கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித்
தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை
நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில
உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே
பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்
தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.
விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட
அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது
எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது
வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப்
பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும்
சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய
விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட
அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய
அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த
மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப்
பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப்
புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு
நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.
அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது
வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது
பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக,
வாழ்வாதாரமாக விவசாயத்தில்
ஈடுபடுகிறார். இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக்
காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக
வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின்
நோக்கம்.
மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின்
உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-
அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில்
கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி
செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க
வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால்
நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க
முடியாததாகிவிடும்.
இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார
ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப்
பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள்
நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி
தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக்
கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத்
தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர்
கவலைப்படுகிறார்கள்?
முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு
மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான
பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர்
மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது
பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல்
பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை
பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல்
துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1)
பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற
விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது
மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின்
முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால்
ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு
இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.
இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட
கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக்
கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும்.
இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட
பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.
இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை
என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல்
எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது
ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல்
எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?
பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. ""கோயில்பூசை
செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர்
வீட்டை வைத்து இழத்தல்போலும்...''
சீச்சீ... சிறியர் செய்கை!
உங்கள் அரசாங்கத்தின் மேல் உங்களுக்குள்ள தீவிர அவநம்பிக்கையை
அப்படியே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த அரசாங்கம்
முற்றாக மக்கள் விரோத அரசாங்கம் எனக் காட்ட முயலுகிறீர்கள்.
ஆனால் இந்தியாவின் பொருளாதாரம், சமூகம், விவசாயத்திலும் கூட
ஏற்பட்டுள்ள தெளிவான முன்னேற்றங்கள் எனக்கு வேறு வகையான
தோற்றத்தை அளிக்கின்றன.
நான் இதில் எந்தத் தரப்பும் ஏற்கவில்லை. ஆனால் உங்கள் தீவிரத் தாக்குதலே
இதில் கடைசி வார்த்தையாக இருக்கக் கூடாது என்பதால் எழுதினேன்.
ரெ.கா.
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like
> to visit our Muthusom Blogs at:
> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
On Feb 27, 6:57 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> காந்தியின் காலத்தில் காந்தீயத்துக்கு ஒரு இடம் இருந்தது; பெரும் கவர்ச்சி இருந்தது.
>ஆனால் இன்று இந்தியாவுக்கு காந்தி ஒரு heritage மதிப்பு உள்ள விஷயம், அவ்வளவே.
> அதன் மேம்பாட்டு வேகத்துக்கும்,
> அது கடந்து விட்ட தூரத்துக்கும் காந்தியக் கிராம பொருளாதாரத் திட்டம் பொருந்தாது.
>
> ரெ.கா.
>
காந்தீய பொருளாதாரம் எல்லாம் சொந்த விருப்புகள்.
இப்போதைக்கு வலையில் அடிபடுவது பி.டி. (bio-tech).
சயன்ஸ் இந்தியரும், மேலைநாட்டும் சேர்ந்து முடிபுகளைக்
கண்டறிதல். நடைமுறையாக்கல். உலகம் பிணைக்கப்பட்டுவிட்டது.
பி.டி., ஈழப் பிரச்சினை, யூனிக்கோடு, மொழியியல்,
இந்தியத் தொன்மவியல் எதுவும் இந்தியரால் மாத்திரம்
செய்ய முடியாது.
வீட்டில் காலதரை, பலகணியை திறந்து வைத்தாற்போல் -
மேலைநாட்டு விஞ்ஞானமும், மொழியியலும், ஆர்க்கியாலஜியும்.
இல்லாவிட்டால் வெறும் புராணக் கதைகள் ஆகிவிடும்.
தமிழ்நாடு அரசு கோர்ட்டில் கேசில் உள்ளது:
http://www.vinavu.com/2010/02/09/hrpc-case/
எல்லாருக்கும் ரிக்வேதம் சொல்லித் தரலாமா?
குழந்தைப் பருவத்தில் இருந்தே.
அன்புடன்,
நா. கணேசன்
On Feb 27, 1:48 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஆனால் பொருளாதாரம் பற்றிப் பேசப்படும் ஓர் இழையில்
> சம்பந்தமில்லாத சுட்டிகளை இடுவதற்கு செலவழிக்கப் போதிய
> நேரம் தங்களுக்கு இருக்கிறது போலும்! :--))))
>
எனக்கும் கொஞ்சம் வேளாண்மை தெரியும் என்பதால்.
நா. கணேசன்
> தமிழ்நாடு அரசு கோர்ட்டில் கேசில் உள்ளது:http://www.vinavu.com/2010/02/09/hrpc-case/
> எல்லாருக்கும் ரிக்வேதம் சொல்லித் தரலாமா? குழந்தைப் பருவத்தில் இருந்தே.<
மரபுச் செல்வர், வேளாண்மை அரசின் பொருளாதாரக் கொள்கை இவை பற்றிய அருட்
செல்வர் திரு மகாலிங்கம் அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்;
அல்லது தமக்குத் தெரிந்த வேளாண்மை குறித்தும் எழுதலாம் அவருக்குக்
கிடைக்கும் குறைவான நேரத்தில்.
முன்பு அநங்கன், அசரீரி குறித்த விவாதம் நடைபெற்றது ; அதுவும் பாதியில்
நிற்கிறது. கேட்டால் விடை கூறுமுன் வேறு பணிகள் குறுக்கிட்டு விட்டன
என்பார் வழக்கம்போல.
பெரியவுக செஞ்சா பெருமாளு சேஞ்சாப்புல
தேவ்
/// இந்திய- அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு
அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி
செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க
வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால்
நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க
முடியாததாகிவிடும்.
அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும்
உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி *விவசாய விரிவாக்கத்தில்
தனியார்மயத்தைப் புகுத்துவதும், இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப்
பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும்* அனுமதிக்கப்பட இருக்கிறது. ///
கட்டுரையாளரை அச்சுறுத்தும் செய்தி இதுதான்; இந்திய வேளாண்மையில் வெளி்
முதலீடும், அதீதமான வணிக நோக்கும் புகுவதால் விபரீதங்கள் விளையும் என்று
அவர் அஞ்சுவதுதான் இக்கட்டுரைக்கான மையம். இதன் சாதக பாதகங்களைச் சீர்
தூக்கிப் பார்ப்பது அவசியம்
தேவ்
On Mar 9, 11:26 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> நண்பர்களே, இன்றைய தலையங்கம் தினமணியில் ‘பேரபாயம் காத்திருக்கிறது’
> என்பது பற்றிப் படித்தவர்கள் சிறிது என்ன விஷயம் என்று விளக்கினால்
> நன்றாக இருக்கும். ஒரே தலையைச் சுற்றுகிறது.:--((((
>
Feb 26, 9:43 pm, viche...@gmail.com
----- Original Message -----From: srirangammohanarangan v
மனிதன் என்ற சிந்தனை உயிரி பூமியில் நிலைப்பதற்கு முன்னும் உயிரியில்
சோதனைகள் தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்திருக்கின்றன. இதனை Mutation is
the basis of evolution என்று சொல்வார்கள். உயிரியில் மூலக்கூறில்
மாற்றம் நிகழ்ந்தால் அது எப்போதும் கேடு என்றில்லை. ஆனால், இயற்கை
இச்சோதனைகளை இன்றுள்ளது போல் 180 நாளில் முடிப்பதில்லை. பல கோடி
வருஷங்கள் எடுத்துக்கொள்வதுண்டு. அப்படி மெல்ல, மெல்ல செதுக்கிய
சிற்பங்களே இன்று நாம் உலகில் காணும் உயிரிகள். எனவே அவைகளைக் கொன்று
ஒழித்தல் என்பது போன்றதோர் பெரும் குற்றம் வேறேதுமில்லை.
ஆனால் மனிதன் என்ற சிந்தனை உயிரி தோன்றியபின் ‘கலாச்சாரப் பரிணாமம்’
எனுமோர் புதிய பாதை வடிவெடுக்கிறது. அது முழுக்க, முழுக்க மனித சிந்தனை
வயமான மெய்நிகர் உலகம். உதாரணமாக பொருளாதாரம் என்பதை எடுத்துக் கொள்வோம்.
கோடான கோடி ஆண்டுகள் சோதனை செய்து இயற்கை உருவாக்கிய கத்தரிக்காய்க்கு
இவன் செயற்கையாக உருவாக்கிய ‘காசு’ எனும் மெய்நிகர் பொருளுக்குக் கிரயம்
பேசுவான். பின் மெல்ல, மெல்ல இவன் உருவாக்கிய செயற்கைப் பொருளாதாரம்
மெய்நிகர் எனும் நிலையிலிருந்து மெய்மையாகிப் போய், இயற்கைக்கு என்ன
விலை? என்று கேட்கும் காலத்திற்கு இது இட்டுச் செல்லும். அதுதான் இப்போது
நடக்கிறது. வியட்நாம் போரில் அழித்தொழித்த காடுகளுக்கு அமெரிக்கா என்ன
விலை தரமுடியும்? ஜப்பானியர்களின் குச்சியுண்ணும் பழக்கத்திற்காக
வெட்டப்படும் போர்னியோ காடுகளுக்கு என்ன விலை ஜப்பான் சொல்லப்போகிறது?
உலகின் நுரையீரல் எனப்படும் அமேசான் காடுகளை மெக்டோனால்ட் ஹேம்பர்க்கர்
தேவைக்காக அழித்தொழித்துவிட்டு அதற்கு என்ன விலை அமெரிக்கா பேசப்போகிறது?
உண்மையில் உயிரி தொழில்நுட்பம் நமக்குத் தேவையா?
தேவையில்லைதான். ஆனால், நமது சமூக வாழ்வு என்பதே செயற்கையாகிப் போனதே!
காசு இயற்கையா? மனித உயிரிக்கு என்ன விலை கொடுக்க முடியும்? அன்பின் விலை
என்ன? தாய்மைக்கு விலை வைக்கிறார்கள் என்றொரு இடுகை வந்தது! ஆக, இப்படி
செயற்கையாகிப் போன உலகில் செயற்கை கத்தரி இயல்பான ஒரு வளர்ச்சியே!
ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லுவார், மனித வளர்ச்சியின் ஆரம்பத்திலிலேயே எங்கோ
வழி தவறிப் போயிருக்கிறோம் என்று. அதன் விளைவுதான் இது.
உலகில் எல்லோரும் உண்ணும் அளவிற்கு உணவு இருக்கிறது. ஆயின் ஏன் பட்டினிச்
சாவு? இன்று என்று இல்லை? வள்ளுவன் இருந்த காலத்தில் என்ன பெரிய ஜனத்தொகை
இருந்திருக்கும்? ஆனால் அவன் ஏன் அப்படியொரு குமுறு குமுறி ‘இரந்துண்டு
வாழ வேண்டும் என நிலை வரின் பரந்து கெடுக உலகு இயற்றியான்’ என்கிறான்.
அவ்வளவு பேரறிவு கொண்ட வள்ளுவன் பழியைத்தூக்கி உலகு இயற்றியான் என்று,
‘தாமரைக் கண்ணன்’ மேல் போடுகிறார். இது அடுக்குமா? பட்டினியை
உருவாக்கியது யார்? கடவுளா? மனிதனா?
நல்ல கிரயத்திற்குப் போகவில்லையெனில் கோதுமையை அமெரிக்கா கடலில்
கொட்டுகிறது. ஆப்பிரிக்காவில் கால் வயிறு, அரை வயிறு என என்பு தோல்
போர்த்திய உயிர்கள். ஏன் இந்த நிலை?
குற்றம் தொழில் நுட்பத்திலா? இல்லை மனித மனத்திலா?
இவன் மனத்தளவில் குன்றிக் குறுகிப்போய் செயற்கை வாழ்வை உருவாக்குவான்.
அங்கு ஈவு, இரக்கம், அன்பு இவைகளுக்கு இடமிருக்காது. ஆனால், speculation
economy கொண்டு இந்தோனீசியாவின் பொருளாதாரத்தைக் கவிழ்ப்பான்! அமெரிக்கா
கடன்காரங்கள் வட்டி கட்டவில்லையென அங்குள்ள வங்கிகள் திவாலா ஆனால்
ஒன்றுமறியாத பங்களா தேச ஏழை விவசாயக் குடும்பம் தூக்குப்போட்டுச் சாகும்!
என்ன பயித்தியக்காரத்தனம்?
உணவுப் பற்றாக்குறை என்று சொல்வதும் காசு உள்ளவன்தான். அதற்கான தீர்வு
என்று புதிய தொழில்நுட்பத்தைத் தருபவனும் காசு உள்ளவன்தான். ஏனெனில்
காசுதான் நம்மை ஆள்கிறது! காசேதான் கடவுள்!
நாளைய உலகில் இந்த உலகைப் புரட்டிப் போடக்கூடிய பொருளாதாரக் கொள்கையை
கொண்டு வருபவனே உண்மையான தேவன். அவன்தான் மனிதனை மீண்டும் இயற்கையின்
வழியில் வழி நடத்துவான். அதுவரை நாம் பட்டிமண்டபம் செய்யலாம்!
கண்ணன்
2010/3/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
இந்தத் தலையங்கத்திற்கு நன் ஒரு பதில் எழுதியிருந்தேனே!ரெ.கா.
----- Original Message -----From: srirangammohanarangan vSent: Thursday, March 11, 2010 9:53 PMSubject: Re: [MinTamil] Re: சுதந்திரம் பறிபோகிறது...?தினமணி தலையங்கம்
--
//ஆனால் நாளடைவில் நமது மூலாதாரங்கள் குறைந்து, பெருகி வரும்மக்கள் தொகையின் தேவைகளுக்கு இயற்கை வேளாண்மைபோதுமான உற்பத்தியை அளிக்காது என்று இன்று அச்சம் நிலவுகிறது.அதற்கான மாற்று வழிகளில் ஒன்றுதான் இந்த பி.ட்டி. அறிவியல்முறை.///
இது சரியான மற்றுவழி அல்ல என்பதே பிரச்சனை. பிடிக்கத்திரியின் பண்புகள் அதை உண்டக்கிய கம்பெனியை தவிர யாருக்கும் தெரியாது என்பது வெளிப்படையான உண்மை. அரசாங்கம் அவர்கள் விளைப்பொருட்களை அப்படியே அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்வதே பிரச்சனை. ஐயா, தொழில் நுட்பத்தை யாரும் எதிர்க்கவில்லை. அவசரகோலத்தில் செயல்படுவதையே எதிர்கின்றனர்.