வள்ளுவர் எந்த நூலைக் குறிப்பிடறார்?

41 views
Skip to first unread message

amachu

unread,
Oct 4, 2009, 10:28:20 PM10/4/09
to mint...@googlegroups.com
திருக்குறளில்,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் "நூலோர்"
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் "நூல்"மறப்பர்
காவலன் காவான் எனின்

என்கிற போது வள்ளுவர் மேற்கோளிடும் நூல் எது?

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Oct 5, 2009, 12:15:06 AM10/5/09
to மின்தமிழ்

தேவநேயப் பாவாணர் உரையில் இதற்கு ஒரு விளக்கம் உள்ளதாக நினைவு.

நா. கணேசன்
> --
>
> ஆமாச்சு

Hari Krishnan

unread,
Oct 6, 2009, 12:00:00 AM10/6/09
to mint...@googlegroups.com


2009/10/5 N. Ganesan <naa.g...@gmail.com>



தேவநேயப் பாவாணர் உரையில் இதற்கு ஒரு விளக்கம் உள்ளதாக நினைவு.

நா. கணேசன்


காந்தி ராட்டையில் நூத்ததைத்தான் சொல்றார்னு கரிதிமாற் பலைஞர் சொல்லியிருப்பதாகச் யாரோ சிலர் சொன்னார்கள் என்று எனக்கும் லேசான நினைவுதான்.  :D 


--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Oct 6, 2009, 12:12:32 AM10/6/09
to mint...@googlegroups.com


2009/10/5 amachu <rama...@amachu.net>
ஆங்கிலத்தில் Text என்று கேப்பிடல் டி போட்ட டெக்ஸ்ட்டுக்கு பைபிள் என்று பொருள்.   

வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளு மாயவே
வெல்லு ஞானம் விஞ்சி யோர்செய் மெய்ம்மை நூல்கள் தேயவும்
சொல்லு மிவ்வ னைத்தும் வேறு சூழு நன்மை யும்தர
வல்ல நூல்கெ டாது காப்பள் வாழி யன்னை வாழியே

என்று பாரதி சொல்லும்போது, வள்ளுவர் எந்த நூலைச் சொன்னாரோ அதே நூலைத்தான் சொல்கிறான் என்பதில் ஐயமில்லை.  குறைந்தபட்சம் எனக்கு.  கேள்வியைக் கேட்டிருப்பவர் ஆமாச்சு என்பதால் அவரளவுக்கு எனக்குத் தெளிவு போதாது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.  

N. Ganesan

unread,
Oct 6, 2009, 7:24:56 AM10/6/09
to மின்தமிழ்

பரிமேலழகர் ஓர் உரை தருகிறார்: பசுக்கள் பால்தருவது குன்றினால்
பிராமணர் மந்திரம், கல்பம் ஓதமாட்டார். ஹோமங்கள் நடக்காமையால்
வானம் பெய்யாது என்கிறார். ”பசுக்கள் பால் குன்றியவழி அவி
இன்மையானும், அது கொடுத்தற்கு உரியார் மந்திரம், கற்பம் என்பன
ஓதாமையினும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயல்
ஒல்லாது என்பதாயிற்று”

இப்பொருள்தானா வள்ளுவர் உள்ளம்? என்ற கேள்வி எழுகிறது.

திவாகர நிகண்டைப் பார்க்கலாம். வணிகர்க்கும், வேளாண்மாந்தருக்கும்
அறுதொழில்கள் இன்னின்ன என்று சொல்லப்படுகிறது. அந்தத்
தொழில்கள் அழிந்துவிடும். அந்தத் தொழில்நுட்ப நூல்கள்
பயன்படாமையால் அவற்றைத் தெளிந்து பயன்படுத்துவோர்
குறைவர், மறப்பர்.

நாட்டில் மழையே பெய்யாவிட்டால், பஞ்சம் தலைவிரித்தாடும்.
பசுக்கள் வற்றிப் போகும், (எத்தியோப்பியா பஞ்சத்தில்
ஆக்கள் இறந்துகிடந்ததைப் பார்த்தோமே). ஒவ்வொரு வருணத்திற்கும்
ஆன தொழில்நுட்பநூல்கள் பயன்படுத்துவோர் இன்றி,
நிபுணர்கள் பலபக்கம் சென்றுவிடுவதால் அந்நூல்களை
மறந்துவிடுவார்கள்.

ஜைந உரையில் என்ன சொல்கிறது?
பாவாணர் உரையில் என்ன சொல்கிறார்?

amachu

unread,
Oct 6, 2009, 8:46:52 AM10/6/09
to mint...@googlegroups.com
On Tue, 2009-10-06 at 04:24 -0700, N. Ganesan wrote:
> On 4 Oct, 21:28, amachu <ramada...@amachu.net> wrote:
> > ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் "நூல்"மறப்பர்
> > காவலன் காவான் எனின்
> >
> > என்கிற போது வள்ளுவர் மேற்கோளிடும் நூல் எது?
> பரிமேலழகர் ஓர் உரை தருகிறார்: பசுக்கள் பால்தருவது குன்றினால்
> பிராமணர் மந்திரம், கல்பம் ஓதமாட்டார். ஹோமங்கள் நடக்காமையால்
> வானம் பெய்யாது என்கிறார். ”பசுக்கள் பால் குன்றியவழி அவி
> இன்மையானும், அது கொடுத்தற்கு உரியார் மந்திரம், கற்பம் என்பன
> ஓதாமையினும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயல்
> ஒல்லாது என்பதாயிற்று”
>
> இப்பொருள்தானா வள்ளுவர் உள்ளம்? என்ற கேள்வி எழுகிறது.
>

அவரை இன்றைய இந்து ஆக விடமாட்டீங்களே! ;-)

> திவாகர நிகண்டைப் பார்க்கலாம். வணிகர்க்கும், வேளாண்மாந்தருக்கும்
> அறுதொழில்கள் இன்னின்ன என்று சொல்லப்படுகிறது. அந்தத்
> தொழில்கள் அழிந்துவிடும். அந்தத் தொழில்நுட்ப நூல்கள்
> பயன்படாமையால் அவற்றைத் தெளிந்து பயன்படுத்துவோர்
> குறைவர், மறப்பர்.
>

என்னென்ன அவர்களது அறுதொழில்?

அறுதொழிலோராக இலக்கியங்களில் வேறு யார் யாரெல்லாம் வருகிறார்கள்?

'அந்தணர் "நூற்கும்" அறத்திற்கும்' எனும் குறளில் வள்ளுவர் நூலை
குறிப்பிடுகிறார்..

"நவில்தொறும் நூல்நயம் போல" என்றும் ஒரு குறள் உண்டே!

> நாட்டில் மழையே பெய்யாவிட்டால், பஞ்சம் தலைவிரித்தாடும்.
> பசுக்கள் வற்றிப் போகும், (எத்தியோப்பியா பஞ்சத்தில்
> ஆக்கள் இறந்துகிடந்ததைப் பார்த்தோமே). ஒவ்வொரு வருணத்திற்கும்
> ஆன தொழில்நுட்பநூல்கள் பயன்படுத்துவோர் இன்றி,
> நிபுணர்கள் பலபக்கம் சென்றுவிடுவதால் அந்நூல்களை
> மறந்துவிடுவார்கள்.

ம்ம்ம்...

> ஜைந உரையில் என்ன சொல்கிறது?

சமணத்திலும் ஏதாச்சும் அறுதொழில் கிடைக்கும்..

> பாவாணர் உரையில் என்ன சொல்கிறார்?

பார்ப்போம்..

--

ஆமாச்சு

amachu

unread,
Oct 6, 2009, 9:00:23 AM10/6/09
to mint...@googlegroups.com
On Tue, 2009-10-06 at 18:17 +0530, amachu wrote:
> "நவில்தொறும் நூல்நயம் போல" என்றும் ஒரு குறள் உண்டே!
>

நவிலப்படும் நூல் எது?

ஞானசம்பந்தர் தேவாரத்தில்..


புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த விசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.


நன்றி: thevaaram.org

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Oct 6, 2009, 9:44:07 AM10/6/09
to மின்தமிழ்

On Oct 6, 8:00 am, amachu <ramada...@amachu.net> wrote:
> On Tue, 2009-10-06 at 18:17 +0530, amachu wrote:
> > "நவில்தொறும் நூல்நயம் போல" என்றும் ஒரு குறள் உண்டே!
>
> நவிலப்படும் நூல் எது?
>

really?

N. Ganesan

unread,
Oct 6, 2009, 10:43:49 PM10/6/09
to மின்தமிழ்

On Oct 6, 7:46 am, amachu <ramada...@amachu.net> wrote:
> On Tue, 2009-10-06 at 04:24 -0700, N. Ganesan wrote:
> > On 4 Oct, 21:28, amachu <ramada...@amachu.net> wrote:
> > > ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் "நூல்"மறப்பர்
> > > காவலன் காவான் எனின்
>
> > > என்கிற போது வள்ளுவர் மேற்கோளிடும் நூல் எது?
> > பரிமேலழகர் ஓர் உரை தருகிறார்: பசுக்கள் பால்தருவது குன்றினால்
> > பிராமணர் மந்திரம், கல்பம் ஓதமாட்டார். ஹோமங்கள் நடக்காமையால்
> > வானம் பெய்யாது என்கிறார். ”பசுக்கள் பால் குன்றியவழி அவி
> > இன்மையானும், அது கொடுத்தற்கு உரியார் மந்திரம், கற்பம் என்பன
> > ஓதாமையினும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயல்
> > ஒல்லாது என்பதாயிற்று”
>
> > இப்பொருள்தானா வள்ளுவர் உள்ளம்? என்ற கேள்வி எழுகிறது.
>
> அவரை இன்றைய இந்து ஆக விடமாட்டீங்களே! ;-)
>


இந்து என்ற சொல் எல்லோருக்கும்
எப்படி ஏற்றப்பட்டது? இதற்கு, நான்
படித்த நல்ல கட்டுரை டேவிட் லோரென்சன்
எழுதினது. மெக்சிகோ நாட்டின்
முதன்மையான கல்லூரியில்
இந்து மதப் பேராசிரியர். இவர் எழுதிய
முதல் புத்தகம் காளாமுகர்கள், காபாலிகர்கள்
பற்றியது - இன்னும் இந்தப் பொருளில்
இதனை விட்டால் வேறு நூலில்லை.
David N. Lorenzen
Source: Comparative Studies in Society and History, Vol. 41, No. 4
(Oct., 1999), pp. 630-659
http://historytoo.files.wordpress.com/2009/08/who-invented-hinduism.pdf

பங்கஜ மிசிரா “இந்து” சொல்லை ஆய்ந்துள்ளார்:
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pankajmishra/articles/txt_mishra_hinduism_2004.html

பங்கய மிஷ்ரா நேர்முகம்
(அ) http://www.loggernaut.org/interviews/pankajmishra/
(ஆ) http://www.nytimes.com/2005/02//books/review/06GOODHEA.html

ஆழமாக ஆராய்ந்து எழுதும் பேராசிரியர்கள் தமிழ்நாட்டில்
அருகிவிட்டனரே. மருத்துவம், எஞ்சினீரிங், ஐ.டி. துறை வளர்ச்சியாலா?
தொ.கா. பட்டிமன்ற வளர்ச்சியாலா?

வாய்ச்சொல் வளர்ச்சி அபரிமிதம். ஆய்வுக்கட்டுரைகள்
தமிழில் குறைவாக உள்ளதே.

நா. கணேசன்


> > திவாகர நிகண்டைப் பார்க்கலாம். வணிகர்க்கும், வேளாண்மாந்தருக்கும்
> > அறுதொழில்கள் இன்னின்ன என்று சொல்லப்படுகிறது. அந்தத்
> > தொழில்கள் அழிந்துவிடும். அந்தத் தொழில்நுட்ப நூல்கள்
> > பயன்படாமையால் அவற்றைத் தெளிந்து பயன்படுத்துவோர்
> > குறைவர், மறப்பர்.
>
> என்னென்ன அவர்களது அறுதொழில்?
>

திவாகரம் பார்க்கவும்.

v4vijayakumar

unread,
Oct 7, 2009, 7:06:24 AM10/7/09
to மின்தமிழ்

"நூலோர்" என்றால் நூல் செய்த அறிஞர்கள் என்று பொருள்.

"நூல்"மறப்பர் என்றால் நூலில் சொல்லப்பட்ட அறத்தை மறப்பர் என்று பொருள்.

"நூல்", அந்தக்கால புத்தகம் / சுவடி / ஏடு.

amachu

unread,
Oct 7, 2009, 8:02:12 AM10/7/09
to mint...@googlegroups.com
On Tue, 2009-10-06 at 19:43 -0700, N. Ganesan wrote:
> ஆழமாக ஆராய்ந்து எழுதும் பேராசிரியர்கள் தமிழ்நாட்டில்
> அருகிவிட்டனரே. மருத்துவம், எஞ்சினீரிங், ஐ.டி. துறை வளர்ச்சியாலா?
> தொ.கா. பட்டிமன்ற வளர்ச்சியாலா?

வெளிப்படையாக அப்பட்டமா - பொருள் தெரிந்தாலும், கொண்ட வேறு நோக்கங்களுக்காக
இட்டுக் கட்டுறவங்க பெருகிட்டாங்கன்னு வேணும்னா சொல்லலாம்..

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்
மேவல் இன்னா அறிவினவர்

--

ஆமாச்சு


amachu

unread,
Oct 7, 2009, 8:05:09 AM10/7/09
to mint...@googlegroups.com
On Tue, 2009-10-06 at 19:43 -0700, N. Ganesan wrote:
> > > திவாகர நிகண்டைப் பார்க்கலாம். வணிகர்க்கும், வேளாண்மாந்தருக்கும்
> > > அறுதொழில்கள் இன்னின்ன என்று சொல்லப்படுகிறது. அந்தத்
> > > தொழில்கள் அழிந்துவிடும். அந்தத் தொழில்நுட்ப நூல்கள்
> > > பயன்படாமையால் அவற்றைத் தெளிந்து பயன்படுத்துவோர்
> > > குறைவர், மறப்பர்.
> >
> > என்னென்ன அவர்களது அறுதொழில்?
> >
>
> திவாகரம் பார்க்கவும்.
>

அப்போ இனியும் மேம்போக்காக மேற்கோள் காட்டாதீங்க..

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Oct 7, 2009, 8:03:54 AM10/7/09
to மின்தமிழ்

ஐயா,

திவாகரம் பாருங்க.

> --
>
> ஆமாச்சு

N. Ganesan

unread,
Oct 7, 2009, 8:05:00 AM10/7/09
to மின்தமிழ்

ஆமாச்சு பார்த்தாரா இம்மடலை?

நா. கணேசன்

amachu

unread,
Oct 7, 2009, 10:19:58 AM10/7/09
to mint...@googlegroups.com
On Wed, 2009-10-07 at 05:05 -0700, N. Ganesan wrote:
> > > திருக்குறளில்,
> > பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் "நூலோர்"
> > > தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
> > > ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் "நூல்"மறப்பர்
> > > காவலன் காவான் எனின்
> > > என்கிற போது வள்ளுவர் மேற்கோளிடும் நூல் எது?
> > "நூலோர்" என்றால் நூல் செய்த அறிஞர்கள் என்று பொருள்.
> > "நூல்"மறப்பர் என்றால் நூலில் சொல்லப்பட்ட அறத்தை மறப்பர் என்று பொருள்.
> > "நூல்", அந்தக்கால புத்தகம் / சுவடி / ஏடு.
>
> ஆமாச்சு பார்த்தாரா இம்மடலை?

பரிமேலழகரின் விளக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி..

--

ஆமாச்சு

சமணன்

unread,
Oct 7, 2009, 10:37:34 AM10/7/09
to மின்தமிழ்
அன்பின் ஐயா,

ஜெய ஜினேந்திரம்!

நலமா?


”நூல்” - இரண்டு குறள்களிலும் வேறு வேறு பொருள் உணர்த்துகிறது என்பது என்
கருத்து.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

"பரஸ்பரப்கிரகோ ஜீவானாம்" - பல்லூயிர் ஒம்புதல் - என்பது ஆசாரியார்
உமாசுவாமி அருளிய "தத்வார்த்த சூத்திரம்”. மகாவீரர் காலத்திற்கு பிறகு
ஜைன ஆகமங்கள் கணதரர்களால் தொகுக்கப்பட்டன என்பதை எல்லோரும் அறிவர்.
அகிம்சையே தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது. “ஒன்றாக நல்லது கொல்லாமை”
என்பது குறள். “நூலோர்” என்பது இங்கு “கணதரர்களை” குறிக்கும். இதற்கு
நன்னூலில் குறிப்புண்டு!


ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் "நூல்"மறப்பர்

காவலன் காவான் எனின்”

இங்கு ”நூல்” என்பது கடமையைக் குறிக்கும் என்பது என் கருத்து. ஆபயன்
என்பது பசுவினால்
கிடைக்கும் பயன் என்று பொருள் கொள்ள முடியாது! எங்ஙனமெனின், ஆறு
தொழில்களால் ஆக வேண்டிய/கிடைக்க வேண்டிய பயன்கள் குன்றும் அவரவர் தத்தம்
கடமையை மறப்பர், அரசன் காவான் எனின்.

பசுவினால் அடையக்கூடியப் பயன்கள் என்றால் “ஆப்பயன்” என்று வரவேண்டும்
என்பது இலக்கணம்!

அறுதொழிலோர் -

"வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம்
விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம
கருமபூமி என்னும்பேர்கண்ட தொன்றுண்டுநூலில்" - சூடாமணி நிகண்டு


இரா.பானுகுமார்
சென்னை 44

> > ஆமாச்சு- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Kannan

unread,
Oct 7, 2009, 6:54:06 PM10/7/09
to mint...@googlegroups.com
ஆகா! சமண நண்பர்கள் உள்ள குழுவில். அதுவும் வித்யாதானத்தைப் போற்றும்
குணமுள்ள சமணர்கள் உள்ள குழுவில், இன்னும் ஒரு சமணநூல் கூட மின்னாக்கம்
பெறவில்லையே?

என்ன செய்யலாம்? நாம் இங்கு செய்யும் முயற்சி பலனளித்தால் சர்வதேச அளவில்
இதை இட்டுச்செல்ல முடியும்.

கண்ணன்

2009/10/7 சமணன் <banuk...@gmail.com>:

N. Ganesan

unread,
Oct 7, 2009, 7:40:51 PM10/7/09
to மின்தமிழ்

On Oct 7, 5:54 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ஆகா! சமண நண்பர்கள் உள்ள குழுவில். அதுவும் வித்யாதானத்தைப் போற்றும்
> குணமுள்ள சமணர்கள் உள்ள குழுவில், இன்னும் ஒரு சமணநூல் கூட மின்னாக்கம்
> பெறவில்லையே?
>
> என்ன செய்யலாம்? நாம் இங்கு செய்யும் முயற்சி பலனளித்தால் சர்வதேச அளவில்
> இதை இட்டுச்செல்ல முடியும்.
>
> கண்ணன்
>

என்னிடம் மு. ராகவையங்கார் பதிப்பித்த நரிவிருத்தம் இருக்கிறது.
இது பற்றி அப்பர் குறிப்பிடுகிறார். அதை தேடித் தருகிறேன்.

நா. கணேசன்

> 2009/10/7 சமணன் <banukuma...@gmail.com>:

Vinodh Rajan

unread,
Oct 7, 2009, 10:44:32 PM10/7/09
to மின்தமிழ்
> ஆகா! சமண நண்பர்கள் உள்ள குழுவில். அதுவும் வித்யாதானத்தைப் போற்றும்
> குணமுள்ள சமணர்கள் உள்ள குழுவில், இன்னும் ஒரு சமணநூல் கூட மின்னாக்கம்
> பெறவில்லையே?

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%88%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

(தொகுத்தவன் நான் தான் :-) )

ஜைன உலக மின்னூல்களை, த.ம.அ மிர்ரர் செய்தால் நன்றாக இருக்கும். ஜைன உலக
தளம் அவ்வப்போது முற்றிலும் அணுக இயலாத நிலைமைக்கு ஆகிவிடுகிறது. பல
உள்ளடக்கங்கள் அழிந்து விட்டது ( எ,டு) சமண திருவெம்பாவை. இண்டர்நெட்
ஆர்ர்சீவில் கூட அணுக இயலாத நிலைமையில் சில நூல்கள் உள்ளன.

V

On 8 Oct, 03:54, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

>
> என்ன செய்யலாம்? நாம் இங்கு செய்யும் முயற்சி பலனளித்தால் சர்வதேச அளவில்
> இதை இட்டுச்செல்ல முடியும்.
>
> கண்ணன்
>

> 2009/10/7 சமணன் <banukuma...@gmail.com>:

amachu

unread,
Oct 7, 2009, 11:55:02 PM10/7/09
to mint...@googlegroups.com
On Wed, 2009-10-07 at 07:37 -0700, சமணன் wrote:
> ”நூல்” - இரண்டு குறள்களிலும் வேறு வேறு பொருள் உணர்த்துகிறது என்பது என்
> கருத்து.
>
> “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
> தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
>
> "பரஸ்பரப்கிரகோ ஜீவானாம்" - பல்லூயிர் ஒம்புதல் - என்பது ஆசாரியார்
> உமாசுவாமி அருளிய "தத்வார்த்த சூத்திரம்”. மகாவீரர் காலத்திற்கு பிறகு
> ஜைன ஆகமங்கள் கணதரர்களால் தொகுக்கப்பட்டன என்பதை எல்லோரும் அறிவர்.
> அகிம்சையே தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது. “ஒன்றாக நல்லது கொல்லாமை”
> என்பது குறள். “நூலோர்” என்பது இங்கு “கணதரர்களை” குறிக்கும். இதற்கு
> நன்னூலில் குறிப்புண்டு!
>

:-)

> ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் "நூல்"மறப்பர்
> காவலன் காவான் எனின்”
>
> இங்கு ”நூல்” என்பது கடமையைக் குறிக்கும் என்பது என் கருத்து. ஆபயன்
> என்பது பசுவினால்
> கிடைக்கும் பயன் என்று பொருள் கொள்ள முடியாது! எங்ஙனமெனின், ஆறு
> தொழில்களால் ஆக வேண்டிய/கிடைக்க வேண்டிய பயன்கள் குன்றும் அவரவர் தத்தம்
> கடமையை மறப்பர், அரசன் காவான் எனின்.
>
> பசுவினால் அடையக்கூடியப் பயன்கள் என்றால் “ஆப்பயன்” என்று வரவேண்டும்
> என்பது இலக்கணம்!
>
> அறுதொழிலோர் -
>
> "வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
> உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம்
> விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம
> கருமபூமி என்னும்பேர்கண்ட தொன்றுண்டுநூலில்" - சூடாமணி நிகண்டு
>

வேறெங்கெல்லாம் கடமையை குறிக்க நூல் பயன்பட்டுள்ளது?

>
> இரா.பானுகுமார்
> சென்னை 44

குரோம்பேட்டை? எங்கே?

மற்ற இரண்டு குறள்களில் வரும் நூல்..

நவில்தொறும் நூல்?

அந்தணர் நூற்கும் அறம்?

--

ஆமாச்சு

karuannam annam

unread,
Oct 8, 2009, 1:09:49 AM10/8/09
to mint...@googlegroups.com

ஆமாச்சு

சாரும் திருகணேசனார் மற்ற நண்பர்களும் தூது அதிகாரத்தில் உள்ள நூலையும் குறிப்பில் கொண்டு கருத்துத் தொடர வேண்டுகிறேன்

நூலாருள்

நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி

வினையுரப்பான் பண்பு

இங்கு

நூல் என்பது சிறிதும் மறையைச்சுட்ட வாய்ப்பு இல்லையே.

அன்புடன்

சொ.வினைதீர்த்தான்

amachu

unread,
Oct 8, 2009, 2:25:55 AM10/8/09
to mint...@googlegroups.com
On Thu, 2009-10-08 at 10:39 +0530, karuannam annam wrote:

> இங்கு
>
> நூல் என்பது சிறிதும் மறையைச்சுட்ட வாய்ப்பு இல்லையே.


கண்டிப்பாக எல்லா இடத்திலும் அப்படி இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

சுட்டும் இடங்களில் சுட்டுகிறது என்பதை தெளிவாகவும் சொல்லவேண்டும்.

--

ஆமாச்சு

>

Rajkumar S

unread,
Oct 8, 2009, 6:16:49 AM10/8/09
to mint...@googlegroups.com
வணக்கம்,
                       நான் அதிகம் இலக்கியம் ஆராய்ந்ததில்லை என்றாலும் தமிழ் ஆர்வத்தால் என் கருத்துக்களை பதிகின்றேன்.
                       நூல் - என புத்தகங்களை குறிப்பது எதனால்
                       நூல்- நெறிப்படுத்துவது.
                       கட்டிடம் கட்டும் போது கொத்தன்னார் நூல் பயன்படுத்துகிறார்.
  எதற்கு? நேர் கோட்டில் , கோணல் இன்றி, நேர்த்தியாக கட்டுவதற்கு.
                       நூலின் துணை கொண்டு தன் வேலையை செம்மை செய்து கொள்கிறார்.
                      நம் வாழ்வை செம்மை செய்து கொள்ள உதவுவதும் நூல் தான்.

    “ மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகி
      துக்கம் கெடுப்பது நூல்”
                   இங்கு நூல் என்பது துன்பத்திற்கு காரணமான நம் அறியாமையை நீக்கி அறம், தர்மம், சீர்வழி, உலகியல்பு, என நம் வாழ்விற்கு உதவும் அனைத்தையும் குறிப்பது போல
                   பொதுவான நூல் என்பது அறநூல், நன்நூல் யாவற்றையும் குறிக்கும் என கருதுகிறேன்

சந்திப்பின் மகிழ்வில்
ராஜ்குமார்
சென்னை
                  


2009/10/6 N. Ganesan <naa.g...@gmail.com>

சமணன்

unread,
Oct 8, 2009, 7:30:12 AM10/8/09
to மின்தமிழ்
அன்பின் ஐயா,

நரிவிருத்தம் என்றதும் நினைவுக்கு வரும் பாடல்:

“பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம் (35)

”பகுத்துண்டு ஓம்புதல்/வாழ்தல்” சமண இலக்கியங்களில் விரவி வரும்!


இரா.பா,
சென்னை

> > > ஜெய ஜினேந்திரம்!- Hide quoted text -

சமணன்

unread,
Oct 8, 2009, 7:27:14 AM10/8/09
to மின்தமிழ்
அன்பின் அறிஞர் குழாம்,

என் வணக்கங்கள்!

மின்னாக்கம் குறித்து விளக்கவும். என்னால் இயன்றதைச் செய்வேன்!

இரா.பாகு,
சென்னை 44

On Oct 8, 3:54 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ஆகா! சமண நண்பர்கள் உள்ள குழுவில். அதுவும் வித்யாதானத்தைப் போற்றும்
> குணமுள்ள சமணர்கள் உள்ள குழுவில், இன்னும் ஒரு சமணநூல் கூட மின்னாக்கம்
> பெறவில்லையே?
>
> என்ன செய்யலாம்? நாம் இங்கு செய்யும் முயற்சி பலனளித்தால் சர்வதேச அளவில்
> இதை இட்டுச்செல்ல முடியும்.
>
> கண்ணன்
>

> 2009/10/7 சமணன் <banukuma...@gmail.com>:


>
>
>
> > அன்பின் ஐயா,
>

> > ஜெய ஜினேந்திரம்!- Hide quoted text -

சமணன்

unread,
Oct 8, 2009, 7:34:50 AM10/8/09
to மின்தமிழ்
அன்பின் வினோத் ஐயா,

தங்கள் பணி நன்று! மிக நன்று! “காபிரைட்” இல்லா பொத்தகங்களை மின்னாக்கம்
செய்கிறேன்!

தமிழ் சமணர்களுக்கென்று தனி வலைத்தளம் அமையப் பெறவிருக்கிறது!

www.tamiljains.com

இன்னும் ஆக்கம் பெறவில்லை!


”ஜீவசம்போதனை” என்ற நூலை முதலில் இட முயற்சிக்கிறேன்!


இரா.பா,
சென்னை.

On Oct 8, 7:44 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> > ஆகா! சமண நண்பர்கள் உள்ள குழுவில். அதுவும் வித்யாதானத்தைப் போற்றும்
> > குணமுள்ள சமணர்கள் உள்ள குழுவில், இன்னும் ஒரு சமணநூல் கூட மின்னாக்கம்
> > பெறவில்லையே?
>

> http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%...


>
> (தொகுத்தவன் நான் தான் :-) )
>
> ஜைன உலக மின்னூல்களை, த.ம.அ மிர்ரர் செய்தால் நன்றாக இருக்கும். ஜைன உலக
> தளம் அவ்வப்போது முற்றிலும் அணுக இயலாத நிலைமைக்கு ஆகிவிடுகிறது. பல
> உள்ளடக்கங்கள் அழிந்து விட்டது ( எ,டு) சமண திருவெம்பாவை. இண்டர்நெட்
> ஆர்ர்சீவில் கூட அணுக இயலாத நிலைமையில் சில நூல்கள் உள்ளன.
>
> V
>
> On 8 Oct, 03:54, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > என்ன செய்யலாம்? நாம் இங்கு செய்யும் முயற்சி பலனளித்தால் சர்வதேச அளவில்
> > இதை இட்டுச்செல்ல முடியும்.
>
> > கண்ணன்
>
> > 2009/10/7 சமணன் <banukuma...@gmail.com>:
>
> > > அன்பின் ஐயா,
>

> > > ஜெய ஜினேந்திரம்!- Hide quoted text -

சமணன்

unread,
Oct 8, 2009, 7:45:24 AM10/8/09
to மின்தமிழ்
அன்பு ஐயா,

<<<<குரோம்பேட்டை? எங்கே?

குரோம்பேட்டை, ஏஜிஸ் காலனிப் பக்கம்!


<<<> நவில்தொறும் நூல்?
>
> அந்தணர் நூற்கும் அறம்?

என் பிளாக்கில் சில பதிவுகளை இங்கு தருகிறேன். சில சமணம் பற்றிய
கேள்விகளுக்கு பதில் அங்கு கிடைக்கலாம். இது எம் பார்வை!

http://banukumar_r.blogspot.com/
http://banukumar_r.blogspot.com/2008/01/blog-post.html
http://banukumar_r.blogspot.com/2007/12/blog-post.html
http://banukumar_r.blogspot.com/2009/09/blog-post.html
http://banukumar_r.blogspot.com/2008/03/blog-post.html - இது
என்னுடையக் கட்டுரையன்று!
http://banukumar_r.blogspot.com/2008/02/blog-post_16.html

நேரம் கிட்டும்போது வலை உலா வரவும்!

இரா.பா,
சென்னை

N. Ganesan

unread,
Oct 8, 2009, 7:47:30 AM10/8/09
to மின்தமிழ்

On Oct 8, 5:16 am, Rajkumar S <rajamur...@gmail.com> wrote:
> வணக்கம்,
>                        நான் அதிகம் இலக்கியம் ஆராய்ந்ததில்லை என்றாலும் தமிழ்
> ஆர்வத்தால் என் கருத்துக்களை பதிகின்றேன்.
>                        நூல் - என புத்தகங்களை குறிப்பது எதனால்
>                        நூல்- நெறிப்படுத்துவது.
>                        கட்டிடம் கட்டும் போது கொத்தன்னார் நூல்
> பயன்படுத்துகிறார்.
>   எதற்கு? நேர் கோட்டில் , கோணல் இன்றி, நேர்த்தியாக கட்டுவதற்கு.
>                        நூலின் துணை கொண்டு தன் வேலையை செம்மை செய்து
> கொள்கிறார்.
>                       நம் வாழ்வை செம்மை செய்து கொள்ள உதவுவதும் நூல் தான்.
>

நூல் என்ற சொல் நுவல்- என்ற வினைச்சொல்லில் பிறந்தது.
நுவலுதல் வாய்விட்டு வாசித்தல். சிலந்தி வாயிலிருந்து துப்புவதும் நூல்.
பட்டுப்பூச்சியில் சிந்து சமவெளியில் நூலைப் பிரித்துள்ளார்கள்.
சிலந்தி, பட்டுப்பூச்சி தருவதைப் பார்த்து சிந்துசமவெளியில்
பருத்தி (பருநல் > பன்னல், கருநல் > கன்னல் போல்) பருத்தியில்
பிறப்பதற்கும் நூல் என்ற பெயர் கொடுத்தனர்.

அச்சுத் தொழில்நுட்பமும், சமூகத்தின் எல்லா வகுப்பினருக்கும் கல்வி
என்பது இந்தியாவில்
புதிய சமாச்சாரம். அச்சால், பல்லோர் கல்வியால், ஜனநெருக்கடியால்
மனசுக்குள் வாசிக்கும் பழக்கம் 20-ஆம் நூற்றாண்டில் பிறந்த புதுமை.
இன்றும் அதன் எச்சம் தொக்கிநிற்கிறது. மனசுக்குள் படிப்பவரை
“வாசகர்” என்கிறோம்!! வாசகர் < வாக்கு, வாய்விவிட்டு வாசிப்பது
அருகிவிட்டது.

முன்பெல்லாம், வேலை முடித்துவரும் மக்களுக்கு நூலை வாசிப்பது(நுவல்வது)
வழியாகவே பல புராணங்களும் இதிகாசங்களும் மக்களை அடைந்தன.
இன்றும் ஆலமரத்தடியில் அண்ணமார் கதையும், ராமர் கதையும் பாடப்படுகின்றன.

இந்த வாய்மொழி இலக்கியம் மனனம் பல ஆயிரம் ஆண்டுகளாய்
இருப்பதால்தான் இந்திய மொழிகளின் எழுத்து மொழியியல்
விஞ்ஞானத்தைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. பாணினியும்,
அதற்கு முன்பே தமிழுக்கும் எழுத்துக்கள் எழுதிப் பார்த்து வந்ததல்ல.
வாய்மொழி இலக்கியத்தை நுணுகி ஆய்ந்த யோகியர்கள்
கொடுத்த கொடை அது. சமணர் தொல்காப்பியரும், பாணினியும்
யோகிகளே. பொருளே தெரியாமல் இருந்தாலும் மனனம் செய்த
வேதப்பயிற்சி வடமொழிக்கு எழுத்துத் தந்தது. இந்தோ-ஐரோப்பிய
மொழிகள் எங்கிருந்தாலும் இச்சிறப்பு இந்தியாவிலே *மட்டும்தான்*
நிகழ்ந்தது. என்ன காரணம்? அதற்கு முன்னரே சிந்து சமவெளியில்
பொருளறியா மந்திரங்கள் ஆல, அரச மரத்தடியில் பூசாரிகளால்
பரம்பரையாக கற்பிக்கப்பட்டு சொல்லப்பட்டு வந்தன. அதனால்
கண்டுபிடிக்கப் பட்டது தமிழ் எழுத்துக்கள். கிள்ளை மொழி என்கிறது
வேதம் ஓதலை - சங்க இலக்கியமும், தேவாரமும்.
‘பர்ட் ஸாங்’ - வேத ஒற்றுமை பற்றி ப்ரிட்ஸ் ஸ்டால் எழுதியுள்ளார்.
தமிழில் அவ்வாறே வேதம் குறிக்கப்படுகிறது என்பதறியார்.

நூல்/நுவல்தல் அரதப் பழசு - தமிழுக்கும், வடமொழிக்கும்.
ஊறுதல்/உவறுதல், ஓச்சுதல்/உவச்சர் (வடக்கே ஓஜா என்னும் குலம்), ...

நா. கணேசன்

>     “ மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகி
>       துக்கம் கெடுப்பது நூல்”
>                    இங்கு நூல் என்பது துன்பத்திற்கு காரணமான நம் அறியாமையை
> நீக்கி அறம், தர்மம், சீர்வழி, உலகியல்பு, என நம் வாழ்விற்கு உதவும்
> அனைத்தையும் குறிப்பது போல
>                    பொதுவான நூல் என்பது அறநூல், நன்நூல் யாவற்றையும்
> குறிக்கும் என கருதுகிறேன்
>
> சந்திப்பின் மகிழ்வில்
> ராஜ்குமார்
> சென்னை
>

> 2009/10/6 N. Ganesan <naa.gane...@gmail.com>

சமணன்

unread,
Oct 8, 2009, 7:51:49 AM10/8/09
to மின்தமிழ்
அன்பின் இராஜ்குமார்,

ஆகா! அருமை!! அருங்கல செப்புவில் இருந்து குறித்திருக்கிறீர்களே!
அந்நூல்
படித்திருக்கிறீர்களா?

இரா.பா,
சென்னை

On Oct 8, 3:16 pm, Rajkumar S <rajamur...@gmail.com> wrote:
> வணக்கம்,
>                        நான் அதிகம் இலக்கியம் ஆராய்ந்ததில்லை என்றாலும் தமிழ்
> ஆர்வத்தால் என் கருத்துக்களை பதிகின்றேன்.
>                        நூல் - என புத்தகங்களை குறிப்பது எதனால்
>                        நூல்- நெறிப்படுத்துவது.
>                        கட்டிடம் கட்டும் போது கொத்தன்னார் நூல்
> பயன்படுத்துகிறார்.
>   எதற்கு? நேர் கோட்டில் , கோணல் இன்றி, நேர்த்தியாக கட்டுவதற்கு.
>                        நூலின் துணை கொண்டு தன் வேலையை செம்மை செய்து
> கொள்கிறார்.
>                       நம் வாழ்வை செம்மை செய்து கொள்ள உதவுவதும் நூல் தான்.
>
>     “ மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகி
>       துக்கம் கெடுப்பது நூல்”
>                    இங்கு நூல் என்பது துன்பத்திற்கு காரணமான நம் அறியாமையை
> நீக்கி அறம், தர்மம், சீர்வழி, உலகியல்பு, என நம் வாழ்விற்கு உதவும்
> அனைத்தையும் குறிப்பது போல
>                    பொதுவான நூல் என்பது அறநூல், நன்நூல் யாவற்றையும்
> குறிக்கும் என கருதுகிறேன்
>
> சந்திப்பின் மகிழ்வில்
> ராஜ்குமார்
> சென்னை
>

> 2009/10/6 N. Ganesan <naa.gane...@gmail.com>

Rajkumar S

unread,
Oct 8, 2009, 8:17:51 AM10/8/09
to mint...@googlegroups.com
அப்பா!!! எத்தனை ஆழமான விளக்கம்.
                  அறியத் தந்ததற்கு நன்றி.
அன்புடன்

ராஜ்குமார்

2009/10/8 N. Ganesan <naa.g...@gmail.com>

Rajkumar S

unread,
Oct 8, 2009, 8:15:37 AM10/8/09
to mint...@googlegroups.com
பானு குமார் அவர்களே,
                  ஆம் நான் book fair-ல் ஜைன இளைஞர் மன்றத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் சிலவற்றை வாங்கி படித்திருக்கிறேன்.
                   நூல் என்பதற்கு சிறந்த பொருள் தரும் இக் குறள் ஒரு முறை படித்ததுமே மனதில் பதிந்து விட்டது.

அன்புடன்

ராஜ்குமார்

2009/10/8 சமணன் <banuk...@gmail.com>

N. Ganesan

unread,
Oct 8, 2009, 8:55:47 AM10/8/09
to மின்தமிழ்

On Oct 8, 6:27 am, சமணன் <banukuma...@gmail.com> wrote:
> அன்பின் அறிஞர் குழாம்,
>
> என் வணக்கங்கள்!
>
> மின்னாக்கம் குறித்து விளக்கவும்.  என்னால் இயன்றதைச் செய்வேன்!
>
> இரா.பாகு,
> சென்னை 44
>


பானு,

வருகைக்கு நன்றி.

தஞ்சை சரசுவதி மகால் (வெளியீடு எண் 336)
கா. ம. வேங்கடராமையா (1911-) பதிப்பாசிரியர்:
திருக்குறள் ஜைன உரை வெளியிட்டது.

(பதிப்பாசிரியருக்கு 80 வயதான 1991-ஆம் ஆண்டில்).
580 பக்கங்கள் கொண்ட நூல். தெய்வசிகாமணிக்கவுண்டர்
சுவடி என்று நினைக்கிறேன்.

அந்நூலைப் பெற்று ஆமாச்சு ஐயா அனுப்பும்
குறள்களுக்கான ஜைன உரையைத் தரலாம்.

கா. ம. வேங்கடராமையரின் பதிப்பை
முழுமையாக இணையத்தில் வைக்க
நானும் உதவுகிறேன். உ-ம்: தட்டச்சுச் செலவினம்.
அனுமதியை அவர் மக்கள் அளிப்பர்.
ம. வே. பசுபதியை அணுகவும் (உவேசா நூலகம், அடையாறு.)
ஈரோடு செ. ராசுவை பசுபதிக்கு போன்போடச் சொல்கிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 8, 2009, 9:26:10 AM10/8/09
to மின்தமிழ்

On Oct 8, 7:17 am, Rajkumar S <rajamur...@gmail.com> wrote:
> அப்பா!!! எத்தனை ஆழமான விளக்கம்.
>                   அறியத் தந்ததற்கு நன்றி.
> அன்புடன்
> ராஜ்குமார்
>

பாராட்டுக்கு நன்றி.

ஒரு அவதானம்:
வெள்ளைக்காரர்களைப் போல் பாராட்ட மனம் இந்தியர்களுக்கு
பொதுவாக வராது. தமிழ்மணத்தில் பார்த்தால் தெரியும்: துதி அல்லது வசை.

-----------

Orature vs. Literature ஸப்ஜெக்டுக்கு வருவோம்.

இந்தியா கவர்ன்மெண்ட் பாணினிக்கு ஸ்டாம்ப் வெளியிட்டது:
http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=1311

(இந்த ஸ்டாம்பை பாணினி விக்கி-குறிப்பில் ஏற்றிவிட வேண்டுகோள்.):
http://en.wikipedia.org/wiki/P%C4%81%E1%B9%87ini

பாணினி ஸ்டாம்ப்பில் உள்ள தவறு, அவர் பூர்ஜ பத்திரத்தில்
எழுதுவதாய்க் காட்டுவது. பாணினி நூல் யோகவிளைவு,
வாயால் நுவன்றது. அவர் எழுதினாரா என்றே தெரியவில்லை.

நாஸ்திக தமிழ்நாடு அரசாங்கம் சைவமுனிவராய்
திருவள்ளுவராய் தாடி, சடாபாரந் தாங்குபவராய்
(திருநீறு, உருத்திராக்கம் களைந்து செக்யுலர் ஆக்கி :) )
காட்டுவதும் அதிக வரலாற்றாழம் இல்லாத செயல்.
மயிலைக்கு எப்படி சைவமுனியாய் 19-ஆம் நூற்றாண்டின்
மத்தியில் வள்ளுவர் வந்தார் என்று முன்னம் விளக்கினேன்:
http://groups.google.com/group/mintamil/msg/cfbc2364da70de8a

அன்பிணை,
நா. கணேசன்


> 2009/10/8 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 8, 2009, 9:54:28 AM10/8/09
to மின்தமிழ்

On Oct 8, 8:26 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Oct 8, 7:17 am, Rajkumar S <rajamur...@gmail.com> wrote:
>
> > அப்பா!!! எத்தனை ஆழமான விளக்கம்.
> >                   அறியத் தந்ததற்கு நன்றி.
> > அன்புடன்
> > ராஜ்குமார்
>
> பாராட்டுக்கு நன்றி.
>
> ஒரு அவதானம்:
> வெள்ளைக்காரர்களைப் போல் பாராட்ட மனம் இந்தியர்களுக்கு
> பொதுவாக வராது. தமிழ்மணத்தில் பார்த்தால் தெரியும்: துதி அல்லது வசை.
>
> -----------
>
> Orature vs. Literature ஸப்ஜெக்டுக்கு வருவோம்.
>
> இந்தியா கவர்ன்மெண்ட் பாணினிக்கு ஸ்டாம்ப் வெளியிட்டது:
http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=1311
>

இன்னொன்று:
http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Panini.html

> ...
>
> read more »

Banukumar Rajendran

unread,
Oct 8, 2009, 10:42:21 AM10/8/09
to mint...@googlegroups.com
ஐயா, வணக்கம்.


நூல் குறிப்புக்கு நன்றி!

அப்புத்தகத்தை தேடாத இடமில்லை. தஞ்சை ச’வுக்கு மின்னஞ்சல் செய்தால்,
பதில் வருவதில்லை. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் தேடி அலைந்ததுண்டு!
தஞ்சை அன்பர்கள் உதவினால் தான் உண்டு!

அடையார் சென்று விசாரிக்கிறேன்!

இரா.பானுகுமார்.

Banukumar Rajendran

unread,
Oct 8, 2009, 11:58:23 AM10/8/09
to mint...@googlegroups.com
எனக்கு பிடித்த சூளாமணியில் இருந்து:

’மெய்ப்பொருள் தெரிதல் மற்றப்
பொருள்மிசை விரிந்த ஞானம்
அப்பொருள் வழாத நூலின்
அருந்தகை ஒழுக்கம் தாங்கல்

இப்பொருள் இவைகள் கண்டாய்
இறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொருள் ஆகக் கொண்டு
கடைப்பிடி கனபொன் தேராய் - சூளாமணி(201)

”கைப்பொருள் ஆகக் கொண்டு” சிலப்பதிகார அடிகள்
இங்கு நினைவுருத்துகிறது!


“இறைவனும் முனியும் நூலும் யாதுமோர் குற்றமில்லா
நெறியினைத் தெளிதல் காட்சியாம் - மேருமந்தர புராணம் (355)

“தலைமகனும் நூலும் முனியும்இம் மூன்றும்
நிலைமைய ஆகும் பொருள் - அருங்கலச் செப்பு (4)

“தலைமகனும் நூலும், முனியும் பொருளும்
த்லைவின் துணிவொடு பக்கம்- மலைவின்றி
நாட்டிஇவ் ஆறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி அறமுரைப் பார் - அறநெறிச் சாரம் (30)

“என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல்என் உணர்” - அருங்கலச் செப்பு (9)

”இருசார் வினையும் தெளிந்தாரே
இறைவன் நூலும் தெளிந்தாரே” - சீவக சிந்தாமணி (2815)

”மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகி
துக்கம் கெடுப்பது நூல் - அருங்கலச் செப்பு (10)

“இல்லறம் ஏனைத் துறவறம் என்றுஇவற்றைப்
புல்ல உரைப்பது நூல் - அருங்கலச் செப்பு (60)

இவை சில காட்டுக்கள்!


இரா.பானுகுமார்.

amachu

unread,
Oct 8, 2009, 12:14:22 PM10/8/09
to mint...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி..

தொடர்புடைய குறளுக்கு பொருத்தி விளக்கம் தாருங்கள்..

அறுதொழிலோர் நூல் மறப்பர்

அறுதொழிலோர் பற்றிய சமண சமயக் குறிப்புகள்?

அடுத்து காவலன் காவான் எனின் - மன்னரைப் பற்றிய சமண சமயக் குறிப்புகளும்,
போர் படை குறித்த வள்ளுவரின் குறிப்புகளோடு சமண சமயக் குறிப்புகள் எவ்வளவு
ஒத்துப் போகிறது என்பதையும் அறிய ஆவல்..

--

ஆமாச்சு

Banukumar Rajendran

unread,
Oct 8, 2009, 12:29:22 PM10/8/09
to mint...@googlegroups.com
மூவகை நூல்கள் (நன்னூல் பாடம்)

1.முதல் நூல்
2. சார்பு நூல்
3. வழி நூல்

இறைவனால்/தலைமகனால் அருளப்பட்டது முதல் நூலாகும். அவற்றைத் தழுவி,
கணதரர்களால் தொகுக்கப்பட்டது/எழுதப்பட்டது சார்பு நூல் எனப்பட்டது.
கணதரர்களால் அருளப்பட்டதை எடுத்தியம்பிய ஆச்சாரியர்களால் அருளப்பட்டது
வழிநூலாகும். இதனாலேயே சமண ஆச்சாரியர்கள் தாங்கள் எழுதும் நூற்களில்
தங்கள் பெயரைக் குறிப்பதில்லை. ஏனெனில் அவையாவும், தலைமகனால்
(ஆதிபகவனால்) அருளப்பட்டதால் தங்கள் பெயர் சேர்ப்பதில்லை.

காட்டாக, சீவகசிந்தாமணியின் ஆசிரியர் பெயர் திருத்தகு முனிவன் என்றும்
திருத்தக்க தேவர் என்றும் தன்மையால் அமைந்ததேயன்றி அது அவருடைய இயற்பெயர்
அல்ல. அவ்வாறே ஏறக்குறைய தமிழில் உள்ள சமண நூற்களை எழுதியவர்களின்
பெயர்கள் தெரியாது. குறளின் ஆசிரியர் பெயரும் அவ்வாறே!


இரா.பானுகுமார்

amachu

unread,
Oct 8, 2009, 12:51:00 PM10/8/09
to mint...@googlegroups.com
On Thu, 2009-10-08 at 21:59 +0530, Banukumar Rajendran wrote:
> இறைவனால்/தலைமகனால் அருளப்பட்டது முதல் நூலாகும். அவற்றைத் தழுவி,
> கணதரர்களால் தொகுக்கப்பட்டது/எழுதப்பட்டது சார்பு நூல் எனப்பட்டது.
> கணதரர்களால் அருளப்பட்டதை எடுத்தியம்பிய ஆச்சாரியர்களால் அருளப்பட்டது
> வழிநூலாகும். இதனாலேயே சமண ஆச்சாரியர்கள் தாங்கள் எழுதும் நூற்களில்
> தங்கள் பெயரைக் குறிப்பதில்லை. ஏனெனில் அவையாவும், தலைமகனால்
> (ஆதிபகவனால்) அருளப்பட்டதால் தங்கள் பெயர் சேர்ப்பதில்லை.

:-)

ஆதியும் பகவனும் வள்ளுவரின் தாய் தந்தையர் என்பது மறைமலையடிகள் கருத்து.

ஆதிபகவன் - திருமந்திரத்திலும் வருவதை முன்னமே பார்த்தோம்..

தொடர்ந்து பின்னர் வருவனவற்றை பார்க்க..

> காட்டாக, சீவகசிந்தாமணியின் ஆசிரியர் பெயர் திருத்தகு முனிவன் என்றும்
> திருத்தக்க தேவர் என்றும் தன்மையால் அமைந்ததேயன்றி அது அவருடைய இயற்பெயர்
> அல்ல. அவ்வாறே ஏறக்குறைய தமிழில் உள்ள சமண நூற்களை எழுதியவர்களின்
> பெயர்கள் தெரியாது. குறளின் ஆசிரியர் பெயரும் அவ்வாறே!

பொதுவாக இப்பண்பு உலகனைத்திலும் வியாபித்திருந்தது/ இருக்கிறது என்றே சொல்ல
வேண்டும்.

அறிவுசார் சொத்தை சாடுகிற போது ரிச்சர்டு ஸ்டால்மன் கடந்த நூற்றாண்டுகளில்
கலைஞர்கள் தங்களது படைப்புகளில்/ ஓவியங்களில் தங்களது கையொப்பத்தைக் கூட
இடாத உயர்ந்த பண்பினைச் சுட்டுகிறார்.

திரிகாலம் சந்தியாவந்தனம் செய்யப் பழக்கும் அந்தணர் குடும்பங்களிலும்
இறுதியாக எல்லாம் நாராயணனுக்கு அர்ப்பணம் என்றே நிறைவு செய்கின்றனர்.

அவனருளாலே அவன் தாள் வணங்கி என இறைவனை வணங்கக் கூட இறையருள் வேண்டும்
என்பதை சைவம் உலகிற்கு உணர்த்துகிறது.

--

ஆமாச்சு

Banukumar Rajendran

unread,
Oct 8, 2009, 1:12:58 PM10/8/09
to mint...@googlegroups.com
<<<அறுதொழிலோர் பற்றிய சமண சமயக் குறிப்புகள்?

முன்னமே கொடுத்திருந்தேன்! கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்!


"வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம்
விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம
கருமபூமி என்னும்பேர்கண்ட தொன்றுண்டுநூலில்"

- சூடாமணி நிகண்டு

ஆறு தொழில்கள் -

1. விவசாயம்/உழவு (Agriculture),
2. எழுத்து வேலை (Writer),
3. வித்தைகள் (All arts that includes defense),
4. வரைவு (Art of Painting),
5. சிற்பவேலை (Art of Sculpting)
6. வாணிபம் (Art of Trading)


இரா.பா.

Banukumar Rajendran

unread,
Oct 8, 2009, 1:30:49 PM10/8/09
to mint...@googlegroups.com
<<<ஆதியும் பகவனும் வள்ளுவரின் தாய் தந்தையர் என்பது மறைமலையடிகள் கருத்து.>>

:-)

அறிஞர் உலகம் இவற்றை ஏற்பதில்லை. காட்டாக, திரு.மே.வீ.வேணுகோபால பிள்ளை
கட்டுரையைப் பார்க்கவும்.

http://www.treasurehouseofagathiyar.net/33300/33318.htm

நகைச்சுவைக்கு நல்ல எடுத்துக்காட்டு என்பார்.

<<<> ஆதிபகவன் - திருமந்திரத்திலும் வருவதை முன்னமே பார்த்தோம்>>>

:-)
பகவன் என்று வரும். ஆதிபகவன் என்று ஒருசேர வராது என்று நினைவு.
தவறென்றால் சுட்டவும்.

http://banukumar_r.blogspot.com/2008/03/blog-post.html


<<<> பொதுவாக இப்பண்பு உலகனைத்திலும் வியாபித்திருந்தது/ இருக்கிறது என்றே சொல்ல
> வேண்டும்.>>

இருக்கலாம். சமணத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

<<> அவனருளாலே அவன் தாள் வணங்கி என இறைவனை வணங்கக் கூட இறையருள் வேண்டும்
> என்பதை சைவம் உலகிற்கு உணர்த்துகிறது.
>>

நன்று!


இரா.பா.

amachu

unread,
Oct 8, 2009, 2:00:19 PM10/8/09
to mint...@googlegroups.com
On Thu, 2009-10-08 at 22:42 +0530, Banukumar Rajendran wrote:
>
> 1. விவசாயம்/உழவு (Agriculture),
> 2. எழுத்து வேலை (Writer),
> 3. வித்தைகள் (All arts that includes defense),

மற்ற ஐந்தும் ஏன் வித்தைக்குள் அடங்காது?

அறுதொழிலோர் பற்றிய திருமந்திரமும் இருக்கிறதே!

--

ஆமாச்சு

amachu

unread,
Oct 8, 2009, 2:11:53 PM10/8/09
to mint...@googlegroups.com
On Thu, 2009-10-08 at 23:00 +0530, Banukumar Rajendran wrote:
> <<<ஆதியும் பகவனும் வள்ளுவரின் தாய் தந்தையர் என்பது மறைமலையடிகள் கருத்து.>>
>
> :-)
>
> அறிஞர் உலகம் இவற்றை ஏற்பதில்லை. காட்டாக, திரு.மே.வீ.வேணுகோபால பிள்ளை
> கட்டுரையைப் பார்க்கவும்.
>
> http://www.treasurehouseofagathiyar.net/33300/33318.htm
>
> நகைச்சுவைக்கு நல்ல எடுத்துக்காட்டு என்பார்.

அவரது கருத்துதான் நகைப்புக்குரியதாக இருக்கிறது.

அவருக்கு "இளைஞர்களுக்கான இன்றமிழ்" என்ற மறைமலையடிகளின் நூலைப்
பரிந்துரைக்கவும்.

>
> <<<> ஆதிபகவன் - திருமந்திரத்திலும் வருவதை முன்னமே பார்த்தோம்>>>
>
> :-)
> பகவன் என்று வரும். ஆதிபகவன் என்று ஒருசேர வராது என்று நினைவு.
> தவறென்றால் சுட்டவும்.
>

நா கணேசன் சொல்லுங்களேன்..

--

ஆமாச்சு

Saravana Rajendran

unread,
Oct 8, 2009, 11:39:00 AM10/8/09
to mint...@googlegroups.com
  ஐயா வள்ளுவன் நூலோர் என குறிப்பிட்டது, அறத்தை தான் வள்ளுவன்
நல்ல நூல்களை படித்து இருக்கவேண்டும், அதன் படி புத்தகம் என்றாலே அறம்
என்ற பதத்தில் நூலோர் என்று கூறி இருக்கிறார்.
அவர் படித்த நூல் நிச்சயம் மத மாச்சர்ய கலப்பிலாதா தூய மனித
ஒழுக்கம் குறிப்பிடும் நூலாக இருந்திருக்க வேண்டும்.

2009/10/8 Banukumar Rajendran <banuk...@gmail.com>



--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-

Hari Krishnan

unread,
Oct 9, 2009, 12:52:30 AM10/9/09
to mint...@googlegroups.com


2009/10/8 Banukumar Rajendran <banuk...@gmail.com>

 அவ்வாறே ஏறக்குறைய தமிழில் உள்ள சமண நூற்களை எழுதியவர்களின்
பெயர்கள் தெரியாது. குறளின் ஆசிரியர் பெயரும் அவ்வாறே!



வாங்க பழைய நண்பரே.  

ஆங்கிலத்தில் maverick என்று சொல்வார்கள்.  மிகவும் சுதந்திரமான போக்கை உடையர்களுக்கு வழங்கிவரும் பெயர் இது.  இது எப்படி நடைமுறைக்கு வந்தது என்றால், சாமுவேல் அகஸ்டஸ் மாவரிக் என்றொரு கௌபாய் அமெரிக்காவில் இருந்தார்.  மாட்டுக்காரர்.  

அங்கே பாக்கறதுக்கு எல்லா மாடும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கறதால என்ன பண்ணுவாங்கன்னா, அவரவர் பெயர்களுடைய முதல் எழுத்தையோ, அல்லது வேறு ஏதாவது ஓர் அடையாளத்தையோ மாடுகளுக்குமேல் சூட்டுக்கோலால் எழுதிவிடுவார்கள்.  ஏ அல்லது கே அல்லது பி என்று எழுதியிருப்பவை எல்லாம் இன்னார் இன்னாருக்கு உரியது என்பதைப் பார்த்த உடனே சொல்லிவிடலாம்.

மாவரிக் என்ன செய்தார் என்றால், தன்னுடைய மாடுகள் எதற்கும் அப்படி சூடு வைக்கவில்லை.  அடையாளக் குறியீடு எதையும் இடவில்லை.  ‘எந்தெந்த மாடுகளின்மேல் அடையாளக் குறியீடு இல்லையோ அது அத்தனையும் மாவரிக்குக்கு சொந்தம்’ என்பது அந்தக்காலத்தில் கௌபாய்களுக்கு நடுவில் புழக்கத்துக்கு வந்தது.

இதை ஏன் இங்க சொல்றேன்னு கேக்கறீங்க?  உங்களுக்கே தெரியும். :-)))


--
அன்புடன்,
ஹரிகி.

Banukumar Rajendran

unread,
Oct 9, 2009, 1:03:22 AM10/9/09
to mint...@googlegroups.com
அன்பு ஐயா,
 
என்றும் புதிய நண்பரே :-))
 
தங்களால் பாராட்டுப் பெற்றவன் தானே நான்! தெரியாமலா இருக்கும்!! :-)))
 
 
எனினும் இம்முறை விளையாட வரவில்லை! ;-)
 
 நம் நன்பர் திரு.குமார் ஐயா நலமா? (ஜாவாவில் தான் இருக்கிறாரா?)
 
 
இரா.பா
 


 
2009/10/9 Hari Krishnan <hari.har...@gmail.com>

amachu

unread,
Oct 9, 2009, 9:22:01 AM10/9/09
to mint...@googlegroups.com
On Thu, 2009-10-08 at 04:47 -0700, N. Ganesan wrote:
> சமணர் தொல்காப்பியரும், பாணினியும்
> யோகிகளே.

இருக்கிற சரடு போதாதுன்னு இதென்ன புதுச் சரடு ;-)

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Oct 9, 2009, 11:12:41 AM10/9/09
to மின்தமிழ்

Aiya,

Pl. see S. Vaiyapuri Pillai's works to know why Tolkappiyar was a
Jain.
I understand your deep knowledge of Tamil.

N. Ganesan


> --
>
> ஆமாச்சு

N. Ganesan

unread,
Oct 9, 2009, 11:20:56 AM10/9/09
to மின்தமிழ்

Have you read M. V. Venugopala Pillai's (MVP) works?
For example, you advise:


>> அவருக்கு "இளைஞர்களுக்கான இன்றமிழ்" என்ற மறைமலையடிகளின் நூலைப்
>> பரிந்துரைக்கவும்

Unfortunately, MVP aiyaa is not around.

amachu

unread,
Oct 9, 2009, 11:50:45 AM10/9/09
to mint...@googlegroups.com
On Fri, 2009-10-09 at 08:20 -0700, N. Ganesan wrote:
> Have you read M. V. Venugopala Pillai's (MVP) works?
> For example, you advise:
> >> அவருக்கு "இளைஞர்களுக்கான இன்றமிழ்" என்ற மறைமலையடிகளின் நூலைப்
> >> பரிந்துரைக்கவும்
>
> Unfortunately, MVP aiyaa is not around.

I do realize that, but I hold my comments on his comments about people
who said "aadhi baghavam" as parents of Valluvar.

--

ஆமாச்சு

amachu

unread,
Oct 9, 2009, 12:04:55 PM10/9/09
to mint...@googlegroups.com
On Fri, 2009-10-09 at 08:20 -0700, N. Ganesan wrote:
> Have you read M. V. Venugopala Pillai's (MVP) works?
> For example, you advise:
> >> அவருக்கு "இளைஞர்களுக்கான இன்றமிழ்" என்ற மறைமலையடிகளின் நூலைப்
> >> பரிந்துரைக்கவும்

A similar doubt arose when I read the link sited by Banukumar, Whether
MVV has ever read Maraimalai Adigal's book that I had mentioned.

Maraimalai Adigal cites references from a text Kapilar Agaval - in his
opinion brother of Valluvar - on who they were etc.,

that was a passing comment, I regret for that.

--

ஆமாச்சு



amachu

unread,
Oct 9, 2009, 12:26:59 PM10/9/09
to mint...@googlegroups.com
On Fri, 2009-10-09 at 08:12 -0700, N. Ganesan wrote:
> Aiya,
>
> Pl. see S. Vaiyapuri Pillai's works to know why Tolkappiyar was a
> Jain.
> I understand your deep knowledge of Tamil.

Oh! Cool.. Then that's your belief in his work.

I have read enough books that doesn't bother about Tholkappiyar's
belief's & focuses on his work & even has cited the other way.

I suggest we look at both of them & not state as if it is a concluded
one. ;-)

--

ஆமாச்சு


v4vijayakumar

unread,
Oct 12, 2009, 7:17:29 AM10/12/09
to மின்தமிழ்
On Oct 8, 10:09 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
...
> இங்கு நூல் என்பது சிறிதும் மறையைச்சுட்ட வாய்ப்பு இல்லையே
...

ஆம். எந்தக்காலத்தில் நான்மறை நூல் வடிவம் பெற்றது ?!

( மறை என்றால் வேதங்கள் தானே ?! )

Reply all
Reply to author
Forward
0 new messages