சித்தர் வழியில்..... பூண்டி மகான்#1

268 views
Skip to first unread message

Krishnan S

unread,
Dec 12, 2010, 7:20:12 PM12/12/10
to tamil_ulagam, mint...@googlegroups.com, Krishnan S

சித்தர் வழியில்..... பூண்டி மகான்

வட ஆற்காடு மாவட்டம் வேலூருக்கு தெற்கே செல்லும் நெடுஞ்சாலை பாதையிலுள்ள

போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசபாக்கத்தில் வாழ்ந்தவர்.இவர் சென்ற

நூற்றாண்டின் வாழ்ந்த சித்தர் என்பதால் இவரைப் பற்றி பல அமானுஷ்ய தகவல்கள்

போளூர் ,கலசபாக்கம், பூண்டி போன்ற  இடங்களில் வாழும் மக்களால் பிரமிப்பாக

பேசப்படுகிறது.

  
நீண்ட தாடியும் தீட்சண்ய பார்வையுமாக மிக எளிமையான மனிதரைப் போல்

காட்சியளிக்கும் சித்திரை அவதாரப் புருஷனாக அந்தப்பகுதி மக்கள் பக்தியோடு

வணங்கினார்கள்.

கலசபாக்கம் என்பது ஆற்றங்கரைமான கிராமம் ஆகும். தொடர்ந்து ஒருநாள்

முழுதும் மழை பெய்தால் ஆறு முழுதும் வெள்ளம் பெருகி காட்டாறு போல்

பொங்கி பெருக்கெடுத்து ஓடும்.

 பூண்டி மகான் அந்த கிராமத்திற்கு வந்தபோது யாரோ ஒரு பித்தன் என்பது

போலத்தான் அந்த கிராம மக்கள் பார்த்தனர்.ஆனால் அவருக்குள்ள அமானுஷ்ய

சக்தியும், அவர் தந்த திருநீறு மற்றும் மூலிகை இலைகளால் எந்த நோயையும்

குணப்படுத்தி அக்கிராம மக்களை காத்து வந்தார். இதனால் பாமரமக்களும்,  

மற்றவர்களும் அவரை தேடியும், நாடியும் வந்து வணங்கி அன்பு செலுத்த

ஆரம்பித்தனர். அந்த ஆற்றங்கரை மணல் மேட்டிலே அமர்ந்து தியானத்தில்

ஆழ்ந்திருப்பார்.

ஒருசமயம், தொடர்ந்து வானம் பெய்த்தால் மழை நின்று போனது. மழை இல்லாத

காரணத்தால் பயிர் தொழில்விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் வறுமைச்

சூழலில் வேதனையும், அவதியும் பட்டனர், ஊரின் கிராம  முன்சீப் கிராம மக்களை

ஒன்று கூட்டி , கிராமத்தைக் காப்பாற்றும் படி நாளை மகானிடம் சென்று

முறையிடலாம் என்று முடிவு செய்தனர்.

அன்றிரவு.., முன்சீப் மகானிடம் எப்படி கேட்பது....,அவர் தியானத்தால் மழை பெய்யுமா?

அவருக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறதா? உண்மையிலேயே அவர் சித்தர்தானா? என்று

பலவாறு சிந்தித்த வண்ணம் தூங்கிவிட்டார். நள்ளிரவு..., ஆழ்ந்த தூக்கத்திலிருந்த போது,

யாரோ கன்னத்தில் மென்மையாக தட்டுவது போல் உணர...எதிரே மஞ்சள் நிற ஒளியோடு

மகான் நின்றிருந்தார்.

‘’
என்ன முனிசீப்.., இந்த மகான் நிஜமாகவே சித்தனா? இவனுக்கு அந்தளவு சக்தி இருக்கா!

இவன்கிட்டே போய்  கேட்டா மழை பெய்யுமான்னு நினைக்கிறியா? கேட்டார்.

இது கனவா... நிஜமா என்று உணர்ந்திடும் நிலையில்லாத முன்சீப் இருந்தார்.
ஐயா..., தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் கடவுள் என நான் நம்புகிறேன். என்னை

மன்னித்து விடுங்கள்..பணிந்து வேண்டினர்.

’’என்ன முனிசீப்  பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... ஒரு செயலை செஞ்சு

முடிக்கறதுக்கு முன்னாடி எப்படி நம்பமுடியும்? இது இயற்கைதானே!  சரி... சரி இப்ப

எழுந்து உன் வீட்டு வாசலுக்குப் போ நான் நிஜமா பொய்யான்னு தெரியும்...

என்று சொல்ல அடுத்த நொடி ஏதோ உணர்ந்தவராக முனிசீப் சடாரென எழுந்து

உட்கார்ந்தார்.  அப்படி என்றால் இவ்வளவு நேரம் சித்தர் நம் எதிரில் நின்று

பேசியது கனவா? ஆனால்,அது கனவாக தெரியவில்லையே..., நிஜத்தில் நடப்பது

போலல்வா இருந்தது ‘’?  என்று வியந்து யோசித்தபடி

வீட்டு வாசலுக்கு வந்தார். அப்போது லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அடுத்த சில

விநாடிகளில் பளீர் என்று மின்னல் வெட்டி மழை வலுக்க ஆரம்பித்தது. கொஞ்ச

கொஞ்ச வலுத்த மழை பேய் மழையாகி, இடி மின்னலுடன் பெரும் மழையாகியது.

நள்ளிரவு துவங்கி, விடியல் வரை அடைமழையாய் பெய்ததால் பதினைந்து ஆண்டுகள்

மழையின்றிகாய்ந்து கிடந்த ஆற்றில் வெள்ளம் வர துவங்கியது.

விடிந்ததும் மனசு முழுக்க சித்தரின் நினைவுகள் நிறைந்திருந்தது. நடந்த விபரங்களை
 ஊர் மக்களிடம்
கூறி, அவரை காண ஆற்றங்கரக்குச் சென்றார்.அங்கே சித்தர் இல்லை.
பலவிடங்களில் தேடியும்
சித்தர் காணவில்லை. அப்போது கூட்டத்திலிருந்த சிறுவன்,
‘’அங்க பாருங்க சாமியார் உட்கார்ந்திருந்த இடத்திலே மண் மூடியிருக்கு..; என்று கூற
மண் மூடிய இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். சிறிது
நேரத்தில் மண்ணுக்கடியில் இருந்த
 சித்தரை வெளியே தூக்கி எடுத்தனர். அதிர்ச்சியில் எல்லோரும்
நெகிழ்வாக கண்கலங்கி.....,
சட்டென்று கண் திறந்தார்.


’’
போதுமா... நீங்க கேட்ட மாதிரி மழை பெய்துவிட்டது...’’ என்று கூற ஊர் மக்கள் யாவரும்
நெகிழ்வாக
கரம் கூப்பி வணங்கினர்..

-எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

Dr M.D.Jayabalan

unread,
Dec 15, 2010, 11:56:43 AM12/15/10
to மின்தமிழ்
பூண்டி சாமியாரை நானும் சில நண்பர்களும் 1981 கடைசியில் அல்லது 1982
முதலில் சென்ற்ய் பார்த்தோம. ஒரு வீட்டுத்திண்ணையில் காலை நீட்டிய படி
அமர்ந்திருந்தார். கால் சற்று வீங்கிப் பழுத்தது போல் தோன்றியது. சிலர்
கொடுத்த பழங்களை வாங்கி உண்டார். பெரிதும் மௌனமாகவே இருந்தார். சில சமயம்
மற்ரவர் கொடுத்த பீடி, சிகரெட்டையும் புகைத்தார்.

பிற்பகலில் என் நண்பர் ஒருவர் என்னிடம் “ அவரிடம்போய் பாதரசமணி ஒன்று
தரச்சொல்லிக் கேள் என்றார். முதலில் மறுத்த நான் பின்னர் சரி என்று
சென்று கேட்டேன். “எஙிருந்து வருகிறீர்கள்?’ என்றார்.
“செய்யாற்றிலிருந்து” என்றேன். உடனெ அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “
அவனுக்கு இதே வேலையாய்ப் போய்விட்டது. அவன் அனுப்பினானா?’ என்று
கேட்டார். எனக்கு யார் என்று புரியவில்லை. நான் அதுபோல் எதுவுக் இல்லை.
நானாகத்தான் கேட்டேன் என்றேன். “என்னிடம் அது இல்லை” என்று சொல்லி என்னை
அனுப்பிவிட்டார்.

அதன் பின்னணி பற்றிப் பின்னர் கேட்டறிந்தேன். பூண்டியில் அவர் நிலை
பெறுவதற்கு முன்னா. செய்யாற்றில் (திருவத்திபுரம்) ச்றிது காலம்
தங்கியிருந்தார். பின்னர் ஏதோ காரணமாக செய்யாற்றின் வழியே நடந்து சென்று
கலசபக்கம் பூண்டியில் தங்கிவிட்டாராம். அவருடம் நெருங்கிப் பழகிய ஒருவர்
அவரிடம் ரஸ மணி கேட்டு வருவதுண்டாம். அதனால் தான் அவருக்கு ஒரு எரிச்சல்.

எம்.டி.ஜெயபாலன்

On Dec 13, 5:20 am, Krishnan S <krishnan.sin...@gmail.com> wrote:
> *சித்தர்** **வழியில்..... பூண்டி மகான்**
> *

Krishnan S

unread,
Dec 15, 2010, 7:57:30 PM12/15/10
to mint...@googlegroups.com, Dr M.D.Jayabalan
அன்புள்ள திரு, எம்.டி.ஜெயபாலன் அவர்களுக்கு
,வணக்கம்.
பூண்டி சாமியாரை பற்றி தங்கள் அனுபவங்களை எங்கோடு பகிர்ந்தமைக்கு மிக்க.
சித்தர்கள் சித்ததைக் கடந்தவர்கள்.
அவர்களின் அறிவுரை கேட்டு நடப்பின் இவ்வளவு  தொல்லைக்கு உட்பட
மாட்டோம்.
ரச மணி யாருடம் இருக்கவேண்டும்,அல்லது சேர வேண்டும் என்ற ஒரு
நியதியுண்டு. தவறான நபர்களுக்கு போய் சேர்ந்தால் தீமை.

நன்றி,
அப்[பொடு
கிருஷ்ணன்
சிங்கை

2010/12/16 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>
பூண்டி சாமியாரை நானும் சில நண்பர்களும் 1981 கடைசியில் அல்லது 1982
முதலில் சென்ற்ய் பார்த்தோம. ஒரு வீட்டுத்திண்ணையில் காலை நீட்டிய படி
அமர்ந்திருந்தார். கால் சற்று வீங்கிப் பழுத்தது போல் தோன்றியது. சிலர்
கொடுத்த பழங்களை வாங்கி உண்டார். பெரிதும் மௌனமாகவே இருந்தார். சில சமயம்
மற்ரவர் கொடுத்உத பீடி, சிகரெஹொட்டையும் புகைத்தார்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

Kamala Devi

unread,
Dec 16, 2010, 9:26:24 AM12/16/10
to mint...@googlegroups.com
இந்த அனுபவம் நல்ல இடுகை
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

--

Reply all
Reply to author
Forward
0 new messages