இன்னம்பூரான் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார் 🌼🙏🌼

89 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 16, 2022, 10:29:58 PM1/16/22
to mintamil

innambooran.jpg
           🌼🙏🌼
இன்னம்பூரான் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார் 
என்ற செய்தி சற்றுமுன் கிடைத்துள்ளது 
மின்தமிழில் பெரும்பங்காற்றியவர் 
பலரின் அன்பிற்குரியவர் அவர் 
ஆழ்ந்த இரங்கல்

---------- Forwarded message ---------
From: K R A Narasiah <naras...@gmail.com>
Date: Sun, Jan 16, 2022 at 7:17 PM
Subject: I namburan
To: Themozhi <tsj...@gmail.com>, Jothi Themozhi <them...@yahoo.com>, Subashini Tremmel <ksuba...@gmail.com>, Madhumitha's Manoranjidha Vaasam <madhumi...@gmail.com>, coral shree <cor...@gmail.com>, Oru Arizonan <oruar...@gmail.com>, Narayanan Kannan <nka...@gmail.com>, Para Sundha <paras...@gmail.com>, Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

It is great shock and total disbelief I saw the obituary of Sri Innamburan on Saturday. He was a great friend and close associate of me and took active part in all THF actions. 
May his soul rest in peace.
Tearfully
Narasiah

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 16, 2022, 11:38:08 PM1/16/22
to mintamil
ஆழ்ந்த இரங்கல். :(

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAANG%3DbQ0fKRwYxeiqXqqsNx0v8h%2BXA2cA_ZYAc_0VrffXNc2kg%40mail.gmail.com.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் அனைத்து உயிரிலும் இறைவனை
உண்மையாய்க் காண்கிறார் மூலர் - அதைப்போல்
உலகின் அனைத்து மொழிகளின் வேர்களில்
உன்னையே காண்கிறேன் தமிழே !!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 16, 2022, 11:57:41 PM1/16/22
to mintamil
innamburan.jpg
மின்தமிழ் வழியாக எனக்கு கிடைத்த நல்லாசிரியர்.  வழிகாட்டி.  பர்மாவிலிருந்து எனது தந்தையார் தாய்நாடு திரும்பியகதையை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தியவர்...... இன்னும் பல...... சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

அனைவரையும் தன் சொந்த உறவினராகப் பாவித்தவர்.
ஒவ்வொரு மாணவரையும் ஒரு IAS IPS  அதிகாரியாக ஆக்கிவிட வேண்டும் என்று முயன்றவர்.
தனது உடலின் ஒரு பகுதியையும், தனது பொருளின்  பெரும்பகுதியையும் தானமாக வழங்கியவர்.
கடந்த 19 டிசம்பர் 2021 அன்று தொலைபேசியில் பேசினேன்.  சென்னை வரும்போது வந்து சந்திக்கும்படியும் கூறினார்.
தனது வாழ்க்கைமுடிவை முன்கூட்டியே கணித்து வைத்திருந்தார்.

அவரது  மகனுக்கும் மகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்
கி. காளைராசன்

Mohanarangan V Srirangam

unread,
Jan 17, 2022, 12:26:06 AM1/17/22
to min tamil
மின் தமிழ் மூலமாகக் கிடைத்த நல்ல நட்புகள் பல. அவற்றில் ஒருவர் இன்னம்பூரார். 
குழுமத்திலும் சரி, நேரிலும் சரி உரையாடுவதில் மிக உற்சாகம் காட்டுபவர். 
அவரிடம் பேசும் போது நமக்கு வயது குறைந்தது போன்று தெரியும். 
மிகவும் மனம் வேதனைப்படுகிறது. 
இழப்புகள் இல்லாத ஒரு காலத்தை, இடத்தை நம்பிக்கையாகவேனும் 
மனம் நாடுகிறது. பிரார்த்தனைகள். 

***

Iraamaki

unread,
Jan 17, 2022, 12:30:23 AM1/17/22
to mint...@googlegroups.com
ஆழ்ந்த இரங்கல்.
 
வருத்தத்துடன்.
இராம,கி,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
innamburan.jpg
innambooran.jpg

தேமொழி

unread,
Jan 17, 2022, 2:07:48 AM1/17/22
to மின்தமிழ்
Innamburan S.Soundararajan.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை யின் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்ட தமிழறிஞர் இன்னம்பூரான் சௌந்தரராஜன் (1933-2022).  தமது 88 ஆவது வயதில் 15/01/2022 அன்று மறைந்தார்.  

அவரும் நானும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் (2013) நடைபெற்ற கணினித்தமிழ் பயிலரங்கில் ஒன்றாகப் பங்கேற்றோம். வகுப்பிலேயே வயதாலும் மூத்தவர் அவர். எப்போதும் ஆப்பிள் நிறுவனத்தின் கணினியைப் பயன்படுத்துபவர்! இறுதிவரை கணினித்தமிழ்ப் பயன்பாட்டிற்காக உழைத்தவர். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய 'தி இந்து' (ஆங்கிலம்) விளம்பரம் இது.

-- இரா.குமரகுருபரன்
#whatsappshare

Pandiyaraja Paramasivam

unread,
Jan 17, 2022, 2:12:21 AM1/17/22
to mint...@googlegroups.com
இன்னம்பூரான் ஐயா அவர்கள் மின் தமிழ் மூலம் எனக்குக் கிடைத்த மிக அருமையான, இனிய நண்பர். வயது வித்தியாசம் பார்க்காமல் எனது வீட்டுக்கே என்னைப் பார்க்க வந்திருந்தார். என் மனைவியின் விருந்தோம்பலை மிகவும் ரசித்துச் சொன்னார். எனது எழுத்துக்களையும் மிக மிகப் பாராட்டுவார். அவரை மீண்டும் காரைக்குடியில் கம்பன் விழாவிலும்,  சென்னையில் தினமணி விழாவிலும் சந்திக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அவரது பிரிவு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. 
ப.பாண்டியராஜா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dr.K.Subashini

unread,
Jan 17, 2022, 3:31:13 AM1/17/22
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நீண்ட கால உறுப்பினர்களுள் ஒருவரான திரு.இன்னம்பூரான் அவர்கள் கடந்த சனிக்கிழமை காலமானார் என்ற துயரச் செய்தி இன்று காலை தான் கிட்டியது.

2007ஆம் ஆண்டு முதல் என்னுடன் தொடர்பில் இருப்பவர். இணையவழி தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளைப் பற்றி அறிந்து கொண்டு லண்டனில் தனது மகனில் இல்லத்திலிருந்து என்னைத் தொடர்பு கொண்டார். தமிழ்நாடு, அமெரிக்கா, இங்கிலாந்து எனப் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திரு.வி.க பற்றி அதிகமாக உரையாடுவோம். மிகுந்த ஆர்வத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நிகழ்ச்சிகளிலும் மின்னாக்கப் பணிகளும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழகத்தில் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து செயல்பாடுகளை கவனித்துக் கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று காலம் வரை அதாவது 2015 முதல் 2019 வரை மிகுந்த ஈடுபாட்டுடன் சென்னையில் பெரம்பூரில் ஒரு தனியார் அமைப்பின் ஏற்பாட்டில் பெரம்பூர், ராயபுரம் , தொண்டையார்பேட்டை, மாதவரம், கொடுங்கையூர் ஆகிய வட சென்னை பகுதியில் வசிக்கும் இளம் பெண்களுக்கு கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை, கல்வி மேம்பாட்டு வளப்பயிற்சிகளை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வழங்கி வந்தார். என்னை அழைத்து அங்கு வந்து அம்மாணவியருடன் பேசச்சொல்வார்.

காலையில் அவர் மகனிடம் உரையாடியபோது தனது உடலை தமிழ்நாட்டில் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு வழங்கிவிடும்படி அவர் ஏற்பாடு செய்திருக்கின்றார் என்பது தெரிந்தது. சாத்திர சம்பிரதாயங்கள் அற்று, சாதியை ஒதுக்கி, அறிவியல் பூர்வமான ஒரு வாழ்க்கையாக, அறிவியலுக்கும் மானுடதுக்கும் உதவும் ஒரு வாழ்க்கையாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகை இன்னம்பூரான் என தன் ஊரின் பெயரை தனக்குப் பெயராகச் சூட்டிக் கொண்ட திரு சௌந்தரராஜன் அவர்கள்.

அவர் இறுதிக் காலத்திலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். தன் அம்மாவின் வாழ்க்கைக் குறிப்பை நூலாகக் கொண்டு வரவேண்டும் என விரும்பினார். முன்னர் அதனை எனக்குத் தெரிவித்திருந்தார். இதனை அவர் மகன் ஜெகதீஷ் இன்று காலை தெரிவித்தார். அதனை நூலாகக் கொண்டு வந்து வெளியிட உதவுவதாகக் கூறியிருக்கின்றேன்.
திரு.இன்னம்பூரான் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றில் இடம் வகிப்பவர். அவரது நினைவுகள் எங்கள் மனதில் என்றென்றும் நிறைந்திருக்கும். அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.
திரு.இன்னம்பூரான் அவர்களுக்கு என் அஞ்சலி.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

P1050668.JPG
2009ஆம் ஆண்டு சென்னையில்

61726435_2432878143622235_4984350095794241536_n.jpg

61752462_2432878706955512_1746337426290245632_n.jpg

61523635_2432878613622188_2857426013858562048_n.jpg
பெரம்பூர் மாணவியருடன்

15747388_1887823458127709_5078017570705801123_n.jpg
சென்னையில் 2018ஆம் ஆண்டு.. தமிழிசை விழாவில்.. இராமகி அவர்களும் உடன் இருக்கின்றார்.

Parthasarathy S

unread,
Jan 17, 2022, 3:49:15 AM1/17/22
to mint...@googlegroups.com
அனைவருடனும் அன்போடும் இனிமையோடும் பழகும் இயல்புடையவர். நேரு போன்ற தலைவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் நிறைந்த அவரது பதிவுகள் என்றும் மறக்க முடியாதவை. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்த்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்,
அன்புடன்,
சே.பார்த்தசாரதி

Smt Mythili Narayanan

unread,
Jan 17, 2022, 5:23:53 AM1/17/22
to mint...@googlegroups.com
போனவாரம்  தான் திடீரென  இசாரிடமிருந்து   மெயில்வந்தது , என் சமையல்  புக்கை  அனுப்பச்சொல்லிக்   கேட்டு  நலம்விசாரித்து  எழுதினார்! நானும்  மின்  தமிழ்க்குழுமத்தில்  நாம்  அனைவரும்  ஒருகாலத்தில்  கருத்துப்பரிமாற்றம்  செய்து  மகிழ்ந்த  நாட்களை  அசை  போடுகிறேன்  என  பதில்  போட்டேன்!  அவரவர்  வாழ்க்கையில்  ஆயிரமாயிரம்  மாற்றங்கள்! ஆனால்  இசாரின்  இழப்பைத்  தாங்க  சக்தியே  இல்லை!  சீதாம்மா  மோகனரங்கனுடன்  அவர் இல்லம்சென்றது, பேசியது.,,,, எதை  மறப்பது! அப்பாவை  மறுபடி  இழந்து  விட்டேன்.

--
Sent from Gmail Mobile

Gowri Vimalendran

unread,
Jan 17, 2022, 6:04:44 AM1/17/22
to mint...@googlegroups.com
ஓம் சாந்தி். 
ஆழ்ந்த இரங்கல்கள் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Sent from my iPad

On 17 Jan 2022, at 15:53, Smt Mythili Narayanan <shyl...@gmail.com> wrote:

போனவாரம்  தான் திடீரென  இசாரிடமிருந்து   மெயில்வந்தது , என் சமையல்  புக்கை  அனுப்பச்சொல்லிக்   கேட்டு  நலம்விசாரித்து  எழுதினார்! நானும்  மின்  தமிழ்க்குழுமத்தில்  நாம்  அனைவரும்  ஒருகாலத்தில்  கருத்துப்பரிமாற்றம்  செய்து  மகிழ்ந்த  நாட்களை  அசை  போடுகிறேன்  என  பதில்  போட்டேன்!  அவரவர்  வாழ்க்கையில்  ஆயிரமாயிரம்  மாற்றங்கள்! ஆனால்  இசாரின்  இழப்பைத்  தாங்க  சக்தியே  இல்லை!  சீதாம்மா  மோகனரங்கனுடன்  அவர் இல்லம்சென்றது, பேசியது.,,,, எதை  மறப்பது! அப்பாவை  மறுபடி  இழந்து  விட்டேன்.
On Mon, Jan 17, 2022 at 2:19 PM Parthasarathy S <spsar...@gmail.com> wrote:
அனைவருடனும் அன்போடும் இனிமையோடும் பழகும் இயல்புடையவர். நேரு போன்ற தலைவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் நிறைந்த அவரது பதிவுகள் என்றும் மறக்க முடியாதவை. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்த்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்,
அன்புடன்,
சே.பார்த்தசாரதி

On Mon, Jan 17, 2022 at 2:01 PM Dr.K.Subashini <ksuba...@gmail.com> wrote:
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நீண்ட கால உறுப்பினர்களுள் ஒருவரான திரு.இன்னம்பூரான் அவர்கள் கடந்த சனிக்கிழமை காலமானார் என்ற துயரச் செய்தி இன்று காலை தான் கிட்டியது.

2007ஆம் ஆண்டு முதல் என்னுடன் தொடர்பில் இருப்பவர். இணையவழி தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளைப் பற்றி அறிந்து கொண்டு லண்டனில் தனது மகனில் இல்லத்திலிருந்து என்னைத் தொடர்பு கொண்டார். தமிழ்நாடு, அமெரிக்கா, இங்கிலாந்து எனப் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திரு.வி.க பற்றி அதிகமாக உரையாடுவோம். மிகுந்த ஆர்வத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நிகழ்ச்சிகளிலும் மின்னாக்கப் பணிகளும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழகத்தில் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து செயல்பாடுகளை கவனித்துக் கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று காலம் வரை அதாவது 2015 முதல் 2019 வரை மிகுந்த ஈடுபாட்டுடன் சென்னையில் பெரம்பூரில் ஒரு தனியார் அமைப்பின் ஏற்பாட்டில் பெரம்பூர், ராயபுரம் , தொண்டையார்பேட்டை, மாதவரம், கொடுங்கையூர் ஆகிய வட சென்னை பகுதியில் வசிக்கும் இளம் பெண்களுக்கு கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை, கல்வி மேம்பாட்டு வளப்பயிற்சிகளை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வழங்கி வந்தார். என்னை அழைத்து அங்கு வந்து அம்மாணவியருடன் பேசச்சொல்வார்.

காலையில் அவர் மகனிடம் உரையாடியபோது தனது உடலை தமிழ்நாட்டில் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு வழங்கிவிடும்படி அவர் ஏற்பாடு செய்திருக்கின்றார் என்பது தெரிந்தது. சாத்திர சம்பிரதாயங்கள் அற்று, சாதியை ஒதுக்கி, அறிவியல் பூர்வமான ஒரு வாழ்க்கையாக, அறிவியலுக்கும் மானுடதுக்கும் உதவும் ஒரு வாழ்க்கையாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகை இன்னம்பூரான் என தன் ஊரின் பெயரை தனக்குப் பெயராகச் சூட்டிக் கொண்ட திரு சௌந்தரராஜன் அவர்கள்.

அவர் இறுதிக் காலத்திலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். தன் அம்மாவின் வாழ்க்கைக் குறிப்பை நூலாகக் கொண்டு வரவேண்டும் என விரும்பினார். முன்னர் அதனை எனக்குத் தெரிவித்திருந்தார். இதனை அவர் மகன் ஜெகதீஷ் இன்று காலை தெரிவித்தார். அதனை நூலாகக் கொண்டு வந்து வெளியிட உதவுவதாகக் கூறியிருக்கின்றேன்.
திரு.இன்னம்பூரான் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றில் இடம் வகிப்பவர். அவரது நினைவுகள் எங்கள் மனதில் என்றென்றும் நிறைந்திருக்கும். அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.
திரு.இன்னம்பூரான் அவர்களுக்கு என் அஞ்சலி.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

<P1050668.JPG>

2009ஆம் ஆண்டு சென்னையில்

<61726435_2432878143622235_4984350095794241536_n.jpg>

<61752462_2432878706955512_1746337426290245632_n.jpg>

<61523635_2432878613622188_2857426013858562048_n.jpg>

பெரம்பூர் மாணவியருடன்

சக்திவேலு கந்தசாமி

unread,
Jan 17, 2022, 7:23:01 AM1/17/22
to mint...@googlegroups.com
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளுகிறேந்.

On Mon, Jan 17, 2022 at 2:01 PM Dr.K.Subashini <ksuba...@gmail.com> wrote:

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 17, 2022, 12:04:30 PM1/17/22
to mintamil
சிறந்த மனிதர் திரு இன்னம்பூரன் சார்.  நல்லறிஞர். ஆர்வத்துடன் குழு உரையாடலில் பங்கெடுப்பவர். பதிவுகளில் பரஸ்பர மதிப்புப் பாராட்டி எழுதுபவர். பல விடயங்கலிலும் ஆழ்ந்த புரிதலுடன் செய்திகளைப் பகிர்ந்துகொள்பவர்..
அழகப்பா பல்கலைகழகத்தில் உரை ஆற்றியுள்ளார். 4, 5 ஆண்டுகளுக்கு முன்னர் காரைகுடி கம்பன் கழக விழாவில் மூன்ன்று நாட்கள் காரைக்குடியில் தங்கியிருந்து பங்கேற்றார். உடன் கழித்த பொழுதுகள் மறக்க முடியாதவை. பழகுதற்குக் குழந்தை போல எளியவர்.  திரு காளைராசன் இல்லத்தில் அன்புடன் தங்கியிருந்தார்..அண்மையில் திரு மோகனரங்கன் இழையில் எழுதியிருந்தார். விசாரித்திருந்தார், 
ஒரு கிட்னி தானமளித்து மற்றொரு கிட்னியுடன் நெடிய நாள் வாழ்ந்திருந்து உறுப்புக் கொடைக்கு வழிகாட்டியவர்..
இன்று அவர் தன்னுடைய உடலையே மருத்துவ மாணவர் கற்றுக்கொள்ள உதவியுள்ளார் என்று நினைக்கும்போது மனம் நெகிழ்கிறது.

சொ.வினைதீர்த்தான்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Reply all
Reply to author
Forward
0 new messages