துளசிதாசரின் ராமாயனத்தில் பிழையா ?

57 views
Skip to first unread message

காமேஷ்

unread,
Nov 5, 2009, 7:25:11 PM11/5/09
to தமிழமுதம், முத்தமிழ், பண்புடன், palsuvai, tamil2friends, minTamil, தென்றல்


லக்னோ: துளசிதாசர் ராமாயணத்தை திருத்திய மடாதிபதி மீது துறவியர்கள் கூட்டமைப்பு கடும் கோபத்தில் இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம், சித்ரகூடம் என்ற இடத்தில் உள்ள "துளசிபீடம்' என்ற மடத்தின் மடாதிபதி ஜகத்குரு ராமநாதாசார்ய சுவாமி ராமபத்ரசயா (60) என்பவர். பார்வையற்ற இவர் வாரணாசியிலுள்ள சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலையில் படித்து தங்கப் பதக்கம் பெற்றவர்.



பிஎச்.டி., மற்றும் டி.லிட்., முடித்தவர். சித்ரகூடத்திலுள்ள, ஊனமுற்றோருக்கான பல்கலையின் துணைவேந்தர்; அங்குள்ள பார்வையற்றோர் கல்லூரிகளோடு நெருங்கிய தொடர்புடையவர்; அந்தப் பகுதியில் மிகப் பிரபலமானவர்; 80 புத்தகங்கள் எழுதியவர். சுவாமி ராமநாதர், 387 ஆண்டுகளுக்கு முன் மறைந்த கோஸ்வாமி துளசிதாசரின் புகழ்பெற்ற "ராமசரித மானஸ்' என்ற ராமாயணத்தைத் திருத்திய பதிப்பாக கோரக்பூர் கீதா பிரஸ் மூலம் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிப்புதான் சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. ராமசரித மானசில் பெரும்பகுதியை இவர் திருத்தியிருக்கிறார்;



 பல முக்கியமான பகுதிகளை நீக்கிவிட்டார் என்றும் இவர் மீது குற்றப்பத்திரிகை சுமத்தியிருக்கிறது "அனைத்திந்திய அகாடா பரிஷத்!' "சுவாமி ராமநாதர், ராமசரித மானசில் மூவாயிரம் பிழைகளைக் கண்டுபிடித்துள்ளார். "அவருக்கு எவ்வளவு துணிவிருந்தால், ராமதாசரின் படைப்பிலேயே குறை கண் டிருப்பார்? இந்தக் குற்றத் துக்குப் பரிகாரமாக, அவர் நவம்பர் 8ம் தேதி, அயோத்யாவில் கூடும் துறவியர்கள் கூட்டத்தில் நிபந் தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். "இல்லையெனில், அவர் தனது மடாதிபதி பதவியைத் துறக்க வேண்டும்' என்று அறிக்கை விட்டிருக்கிறது அகாடா பரிஷத்.




நடந்தது என்ன? கீதா பிரஸ்ஸின் ஆலோசகரும், புராண நிபுணருமான சுனிதா சாஸ்திரி, அந்தப் பதிப்பில் அயோத்யா காண்டமே இல்லை என்கிறார். "கதாவாசக' பிரேம் பூஷண்ஜி என்பவர், சில நிறுத்தக் குறியீடுகளையும், எழுத்துக்களின் மாத்திரைகளையும் மட்டுமே சுவாமி மாற்றியிருப்பதாக கூறுகிறார். சுவாமி ராமநாதர்,"இந்தப் பதிப்புக்காக நான் 50 ராமாயணப் பதிப்புக்களை ஆராய்ந்துள்ளேன். எவ்வித நிர்பந்தமும் இல்லாத நிலையில்தான் ஒரு பதிப்பாசிரியன் தான் உணர்ந்த வகையில், அந்த நூலைத் திருத்த உரிமை பெற்றிருக்கிறான். இந்த மிரட்டல்களுக்கு நான் அடிபணியப் போவதில்லை. இவர்கள் என்னிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர். நான் ஒன்றும் இவர்கள் அடிமையல்ல' என்று பதிலளித்திருக்கிறார்.



http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18560


~காமேஷ்~




Geetha Sambasivam

unread,
Nov 5, 2009, 7:58:02 PM11/5/09
to pals...@googlegroups.com, தமிழமுதம், முத்தமிழ், பண்புடன், tamil2friends, minTamil, தென்றல்
//ராமதாசரின் படைப்பிலேயே குறை கண் டிருப்பார்? இ//

துளசிதாசர்னு வந்திருக்கணுமோ? ஆனாலும் துளசி ராமாயணத்தில் பல பிற்சேர்க்கைகள் உண்டு என்பதையும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். சீதையே அசோகவனத்தில் இல்லைனும், அசோகவனத்தில் இருந்தது மாயா சீதை என்றும் துளசி சொல்லுவார். இம்மாதிரிப் பல முக்கியமான நிகழ்ச்சிகளில் மாறுபாடுகள் உண்டு.

2009/11/6 காமேஷ் <kame...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 5, 2009, 8:55:53 PM11/5/09
to mint...@googlegroups.com
களை களைந்தால், சிலருக்கு கோபம் வரும். கிரேக்க இதிஹாஸங்கள் (இலியட் வகையறா) எழுதப்பட்டவை என்று இலக்கியாளர்களின் அசையா நிலை. அருமையான ஆய்வுகள் பல செய்து, அவை வாய்மொழி இலக்கியமே என்றார், ஒரு அமெரிக்க ஆய்வாளர். எழுந்தது சினம். போர்க்கொடி உயர்ந்தது. அபவாதங்கள் பறந்தன. பின்னர் எல்லாம் அடங்கின. ஏனென்றால், அவர் சொன்னது உண்மை.


2009/11/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Vedaprakash

unread,
Nov 5, 2009, 10:45:53 PM11/5/09
to மின்தமிழ்
"துளசிதாசரின் ராமாயனத்தில் பிழையா ?" என்று கேட்டிருக்கிறீர்கள்!

மிகவும் அருமை. இதோ, பிழைகள் எப்படி ஏற்படுகின்றன என்று பார்ப்போம்:

1. "துளசிதாசரின் ராமாயனத்தில் பிழையா ?" என்ற கேள்விலேயே பிழை உள்ளது -
"ராமாயனத்தில்" இல்லை "ராமாயணத்தில்"!

2. இவ்வாறுதான், அக்காலத்தில் ஏடுகளைப் பார்த்து பிரதியெடுப்பவர்கள்,
பாவம் பிழை செய்வார்கள்.

3. இன்று நாம் பல வசதிகளைப் பெற்றிருக்கிறோம் - இருப்பினும் பிழைகள்
ஏற்படுகின்றன- ஆனால் அப்பொழுது என்ன இருந்தது? [இருட்டுதானா?] ஆனாலும்
கோடிக்கணக்கான நூல்கள் எழுதப் பட்டனவே?
இந்தியாவில் முகமதியர்களால் கோவில் நூல்நிலையங்கள் தாக்கப்பட்டு
எரியூட்டியபோது, பல நாட்கள் எரிந்தன என்று குறிப்புகள் உள்ளன.
அப்படியென்றால், எத்தனை நூல்கள் அழிந்திருக்கவேண்டும்?
கைகள் பட்ட கஷ்டம் விரயமாயிற்றே?

4. ஆகவே, 400 ஆண்டுகள் முந்தைய பிரதிகளில் பிழையுள்ளன என்பதில் ஆச்சரியம்
இல்லை.

ஆனால்.அது "ராமாயணத்தில்" பிழை, "துளசிதாசரின் ராமாயணத்தில்" பிழை,
என்றெல்லாம் விவாதிப்பது அழகாகத்தெரியவில்லை.
ஏனெனில் அத்தகைய விவாதம் "வீரமணி / திக / மார்க்ஸிஸ்ட்" போல
சென்றுவிடும்.

5. இன்னொரு முக்கியமான விஷயம் -
* இந்திய மத இலக்கியங்கள் மற்றவற்றைப் போல
"அங்கீகரிக்கப் பட்ட பதிப்பு",
* "ஏற்றுக் கொள்ளப்பட்டப் பதிப்பு",
* "ஒரு தேவதை" நேரிடையாக வந்து என்னிடம் சொல்லிய
பதிப்பு" [அது எக்காலத்தில் யாரால், எத்தனை பேரால் எழுதப் பட்டாலும்
கவலை இல்லை]
* "ஜேம்ஸ் அதிகாரத்தின்படி வெளியிட்டப் பதிப்பு",
* "மறைத்து வைக்கப் பட்ட ஆகமங்கள்" [அதாவது ஏற்றுக்
கொள்ளப் படாதது]
என்றெல்லாம் இல்லை.
*
ஆயிரக் கணக்கான தூரங்களில், நாடுகளில் (இன்றைய நிலையில்) அத்தகைய
இலக்கியங்கள் (கையெழுத்துப் பிரதிகள் / ஓலைச் சுவடிகள்) கண்டெடுக்கப்
பட்டுள்ளன.

* எல்லாமே 90% ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.

6. அந்த 10% வேறுபாட்டில் உள்ளவை -
அ, மனிதப் பிழைகள் / பிரதியெடுப்புப் பிழைகள்
ஆ. விளக்க உரையாக சேர்க்கப் பட்ட பாடல்களை, மூலப்பிரதியின்
பாடல்களாகக் கொள்வது.
இ. அத்தகைய பாடல்களிலுள்ள பாட பேதங்களை காலபேதங்களால்
பிற்பாடு படிப்பவர்கள், தவறாக இடைச் செருகல்கள் எனப் பொருள் கொள்வது
ஈ. மொழிமாற்றங்கள், அதன் பொருளைக் கொள்ளும் விதம் முதலியன
இவற்றிற்கெல்லாம் மேலாக, இக்காலத்தைல் உள்ள சில வல்லுனர்களின் அகம்பாவம்.
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஒரு துறையில் வல்லுனராக இருப்பவர்
மற்றத் துறைகளைப் பற்றி கவலைப் படாமக் முடிவிற்கு வருவது. உதாரணம்:
வானவியல் படிக்கும் இக்கால விஞ்ஞானி டெலஸ்கோப் இல்லாமல் கிரகங்களைப்
பர்த்திருக்க முடியாது என்தெல்லம் எழுதுவது, சொல்லுவது.

.............................உம். இதில் நிறைய விஷயங்கள் உள்ளன.
தனியாகவே எழுதலாம் போலிருக்கிறது!

இருப்பினும் நண்பரே, இவ்விஷயத்தில் சற்றே பொறும், "Meanwhile, the fate
of the Swami hangs in balance till November 10 when the seers
reassemble in Ayodhya. Not that he is bothered. It is just a ploy to
malign me and extort money, he told TOI and added he was not the one
to be cowed down by such threats." என்று கூறுகிறது:
http://timesofindia.indiatimes.com/city/lucknow/Ramayana-editor-invites-holy-fury-in-Ayodhya/articleshow/5185064.cms

srirangammohanarangan v

unread,
Nov 5, 2009, 10:55:28 PM11/5/09
to mint...@googlegroups.com
---------------------------------------------------------------
 
நல்ல   கருத்துகள்  நன்கு  விவாதிக்கப்பட்டிருக்கின்றன.   முக்கியமான   பார்வைகளைக்  வாசகர்களின்   கவனத்திற்குக்  கொண்டு  வந்தமைக்கு   நன்றி.

 

Tthamizth Tthenee

unread,
Nov 5, 2009, 11:04:40 PM11/5/09
to mint...@googlegroups.com
ஆங்கிலத்தில்  trouble maker  ஒரு வகை
 
trouble shooter    மற்றொரு வகை
 
திரு வேதப் ப்ரகாஷ் அவர்களே
தகுந்த  முக்கியமான செய்திகளை  குறிப்பிட்டிருக்கிறீர்கள்
 
தொடரட்டும்  இந்த இழை
 
முக்கியமான  இழை
 
நன்கு  பொருட் செறிவோடு
 
தகுந்த ஆதாரங்களோடு  வளரட்டும்
 
அன்புடன்
 
தமிழ்த்தேனீ
 
 


 
6-11-09 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:

Raja sankar

unread,
Nov 6, 2009, 12:43:54 AM11/6/09
to mint...@googlegroups.com
வேதப்பிரகாஷ்,

கூடவே அதைப்பற்றி  உயர்வாக பாடும் பாடல்களை மூலப்பிரதியில் சேர்த்துவிடுவது, பிரதி எடுத்தவரின் பெயரையும் மூலத்தில் சேர்த்து அதையும் இவர் பாடம், அவர் பாடம் என்று சொல்லிவிடுவது என்பவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ராஜசங்கர்



2009/11/6 Vedaprakash <vedamved...@yahoo.com>

Vedaprakash

unread,
Nov 6, 2009, 4:31:15 AM11/6/09
to மின்தமிழ்
நிச்சயமாக, எல்லா சொற்பொழிவுகள், பேச்சுகளில் சொல்லுவார்கள்,
"கடன்பட்டான் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கைவேந்தன்" என்று! சொல்லுங்கள்
பார்ப்போம், இந்த பாடலுக்கு சொந்தக்காரர் யார் என்று?

Raja sankar

unread,
Nov 6, 2009, 4:40:17 AM11/6/09
to mint...@googlegroups.com
இந்த பாடலைப்பற்றி முன்பே பலர் எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். கம்பர் எழுதியதில்லை இது அல்லவா

ராஜசங்கர்



2009/11/6 Vedaprakash <vedamved...@yahoo.com>
நிச்சயமாக, எல்லா சொற்பொழிவுகள், பேச்சுகளில் சொல்லுவார்கள்,

Vedaprakash

unread,
Nov 6, 2009, 4:55:13 AM11/6/09
to மின்தமிழ்
பதில் சொல்லாமகல், கேள்விதான் கேட்கிறீர்கள்!

Raja sankar

unread,
Nov 6, 2009, 5:03:16 AM11/6/09
to mint...@googlegroups.com
http://www.treasurehouseofagathiyar.net/24700/24789.htm

http://www.treasurehouseofagathiyar.net/24700/24788.htm



ராஜசங்கர்



2009/11/6 Vedaprakash <vedamved...@yahoo.com>
பதில் சொல்லாமகல், கேள்விதான் கேட்கிறீர்கள்!

Vedaprakash

unread,
Nov 6, 2009, 5:19:26 AM11/6/09
to மின்தமிழ்
ஜெயபாரதி சொல்வது தவறு.

தனிப்பாடல் திரட்டில் வருகிறது [திருநெல்வேலி சைவ சித்தாந்தப் பதிப்பகம்]

Hari Krishnan

unread,
Nov 13, 2009, 2:56:25 AM11/13/09
to mint...@googlegroups.com


2009/11/6 Vedaprakash <vedamved...@yahoo.com>

நிச்சயமாக, எல்லா சொற்பொழிவுகள், பேச்சுகளில் சொல்லுவார்கள்,
"கடன்பட்டான் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கைவேந்தன்" என்று! சொல்லுங்கள்
பார்ப்போம், இந்த பாடலுக்கு சொந்தக்காரர் யார் என்று?


இதைப் பற்றி பல முறை எழுதியிருக்கிறேன்.  அது ஒரு தனிப்பாடல்.  எழுதியவர் பெயர் நினைவில்லை.  முழுப்பாடலும் இது:

விடம்கொண்ட மீனைப்போலும் வெந்தழல் மெழுகு போலும் 
படம்கொண்ட பாந்தள் வாயிற்பற்றிய தேரை போலும் 
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத்துற்றபோது 
கடன்கொண்டார் நெஞ்சார்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன். 

மீன் பிடிப்பதற்காக, குளத்தில் விஷத்தைக் கலந்துவிடுவார்கள்.  மீன்கள் எல்லாம் செயலற்றுப் போய்விடும்.  கொல்லுகின்ற விஷம் இல்லை இது.  It just leaves fish inactive.  அப்படி உடல் செயலற்றுப் போய், மனம் தவிப்பில் ஆழ்ந்து துடிக்கின்ற விஷத்தை விழுங்கிய மீனைப் போலவும்,  நெருப்பில் விழுந்த மெழுகைப் போலவும், பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்ட தேரையைப் போலவும், போர்க்களத்தில் உறுதியான ராமபாணம் வந்து தைத்த சமயத்தில், உடல் செயலற்றுப் போய், மனம் துடித்தான் ராவணன்.  கடன் கொண்டவர்களுடைய நெஞ்சத்தைப் போல் அவன் நெஞ்சம் துடித்தது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  துளசி ராமாயணத்தில் பிழை என்ற பொதுவான தலைப்பாக இருக்கிறது.  ‘மாற்றி எழுதியிருக்கிறார்’ என்று மிகவும் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது.  என்ன பிழை எந்த மாதிரியான பிழை, சொல்லியிருக்கும் செய்தியில் பிழையா இல்லை, பாடல்களில் உள்ள கருத்தில் பிழையா.... கொஞ்சம் விரிவான விவரங்கள் கிடைத்தால் பிழைகளைப் பற்றியும் பேச முடியும். 


--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Nov 13, 2009, 2:58:52 AM11/13/09
to mint...@googlegroups.com


2009/11/6 Vedaprakash <vedamved...@yahoo.com>

ஜெயபாரதி சொல்வது தவறு.

தனிப்பாடல் திரட்டில் வருகிறது [திருநெல்வேலி சைவ சித்தாந்தப் பதிப்பகம்]

என்னிடம் இருக்கும் பூம்புகார் பதிப்பு இரண்டு தொகுதிகளிலும் இந்தப் பாடல் இல்லை.  எப்போதோ குறித்து வைத்திருந்ததன் அடிப்படையில் இந்தப் பாடலை அனுப்பினேன்.  உங்களிடம் இருந்தால், இயற்றியவர் பெயர், பாடபேதங்கள் ஏதேனும் இருந்தால் அவை, போன்ற மற்ற விவரங்களைத் தர முடியுமா?

shivan .

unread,
Nov 13, 2009, 4:32:20 AM11/13/09
to mint...@googlegroups.com
ஹரி ஜியை பற்றி கேள்விப்பட்டிருந்தேன். இப்போது நேரடியாக அதை காண்கிறேன்.

என்னை போன்ற கற்றுக்குட்டிக்கு (no plural)  எவ்வளவு உபயோகமான தகவல்கள்.

இதை போல சின்ன சின்னதாக ஏதாவது விஷயத்தை கொடுத்துக் கொண்டே இருங்கள் ஹரி ஜி. 

நமஸ்காரம்.

2009/11/13 Hari Krishnan <hari.har...@gmail.com>

Chandra sekaran

unread,
Nov 13, 2009, 4:44:32 AM11/13/09
to mint...@googlegroups.com
விடம்கொண்ட மீனைப்போலும் வெந்தழல் மெழுகு போலும் 
படம்கொண்ட பாந்தள் வாயிற்பற்றிய தேரை போலும் 
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத்துற்றபோது 
கடன்கொண்டார் நெஞ்சார்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன். 

மேற்கண்ட பாடல் கம்பராமயணப் பாடல்தனே? ? ?
சந்திரா

To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

Hari Krishnan

unread,
Nov 13, 2009, 6:14:51 AM11/13/09
to mint...@googlegroups.com


2009/11/13 Chandra sekaran <plastic...@gmail.com>

விடம்கொண்ட மீனைப்போலும் வெந்தழல் மெழுகு போலும் 
படம்கொண்ட பாந்தள் வாயிற்பற்றிய தேரை போலும் 
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத்துற்றபோது 
கடன்கொண்டார் நெஞ்சார்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன். 

மேற்கண்ட பாடல் கம்பராமயணப் பாடல்தனே? ? ?
சந்திரா

இல்லை.  இல்லவே இல்லை.

இதுவும் கம்பன் இயற்றியதில்லை; அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றாறாக.....பாடலும் கம்பனுடையதில்லை.  

தனிப்பாடல் தொகுப்பில் இருக்கிறது என்பது தெரியும்.  ஆனால் என்னிடம் இருக்கும் இரண்டு தொகுதிகளிலும் இது இல்லை.  வேதப்ரகாஷ் வந்து மற்ற விவரங்களைச் சொல்வார் என்று நினைக்கிறேன்.  


Innamburan Innamburan

unread,
Nov 13, 2009, 6:48:56 AM11/13/09
to mint...@googlegroups.com
மு.வரதராசன், இது கம்பராமாயண்த்தில் இல்லை என்று என்றோ சொல்லிவிட்டார்.
இன்னம்பூரான்

2009/11/13 Hari Krishnan <hari.har...@gmail.com>



--
இன்னம்பூரான்

Hari Krishnan

unread,
Nov 13, 2009, 6:52:15 AM11/13/09
to mint...@googlegroups.com


2009/11/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>

மு.வரதராசன், இது கம்பராமாயண்த்தில் இல்லை என்று என்றோ சொல்லிவிட்டார்.
இன்னம்பூரான்


அது சரி.  எங்கிட்ட இன்னிக்குதானே கேட்டாங்க!  (அட.... பத்து வருஷத்தில் ஒரு நூத்தி மூவாயிரத்தி எழுநூத்தி அம்பத்தாறாயிரத்தி பன்னென்டாவது தடவயா சொல்லிட்டேன் வைங்களேன்....)

அன்னிக்கே கேட்டிருந்தா அன்னிக்கே சொல்லியிருப்பேன்.... மூவா முதல்வர் சொல்ட்டாக்க?  நாஞ் சொல்கூடாதக்கு?

:-)))) 

srirangammohanarangan v

unread,
Nov 13, 2009, 8:48:04 AM11/13/09
to mint...@googlegroups.com
On 11/13/09, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
2009/11/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>
மு.வரதராசன், இது கம்பராமாயண்த்தில் இல்லை என்று என்றோ சொல்லிவிட்டார்.
இன்னம்பூரான்

 

 

 
அன்னிக்கே கேட்டிருந்தா அன்னிக்கே சொல்லியிருப்பேன்.... மூவா முதல்வர் சொல்ட்டாக்க?  நாஞ் சொல்கூடாதக்கு?

 
:-)))) 
 
 
அடி  சக்கைன்னானாம்!      மூவா  முதல்வா   சிந்தாமணியையும்,   மு  வ    வையும் சேர்த்துத்  தரும் பதில் ஜோர்!!    ரசித்தோம்

 

Chandra sekaran

unread,
Nov 13, 2009, 8:54:23 AM11/13/09
to mint...@googlegroups.com
ஐயா,
என்னைப் போன்ற புதியவர்க்கு ஹரிகி அண்ணா தெளிவு படுத்துகிறார், அவ்வளவு தான்.

Geetha Sambasivam

unread,
Nov 13, 2009, 9:33:55 AM11/13/09
to pals...@googlegroups.com, தமிழமுதம், முத்தமிழ், பண்புடன், tamil2friends, minTamil, தென்றல்
 http://sivamgss.blogspot.com/2008/08/blog-post.html

துளசிதாசரின் ராமாயணம் உத்தர காண்டம்

துளசியின் ராமாயணம், கம்பராமாயணத்தைப் போலவே, ராமரை ஒரு அவதாரம் எனவும், சீதையை சாட்சாத அந்த மகாலட்சுமியே எனவும் கூறி வந்திருக்கின்றது ஆரம்பம் முதலிலேயே. ஆகவே ராவணன் கடத்தியதும், உண்மையான சீதை அல்ல, துளசியின் கருத்துப் படி. மாய சீதை தான் ராவணனால் கடத்தப் படுகின்றாள். அசோகவனத்தில் சிறையும் இருக்கின்றாள். பின்னர் அவள் தான் அக்னிப்ரவேசமும் செய்கின்றாள். உண்மையான சீதை பூமியிலே மறைந்திருந்து வாழ்வதாயும் அக்னிப்ரவேசத்தின் போது பூமித் தாய் உண்மை சீதையை வெளியே கொண்டுவருவதாயும் துளசி சொல்கின்றார். கிட்டத் தட்ட அதே தான் இப்போவும் சீதை நாடு கடத்தப் பட்டபோதும் துளசி சொல்கின்றார். ஆனால் அவதூறு பேசுவது அனைத்து மக்களும் என்றும் துளசி சொல்லவில்லை.

யாரோ ஒரு வண்ணான் சந்தேகப் படும் வகையில் நடந்து கொண்ட தன் மனைவியைக் கண்டிக்கும்போது, "நான் என்ன ராமனா?? பதினான்கு மாதங்களுக்கு மேல் இன்னொருவன் பாதுகாவலில் இருந்த மனைவியைத் திரும்ப அழைத்து வைத்துக் கொண்டதுபோல் வைத்துக் கொள்ள?" என்று கேட்டதாயும், அந்தப் பேச்சைக் கேட்ட தூதர்கள் ராமரிடம் வந்து சொன்னதும், ராமர் சீதையைத் துறக்க முடிவு செய்ததாயும் துளசி ராமாயணத்தில் வருகின்றது. என்றாலும் துளசியின் ராமாயணப் படி ராமர் இப்போது துறப்பதும் உண்மையான சீதை அல்ல. சீதை மேலுலகு செல்லும் நேரம் வந்துவிட்டதாய்க் கூறி ராமர் அவளை மேலுலகம் அனுப்புவதாயும், அவள் தோற்றம் மட்டுமே பூமியில் தங்கியதாயும், அந்தத் தோற்றத்தையே ராமர் காட்டுக்கு அனுப்பியதாயும் துளசியின் ராமாயணப் பாடல்கள் கூறுகின்றன.

அப்போது அந்த மாய சீதைக்குப் பிறக்கும் பையன்களே லவ-குசர்கள் என அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார் துளசி. இந்த சகோதரர்கள் மாபெரும் வீரர்களாய்த் திகழ்கின்றனர். இவர்கள் யாராலும் வெல்ல முடியாதவர்களாய் இருக்கின்றனர். ராமர் அசுவமேத யாகம் நடக்கும்போது அவர் திக்விஜயத்திற்கு அனுப்பும் குதிரையை இவர்கள் பிடித்து வைத்துக் கொள்ளுகின்றார்கள்.
குதிரையை மீட்காமல் அசுவமேத யாகம் செய்ய முடியாது. பெரும்போர் நடக்கின்றது. போர் புரிவது தன் உறவினருடன் என்பதை அறியாமலேயே இளைஞர்கள் இருவரும் போர் புரிகின்றனர். பரதன், சத்ருக்கனன், லட்சுமணன், விபீஷணன், அனுமன் என அனைவருமே இவ்விரு இளைஞர்களால் தோற்கடிக்கப் பட்டு கடைசியில் ராமரே வருகின்றார். ராமர் போர் புரியும் முன்னர் சற்று தூங்க, அந்த இளைஞர்கள் இடைப்பட்ட நேரத்தில் தாங்கள் பிடித்து வைத்த அனைவரையும், காட்டத் தங்கள் அன்னையை அழைத்து வருகின்றனர். சீதை அவர்களைப் பார்த்துவிட்டு, இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் உறவினர்கள். உங்கள் தந்தையின் சகோதரர்கள் என்று சொல்கின்றாள்.அதற்குள் அங்கே வால்மீகி வந்து தூங்கும் ராமரை எழுப்பி, லவ, குசர்களைக் காட்டி ராமரின் மகன்கள் எனச் சொல்வதாயும், மகன்களை ஏற்ற ராமர், சீதையை மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்ல, சீதை,பூமிக்குள் செல்வதாயும், அதன்பின்னர், ராமரின் மறைவு பற்றிய விபரங்கள் வால்மீகி சொல்லி இருப்பதை ஒட்டியே வருகின்றது. லவ, குசர்கள் குதிரையைப் பிடிப்பது, கட்டுவது, தங்கள் சித்தப்பன்மார்களிடமும், தந்தையின் நண்பர்களுடனும் போர் புரிந்து அனைவரையும் தோற்கடிப்பது போன்ற விபரங்கள் வால்மீகியில் இல்லை. ஆனால் துளசி ராமாயணத்தை ஒட்டிப் பல திரைப்படங்கள், மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்திருக்கும் காரணத்தால் அனைவருக்கும் மேற்கண்ட நிகழ்ச்சிகளே நடந்தவை என நினைக்கும்படியாக மனதில் பதிந்து விட்டிருக்கிறது. இது கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது.//

காமேஷ்,

வேலை அதிகம் என்பதால் உடனே பதில் கொடுக்க முடியலை, துளசி ராமாயணத்தில் இம்மாதிரியான சில மாற்றங்கள் உண்டு. மற்றபடி வேறு மாற்றங்கள் இல்லை எனக்குத் தெரிந்த வரை. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டமே கிடையாது. மற்ற ராமாயணங்களில் உண்டு. என்னோட வலைப்பூ சுட்டி கொடுத்துள்ளேன். முடிஞ்சால் அங்கேயும் போய்ப் பாருங்க.

devoo

unread,
Nov 13, 2009, 2:26:44 PM11/13/09
to மின்தமிழ்
Nov 13, 12:56 pm, Hari Krishnan

// துளசி ராமாயணத்தில் பிழை என்ற பொதுவான தலைப்பாக இருக்கிறது. ‘மாற்றி
எழுதியிருக்கிறார்’ என்று மிகவும் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது.


என்ன பிழை எந்த மாதிரியான பிழை, சொல்லியிருக்கும் செய்தியில் பிழையா
இல்லை, பாடல்களில் உள்ள கருத்தில் பிழையா.... கொஞ்சம் விரிவான விவரங்கள்

கிடைத்தால் பிழைகளைப் பற்றியும் பேச முடியும்.//


ஸ்ரீ ராமசரித மானஸம்

இது பாமரர்களுக்கு எளிய முறையில் ஞானத்தை ஊட்டும் நோக்கத்தில்
எழுதப்பட்டது. ஸந்த் துளஸீதாஸர் பல பண்டிதர்கள், ஞானிகளுடன் பழகியவர்.
வைராக்யம் மிக்க அடியார்களின் இணக்கம் இவரிடம் பற்றற்ற தன்மையை
வளர்த்திருந்தது; புகழ் பெறுவதிலும் இவர் பற்று நீங்கியவராக இருந்தார்
என்பதை வலியுறுத்துவதற்காக இதைக் கூற நேர்கிறது.

வால்மீகி: துளஸீதாஸ: கலௌ தேவீ பவிஷ்யதி |
ராமசந்த்ர கதாம் ஏதாம் பாஷாபத்தம் கரிஷ்யதி ||
- பவிஷ்ய உத்தர
புராணம்
’கலி யுகத்தில் வால்மீகி முனிவர் மீண்டும் தோன்றுவார்; ஸ்ரீராம கதையை
மக்களின் மொழியில் எழுதுவார்’என்று ஈசன் உமைக்குச் சொல்வதாக அமைந்த
ச்லோகம்.

துளஸீதாஸர், கால வழக்கப்படி முதலில் வடமொழியில்தான் ராமாயணம் எழுதினார்.
தைவ ஸம்மதம் இன்மையால் அதை மறைத்து விட்டார். மாந்தரின் அறியாமை,
காலத்தின் தேவை, அற நூல்களின்பால் சமூகம் காட்டிய அசட்டை, முகமதியரின் மத
வெறி ஆகியவற்றை இவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். ஏனெனில் ராம
காதையை மட்டும் இவர் சொல்லவில்லை; நன்னெறி, நம்பிக்கை, அறத்தில்
உறுதிப்பாடு இவற்றைக் கதை என்னும் ஊடகம் வழியே மாந்தருக்குப்
புகட்டுவதில் இவர் காட்டும் தீவிரம் இவ்வாறு முடிவுகட்டத் தூண்டுகிறது.
பெரும்பாலும் அத்யாத்ம ராமாயணத்தின் போக்கில் அமைந்துள்ளதால் மானஸத்தை
வால்மீகி ராமாயணத்தோடு ஒப்பிடுவது தவறு. மானஸத்தில் இராமபிரான்
பிறப்பிலிருந்தே பரம்பொருளாகக் காட்டப்படுகிறார். சில தோஹாக்கள் பாகவதம்
கூறும் கருத்தை ஒட்டியதாக அமைந்துள்ளன.

இவர் இராமானுச நெறியின் ஒரு பிரிவான ராமாநந்த ஸம்ப்ரதாயத்தைச்
சேர்ந்தவராயினும் சைவ – வைணவ, ஸகுண - நிர்குண, த்வைத – அத்வைதப்
பாகுபாடுகளுக்கு இடமளிக்காமல் பேசுகிறார். ஸ்ரீ ராம நாமமும், ராம
பக்தியும் மட்டுமே போதும் என்று வாசிப்பவர் மனம் ஒப்பும் வகையில்
ஸித்தாந்தம் செய்கிறார். ஸ்ரீராம பரத்வத்தை ஈசனார்தம் வாய்மொழியாகச்
சொல்வதாகவும் அமைத்துள்ளார்.எல்லாத் தரப்பினரும் மானஸத்தைப் புகழ்வதற்கு
இதுவே காரணம்.

அத்யாயங்களின் ஆரம்பத்தில் வடமொழியில் அருமையான துதிகளை அமைக்கவும் இவர்
தவறவில்லை; இவர்தம் புலமைக்கு அகச்சான்று காட்டவே இதைக் கூற நேர்கிறது.
’ஸ்வாந்த: ஸுகாய துலஸீ ரகுநாத காதாம்’ என்று கூறுவது ஸ்ரீ ராமகுணங்களை
அனுபவிப்பதில் இவருக்கிருக்கும் ஆர்வத்தைப் புலப்படுத்துகிறது.
கோஸ்வாமியின் தேடல் முதிய பிராயம்வரை தொடர்ந்தது. ஆன்மிகத்தின் ஆழம்
கண்டபின் ஆயுளின் இறுதிப் பகுதியில்தான் இவர் நூல்களை இயற்றினார். துளஸீ
தாஸருக்கு அரசியல் செல்வாக்கோ, அறிஞர் குழாத்தின் ஆதரவோ கிடையாது;
வடமொழியைப் புறக்கணித்ததால் நிந்தனைக்கு ஆளானவர்; இவரைச் சுற்றியிருந்தது
பஜனை பாடும் எளிய அடியார்கள்தான்.

மானஸத்தை எழுதியது ’அவத’ மொழியில் எனினும் மைதிலி, போஜ்புரி மொழிகள்
கலந்ததாக மிக எளிமையும், கருத்தாழமும் மிக்கதாக இருக்கிறது. உவமைகள் பாமர
ரஞ்ஜகமாக அமைந்துள்ளன. மானஸத்தின் வரிகள் உத்தர பாரதத்தின் ஊரகப்
பகுதியில் சொலவடைகளாகவே மாறியுள்ளன.
உலகில் இதுபோல் குறுகிய காலத்தில் இனப் பன்முகம் கொண்ட ஒரு
சமுதாயத்தின்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு நூல்
இருந்திருக்குமா தெரியவில்லை. கோஸ்வாமி கைப்பட எழுதிய பிரதிகளும் தற்போது
ஒன்றிரண்டு இருப்பதாக அறிகிறோம்.

இப்போது விஷயத்துக்கு வருவோம் –
ஸ்ரீராமபத்ராசார்யர் துறவி, மஹாபண்டிதர்; இவருக்கு அறுபது வயதாகிறது. கண்
பார்வையற்றவர்; இனிய குரலில் இவர் பாடுவது பரவச உணர்ச்சியூட்டுகிறது.
ஸம்ஸ்கார் சானலில் இவர் சொற்பொழிவு செய்வதைக் காணலாம். 2,100 சுலோகங்கள்
கொண்ட ‘பார்கவ ராகவீயம்’ என்னும் மிகப்பெரிய நூலை இவர் இயற்றியுள்ளார்;
அதில் 33 வகையான சந்தங்கள்.இது தவிர வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார்.
ஊனமுற்றவர்களுக்கான கல்வி நிறுவனங்களையும் இவர் நடத்தி வருகிறார்.

இவர் மானஸத்தில் 3,000 தவறுகள் இருப்பதாக எடுத்துக்காட்டி அவற்றைத்
திருத்தியிருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இவற்றில்
பெரும்பாலானவை சொற்பிழைகள்.
ஞான தாஸ், ந்ருத்ய கோபால் தாஸ் (அயோத்தி) இருவரும் எதிரணியில்.

இலக்கியப் பார்வையுடன் எழுதப்படாத துளஸீ ராமாயணத்தில் பிழை காண்பது
கோஸ்வாமியின் நோக்கத்தைப் பாழ் செய்வதாகும்.


தேவ்

Innamburan Innamburan

unread,
Nov 13, 2009, 6:39:26 PM11/13/09
to mint...@googlegroups.com
மிகவும் பொறுமையுடனும், பொருத்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள், தேவ்.ஒன்று மட்டும் புரியவில்லை.

"துளஸீதாஸர், கால வழக்கப்படி முதலில் வடமொழியில்தான் ராமாயணம் எழுதினார்.
தைவ ஸம்மதம் இன்மையால் அதை மறைத்து விட்டார்."
என்பது.


2009/11/14 devoo <rde...@gmail.com>



--

N. Kannan

unread,
Nov 13, 2009, 7:05:07 PM11/13/09
to mint...@googlegroups.com
தேவ்:

தாங்கள் கூறும் பின்னணி ஒரு வகையில் கம்பராமாயணத்திற்கும் பொருந்தும்
இல்லையா? கம்பனும் ஸ்ரீராமன் விஷ்ணுவின் அவதாரமெனவும், சீதை
மகாலட்சுமியின் அம்சமென்றும் தெளிவாகக் கூறித்தானே செல்கிறார். வடக்கே
நடந்தது போல் நன்னெறிகள் தமிழகத்தில் தாழ்வுற்றுப்போக கம்பனும்
நன்னெறிகளைப் புகட்ட இராமனை ஒரு ஊடகமாகக் கொள்கிறார் என்றும் சொல்லலாம்
அல்லவா? கம்பராமாயணம் தோன்றிய காலமெது? எம்பெருமானார் காலமோ? அல்லது
அதற்கு சற்று முந்தி/பிந்தி?

க.>

2009/11/14 devoo <rde...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Nov 13, 2009, 7:10:21 PM11/13/09
to mint...@googlegroups.com
ம்ம்ம்ம்ம்????? என்னோட கருத்து துளசி ராமாயணம் கம்பராமாயணத்தை ஒட்டியதாக, அதன் அடிப்படையிலேயே ஸ்ரீராமர் ஒரு கடவுள் என்பதாகச் சித்திரிக்கப் பட்டது என்பதே. மற்றபடி துளசிதாசரையும் அவரின் ராமாயணத்தையும் நம்புகிறார்களே என்ற எண்ணம் இல்லை. கம்பராமாயணத்திலும் மாயா ஜனகர் என்ற ஒரு பாத்திரம் உண்டு. அது வால்மீகியில் கிடையாது. ஆகையால் கம்பராமாயணத்தில் அது கம்பரால் எழுதப்பட்டது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். சொல்ல வந்த விஷயமே வேறே! மற்றபடி தினமும் அநுமன் சாலீஸா சொல்லும் எனக்குத் துளசியின் அளவுக்கு ஞானமோ அவரைக் குறை சொல்லும் அளவுக்கு பக்தியோ கிடையாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.துளசிதாசரைக் குறை சொல்லும் நோக்கம் எதுவும் இல்லை. பிழையா எனக் கேள்வி வந்ததால் மூலமான வால்மீகியில் இருந்து துளசிதாசர் மாறுபடும் இடங்களை மட்டும் சுட்டி உள்ளேன்.


2009/11/14 N. Kannan <navan...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 13, 2009, 7:14:34 PM11/13/09
to mint...@googlegroups.com
வால்மீகி எழுதியது ஒன்றே மூலம், அதைப் பின்பற்றிப் பலரும் எழுதி இருப்பதால் ராமாயணமே கிடையாது என்றோ, ராமனே கிடையாது என்றோ பொருள் இல்லை. ராஜராஜ சோழன் தஞ்சை கோயிலைக்கட்டியது பற்றியும், அதன் சரித்திரப் பின்னணி குறித்தும் பல்வேறு சரித்திரக் கதாசிரியர்கள் அவரவர் நோக்கில் எழுதி உள்ளார்கள். அதனால் ராஜராஜ சோழனே இல்லை என்று சொல்லிவிடமுடியுமா? நோக்கமே துளசி ராமாயணம் பிழையா என்ற கேள்விக்குப் பதில் கொடுக்க நினைத்ததே. இதை நான் ஒரு வருஷம் முன்னேயே என்னுடைய வலைப்பதிவில் எழுதி இருக்கிறேன். ராமாயணம் அறிந்தவர் அனைவரும் அறிந்த ஒன்றும் ஆகும் இது. இருந்தும் யாரும் துளசிதாசரையோ, கம்பரையோ, வால்மீகியையோ மதிக்கவில்லை, எல்லாமே கேள்விக்குறி என்றும் சொன்னதில்லை. ஒவ்வொருத்தரின் பார்வையும் வேறுபட்டுள்ளது என்ற அளவிலேயே பார்க்கவேண்டும்.


2009/11/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 13, 2009, 7:17:57 PM11/13/09
to mint...@googlegroups.com
உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

2009/11/14 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Nov 13, 2009, 10:23:52 PM11/13/09
to மின்தமிழ்
Nov 14, 4:39 am, Innamburan Innamburan
//ஒன்று மட்டும் புரியவில்லை.*துளஸீதாஸர், கால வழக்கப்படி முதலில்
வடமொழியில்தான் ராமாயணம் எழுதினார்.தைவ ஸம்மதம் இன்மையால் அதை மறைத்து
விட்டார்.* என்பது.//

அக்காலத்தில் வடமொழியில் எழுதினால்தான் இலக்கிய அந்தஸ்து;அறிஞர்கள்
அதனால் வடமொழியில் புலமையை வெளியிடுவது மரபு.இம்மரபை மீறினார்
கோஸ்வாமி.காசி விசுவநாதர் அவரிடம் ராம சரிதத்தைப் பேச்சுமொழியில்
இயற்றுமாறு ஆணையிட்டதாகக் கூறுவர்.காப்பியங்களுக்கு இலக்கணம் நவரச
வெளிப்பாடு;அதற்கு முதன்மை தரவில்லை தாஸர்.சிருங்கார,வீர ரசங்களை
மானஸத்தில் அதிகம் காணமுடிவதில்லை.கடுமையான சொற்பிரயோகமும் அதிகம்
இல்லை.சமுதாயம் சமநிலை பெற பக்தி பாவமே தேவையானது என்பதை உணர்ந்ததால்
மக்கள் மொழியில் மென்மையான நடையில் இராமகாதையை அமைத்தார்; வெற்றி
கண்டார்.கீழ்மட்டம்வரை காகுத்தன் புகழ் பரவியது.

‘ஜய் ஸ்ரீராம்ஜீ கீ’


Nov 14, 5:05 am, "N. Kannan"
//தாங்கள் கூறும் பின்னணி ஒரு வகையில் கம்பராமாயணத்திற்கும் பொருந்தும்
இல்லையா?//

இரு இராமாயணங்களையும் ஒப்பிட இயலாது; இரண்டிற்கும் பின்னணி வேறு.
கம்பநாடர் முழு ஆன்மிகவாதி அல்லர்;ஒரு வள்ளலின் ஆதரவு இருந்தது.
பின்னரும் அவர் பிரபுக்களை அண்டியிருந்தமை தெரிகிறது.
தமிழ் கோலோச்சிய காலகட்டம்.அச்சூழலில் பண்பாட்டொழுக்கம் மிக உயர்ந்த
நிலையில் இருந்தது; வெளித்தூண்டுதலுக்கான தேவை இருக்கவில்லை.
ஒரு பேரிலக்கியம் படைக்கும் நோக்கம் கம்பரிடம் தெளிவாகவே தெரிகிறது.

தேவ்

srirangammohanarangan v

unread,
Nov 14, 2009, 6:41:27 AM11/14/09
to mint...@googlegroups.com
(யாரும்  தேவ்   இடம்   துளஸீ தாஸ்  பற்றி  மோதாதீர்கள்.  உங்கள்  நல்லதுக்குச்  சொல்லுகிறேன்.    இன்று    தெரியாத்தனமாக   அவர்  வீட்டுக்குப்  போய்    மாட்டிக்கொண்டேன்.    திருமதியாரின்    அமுதத்தை   வடித்தது   போன்ற    உணவு  ருசி!  அடேயப்பா    இந்தச்  சுவை    அந்தச்  சுவை   இல்லை.  அப்படி  ஒரு   கைவாகு   அந்த   அரசியாருக்குச்  சமையலில்.  அது  வேறு  கதை.   நான்  என்ன  மாட்டிக்கொண்டேன்  என்பதற்கு  வருவோம்.     பல  நாட்களாய்    இனிமேல்  புத்தகங்களை    வாங்குவதும்  இல்லை.   யாரிடமிருந்தும்   பெற்று  வருவதும்  இல்லை   என்று  முடிவு   பண்ணியிருந்தேன்.     இன்னிக்கு  அந்த  விரத  பங்கமும்  ஆயிற்று.   அவரிடமிருந்து    சில  நூல்களைப்  பெற்று  வந்தேன்.    ஒழுங்காக   சில  நூல்களை   எடுத்துக்கொண்டு    ஓடிவந்திருக்கலாம்   பேச்சுக்  கொடுக்காமல்.   விதி  யாரை  விட்டது?     துளஸியைப்  பற்றி,  அவரது   ஸ்ரீராமாயணம்  பற்றிப்  பேச்சு  வந்தது.    நான் தான்  ஆரம்பித்திருப்பேன்.     இந்த  மாதிரி  வேண்டுமென்றே  விவகாரத்தில்  மாட்டிக்கொள்வதே    ஒரு  வேலையாகப்  போய்விட்டது.    மனிதன்     துளஸியைப்  பற்றியும்,   துளஸி ராமாயணம்  பற்றியும்   சொன்னார்.    சரி  சொல்லுகிறாரே   என்று   அவர்  கொடுத்த    துளஸி  ராமாயணத்   தமிழ்   மொழி பெயர்ப்பை   வீட்டுக்கு  வந்த  முதல்  காரியம்  படிக்கத்  தொடங்கினேன்.   ஸ்ரீ  ஸ்வாமினாத    ஆத்ரேயனின்    அருமையான  மொழிபெயர்ப்பு.    என்ன  ஒரு   லாகவமான    எழுத்தாளர்    ஸ்ரீ ஸ்வாமினாத    ஆத்ரேயன்.    முன்னுரையில்    துளஸியின்  வாழ்க்கையைப்  பற்றி    எழுதியிருக்கிறாரே   பார்க்கணும்  !!    ஐயோ  ஐயோ   பைத்தியமாய்  அடித்துவிட்டது     ஒருவரை.   அந்தப்  பேர்வழி    புலம்புவதைக்  கேளுங்கள்)  
 
 
ராம்போலா!  
எங்கே  போனாயப்பா?  
முழுப்  பல்வரிசையுடன்   பிறந்தாயாமே?  
சதா  ராமநாமச்   சொல்வரிசைத்    திகழ   உன்  அதரம்  திறந்தாயாமே? 
எங்கே  போனாய்   ராம்போலா? 
இந்தச்   சமுதாயத்தைப்   பற்றி  நீ  சிரிப்பது   உண்மைதான்   ராம்போலா!  
தெய்வமே    வந்து   பிறந்தால்    எப்படி  இருக்கும்  என்று    வாய்ச்சொல்   வீசுவார்கள்   ராம்போலா. 
ஆனால்    உன்  முத்துப்பல்  வரிசையின்  முழுமையில்  
ராமநாமம்  மிளிரக்  கேட்டதும்  என்ன  சொன்னார்கள்  ராம்போலா? 
குழந்தை   அமானுடம்!   ஊருக்கு  ஆகாது.  
ஏதோ  தெய்வக்குத்தம்.... 
தெய்வக்குத்தமா   ராம்போலா 
குழந்தையை   வெட்டிப்  புதைத்தால்தான்   தோஷம்  தீருமாமே!  
உன்  தாய்  என்ன  பதறியிருப்பாள்  ராம்போலா! 
தந்தை  துபே   இறந்து    வைகுண்டம்  சென்ற  பிற்பாடும் 
உன்  தாய்    இறந்தும்   எங்கும்   செல்லாமல் 
சுற்றிச்  சுற்றி   வந்தாளே  ராம்போலா    துளஸிச்  செடியை! 
சமுதாயத்துக்குப்  பயந்து,  
கணவனின்    ஊமையான    உள்வேதனைக்கு   என்னவழி  என்று  திகைத்து 
என்றோ  அண்ணன்    தந்த    ஆறு  பொற்காசு  
அதைத்   தந்து   தாதியிடம்    பல்லும்  சொல்லும்    விளங்கிய 
புதல்வனைத்  தந்து  அனுப்பினாளே   ராம்போலா!  
நீ   ஸ்ரீ  வால்மீகி  ராமாயணத்தைப்  பாராயணம்  செய்தபடிச் 
சுற்றிவந்த    துளஸிச்  செடி    தருவாகி    தந்த  நிழல்தானே 
உன்  துளஸிராமாயணம்   ராம்போலா!  
நீ  ராமாயணம்   சொல்லச்  சொல்ல  
நாளும்  நாளும்    கடைசி   வரிசையையும்  தாண்டி   
முக்காடிட்டு     வெண்குஷ்டத்   திருமேனியுடன் 
ஒருவர்  உட்கார்ந்திருந்தாரே    யாரவர்   ராம்போலா? 
ராமனைக்  காண  நீ  ஏங்கின   ஏக்கம்   அறிந்தவர்தானே   அனுமான்?  
அடுத்தமுறை  வந்தால்    எனக்கும்  காட்டுவாயா  ராம்போலா?  
நான்  இப்பொழுதே   உனக்கு   கையில்  அடித்துச்  சொல்கிறேன்  
ராம்போலா!  
எந்தக்    குறும்பும்  பண்ணாமல்   இருப்பேன்  அப்பொழுது   ராம்போலா!   
உன்  பிறவியில்   நிறைந்த   பல்வரிசையும்  
அதில்  திகழும்   பிறவி  தீர்க்கும்  சொல்வரிசையும்  
இந்தச்   சமுதாயத்தை    என்றாவது   மாற்றும்   ராம்போலா. 
காசி  விச்வநாதர்    உன்னிடம்    பேசிய  பொழுது 
அவர்  வாயில்   வந்த    ராமநாமத்தை    நீயும்  கேட்டிருப்பாயே   ராம்போலா! 
நீங்கள்  இருவர்    சொல்லும்   ராமநாமமும்    ஒத்திசையாய்   என்  காதில்    என்றேனும்     விழாதா  ராம்போலா? 
வெட்டிப்  புதைக்க  வேண்டும்    என்ற   சமுதாயத்தையே   மன்னித்து
வளம்  பெருகச்  செய்தாயே   ராம்போலா?  
நான்  வெறுமனே    வெட்டியாய்த்  தானே  இருக்கிறேன்
என்னிடம்  என்ன  கோபம்  ராம்போலா? 
சிவன்   பார்வதியிடம்  கூறிய    ராமாயணத்தின் 
பிரதியைத்  தேடிப்போனாயே   ராம்போலா? 
கிடைத்ததா    அது ?     இருக்கிறது   என்று   மட்டும்  சொல்  
எப்படியோ    தேடிப்  பிடித்து  வந்துவிடுவேன் 
இரண்டு   ராம  ஜபம்   எங்கு   ஒத்திசைக்குமோ  
அங்குதான்     துளஸித்   தருநிழலில்  
ராம்போலா    இருப்பான்   என்று.   
 
*****
 
ஸ்ரீரங்கம் வி  மோகனரங்கன்

N. Kannan

unread,
Nov 14, 2009, 7:04:53 AM11/14/09
to mint...@googlegroups.com
2009/11/14 devoo <rde...@gmail.com>:

> இரு இராமாயணங்களையும் ஒப்பிட இயலாது; இரண்டிற்கும் பின்னணி வேறு.
> கம்பநாடர் முழு ஆன்மிகவாதி  அல்லர்;ஒரு வள்ளலின் ஆதரவு இருந்தது.
> பின்னரும் அவர் பிரபுக்களை அண்டியிருந்தமை தெரிகிறது.
> தமிழ் கோலோச்சிய காலகட்டம்.அச்சூழலில் பண்பாட்டொழுக்கம் மிக உயர்ந்த
> நிலையில் இருந்தது; வெளித்தூண்டுதலுக்கான தேவை இருக்கவில்லை.
> ஒரு பேரிலக்கியம் படைக்கும் நோக்கம் கம்பரிடம்  தெளிவாகவே தெரிகிறது.
>

அடேங்கப்பா! இது எவ்வளவோ சொல்கிறது. புரியாத பழம் புதிர்கள்
விடுபடுகின்றன. நன்றி தேவ்!

கண்ணன்

V, Dhivakar

unread,
Nov 14, 2009, 7:10:08 AM11/14/09
to mint...@googlegroups.com
ரங்கனிடம் கூட மோதலாம்.. தேவ் உடனா? சான்ஸே இல்லை. துளஸி ராமாயணம் என்றில்லை. எந்த விஷயமானாலும் சரி..
 
அஹோ!~ ராம்போலா..
எத்தனை ஏக்கத்தைத் தருகிறது அந்த முன்னுரை..
 
திவாகர்

 

shivan .

unread,
Nov 14, 2009, 8:04:57 AM11/14/09
to mint...@googlegroups.com
உண்மை திவாகர் ஜி !

2009/11/14 V, Dhivakar <venkdh...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Nov 14, 2009, 9:17:28 AM11/14/09
to mint...@googlegroups.com
’ராம்போலா’   என்பது  அந்த  முன்னுரையைப்   படித்து    கிறக்கத்தில்    நான்   எழுதிய  கவிதை --  இல்லை அந்த  கிறக்கம்   எழுதிய  ஏதோ  ஒன்று.    இன்னும் மயக்கத்தில்   இருந்து   நான்  விடுபடவில்லை.   திவாகர்  சார்!     என்னென்ன   ஆழச் சுழல்கள்   நமது   பாரம்பர்யங்களில்!   அமிழ்ந்தால்  அமரத்வம்  அளிக்கும்    வினோதச்   சுழல்கள்!

devoo

unread,
Nov 14, 2009, 10:56:38 AM11/14/09
to மின்தமிழ்
>> ராம் ’போலா’<<

போலா என்றால் அப்பாவி; ஆம், துளஸீ தாஸரின் இயற்பெயர் அதுதான்.
ஸ்ரீராம நாம ஜபம் தவிர வேறு எதுவும் தெரியாத அப்பாவி;
காசியில் உறையும் ஈசன் - இவருக்கும் ராம மந்த்ரம் தவிர வேறு எதுவும்
தெரியாது:
‘ஜிஹ்வாக்ர பாகே வர ராம மந்த்ரம்...’
பாற்கடலிலிருந்து வெளிவந்த உயர்ந்த வஸ்துக்களை ஒன்றுவிடாமல் பிறர்
எடுத்துக் கொள்ள
எஞ்சிய நஞ்சை அருந்திய அப்பாவி; அம்பிகையின் ஸௌமங்கல்யம் துணை செய்தது.

‘வைஷ்ணவாநாம் யதா சம்பு:’ என்கிறது பாகவதம்.
இவர் துணையால் ஏதுமறியாத ராம்போலா பாரதத்தின் சூழ்நிலையை
நன்கு அறிந்து கொண்டார்.நாமச் சுவை அறிந்த இருவரும் ஒத்திசைந்து
உலகை உய்விக்க முடிவு செய்தனர்.விளைவு ’மானஸம்’

சிவபிரானுக்கான துதியுடன்தான் மானஸம் தொடங்குகிறது;
கௌரீ விவாஹத்தை முதலில் சொல்கிறார்.

ஸ்ரீராமசரிதம் எனும் மானஸப் பொய்கையில் மூழ்குபவர்
உலகியல் தரும் வெம்மையை உணரார்.
(மானஸத்தின் இறுதியில் அமைந்த ச்லோகம்)


தேவ்

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 14, 2009, 11:34:28 AM11/14/09
to mint...@googlegroups.com

அருணாசலக் கவிராயர் வரிகளோ?

ராமநாடகக் கீர்த்தனையில் வரும் என்று நினைக்கிறேன்.  கண்டிப்பாகக் கம்பன் இல்லை.

பென்னேஸ்வரன்

N. Kannan

unread,
Nov 14, 2009, 7:08:45 PM11/14/09
to mint...@googlegroups.com
அற்புதம்!
விடிந்தால்! இது சத்சங்கம்.
”ஒருமையுடன் நின் மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்”
வாழ்க.

க.>

2009/11/15 devoo <rde...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Nov 14, 2009, 7:37:16 PM11/14/09
to mint...@googlegroups.com
இந்தகருத்துள்ள ஒரு பாடலை  வட்டார  மொழியில் பாடலாகப் பாடி ஆடும் மக்களை நேபாளம் வரையிலும் காணலாம். அருமையாக பக்திபூர்வமாய்ப் பாடுவார்கள். ராமரை ராம்போலா எனவும், சீதையை சீதாமயி எனவும் அன்போடு அழைத்து சொந்த உறவு போல் மனதார நினைத்துப் பாடி ஆடும் மக்களை இன்றும் காணமுடியும்.

2009/11/14 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Nov 14, 2009, 9:56:29 PM11/14/09
to mint...@googlegroups.com
கீதாம்மா,   தகவலுக்கு  நன்றி.    எனக்கு   ஸ்வாமினாத   ஆத்ரேயன்  தந்துள்ள    துளஸியின்   வாழ்க்கைக்  குறிப்புகளைப்  படித்தவுடன்    அழுகையும்,  ஆற்றாமையும்   போட்டு   ஆளை  அமுத்த   ஆரம்பித்துவிட்டது.   தப்பிக்க   வழி  தெரியாமல்தான்     இந்தக்  கவிதையை   எழுதினேன்.   எழுதியது    பெரிய  தவறு   என்பதுபோல்  ஆகிவிட்டது.   ஏனெனில்    துளஸி  இப்பொழுது   என்  உள்ளத்தில்    பேராக் குடியாக   வாசம்.      ‘சம்பந்தம்’    கணக்காக    ‘ஏதோ  அருள்   வந்திட்டதே’   போல    சும்மா   ராம   ராம    என்று  ஓயாது     தொணப்புகிறார்.    ஏண்டா  படித்தோம்  என்று  ஆகிவிட்டது.  
 
அந்த    வட்டாரப்   பாடல்  சொன்னீர்களே,    இதே  கருத்தில்  என்று,   தயவு  செய்து    அதைப்பற்றி   மேல்தகவல்   தாருங்களேன்.    என்னென்ன    விசித்திரம்   அம்மா    அக  உலகின்    ஆழங்கள்!! 

 

devoo

unread,
Nov 15, 2009, 12:19:05 AM11/15/09
to மின்தமிழ்
* ஸ்வாமினாத ஆத்ரேயன் *

இப்பெரியவர் ’மணிக்கொடி’ எழுத்தாளர்களின் நெருங்கிய நண்பர்.
காஞ்சி பீடாதிபதி ஜயேந்த்ர ஸரஸ்வதி அவர்களின் வடபுல யாத்திரையில்
கூட இருந்தவர்.அப்படியே துளஸீ தாஸரின் வாழ்க்கையுடன் தொடர்புள்ள
ஸூகர க்ஷேத்ரம் (ஸூஅர்),சித்ரகூடம்,திரு அயோத்தி போன்ற இடங்களுக்கும்
சென்று தகவல் சேகரித்தவர்.இதுபோலவே ஸமர்த்த ராமதாஸரின் சரித ஆவணங்களையும்
தகுதி வாய்ந்த
நபர்களின் துணையோடு திரட்டியுள்ளார்.பரனூர்ப் பெரியவரின் பெயர் சொன்னால்
மனம் நெகிழ்வார்.

தேவ்

Tthamizth Tthenee

unread,
Nov 15, 2009, 12:26:47 AM11/15/09
to mint...@googlegroups.com


15-11-09 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:

srirangammohanarangan v

unread,
Nov 15, 2009, 12:40:44 AM11/15/09
to mint...@googlegroups.com
ஸ்ரீ ஸ்வாமினாத  ஆத்ரேயன்    திருலோக  சீதாராம்  அவர்களுக்கும்   நெருங்கிய  நண்பர்.   ஆத்ரேயனின்    ‘மாணிக்க  வீணை’   ஆகிய  நூல்களை   தமது   ‘சிவாஜி’  இதழில்   விமர்சனம்  செய்திருக்கிறார்.    திருலோகம்   நடத்திக்கொண்டிருந்த     ‘தேவ  சபை’க்  கூட்டங்களில்    பெரும்பாலும்    ஆத்ரேயனும்,    கரிச்சான்  குஞ்சுவும்தான்   உபநிஷத  சுலோகங்களைப்  பதவுரை,  பொழிப்புரை   முதலியன   கூறி  உதவும்    சபா  பண்டிதர்கள்.    காலையில்    தொடங்கி   மதியம்  வரை   செல்லும்    பனுவல்  வாசிப்பு    உணவு  இடைவேளைக்குப்  பின்   பின்மாலையில்   முழுதும்    திருலோகத்தின்     உள்ள  எழுச்சி  மிக்க   பொழிவுக்கு   விடப்படும்.    பனுவல்களில்   சிக்கா   பரமார்த்தங்கள்    ஒரு  தமிழ்க்கவிஞனின்   பரவசப்    பொழிவில்    விளையாடும்.     உதாரணத்திற்கு      ஈசாவாஸ்ய  உபநிஷதம்    முதல்  மந்திரம்     ‘ஈசாவாஸ்யம்   இதம்  ஸர்வம்   யத்கிஞ்ச   ஜகத்யாஞ்   ஜகத்’   என்கிறது.     மாலையில்    பேசிய     திருலோகம்    போகிற  வாக்கில்     இந்தக்  கருத்தைத்   தொட்டுச்  செல்கிறார்.    
 
‘முன்னிற்கும்    பொருளை  இனம்  கண்டு  கொண்டால்    மூலப்பொருளை   இனம்  கண்டு  கொள்ளலாம்’     
 
அது    ஒரு  விழாக்காலம்,    ராம்போலா!!   

 

Tthamizth Tthenee

unread,
Nov 15, 2009, 12:41:30 AM11/15/09
to mint...@googlegroups.com
தப்பிக்க   வழி  தெரியாமல்தான்     இந்தக்  கவிதையை   எழுதினேன்.   எழுதியது    பெரிய  தவறு   என்பதுபோல்  ஆகிவிட்டது
 
 
 
திரு  ரங்கன் எழுதிய  கவிதையே    முன்னுரை  என்று  நினைக்கும் அளவுக்கு தரம் வாய்ந்திருக்கிறது  என்று  நினைக்கையில்
 
நம்மிடையே  வாழும் பல  அறிஞ்ஞர்களையே  நாம்  இன்னும்  சரியாகப் புரிந்து
கொள்ளவில்லை  என்னும்  உண்மையப்  போட்டு  உடைத்துவிட்டது
 
 
வால்மீகி  எழுதிய  ராமாயணம் தான்  மூலம்  என்று  இருக்கும்போது
 
அதற்குப் பிறகு  ராமாயணத்தை  அவரவர்கள் பக்தி பாவத்துக்கு  ஏற்றபடி
 
கம்பர், துளசீ தாசர்  முதற்கொண்டு  இன்றைய  மூதறிஞ்ஞர்  திரு  ராஜாஜி  வரையில்
 
யார் எழுதினாலும்  அவ்வப்போது   விவாதங்களும்  ,சர்ச்சைகளும்  நேர்ந்திருக்க வேண்டுமே
 
 
ஒரு மூலத்தை  திருத்தும்  போது  அந்த  மூலத்தை  திருத்த, அல்லது மாற்றி  எழுத  அனுமதி வாங்காமல்  அதுவும் உரியவரிடம்  அனுமதி வாங்காமல்  எப்படீ  மாற்றினர், அந்த மாற்றங்களை  எப்படி  அனுமதித்தனர்
 
 
கம்பர்  எழுதிய போதே  ஒப்புக்கொள்ள மறுத்தனர்
 
அரங்கன் கோயிலில்  மேட்டழகிய  சிங்கர்   சன்னதிக்கு எதிராக  கம்பரின்  ராமாயணம்  அரங்கேற்றப்பட்டபோது     நரசிம்மம்  சிரித்தத்து  கம்பரை  ஒப்புக்கொள்ளும் விதமாக
 
 
அப்படியானால்  மற்றவர்கள் ராமாயணத்தை  திருத்தும்போது  யார் அனுமதித்தது
 
அதற்கு விவரங்கள் உண்டா
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
15-11-09 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
கீதாம்மா,   தகவலுக்கு  நன்றி.    எனக்கு   ஸ்வாமினாத   ஆத்ரேயன்  தந்துள்ள    துளஸியின்   வாழ்க்கைக்  குறிப்புகளைப்  படித்தவுடன்    அழுகையும்,  ஆற்றாமையும்   போட்டு   ஆளை  அமுத்த   ஆரம்பித்துவிட்டது.   தப்பிக்க   வழி  தெரியாமல்தான்     இந்தக்  கவிதையை   எழுதினேன்.   எழுதியது    பெரிய  தவறு   என்பதுபோல்  ஆகிவிட்டது.   ஏனெனில்    துளஸி  இப்பொழுது   என்  உள்ளத்தில்    பேராக் குடியாக   வாசம்.      ‘சம்பந்தம்’    கணக்காக    ‘ஏதோ  அருள்   வந்திட்டதே’   போல    சும்மா   ராம   ராம    என்று  ஓயாது     தொணப்புகிறார்.    ஏண்டா  படித்தோம்  என்று  ஆகிவிட்டது.  

Hari Krishnan

unread,
Nov 15, 2009, 1:07:45 AM11/15/09
to mint...@googlegroups.com


2009/11/14 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

அருணாசலக் கவிராயர் வரிகளோ?

ராமநாடகக் கீர்த்தனையில் வரும் என்று நினைக்கிறேன்.  கண்டிப்பாகக் கம்பன் இல்லை.

பென்னேஸ்வரன்

நேதி.  அதுவும் இல்லை. ராமநாடகக் கீர்த்தனைகள், தரு, திபதை கீர்த்தனை என்ற எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்தவன் என்ற முறையில் இது ராம நாடகக் கீர்த்தனையில் வரும் விருத்தம் இல்லை என்பதைச் சொல்லக் கடன்பட்டிருக்கிறேன்.  

மறுபடியும் ஒருமுறை சொல்கிறேன்.  இந்தப் பாடல், யாப்பு இலக்கணப்படி விருத்தம்.   அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.  நான் பிரித்திருப்பது தவறு.  சுத்தமாகப் பிரித்தால் இப்படி இருக்க வேண்டும்.

விடம்கொண்ட மீனைப் போலும் 
.........வெந்தழல் மெழுகு போலும் 
படம்கொண்ட பாந்தள் வாயிற் 
.........பற்றிய தேரை போலும் 
திடம்கொண்ட இராம பாணம் 
.........செருக்களத் துற்ற போது 
கடன்கொண்டார் நெஞ்சம் போலக் 
.........கலங்கினான் இலங்கை வேந்தன். 

அருணாசல கவிராயரின் ராம நாடக கீர்த்தனைகளில் தரு, திபதை போன்ற அமைப்புகளும் கீர்த்தனை வடிவங்களும் உள்ளன.  விருத்த அமைப்பில் உள்ளவை வெகு சிலவே.  ஆகவே, யாப்பியல் வடிவத்தாலேயே இது ராம நாடகக் கீர்த்தனை இல்லை என்று சொல்லிவிடலாம்.

தனிப்பாடல் திரட்டு என்பது எனக்குத் தெரியும்.  தனிப்பாடல் திரட்டு என்பது பற்பல புலவர்கள் இயற்றி, பிற்காலத்தில் யாரோ தொகுத்து வைத்த தொகுதி.  (திரு பென்னேஸ்வரன், இந்த விவரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  இதை உங்களுக்குச் சொல்லவில்லை.  மிகுந்த எச்சரிக்கையுடன் உங்களுடைய பெயர்கொண்டு அழைப்பதைத் தவிர்த்துவிட்டு எழுதுகிறேன்.  மடற்குழுக்களில் ஒருவருடைய பெயரால் விளித்துவிட்டு, அவருக்குத் தொடர்பில்லாத பொதுவான விஷயங்களையும் சேர்த்து எழுதுவது ஆதிகால வழக்கம்தான்.  ‘எது தனக்கான பகுதி, எது தனக்குத் தொடர்பில்லாதது’ என்று பொதுவாக எல்லோருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவதால், உங்களிடம் முன்னதாகவே மன்னிப்புக் கேட்டுக்கொண்டுவிடுகிறேன்.:-)))

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட தனிப்பாடல் திரட்டில் இந்தப் பாடல் இருப்பதாகச் சொன்னவர் அதற்குப் பிறகு பேசவே இல்லை.  கொஞ்சம் பார்த்துச் சொனாரானால் நன்றியுடையவனாக இருப்பேன்.  

devoo

unread,
Nov 15, 2009, 2:18:56 AM11/15/09
to மின்தமிழ்
Nov 15, 10:40 am, srirangammohanarangan v

>> முன்னிற்கும் பொருளை இனம் கண்டு கொண்டால் மூலப்பொருளை இனம் கண்டு
கொள்ளலாம் <<

இது மெய்யியல் கூறும் அரிய கருத்து.ஆனால் நூலாராய்ச்சி சற்று மாறானது.
மூலப் பொருளை இனம் கண்டு கொண்டால்தான் முன்னிற்கும் பொருளை இனம் காண
முடிகிறது.
தொன்மை வாய்ந்த ஒரு நூலை விமர்சிக்குமுன் அதன் ஆசிரியரின் உள்ளக்
கருத்தையும், நூல் எழுந்த சூழலையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பார்
ஆத்ரேயர்;அது நூலை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். ஆனால் எல்லா
நூல்களுக்கும் இம்முறை சாத்தியப் படாது; ஆகவே முழுமையாகப் புரிந்து
கொள்ளும் வாய்ப்பில்லாத சூழ்நிலையில் நூல் திறனாய்வில் மிகவும் கவனமாக
இருக்க வேண்டும் என்றும் கூறுவார்.வெறும் மொழிப்புலமை மட்டும் போதாது.

>> அது ஒரு விழாக்காலம் <<

திருலோக சீதாராம் அவர்களின் ’இலக்கியப் படகுகள்’ தொடரைப் பற்றியும்
நீங்கள் எழுதலாம்; ப்லவோத்ஸவம் தொடங்கினால் மின்னரங்கம் விழாக்கோலம்
பூணும்.இது பற்றியும் ஆத்ரேயர் ஒருமுறை கூறிய நினைவு.

தேவ்

Reply all
Reply to author
Forward
0 new messages