அன்பு நண்பர் கண்ணனுக்கு, வணக்கங்கள். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அன்பு நண்பருக்குப் பல்லாண்டு அறிவியல் அறிஞருக்குப் பல்லாண்டு இணையத் தமிழ் வல்லுநர்க்குப் பல்லாண்டு பழந்தமிழ் போற்றுவோர்க்குப் பல்லாண்டு புதுவன புனைவோர்க்குப் பல்லாண்டு கருத்து வேற்றுமையை மதிப்பவர்க்குப் பல்லாண்டு வாழ்த்துகள். அன்புடன், மறைமலை இலக்குவனார் Please have a glance of my sites below. |
இவ்வாழ்த்துக்களையெல்லாம் அறிஞர் பெருமக்களிடமிருந்து பெற என்ன பாக்யம் செய்தேன்.
பல்லாண்டு, பல்லாண்டு என்று அன்று வாழ்த்திய பிள்ளைத்தமிழ் கவிஞன்
விட்டுசித்தன் என்ன பெறும் பேற்றை நமக்கு அள்ளித்தந்துவிட்டுப்
போயிருக்கிறான்.
நம் மரபு போற்றுதும்! நம் மரபு போற்றுதும்.
வாழ்க!
கண்ணன்
2009/11/8 maraimalai <marai...@yahoo.com>
இம்மையே ராமா என்று இரண்டு எழுத்தினால்//
கம்பர்
பிள்ளை மொழியோ அது, கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ
முத்து சிரிப்போ அது, முல்லை விரிப்போ
நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோ!
கண்ணன் பிறந்தார், எங்கள் அண்ணன் பிறந்தார்
(மின்)தமிழுக்கு புது மண(ன)ம் பிறந்ததம்மா
அண்ணன் பிறந்தார், எங்கள் அண்ணன் பிறந்தார்
"தமிழ் மரபு விக்கி" மின் நிலம் மலர்ந்ததம்மா:-))
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
வாழ்த்துகளுடன்,
அண்ணாகண்ணன்.
நன்றி, தாங்களும் கண்ணனே!
க.>
சுபாவை தாங்கள் இன்கவியால் வாழ்த்திய பிறகு, ஒரு சின்ன சபலம் ;-)
இன்று தீர்ந்தது ;-)
க.>
முனைவர் கண்ணனெனும்
மூதறிஞர் இவ்வுலகில்
இன்னுமோர் நூற்றாண்டு
இனிதிருந்து தமிழ் வளர்த்து
மாயவன் கண்ண னவன்
மாவருளால் வளம் பெற்று
பல நூறு தமிழ் நூல்கள்
பாங்குடனே காத்தவைக்கு
சாவாநல் வரமளித்து
சரித்திரம் படைத்தருள
மின்தமிழர் யாம்கூடி
இன்தமிழால் வாழ்த்துகிறோம் !
முனைவர் தி.க.திருவேங்கடமணி
அடேங்கப்பா! ஆதங்கமெல்லாம் போயிடுச்சுங்க ;-))
நன்றி, நன்றி.
க.>
2009/11/8 shylaja <shyl...@gmail.com>:
க.>