நல்லதே எண்ணுக!

1 view
Skip to first unread message

N. Kannan

unread,
Nov 4, 2009, 8:01:13 PM11/4/09
to மின்தமிழ்
இணையம் எனும் அவஸ்தை (reality) தோன்றிய காலத்திலிருந்து நான் கண்ட ஒன்று.
மின்வெளி என்பது மனப்பரப்பே ந்ன்பதுதான். மனதில் காணும் அத்தனை
காட்சிகளும் மின்கதிராய் மின்வெளியில் காணக்கிடைக்கிறது. மனப்பயிற்சி
அற்றோருக்கு மின்வெளிப் பயிற்சி நல்ல வைத்தியமாகும். மின்வெளியில் நல்லது
சிந்தித்தால் மானுடத்திற்கு நல்லவே விளையும்.

இதே கருத்தை முன்னிறுத்தி கொரியாவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பெயர் சொன்பில் என்பது. [வழக்கம் போல் ஆங்கிலத்தில் எழுதும்போது
Sunfull என்று எழுதுகிறார்கள்!]
இது பற்றிய சேதி:

http://www.koreaherald.co.kr/NEWKHSITE/data/html_dir/2009/11/05/200911050044.asp

இவ்வியக்கத்தில் கலந்து கொள்ள (இன்று உங்கள் எண்ணத்தை இங்கு ஆங்கிலத்தில்
பதிவிடலாம்)

http://www.koreaherald.co.kr/NEWKHSITE/data/html_dir/2009/11/05/200911050044.asp

(ஆங்கில வலைப்பக்கம் பெரும்பாலான கொரிய தளங்களில் சரியாக
பராமரிக்கப்படுவதில்லை. எனவே பொறுமை காக்க).

அன்பில் நம்பிக்கையுள்ளோர் சொன்பில் இயக்கத்தில் சேருங்கள் ;-)

கண்ணன்


--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Nov 4, 2009, 8:07:25 PM11/4/09
to மின்தமிழ்
இது பற்றிய இன்னொரு சேதிக்குறிப்பு வலையேற்றம் கண்டுள்ளது.

http://mintamil.googlegroups.com/web/PositiveNetizens.pdf?gsc=CviQwQsAAADA3HhCBZ-4JLc4UdnFwHet

மின்தமிழ் இவ்வியக்கதை தமிழில் நடத்த ஆசைப்படுகிறது.
அழகான தலைப்புச் சொற்கள் பற்றி இங்கு சிந்திப்போமா?

நா.கண்ணன்

Innamburan Innamburan

unread,
Nov 4, 2009, 10:43:17 PM11/4/09
to mint...@googlegroups.com
அன்பின் கண்ணன்,
அவசியம். சிந்தித்து தலைப்பு அமைப்போம். ஒரு ரத்னசுருக்கமான 'பத்து கட்டளைகள்' தேவை. 'Chuimsae’ மாதிரி ஒரு சொல் தேவை. உடனே தோன்றியவை: 'ஸெளலப்யம்', 'அணியிழை' அகநானூற்றிலிருந்து.
அன்புடன்
இன்னம்பூரான்

2009/11/5 N. Kannan <navan...@gmail.com>



--
இன்னம்பூரான்

N. Kannan

unread,
Nov 4, 2009, 11:21:06 PM11/4/09
to mint...@googlegroups.com
மிகச்சரியான கணிப்பு.

Chuimsae gene என்றெல்லாம் பேசுகிறார்கள். நம்மவர்களோ நாட்சிகள் போல்
இனவாதம் பேசி, மொழிவாதம் பேசி நம்மைப் பிரித்து சீரழிக்கும் எண்ணங்களைக்
கூசாமல் பரப்பிய வண்ணம் உள்ளனர். Chuimsae gene என்றால் என்ன? நல்லதை
எண்ணும் மரபணு. நல்லது எனும் போது கூடும் மனோநிலை. ஒருமைப்படும் மனது.
நல்லதே எண்ணும் உள்ளம்.

இது எவ்வளவு தேவை மின்தமிழ் உலகிற்கு தற்போது! நம் மொழியில் இல்லாத
சொல்லா? பக்தி இயக்கம் என்பதே இந்த Chuimsae gene ஐ ஒளிபடச்செய்வதுதான்.
செய்வோம்.

க.>

2009/11/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

நா.கண்ணன்

unread,
Nov 6, 2009, 8:28:04 PM11/6/09
to மின்தமிழ்
இது குறித்த திரு.கிருஷ்ணமூர்த்தியின் வலைக்குறிப்பு:

நாளும் ஒரு நல்ல சிந்தனையை எழுதுவது, படிப்பது, இந்த செய்தியைப்
பரப்புவது என்று ஒரு தன்னார்வ இயக்கமாகவே கொரியாவில் நடத்தி
வருகிறார்கள்! புரட்சிகரமான மாற்றங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும்
இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற மகத்தான உண்மையை, நல்ல ஒரு சிந்தனையை,
எண்ணத்தை, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வது மூலமாக நல்லதொரு
தொடக்கமாக ஆரம்பித்திருக்கிறார்கள்.

http://consenttobenothing.blogspot.com/2009/11/blog-post_5370.html

Innamburan Innamburan

unread,
Nov 6, 2009, 11:26:17 PM11/6/09
to mint...@googlegroups.com
அதைப் படித்து, அங்கே கருத்துத் தெரிவித்தேன். மற்றொரு சிந்தனை:

"...இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் கொலைப்படு மகன் அலன்" என்று கோவலனைக் கொல்ல அரசாணையை நிறைவேற்ற வந்த காவலர்கள் தயங்குகிறார்கள். " இவந்தன் உடல் இலக்கணமும் அமர்ந்திருக்கும் முறையையும் பார்த்தால் இவன் கொலை படுவதற்கு உரியவன் இல்லை" என்று உரை. 

வேந்தனுக்கு இந்த முன்யோசனை இருந்திருந்தால், இந்த அதர்மம் நடந்திருக்காது. முன்யோசனை, குறிப்பாக, ஆளுமை செய்வோர்களிடம் இருப்பது நலமே.

இன்னம்பூரான்



2009/11/7 நா.கண்ணன் <nka...@gmail.com>



--

Innamburan Innamburan

unread,
Nov 9, 2009, 10:27:21 AM11/9/09
to mint...@googlegroups.com
"Correction does much, but encouragement does more. Encouragement after censure is as the sun after a shower."
-Johann Wolfgang Von Goethe (1749-1832)

"சீர் செய்வது நலன் பயக்கும்; ஊக்கமோ மேலும் பயன் அளிக்கும். கண்டித்த பின் ஊக்கமளிப்பது, குளித்த பின் துவட்டிக்கொள்ளும் சுகம் போல."

நண்பர்களே, 
மேலும் சிறப்பாக மொழியாக்கம் செய்ய முயற்சிக்கவும்; சான்றுகள் தரவும்; மறுப்பும் வரலாம்.
இன்னம்பூரான்

2009/11/7 Innamburan Innamburan <innam...@googlemail.com>

srirangammohanarangan v

unread,
Nov 9, 2009, 11:46:32 AM11/9/09
to mint...@googlegroups.com

>>கண்டித்த பின் ஊக்கமளிப்பது, குளித்த பின் துவட்டிக்கொள்ளும் சுகம் போல." <<

அடி   சவ்வாசு!!  :--)))

Tthamizth Tthenee

unread,
Nov 9, 2009, 11:50:40 AM11/9/09
to mint...@googlegroups.com
கண்டித்த பின் ஊக்கமளிப்பது, குளித்த பின் துவட்டிக்கொள்ளும் சுகம் போல." <<
 
 
இதுதான் திரு இன்னம்புரான் அவர்களின் தனித்தன்மை
 
இதமான நாசூக்கான பாணி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
9-11-09 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Innamburan Innamburan

unread,
Nov 9, 2009, 6:51:36 PM11/9/09
to mint...@googlegroups.com

Quoting Rabbi Hillel, he asked: 

“If I am not for myself, who will be [for me]? If I am not for others, what am I? If not now, when?”

Dr. Bhagwathi

இதன் இடம், பொருள், ஏவல், நாஜி அரசு யூதர்களை மானாவரியாகக் கொன்று குவித்தது. ஒரு யூத மத குரு கேட்கிறார்:

"எனக்கு ஆதரவு நானே தரவில்லையெனில், வேறு யார் அதை செய்வர்? மற்றோர்க்கு நான் ஆதரவு தரவில்லையெனில், நான் யார்? அதுவும் உடனக்கடி இல்லை என்றால் பின் எப்போது தான்?

இன்னம்பூரான்




2009/11/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com



N. Kannan

unread,
Nov 9, 2009, 8:36:48 PM11/9/09
to mint...@googlegroups.com
>
> இதன் இடம், பொருள், ஏவல், நாஜி அரசு யூதர்களை மானாவரியாகக் கொன்று குவித்தது.
> ஒரு யூத மத குரு கேட்கிறார்:
>


ஒரு ஒலிக்குறிப்பு. Nazi எனும் ஜெர்மன் சொல்லை நாட்சி என்று உச்சரிக்க வேண்டும்.
ஆங்கிலவழியிலே உலகைக்காணும் தமிழன் இதை நாஜி என்றே தொடர்ந்து
எழுதிவருகிறான், எல்லா ஊடகங்களிலும்.

German alphabets look similar to English but pronounciation differs.
"Z" என்பதை அழுத்தி "ட்சி" என்று சொல்வது வழக்கம்.

கண்ணன்

வினோத் ராஜன்

unread,
Nov 9, 2009, 10:23:49 PM11/9/09
to மின்தமிழ்
நாட்சி'ஆ (அ) நாட்ஸி'ஆ ?

V

N. Kannan

unread,
Nov 9, 2009, 11:54:45 PM11/9/09
to mint...@googlegroups.com
ஆகா!
இரண்டிற்கும் இடையில் ஒரு 'zzzz' :-))

க.>

2009/11/10 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Nov 10, 2009, 3:04:40 AM11/10/09
to mint...@googlegroups.com
உள் வாங்கிக்கொண்டேன், ஐயா. ஒரு நிமிடம்,'நாஜியிடன்' நம்பிக்கையில்லாமல் தயங்கினேன். சாட்சி 'க்ஷி' யை குறித்ததால், 'ஜி' வழிச்சென்றேன்.
இன்னம்பூரான்

2009/11/10 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Nov 10, 2009, 3:34:17 AM11/10/09
to mint...@googlegroups.com
நாக்ஷி என்பது ஜெர்மன் பலுப்பலுடன் ஒத்து வரவில்லை.
நாட்சி என்று சொல்லி, அந்த ட்சி யை கொஞ்சம் ஆங்கில Z உச்சரிப்பில் ஒலிக்க வேண்டும்.

க.>

2009/11/10 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

வினோத் ராஜன்

unread,
Nov 10, 2009, 5:21:50 AM11/10/09
to மின்தமிழ்
அப்ப,

Nadzi ? தானே

V

On Nov 10, 1:34 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நாக்ஷி என்பது ஜெர்மன் பலுப்பலுடன் ஒத்து வரவில்லை.
> நாட்சி என்று சொல்லி, அந்த ட்சி யை கொஞ்சம் ஆங்கில Z உச்சரிப்பில் ஒலிக்க வேண்டும்.
>
> க.>
>

> 2009/11/10 Innamburan Innamburan <innambu...@googlemail.com>:

N. Kannan

unread,
Nov 10, 2009, 5:49:18 AM11/10/09
to mint...@googlegroups.com
இல்லை Natzi :-)

க.>

2009/11/10 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Nov 10, 2009, 11:22:55 AM11/10/09
to mint...@googlegroups.com
சிறிய குறிப்பு:
ஜெர்மானிய மொழியில் இது 'Nazi'  என்று தான் குறிப்பிடப்படுகிறது.  
 
ஜெர்மன் எழுத்து உச்சரிப்பில் z  எழுத்து "tz"  என்று சொல்லப்பட வேண்டும்.
 
உதாரணமாக Zwiebel (ட்ஸ்வீபல் - வெங்காயம்) என்றும் Züker (ட்ஸுக்கர் - சக்கரை) என்று ஒலி வருமாறு சொல்லப்படுகிறது.
 
-சுபா
 

Innamburan Innamburan

unread,
Nov 10, 2009, 7:15:47 PM11/10/09
to mint...@googlegroups.com
பொருத்தமான விளக்கம்; ஜெர்மன் ஒலியை அழுத்தமாக ஒலிக்கும் மொழி அல்லவா. இந்த கொள்கையை தமிழும் ஒத்துக் கொள்ளவேண்டும். 
இன்னம்பூரான்

2009/11/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Nov 10, 2009, 8:49:56 PM11/10/09
to mint...@googlegroups.com
ஆம!
எங்கள் காரியதரிசினியின் பெயர் "வைடிங்கர்' அந்த 'வை' அவர் வைக்கும்
விதம், 'அழுத்தம் திருத்தம் உளுத்தம் பருப்பு' ;-)
அங்கு 'v' என்றால் fow என்று ஒலிக்க வேண்டும். Volkswagen என்பதை
வோல்ஸ்வாகன் என்று சொல்லக்கூடாது போக்ஸ்வாகன் என்று சொல்ல
வேண்டும்...இப்படி..

க.>

2009/11/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages