THF Announcement: மரபு விக்கி

7 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Nov 7, 2009, 3:02:07 AM11/7/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
நண்பர்களே,
 
இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் ஒரு பிரத்தியேகமான பகுதி இணைக்கப்பட்டுள்ளது. மரபு விக்கி எனும் விக்கி பகுதியை இன்று வெளியிடுவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றது.
 
நாள்தோறும் பல முக்கிய தலைப்புக்களில் தகவல்கள், செய்திகள், தமிழ் மொழி இலக்கண விளக்கங்கள், பல மின் தமிழில் உலாவருகின்றன. அவை தகவல் பொக்கிஷங்கள். இவை முறையாகத் தொகுக்கப்படும் போது நமக்கு பயனுள்ள தகவல் வங்கி ஒன்று கிடைக்குமல்லவா. இதனை மனதில் கொண்டே தமிழ் மரபு அறக்கட்டளை மரபு விக்கியை பொதுப் பயனீட்டிற்கு உருவாக்கியுள்ளோம்.
 
இந்த மரபு விக்கியை உருவாக்க வேண்டும் என்பது நா.கண்ணனின் விருப்பம். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சோதனையாக கண்ணன் த.ம.அறக்கட்டளைக்காக ஒரு விக்கியை உருவாக்கி தகவல் தொகுக்க ஆரம்பித்தார். ஆனால் தொழில் நுட்ப பிரச்சனைகளால் அதனைத் தொடர  முடியவிலலலை. இப்போதுள்ள விக்கி தொழில்நுட்பம் விக்கி பயன்பாட்டை எளிமைப் படுத்தியிருக்கின்றது. சில நண்பர்கள் ஒன்று கூடி செயல்பட்டு இந்த மரபு விக்கியை இன்று தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களுக்கு வழங்குகிறோம்.
 
இந்த மரபு விக்கியை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் பொறுத்தி அதனை உருவாக்கியிருக்கின்றார் திரு.வினோத் ராஜன். இவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பிலும் மின் தமிழ் நண்பர்கள் சார்பிலும்  நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இன்று வெளியீடு காணும் மரபு விக்கியில் சில கட்டுரைகளை வினோத் ராஜனும் நானும் எழுதி இணைத்திருக்கிறோம். உங்கள் அனைவரது ஆக்கங்களையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு நீங்கள் தொகுக்கலாம்.  பக்கங்களை உருவாக்குவது எப்படி என்னும் ஒரு உதவி பகுதியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து நீங்கள் உங்கள் எழுத்துக்களை இங்கு பதிப்பிக்க  ஆரம்பிக்கலாம்.
 
இப்பக்கத்தைக் காண நமது வலைப்பக்கத்தின் முகப்புப் பகுதியில் மரபு விக்கி தொடர்பான தகவல்களைப் பாருங்கள். நேரடியாகச் செல்ல: http://www.tamilheritage.org/wiki
 
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
 

வினோத் ராஜன்

unread,
Nov 7, 2009, 3:15:57 AM11/7/09
to மின்தமிழ்
மரபு விக்கி தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின். இவ்விழியிலேயே
தெரியப்படுத்தவும்..

இப்போதைக்கு பக்க இயற்றுதல், உதவி பக்கம் மட்டுமே உள்ளது. கூடிய விரைவில்
பிறவற்றையும் சேர்க்கிறோம். ஒரு பக்கத்தில், யூ-டியூப், வீடியோக்கள்,
எம்.பி3 ஒலிக்கோப்புகள் முதலியவற்றையும் சேர்க்கலம். அதைக்குறித்த சிறு
குறிப்பை இங்கு பின்னர் இடுகிறேன்.

V

On Nov 7, 1:02 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> நண்பர்களே,
>
> இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் ஒரு பிரத்தியேகமான பகுதி

> இணைக்கப்பட்டுள்ளது. *மரபு விக்கி* எனும் விக்கி பகுதியை இன்று வெளியிடுவதில்

> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*

வினோத் ராஜன்

unread,
Nov 7, 2009, 3:18:36 AM11/7/09
to மின்தமிழ்
இன்னொரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்:

எந்த பங்களிப்பும், பெயர் தெரியாமல் நடக்காது :-)

கீழே, கட்டுரைகளுக்கு கீழே, அந்த கட்டுரைகளின் பங்களிப்பாளர்களின்
பெயர்களும் காணப்படும்.

V

On Nov 7, 1:02 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:

> நண்பர்களே,
>
> இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் ஒரு பிரத்தியேகமான பகுதி

> இணைக்கப்பட்டுள்ளது. *மரபு விக்கி* எனும் விக்கி பகுதியை இன்று வெளியிடுவதில்

> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*

விஜயராகவன்

unread,
Nov 7, 2009, 5:32:32 AM11/7/09
to மின்தமிழ்
வினோத், கண்ணன், மற்ற விக்கி உழைப்பாளர்களுக்கு என் பாராட்டுதல்கள்

விஜயராகவன்

> > *[தமிழ் மரபு அறக்கட்டளை]*- Hide quoted text -
>
> - Show quoted text -

வினோத் ராஜன்

unread,
Nov 7, 2009, 5:42:04 AM11/7/09
to மின்தமிழ்
விஜயராகவன், வாழ்த்து மட்டும் சொல்லி தப்பிவிடாதீர்கள், விக்கியில்
ஏதாவது எழுதுங்கள் ;-))

V

meena muthu

unread,
Nov 7, 2009, 5:49:02 AM11/7/09
to mint...@googlegroups.com
பங்களித்த அனைவருக்கும் மனமுவந்த வாழ்த்துகள்!

மீனா


>> சில நண்பர்கள் ஒன்று கூடி செயல்பட்டு இந்த மரபு விக்கியை இன்று தமிழ் மரபுஅறக்கட்டளை  நண்பர்களுக்கு வழங்குகிறோம்.

இந்த மரபு விக்கியை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் பொறுத்தி அதனை உருவாக்கி யிருக்கின்றார் திரு.வினோத் ராஜன். இவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பிலும் மின் தமிழ் நண்பர்கள் சார்பிலும்  நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். <<


2009/11/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

விஜயராகவன்

unread,
Nov 7, 2009, 5:59:52 AM11/7/09
to மின்தமிழ்
விக்கி பக்கம் சர்வர் எரர் என்று வருகிறது


விஜயராகவன்

On 7 Nov, 08:02, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> நண்பர்களே,
>
> இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் ஒரு பிரத்தியேகமான பகுதி

> இணைக்கப்பட்டுள்ளது. *மரபு விக்கி* எனும் விக்கி பகுதியை இன்று வெளியிடுவதில்

> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*

meena muthu

unread,
Nov 7, 2009, 6:02:42 AM11/7/09
to mint...@googlegroups.com
எனக்கு நன்றாக வருகிறதே!

2009/11/7 விஜயராகவன் <vij...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 7, 2009, 6:03:11 AM11/7/09
to mint...@googlegroups.com
வாழ்த்துகள் சுபா!
 
அடியேன் ஏற்கனவே மிந்தமிழில் ஐந்து தொடராக தொடுத்திருந்த சென்ற நூற்றாண்டின் ஆரம்ப கால இணையற்ற பெண் எழுத்தாளர் 'குமுதினி' பற்றிய கட்டுரையையும் விக்கியில் சேர்த்து விட்டு, புண்ணியம் கட்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளு(ல்லு)கிறேன்.
 
திவாகர்

 

வினோத் ராஜன்

unread,
Nov 7, 2009, 6:05:42 AM11/7/09
to மின்தமிழ்
திரும்ப முயற்சித்து பாருங்கள்

http://www.tamilheritage.org/wiki/

எனக்கும் ஒழுங்காகத்தான் வருகிறது .

meena muthu

unread,
Nov 7, 2009, 6:11:08 AM11/7/09
to mint...@googlegroups.com
உள் நுழைந்ததும்  நந்தீஸ்வரரை பூஜித்து தீர்த்தங்கர புஷ்பாஞ்சலியையும்  மனம் குளிரகேட்டு...!

பிரம்மாதம்!( சூப்பர்:))

2009/11/7 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 7, 2009, 6:30:29 AM11/7/09
to mint...@googlegroups.com
திரு.திவாகர்,
 
நான் இணைக்கலாம். ஆனால் நீங்கள் எழுதியதால் உங்கள் பெயரோடு நீங்களே இணைப்பது தான்  பொறுத்தமாக இருக்கும்.  முதலில் ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள். (வலது பக்க மேல் மூலையில் உள்ளது.)
 
கணக்கு உருவாக்கி உள்ளே நுழைந்ததும் 'புதிய பக்கம்' என்று ஒரு பகுதி இருக்கிறதல்லவா. அதில் கட்டுரையின் தலைப்பை தட்டச்சு செய்து உள்ளே செல்லுங்கள். அதன் பின்னர் ஒரு எடிட்டர் வரும் . அதில் நீங்கள் முன்னர்   எழுதிய குமுதினி கட்டுரையை வெட்டி ஒட்டி விடுங்கள். அந்த எடிட்டரிலேயே signature என்று ஒரு பட்டன் இருக்கும் அதை அழுத்தினால் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்ட நேரத்தோடு சேர்க்கப்படும். ஆக இப்படியே நீங்கள் படிப்படியாக உங்கள் கட்டுரைகளை இங்கு தொகுத்து வரலாம்.
 
உங்களுக்கு சிரமமாக இருந்தால் மட்டும் சொல்லுங்கள். நான் குமுதினி கட்டுரையை இனைக்கிறேன்.
 
அன்புடன்
சுபா

2009/11/7 V, Dhivakar <venkdh...@gmail.com>

N. Kannan

unread,
Nov 7, 2009, 8:17:27 AM11/7/09
to mint...@googlegroups.com
சுபாவின் பிறந்தநாள் பரிசெல்லாம் எப்போதும் வித்தியாசமாகவே இருக்கும்.
 
எவ்வளவு இனிய பரிசு.
 
மரபு விக்கி ஏன்?
 
விக்கி தொழில் நுட்பத்தை முதன்முறை பார்த்த போது பிடித்திருந்தது. BLOG CMS வழியாக ஒன்று உருவாக்கி டாக்டர் வாசுதேவன் போன்றோரின் கட்டுரைகளை சேகரிக்க ஆரம்பித்தோம். அப்பொழுது மின் தமிழ் கிடையாது. வினோத் கிடையாது. பொதுவாக ஆர்வலர் கிடையாது. நானே கூட்டாஞ்சோறு விளையாட்டு தனியாக எவ்வளவு நாள் விளையாடுவது. அதே சமயத்தில் நான் உருவாக்கிய BLOGCMS விக்கி இன்றும் எனது இன்னொரு தளத்தில் வேலை செய்கிறது (தொழில்முறைப்பதிவு)
 
இப்போது விக்கி தொழில்நுட்பம் அழகாக வளர்ந்திருக்கிறது. விக்கிபீடியாவின் தமிழ் விக்கி இருக்கிறது. இன்று கோவையில் கூடும் ஒரு நிகழ்வில் மின்தமிழ் அன்பரும், உத்தமம் செயலரும் (கவியரசன்) இன்னொரு விக்கி பற்றிப் பேசுகின்றனர். எனவே தமிழில் இன்னும் கூடுதல் விக்கிகள் தோன்றும் என்பது என் யூகம்.
 
மரபு விக்கி ஏன்?
 
200 வருடங்கள் ஆங்கிலேயர் ஆண்டனர். இந்து தர்மம் நிலைத்திருந்தது. 14ம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து இஸ்லாமிய தாக்குதல். அப்போதும் இந்து தர்மம் நிலைத்திருந்தது. எவ்வாறு?
 
இந்து தர்மம் எப்போதும் பல்வேறு சம்பிரதாயங்களை வளர்த்து ஆதரித்து வந்தது. இந்து தர்மத்தில்தான் எத்தனை மடங்கள். காசிக்குப் போய் வந்தால் தெரியும். தமிழகத்து மடங்களே அநேகம். இந்து தர்மம் ஒரு மையமாக்கப்பட்ட (cntralized) அமைப்பில் நம்பிக்கை கொள்ளாமல், பரவலாக்கப்பட்ட (decentralized) ஒரு அமைப்பாக இந்து தர்மத்தை வைத்தது. இதனால் சகிப்புத்தன்மை தானாக வரும். உதாரணத்திற்கு ஜைன கோயில் பற்றிய ஆவணப்படம் பார்த்தோம். எந்தத்தொந்தரவும் கிடையாது. அது அவர்கள் வழக்கம் என்று விட்டுவிடுவோம். இப்படித்தான் இந்தியக் கலாச்சார நிலவமைப்பு (cultural landscape) இருக்கிறது.
 
இந்த சுதந்திரப்பரப்பில் மலர்ந்தவைதான் வேதமார்க்கம் (வைதீக மார்க்கம்), பௌத்தம், சமணம், சீக்கியம் மற்றும் பிற இந்திய தத்துவ தரிசனங்கள். இவையெல்லாம் ஒன்றையொன்று சார்ந்து, ஒன்றிலிருந்து ஒன்று வளர்ந்தவை. இன்று நான் என்னை வைணவன் என்று சொல்லிக்கொள்ளலாம், ஆனால் என்னுள் ஒரு சைவன் இருப்பான், ஒரு பௌத்தன் இருப்பான், ஒரு சமணன் இருப்பான். வெளியே தெரியாது. ஒரு கோயில் என்று வரும் போது மிக இயல்பாக நாம் செருப்பைக் கழட்டிவிட்டு, வேட்டியை இறக்கிவிட்டு மரியாதையோடு நிற்போம். அங்கிருந்து சடாரி வரலாம், திருத்துழாய் வரலாம், விபூதி வரலாம், தீர்த்தங்கரரின் பாலாபிஷேகப் பிரசாதம் வரலாம், சீக்கியரின் சீனிப்பாகு வரலாம், அல்லது பௌத்தனின் ஊதுபத்தி வரலாம், ஆனால் நம் பக்தி ஒன்றாகவே இருக்கும். அவரவர் இஷ்ட தெய்வம் அவரவர் கண்முன் வந்து நிற்கும். மிக எளிய, ஆனால் தீர்க்கமான, கட்டுடைக்கமுடியாத வலிமையான வழிமுறை.
 
இந்த பல்வேறு சம்பிரதாயங்களின் சுவடுகளைப்பதியவே நம் மரபு விக்கி.
 
இங்கு கிரந்த, சமிஸ்கிருதப்பிரச்சனை இல்லை. நம் இந்தியா நமக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறதோ, அந்த சுதந்திரத்தில் மலர்ந்த சம்பிரதாயங்களை இங்கு பதிவு செய்வோம்.
 
பிற மொழிகளில் தமிழின் வளம் போயிருந்தால் அந்தந்த மொழியில் அச்சுவடுகளைப் பதிவோம். நம் மரபு விக்கி ஒருங்குறியில் இயங்குகிறது.
 
எனவே இங்கு ஆங்கிலம், தமிழ், சமிஸ்கிரதம், பிராகிருதம், பாலி, இந்தி, தெலுங்கு, மலையாளம், அரபி இன்ன பிற மொழிகளில் காணும் தமிழ் மரபுச் செல்வங்களை பாதுகாப்போம் (தாய்மொழியில் திருப்பவை, திருவெம்பாவை இருக்கிறதாம். அதையும் உள்ளே போடு!)
 
விக்கியின் பலமே கூட்டுறவுதான்.
 
உங்கள் சம்பிரதாயம் எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்குப் படுகிறதோ, அந்த உத்வேகத்துடன் நீங்கள் உங்கள் பதிவுகளை உள்ளே வைக்கலாம்.
 
சமகால இலக்கியம், வரலாறு (உம். கட்டபொம்மன் கதை), நாட்டார் வழக்கு இப்படி..எத்தனை வளங்கள் நம்மிடையே! சேகரிப்போம் இங்கு.
 
எனவே தமிழ் மரபு விக்கி யாருக்கும் போட்டியில்லை. தமிழ் வளத்தை மின்னுலகில் நிரந்தரப்படுத்தும் எம் முயற்சிகளில் இதுவுமொன்று.
 
முதல் போணியாக நம் அன்பிற்கு என்றுமுரிய ஹரி கிருஷ்ணன் தனது பல ஆங்கிலக்கட்டுரைகளை அனுப்பியுள்ளார். அவை தேவ் போன்றோர் துணையால் அண்ணன் ஹரியின் பெயரில் இங்கு நிரந்தரப்படுத்தப்படும்.
 
மரபு விக்கியில் நீங்கள்தான் ராஜா. உங்கள் மனதிற்குப் பிடித்த தலைப்புகளில் நம் பாரம்பரியத்தைப் பதிவு செய்யுங்கள். மின்தமிழில் வரும் கட்டுரைகள் என்று மட்டுமில்லை! விக்கியில் போட்டுவிட்டு மின் தமிழில் இணைப்புக் கொடுக்கலாம். விக்கியின் கூடுதல் அனுக்குலம் அது தேடுபொறியில் உடனே வசப்படும் (எழுத்து என்பதால்)
 
நாளை இதற்கொரு விட்ஜெட் தயாரித்துத்தருகிறேன். அதை உங்கள் வலைத்தளங்களில் போடுங்கள். பிற மடலாடற்குழுக்களிலும் இது பற்றிப்பேசி கூட்டுறவிற்கு ஆள் சேருங்கள்.
 
நம் மரபு மின்னுலகில் நிலைபெற உங்கள் பங்களிப்பை இன்றே இடுங்கள்.
 
சுபாவிற்கும், வினோத்திற்கும் நன்றி.
 
நா.கண்ணன் 

Tthamizth Tthenee

unread,
Nov 7, 2009, 9:24:15 AM11/7/09
to mint...@googlegroups.com
திரு  கண்ணன்,
 
. சௌபாக்கியவதி சுபாஷினிட்ரெம்மல்,
 
திரு வினோத்  மற்றும்  மரபு விக்கி  அமைக்கப் பாடுபட்ட அனைவருக்கும்
 
மனமார்ந்த  நன்றி
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
7-11-09 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:

sk natarajan

unread,
Nov 7, 2009, 9:48:35 AM11/7/09
to mint...@googlegroups.com
மரபு விக்கி  அமைக்கப் பாடுபட்ட அனைவருக்கும்
 
மனமார்ந்த  நன்றி

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2009/11/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Ganesan

unread,
Nov 7, 2009, 1:46:25 PM11/7/09
to மின்தமிழ்

On Nov 7, 2:02 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> நண்பர்களே,
>
> இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் ஒரு பிரத்தியேகமான பகுதி

> இணைக்கப்பட்டுள்ளது. *மரபு விக்கி* எனும் விக்கி பகுதியை இன்று வெளியிடுவதில்

> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*

சுபா,

நல்ல முயற்சி. கொங்குநாட்டின் பழைய வரலாற்றில் பலர்
அறியாச் செய்திகளைப் பாடல்கள், கல்வெட்டுகள் போன்றவற்றுடன்
சில கட்டுரைகள், குறிப்புகள், ... தருகிறேன்.

கிரந்தம் வெகுவாகப் பாவிக்கப்படும் இத்தளத்தில் என்று
எதிர்பார்க்கலாம். வடமொழி பயில்வதற்கும், மணிப்ரவால
உரைகளைப் படித்துப் புரிந்துகொள்ளவும் உதவும்.

சைவ ஆதீனங்கள் ஆகமங்களையும் (உ-ம்: புதுச்சேரி
பிரெஞ்சு நிறுவனம்), சே. கிருஷ்ணமாச்சாரியார்
வெளியிட்ட கிரந்த - தமிழ் மணிப்பிரவாள ஏடுகளும்
மூல அச்சுப் போலவே சரியான எழுத்துக்களில்
வலையில் வரும். வடமொழி, இந்தி பயில
தமிழருக்கு கிரந்த எழுத்து லகுவானது.

கூட்டெழுத்தில்லாத முறையில் linear கிரந்தம்
ஓர் இடைப்பட்ட நிலை. தமிழர் வடமொழி பயில
எளிது. இலங்கை கல்யாண குருக்கள், வினோத்,
தி.வா, தேவ், ... போன்றவர்களிடம் கேட்டுக்
இங்கே கற்றுக்கொள்ளவும், முதல் பாடங்களை
மரபு விக்கியில் வைக்கவும் உதவும்.

லீனியர் கிரந்தத்தில் பழகினால், அடுத்ததாய்
கூட்டெழுத்துக்கள் உடைய கிரந்தம். அதனால்,
கல்வெட்டு, செப்பேடு படிக்க பழகிக் கொள்ள முடியும்.
மேலும், இந்தி, தெலுங்கு, சிங்களம், மலையாளம்,
கன்னடம், ஒரியம், வங்கம், ... எல்லாம் கிரந்தத்தில்
எழுத முடியும். முனைவர் துரை. மணிகண்டன் சொல்வதுபோல்
பிற மொழி கற்க இவை துணைநிற்கும்.

கிரந்தமாகவோ, எளிமைப்படுத்திய (லீனியர்) கிரந்தமோ
உள்ள விக்கிப் பக்கங்களை தமிழ் எழுத்திலும்
காட்டிவிடலாம். தமிழ் இலக்கணங்கள் கூறும்
செந்தமிழ் 30 எழுத்தில் ஒலிக்குறிகள் (பிரெஞ்சு,
ஜெர்மன் எழுத்தில் ஒலிக்குறிகள் போல ...
தமிழ் எழுத்தில்) ஏற்றிப் படிக்கும் முறையும்
நேர்சமமாக விளங்கும்.

சுருங்கச் சொன்னால், கல்விக்கும், மேலான
ஆய்வுகள், பரிசோதனைகளுக்கும் கூடமாகப்
பயன்படுத்தலாம்.

நா. கணேசன்

N. Kannan

unread,
Nov 7, 2009, 6:47:04 PM11/7/09
to mint...@googlegroups.com
மிக்க நன்றி முனைவர் நா.கணேசன்:
 
காலனித்துவத்தின் இன்னொரு வடு, இந்தியர்கள் தங்கள் பாரம்பரியக் கல்வி முறையிலிருந்து முழுக்க ஆங்கிலம் தழுவிய முறைக்கு மாறியது. இதனால் ஒரு இந்தி நாவலை மொழி பெயர்க்க வேண்டுமெனில் அது முதலில் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பாக வேண்டும். பின் தான் அதிலிருந்து தமிழுக்கு. இந்திக்கும், தமிழுக்கும் தொடர்பில்லையா? இவர்கள் ஒரே மண்ணின் மைந்தர்கள்தானே. இடையில் ஆங்கிலம் ஏன்? நாம் யோசிப்பதில்லை!
 
வைஷ்ணவ மரபில் பெரும்பாலும் சமிஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம் அறிந்து வைத்திருப்பர். என் சித்தி தெலுங்கு பேசுவாள். இதனால் எளிதாக திராவிட இலக்கியப் பரிமாற்றம் என்பது முன்பு நடந்து வந்தது. இப்போது அது இல்லை.
 
Pan Indian கலாச்சாரம் என்பது சினிமா மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் உருவாகிவிட்டது. இது நல்லதுதான். ஆயினும் இன்னும் ஆழமான முறையில் இந்தியர்கள் ஒருவரை ஒருவர் அறிய, உதாரணமாக தமிழர்கள் தங்கள் பெருமை தாங்களே தம்பட்டம் அடித்து என்ன பயன்? ஒரு இந்திக்காரனுக்கு புரியும் வண்ணம் சொல்ல இந்தி மொழியில் நாம் என்ன எழுதி வைத்துள்ளோம். தமிழக அரசுகள் தொடர்ந்து நம்மை துண்டித்து, தீவர்களாக்கி விளையாண்டு வந்திருக்கிறது. தமிழ் செம்மொழி என்றால் அதன் பெருமை இந்தியாவெங்கும் தெரிய வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும். அதற்கு வழி நாம் பிற இந்திய மொழி கற்றலும், மற்றோரை கற்க வைத்தலும், அது முடியாதெனில் அவர்கள் மொழியில் நம் பெருமைகளை அறியச் செய்தலும் ஆகும்.
 
ஒரு காலத்தில் கிரந்தம்/சமிஸ்கிருதம் வழியாக இதைச் செய்து வந்தனர். கிருஷ்ண சைதன்யரின் வெற்றி, வல்லபரின் வெற்றி, அன்னமய்யாவின் வெற்றி இவற்றின் பின்னால் ஆழ்வார்களின் வெற்றி அடங்கியிருக்கிறது. இந்திய முழுமைக்குமான பக்தி நெறி பரப்பலில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. இங்கு ஆழ்வார்கள் தோன்றவில்லையெனில், நமக்கொரு இராமானுஜன் தோன்றவில்லையெனில் இவையெல்லாம் சாத்தியப்பட்டிருக்காது. இப்படி இந்திய முழுமைக்கும் வெற்றி தந்த ஒரு பாரம்பரியத்தை நாம் ஏன் விட வேண்டும்? அதன் நுணுக்கங்களைக் கண்டறிந்து வலுவான ஒரு இந்தியப்பிராந்தியத்தை (இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் அடங்கும்) நம்மால் மின்னுலகில் உருவாக்க முடியும். It is possible to create an Indic Corridor in cyberspace.
 
நீங்களெல்லோரும் இதையெல்லாம் அர்த்த புஷ்டியுடன் புரிந்து கொண்டு, ஈடுபட்டால்தான் பாரதி போன்றோரின் கனவுகள் நனவாகும். மொழி என்பது ஊடகமே. மானுடம் அதைவிட உயர்வானது. இந்தியக் கலாச்சாரம் உலகில் “வாழும்” மூத்த கலாச்சாரங்களில் ஒன்று. அதை `உள்ளது உள்ளபடி` மின்வெளியில் தக்க வைக்க முயல்வோம்.
 
கண்ணன் 

2009/11/8 N. Ganesan <naa.g...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
Nov 8, 2009, 12:34:45 AM11/8/09
to mint...@googlegroups.com
ஓம்
நல்லதோர் வீணைசெய்த நன்மக்களுக்கு நன்றி!
அடியேனும் புகுபதிகை செய்துள்ளேன்
ஓம்.வெ.சுப்பிரமணியன்.

2009/11/7 meena muthu <ranga...@gmail.com>

N. Kannan

unread,
Nov 8, 2009, 3:29:28 AM11/8/09
to mint...@googlegroups.com
நேற்று நான் நமது மரபு விக்கியை மின்னுலகில் பிரபலப்படுத்த 'வலைக்குறளி'
(விட்ஜெட்) தருவதாகச் சொல்லியிருந்தேன்.
இதோ அதன் நிரவல் குறியீடு (கீழே).
இதை புளோக்கர் Dashboardல் சென்று, Layoutல் உள்ள add a widget
தொகுதியில் HTML/Jawa இணைப்பாகச் சேர்த்துவிடவும்.
எப்படித்தோன்றுமென்று காண:

http://image-thf.blogspot.com/

நமது மரபு விக்கியின் தரவு நமது பரவலாக்கும் முறையில்தான் அடங்கியுள்ளது.
எனவே ஆர்வமுள்ள அனைவரும் உங்களது வலைப்பக்கம், வலைப்பதிவு, மடலாடற்குழு
இன்னபிற மின்னியங்கு தளங்களில் இது இடம் பெறும் படி செய்யவும்.

மீண்டும் நாம் சொல்வது, 'மரபு விக்கி' எத்திட்டத்திற்கும் போட்டி இல்லை.
தமிழ் மரபு போன்ற கடலை ஒரு சிப்பிக்குள் அடக்கி விட முடியாது. இவ்வகை
முயற்சிகள் பல்கிப்பரவினால்தான் நமது மரபு மின்னுலகில் ஸ்திரப்படும்.

Wideget Title: Heritage Wiki (மரபு விக்கி)
Script (நிரல்):

<table style="background-color: transparent; padding: 5px;" cellspacing="0">
<tr><td>
<img width="82" alt="THF-Wiki"
src="http://www.tamilheritage.org/wiki/images/0/06/THF_wiki_Logo.jpg"
height="80"/>
</td></tr>
<tr><td style="padding-left: 5px;font-size: 125%: font-family:
TheneeUniTx: src:url

(http://www.tamilheritage.org/css/THENEE.eot)">
<b>Heritage Wiki</b> மின்னுலக மரபுக்காட்சியகம்!
</td></tr>
<tr><td style="padding-left: 5px">
<a href="http://www.tamilheritage.org/wiki">Make your contribution TODAY</a>
</td></tr>
</table>

உங்கள் ஆதரவிற்கு நன்றி.

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழ்க நிரந்தரம்.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Nov 8, 2009, 5:35:21 AM11/8/09
to mint...@googlegroups.com
அன்பின் விநோத்:

தமிழ் விக்கிபீடியாவிற்கான தொடுப்பை மரபு விக்கியில் இடுமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

கண்ணன்

2009/11/8 N. Kannan <navan...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Nov 8, 2009, 7:01:55 AM11/8/09
to mint...@googlegroups.com
ரெ.கா அவர்கள் பினாங்கு தீவைப் பற்றிய ஒரு கட்டுரையை மரபு விக்கியில் இணைத்திருக்கிறார். நன்றாக வந்துள்ளது.
 
ஏனையோரும் பதிவு செய்து கொண்டு உங்கள் படைப்புக்களை சேருங்கள்.
 
மரபு விக்கி: http://www.tamilheritage.org/wiki
 
அன்புடன்
சுபா

2009/11/8 N. Kannan <navan...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 8, 2009, 7:02:41 AM11/8/09
to மின்தமிழ்
> சைவ ஆதீனங்கள் ஆகமங்களையும் (உ-ம்: புதுச்சேரி
> பிரெஞ்சு நிறுவனம்), சே. கிருஷ்ணமாச்சாரியார்
> வெளியிட்ட கிரந்த - தமிழ் மணிப்பிரவாள ஏடுகளும்
> மூல அச்சுப் போலவே சரியான எழுத்துக்களில்
> வலையில் வரும். வடமொழி, இந்தி பயில
> தமிழருக்கு கிரந்த எழுத்து லகுவானது.
>
> கூட்டெழுத்தில்லாத முறையில் linear கிரந்தம்
> ஓர் இடைப்பட்ட நிலை. தமிழர் வடமொழி பயில
> எளிது. இலங்கை கல்யாண குருக்கள், வினோத்,
> தி.வா, தேவ், ... போன்றவர்களிடம் கேட்டுக்
> இங்கே கற்றுக்கொள்ளவும், முதல் பாடங்களை
> மரபு விக்கியில் வைக்கவும் உதவும்.
>
> லீனியர் கிரந்தத்தில் பழகினால், அடுத்ததாய்
> கூட்டெழுத்துக்கள் உடைய கிரந்தம். அதனால்,
> கல்வெட்டு, செப்பேடு படிக்க பழகிக் கொள்ள முடியும்.
> மேலும், இந்தி, தெலுங்கு, சிங்களம், மலையாளம்,
> கன்னடம், ஒரியம், வங்கம், ... எல்லாம் கிரந்தத்தில்
> எழுத முடியும். முனைவர் துரை. மணிகண்டன் சொல்வதுபோல்
> பிற மொழி கற்க இவை துணைநிற்கும்.
>
> கிரந்தமாகவோ, எளிமைப்படுத்திய (லீனியர்) கிரந்தமோ
> உள்ள விக்கிப் பக்கங்களை தமிழ் எழுத்திலும்
> காட்டிவிடலாம்.

கணேசன் !, அவ்வப்போது நான் நினைப்பதெல்லாம் அப்படியே
எழுதிவிடுகின்றீர்கள்.. வார்த்தை பிசகாமல் :-))

V

> சுருங்கச் சொன்னால், கல்விக்கும், மேலான

Subashini Tremmel

unread,
Nov 8, 2009, 7:04:59 AM11/8/09
to mint...@googlegroups.com
ஆவலுடன் காத்திருக்கிறோம். தாருங்கள் திரு.கணேசன்.
 
அன்புடன்
சுபா

2009/11/7 N. Ganesan naa.g...@gmail.com

N. Kannan

unread,
Nov 8, 2009, 7:12:09 AM11/8/09
to mint...@googlegroups.com
சுபா:

ஆளுக்கொரு கட்டுரை, வாரமொன்றிற்கு என்று பதிப்பித்தால் கூட எவ்வளவு
சேர்த்துவிட முடியும்?
இங்கு இருப்பவர்கள் என்ன சாமானியப்பட்ட ஆட்களா?
மிகவும் ஆர்வமாக உள்ளது! (I'm excited about the possibility)

க.>

2009/11/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Subashini Tremmel

unread,
Nov 8, 2009, 7:31:30 AM11/8/09
to mint...@googlegroups.com
ரெ.கா அவர்கள் ஒரு புதிரையும் தனது கட்டுரையில் வைத்திருக்கிரார். பதில் தருவோருக்குப் பரிசும் உண்டாம்..:-)
-சுபா

2009/11/8 N. Kannan <navan...@gmail.com>
சுபா:

Tthamizth Tthenee

unread,
Nov 8, 2009, 8:17:50 AM11/8/09
to mint...@googlegroups.com
என்னுடைய http:// thamizthenee.blogspot.com  இல்  இணைத்துவிட்டேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
8-11-09 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:
2009/11/8 N. Kannan <navan...@gmail.com>
சுபா:

அன்புள்ள

தமிழ்த்தேனீ

வினோத் ராஜன்

unread,
Nov 9, 2009, 12:57:38 AM11/9/09
to மின்தமிழ்
திரு ரெ.கா,

தயவு உங்கள் கட்டுரையை “வகைப்படுத்தவும்”, நான் தொகுத்தால்
பங்களிப்பாளர்களின் பெயர்களின் என் பெயரும் வந்துவிடும் :-) (அப்படி ஒரு
கட்டுரைக்கு வந்து விட்டது :-) )

Anyways..

Look at the end of the toolbar

if you a button called <c>. click that..

either you can choose from existing category...

or create a new category..

ஏற்கன்வே, பினாங்கின் கதை என்ற ஒரு வகையை உருவாக்கி யுள்ளேன். அதில்
வகைப்படுத்தி விடவும்.

நன்றி

V

> > > இந்தமரபுவிக்கியை உருவாக்க வேண்டும் என்பது நா.கண்ணனின் விருப்பம். நான்கு


> > > ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சோதனையாக கண்ணன் த.ம.அறக்கட்டளைக்காக ஒரு விக்கியை
> > > உருவாக்கி தகவல் தொகுக்க ஆரம்பித்தார். ஆனால் தொழில் நுட்ப பிரச்சனைகளால்

> > > அதனைத் தொடர  முடியவிலலலை. இப்போதுள்ளவிக்கிதொழில்நுட்பம்விக்கிபயன்பாட்டை


> > > எளிமைப் படுத்தியிருக்கின்றது. சில நண்பர்கள் ஒன்று கூடி செயல்பட்டு இந்தமரபு
> > > விக்கியை இன்று தமிழ்மரபுஅறக்கட்டளை நண்பர்களுக்கு வழங்குகிறோம்.
>

> > > இந்தமரபுவிக்கியை தமிழ்மரபுஅறக்கட்டளை வலைப்பக்கத்தில் பொறுத்தி அதனை

karthi

unread,
Nov 9, 2009, 10:10:02 AM11/9/09
to mint...@googlegroups.com
Vinodh,

I have done this for Part 10 and Part 9. But it does not
show any difference.

Re.Ka.

Reply all
Reply to author
Forward
0 new messages