமுக திருவுறை மணிமார்பா

இங்கே, நச்சு து என்றால், நச்சை உண்டவனான பீமன் என்று பொருள்படுகிறது.  நச்சை உண்டதனாலே உடலுக்குள்ளே அதனை உடையவனாகிய பீமன்.  

உடைய தன்மையையும், அதற்கு முன்னும் பின்னும் நிகழும் நிகழ்வையும் உள்ளிட்டுச் சொல்வதானாலே, நெய்த்து என்றால், நெய்பூசி, சீவிக் குழல் முடிந்து என்ற பொருள் பெறப்படுகிறது என்பது உண்மைதான்.

ஆனால், அறல் என்பது மிகத் தெளிவாகக் கருமணல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  நெளிநெளியாக மணற்பரப்பினூடே கலந்துகிடக்கும் கருமணனைப் போன்ற என்ற பொருள் பொருத்தமானதாகவே எனக்குப் படுகிறது.  

Hari Krishnan

unread,
Feb 25, 2010, 3:50:56 AM2/25/10
to mint...@googlegroups.com


2010/2/25 Hari Krishnan <hari.har...@gmail.com>



ஆனால், அறல் என்பது மிகத் தெளிவாகக் கருமணல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  நெளிநெளியாக மணற்பரப்பினூடே கலந்துகிடக்கும் கருமணனைப் போன்ற என்ற பொருள் பொருத்தமானதாகவே எனக்குப் படுகிறது.  



இங்கே


முழுப் பாடலையும் பொருள் விளக்கத்தையும் காணலாம். கோபாலசுந்தரம் அவர்களுடைய உரை.  பேராசிரியர் பசுபதி அவர்களின் சகோதரரான நடராஜன் அவர்களும் (திருப்புகழ் பணியில் பல்லாண்டு காலமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்) பல பாடல்களுக்கு உரை செய்திருக்கிறார்.  

கருமணலை ஒத்ததாய் என்ற பொருளே இங்கும் தரப்பட்டுள்ளது; வாரியார் உரையிலும் தரப்பட்டுள்ளது.  

N. Ganesan

unread,
Feb 25, 2010, 7:47:54 AM2/25/10
to மின்தமிழ்

On Feb 25, 2:50 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> கருமணலை ஒத்ததாய் என்ற பொருளே இங்கும் தரப்பட்டுள்ளது; வாரியார் உரையிலும்
> தரப்பட்டுள்ளது.
>

எல்லாம் லெக்சிகன் தொடங்கி வைத்த பொருள் - தண்ணறல் = கருமணல்.

ஆனால், அப்பொருள் வருகிற மணிமேகலை வருகிற வரிகள் வேறு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 25, 2010, 9:14:34 AM2/25/10
to மின்தமிழ்

On Feb 25, 2:45 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/25 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > நெய்த்த அறல் ஓதி = ’நெய்பூசிய, கருமணல் கூந்தல்’
> > - இப்பொருள் பொருந்தவில்லை என்று நினைக்கிறேன்.
>
> > அன்புடன்
> > நா. கணேசன்
>
> இதை ஒப்புக்கொள்கிறேன்.

நெச்சுப் பிச்சி ...
http://www.kaumaram.com/thiru_uni/tpun0526.html

நஞ்சு - நச்சு என்று வல்லெழுத்தாவது போல,
முதல்சொல் நெஞ்சு (= நெய்ஞ்சு) நெச்சு என்று வல்லெழுத்தானதா
என்றும் பாருங்கள். (நெஞ்சு என்று ஏன் இதயத்திற்குப் பெயர்?
நெய் (=இரத்தம்) ஓடுகிற இடத்தாலா? )

செஞ்சு (< செய்- ), பெய்ஞ்சு (பெய்-), ... போல் நெஞ்சு/நெய்ஞ்சு...
இங்கே மற்ற வார்த்தைகளையும், பிற அடிகளின் எதுகை
நோக்கியும் நெய்ஞ்சு- நெச்சு என்றானது. நெய்ஞ்சு
சடை பின்னலிட்டு என்று பொருள்.

பெண்களின் கூந்தலைப் பல்சடையாகத் திரிக்கும்
வழக்கம் அறல் என்ற சொல்லால் இலக்கியத்தில்
பல இடங்களில் வரும். அதனை முழுதுமாக
விட்டுவிட முடியவில்லை. அறல் = கருமணல் என்பது
பொருந்தவில்லை. நச்சினார்க்கினியர் உரையைப்


பாருங்கள்.

பெரும்பாண். 162 உரை: ‘குறிதாகிய அறலைத் தன்னிடத்தே


கொண்ட மயிரினையுமுடைய’ (நச்.)

உண்தேன் அறற் கூந்தல் - நளவெண்பா

இங்கெல்லாம், பல்சடை, ஐம்பால் வழக்கங்களை
சுத்தமாக விட்டுவிடுகிறபோது தான்
கருமணல் என்ற லெக்சிகன் பொருள் வரும்.
அதைத்தான் ஸ்ரீ வ. சு. செ. பிள்ளை செய்துள்ளார்.

ஆனால், லெக்சிகனுக்கு மணிமேகலை மூலம்.
அந்த மூலவரிகள் வெண் நரை முழுதும்
மூடப் பட்ட ஒரு கிழட்டு மூதாட்டி பற்றிப்
பேசுகிறது. அங்குள்ள தண்ணறலுக்கும்
நச்சர் உரைப்பொருளே போதுமானதாய் உள்ளது.

செம்மணல் கூட வெண் மணல் ஆகலாம்:
”விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி
உதையகுமரன் தன்பால் சென்று
நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது” (மணி. 20:38-44)

ஆற்றின் குளிர்ச்சி தருகிற வெளிர்செம் மணல் (தண்ணறல்)
திரிந்து வெண்மணல் ஆனதுபோல், கிழவியின்
சுருட்டிய அறல் கூந்தல் வெண்மையாகிவிட்டது.
தண்ணறல் மணல் எந்த நிறத்திலும் இருக்கலாம்.
அனேகமாக, தண்ணறல் இருக்கும் நிறம் sand color :
http://www.eclectic-ware.com/Eclectic-ware/Rock_Solid/Corian/Sand.JPG
எனவே, இதனைக் கரு மணல் என்பது பிழை.
கருப்பு - வெண்மை வேற்றுமை மயிருக்குப் பொருந்தும்.
ஆனால் ஆற்றுமணல் கருமை நிறத்தில் இல்லை.

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது
சீத்தலைச் சாத்தனாரின் வார்த்தைத் தேர்வுகள்.
அவருக்குக் தண்ணறல் என்பதற்குப் பதிலாகப் பாட்டில்
கரு மணல் என்று பாவிக்கத் தெரியாதா?
அப்படிச் செய்தால், வெண் மணல் என்று தொடங்கும்
அடுத்த வரிக்கும் மிகப் பொருந்துமே.
எத்தனையோ தமிழ்ச் செய்யுள்களில்
ஆற்று மணலின் நெளி, நெளிகளும்,
பெண்களின் சுருள் குழல்களும் உவமை.
இரண்டுக்கும் பெயர் ஒன்றுதான்: அறல்.
ஆற்று அறல் சிவப்பு நிறம், மயிரின் அறல்
கருமை நிறம். ஒப்புமைக்கு நெளித் தன்மைதான்
பிரதான காரணமே ஒழிய, நிறமல்ல காரணம்.
இவ்விரு வகை அறல்களின் நிறங்கள்
வெவ்வேறானவை. எனவே, மணிமேகலை வரிகளில்
இருந்து கருமணல் = தண்ணறல் என்பது பிழை.

சாத்தனார், கரு மணல் என்னாது, தண்ணறல் என்கிறார்.
அது ஏன்? அந்த இடத்தில் ’தண்ணறல்’ என்றால்
கருமணலையே சீத்தலைச் சாத்தனார் சுட்டவில்லை
என்று நினைக்கிறேன். பொதுவான மணல் நிறமே
மணிமேகலைக்குப் போதும். லெக்சிகன் தான்
’கருமணல்’ என்ற பொருளை வலிந்து ஏற்றுகிறது.

(அ) பெரும்பாண். 162 உரை: ‘குறிதாகிய அறலைத்


தன்னிடத்தே கொண்ட மயிரினையுமுடைய’ (நச்.)

(ஆ) நெய்த்த அறல் ஓதி (திருப்புகழ்)
(இ) ‘உண்தேன் அறற்கூந்தல்’ - நள
(ஈ) அறல் நறுங் கூந்தலும், - கம்பன்

மணிமேகலை வரிகளுக்கு, நரை மூதாட்டியின்
அறலாகச் சுருட்டிய மயிர் தன் வண்ணம் (கருமை) திரிந்து
வெண்மையானது. ஆனால், மணலின் இயற்கையான
நிறம் கருமையல்ல. ஒருவகை வெளிறிய செம்மையே
(sand color) :
http://www.eclectic-ware.com/Eclectic-ware/Rock_Solid/Corian/Sand.JPG

திருப்புகழ் உரைகளில் அறல் என்றால் கருமணல் என்னும்
உரைகள் பொருந்தவில்லை. தண்ணறல் நிறம் வேறு ஆதலால்,
அறல் என்றால் சுருட்டி நெய்ஞ்ச/நெச்ச, ஐம்பால் போலும்
சுருள்குழல்கள். இலக்கிய ஆதாரம் இவ்வாறு முடியைப்
பின்னுதற்கு நிறைய உள்ளன.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Feb 25, 2010, 11:19:34 PM2/25/10
to mint...@googlegroups.com


2010/2/25 N. Ganesan <naa.g...@gmail.com>
லெக்சிகனைத் தொகுத்தவர்கள் யார் என்ற பட்டியலைப் பார்த்தேன்.  (முதல் வால்யூம், பக்கம் xiv)  பின்வருவோர் Editorial Staff என்று குறிக்கப்பட்டுள்ளனர்.

சு. வையாபுரிபிள்ளை. Editor

வி. நாராயண ஐயர் Asst Editor

வை மு கோபாலகிருஷ்ணமாசாரியார், Sanskrit and Tamil Pandit

எஸ் சோமசுந்தர தேசிகர் Additional Tamil Pandit

பி ஆர் மீனாட்சி சுந்தரம் முதலியார் Assistant

லெக்சிகன் தொகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுடைய பெயர்கள் மட்டுமே பத்துப் பக்கங்களுக்கு விரிகிறது.  

ஆக வையாபுரி பிள்ளை, வைமுகோ உட்பட யாருமே மணிமேகலை படித்ததில்லை என்பது இதனாலே நிறுவப்படுகிறது.  முட்டாள்களை வச்சிக்கிட்டு ஏண்ணா லெக்சிகன் தொகுத்தாங்க?  

உங்க கிட்ட இருக்கும் லெக்சிகன் தொகுதியை என்ன ஊத்தி எரிச்சீங்க அப்படிங்கறதுக்கு ஒரு கடுதாசி போடுங்க.  (உங்ககிட்ட இருக்கற தொகுதியும், எங்கிட்ட இருக்கற தொகுதியும் ஒரேநாளில் வாங்கப்பட்டவை; என் ஸ்கூட்டரில் தூக்கிக்கொண்டு வரப்பட்டவை; பிறகு என்னிடத்தில் அலமாரியிலும், உங்களிடத்தில் கப்பல் மூலமாக அமெரிக்காவிலும் இருக்கின்றன.)  ஒரே நாளில் வாங்கினதை ஒரேநாளில் கொளுத்திடலாம்.  தேதி குறிச்சப்புறம் ஒரு வரி கடுதாசி போடுங்க.  எதை வச்சு கொளுத்தலாம்னு சொல்லிக்கொடுங்க.  இங்க ராக்கெட் ஃப்யூயல் எல்லாம் கிடைக்கறதில்லை.  

amal eronimus

unread,
Feb 26, 2010, 3:52:31 AM2/26/10
to mint...@googlegroups.com
மண் = தரை

மண் + தளம் = மண்தளம் , மண்டலம்

மண்டலம் = பெரிய அளவிலான நிலப் பரப்பு

மண்டலம்  = வட்ட வடிவிலான நிலப்பரப்பு , எனவே வட்டம் என்றும் ஆரியப் படுகிறது


2010/2/25 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அமல்
24 /36 அ. களிமார்
குளச்சல்
குமரி - 6 2 9 2 5 1
பேச: 9791185225

N. Ganesan

unread,
Feb 26, 2010, 7:11:13 AM2/26/10
to மின்தமிழ்

On Feb 25, 10:19 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:

> லெக்சிகனைத் தொகுத்தவர்கள் யார் என்ற பட்டியலைப் பார்த்தேன்.  (முதல் வால்யூம்,


> பக்கம் xiv)  பின்வருவோர் Editorial Staff என்று குறிக்கப்பட்டுள்ளனர்.
>

பல பெரியவர்கள் தொகுத்ததுதான் லெக்சிகன். ஆனால், சில இடங்களில்
தமிழில் வேறு இடங்களில் உள்ள செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்
சற்றே மாற்றவேண்டியுள்ளது. ஓர் உதாரணம்: ஈழம் என்ற வார்த்தை
சிங்களம் என்ற சொல்லில் இருந்து தரப்பட்டிருக்கும். இன்றைய
மொழியியலார் அதை ஒப்புக்கொள்வதில்லை. திராவிட வேர்ச்சொல்
அகராதியில் பார்த்தால், லெக்சிகனில் உள்ள வார்த்தைகள் சமஸ்கிருத
மூலம் என்பவை - மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும்.

மணிமேகலை படிக்கவில்லை என்று சொல்லவில்லை.
மற்ற நூல்களில் உள்ள ‘தண்ணறல்’ படிக்கவில்லை என்றேன்.

அறல் = கருமணல் என்று எழுதியவர் அறலுக்கான எல்லா
இலக்கிய ஆட்சிகளையும் பார்க்கவில்லை போதும்.
உங்கள் மடல்களையே படித்துப் பாருங்கள்.
சோரமண்டல் - கருமணல் தொடர்பு, ஆற்றுமணல் கருநிறம்,....
உலகெங்கும் ஆற்று மணல் பெருவாரியாக சிலிக்கா என்னும்
கனிமம் ஒரே நிறம், வெளுத்த செந்நிறம்தானே.
லெக்சிகனில் கருமணல் என்று எழுதியவர் ‘தண்ணறல்’
என்று மணிமேகலையில் பயிலும் தொடர், கலித்தொகையில்
இருப்பதையும் அறியாதிருந்தக்கலாம் அல்லவா?
நச்சினார்க்கினியர் அதே ‘தண்ணறல்’ என்னும் தொடருக்கு
கருமணல் என்றதில்லை. “தண்ணிதாகிய அறுதியினையுடைய மணல்”
என்று நச்சர் சொல்வது நல்ல பொருத்தமாகப் பட்டது. சொன்னேன்.

கொங்குவேள் செய்த பெருங்கதையை பார்த்தால்,
அறல் வெள்ளி போல் நிறம் என்று சொல்லலாம்.
(இதை ஏன் லெக்சிகன் விட்டுவிட்டது? :) )

மகத காண்டம், 12. அமாத்தியர் ஒடுங்கியது

“புகழ்வரை மார்பிற் பூந்தார் அண்ணல்
அகழும் போழ்தில் நிகழ்வ கேண்மதி
இருமுழத் தெல்லையுள் வரிமுகம் பொறித்த
பொன்னிறத் தேரை போதரும் பின்னர்
மும்முழத் தெல்லையுள் தெண்ணிறங் குயின்றது
தோற்ற மினிதாய் நாற்ற மின்னாப்
பருமணல் உண்டது பண்ணுநர் வீழ
உட்காழ் ஈன்ற லொருகோ லரையின்
எட்பூ நிறத்தொடு கட்கா முறுத்தும்
விளங்கறல் வெள்ளியின் வீசுறும் என்றதன்”

உடனே, அறல் என்றால் வெள்ளி மணல் என்றும் சொல்லலாமே.

அறல் = மணல் என்று எடுத்தால் பெரும்பான்மையும்
வெளிர் சிவப்பாயும், ஒரோவழி வெண்மை, கருமை என்றும்
சொல்வது சிறப்பு. தண்ணறல் = “தண்ணிதாகிய அறுதியினையுடைய மணல்”
என்று நச்சினார்க்கினியர் தெரியாமலா சொன்னார்? என்றும்
கேட்க இடமுண்டே.

இத் திருப்புகழின் முதற் சொல்லுக்கு வருவோம்:
நைய்ந்து > நய்ஞ்சு > நச்சு என்று வல்லெழுத்தானது.
அதுபோல்
நெய்ந்து > நெய்ஞ்சு > நெஞ்சு > நெச்சு என்று வல்லெழுத்தானது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 26, 2010, 7:22:24 AM2/26/10
to மின்தமிழ்

On Feb 26, 2:52 am, amal eronimus <nanjilma...@gmail.com> wrote:
> மண் = தரை
>
> மண் + தளம் = மண்தளம் , மண்டலம்
>

மண்டலம் = என்றால் வட்டம் முதன்மைப் பொருள்.
மண் + தளம் அல்ல.

மண்டலம் திராவிடச் சொல்தான்.
வள்- என்ற வேரின் போலி மள்-
(வ-/ம- மாறுபாடு பல: விழி > முழி (மலையாளம்),
விஞ்சு > மிஞ்சு, வானம் > மானம், ....
வெள்ளைமருதீசர் > மல்லிகார்ஜுனர். மருத மரம் = அர்ஜுன மரம்.
ஸ்ரீசைலம் முதல்மருது, தஞ்சையில் இடைமருது,
புடைமருது நெல்லை - பெரிய சிவத்தலங்கள். மல்லிகார்ஜுனர்
பெயராய்வை முன்னம் எழுதியுள்ளேன்.)

வள்ளை ‘வளைவுடைய’ > மள்ளை/மண்டை (Cf. அள்ளை/அண்டை).
மண்டியிடுதல், மண்டூகம் (தவளை), ... இவை போல,
மண்டலம் என்பதிலும் வளைவு, வட்டம் என்ற பொருள்
உள்ளது காணவும்.

நா. கணேசன்

> மண்டலம் = பெரிய அளவிலான நிலப் பரப்பு


>
> மண்டலம்  = வட்ட வடிவிலான நிலப்பரப்பு , எனவே வட்டம் என்றும் ஆரியப் படுகிறது
>

> 2010/2/25 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
> > On Feb 24, 9:51 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
> > > கரிமண்நிலம் என்பது வெள்ளைக்காரன்
> > > வாயில் கோரமண்டல் என்று திரிந்தது.  (நரசையா சிரி்க்கிறார்தானே?)
>
> > இல்லை, ஐயா. ’மண்டல்’ என்ற சொல் காட்டிக் கொடுத்துவிடுகிறதே.
> > மண்டலம், கருமணல் அல்ல சோழமண்டலம் (Coromandel).
> > சோர- என்று வடமொழியில் கூட சோழன் ஆகிவிட்டான் :-)
>
> > சிறந்த ஓவியர் கே.சி.எஸ். பணிக்கர் ஆரம்பித்த
> > சோழமண்டல் ஓவிய கிராமம் நாம் அறிவோம் அல்லவா?
>

> >http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=109d7...

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Feb 26, 2010, 7:32:23 AM2/26/10
to மின்தமிழ்

On Feb 26, 6:22 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Feb 26, 2:52 am, amal eronimus <nanjilma...@gmail.com> wrote:
>
> > மண் = தரை
>
> > மண் + தளம் = மண்தளம் , மண்டலம்
>
> மண்டலம் = என்றால் வட்டம் முதன்மைப் பொருள்.
> மண் + தளம் அல்ல.
>
> மண்டலம் திராவிடச் சொல்தான்.
> வள்- என்ற வேரின் போலி மள்-
> (வ-/ம- மாறுபாடு பல: விழி > முழி (மலையாளம்),
> விஞ்சு > மிஞ்சு, வானம் > மானம், ....
> வெள்ளைமருதீசர் > மல்லிகார்ஜுனர். மருத மரம் = அர்ஜுன மரம்.
> ஸ்ரீசைலம் முதல்மருது, தஞ்சையில் இடைமருது,
> புடைமருது நெல்லை - பெரிய சிவத்தலங்கள். மல்லிகார்ஜுனர்
> பெயராய்வை முன்னம் எழுதியுள்ளேன்.)
>
> வள்ளை ‘வளைவுடைய’ > மள்ளை/மண்டை (Cf. அள்ளை/அண்டை).
> மண்டியிடுதல், மண்டூகம் (தவளை), ... இவை போல,
> மண்டலம் என்பதிலும் வளைவு, வட்டம் என்ற பொருள்
> உள்ளது காணவும்.
>

அண்டம் என்ற சொல் கோளம், முட்டை என்ற பொருளில்
சம்ஸ்கிருதத்தில் மிகப் பழமையானது. இதன் மூலம் தெரியவில்லை
என்று பல மொழியியலாலர் எழுதியுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு
முன் ஜப்பானிய அறிஞர் ஒருவர் சிந்துமொழிகள், நாகரிகம் நிபுணர்
எழுதிய்ருந்தது நினைவுக்கு வருகிறது.

அண்டம் < மண்டை (மண்டியிடுதல், மண்டூகம் (தவளை), ...).
சொல்லின் முதலுள்ள மகரம் அழிதல் பல உதாரணங்களை
நண்பர் எல்லெஸ் (இங்குள்ளார், பழைய ஐஐஎஸ்ஸி) கொடுத்தார்.
அலர் < மலர், ... அதுபோல், அண்ட < மண்டை.


> நா. கணேசன்
>
>
>
> > மண்டலம் = பெரிய அளவிலான நிலப் பரப்பு
>
> > மண்டலம்  = வட்ட வடிவிலான நிலப்பரப்பு , எனவே வட்டம் என்றும் ஆரியப் படுகிறது
>

ஆரியப்படுகிறது?

வடசொல் ஆகிறது என்று பொருளா?
அல்ல,
அறியப்படுகிறது என்பதன் எழுத்துப்பிழையா?

N. Ganesan

unread,
Feb 26, 2010, 8:45:38 AM2/26/10
to மின்தமிழ்

ஹரிகி,

மணிமேகலை:
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் 08-010
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர்ப் பள்ளி

”அறல் விளங்கு நிலா மணல்” (மணி.)
நெளி அறுதிகளை உடைய நிலாப் போன்ற வெண் மணல்.

இதே போல, முருகன் அல்லது அழகில் பாருங்கள்.

முருகன் அல்லது அழகு, திரு. வி. க.
”அந்நுண்மைப் பொருள் யாண்டும் நீக்கமற நிற்பது.
யாண்டும் நிறைந்துள்ள அந்நுண்பொருள் சில வேளைகளில்
சில இடங்களில் தனதிருப்பை உயிர்கட்கு அறிவுறுத்தவோ
என்னவோ மின்னொளிபோல் தன் (நுண்ணிய) தோற்றத்தைப்
புலப்படுத்துகிறது. இளஞாயிறு தனது செங்கதிரை
நீலக்கடலில் பரப்பும்போது அப்பரவையிடை அழகு
ஒளிர்கிறது. அஞ்ஞாயிறு தனது இளவெயிலை, பசுங்கடல்
பொங்கியெழிந்தாலென உருண்டு திரண்டு பரந்து ஒளி
நுழைதற்கு மிடமின்றிச் செறிந்து மிடைந்து சரிந்து
சாய்ந்து நிற்குங் குறிஞ்சிக் காடுகளின் பச்சை மேனியில்
உமிழும்போது அவ்விடை அழகு அரும்புகிறது. திங்கள்
தன் பால்நிலவை, வெள்ளை வெளேலென வெள்ளி அறல்
படர்ந்தாலென மிளிரும் வெள்ளிய மணல்மீது காலும்போது
அங்கே அழகு ஒழுகுகிறது. இவ்வாறு சில வேளைகளில்
சில இடங்களில் அழகு தனது நுண்ணிய காட்சி வழங்குதல்
உணர்க.”

”திங்கள் தன் பால்நிலவை, வெள்ளை வெளேலென
வெள்ளி அறல் படர்ந்தாலென மிளிரும் வெள்ளிய மணல்மீது”
திரு. வி. க. போல்தான், தண்ணறலுக்கு நச்சினார்க்கினியர்
பொருள்கொள்கிறார்.
மணலின் நிறம் உலகோர் அறிவர்தாமே.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 26, 2010, 9:30:27 AM2/26/10
to மின்தமிழ்
ஹரிகி> > [வெங்கட்டு] வெங் கண் து. சிவந்த கண்களை உடையது என்பது பொருள்.

இன்னொரு குறிப்பும் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
பலருக்கும் தெரிந்த செய்திதான்.

”கண்" என்னும் சொல்லின் ஒரு பொருள் “இடம்” ஆகும். சான்றாகச் சென்னைத்
தமிழகராதி: "Place, site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு
என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும்.
கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக்
கேட்கலாம். கொங்கில் அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே - அந்த இடம், அந்த
இடத்திலே. "நீ அக்கட்டாலே போய் உட்காரு" என்கிறோம்.

பாண்டிநாட்டில் அங்கண் + து = அங்கட்டு, இங்கண் + து = இங்கட்டு.
அங்கட்டு, இங்கட்டு என்னும் செந்தமிழ் அங்கிட்டு, இங்கிட்டு என்றும்,
அங்கண், இங்கண் என்பவை நெல்லையில் அங்கனை, இங்கனை
என்றும் வழங்குகின்றன.

நல் + து = நன்று, பால் + து = பாற்று
உள் + து = உண்டு, தாள் + து = தாட்டு
மன் + து = மன்று, அன் + து = அற்று
விண் + து = விண்டு, கண் + து = கட்டு

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகளில் ஜீன் ப்ரிஃஸூல்ஸ்கி
விஷ்ணு தமிழ்ச் சொல் மூலம் காட்டியிருப்பதாய் எழுதியுள்ளார்.
விண் + து = விண்டு. விண்-/விள்- > விஷ்ணு தோன்றியிருக்கணும்.
மண் மண்ணு, பெங்களூர் பெங்களூரு போல், விண் விண்ணு (விஷ்ணு).

நா. கணேசன்

> சொல்லியுள்ளேன்.http://groups.google.com/group/mintamil/msg/1fdb9aa1f9c86b11

N. Ganesan

unread,
Feb 26, 2010, 9:34:39 AM2/26/10
to மின்தமிழ்

On Feb 26, 8:30 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> ஹரிகி> > [வெங்கட்டு] வெங் கண் து.  சிவந்த கண்களை உடையது என்பது பொருள்.
>
> இன்னொரு குறிப்பும் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
> பலருக்கும் தெரிந்த செய்திதான்.
>
> ”கண்" என்னும் சொல்லின் ஒரு பொருள் “இடம்” ஆகும். சான்றாகச் சென்னைத்
> தமிழகராதி: "Place, site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு
> என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும்.
> கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக்
> கேட்கலாம். கொங்கில் அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே - அந்த இடம், அந்த
> இடத்திலே. "நீ அக்கட்டாலே போய் உட்காரு" என்கிறோம்.
>
> பாண்டிநாட்டில் அங்கண் + து = அங்கட்டு,  இங்கண் + து = இங்கட்டு.
> அங்கட்டு, இங்கட்டு என்னும் செந்தமிழ் அங்கிட்டு, இங்கிட்டு என்றும்,
> அங்கண், இங்கண் என்பவை நெல்லையில் அங்கனை, இங்கனை
> என்றும் வழங்குகின்றன.
>
> நல் + து = நன்று, பால் + து = பாற்று
> உள் + து = உண்டு, தாள் + து = தாட்டு

கொங்கில் ‘அவனை வெளியே தாட்டு’
என்றால் ‘அவனை வெளியே நடக்கச்செய்’
என்ற பொருள்.

தாள் + து = தாட்டு.
நடக்கத் தாள் (பாதம்) வேண்டுமே.

devoo

unread,
Feb 26, 2010, 10:10:35 AM2/26/10
to மின்தமிழ்
Feb 26, 6:22 am, "N. Ganesan"

>.>மண்டலம் திராவிடச் சொல்தான்.


வள்- என்ற வேரின் போலி மள்-
(வ-/ம- மாறுபாடு பல: விழி > முழி (மலையாளம்),
விஞ்சு > மிஞ்சு, வானம் > மானம், ....<<

‘மண்ட்’ எனும் வேரின் அடிப்படையில் மண்ட:, மண்டக:, மண்டநம், மண்டப:,
மண்டரீ, மண்டூரம் போன்ற சொற்கள்; இவை அனைத்துமே ’வள்’ என்னும்
வேரிலிருந்து ஆரியப்பட்டனவா ?


Feb 26, 6:32 am, "N. Ganesan"


>>அண்டம் < மண்டை (மண்டியிடுதல், மண்டூகம் (தவளை), ...).
சொல்லின் முதலுள்ள மகரம் அழிதல் பல உதாரணங்களை<<


வடமொழியின் அகர முதலான சொற்கள் எல்லாமே மகரத்தை அழித்து
ஆரியமாக்கப்பட்டனவா ?


Feb 26, 8:30 am, "N. Ganesan"

>> விண் விண்ணு (விஷ்ணு) <<

விண் விஷ்ணு ஆவதுபோல் மண் ’மஷ்ணு’ , கண் ‘கஷ்ணு’, எண் ‘எஷ்ணு’, பண்
‘பஷ்ணு’
என்றாகுமா ?

’விண்’ என்றே ஒரு பதம் உள்ளது வடமொழியில், அதற்கு மலம் என்று பொருள் .
அதன் தமிழ் வேர் எது ?

Methodology இதற்கெல்லாம் தேவையில்லையா ?


தேவ்

வினோத் ராஜன்

unread,
Feb 26, 2010, 10:39:17 AM2/26/10
to மின்தமிழ்
http://en.wikipedia.org/wiki/Pseudoscientific_language_comparison

Pseudoscientific language comparison is a form of pseudoscience that
has the objective of establishing historical associations between
languages by naive postulations of similarities between them. [...]

Pseudoscientific language comparison is usually performed by persons
with little or no specialization in the field of comparative
linguistics. It is the most widespread type of linguistic
pseudoscience (another example being pseudo-etymology)

The most common method applied in pseudoscientific language
comparisons is to search two or more languages for words that seem
similar in their sound and meaning. While similarities of this kind
often seem convincing to laypersons, linguistic scientists consider
this kind of comparison to be unreliable for two primary reasons.
First, the method applied is not well-defined: the criterion of
similarity is subjective and thus not subject to verification or
falsification, which is contrary to the principles of the scientific
method. Second, the large size of all languages' vocabulary makes it
easy to find coincidentally similar words between languages. [...]

தமிழில் பலர் செய்து கொண்டிருப்பது இது தான் என்பது சொல்லித்
தெரியத்தேவையில்லை.

http://www.zompist.com/proto.html

வீட்டிலேயே மேற்கண்டவையை கிண்டுவது எப்படி என்று விலாவாரியாக உள்ளது.

V

வினோத் ராஜன்

unread,
Feb 26, 2010, 10:43:39 AM2/26/10
to மின்தமிழ்
ஆக, எந்த மொழியிலிருந்தும் எந்த மொழியையும் தருவிக்கலாம். தேவை ஒரு
அகராதி, கொஞ்சம் மூளை அவ்வளவு தான்.

V

N. Ganesan

unread,
Feb 26, 2010, 11:08:10 AM2/26/10
to மின்தமிழ்

On Feb 26, 9:10 am, devoo <rde...@gmail.com> wrote:
> Feb 26, 6:22 am, "N. Ganesan"
>
> >.>மண்டலம் திராவிடச் சொல்தான்.
>
> வள்- என்ற வேரின் போலி மள்-
> (வ-/ம- மாறுபாடு பல: விழி > முழி (மலையாளம்),
> விஞ்சு > மிஞ்சு, வானம் > மானம், ....<<
>
> ‘மண்ட்’ எனும் வேரின் அடிப்படையில் மண்ட:,  மண்டக:, மண்டநம், மண்டப:,
> மண்டரீ, மண்டூரம் போன்ற சொற்கள்; இவை அனைத்துமே ’வள்’ என்னும்
> வேரிலிருந்து ஆரியப்பட்டனவா ?
>

may be. I think Th. Burrow has mentioned these words.

Esp. set of words with -ND-. One of them is paNDita,
see H. W. Bailey (Iranist), T Burrow, A. Parpola.

> Feb 26, 6:32 am, "N. Ganesan">>அண்டம் < மண்டை (மண்டியிடுதல், மண்டூகம் (தவளை), ...).
>
> சொல்லின் முதலுள்ள மகரம் அழிதல் பல உதாரணங்களை<<
>
> வடமொழியின் அகர முதலான சொற்கள் எல்லாமே மகரத்தை அழித்து
> ஆரியமாக்கப்பட்டனவா ?
>

which linguist has said that?

>
> >> விண் விண்ணு (விஷ்ணு) <<
>
> விண் விஷ்ணு ஆவதுபோல் மண் ’மஷ்ணு’ , கண் ‘கஷ்ணு’, எண் ‘எஷ்ணு’, பண்
> ‘பஷ்ணு’
> என்றாகுமா ?
>

As I said, Indira Parthasarathy menions prof. Jean PRZYLUSKI
(linguist):
http://www.bookrags.com/research/przyluski-jean-eorl-11/
who has derived ViSNu from Dravidian. Tho' IP has not given the
source, we can ask him. For one thing Prof. Indira P. worked as Tamil
prof.
in Przyluski's Poland.

I noted down the reference once: it must in Przyluski's paper
on Vishnu in Quarterly J. of Mythic Society (Bangalore).
will try to get it some day, & if you have it, pl. pass it on.

anbudan,
N. Ganesan

N. Ganesan

unread,
Feb 26, 2010, 11:11:44 AM2/26/10
to மின்தமிழ்

On Feb 26, 9:43 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> ஆக, எந்த மொழியிலிருந்தும் எந்த மொழியையும் தருவிக்கலாம். தேவை ஒரு
> அகராதி, கொஞ்சம் மூளை அவ்வளவு தான்.
>
> V
>

Linguistics does not work that way.

NG

வினோத் ராஜன்

unread,
Feb 26, 2010, 11:53:30 AM2/26/10
to மின்தமிழ்
Yup. Absolutely Correct, True Linguistics doesn't really work that
way..

Well NG, you do know that Pseudo-Linguistics only works this way,
don't you ?

V

devoo

unread,
Feb 26, 2010, 2:14:21 PM2/26/10
to மின்தமிழ்
Feb 26, 8:30 am, "N. Ganesan"
//விண் + து = விண்டு. விண்-/விள்- > விஷ்ணு தோன்றியிருக்கணும்.
மண் மண்ணு, பெங்களூர் பெங்களூரு போல், விண் விண்ணு (விஷ்ணு)//

இது போன்ற ஊகங்களுக்கெல்லாம் வடமொழி இலக்கணத்தில் இடமில்லை; வேரின்
அடிப்படையில் வ்யுத்பத்தி கூறியே சொற்கள் கிளப்பதை நிறுவுவர் வட நூலார்;
’தோணியிருக்கணும், வந்திருக்கணும், போயிருக்கணும்’ என்பதைத்தான் வினோத்
Pseudoscientific language comparison என்கிறார்.

முதல் வரியில் விள், விண், விண்டு என்றபின் அடுத்த வரியில் விண்ணு என்று
சௌகரியம்போல் மாற்றுவது நகைப்பிக்கிடம் தருவது. இந்த வரிசையில்
படிப்படியாக இச்சொல் மாற்றம் பெற்றது என்றால் வடமொழியில் எங்கெங்கு
இச்சொற்கள் கையாளப்பட்டன என்பதையும் ஆதாரத்தோடு நிறுவ வேண்டும்.
Animation செய்வது ஆராய்ச்சி ஆகாது.


//இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகளில் ஜீன் ப்ரிஃஸூல்ஸ்கி
விஷ்ணு தமிழ்ச் சொல் மூலம் காட்டியிருப்பதாய் எழுதியுள்ளார்.//

‘................தஸ்மாத் தேவோச்யதே விஷ்ணு: ’விச்’தாதோ: ப்ரவேசநாத் ‘
என்னும் மிகத்தெளிவான விளக்கம் இருப்பது இ. பா ஐயாவுக்குத் தெரியாது
போலும். மிகவும் ஆழ்ந்த பொருள் பொதிந்த, மெய்யியல் சார்ந்த, பல வேதாந்தக்
கருத்துகளுக்கு அடிப்படையாக அமைந்த சொல்.

வெள்ளைத்தோல் விளக்கம்தான் ஏற்புடையது என்றால் மேலும் பேச இடமில்லை.
‘Invading the Sacred’ - இதற்கு அரங்கனார் ஏன் இவ்வளவு முதன்மை தந்து
எழுதினார்
என்பது புரிகிறது


தேவ்

> ...
>
> read more »

srirangammohanarangan v

unread,
Feb 26, 2010, 2:34:13 PM2/26/10
to mint...@googlegroups.com
On 2/27/10, devoo <rde...@gmail.com> wrote:
Feb 26, 8:30 am, "N. Ganesan"
//விண் + து = விண்டு. விண்-/விள்- > விஷ்ணு தோன்றியிருக்கணும்.
மண் மண்ணு, பெங்களூர் பெங்களூரு போல், விண் விண்ணு (விஷ்ணு)//

இது போன்ற ஊகங்களுக்கெல்லாம் வடமொழி இலக்கணத்தில் இடமில்லை; வேரின்
அடிப்படையில் வ்யுத்பத்தி கூறியே சொற்கள் கிளப்பதை நிறுவுவர் வட நூலார்;
’தோணியிருக்கணும், வந்திருக்கணும், போயிருக்கணும்’ என்பதைத்தான் வினோத்
Pseudoscientific language comparison என்கிறார்.

முதல் வரியில் விள், விண், விண்டு என்றபின் அடுத்த வரியில் விண்ணு என்று
சௌகரியம்போல் மாற்றுவது நகைப்பிக்கிடம் தருவது. இந்த வரிசையில்
படிப்படியாக இச்சொல் மாற்றம் பெற்றது என்றால் வடமொழியில் எங்கெங்கு
இச்சொற்கள் கையாளப்பட்டன என்பதையும் ஆதாரத்தோடு நிறுவ வேண்டும்.
Animation  செய்வது ஆராய்ச்சி ஆகாது.


//இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகளில் ஜீன் ப்ரிஃஸூல்ஸ்கி
விஷ்ணு தமிழ்ச் சொல் மூலம் காட்டியிருப்பதாய் எழுதியுள்ளார்.//

‘................தஸ்மாத் தேவோச்யதே விஷ்ணு: ’விச்’தாதோ: ப்ரவேசநாத் ‘
என்னும் மிகத்தெளிவான விளக்கம் இருப்பது இ. பா ஐயாவுக்குத் தெரியாது
போலும். மிகவும் ஆழ்ந்த பொருள் பொதிந்த, மெய்யியல் சார்ந்த, பல வேதாந்தக்
கருத்துகளுக்கு அடிப்படையாக அமைந்த சொல்.

வெள்ளைத்தோல் விளக்கம்தான் ஏற்புடையது என்றால் மேலும் பேச இடமில்லை.
‘Invading  the Sacred’  - இதற்கு அரங்கனார் ஏன் இவ்வளவு முதன்மை தந்து
எழுதினார்
என்பது புரிகிறது


தேவ்
 
கண்டு  கொண்டீர்களா?
 
ஸ்ரீராமகிருஷ்ணரிடம்    ஒரு   ஆங்கிலம்   படித்த  பாபு  வந்து  போவதுண்டு.    அவர்   பகவத்  கீதை,   மற்ற  ஹிந்து  சாத்திரங்கள்    ஆகியவற்றைக்  கண்டித்துப்  பேசுவது  வழக்கம்.     ஒரு  நாள்    அந்த நபர்    வழக்கத்திற்கு  மாறாக்  பகவத்  கீதையை   மிகவும்   உயர்த்திப்  பேசிக்கொண்டிருந்தார்.      ஸ்ரீராமகிருஷ்ண  பரமஹம்ஸர்   அவர்  போன  பின்பு    சிரித்துக்கொண்டே,    ‘யாராவது  ஐரோப்பிய   கனவான்    பகவத்  கீதையைப்  புகழ்ந்து  சொல்லி  விட்டார்  போலும்!    அதான்     இந்த  மனிதனும்     கீதையை    வாயாரப்  புகழ்ந்துவிட்டுப்  போகிறார்.’    என்று    கூறவே    அனைவரும்    கொல்லென்று   நகைத்துவிட்டனர்.  
 
என்ன  பண்ணுவது   தேவ்  சார்?    இன்றைய post-colonial   literary  theories   of  criticism   பிரகாரம்    இந்த  மாதிரி   மனப்பான்மைக்கு    colonialist   mentality  என்று  பெயர்.      

 

N. Ganesan

unread,
Feb 26, 2010, 8:28:48 PM2/26/10
to மின்தமிழ்

இன்னுமொரு திருப்புகழ்:
http://www.kaumaram.com/thiru_uni/tpun0490.html

அறல் ஓதியர் விழியாலே அறவே விழுங்கப்பட்டு ... கருமணலைப் போல் கரு நிறம்
கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்டு,

அறல் ஓதியர் விழியாலே - நெளியும் சுருள்களை உடைய கூந்தல் மாதர் விழியாலே.

கருமணலை இங்கே கொண்டுவர தேவையில்லை.

நா. கணேசன்

N. Kannan

unread,
Feb 26, 2010, 8:37:40 PM2/26/10
to mint...@googlegroups.com
Probably, it is futile to prove that Sanskrit words are derived from
Tamil. Some may be but not all. It can't be. If Sanskrit was developed
as a 'standardized' non-mutable synthetic (natural language mutate)
language then it will have words from all Indian dialects/languages.
Why should we vainly try and waste our time?

Kannan

2010/2/27 devoo <rde...@gmail.com>:

Hari Krishnan

unread,
Feb 27, 2010, 2:08:51 AM2/27/10
to mint...@googlegroups.com


2010/2/27 N. Ganesan <naa.g...@gmail.com>
இவ்வளவுமுறை கருமணலுக்கும் கூந்தலுக்கும் மெனக்கிடும் தாங்கள், தொமுசி ரகுநாதன், உவேசா மீது அவதூறாகப் பேசியதாக ஒரு செய்தியை வெளியிட எத்தனித்ததும், இங்கே வேறொருவரின் தற்செயலான முயற்சியால் தொமுசி ரகுநாதன் பேசியது முழுக்க முழுக்க அடிப்படையற்ற அவதூறு, ஆதாரமற்ற பொய், இனதுவேஷமும், உள்நோக்கமும் கொண்டது என்பது ஐயத்துககிடமில்லாமல் நிறுவப்பட்டுவிட்ட பிறகு, 

இங்கேயும் சரி, அங்கேயும் சரி, திரும்பத் திரும்ப நினைவூட்டப்பட்ட பிறகும்கூட, ‘தொமுசி ரகுநாதனுக்குப் பொய் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை’ என்று அடிக்குறிப்பு எழுத மட்டும்தான் முடிகிறதே தவிர, அந்த விவாதத்தைத் தொடங்கிவைத்தவர் என்கிற முறையில், தொமுசி பேசியது தவறுதான் ஒன்று ஒரேயொரு ஒருமுறைகூட சொல்லமுடியவில்லை என்பது நேர்மையின் மேன்மையைக் காட்டுகிறது.

உவேசா மீது பூசப்பட்ட அவதூறை அவதூறுதான் என்று ஒப்புக்கொள்வதைக் காட்டிலும் முக்கியமாக தலைமுடியும் கருமணலும் ஆகியிருப்பதை நினைத்தால் உவேசா தலைமுடியா, கருமணலா இல்லை அவற்றுக்கும் கீழ்ப்பட்டவரா?  என்னிடம் விடை இல்லை.

devoo

unread,
Feb 27, 2010, 2:11:12 AM2/27/10
to மின்தமிழ்
Feb 26, 9:39 am, வினோத் ராஜன்

//// The most common method applied in pseudoscientific language


comparisons is to search two or more languages for words that seem
similar in their sound and meaning.
While similarities of this kind often seem convincing to laypersons,
linguistic scientists consider

this kind of comparison to be unreliable for two primary reasons -


First, the method applied is not well-defined: the criterion of
similarity is subjective and thus not subject to verification or
falsification, which is contrary to the principles of the scientific
method.
Second, the large size of all languages' vocabulary makes it
easy to find coincidentally similar words between languages.

[...] /////


விண் > விண்டு > விண்ணு > விஷ்ணு என்று பரிணாமம் பெறுவதாகக் கூறினால்
எந்தக் காலகட்ட்த்தில் எந்த எந்த நூல்களில் இவ்வடிவங்கள் இடம் பெற்றன ?
கடைசியாக எந்தக் காலகட்டத்தில் ’விஷ்ணு’ என்னும் இன்றைய வடிவம் நிலை
பெற்றது என்பதை நிறுவும் பொறுப்பும் ஆய்வாளர்களுக்கு உள்ளது. இது மேலும்
பரிணாமம் பெற்று ‘விக்ஷ்ணு’ என்றாகுமா எனும் கேள்விக்கும் விடை கூற


வேண்டும்.

தமிழின் வரி வடிவத்தை விளக்கும்போது வேறு வேறு காலங்களின் கல்வெட்டை
ஆதாரம் காட்டி உருமாற்றத்தை விளக்குவர். இது அறிவியலை ஒட்டி அமைவதால்
அனைவரும் ஏற்கும்படி இருக்கும்.

இந்த ஆராய்ச்சியைப் பார்க்கும்போது வடமொழியின் ‘நிருக்தம்’ என்னும்
துறையே தேவையற்றதோ என்று தோன்றுகிறது; இதுபோன்ற ஆராய்ச்சிகள்தான்
தமிழுணர்வை வெளிக்காட்டும் என்னும் தவறான தோற்றத்தையும் பரப்பி
வருகின்றனர்.

அன்பர் சுகுமாரனும், தம்பி செல்வ முரளியும் சுவடிகளைத் தேடும் பணியில்
இரண்டுமாத காலமாக ஈடுபட்டுள்ளனர்; பல இடையூறுகள், சிலவற்றைத்
தெரிவிக்கின்றனர்; தெரிவிக்காததையும் யூகித்தறிய முடிகிறது. இவர்களிடம்
இருப்பதே உண்மையான தமிழுணர்வு


தேவ்

வினோத் ராஜன்

unread,
Feb 27, 2010, 4:26:32 AM2/27/10
to மின்தமிழ்
எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும், ஒரே பொருள் கொண்ட ஒரே மாதிரியாக
ஒலிக்கக்கூடிய சொற்கள் நிறைய காணலாம். அது தொடர்பே இல்லாத மொழிகளுக்கும்
பொருந்தும். அது தற்செயலான ஒன்றே ஒழிய. வேறொன்றும் இல்லை.

உதாரணமாக,

ஸ்வாஹிலி மொழியில், மனிதன் என்பது. mwanadamu என்று அறியப்படுகிறது.

இதை வைத்துக்கொண்டு
,
மனிதன் - > மனிதம் - > மனதம் -> மனதமு என்று வாய்க்கு வந்த படி ஒரு
உருவாக்கத்தை காண்பித்து விட்டு, ஹைய்யா பார்த்தீர்களா மனிதன் என்னும்
தமிழ்ச்சொல் தான் அங்கு ஸ்வாஹிலிப்படுகிறது.. ஆப்பிரிக்கப்படுகிறது
என்று மார் தட்டி கொள்ளலாம்.

இதிலிருந்தே நமக்கு தெரியவில்லையா... தமிழ் நாட்டில் இருந்து தான்
மனிதர்கள் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு வெயில் அதிகமாக
இருந்ததினால் கொஞ்சம் கருத்து விட்டனர். இந்த ஒரு தடயமே போதும், மனித
குலமே தமிழ்நாட்டில் தான் தோன்றியது என்பதை நிரூபிக்க..

Out of Africa எல்லாம் பொய், ஆரிய ஆராத சூழ்ச்சிக்காரர்களின் பொய்களை
அனைவரும் நம்பிவிட்டனர்...... இனி எல்லாரும் out of Tamil Nadu என்று
தான் கூற வேண்டும்...

என இதன் நீட்சியாக பிதற்றிக்கொண்டே போகலாம்.. பலர் இப்படித்தான்
எழுதிக்கொண்டு போகின்றனர்...

ஆக, இது போன்ற அர்த்தமற்ற விஞ்ஞானபூர்வமற்ற முயற்சிகளால் என்ன பலன் என்று
தெரியவில்லை. பொழுது போகாத நேரத்தில் அவரவர்கள் மனத்திருப்திக்கு செய்து
கொள்வது போலும்.

V

devoo

unread,
Feb 27, 2010, 5:27:38 AM2/27/10
to மின்தமிழ்
Feb 27, 3:26 am, வினோத் ராஜன்
>>> ஸ்வாஹிலி மொழியில், மனிதன் என்பது. Mwanadamu <<<


ஸ்வாஹா > ஸ்வாஹி > ஸ்வாஹிலி

ஸம்ஸ்க்ருதத்திலிருந்து ஸ்வாஹிலி தோன்றியிருக்கணும்; அண்டார்டிகாவைச்
சேர்ந்த ஆண்ட்ரூ குன்போர்க் என்ற அறிஞர் கூறியுள்ளார்

வினோத் ராஜன்

unread,
Feb 27, 2010, 5:39:40 AM2/27/10
to மின்தமிழ்
:-)

N. Ganesan

unread,
Feb 27, 2010, 7:27:05 AM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 1:08 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/27 N. Ganesan <naa.gane...@gmail.com>

அன்புள்ள ஹரிகி,

எந்த இழை என்று சொன்னால் பார்க்கிறேன். நான் மின்குழுக்களின்
எல்லா மடல்களையும் பார்ப்பதில்லை.

திருமதி கீதா சாம்பசிவம் தொமுசி நூற்றாண்டு மலரில் இருந்து
உள்ள தகவல் அனுப்பியிருந்தார். அதனைப் பற்றி நீங்களோ
மற்றவர்களோ பாரதியார் பற்றி எழுதியிருந்ததைப் படிக்கவில்லை.

இழையின் தொடுப்பு கொடுத்தால் படித்து தெரிந்துகொள்கிறேன்.

ஒரு வேண்டுகோள்:
ஓர் இழையில் நான் நீண்ட நாள் பங்குபெறாத போது
என் கருத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால்
- பாரதியார், உவேசா போன்ற பெரியவர்கள் - எனக்கு மடல் அனுப்புங்கள்.
நான் படிக்காமலே இருக்கும் மடல்குழுக்களின் இழைகள் பல உள்ளன.
எல்லாம் படிக்கணும் என்று ஆசைதான். நேரம்?

பாரதி, உவேசா போன்ற பெரியவர்களைப் பற்றி நான் சொல்லவேண்டுமா
என்ன? உண்மை நிற்கும். உங்களைப் போன்றவர்கள் தெரிய வைப்பீர்கள்
என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நன்றி.

அன்புடன்
நா. கணேசன்

> --

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 7:29:36 AM2/27/10
to மின்தமிழ்
//விஷ்ணு தமிழ்ச் சொல் மூலம் காட்டியிருப்பதாய் எழுதியுள்ளார்.
விண் + து = விண்டு. விண்-/விள்- >//

:)

//முதல் வரியில் விள், விண், விண்டு என்றபின் அடுத்த வரியில் விண்ணு
என்று
சௌகரியம்போல் மாற்றுவது நகைப்பிக்கிடம் தருவது//

:)

ஒரு பொதுவான கேள்வி:
விண்ணகரம், திருவிண்ணகர் என்று ஆலயங்களைக் குறிப்பது ஏனோ?

விஷ்ணுவின் (விண்ணு) நகரம் என்பதால் விண்ணகரமா?
விண்ணோர் - விண் - என்பதால் விண்ணகரமா??

வெறுமனே விண், தேவர், சுவர்க்கம் என்பதால் மட்டும் "விண்"ணகர் என்று
குறிக்க மாட்டார்களே! இறைவன் சுவர்க்கம்/தேவரையும் கடந்தவன் அல்லவா?
அப்படியென்றால் விண்ணகருக்கு எப்படிப் பொருள் கொள்வது?

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Feb 27, 2010, 7:51:39 AM2/27/10
to மின்தமிழ்
NG > //விஷ்ணு தமிழ்ச் சொல் மூலம் காட்டியிருப்பதாய் எழுதியுள்ளார்.

> விண் + து = விண்டு. விண்-/விள்- >//
>
> :)
>
> //முதல் வரியில் விள், விண், விண்டு என்றபின் அடுத்த வரியில் விண்ணு
> என்று
> சௌகரியம்போல் மாற்றுவது நகைப்பிக்கிடம் தருவது//
>
> :)
>

இது தேவ் சார் எழுதிய வாசகமா?

மண் > மண்ணு, பெங்களூர் > பெங்களூரு போல, விண் > விண்ணு
என்று என் மடலில் கொடுத்திருந்தேனே.

யாப்பருங்கலத்திலேயே உள்ளதே. புதிதா என்ன?

விண்ணு viṇṇu
, n. < Viṣṇu. Viṣṇu; திரு மால். விரிந்தெங்குஞ் சென்றமையால் விண்ணுவு
மாய் (யாப். வி. 84).
(மதறாஸ் லெக்ஸிகன்).

விண்ணு > விஷ்ணு என்றும் மொழியியலாளர் எழுதியுள்ளனர்.
உ-ம்: தேவநேயப் பாவாணர். தமிழறிஞர் இராமகி அவர்களும்
விளக்கியுள்ளார். ஜீன் ப்ரிசூல்சுகி பேப்பர் பார்க்க ஆவல் என்று
ஏற்கெனவே குறிப்பிட்டேன் (அதன் ரெஃபரன்ஸ்: பேரா. இந்திரா
பார்த்தசாரதி).

தேம்பாவணி - சுப்ரதீபக் கவிராயர் பாடினது என்பர் தமிழறிஞர்.
கால்ட்வெல் இழையில் இன்னும் விரிவாக எழுத ஆசை.

பூமழைத் திரளு நாறிய கலவை பொழிதரக் கமழுநீர்த் துவலைத்
தேமழைத் திரளு மாங்குதஞ் சிறுமை தீர்த்தநா தனைப்புகழ் பவர்வாய்ப்
பாமழைத் திரளுங் கன்னியர் கனியப் பாமழைத் திரளுமெஞ் ஞான்றும்
மீமழைத் திரளு மெலிதர விம்மி விண்ணுமேற் குளிரநா றினவே.

இணையப் பல்கலைத் தளத்துள்ள உரை தரும் விளக்கம்:
விண்ணு - விண் என்பது உகரச் சாரியை பெற்று விண்ணு என்றாகியது.

விண் > விண்ணு என ஆவது தமிழில் இயற்கை.

விஷ்ணுவை விண்ணு என்றழைத்தல்:

http://swarnaboomi.wordpress.com/2008/11/10/1200-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF-2/

”திரிபுராந்தகனாக சித்தரிக்கப்படும் சிவன் மூவுலக அரக்கனை அழிப்பதற்கு
கைகளில் அம்பையும் வில்லையும் ஏந்தி தேரைச் செலுத்தி வரும் காட்சி,
மற்றும் நடராசன், தக்கிணாமூர்த்தி, நரசிம்மன், ஆனந்தசயனத்தில் விண்ணு
போன்ற ஓவியங்கள் அச்சுவரில் இடம்பெற்றிருந்ததாக தமிழ் நாடு தொல்லியல்
ஆய்வுத் துறையில்”

வலைப்பதிவில் காதலிக்கு ஒருவர் எழுதிய பாட்டு:

பொண்ணுன்னா பொண்ணு இவதாண்டா பெண்மையின் பொண்ணு
கண்ணுன்னா கண்ணு இவதாண்டா என் கண்ணின் கண்ணு !
எண்ணு நீ எண்ணு உன் மனதில் என்னை மன்னனாய் எண்ணு !
பண்ணு நீ பண்ணு அன்பினை அழியா சிற்பமாய்ப் பண்ணு !
விண்ணு நீ விண்ணு - என் மனப் பறவை பறந்திடும் வான் விண்ணு !
உண்ணு நீ உண்ணு - என் நெஞ்சின் பாசத்தை உணவாக உண்ணு !

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 27, 2010, 8:11:04 AM2/27/10
to மின்தமிழ், Santhavasantham, tamil...@googlegroups.com

On Feb 27, 6:51 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> NG > //விஷ்ணு தமிழ்ச் சொல் மூலம் காட்டியிருப்பதாய் எழுதியுள்ளார்.
>
> > விண் + து = விண்டு. விண்-/விள்- >//
>
> > :)
>
> > //முதல் வரியில் விள், விண், விண்டு என்றபின் அடுத்த வரியில் விண்ணு
> > என்று
> > சௌகரியம்போல் மாற்றுவது நகைப்பிக்கிடம் தருவது//
>
> > :)
>
> இது தேவ் சார் எழுதிய வாசகமா?
>
> மண் > மண்ணு, பெங்களூர் > பெங்களூரு போல, விண் > விண்ணு
> என்று என் மடலில் கொடுத்திருந்தேனே.
>

கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி புத்த்கம்
கணினி முன்னால் கிடந்தது. விண்ணு என்ற பழஞ்சொல்லை
ஆண்டுள்ளார். அதைவிட முக்கியமாக பஞ்சபூதங்களில் ஏன்
விண்ணு (> விஷ்ணு) முக்கியம் என்று பெரும்பாணாற்றுப்படையின்
பழைய உரையில் தெரிந்துகொள்கிறோம்.

தக்கயாகப் பரணி - ஒட்டக்கூத்தர்:
717. மண்ணு நீபுனது நீயனது மாருதமுநீ
மதியு நீரவியு தீயவை யனைத்தும் வழிபோம்
விண்ணு நீயென வகண்டமும் விழுங்க வரிவாய்
விட்ட விட்டவவ னைம்படையு மீளவிடவே.

தக்கயாகப் பரணி - பழைய உரை:
மாருதம் - காற்று. அனைத்தும் வழிபோம் விண்ணென்றது
வத்துக்களுக்கு இடம்கொடுக்கும் ஆகாசமென்றவாறு.
மகாபூதங்கள் ஐந்தும் பஞ்சாயுதம். விட்டவிட்ட ஐம்படையாவன
விஷ்ணுக்களால் விடப்பட்ட படைகளிற் பண்டுவிட்டன (விழுந்தன).
இப்போது மாயை காட்டினவென்றவாறு.

அனைத்தும் வழிபோம் விண்ணு: ‘தன்னை யொழிந்த நான்கு பூதமும்
தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயம்’
(பெரும்பாண். 1. உரை.)

பழைய உரைகளால் விஷ்ணு = விண்ணு என நுதலியமை தெளிவு.

நா. கணேசன்


> யாப்பருங்கலத்திலேயே உள்ளதே. புதிதா என்ன?
>
> விண்ணு viṇṇu
> , n. < Viṣṇu. Viṣṇu; திரு மால். விரிந்தெங்குஞ் சென்றமையால் விண்ணுவு
> மாய் (யாப். வி. 84).
> (மதறாஸ் லெக்ஸிகன்).
>
> விண்ணு > விஷ்ணு என்றும் மொழியியலாளர் எழுதியுள்ளனர்.
> உ-ம்: தேவநேயப் பாவாணர். தமிழறிஞர் இராமகி அவர்களும்
> விளக்கியுள்ளார். ஜீன் ப்ரிசூல்சுகி பேப்பர் பார்க்க ஆவல் என்று
> ஏற்கெனவே குறிப்பிட்டேன் (அதன் ரெஃபரன்ஸ்: பேரா. இந்திரா
> பார்த்தசாரதி).
>
> தேம்பாவணி - சுப்ரதீபக் கவிராயர் பாடினது என்பர் தமிழறிஞர்.
> கால்ட்வெல் இழையில் இன்னும் விரிவாக எழுத ஆசை.
>
> பூமழைத் திரளு நாறிய கலவை பொழிதரக் கமழுநீர்த் துவலைத்
> தேமழைத் திரளு மாங்குதஞ் சிறுமை தீர்த்தநா தனைப்புகழ் பவர்வாய்ப்
> பாமழைத் திரளுங் கன்னியர் கனியப் பாமழைத் திரளுமெஞ்  ஞான்றும்
> மீமழைத் திரளு மெலிதர விம்மி விண்ணுமேற் குளிரநா றினவே.
>
> இணையப் பல்கலைத் தளத்துள்ள உரை தரும் விளக்கம்:
> விண்ணு - விண் என்பது உகரச் சாரியை பெற்று விண்ணு என்றாகியது.
>
> விண் > விண்ணு என ஆவது தமிழில் இயற்கை.
>
> விஷ்ணுவை விண்ணு என்றழைத்தல்:
>

> http://swarnaboomi.wordpress.com/2008/11/10/1200-%E0%AE%86%E0%AE%A3%E...

N. Ganesan

unread,
Feb 27, 2010, 8:14:59 AM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 7:11 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Feb 27, 6:51 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > NG > //விஷ்ணு தமிழ்ச் சொல் மூலம் காட்டியிருப்பதாய் எழுதியுள்ளார்.
>
> > > விண் + து = விண்டு. விண்-/விள்- >//
>
> > > :)
>
> > > //முதல் வரியில் விள், விண், விண்டு என்றபின் அடுத்த வரியில் விண்ணு
> > > என்று
> > > சௌகரியம்போல் மாற்றுவது நகைப்பிக்கிடம் தருவது//
>
> > > :)
>
> > இது தேவ் சார் எழுதிய வாசகமா?
>
> > மண் > மண்ணு, பெங்களூர் > பெங்களூரு போல, விண் > விண்ணு
> > என்று என் மடலில் கொடுத்திருந்தேனே.
>
> கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி புத்த்கம்
> கணினி முன்னால் கிடந்தது. விண்ணு என்ற பழஞ்சொல்லை
> ஆண்டுள்ளார். அதைவிட முக்கியமாக பஞ்சபூதங்களில் ஏன்
> விண்ணு (> விஷ்ணு) முக்கியம் என்று பெரும்பாணாற்றுப்படையின்
> பழைய உரையில் தெரிந்துகொள்கிறோம்.
>
> தக்கயாகப் பரணி - ஒட்டக்கூத்தர்:

717. மண்ணு நீபுனலு நீயனலு மாருதமுநீ
              மதியு நீரவியு நீயவை யனைத்தும் வழிபோம்

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 8:19:17 AM2/27/10
to மின்தமிழ்
கணேசன் ஐயா,
உங்க நோக்கம், வடமொழிச் சொற்கள் "எல்லாம்", தமிழில் இருந்து
பெறப்பட்டவையே என்று நிறுவுவதா?
இல்லை என்று எனக்குத் தெரியும்!
ஆனால் இந்தியச் சொல்லாராய்ச்சியில் உள்ளவர்கள் மட்டும், ஒரு
கட்டத்தில், இந்த "Pseudo Linguistics" குற்றச்சாட்டுக்கு உள்ளாவது
வாடிக்கை தான்! என்சாய் மாடி! :)

தேவ் ஐயா
//ஸ்வாஹா > ஸ்வாஹி > ஸ்வாஹிலி - அண்டார்டிகாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ
குன்போர்க் என்ற அறிஞர் கூறியுள்ளார் //
- வாய் விட்டுச் சிரிச்சேன்! :))
ஹரி.கி தான் இப்படியெல்லாம் வம்பு தும்பு பண்ணுவாரு
பார்த்திருக்கேன்! :)
சாந்தமே உருவான நீங்களுமா, ஹாஸ்யத்தில் கலக்குறீக? வாவ்! :)

சரி...இப்போ கொஞ்சம் சீரியசா...
எந்த மொழியும் இன்னொரு மொழியில் இருந்து ஜெராக்ஸ் காப்பி அடிக்க முடியாது
என்பது அனைவருக்குமே நல்லாத் தெரியும்!
ஆனாலும், சிற்சில சொற்களை எடுத்துக் காட்டும் போது மட்டும்....
ஆராய்ச்சி உணர்வையும் தாண்டி, வேறு சில அபிமானங்களும் கூடவே தலை
தூக்குகின்றன! :))

தெய்வத்தின் குரலில், பரமாச்சார்யர் இப்படிச் சொல்வாரு! வாசிச்சிப்
பாருங்க!
//ஸம்ஸ்கிருதம், க்ரீக், லாடின் (லத்தீன்), ஜெர்மன் (ட்யூடானிக்
என்பது;இங்கிலீஷ் பாஷையும் ட்யூடானிக்கில் சேர்ந்ததுதான்)
இன்றைய பிரெஞ்சு உள்பட அநேக பாஷைகளுக்கு மூலமான ஸெல்டிக் போன்ற பல
மொழிகள் ஒரே தாய்பாஷையிலிருந்து வந்தவை என்று சொல்லி இவற்றை 'இண்டோ
யூரோபியன் குரூப்'என்று ஃபைலாலஜியில் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
எது தாய்ப்பாஷை என்பதில் மட்டும் முடிவான அபிப்ராயம் ஏற்படவில்லை.
ஸம்ஸ்கிருதம் (இப்படிச் சொல்லும்போது வேத பாஷையான சந்தஸையும்
சேர்த்துதான் சொல்லப்படுகிறது) தான் ஆதி பாஷை, தாய்பாஷை என்றால் அவர்கள்
ஒப்புக்கொள்வதில்லை.
ஆனால் இப்போது சொன்ன 'தந்தம்' போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்கிருதம்தான்
மூலபாஷை என்று சொல்வதற்குச் சான்றாக இருக்கின்றன.

Dental (டென்டல்) என்று இன்றைக்கு இங்கிலீஷில் சொல்வதும் பல்லைக்
குறிப்பதுதான்.
'தந்த் - டென்ட்'என்கிறதில் நிறைய ஒற்றுமை நமக்குத் தெரிகிறது .
பிரெஞ்சு, லாடின் முதலான பாஷைகளிலும் 'டென்ட்' ஸம்பந்தமே தெரிகிறது.
அதாவது 'ட' காரம் வருகிறதே தவிர, ஸம்ஸ்கிருதத்தில் உள்ள 'தந்த'த்தில்
வருகிற 'த' காரம் இல்லை.
"இருந்துவிட்டுப் போகட்டும். இதனால் ஸம்ஸ்கிருதம் மூலபாஷை என்று எப்படி
ஆகும்? ஏன் 'டென்டல்'என்பதிலிருந்துதான் ஸம்ஸ்கிருத 'தந்தம்'வந்தது என்று
வைத்துக் கொள்ளக் கூடாது?"
இப்படிக் கேட்டால், இங்கிலீஷ், பிரெஞ்சு, லாடீன் எல்லாவற்றுக்கும்
ஸம்ஸ்கிருதமே தாய்ப்பாஷை என்பதற்கு 'தந்தம்' என்கிறதில் வருகிற சப்தங்களே
ஆதரவாயிருக்கிறது. எப்படியென்றால் மேலே சொன்னது போல், "தந்தம்" என்பதைச்
சொல்லவே தந்தம் (பல்) வேண்டியிருக்கிறது. 'டென்டல்'முதலான மற்ற பாஷை
வார்த்தைகளைச் சொல்லிப் பாருங்கள். அதிலே பல் ஸம்பந்தமே இல்லை. நாக்கின்
நுனி மேலண்ணத்தில் படுவதாலேயே 'டென்ட்'சப்தம் உண்டாயிருக்கிறது.
வார்த்தையே அர்த்தத்தை குறிப்படுமானால், அது ஸம்ஸ்கிருத 'தந்த'த்தில்
தான். அதனால் இது தான் மூல ரூபம்;இதுதான் திரிந்து 'டென்டல்'வந்தது என்று
தெரிகிறது//

இதைப் படிச்ச போது, உங்க /ஸ்வாஹா > ஸ்வாஹி > ஸ்வாஹிலி/ -யும்
ஞாபகத்துக்கு வந்துச்சி!
படக்-ன்னு சிரிச்சிட்டேன்! :)))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

> http://swarnaboomi.wordpress.com/2008/11/10/1200-%E0%AE%86%E0%AE%A3%E...

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 8:31:02 AM2/27/10
to மின்தமிழ்
என்னோட "டென்டிஸ்ட்டை" இனி மேல் "தந்திஸ்ட்"-ன்னு கூப்பிடலாம்-ன்னு
முடிவு எடுத்திருக்கேன்! :))

ஆனா அவர் கோச்சிக்குவாரு! அதனால் என்ன?
தெய்வத்தின் குரல்-லயே சொல்லி இருக்கு-ன்னு சொல்லிட்டாப் போதும்!
அவர் ஆச்சார சீலர்! கம்-ன்னு கொய்ட் ஆயிருவாரு! :))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 27, 8:19 am, "Kannabiran Ravi Shankar (KRS)"

> KRShttp://madhavipanthal.blogspot.com

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Feb 27, 2010, 8:45:30 AM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 7:19 am, "Kannabiran Ravi Shankar (KRS)"

காஞ்சி மகாபெரியவர் சங்கரர் கி.மு. ஐந்தாம் நூற். என்று சொன்னார்.
இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பிறந்ததே இந்தியா என்பார்.
இதை விரிவு செய்பவர்கள்: நவரத்ன ராஜாராம் (பெங்களூர்), எஸ்.
கல்யாணராமன்,
... பா.ஜ.க ஆட்சியில் நிறைய இருந்தது. எல்லாம் பெருநகர,
ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள் கையில் இண்டெர்நெட் இருந்தகாலம் அது.

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் இந்தியாவில் நுழைந்த மொழிகள்.
அதன் தாயகம் வெளியே என்று மேலைநாட்டு மொழியியல் அறிஞர்
முடிவுசெய்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டன.

---

உங்களுக்கு நூறாயுள்! காஞ்சி மகாபெரியவாளின் அத்யந்த சீடர்,
மிக அணுக்கமாக அவர் வாழ்கையில் இருந்த தொல்லியல் அறிஞர்,
நண்பர் இரா. நாகசாமி. அவருக்கு சில மாதங்கள் முன்னும் ஒரு
வரவேற்புக் கொடுத்தேன்.
http://nganesan.blogspot.com/2009/08/nagaswamy.html

நாகசாமி 1994-ல் வந்தபோது, பரிசளித்த தக்கயாகப்பரணி நூலில்
(அவருக்கு மிகப் பிடித்த நூல் இது. நாட்டிய நாடகமே ம்யூஸிக்
அகாதமி போன்ற இடங்களில் நடாத்தினார்.).
தக். நூல் முகப்பில் எழுதியுள்ள வாழ்த்து. இணையத்தில் கிடக்கட்டுமே,
பின்னால் நண்பர்கள், உறவினர் அடுத்த தலைமுறை யாரையாவது ஊக்குவிக்கும்.
தமிழில், இந்தியக் கலையில், இந்திய மொழிகளில், வரலாற்றில்,
மொழியியலில், சிந்து, பொருனை தொல்லியலில் ....
ஆர்வம் இளைஞர்கள் கொள்வராக.

இரா. நாகசாமி கொடுத்த தக்கயாகப்பரணி அட்டையில்
எழுதியுள்ளார்:
[Begin Quote ]
ஏகலைவன் போல் எனது சீடன்
என மனத்தகத்தால் வரித்து
தமிழ் இலக்கியம், கலை, வரலாறு
ஆயவற்றில் ஆத்மார்த்தமாக
ஈடுபட்டு அதன் இனிமையில்
எளிமையில், அழகில்
இளமையில் லயித்து
இன்பம் கண்டு எல்லாரும்
அவ்வின்பம் பெறவிழையும்
அன்பர் N. கணேசன் அவர்கட்கு
எனது அன்பு வாழ்த்துக்கள்.

[signed] இரா. நாகசாமி
[End Quote]


வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

>

> ...
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 8:57:03 AM2/27/10
to மின்தமிழ்
//யாப்பருங்கலத்திலேயே உள்ளதே. புதிதா என்ன?
விண்ணு viṇṇu
, n. < Viṣṇu. Viṣṇu; திரு மால். விரிந்தெங்குஞ் சென்றமையால் விண்ணுவு//

கணேசன் ஐயா!
அருமையாச் சொல்லி இருக்கீங்க!
விண்-விண்ணு-விண்ணவம்-விண்ணகர்-நாரணம் போன்ற பழந்தமிழ்ச் சொற்கள்
புழங்கியதை இலக்கியங்களிலும் பார்க்கலாம்!

வெறுமனே ஒலியை மட்டுமே வைத்து, அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று
சொல்வது ஒரு வகை! - This can be a test case, but CANNOT be a result!
இலக்கியத்தில் புழங்கியமை, வட்டாரப் பலுக்கலில் புழங்கியமை-ன்னு தரவு
கொடுக்கும் போதே - Test case really becomes a result in etymology &
linguistics!

வடமொழியில் விஷ்ணு = சர்வ வியாபி, எங்கும் நிறைந்தவன் என்பதே பொருள்!
மறுப்பதற்கில்லை!
ஆனால் தமிழில் விண்ணவம் என்று எடுத்துக் காட்டும் போது,
ஏதோ பாஷைப் பற்றாக்குறையால், விண்ணவத்தைத் தான் விஷ்ணு-வாக்கி
விட்டார்கள் - என்று டமாரம் அடிக்க அல்ல!
அதே பொருள், அதே ஒன்றைக் குறிக்க, சங்கத் தமிழிலும் அதே நிறைவான சொல்
புழங்கியது - என்பதை எடுத்துக் காட்டுவதே நோக்கம்! மற்றபடி வேறொன்றும்
இல்லை!

யார் தமிழ்க் கடவுள்? என்ற ஒரு சூடான பதிவில் (http://
madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_17.html)
இவ்வாறு சொல்லி இருப்பேன்! அது இங்கும் பொருந்தும்!
//பதிவின் நோக்கம்:
எல்லாம் கடந்த இறைவனை மொழிக் குறுகலுக்குள் அடக்குவது இல்லை!
நம் மொழியில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிந்து கொள்வது மட்டுமே!
இறைவனுக்கு நாம் தரும் பட்டங்கள் -தமிழ்க் கடவுள், தெலுங்கு தேவுடு,
English Lord - ஒரு பொருட்டே அல்ல!
இது நம் பண்பாட்டை நாம் அடையாளம் காணும் முயற்சி மட்டுமே!//

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

> http://swarnaboomi.wordpress.com/2008/11/10/1200-%E0%AE%86%E0%AE%A3%E...

Tirumurti Vasudevan

unread,
Feb 27, 2010, 9:02:27 AM2/27/10
to mint...@googlegroups.com
அடிக்கடி பாத்து சிரிச்சு இருக்கேன். எதை வைத்து இப்படி இப்படி மாறுகிறது என்று சொல்கிறார்கள் வியந்ததுண்டு. போகட்டும் நமக்கு புரியாத சமாசாரம் என்று விட்டுவிடுவேன்.

2010/2/27 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

ஆக, இது போன்ற அர்த்தமற்ற விஞ்ஞானபூர்வமற்ற முயற்சிகளால் என்ன பலன் என்று
தெரியவில்லை. பொழுது போகாத நேரத்தில் அவரவர்கள் மனத்திருப்திக்கு செய்து
கொள்வது போலும்.



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

விஜயராகவன்

unread,
Feb 27, 2010, 9:15:57 AM2/27/10
to மின்தமிழ்
On 27 Feb, 13:45, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> இந்தோ-ஐரோப்பிய மொழிகள் இந்தியாவில் நுழைந்த மொழிகள்.
> அதன் தாயகம் வெளியே என்று மேலைநாட்டு மொழியியல் அறிஞர்
> முடிவுசெய்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டன.

கணேசனாரே

நீங்கள் சரியாக மொழியியல் வாதங்களையும், சொல்லாடல்கலையும் புரிந்து
கொள்ளவில்லை.

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்பது அசாமீஸில் இருந்து கெல்டிக் வரையானா
மொழிகள் ஆகும். யாரும் அசாமீஸ், பெங்காலி, பஞ்சாபி, சமஸ்கிருதம், வேத
மொழி இவை இந்தியாவிற்க்கு வெளியில் இருந்து வந்தவை என சொல்லவில்லை.


உங்களுக்குப் பிடித்த “மேலைநாட்டு மொழியியல் அறிஞர் முடிவு” இந்த இந்திய
மொழிகளின் “மூல” புனர்நிர்மாணிக்கப்பட்ட இந்தியாவிற்க்கு வெளியில் என
சொல்கின்றனர் . அதுவும் எங்கே என்பது பெரும் விவாதத்திற்க்கு உள்ளது.
19ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் அது இந்தியா என்றார்கள். பின்னர் ரஷ்யா,
யுக்ரெய்ன், கிழக்கு ஐரோப்பா, அனடோடியா (துருக்கி), அர்மீனியா, மத்திய
ஆசியா என்று லக்ஷக்கணக்கான சதுர மைல் பரப்பில் இந்தோ-ஐரோப்பியன் `பிறந்த
இடம் கால்பந்தாடிக்கொண்டுள்ளது.


விட்சல் கூட வேதங்கள் இந்தியாவில்தான் எழுந்தவை என சொல்கிறார்.

நீங்கள் ஸ்பெகுலேஷன்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம்
கொடுக்கின்றீர்கள்.

ஆனால் தேவநேயன் போன்ற கருத்துகளுக்கு எதிராக உங்களிடம் ஒரு முனகல் கூட
இல்லை


விஜயராகவன்

N. Ganesan

unread,
Feb 27, 2010, 9:28:54 AM2/27/10
to மின்தமிழ்
On Feb 27, 7:19 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> கணேசன் ஐயா,
> உங்க நோக்கம், வடமொழிச் சொற்கள் "எல்லாம்", தமிழில் இருந்து
> பெறப்பட்டவையே என்று நிறுவுவதா?
> இல்லை என்று எனக்குத் தெரியும்.

உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் ஒரு ஒரு (படு) முட்டாளுங்க.
நல்லாப் படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க.
சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லாச் சொல்லும் தமிழ்தான்
என்று இ-மெயில்கள் மெனக்கெட்டு எழுதினால் எனக்கு
எவ்வளவு மில்லியன் பணம் வரும் பாருங்க :)

-----------

லோகாயத இலக்கியங்கள் பல மறைந்தன. இன்று
சில திபெத் மொழியில் பெயர்ப்பாகக் கிடைக்கிறது.
பூர்வபக்‌ஷம் என்று செட்-அப் செய்வதே Materialist
literature-ஐ அழித்தபிறகு ’அவன் வாதம் இது’ என்று
எதிர்வாதக் காரர்கள் கூறி ‘அது ஒன்றுமில்லை’ என்று
ஆக்குவதாம். பூர்வபக்‌ஷத்தில் மெட்டீரியலிஸ்ட்க்குப் பேர் என்ன
தெரியுமா? பிசாசகன்! Setting up a strawman to shoot him
down - இந்த வேலையை இந்திய இலக்கியங்கள்
பெருவாரியாய்ச் செய்கையில், பொருள்முதல்
வாதத்தை இந்தியமொழிகளில் சொல்ல
இரண்டு நூல்கள் கிட்டியது அரிய செயல்.
ஜெயராசியின் தத்., செயங்கொண்டாரின் வி. வளமடல்.

இந்தியாவின் மெட்டீரியலிஸ்ட் வாதத்தை வளர்த்திருந்தால்
இந்தியாவில் ஸயன்ஸ் வளர்ந்திருக்கும் என்பர் பலர்.
இன்னும் நல்ல ஸயன்ஸ் வளர்ச்சி இந்தியாவில் பொதுவாக
இல்லையே. இதுபோன்ற நூல்களின் அழித்தல் இந்தியாவில்
நேர்ந்தது மக்களுக்குப் போகூழே. நோபல் பரிசு பெற்ற அமார்த்ய சேனர்
போன்றோர்
விழுப்பரையன் வளமடல் பார்த்திருந்தால் இன்னும் நிறைய
எழுதியிருப்பர். ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிடணும்.
அவர் தாகூரின் சாந்திநிகேதனத்தில் பிறந்தவர். அவர் தந்தை வட்மொழிப்
பேராசிரியர். அவர் சொல்வனவும் பிறவும் அளிக்க இருக்கிறேன்.
ஹரிகி அவர்கள் பூதவாதம் என்றால் என்ன? என்று கேட்டார்.
பேரா. நா. வானமாமலையின் 1973 ஆங்கில பேப்பர்
தேடி எடுத்தேன். அதை வெள்ளுரையாக (ப்லெய்ன் டெக்ச்ட்)
என் வலைப்பதிவில் இட்டு அளிக்கும் பணியை இரவெல்லாம்
செய்தேன். இணைப்புக் கொடுக்கிறேன். மிக நல்ல, அரிய கட்டுரை.

பூதவாதம் (இதனொடும் தொடர்புடையன சார்வாகம், லோகாயதம் -
மணிமேகலை உரை) 2000 வருடம் முன்னர் இருந்த மெட்டீரியலிஸம்.
ஒரு 300-400 புத்தகம் இந்திய பூதவாதம், லோகாயதம் பற்றி
20-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு உள்ளன. ஜெயராசி, ஜெயங்கொண்டார்
நூல்கள் கிடைக்காத நிலையிலே இப்படி. பொருள்முதல்வாத
லோகாயத நூல்களை ஆய்ந்தால், இந்த ஆய்வு நூல்கள் இன்னும்
விளக்கம் பெறும், குடத்து விளக்கு குன்றின் மேல் விளக்கமடையும்.

பூதவாதத்துக்கு பௌத்த சமயிகள் நம் தமிழகத்தைத் தேடி
2000+ ஆண்டுகளுக்கு முன்னமே வந்துள்ளனர்.

A. Chakravarthi Nayanar in his introduction to Neelakesi has this to
say about Bhutavada in Tamil Nadu: There lived in Nalanda near
Rajgriha a Brahmin named Madhava. He had a son named Koshtilla and a
daughter named Sari. Koshtilla went to South India to study Bhutavada.
Sari married a Brahmin from Southern India called Tishya. She had a
son named Upatishya called so after his father. He had another son
named after his mother Sariputta. In a village nearby, there was a
purohit whose wife Modgal bore a son. He was called Moggalana. Both
Sariputta and Moggalana studied under Sanjaya. Hearing about Buddha,
they went to meet him. They joined the Buddhist order.
(Quoted in N. Vaanamaamali, Social Scientist, 1973). This whole paper
in typed form will be
in my blogsite shortly.

அமார்த்ய சேனரின் கட்டுரைகள் நேரம் கிடைக்கிறபோது கொடுக்கிறேன்.
நிச்சயமாக, நல்ல peer-reviewed ஜர்னலில் ’விழுப்பரையன் வளம்டலும்,
இந்திய இலக்கியங்களில் அதன் இடமும்’ என்ற கட்டுரை எழுதுவேன்.
எப்போதென்று அறியேன்.

முதலில் ஹரிகி அவர்கள் உரையைப் பார்ப்போம். 10-12 வருடம் முன்
ஒரு பெரிய ஃபோல்டர் முழுக்க குறிப்புகள் எடுத்துவைத்தேன்.
அது எங்கே என்று பார்த்து, தேவைப்பட்டால் அனுப்புகிறேன்,

நா. கணேசன்

Back to seriuos discussion:

தேவ் ஸார் சொன்னதைப் பாருங்கள்:


>> விண் விண்ணு (விஷ்ணு) <<

> விண்’ என்றே ஒரு பதம் உள்ளது வடமொழியில்,


>அதற்கு மலம் என்று பொருள் . அதன் தமிழ் வேர் எது ?

இதனாலும் விண்ணு என்றால் அமங்கலப் பொருள் தந்துவிடும்.
எனவே, விஷ்ணு என்று ஆக்கியிருக்கலாம் என்க.

N. Ganesan

unread,
Feb 27, 2010, 9:31:22 AM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 8:15 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On 27 Feb, 13:45, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > இந்தோ-ஐரோப்பிய மொழிகள் இந்தியாவில் நுழைந்த மொழிகள்.
> > அதன் தாயகம் வெளியே என்று மேலைநாட்டு மொழியியல் அறிஞர்
> > முடிவுசெய்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டன.
>
> கணேசனாரே
>
> நீங்கள் சரியாக மொழியியல் வாதங்களையும், சொல்லாடல்கலையும் புரிந்து
> கொள்ளவில்லை.
>
> இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்பது அசாமீஸில் இருந்து கெல்டிக் வரையானா
> மொழிகள் ஆகும். யாரும் அசாமீஸ், பெங்காலி, பஞ்சாபி, சமஸ்கிருதம், வேத
> மொழி இவை இந்தியாவிற்க்கு வெளியில் இருந்து வந்தவை என சொல்லவில்லை.
>

முதலில் வெளியே இருந்து உள்ளே நுழைந்து சம்ஸ்கிருதம், இந்தோ ஆர்யன்
மொழிகள் உருவாகின.

N. Ganesan

unread,
Feb 27, 2010, 9:35:57 AM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 8:15 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>

> விட்சல் கூட வேதங்கள் இந்தியாவில்தான் எழுந்தவை என சொல்கிறார்.
>

உவிட்சல் ஐயா இந்திய-ஐரோப்பிய மொழிகள் இந்தியாவிலிருந்து
வெளியே போனவை என்கிறாரா? மகாபெரியவர் கருத்துப் போலவே
தந்திஸ்ட் தான் பழசு, டெண்டிஸ்ட் அங்கிருந்து போனது என்றா
இந்தோ-ஐரோப்பிய மொழியியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இங்கு எழுதுவோர் அளவுக்கு நான் அறிஞர் புத்தகங்கள்
படித்ததில்லை பாருங்க.

நா. கணேசன்

விஜயராகவன்

unread,
Feb 27, 2010, 9:44:49 AM2/27/10
to மின்தமிழ்
சரி, இப்போது உங்கள் ராகத்தை மாத்திட்டீர்கள் - நல்லது.


சமஸ்கிருதம் என்பது பொதுவாக பாணினி கால மொழியையும், வேத மொழியை பழைய
இந்தோ-ஆர்யன் எனவும் ”அறிஞர்கள்” குறிப்பர்.

அது “வெளியே இருந்து உள்ளே நுழைந்து” என்று நேரடியாக சொல்லவில்லை,
ஏனெனில் அதற்க்கு சரித்திர, ஆவண, ஆர்கியலாஜிகல் ஆதாரங்கள் இல்லை.
வேதமொழியும், கதா இரேனியனும் பல விஷயங்களில் சார்ந்து இருப்பதால் வேத
மொழியின் “மூல”, புனர்நிர்மாணம் செய்யப்பட்ட “இந்தோ-இரேனியன்” என்பது
ஆஃப்கானிஸ்தான் வடக்கே என்கின்ரனர்.

விஜயராகவன்

> > விஜயராகவன்- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Feb 27, 2010, 9:53:51 AM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 8:44 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> சமஸ்கிருதம் என்பது பொதுவாக பாணினி கால மொழியையும், வேத மொழியை பழைய
> இந்தோ-ஆர்யன் எனவும் ”அறிஞர்கள்” குறிப்பர்.
>
> அது “வெளியே இருந்து உள்ளே நுழைந்து” என்று நேரடியாக சொல்லவில்லை,

வெளியே இருந்து ஆரியர் உள்ளே வரும் நிகழ்வுகளை வேதங்கள் குறிக்கின்றன.

குதிரை, சாரட்டுகளில் பிணைக்கப்படும் காலமும், இடமும்
நண்கு கணிக்கபட்டுவிட்டதால் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின்
தாயகம் சில ஆயிரம் சதுரமைலுக்குள் என்று நிர்ணயிக்கிறார்கள்.
அது இந்தியாவுக்கு வெளியே சில ஆயிரம் மைல்கள்.

சிந்து நாகரிகம் ஆரியர் இல்லாத ஒரு நாகரிகம்.
அதன் நுழைந்தன வேத மொழிகள். பழைய ஈரானிய
புத்தகங்களையும், இருக்கு வேதமும் படித்தால்
இரண்டும் நெருங்கிய உறவாக உள்ளது.
மலையாளம் - தமிழ் போல் நெருங்கியவை
ரிக்வேதம் - ஈரான் பழைய புஸ்தகங்கள்.

நா. கணேசன்

> ஏனெனில் அதற்க்கு சரித்திர, ஆவண, ஆர்கியலாஜிகல் ஆதாரங்கள் இல்லை.

devoo

unread,
Feb 27, 2010, 10:01:19 AM2/27/10
to மின்தமிழ்
விண்ணகரம் – விஷ்ணு க்ருஹம் ?

விஜயராகவன்

unread,
Feb 27, 2010, 10:08:32 AM2/27/10
to மின்தமிழ்
On 27 Feb, 14:53, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Feb 27, 8:44 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
>
>
> > சமஸ்கிருதம் என்பது பொதுவாக பாணினி கால மொழியையும், வேத மொழியை பழைய
> > இந்தோ-ஆர்யன் எனவும் ”அறிஞர்கள்” குறிப்பர்.
>
> > அது “வெளியே இருந்து உள்ளே நுழைந்து” என்று நேரடியாக சொல்லவில்லை,
>
> வெளியே இருந்து ஆரியர் உள்ளே வரும் நிகழ்வுகளை வேதங்கள் குறிக்கின்றன.

அதைப்போல் ஒரு குறிப்பும் இருப்பதாக விட்சல் போன்றவர்களே சொல்லவில்லை


விஜயராகவன்

N. Ganesan

unread,
Feb 27, 2010, 10:17:00 AM2/27/10
to மின்தமிழ்

நிறையச் சொல்லியிருக்கிறார்/கள்.

நா. கணேசன்

விஜயராகவன்

unread,
Feb 27, 2010, 10:27:51 AM2/27/10
to மின்தமிழ்
On 27 Feb, 15:17, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > அதைப்போல் ஒரு குறிப்பும் இருப்பதாக விட்சல் போன்றவர்களே சொல்லவில்லை
>
> > விஜயராகவன்
>
> நிறையச் சொல்லியிருக்கிறார்/கள்.
>
> நா. கணேசன்

இல்லாததை கற்பனை செய்கின்றீர்கள். அல்லது ஸ்பெகுலேஷன்களுக்கும், may be,
if..then, perhaps போன்றவற்றிர்க்கு உங்களுக்கு வேண்டுமென்றால் 100%
நிச்சயத்துவம் கொடுக்கின்றீர்கள்.

விடசலில் `ஆர்யர்கள் வீடு” என்ற கட்டுரையில் இருந்து

While the ultimate ''home'' of the speakers of Indo-Iranian thus seems
to
have been in or near the Greater Ural region, and while their trail up
to the
Bactria-Margiana Archaeological Complex (BMAC, see below) is clear
enough,
it is lost precisely there, as only BMAC impact is found all across
Greater Iran
and up to Harappa, but not direct steppe influence. At the present
stage of
research, neither the exact time frame, nor the exact trail, nor the
details of the
various movements of the speakers of Indo-Iranian and Indo-Aryan are
clear.


போதுமா?


விஜயராகவன்

N. Ganesan

unread,
Feb 27, 2010, 10:47:55 AM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 9:01 am, devoo <rde...@gmail.com> wrote:
> விண்ணகரம் – விஷ்ணு க்ருஹம் ?

சம்ஸ்க்ருத நகர, ஊர் (லாகூர்) போன்ற இடப்பெயர்கள்
திராவிட மொழிகளின் வினைச்சொற்கள்
நகர்தல், ஊர்தல் என்பதன் அடிப்படை
என்று வாசித்துள்ளேன்.

நா. கணேசன்

விஜயராகவன்

unread,
Feb 27, 2010, 10:58:06 AM2/27/10
to மின்தமிழ்

லாஹூர் `லவபுரி` (ராமர் பிள்ளை லவன்) என்பதின் மாற்றம் என நம்பப்
படுகின்றது. லவருக்கு ஒரு சமாதி இருப்பதாகவும் நம்பப் படுகின்றது. சில
வருடங்களுக்கு முன், முஷர்ரஃப் அத்வானியை லாஹூர் கோட்டையில் உள்ல லவ
கோவிலை திற்ப்பதற்க்கு கேட்டுக் கொண்டார்.

இதில் திராவிட வினைச்சொல் எங்கே என தெரியவில்லை (புரியா?)


விஜயராகவன்

N. Ganesan

unread,
Feb 27, 2010, 11:01:52 AM2/27/10
to மின்தமிழ்

ஊர் என்று முடியும் பெயர்கள் ஏராளமானவு புரி என்று
புராணக் கதைகளில் மாற்றப்பட்டுள்ளன.


> விஜயராகவன்

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 11:11:46 AM2/27/10
to மின்தமிழ்
தேவ் ஐயா!
விஷ்ணு க்ருஹம் -> விண்ணகரமா?
ஹிஹி! ரைமிங்கா கூட வரலையே!

மேலும் நீங்கள் சொன்ன அதே பாயிண்ட் தான்! இது போல் வேறு ஏதாச்சும் சொல்,
இப்படித் திரிகிறதா என்றும் பார்க்கணும்-ல்ல?
க்ருஹம்->கரம் என்று வேறெங்கும் ஆனாற் போல் தெரியவில்லையே!
மேலும், வடமொழியிலேயே ஆலயங்களை விஷ்ணு க்ருஹம், சிவ க்ருஹம் என்றெல்லாம்
குறிப்பதில்லை என்றே நினைக்கிறேன்!!

விண்ணகரம் - என்பது அழகான தமிழ்ப் பெயரே தான்!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 11:21:17 AM2/27/10
to மின்தமிழ்
@ திவா சார்
//அடிக்கடி பாத்து சிரிச்சு இருக்கேன். எதை வைத்து இப்படி இப்படி

மாறுகிறது என்று
சொல்கிறார்கள் வியந்ததுண்டு//
//இது போன்ற அர்த்தமற்ற விஞ்ஞானபூர்வமற்ற முயற்சிகளால் என்ன பலன் என்று

தெரியவில்லை. பொழுது போகாத நேரத்தில் அவரவர்கள் மனத்திருப்திக்கு செய்து
கொள்வது போலும்//

:)
இது போல தெய்வத்தின் குரலில், காஞ்சிப் பெரியவர் அடிக்கடி செய்வார்!
அவரைப் பார்த்து சிரிக்க முடியுமா?
இல்லை அவரவர் மனத்திருப்திக்கு, பொழுது போகாத நேரத்தில்-ன்னு சொல்லீறத்
தான் முடியுமா? :))

அப்படி இல்லை!
வெறுமனே ஒலி ஒற்றுமை மட்டும் வச்சிக்கிட்டு பேசினா, அப்படிச் சொல்லலாம்!
ஆனால் கணேசன் ஐயா அப்படிச் செய்யவில்லை!
வேர்ச் சொற்களும் இலக்கியச் சொற்களின் புழக்கத்தையும் தகுந்த தரவுகளோடு
எடுத்துக் காட்டி இருக்கிறார் பாருங்க!

முன்பே சொன்னது போல், இது....
தமிழ் தான் வடமொழிக்குக் கடன் கொடுத்துச்சி-ன்னு டமாரம் அடிக்கும்
முயற்சி அல்ல! அப்படிப் பார்த்தா எதிர்வினை தான் விளையும்!


அதே பொருள், அதே ஒன்றைக் குறிக்க, சங்கத் தமிழிலும் அதே நிறைவான சொல்
புழங்கியது - என்பதை எடுத்துக் காட்டுவதே நோக்கம்!

நம் மொழியில், நம் தமிழில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிந்து
கொள்வது மட்டுமே!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 27, 9:02 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> அடிக்கடி பாத்து சிரிச்சு இருக்கேன். எதை வைத்து இப்படி இப்படி மாறுகிறது என்று
> சொல்கிறார்கள் வியந்ததுண்டு. போகட்டும் நமக்கு புரியாத சமாசாரம் என்று
> விட்டுவிடுவேன்.
>

> 2010/2/27 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>


>
> > ஆக, இது போன்ற அர்த்தமற்ற விஞ்ஞானபூர்வமற்ற முயற்சிகளால் என்ன பலன் என்று
> > தெரியவில்லை. பொழுது போகாத நேரத்தில் அவரவர்கள் மனத்திருப்திக்கு செய்து
> > கொள்வது போலும்.
>
> --

> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 11:51:35 AM2/27/10
to மின்தமிழ்
அடடா!...
நெய்த்து, அறல், விண்ணகரம்-ன்னு நல்லபடியாத் தானே துவங்கினோம்?
அதுக்கே வருவோம்!
இது என்ன லாகூர், இந்தூர், மாயாப்பூர், மயிலாப்பூர்(மயில் ஆர்ப்பூர்)-
ன்னு பைபாஸ் ரோட்டுல திரும்பிட்டோம்? :))

அறல், தண்ணறல் என்பதெல்லாம், in this context, ஆற்றைத் தான் குறிக்கிறது!
கரு மணல் போல் தலை முடி-ன்னா...கருப்பு மண் போல் துகள் துகளா....ஜிப்சி
தலை முடி ஆயீரும்! :)

கருப்பா, ஆறு போல் வளைந்து செல்லும் முடி-ன்னா தான் பார்க்க, கொஞ்சம்
நல்லா இருக்கு! :)
எனக்கு கருப்பு மண் போல தலைமுடி இருக்கும் பொண்ணைப் பாத்துறாதீங்கப்பா!
இப்பவே சொல்லிப்புட்டேன்! :))

அறல்->அறு->ஆறு
ஆறு என்பது தமிழில் அழகான காரணப் பெயர் தான்!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 11:59:31 AM2/27/10
to மின்தமிழ்
@ ஹரி.கி ஐயா

//நீண்டு=நீளமானதாகவும்,
குழன்ற=திரண்டதாகவும்,* *
*நெய்த்து=நெய்பூசப்பட்டு நிகுநிகுப்பு (பளபளப்பு) உடையாதகவும்*,
இருட்டைப்போல் அடர் கருப்பாகவும்,
நெறிந்து=ஒழுங்குபட்டு (சீவப்பட்டு)//

நெய்த்து என்றால் நெய் பூசப்பட்டு என்று பொருளா?
நல்லாத் தான் இருக்கு!
ஆனால்...ஆனால்....
இதே போல் தைலம் பூசினால், தைலத்து/தைலத்தி என்று சொல் உள்ளதா?

ஓடுதல்->ஓட்டம் என்று வினையால் அணையும் பெயர் தெரியும்!
ஆனால் நெய்->நெய்த்து என்று பெயரால் அணையும் வினை?

"நெச்சுப்" பிச்சிப்
புட்பத் தட்பக்
கச்சிக் கற்று அறன்மேவி என்று....அருணகிரி சும்மா நல்லாவே நெய்த்து
இருக்காரு! :)
*** நெய்த்து = ஒன்றையொன்று பின்னி ***
My dear arunagiri, சும்மா நெய்த்துட்டீங்க = பின்னிட்டீங்க! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 27, 11:51 am, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> அடடா!...
> நெய்த்து, அறல், விண்ணகரம்-ன்னு நல்லபடியாத் தானே துவங்கினோம்?
> அதுக்கே வருவோம்!
> இது என்ன லாகூர், இந்தூர், மாயாப்பூர், மயிலாப்பூர்(மயில் ஆர்ப்பூர்)-
> ன்னு  பைபாஸ் ரோட்டுல திரும்பிட்டோம்? :))
>
> அறல், தண்ணறல் என்பதெல்லாம், in this context, ஆற்றைத் தான் குறிக்கிறது!
> கரு மணல் போல் தலை முடி-ன்னா...கருப்பு மண் போல் துகள் துகளா....ஜிப்சி
> தலை முடி ஆயீரும்! :)
>
> கருப்பா, ஆறு போல் வளைந்து செல்லும் முடி-ன்னா தான் பார்க்க, கொஞ்சம்
> நல்லா இருக்கு! :)
> எனக்கு கருப்பு மண் போல தலைமுடி இருக்கும் பொண்ணைப் பாத்துறாதீங்கப்பா!
> இப்பவே சொல்லிப்புட்டேன்! :))
>
> அறல்->அறு->ஆறு
> ஆறு என்பது  தமிழில் அழகான காரணப் பெயர்  தான்!
>
> anbudan

> KRShttp://madhavipanthal.blogspot.com

Hari Krishnan

unread,
Feb 27, 2010, 12:17:28 PM2/27/10
to mint...@googlegroups.com


2010/2/27 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
@ ஹரி.கி ஐயா



நெய்த்து என்றால் நெய் பூசப்பட்டு என்று பொருளா?

இல்லைன்னா ஏன் இல்லைன்னு சொல்லவும்.   அதற்கு அது பொருள்.  
 
நல்லாத் தான் இருக்கு!
 
இருக்கட்டும்.
 
ஆனால்...ஆனால்....
இதே போல் தைலம் பூசினால், தைலத்து/தைலத்தி என்று சொல் உள்ளதா?

விழி என்ற சொல்லின் அடிப்படையிலிருந்து விழித்தான் என்ற சொல் உருவானது என்றால், கண் என்ற சொல்லிலிருந்து கண்ணினான் என்ற சொல் ஏன் உருவாகவில்லை?  கரம் என்ற சொல்லிருந்து காரியம் என்ற சொல் உருவானால், கை என்ற சொல்லிலிருந்து கைத்தல் என்ற ஏன் உருவாகவில்லை?  ஒருவனை எட்டி உதைப்பதையோ, நடப்பதையோ காலுதல் என்று ஏன் அழைப்பதில்லை?

சொல் உருவாவது என்பது,

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்

என்பதையும் ஒட்டித்தான் உருவாகிறது.  முப்பது நாற்பதாண்டுகளாக முயன்றும் பேருந்து இன்னமும் தெருவில் ஓடவில்லை; பஸ்தான் ஓடுகிறது.  ஆனால், அதற்கு முற்பட்ட காலங்களில் முதலாளி, தொழிலாளி, புரட்சி, பாகஸ்தர் விநியோகஸ்தர், என்று பலப்பல ஏற்புடைய புதுச் சொற்களைப் படைகடக, இதே பத்திரிகையாளர்களால் எப்படி முடிந்தது?  தெருவுல போறவன் ஒப்புக்கொள்வதுபோல் சொல்லை உருவாக்கும் வித்தை அவர்களுக்குத் தெரிந்திருந்தது.  இப்போ, பாசாங்கு நிறைய வந்து கலந்துவிட்டது.  ரின் போட்டு துவைச்சா தேவலையா, சர்ஃப் போடலாமா ஏரியல் போடலாமா குடுமிப் பிடியில், குடுமியே காணாம போயிருச்சு.  

தெருவுல போறவன் ஓக்கே சொன்னாத்தான் எந்தச் சொல் வடிவமும் ஆட்சிக்கு வரமுடியும்.  இலக்கணம் சொல்கிறது.   


ஓடுதல்->ஓட்டம் என்று வினையால் அணையும் பெயர் தெரியும்!
ஆனால் நெய்->நெய்த்து என்று பெயரால் அணையும் வினை?

என்ன சொல்ல வரீங்க என்பதைத் தெளிவாச் சொல்லிப் போடுங்க.  நெய்த்தல் என்பதற்கு நெய்பூசப்பட்ட என்ற பொருள் இல்லை என்று மறுப்பதானால் வெளிப்படையாகச் சொல்லுங்கள்.  ஏன் அந்தப் பொருள் பெறப்பட்டது என்பதை விளக்குகிறேன்.  No beating about the bush please!


--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Feb 27, 2010, 12:21:48 PM2/27/10
to மின்தமிழ்
Feb 27, 10:11 am, "Kannabiran Ravi Shankar
//க்ருஹம்->கரம் என்று வேறெங்கும் ஆனாற் போல் தெரியவில்லையே!//

தற்பவச் சொற்களுக்குத் தனி விதிகள் உள்ளனவா தெரியவில்லை; ய,ர,ல போன்றவை
மொழி முதலாகா; இப்படி ஒரு சில இருக்கலாம்.
தர்ம தர்சநம் – தரும தெரிசனம் ஆகிறது; என்ன விதி ?
த்ருஷ்டத்யும்னன் – திட்டத்துய்மன் ஆகிறான்;
இலக்குவன், இலக்குமணன் இருவிதமாகவும் சொல்கிறோம்.

அருணகிரிநாதர் வடமொழி வடிவத்தை அப்படியே தரும் இடங்களும் உள்ளன; ’முந்து
தமிழ்’ என்று சொல்கிறார்; வடமொழி கலாபம் விரித்தாடுகிறது. பார்வையில்தான்
உள்ளது.

’அட்ட வீரட்டானம்’ – இதன் வடமொழி வடிவம் என்ன ? வடசொற்கள் தமிழிலிருந்து
கிளத்தவை என்றால் இங்கிருந்து அங்குபோய் மீண்டும் இங்கு வரும்போது
மூலத்தமிழ் வடிவத்தையே தரலாமே. தற்பவம் எனும் தனிப்பாகுபாட்டுக்கான
தேவைதான் என்ன ?

ஜார்ஜ் புஷ் , ஒபாமாவாக animation ஆவது வேறு;(அதுவும் தேவையற்றது)
மீண்டும் ஜார்ஜ் புஷ் படம் வேண்டுமானால் திரும்பவும் அனிமேஷன் செய்து
காலவிரயமாகாமல் முதல் படத்தையே கொடுத்து விடலாமே

தேவ்

N. Ganesan

unread,
Feb 27, 2010, 12:22:31 PM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 1:08 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/27 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > இன்னுமொரு திருப்புகழ்:
> >http://www.kaumaram.com/thiru_uni/tpun0490.html
>
> > அறல் ஓதியர் விழியாலே அறவே விழுங்கப்பட்டு ... கருமணலைப் போல் கரு நிறம்
> > கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்டு,
>
> > அறல் ஓதியர் விழியாலே - நெளியும் சுருள்களை உடைய கூந்தல் மாதர் விழியாலே.
>
> > கருமணலை இங்கே கொண்டுவர தேவையில்லை.
>
> > நா. கணேசன்
>
> இவ்வளவுமுறை கருமணலுக்கும் கூந்தலுக்கும் மெனக்கிடும் தாங்கள், தொமுசி
> ரகுநாதன், உவேசா மீது அவதூறாகப் பேசியதாக ஒரு செய்தியை வெளியிட எத்தனித்ததும்,
> இங்கே வேறொருவரின் தற்செயலான முயற்சியால் தொமுசி ரகுநாதன் பேசியது முழுக்க
> முழுக்க அடிப்படையற்ற அவதூறு, ஆதாரமற்ற பொய், இனதுவேஷமும், உள்நோக்கமும்
> கொண்டது என்பது ஐயத்துககிடமில்லாமல் நிறுவப்பட்டுவிட்ட பிறகு,
>
> இங்கேயும் சரி, அங்கேயும் சரி, திரும்பத் திரும்ப நினைவூட்டப்பட்ட பிறகும்கூட,

எங்கே நினைவூட்டினீர்கள்? எனக்கு மடல் அனுப்பினீர்களா?

பாரதி, பாரதி என்று எழுதினாலே அம்மடல்களை அனேகமாக நான்
பார்ப்பதில்ல்லை. அவர் பற்றி பலரும் பலதும் எழுதுகிறார்கள்,
சொல்லுகிறார்கள். 20-ஆம் நூற்றாண்டு பிரிண்ட் கலாச்சாரத்தில்
சென்னைப் பத்திரிகைகள் பாரதி, பெரியவாள், ....
என்று ஒரே பாட்டாக பரவசமாக இருக்கும்.
அது பெரிய வேலைதான். ஆனால் நான் பாரதி ஆராய்ச்சியாளன்
அல்லன், ஐயா.

நீங்கள் எழுதும் எல்லா மடல்களும் நான் படிக்க ஆசைதான்.
முடிவதில்லை. பிரதோசம் என்ற தலைப்பில் அருமையான
சில பாடல்கள் வரும். ஆனால் அனேகமாய் படிக்க
நேரம் கிடைப்பதில்லை.

தொமுசி பற்றி என்ன எங்கு எழுதினேன் என்று நினைவில்லை.
எந்த மடலைப் படித்து பதில் இடணும் என்று விரும்புகிறீர்களோ
எனக்கு மடலிட்டு ஆணை இடவும். தெரிந்தால் சொல்கிறேன்.

எத்தனையோ தனிமடல்களே படிக்காமல் கிடக்கின்றன.
உ-ம்: சென்ற வாரம், சந்திரயான் ம. அண்ணாதுரை
ஏதோ குங்குமம் கட்டுரை என்று அனுப்பினார்.
அதின் விஃசிப் ஃபைல். இன்னும் திறந்தே பார்க்கலை.

இண்பிட் இணைய மாநாடு, செம்மொழி மாநாடு பணிகளே
நிறைய உண்டு.

> உவேசா மீது பூசப்பட்ட அவதூறை அவதூறுதான்

அவ்வளவு பெரியவர் மீது என்ன அவதூறு? யார் பூசினது?

வணக்கம்,
நா. கணேசன்

> ‘தொமுசி ரகுநாதனுக்குப் பொய் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்பது எனக்குப்
> புரியவில்லை’ என்று அடிக்குறிப்பு எழுத மட்டும்தான் முடிகிறதே தவிர, அந்த
> விவாதத்தைத் தொடங்கிவைத்தவர் என்கிற முறையில், தொமுசி பேசியது தவறுதான் ஒன்று
> ஒரேயொரு ஒருமுறைகூட சொல்லமுடியவில்லை என்பது நேர்மையின் மேன்மையைக்
> காட்டுகிறது.
>
> உவேசா மீது பூசப்பட்ட அவதூறை அவதூறுதான் என்று ஒப்புக்கொள்வதைக் காட்டிலும்
> முக்கியமாக தலைமுடியும் கருமணலும் ஆகியிருப்பதை நினைத்தால் உவேசா தலைமுடியா,
> கருமணலா இல்லை அவற்றுக்கும் கீழ்ப்பட்டவரா?  என்னிடம் விடை இல்லை.

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 12:56:15 PM2/27/10
to மின்தமிழ்
@ ஹரி.கி ஐயா

//> நெய்த்து என்றால் நெய் பூசப்பட்டு என்று பொருளா?

இல்லைன்னா ஏன் இல்லைன்னு சொல்லவும். அதற்கு அது பொருள்//

அட, நான் இல்லை-ன்னே சொல்லலையே!
நல்லா இருக்கு-ன்னு வேற சொன்னேனே!
பொருளா?-என்று தானே கேட்டேன்!
இப்பவும் கேட்கிறேன்! சொல்லுங்க! அது "மட்டுமே" பொருளா? நெய்
பூசப்பட்டு என்பது "மட்டுமே" பொருளா?

//விழி என்ற சொல்லின் அடிப்படையிலிருந்து விழித்தான் என்ற சொல் உருவானது
என்றால்,
கண் என்ற சொல்லிலிருந்து கண்ணினான் என்ற சொல் ஏன் உருவாகவில்லை?//

விழி->விழித்தான்
பார்->பார்த்தான்
-ன்னு ரெண்டு மூனு பலுக்கல் வருகிறது அல்லவா?
அதே போல் இதுக்கும் "இருக்கா"-ன்னு தான் கேட்டேன்!
இருக்கு-ன்னா இருக்கு-ன்னு சொல்லுங்க! இல்லை-ன்னா இல்லை-ன்னு சொல்லுங்க!

கண்->கண்-த்தான் ன்னு இல்லையே தவிர, கண்->கண்டான்-ன்னு ஆச்சும்
இருக்குல்ல?
அது போல், நெய்->நெய்த்து என்றால், தைலம்->வேறு ஏதாச்சும் இருந்தாக் கூட
ஓக்கே தான்!
தொடர்பு படுத்திப் பார்க்கத் தான் கேட்டேன்!
நீங்க சொன்ன பொருளை "மறுக்க" அல்ல! :))))

//நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்//

சூப்பர்!
ஒன்னு நாடக வழக்கில் ஆச்சும் இருக்கணும்! இல்லை உலகியல் வழக்கில் ஆச்சும்
இருக்கணும்!
அதான் இருக்கா?-ன்னு உங்களைக் கேட்டேன்! :)

//தெருவுல போறவன் ஓக்கே சொன்னாத்தான் எந்தச் சொல் வடிவமும் ஆட்சிக்கு


வரமுடியும்.

இலக்கணம் சொல்கிறது//

ஆமாம்!
அதான் அக்ராசனர் என்பது போய் தலைவர் வந்தது!
சம்மேளனம் என்பது போய் மாநாடு வந்தது!
ஆனால் பேருந்து போய் பஸ் வரவில்லை! பஸ் வந்ததில் இருந்தே பஸ் தான்!
ரைட் ரைட் :)

//நெய்த்தல் என்பதற்கு நெய்பூசப்பட்ட என்ற பொருள் இல்லை என்று


மறுப்பதானால் வெளிப்படையாகச்

சொல்லுங்கள். ஏன் அந்தப் பொருள் பெறப்பட்டது என்பதை விளக்குகிறேன்//

ஒரு சொல்லோடு இன்னொரு சொல்லை ஒப்பு நோக்கினாலே "மறுக்கத் தான்" என்று
பொருளாகி விடாது!
தொடர்பு படுத்திப் பார்க்கத் தான் கேட்டேன்!
"நீங்களே" சொன்ன பொருளை "மறுக்க" அல்ல! :))))

//No beating about the bush please!//
ஓ...புதரடியா?
சரி சரி! புதரடி வேண்டாமே! :)) எனக்குப் பழனி மலையடி போதும்! :)

இதோ, மீண்டும் தங்கள் மேலான பார்வைக்கு:
நெய்த்தல் = நெய் பூசப்பட்டு என்பது "மட்டுமே" பொருளா?
நெய்த்தல் = வேறு பொருள் உளதா?
நெய்த்தல் = பின்னுதல் என்ற பொருள் இல்லையா?

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 27, 12:17 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/2/27 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 1:07:53 PM2/27/10
to மின்தமிழ்
// No beating about the bush please!//

நாங்க புஷ்ஷை எல்லாம் பீட் பண்ண மாட்டோம்!
தலைவர் ஹரி.கி (Harry.Ki) சொன்னாருன்னு,
ஓபாமா-வை வேணும்-ன்னா பீட்டறோம்! :))
அவரை இப்பவே நிறைய பேரு பீட்டறாங்க! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 27, 12:17 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:

> 2010/2/27 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 1:20:16 PM2/27/10
to மின்தமிழ்
//அருணகிரிநாதர் வடமொழி வடிவத்தை அப்படியே தரும் இடங்களும் உள்ளன;

’முந்து தமிழ்’ என்று சொல்கிறார்; வடமொழி கலாபம் விரித்தாடுகிறது.
பார்வையில் தான் உள்ளது//

ஆமாம் தேவ் ஐயா! தங்களோடு முழுதும் உடன்படுகிறேன்!
பார்வையில் தான் உள்ளது!
ஆழ்வார் காலத்தில் "பற்பநாபன்" என்பது போய், அருணகிரியார் காலத்தில்
"பத்மநாபன்" என்றே இயைந்து விட்டது! வழுவல கால வகையினானே!

//’அட்ட வீரட்டானம்’ – இதன் வடமொழி வடிவம் என்ன ?//
சரியே! "மலை"யப்ப ஸ்வாமிவாரு - இதன் வடிவம் என்ன? "திரு"மலா - இதன்
வடிவம் என்ன? அனைத்தும் இயல்பான இயைதலே!
தாங்கள் சொல்வது புரிகிறது!
அதான் முன்பே சொன்னேன்..."மொழிக் குறுகலுக்குள் அடக்குவது நோக்கம் இல்லை!
*** நம் மொழியில், நம் தமிழில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிந்து
கொள்வது மட்டுமே!" ***

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

devoo

unread,
Feb 27, 2010, 1:59:11 PM2/27/10
to மின்தமிழ்
Feb 27, 12:20 pm, "Kannabiran Ravi Shankar (KRS)

*** நம் மொழியில், நம் தமிழில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை
அறிந்து கொள்வது மட்டுமே!" ***

அப்படியே ஏற்கிறேன். அருணகிரியார் தாரகாரியைத் தமிழ்த்ரய விநோதனாகப்
பார்க்கிறார்; முத்தமிழ் என்று முதற்பாட்டில் சொன்னவர் தானே ! இறையுணர்வு
மிகும்போது மொழியுணர்வு மங்குகிறது. அவரால் தன் மொழி, அயல் மொழி என்று
தரம்பிரித்துப் பார்க்க முடியவில்லை.

ஸ்வாமி தேசிகன் பாதுகா ஸஹஸ்ரத்தில் எடுத்தாளும் கருத்து நாலாயிரம் கூறும்
வான் பணயத்தை உள்ளீடாகக் கொண்டது. நீங்கள் கேட்டீர்கள் . சிந்தை
செய்யும்போதே மனம் பொங்குகிறது; எழுதுவதற்கு ஓடவில்லை. அங்கு தமிழ்,
வடமொழி எல்லாம் அடிபட்டுப் போகிறது

தேவ்

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 2:52:25 PM2/27/10
to மின்தமிழ்
//நாலாயிரம் கூறும் வான் பணயத்தை உள்ளீடாகக் கொண்டது.
நீங்கள் கேட்டீர்கள் . சிந்தை செய்யும்போதே மனம் பொங்குகிறது;//

அதுக்குத் தான் கேட்டேன்! :))
அதுவும் உங்களிடம் பார்த்துக் கேட்டேன்! :))
இன்னும் என்ன தாமதம்?
"வான்" பணயம் வையுங்க! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Hari Krishnan

unread,
Feb 27, 2010, 5:57:41 PM2/27/10
to mint...@googlegroups.com


2010/2/27 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

@ ஹரி.கி ஐயா

//> நெய்த்து என்றால் நெய் பூசப்பட்டு என்று பொருளா?

இல்லைன்னா ஏன் இல்லைன்னு சொல்லவும்.   அதற்கு அது பொருள்//

அட, நான் இல்லை-ன்னே சொல்லலையே!
நல்லா இருக்கு-ன்னு வேற சொன்னேனே!
பொருளா?-என்று தானே கேட்டேன்!
இப்பவும் கேட்கிறேன்!  சொல்லுங்க!  அது "மட்டுமே" பொருளா? நெய்
பூசப்பட்டு என்பது "மட்டுமே" பொருளா?

மட்டுமே பொருள் என்றால், மட்டுந்தான் பொருள் எனறெழுதியிருப்பேன்.  மட்டுமே பொருள் என்பதனால், வேறு பொருள்களும் வரும் சாததியம் உண்டு என்பது நான் காணும் பொருள்.  நெய்து, தலைமுடியை நெசவு செய்து எனபதெல்லாம் என்வரையில் far-fetched.  தலைமுடியைப் பின்னித்தான் நான் பார்த்திருக்கிறேன்.  நெசவு செய்தார்கள் என்பதற்கு ஈடான ஆட்சி இலக்கியத்தில் பயின்றிருக்கிறதா என்பதைப் பார்த்தால், வழக்கம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் நாசாகாரருடைய தறியை ஓட்டலாம்.  தலையை நெசவு செய்வது என்றால் எனக்கு ஒருமாதிரி இருக்கிறது.

கேஆரெஸ், நீங்கள் இன்னொன்று கேட்டிருந்தீர்கள்: 

நெய்த்து என்றால் நெய் பூசப்பட்டு என்று பொருளா?
நல்லாத் தான் இருக்கு!
ஆனால்...ஆனால்....
இதே போல் தைலம் பூசினால், தைலத்து/தைலத்தி என்று சொல் உள்ளதா?
ஓடுதல்->ஓட்டம் என்று வினையால் அணையும் பெயர் தெரியும்!
ஆனால் நெய்->நெய்த்து என்று பெயரால் அணையும் வினை?

கம்பராமாயணத்தி்ல் கார்காலப் படலம் தொடங்குகிறது இல்லையா, அப்போ, மழை பெய்கின்ற வானத்தை வர்ணிக்கிறான்,

 பை அணைப் பல் தலைப் பாந்தள் ஏந்திய
மொய் நிலத் தகளியில், முழங்கு நீர் நெயின்,
வெய்யவன் விளக்கமா, மேருப் பொன் திரி,
மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே.

ஆதிசேஷன் தாங்கும் நிலமாகிய விளக்கில், ஒலிக்கின்ற மழை வெள்ளமே நெய்யாக, சூரியநே தீபமாக, பொன்மயமான மேருமலையின்மேல் கரி படிந்ததைப் போல் விளங்கியது மழைத்த வானம்.

மழைபெய்த, பெய்துகொண்டிருக்கும் வானம், மழைத்த வானம்.  எனில் நெய் தடவப்பட்ட கூந்தல் நெய்த்த கூந்தலாக இருகக முடியாதா?

மழைத்த வானம் என்ன இலக்கணமோ அதே இலக்கணம்தான் நெய்த்த கூந்தல்.  

It rained என்பதற்கு மழைத்தது என்று சொல்ல இன்றுகூட தயங்குகிறோம்.  சொல்லாட்சி, தேர்வு எல்லாம் கம்பன் கிட்ட கத்துக்கணும்.  

ஆங்கிலத்தில் gerund என்றொன்று உண்டல்லவா, அதற்கு இணையானதுதான் இத்தகைய தமிழ்ப் பயன்பாடு.  

இப்படிப்பட்ட பயன்பாடுகள் ஏராளமாக இருப்பதால், என்னால் இவற்றை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.  அன்றாடப் பேச்சுவழக்கில்கூட இப்படிப்பட்ட பயன்பாடுகள் நிறைய இருக்கின்றன.  (பிசுகோத்து என்ற கிண்டலை மும்மடி ஆகுபெயருக்கு விளக்கமாகச் சொல்வது என் வழக்கம்.  ஒருகாலத்தில் ஆங்கில இலக்கணம் கற்பித்துக் கொண்டிருந்தேன்.  கூடவே தமிழிலக்கணத்தையும் தொட்டுக்க வச்சுப்பேன்.) 
 

//நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்//

சூப்பர்!
ஒன்னு நாடக வழக்கில் ஆச்சும் இருக்கணும்! இல்லை உலகியல் வழக்கில் ஆச்சும்
இருக்கணும்!
அதான் இருக்கா?-ன்னு உங்களைக் கேட்டேன்! :)

மழைத்த சொன்னேனில்ல, நெய்த்த என்று கம்பன் ஆள்வதைப் பாருங்கள்: 

கைத் தரும் கவரி வீசிய காலால்,
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில்
தத்தி வீழ் அருவியின் திரள் சால,
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ,

கையினால் சாமரம் ஏந்தப்பட்டு, கவரி வீசுகின்ற காற்றால், நெய்ப்புடனே இருள் நிறத்தை அடைந்து, உயரமான பெரிய மலைமேல் பாய்ந்து, தத்தி விழும் அருவியைப் போல உத்தரீயம் நெடுமார்பில் விளங்கித் தோன்றிற்றாம்.  யாருககு?  ராவணனுக்கு.  ராவணன் களம்காண் படலத்தில் சொல்லப்படுவது.

இரண்டு பக்கமும் சாமரங்கள் வீசப்படுகின்றன.  பெரிய கரிய மலையைப் போல நிற்கிறான் ராவணன்.  அதுவும் எப்படி, polish போட்ட shoes மாதிரி பளபளக்கிற கருப்பு.  நெய்தடவப்பட்டு அதனாலே பளபளப்படைந்த இருட்டைப் போன்ற கருப்பு மலை.  அந்த மலையின் குறுக்கே, அவனுடைய உத்தரீயம் அருவிபோல விழுந்துகொண்டிருக்கிறது.  சாமரத்தால் வீசப்படுகிற காற்றால், அந்த உத்தரீயமான அருவி அலைப்புறுகிறது.  

எங்க, பின்னுங்க பாப்போம!  கூந்தலை நெய்த்தால், பின்னல் என்ற பொருளை வருவிக்கலாம்.  மலையை நெய்த்தால், யாரு வந்து பின்னறது?

Sometimes, super abundance of evidence makes it difficult to spot from memory.  I don't google for these things and it is not possible in these cases to do so.  நெய்த்த, நெய்த்து, நெய்தததால் என்று ஸ்பெல்லிங் வேற மாறும்.  மாத்தி மாத்தி தேடணும்.  அதுக்கெல்லாம் நமக்குப் பொறுமை இல்லை.  மண்டை இருக்கு.  அதுபோறும்.  என்னங்கறீங்க?



இதோ, மீண்டும் தங்கள் மேலான பார்வைக்கு:
நெய்த்தல் = நெய் பூசப்பட்டு என்பது "மட்டுமே" பொருளா?
நெய்த்தல் = வேறு பொருள் உளதா?
நெய்த்தல் = பின்னுதல் என்ற பொருள் இல்லையா?


நச்சுத்துச் சொப்பிச்சு என்ற திருப்புகழ் அடியைக் காட்டியிருக்கிறேனே.  நச்சு து என்றால், நச்சை உண்ட காரணத்தாலே அதை தன் உடலுக்குள் கொண்டவனாகிய பீமன் என்று பொருள்.  நச்சுத்து என்பது, நச்சு நிறைந்த தொப்பை என்றுதான் பொருள் தரும்.  ஆனால், உண்டகாரணத்தால் நிறைந்த தொப்பை என்று வருவித்துக் கொள்ள முடியும்.  அப்படி, எண்ணெய் தடவிய பிறகு சீவி, பின்னப்பட்ட தலை என்றும் கொள்ள முடியும்.  நேரடிப் பொருள் என்னவோ, நெய் பூசப்பட்டு என்பதுதான்.  பொருளிடை பெய்து விளக்கம் சொல்வதில் தவறில்லை.  

ஆனால் மலைமேல் நெய் தடவினால் அதைப் பின்ன முடியாது.  ராவண மலை எண்ணெய் அபிஷேக்ம் செய்த திருமலையைப் போல நிற்கிறது என்றால் என்ன அர்த்தம் சொல்றது?  அந்த மலையை யார் வந்து பின்னிவிடறது? 

N. Ganesan

unread,
Feb 27, 2010, 6:18:34 PM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 4:57 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> மட்டுமே பொருள் என்றால், மட்டுந்தான் பொருள் எனறெழுதியிருப்பேன்.  மட்டுமே
> பொருள் என்பதனால், வேறு பொருள்களும் வரும் சாததியம் உண்டு என்பது நான் காணும்
> பொருள்.  நெய்து, தலைமுடியை நெசவு செய்து எனபதெல்லாம் என்வரையில் far-fetched.
>  தலைமுடியைப் பின்னித்தான் நான் பார்த்திருக்கிறேன்.  நெசவு செய்தார்கள்
> என்பதற்கு ஈடான ஆட்சி இலக்கியத்தில் பயின்றிருக்கிறதா என்பதைப் பார்த்தால்,
> வழக்கம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் நாசாகாரருடைய தறியை ஓட்டலாம்.
>  தலையை நெசவு செய்வது என்றால் எனக்கு ஒருமாதிரி இருக்கிறது.
>

ஆமாம் எனக்கும் முதலில் அப்படித்தான் தோன்றியது.

ஆனால், பழைய இலக்கியங்களில் சடைப்பின்னலுக்கு (ஐம்பால்,
அதில் மணிகளும் முத்துக்களும் தொங்குவதால்)
இப்படியும் ஒரு பொருளை யோசித்தேன்.

நெய்தல் என்னும் வினைச்சொல்லுக்கு 2 பொருள்களை
லெக்சிகன் கொடுக்கிறது:
”To string; to link together; தொடுத்தல். நெய்தவை தூக்க (பரிபா. 19,
80).”

சில இடங்களிலாவது சடைப் பின்னலை நெய்தல் என்ற வினையால்
குறித்திருப்பர். இலக்கியங்களை முழுக்கப் பார்க்கணும்
என்று ஒப்புக்கொள்கிறேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 27, 2010, 7:26:25 PM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 4:57 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> மழைபெய்த, பெய்துகொண்டிருக்கும் வானம், மழைத்த வானம்.  எனில் நெய் தடவப்பட்ட
> கூந்தல் நெய்த்த கூந்தலாக இருகக முடியாதா?
>
> மழைத்த வானம் என்ன இலக்கணமோ அதே இலக்கணம்தான் நெய்த்த கூந்தல்.
>
> It rained என்பதற்கு மழைத்தது என்று சொல்ல இன்றுகூட தயங்குகிறோம்.  சொல்லாட்சி,
> தேர்வு எல்லாம் கம்பன் கிட்ட கத்துக்கணும்.
>
> ஆங்கிலத்தில் gerund என்றொன்று உண்டல்லவா, அதற்கு இணையானதுதான் இத்தகைய தமிழ்ப்
> பயன்பாடு.
>
> இப்படிப்பட்ட பயன்பாடுகள் ஏராளமாக இருப்பதால், என்னால் இவற்றை உடனடியாக
> நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.  அன்றாடப் பேச்சுவழக்கில்கூட இப்படிப்பட்ட
> பயன்பாடுகள் நிறைய இருக்கின்றன.  (பிசுகோத்து என்ற கிண்டலை மும்மடி
> ஆகுபெயருக்கு விளக்கமாகச் சொல்வது என் வழக்கம்.  ஒருகாலத்தில் ஆங்கில இலக்கணம்
> கற்பித்துக் கொண்டிருந்தேன்.  கூடவே தமிழிலக்கணத்தையும் தொட்டுக்க
> வச்சுப்பேன்.)
>

மழைத்தது என்பதுபோல், நம் கண்ணாரக் கண்டது ஒரு தமிழ்ப் பயன்பாடு.

பயன்படுத்தினார் என்பது சுருங்கிப் பயனித்தார் என்று ஆகியுள்ளது.

பயனிக்க- பெயரால் அணையும் வினை :)

user - பயனர்.
He used my computer - அவன் என் கணியைப் பயனித்தான்.
etc.,

நா. கணேசன்

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 7:44:13 PM2/27/10
to மின்தமிழ்
@ ஹரி.கி ஐயா
//நெய்து, தலைமுடியை நெசவு செய்து எனபதெல்லாம் என்வரையில் far-fetched
தலைமுடியைப் பின்னித்தான் நான் பார்த்திருக்கிறேன்//

சரி!
நெய்த்தல்=பின்னுதல் என்ற பொருளும் உண்டு என்பதையாச்சும் ஏற்றுக்
கொள்கிறீர்களா? :)

கணேசன் ஐயா, விவரிச்ச போது, கொஞ்சம் நெசவு-ன்னு எல்லாம் சேர்த்து
விட்டார்!
ஆனால் அவரே
//பல பகுதிகளாக அறுதியிட்டுப் பிரித்து, **பின்னல்** சடையிட்டு முடிதல்
என்னும்
பொருளைத் திருப்புகழ்ப் பாக்களுக்குச் சொல்லலாம் என்று எண்ணுகிறேன்// -
என்று சொல்லி இருக்கார், பாருங்க!
**** ஆக நெய்த்தல்=பின்னுதல்/இணைத்தல் என்ற பொருளும் உண்டு! ****

// நாசாகாரருடைய தறியை ஓட்டலாம்//
ஹிஹி! ஓட்டலாமே!
கம்பன் வீட்டுக் கட்டுத் தறி மட்டுமா கவி பாடும்?
கண்ணன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்! :))

//மண்டை இருக்கு. அதுபோறும். என்னங்கறீங்க? //
ஆகா!
என்ன ஐயா, என்னைய இப்படி மிரட்டறீங்க? :)
நான் Green Baby! பச்சைப் புள்ளையாக்கும்! :)
உங்க கிட்ட மண்டை இருந்தா,
என் கிட்ட மண்டையோட்டுக் காரர் இருக்காரு! அவரைப் பாடின சம்பந்த Green
Baby-யும் இருக்கு! என்னாங்கறீங்க? :))))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 27, 5:57 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/27 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> மை எடுத்து ஒத்தது *மழைத்த வானமே*.


>
> ஆதிசேஷன் தாங்கும் நிலமாகிய விளக்கில், ஒலிக்கின்ற மழை வெள்ளமே நெய்யாக,
> சூரியநே தீபமாக, பொன்மயமான மேருமலையின்மேல் கரி படிந்ததைப் போல் விளங்கியது
> மழைத்த வானம்.
>
> மழைபெய்த, பெய்துகொண்டிருக்கும் வானம், மழைத்த வானம்.  எனில் நெய் தடவப்பட்ட
> கூந்தல் நெய்த்த கூந்தலாக இருகக முடியாதா?
>
> மழைத்த வானம் என்ன இலக்கணமோ அதே இலக்கணம்தான் நெய்த்த கூந்தல்.
>
> It rained என்பதற்கு மழைத்தது என்று சொல்ல இன்றுகூட தயங்குகிறோம்.  சொல்லாட்சி,
> தேர்வு எல்லாம் கம்பன் கிட்ட கத்துக்கணும்.
>
> ஆங்கிலத்தில் gerund என்றொன்று உண்டல்லவா, அதற்கு இணையானதுதான் இத்தகைய தமிழ்ப்
> பயன்பாடு.
>
> இப்படிப்பட்ட பயன்பாடுகள் ஏராளமாக இருப்பதால், என்னால் இவற்றை உடனடியாக
> நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.  அன்றாடப் பேச்சுவழக்கில்கூட இப்படிப்பட்ட
> பயன்பாடுகள் நிறைய இருக்கின்றன.  (பிசுகோத்து என்ற கிண்டலை மும்மடி
> ஆகுபெயருக்கு விளக்கமாகச் சொல்வது என் வழக்கம்.  ஒருகாலத்தில் ஆங்கில இலக்கணம்
> கற்பித்துக் கொண்டிருந்தேன்.  கூடவே தமிழிலக்கணத்தையும் தொட்டுக்க
> வச்சுப்பேன்.)
>
>
>
> > //நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
> > பாடல் சான்ற புலனெறி வழக்கம்//
>
> > சூப்பர்!
> > ஒன்னு நாடக வழக்கில் ஆச்சும் இருக்கணும்! இல்லை உலகியல் வழக்கில் ஆச்சும்
> > இருக்கணும்!
> > அதான் இருக்கா?-ன்னு உங்களைக் கேட்டேன்! :)
>
> மழைத்த சொன்னேனில்ல, நெய்த்த என்று கம்பன் ஆள்வதைப் பாருங்கள்:
>
> கைத் தரும் கவரி வீசிய காலால்,

> *நெய்த்து இருண்டு *உயரும் நீள் வரை மீதில்


> தத்தி வீழ் அருவியின் திரள் சால,
> உத்தரீகம் நெடு மார்பின் உலாவ,
>
> கையினால் சாமரம் ஏந்தப்பட்டு, கவரி வீசுகின்ற காற்றால், நெய்ப்புடனே இருள்
> நிறத்தை அடைந்து, உயரமான பெரிய மலைமேல் பாய்ந்து, தத்தி விழும் அருவியைப் போல
> உத்தரீயம் நெடுமார்பில் விளங்கித் தோன்றிற்றாம்.  யாருககு?  ராவணனுக்கு.
>  ராவணன் களம்காண் படலத்தில் சொல்லப்படுவது.
>
> இரண்டு பக்கமும் சாமரங்கள் வீசப்படுகின்றன.  பெரிய கரிய மலையைப் போல நிற்கிறான்
> ராவணன்.  அதுவும் எப்படி, polish போட்ட shoes மாதிரி பளபளக்கிற கருப்பு.
>  நெய்தடவப்பட்டு அதனாலே பளபளப்படைந்த இருட்டைப் போன்ற கருப்பு மலை.  அந்த
> மலையின் குறுக்கே, அவனுடைய உத்தரீயம் அருவிபோல விழுந்துகொண்டிருக்கிறது.
>  சாமரத்தால் வீசப்படுகிற காற்றால், அந்த உத்தரீயமான அருவி அலைப்புறுகிறது.
>
> எங்க, பின்னுங்க பாப்போம!  கூந்தலை நெய்த்தால், பின்னல் என்ற பொருளை
> வருவிக்கலாம்.  மலையை நெய்த்தால், யாரு வந்து பின்னறது?
>
> Sometimes, super abundance of evidence makes it difficult to spot from
> memory.  I don't google for these things and it is not possible in these
> cases to do so.  நெய்த்த, நெய்த்து, நெய்தததால் என்று ஸ்பெல்லிங் வேற மாறும்.
>  மாத்தி மாத்தி தேடணும்.  அதுக்கெல்லாம் நமக்குப் பொறுமை இல்லை.  மண்டை
> இருக்கு.  அதுபோறும்.  என்னங்கறீங்க?
>
>
>
> > இதோ, மீண்டும் தங்கள் மேலான பார்வைக்கு:
> > நெய்த்தல் = நெய் பூசப்பட்டு என்பது "மட்டுமே" பொருளா?
>

> ...
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 9:52:04 PM2/27/10
to மின்தமிழ்
*** நெய்த்தல் ***

மொதல்ல, நபிகள் நாயகத்திடம் இருந்து துவங்குவோமே! :)

எய்த்திடாப் புகழ் நபி திருக் கரத்தினில் எடுத்து
வைத்த கன்று களியாவும் வானுலகுற வளர்ந்து
** நெய்த்து வீறொடுந் திரண்டன ** நெருங்கின நிறைகண்
மொய்த்த பூங்குலை சாய்த்தன காய்த்தன முழுதும்!

இங்கே நெய்த்து வீறுடன் திரண்டன என்றால்,
கன்றுகள் எல்லாம், நெய் தடவிக்கிட்டு, வீரமுடன் திரண்டன என்றா
பொருள்? :))
நெய்த்து = ஒருங்கிணைந்து,
வீறுடன் = சிறப்புடன்
திரண்டன = கூட்டமாக வந்தன!

***** ஆக, நெய்த்தல் = இணைத்தல்/பிணைத்தல்

அடுத்து, நம்ம டகால்ட்டி இருக்கானே, கண்ணபிரான்...அவனும் என்னைப் போல ஒரு
Green Baby தான்!
வாங்க, அவனைப் போயி ஒரு லுக்கு விட்டுட்டு வருவோம்! :)

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீலநிறத்துச் சிறுப்பிள்ளை
"நெய்த்தலை" நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே!
கனங்குழையீர் வந்து காணீரே!

நெய்த்தலை நேமி சங்கு-ன்னா என்ன? நெய் தடவிய சங்கு சக்கரமா? :)
சரி வேணாம்! Shoe Polish போல பாலிஷ் போட்ட சங்கு சக்கரமா? :)
சக்கரத்தின் ஒளி வெறும் பளபளப்பு தானா? கோடி சூர்யப் பிரகாசம் அல்லவா?
அவன் கைத்தலத்தை விட்டுப் பிரியாது, இணைந்து இருக்கும் சங்கு
சக்கரங்கள்! = நெய்த்தலை நேமிச் சங்கு நிலாவிய கைத்தலங்கள்!
ஒவ்வொரு அவதாரத்திலும் அவன் கூடவே வரும்! நரசிம்மத்துக்கு நகமாய்க் கூட
வரும்!

***** ஆக, நெய்த்தல் = இணைந்து இருத்தல்

இப்போ...கடேசியா என் முருகன் கிட்டக்க வருவோம்! :)
சாமி பெருமாள் மொதல்ல! காதலன் முருகன் கடைசியாத் தான்!
காதலனை வெயிட் பண்ண வைக்கற சுகம் இருக்கே! ஆகா! :))

இதம் உறு விரை புனல் முழுகிய-ன்னு திருப்புகழ்!
அறல் என, இசை அளி என, நள் இருள் என,
நிறம் அது கருகி நெடுகி
நெறிவு பட "நெய்த்து"
முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும்
விளங்க வர வரு பெருமாளே!!!

அது என்ன நெறிவு பட "நெய்த்த" குந்தளம்? = நல்லா இறுக்கிக் கட்டப்பட்ட
தலைமுடி! :)
சுருள் குந்தளம்! சுருள் சுருளா தொங்கிக்கிட்டே இருக்கும் என்
முருகனுக்கு!
நான் தான், என் முருகனுக்குத் தலை சீவி, ரிப்பன் போட்டுக் கட்டி
விடுவேன்! :)) நெறிவு பட "நெய்த்து" விடுவேன்!

***** ஆக, நெய்த்தல் = இணைத்தல்/பின்னிப் பிணைதல்!

என்னாங்கறீங்க?
என்னாங்கறீங்க?
என்னாங்கறீங்க?

மெள்ள எழுந்து "ஹரி.கி" என்ற பேரரவம்..உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ
ரெம்பாவாய்! :))))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 27, 7:44 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"

> KRShttp://madhavipanthal.blogspot.com

> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Feb 27, 2010, 10:23:58 PM2/27/10
to mint...@googlegroups.com


2010/2/28 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

@ ஹரி.கி ஐயா
//நெய்து, தலைமுடியை நெசவு செய்து எனபதெல்லாம் என்வரையில் far-fetched
 தலைமுடியைப் பின்னித்தான் நான் பார்த்திருக்கிறேன்//

சரி!
நெய்த்தல்=பின்னுதல் என்ற பொருளும் உண்டு என்பதையாச்சும் ஏற்றுக்
கொள்கிறீர்களா? :)

கோலார் தங்கவயலிலிருந்து செங்கல் செங்கல்லாக தங்கக் கட்டிகளைக் கப்பலில் ஏற்றி எடுத்துப் போய்க்கொண்டிருந்தனர்.  எல்லாம் வெள்ளக்காரங்கதான்.  இந்திய மண்ணில் விளைந்தது; இந்தியாவுக்குச் சொந்தமானது.  என்றபோதிலும் அவங்கதான் ஆண்டவங்க.  ஆகையினால, அத்தனைப் பொன்னும் அவுங்குளுது.

தூக்கிக்கிட்டுப் போனாலும், அவங்ககிட்ட ஒரு பழக்கம் இருந்தது.  ஒவ்வொரு தங்கப் பாளமும் இறுகுவதற்கு முன்னால் அதன்மேல் மைசூர் மஹராஜா வந்து முத்திரையிட்டுவிட்டுப் போகவேண்டும்.  அது தங்கம்தான் அப்படின்னாலும் மைசூரு் மஹராஜா முத்திரையிட்டதன் பின்னால்தான் அதைக் கப்பலில் ஏற்றுவர்கள்.  கண்களில் நீர்வழிய முத்திரையிடுவராம் மைசூர் மஹராஜா.

அப்படி, தமிழ்ச் சொல் எல்லாம் தங்கக்கட்டிதான்.  அதன்மேல் முத்திரையிட நான் என்ன மைசூர் மஹராஜாவா?  நான் முத்திரையிட்ட பிறகுதான் இவையெல்லாம் செலாவணியாகப் போகிறதா?

மதிப்புக்குரிய எதிர்த்தரப்பு வைக்கோல் அவர்களே (மன்னிக்கவும்....எலுத்துப் பிலை அகிஉட்டது.....வக்கீல் அவர்களே என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும்)  ‘இதையாவது ஏற்றுக் கொள்கிறீர்களா’ என்று என்னிடம் வந்து விடாப்பிடியாக (‘அவனைக் கொல்லவி்லை என்பது உண்மைதான்; ஆனால், கொல்லப் பயன்படுத்திய கத்திக்கு மரப்பிடியைப் போடுவதற்கான மரம் உன்கடையில்தான் வாங்கப்பட்டது என்பதையாவது ஒப்புக்கொள்கிறாயா என்று கேட்கும் வக்கீலைப் போல) கேட்பதனால், I took a pic of my friend Dic.  என் நண்பர் டிக் என்ன சொல்றார்னு போட்டோல பாருங்க.

எய்தல், எய்த்தல் இரண்டும் வேற பொருள்; வைதல் வைத்தல் இரண்டும் வேற பொருள்; நைதல் நைத்தல் இரண்டும் வேற பொருள்.  அப்படி இருக்கும்போது நெய்தல், நெய்த்தல் இரண்டும் எப்படி ஒரே பொருளாக இருக்க முடியும்?

படத்தைப் பாருங்கள்.  நெய் என்ற நுழைவுக்கு மேலாக இருக்கும் நெய்-தல் என்ற நுழைவு மட்டும்தான் பிரதிவாதி புயங்கரம் (பயங்கரம் இல்ல, புயங்கரம்தான்) உ வே கணேச ராக்கெட்டாழ்வாருக்குத் தென்பட்டிருக்கிறது.  அதை எடுத்தார்; நெய்த்தலோடு கோத்தார்; தலைமுடியை நெய்வது, பின்னுவது என்று பொருளை உற்பத்தியாக்கிவிட்டார்.

நெய் என்ற நுழைவுக்கு அடுத்த நெய்த்தல் என்ற நுழைவு ஒன்று இருக்கிறது என்பது மேதகு பிரதிவாதய புயங்கர உ வே ராக்கெட்டாழ்வார் புலத்துக்கு எட்டவில்லை.  மைக்கேராடிகிரி பிறழ்ந்து பாய்ந்த ஏவுகணை, இலக்கை விட்டு ஈராயிரம் கிமீ தள்ளி விழுவதைப்போல விழுந்துவிட்டது.

நெய்த்தல் என்ற சொல்லுக்கு, பின்னுதல் என்ற பொருள் இருக்கிறதா என்று பாருங்கள்.  நீங்களே உங்களுடைய கண்களாலேயே பார்த்துக்கொள்ளுங்கள்.  
 

கணேசன் ஐயா, விவரிச்ச போது, கொஞ்சம் நெசவு-ன்னு எல்லாம் சேர்த்து
விட்டார்!
ஆனால் அவரே
//பல பகுதிகளாக அறுதியிட்டுப் பிரித்து, **பின்னல்** சடையிட்டு முடிதல்
என்னும்
பொருளைத் திருப்புகழ்ப் பாக்களுக்குச் சொல்லலாம் என்று எண்ணுகிறேன்// -
என்று சொல்லி இருக்கார், பாருங்க!
**** ஆக நெய்த்தல்=பின்னுதல்/இணைத்தல் என்ற பொருளும் உண்டு!  ****

ஏப்பம் விட்டார் அப்படின்னா, வயிறுமுட்ட தின்றிருக்கிறார் என்றும் பொருள் உண்டு.  அதுதான் பொதுவாகக் கொள்ளப்படும் பொருள்.  ஆனால் பசி ஏப்பம் என்ற ஒன்றும் உண்டு.  பசிஏப்பம் விடுபவனை, புளியேப்பக்காரனாகப் பொருள்கொண்டு, ‘அவன் நல்லா துண்ணுட்டிருக்கம்ப்பா....போறதுக்கு தண்ணி வேற அஷ்ட்டுகீறான்’ என்று முடிவுகட்டுவதைப்போல முடிவுகட்டினால், பாவம், அவன் பசியால் செத்துப் போகவேண்டியதுதான்.

பேச்சு நெய்த்து பற்றியது மட்டுமே அன்று.  -து என்ற விகுதியால் பெறப்படும் பொருள் பற்றியது.  நெய்த்து என்று இருந்தால், உரையாசிரியர்கள், நெய்தடவி, சீவி, பின்னி என்று பொருத்தமாக ரெண்டு வார்த்தை சேர்ப்பார்கள்தாம்.  அந்த -‘து‘வை இடம்பொருள் ஏவலில்லாமல் எல்லா இடத்திலும் கொண்டுகூட்டுவேன் என்று அடம்பிடித்தால்,

நச்சுத்து (நச்சை உள்ளவன் என்பது நேர்பொருள்; நச்சு கலந்த உணவை உண்டதனால் நச்சைத் தன் வயிற்றுக்குள்ளே உடையவன் என்பது அந்தச் சூழலுக்கான பொருள்.)  நச்சுத்து பீமனுக்கு யாரு தலை பின்னிவிட்டாங்க?  வெங்கட்டு என்றால் வெம்மையான கண்ணை உடையது என்ற பொருள்தான்.  அதுக்கும் போயி பின்னுவதை ஒட்டத்தான் ஒட்டுவேன் என்று ஒத்தக்காலில் நின்னால், அது சாதாரண கட்டு இல்ல, வெங்கட்டு...பெரிய பெரிய தந்தம் வேற இருக்கு.  ஜாக்கிரதை.  

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

நேத்திக்கு வரைக்கும் எனக்கு எமன் எப்படி இருப்பான்னு தெரியாது; இதோ இப்ப தெரியும்.  எமனுக்கு ஜோதிகா கண்ணு மாதிரி முட்டக் கண்ணு.  கண்ணை உடையது கட்டு.  அப்படின்னார் மைலாப்பூர்.  பின்னிவிட கண் இமைதான் இருக்கிறது.  அதப் பின்னிவிட்டுட்டு வரலாம்னு பாத்தா சூரியா ஒதக்க வரார்.  வேற யாரச்சும் சிக்குவாஙக்ளான்னு பாருங்க பேரமாத்திக்கொண்டு வந்திருக்கும் நாரத குருசாமி!

இப்புடியே என் வாயப்புடுங்கிட்டு இருந்தா, காரணை மடிப்பரையன் (அய்ய...விழுப்பு எல்லாம் மாணாம்...நல்ல மடியாவே இருக்கட்டும்) குடலுக்கு உறைபோட முடியாது.  எப்டி வசதி?  



//மண்டை இருக்கு.  அதுபோறும்.  என்னங்கறீங்க? //
ஆகா!
என்ன ஐயா, என்னைய இப்படி மிரட்டறீங்க? :)
நான் Green Baby!  பச்சைப் புள்ளையாக்கும்! :)
உங்க கிட்ட மண்டை இருந்தா,
என் கிட்ட மண்டையோட்டுக் காரர் இருக்காரு!  அவரைப் பாடின சம்பந்த Green
Baby-யும் இருக்கு!  என்னாங்கறீங்க? :))))

கபாலிநீ தயாநிதி உமாபதி துணைவருவாய் அப்படின்னு நித்தியசிரி பாடியிருக்காங்க.  அந்தப் பாட்ட என் குரலில் பாடினேன்னு வய்ங்க.  ஒம்ம கபாலி விட்டா போறும்னு ஓடிப்போய் சுடுகாட்டுக்குள்ற பதுங்கிக்குவாராக்கும்.  ஹக்க.

நெய்த்து.jpg

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 11:01:12 PM2/27/10
to மின்தமிழ்
// நெய் என்ற நுழைவுக்கு மேலாக இருக்கும் நெய்-தல் என்ற

நுழைவு மட்டும்தான் பிரதிவாதி புயங்கரம் (பயங்கரம் இல்ல, புயங்கரம்தான்)
உ வே
கணேச ராக்கெட்டாழ்வாருக்குத் தென்பட்டிருக்கிறது//

அட....என்ன ஹரி.கி ஐயா இது?
என்ன ஆச்சு? இந்த ஓட்டு ஓட்டறீங்க? :)))

//பேச்சு நெய்த்து பற்றியது மட்டுமே அன்று. -து என்ற விகுதியால்
பெறப்படும்
பொருள் பற்றியது.//

Ok! That I leave it to Ganesan Ayya!
But I think what he said in the "overall sense" about நெய்த்து & அறல்
was right!
Of course, your idea of "நெய் தடவி/பளபளத்து" was right too!
Thatz why I asked, "Is that the only meaning"...
இப்போ நீங்க கொடுத்த அகரமுதலி பக்கத்தில், "கொழுப்பு அடைதல்"/Become
Fleshy-ன்னு வேற இன்னொரு பொருளும் போட்டிருக்கு! :))

ரொம்ப வேலை கொடுத்துட்டேனோ?
இச் சிறுவனின் பொருட்டு அகரமுதலியை எல்லாம் மின்-வருடிக் கொடுத்தமைக்கு
நன்றி!
டேய் முருகா, அந்தப் அஞ்சு கிலோ பஞ்சாமிர்த டப்பாவை எடுத்து ஹரி.கி. ஐயா
கிட்ட ஃப்ரீயாக் கொடு! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 27, 10:23 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/2/28 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

>  நெய்த்து.jpg
> 550KViewDownload

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 11:06:30 PM2/27/10
to மின்தமிழ்
//எமனுக்கு ஜோதிகா கண்ணு மாதிரி முட்டக் கண்ணு//

என்ன இருந்தாலும், ஸ்கூல்-ல படிக்கச் சொல்ல பார்த்த அமலா கண்ணு மாதிரி
வருமா?
I hate Nagarjuna! :))

//அந்தப் பாட்ட என் குரலில் பாடினேன்னு வய்ங்க. ஒம்ம கபாலி விட்டா
போறும்னு
ஓடிப்போய் சுடுகாட்டுக்குள்ற பதுங்கிக்குவாராக்கும். ஹக்க//

ஹா ஹா ஹா!
கவலைப்படாதீங்க...நானும் முருகனும் ஒன்னாப் போயி, அவரை மறுபடியும் ஒங்க
கிட்டு இஸ்துக்கிட்டு வரோம்!
அவரு ஒங்க பாட்டுக்கு எசப்பாட்டு பாடுவாரு...மெள்ள எழுந்து ஹரி.கி என்ற
பேரரவம்........:)))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 27, 10:23 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/2/28 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

Hari Krishnan

unread,
Feb 27, 2010, 11:07:23 PM2/27/10
to mint...@googlegroups.com


2010/2/28 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

*** நெய்த்தல் ***

மொதல்ல, நபிகள் நாயகத்திடம் இருந்து துவங்குவோமே! :)

எய்த்திடாப் புகழ் நபி திருக் கரத்தினில் எடுத்து
வைத்த கன்று களியாவும் வானுலகுற வளர்ந்து
** நெய்த்து வீறொடுந் திரண்டன ** நெருங்கின நிறைகண்
மொய்த்த பூங்குலை சாய்த்தன காய்த்தன முழுதும்!

இங்கே நெய்த்து வீறுடன் திரண்டன என்றால்,
கன்றுகள் எல்லாம், நெய் தடவிக்கிட்டு, வீரமுடன் திரண்டன என்றா
பொருள்? :))
நெய்த்து = ஒருங்கிணைந்து,


அட டடட டடடா!  கோபால்சாமி பேர வச்சுக்கிட்டா கன்னுக்குட்டிக்கு நீங்கதான அத்தாரிட்டியா?  மறுபடியும் அகராதி புகைப்படத்தைப் பாருங்கள்.  நெய் என்பதற்கு பொருள் எண் 8 என்ன என்பதைப் பாருங்கள்.  சினேகம் என்பது இந்த இடத்தில் வரவேண்டிய பொருள்.  Friendship, love.  கன்று களியாவும் அப்படின்னா, கன்றுகள் எல்லாம் களித்து, சந்தோஷமாக அப்படின்னு அர்த்தம்.  கன்று, களி, யாவும் அப்படின்னு பிரிக்கக்கூடாது.

வீறு என்றால் வீரம்னு யார் அர்த்தம் சொன்னாங்க? வீறுகொண்டு எழு அப்படின்னு திராவிடத் தலைவர்கள் சொல்லிச் சொல்லி, வீறு அப்படின்னா வீரம்னு நினச்சிட்டீங்களா?  வீறு என்றால் பெருமிதம்; கர்வம் நிறைந்த பெருமிதம்.  

வீறு, (p. 948) [ vīṟu, ] s. Greatness; arrogance, பெருமை. 2. Solitariness, தனிமை. 3. Merit, புண்ணி யம். 4. Brightness, clearness, பிரகாசம். 5. Disgust, வெறுப்பு. (சது.) 6. (c.) Strength of medicines, or poisons, மருந்துச்சத்து.

வின்ஸ்லோ.

நபிகளால் வாரி எடுக்கப்பட்டோமே என்ற பெருமிதம் வாய்ந்த நட்புடன் அந்தக் கன்றுகள் வானுலகு வரையில் வளர்ந்து நின்றன, கண்ணன்முல்லா.  நல்லா குல்லா போடறீங்க.....  தலைக்கு ஏத்த குல்லாவா, குல்லாவுக்கு ஏத்த தலையா?

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீலநிறத்துச் சிறுப்பிள்ளை
"நெய்த்தலை" நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே!
கனங்குழையீர் வந்து காணீரே!

நெய்த்தலை நேமி சங்கு-ன்னா என்ன?  நெய் தடவிய சங்கு சக்கரமா? :)
சரி வேணாம்! Shoe Polish போல பாலிஷ் போட்ட சங்கு சக்கரமா? :)

டகால்டியெல்லாம் இதுகிடட பிச்சை வாங்கணும்.  ‘கிழிக்கப்பட்ட இறைவன் ஓலை’ அப்படின்னா, கிழிக்கப்பட்டுது இறைவனா, ஓலையான்னு இங்க யாரோ கேட்டாங்க.  அந்த நெய்த்தலை இருக்கிறதே, அதுல ஒரு உம்மைத்தொகை இருக்கிறது.  எண்ணும்மைத் தொகை.  நீலநிறத்துச் சிறுபிள்ளை நெய்த்தலையும், நேமியும், சங்கும் நிலாவிய கைத்தலங்களையும் வந்து காணீர்

I had bread and butter and fruit salad for breakfast அப்படின்னு மூணு அண்ட் போட்டா, bread and butter என்பது பிரிக்க முடியாத ஒரு க்ரூப்; அதுவும் பழச்சாறும் உண்டேன் அப்படின்னு இல்ல பொருள்?  அத்த உட்டுட்டு. a list ends with only one and என்று கண்ணை மூடிக்கொண்டு, I had bread, butter and fruit saladனு போயி சொல்லிப் பாருங்க.  ஒங்க ஓட்டல் வெய்ட்டர் மனசுக்குள்ளயாவது சிரிச்சுப்பான்.

நெய்த்தலை (எண்ணும்மைத் தொகை) நேமியும் சங்கும் (எண்ணும்மைதான்; வெளிப்படையாக நிற்கின்றன) தாங்கிய கைத்தலங்கள் (மறுபடியும் எண்ணும்மைத் தொகை).  நெய்த்தலையையும் கைத்தலங்களையும் காணுங்கள்.  தலையில் எண்ணெய் தடவியிருக்கிறது.  கையில் சங்கும் சக்கரமும் இருக்கிறது.  

ணா!  பஜார்ல உஜாரில்லாட்டா நிஜார களட்டிருவாங்கன்றது சரியாயத்தாண்ணா இருக்கு.... அது எப்டீண்ணா இப்படியெல்லாம் பொருள் புதுசு புதுசா உற்பத்தி ஆகிறது?

சக்கரத்தின் ஒளி வெறும் பளபளப்பு தானா? கோடி சூர்யப் பிரகாசம் அல்லவா?
அவன் கைத்தலத்தை விட்டுப் பிரியாது, இணைந்து இருக்கும் சங்கு
சக்கரங்கள்!  = நெய்த்தலை நேமிச் சங்கு நிலாவிய கைத்தலங்கள்!
ஒவ்வொரு அவதாரத்திலும் அவன் கூடவே வரும்!  நரசிம்மத்துக்கு நகமாய்க் கூட
வரும்!

***** ஆக, நெய்த்தல் =  இணைந்து இருத்தல்

இப்போ...கடேசியா என் முருகன் கிட்டக்க வருவோம்!  :)
சாமி பெருமாள் மொதல்ல!  காதலன் முருகன் கடைசியாத் தான்!
காதலனை வெயிட் பண்ண வைக்கற சுகம் இருக்கே!  ஆகா! :))

இதம் உறு விரை புனல் முழுகிய-ன்னு திருப்புகழ்!
அறல் என, இசை அளி என, நள் இருள் என,
நிறம் அது கருகி நெடுகி
நெறிவு பட "நெய்த்து"
முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும்
விளங்க வர வரு பெருமாளே!!!

அது என்ன நெறிவு பட "நெய்த்த" குந்தளம்? = நல்லா இறுக்கிக் கட்டப்பட்ட
தலைமுடி! :)
சுருள் குந்தளம்!  சுருள் சுருளா தொங்கிக்கிட்டே இருக்கும் என்
முருகனுக்கு!

சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுய என்று தொடங்கும் மயில் வகுப்பு படிச்சிருக்கீங்களா?  கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப்பரவும் அப்படின்னு சொல்றாரே அது ஆரு அது?  வள்ளி.  கிராத (வேட்டுவ) புராதநி.  அவளுடையதும் கொந்தளம்தான்.  முருகனுடையதும் கொந்தளம்தான்.  குந்தளம் என்றால் எனனவென்று வின்ஸ்லோ சொல்கிறது: 

*குந்தளம், (p. 323) [ *kuntaḷam, ] s. Women's hair, பெண் மயிர். 2. Hair in general, மயிர்ப்பொது. 3. A kind of hair-knot or curls, மயிர்க்குழற்சி. 4. The name of a country, Kuntala, ஓர்தேசம். Wils. p. 229,KUNTALA

நெறிவுபட நெய்த்த குந்தளம் என்பதை நெய்த்த, நெறிவுபட்ட குந்தளம் என்று அன்வயப்படுத்திப் பொருள் காணுங்கணோவ்!  உங்க காதலன் அர்த்தம் சொல்வான்!

பஜார்ல மட்டுமில்ல இணையத்திலும் உஜாரத்தான் இருக்கவேணுமப்போவ்!  இணையத்துல துணியத்துப் போனா கணயத்த களட்டிக்கிருவாங்க... ஏற்கெனவே சர்க்கரை சாஸ்தி.  கணையத்தை உருவிகிராதீங்க....அப்புறம் வியாசர் பிள்ளை எகிறிக் குதித்து, பாதாளத்துக்குப் பாய்ந்து ஏற்கெனவே வகைவகையா ஆட்டி வச்சிட்டிருக்கார்.  கோமால கீமால போயிராமா காப்பாத்துங்க நாரதகுருசாமி!  

devoo

unread,
Feb 27, 2010, 11:30:40 PM2/27/10
to மின்தமிழ்
கேஆர்எஸ்ஜீ,

விண்ணகரம் பற்றி ஆராய்ந்தீர்கள்; பாலேய் தமிழர், பெருந்தமிழர் என்று
தம்மைக் கூறிக்கொள்ளும் ஆழ்வார்கள் ‘ விண்ணு’ என்று விஷ்ணுவை
விளித்தனரா ? ’விண்’ வடமொழியில் மட்டும்தானே அமங்கலம், இதை
முடித்துவிட்டு நெய்யலாமே

தேவ்


Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 27, 2010, 11:47:24 PM2/27/10
to மின்தமிழ்
@ தேவ் ஐயா

விண்ணகரம் என்பதற்கே இன்னும் விடை தெரியலையே!
ஹரி.கி வந்து சொல்றாரா-ன்னு பார்ப்போம்!

ஆழ்வார்கள் தங்களைத் தமிழன், பெருந்தமிழன் என்று கூறிக் கொண்டார்கள்
தான்!
ஆனால் விண்ணு என்று விளிக்கவில்லை!
அதே சமயம் விஷ்ணு என்றும் விளிக்கவில்லை!
விட்டுணு-> விட்டு என்று விளித்தார்கள்! விட்டு சித்தன்! (பெரியாழ்வார்)

//இதை முடித்துவிட்டு நெய்யலாமே//

ஹிஹி!
ஹரி.கி ஐயா, தேவ் ஐயா சொல் பேச்சைக் கேளுங்க! விண்ணகரத்துக்கு
வாங்க! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

karthi

unread,
Feb 28, 2010, 12:04:29 AM2/28/10
to mint...@googlegroups.com
ஆஹா! உங்கள் உரையாடலுக்குள் நான் வரவில்லை. ஆனால்
எத்தனை அழகாக எடுத்துக்காட்டுக்கள் இட்டு ஒரு "கெத்தோடு"
பேசுகிறீர்கள். இலக்கிய கெத்து, மெத்த அழகு!

இனி ஹரிகி என்னும் பேரரவம் கேட்கக் காத்திருப்போம்.
இடையில் தயிர் கடையும் ஓசையுடன் யாராகிலும் பேசினாலும்
கேட்டிருப்போம்.

ரெ.கா.

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like
> to visit our Muthusom Blogs at:
> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Feb 28, 2010, 12:04:57 AM2/28/10
to மின்தமிழ்
Feb 27, 10:47 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"

//அதே சமயம் விஷ்ணு என்றும் விளிக்கவில்லை!


விட்டுணு-> விட்டு என்று விளித்தார்கள்! விட்டு சித்தன்!
(பெரியாழ்வார்) //

விஷ்ணு – நாலாயிரத்தில் இருப்பதாக நானும் சொல்லவில்லை ஐயா;

விண் > விட்டு> விண்ணு – என்று பல நிலைகளில் அனிமேஷன் காட்டப்பட்டது;
அதில் எந்த ஒரு சொல்லாவது பாகதத்திலோ , சங்கதத்திலோ இருப்பதை நிறுவ
வேண்டும்; தமிழ் வழக்கமே மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. போலந்துப்
புலவர், ஐஸ்லாந்து அறிஞர் என்று ஏதோ கூறிச்சென்றார் கணேசனார்; அதோடு
விட்டு விட்டார்

அக்ரஹாரம் – அகரம்
முனைகளில் ஹரி ஹரர்களுக்கான ஆலயம் அமையப்பெற்ற இடம் என்னும் பொருளில்;
அக்ரம் - முனை

நெய்தல் – நெய்த்தல் சர்ச்சை அழகாக இருக்கிறது; இலக்கியத்தின் சுவையான
பகுதிகளைப் பார்க்கும் வாய்ப்பு

தேவ்

N. Ganesan

unread,
Feb 28, 2010, 12:08:26 AM2/28/10
to மின்தமிழ்

On Feb 27, 8:52 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> *** நெய்த்தல் ***

> மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற


> செய்த்தலை நீலநிறத்துச் சிறுப்பிள்ளை
> "நெய்த்தலை" நேமியும் சங்கும் நிலாவிய
> கைத்தலங்கள் வந்து காணீரே!
> கனங்குழையீர் வந்து காணீரே!
>
> நெய்த்தலை நேமி சங்கு-ன்னா என்ன?  நெய் தடவிய சங்கு சக்கரமா? :)
> சரி வேணாம்! Shoe Polish போல பாலிஷ் போட்ட சங்கு சக்கரமா? :)
> சக்கரத்தின் ஒளி வெறும் பளபளப்பு தானா? கோடி சூர்யப் பிரகாசம் அல்லவா?
> அவன் கைத்தலத்தை விட்டுப் பிரியாது, இணைந்து இருக்கும் சங்கு
> சக்கரங்கள்!  = நெய்த்தலை நேமிச் சங்கு நிலாவிய கைத்தலங்கள்!
> ஒவ்வொரு அவதாரத்திலும் அவன் கூடவே வரும்!  நரசிம்மத்துக்கு நகமாய்க் கூட
> வரும்!
>
> ***** ஆக, நெய்த்தல் =  இணைந்து இருத்தல்
>

ஹரிகி நெய்த்தலை என்றால் நெய் பூசிய தலை என்கிறார்.
”டகால்டியெல்லாம் இதுகிடட பிச்சை வாங்கணும். ‘கிழிக்கப்பட்ட இறைவன்


ஓலை’
அப்படின்னா, கிழிக்கப்பட்டுது இறைவனா, ஓலையான்னு இங்க யாரோ கேட்டாங்க.
அந்த
நெய்த்தலை இருக்கிறதே, அதுல ஒரு உம்மைத்தொகை இருக்கிறது. எண்ணும்மைத்
தொகை.

நீலநிறத்துச் சிறுபிள்ளை நெய்த்தலையும், நேமியும், சங்கும் நிலாவிய
கைத்தலங்களையும் வந்து காணீர் ”

சடைப்பின்னல்கள் விளங்கும் தலை = நெய்த்தலை என்றால்,
”சடையுடை தலையும், நேமியும், சங்கும் நிலவும் கைகளும் வந்து காணீர்”

பேரூர்ப் புராணம் ஒரு செய்யுள்:

1674 வாச நெய்த்தலை யுரைத்துவண் சீப்பினா னீவிப்
பூசு தண்கடிக் காசறை பொழிந்தல ரணிந்து
தேசி ருட்குழன் மகிழ்நற்குப் பாயல்செய் யாமை
ஊச லஞ்செவி யாய்சடை யுறுத்துத லழகோ.

ஊசல்களாக செவிவரை தொங்கும் சடைப் பின்னல்களை
நெய்த்தலை குறிக்கிறதா?

ஐம்பால் என்று பல்சடைகளாகப் பிரிந்துப் பின்னி
அழகூட்டுவது பழந்தமிழர் வழக்கம். சங்க இலக்கியத்தில்
ஐம்பால் என்று பார்க்கலாம். காராணை விழுப்பரையன் வளமடலிலும்
இச்செய்தி உண்டு: "ஓதி வலம்புரி முத்து ஊசலும்ஆட முகச்
சீத நகைத் தரளத் திங்கள் வியர்ப்ப" (கண்ணி 188).
கஜபுரி என்னும் எலிபண்டா குகைகளில்
ஈசன் அருகே நிற்கும் பார்வதி சிற்பத்தில் கொண்டையில்
இருந்து முத்துச் சரங்கள் தூங்கும்.
இரும்புச் சீப்பால் சுருட்டை முடியை ஐந்தாகப் பகுப்பது:
’எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால்’ -கலி.
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு -கலி. 59
மணி கட்டிய ஐம்பால்:
வரை வளர் முழவு விம்ம மணி கிளர் ஒலி ஐம்பால் - சீவ.

நா. கணேசன்


karthi

unread,
Feb 28, 2010, 12:12:39 AM2/28/10
to mint...@googlegroups.com

----- Original Message -----
From: "devoo" <rde...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Sunday, February 28, 2010 1:04 PM
Subject: [MinTamil] Re: நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக்கச் சுற்று
அறல் மேவி - திருப்புகழ்


>
> நெய்தல் – நெய்த்தல் சர்ச்சை அழகாக இருக்கிறது; இலக்கியத்தின் சுவையான
> பகுதிகளைப் பார்க்கும் வாய்ப்பு
>
> தேவ்
>

நான் பேச நினைத்ததெல்லாம் நீங்கள் பேசிவிட்டீர்கள்.
அதுவே, அதுவே!!

ரெ.கா.

N. Ganesan

unread,
Feb 28, 2010, 12:31:18 AM2/28/10
to மின்தமிழ்

On Feb 27, 9:23 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> பேச்சு நெய்த்து பற்றியது மட்டுமே அன்று.  -து என்ற விகுதியால் பெறப்படும்
> பொருள் பற்றியது.  நெய்த்து என்று இருந்தால், உரையாசிரியர்கள், நெய்தடவி, சீவி,
> பின்னி என்று பொருத்தமாக ரெண்டு வார்த்தை சேர்ப்பார்கள்தாம்.  அந்த -‘து‘வை
> இடம்பொருள் ஏவலில்லாமல் எல்லா இடத்திலும் கொண்டுகூட்டுவேன் என்று
> அடம்பிடித்தால்,
>

என்னுடைய கருத்து எளியது.

(அ) பாடல் தொடங்கும் வார்த்தை - நெச்சு < நெஞ்சு < நெய்ஞ்சு
(பின்னலிட்டு) நேராகத் தெரிகிறது.
அடுத்த அடியிலும், நச்சு < நய்ஞ்சு < நைய்ந்து.

நெய்த்து என்பது எப்படி நெச்சு என்றாகும்?

(ஆ) அறல் என்றால் எல்லா இடத்திலும் கருமை வண்ணமும் அல்ல, மணலும் அல்ல.
அறல் என்றால் நெளிநெளியான ஆற்றுப் படுகை மணலோ, அல்லது சுருள், சுருள் ஆன
பெண்ணின் கூந்தலோ. ஏராளமான இடங்களில் பெண் கூந்தலைப் பின்னல்கள்
இடுதல் தமிழில் வருகிறது (உ-ம்: ஐம்பால்). எனவே, பின்னலிட்ட சுருள்
(அறல்) குந்தளம்
என்றும் பொருள் சொல்லலாம்.

நா. கணேசன்


Hari Krishnan

unread,
Feb 28, 2010, 12:52:53 AM2/28/10
to mint...@googlegroups.com


2010/2/28 N. Ganesan <naa.g...@gmail.com>




(அ) பாடல் தொடங்கும் வார்த்தை - நெச்சு < நெஞ்சு < நெய்ஞ்சு
(பின்னலிட்டு) நேராகத் தெரிகிறது.
அடுத்த அடியிலும், நச்சு < நய்ஞ்சு < நைய்ந்து.

நெய்த்து என்பது எப்படி நெச்சு என்றாகும்?

வைத்து வச்சு என்று ஆகவில்லையா?  வானம் பொய்ச்சுப் போக மனுசப்பய கச்சிப் போக (கைத்துப போக) பொணமெல்லாம் ஈ மொய்ச்சுப்போயிருச்சுங்க கணேசன் ஐயா!

srirangammohanarangan v

unread,
Feb 28, 2010, 1:05:45 AM2/28/10
to mint...@googlegroups.com
>>நெய்த்தலை (எண்ணும்மைத் தொகை) நேமியும் சங்கும் (எண்ணும்மைதான்; வெளிப்படையாக நிற்கின்றன) தாங்கிய கைத்தலங்கள் (மறுபடியும் எண்ணும்மைத் தொகை).  நெய்த்தலையையும் கைத்தலங்களையும் காணுங்கள்.  தலையில் எண்ணெய் தடவியிருக்கிறது.  கையில் சங்கும் சக்கரமும் இருக்கிறது. << 
 
திரு   ஹரிகி   இந்த  இடத்தில்  உரையாசிரியர்கள்   என்ன  பொருள்   கொள்கிறார்கள்    என்பதையும்   பார்ப்போமே ! 
 
“நெய்த்தலை  நேமியும் --  கூரிய  நுதியை உடைத்தான   திருவாழி  என்னுதல்.   ஆயுத  ஸாமாந்யத்தாலே   நெய்யணிந்திருக்கும்   திருவாழி  என்னுதல்; ’கையெல்லாம்  நெய்’  (பெரிய  திருமொழி  10  7  3)  என்கிற  திருக்கையின் ஸ்பர்சத்தாலே  நெய்ச்சுவடு மாறாத திருவாழி  என்னுதல்.” (பெரிய  ஜீயர்  உரை) 
 
’கையெல்லாம் நெய்’   என்பது   பெரிய  திருமொழியில்    திருமங்கையாழ்வாரின்    கண்ணனின் பால லீலை  பற்றிய அனுபவம்.   நெய்யும்  வெண்ணைய்யும் விழுங்கிக் கையெல்லாம்   நெய்யாய்   இருக்கும்   கண்ணனைக் காண   வாரீர்   என்று ஆய்ச்சி  கூப்பிடுகிறாள்.   அந்தக் கைகளில்   தொட்டு  நிற்பதால்    நெய்ச்சுவடு   மாறாத    திருவாழி  என்று  இங்கு  விளக்கம்  காண்கிறார்   உரையாசிரியர். 
 
பெரிய  ஜீயரின்   உரையை  விளக்க வந்த  அரும்பத  உரை ---
 
“நெய் என்றதுக்கு இரண்டர்த்தம்  கூர்மையென்றும்,  க்ருதமென்றும்.  ...  தலை என்றதுக்கர்த்தம்   நுதி   என்றது.    நுதி  --  அக்ரம்...”
 
”அவன் நினைவை அறிகையாலே   கருதுமிடம்  பொருது, திருக்கையிலே  நிற்கிற கூர்மையாதல்”   --  இது  திருவாய்மொழிப்பிள்ளை  உரையில்   காண்கின்ற கூடுதல்  விளக்கம்.
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

N. Ganesan

unread,
Feb 28, 2010, 1:25:33 AM2/28/10
to மின்தமிழ்
Hariki wrote:
> எய்தல், எய்த்தல் இரண்டும் வேற பொருள்; வைதல் வைத்தல் இரண்டும் வேற பொருள்;
> நைதல் நைத்தல் இரண்டும் வேற பொருள். அப்படி இருக்கும்போது நெய்தல், நெய்த்தல்
> இரண்டும் எப்படி ஒரே பொருளாக இருக்க முடியும்?

> படத்தைப் பாருங்கள். நெய் என்ற நுழைவுக்கு மேலாக இருக்கும் நெய்-தல் என்ற
> நுழைவு மட்டும்தான் பிரதிவாதி புயங்கரம் (பயங்கரம் இல்ல, புயங்கரம்தான்) உ வே
> கணேச ராக்கெட்டாழ்வாருக்குத் தென்பட்டிருக்கிறது. அதை எடுத்தார்; நெய்த்தலோடு
> கோத்தார்; தலைமுடியை நெய்வது, பின்னுவது என்று பொருளை உற்பத்தியாக்கிவிட்டார்.
> நெய் என்ற நுழைவுக்கு அடுத்த நெய்த்தல் என்ற நுழைவு ஒன்று இருக்கிறது என்பது
> மேதகு பிரதிவாதய புயங்கர உ வே ராக்கெட்டாழ்வார் புலத்துக்கு எட்டவில்லை.
> மைக்கேராடிகிரி பிறழ்ந்து பாய்ந்த ஏவுகணை, இலக்கை விட்டு ஈராயிரம் கிமீ தள்ளி
> விழுவதைப்போல விழுந்துவிட்டது.

> நெய்த்தல் என்ற சொல்லுக்கு, பின்னுதல் என்ற பொருள் இருக்கிறதா என்று பாருங்கள்.
> நீங்களே உங்களுடைய கண்களாலேயே பார்த்துக்கொள்ளுங்கள்.

இலக்கியத்தில் இருக்கிறது.

நெய்த்தல் = பின்னல் என்ற பொருளில் வேண்டுமானால்
இங்கேயும் செயங்கொண்டார் உதவிக்கு வருகிறார்:

மொய்த்தி லங்கிய தாரகை வானின்நீள்
முகட்டெ ழுந்த முழுமதிக் கொப்பென
நெய்த்தி லங்கிய நித்திலப் பந்தரின்
நின்று வெண்குடை ஒன்று (கலிங்கத்துப் பரணி 316)

முத்துக்களை நெசவிட்டுக் கோத்துச் செய்த நித்திலப் பந்தலின்
மேல் நிற்கும் வெண்குடை தாரகைகள் விளங்கும் வானத்தின்
முகட்டில் தோன்றும் முழு நிலவுக்கு ஒப்பானது.

இங்கே, நெய்த்தல் = பின்னுதல், நெசவிடல்.
மழைத்தல் மழை பெய்தல்,
பயனித்தல் பயன் படுத்தல் போல,
நெய்த்தல் - நெய் (நெசவு) பின்னுதல்.

வி. வளமடல் உரைக்கு காத்துள்ளோம்.

நா. கணேசன்

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 28, 2010, 2:02:08 AM2/28/10
to மின்தமிழ்
@ தேவ் ஐயா
//விண் > விட்டு> விண்ணு – என்று பல நிலைகளில் அனிமேஷன் காட்டப்பட்டது;//

ஹா ஹா ஹா! அது என்ன அனிமேஷன்-ன்னு எல்லாம் கலாய்க்கறீங்க? :)

ஆழ்வார்கள்...
விஷ்ணு என்றும் பாடாமல்,
விண்ணு என்றும் நேரடியாக விளிக்காமல்,
விட்டு என்று பாடுகிறார்கள் என்று சொன்னேன்! தேவ் ஐயாவும் இதற்கு
உடன்பட்டார்!

செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த,
மெய்ம்மைப் பெருவார்த்தை **விட்டு** சித்தர் கேட்டிருப்பர்
என்று என் தோழியே, அவிங்க அப்பாவைப் பற்றிப் பாடுகிறாள்!

விட்டு என்பது போல்,
விண்ணு என்ற சொல்லும் ஆளப்பட்டிருக்கா?
இது தெரிந்தால் உங்கள் ஐயம் தீர்ந்து விடுமா? :)

விண்ணு என்று ஆளப்பட்டிருக்கு!
மீமழைத் திரளும் மெலிதர விம்மி
**விண்ணு** மேற் குளிர நாறினவே - இது தேம்பாவணி!

ஆக, விண் என்பதை விண்ணு என்றும் குறித்துள்ளார்கள்!

விட்டு, விண்ணு என்பதைப் போல்...
விண்டு என்றும் பாடியுள்ளார்கள்!
இப்படிப் பாடுவது ஞான சம்பந்தப் பெருமான்!

**விண்டு** அலர் பொழில் அணி வேணு புரத்து அரன்! -> முதல் திருமுறை -
சீர்காழி - ஏகபாதம்
இதற்கு ஆதீனத்தின் உரை:
//விஷ்ணுவின் புறனுரையாகிய சிவதூஷணத்தை அரச மரத்தினீழலில் அவனுடன்
இருந்து விரும்பியுள்ள முப்புரங்களைச் சங்கரித்துள்ளவன். அண்ணி எனற்
பாலது அணி என இடைக்குறையாய் நின்றது//

ஆக
* விட்டு
* விண்ணு
* விண்டு
என்று சொற்கள் மாயோனாகிய விண்ணவனைக் குறிக்கின்றன! அதற்கான பாடல்களும்
காட்டப்பட்டன!
* விண்ணவனின் அகரம் = விண்ணகரம்!

சரி....இப்போ அடுத்த கேள்வி:
தமிழ் விண்ணு தான் -> வடமொழி விஷ்ணு-வாச்சா?
அப்ப தமிழ் கடன் கொடுத்துச்சி!
இப்ப 33;33% வட்டியோட வசூலிக்குதா?-ன்னு கேட்டா, எனக்குச் சிரிப்பு தான்
வரும்! :)

ஒவ்வொரு வட சொல்லின் பின்னாலும்......Inspired by Tamizh-ன்னு
ஒவ்வொரு தமிழ்ச் சொல்லின் பின்னாலும்....Inspired by Sanskrit
போட்டுக்கிட்டா விடிஞ்சிரும்! :))))

இங்கே கூர்ந்து நோக்க வேண்டியது என்னா-ன்னா....
Inspired by தம்பட்டங்கள் அல்ல!
நம் தமிழில், நம் இறையியல் எப்படி இருந்துச்சி என்ற பார்வையே முக்கியம்!

தமிழுக்கு இறையியல் புதிதல்ல!
தொன்மம் நிறைந்த இறையியல் தமிழுக்கு என்றுமே உண்டு!

இறைத்தமிழ் "விஷ்ணு"-வைக் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை!
விண்ணவனும், விண்ணுவும், மாயோனும் தமிழுக்கு என்றுமே இருந்துள்ளார்கள்!
இந்த விண்ணவம் தான், அந்த "விஷ்ணு" ஆச்சா என்பதைப் பற்றிய கவலை
எனக்கில்லை!
ஆனால் இங்கு "விண்ணவம்" இருந்தது! எனக்கு அது தான் முக்கியம்!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 28, 2010, 2:20:56 AM2/28/10
to மின்தமிழ்
@ தேவ் ஐயா

விண்ணவம் மட்டும் அல்ல!
நாரணம் என்பதும் தமிழ்ச் சொல்லே!

ஆனால்....
நாரணம் தான் நாராயணம் ஆச்சா? தேவா ம்யூசிக் போல Inspired By-ஆ? -ன்னு
எல்லாம் நான் எறங்க மாட்டேன்! :)
ஆனால் நாரணம் என்பது அழகிய தமிழ்ச் சொல்! அதை விட்டும் கொடுக்க
மாட்டேன்! :)

* வடமொழியில் நாராயணன் = நாரம் (நாரங்களின் திரள்) + அயணம் (இருப்பிடம்)
* ஆனால் தமிழில் நாரணம் = நாரம் (நீர்) + அணம் (அண்மை)

இது குறித்த என் பதிவு இதோ:
http://madhavipanthal.blogspot.com/2009/08/meaning-of-om-namo-narayanaya-3.html
http://madhavipanthal.blogspot.com/2009/08/meaning-of-om-namo-narayanaya-4.html
இது குறித்த இராம.கி ஐயாவின் பதிவு இதோ:
http://valavu.blogspot.com/2009/08/blog-post_28.html

தொல்காப்பியர் காலம் தொட்டே...
சேயோனாகிய முருகனும், மாயானோகிய திருமாலும்
இருவருமே தமிழ்க் கடவுள் என்னும் சிறப்பு பெறுகின்றார்கள்!
இதோ:
http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_17.html
இது குமரன் அண்ணா பதிவு:
http://koodal1.blogspot.com/2007/10/blog-post_13.html

சரி...அதெல்லாம் இருக்கட்டும்!
விண்ணவன்-ன்னா யாரு?
= விண்ணோர் தலைவன் (இமையோர் தலைவன்)
= தேவ-ராஜன்
= அட, நீங்க தான் தேவ் ஐயா! :))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 28, 2:02 am, "Kannabiran Ravi Shankar (KRS)"

> KRShttp://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 28, 2010, 2:29:11 AM2/28/10
to மின்தமிழ்
//ஆஹா! உங்கள் உரையாடலுக்குள் நான் வரவில்லை. ஆனால்

எத்தனை அழகாக எடுத்துக்காட்டுக்கள் இட்டு ஒரு "கெத்தோடு"
பேசுகிறீர்கள். இலக்கிய கெத்து, மெத்த அழகு! //

ஹிஹி! நன்றி ரெகா சார்!
"கெத்தா"?? எனக்கா??
ஆனாலும் எனக்கு ஹரி.கி-ன்னா கொஞ்சம் பயம் தான்! :)
நான் ஒரு Green Baby (பச்சைப் புள்ள) இல்லையா?
அவரோ என்னைய அப்பப்ப என்னாங்குற?-ன்னு மெரட்டறாரா? அதான்! :))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

> ...
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 28, 2010, 2:59:00 AM2/28/10
to மின்தமிழ்
@ ஹரி.கி. ஐயா
//நெய்த்தலையையும் கைத்தலங்களையும் காணுங்கள். தலையில் எண்ணெய்
தடவியிருக்கிறது. கையில் சங்கும் சக்கரமும் இருக்கிறது//

இந்தப் பாசுரத்தை, ஆழ்வார், பொறந்து கொஞ்ச நாளே ஆன, பச்சைக் குழந்தை
மேல் பாடுகிறார்!
அதையும் ஞாபகம் வச்சிக்கோங்க!
பச்சைக் குழந்தைக்கு யாரும் தலையில் நெய் தடவுறதில்லை! :)

தலைக்கு ஊற்றினாப் பொறவும், சாம்பிராணி போட்டுக் காய வைப்பாங்களே
அன்றி....
எண்ணெய் பூசி, படியப் படியத் தலை சீவுறது கிடையாது!
தலைக்கு எண்ணெய் தேய்ச்சி ஊத்துறதே, சில மாசங்களுக்குப் பின்பு தான்!

@ ரங்கன் சார்

நான் இதையும் தொட்டுச் செல்லணும்-ன்னு நினைச்சேன்!
சூப்பரு! நீங்களே சொல்லிட்டீங்க!
நெய்த்தலை நேமி = கூர்மையான நுதிச் சக்கரம்!
பெரியவாச்சான் பிள்ளை சொல்லும் நெய்+தலை = கூர்+நுதி

நான் சொன்ன பொருளில் இன்னும் சொல்கிறாரே! அதை ஏன் கட் பண்ணிட்டீங்க? :)
*** இது போலே, கருதுமிடம் பொருதவந்து, கையில் நிற்க வேண்டாதே...கைவிடாது
இருந்து...
தன்னோசையாலேயே எதிரிகளை அழிக்க வல்ல...நிரந்தரமாக வர்த்தியா நின்றுள்ள
கையும்...கைத்தலம் இத்யாதி ***
அதான் இணைந்து இருத்தல்...நீங்காது இருத்தல்....என்றும் பொருள் சொன்னேன்!

என்ன ஹரி.கி ஐயா...
இப்படி, பச்சைக் குழந்தை தலையில் நீங்களா நெய் தடவி...எங்க தலையில்
மிளகாய் தடவினா எப்படி? :))))
அது எப்டீண்ணா இப்படியெல்லாம் பொருள் புதுசு புதுசா உற்பத்தி ஆகிறது? :))


பஜார்ல உஜாரில்லாட்டா நிஜார களட்டிருவாங்கன்றது சரியாயத்தாண்ணா

இருக்கு.... :)))

ஹா ஹா ஹா
பெரிய ஆச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 28, 1:05 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> On 2/28/10, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
>
>
> > 2010/2/28 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Feb 28, 2010, 3:13:34 AM2/28/10
to mint...@googlegroups.com
On 2/28/10, Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com> wrote:
@ ஹரி.கி. ஐயா
//நெய்த்தலையையும் கைத்தலங்களையும் காணுங்கள்.  தலையில் எண்ணெய்
தடவியிருக்கிறது.  கையில் சங்கும் சக்கரமும் இருக்கிறது//

இந்தப் பாசுரத்தை, ஆழ்வார்,  பொறந்து கொஞ்ச நாளே ஆன, பச்சைக் குழந்தை
மேல் பாடுகிறார்!
அதையும் ஞாபகம் வச்சிக்கோங்க!
பச்சைக் குழந்தைக்கு யாரும் தலையில் நெய் தடவுறதில்லை! :)

தலைக்கு ஊற்றினாப் பொறவும், சாம்பிராணி போட்டுக் காய வைப்பாங்களே
அன்றி....
எண்ணெய் பூசி, படியப் படியத் தலை சீவுறது கிடையாது!
தலைக்கு எண்ணெய் தேய்ச்சி ஊத்துறதே, சில மாசங்களுக்குப் பின்பு தான்!

@ ரங்கன் சார்

நான் இதையும் தொட்டுச் செல்லணும்-ன்னு நினைச்சேன்!
சூப்பரு!  நீங்களே சொல்லிட்டீங்க!
நெய்த்தலை நேமி = கூர்மையான நுதிச் சக்கரம்!
பெரியவாச்சான் பிள்ளை சொல்லும் நெய்+தலை = கூர்+நுதி

நான் சொன்ன பொருளில் இன்னும் சொல்கிறாரே!  அதை ஏன் கட் பண்ணிட்டீங்க? :)
*** இது போலே, கருதுமிடம் பொருதவந்து, கையில் நிற்க வேண்டாதே...கைவிடாது
இருந்து...
தன்னோசையாலேயே எதிரிகளை அழிக்க வல்ல...நிரந்தரமாக வர்த்தியா நின்றுள்ள
கையும்...கைத்தலம் இத்யாதி ***
அதான் இணைந்து இருத்தல்...நீங்காது இருத்தல்....என்றும் பொருள் சொன்னேன்!
 
 
பெரியாழ்வார்   திருமொழிக்கு    பெரும்பகுதிக்கு    பெரியவாச்சான்  பிள்ளை   வியாக்கியானம்  கிடைக்கவில்லையே!    பெரிய  ஜீயர்  வியாக்கியானமும்,   திருவாய்மொழிப்பிள்ளை   வியாக்கியானமும்   கிடைத்திருக்கின்றன.    கடைசி   ஐம்பது  பாட்டுகளுக்கு  மட்டும்   பெரியவாச்சான்  பிள்ளை   வியாக்கியானம்    கிடைத்ததால்   அதைத்தவிர  மற்றவற்றிற்குத்தான்     பெரிய  ஜீயரும்   உரை  எழுதினார்.   அப்படி  உங்களுக்குக்  கிடைக்கப்  பெற்றிருந்தால்    தயவுசெய்து    உடனே அச்சில்  கொண்டுவர  ஆவன  செய்யுங்கள்.     ஸ்ரீவைஷ்ணவ  ஸமுதாயம்   உங்களுக்கு   நன்றிக்கடன்   பட்டிருக்கும்.

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 28, 2010, 3:22:03 AM2/28/10
to மின்தமிழ்
@ ஹரி.கி ஐயா
//வீறுகொண்டு எழு அப்படின்னு திராவிடத் தலைவர்கள் சொல்லிச் சொல்லி, வீறு
அப்படின்னா வீரம்னு நினச்சிட்டீங்களா?//

அடடா! திராவிடத்து மேல உங்களுக்குத் தனிப் பாசம் போலத் தெரியுதே! :))
வீறு-ன்னா வீரம்-ன்னு நான் எடுத்துக்கலை! அடுத்த லைனைப் படிங்கோள்!


நெய்த்து = ஒருங்கிணைந்து,

வீறுடன் = சிறப்புடன்

திரண்டன = கூட்டமாக வந்தன! -ன்னு சொல்லி இருக்கேனே! பாருங்கோள்! :)
n. < வீறு-. 1. Distinctive excellence; தனிப்பட்ட சிறப்பு.
வீறெய்திமாண்டார் (குறள், 665). 2. Victory; வெற்றி. வீறுபெற
வீற்றிரு-த்தல் To sit in state or majestically; சிறப்போடிருத் தல்

//கன்று, களி, யாவும் அப்படின்னு பிரிக்கக்கூடாது//

ஐயா, சாமீ...நான் எதுவும் பிரிக்கலை! அது அப்படியே வெட்டு & ஒட்டு!
அதை நான் பார்க்கக் கூட இல்லீங்கோள்!
நான் பார்த்தது எல்லாம் நெய்த்தல் மட்டுமே!...
நீங்க எதுக்கு, ஆனா-ன்னா ஊனா-ன்னா....பேசு பொருளான நெய்த்தலை விட்டு....
வீறு/கன்று-களி-ன்னு எல்லாம் தாவறீங்கோள்? :) நீவிர் கிஷ்கிந்தா
காண்டவாதியோ? :)))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 27, 11:07 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/2/28 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>


>
> > *** நெய்த்தல் ***
>
> > மொதல்ல, நபிகள் நாயகத்திடம் இருந்து துவங்குவோமே! :)
>
> > எய்த்திடாப் புகழ் நபி திருக் கரத்தினில் எடுத்து
> > வைத்த கன்று களியாவும் வானுலகுற வளர்ந்து
> > ** நெய்த்து வீறொடுந் திரண்டன ** நெருங்கின நிறைகண்
> > மொய்த்த பூங்குலை சாய்த்தன காய்த்தன முழுதும்!
>
> > இங்கே நெய்த்து வீறுடன் திரண்டன என்றால்,
> > கன்றுகள் எல்லாம், நெய் தடவிக்கிட்டு, வீரமுடன் திரண்டன என்றா
> > பொருள்? :))
> > நெய்த்து = ஒருங்கிணைந்து,
>
> அட டடட டடடா!  கோபால்சாமி பேர வச்சுக்கிட்டா கன்னுக்குட்டிக்கு நீங்கதான
> அத்தாரிட்டியா?  மறுபடியும் அகராதி புகைப்படத்தைப் பாருங்கள்.  நெய் என்பதற்கு
> பொருள் எண் 8 என்ன என்பதைப் பாருங்கள்.  சினேகம் என்பது இந்த இடத்தில்
> வரவேண்டிய பொருள்.  Friendship, love.  கன்று களியாவும் அப்படின்னா, கன்றுகள்
> எல்லாம் களித்து, சந்தோஷமாக அப்படின்னு அர்த்தம்.  கன்று, களி, யாவும்
> அப்படின்னு பிரிக்கக்கூடாது.
>
> வீறு என்றால் வீரம்னு யார் அர்த்தம் சொன்னாங்க? வீறுகொண்டு எழு அப்படின்னு
> திராவிடத் தலைவர்கள் சொல்லிச் சொல்லி, வீறு அப்படின்னா வீரம்னு
> நினச்சிட்டீங்களா?  வீறு என்றால் பெருமிதம்; கர்வம் நிறைந்த பெருமிதம்.
>

> வீறு, (p. 948)<http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=398&table=winslow&d...>
> [ vīṟu,
> ] *s.* Greatness; arrogance, பெருமை. 2. Solitariness, தனிமை. 3.


> Merit, புண்ணி யம். 4. Brightness, clearness, பிரகாசம். 5. Disgust, வெறுப்பு.

> (சது.) 6. *(c.)* Strength of medicines, or poisons, மருந்துச்சத்து.

> ...
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 28, 2010, 3:56:51 AM2/28/10
to மின்தமிழ்
@ ஹரி.கி ஐயா
//I had bread, butter and fruit saladனு போயி சொல்லிப் பாருங்க.
ஒங்க ஓட்டல் வெய்ட்டர் மனசுக்குள்ளயாவது சிரிச்சுப்பான்//

என்னையப் பார்த்து அவன் சிரிக்கிறது இருக்கட்டும்!
இந்தூருல வெயிட்டர்-ன்னு சொல்லிப் பாருங்க....உங்களைப் பிச்சிருவான்
பிச்சி!
டீஜென்ட்டா Server-ன்னு கூப்பிடணும்!
அது என்ன Waiter? உனக்கு வெயிட் பண்ண நான் என்ன மாமனா மச்சானா-ன்னு உங்க
கிட்ட வந்தான்-ன்னு வையிங்க...
அப்பறம் உங்களையும் நெய்த்+தலை ஆக்கித் தான் அனுப்புவான்! :))))

//சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுய என்று தொடங்கும் மயில்
வகுப்பு
படிச்சிருக்கீங்களா?//

உங்க அளவுக்கு எல்லாம் படிச்சது இல்லீங்கண்ணோவ்! :)
மயிலார் நம்ம ஆருயிர் தோழன்! அம்புட்டு தான்!
முருகன் புஸ்தகத்தைக் கட்டு கட்டா படிக்கிறேனோ இல்லையோ...
முருகன் புக்கு-அகத்தை மட்டும் ஆசையாப் படிச்சீருவேன்!

//> *குந்தளம், (p. 323)<http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?
page=121&table=winslow&d...>> [
> *kuntaḷam, ] *s.* Women's hair, பெண் மயிர். 2. Hair in genera//

இதே தானே நானும் சொன்னேன்!
குந்தளம் = தலை முடி தான்! இல்லை-ன்னு சொல்லலையே!
நெறிவு பட "நெய்த்த" குந்தளம்? = நல்லா இறுக்கிக் கட்டப்பட்ட தலைமுடி!-
ன்னு தானே சொன்னேன்! :)
Borrow: பஜார்ல உஜாரில்லாட்டா நிஜார களட்டிருவாங்கன்றது சரியாயத்தாண்ணா
இருக்கு....:))
நாம சொன்னதை நமக்கே சொல்லி, அதான்-ப்பா இது-ங்கிறாங்கப்பு! :)))

//நெறிவுபட நெய்த்த குந்தளம் என்பதை நெய்த்த, நெறிவுபட்ட குந்தளம் என்று
அன்வயப்படுத்திப் பொருள் காணுங்கணோவ்!  உங்க காதலன் அர்த்தம் சொல்வான்!//

அன்வயமோ, முன்வயமோ....
நெய்த்த-நெறிவுபட்ட-ன்னாலும், நெறிவுபட நெய்த்த-ன்னாலும்...
நெய்த்த என்பது நெய்த்த-ன்னு தான் வருதுங்கண்ணோவ்!
இறுக்கி "ஒன்று கட்டப்பட்ட" தலைமுடி! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 28, 2010, 4:14:08 AM2/28/10
to மின்தமிழ்
@ ரங்கன் சார்
//கடைசி ஐம்பது பாட்டுகளுக்கு மட்டும் பெரியவாச்சான் பிள்ளை

வியாக்கியானம்
கிடைத்ததால் அதைத்தவிர மற்றவற்றிற்குத்தான் பெரிய ஜீயரும் உரை
எழுதினார்.//

அட, இவரு ஒருத்தரு-ப்பா!
சுதந்திரமா.....பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-ன்னு சொல்ல விட
மாட்டாரே! :)
மேலதிகத் தகவலுக்கு நன்றி!
அது அவரோ, இவரோ....எவராயினும்....நெய் பூசப்பட்ட தலை இல்லை! அது மட்டும்
சரி! :)

[பெரிய ஆச்சான் பிள்ளை + பெரிய ஜீயர்] திருவடிகளே சரணம்! :)))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 28, 3:13 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> On 2/28/10, Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > @ ஹரி.கி. ஐயா
> > //நெய்த்தலையையும் கைத்தலங்களையும் காணுங்கள்.  தலையில் எண்ணெய்
> > தடவியிருக்கிறது.  கையில் சங்கும் சக்கரமும் இருக்கிறது//
>
> > இந்தப் பாசுரத்தை, ஆழ்வார்,  பொறந்து கொஞ்ச நாளே ஆன, பச்சைக் குழந்தை
> > மேல் பாடுகிறார்!
> > அதையும் ஞாபகம் வச்சிக்கோங்க!
> > பச்சைக் குழந்தைக்கு யாரும் தலையில் நெய் தடவுறதில்லை! :)
>
> > தலைக்கு ஊற்றினாப் பொறவும், சாம்பிராணி போட்டுக் காய வைப்பாங்களே
> > அன்றி....
> > எண்ணெய் பூசி, படியப் படியத் தலை சீவுறது கிடையாது!
> > தலைக்கு எண்ணெய் தேய்ச்சி ஊத்துறதே, சில மாசங்களுக்குப் பின்பு தான்!
>
> > @ ரங்கன் சார்
>
> > நான் இதையும் தொட்டுச் செல்லணும்-ன்னு நினைச்சேன்!
> > சூப்பரு!  நீங்களே சொல்லிட்டீங்க!
> > நெய்த்தலை நேமி = கூர்மையான நுதிச் சக்கரம்!
> > பெரியவாச்சான் பிள்ளை சொல்லும் நெய்+தலை = கூர்+நுதி
>
> > நான் சொன்ன பொருளில் இன்னும் சொல்கிறாரே!  அதை ஏன் கட் பண்ணிட்டீங்க? :)
> > *** இது போலே, கருதுமிடம் பொருதவந்து, கையில் நிற்க வேண்டாதே...கைவிடாது
> > இருந்து...
> > தன்னோசையாலேயே எதிரிகளை அழிக்க வல்ல...நிரந்தரமாக வர்த்தியா நின்றுள்ள
> > கையும்...கைத்தலம் இத்யாதி ***
> > அதான் இணைந்து இருத்தல்...நீங்காது இருத்தல்....என்றும் பொருள் சொன்னேன்!
>

> *பெரியாழ்வார்   திருமொழிக்கு    பெரும்பகுதிக்கு    பெரியவாச்சான்  பிள்ளை


> வியாக்கியானம்  கிடைக்கவில்லையே!    பெரிய  ஜீயர்  வியாக்கியானமும்,
> திருவாய்மொழிப்பிள்ளை   வியாக்கியானமும்   கிடைத்திருக்கின்றன.    கடைசி
> ஐம்பது  பாட்டுகளுக்கு  மட்டும்   பெரியவாச்சான்  பிள்ளை   வியாக்கியானம்
> கிடைத்ததால்   அதைத்தவிர  மற்றவற்றிற்குத்தான்     பெரிய  ஜீயரும்   உரை
> எழுதினார்.   அப்படி  உங்களுக்குக்  கிடைக்கப்  பெற்றிருந்தால்
> தயவுசெய்து    உடனே அச்சில்  கொண்டுவர  ஆவன  செய்யுங்கள்.     ஸ்ரீவைஷ்ணவ

> ஸமுதாயம்   உங்களுக்கு   நன்றிக்கடன்   பட்டிருக்கும்.*

Hari Krishnan

unread,
Feb 28, 2010, 7:16:23 AM2/28/10
to mint...@googlegroups.com


2010/2/28 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>


நீங்க எதுக்கு, ஆனா-ன்னா ஊனா-ன்னா....பேசு பொருளான நெய்த்தலை விட்டு....
வீறு/கன்று-களி-ன்னு எல்லாம் தாவறீங்கோள்? :)  நீவிர் கிஷ்கிந்தா
காண்டவாதியோ? :)))


நீங்க என்ன சொல்றீங்களோ அதுக்கு பதில் சொல்றேன்.  நீங்க கொடுக்கிற பாட்டில் (அர்த்தம் புரிஞ்சு சொல்றீங்களா இல்லையான்னு தெரியாத நிலையில்ய- வீறு, கன்று எல்லாம் இருந்தால் அதையும் தொட்டபடி செல்வதில் என்ன தவறு?

மற்றபடி எம் இருப்பிடம் கிஷ்கிந்தைதான்.

கவிதாவுற என்நெஞ்சினில் காண்பொற்பதம் இட்டால்
கவிதானெனப் பொங்கும் கவி.  

கபிஞன் என்றழைத்தால் கள்ளம் எரிய
அபிநயிப்பாள் என்னுள்ளே ஆர்த்து.

கிட்கிந்தை என்னூர்தான் கிஞ்சித்தும் பொய்கூறேன்
உட்சிந்தை பாதத் துறை.

கண்பார்த்தாள் நான்கவியாய்க் காண்கின்றேன்; வெண்மலரின்
பெண்பார்த்தால் ஆகேனோ பின்.

சொல்ல நினைத்தகணம் சூழ்ந்தென்னுள் நிர்த்தமிட்டு
ஜல்லென்று தந்திடுவாள் சொல்.

அம்மாவென் வாணி அரசியவள் தாமரைமேல்
சும்மா இருப்பாளோ சொல்.

தொட்டு வணங்குகிறேன் சொன்னதொரு சொல்லுக்கு--
கிட்கிந்தை தானென் கிடப்பு.

சீராமன் தான்கடக்க சேது அணைசமைத்தோம்
காராமா எங்கள் கரு.

சும்மா கிடந்திருந்தால் சுக்கு; நினைத்தெழுந்தால்
அம்மா இலங்கை அனல்.

சொல்தொடுத்தால் நெஞ்சில் சுடர்தெறிக்கும்; அன்னையவள்
செல்லத்தில் என்னுள்ளம் சேர்ந்து.

சும்மா இருந்தாலே துள்ளிக் குதிப்பதிது;
அம்மா! எழுந்திட்டால் ஆகாதே - இம்மாயம்
சிம்மா சனங்கொண்டாள் செம்மாந்த நெஞ்சத்தில்
விம்மிப் பொலியும் விதம்.

வெண்டா மரைப்பூவில் வீற்றிருப்பாள்; உட்கண்ணால்
கண்டாலோ சொல்லில் கனலாவாள் - மண்டுகிற
நற்குரங்கு சாதியினன் நாவில் நடம்புரிந்து 
சொற்சதங்கை பின்னும் சுகம்.

என்நினைத்தீர் என்வாலை என்னுள்ளே ஜோதிமயம்
தன்னுணர்ச்சி தாங்கும் தவமாகும் - என்னுணர்ச்சி
பொங்கி அலைவீசின், போகுமோ போதுமோ
தங்குமோ இந்தத் தடம்.

வாலை அமுதென்னுள் வாசம் புரிகின்றாள்;
வால மிகுஜ்வாலை வார்க்கின்றாள் - வாலெடுத்து
வீசியக்கால உள்ளந்தான் விம்மியக்கால் நாவசைத்துப்
பேசியக்கால் எங்கே பிழை?

போதுமா கிட்கிந்தைப் புல்லன் உளம்விரித்து
மோதுமா என்றபடி மூண்டதுவும் - யாதுமா
நின்றபடி நிற்கின்ற நிர்மலையாள் பாதத்தில்
ஒன்றிடவா? சொல்லே! ஒடுங்கு.  


Hari Krishnan

unread,
Feb 28, 2010, 7:37:29 AM2/28/10
to mint...@googlegroups.com


2010/2/28 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

@ ஹரி.கி. ஐயா
//நெய்த்தலையையும் கைத்தலங்களையும் காணுங்கள்.  தலையில் எண்ணெய்
தடவியிருக்கிறது.  கையில் சங்கும் சக்கரமும் இருக்கிறது//

இந்தப் பாசுரத்தை, ஆழ்வார்,  பொறந்து கொஞ்ச நாளே ஆன, பச்சைக் குழந்தை
மேல் பாடுகிறார்!
அதையும் ஞாபகம் வச்சிக்கோங்க!
பச்சைக் குழந்தைக்கு யாரும் தலையில் நெய் தடவுறதில்லை! :)


ஒரேஒரு பாட்டைப் போட்டுட்டு, பச்சைக் குழந்தை, சேப்புக் குழந்தை என்றால் என்ன அர்த்தம்?  இந்தப் பாட்டுக்கு இரண்டு பாட்டு முன்னால் போய் படியுங்கள்:

பெருமா வுரலில் பிணிப்புண் டிருந்துஅங்கு
இருமா மருதம் இறுத்தஇப் பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்பு இருந்தவா காணீரே
சேயிழை யீர்வந்து காணீரே 

நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே
சுரிகுழ லீர்வந்து காணீரே 

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே
கனங்குழை யீர்வந்து காணீரே 

உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சி நிற்கவும், இரண்டு பெரிய மருதமரங்களை இறுத்தததுவும், குருந்தம் ஒசித்ததவும், நாலைந்து மாதத்து பாலகனாய் இருந்த சமயத்தில் சகடம் உதைத்ததுவும், பச்சைக் குழந்தை செய்கிற செய்கைகள்தாம்.  அது தலைல எண்ணெய் தடவற அளவுக்கு அதுக்கு வயசாகலைதான்.  

 

என்ன ஹரி.கி  ஐயா...
இப்படி,  பச்சைக் குழந்தை தலையில் நீங்களா நெய் தடவி...எங்க தலையில்
மிளகாய் தடவினா எப்படி? :))))
அது எப்டீண்ணா இப்படியெல்லாம் பொருள் புதுசு புதுசா உற்பத்தி ஆகிறது? :))
பஜார்ல உஜாரில்லாட்டா நிஜார களட்டிருவாங்கன்றது சரியாயத்தாண்ணா
இருக்கு.... :)))

திரு கண்ணபிரான்,

நான் பிறப்பால் வைணவன் அல்லன்.  வடமன் முத்தினாதான் வைணவன்.  நான் இன்னும் பிஞ்சாகவே கிடக்கிற பெருசு.  பிஞ்சில் பழுக்காவிட்டாலும்,  பழுத்தும் பிஞ்சாகவே இருப்பவன்.  எல்லாச் செய்யுள்களையும் எந்த உரையின் துணையுமின்றி வாசித்துப் பழகியவன்.  எனக்குப் புரிந்தவிதத்தில் சொன்னேன்.  எனக்கு உங்களுடைய பாரம்பரியம் மிக்க வைணவ அறிவு போதாது.  ஆகவே, என் பிழையைப் பொறுக்கவேண்டும்.  யார்தலையிலும் மிளகாய் அரைக்கும் எண்ணம் எனக்கில்லை.  யாரையும் அப்படி அரைத்ததுமில்லை.  

ஆனால் நான் கொண்ட பொருள் சரியாகத்தான் இருக்கிறது என்று என் உள்மனம் சொல்கிறது. “நானும் அறியேன்; அவளும் பொய்கூறாள்” என்ற பழைய கவிவாக்கை மட்டும் சொல்லிவிட்டு விடைபெறுகிறேன்.   உங்களுக்கு ஏற்பிருந்தாலும் சரி; ஏற்பில்லாமல் போனாலும் சரி.  ‘யார் ஜெயிச்சா’ என்ற போட்டியாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த வாதம். நீங்கதான் ஜெயிச்சீங்க.  வாழ்க நீடுழி.

N. Ganesan

unread,
Feb 28, 2010, 8:32:53 AM2/28/10
to மின்தமிழ்

On Feb 28, 1:02 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:

> ஆக
> * விட்டு
> * விண்ணு
> * விண்டு
> என்று சொற்கள் மாயோனாகிய விண்ணவனைக் குறிக்கின்றன!  அதற்கான பாடல்களும்
> காட்டப்பட்டன!

முதலில் திரைப்படங்களில் கோவை மாவட்ட நடிகர்கள் கவுண்டமணி, சத்தியராஜ்
போன்றோரால் அறிமுகம் ஆகி பின்னர் பதிவுலகில் அடிக்கடி பயனாகும் சொல்:
அள்ளைக்கை. இதனை 'அல்லக்கை' என்று எழுதுதல் சரியல்ல. அள்ளை =
அடுத்திருப்பது (side). தமிழில் நிறையச் சொல்தொகுதிகளில் இரண்டாவது
அட்சரமாக -ள்-/-ட்-/-ண்-/-ண்ட்- வரும். அச் சொற்றொகுதிகளின் பொருளும்
ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கும்.

விட்டு/விண்ணு/விண்டு

எதுபோல் என்றால்,

குள்ள-/குட்ட-/குண்ட- (உ-ம்: யாக குண்டம், குண்டா)
வள்ளை/வட்டம்/வண்டி
அள்ளை/அட்டை/அண்டை
...

சினிமாவில் இருந்து பதிவுலகில் ஒரு வார்த்தை
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html
-----

விஷ்ணுவின் மூலவேர் திராவிடம் என்றால்,
*விள்ளு என்ற சொல் விட்டு/விண்ணு/விண்டு தொடர்புகொண்டதாக
இருந்திருக்க வேண்டும்.
ள்/ழ் > வடசொல் ஆகையிலே ஷ் என்று ஆவது வழக்கம்.
உதாரணங்கள் அதற்குண்டு. பர்ரோ, எமனோ பேப்பர்களில் இருக்கும்.

சரியாக நினைவில்லை:
கலூழ் என்னும் சொல் கலூஷ என்றாகும் என்பார் பர்ரோ.
பிரிஃசூல்சுகி, ... எல்லாம் எப்பவாவது பார்க்க ஆசை.
செய்தால் தெரிவிப்பேன்.

அறல் என்றால் மணல் என்றால் போறும்,
பார்த்த இடத்தில் எல்லாம் கருமணல் கொண்டுவர வேண்டாம்
என்றும், நெய்த்தல் என்றால் பின்னலிடல் என்பது முத்துவடங்களைத்
தொங்கலிட்டுப் பின்னும் பட்டுக்குடை (செயங்கொண்டார் வாக்கு. கலிங்.)
எனவும், நெய்தல் என்பதன் பரிபாட்டுப் பொருளால் இது விளங்கும்
என்றும் தெரிந்தேன். நெய்த்து என்று பார்க்கும் இடத்தில்
இணைந்து பிணைந்து பின்னி என்ற பொருள் உள்ளதா என்றும் பார்க்கலாம்.
”நெய்த்த அறல் ஓதி” (திருப்புகழ்) நெளிநெளியாய் பின்னல் உடைய கூந்தல்
என்றும் சொல்லலாம்.

இந்த இழையில் பல அற்புதமான கேள்விகளையும்,
விடைகளையும் அளித்தோருக்கு என் தனிப்பட்ட
நன்றிகள். தங்கள் அன்பை என்றும் மறவேன்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Feb 28, 2010, 8:38:28 AM2/28/10
to மின்தமிழ்

On Feb 28, 7:32 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> விட்டு/விண்ணு/விண்டு
>
> எதுபோல் என்றால்,
>
> குள்ள-/குட்ட-/குண்ட- (உ-ம்: யாக குண்டம், குண்டா)
> வள்ளை/வட்டம்/வண்டி
> அள்ளை/அட்டை/அண்டை


>


> விஷ்ணுவின் மூலவேர் திராவிடம் என்றால்,
> *விள்ளு என்ற சொல் விட்டு/விண்ணு/விண்டு தொடர்புகொண்டதாக
> இருந்திருக்க வேண்டும்.

கேரள அம்பலங்களில் ”வெளிச்சப்பாடு” என்ற பூசாரி
கருவறையில் பூசை முடித்து பின் வெங்கல விளக்கை
வெளியே எடுத்துவருவார்.

இது விளிச்சப்பாடு என்று படித்திருக்கிறேன்.
விள்ளல்-/ விளி- என்னும் சொல்லோடு தொடர்புடையது.

srirangammohanarangan v

unread,
Feb 28, 2010, 9:20:38 AM2/28/10
to mint...@googlegroups.com
ஆஹா!   ஹரியண்ணா !    இவ்வளவு  பாட்டும்   எமக்கு    லாபம்.   நல்லூழ்தான்!!! 
:--))))  

 
On 2/28/10, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Feb 28, 2010, 9:32:36 AM2/28/10
to மின்தமிழ்

On Feb 28, 8:20 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> ஆஹா!   ஹரியண்ணா !    இவ்வளவு  பாட்டும்   எமக்கு    லாபம்.   நல்லூழ்தான்!!!
> :--))))
>

திரு. அரங்கன்,

எப்பொழுதுமே எனக்கு ஒரு எண்ணம் எழும்.

ஹரிகி தமிழ்ப் பண்டிதர் ஆகி, இன்னோரு தி.வே.கோ. ஆக வாய்த்திருந்தால்,
ஏடுகள் தேடிச் சென்றிருந்தால் தமிழன்னை இன்னும் பல ஆரங்களைப்
பூண்டிருப்பாள்.

தமிழ்நாட்டு அரசியலும், டிவியும் பழந்தமிழே படிக்காமல் செய்துவிட்டன.
வேரில் பழுத்த பலாவைத் தொடுவார்கூட அரிதாகி விட்டதே.

கணினி புது மலர்ச்சியை உண்டுபண்ணும். கிரந்தத்தில் தான் இந்தியும்,
வடமொழியும் எழுதுவோம் என்று மத்ய சர்க்காரிடம் போராடி
உரிமை வாங்கணும். பார்ப்போம். ஊர்கூடித் தேரிழுப்போம்.

செம்மொழி மாநாட்டில் பல தமிழ் அறிஞருடனும், மந்திரிகளுடனும்,
தொழில் முதலாளிகளுடனும் (அருட்செல்வர், அன்னபூர்ணா சீனிவாசன்,
எஸ். வி. பாலு மச்சார், வாணவராயர், பிஎஸ்ஜி சாமிநாதன், பிடபில்யூடி
மந்திரி வெள்ளகோயில் சாமிநாதன், ... ) சில மணிகள் இருப்பேன்.
கோவைக்கு வருவோரைச் சந்திக்கிறேன். சில திட்டங்களை முன்வைக்கலாம்.
நடப்பது நடக்கட்டும்.

நா. கணேசன்


> On 2/28/10, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > 2010/2/28 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

Hari Krishnan

unread,
Feb 28, 2010, 9:41:50 AM2/28/10
to mint...@googlegroups.com


2010/2/28 srirangammohanarangan v <ranga...@gmail.com>

ஆஹா!   ஹரியண்ணா !    இவ்வளவு  பாட்டும்   எமக்கு    லாபம்.   நல்லூழ்தான்!!! 
:--))))  


லங்காபுரி வாசி; லகுகவிதை பாடாத
சங்காபுரி நாசி; சரவெடியாய் - கிங்காபுரி
தன்னின் கிழக்கோட்டான்; தேர்ந்தெடுத்த கற்குரங்கு
இன்னுமா பாக்கியுள தேசு.

குரங்கென்பார் கோழையென்பார் குட்டனென்பார் எல்லாம்
அரங்கேறும் நாள்தெலைவா அன்றா - ரங்கன்சிரி
வெந்தபுண் ஆறுதற்கு வேல்தான் வழியென்றால்
வந்துவிழும் வெண்பா வரம்.

கொண்ட அறிவதனைக் கூடிப் பகிர்ந்துண்டால்
கண்டபடிப் பேசிக் கதைப்பதுவா - முண்டம்நான்
வாலுள்ளோர் ஊருக்குள் வாழ வழியின்றி
தோலும் தடித்துவிட்டேன் சோர்ந்து.

என்ன வார்த்தைக்கு என்னபொருள் என்றுமட்டும்
சொன்னால்தான் வாதமெனில் தூதூபோ - மின்னரங்கில்
ஆகப் புரண்டெழுந்து ஆற்றிக் கறித்தவன்தான்; 
வேகாதோ என்றன் வெயில்.

மட்டுகிறார் சொல்லை மடக்குகிறார் இங்கொருவர்
திட்டுவதைக் காதுக்குள் சேர்க்காமல் - சுட்டுவதை
வண்ணந்தான் மாறாமல் வார்த்தைவீ ணாக்காமல்
கண்ணன்தான் பார்க்கட்டும் கண்.

என்வாக்கில் நீநிறக, ஏழைக்கும் இப்பேச்சா?
உன்வாக்கில் உள்ளவலி ஊருக்கு - தன்போக்கில்
சொல்லத்தான் வக்கற்றுப் போனாயா தென்மதுரை
எல்லைமீ னாளேநீ எற்று?


It is loading more messages.
0 new messages