Fwd: தமிழர்களின் பாராமுகமும் உயர்வு நவிற்சிப் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்- திராவிடம்

21 views
Skip to first unread message

gnana bharathi

unread,
Mar 17, 2011, 1:44:47 PM3/17/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com

திராவிடம் 
பிழையான ஒரு கருத்தை, கூற்றை, செயலை, நடத்தையை, போக்கை,வீம்பை ஏற்றுக்கொண்டது பின்னாளில் பெரும் துயரில் மாட்டிவிட்டது என்பதை தத்தமது வாழ்விலும், பிறர் வாழ்விலும், கதைகளாகவும், பாடங்களாகவும், திரைக்காட்சியாகவும் பார்த்திருக்கலாம். அதை நடைமுறையில் ஏற்றதோடு அதில் மயங்கிவாழும் வரும் நிலை ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் தான்.

திராவிடம் - தமிழா?
திராவிடம் என்பதை தமிழுக்கு முந்தைய வடிவின் பெயர் என்றும், திராவிடம் தான் தமிழாகத் திரிந்தது என்றும்

தமிழ் தான் திராவிடம் ஆனது என்றும் கூறிவந்தார்கள்/வருகிறார்கள்..

மற்றொருவர் முதலில் டமெலா (damela) என்றும் பின்னர்தான் திராவிடா என்றதாக் கூறுகிறார் (பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி)

கேள்வி என்னவென்றால் தமிழர் தன் தாயை, தாய்மொழியை தாமே திரித்து கூறத் தொடங்கினாரா அல்லது பிறர் திரித்துக் கூறியதை சரியென ஏற்றுக்கொண்டனரா?
      
முதலில் 
தி.ரா.வி.ட.ம். =>தி. ர. மி.ள.ம். => த.மி.ழ். என்பதை எடுத்துகொள்வோம்.
தமிழில் தி எப்படித் திரிபு அடையும் 
திற => தெற, தினவு => தெனவு, தின்னு => துண்ணு,  என தி தமிழரால் த வாக மாறுவதில்லை.
முழுச் சொற்களாக 
திருடன், திறப்பு, திருட்டு, திருவாரூர், திருவையாறு, திருவிடைமருதூர் என திரு, திர, திற, திருவா, திருவை எனத்தொடங்கும் எதுவுமே த என மாறவில்லை 

த.மி.ழ். => தி.ர.மி.ள். => தி.ர.மி.ள.ம். = தி.ர.வி.ட.ம் => தி.ரா.வி.ட.ம்.  (பாவாணர்)
த.மி.ழ.ம். => த்.ர.மி.ள.ம். => த்.ர.மி.ட.ம். => த்.ரா.மி.ட.ம். => த்.ரா.வி.ட.ம்.  (இராமகி)

த- தி என மாறும் வார்த்தைகள், மருவிய வார்த்தைகள் கிடைக்கவில்லை
த - த் (th, dh) என தமிழில் மாறுவது கிடையாது, தொடங்குவதும் கிடையாது.
.  எனவே, தி, த் போன்றவை திர, த்ர என மாற வாய்ப்பில்லை.

மி => வி என மாறுமா?
ழ => ட என மாறுமா? தமிழ்=> தமில், கிழவி=> கெய்வி. எனவே தமிழில் 'மி'கரம் 'வி'கரமாக விகாரமாகாது.

dra.vi.da. => dra.mi.laa. => tha.mi.zh.
திராவிடக் கட்சியினர்கூட தங்களை dhராவிட என்றுதான் கூறுகிறார்கள் dராவிட என்றல்ல. 
tha.mi.zh. => dra.mi.la => dra.vi.da. 
tha  =>  d என்றோ dra   என்றோ தமிழில் மாறுவதில்லை

ஒரு மொழியில் சில ஒலி தொடங்கும் முறையில், கூட்டுசேரும் முறையில் ஒழுங்கு இருக்கலாம் காட்டாக பண்டைய தமிழில் டகர, லகரத்தில் சொல் தொடங்காது. ஙகர, ஞகரத்தில் ஆங்கிலத்தில் ஒலி தொடங்காது.  சமஸ்கிருதத்தில் தகரத்திலும், டகரத்திலும் தொடங்கும் ஒலிகள் இருக்கின்றன. எனவே, தமிழில் உள்ள தகரம் ட்ரகரமாகவோ, த்ரகரமாகவோ அல்லது திகரமாகவோ ஆகியிருக்காது. 

வடஇந்தியாவில் வாழ்ந்தவர்கள், தங்கள் எதிரிகளை எதிரியாகக் கருதுபவர்களை எப்படி எண்ணுவர் என்பதை ராமாயணம் போன்ற புராணக் கதைகளின் மூலம் அறியலாம்.  அது வலிமை வாய்ந்த எதிரியாகத்தான் இருக்க வேண்டுமென்றல்ல, ஜார்ஜ் புஷ் ஈராக் எப்படி உலகை அழிக்கப்போகிறது என்று கூறினாரோ அதே போலவும் இருக்கலாம். அல்லது உடல்,உடை, பழக்க, செயல் போன்றவற்றின் பொருட்டு வைத்த காரணப் பெயராகக் கூட இருக்கலாம்.

எனவே, திராவிட, த்ராவிட, ட்ராவிட, டமேல, என்பன ஒரு காரணப் பெயராகவோ அல்லது எதிரிக்குச் சூட்டிய பட்டப்பெயராகவோ இருக்க வேண்டும்.

எனவே, யாரோ எவரோ நம்மை எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டு இருக்கலாம். நாமே நம்மை குறைந்தது முதலெழுத்தும் மாறும்படி கூப்பிட்டிருக்க, எழுதியிருக்க வாய்ப்பில்லை.

பிறகு எப்படி தமிழும் திராவிடமும் ஒன்றானது?
பத்தாம் நூற்றாண்டளவில் வடக்கத்தார் தென்னகத்தினரை த்ராவிடா (dravida) என்று கூறியதாகவும்
அதற்கு முன்பே ஆதிசங்கரர் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் 
அறியப்படுகிறது.
ஆனால் இவற்றில் தொடர்ச்சி இல்லை.

கால்டுவெல் (1814–1891) என்ற பாதிரியார் 1954 ம் ஆண்டு "தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்"  என்ற கட்டுரையை தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டிருப்பதாவும் அவை தனி மொழிக்குடும்பம் என்றும் கூறி வெளியிட்டார்.

{ஆனால், அவருக்கு முன்பே எல்லிஸ்  (1777–1819) என்ற ஆட்சியர் இவற்றை கண்டறிந்து தொகுத்து வைத்தார்.  கால்டுவெல் இவருடைய தொகுப்புகளை அடித்தளமாக வைத்தே தன் கட்டுரையை வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. இந்த எல்லிஸ் தமிழ் மீது கொண்ட பற்றால் தன் பெயரை எல்லிசன் என்று மாற்றிக்கொண்டார். திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து முத்திரை பதித்து நாணயமாக வெளிட்டார்)  

கால்டுவெல் தென்னிந்திய மொழிகளுக்கு திராவிட மொழிகள் என்று ஏன் பெயரிட்டார்?
ஒரு பொருளை, செயலை முதன்முறையாக கண்டறிபவர், அதற்கு தன் பெயரையோ அல்லது தனக்கு பிடித்த பெயரையோ சூட்டுவர். பல்வேறு கண்டுபிடிப்புகள், கோட்பாடுகள், கருவிகள், இடங்கள் இவ்வாறே பெயர் பெற்றன.  நம் குழந்தைகளுக்கு நாம் பெயரைச் சூட்டுகிறோம். சர். சி.வி. ராமன் தான் கண்டறிந்த ஒளிச் சிதறல்களுக்கு ராமன் விளைவு என்று பெயரிட்டார். 

அதேபோல கால்டுவெல் ஏதாவது ஒரு பெயரை வைத்திருக்கலாம். அவர் ஒரு கிருத்துவ பாதிரியார். வேறுவேலையாக வந்தவர் மொழிகளுக்குள்ள ஒற்றுமை குறித்து கட்டுரை எழுதும் போது நிச்சயமாக குழப்பங்கள்/எதிர்ப்புகள் வருவதை விரும்பியிருக்க மாட்டார். ஒருவேளை அவர் திராவிடம் என்பதற்கு பதிலாக தமிழ் மொழிக்குடும்பம் என்று எழுதியிருந்தாரெனில்,  தெலுங்கரோ, கன்னடியரோ, மலையாளியோ ஏற்றிருக்க மாட்டார்கள். வட இந்தியாவிலிருந்து பெரும் போராட்டமே நடத்தி அவரை விரட்டி அடித்திருப்பர். தமிழகத்திலும் சில ஈணர்கள் அதை எதிர்த்திருப்பர். 

பங்கம் வராமல் பிறர் ஏற்றுக்கொள்ளகூடிய பெயரைச் சூட்டினார். அதுதான் திராவிடம்

தமிழ் பெரும் குடும்பத்தைச் சேர்ந்தது என்று கேட்டவுடன் ஏற்பட்ட துடிப்பும் பெருமையும் தன்னிலை மறந்து பெரும் சமூகத்தைக் கொண்டு வாழப்போகிறோம் என்ற எண்ணத்தை நம்மிடையே ஏற்படுத்தியது. இதுதான் மனோன்மணியம் சுந்தரனார் போன்றோரை "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல திருநாடும்" என தமிழகத்தை முன்னிறுத்தாமல் திராவிடத்தை முன்னிறுத்தியது. இதுவே, அயோத்திதாசப் பண்டிதர் போன்றோரை ஆதித் திராவிட சங்கம் என்பனவற்றை தொடங்கச் செய்தது, பழந்தமிழர் என்பதற்கு பதிலாக. 

எனவே முன்பு திராவிடம், திராவிடர் என்பன தமிழை தமிழரை நல்லதொரு பொருளுடன் கொண்ட பெயராக இருந்திருக்காது. கால்டுவெல் அவ்வாறு அழைத்ததற்கு காரணமும் ஒரு துணிவுடனான வெளிப்பாடு அல்ல. 

இதுவே திராவிடம் என்பது தமிழரினுள் வந்த விதம்.



         


 

2011/2/16 gnana bharathi <dgbha...@gmail.com>
நீதிக்கட்சி தொடக்கமும் வளர்ச்சியும் நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்த ஒரு சமூகத்தின் சில குலங்கள்  மீண்டெழ முயற்சித்ததன் முதல் வெளிப்பாடாகும். 

மராட்டிய, தெலுங்கு (விஜயநகர), முஸ்லிம் மன்னர்களின் ஆதிக்கத்தின்போது தமிழ் மன்னர்கள் வைத்திருந்த நிலையைப் செல்வாக்கு பெற்றிருந்த மக்கள் கூட  பெற்றிருக்க முடியாது. அக்காலத்தில் வேளாண்மையும் வணிகமுமே வாழ்வாதாரங்களாக இருந்திருக்க வேண்டும். அதிலும் பல கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலையில் மக்கள் இருந்திருப்பர். 

ஆங்கிலேயர் ஆட்சி சில சமூகங்களுக்கு புதிய உரிமைகளையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் வழங்கின. இதில் செட்டியார், முதலியார், பிள்ளைமார் போன்றோர் தனித்து, வணிகம், தொழில், வேளாண்மை என்று  தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர்.  பார்ப்பனர், அரசு சார்ந்த அமைப்புகளில் நுழைந்து தங்கள் நிலையை நிலை நிறுத்திக்கொண்டனர்.  அரசு சார்ந்த அமைப்பில் இருந்தவர்களுக்கு மற்றவர்களின் மீது ஆளுமை செலுத்தக்கூடிய நிலை உள்ளதை நாளடைவில் வளர்ந்த சமூகங்கள் உணரத் தொடங்கியதன் விளைவே அவர்களின் உரிமைப் போராட்டங்கள் நடைபெற்றன.

வளர்ந்த இச் சமூகங்களின் உரிமைப் போராட்டங்கள் அரசியல் வடிவெடுத்து பார்ப்பனரிடமிருந்து ஆட்சியைப்  பறித்து தமதாக்கிக் கொள்ளாமல் மற்றவரிடம் கொடுத்ததாக அமைந்தது. இந்தியாவிலும் கடல் கடந்தும் செழிப்புற்ற சமூகங்கள் ஆளுமையைப் பெறாதது அடுத்து ஏற்பட்ட தாக்கங்களால் (தாக்குதல்களால்)  உயர் நிலையை அடையாமல் போயின.  பார்ப்பனரும் கூட்டுசேராமல் கிடைத்தவரை லாபம் என்று கருதியதால் அடுத்து ஏற்பட்ட தாக்கங்களுக்கு உள்ளாயின.  இச்சமூகங்களில் தனி நபர் வளர்ச்சியே உயர்வைக் கொடுத்ததேயன்றி ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியை அடையவில்லை.



2011/2/15 gnana bharathi <dgbha...@gmail.com>

சென்னை மாகாணத்தில் மூன்று விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பார்பனர்கள் அரசு அமைப்பில் அனைத்து வேலைகளையும் தமதாக்கிக் கொண்டதுடன் அரசியல் அரங்கிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதே, தகுதியுடையவராக நிருபித்தும் வாய்ப்பை இழந்த/மறுக்கப்பட்ட மற்ற ஆளும் சமூகப்பிரிவுகளுக்குள், எதிர்ப்பு கிளம்பக் காரணமாகியது. 

எனவே, நீதிக்கட்சி என்பது பார்பனரல்லாத மொத்த சமூகத்தின் வெளிப்பாடாக இல்லாமல் ஓரங்கட்டப்பட்ட ஆளுமைத் திறன் கொண்டிருந்த சில சமூகங்களின் எதிர்ப்புக் குரலாகவே இருந்தது. 

இந்த எதிப்பு 1895 முதல் வெளிப்படத் தொடங்கியது.  முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களாலேயே உணரப்பட்டு அது அக்கட்சியினரால் ஏற்றுக்கொள்ளப் படாததால் வெறுப்புற்று வெளியேறியவர்களால் தான் 1920 ல் நீதிக்கட்சியாக உருபெற்றது.

இவ்வாறு வெளியேறியவர்களின் செயல்திறனை/வளர்ச்சியை முடக்க காங்கிரஸ் கட்சி தன் கட்சியிலிருந்த பார்பனரல்லாதவர்களை வெளிப்படுத்தி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்ச்சித்தது. காங்கிரஸ் கட்சி திரு.வி.க., இ.வே.ராமசாமி, பி.வராதலாஜுலு நாயுடு, கேசவன் பிள்ளை போன்றோரைப் பயன்படுத்தி தன் முகத்தை மறைத்துக்கொண்டதேயோழிய மற்ற சமூகங்களின் வளர்ச்சியை முன்னிறுத்த துணியவில்லை.

மேலும் இந்திய அளவில் 1920  ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்ததால் நீதிக்கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றது.  அக்கட்சியின் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி தாம் பதவி ஏற்காமல், சுப்பராயலு ரெட்டியை முதல்வராகவும், பனகல் ராஜா (பணங்கன்ட்டி ராமராயநிங்கர் )  மற்றும் குமாரவேங்கட்ட ரெட்டிநாயுடு ஆகிய இருவரை அமைச்சர்களாகவும் நியமித்தார். 
1923 தேர்தலிலும் வெற்றி பெற்றதை அடுத்து தியாகராயர் பனகல் ராஜா, எ.பி. பெட்ரோ மற்றும் குமார வேங்கட ரெட்டிநாயுடு ஆகியோரை அமைச்சர்களாக்க பரிந்துரை செய்தார். 

தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை நடேச முதலியார் போன்றவர்கள் சுட்டிக்காட்டி எதிர்த்ததைத் தொடர்ந்து குமார வேங்கட ரெட்டி நாயுடுவை நீக்கிவிட்டு சிவஞானம் பிள்ளையை அமைச்சராக்கினார். 
1925 ல் தியாகராயர் மறைந்தார்.  பனகல் ராஜா தலைவரானார்.
(தியாகராயரும் பின்னாளில் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவும் ஆந்திர மக்களால் என்றும் பாராட்டக் கூடியவர்கள்.ஆனால் தமிழகத்தில் பின்னவர் மறக்கடிக்கப் பட்டும் முன்னவர் போற்றப்பட்டும் நினைவு கூறப்படுகிறார்கள். தியாகராய நகர் என்று அவர் பெயரால் சென்னையின் ஒரு பகுதி இன்றும் அழைக்கப்படுகிறது, அவரின் சேவைகளுக்காக.)
 
1928 ல் பனகல் ராஜா மறைந்தார். பி. முனிசாமி நாயுடு தலைவரானார்.
1930 ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சியில் முனுசாமி நாயுடு முதல்வராகவும் பொன்னம்பல தியாகராஜ முதலியார் (பி.டி ராஜன்) மற்றும் குமாரசாமி ரெட்டியாரும் அமைச்சர்களானார்கள்.  பி.டி. ராஜனும் குமாரசாமியும் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டதால் தன் நிலையை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பிய முனுசாமி நாயுடு மூன்று ஆண்டுகளாக கட்சியின் தேர்தலை நடத்தாமலேயே இருந்தார்.

இடையே, முத்தையாச் செட்டியார் போன்றோரின் எதிர்ப்பின் காரணமாக முனுசாமி நாயுடு பதவி விலகினார். அதனால் நீதிக்கட்சியின் தலைவராகவும் சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் பொப்பிலி ராமகிருஷ்ண ரங்காராவ் பொறுப்பேற்றார். 1936 ஆம் ஆண்டு மறைந்தார்.

1937 ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி முற்றிலுமாகத் தோல்வி அடைந்தது.
 
நீதிக்கட்சி தெலுங்கர் தலைமை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இதை உணர்ந்த, ஆளுமை உடைய நடேச முதலியார், ராமசாமி முதலியார், முத்தையாச் செட்டியார் போன்றவர்களால் தம் சமூகத்தைக் கூட முன்னிறுத்த முடியவில்லை.

பார்ப்பனரோ இவற்றை சுட்டிக்காட்டி நீதிக்கட்சியின் பொய்முகத்தை வெளிக்காட்டச் செய்யாமல், தமிழ் பேசும் சமூகத்தினரை ஒன்றிணைக்காமல், கிடைத்தவரை கொள்ளலாம் என்றும்  பார்ப்பனர் தலைமைக்கு ஆபத்துவராமல் இருந்தால் போதுமென்றும் இருந்தனர்.

நாட்டை கைப்பற்றி ஆண்டவர்களை எதிர்க்காமல் அவர்களின் ஆளுமையை முற்றிலும் ஏற்று அடிமை வாழ்வில் சுகம் காண விரும்பிய கட்சிதான் நீதிக்கட்சி. தொடங்கிய நாள் முதல் முற்றிலுமாக வீழ்த்தப்பட்ட நாளுக்கு முதல்நாள் வரை அதன் தலைமையில் தமிழர் இல்லை. ஆட்சி செய்தபோதெல்லாம் தமிழர் புறக்கணிப்பு. 

நீதிக்கட்சி கொண்டுவந்த திட்டங்களில் மிகவும் போற்றப்படுவது இடஒதுக்கீடு என்பதாகும்.  தலைமையைக் கைப்பற்றிய பிறகும் தம் மக்களுக்கு இடஒதுக்கீடு என்ற நோக்கு ஒரு பிற்போக்காகவே கருதப்பட வேண்டும்.

பெண்களுக்கும் அரசியல் பங்களிப்பு கொடுத்தது சிறப்பான ஒரு செயல். இன்று வரை தமிழ் நாட்டில் சமூக, மருத்துவ, சாதிய போன்றவற்றிற்கே பெண்கள் அமைச்சர்களாகிறார்கள். இப்பொழுதுதான் தகவல் தொழில்நுட்ப அமைச்க்கர்ராக பெண் பொறுப்பேற்றுள்ளார்.

முன்பே இருந்த சென்னை பல்கலைக்கு நிகராக ஆந்திரப்பகுதியில் ஆந்திரப் பல்கலையை உருவாக்கினர்.  பல போராட்டங்களுக்குப் பிறகு அண்ணாமலை பல்கலை உருவாக ஒப்புதல்.
அதனால்தான்,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12799&Itemid=193  
போன்ற வெளிப்பாடுகளால் அவர்கள் இன்றும் நினைவுருத்தப்படுகிறார்கள்.


2011/2/14 gnana bharathi <dgbha...@gmail.com>

பேரா. செல்வா,
நான் கொடுப்பவை பெரும்பாலும் ஏற்கனவே பதிவானவற்றின் தொகுப்புகளே.அவற்றை ஏற்பதும் மறுப்பதும் என்னைச் சார்ந்ததில்லை. பதிவகளுக்குப் பின்வரும் என் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டால் அவை மறுப்புகளும் திருத்தங்களும் ஏற்று தெளிவு பெரும் என்பதே என் நோக்கம்.

அன்புடன்
பாரதி .
 (தொகுப்பிற்கும் பதிப்புரிமை கோரலாம்தான், கல்லூரிகளில் பேராசிரியர்கள் தங்களின் தொகுப்புகளை மாணவர்கட்கு தராமல் இருப்பதை பலரும் அறிவர், அது சரியா?) 

2011/2/13 gnana bharathi <dgbha...@gmail.com>
1912 ல் உருவான மெட்ராஸ் யுனைட்டட் லீக், 1914 ல் அது மெட்ராஸ் திராவிட சங்கம் (Madras Dravidian Association) என்று பெயர் மாற்றம் அடைந்த வரை திராவிடம் என்பது தென்னிந்திய மொழிகளின் குழுப்பெயர் என்ற நிலையில் இருந்தது. இதில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு இன்னபிற மொழிகள் அனைத்தும் அடங்கும். 

1916 ல் தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற அமைப்பு உருவாகி, . தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியையும் தொடங்கி ஆங்கில, தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் செய்தி வெளியிட முடிவு செய்த பொழுது தெலுங்கை திராவிட என்ற அடையாளமிடாமலும் தமிழைத்  தமிழ் என்ற அடையாளமிடாமலும் பிரித்தாளும் முறைமை தொடங்கி வைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஏற்பட்ட புரட்டுகளுக்கும் பித்தலாட்டங்களுக்கும் முதல் படியாக அமைந்தது இதுவே. (இவர்களின் ஆங்கில ஏட்டிற்கு ஜஸ்டிஸ் என்று பெயரிட்டதால் தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு பின்னாட்களில் ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி)என்று அழைக்கப்பட்டது)

இந்திய விடுதலைப் போராட்டங்களில், முதல் இந்திய சுதந்திரப்போருக்குப் பின், இந்தியர் பெரும்பான்மையோர் ஈடுபட்டிருந்த காலங்களில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை என்ற நோக்கு மிகச் சிறிய குழுக்களிடமே இருந்தது.  தீவிரவாதியாகக் கருதப்பட்ட பால கங்காதர திலகர் வேண்டியதே சுயராஜ்யம் தான். 

ஆனால் வங்காளம் பிரிக்கப்பட்டதிலிருந்து (1905) இந்தியர்களிடையே ஒருமைப்பட்டு உணர்வும் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்ற எண்ணமும் தலைத் தூக்கியது. இதன் விளைவாகவே பிரிந்த வங்காளம் 1912  ல் ஒன்றிணைக்கப்பட்டது. இந்நிலையில் முதல் உலகப்போர் 1914   ல் தொடங்கியது. ஆங்கிலேயருக்கு இந்தியரின் சேவை தேவைப்பட்டதால், இந்தியரின் பல கோரிக்கைகளை ஏற்றும் ஏற்பது போல் காட்டியும் தம் தேவைகளுக்கு இந்தியரின் சேவையை அவர்களின் உயிரை பன்படுத்திக்கொண்டனர். 
இதன் விளைவாகத்தான் மாண்டேகு-செமஸ்போர்டு சீர்திருத்தம், 1918, அதாவது இந்தியருக்கு சில அரசியல் உரிமைகள், சுயராஜ்யத்தை விட சற்றே குறைவாக, கொடுக்க சம்மதித்தனர்.
1918   ல் முதல் உலகப்போர் முடிந்தபின், 1919  ல் நடந்தேறிய ஜாலியன்வாலாபாக் கொடூரத்தின் விளைவாக இந்தியர்களிடையே விடுதலைப்போராட்டம் மிகத் தீவிரமடைந்து ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்றவை நடை பெற்று வந்த காலத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த கட்சியின் பெயர் நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் முன்னோடிக் கட்சி. 
நாடு அடிமைப்பட்டிருப்பது பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முழு ஏற்பு கொடுத்த கட்சி தான் நீதிக்கட்சி. நல்லதோர் பெயர் அல்லவா!!!
1920 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியமைத்தது. கட்சியின் தலைவராக இருந்த பிட்டி தியாகராய செட்டி ஆட்சிப் பொறுப்பேற்காமல் தன் வழியில் அரசாளும்படி தன் கட்சியினரைப் பணித்தார். காந்தியாருக்கு முன்னாலேயே பதவிமீது விருப்பம் காட்டாதவராகத் திகழ்ந்தாலும் இவர் பொட்டி ஸ்ரீராமுலு அவர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பது தான் தமிழருக்கு இழப்பை ஏற்படுத்தியது. சென்னையின் சுற்று வட்டாரத்தில் பிறந்து சென்னையில் கல்விபயின்ற இவர் தான் உயிரோடு இருந்த வரை நீதிக்கட்சியின் சார்பில் அரசாளுபவர் தன் தாய்மொழியான தெலுங்கு பேசுபவராகத்தான் இருக்க வேண்டுமென்பதை செயல் படுத்தினார்.  http://en.wikipedia.org/wiki/Madras_Presidency_legislative_council_election,_1923  
1923ல் இதை உணர்ந்த தமிழ் பேசும் மக்கள் எதிர்ப்பு மற்றும் கட்சிப் பிளவு என்ற நிலைகளுக்கு ஆட்பட்ட பிறகு மூன்றுபேர் கொண்ட அமைச்சரவையில் ஒருவரை தமிழராகக் கொள்ளச் சம்மதித்தார் (முதல்வராக அல்ல). அதனால்தான் அண்ணா முதல் இன்றைய திராவிடர் வரை அவரை நினைக்க மறுப்பதில்லை. 

சென்னை மாகாணத்தின் வரைபடம்.
சென்னை மாகாணத்தில் நிஜாம் ஆண்ட ஐதராபாத் பகுதிகளும் (ஆந்திர கர்நாடக பகுதிகள்) கர்நாடகாவின் மைசூர் பகுதிகளும், கேரளாவின் திருவாங்கூர் பகுதிகளையும் கொண்ட பெரும் பரப்புகளும், ஆந்திராவிலுள்ள பங்கனப்பள்ளி, கேரளாவின் கொச்சின், கர்நாடகாவின் கூர்கு, மற்றும் தமிழகத்தின் புதுக்கோட்டை போன்ற சிற்றரசுகளும் இடம் பெறவில்லை. 
1871 மற்றும் 1901ஆம் ஆண்டுகளின் மக்கள்தொகை கணக்கீட்டின்படி சென்னை மாகாணத்தின் பெருவாரியான மக்களால் பேசும் மொழி தமிழ்.
பார்ப்பனர் வேண்டாமென்று தனித்தவர்கள் வேறொரு குழியில் விழுந்தது தொடங்கியது இதிலிருந்து தான் தொடங்கியது. நீதிக்கட்சி தன் செல்வாக்கை முற்றிலும் இழக்கும் நிலை வரை அதன் தலைவராகவும் அக்கட்சி ஆட்சி அமைத்தபோதேல்லாம் அதன் முதல்வராகவும் இருந்தவர்கள் யாரும் தமிழர்களாக இருக்கவில்லை.
                        
      


  
ல் 

       


2011/2/13 gnana bharathi <dgbha...@gmail.com>

ஆங்கிலேயர் இந்தியாவின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கியது முதல் பல்வேறுவகையான போர் போன்ற வன்மையான எதிர்ப்புகள் அவர்களை எதிர்த்து நடைபெற்றன. பின்னர் அவர்கள் நம்மை முழுமையாக ஆண்டபோது, வன்முறைப் போராட்டங்களை விட அறவழிப் போராட்டங்கள் முதன்மை பெற்றன. வன்முறைப் போராட்டங்கள் முற்றிலுமாக ஆங்கிலேயர்க்கு, அவர்தம் பணியாட்களுக்கு, அவர்களை ஒழித்துக்கட்ட அல்லது நாட்டைவிட்டு விரட்டிவிட என்ற நோக்கில் நடைபெற்றது. மாறாக, அறவழிப்போராட்டம் அவர்களை எதிர்த்தும், ஆதரித்தும், சில சலுகைகள் வேண்டியுமாக நடைபெற்றன.

இந்திய தேசிய காங்கிரஸ் முதலில் சில சலுகைகள் வேண்டியும், பின்னர் ஆதரித்தும் எதிர்த்தும் வந்தது. ராஜா ராம் மோகன்ராய் போன்றவர்கள் "சதி" போன்ற பழக்க வழக்கங்களை ஆங்கிலேயரின் துணை கொண்டே இந்தியாவிலிருந்து அகற்ற சட்டம் கொண்டுவந்தார். 

இவ்வாறான சூழலில் ஆங்கிலேயரின் கீழிருந்த சென்னை மாகாணத்தில் வேறு ஒரு கண்ணோட்டம் வெளிப்பட்டது. அது ஆங்கிலேயரை எதிர்ப்பது, ஆதரிப்பது என்றில்லாமல், அவர்களின் அரசமைப்பில் பங்குவேண்டுமென்ற விருப்பத்தின் விளைவாக தோன்றிய் எண்ணமாகும்.  

தமிழக மன்னர்களின் ஆட்சி காலங்களில் பார்பனருக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுவந்தன என்பது தற்பொழுது பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் உடல் உழைப்பு,  நுட்ப, நுணுக்க செயல்கள் என்பனவற்றிலிருந்து வேறுபட்டு சமய சடங்குகளை நடத்தும் நடைமுறை பாங்குகளின் முறைமைக்காக நிலம், பொருள், செல்வம் போன்றவற்றை ஈட்டனர்.  

தமிழ் மன்னர்களின் லட்ச்சக்கணக்கான கல்வெட்டுக்களில் மணிப்ப்ரவள உரைநடை காணப்படுவதிலிருந்து சமஸ்கிருதத் தாக்கமும் ஊடுருவி இருந்ததை உணரலாம். அதாவது தமிழல்லாத மொழியும் கற்றுணர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கோவலன் போல் பழமொழி தெரிந்தும்  கம்பன் போல் சமஸ்கிருதம் தெரிந்தும் சிலர் இருந்திருந்தாலும் சமூகங்களாக, குழுக்களாக இருந்திருக்கக் கூடியவர்கள் பார்பனரே. 
 
இவ்வாறான செயல்களாலும் அவர்களின் நடைமுறை வாழும் முறை காரணமாகவும், தன் சமூகம் சார்ந்த பற்று போன்ற காரணங்களால், ஆங்கிலேயர் அரசமைப்பில் வந்த வேலைகளை பார்ப்பனர் முற்றிலும் தமதாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் பார்பனர் இல்லாத (மத, சமூக அடிப்படையில்) உயர் ஜாதியினருக்கு தெளிவாக தெரியத் த்டங்கியது. 

எனவே, ஆங்கில அரசமைப்பில் பார்பனர் அல்லாதவருக்கு முன்னுரிமை வேண்டும் என்ற கோரிக்கை வெளிப்படுத்தப் பட்டது.  இந்தியா முழுதும் பார்ப்பனர்களே பெரும்பாலான ஆங்கிலேய அரசமைப்பில் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் சென்னை மாகாணத்தில் தான் இது உணர்ந்து ஒலிக்கப்பட்டது.  அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளம் போன்றவையும் இருந்ததால் இது பார்ப்பனரல்லாத தமிழர்க்கு மட்டுமே உரிய கோரிக்கை என்றில்லாமல், பார்ப்பனரல்லாத பிறமொழி பேசும் மக்களையும் கொண்டிருந்தது. 

நாட்டு விடுதலை என்ற நோக்கை கொள்ளாமல் ஆங்கில அரசமைப்பில் பங்கு என்ற நோக்கில் ஒரு அமைப்பு 1912 ல் உருவானது. அதன் பெயர் மெட்ராஸ் யுனைட்டட் லீக். 1914 ல் அது மெட்ராஸ் திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் அடைந்தது. 1916 ல் தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற அமைப்பு உருவாகி, ஆங்கில, தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் செய்தி வெளியிட முடிவு செய்தனர். தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியையும் தொடங்கினர். இவ்வமைப்பை உருவாக்க பெருமுயற்சி கொண்டவர் நடேச முதலியார் என்பவர்.  ஆனால் அவர் ஏனோ தலைமை  ஏற்கவில்லை. தமிழரின் தாழ்வுக்கு, தலைமை ஏற்காததால், வித்திட்டவர்களில் இவர் ஒருவர். 

இவர்கள் தொடங்கிய ஆங்கில ஏட்டிற்கு ஜஸ்டிஸ் என்றும், தெலுங்கு ஏட்டிற்கு ஆந்திர கேசரி என்றும் தமிழ் ஏட்டிற்கு "திராவிடியன்" என்றும் பெயரிட்டனர். 

2011/2/7 gnana bharathi <dgbha...@gmail.com>

ஐந்தாவது இழப்பு (சூறை அல்லது சுனாமி போன்றது)
இந்திரா காந்திக்கு, அவரின் அரசுக்கு, தமிழகத்தை மேலும் சீரழிக்க வேண்டுமென்று தோன்றியதோ அல்லது வேறு காரணமோ மேலும் ஒரு பெரிய இழப்பை தமிழகத்திற்கு செய்வதாக எண்ணி இந்தியாவிற்கும் செய்தார். 

1976 ஆம் ஆண்டு மேலும் ஒரு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தில் 1974 ல்  வரைந்த எல்லைக்கோட்டை நீட்டிப்பது/ முழுமைப்படுத்துவது என்ற நோக்குடன் நடந்தது. 1974 ல் வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக முதவருடன் பேச வைத்ததை போல இம்முறை செய்யவேண்டுமென்று நினைக்க வில்லை என்று படுகிறது.  ஏனெனில் கடிதம், தந்தி, சட்டசபைத் தீர்மானம் போன்றவை செயவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. தேவை இல்லை என்று நினைத்து விட்டனரோ!

ராமேஸ்வரத்திற்கு தெற்கே நீட்டிக்கப்பட்ட எல்லைக்கோடு மாலத்தீவுடன் எல்லை வரை நீடித்தது. இதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை (கேரள கடற்கரைப் பகுதியும் வந்துவிட்டதென்பதாலோ)  

ஆனால்,
திருமறைக்காட்டிற்கு (வேதாரண்யம்) கிழக்கே தமிழக மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்கக் கூடிய பகுதிகளில் ஏறத்தாழ் 25000 ச.கி.மீ. பரப்பளவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தனர். கடல் வளம் கடலுக்குக் கீழே இருக்கக்கூடிய இயற்கை எரிவாயு எண்ணெய் வளம், கடல் தரைப்பரப்பில் உள்ள கனிம வளம், ......... எல்லாம் போயின.  படம் 1 & 2  

காஷ்மீரில் ஒரு அடி பரப்பைக்கூட பாக்கிஸ்தானுக்கு கொடுக்க விரும்பாதவர்கள், பொதுமக்கள் யாருக்குமே,  இன்றுவரை,  பயன்படாத சியாச்சின் பனிமலைப் பகுதிகளை பத்தாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை, ஆயிரக்கணக்கான கொடிகளை கொட்டி பாதுகாத்துவரும் நாட்டிற்கு கேரளாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட அளவு பரந்த கடற்பரப்பை விட்டுக்கொடுக்க எதனால் மனம் வந்தது?

இம்முறை இந்தியாவில் எங்குமே, தமிழகம் நிச்சயமாக, ஆர்ப்பாட்டமோ, கிளர்ச்சியோ, நகல் எரிப்போ நடைபெறவில்லை. நாடு அவசரகால சட்டத்தின் கீழ் இருந்தது.

தமிழ் நாட்டில்,
கருணாநிதி இந்திராவின் அவசரகால சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  காவிரியில் இழந்ததை ஏற்றுக்கொண்ட மக்கள் இதையெல்லாம் இழப்பாகவா கருதப்போகிறார்கள் என்று நினைத்திருக்கலாம் அல்லது எம்ஜிஆரை வீழ்த்த என்ன செய்ய வேண்டுமென்ற யோசனையில் கண்டுகொள்ளாதிருக்கலாம் 

எம்ஜிஆர், ஆட்சியைப்பிடிக்க, இதுபோன்ற கேடுகள் நிகழாமல் இருக்க,  தமிழ் நாட்டுப்பெண்களின் கவர்ச்சி போதாதென்று பஞ்சாபிலிருந்து ராதா சலுஜாவை வரவழைத்திருந்தார்.  

25,000.ச.கி.மீ. என்பது சரியா? 
இது துல்லியமான அளவு இல்லை. உலகில் நாடுகளுக்கு இடையேயுள்ள கடற்பரப்பு பிரிக்கப்படும்போது வலிமையான நாடு சற்று கூடுதாலப் பெற்றுக்கொள்வதுண்டு.  சரிசம நிலையிலுள்ள நாடுகளில் இருநாடுகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் கடற்பரப்பு பிரிக்கப்படுகிறது.எ.கா. இங்கிலாந்து- ப்ரான்ஸ் கடல் எல்லை. 
இந்திய இலங்கை எல்லைக்கோடு நேர்கூடாக அல்லாமல் ஒரு பெரு வட்டத்தின் கொட்டைப்போல வரையப்பட்டது. மையப்புள்ளி இலங்கைப்பகுதியில் வைத்து வரைந்ததால் தஞ்சை/நாகை மீனவருக்கு கிழக்கு எல்லை நூறு மைல்களுக்குள் வந்துவிடும்.  இலங்கையினருக்கு கிழக்கே எல்லை கிடையாது. யாழ், முல்லைத்தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு செல்லக்கூடிய அளவு தஞ்சை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி மீனவர்களுக்கும் உண்டு என்பதை, சர்வதேச விதிமுறைகளின் படி, நாடுகளிடையே கடல் எல்லை பிரிக்கப்பட்டிருப்பதன்படி பெற முடியும். 

"சர்வே"ஸ்வரர்களைக் கொண்டு துல்லியமாக அளவிடலாம். இழந்தது பத்தாயிரக்கணக்கான ச.கி.மீ. என்பதில் சந்தேகமில்லை

2011/2/6 gnana bharathi <dgbha...@gmail.com>
முதல் இழப்பு ஆங்கிலேயரால் நடந்தது
இரண்டாவது இந்திய தன்னிச்சையான முடிவால் ஏற்பட்டது
மூன்றாவது காங்கிரஸ் ஆட்சியாளர் பாராமுகத்தால் நிகழ்ந்தது
(காமராஜர் ஆட்சியில் நடந்த பெரும் இழப்பு இதுவாகத்தான் இருக்கும். மக்களைவிட கட்சி மேலானது என்று அவர் கருதியதால் ஏற்பட்ட இழப்புகளில் இதுவும் ஒன்று) 
கேரளத்திடம் இழந்தது இந்திய சீன எல்லையை பிரித்தது போல நடந்தது.  மக்மோகன் எல்லை இந்தியர்கள் - சீனர்கள் பிரிந்து வாழும் பகுதிகள் என்றில்லாமல் இமயமலையின் உயரமான சிகரங்களை இணைக்கும் கோடாக அமைந்தது. ஒருவேளை இமயமலை பனிபடர்ந்த மலைத்தொடராக இல்லாது இருந்தால் இக்கோடு இந்தியாவை பாலைவனமாக்கியிருக்கும்.

இக்கூற்றை நிருபிக்கும் விதமாக அமைந்ததே தமிழக-கேரள எல்லைப் பிரிவு. மேற்கு தொடர்ச்சிமலையின் மிகஉயர்ந்த சிகரங்களை, மக்மோகன் எல்லை வகுத்தமுறையின் அடிப்படையில், பிரித்தனர். அவ்வாறு பிரித்தால் தமிழ் நாடு மழைமறைவுப் பகுதியாக அஆகிவிடும் என்று அரசியலர், அலுவலர் ஒருவர் கூட உணராமல் இருந்தனரா என்பது ஆச்சரியம்.   படம் 1

ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களிடம் இழந்ததென்பது ஒரே நாட்டிற்குள் நடைபெற்ற ஒரு ஒருதரப்பு சாதகச் செயல். உண்மையில் நல்ல எண்ணம் கொண்ட மக்களாக இருந்தால் பல சிக்கல்கள் வராது.  

நான்காவது இழப்பு (அடிமையின் இழப்பு)
இந்தியா நடத்திய அணுகுண்டு பரிசோதனையால் உலக நாடுகள் இந்தியாவை புறக்கணித்தபோது, இலங்கை இந்தியாவை ஆதரித்ததால் அந்நாட்டிருக்கு கைம்மாறு செய்ய இந்திராகாந்தி இழக்க விரும்பியது தமிழ் நாட்டின் சொத்துக்களைத் தான் (காங்கிரஸ் தோற்றதால், தனிநாடு கோரிய திராவிடர்களின்  வலுவைத் தெரிந்துகொள்ள விரும்பியதால், காமராஜர் - ராஜாஜி போன்றோர் மீதிருந்த வெறுப்பால்  .............)   
1974 ல் திமுக ஆட்சியில் இருந்தபோது இலங்கை கோரிய கச்சத்தீவை விட்டுக்கொடுத்தகாக் கூறப்படுவதில் இழந்தது கச்சத்தீவை மட்டுமல்ல..  கச்சத்தீவு ஒரு ச.கி.மீ. பரப்பளவு கூட இல்லாத பகுதி.  ஆனால் இழந்தது 700 ச.கி.மீ. கும் மேற்பட்ட பரப்பளவுள்ள கடற்பரப்பை. 
எப்படி?
இரு நாடுகளின் கடற்பரப்பை பிரிக்க அந்தந்த நாடுகளுக்கிடையேயான நிலப்பரப்புகளுக்கு இடையே உள்ள பரப்பை பாதியாகப் பிரித்து எடுத்துக்கொள்வர். ஒருவேளை ஒருநாட்டின் சிறு தீவு மற்றொரு நாட்டின் எல்லைக்கருகில் இருந்தது என்றால், பிரிவு அச்சிறு தீவிற்கும் மற்றொரு நாட்டின் பொது நிலப்பரப்பிற்கும் இடையே வகுக்கப்படும். அதாவது நமது சிறு தீவு ஒன்று அடுத்த நாட்டின் எல்லைக்கருகில் இருந்தால் அந்நாட்டிற்கான கடல் பரப்பளவை பெரிதும் குறைத்து விடலாம்.  அதாவது அந்தமான் தீவு போன்ற தொலைவில் உள்ள ஒரு தீவுக்கூடமோ அல்லது ஒரே ஒரு தீவோ ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பிற்கு அருகில் இருந்திருந்தால், அந்நாட்டிருக்கு அருகில் வேறு நாடெதுவும் இல்லை என்பதால், அந்நாடு தற்பொழுது கொண்டிருக்கும் கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான கி.மீ. பரப்பளவு நமக்குரியதாகியிருக்கும்.

இரண்டாம் படத்தில் இந்தியாவுடனிருந்த கச்சத்தீவும் இலங்கையின் நெடுந்தீவும் குறிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயகா மீது கொண்ட பாசத்தால் கச்சத்தீவை விட்டுக்கொடுத்து கடல் எல்லையை வகுத்தார்.  படம் 3

கச்சத்தீவு நமதென்றால் அத்தீவை இந்தியாவின் எல்லைப்புள்ளியாக வைத்து கச்சத்தீவிற்கும் இலங்கையின் மற்ற பகுதிகளுக்குமிடையே ஆன கடற்பரப்பு பிரிக்கப்பட்டிருக்கும். படம் 4

எனவே இழந்தது தமிழக கட்சிகள் கூறிவரும் கச்சத்தீவு மட்டுமல்ல.  அதைப்போல் 1000௦ மடங்கு கூடுதலான பரப்பளவை. 

உண்மையில் இலங்கையின் தயவால் தான் நம்மால் கச்சத்தீவு வரை மீன்பிடிக்க முடிகிறது. ஒருவேளை அவர்கள் ஐநா போன்ற இடங்களில் முறையிட்டால் அவர்களுக்கு மேலும் பல நூற்றுக்கணக்கான ச.கி. மீ. கடற்பரப்பு உரியதாகிவிடும். படம் 5

ஏன் இவ்வாறு நடந்தது?
ராமநாதபுர சேதுபதி இந்தியாவுடன் சேருவதாக கையெழுத்து போட்டவுடன் அவரிடமிருந்த பத்திரங்கள் அனைத்தும், கச்சத்தீவு சார்ந்தது உட்பட, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. நகல் கூட நாம் எடுத்துக்கொள்ள வில்லை. இந்திராகாந்தி அனுப்பிய வெளிவுரவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங் (சரண் சிங் அல்ல) தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்தினார். உண்மையில் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார் என்று கூறப்படுகிறது.. ஆனால் அவரைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் நகல் எரிக்கப்பட்டது. இதைச் செய்தவர்களில் ஒருவரும் தமிழரில்லை.
 
ஆனால் இதற்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பு இல்லை. ஏன்? 
- தமிழக காங்கிரஸ், பொதுவுடைமை போன்றவை வலு இழந்து விட்டிருந்த்திருந்தன.
- காமராசரும் ராஜாஜியும் உயிருடன் இல்லை.       
- ஈ.வே.ரா., அண்ணா போன்றோரும் இல்லை.
- கருணாநிதி - எம்.ஜி.ஆர் பிரிந்த நேரம்.
கருணாநிதிக்கு எம்ஜிஆரின் வளர்ச்சியைத் தடுக்க தமிழரை விட இந்திரா காந்தி தயவு போதுமென்று பட்டது. எதிர்க்கத் துணிவில்லை (மன்மோகன் சிங் இரண்டாவது முறை பதவி ஏற்ற பொழுதுதான் முதன் முதலாக எதிர்ப்ப்பைக் காட்டினார் என்று நினைக்கிறன்)

எம்கிஆருக்கு ஆட்சியரின் குறைகளை வெளிப்படுத்தி நல்லதொரு வழிப்படி ஆட்சி நடத்துவேன் என்று கூறுவதை விட திரைப்படங்களில் உடல் வெளுத்த பார்ப்பனப் பெண்களின் துகிலுரித்தால் போதுமென்று இருந்தது. 

      
2011/2/6 gnana bharathi <dgbha...@gmail.com>

தமிழர்களின் பாராமுகமும்  உயர்நவிழ் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்
வரலாற்றில் உலகின் பெரும் நிலப்பரப்பை ஆண்ட அரசுகளில் ஒன்றாக விளங்கிய தமிழ் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக அடிமைப் படுத்தப்பட்டு இருந்தது.  பேரரசுகளாக வாழ்ந்தும் சூழ்ச்சிகளாலும் குடும்ப சண்டைகளாலும் அரச பரம்பரைகள் அழிந்துபோனது. தொடர்ச்சியான ஆளுமை இல்லாத சமூகமாக தமிழர்கள் 700 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும் எதிர்ப்புணர்ச்சி அவ்வப்போது பல வழிகளில் வெளிப்பட்டது.  ஆனால் இவைகளில் சூழ்ச்சியில்லை, தந்திரமில்லை தமிழர் என்ற உணரவில்லை.  இதனால் பிறர் சூழ்ச்சிகளுக்கும் தந்திரங்களுக்கும்  மீண்டும் அடிமையானோம். அடிமைத்தனம் நமக்கு எதிலும் பற்று இல்லாத ஒரு தன்மையைக் கொடுத்துவிட்டது. இருப்பினும் புதிய தலைமைகள் உருவானபோது விழிப்புணர்வு போன்ற நிலை ஏற்பட்டாலும் தலைமையின் மேல் கொண்ட அளவுகடந்த நம்பிக்கையால், அவர்களை அவர்களின் திறனுக்கும் மேலாக கருதியதால் வீறுகொண்டு எழுந்தவுடன் மீண்டும் வீழ்ந்தோம், மீண்டும் மீண்டும் வீழ்ந்தோம். 

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறிய மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்.
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயம் என்றேன். சூம்பல் தோளை
வழங்கா தகையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய்
யானும் என்தன் குற்றத்தால் ஏகின்றேனே.
                                                                                                       - ராமச்சந்திரக் கவிராயர் 

முதல் இழப்பு 
1911 ல் சித்தூர் மாவட்டம் என்பது உருவாக்கப்பட்டது. இது ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தை பிரித்து அமைக்கப்பட்டது. மாவட்டத்தின் அளவைப் பெரிதாக்க வடாற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியை சித்தூருடன் இணைத்தனர்.   பின்னாளில் இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஏற்பட்ட மொழிவாரி மாநிலம் என்ற திட்டம் வருவதற்கு முன்னாலேயே பொட்டிஸ்ரீராமுலு (சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்து இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியவர், காமராஜர், அண்ணா போன்ற தமிழர் தலைமை உருவானதும் தனி ஆந்திரம், அதுவும் சென்னையை தலைநகராகக் கொண்டு, வேண்டுமென்று உண்ணாநிலையில் உயிர் விட்டார்) என்பவரின் போராட்டத்தின் விளைவாக சென்னை மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, சித்தூர் மாவட்டத்தின் தமிழ் நாட்டுப்பகுதிகளை நாம் நமதாக்கிக்கொள்ளவில்லை.  

இதனால் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட பொழுது சில பகுதிகளைக் கொடுத்துதான் அதே அளவு பகுதிகளைப் பெறமுடிந்தது (மா.பொ. சி. போன்றோரின் போராட்டத்தால்)

இந்த இழப்பு நடை பெற்றபோது மின்டோ-மார்லி சீர்திருத்தின்படி தேர்தல்கள் ஏதும் நடக்காமல் இருந்தாலும் காங்கிரஸ் தமிழகத்தின், இந்தியாவின் மிகப்பெரியக் கட்சியாக இருந்தது. அங்கு தமிழர் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பில்லை. திராவிடம் என்பது அரசியலாகவில்லை.  தீங்கை மட்டுமே விளைத்த ஆற்காட்டு நவாப் இதில் தலையிட்டிருக்க வேண்டுமென நினைத்துக்கூட இருக்க மாட்டார். 

இரண்டாவது இழப்பு
இந்தியா விடுதலை அடைந்தவுடன் போட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தையடுத்து எவ்வித கொருதலுமின்றி இந்திய அரசு சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திர மாநிலத்தை உருவாக்கியது. 

தமிழர் முதல்வராக (மாகனத்தின் பிரதமராக) இருந்தார். திராவிடம் தளைத்தோங்கி கிளை விட்டு வளர்ந்திருந்தது. தமிழர் பகுதிகளை தக்கவைக்க யாரும் முயற்ச்சிக்க வில்லை - கண்டு கொள்ளவில்லை.

மூன்றாவது இழப்பு (பேரிழப்பு)
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட முடிவு செய்தபோது, மைசூர் அரசும் (கடற்கரை இல்லாத சிறிய பரப்பளவைக் கொண்டது)  கொச்சி-திருவாங்கூர் அரசும் தங்கள் பகுதிகளை விரிவாக்க முயற்சித்தனர்.
கன்னடம் பேசும் இடங்களை ஒருங்கிணைக்க மிகப்பெரும் முயற்சியில் மைசூர் அரசும் இந்தியாவில் உயர்பதவில் இருந்த கன்னடர்களும் பெருமுயற்சி கொண்டனர். எவ்வித பாகுபாடுமின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டதால், கன்னடம் பேசுவோர் பெருவாரியாக வாழ்ந்த பகுதிகளை மட்டுமல்லாமல் அம்மொழி மக்கள் இருந்த இடமெல்லாம் தமது என்று போராடிப் பெற்றனர். மொழிவாரி மாநில அமைப்பில் பெருநன்மை அடைந்தவர் கன்னடர்களே.

தமிழர்கள் கர்நாடகத்தின் கடற்கரை பகுதிகளை தமக்கு வேண்டுமெனக் கேட்டிருந்தால் அதை நியாயப்படுத்தியிருக்க  முடிந்திருக்காது.  ஆனால் கொள்ளேகால், கோலார், மற்றுமிருந்த பல தமிழர் பெருவாரியாக வாழ்ந்தப் புகுதிகளை ஏன் விட்டுக்கொடுத்தார்கள் என்று புரியவில்லை. கோலார் பகுதி கனிவளம் மிக்க பகுதி. கொள்ளேகால் வட்டம் (இப்பொழுது சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் பகுதி) 2789 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது.  காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்பகுதியை நாம் தக்கவைத்திருந்தால் நாம் கோரும் காவிரி நீரின் அளவை கூட்டியிருக்க முடியுமென்பதோடு பெரும் விளைநிலத்தையும் கொண்டிருந்திருக்கலாம். 
Tamil speaking kongu vellala gounders are majority in Kollegal. People in Kollegal speak a variation of Kannada distinct from that spoken in Mysore andBangalore. This dialect of Kannada at times suffixes da when spoken among pals. Kannada as spoken in Kollegal was used in the 2005 film Jogi starring Shivarajkumar.

கொச்சி-திருவாங்கூர் பகுதி மக்களும் மலையாளம் பேசும் பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென்று ஒன்றுகூடி போராடினர். மலபார், காசர்கோடு போன்ற பகுதிகள் கேரளத்துடன் சென்றுவிட்டது. தமிழர் வாழும்  பாலக்காடு போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்கவேண்டுமென்ற நினைப்பு கூட இல்லாமல் இருந்தனர். பல மொழி பேசும் பகுதியான காசர்கோடு பகுதியை பழங்குடியினர் கூடுதலாக வாழும் பகுதி என்று கருதியதால் தமிழர்கள் வேண்டாமென்று இருந்துவிட்டதாகக் கூறுவதுண்டு. கன்னடர்கள் இன்றும் கோரிவரும் சில பகுதிகளையும்  தன்னகத்தே கொண்டிருகின்றனர் 

ஆட்சியில் காங்கிரசும், எதிர்கட்சியாக இருந்த பொதுவுடமைக் கட்சியும் அதன் தலைவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணமில்லாமல், பிற மாநிலத்தினர் தத்தம் மாநிலமே முதன்மை என்றிருந்தபோதும், இந்தியாவின் ஆட்சியாளர் செய்யும் நாட்டுக்குத் தேவையான ஒன்றென்று ஏதும் செய்யவில்லை. 
திராவிடத் தலைவர்  ஈ.வே.ரா., தமிழகத்தின் தலைமேல் இன்றுவரை நிறுத்திவைத்திருக்கும் தலைவர், இனிமேல் திராவிட நாடு என்பது புதிதாக வரையறுத்த புகுதிகளுக்குள் உட்பட்டே செயல்படும்/கோரப்படும் என்ற பகுத்தறிவுக் கருத்தை கூறி தன் கடமையை முடித்துக்கொண்டார். 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணா "சீதையை வேண்டிச் சென்ற ராமனிடம் மற்றொரு பெண்ணைக் காட்டி சீதைக்குப் பதிலாக கூட்டிச்செல்லச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருப்பாரோ" அதுபோல தங்கள் கோரிக்கை, தமிழகப் பகுதிகளை இழந்ததைப் பற்றிக் கவலை கொள்ளாமல், பரந்துபட்ட விந்தியமலைக்குக் தெற்கே உள்ள மொத்த பரப்பையும் திராவிட நாடாக இந்தியாவிடமிருந்து  பிரிப்பதுதான் தம் கொள்கை என்பது போல் பேரறிஞராக  அறிக்கை விடுத்தார்.  மாற்றவர்கள் தங்களைத் திராவிடர்களாக என்றுமே கருதியதில்லை என்றபோதிலும் அவர்களையும் தம்முடன் சேர்த்து தனிநாட்டை உருவாக்கும் நீண்டகாலத் திட்டம் கொண்டிருந்தார்.










விஜயராகவன்

unread,
Mar 17, 2011, 6:35:37 PM3/17/11
to மின்தமிழ்
On Mar 17, 6:44 pm, gnana bharathi <dgbhara...@gmail.com> wrote:
> அதற்கு முன்பே ஆதிசங்கரர் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடப்
> பயன்படுத்தியிருக்கிறார் என்றும்http://www.brahmintoday.org/issues/issues-001/bt0711_brahmin.php
> அறியப்படுகிறது.


இது ஆச்சர்யமாக இருக்கு.

மேலே உள்ள `பிரமின் டுடே` இஷ்யுவில், ”ஆகவே திராவிட சிசு பதம் காஞ்சி
ஸ்வாமிகள் கூறுவது போல ஞானசம்பந்தரைத் தான் குறிக்கும்.”.

ஆனால் காஞ்சி ஸ்வாமிகள் எதிராக கூறினார் - அதாவது `திராவிட சிசு` ஞான
சம்பந்தர் இல்லை, அது ஆதி சங்கரைத்தான் குறிக்கும் - என மற்றொரு சுட்டி
உள்ளது.

http://hindu.com/thehindu/2001/08/21/stories/1321017c.htm

The sage ( i.e. Kanchi Sankaracharya) deals with the intriguing
reference to "Dravida sisu'' in the poem. He points out very gently
that it could hardly be a reference to the 6th century A.D. saint
Gnanasambandar.

The reference here is to Sankara himself, who as Lakshmidara points
out as deputising for his father at the family temple to the Devi.

This is further confirmed by a hymn discovered by the scholar, Dr. C.
R. Swaminathan.


விஜயராகவன்

Dev Raj

unread,
Feb 5, 2014, 7:49:34 PM2/5/14
to mint...@googlegroups.com
On Thursday, 17 March 2011 10:44:47 UTC-7, ஞானபாரதி wrote:

கால்டுவெல் (1814–1891) என்ற பாதிரியார் 1954 ம் ஆண்டு "தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்"  என்ற கட்டுரையை தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டிருப்பதாவும் அவை தனி மொழிக்குடும்பம் என்றும் கூறி வெளியிட்டார்.
 

From CTamil list -

On 5 February 2014 07:57, Suresh Kolichala <suresh.k...@gmail.com> wrote:

 Much before Caldwell's work on the Dravidian languages, there were several pioneering efforts on various languages groups across the world. 'The Scythian linguistic hypothesis' was much older than the times of William Jones and Robert Caldwell. Before the discovery of the connection between Sanskrit, Latin and Greek, Johannes Becanus (1518-72) saw several European languages as genetically related  who emphasized “Scythian” as the source of those languages. After the recognition of Indo-European as a language family, the term "Scythian" languages was then used by several linguists such as Rasmus Rask (1834) to refer to all those languages of Asia and Europe which do not belong to Indo-European or Semitic families (Max Müller called them the Turanian languages). Caldwell was clearly trying to utilize work of other linguists when he entertained a possible connection between Dravidian and Scythian. Caldwell even acknowledges in his book that it was Rask's idea that Dravidian and Scythian might be related.

Beside IE-linguists, we have Martin Fogel (Martinus Fogelius) (1635–75), considered a founder of Finno-Ugric linguistics; Hiob Ludolf (1624–1704), a celebrated founding figure in Semitic linguistics; Hadrian Relandus (Relander, Reland) (1706–8),  who recognized the relationship between Malay, Javanese, Malagasy and  others and laid foundation for Oceanic Philology leading to the discovery of the Austronesian linguistic family. 

Caldwell is not credited with any work on any other linguistic family other than Dravidian. I have never seen anyone claiming that it is Caldwell's pioneering work on Language families that led to the classification of languages all over the world except today.

Regards,
Suresh.



On 5 February 2014 08:08, Vijay Vanbakkam <vcv...@hotmail.com> wrote:
 
Some people are making pioneering claims ; we have to take their claims with a pinch of salt. 
Caldwell , being a cult hero in Tamilnadu is credited with all sorts of things.
  
Vijayaraghavan
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages