மின் செய்தி மாலை டிசம்பர் 1 , 2009 -----சுகுமாரன்
Minseythi maalai DEC 1 , 2009 -- sugumaran
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் !
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான மகாதீபம், 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. இந்த மகாதீப விழாவுக்காக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்படுகிறது.
தீப விழாவில் 15 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருவண்ணாமலையில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அனைத்து மதத்தினரும் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு ஆணை !
தமிழக அரசு, `தமிழëநாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009' இயற்றி, அதன்படி கடந்த 24.11.2009 தேதியில் இருந்து தமிழகதëதில் நடைபெறும் பல மதஙëகளைசë சார்நëத இந்திய குடிமகëகளின் அனைத்து திருமணஙëகளையும் கடëடாயமாக பதிவு செயëய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வரும் நாளான 24.11.2009 முதல் நடைபெறும் திருமணங்களும், எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும் 90 நாட்களுக்குள் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதிமீறல் இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு வெளியீடு தாமதமாகும் !~
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
சென்ற வாரம் வியாழக்கிழமை அன்று, துபாய் ரியல் எஸ்டேட் துறையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் கடும் பாதிப்புக்குள்ளானது.
ரூ.15,000 கோடி
இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில், பல இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டிருந்தன. இந்நிறுவனங்கள் அனைத்துமாக, பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.15,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்திருந்தன.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடும் பல நிறுவனங்கள், பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வேண்டி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான `செபிக்கு' விண்ணப்பித்திருந்தன. இச்சூழ்நிலையில், துபாயில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டலாம் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது. எனவே, பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அவற்றின் பங்கு வெளியீட்டை ஒத்திப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து எஸ்.எம்.சி. கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவர் (பங்குகள்) ஜெகன்னாதம் துன்குட்டாலா கூறும்போது, "துபாய் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை ஒத்திவைக்கும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதுதான். குறிப்பாக, ஈமார் எம்.ஜி.எஃப். போன்ற நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை நிச்சயமாக ஒத்திப்போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.
பங்கு வெளியீடு
நடப்பு ஆண்டில், ஈமார் எம்.ஜி.எஃப். பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.3,800 கோடியை திரட்ட திட்டமிட்டிருந்தது. இதனை தொடர்ந்து சகாரா பிரைம் சிட்டி (ரூ.3,400 கோடி), லோதா டெவலப்பர்ஸ் (ரூ.2,700 கோடி), பீ.பி.டி.பி. நிறுவனம் (ரூ.2,000 கோடி), கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் (ரூ.500 கோடி) போன்ற நிறுவனங்களும் பெரிய அளவில் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன. ஆக, இந்தியாவில் செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அனைத்துமாக, பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையிலிருந்து ரூ.15,000 கோடியை திரட்ட திட்டமிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
டீ.எல்.எப்.
கடந்த 2007-ஆம் ஆண்டு, ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களான டீ.எல்.எஃப். மற்றும் பர்ஸ்வ்நாத் ஆகிய நிறுவனங்கள் பெரிய அளவில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு மூலதனச் சந்தையில் களமிறங்கின. ஆனால், தற்போது இவ்விரு நிறுவனப் பங்குகளின் விலை, வெளியீட்டு விலையை விட 70 சதவீதம் குறைந்து போயுள்ளது என பங்குச் சந்தை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த டீ.பீ. ரியாலிட்டி (ரூ.1,600 கோடி), ஆம்பியன்ஸ் (ரூ.1,100 கோடி), ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் (ரூ.600 கோடி), குமார் டெவலப்பர்ஸ் (ரூ.500 கோடி) ஆகிய நிறுவனங்களும் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டு வருகின்றன.
ஈமார் எம்.ஜி.எப். லேண்ட்
இந்தியாவில் செயல்படும் ஈமார் எம்.ஜி.எஃப். லேண்ட் நிறுவனமும், இவ்வாண்டு பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்நிறுவனமும் பங்கு வெளியீட்டை ஒத்திப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஈமார் எம்.ஜி.எஃப். லேண்ட் நிறுவனம், துபாயைச் சேர்ந்த ஈமார் பிராப்பர்டீஸ் பி.ஜே.எஸ்.சி. மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எம்.ஜி.எஃப். டெலவப்மெண்ட் ஆஃப் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டுடன் தொடங்கப்பட்டதாகும்.
துபாய் அரசுக்கு சொந்தமான, துபாய் வேர்ல்டு நிறுவனம் கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் கேட்டதையடுத்தே துபாயில் ஏற்பட்ட நிதி நெருக்கடி வெளி உலகுக்கு தெரிய வந்தது. இந்த நிலையில், ஈமார் பிராப்பர்டீஸ் பீ.ஜே.எஸ்.சி. நிறுவனத்தில், துபாய் அரசு அதிக அளவில் பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. எனவே, ஈமார் எம்.ஜி.எஃப். நிறுவனம் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள இதர நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்கள் எந்த அளவிற்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
மேலும், துபாய் நிதி நெருக்கடியால், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான `செபி'யும், இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கு உடனடியாக அனுமதி வழங்காது என்ற நிலைப்பாடும் உள்ளது.
ஈமார் எம்.ஜி.எஃப். நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையிலிருந்து ரூ.3,850 கோடியை திரட்டுவதற்கு அனுமதி வேண்டி `செபி'க்கு விண்ணப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதத்தை விட சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகம்: கருணாநிதி வருத்தம்
![]()

தீவிரவாதத்தை விட சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்தார்.
சாலை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மேலாண்மை குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது.
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் சரியான தருணத்தில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, சாலை விபத்துகளில் அதிகம் பேர் பலியாகின்றனர்.
சாலை பாதுகாப்பு குறித்து உணர்ந்துள்ள தமிழக அரசு, நகர்ப்புற போக்குவரத்து மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
80 சதவீத விபத்துகள்... சாலைகளில் நடக்கும் 80 சதவீத விபத்துகளில் பாதசாரிகள் சம்பந்தப்படுகின்றனர். மிகப் பெரிய நகரங்களில் வீடுகள் இல்லாத மக்கள் சாலையோரங்களில் தூங்கும் போது, விபத்துகளைச் சந்திக்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளில் இருந்ததை விட, வாகனப் பெருக்கம் இப்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், சாலைகளில் அளவு கிட்டத்தட்ட அப்போது இருந்த அளவுக்கே உள்ளது.
இரண்டு சக்கர வாகனங்களின் பெருக்கமும் குறிப்பிட்டத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இது, நகரங்களில் விபத்துகள் அதிகரிப்புக்கு காரணமாக அமைகின்றன.
தொழில் வளர்ச்சியால்... தொழில் வளர்ச்சியும் வாகனப் பெருக்கத்துக்கு ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளது. வர்த்தக ரீதியிலான கன்டெய்னர் போன்ற வாகனங்களால் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எனவே, நகரப்புற பகுதிகளில் போக்குவரத்து மேலாண்மையை மறுஆய்வு செய்வது அவசியமாகிறது.
தமிழக அரசின் சார்பில் அவசர கால மேலாண்மை சேவைகள் பிரிவு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் 32 சதவீதம் சாலை விபத்துகள் தொடர்புடையவையாகும்.
ஒவ்வொருவருக்கும்... சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை செயல்படுத்தும் பொறுப்பு காவல் துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே இல்லை. இதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு.
சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த அவற்றை பள்ளிப் பாடத்தில் அவசியம் இடம்பெறச் செய்ய வேண்டும்.
விளையாட்டுகள் மூலமும், ஓய்வு நேரங்களின் போதும் சாலை பாதுகாப்பு குறித்த தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.
தபால் தலை வெளியீடு... முன்னதாக, தமிழக காவல் துறையின் 150}வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி வெளியிடப்பட்ட ரூ.5 மதிப்புள்ள தபால் தலையை முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.
தபால் தலையை வெளியிட்ட தமிழக தலைமை தபால் அதிகாரி சக்கரவர்த்தி, தமிழக அரசு கோரிக்கை விடுத்த 7 மாதங்களுக்குள் இந்த தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான இரண்டு வண்ணங்கள் கலந்துதான் தபால் தலை அச்சிடப்படும். ஆனால், பலதரப்பட்ட வண்ணங்களைக் கலந்து இந்த தபால் தலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
உலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள் - பகுதி I
|
 அதே நீரில் இரண்டு முறை குளிக்க முடியாது என்பார்கள். இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய ஒப்புமைக்கு இதை பயன்படுத்தினாலும் தவறில்லை என்று எண்ண தோன்றுகிறது. அவ்வளவுக்கு விரைவான மாற்றங்கள் அறிவியல் துறையில், பதிய கண்டுபிடிப்புகளில் உருவாகி வருகின்றன. அறிவியல் கண்டுபிடிப்பு என்றவுடன் புதிதாக ஒரு பொருளை கண்டுபிடிப்பதை மட்டும் குறிக்கவில்லை. கண்டுபிடிப்பட்ட பொருட்களின் தரம், மதிப்பு, வசதிகள் ஆகியவற்றை முன்னேற்றி செலவு, மாசுபாடு, எரியாற்றல் குறைந்த பொருட்களை உருவாக்கும் முயற்சிகளும் அறிவியல் கண்டுபிடிப்பு தொடர்பானவையே. இன்று ஒரு பொருளை வாங்கிவிட்டு, இரண்டு திங்கள் கடந்த பின்னர் மீண்டும் அங்கு சென்றுபார்த்தால் நாம் வாங்கிய அதே பொருளில் உயர் தரமுடையவற்றை சந்தையில் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறு நாளும் மாறுபடும் முன்னேற்றங்களை அறிவியல் துறை சந்தித்து வருகிறது. ஆனால் பல கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகவும், இன்று உலகளவில் பயன்படுத்தப்படும் சில முக்கிய கண்டுபிடிப்புகள் பலவுண்டு. அவற்றில் உலகளவில் மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தி வரும் சில அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்கள் உங்களுக்காக.
உலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள் - பகுதி I
|
விமானப் பணத்தின்போது விமானத்தில் பழுது ஏற்பட்டுவிட்டால் பயணியரின் உயிரை பாதுகாக்கும் விதத்தில் வான்குடைகள் உள்ளன. வான்குடைகளை உடலில் கட்டிக்கொண்டு குதித்து தப்பித்துவிடலாம். கப்பலில் ஏதாவது விபத்து ஏற்பட்டுவிட்டால் அதில் பயணம் செய்வோரை காப்பாற்றும் விதமாக உயிர் காக்கும் படகுகள் உள்ளன. அதேபோல கார்களில் பயணம் செய்கின்றபோது விபத்து ஏற்பட்டுவிட்டால் உயிர் காக்கும் கருவியாக விபத்துக் காப்புக் காற்றுப்பை பயன்படுத்தப்படுவது, உலக அளவில் மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. கார் விபத்து ஏற்பட்டவுடன் காற்றுப்பை ஒன்று விரிவடைந்து, உயிர் சேதத்தை தடுக்கும் விதமாக அமைக்கப்படுகின்றது. 1960 களில் காற்றை பயன்படுத்தி பாதுகாப்பு வசதிகள் வாகனங்களில் பயன்பட தொடங்கினாலும், 1971 யில் தான் மெர்சிடஸ் பென்ஸ் வாகன நிறுவனம் வெற்றிகரமான தொழில்நுட்ப சாதனையை நிகழ்த்தி வெளியே தெரியாமல் உள்ளடக்கப்பட்ட காற்று அமைப்புக்களை வாகனங்களில் பயன்படுத்த தொடங்கியது. 1981 ஆம் ஆண்டு மெர்சிடஸ் பென்ஸ் எஸ் ரக காரில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பொருத்தப்படும் கருவியாக விபத்துக் காப்பு காற்றுப்பை மாறியது. தற்போது விபத்துக் காப்புக் காற்றுப்பை உலகளவில் புதிய கார்களின் தரமிக்க ஒரு கருவியாக மாறியுள்ளது.
அடுத்ததாக, பல நாடுகளில் பீர் மதுவகை உடலுக்கு அதிக தீங்கிழைக்காத மதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மது வகைகள் பார்லி, கோதுமை, உலர்ந்த பூக்கள் மற்றும் நீர் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இடைக்கால வரலாற்றில் பசைப் பொருட்கள், மாட்டின் பித்தப்பை மற்றும் பாம்பு நச்சு ஆகியவை பீர் மதுவில் சேர்க்கப்பட்டது. அதிக நாட்கள் கெடாமல் இருக்கவும், போதையை அதிகரிக்கவும் ஐயத்துக்குரிய இப்பொருட்கள் சேர்க்கப்ட்டதாக கூறுகின்றனர். ஆனால் 1516 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் பிரபு குடும்பத்தை சேர்ந்த நான்காம் Wilhelm மற்றும் ஐந்தாம் Ludwig சகோதரர்கள் இத்தகைய ஐயத்துக்குரிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்டும் பீர் மது வகைகளுக்கு தடையாணை பிறப்பித்தனர். அதன் பிறகு தான் இக்கால பீர் மது வகைகள் தயாரிக்கப்பட்டதாம். இது ஏற்படுத்தும் உலக செல்வாக்கு என்னவென்றால் ஜெர்மனி நாட்டின் பீர் மது சுகாதார சட்டம் தான் இன்றுவரை உலகிலுள்ள பீர் மது வகைகளின் உயர்தரத்தை மதிப்பிடும் அளவுகோலாக உள்ளதே.
|

உலகளவில் அதிக செல்வாக்கை ஏற்படுத்தும் இன்னொரு கண்டுபிடிப்பு சி கால்கள் என்ற Microprocessor என்ற நுண்செயலி இணைந்த செயற்கை கால்கள். உடல் சவாலுடையோருக்கு தான் அவ்வுறுப்புக்களின் உண்மையான பயன்பாடு தெரியும். எக்குறையும் இல்லாதோர் அதைபற்றி கண்டு கொள்வதில்லை. குறிப்பாக நமது கைகயில் உள்ள 5 விரல்களில் பெரு விரலை பயன்படுத்தாமல் ஒரு பொருளை எடுக்க முயற்சியுங்கள். அப்போது தான் பெரு விரலின் தனிப்பட்ட பயன்பாடு என்னவென்று தெரியும். அதுபோல கால்களில் சவாலுடையோர் கீழிறங்குவது, நடந்து செல்வது போன்ற எல்லா செயல்பாடுகளுக்கும் சிந்திக்க தான் வேண்டும். அதனை எளிதாக்கும் வகையில் செயற்கை கால் பொருத்தப்படுகிறது. செயற்கை காலில் மிக முக்கியமானது காலின் முழங்கால் மூட்டுப் பகுதி. கட்டை போன்ற செயற்கை கால் முழங்கால் மூட்டை மடக்கி, எழும்புகின்ற வகையில் செயல்பட முடியாமல் நேராக இருக்கும். இதை கொண்டு நடமாடுகின்ற சிலரை நாம் சந்தித்திருக்காலம். செயற்கை கால் பொருத்துகின்ற மருத்துவ நுட்பத்தில் அறிவார்ந்த கட்டுப்பாடு கொண்ட மற்றும் தேவைகேற்ப செயல்படும் திறமை கொண்ட செயற்கை காலான சீ கால் என்பது, கால் உறுப்புகளில் சவால் கொண்டு இயங்க துன்பப்படுகின்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை கொண்டு வந்தது. இதன் மூலம் கால் மூட்டு இயக்கங்கள் மிகவும் எளிதாகின. Microprocessor எனப்படுகின்ற நுண்செயலியை பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்ற இந்த செயற்கை கால்கள் எல்லா வகையான இயக்கங்களுக்கும் ஏதுவாக அமைகின்றது. 1997 ஆம் ஆண்டில் Otto Bock நலவாழ்வு அமைப்பு உலக எலும்பியல் மற்றும் புனர்வாழ்வு தொழில் நுட்ப மாநாட்டில் புத்தாக்கமான செயல்பாட்டை முன்வைத்தது. அதன் பின்னர் தான் வினாடிக்கு 50 முறை செயல்படும் உணர்வறிகின்ற கட்டுபாட்டு கருவிகள் மற்றும் Microprocessor எனப்படுகின்ற நுண்செயலி இணைக்கப்பட்ட செயற்கை கால்களான சி கால்கள் மனிதனின் இயங்கத்திற்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏதுவானதாக பயன்படுத்தப்பட தொடங்கின. ஜெர்மனியின் உயர்ந்த சமூக காப்பீட்டு கழகத்தின் விதிகளின் படி, செயற்கை கால்கள் பொருத்தப்படுவது சட்டபூர்வ உரிமையாகியுள்ளது. உலகளவில் 11,000 பேர் தற்போது இத்தகைய செயற்கை கால்களை நம்பி வாழ்கின்றனர். அத்தோடு செயற்கை கால்களை பயன்படுத்தும் மக்கள் உலகளவில் பெருகி வருகிறார்கள்.
தேவகுருநாதர் திருக்கோயில் - தேவூர்

இறைவன் : தேவகுருநாதர் (தேவபுரீசுவரர்,கதலிவனேசுவரர்)
இறைவி : தேன்மொழியம்மை (மதுரபாஷிணி)
இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதாலும் , குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதாலும் தேவகுருநாதர் என்று இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். இத்தலத்தில் பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
மூன்று நிலைகளை உடைய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. மூலவர் தேவகுருநாதர்(தேவபுரீசுவரர்), இறைவி தேன்மொழியாள்(மதுரபாஷினி) ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார்.
இதன் வேறு பெயர்கள் கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவபுரம் என்பன. ஊரின் நடுவே கோயில் உள்ளது. இங்கு விநாயகர், முருகர், அகலிகை வழிபட்ட லிங்கம், கௌதமர் வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி, அறுபத்துமூவர், நவக்கிரகம், நடராஜர்சபை, இந்திரலிங்கம், பைரவர், சந்திரன், சூரியன், சோமஸ்கந்தர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
திருத்தலத்தின் சிறப்புகள் :
தலமரம் :
கல்வாழை
இத்தலத்து ஸ்தலவிருட்சம் கல்லிலேயே வளரும் அதிசய வாழைமரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது. தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது தேவலோகத்தில் உள்ள வெள்வாழையும் இறைவனை இங்கு வழிபட்டு ஸ்தல விருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்துவிட்டது. இந்த வாழைமரத்திற்கு இன்றும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்த ஸ்தல விருட்சத்தின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. கல்லில் வளர்வதால் இவ்வாழைமரம் கல்வாழை என்று அழைக்கப்படுகிறது.
திருத்தல தீர்த்தம் :
தேவ தீர்த்தம், வருண, கௌதம, மிருத மற்றும் சஞ்சீவினி முதலிய தீர்த்தங்கள்.
திருத்தல பாடல்பெருமைகள் :
திருஞானசம்பந்தர்,நாவுக்கரசர்,மாணிக்கவாசகர்,வள்ளலார்,அருணகிரிநாதர்,சேக்கிழார் ஆகியோரால் பாடப்பெற்ற தலம்.
வழிபாட்டு பலன்கள் :

- குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட ஸ்தலம் இது. செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம்.
- இந்திரன் தனது இந்திர பட்டத்தை இழந்தபோது இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்றான். மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான். ஆகையால் பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் என தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும்.
- இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர்வரும் என்று எண்ணுபவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும்.கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி இறைவன் மேல் படுவதை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள்.
- திருமணமாகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் தேவூர் தலத்து இறைவனை திங்கட்கிழமைகளில் வழிபாட்டால் பலன் பெறலாம்.
திருத்தல இருப்பிடம்:
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவூரில் இத்தலம் உள்ளது.நாகை - திருவாரூர் சாலையில் உள்ள கீழ்வேளூருக்கு தெற்கே 5 கி.மீ தொலைவில் திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் தேவூர் உள்ளது.திருவாரூரிலிருந்து18 கி.மீ தொலைவிலும்,நாகப்பட்டினத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
திருத்தல முகவரி:
தேவபுரீஸ்வரர் ஆலயம்,
தேவூர் அஞ்சல், கிழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு - 611 109
http://tamilvaasal.blogspot.com/2009/07/blog-post_4364.html
(செய்திகள் தினமணி தினத்தந்தி ,தினகரன் போன் ற செய்தி இதழில. இருந்து திரட்ட படுகின்றன .தலைப்புகள் நடை முதலியன மட்டும் சிறிது மாற்றப்படுகிறது .அந்த இதழ்களுக்கு நன்றி
|
மக்கொண்டு வந்தது. இதன் மூலம் கால் மூட்டு இயக்கங்கள் மிகவும் எளிதாகின. Microprocessor எனப்படுகின்ற நுண்செயலியை பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்ற இந்த செயற்கை கால்கள் எல்லா வகையான நுண்செயலி இணைக்கப்பட்ட செயற்கை கால்களான சி கால்கள் மனிதனின் இயங்கத்திற்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏதுவானதாக பயன்படுத்தப்பட தொடங்கின. ஜெர்மனியின் உயர்ந்த சமூக காப்பீட்டு கழகத்தின் விதிகளின் படி, செயற்கை கால்கள் பொருத்தப்படுவது சட்டபூர்வ உரிமையாகியுள்ளது. உலகளவில் 11,000 பேர் தற்போது இத்தகைய செயற்கை கால்களை நம்பி வாழ்கின்றனர். அத்தோடு செயற்கை கால்களை பயன்படுத்தும் மக்கள் உலகளவில் பெருகி வருகிறார்கள்.
தேவகுருநாதர் திருக்கோயில் - தேவூர்

இறைவன் : தேவகுருநாதர் (தேவபுரீசுவரர்,கதலிவனேசுவரர்)
இறைவி : தேன்மொழியம்மை (மதுரபாஷிணி)
இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதாலும் , குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதாலும் தேவகுருநாதர் என்று இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். இத்தலத்தில் பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
மூன்று நிலைகளை உடைய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. மூலவர் தேவகுருநாதர்(தேவபுரீசுவரர்), இறைவி தேன்மொழியாள்(மதுரபாஷினி) ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார்.
இதன் வேறு பெயர்கள் கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவபுரம் என்பன. ஊரின் நடுவே கோயில் உள்ளது. இங்கு விநாயகர், முருகர், அகலிகை வழிபட்ட லிங்கம், கௌதமர் வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி, அறுபத்துமூவர், நவக்கிரகம், நடராஜர்சபை, இந்திரலிங்கம், பைரவர், சந்திரன், சூரியன், சோமஸ்கந்தர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
திருத்தலத்தின் சிறப்புகள் :
தலமரம் :
|
|
|
|
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !