மாலைமுரசு செய்தி

3,145 views
Skip to first unread message

Neduchezhian T. Chezhian

unread,
Aug 23, 2012, 10:43:41 AM8/23/12
to minT...@googlegroups.com, thami...@googlegroups.com, kalaiguna, DURAI ARASAN, ப டேவிட் பிரபாகர்
மாலைமுரசு நாளிதழில் வந்த செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.
-முனைவர் தி.நெ.

--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
malaimurasu.jpg

Geetha Sambasivam

unread,
Aug 23, 2012, 9:17:44 PM8/23/12
to mint...@googlegroups.com
வருத்தமான செய்தி. காலை வேளையின் மனம் கனக்கச் செய்து விட்டது.

2012/8/23 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Aug 23, 2012, 10:04:05 PM8/23/12
to mint...@googlegroups.com
நானும் இச்செய்தி வெளியானதை நேற்று தான்  அறிந்தேன். முந்தாநாள் செய்தித்தாள் என்பாதால் என்னால் அதை கடைகளில் வாங்கிப் படிக்க முடியாத நிலை. இன்று நீர் அதை படிக்கும்படியாக இங்கு அதன் படத்தை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!

சேசாத்திரி    

2012/8/23 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>
மாலைமுரசு நாளிதழில் வந்த செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன். - முனைவர் தி.நெ.

N. Kannan

unread,
Aug 24, 2012, 4:14:50 AM8/24/12
to mint...@googlegroups.com
இச்சேதியை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் சில சிக்கல்கள் உள்ளன.
காரணங்களை விளக்குகிறேன்.

மடலாடற்குழு என்பதைப் பற்றிய சரியான புரிதல் இன்னும் தமிழரிடம்
உருவாகவில்லை என்பதையே இது காட்டுகிறது. மடலாடற்குழுக்களின் இயக்கம்
என்பது எழுதுவோரின் எண்ணவோட்டத்தைச் சாந்துள்ளது. இங்கு வெளிவரும்
ஒவ்வொரு கருத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்து என்று சிறுகுழந்தை
கூட எண்ணாது. இதே மாலைமுரசு பல்வேறு வகையான சேதிகளை வெளியிடுகிறது.
அவையெல்லாம் மாலைமுரசு நிர்வாகத்தின் நோக்கமென்று யாரேனும் கொள்வாருண்டோ?

வ.கொ.விக்கு நான் பரிவு காட்டுகிறேன் என்றொரு குற்றச்சாட்டு. நான்
வ.கொ.வியை பார்த்தது இல்லை, பழகியதில்லை. என் எண்ணப்போக்கோடு அவர்
என்றும் ஒத்துப்போனதுமில்லை. அதற்காக அவரை நான் குழுமத்திலிருந்து விலக்க
வேண்டுமென்ற அவசியமில்லை. கருத்துக்களமாகிய ஒரு மடலாடகுழுவில் வகொவி ஒரு
கருத்து, அவ்வளவுதான்.

அவரை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள்? என்றொரு கேள்வி. குடியாட்சி முறையில்
மாற்றுக்கருத்துக்களை ஏற்கும் பக்குவம் வரவேண்டும். விமர்சனங்களை
இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி வேண்டும். அவர் தமிழகத்தில்
வாழவில்லை. வெளிநாட்டிலிருந்து அவர் தமிழ் உலகைக் கண்டு சில மாற்றங்கள்
அவசியம் என்கிறார். உதாரணமாக, தமிழர்களுக்கு அடைமொழியிலேயே பேசும்
வழக்கமுள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்பெயரால் அழைப்பது அவமானப்படுத்துதல் ஆகாது. நாம் அறிஞர் அண்ணா என்று
அன்புடன் அழைத்தாலும் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு டாக்டர்
பட்டம் பெறும் போது அவரை வெறுமே திரு.அண்ணாதுரை என்றே அழைத்து
பட்டாளித்திருப்பர். அது அவமானமாகாது.

வகொவி தன் கருத்து நிலைப்பாட்டை விளக்கியுள்ளார், அதற்கு பதிலளிக்கும்
பொறுமை நமக்கு உண்டு, அதை விடுத்து அவர் வாயை மூடுங்கள் என்பது என்ன
நாகரீகமென்று புரியவில்லை.

பாவாணர் பற்றிய மிக உயர்ந்த கருத்துக்களும் மின்தமிழில் வந்துள்ளது.
அதைக் காணாமல் வேண்டுமென்றே இப்படியொரு வதந்தியைப் பரப்புவது
இச்செயலுக்குப் பின் எம் மீது காழ்ப்புக் கொண்டு சிலர் செயல்படுகின்றனர்
என்பதையே காட்டுகிறது.

டெக்கினிகலாக சில விசயங்கள்.

மின்தமிழில் வரும் ஒவ்வொரு கருத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின்
கருத்தென்று கொள்ளுதல் தவறு. தமிழ் மரபு அறக்கட்டளை என்பது சர்வதேச
இயக்கம். அது அரசு சாரா, கட்சி சாரா தொண்டூழிய இயக்கம். 11 ஆண்டுகளாக
எவ்வித சுயநலமும் இல்லாது செயல்பட்டு வரும் ஒரு நல்லியக்கமாகும். யாரோ
ஒரு வகொவி சொல்கிறார் என்பதற்காக தமிழ் மரபு அறக்கட்டளையின் இயக்கத்தை
முடக்க வேண்டுமென அறிஞர்கள் ஒரு அரசிடம் முறையிடுவது தமிழ் வளர்ச்சியைத்
தடைசெய்யக் கோருவதற்குச் சமம்.

மேலும் மின்தமிழ் தளம் என்பது கூகுள் தளம். அதைத்தடை செய்ய ஒரு அரசிடம்
கூறமுடியாது. அது நமது அடிப்படை உரிமையான பேச்சு, எழுத்து சுதந்திரத்தை
தடை செய் என்று சொல்வது போன்றது. நாளை மின்தமிழ் மூடப்பட்டால் வேறொரு
தளத்தில் வகொவி எழுதுவார். யாரால் தடை செய்யவியலும்? தமிழில் எழுதாதே
என்றால் ஆங்கிலத்தில் எழுதுவார், இல்லை ஜெர்மனில் எழுதுவார். யார் தடை
செய்யவியலும்? நமக்கு கருத்தைக் கருத்தாகக் கொண்டு ஆரோக்கியமாக வாதாடத்
தெரிய வேண்டும். தெரியவில்லை எனில் இதையொரு வாய்ப்பாகக் கொண்டு
கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு இயையாத கருத்துக்கள் வந்தால் வாயைமூடு
என்று சொல்வது வன்முறையாகும். இதைக் கற்றறிந்தோர் செய்யலாகுமா?

ஒருவகையில் நாம் இவர்களுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம். தமிழ் மரபு
அறக்கட்டளை பற்றி யாரும் இவான்சலிசம் செய்வதில்லை என்ற வருத்தமுண்டு.
இப்போது தமிழக அளவில் எம் இயக்கம் பற்றிய கவன ஈர்ப்பு செய்துள்ளனர்.
நன்றி. முகநூலில் பலர் மின் தமிழை பகீஷ்கரிக்குமாறு விளம்பரம்
செய்துவருகின்றனர். அவர்களுக்கும் நன்றி. மின்தமிழ் என்றொரு குழு
இருப்பதை இதுவரை அறியாதோர் இனி அறிந்து கொள்ள ஒரு
வாய்ப்பளித்துள்ளீர்கள்.

நாம் தனியாக இல்லை என்ற நல்ல உணர்வைத்தந்துள்ளார்கள். மின்தமிழ் கவனமாக
படிக்கப்படுகிறது என்ற் தெரிகிறது, இப்பதிலையும் சேர்த்து. அதற்கும்
நன்றி.


//
சமீபத்தில் (22.08.2012) மாலைமுரசு சென்னைப்பதிப்பில் வெளிவந்த
“தமிழறிஞர்களை இழிவுபடுத்தும் வலைத்தளத்தை தடை செய்ய வேண்டும்” எனும்
சேதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச
கழகம், வேண்டுமென்றே தங்களது சேவையைக் கொச்சபடுத்தும் நோக்கில் இச்செய்தி
வெளியிட்டு இருப்பதாக மறுப்பு தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 11 ஆண்டுகளாக
அமைதியாக தமிழ்ப்பணி ஆற்றிவரும் தன்னார்வக்குழு தமிழ் மரபு
அறக்கட்டளையாகும். அதன் முக்கிய நோக்கம் மறைந்து வரும் தமிழ் வளங்களை
மின்னாக்கம் செய்து இனி வரும் சந்ததியினருக்காக நிரந்தரப்படுத்துவதாகும்.
இப்பணியின் துணைச்சேவையாக ‘மின்தமிழ்’ எனும் மடலாடற்குழு கூகுள் தளத்தில்
இயங்கி வருகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆக்கங்களை வெளியிடும்
முகப்பாக இம்மடலாற்குழு செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இயங்கும்
தமிழறிஞர்கள் தொடர்ந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டுவரும் குழுவாக இது
இயங்கி வருகிறது. இன்று 22 நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்களின்
தேவைகளையொட்டி இக்குழு செயல்படுகிறது. கீழே குறிப்பிடப்பட்டிருக்கும்
சேதி முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக இதன் சர்வதேச
இயக்குநர்கள் கருதுகின்றனர். மின்தமிழ் எனும் குழு தமிழர்களின்
பேச்சு,எழுத்து சுதந்திரத்தை மதித்து, மிகக்குறைவாக மட்டுறுத்தப்பட்டு
செயல்பட்டு வரும் குழுவாகும். உலக அளவில் தமிழ் மதிக்கப்பட வேண்டுமெனில்
உலகின் தரத்திற்கு இருக்க வேண்டும் எனும் நல்ல எண்ணத்தில்
செயல்பட்டுவருகிறது. வடவேங்கடம், தென்குமரிக்கு இடைப்பட்ட பரப்பு மட்டும்
தமிழ் உலகமல்ல, அதன் சமகால இருப்பு உலகளவில் இருக்கிறது. மின்தமிழில்
பேசப்படும் கருத்துக்கள் முழுக்க, முழுக்க எழுதியவரையே சேரும். மாலைமுரசு
குறிப்பிடும்படி தமிழ் மரபு அறக்கட்டளைக்கு எந்தத்தமிழ் அறிஞரையும்
இழிவுபடுத்தும் நோக்கம்கிடையாது. பாவாணரின் இலக்கண, வேர்ச்சொல் ஆய்வின்
சிறப்பு பற்றி இதே குழுவில் உயர்வாக பேசப்பட்ட விஷயங்களை மறைத்து,
விமர்சனம் செய்த ஒருவரின் கருத்தையே தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்து
என்பது போல் திரித்துக்காட்டுவதை இக்குழு வன்மையாகக் கண்டிருக்கிறது.

மேலும் இச்சேதி கூறுவதுபோல் எவ்வித சர்வதேச சதியும் இதன் பின்னால் இல்லை.
இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நன்மதிப்பைப்
பெற்றதும், தமிழ் செம்மொழி ஆவதற்குப் பாடுபட்ட பேராசிரியர் ஜியார்ஜ்
ஹார்ட் போன்ற அயல்நாட்டு அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றும்
இயங்கிவரும் தொண்டூழிய இயக்கமாகும் இது. பேரா.ழான் லூக் போன்ற பல
வெளிநாட்டு ஆய்வாளர்கள் மின்தமிழின் தரம் கண்டு பாராட்டுத் தெரிவித்து
உள்ளனர்.

மடலாடற்குழுவின் செயல்பாடு என்பது ஒரு பத்திரிக்கை போன்றோ, அல்லது
வலைத்தளம் போன்றோ, வலைப்பக்கங்கள் போன்றோ இயங்குவது அல்ல. மடலாடற்குழு
என்பதன் நடை அதில் சிந்தனை பகிர்வோரின் பங்களிப்பைப்பொறுத்தே அமையும்.
அவ்வகையில், பாவாணர் குறித்து அக்கறை கொள்ளும் பெரியவர்கள், அச்சேதியில்
குறிப்பிடப்பட்டிருக்கும் தனிமனிதரிடம் கேள்வி கேட்டு தம் குறைகளை
நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமே ஒழிய, ஒரு மின்னாடற்குழுவையே தடை செய்ய
வேண்டும் என்று கோருவது முறையல்ல.

ஏனெனில் 11 வருட கடின உழைப்பில் நிற்கும் இச்சர்வதேச இயக்கத்தின் பிற
ஆக்கபூர்வமான செயல்களைத் தடை செய்யக்கோருவது தற்கொலைக்குச் சமமாகும்
என்று தமிழ் கூறும் நல்லுலகின் அறிஞர்கள் கருதுகின்றனர். இப்படிக்கோருவது
தமிழரின் அடிப்படை
சுதந்திரத்தை பறிப்பதற்கு ஒப்பாகும். மாலைமுரசு சேதியில்
குறிப்பிடப்படும் நபரின் கருத்து, அவரின் தனிப்பட்ட கருத்தாகும்.
இதற்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
குழந்தை அழுவதற்காக யாரும் தொட்டிலோடு குழந்தையை எறிவதில்லை என்று இந்த
சர்வதேச இயக்கம் கருதுகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் சீரிய சேவை
உலகத்தமிழர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இதன் சேவையை அறிய,
கீழேயுள்ள தொடுப்பு உதவும். www.tamilheritage.org


மின்தமிழ் மடலாடற்குழு பொறுப்பாளர்கள்.

Rama Samy

unread,
Aug 24, 2012, 5:06:42 AM8/24/12
to mint...@googlegroups.com
அன்பிற்கினிய கண்ணன், வணக்கம்.
                                                                 மாலைமுரசுச் செய்தி என் கணினியில் வலம் வந்தபோது உள்ளம் நொந்தது. என்ன செய்யலாம் என்றபோது பதிலும் கிடைத்தது. செய்தியும் விளக்கமும்  வலப்பூவிலும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.உண்மை எல்லோருக்கும் தெரியட்டும் என்பதே நோக்கம். ”நிறைவுள்ள மனிதனிடம் அந்த நிறைவை அழிக்கத் துடிக்கும் பலவீனங்களும் நிறைந்திருப்பது எதனைக் காட்டுகின்றது”  என்று கேட்டபோது, கண்ணதாசன் கூறுகின்றார் :- “ மனித உடம்பில் எலும்பு மட்டுமில்லை; தோலும் இருக்கிறது “ இதுதான் நினைவுக்கு வந்தது. போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; தொடரட்டும் மின்தமிழின் செந்தமிழ்ப் பணி. பாரதியைப் போற்றும் கூட்டம் ஒருபோதும் தவறு செய்யாது. செய்யவும் முடியாது.  பாரதியைத் தமிழகம் புறக்கணித்தபோது பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவச் செய்தவர் ஜீவானந்தம்.விவேகானந்தரையும், சுபாஷ் சந்திர போஸையும் பாராட்டுபவர்களுக்கு, அதற்குக் காரணமாக இருந்த சேதுபதி மன்னனையும், செண்பகராமனையும் தெரியாது. இதுதான் உலகம். பெயருக்குப் பின்னால் “அவர்களே “ என்று போட்டுத்தான் எழுத வேண்டும் என்றால், எழுத்தில், அவர்கள் என்ற வார்த்தைகள்தான் அதிகமாக இருக்கும். மரியாதை மனதில் இருந்தால் போதும். எனக்கு விஷ்யம் என்னவென்று முழுமையாகத் தெரியாது. ஆனால், தமிழ் மரபு அறக்கட்டளை அவசியம் வேண்டும் என்பது மட்டும் தெரியும். எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லும் தமிழ் அறிஞர் பெருமக்கள், தமிழ் விக்கிபீடியாவில் திறமயைக் காட்டட்டும். உலகில், அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது தமிழ் மொழியில்தான் என்ற நிலையைத் தோற்றுவிக்கட்டும்.  



2012/8/24 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--



சீராசை சேதுபாலா

india.azhagi.com :: service to mankind

http://rssairam.blogspot.com/

Swaminathan Venkat

unread,
Aug 24, 2012, 5:20:26 AM8/24/12
to mint...@googlegroups.com
இந்த செய்தியை மாலை முரசில் பார்த்து இங்கு கொண்டு சேர்த்தவருக்குமோ, பின் தான் பார்க்கவில்லையே என்று வருந்தி செய்திக்கு நன்றி தெரிவித்தவரும் செய்தியால் வருத்தமோ, அதிர்ச்சியோ அடைந்தவராகக்த் தோன்றவில்லை. செய்தியை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். கொரியா, ஜெர்மனிவாசிகளுக்க்த் தெரியாமல் போய்விடப்போகிறதே என்று. இது அவர்கள் சொல்லாத செய்தி ஒன்றைச் சொல்வதாக எனக்குப் படுகிறது. என் கணிப்பில் தவறிருக்கலாம். வசை பாடாமல்திருத்துபவர்க்ள் திருத்தலாம்.

இதில் விஜயராகவன் தலை ஏன் உருட்டப்படவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. கண்ணன் சொல்வது போல எனக்கு கண்ணனைத் தவிர வேறு  யாருடனும் நேர்ப்பழக்கமில்லை. விஜயராகவன் தன் புத்திக்கும் தான் படித்தறிந்ததற்கும் தர்க்கபூர்வமான அலசலுக்கும் எலாததைச் சொன்னார். அவர் தன் பாட்டுக்கு தன் வழிச்சென்றிருக்கலாம். அது தான் நாம் கடைப்பிடிக்கும் சௌகர்யமான வம்பு தும்பு இல்லாத செயல்பாடு. நம் பண்பாடும்.

தீவிரமான கருத்துக்களைச் சொல்வது இங்கு அவற்றை எதிர்கொள்ளமுடியாது சொன்னதையே திருப்பிச் சொல்வர்களால் தடை செய்யப் படுகிறதா?

நான் தமிழ் நாட்டில் எவ்வளவோ அபத்தங்களையெல்லாம் கேட்டுச் சகித்துக்கொண்டிருக்கிறேன். எதிர்த்து சாத்தியமா?  ஆட்டோ வரும். கால் ஏற்கனவே ஒடிந்திருப்பதால், இப்போது கை ஒடியும். அல்லது முதுகுத் தண்டு ஒடியும்.

இப்படித்த்தான் இங்கு வாதங்கள் முடிகின்றன. அன்று வையாபுரிப்பிள்ளைக்கு உதை. செருப்படி. இன்று பழ் கருப்பையாவுக்கு உதை. அவருக்கு யாரும் சிரமம் வைக்கவில்லை. வீடு தேடி வந்து உதைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர். அதாவது செந்தமிழும் நற்றமிழரும் மாத்திரம்.

2012/8/24 N. Kannan <navan...@gmail.com>
இச்சேதியை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் சில சிக்கல்கள் உள்ளன.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

கி.காளைராசன்

unread,
Aug 24, 2012, 5:25:27 AM8/24/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

மின்தமிழ் என்பது a closed group discussion forum என்று நினைக்கிறேன்.
இதில் அங்கத்தினர் அல்லாதோர் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்ய இயலாதல்லவா?

மின்தமிழ் உறுப்பினர்கள்  தங்களது கருத்துக்களைத் தங்களது குழு உறுப்பினர்களுக்குள் பேசி விவாதித்துக் கொள்கின்றனர். அவ்வாறு பேசும் போது ஒவ்வொருவரும் தங்களுத் தெரிந்த கருத்துக்களின் அடிப்படையில் விவாதிக்கின்றனர்.  உறுப்பினர்கள் தங்களுக்குள் விவாதிப்பதைத் தவறு என்று எங்ஙனம் கொள்ள முடியும்?

விவாதத்தின் முடிவாக, மின்தமிழ் சார்பாகப் பொதுமக்களுக்கோ, அல்லது அரசிற்கோ அறிக்கை ஏதேனும் வெளியிடப் பெற்றால், அதில் தவறு இருந்தால், தவறாகக் கொள்ளலாம்.

அவ்வாறு ஏதும் நடைபெறாத போது, மின்தமிழ் மேல்த் தவறு காண்பது எவ்வாறு?

அன்பன்
கி.காளைராசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 24, 2012, 6:18:36 AM8/24/12
to mint...@googlegroups.com
கண்ணன் ஐயா

உங்கள் பொறுமைக்கும் பரந்த மனப்பான்மைக்கும் எனது பாராட்டுக்கள். 

ஆனால் மின் தமிழுக்கு யாரோ ஒருத்தரால் ஏற்படுகின்ற இந்த அவப்பெயர் தேவை தானா என்று தயவுசெய்து இப்போதாவது சிந்தியுங்கள்.

இப்போது மின் தமிழ் வாங்கியிருப்பது நற்பெயரல்ல. அவப்பெயர். மின் தமிழில் தமிழர்களைப் பற்றி அவதூறு செய்கிறார்கள் என்ற செய்தியை பல லட்சம்பேர் படித்திருப்பர். இதன் விளைவு என்னவாகும்?

கற்றறிந்த தமிழறிஞர்கள் புதிதாய் சேர கூசுவார்கள். 

மின் தமிழ் என்ற பெயரைக் கேட்டாலே .ஓ அவர்களா என்று ஏளனமாய் நினைப்பார்கள். இன்னும் பல சிக்கல்கள் நேரலாம்.

இது தேவை தானா? என்பதே எனது கேள்வி.

வ.கொ.வி யின் எழுத்துக்கள் மின் தமிழுக்கு நன்மை பயக்கிறதோ இல்லையோ இப்படி தீமை பயவாமல் இருப்பது இனியேனும் போற்றத் தக்கது என்று கருதுகிறேன்.

இப்படிக்கு,

மின் தமிழ் அன்பன்,

தி.பொ.ச.


2012/8/24 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

N. Kannan

unread,
Aug 24, 2012, 6:36:51 AM8/24/12
to mint...@googlegroups.com
2012/8/24 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

> கண்ணன் ஐயா
>
> உங்கள் பொறுமைக்கும் பரந்த மனப்பான்மைக்கும் எனது பாராட்டுக்கள்.
>
> ஆனால் மின் தமிழுக்கு யாரோ ஒருத்தரால் ஏற்படுகின்ற இந்த அவப்பெயர் தேவை தானா
> என்று தயவுசெய்து இப்போதாவது சிந்தியுங்கள்.
>

நன்றி. வகொவி அவர்களுக்கு பலர் இம்மன்றத்தில் எதிர்வினை செய்துள்ளனர்.
நானும் சொல்லியிருக்கிறேன். சுபாவைப் பேசச்சொல்லியிருக்கிறேன். தமிழர்கள்
மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். என்ன செய்ய? அவரும் தமிழர்களின்
மனமறிந்து இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் உப்பிட்டவருக்கு
துரோகம் செய்தல் பாவம் என்பது நம் மரபு.
ஆவண விரைவில் நடக்கும்.


> இப்போது மின் தமிழ் வாங்கியிருப்பது நற்பெயரல்ல. அவப்பெயர். மின் தமிழில்
> தமிழர்களைப் பற்றி அவதூறு செய்கிறார்கள் என்ற செய்தியை பல லட்சம்பேர்
> படித்திருப்பர். இதன் விளைவு என்னவாகும்?
>
> கற்றறிந்த தமிழறிஞர்கள் புதிதாய் சேர கூசுவார்கள்.
>

அப்படிச் சொல்லிவிட முடியாது. நடுநிலையோடு தமிழ் மீது ஆர்வமுள்ளவர்கள்
இங்கு வந்து பார்த்தால் நாம் எவ்வளவு பொறுமையுடன் விஷயங்களை
எடுத்தாள்கிறோம் என்பது புரியும்.

தனித்தமிழ் பற்றாளர்களின் குமுறல் இது என்று நான் புரிந்து கொள்கிறேன்.
தனித்தமிழுக்கு எதிரியல்ல நாம். சேசாத்திரி அவர்கள் முன்வைக்காத
கருத்துக்களா? அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்று அவதானிக்க
வேண்டும். தமிழ் மொழியும், தமிழரும் அறிவுசார் உலகில் வாழ வேண்டுமெனில்
நாம் அறிவியல் முறைக்கு பரிட்சியமாக வேண்டும். கேள்வியே கேட்கக்கூடாது
என்பது பகுத்தறிவாகாது. அறிவியல் தளிர்நடை போட கேள்வி முக்கியம்.
தனித்தமிழ் தளிர் நடை போட அறிவியல் பூர்வமான அலசல் மிக முக்கியம். நாம்
நன்மைதான் செய்கிறோம். சில நேரங்களில் பாவக்காய் கசப்பு என்று
ஒதுக்குகிறோம். ஆனால் கசப்பில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணம்
ஆய்வாளர்களுக்குப் புரியும். நாம் இனிக்க, இனிக்கப் பேசவில்லை, வெறும்
முகஸ்துதி செய்யவில்லை என்பதே இவர்களின் மனக்குறை. ஆயின், இது செய்யாமல்
தமிழை உயர்த்தியவன் பாரதி. அவன் வழியில் இயங்குவது தவறா?

நாம் நிற்போம் எனும் உறுதியுடன் செயல்படுவோம். உங்கள் எல்லோரின்
நல்லாதரவில்தான் இச்செயற்பாடு நடக்கிறது. இக்குற்றச்சாட்டு நம்
எல்லோருக்கும் விடப்பட்டிருக்கும் சவால். இதை வாய்ப்பாகக் கொண்டு அல்லன
அகற்றி, நல்லன செய்து மீண்டு வருவோம்.

நன்றி.

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Aug 24, 2012, 6:48:21 AM8/24/12
to mint...@googlegroups.com


2012/8/24 N. Kannan <navan...@gmail.com>

//நன்றி. வகொவி அவர்களுக்கு பலர் இம்மன்றத்தில் எதிர்வினை செய்துள்ளனர். நானும் சொல்லியிருக்கிறேன். சுபாவைப் பேசச்சொல்லியிருக்கிறேன். தமிழர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். என்ன செய்ய? அவரும் தமிழர்களின் மனமறிந்து இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் உப்பிட்டவருக்கு துரோகம் செய்தல் பாவம் என்பது நம் மரபு. ஆவண விரைவில் நடக்கும்.//

அறிவுக் குறை என்றதும் வகொவிக்கு பொத்துக் கொண்டு வந்தது கோவம்! மட்டுறுத்துனர்! மட்டுறுத்துனர்!! என்று அலறினார் அப்போது. ஆனால் அவர் திட்டாததா? அதை யாரேனும் மட்டுறுத்தியது உண்டா? காட்டுக்கு சில : தமிழ்த் தாலிபன், nonsense , charlatan இப்படி இன்னும் பல. இப்படித் திட்டியவது அவருடைய அகமுகத்தையே காட்டியது. அந்த அளவிற்குத் தான் மேலைநாடுகள் அவருக்கு நாகரிகம் சொல்லித் தந்துள்ளன. 

சேசாத்தரி



s.bala subramani B+ve

unread,
Aug 24, 2012, 6:57:55 AM8/24/12
to mint...@googlegroups.com
 
 
மின்தமிழ் குழுமம் தமிழியல் தொடர்பானவர்கள் நிறைய பேர் படிக்கும் போது தளம்
 
அனுமதி கிடைத்தால் மட்டும் பங்கேற்ப  முடியும் , ஆனால் நிறைய  பேர்கள் படிக்கிறார்கள் 
 
இப்போதைய சிக்கல் மறைந்த தமிழக அரசால்  நாட்டுடைமை ஆக்க பட்ட நூல்களை எழுதிய     பாவாணர் குறித்த சொல்லாடல்கள்
 
கடந்த சில தினங்களாக பல துணைவேந்தர்கள் மற்றும் அரசை சார்ந்தவர்களுக்கும்    சம்பந்தப்பட்ட வரிகளை படித்து காட்டப்பட்டு அவர்கள் மனவருத்தம் அடைந்து இருக்கிறார்கள்
 
இதுவரை மின்தமிழ் குழுமம் வந்த வழியை பற்றிய கேள்வி அல்ல இப்போதைய சிக்கல்
 
நாம் யாரை பற்றி  உரையாடல் செய்து கொண்டு இருக்கிறோம் என்பது பற்றி தான்
 
எழுதுபவர்கள் வெகு சிலர் தான் ஆனால் படிப்பவர்கள் பலர்
 
இப்போதைய நடப்பு பல சிக்கல்களை நோக்கி சென்று கொண்டு இருப்பது மட்டும் புரிகிறது
 
 
 
 
 
 
 
 

விஜயராகவன்

unread,
Aug 24, 2012, 6:08:40 AM8/24/12
to மின்தமிழ், jeanluc.c...@gmail.com
On Aug 24, 10:14 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> வகொவி தன் கருத்து நிலைப்பாட்டை விளக்கியுள்ளார், அதற்கு பதிலளிக்கும்
> பொறுமை நமக்கு உண்டு, அதை விடுத்து அவர் வாயை மூடுங்கள் என்பது என்ன
> நாகரீகமென்று புரியவில்லை.

கண்ணன்

உங்கள் கருத்துகளை சரியாக விளக்கி விட்டீர்கள். ஒருவர் பட்டத்தை அல்லது
அடை மொழியை போடாமல் சாதாரண பெயரைப்போட்டால் அது குற்றமாம்; அதை விட
அற்பத்தனத்தை எங்கும் பார்க்கமுடியாது.


மாலைமுரசு செய்தியை இங்கு போட்டாவாக அளித்த செழியனுக்கு நன்றிகள்.


அந்த கோரிக்கை வைத்திருக்கும் நபர்கள் யார் என்பது:

முன்னாள் துணைவேந்தர் பொற்கோ
பொன்னவைக்கோ
இறையரசன்
பூங்குன்றன்
அரணமுறுவல்
சுந்தர ஜெயபாலன்
சி.ஆர்.செல்வகுமார்
பெஞ்சமின் லெபோ
சஹாயராஜ்

இப்படி தமிழகத்தின் சீனியர் அகாதமிக்குகளே இப்படி சகிப்பின்மையை
வெளிப்படுத்துவது, தமிழகத்திற்க்கு, தமிழுக்கும் நல்லதல்ல

வன்பாக்கம் கொமாண்டூர் விஜயராகவன்

Nagarajan Vadivel

unread,
Aug 24, 2012, 7:26:45 AM8/24/12
to mint...@googlegroups.com
மடலாடல் குழுக்களின் செயபல்பாடு அதன் பயனாளர்கள் மட்டுமே பங்கு பெறும்
தளம் என்றாலும் கூகிள் மடலாடல் குழுவின் உரிமையாளர்களின் முன்
அனுமதியுடன் இணையத்தில் நிகழும் மடலாடல் கருத்துக்களை வெளியிடுகிறது.
அதனால் இணையத்தில் அது எளிதாக மற்றவர்கள் படிக்க வழி ஏற்படுகிறது

மாலைமுரசுச் செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு விவாதிப்பது சரியல்ல

முதலில் இது பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியது. அதில் என் பெயர்
குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தி இணையத்தில் வெளியான பாவணரைத்
தரக்குறைவாக் குறிப்பிட்டு விக்கி மாதிரி வெளியாகியிருந்த செய்தி.
அவர்கள் மின் தமிழ் வழியாகவே பாவாணர் பற்றி ஒரு செய்தி இணையத்தில்
வெளியானதை அறிந்துகொண்டனர். அந்தச் செய்தியை எழுதியவர் விஜய ராகவன்
என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தனர். அதுவே மாண்புமிகு
முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அத்தளத்தை முடக்க
வேண்டும் என்றும் சைபர் பிரிவு அதற்குக் காரணமானவர்களின் மீது நடவிக்கை
எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் மாலை முரசில் செய்தி வேறுவிதமாக மாற்றப்பட்டு மின் தமிழ் இணைய
தளம் தமிழக அறிஞர்களை இழிவுபடுத்தும் விவாதங்களை அனுமதிக்கிறது எனவே
அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் வெளியானது

மறுநாள் தமிழ் அறிஞர்கள் அரசு அலுவலர்களை நேரில் சந்தித்து விவாதிக்கப்
போவதாகச் செய்தி வந்தது. என் பெயர் வந்ததால் என் கருத்தை வாய் வழியாக
எடுத்துச் சொல்லி அந்த மடலாடல் குழுவில் குறிக்கப்பட்டுள்ள மூன்று
இழைகளின் விவாதப் போக்கைப் பார்த்தாலே விவாதம் திசை திரும்பும்போதும் நடை
மாறும்போதும் போதுமான எச்சரிக்கைச் செய்திகள் வந்திருப்பதை நீங்கள்
பார்க்கலாம் என்று குறிப்பிட்டேன்

என் தனிக்கருத்து என்னவென்றால் இணையம் மட்டற்ற கட்டற்ற கருத்துத் தளம்.
தனி மனிதச் சிந்தனைகளுக்கு மட்டுறுத்துனர் என்று ஒருவர் இருப்பதே தவறு
என்று கருதுபவன்.

என்னுடைய வருத்தமெல்லாம் ஒரு சிலர் இணைய எழுத்துரிமை என்பது எழுதாத
எழுத்து என்பதால் தனி மனிதரைத் தர்க்குறைவாக எழுதினால் தப்பே இல்லை என்று
கருதுவதும் எழுதுவதும் மின் தமிழில் ஆரம்பித்துள்ளதே என்பதுதான்

மின் தமிழ் கருத்தில் கொள்ள வேண்டியது மறைந்த அறிஞர்களையும் வாழும்
அறிஞர்களையும் வசை மொழி பாடுவது தேவையா என்ற ஒரு கருத்து மட்டுமே

இதைத் தவிர மின் தமிழ் தன் நடையை மாற்றிக்கொள்ளவோ மக்கள் மன்றத்துக்கும்
அரசாங்கத்துக்கும் தன்னிலை விளக்கம் அளிக்கவோ அவசியமான சிக்கல் எழவில்லை

மாலை முரசுச் செய்தி பத்திரிக்கைச் செய்தி என்ற அளவில் படித்து அதற்கான
மதிப்பீட்டைக் கொடுத்துவிட்டு மறந்துவிட வேண்டிய ஒன்று

நாகராசன்

2012/8/24 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

Raja sankar

unread,
Aug 24, 2012, 8:06:08 AM8/24/12
to mint...@googlegroups.com
சேசாத்திரி,

தனித்தமிழ் தாலிபான்கள் என்பது எப்படி அநாகரீகம் என சொன்னால் மதி. :-) தாலிபான்களைப்போல் விமர்சனம் என்ற ஒன்றே இருக்ககூடாது, தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் படி கூட நடக்கமாட்டோம் நாங்கள் வைக்கும் இலணக்கப்படி தான் பேசவேண்டும் அப்படி பேசாதவர்களை இழிவு செய்வோம் என்பது தாலிபானிசம் தான்.

இங்கு தாலிபானிசங்களுக்கு இடமில்லை. ஒருவர் என்ன பிறப்பு என்பதெல்லாம் சர்பிடிகேட் கொடுக்கும் வழக்கமில்லை. இனவாத, மொழிவெறி, நிறவெறி கருத்துக்களுக்கு இடமில்லை, இடமில்லை என சொல்லி அலுத்துவிட்டது.

இருக்கும் தமிழ்குழுமங்களில் அரட்டையை குறைவாகவும் செய்யும் காரியங்களை நிறைவாகவும் செய்யும் குழுமம் இது ஒன்று தான். இதையும் இழுத்து மூடிவிட்டால் பலருக்கு மனம் குளிரும் போலிருக்கிறது.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/24 seshadri sridharan <ssesh...@gmail.com>

Raja sankar

unread,
Aug 24, 2012, 8:12:41 AM8/24/12
to mint...@googlegroups.com
திருத்தம் பொன் சரவணன்,

தாங்கள் வள்ளுவரையே திருத்திக்கொண்டிருக்கிறீர்கள். அதையும் ஒரு நாள் இப்படி கிளப்பினால் தாங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என அறிய ஆசைப்படுகிறேன்.

திருக்குறளை தப்பு என சொல்லும் ஆளுக்கு மின் தமிழ் இடம் கொடுத்து உலகப்பொது மறையாம் திருக்குறளை மின் தமிழ் இழிவு படுத்திவிட்டது, ஆகவே அதை தடைசெய்வீர்கள் என யாரேனும் புகார் கொடுத்தால் என்ன செய்வது? தங்களிடம் பதில் உண்டா?

ஆய்வு என செய்தால், ஆராய்ச்சி என எழுதினால், கட்டுரை என எழுதினால் விமர்சனம் வரும் வந்தே தீரும். ஒரு ஆய்வை முட்டாள் தனமான ஆய்வு என்று சொல்வது இழிவு ஆகாது. அப்படி சொல்லக்கூடாது என்றால் யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் ஆய்வு என்ற பெயரில் எழுதலாம், ஆராய்ச்சி என்ற பெயரில் சொல்லலாம். பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கட்டுரையை மதிப்பிட குழுவே தேவையில்லை. என்ன எழுதினாலும் முனைவர் பட்டம் கொடுத்துவிடலாம். :-))))

லெமூரியாக்கண்டம் போன்றவைகளுக்கு அறிவியல் ஆதாரமில்லை என சொல்வது எப்படி அவமதிப்பு ஆகும்? அது தவறு என்றால் இதோ ஆதாரம் என கொண்டுவரலாமே? அதை யாரும் வேண்டாம் என சொல்லப்போவதில்லையே. அதை விடுத்து ஒரு கருத்தின் மீது மாற்றுக்கருத்தே வைக்கக்கூடாது என எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என புரியவில்லை.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/24 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

Raja sankar

unread,
Aug 24, 2012, 8:17:02 AM8/24/12
to mint...@googlegroups.com
தமிழ்நாட்டில் இது விதி. தமிழ் நாட்டின் விதி.

என்ன செய்ய. பேசாமல் தமிழில் எழுதாமல் ஆங்கிலத்திலே எழுதலாம். பிரச்சினையே வராது. இப்படியெல்லாம் நடப்பதை பார்க்கும்போது ஏன் தமிழின் மேல் பற்று வைத்தேன் என தோன்றுகிறது. நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு தமிழை எழுதப்படிக்க தெரியாமல் பேச மட்டும் தெரிந்திருந்தால் நிம்மதியாக இருக்கலாம் போலும்.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/24 விஜயராகவன் <vij...@gmail.com>

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 24, 2012, 8:22:12 AM8/24/12
to mint...@googlegroups.com
அன்பின் ராஜசங்கர்

சிலவற்றை முதலில் நான் தெளிவு படுத்தி விடுகிறேன்.

திருக்குறளை நான் தப்பு என்று எங்கும் கூறவில்லை.

ஏற்கெனவே திருக்குறளை திருத்தி விசமம் செய்ததால் வள்ளுவர் மீது உண்டான களங்கங்களை நீக்கவே எனது ஆய்வுகள். எனது ஆய்வுக் கட்டுரைகளை நீங்கள் நன்கு நிதானமாக படித்துப் பாருங்கள். அவற்றின் நோக்கம் உங்களுக்குப் புலப்படும். 

தயவுசெய்து என்னையும் வகொவியையும் ஒப்பிட வேண்டாம்.


அன்புடன்,

தி.பொ.ச.



2012/8/24 Raja sankar <errajasa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Anbu Jaya

unread,
Aug 24, 2012, 8:32:46 AM8/24/12
to mint...@googlegroups.com
அன்புள்ள நண்பர்களே ,
 
தமிழறிஞர் பாவாணார் பற்றி WikiPedia-வில் உள்ள உண்மையான கட்டுரை இங்கு உள்ளது:
 
 
 
இந்த கட்டுரையை அப்படியே copy செய்து, அதில் சில இடங்களில் தாகாத ஆங்கில வார்த்தைகளை இடைச்செருகி 'kulkapedia' என்ற பெயரில் உள்ள இணைய தளம் வெளியிட்டுள்ளது.
 
இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள் அதிகமானவை Wikipeida- வின் கட்டுரைகள் இப்படி இடைசெருகலுடன் தகாத வார்த்தைகளைக் கொண்டவைகாளாக மாற்றப்பட்டுள்ளன.
 
இந்த இணையதளத்தின் main page-க்குச் சென்றால் இதை அறியாலாம்:
 
 
எனவே இது பாவாணரைக் குறிவைத்து எழுதப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.  இந்த இணையதளத்தில் உள்ள எல்லா பக்கங்களிலும், எல்லோரைப் பற்றியும் தாகாத வார்த்தைகளே உள்ளன. இது விக்கபீடியாவை பிடிக்காதவர்களின் சதி என்றே தோன்றுகிறது.
 
இந்த அவதூறு தளத்திலுள்ள கட்டுரைகளையும், அதனுடைய Wikipedia-வின் origial கட்டுரைகளையும் உற்றுநோக்கினால் இது தெரிகிறது.
 
- அன்பு ஜெயா
 
 
2012/8/24 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

Raja sankar

unread,
Aug 24, 2012, 8:38:56 AM8/24/12
to mint...@googlegroups.com
நீங்கள் நல்லநோக்கத்தோடு எழுதினேன் என சொல்லுகிறீர்கள்.

நானோ இல்லை நீங்கள் திருவள்ளுவரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடே இப்படியெல்லாம் செய்துவருகிறீர்கள் என புகார் அளிக்கிறேன் அல்லது இப்படி ஒரு செய்தி போடுகிறேன், திருத்தம் பொன் சரவணன் என்ன திருவள்ளுவரை விட பெரிய ஆளா?. மின் தமிழ் இப்படிபட்ட ஆட்களுக்கு எல்லாம் இடம் தரலாமா?. நாளைக்கு ஆளாளுக்கு திருக்குறளில் திருத்தம் செய்கிறேன், அகநானூற்றில் திருத்தம் செய்கிறேன், தொல்காப்பியத்தில் திருத்தம் செய்கிறேன் என கிளம்பினால் என்னாவது? தமிழர்கள் மனம் இதனால் புண்படுகிறது. எனவே இதை முளையிலே கிள்ளி எறியவேண்டும் என.

மின் தமிழ் என்ன செய்யமுடியும்? மின் தமிழ் மட்டுறுத்துனர்கள் என்ன செய்ய முடியும்?

நீங்கள் சொல்வதற்கும் இதற்கும் வித்தியாசம் புரிகிறதா?.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/24 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>
ஏற்கெனவே திருக்குறளை திருத்தி விசமம் செய்ததால் வள்ளுவர் மீது உண்டான களங்கங்களை நீக்கவே எனது ஆய்வுகள். எனது ஆய்வுக் கட்டுரைகளை நீங்கள் நன்கு நிதானமாக படித்துப் பாருங்கள். அவற்றின் நோக்கம் உங்களுக்குப் புலப்படும். 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 24, 2012, 8:42:26 AM8/24/12
to mint...@googlegroups.com
அன்பின் ராஜசங்கர்

மீண்டும் தவறான் புரிதல்.

நான் செய்வது தவறுகளைத் திருத்துவது. யாரையும் தகாத வார்த்தைகளால் திட்டவில்லை.

இப்பவும் பாருங்கள், நான் உங்களை 'அன்பின் ராஜசங்கர்' என்று தான் அழைக்கிறேன்.

ஆனால் நீங்கள்...?  :)))


அன்புடன்,

தி.பொ.ச.

2012/8/24 Raja sankar <errajasa...@gmail.com>
நீங்கள் நல்லநோக்கத்தோடு எழுதினேன் என சொல்லுகிறீர்கள்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Aug 24, 2012, 8:42:57 AM8/24/12
to mint...@googlegroups.com
ஆங்கில இணைய தளங்களில் பலருக்கு பரிச்சயம் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. இதைப்போல் சாப்டுவேரில் நாலு வார்த்தைக்கு ஒரு வார்த்தை கெட்ட வார்த்தை போட்டு இணையதளத்தை உருவாக்கி அதை இணைய வெளியில் விடுவது என்பது சாதாரணமாக நடக்கும். அமெரிக்காவில் இவை பேச்சுரிமையில் வரும்.

இதைப்போல் இன்னும் பல தளங்கள் உள்ளன. அவற்றை எடுத்துக்காட்டுக்கு தரலாம் என்றால் கூட பயமாக இருக்கீறது. :-(.

யாரோ ஒருவர் வைத்திருக்கும் இணைய தளத்திற்கும் மின் தமிழுக்கும் என்ன சம்பந்தம்.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/24 Anbu Jaya <anbuja...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 24, 2012, 8:48:33 AM8/24/12
to mint...@googlegroups.com
மின் அஞ்சல் - தனிப்பட்ட செய்தி ஒருவருக்கொருவர் கருத்துப் பறிமாற்றம் செய்து கொள்ள

வலைப்பூ - தனிப்பட்ட கருத்தை ஒருவருக்கென்று இல்லாமல் பொதுவாக எழுதி வெளியிடல்

மடலாடல் - கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பில் தன் கருத்து என்ன என்று வெளியிடுதல்

மடலாடல் தளத்தில் இழையை ஒட்டியும் வெட்டியும் எழுதுவதற்குப் பயிற்சி
தேவை. கட்டை போடவும் மொக்கை அடிக்கவும் வெறும் வார்த்தைகளே போதும்

நாகராசன்

2012/8/24 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

Raja sankar

unread,
Aug 24, 2012, 8:48:19 AM8/24/12
to mint...@googlegroups.com
அன்பின் தி.பொ.ச,

நான் சொல்வது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. உங்களுக்கு புரியவில்லையா? இன்றைக்கு நடப்பது நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கான உதாரணம் அது. திருக்குறளிலியே தப்பு கண்டுபிடிக்கும் நபருக்கு மின் தமிழ் குழுமம் ஏன் இடம் தரவேண்டும் என்ற கேள்வி வர எவ்வளவு நேரமாகும்?

யார் சொல்வதையும் எடுத்துக்கொண்டு மனம் புண்படுகிறது என்றோ தடை செய்யவேண்டும் என்றோ கோருவது எளிது. அதற்கு சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரும் பொறுப்பெடுக்க முடியாது. மடலாடல் குழுமமோ மட்டுறுத்துனர்களோ பொறுப்பேற்க முடியாது.

இதற்கும் மேல் எப்படி விளக்குவது என தெரியவில்லை.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/24 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>
அன்பின் ராஜசங்கர்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 24, 2012, 9:01:09 AM8/24/12
to mint...@googlegroups.com
அன்பின் ராஜசங்கர்

கேள்வி ஏன் வருகிறது என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

இதோ நான் சொன்னவுடன் நீங்கள் அன்பின் திபொச என்று அன்புடன் எழுதுகிறீர்கள். ஆனால் வகொவி அப்படி எழுதாததால் அதாவது அவர் தனது எழுத்துக்களில் அன்பை வெளிப்படுத்தாமல் வெறுப்பை காட்டியதால் தானே இந்த விளைவுகள்.

வெறுப்பைவிட அன்புக்கு ஆற்றல் அதிகம என்பதை உலகமே அறியுமே. 

யாராகிலும் சரி, அவர் உயிரொடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், நமது வெறுப்பை நாம் காட்டுவது கூடாது. கருத்துக்களுடன் முரண் படலாம். ஆனால் கருத்தை சொன்னவரை ஏசுவது தவறா இல்லையா?

என் கருத்தில் உங்களுக்கு மறுப்பு இருக்கலாம். ஏன் உங்கள் கருத்தையும் நான் மறுக்கலாம். ஆனால் நான் உங்களைத் திட்டினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? :)))

எனது இந்த மடல்களின் நோக்கம் இனிமேலும் இத்தகைய தவறுகள் மின் தமிழில் தொடராதிருக்க வேண்டும் என்பதே.  :))


2012/8/24 Raja sankar <errajasa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

N. Kannan

unread,
Aug 24, 2012, 9:05:41 AM8/24/12
to mint...@googlegroups.com
2012/8/24 Raja sankar <errajasa...@gmail.com>:

>
> யார் சொல்வதையும் எடுத்துக்கொண்டு மனம் புண்படுகிறது என்றோ தடை செய்யவேண்டும்
> என்றோ கோருவது எளிது. அதற்கு சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரும்
> பொறுப்பெடுக்க முடியாது. மடலாடல் குழுமமோ மட்டுறுத்துனர்களோ பொறுப்பேற்க
> முடியாது.
>

ராஜசங்கர்!

அன்றொரு நாள் தமிழகத்தில் ஸ்ரீராமன் சிலையின் மீது செருப்பு மாலை போட்டு
ஊர்வலம் நடத்தினார்களே. அப்போது எத்தனை கோடிக்கணக்கான உள்ளங்கள்
புண்ணாயின? யார் மீது வழக்குத் தொடுத்தார்கள்?

மொடைத்தலைக்கும் முழங்காலும் முடிச்சுப்போட்டு இப்போது தமிழ் மரபு
அறக்கட்டளை மீது அவதூறு செய்கிறார்கள். மடலாடற்குழு என்பதன் இயக்கத்தைப்
புரிந்தோர் செய்யும் செயலல்ல இது. எத்தனை மடலாடற்குழுக்கள் பச்சை
பச்சையாக இனவாதக்கருத்துக்களை அள்ளி வீசுகின்றன. வழக்கு என்று தொடுத்தால்
இணையத்தில் எழுதும் ஒவ்வொருவர் மீதும் வழக்குத்தொடரலாம்.

பொதுமன்றத்தில் இல்லாமல் ஆர்வமுள்ளோர் அமர்ந்து பேசும் ஒரு குழுவில்
ஒருவர் மட்டுறுத்தப்படவில்லை என்பது பொதுப்பிரச்சனை ஆவது உலகிலேயே
இதுதான் முதல்முறை. அதுவும் எழுத்து, பேச்சுரிமையை சமமாக
வழங்கியிருக்கும் இந்தியாவிலிருந்து வருகிறது இக்கோரிக்கை!
இக்கோரிக்கையில் கையெழுத்து இட்டிருக்கும் பல பேராசிரியர்கள் மின்தமிழ்
குழுமத்தின் இழைகளை வாசித்து இருப்பார்களா என்பதே சந்தேகம். வாசித்து
இருந்தால் மட்டுறுத்தர்கள் மேலோ, தமிழ் மரபு அறக்கட்டளையின் மீதோ குற்றம்
சாட்டாமல், அக்கருத்தை சொன்னவர் மீது மட்டும் பிரச்சனையைக்
குவித்திருப்பர். எனவே இப்பிரச்சனையில் காழ்ப்பும், பொறாமையும் மறைந்து
இருப்பது வெள்ளிடை மலை.

நா.கண்ணன்

Raja sankar

unread,
Aug 24, 2012, 9:12:35 AM8/24/12
to mint...@googlegroups.com
அன்பின் தி.பொ.ச,

இங்கு திட்டுவதோ ஏசுவதோ பிரச்சினை அல்ல. தமிழ்நாட்டு அரசியல் களத்திலே நடக்காதா தனிமனித தாக்குதல்களா? :-((

பிரச்சினை யாருக்கு பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்பது தான். தமிழில் ஒரு பழமொழி உண்டு, ஆகாத பொண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என. அதுபோல் இவ்விடயம் கையாளப்படுகிறது என்பதே நான் சொல்வது.

மின் தமிழிலேயே முதலில் புகார் சொல்லியிருக்கலாம், இன்னார் இப்படி செய்கிறார் சரியல்ல என. பின்பு மட்டுறுத்துனர்கள் அதை சரி செய்யாவிடில் வேறு வழிகளை யோசித்திருக்கலாம் அதை விடுத்து இப்படி செய்வோம் என்றால் என்ன அர்த்தம்? எனக்குப்புரியவில்லை. ஏன் இப்படி செய்யவேண்டும்.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/24 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>
என் கருத்தில் உங்களுக்கு மறுப்பு இருக்கலாம். ஏன் உங்கள் கருத்தையும் நான் மறுக்கலாம். ஆனால் நான் உங்களைத் திட்டினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? :)))

Sri Sritharan

unread,
Aug 24, 2012, 9:16:50 AM8/24/12
to மின்தமிழ்
அன்பின் ராஜசங்கர்,
 
//இங்கு திட்டுவதோ ஏசுவதோ பிரச்சினை அல்ல. தமிழ்நாட்டு அரசியல் களத்திலே நடக்காதா தனிமனித தாக்குதல்களா? :-(
ராஜசங்கர்//
 
மின்தமிழ்க் குழுமத்தை அரசியல் களம் ஆக்கி விட்டீர்களா? அரசியல் (ஈழம் உட்பட) இங்கு ஆகாது என்று எப்போதோ மட்டுறுத்துனர்கள் தெரிவித்து விட்டார்களே?
 
அன்புடன்
சிறீதரன்
 

Raja sankar

unread,
Aug 24, 2012, 9:20:09 AM8/24/12
to mint...@googlegroups.com
ஐயா,

அதுவும் ஒரு உதாரணம் மட்டுமே. அரசியல் களத்திலே இப்படியான மோதல்கள் உண்டே என சொன்னேன்.

என்ன சொன்னாலும் தப்பாகவே எடுத்துக்கொள்ளமுடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் கொடுத்தேன். நீங்கள் ஒரு உதாரணம் கொடுத்துள்ளீர்கள். :-)

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/24 Sri Sritharan <ksth...@hotmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 24, 2012, 9:24:10 AM8/24/12
to mint...@googlegroups.com
தமிழ்ப் பேராசிரியர்கள் மின் தமிழின்மீது சாட்டியிருக்கும் குற்றச் சாட்டு

மடலாடல் குழுவில் மூன்று இழைகளில் தமிழ் அறிஞர்கள் பற்றி தரக்குறைவான
எழுத்துக்களை ஒரு சிலர் எழுதியபோது அந்த மடலாடல்குழு அதைக்
கட்டுப்படுத்தவில்லை
என்பது
அது உண்மையல்ல என்பது அந்த இழைகளைப் படித்த அனைவருக்கும் தெரியும்.

நாகராசன்

2012/8/24 Sri Sritharan <ksth...@hotmail.com>:

Karuannam Annam

unread,
Aug 24, 2012, 9:48:49 AM8/24/12
to mint...@googlegroups.com, N. Kannan
2012/8/24 விஜயராகவன் <vij...@gmail.com>
On Aug 24, 10:14 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:


> வகொவி தன் கருத்து நிலைப்பாட்டை விளக்கியுள்ளார், அதற்கு பதிலளிக்கும்
> பொறுமை நமக்கு உண்டு, அதை விடுத்து அவர் வாயை மூடுங்கள் என்பது என்ன
> நாகரீகமென்று புரியவில்லை.

உங்கள் கருத்துகளை சரியாக விளக்கி விட்டீர்கள். ஒருவர் பட்டத்தை அல்லது
அடை மொழியை  போடாமல் சாதாரண பெயரைப்போட்டால் அது குற்றமாம்; அதை விட
அற்பத்தனத்தை எங்கும் பார்க்கமுடியாது.

அந்த கோரிக்கை வைத்திருக்கும் நபர்கள் யார் என்பது:

முன்னாள் துணைவேந்தர் பொற்கோ பொன்னவைக்கோ இறையரசன் பூங்குன்றன் அரணமுறுவல்
சுந்தர ஜெயபாலன்
சி.ஆர்.செல்வகுமார்
பெஞ்சமின் லெபோ சஹாயராஜ்

இப்படி தமிழகத்தின் சீனியர் அகாதமிக்குகளே இப்படி சகிப்பின்மையை
வெளிப்படுத்துவது, தமிழகத்திற்க்கு, தமிழுக்கும் நல்லதல்ல
வன்பாக்கம் கொமாண்டூர் விஜயராகவன்

திரு வகொவி, திரு கண்ணன், நண்பர்களே,
 நான் மிந்தமிழைத் தொடர்ந்து படிக்கிறேன். பயனுறுகிறேன். பணி பெரிது. படிக்கவும் எழுதவும் வாய்ப்பு. அனைவரும் மதிப்புடனும் மரியாதையுடனுமே உரையாடுகிறார்கள். திரு வகொவியும் அவ்வாறே.
 பெயர் அடைமொழி இன்றி எழுதுவதைப் பற்றி விளக்கம் கொடுத்திருந்தார்.
 
ஆனால் அவர் பாவாணரை FRAUDSTER என்று எழுதியிருந்தது எனக்கு வருத்தம் தந்தது. நண்பர்களுக்கு அச்சொல்லின் பொருள் நான் எழுதவேண்டியதில்லை. உடனடியாக நான் அந்த இழையில் தெரிவித்திருந்தேன். இன்றுவரைஅவரிடமிருந்து விளக்கமோ வருத்தமோ இல்லை.
 தவிர்க்கச்  சொல்லி அறிவுறுத்தலும் இல்லை.
அல்லது நான் கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை. 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Nagarajan Vadivel

unread,
Aug 24, 2012, 9:59:42 AM8/24/12
to mint...@googlegroups.com
இது போன்ற தனி மனிதத் தாக்குதல்களை மின் தமிழ் மடலாடல் குழுவில்
பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி பல மாதங்களுக்கு முன்னர் எங்களுக்குக்
கிடைத்த செய்திகளை இங்கே எழுதி தரக் குறைவான பெயர்த் தாக்குதல் வேண்டாம்
என்று எழுதியிருக்கிறோம்
நான் இதுபோன்ற சூழல் மின் தமிழுக்கு வர வாய்ப்புள்ளது என்று சொல்லியபோது
எனக்குக் கிடைத்த மறுமொழி
ஹா ஹா ஹ ஹஹஹஹஹஹஹஹ்
நாகராசரே இது வெறும் ஹாட் ஏர் என்பதே
த்வறிழைப்பவர்களை எச்சரித்து தண்டிப்பதில் தயக்கம் தேவையில்லை
நாகராசன்

2012/8/24 Karuannam Annam <karu...@gmail.com>:

seshadri sridharan

unread,
Aug 24, 2012, 11:58:59 AM8/24/12
to mint...@googlegroups.com
அப்படியானால் மடலாடலில் ஒரு நாகரீகமான அணுகுமுறையே வேண்டாம். அந்த முயற்சி தேவையற்றது என்பது போலல்லவா உள்ளது உங்கள் பக்க கருத்து.  இதில் ஒரு மட்டுறுத்துனர்கு வேண்டிய நடுநிலையே இல்லையே.

செசாத்திரி
2012/8/24 Raja sankar <errajasa...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 24, 2012, 12:18:53 PM8/24/12
to mint...@googlegroups.com
இதெல்லாம் ரொம்ப நுணுகி ஆராயக் கூடாது.
மட்டுறுத்துனர்கள் தன்னார்வ அடிப்படையில் குழு உரிமையாளர்களின்
வேண்டுகோளுக்கு இணங்க தனங்கள் பணியைச் செய்கிறார்கள்

நீங்கள் மட்டுறுத்துனராகப் பணியாற்றியிருந்தால் அதன் நடைமுறச் சிக்கலை உணர முடியும்

மின் தமிழ் என்பது சீரியஸான தலைப்புகளிலும் இலகுவான அரட்டைகளிலும் கடுமை
காட்டாத அணுகுமுறையில் நிகழும் நிகழ்வு

இரண்டுபேர் மோதிக்கொண்டால் விலக்கிவிடும் வேலை மட்டுறுத்துனர் செய்ய இயலாது

நாகரிகமான அணுகுமுறை பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது

நாகரிகம் இழையில் பங்குபெறுவோர் நடப்பதில் நிலைக்கிறது.
மட்டுறுத்துனர்கள் ஒருவரை நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள் என்று சொல்ல
முடியுமே ஒழிய அவர்களை நாகரிகப்படுத்தும் வேலையைச் செய்ய இயலாது என்பதை
ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

நாகராசன்

2012/8/24 seshadri sridharan <ssesh...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Aug 24, 2012, 12:46:58 PM8/24/12
to mint...@googlegroups.com

இந்த இழையில் நிதானித்து பல அன்பர்களின் கருத்துக்களை அறிந்த பின்னே எழுதவேண்டும் என்று காத்திருந்தேன். ஏனெனில், லண்டன் குழு சந்தித்தபோது மின் தமிழ் மடலாடும் தன்மையையும், தரத்தையும் உயர்த்துவது பற்றி பேசினேன். என் கருத்தை எழுதுமாறு கண்ணனும், ஸுபாஷிணியும் சொன்னார்கள்.  அதற்குள் இந்த மாலை முரசு செய்தி வேறொரு கோணத்தில் பிரச்னையை முன் கொணர்ந்தது. தொடராக, பல கருத்துக்கள்.  அவற்றில் திரு.கண்ணன் இருமுறை சொன்னதும், மின்தமிழ் மடலாடற்குழு பொறுப்பாளர்களின் அறிக்கையும் எனக்கு மிகவும் சரியாக படுகிறது. வெ.சா. அவர்களின் கருத்து ஊன்றி கவனிக்கவேண்டியது. ராஜாசங்கர், ‘...இருக்கும் தமிழ்குழுமங்களில் அரட்டையை குறைவாகவும் செய்யும் காரியங்களை நிறைவாகவும் செய்யும் குழுமம் இது ஒன்று தான்...’ என்று சொல்வதை, நான் வழி மொழிகிறேன். கடந்த மூன்று நான்கு வருடங்களில் மின் தமிழுடன் எனக்கு பரிச்சியம். தமிழ் மரபு காக்க கடுமையாக உழைக்கும் தமிழ் மரபு கட்டளைக்கு, உறுதுணையாக மின் தமிழ் உலா வருகிறது. இத்தனைக்கும் மேலாக, நான் அதன் வரப்பு உயரவேண்டும் என்பது என் அவா. இந்த இழையுடன் தொடர்பு கொண்டது அல்ல. தேவை வரும் போது, அதை பற்றி எழுதுகிறேன். இப்போது குட்டை குழப்பவது நல்லது அல்ல.

இப்படிக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் தமிழ் வளர்ச்சி அணுகுமுறையை போற்றும்

இன்னம்பூரான் 

Jean-Luc Chevillard

unread,
Aug 24, 2012, 2:24:04 PM8/24/12
to மின்தமிழ், விஜயராகவன்
Dear Vijay
(and other MinTamil list members)

C.R. Selvakumar has publicly announced both on CTamil
and on தமிழ்மன்றம்
that his name had been included without his permission.

See:

"https://groups.google.com/forum/?fromgroups=#!topic/tamilmanram/G436AKT39oU"

(Subject line: "என் பெயர் தவறுதலாக அறிக்கையில் இடம் பெற்றுள்ளது")

and see

"https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2012-08/msg00054.html"

Where he wrote

<QUOTE>
Let it be known that I have not agreed to or signed it
The person who had prepared it simply added my name
without my consent!

As soon as I came to know of it, I had asked him to withdraw my name and
issue
a correction.

That this effort is ill-advised and totally useless and unwarranted is
known to
anyone who has any idea of what internet is. I have been active
on the internet through various fora for more than 20 years and I would not
do such a thing. Further, however unpopular a view may be, if I feel it
is right
I would not hesitate to speak out myself or lend my name to such a view.

Selva
</QUOTE>



-- Jean-Luc Chevillard (Pondichéry)

Innamburan Innamburan

unread,
Aug 24, 2012, 3:59:45 PM8/24/12
to mint...@googlegroups.com
Tk U, Jean-Luc.
Innamburan

2012/8/24 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

Jean-Luc Chevillard

unread,
Aug 24, 2012, 4:12:10 PM8/24/12
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
Dear இ-sir,

It is quite possible that some among the other signatories
are also not aware of what they are supposed to have signed.

I have several linguistics books
by Professor Poṟkō (பொற்கோ)
and I have never seen him quote the person around whom the debate revolves.

I would be very surprised to learn that Professor பொற்கோ believes in Lemuria (or in Kumari Kāṇṭam).

I can't believe that someone who has collaborated with such a fine historical Tamil linguist as the late professor Akattiyaliṅkam
could be an admirer of a believer in Lemuria (or in Kumari Kāṇṭam).

There must be a misunderstanding somewhere.


-- Jean-Luc Chevillard (Pondichéry)
Tk U, Jean-Luc.
Innamburan

2012/8/24 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
Aug 24, 2012, 9:06:33 PM8/24/12
to mint...@googlegroups.com
 விளக்கத்திற்கு நன்றி.  சி.ஆர். செல்வகுமாருமா என வேதனை இருந்தது என்னமோ உண்மை.

2012/8/24 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
Dear Vijay
(and other MinTamil list members)

C.R. Selvakumar has publicly announced both on CTamil
and on தமிழ்மன்றம்
that his name had been included without his permission.

See:

"https://groups.google.com/forum/?fromgroups=#!topic/tamilmanram/G436AKT39oU"

(Subject line: "என் பெயர் தவறுதலாக அறிக்கையில் இடம் பெற்றுள்ளது")

and see

"https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2012-08/msg00054.html"

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

கி.காளைராசன்

unread,
Aug 24, 2012, 9:20:07 PM8/24/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/8/24 seshadri sridharan <ssesh...@gmail.com>

அப்படியானால் மடலாடலில் ஒரு நாகரீகமான அணுகுமுறையே வேண்டாம். அந்த முயற்சி தேவையற்றது என்பது போலல்லவா உள்ளது உங்கள் பக்க கருத்து.  இதில் ஒரு மட்டுறுத்துனர்கு வேண்டிய நடுநிலையே இல்லையே.

ஐயா,
ஒருவருக்குக் குருவாகத் தெரிபவர், 
மற்றொருவருக்குக் கேலியாகத் தெரிவார்.

ஒருவருக்குக் கடவுளாகத் தெரிவது,
மற்றொருவருக்குக் கல்லாகத் தெரியும்.

மட்டுறுத்துனர் நடுநிலையில் இருப்பவர், அவர் அதைக் கல் என்பாரா? அல்லது கடவுள் என்பரா?

அன்பன்
கி.காளைராசன்

Sri Sritharan

unread,
Aug 24, 2012, 9:46:16 PM8/24/12
to மின்தமிழ்
மின்தமிழ் குழுமத்தின் ஆரம்ப (முதல்) நாள் தொடக்கம் அங்கத்துவனாக இருக்கிறேன். எனக்குத் தெரிந்த வரையில் இக்குழுமத்தின் மட்டுறுத்துனர்களுக்கு ஒரே ஒருவர் மட்டுமே செல்லப்பிள்ளையாக இருக்கிறார். அவர் என்ன கருத்துக் கூறினாலும் கண்டுகொள்ளாமல் மட்டுமல்ல நியாயப்படுத்தியும் வருகிறார்கள்.
 
இவ்வளவு எதிர்மறைக் கருத்துகள் வந்திருந்தும் நேற்றும் வந்து தாலிபான்கள் என்று கருத்துக் கூறிவிட்டுப் போயிருக்கிறார். இது மட்டுறுத்துனர்களைப் பொறுத்தவரை வன்முறைக் கலாசாரமாக இல்லாமல் இருக்கலாம். பலருக்கு அது வன்முறையாகவே தெரிகிறது.
 
//நமக்கு இயையாத கருத்துக்கள் வந்தால் வாயைமூடு என்று சொல்வது வன்முறையாகும். இதைக் கற்றறிந்தோர் செய்யலாகுமா?
//மின்தமிழ் மடலாடற்குழு பொறுப்பாளர்கள்.//
//

இவ்வாறு வாயை மூடு என்று (அல்லது ஓரளவு மரியாதையாக) இங்கு பலருக்கு (ஒருவரைத் தவிர) சொல்லப்பட்டிருக்கிறது.


அன்புடன்
சிறீதரன்

 

From: kalair...@gmail.com
Date: Sat, 25 Aug 2012 06:50:07 +0530
Subject: Re: [MinTamil] மாலைமுரசு செய்தி
To: mint...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

seshadri sridharan

unread,
Aug 24, 2012, 11:11:28 PM8/24/12
to mint...@googlegroups.com
ஐயா, 

கிரந்த ஒருங்குறி தொடர்பாக மடலாடல் நடந்து கொண்டிருந்த போது திரு. கண்ணன் கிழவியை ஏற்றி மணையில் வைத்து என்று தமிழ் மொழியை குறிப்பிட்டிருந்த போது அதற்கு நான் எதிர்வினையாற்றினேன். உடனே அவரிடம் இருந்து எனக்கு வந்த எச்சரிக்கை மின்தமிழுக்காக நீங்கள் என்ன பங்களிப்பு செய்திருக்கறீர்கள் வெறுமனே எல்லா இழைகளிலும் தலையிட்டு நான் வம்பு செய்வதாகவும் நான்இதற்கு தக்க விடை அறிக்காவிட்டால் ஒரு மணிநேரத்திற்குள்  மின்தமிழில் இருந்து நீங்கப்படுவேன் என்று எச்சரித்து இருந்தார். உடனே ஒரு அம்மணி அப்பா! பேயை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார். நீஙக்ளும் அந்த இழையில் மறுமொழி இட்டிருந்தீர். என்னிடம் அந்த இழை இப்போது இல்லை அதனால் இஙகே அந்த தொடுப்பை என்னால்கொடுக்க இயலவில்லை. ஆனால் உங்களுக்கு அது நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். 


இதே அளவு எச்சரிக்கையை விசயராகவனுக்கு செய்திருக்கலாமே. ஆனால் அப்படி செய்யவில்லையே. வகொவி தமிழ் ஆதரவு கருத்து என்றால் இதற்கு சான்றில்லை இதை ஒப்ப முடியாது, ஏற்க முடியாது என்றளவில் தன் கருத்தை சொல்லி இருக்கலாமே. ஆனால் அப்படி செய்யாமல் தமிழ் தாலிபன்கள், nonsense, charlatan  என்றெல்லாம் வசை சொல் அல்லவா பாடினார், நஞ்சை அல்லவா கக்கினார். மின்தமிழில் அதிகப்படியானக வசைச் சொற்களை பதிந்தவர் வகொவி என்பது அவருடைய பதிவுகளைக் கண்ணுற்றால் தெரிந்து விடும்  இந்த வசைச்சொல் காரணமாகத் தானே பல எதிர்வினைப் பதிவுகள் அவருக்கு எதிராக பதிவாயின. நான் ஒப்பவில்லை, ஏற்கவில்லை என்று அவர் சொல்லி இருந்தால் அது அவருடைய சொந்தக் கருத்து என்று எண்ணி யாரும் எதிர்ப்பதிவு செய்திருக்க மாட்டார்களே. 

மொத்தத்தில் ஐயா! தமிழ்ஆதரவாளர் என்றால் ஒரு அணுகுமுறை, தமிழ் எதிர்ப்பாளர் சமற்கிருத ஆதரவாளர் என்றால் வேறு ஒரு அணுகுமுறை என்பது தான் நான் மின் தமிழில் இதுவரைக் கண்ட அனுபவம். இது எப்படி இருக்கின்றது என்றால் ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் தடவுவது போல் உள்ளது. நடுவுநிலை இல்லவே இல்லை!!

சேசாத்திரி


  
2012/8/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

துரை.ந.உ

unread,
Aug 24, 2012, 11:17:43 PM8/24/12
to minT...@googlegroups.com
மொத்தமாக ஒரு குழுமத்தின் மேலேயே குற்றம் சொல்வது என்பது மிகவும் கண்டிக்கப் படவேண்டிய ஒன்று...
அவர்களின் மன நிலையின் மேல் ஐயம் வருகிறது :(((
 

2012/8/23 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>ஹ்
மாலைமுரசு நாளிதழில் வந்த செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.
-முனைவர் தி.நெ.

--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Swaminathan Venkat

unread,
Aug 24, 2012, 11:44:31 PM8/24/12
to mint...@googlegroups.com

அன்புள்ள அன்பர் சிரிதரன்,

தொடக்க காலத்திலிருந்தே மின் தமிழ் உறுப்பினராக இருந்தும், இவ்வளவு காலம் இங்குள்ள தமித் தமிழ்க் காவலர்கள் வற்புறுத்திப் பேசியும் எழுதியும், நீங்கள் இன்னும் திருந்தாதவராகவே இருக்கிறீர்கள்.

இப்போதைய உங்கள் மடலில் கூட, ஆரம்பம்,  நியாயப் படுத்தல், அங்கத்துவன், தாலிபான்கள், கலாச்சாரம் போன்ற அயல்மொழிச்சொற்களை, குறிப்பாக கைபர் கணவாய் வ்ழி வந்த ஆரியர்களின் வடமொழிச் சொற்களைப் பெய்து எழுதியிருக்கிறீர்கள்.  இன்னும் கூட நிறைய சொற்களை நீங்கள் இந்த ஐந்தாற் வரிகளுக்குள் கலந்து தனிதமிழை மாசு படுத்தியிருக்கக் கூடும். இன்னும் தனித் தமிழ் காவலர்கள் எந்த நாள் வரை தூய தமிழ் கலப்பற்று இருந்தது, எந்த ஆண்டு மாதம், நாளிலிருந்து நம் தூய தமிழ் மாசுபடத்தொடங்கியது என்று அறியும் cut-off date இன்னும் அறிவிக்கப்படாததாலேயே நான் இன்னும் ஆழ உங்கள் மடலை ஆராய இயலாதவனாக இருக்கிறேன். பேரா. அருளும், சேசாத்திரி அவர்களும் இன்னும் , ஞா தேவநேயப் பாவாணர் அறிவித்துச் சென்ற cut-off date என்னவென்று இதுகாறும் சொல்லாத்தால் தான் இந்த சிக்கலில் (இது தூய தமிழா தெரியவில்லை பாருங்கள்) கிடந்து தவிக்கிறேன்

ஒரு வேளை நியாயம், கலாசாரம் போன்ற கருத்துருவங்கள் தமிழ்ப் பண்பாட்டில் இல்லையோ என்னவோ. இருந்திருந்தால் ஏன் இந்த கைபர் கணவாய் மொழி கடன்வாங்கல் நிகழ்ந்துள்ளது.? தாலிபான்கள் உறுதிபட  உருது மொழிக் கடன் தான். இங்குள்ள மடலாடலைப் பார்த்தால் தாலிபான்கள் தமிழிலும் இருக்கிறார்கள். இக்குழுவிலும் இருக்கிறார்கள். ஆனால் சொல்தான் இல்லை போலும்.

தயை செய்து (மறுபடியும் அயல் மொழி, தயை தமிழ்ருக்கு உண்டோ?) தூய தமிழ் என்றிலிருந்து மாசுபடத்தொடங்கியது என்ற cut-off date-ஐக் கேட்டறிந்து சொல்லுங்களேன். அந்தத் தேதிக்குப் பின் வந்த சொற்களையெல்லாம் கழித்துக் கட்டி தூய தமிழைக் கண்டறியலாம். தமிழ்ரும் தமிழ் வரலாறும் உங்களுக்கு கடன்பட்டிருக்கும். \\

பி.கு. ஒரு சின்ன சிக்கல். இந்த க்ழித்துக் கட்டலில் சேசாத்திரி, தேவநேயம் போன்ற சொற்களும் கழித்துக் கட்டப்பட்டுவிடும். தூய தமிழ் அல்லவே இவை. பேரா. அருள் தான் மிஞ்சுவார். கண்ணனும் அடிப்பட்டுப் போவார். கன்ஹையா விலிருந்து பெற்ற கடன் தான் கண்ணனும்.

நாமெல்லாம் ஒரு பெரிய வரலாற்றுச் சிக்கலில் அடிபட்டுத் திகைத்துக்கொண்டிருக்கிறோம் என்று படுகிறது.



2012/8/25 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

Raja sankar

unread,
Aug 25, 2012, 12:05:25 AM8/25/12
to mint...@googlegroups.com
அன்பின் சேசாத்திரி,

இது அபாண்டமான குற்றச்சாட்டு. அபாண்டத்திற்கும் ஒரு எல்லை உண்டு.

நீங்கள் எழுதியது பலவற்றிலும் பலரை திட்டியிருக்கிறீர்கள். இருப்பினும் உங்களுடைய மடல் இங்கே அனுமதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அநாகரீக குற்றச்சாட்டுகளை பலமுறை வைத்திருக்கிறீர்கள், உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் மாற்றுக்கருத்துக்கு அனுமதி வேண்டும் என்ற முறையில் உங்களுடைய கருத்தும் மடலும் அனுமதிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

யார் தமிழர், யார் தமிழை விரும்புகிறவர், யார் தமிழ் ஆதரவாளர், யார் எதிர்ப்பாளர் என்பதெற்கெல்லாம் சான்றிதழ் தரும் குழுமம் இதுவல்ல.

தமிழுக்கு பங்களிப்போர் யாராக இருந்தாலும் எந்நாட்டவராக இருந்தாலும் எந்த மொழி பேசுவோராக விரும்புவோராக இருந்தாலும் இங்கே இடமுண்டு. பங்களிப்போருடைய உள்நோக்கம், வெளிநோக்கம் கண்டெல்லாம் முடிவு செய்யப்படுவதில்லை. அவருடைய பங்களிப்பு தான் முக்கியமே தவிர அவர் என்னவாக இருக்கிறார் என்பதெல்லாம் அல்ல.

இனவாத மொழிதூய்மைவாத கருத்துக்களை அனுமதிப்பதில்லை என்பது குழுமத்தின் ஒட்டுமொத்த முடிவு. உங்களுக்கு அது கசப்பாக தோன்றினால் ஏதும் செய்ய இயலாது.

உங்களுடைய மொழித்தூய்மை வாத கருத்துக்களுக்கு ஆதரவில்லை என்பதற்காக இப்படியான அபாண்டமான குற்றச்சாட்டுகள் வேண்டாம். இதனால் எதையும் நீங்கள் சாதிக்கப்போவதில்லை.

புரிதலுக்கு நன்றி.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/25 seshadri sridharan <ssesh...@gmail.com>

Raja sankar

unread,
Aug 25, 2012, 12:23:16 AM8/25/12
to mint...@googlegroups.com
அன்பின் சிறீதரன்,

இங்கே யாரும் யாருக்கும் செல்லப்பிள்ளை எல்லாம் இல்லை ஐயா. நாமெல்லாரும் பரமனுக்கு மட்டுமே செல்லப்பிள்ளைளைகள். :-)

தாலிபான் என்ற சொல்லாடலுக்கு தங்களின் எதிர்ப்பு புரிகிறதே. அதே போல் ஒருவரை சம்ஸ்கிருத ஆதரவாளர், தமிழ் இன உணர்வில்லாதவர், தமிழரல்லாதவர் என்றெல்லாம் வரும் சொற்றொடர்களுக்கும் எதிர்ப்பு வரவேண்டுமே?

தங்களின் பார்வையில் உங்கள் மனதை ஒரு சொற்றொடர் புண்படுத்துகிறது. அதே போல் மற்றவர்கள் மனதை புண்படுத்தும் சொற்றொடர்களும் வந்து கொண்டு தான் இருக்கிறன. பலமுறை சொல்லியும் இனவாத, மொழித்தூய்மைவாத கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கிறனவே என்ன செய்ய?

என்னை பார்த்தே இந்த சொற்றொடர்களை ஒருவர் வீசியிருக்கிறார். நான் பிறப்பால் தமிழனில்லை தெலுங்கன் என. அப்போது நான் என்ன செய்திருக்கவேண்டும் என தாங்கள் சொல்லமுடியுமா? என்னைப்பொறுத்தவரை வீசிய நபரை மட்டுறுத்துனர்கள் செல்லப்பிள்ளையாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லத்தான் முடியும். :-(. மற்றொருவரை இதே போல் திட்டியவுடன் அவர் மின் தமிழை விட்டு போய்விட்டார். பின்பு எடுத்து சொல்லி அழைத்துவந்தோம்.

தனி மனித தாக்குதல்கள் மின் தமிழுக்கு புதிதா என்ன? அவ்வளவு ஏன் இரண்டு நாட்கள் முன்பு எம்டன் புத்தகம் எழுதியற்காக திவாகர் அவர்கள் மேல் தனிமனித தாக்குதல் நடந்தது. தமிழ் லெக்சின், அகராதிகள் எழுதிய/தொகுத்த அறிஞர் பெருமக்கள் அவ்வப்போது மீது நடக்கும் தாக்குதல்களும் தாங்கள் அறியாததல்ல. பரிமேழலகரை பரி என்று இங்கே அன்பர் ஒருவர் அழைத்தார். இப்படி இது போல் நடந்தது ஏராளம். இவற்றில் எல்லாவற்றிலும் உருளுவது மட்டுறுத்துனர்களின் தலை தான்.

இதையெல்லாம் தடுக்க தங்களிடம் ஏதேனும் திட்டமோ, அறிவுரையோ இருக்குமாயின் அதை கேட்க ஆவலாக உள்ளேன். நீங்கள் மட்டுமல்ல இப்படி இனிமேல் நடக்காமல் இருக்க என்னென்ன செய்யலாம், மட்டுறுத்தலுக்கு விதிகள் ஏதேனும் வைக்கலாமா, எதெல்லாம் தவறான சொற்றொடர்கள், எதெல்லாம் புழங்க கூடாத வார்த்தைகள் என்று அன்பர்கள் சொன்னால் அதையும் முயற்சிக்கலாம்.

இது நாமெல்லாம் சேர்ந்து ஊர் கூடித்தேர் இழுக்கும் வேலை. இதை எப்படி செவ்வையாக்குவது என தங்களுடைய மற்றும் எல்லாருடைய மேலான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/25 Sri Sritharan <ksth...@hotmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 25, 2012, 1:21:05 AM8/25/12
to mint...@googlegroups.com
அன்பின் சேசாத்திரி ஐயா

பழைய நிகழ்வுகளை மலரும் நினைவுகளாக மீள் பார்வை செய்து மனதை வ்ருத்திக்
கொள்ள வேண்டாம்

இம்மடலாடல் குழுவில் இடப்படும் பின்னோட்டம் ஒரு சில நேரங்களைத் தவிர மற்ற
நேரங்களில் காலம் தாழ்த்தாமல் வெளியிடப்படுவது உண்மை

ஒரு சில இழைகளும் பின்னூட்டங்களும் மட்டுமே மட்டுறுத்தலுக்கு உட்படுவதும் உண்மை

இங்கே நம் முன் எழும்பியிருக்கும் கேள்வி எழுதும்போது சிலர்
பயன்படுத்தும் பொருத்தமற்ற அல்லது தேவையற்ற வார்த்தைகளைப்
பயன்படுத்தினால் அதை அனுமதிப்பதா அல்லது நீக்குவதா என்பதே

அவ்வாறு வார்த்தைகளின்மீது கைவைத்தால் தணிக்கை என்ற பூதம் கிளம்புமே

திரு.விஜய ராகவன் அவர்களின் கருத்து நிலை அவரது தனிக்கருத்து என்று
கொண்டால் அது சரி அல்லது தவறு என்று விவாதிக்க வாய்ப்பே இல்லை

அவர் ஆழ்ந்த புலமை ஆய்வு இணையத் தேடல் மூலம் வலியுறுத்தும் பொதுக்கருத்தை
ஏற்க முடியாது என்று தள்ளிவிட முடியாது. அதுபோன்றே உங்கள் நிலையும்
கருத்தும் எழுத்தும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள்
இருவரும் ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் உங்கள் கருத்தை வலியுறுத்த
முனைகிறீர்கள். அதை மறுப்பதும் மட்டுறுத்துவதும் இணைய மரபுக்கு மாறானது

ஆனால் நீங்களும் விஜயராகவன் அவர்களும் தகாத வார்த்தைத் தாக்குதல்களைப்
பயன்படுத்தி (பாவாணர் சர்க்கார்) நீங்களே ஒருவருக்கொருவர் அறிவில்லாத
போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் இடையில் நீங்கள் இருவருமே கைபர்
கணவாய் வழியாக வந்தவர்கள் என்று வேறு சிலர் எழுதுவதும் அதைப்
பரிசீலிக்கும் மட்டுறுத்துனர்கள் என்ன செய்ய முடியும்

மட்டுறுத்துனர்கள் நிலை கையறு நிலை

நாகராசன்

2012/8/25 seshadri sridharan <ssesh...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Aug 25, 2012, 1:42:23 AM8/25/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
மின் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைக் காட்டிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயங்கள் பொதுவாக கவனத்தைப் பெறும் என்பதும் சிலரது சுயநலப் போக்கினால் சில பொது நல ஸ்தாபனங்கள் எவ்வகையில் பாதிக்கப்படும் என்பதற்கும் இந்த நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எப்படி திரு.செல்வகுமார் அவர்களின் அனுமதி பெறாமல் அவர் பெயரையும் இணைத்து வெளிவந்தது போல மற்றவர்களின் பெயர்களை இணைத்துக் கொண்டிருப்பதிலும் எவ்வளவு உண்மை உள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கின்றது. 

த.ம.அ வின் செய்லபாடுகளை நன்கு அறிந்த ஒருவர், மின் தமிழில் வெளிவரும் பல்வேறு கருத்துக்களை வாசிக்கும் ஒருவர் இத்தகைய ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கத் துணியமாட்டார்.  இந்த அறிக்கையை வெளியிட்ட நபரின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளும் அதே வேளை இத்தகைய அறிக்கையினால் அவர்கள் த.ம.அ. மின் தமிழ் போன்ற பொது நல ஊடகங்களுக்கு விளைவிக்கும் பாதிப்பை கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

ஆக்கப்பூர்வமான காரியங்கள் பல பட்டியலில் உள்ளன  செய்து முடிக்க. அவற்றை கவனிப்போம்!

இந்த இழையை இத்துடன் நிறைவு செய்து கொள்வோம். இனி வேறு எந்த மடல்களும் இந்த இழைக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம். இதனை மீறி வெளியிடப்படும் மடல்கள் மின்தமிழிலிருந்து நீக்கப்படும்.

உங்கள் அனைவரின் அன்பிற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் த.ம.அ - மின்தமிழ் குழுவினரின் மனமார்ந்த நன்றி.

வணக்கம்
சுபாஷினி ட்ரெம்மல்
(மட்டுறுத்துனர்கள் சார்பில்)


DEV RAJ

unread,
Aug 25, 2012, 4:16:48 AM8/25/12
to mint...@googlegroups.com
On Friday, 24 August 2012 22:42:23 UTC-7, Subashini Tremmel wrote:
>>>> த.ம.அ வின் செய்லபாடுகளை நன்கு அறிந்த ஒருவர், மின் தமிழில் வெளிவரும் பல்வேறு
கருத்துக்களை வாசிக்கும் ஒருவர் இத்தகைய ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கத்
துணியமாட்டார்.<<<<


மாலை முரசு இதழாசிரியர்,  செய்தி  உண்மையானதா என்று
தாம் உறுதி செய்துகொள்ளவில்லை என்றே தெரிவிக்கிறார்



தேவ்

Dr.Durai.Manikandan

unread,
Aug 28, 2012, 11:00:23 AM8/28/12
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, thami...@googlegroups.com, kalaiguna, DURAI ARASAN, ப டேவிட் பிரபாகர்
தமிழ்மொழியை யாரும் காப்பற்ற வேண்டாம். தமிழ்மொழி தன்னைக் காப்பாறிக்கொள்ளும்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

N. Kannan

unread,
Aug 28, 2012, 11:11:56 AM8/28/12
to mint...@googlegroups.com
ஐயா!

இவ்விழை முடிவுற்றது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

நன்றி.

நா.கண்ணன்

2012/8/28 Dr.Durai.Manikandan <mkdur...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages