தமிழ் மரபு அறக்கட்டளை திருநாள் மற்றும் 8 ஆம் ஆண்டு விழா

41 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Aug 19, 2009, 9:01:48 AM8/19/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்களே,
 
உங்கள் அனைவருடனும் ஒரு இனிமையான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
 
தமிழ் மரபு அறக்கட்டளை 2001ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ம் நாள் முனைவர்.நா.கண்ணன் அவர்கள் உத்தமம் கருத்தரங்கில் வழங்கிய ஆய்வுரையிலிருந்து தொடங்கியது. படிப்படியாக அதற்கென ஒரு வலைப்பக்கம், பின்னர் கருத்துப் பரிமாற்றத்திற்காக என ஆங்கிலத்தில் இ-சுவடி எனும் மடலாடற்குழு தொடங்கப்பட்டு பின்னர் மின்தமிழ் எனும் தமிழ் மடலாடற்குழுவும் தொடங்கப்பட்டு பல்வேறு பயனுள்ள கருத்துப் பரிமாறல்களுக்கு வழிவகுத்து வந்துள்ளது. திரு.கண்ணன் நடராஜனின் சிந்தனையில் உதித்த திருநாள் எனும் கருத்து இப்போது செயல் வடிவம் பெற்றுள்ளது.
 
இவ்வருடம் 27.08ம் நாள் (வியாழன்) தமிழ் மரபு அறக்கட்டளைக்கு 8 ஆம் ஆண்டு.  இதனை சிறப்பிக்கும் வகையில் அன்றைய தினத்தில் உங்கள் அனைவரிடமிருந்து மின்தமிழில்  பகிர்ந்து கொள்ள தகவல்களை எதிர்பார்க்கிறேன். நீங்கள் அன்றைய தினத்தில் த.ம.அறக்கட்டளையை நினைத்துப் பார்க்கும் வகையில் ஒரு நூலை மினப்திப்பு செய்து வழங்கலாம்; இந்த நோக்கத்தோடு ஒட்டிய கட்டுரை ஒன்றினை தயாரித்து வழங்கலாம்; மரபு சார்ந்த தகவல்களைப் பேட்டி செய்து அதனை எனக்கு அனுப்பி வைத்து பின்னர் அது பற்றிய செய்தியை நீங்களே இந்த நாளில் பகிர்ந்து கொள்ளலாம்; அல்லது பாதுக்காக்கப்பட வேண்டிய நிழற்படங்கள் காணொளிகள் இருந்தால் அதனை பகிர்ந்து கொள்ளலாம்.
 
ஆக மொத்தம் 27.08 அன்று நீங்கள் மின் தமிழில் & இ-சுவடியில் வழங்கும் செய்திகள் தமிழ் மரபு அறக்கட்டளை நோக்கத்தை மெருகூட்டுவதாக அமைத்திருக்க வேண்டியது சிறப்பு.
 
அதே வாரம் ஞாயிற்றுக்கிழமை 30.08.2009 அன்று சென்னை தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் ஒரு விழாவினை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.  இந்த விழா மதியம் 2மணிக்கு ஆரம்பிக்கப்படும். இந்த விழா அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.
 
 
நிகழ்ச்சி நிரல்:
 
தமிழ் மரபு அறக்கட்டளை 8 ஆம் ஆண்டு விழா - சென்னை
நாள்: 30-08-2009
நேரம்: மதியம் 2 மணி
இடம் : கே.என்.சண்முகசுந்தரம் அரங்கம், மயிலை, சென்னை
 
முன்னிலை: திரு, இந்திரா பார்த்தசாரதி
 
சிறப்புரை:திரு.திருப்பூர் கிருஷ்ணன் - பொருள்: தமிழ் எழுத்தில் மரபு
சிறப்புரை:திரு.பெ.சு.மணி - பொருள்:புதிய விழிப்பின் முன்னோடி ஜி.சுப்ரமணிய அய்யர்
 
உரைகள்:
1.திரு.நரசய்யா - தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னுலகப் பணிகள்
2.திரு.தி.வாசுதேவன் - மின்னாக்கம்; செய்முறை வழிமுறைகள்
3.திரு.சுகுமாரன் - மின் செய்தி தயாரித்தல்
 
கலந்துரையாடல்: தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப்பணிகளை விரைவுபடுத்தும் வழிகள்
 
நிகழ்ச்சி வரவேற்புரை, தொகுத்து வழங்குதல்: யுகமாயினி சித்தன்.
 
பெரியவர்களோடு கல்லூரி மாணவர்களும் இவ்விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
 
இந்த நிகழ்ச்சியின் போது மூவர் இந்த விழாவில் இவ்வாண்டின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுச் செல்வர்களாக சிறப்பு செய்யப்பட உள்ளனர். அவர்கள்:
  • திரு.நரசய்யா
  • முனைவர்.நா.கணேசன்
  • திரு.திவாகர்.
 
இந்த விழா பற்றிய செய்தியை உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வருகை இவ்விழாவை மேலும் சிறப்படையச் செய்யும்.
 
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
 
 
 
THF_Day_Invitation.jpg

Subashini Tremmel

unread,
Aug 23, 2009, 2:50:09 AM8/23/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
நண்பர்கள் அனைவருக்கும் மேலும் ஒரு தகவல்.
 
30.08 ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம். சென்னையில் தொடர்புகளுக்கு:
 
திரு.சித்தன் தொலைபேசி எண்: 9382708030
அன்புடன்
சுபா

 
2009/8/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

நா.கண்ணன்

unread,
Aug 25, 2009, 8:58:26 AM8/25/09
to மின்தமிழ்
அன்பர்களே:

இவ்விழா குறித்த சேதியை உங்கள் வலைப்பதிவில், முகமண்டலத்தில், சிட்டியில்
பகிர்ந்து கொள்ளுங்களேன்.

வருவோர் வரட்டும். சேதி அறிந்து கொள்வோர் அறிந்து கொள்ளட்டும்!

இன்றைய என் பதிவு: http://emadal.blogspot.com/

நன்றி.

கண்ணன்

On Aug 19, 10:01 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்களே,

karth...@gmail.com

unread,
Aug 25, 2009, 9:05:55 AM8/25/09
to மின்தமிழ்
நிகழ்ச்சி வளமாகவும் செறிவாகவும் அமைய என்
வாழ்த்துக்கள்.

எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துக்
கொண்டிராமல் உரிய நேரத்தில் தொடங்கி விடுங்கள்.்

என்ன நகழ்ந்தது என்று பின்னர் ஒரு விரிவான அறிக்கையும்
கொடுங்கள். வரமுடியாத அனைவருக்கும் பயனாக
இருக்கும்.

ரெ.கா.

N. Ganesan

unread,
Aug 25, 2009, 9:06:38 AM8/25/09
to மின்தமிழ்
On Aug 25, 7:58 am, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:
> அன்பர்களே:
>
> இவ்விழா குறித்த சேதியை உங்கள் வலைப்பதிவில், முகமண்டலத்தில், சிட்டியில்
> பகிர்ந்து கொள்ளுங்களேன்.
>
> வருவோர் வரட்டும். சேதி அறிந்து கொள்வோர் அறிந்து கொள்ளட்டும்!
>
> இன்றைய என் பதிவு:http://emadal.blogspot.com/
>

விழா சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள். சென்ற வாரத்தில்
விழாச் சிலவினங்களுக்கு என் பங்காக $ 100 காசோலை
மெயில் செய்துவிட்டேன்.

(அ) உ/ஊ உயிர்மெய் விலங்குத் தளையுடைப்புச் - வரிவடிவச் சீர்மை
(ஆ) விக்கிபிடியா முயற்சியில் கிரந்தம் - தமிழ் பிரச்சினை
பற்றி வினோத் குறிப்பிடுகிறார். என் தீர்வுப் பரிந்துரை:
கிரந்தம் எழுதினால் அதைத் திருத்தும் குழு
டையாகிரிட்டிக்கு குறியீடு வைத்தால்
உச்சரிப்பு மயங்காது
- இவ்விரண்டையும் குறிப்பிட்டு 2-3 பக்கம்
எழுதி என் ஏற்புரையாக அனுப்பிவைக்கிறேன்.

எனக்கு இக் கூட்டத்தில் கௌரவம் அளிக்க
இருக்கும் நண்பர்களுக்கு நன்றி.

நா. கணேசன்

கோவை, சத்தியமங்கலம் கல்லூரிகளில் பொறியியல்
மாணவர் கட்டுரைப் போட்டி - 3000 கட்டுரைகள்
இந்தியா முழுக்க வந்துள்ளன. அதன் விழாவில்
என் உரையைக் கேட்க உள்ளார்கள். அதற்கும்
தயார் பண்ணனும்.

Subashini Tremmel

unread,
Aug 26, 2009, 3:57:31 AM8/26/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
வருகின்ற 30.08 ஞாயிற்றுக் கிழமை தமிழ் மரபு அறக்கட்டளையின் திருநாள் விழாவில் கலந்து கொள்ள விரும்பும் சென்னை நண்பர்கள் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொண்டு மேல் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
 
திரு.சித்தன் தொலைபேசி எண்: +91 9382708030
திரு.தேவ் தொலைபேசி எண் +91 9364188444
அன்புடன்
சுபா
 

N. Kannan

unread,
Aug 26, 2009, 4:07:02 AM8/26/09
to mint...@googlegroups.com
சென்னையில் உள்ள மின்தமிழ் அன்பர்கள் கட்டாயம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
உங்கள் ஒவ்வொருவர் வருகையும் எமக்கு முக்கியம்.
சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது.
வந்து சிறப்பித்து கலந்துரையாடலில் பங்கு கொள்ளுங்கள்.
நேரம் பொன்னானது. எனவே என்ன சொல்லப்போகிறோம் என்பதை எழுதி வைத்துக்கொண்டு
சுருக்கமாக சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்.
எல்லோருக்கும் வாய்ப்பளியுங்கள். இங்கு நமக்குள் வயது வித்தியாசம்
கிடையாது. ஆர்வம்தான் முக்கியம். எனவே இளைஞர்கள் தயங்காமல் தங்கள்
எண்ணத்தைச் சொல்லவும்.
சில நேரங்கள் Spam mail போல் சிலர் வந்துவிடுவதுண்டு. எனவே தாங்கள்
மின்தமிழில் விரும்புவதை, த.ம.அ பக்கங்களில் விரும்புவதை சுட்டிக்காட்டி
பேச்சை ஆரம்பியுங்கள்.
ரெ.கா சுட்டிக்காட்டியபடி யாராவது ஒருவர் கையில் தடியை வைத்துக்கொண்டு
காலத்தைக் கணிக்க வேண்டும். இல்லையெனில் தமிழர்கள் பேச்சுப்பிரியர்கள்.
பேசிக்கொண்டே இருப்பர்.
பாவம்! ரெ.கா, தமக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று மலேசிய
நிகழ்வை கராறாக நடத்தினார்.
நமது நிகழ்வுகளில் ஒரு professionalism கொண்டு வர இது உதவும்.

சுபா, எனது உரைகளை அனுப்பி வைக்கிறோம்.

கண்ணன்

2009/8/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

NATARAJAN SRINIVASAN

unread,
Aug 26, 2009, 2:10:41 PM8/26/09
to mint...@googlegroups.com
நான் நிச்சயம் கலந்துகொள்கிறேன்.
 
நடராஜன்.

2009/8/26 N. Kannan <navan...@gmail.com>

Subashini Tremmel

unread,
Aug 27, 2009, 3:18:31 PM8/27/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
நண்பர்கள் அனைவருக்கும்,
 
அழைப்பிதழை மீண்டும் இங்கு இணைத்திருக்கிறேன்.  தமிழக நண்பர்கள் அதிலும் குறிப்பாக சென்னை நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும்.
 
உங்கள் தொடர்புகளுக்கு:
திரு.சித்தன் தொலைபேசி எண்: +91 9382708030
திரு.தேவ் தொலைபேசி எண் +91 9364188444
 
மேலும் திரு.சுகுமாரன், திரு.சந்திரா, திரு.திவா, திரு.இன்னம்புரான், முனைவர்.திருவேங்கடமணி, தேனீயார் (தற்போது துபாயில் இருந்தாலும்),  திரு.செல்வமுரளி ஆகியோரும் நீங்கள் தொடர்பு கொண்டால் உதவக் காத்திருக்கிறார்கள்.
 
அன்புடன்
சுபா
2009/8/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>
THF Day 30-08-2009.jpg

kaviyogi vedham

unread,
Aug 27, 2009, 7:15:50 PM8/27/09
to mint...@googlegroups.com, naa.g...@gmail.com
இதில் வருகிற மருத்துவர் தி.வாசுதேவன் என்பவர் ரிசர்வ் வங்கியில் வேலை செய்யும் என் நண்பர் தானே? சொல்க கணேசன்,,
 யோகியார்

--- On Thu, 8/27/09, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:

Geetha Sambasivam

unread,
Aug 27, 2009, 8:52:59 PM8/27/09
to mint...@googlegroups.com
மருத்துவர் தி.வாசுதேவன்//

இவர் கடலூரில்(அனஸ்தெடிஸ்ட்) மருத்துவராக இருக்கிறார். :D

2009/8/28 kaviyogi vedham <kaviyog...@yahoo.com>

Innamburan Innamburan

unread,
Aug 27, 2009, 11:10:51 PM8/27/09
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன்,
திரு.தி.வாசுதேவன் மற்றவர்களை மயக்கும் மருத்துவர். அவரது முன்வினை பயன் சால சிறந்தது என்பது என் கணிப்பு. ஒரு நாள் என்னை தேடி வந்தார். பாண்டியன் 'பட்டர் பிரான் வந்தார்' என்று பெரியாழ்வாரைக் கொண்டாடியது போல, 'ஒரு அந்தணர் வந்தார்' என்று அவரது வரவைக் கொண்டாடினேன். வேத விற்பன்னரான அவர், வேதம் கற்றுக்கொடுக்கும் ஆச்சாரியன். அவர்க்கும் ஒரு மோஹம் உண்டு: கணினி, இணையம். புகுந்து அநாயசமாக விளையாடுவார். அவரது திருகுமாரனோ, வடமொழி வித்வான்; மென்பொருளாக்க வல்லுனர்.

இன்னம்பூரான்

2009/8/28 kaviyogi vedham <kaviyog...@yahoo.com>

Hari Krishnan

unread,
Aug 28, 2009, 12:49:26 AM8/28/09
to mint...@googlegroups.com


2009/8/28 kaviyogi vedham <kaviyog...@yahoo.com>

இதில் வருகிற மருத்துவர் தி.வாசுதேவன் என்பவர் ரிசர்வ் வங்கியில் வேலை செய்யும் என் நண்பர் தானே? சொல்க கணேசன்,,
 யோகியார்

 
ணோவ்,
 
அவரு இரவா கபிலன்ங்ணா.. அந்த வாசுதேவர் வேற இந்த வாசுதேவர் வேற யோக்கியாரே!
 
வாஸனாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம்
ஸர்வபூத நிவாஸ்வோஸி வாஸுதேவ நமோஸ்துதே
 
இப்புடிக்கு,
செங்கிருதம், ஆங்கிலம் தமிழ் எல்லாவற்றிலும்
அரைகுறை.

N. Kannan

unread,
Aug 28, 2009, 2:30:11 AM8/28/09
to mint...@googlegroups.com
சரிதான், வாசுதேவன்தான் அத்திரு'மால்' என்கிறீர் ;-)

நாராயணா! என்று ஒவ்வொருமுறையும் அவர் விளிக்கும் போது ஜிவ்வென்று இருக்கும்.

இன்னும் தரிசனம் கிடைக்கவில்லை.

க.>

2009/8/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Neduchezhian T. Chezhian

unread,
Aug 28, 2009, 5:34:22 AM8/28/09
to mint...@googlegroups.com
அன்புள்ள மின்தமிழ் அன்பர்களுககு, வணக்கம்.
விழா வெற்றிபெற நல்வாழ்த்துகள்
தமிழன்புடன்,
முனைவர் தி.நெ.

28 ஆகஸ்ட், 2009 12:48 am அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதியது:



--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

Tthamizth Tthenee

unread,
Aug 28, 2009, 6:29:46 AM8/28/09
to mint...@googlegroups.com
நன்றி  திரு நெடுஞ்செழியன் அவர்களே
 
நலம்தானே, அவசியம் வந்து  கலந்துகொள்ளுங்கள்
 
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
Invitation.png

Kannan Natarajan

unread,
Aug 28, 2009, 7:19:27 AM8/28/09
to mint...@googlegroups.com
வணக்கம்,

"மயங்க நிலை மரபு!" என்பது பழைய தமிழ்த் தொடராகும்.

புதுமைகள் அலை அலையாகத் தோன்றி, பின்னர் சில மட்டும் நிலையாக நின்றால் அது மரபாக மாறும்.

கடல் கடந்து போனாலும் நெஞ்சில் கரை கடந்த அன்போடு பலர் ஒன்றாக இணைந்து, நன்றாக செயற்படுகின்ற தமிழ் மரபு அறக்கட்டளை/மின்தமிழ்க் குழுமம் நாளும் ஓங்குக என அகமகிழ்ந்து பாராட்டுவோம்.

த.ம.அ சிட்டுக்கு அகவை எட்டு
அம்மொட்டுக்கு இயற்றுவோம் நல் மெட்டு
அதைக் கேட்டு மகிழ்ந்து கைத்தட்டு.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Subashini Tremmel

unread,
Aug 28, 2009, 7:38:19 AM8/28/09
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
நண்பர்களே,
 
சென்னையில் 30.08.2009 நடை பெற உள்ள தமிழ் மரபு அறக்கட்டளை 8 ஆம் ஆண்டு விழா பற்றிய தகவல்களும் 16, கற்பகாம்பாள் தெருவில் உள்ள கே.என்.சண்முகசுந்தரம் அரங்கத்திற்குச் செல்லும் வரைபடமும் உள்ளூரில் தொடர்புக்கான தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
 
விபரங்களைக் காண:
 

Venkatachalam Subramanian

unread,
Aug 28, 2009, 9:13:43 AM8/28/09
to mint...@googlegroups.com
ஓம்.
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். வருகின்ற 30-08-09 தமிழ்மரபு அறக்கட்டளை
விழா சிறப்புடன் திகழ வாழ்த்துக்கள். அடியேனும் அன்று கலந்துகொள்கிறேன்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன்

2009/8/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

N. Ganesan

unread,
Aug 28, 2009, 9:31:42 AM8/28/09
to மின்தமிழ்

On Aug 28, 6:19 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> வணக்கம்,
>
> "மயங்க நிலை மரபு!" என்பது பழைய தமிழ்த் தொடராகும்.
>

பழைய இலக்கியமா?

> புதுமைகள் அலை அலையாகத் தோன்றி, பின்னர் சில மட்டும் நிலையாக நின்றால் அது
> மரபாக மாறும்.
>
> கடல் கடந்து போனாலும் நெஞ்சில் கரை கடந்த அன்போடு பலர் ஒன்றாக இணைந்து, நன்றாக
> செயற்படுகின்ற தமிழ் மரபு அறக்கட்டளை/மின்தமிழ்க் குழுமம் நாளும் ஓங்குக என
> அகமகிழ்ந்து பாராட்டுவோம்.
>
> த.ம.அ சிட்டுக்கு அகவை எட்டு
> அம்மொட்டுக்கு இயற்றுவோம் நல் மெட்டு
> அதைக் கேட்டு மகிழ்ந்து கைத்தட்டு.
>

த.ம.அ. விழாவுக்குக்
கை தட்டுவோம்! கை கொடுப்போம்!

N. Kannan

unread,
Aug 28, 2009, 11:21:11 AM8/28/09
to mint...@googlegroups.com
பொதுவாக!

எல்லோரும் வந்தவுடன் சுமுகமாக அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள். இங்கு
நமக்கு எழுத்துதான் தெரியும். முகம் தெரியாது. என் பாசுரமடல்களை மட்டும்
படித்துவிட்டு, லாஸ் ஏன்சலெஸ்ஸில் ராம் அவர்களை அவர் அண்ணா வீட்டில்
சந்தித்தபோது அவரால் நம்பவே முடியவில்லை. `என்ன ஓய்! இவ்வளவு மாடர்ன்னா
இருக்கிறீர். நான் கட்டுக்குடுமியோட ஒரு ஆளை எதிர்பார்த்தேன்!` என்று ஒரு
போடு போட்டார்.

இதை `நிழல்வெளி` என்று இதனால் சொன்னான். இதன் முகம் வேறு. நிஜமுகம் வேறு.

கவனம். அப்புறம் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை என்று சம்மந்திச் சண்டை
வந்துவிடப்போகிறது :-))

க.>

2009/8/28 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 28, 2009, 4:27:07 PM8/28/09
to mint...@googlegroups.com

அன்பார்ந்த  தமிழ் மரபு அறக்கட்டளையின் அறிஞர்களே

அனைவருக்கும்  வணக்கம்

நம்முடைய  பழைய மரபுகளை பாதுகாத்து  அவற்றை வருங்கால தலைமுறையினருக்கு  ஒப்பற்ற ஒரு செல்வமாக விட்டுச் செல்லவேண்டும் என்னும் நல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்ட இந்தத் தமிழ் மரபு அறக்கட்டளை
திரு கண்ணன், திருமதி சுபாட்ரெம்மல் அவர்களின் கருத்திலே கருவாகி உருவாகி அவர்களின் அயராத உழைப்பாலும், மின் தமிழ்  அறிஞர்களின் பங்களிப்பாலும் வியப்பூட்டும் வகையில் ஒரு காலப் பெட்டகமாக வளர்ந்து
இன்று தன்னுடைய எட்டாவது பிறந்த நாளைக் கொண்டாடிமகிழ,  தன்னை வளர்த்து ஆளாக்கிய அனைவருக்கும் நன்றி கூறும் விதமாக  நம் அனைவரையும் இங்கே ஒன்று சேர்த்திருக்கிறது  

இவ்விழா சிறப்பாக நடை பெற்று நம் மரபுகளின் பெருமையை உலகறியச் செய்யும் ,  இனியும்  நம் மரபுகளைக் காத்து பல்லாண்டுகள் இந்தத் தமிழ் மரபு அறக்கட்டளை சிரஞ்சீவியாய் வாழும் ,மரபு காக்க தொண்டு செய்யும் என்னும் மகிழ்ச்சியோடு விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடுவோம்

இங்கே வந்திருந்து இவ்விழாவை சிறப்பாக நடத்த விருக்கும் அனைத்து நல்லறிஞர்களுக்கும் இந்த மரபு அணிலான தமிழ்த்தேனியின் அன்பும் ,மரியாதையும் கலந்த நன்றி

அன்புடன்

தமிழ்த்தேனீ

 



 

2009/8/28 N. Kannan <navan...@gmail.com>

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

N. Kannan

unread,
Aug 28, 2009, 8:50:53 PM8/28/09
to mint...@googlegroups.com
சென்னையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் 8 ம் ஆண்டு விழா
Friday, 28 August 2009

தமிழ் மரபு அறக்கட்டளை 8 ஆம் ஆண்டு விழா - சென்னையில் வரும் 30.8.2009
அன்று நடைபெற உள்ளது. சென்னை, மயிலாப்பூரில் உள்ள கே.என்.சண்முகசுந்தரம்
அரங்கில் நடைபெறும் இந்த விழா பிற்பகல் 2 மணிக்கு துவங்குகிறது.
விழாவில் எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி முன்னிலை வகிக்கின்றார். தமிழ்
எழுத்தில் மரபு எனும் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணனும், புதிய
விழிப்பின் முன்னோடி ஜி.சுப்ரமணிய அய்யர் எனும் தலைப்பில் பெ.சு.மணி
அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.இதனைத் தொடர்ந்து தமிழ் மரபு
அறக்கட்டளையின் மின்னுலகப் பணிகள் எனும் தலைப்பில் நரசய்யாவும்,
மின்னாக்கம்; செய்முறை வழிமுறைகள் எனும் தலைப்பில் மருத்துவர்
தி.வாசுதேவனும், மின் செய்தி தயாரித்தல் எனும் தலைப்பில் சுகுமாரன்
ஆகியோரும் உரைநிகழ்த்த உள்ளனர்.


இதனையடுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப்பணிகளை
விரைவுபடுத்தும் வழிகள் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
நடைபெறுகிறது.

இந்த விழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுச் செல்வர்களாக
திரு.நரசய்யா, முனைவர்.நா.கணேசன்,திரு.திவாகர். ஆகியோர் சிறப்பு


செய்யப்பட உள்ளனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் மரபு அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

http://sangamamlive.in/index.php?/content/view/5175/31/

என் குறிப்பு:

இம்மாதிரி மின்னிதழ்கள் செய்தி வெளியிடும் போது அச்சுப்பிரதி மாதிரியே
வெளியிடுவது வேடிக்கை. தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு இணைப்புக்
கொடுத்தால் என்ன? இணையத்தின் உயிர்நாடியே இணைப்பில்தானே உள்ளது! அது என்ன
அறக்கட்டளை என்று கேட்போருக்கு ஒரு சொட்டு நொடியில் ஒரு உலகத்தையே காட்ட
முடியுமே!

ஆயினும், இச்சேதி வெளியிட்ட சங்கமத்திற்கு எம் நன்றிகள்.

Poopathi Manickam

unread,
Aug 29, 2009, 4:28:55 AM8/29/09
to மின்தமிழ்

:-) :-) :-)

அப்ட்ணா..
கருங்கிருதத்தில் சிக்கப்பட்டெ..
தெலுங்கிருதத்தில் (சொல்ப) 'அரைநிறை'ங்கறீங்...? ;-p

இப்பிடிக்கி.../பூபதி <என்கிற>பண்ச்'ச கரும.. கிரேமர்பொலிஸ்)
_________________________________

வாசுதேவ (வசு + தெய்வம்) குடும்பகம்..
வசு = எண்குணத்தான்/எட்டாஞ் சக்கரம்..?)
________________________________

On Aug 27, 9:49 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/8/28 kaviyogi vedham <kaviyogi_ved...@yahoo.com>

devoo

unread,
Aug 29, 2009, 5:44:18 AM8/29/09
to மின்தமிழ்
Aug 29, 5:50 am, "N. Kannan"

இம்மாதிரி மின்னிதழ்கள் செய்தி வெளியிடும் போது அச்சுப்பிரதி மாதிரியே
வெளியிடுவது வேடிக்கை. தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு இணைப்புக்
கொடுத்தால் என்ன? //

கோவப்படாதீங்க எசமான் ! சமூகத்துல சொல்றபடியே
செய்துறலாம்.


தேவ்

devoo

unread,
Aug 29, 2009, 11:04:25 AM8/29/09
to மின்தமிழ்
Aug 29, 5:50 am, "N. Kannan"

http://sangamamlive.in/index.php?/content/view/5175/31/

இதில் த.ம.அ.கட்டளை குறித்த செய்திகளையும் இணத்து விட்டனர்.


தேவ்

N. Kannan

unread,
Aug 29, 2009, 8:03:46 PM8/29/09
to mint...@googlegroups.com
அடடா! வாயு வேகம். மனோ வேகம்.

அதுதான் சொன்னேனே `ஜாம்பவான்கள்` நடத்தும் விழாவென்று.

வாழ்க!

க.>

பிகு: ஆனால் நம் சேவியின் உள்ளே ஒரு குட்டிச்சாத்தான் உட்கார்ந்து கொண்டு
நம் `index.html' பக்கத்தை உருமாற்றம் செய்து கொண்டே (சீன மொழிக்கு)
இருக்கிறது. அதை எப்படி விரட்டுவது என்று தெரியவில்லை. இங்கு ஏதேனும்
பேய் ஓட்டுநர் உண்டோ?

2009/8/30 devoo <rde...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Aug 30, 2009, 3:09:14 AM8/30/09
to mint...@googlegroups.com
> "மயங்க நிலை மரபு!" பழைய இலக்கியமா?

அது, "மயங்கா நிலை மரபு" - தொல்காப்பிய வரி

Chandra sekaran

unread,
Aug 30, 2009, 5:13:56 PM8/30/09
to mint...@googlegroups.com
ftp யில் ஒலியும், ஒளியும் (படங்கள்) இரவோடிரவாக சேர்த்துவிட்டேன். அப்படியே கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டேன்.இபோது மணி அதிகாலை 2.32 மணி (31ஆம் தேதி). சுபா சற்று கவனித்டு அதை மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
சித்தன் திடுப்பென ஆரம்பித்துவிட்டார். உடனிருந்த அ.சுகுமாரன், தேவ் ஆகியோரிடம் விழா தொகுப்பு அட்டவணையை அவடர் தந்திருந்தால் நல்லது. தலைமை செய்த நா.பா அவர்கள் அதிக நெரம் உட்கார முடியாது என்பதாலோ என்னவோ? டா.தி.வா. உட்பட ஏனையோர் கடவுள் வணக்கத்ஹுடன் ஆரம்பிக்க சொன்னோம். ஆனாலும் இறைவன் சித்தம் பாருங்கள். நிகழ்ச்சி தாமதமாகிறது என்றவுடனேயே, டாக்டர்.தி.வா அவர்கள் சுய முன்னுரை செய்துகொள்ள எல்லாரையும் அணித்த போது, பேசிய முதல் இருவரும், இறைவணக்கத்தை பாடிவிட்டுதான் தங்களைப்பற்றி பேசினார்கள். அதேபோல்,பே.சு.மணி ஐயா அவர்களும் இறைவணக்கத்தோடு தான் ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பேச்சாளர்களுக்குமான நேரத்தை மெல்லிய கயிர்ரால் இழுத்துப் பிடித்திருந்தால், நேரத்துடன் முடித்திருபோமோ என்னவோ? அ.சுகுமாரன் தன் உரை தேவையில்லை என்று தாமதம் கருதி தியாகம் செய்துவிட்டார். திருப்பூர் கிருஷ்ணனும், தான் நினைத்த விஷயங்கள் வேறு, பேசப்போவது வேறு என்று கூறி தலையாய ப்ரச்னை ஒன்றைப் பற்றி மட்டும் பேசி அப்ரச்னைகளுக்கு டாக்டர் தி.வா, இன்னம்பூரான், நடராஜன் ஆகியோரது பதிலையும் கேட்டுக் கொண்டார். நேர தாமதத்தின் காரணமாக, முடியும் வேளையில், அரங்கில் 1/3 கூட்டம் மட்டும் மிஞ்சியிருந்த்து. கீதாம்மா மற்று நாச்சியார் பெயரில் எழுதும் பெண்மணி, பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பாதியிலேயே கிளம்பிவிட்டனர்.

பொன்னியின் செல்வன் குழுவிலிருந்து சுந்தர் பதர்வாஜ் மற்றும் கடல்சார் பழந்தமிழ் எச்சங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும்  ஒரிசா  பாலுவும் வந்திருந்தனர்.
திவாகர், நடராஜன், அடியேன் ஆகியோரும் மின் தமிழ் மற்றும் பொன்னியின் செல்வன் குழு இரண்டிலும் அங்கத்தினர்கள். புகைப்படங்களில் ஒருவர் கண்ணில் பட்டிருக்க மாட்டார். அது அடியேந்தான். மோகனரங்கன் அண்ணா வராதது பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது கண்கூடு.
முதல் வரும் புகைப்படங்களுடன், ஒலி சுய அறிமுகத்தி பார்த்து முகங்களை வரிசை படுத்தி பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி
சந்திரா

Geetha Sambasivam

unread,
Aug 30, 2009, 8:38:47 PM8/30/09
to mint...@googlegroups.com
//கீதாம்மா மற்று நாச்சியார் பெயரில் எழுதும் பெண்மணி, பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பாதியிலேயே கிளம்பிவிட்டனர்//

என் தம்பியின் அவசர அழைப்பின் பேரில், நான் 4-30 மணி அளவில் கிளம்பினேன். பெ.சு. மணி அவர்கள் பேசி முடிக்கும்வரையில் இருந்தேன். தி.வா. வின் மின்னாக்கம் தான் மிகவும் ஆவலுடன் பார்த்துத் தெரிந்து கொள்ள நினைத்திருந்தேன். முடியவில்லை. கிளம்பவேண்டிய கட்டாயம். தேவ் அவர்களிடம் சொல்லி விட்டே கிளம்பினேன்.

2009/8/31 Chandra sekaran <plastic...@gmail.com>

Chandra sekaran

unread,
Aug 31, 2009, 12:59:22 AM8/31/09
to mint...@googlegroups.com


2009/8/31 Geetha Sambasivam <geetha...@gmail.com>
//கீதாம்மா மற்று நாச்சியார் பெயரில் எழுதும் பெண்மணி, பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பாதியிலேயே கிளம்பிவிட்டனர்//

என் தம்பியின் அவசர அழைப்பின் பேரில், நான் 4-30 மணி அளவில் கிளம்பினேன். பெ.சு. மணி அவர்கள் பேசி முடிக்கும்வரையில் இருந்தேன். தி.வா. வின் மின்னாக்கம் தான் மிகவும் ஆவலுடன் பார்த்துத் தெரிந்து கொள்ள நினைத்திருந்தேன். முடியவில்லை. கிளம்பவேண்டிய கட்டாயம். தேவ் அவர்களிடம் சொல்லி விட்டே கிளம்பினேன்.

~--~---
கீதாம்மா, புகாராக இதை கூறவில்லை. நேரதாமதம் ஆகிக் கொண்டிருந்தமையால், பலர் பாதியில் கிளம்ப வேண்டிய நிலை என்று சொன்னேன். பெ.சு.மணி பேசும் மணி! 1/2 மணி நேரம் என்று நேரம் ஒதுக்கினாலும், ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிய விஷயம் சுப்ரமணிய ஐயர் எனும் அரிய மாமனிதரைப பற்றி என்றாலும், இடம், நேரம் மக்கள் உணர்வுகளைப் புரிந்து பேசியிருக்கலாம் என்பது இந்த சிறியவனின் தாழ்ந்த அபிப்ராயம். அதேபோல், மின்னாக்கம், மின் செய்திகள் அல்லது இணையத்தில் தமிழ் பற்றிய தலைப்புகள் பேசுவோரையே பேச அழைத்திருக்கலாம். பெ.செ.மணி பெரிய அறிஞர். விஷயங்கள் அதிகம். அவரை தனி தேர்வு நேர்காணல் செய்து மின் தமிழில் வலையேற்றி இருக்கலாம். நேற்றைய சபை சம்பந்தமற்றது என்பதும் என் தாழ்ந்த அபிப்ராயம். அ.சுகுமாரன் போன்றோர் எப்பை மின் செய்திகளை அத்தனை விரைவாக, செய்தியாகத் தருகிறார் என்பதை பேசிக் கேட்க நாம் கொடுத்து வைக்கவில்லை. all blame goes to lack of time and late start...!

Chandra sekaran

unread,
Aug 31, 2009, 1:55:26 AM8/31/09
to mint...@googlegroups.com
சித்தன் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சரியான நேரத்தில்தான் ஆரம்பித்தார் என்றும் எல்லார்க்கும் அவர் 3 மனி என்று வாய்வழி தகவல் தந்ததாகவும் சொன்னர். மன்னிக்கவும் இந்த சிறியேன் ஏதும் தவறாக குறிப்பிட்டிருந்தால். யாரையும் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. நரசய்ய அவர்கள், டாக்டர் சார்,  தேவ், சுகுமாரன் ஆகியோரின் எண்ணங்களும் நிகழ்ச்சி 2 மணிக்குத் தானே? எனப் ப்ரதிபலித்ததன் காரணமாகவே, சுய அறிமுகம் என்ற பெயரில் டாக்டர் அவர்கள் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

நேரம் பொன்னானது, வரும் நிகழ்வுகளிலாவது அதௌ பேணி காப்பாற்றப் பட வேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்ததான் என் மனதில் பட்டதை சொன்னேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
சந்திரா

Subashini Tremmel

unread,
Aug 31, 2009, 3:09:40 AM8/31/09
to mint...@googlegroups.com
Thanks Chandra.
I'll check and release them this evening.
anbudan
Suba 

 

N. Kannan

unread,
Aug 31, 2009, 4:17:56 AM8/31/09
to mint...@googlegroups.com
எல்லாமே பாடம்தானே!
அடுத்த நிகழ்ச்சியில் ஜமாய்த்துவிடலாம்.
என்னென்ன பிழைகள் விட்டோம் என்று எல்லோரும் குறித்துக்கொள்ளுங்கள்!
விரிவாக பின்னால் பரிசோதனை செய்வோம் (தனிக்குழுவில்).

க.>

2009/8/31 Chandra sekaran <plastic...@gmail.com>:

வினோத் ராஜன்

unread,
Aug 31, 2009, 7:48:54 AM8/31/09
to மின்தமிழ்
>
> பிகு: ஆனால் நம் சேவியின் உள்ளே ஒரு குட்டிச்சாத்தான் உட்கார்ந்து கொண்டு
> நம் `index.html' பக்கத்தை உருமாற்றம் செய்து கொண்டே (சீன மொழிக்கு)
> இருக்கிறது. அதை எப்படி விரட்டுவது என்று தெரியவில்லை.

சீன மொழி ஒரு போர்வையே.

UTF-8 Encoding மாற்றிவிட்டு.

View Source பாருங்கள்:

http://paste.uni.cc/20191

எல்லாம் Spam Links.

On Aug 30, 5:03 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அடடா! வாயு வேகம். மனோ வேகம்.
>
> அதுதான் சொன்னேனே `ஜாம்பவான்கள்` நடத்தும் விழாவென்று.
>
> வாழ்க!
>
> க.>

N. Kannan

unread,
Aug 31, 2009, 7:53:54 AM8/31/09
to mint...@googlegroups.com
சரி, நமது html fileஐ read only permission கொடுத்தாலும் (without any
execusion power) எப்படி வந்து வந்து அழிக்கிறது? அது என்ன சித்து வேலை?

க.>

2009/8/31 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:

வினோத் ராஜன்

unread,
Aug 31, 2009, 8:03:07 AM8/31/09
to மின்தமிழ்
நிரந்தரத்தீர்வு வரும் வரை. தற்காலிகமாக ஒன்று செய்துபாருங்கள்..

http://www.tamilheritage.org/http://www.tamilheritage.org/xyz.html
[Index என்ற சொல்லோ main போன்ற சொற்களோ வராதவாறு ] என்றவாறு எதாவது ஒரு
புதுப்பெயருக்கு Temporary Redirect செய்யுங்கள். பேய் அதை பிடிக்காமல்


இருக்கலாம்.

V

Subashini Tremmel

unread,
Aug 31, 2009, 12:09:50 PM8/31/09
to mint...@googlegroups.com
இது ஒரு நல்ல யோசனைதான். இன்று மாற்றிப்பார்க்கிறேன்.
நன்றி வினோத் ராஜன்.
-சுபா


 
2009/8/31 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
நிரந்தரத்தீர்வு வரும் வரை. தற்காலிகமாக ஒன்று செய்துபாருங்கள்..

Selva Murali

unread,
Aug 31, 2009, 12:19:31 PM8/31/09
to mint...@googlegroups.com
அட ஆமாம்......
இதை .htaccess பைல் வழியாக செய்யலாம் தானே!!
நல்ல ஐடியா...
நன்றி!!

2009/8/31 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com

vallima

unread,
Aug 31, 2009, 12:22:22 PM8/31/09
to மின்தமிழ்
எனது பெயர் ரேவதிநரசிம்ஹன்.
நான் தமிழ்மணம் ,இணைய ஏட்டில் ஒரு சிறிய புள்ளி.
எனது வலைப்பூவிற்கு நாச்சியார் என்று பெயர்.

.

30 ஆகஸ்ட் மரபுத் தமிழ்க் குழுமத்துடன் முதல் சந்திப்பு கிடைத்தது.
இந்தக் குழுமத்திற்கு என்னால் எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்று
இன்னும் சொல்ல முடியவில்லை. ஆனால் நிறையக் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் என்
வழி வருமென்பது தெரிந்தது.

திரு தேவராஜன்,திருமதி கீதா,,திரு சந்திர சேகர்,திரு ஓம் சுப்ரமண்யம்,
தம்பி வாசுதேவன்,திவாகர், பெரியவர் இன்னாம்பூர், இவர்கள் அனைவரின் தமிழ்
ஆளுமை என்னை இன்னும் ஆச்சரியத்தில் இருந்து விடுபட முடியாமல்
இருத்தி வைக்கிறது.

திரு.திருப்பூர் மணியின் பேச்சைக் கேட்காமல் எழுந்து வந்தது வருத்தமே.

மீண்டும் எல்லோரையும்சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று
நினைக்கிறேன்.
எனக்கு வழி காட்டிய கீதா சாம்பசிவத்துக்கு நன்றி.


On Aug 31, 9:19 pm, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> அட ஆமாம்......
> இதை .htaccess பைல் வழியாக செய்யலாம் தானே!!
> நல்ல ஐடியா...
> நன்றி!!
>

> 2009/8/31 Subashini Tremmel <ksubash...@gmail.com>


>
>
>
>
>
> > இது ஒரு நல்ல யோசனைதான். இன்று மாற்றிப்பார்க்கிறேன்.
> > நன்றி வினோத் ராஜன்.
> > -சுபா
>

> > 2009/8/31 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>


>
> >> நிரந்தரத்தீர்வு வரும் வரை. தற்காலிகமாக ஒன்று செய்துபாருங்கள்..
>

> >>http://www.tamilheritage.org/http://www.tamilheritage.org/xyz.html


> >> [Index என்ற சொல்லோ main போன்ற சொற்களோ வராதவாறு ] என்றவாறு எதாவது ஒரு
> >> புதுப்பெயருக்கு Temporary Redirect செய்யுங்கள். பேய் அதை பிடிக்காமல்
> >> இருக்கலாம்.
>
> >> V
>
> --
> M.S.Murali (B+ve)
> 99430-94945

> ----------------------------www.visualmediaa.com- Hide quoted text -
>
> - Show quoted text -

V, Dhivakar

unread,
Sep 1, 2009, 1:31:23 AM9/1/09
to mint...@googlegroups.com, ramaswam...@gmail.com
Welcome Valli Ma!
 
Like this I wanted to include Sri Sampath too here. His only reservation is how to type tamil? He was at the meet.
 
Some one can link some useful tips on tamil typing to Sri Sampath (Ex-editor, The Hindu, Visakhapatnam) now at Chennai.
 
His e mail id ramaswam...@gmail.com
 
D
 
Reply all
Reply to author
Forward
0 new messages