அடியளந்தான் யார்?

26 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 26, 2011, 1:53:40 AM11/26/11
to mintamil
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

                               - எண்: 610

இக் குறளுக்கான புதிய விளக்கத்தினை கீழ்க்காணும் சுட்டியில் படிக்கலாம்.


http://thiruththam.blogspot.com/2011/11/blog-post_25.html


விருப்பமுள்ளவர்கள் படித்துத் தங்கள் கருத்துக்களைக் கூறவும்.


-
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

N. Ganesan

unread,
Nov 26, 2011, 6:28:04 AM11/26/11
to மின்தமிழ்
On Nov 26, 12:53 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
> தாஅயது எல்லாம் ஒருங்கு.
>
>                                - எண்: 610
>
> இக் குறளுக்கான புதிய விளக்கத்தினை கீழ்க்காணும் சுட்டியில் படிக்கலாம்.
>
> http://thiruththam.blogspot.com/2011/11/blog-post_25.html
>
> விருப்பமுள்ளவர்கள் படித்துத் தங்கள் கருத்துக்களைக் கூறவும்.
>

விஷ்ணு - விள்-/விண்ணு/விட்டு என்னும் தமிழ் (த்ராவிடச்) சொல்
என மொழியியல் முனைவர்கள் எழுதியுள்ளனர். பிரபஞ்சத்தின்
நிறம் கறுப்பு. அதுவே நாராயணனின்/நாளணன்/நாரணனின் நிறமும்
கூட. நாள் = கருமை. விஷ்ணு உலகம் தாண்டினார் என்பது
இந்தியாவிலே இருந்த தொன்மையான புராணம். எல்லா மதங்களும் பிறப்பதன்
முன்னரே இருந்த தொன்மம். எல்லா மதத்தாரும் அறிவர்,

திருக்குறளை எல்லா மதத்தாருக்கும் செக்யுலர் ஆக்க
விஷ்ணு உலகம் தாவினார் என்ற வள்ளுவர் குறளை யாரும்
மாற்றத் தேவையில்லை என்பது அடியேன் கருத்து.
Vishnu the solar deity par excellence in Indic religions, the sky
bird, Garuda,
being his symbol. Trivikrama avatar captures the nature of the solar
deity
who usually holds lotuses in both his hands, which blossom during the
sunrise,
and also his eyes are lotuses - raajiivalocana. Trivikrama - measuring
the Universe with his feet - refers to the sun rise, staying right
above the head
during the Noon, and then the sunset - the three stages of the Sun
every day.

சூரியனுக்கு உருவகம் திரிவிக்ரமன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 26, 2011, 7:02:20 AM11/26/11
to மின்தமிழ்

On Nov 26, 5:28 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 26, 12:53 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
>
> > மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
> > தாஅயது எல்லாம் ஒருங்கு.
>

அடியளந்தான் = ஆதவன்.

குறட்பொருள்:
சோர்விலாது உழைக்கும் மன்னன் கதிரவன் காலையில் குணக்கில்
உதித்து, மேற்சென்று, குடக்கில் மறைகிற வரை ஒளிபாய்ச்சும்
எல்லா நிலத்தையும் தன் வெண்கொற்றக் குடைக் கீழ் கொணர்வான்.

இக்குறளுக்கு உதாரணம் 19-ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்திய
பிரிட்டிஷ் பேரரசு. "The sun never sets in the British empire."
19-ஆம் நூற்றாண்டின் மடியிலாமைக்கு நல்ல உதாரணம் கடற்படை ஆளுமை,
இல்லாவிடில் உலகம் இன்று பிரெஞ்சு பேசும் - ஆங்கிலம் பேசாது.
http://en.wikipedia.org/wiki/Napoleonic_Wars
http://en.wikipedia.org/wiki/Horatio_Nelson,_1st_Viscount_Nelson
http://en.wikipedia.org/wiki/French_Navy
http://en.wikipedia.org/wiki/Royal_Navy

Reply all
Reply to author
Forward
0 new messages