Fwd: [tamil_wiktionary] கலைச்சொல்லாக்க விதிகள்

11 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Nov 18, 2009, 3:51:26 AM11/18/09
to min tamil
ஓம்.
திரு வா.செ. குழந்தைசாமி தலைமையிலான குழு கலைச்சொல்லாகத்திற்கென சில உத்திகளைத் தயாரித்திருக்கின்றனர்.
 திருவாளர்கள் ஆண்டோபீட்டர், மு.சிவலிங்கம் மற்றும் என். பாலசுப்பிரமணியம் அதன் உறுபினர்கள்.
அவர்கள் கண்டபடி  கலைச்சொற்கள் ,
எடுத்துக்காட்டாக:
hard disk-வன் வட்டு(மொழிபெயர்ப்பு அடிப்படையில்)
hard disk-  நிலை வட்டு (பொருள் அடிப்படையில்)

எளிதில் புரிந்து கொள்ள முடியாதவற்றைத் தவிர்க்கலாம்.
text-  பனுவல்

Line- கோடு.
Telephone line- தொலைபேசித் தடம்
On-line- நிகழ்நிலை

virus- நச்சு நிரல்
Applet- குறு நிரல்
Audio-  கேட்பொலி
Network-  பிணையம்
Internet- இணையம்
Browser- உலாவி
Internet browsing center- இணைய உலா மையம்.

CPU,Memory, Monitor, Disk Drive- மையச் செயலகம்,நினைவகம்,திரையகம், வட்டகம்
Gateway,Router, Bridge,Brouter- நுழைவி, திசைவி, இணைவி, இணைத்திசைவி

Mouse-  சுட்டி
Modem-இணக்கி
ROM- அழியா நினைவகம்
RAM- நிலையா நினைவகம்

அளவைச் சொற்களை அப்படியே ஒலிபெயர்த்து எழுதலாம்.
கிலோ, மெகா, பிட், பைட், ஹெர்ட்ஸ், மிப்ஸ்


---------- Forwarded message ----------
From: <ravid...@googlemail.com>
Date: 2009/11/18
 கலைச்சொல்லாக்க விதிகள்


http://www.tcwords.com/Rules_for_technical_terminology.pdf

நன்றிதமிழ் விக்கி குழுமம்
ஓம். வெ.சுப்பிரமணியன் ஓம்.
--

விஜயராகவன்

unread,
Nov 18, 2009, 1:33:35 PM11/18/09
to மின்தமிழ்
On 18 Nov, 08:51, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:
> --- Hide quoted text -
>
> - Show quoted text -


இதில் நிறைய சொற்கள் ரொம்ப கஷ்டப்பட்டு சொல்லணும். யாரும் இதை உபயோகப்
படுத்தபோவதில்லை.

உதாரணமாக


ROM- அழியா நினைவகம்
RAM- நிலையா நினைவகம்

virus- நச்சு நிரல்

அப்படியே ரோம், ரேம், வைரஸ் என பேச்சுத் தமிழை உபயோகிக்காமல், நீண்ட
வார்த்தைகள் பரவப்போவதில்லை.

அதைப்போலத்தான்


Telephone line- தொலைபேசித் தடம்
On-line- நிகழ்நிலை

CPU,Memory, Monitor, Disk Drive- மையச் செயலகம்,நினைவகம்,திரையகம்,
வட்டகம்
Gateway,Router, Bridge,Brouter- நுழைவி, திசைவி, இணைவி, இணைத்திசைவி


நிச்சயமாக இந்த தமிழ் வார்த்தைகள் பரவப்போவதில்லை.

CPU க்கு எவனாவது `மையச் செயலகம்` என சொல்லப் போகிறானா? நிச்சயமாக இல்லை.

பரவலாக மாணவர்கள், வல்லுனர்கள், வாத்தியார்கள், வணிகம், புத்தக
எழுத்தாளர்கள் இவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுத
வேண்டும். இல்லாவிட்டால் புது புது தமிழ் வார்த்தைகளை உண்டுபண்ணிக்
கொண்டே செல்லலாம். யாரும் பிரயோகப்படுத்தப் போவதில்லை.


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Nov 18, 2009, 2:02:08 PM11/18/09
to மின்தமிழ்
”கலைச் சொல்லாக்க விதிகள்” உண்மையிலேயே “கலை செல்லாத விதிகள்”. தற்கால
பொறியியல், கணினி தமிழுக்கு பின்பற்ற வேண்டிய உதாரணம் இங்கு உள்ளது.


http://www.dinamalar.com/supplementary/cmalar_detail.asp?news_id=902


விஜயராகவன்

On 18 Nov, 08:51, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:

karthi

unread,
Nov 20, 2009, 5:56:01 AM11/20/09
to mint...@googlegroups.com

பார்த்தேன். வேடிக்கைக்குத்தானே அனுப்பினீர்கள்?

இதே பாணியில் முழுக் கணினி இதழ்களும் வெளிவரப் பார்த்திருக்கிறேன்.

ஓர் எண்ணம்: அதிகமாக ஆங்கிலம் படிக்காத ஒரு தமிழ் இளைஞன்
கணினி கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இதுதான் சிறந்த வழி
அல்லவா?

முனைவர் குழந்தைசாமியின் வழியான சீரான தமிழ்ச் சொற்கள்
உயர் தமிழ் கற்றவர்களுக்கு மட்டும்தானே உதவும்? அப்படி
உயர் தமிழ்க் கல்வி கற்றவர்கள் ஆங்கிலமும் கற்றிருப்பார்கள்.
அநேகமாக இந்தத் தமிழாக்கங்கள் அவர்களுக்குத் தேவைப்படாது.

தமிழ்நாட்டில் தமிழில் கணினி கற்றுத் தரும் பயிற்சிக் கூடங்கள்
உண்டா? உண்டென்றால் இந்தச் சீரான தமிழாக்கங்களை அவர்கள்
பயன்படுத்துகிறார்களா?

தொழில் முக்கியமா தமிழ் முக்கியமா என்ற dilemma எனக்கும் உண்டு.
(டிலெம்மாவுக்கு என்ன தமிழ்ச் சொல்?)

ரெ.கா.

Kaliamma Ponnan

unread,
Nov 20, 2009, 6:05:21 AM11/20/09
to mint...@googlegroups.com

          2009/11/20 karthi <karth...@gmail.com>

       தொழில் முக்கியமா தமிழ் முக்கியமா என்ற dilemma எனக்கும் உண்டு.
       (டிலெம்மாவுக்கு என்ன தமிழ்ச் சொல்?)

       ரெ.கா.

ரே.கா. அவர்களே,

Dilemma  -    "இரண்டும் கெட்ட நிலை" என்கிறது

http://www.tamildict.com/english.php?action=search&word=dilemma


அன்புடன்,
காளியம்மா


V, Dhivakar

unread,
Nov 20, 2009, 6:25:54 AM11/20/09
to mint...@googlegroups.com
தவிப்பு ?

karthi

unread,
Nov 20, 2009, 6:29:45 AM11/20/09
to mint...@googlegroups.com
ஆம் திவாகர்! "தவிப்பு" சரியாகப் பொருந்துகிறது.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Friday, November 20, 2009 7:25 PM
Subject: [MinTamil] Re: Fwd: [tamil_wiktionary] கலைச்சொல்லாக்க விதிகள்

N. Ganesan

unread,
Nov 20, 2009, 7:29:24 AM11/20/09
to மின்தமிழ்

On Nov 20, 5:29 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> ஆம் திவாகர்! "தவிப்பு" சரியாகப் பொருந்துகிறது.
>

தடுமாற்றம் = டிலெம்மா

> ரெ.கா.
>
>   ----- Original Message -----
>   From: V, Dhivakar
>   To: mint...@googlegroups.com
>   Sent: Friday, November 20, 2009 7:25 PM
>   Subject: [MinTamil] Re: Fwd: [tamil_wiktionary] கலைச்சொல்லாக்க விதிகள்
>
>   தவிப்பு ?
>

>   On 11/20/09, Kaliamma Ponnan <ponna...@gmail.com> wrote:
>
>               2009/11/20 karthi <karthige...@gmail.com>

N. Kannan

unread,
Nov 20, 2009, 7:40:14 AM11/20/09
to mint...@googlegroups.com
நாம் ஆங்கிலத்தில் நினைத்து தமிழ் படுத்தும் போது இப்பிரச்சனை வருகிறது.
இயல்பாக தமிழில் சிந்திக்கும் போது எத்தனையோ வழிகளில் சொல்லிவிட
முடியும். அந்த அளவிற்காவது தமிழ் இன்னும் வளமாகவே உள்ளது ;-)

க.>

2009/11/20 N. Ganesan <naa.g...@gmail.com>:

karthi

unread,
Nov 20, 2009, 7:59:27 AM11/20/09
to mint...@googlegroups.com
ஆம்! பொருத்தமே! பாருங்கள் எல்லாம் தெரிந்த சொற்கள்.
இருந்தும் தேவையான நேரத்துக்கு துணைக்கு வருவதில்லை.
நியூரோன்களின் அந்திம காலம் போலும்!

karthi

unread,
Nov 20, 2009, 8:01:55 AM11/20/09
to mint...@googlegroups.com
ஆம். ஆங்கிலக் கல்வியும் காலனித்துவமும் நம்மைப் பழக்கிய
பழக்கம் அது!

அது சரி! என்ன இன்னைக்கு எல்லாம் ஆமாம் சாமி போட வேண்டி
இருக்கிறது?

ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Friday, November 20, 2009 8:40 PM
Subject: [MinTamil] Re: Fwd: [tamil_wiktionary] கலைச்சொல்லாக்க விதிகள்

N. Kannan

unread,
Nov 20, 2009, 8:23:59 AM11/20/09
to mint...@googlegroups.com
2009/11/20 karthi <karth...@gmail.com>:

> அது சரி! என்ன இன்னைக்கு எல்லாம் ஆமாம் சாமி போட வேண்டி
> இருக்கிறது?
>

பாருங்களேன்! என்ன அதிசயம்?
அது சரி, அந்தக் குட்டி டாக்டரைப் பார்த்தீர்களா?
அவனை உங்களுக்குப் பிடிக்கும்!

க.>

Hari Krishnan

unread,
Nov 20, 2009, 8:31:04 AM11/20/09
to mint...@googlegroups.com


2009/11/20 karthi <karth...@gmail.com>



தொழில் முக்கியமா தமிழ் முக்கியமா என்ற dilemma எனக்கும் உண்டு.
(டிலெம்மாவுக்கு என்ன தமிழ்ச் சொல்?)

தர்ம சங்கடம். அதுதான் நேரடிப் பொருள்.  இது வடமுளியா தோச முளியா என்றெல்லாம் பார்க்காவிட்டால், நேர்பொருள் இதுதான்.  வேண்டுமானால் தர்மசங்கடம் என்றால் என்ன என்பதைப் பற்றி விரிக்கிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

karthi

unread,
Nov 20, 2009, 8:38:05 AM11/20/09
to mint...@googlegroups.com
அட ஆமா!
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Friday, November 20, 2009 9:31 PM
Subject: [MinTamil] Re: Fwd: [tamil_wiktionary] கலைச்சொல்லாக்க விதிகள்



Tirumurti Vasudevan

unread,
Nov 20, 2009, 9:02:26 AM11/20/09
to mint...@googlegroups.com
ஒன்பது விரலாரை காணோமேன்னு பாத்தேன். :-))
நீர் வேற பசிய கிளப்பி விடுரீர்!

டிலெம்மா = ரெண்டு கொம்பு. முன்னே போனா முட்டும் பின்னே வந்தா உதைக்கும்.
அதாங்க இரு தலைக்கொள்ளி எறும்பு போலங்கிறது. அது போல தவிக்கிறதா எழுதினா
சரியாப்போகும்.
திவாஜி

2009/11/20 Hari Krishnan <hari.har...@gmail.com>:

--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

N. Kannan

unread,
Nov 20, 2009, 9:24:05 AM11/20/09
to mint...@googlegroups.com
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் கூட டிலமாதான்!
மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை கூட அதுதான்!

இப்போ எதை எடுத்துக்கொள்வது என்பதே ரெ.காவின் டிலமா ;-)

க.>

2009/11/20 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

amachu

unread,
Nov 20, 2009, 10:21:33 AM11/20/09
to mint...@googlegroups.com
On Fri, 2009-11-20 at 23:24 +0900, N. Kannan wrote:
> ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் கூட டிலமாதான்!
> மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை கூட அதுதான்!
>
> இப்போ எதை எடுத்துக்கொள்வது என்பதே ரெ.காவின் டிலமா ;-)
>

இக்கட்டனா நிலைமைங்கறது என்னா?


--

ஆமாச்சு

Tirumurti Vasudevan

unread,
Nov 20, 2009, 10:39:20 AM11/20/09
to mint...@googlegroups.com
இக்கட்டுல சாய்ஸ்யே கிடையாது.
டிலமால இப்படியா அப்படியா ன்னு உண்டு.
திவாஜி

2009/11/20 amachu <rama...@amachu.net>:

--

Innamburan Innamburan

unread,
Nov 20, 2009, 10:46:14 AM11/20/09
to mint...@googlegroups.com
'இரண்டும்கெட்டானுக்கு' வந்த மவுசைப்பாருங்க, இந்த 'திரிச்ங்கு சுவர்க்கத்திலே'

இப்படிக்கு 'டைலமா'
இன்னம்பூரான்


2009/11/20 Tirumurti Vasudevan <agni...@gmail.com>



--
இன்னம்பூரான்

விஜயராகவன்

unread,
Nov 20, 2009, 1:38:48 PM11/20/09
to மின்தமிழ்
On 20 Nov, 10:56, "karthi" <karthige...@gmail.com> wrote:
> பார்த்தேன். வேடிக்கைக்குத்தானே அனுப்பினீர்கள்?


இல்லை.


> இதே பாணியில் முழுக் கணினி இதழ்களும் வெளிவரப் பார்த்திருக்கிறேன்.
>
> ஓர் எண்ணம்: அதிகமாக ஆங்கிலம் படிக்காத ஒரு தமிழ் இளைஞன்
> கணினி கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இதுதான் சிறந்த வழி
> அல்லவா?

நீங்கள் சொல்லுவதில் ஒரு அசம்ப்ஷன் - ஆங்கிலம் படிக்காத ஒரு தமிழ் இளைஞன்
ஒருவனுக்கு ஆங்கில வார்த்தைகள் தெரியாது, விஞ்ஞானம், பொறியியல்
சம்பந்தப்பட்ட வார்த்தைகள் ஒன்று கூட தெரியாது என்று. அது தவறு என
நினைக்கிறேன். பத்திரிக்கை படிப்பவர்கள், ரேடியோ டெலிவிஷன், சினிமா
பார்ப்பவர்களுக்கு நிறைய ஆங்கில வார்த்தைகளும், விஞ்ஞான வார்த்தைகளும்
ஏற்கெனவே பரிச்சியம் ஆக இருக்கும்.

உதாரணமாக தினத்தந்தி ‘பாமரத் தமிழனின்’ பத்திரிக்கை, ஆங்கிலம்
தெரியாதவ்னின் பத்திரிககை, ஆரம்ப பள்ளிக் கூடம் வரை படித்தவர்கள்
பத்திரிக்கை என 50 வருடங்களாக ‘புகழ்’ வாங்கியுள்ளது. அதன் தமிழ்
சொல்லாடல்கள் அப்படிப்பட்டவர்களின் புரிதலை ஒத்துள்ளது என ஓரளவு நிச்சயம்
நம்பலாம். மேலும் அவர்கள் எதாவது படித்து பிழைப்பு நடத்த வேண்டும் என
ஆசையுள்ளவர்கள்


அது பல ‘கலை சொற்களை’ எப்படி கையாளுகிறது என கவனியுங்கள்

http://www.dailythanthi.com/kalvi/job.html

’ஒயர்மேன்’, சர்வேயர், மெகானிக், எலெக்ட்ரீசியன், ரெஃப்ரிஜிரேசன் மற்றும்
ஏர்கண்டிஷனிங் என்ற பல அன்றாட ஆங்கில மூல வார்த்தைகளை சரளமாக
பயன்படுத்துகின்றது, அதுதான் சரியான வழி.

>
> முனைவர் குழந்தைசாமியின் வழியான சீரான தமிழ்ச் சொற்கள்
> உயர் தமிழ் கற்றவர்களுக்கு மட்டும்தானே உதவும்? அப்படி
> உயர் தமிழ்க் கல்வி கற்றவர்கள் ஆங்கிலமும் கற்றிருப்பார்கள்.
> அநேகமாக இந்தத் தமிழாக்கங்கள் அவர்களுக்குத் தேவைப்படாது.

நல்ல அவதானம்


> தமிழ்நாட்டில் தமிழில் கணினி கற்றுத் தரும் பயிற்சிக் கூடங்கள்
> உண்டா? உண்டென்றால் இந்தச் சீரான தமிழாக்கங்களை அவர்கள்
> பயன்படுத்துகிறார்களா?


ரொம்ப சந்தேகம்தான். நீங்கள் பல ஆரம்ப தொழில் படிப்பு புத்தகஙகளின்
தலைப்பை பார்த்தீர்களானால், அப்படி நிச்சயம் இல்லை என சொல்லலாம்

>
> தொழில் முக்கியமா தமிழ் முக்கியமா என்ற dilemma எனக்கும் உண்டு.
> (டிலெம்மாவுக்கு என்ன தமிழ்ச் சொல்?)
>
> ரெ.கா.


இது தவறான டிலெம்மா. தொழிலில் உயிருள்ளாத தமிழ் . தமிழே இல்லை, வெறும்
வார்த்தை கோர்வைகள். வாழ்க்கைக்கும், பிழைப்புக்கும் பயன்படுத்தப்படாத
தமிழ் தமிழே இல்லை.

டிலெம்மாவுக்கு என்ன தமிழ்ச் சொல் என்பதற்கு பல சொற்கள் வந்துள்ளன; என்
கணிப்பில் அவை ஒன்றும் டிலெம்மாவின் அர்த்தைதையோ, Nuance யோ
கொடுக்கவில்லை. நீங்கள் இயல்பாக பயன்படுத்திய வார்த்தைதான் சரி, அதற்கு
தமிழ் என்ன என கவலை பட வேண்டாம்.

நீங்கள் மனைவிக்கு புடவை மஞ்சள் நிறத்திலேயா, பர்கண்டி நிறத்திலேயா
வாங்குவது என தீர்மானிப்பதற்கு எண்ணிக் கொண்டிருந்தால், அது டிலெம்மா.
தடுமாற்றம், தர்மசங்கடம், திரிசங்கு சொர்கம், இருதலைக் கொள்ளி, தவிப்பு
ஒன்றும் சரியாக இல்லை. இருதலைக் கொள்ளி எறும்பு சரியாக
இருக்கும் ,ஆனால் 4 வார்த்தைகளை உபயோகிக்க வேண்டியுள்ளது.


விஜயராகவன்

> >> - Show quoted text -- Hide quoted text -

விஜயராகவன்

unread,
Nov 20, 2009, 5:45:08 PM11/20/09
to மின்தமிழ்
தமிழ் பள்ளிகளில் பரவலாக ஆங்கிலம் புழங்குகிறது என்பதை மறைமுகமாக ஒத்துக்
கொள்ளும் செய்தி

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=157113&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=பள்ளிகளில்
தூய தமிழில் தமிழ் வகுப்பு

பள்ளிகளில் தூய தமிழில் தமிழ் வகுப்பு

First Published : 20 Nov 2009 12:05:06 AM IST

சென்னை, நவ. 19: "தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை
வகுப்புகளில் தமிழ் பாடத்தை தூய தமிழில் பிற மொழி கலப்பு இல்லாமல் எடுக்க
வேண்டும்' என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (6-
ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) பணிபுரியும் ஆசிரியர்கள் இதைக்
கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் பாடத்தின்போது ஆங்கிலம் கலந்த
தமிழில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தமிழ் மொழியில்
உள்ள தூய சொற்கள், வார்த்தைகள் மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது
என்றும் தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி
பெறும் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி
வைத்துள்ளது.

அதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ்
பாடத்தின்போது ஆங்கிலம் மற்றும் பிற மொழி கலப்பு இல்லாமல் தூய தமிழில்
வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை தமிழ் ஆசிரியர்கள் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தூய தமிழ் சொற்களை கற்பதற்கு வழி செய்ய வேண்டும். இதன்மூலம்
மாணவர்கள் புதிய தூய தமிழ் சொற்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்
என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி உத்தரவின்பேரில், இந்தச்
சுற்றறிக்கை வியாழக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.


விஜயராகவன்

kra narasiah

unread,
Nov 20, 2009, 6:17:19 PM11/20/09
to mint...@googlegroups.com
தமிழ் வளத்திற்கு என்றுமே குறைவில்லை; பிரச்சினையே நினைக்கும் போது தான்!
நரசய்யா

--- On Fri, 11/20/09, N. Kannan <navan...@gmail.com> wrote:

From: N. Kannan <navan...@gmail.com>
Subject: [MinTamil] Re: Fwd: [tamil_wiktionary] கலைச்சொல்லாக்க விதிகள்

karthi

unread,
Nov 20, 2009, 8:20:21 PM11/20/09
to mint...@googlegroups.com
>> ஓர் எண்ணம்: அதிகமாக ஆங்கிலம் படிக்காத ஒரு தமிழ் இளைஞன்
>> கணினி கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இதுதான் சிறந்த வழி
>> அல்லவா?
>
>
>
> நீங்கள் சொல்லுவதில் ஒரு அசம்ப்ஷன் - ஆங்கிலம் படிக்காத ஒரு தமிழ் இளைஞன்
> ஒருவனுக்கு ஆங்கில வார்த்தைகள் தெரியாது, விஞ்ஞானம், பொறியியல்
> சம்பந்தப்பட்ட வார்த்தைகள் ஒன்று கூட தெரியாது என்று. அது தவறு என
> நினைக்கிறேன். பத்திரிக்கை படிப்பவர்கள், ரேடியோ டெலிவிஷன், சினிமா
> பார்ப்பவர்களுக்கு நிறைய ஆங்கில வார்த்தைகளும், விஞ்ஞான வார்த்தைகளும்
> ஏற்கெனவே பரிச்சியம் ஆக இருக்கும்.

ஆம். நான் சொல்ல வந்த "இதுதான் சிறந்த வழி" தினத்தந்தி வழிதான்.

ரெ.கா.

----- Original Message -----
From: "விஜயராகவன்" <vij...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Saturday, November 21, 2009 2:38 AM
Subject: [MinTamil] Re: Fwd: [tamil_wiktionary] கலைச்சொல்லாக்க விதிகள்

Reply all
Reply to author
Forward
0 new messages