Tamil NHM Keyboard - Extended

Yametazamwa mara 29
Ruka hadi kwenye ujumbe wa kwanza ambao haujasomwa

Vinodh Rajan

hayajasomwa,
27 Feb 2010, 15:17:2427/02/2010
kwa mintamil
அனைவருக்கும் வணக்கம்,

சில காலம் முன்பு, திருப்புல்லாணி அவர்கள் ”ஶ” (SHA) என்ற எழுத்து ஒரு பழைய நூலில் அதிகம் பயன்படுவதாகவும், அதை மின்னாக்கம் செய்து தட்டச்சிட வேண்டிய தேவை இருப்பதாகவும், எனினும் என்.ஹெச்.எம்’இல் இவ்வெழுத்து இல்லையென்றும் கூறி இருந்தார்.

அவரை ரொம்ப நாள் காக்க வைத்து விட்டு (அவர் மன்னிப்பாராக :-) ) இப்போது தான் ”ஶ” என்ற எழுத்தையும் இன்னும் சில குறியீடுகளை சேர்த்து ஃபோனட்டிக் விசைப்பலகையை என்.ஹெச்.எம்’க்காக உருவாக்கி உள்ளேன். 

ஶ’ஐ Z (Uppercase Z) என்ற விசைமூலம் பெற முடியும்.

விஶ்வாசம், ஶ்வேதகேது, ஶூன்யம், அவஶ்யம், ஶாரிபுத்ரன், அவலோகிதேஶ்வரன் என்ற பல சொற்களை இனி ஶ’கரம் கொண்டு எழுதலாம். பழைய நூல்களின் மின்னாக்கத்திலும் இது வெகுவாக பயன்படும்.

( ஶ’ என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு. ஶ எனப்து ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு வரை श’வுக்கு இணையாக பரவலாக பயன்பாட்டில் இருந்த ஒரு எழுத்து. இன்றும் கூட ஆங்காங்கே பயன்படுத்தப்படுகிறது. )

இதைத்தவிர்த்த பிற குறியீடுகள்:

௰ - பத்து - ~10

௱ - நூறு - ~100

௱ - ஆயிரம் - ~100

௵ - வருடம் - வ~

௴ - மாதம் - மீ~

௳ - நாள் (பிள்ளையாழ் சுழி)  - உ~

௸ - மேற்படி -    (நான் தமிழ் தட்டச்சு கற்கும் போது இதையும் சேர்த்து சொல்லித்தந்தார்கள் :-). ஐ’கார உயிர்க்குறியையும் ஷகரத்தின் இரண்டாம் பாதியை சேர்த்து தட்டச்சிட வேண்டும். ஷகரத்தின் பிற்பாதி மட்டுமே தட்டச்சு எந்திரத்தில் இருக்கும். முழு வடிவம் இருக்காது. ஷ வேண்டுமெனில் - உ + உடைந்த ஷ ; க்ஷ வேண்டுமெனில் - கூ + உடைந்த ஷ. தமிழ்த்தட்டச்சு செய்யப்பட்ட பல்வேறு நிலப்பத்திரங்களில் இந்த குறியீட்டை கண்டுள்ளேன். தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றும் உரை எழுத்துருக்களை கவனித்தீர்களேயானால், சில நேரங்களில் பழைய தட்டச்சு பாணி எழுத்துருவை பயன்படுத்து இருப்பின் ஷகரத்தின் முற்பாதி உகரம் போல் இருப்பதை கவனித்து இருக்கலாம்.காணலாம். விஜய் டி.வி.யில் ஒரு காலத்தில் இதை அதிகமாக பயன்படுத்தினர்.)

௺ - எண் - நீ~ (wI~)

௹ - ரூபாய் - ரூ~

௶ - செலவு - பு~

௷ - வரவு - எ~

(பி.கு: மேற்கண்ட மடல் விஸ்டா அலல்து விண்டோஸ் 7 ஆகியவற்றில் மட்டுமே ஒழுங்காக தெரியும். எக்ஸ்.பி’யில் தெரியாது. எக்ஸ்.பி.லதாவில் இவ்வெழுத்துக்கள் கிடையாது.  இதை நோட்பேட் முதலியவற்றை காபி செய்து e-Tamil OT அல்லது e-Tamil OTC ஆகிய ஃபாண்ட்களை பயன்படுத்தி படிக்கலாம்.. )

நன்றி
Tamil_Unicode_Extended.xml

வினோத் ராஜன்

hayajasomwa,
27 Feb 2010, 15:21:5027/02/2010
kwa மின்தமிழ்
இதை நிறுவுவது எப்படி:

1. என்.ஹெச்.எம். டாஸ்க்பார் ஐகான்’ஐ ரைட் கிளிக் செய்து, செட்டிங்க்ஸ்’ஐ
தேர்ந்தெடுக்கவும்

2. அதில் “கீ-மேப்” - இம்போர்ட் என்னும் பட்டனை அழுத்தி, டவுன்லோடு செய்த
ஃபைலை தேர்வு செய்யவும்

3. கீழுள்ள பட்டியலில் Phonetic - Extended என்று இருக்கும், அதை
தேர்ந்தெடுத்து, Toggle-Keyல் ஒரு ஷாட்கட் கீயை அஸைன் செய்து விடவும்.

4. கீழே ஓ.கே’வை கிளிக் செய்யவும்

V

>  Tamil_Unicode_Extended.xml
> 226KViewDownload

N. Ganesan

hayajasomwa,
27 Feb 2010, 15:32:3127/02/2010
kwa மின்தமிழ்

On Feb 27, 2:17 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> அனைவருக்கும் வணக்கம்,
>
> சில காலம் முன்பு, திருப்புல்லாணி அவர்கள் ”ஶ” (SHA) என்ற எழுத்து ஒரு பழைய
> நூலில் அதிகம் பயன்படுவதாகவும், அதை மின்னாக்கம் செய்து தட்டச்சிட வேண்டிய தேவை
> இருப்பதாகவும், எனினும் என்.ஹெச்.எம்’இல் இவ்வெழுத்து இல்லையென்றும் கூறி
> இருந்தார்.
>
> அவரை ரொம்ப நாள் காக்க வைத்து விட்டு (அவர் மன்னிப்பாராக :-) ) இப்போது தான்
> ”ஶ” என்ற எழுத்தையும் இன்னும் சில குறியீடுகளை சேர்த்து ஃபோனட்டிக்
> விசைப்பலகையை என்.ஹெச்.எம்’க்காக உருவாக்கி உள்ளேன்.
>
> ஶ’ஐ Z (Uppercase Z) என்ற விசைமூலம் பெற முடியும்.
>

நல்ல உகப்பு. 's என்றாலும் அவ்வெழுத்து வருவதுபோலும் சேர்த்தலாம்.

வடமொழி சூத்திரங்களைச் சரியாகத் தமிழில் எழுத இந்த
விசைப்பலகை உதவும்.

நா. கணேசன்

>  Tamil_Unicode_Extended.xml
> 226KViewDownload

thiruthiru

hayajasomwa,
27 Feb 2010, 15:42:4627/02/2010
kwa மின்தமிழ்
மிக்க நன்றி திரு வினோத்! வெகு ஶுலபமாக உள்ளது. ௸ மட்டும் விட்டுப்
போயுள்ளது. (key stroke)
ரொம்பவே தொந்தரவு செய்து விட்டேன்.

srirangammohanarangan v

hayajasomwa,
27 Feb 2010, 15:46:0227/02/2010
kwa mint...@googlegroups.com
நன்றி   வினோத்.   நானும்   இறக்கிவிட்டேன்.  ஆனால்   எக்ச் பி  ஆனதால்   ஜன்னல்  பக்கத்தில்   ஒரு  சின்ன   மாம்பழம்   மட்டும்  வருகிறது,   ஜாக்கி  போட்டு   தூக்கி  Z  போட்டால்.  :--)))))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kannabiran Ravi Shankar (KRS)

hayajasomwa,
27 Feb 2010, 17:26:2227/02/2010
kwa மின்தமிழ்
கலக்கல்ஸ்!
வாழ்க!

//௵ - வருடம் ௴ - மாதம்//
சின்ன வயசுல நிகழும் மார்கழி மீ-ன்னு யாரோ படிக்கக் கேட்டு, அது என்ன மீ-
ன்னு வாத்தியாரைத் தொளைச்சி எடுத்திருக்கேன்! :))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Geetha Sambasivam

hayajasomwa,
27 Feb 2010, 20:21:5027/02/2010
kwa mint...@googlegroups.com
(நான் தமிழ் தட்டச்சு கற்கும் போது இதையும் சேர்த்து சொல்லித்தந்தார்கள் :-)//

உண்மை, நானும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அருமையான எளிமையான, தேவையான விளக்கம். உங்கள் முயற்சிக்குத் தலை வணங்குகிறேன். நல்லதொரு முயற்சி. என் போன்றவர்களுக்கு  இது தேவையும் கூட.

2010/2/28 Vinodh Rajan <vinodh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Geetha Sambasivam

hayajasomwa,
27 Feb 2010, 20:23:0027/02/2010
kwa mint...@googlegroups.com
எக்ஸ்.பி’யில் தெரியாது.//

ஓஹோ :((((((

2010/2/28 Vinodh Rajan <vinodh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Geetha Sambasivam

hayajasomwa,
27 Feb 2010, 20:24:2627/02/2010
kwa mint...@googlegroups.com
ஜன்னல்  பக்கத்தில்   ஒரு  சின்ன   மாம்பழம்   மட்டும்  வருகிறது//

ம்ம்ம்ம்ம்??? சீசன் ஆரம்பம் போல! பார்க்கணும், வருதானு! :(

2010/2/28 srirangammohanarangan v <ranga...@gmail.com>

வினோத் ராஜன்

hayajasomwa,
27 Feb 2010, 21:51:4727/02/2010
kwa மின்தமிழ்
ஹா ஹா.

ஒன்னும் பிரச்சினை இல்லை :-)

http://www.uni-hamburg.de/Wiss/FB/10/IndienS/Kniprath/INDOLIPI/Tamil.zip

இதிலுள்ள ஃபாண்டில் ஶ’கரம் உள்ளது. அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

V

On Feb 28, 1:46 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> நன்றி   வினோத்.   நானும்   இறக்கிவிட்டேன்.  ஆனால்   எக்ச் பி  ஆனதால்
> ஜன்னல்  பக்கத்தில்   ஒரு  சின்ன   மாம்பழம்   மட்டும்  வருகிறது,   ஜாக்கி
> போட்டு   தூக்கி  Z  போட்டால்.  :--)))))
>

வினோத் ராஜன்

hayajasomwa,
27 Feb 2010, 22:02:0827/02/2010
kwa மின்தமிழ்,freetamil...@googlegroups.com,santhav...@googlegroups.com,tamizh...@googlegroups.com
> மிக்க நன்றி திரு வினோத்! வெகு ஶுலபமாக உள்ளது. ௸ மட்டும் விட்டுப்
> போயுள்ளது. (key stroke)

ஆ, மறந்து விட்டேன்..

௸ - மேற்படி - ஷை~

V

வினோத் ராஜன்

hayajasomwa,
27 Feb 2010, 22:04:0627/02/2010
kwa மின்தமிழ்
//ரொம்பவே தொந்தரவு செய்து விட்டேன். //

ஹா ஹா. அதெல்லாம் ஒண்ணும் இல்லை :-)

V

thiruthiru

hayajasomwa,
28 Feb 2010, 01:02:1528/02/2010
kwa மின்தமிழ்
தமிழ் 99க்கும் தயார் செய்து விடுங்கள்.

வினோத் ராஜன்

hayajasomwa,
28 Feb 2010, 01:10:3428/02/2010
kwa மின்தமிழ்
தமிழ்99 பயன்படுத்துபவர்களும் ஜீவிக்கிறார்களா என்ன ? ;-)

V

Hari Krishnan

hayajasomwa,
28 Feb 2010, 01:52:3628/02/2010
kwa mint...@googlegroups.com

2010/2/28 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

தமிழ்99 பயன்படுத்துபவர்களும் ஜீவிக்கிறார்களா என்ன ? ;-)

V

பகலில் பக்கம் பாத்து பேசணும்; இணையத்தில் இறுக்க மூடிக்கணும்.  தமிழ்99க்கு டெரிடோரியல்--இல்லல்ல--எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல் சீஇஓ இயங்கிக் கொண்டிருக்கிறார்.  இங்கேதான் இருக்கிறார்.  பெரிய ஏரோப்ளேன் மேல குட்டி ஏரோப்ளேன் வச்சு உலகத்தைச் சுற்றிவரும் எலியப்பர் மேல் ஏறிவரும் ஒலியப்பர்.  முருகனிடம் மாம்பழம் பிடுங்கிக் கொண்டவர்.

ஆகவே, வினோதமானவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள்.....ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்.......... ;)

--
அன்புடன்,
ஹரிகி.

srirangammohanarangan v

hayajasomwa,
28 Feb 2010, 02:09:0528/02/2010
kwa mint...@googlegroups.com
ஹஹஹ்ஹஹாஆ!    அதான்  ஜன்னல்  கிட்ட   மாம்பழம்   இருந்துச்சா?    யார்  அந்த   புஸ்பக   விமான   ஒலியப்பரு?:--))))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

thiruthiru

hayajasomwa,
28 Feb 2010, 03:21:0528/02/2010
kwa மின்தமிழ்
குருவே! நான் ஜீவித்திருப்பதால்தானே இந்த வேண்டுகோள்!

Tthamizth Tthenee

hayajasomwa,
28 Feb 2010, 03:38:3428/02/2010
kwa mint...@googlegroups.com
திரு வினோத்ராஜன்  மிகவும் உபயோகமாக இருக்கிறது
 
மிகவும் நன்றி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/2/28, thiruthiru <raja...@gmail.com>:
குருவே! நான் ஜீவித்திருப்பதால்தானே இந்த வேண்டுகோள்!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Vinodh Rajan

hayajasomwa,
1 Mac 2010, 13:42:1501/03/2010
kwa mintamil,freetamil...@googlegroups.com,santhav...@googlegroups.com,tamizh...@googlegroups.com
http://www.tamilvu.org/Tamilnet99/keyboard.gif

The Special symbols have been mapped as per Tamil 99.

The extra /sha/ has been mapped to U

V

2010/2/28 Vinodh Rajan <vinodh...@gmail.com>:

--
http://tamilcc.org/thoorihai/thoorihai.php

Tamil_Unicode_Tamil99Extended.xml
Jibu wote
Mjibu mchapishaji
Sambaza
Ujumbe 0 mpya