தமிழச்சி கலக்குகிறாள்!

202 views
Skip to first unread message

Vedaprakash

unread,
Dec 3, 2009, 9:36:06 PM12/3/09
to மின்தமிழ்
பெண்களைப் பற்றி நிறைய விவாதங்கள்!

பெண்ணியம் பற்றியோ சொல்லவே வேண்டாம்.

ஆனால், ஏன் இப்படி?
http://thatstamil.oneindia.in/movies/hollywood/2009/12/03-pregnant-padma-lakshmi-poses-naked.html

எது-எதற்கோ தமிழர்கள் ஆர்பரிக்கிறார்கள்!

ஜனாதிபதி வான-ஊர்தியில் சென்றால், அதில் ஒரு தமிழன் என்று செய்தி!

சந்திராயன் என்றால் அதில் ஒரு தமிழன்!

யாரோ நோபல் பரிசு பெற்றால், தமிழன் நோபல் பரிசு பெற்றான் என்பது!

இப்பொழுது என்ன சொல்லப் போகிறர்கள்?

தமிழச்சிகள் என்ன செய்ய போகிறார்கள்?

இமலாதித்தன்

unread,
Dec 3, 2009, 9:41:10 PM12/3/09
to mint...@googlegroups.com

................ ?





தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


2009/12/4 Vedaprakash <vedamved...@yahoo.com>

N. Kannan

unread,
Dec 4, 2009, 1:41:18 AM12/4/09
to mint...@googlegroups.com
இக்கேள்வியை தமிழகச் சூழலில் இருந்து நேர்கொள்வதற்கும்
ஐரோப்பிய/அமெரிக்கச் சூழலில் இருந்து நேர் கொள்வதற்கும் நிறைய
வித்தியாசங்கள் உள்ளன.

தமிழகச் சூழலில் கூட ஆபிரகாமிய விழுமிய கருத்தாக்கத்தில் இல்லாமல், சங்க
காலத்தமிழ் கண்ணோட்டத்துடன் நோக்கும் போதும் நம் எதிர்கொள்ளல்
வித்தியாசப்படுகிறது.

மீண்டும் ஆசாரமான கண்ணோடத்துடனும், சுயமாக தரித்துக் கொண்டுள்ள 'தனித்த,
சுத்த' விழுமியங்களோடு எதிர்கொள்ளும் போதும் வித்தியாசப்படுகிறது.

மானுடவியல் நோக்கில் பார்த்தால் இவரை தமிழச்சி என்று சொல்ல முடியாத
ஐரோப்பிய முகவெட்டு. மீண்டும் கேள்வி எழுகிறது, 'யார் தமிழன்/தமிழச்சி?'
என்பதை எவ்வகை அலகுகளால் நிர்மாணிப்பது என்று?

கலை நோக்கில் பார்க்கும் போது கேமிரா செய்யும் செப்பிடி வித்தை
ஆச்சர்யமாக இருக்கிறது. இவரது படங்களைப் பார்த்தால் நேரில் பார்க்கும்
போது மிகச் சாதரணமாக இருக்கும் இவர்தானா உலக அழகி மாடல் போல் போஸ் தருவது
என்று இருக்கிறது.

பெண்ணின் உடல் என்பது யாருக்குச் சொந்தம் என்பதொரு பெரிய கேள்வி. இதுவரை
அது ஆணின் உடமையாக உள்ளது. பெரியார் விடுதலையில் பெண் உடல் விடுதலையும்
ஒன்று. அந்நோக்கில் இப்பெண் சொல்வது சரியென்று படுகிறது. அவர் உடல், அவர்
பாடு!

தமிழக சினிமாவை நாம் குடும்பத்தோடு பார்க்கிறோம். ஜெர்மன் விழுமியங்களை
வைத்துப் பார்த்தால் பல படங்கள், பாடல் காட்சியில் 'பெரியவர்க்கு
மட்டும்' எனும் சான்றிதழ் பெறும். ஜெர்மனியில் இருந்தால் இப்படங்கள்
சிறுவர்கள் நோக்க முடியாத பின்னிரவு ஒளிபரப்பாக அமையும் (செமி
போர்னோகிராஃபி வகை). ஆனால் குழந்தை குட்டிகளோடு நடு வீட்டில் உட்கார்ந்து
பார்க்கிறோம்.

உலகம் சுருங்கி எல்லா விழுமியங்களையும் சந்தைப் பொருளாதாரம் கபளீகரம்
செய்து வரும் காலக்கட்டத்தில் பல கேள்விகள் அர்த்தமற்றுப் போகின்றன.

கண்ணன்

2009/12/4 Vedaprakash <vedamved...@yahoo.com>:
> http://thatstamil.oneindia.in/movies/hollywood/2009/12/03-pregnant-padma-lakshmi-poses-naked.html
>

N. Kannan

unread,
Dec 4, 2009, 3:59:09 AM12/4/09
to mint...@googlegroups.com
விட்டுப்போன இன்னொரு விஷயம்....

பாற்சமன்பாடு (Gender Equality) பற்றி இந்த நூற்றாண்டில் அதிகமாகப்
பேசப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன. அந்நிலையில் இந்தியாவில் இதைப்
பிரச்சனை பண்ணுவது முரண்நகையாக அமைய வாப்புண்டு. ஏனெனில் உலகிலேயே
வேரெங்கும் காணாத அளவில் கும்பமேளாவின் போது 'நங்கா சாதுக்கள்' (நிர்வாண
சாமியார்கள்) நடமாடுகிற நாடு அது. ஜைனத்துறவிகள் ஆடை உடுத்துவதில்லை.
இதையெல்லாம் ஏதோ காரணங்கள் சொல்லி இந்தியா சமாளித்துவருகிறது. சென்ற
கும்பமேளாவில் இந்த நங்கா சாதுக்களுடன் சேர்ந்து கொள்ளப் போன ஒரு நங்கா
பெண்மணியை போலிஸ் தூக்கி உள்ளே போட்டுவிட்டது. காலத்தின் விதிகள்
மாறுவதைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது!

க.>

2009/12/4 N. Kannan <navan...@gmail.com>:

விஜயராகவன்

unread,
Dec 4, 2009, 4:51:31 AM12/4/09
to மின்தமிழ்
Vedaprakash

Nothing wrong if Tamils take pride in Tamil achievers , as long as it
is not overdone. They can be good role models for the younger
generation

Vijayaraghavan

On 4 Dec, 02:36, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
> பெண்களைப் பற்றி நிறைய விவாதங்கள்!
>
> பெண்ணியம் பற்றியோ சொல்லவே வேண்டாம்.
>

> ஆனால், ஏன் இப்படி?http://thatstamil.oneindia.in/movies/hollywood/2009/12/03-pregnant-pa...

Vedaprakash

unread,
Dec 4, 2009, 7:39:57 PM12/4/09
to மின்தமிழ்
நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!

தமிழச்சிக் கலக்குகிறாள் அங்கே, தமிழச்சி கலங்குகிறாள் இங்கே
தமிழனும் கலங்குகிறான், தமிழன் பதறுகிறான் இப்பாரதத்தில்.
நாகரிகத்தின் அநாகரிகமா, அப்பண்பாட்டுச் செருக்கின் சீரழிவா
நிர்வாணம் அகோரமா, விகாரமா, அசிங்கமா, ஆபாசமா? [1]

புத்தரை வெல்லும் நிர்வாணமா ஜைனத்தை வெல்லும் நிர்வாணமா
இல்லை, கிரேக்க-ரோமானிய நிர்வாணத்தையும் வெல்லும் அவமானமா
நிர்வாணத்திலும் சமதர்மம் பார்க்கும் அம்மணமான பெண்மையே
உன்னை மூட முடியாதலால் மூடுகிறேன் எனது கண்களை. [1]

பத்மா லட்சுமி, அம்மா தாயே, தெய்வமே பயமாக இருக்கிறது!
பத்மஸ்ரீக்கள், கலைமாமணிகள் நோக்க நோகடிக்கவே
சுபாஷினி அலி, பார்வதி கான், என்று கேள்விப்பட்டிருக்கிறோம்
சல்மான் ருஸ்டியின் பத்தினி நீ, கண்ணகியையும் வென்றுவிடாய். [2]

தமிழன் பாடினான் ஓரக்கண்ணால் பார்த்தாலே “பிள்ளத்தாச்சி”
தமிழச்சி நீயோ கண்களைக் கட்டுகிறாய், நீயும் ஒரு “பிள்ளத்தாச்சி”
அச்சம், நாணம், மடம், கற்பு, பயிர்ப்பு என்ற ஐங்குணங்கள்
அச்சம்கொண்டு நாணிமடத்துடன் கற்பைவிட்டு பயிர்ப்போடு பெயர்ந்தன. [3]

பத்மஸ்ரீக்களின் கலக்கல்களின்று மீள்வதற்குள், நீ மீறிவிட்டாய்.
“தமிழச்சி”களின் “முலைகள்” கவிதைக் கொடுமைகள் தீருவதற்குள்
தமிழச்சி நீ குனிந்து விட்டாய், நாங்கள் தலை குனிந்துவிட்டோம்.
கைகால்களை சேர்த்து குவித்துவிட்டாய், நாங்களும் கூனிக்குருகிவிட்டோம்.
[4]

கற்பாம், மானமாம், கண்ணகியாம், சீதையாம் பாடப்பட்டது அன்று
அதெல்லாம் பார்க்கமுடியாது என்ற குஷ்புவிற்கு காட்டுகிறாய் நீ இன்று
மனம் மாறினால் மணம் மாறுகிறது, மணம் மாறினால் மனம் மாறுகிறது.
இருமனம்-திருமணம், பலமனம்-பலமணம் குஷ்பு மாறுகிறது, நாறுகிறது. [5]

அம்மணத்தில் எம்மணம் பொதுமையானதென ஆயும் கம்யூனிஸ தந்தைல்லை
நிர்வாணத்தில் பகுத்தறிவோடு புகுந்து பார்க்க பெரியாரின் சகோதரனுமில்லை
அம்மணியின் அந்தரங்கங்களைப் பேச நான் மோஹனரங்க புருஷனுமில்லை
இம்மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்றுக்கொண்ட அந்நியன் நான். [6]

பெண்ணின் உடல் என்பது யாருக்குச் சொந்தம் என்பதிலில்லைப் பிரச்சினை
அவ்வுடலின் நிர்வாணம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் சர்சை
ஒழுங்கு-ஒழுங்கீனம் என்று நிர்வாணத்தின் சாரம்-ஆசாரம் கண்டு
பகுத்தறிவோடு தரச்சான்றிதழ் கொடுக்கும் பன்னாட்டு நிருவனங்களுமில்லை
[7]

நங்காசாதுக்களுடன் நங்கைசென்றால் தடுப்பது பாரதமில்லை இந்தியா
நங்கைகளையும் மறுத்து, நிர்வாணங்களை அரங்கேற்றுவது இவ்விந்தியா
ஜைன நங்காக்களையும் மறுப்பதும் பெரியாரியம் பேசி கல்லடிப்பதும் தமிழகம்
பாரதத்திற்கு சமாளிக்கவேண்டிய நிலையில்லை, நாரிகளுக்குத்தான் உள்ளது. [8]

காமத்தைக்காதலாக்கி இச்சைகளைக்கொச்சைப்படுத்தி நடத்துவது புனிதப்போர்!
நிர்வாணத்தை நிருவானமாக்கி சித்தாந்தம் பேசி மயக்குவது உலகத்துவப்போர்.
பாற்சமன்பாடுசெய்ய பால்சமத்துவம் பேசும் பால்கார சண்டைகள் வேண்டாம்
பாற்கடலைக்கடைந்தால் மகனெப்படி பிறப்பானென்ற பகுத்தறிவும் வேண்டாம்.
[9]
நிர்வாணத்தில் நிர்மலமில்லாவிடில் மலமிகும் அம்மணவாழ்க்கையில்
அம்மணத்தை படமிட்டு சமத்துவம் பேசினால் தாயும் வேசியாகுவாள்
நிருவானத்தில் பொதுவுடமை கொண்டால், கொண்டவள் பங்கு போடப்படுவாள்
இப்பெண்மை நிர்வாணத்தில் வேண்டாம் எனக்கு சமத்துவம், சகோதரத்துவம் [10]

அம்மனை அம்மத்தை மறைத்தது தொழில்நுட்பமாவென ஆயும் தகுதியில்லை
நிர்வாணம் அடையத்துடிக்கும் புத்தனாகி போதிமரத்திடியில் தங்க நேரமில்லை
நிரியானம் அடைய வடக்கிருக்க நிருவாண தீட்சையும் பெறவில்லை
நிருவானம் பார்க்க அருகனுமில்லை, அந்த அருகதையும் எனக்கில்லை.[11]

பாசநேசமுள்ள மகளின் தந்தை நான் அன்பு-பண்புடைய அக்காளின் தம்பி நான்
ஆசாபாசமுள்ள கொண்ட தங்கையின் அண்ணன் நான்; பாரததேசத்தவன் நான்
மனைவியின் நிர்வாணம் எனக்குத்தானெண்ணும் பொறாமைக் கணவன் நான்
அவை தவறென்றால் நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்! [12]


Tthamizth Tthenee

unread,
Dec 4, 2009, 8:28:47 PM12/4/09
to mint...@googlegroups.com
பெண்மை  தரமிழந்துவிட்டது
ஆண்மை  அவற்றைத் தடுக்கும்  ஆண்மை இழந்துவிட்டது
 
இந்தச் சூழலில் இன்னும் பெண்களுக்கு  சம உரிமை வேண்டுமாம்
 
எது சம உரிமை
 
குறைந்த அளவு  ஆண்களைப் போல்  முழுவதும் துணியால் மூடி இருக்கலாமே
 
பாரத மாதா என்கிறோம் நாம்
 
தாய்மையை, பெண்மையை, புனிதத்தை, எல்லாவற்றையுமே சீரழித்துவிட்டார்கள் பெண்கள்
 
பெண்மையை போற்றுதும் பெண்மையைப் போற்றுதும் என்றே நாம் கொண்டாடி வருகிறோம்
அவர்கள் புரிந்து கொள்ளாமல்  அவரகளை  அவர்களே  போற்றாமல்  சீரழிந்து வருகிறார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 


5-12-09 அன்று, Vedaprakash <vedamved...@yahoo.com> எழுதினார்:

vj kumar

unread,
Dec 4, 2009, 9:12:36 PM12/4/09
to mint...@googlegroups.com
hi,

My humble opinion - its in the depiction. art nudes are have been in vogue for long.

take the famous sittanavasal paintings - they are nudes as well

http://www.poetryinstone.in/lang/ta/2009/02/11/the-lost-art-of-sittanavasal-part.html
http://www.poetryinstone.in/lang/ta/2009/02/18/the-lost-art-of-sittanavasal-part-2.html


my all time favorite has been this sculpture - i dont see the nude in this, but just the artistic flair.

http://farm2.static.flickr.com/1211/531014239_119117f317.jpg


But to do so when you are carrying a child, maybe is an extension as well. we have numerous instances in sculpture where a lady delivering a baby is portrayed in stone. and these are found in our temples.

www.varalaaru.com/images/jun08/magapperu.jpg
www.varalaaru.com/images/may08/kalai/DSCN7166.jpg


rgds
vj
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Kannan

unread,
Dec 4, 2009, 9:23:30 PM12/4/09
to mint...@googlegroups.com
விஜய் நன்றி.
 
அது ஒருவகையான விக்டோரியன் தூய்மை கலந்த இந்தியப் பாசாங்குத்தனம் ;-)
வெள்ளையர்கள் இந்தப் பாசாங்கிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.
அங்கு இதையெல்லாம் யாரும் பெரிது படுத்துவதில்லை. காதலர் இருவர் முத்தமிட்டால் அது அவர்கள் பாடு என்று போய்கொண்டு இருப்பார்கள். நம்மால் அப்படி இருக்க முடியாது. அதற்கொரு முதிர்ச்சி வேண்டும்.
ஒரு காலத்தில் அந்த முதிர்ச்சி நம்மிடம் இருந்தது என்பதையே நமது கோயில் சிற்பங்களும், குகை ஓவியங்களும் காட்டுகின்றன.
நம்மிடம் இப்போதுள்ளது தமிழர் கண்ணோட்டமல்ல, பழைய விக்டோரியன், இஸ்லாமிய விழுமியங்களே. அதுதான் இப்போது எதிர்குரலாக பழமைவாத இயக்கமாக உருப்பெற்றுள்ளது.
 
க.>

2009/12/5 vj kumar <vj.ep...@gmail.com>

devoo

unread,
Dec 4, 2009, 9:35:06 PM12/4/09
to மின்தமிழ்
பெண்டிர் மார்க்கச்சோ, சோளியோ அணியாமல் வெறும் சேலையால்
மறைத்தபடி சுதந்திரமாக இருந்தனர் ஒரு காலத்தில்;
மன வக்கிரத்திற்கு இடமளிக்காத ஒரு பண்பாட்டுச் சூழல் நிலவிய காலமும்
இருந்தது; இளம் கைம்பெண்களால் பாதுகாப்போடு வாழ முடிந்தது.
அக்காலத்திய சமுதாய வாழ்வைக் கலை அப்படியே ஆவணமாக்கித்
தருகிறது, விஜய்.நம் மரபில் Art nudes என்று தனியே கிடையாது.

இந்தியக் கலை, இலக்கிய, மத மரபுகளை இம்மண்ணின் பண்பாட்டோடு
இணைத்து ஆராய்வதே முறை.

தேவ்


On Dec 5, 7:12 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> hi,
>
> My humble opinion - its in the depiction. art nudes are have been in vogue
> for long.
>
> take the famous sittanavasal paintings - they are nudes as well
>

> http://www.poetryinstone.in/lang/ta/2009/02/11/the-lost-art-of-sittan...http://www.poetryinstone.in/lang/ta/2009/02/18/the-lost-art-of-sittan...


>
> my all time favorite has been this sculpture - i dont see the nude in this,
> but just the artistic flair.
>
> http://farm2.static.flickr.com/1211/531014239_119117f317.jpg
>
> But to do so when you are carrying a child, maybe is an extension as well.
> we have numerous instances in sculpture where a lady delivering a baby is
> portrayed in stone. and these are found in our temples.
>
> www.varalaaru.com/images/jun08/magapperu.jpgwww.varalaaru.com/images/may08/kalai/DSCN7166.jpg
>
> rgds

> vjhttp://www.poetryinstone.in


> Here the language of stone surpasses the language of man
>

> 2009/12/5 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
> > பெண்மை  தரமிழந்துவிட்டது
> > ஆண்மை  அவற்றைத் தடுக்கும்  ஆண்மை இழந்துவிட்டது
>
> > இந்தச் சூழலில் இன்னும் பெண்களுக்கு  சம உரிமை வேண்டுமாம்
>
> > எது சம உரிமை
>
> > குறைந்த அளவு  ஆண்களைப் போல்  முழுவதும் துணியால் மூடி இருக்கலாமே
>
> > பாரத மாதா என்கிறோம் நாம்
>
> > தாய்மையை, பெண்மையை, புனிதத்தை, எல்லாவற்றையுமே சீரழித்துவிட்டார்கள் பெண்கள்
>
> > பெண்மையை போற்றுதும் பெண்மையைப் போற்றுதும் என்றே நாம் கொண்டாடி வருகிறோம்
> > அவர்கள் புரிந்து கொள்ளாமல்  அவரகளை  அவர்களே  போற்றாமல்  சீரழிந்து
> > வருகிறார்கள்
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>

> > 5-12-09 அன்று, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> எழுதினார்:

> ...
>
> read more »

vj kumar

unread,
Dec 4, 2009, 9:57:17 PM12/4/09
to mint...@googlegroups.com
"விஜய்.நம் மரபில் Art nudes என்று தனியே கிடையாது"

Dear sir,

I refered to art nudes in my mail not with reference to Indian art ( atleast of that period). I gave the examples of nudes in our own backyards after that.

However, for argument sake, let me indulge in this

http://upload.wikimedia.org/wikipedia/commons/b/be/Chola_fresco.png

this is part of the famous chola frescos from the big temple - Raja raja chola period - say around 1010 AD. Notice the state of the dancers ( The Temple inscriptions list 400 dancers commissioned for the temple)

Now, see this famous panel from mallai, conservative dating to between 630 -730 AD, the milkmaids and common women folk are shown wearing breast bands.

http://www.poetryinstone.in/lang/en/2009/02/06/govardhana-the-hillock-umbrella-sri-kudavoil-balasubramaniam.html/comment-page-1

Now same location the adhivaraha mandabam, royal potrait of pallava king ( there are various theories on who it is)  but we focus on the queens. How do you explain this

http://www.saigan.com/heritage/poimahabs/mhb18is.jpg

( this is our Prof Swaminathan's article http://www.saigan.com/heritage/poimahabs/mhbtrp14.html)

rgds
vj


http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/5 devoo <rde...@gmail.com>

vj kumar

unread,
Dec 4, 2009, 10:03:50 PM12/4/09
to mint...@googlegroups.com
Just a note, the royal pallava portrait queens in the aadhi varaha
cave r not techically nudes. They are wearing a very transparent
garment ( almost like a diaphanous viel)..but ....

Vj

--
Sent from my mobile device

vj kumar

unread,
Dec 4, 2009, 10:09:58 PM12/4/09
to mint...@googlegroups.com
Men were no exception !! Even though there is puranic story behind, the representation - the majestic Bhikshandana in Kanchi kailasantha and the same in tanjore bronze are superb examples of male nudes.

http://www.poetryinstone.in/lang/ta/2008/09/26/sculpture-from-an-authors-perspective.html/comment-page-1


rgds
vj
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/5 vj kumar <vj.ep...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 4, 2009, 10:14:35 PM12/4/09
to mint...@googlegroups.com


2009/12/5 vj kumar <vj.ep...@gmail.com>

"விஜய்.நம் மரபில் Art nudes என்று தனியே கிடையாது"

Dear sir,

I refered to art nudes in my mail not with reference to Indian art ( atleast of that period). I gave the examples of nudes in our own backyards after that.

However, for argument sake, let me indulge in this


இரண்டு கட்சிக்கும் கேடயமும் கொடுக்கலாம்; வாளும் கொடுக்கலாம்.  (சண்டதான் போட்டுக்கப் போறதில்ல...அது வேற விஷயம்)

தேவ் சொல்து உண்மைதான்.  என்றபோதிலும்

நஞ்சு உண்டு கறுத்த கண்டி வெஞ் சினத்து 
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் 
துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி 

என்ற சிலப்பதிகார வரிகளும்,

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் 

என்ற திருக்குறளும் நினைவுக்கு வருகின்றன.
--
அன்புடன்,
ஹரிகி.

sk natarajan

unread,
Dec 4, 2009, 10:18:16 PM12/4/09
to mint...@googlegroups.com
என்னங்க  இது   நம்மை பெற்றவள்  பெண்
உடன் பிறந்த சகோதரிகள் பெண்கள்
இதில் ஏன் தமிழச்சி   குறித்து மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட   இந்த விவாதம்
நாம் செல்ல வேண்டிய    பாதைக்கு இது  பயன் தருமா ?
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2009/12/5 vj kumar <vj.ep...@gmail.com>

N. Kannan

unread,
Dec 4, 2009, 10:24:49 PM12/4/09
to mint...@googlegroups.com
இங்கு தாய்மை என்பது பற்றியோ, அன்னை எனும் உயர் விழுமியம் பற்றியோ பேச்சில்லை.

உடல் என்பது பற்றியே பேச்சு!

ஆணுடல், பெண்ணுடல் என்பது பற்றி.

:-)க(-:

2009/12/5 sk natarajan <sknatar...@gmail.com>:

devoo

unread,
Dec 4, 2009, 10:35:44 PM12/4/09
to மின்தமிழ்
நன்றி , விஜய்;
இந்த இழை அருமையான கலைப்படைப்புக்களை
வெளிக்கொணர்ந்தது. மேற்கத்தியப் பார்வை ஆராய்ச்சிக்குக் குந்தகமாகும்
என்பதே நான் கூற விழைவது; வேறு விதமான தவறான புரிதல்கள்
வேண்டாம்.

தேவ்

On Dec 5, 8:09 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> Men were no exception !! Even though there is puranic story behind, the
> representation - the majestic Bhikshandana in Kanchi kailasantha and the
> same in tanjore bronze are superb examples of male nudes.
>

> http://www.poetryinstone.in/lang/ta/2008/09/26/sculpture-from-an-auth...


>
> rgds
> vjhttp://www.poetryinstone.in
> Here the language of stone surpasses the language of man
>

> 2009/12/5 vj kumar <vj.epist...@gmail.com>


>
> > Just a note, the royal pallava portrait queens in the aadhi varaha
> > cave r not techically nudes. They are wearing a very transparent
> > garment ( almost like a diaphanous viel)..but ....
>
> > Vj
>

> > On 12/5/09, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> > > "விஜய்.நம் மரபில் Art nudes என்று தனியே கிடையாது"
>
> > > Dear sir,
>
> > > I refered to art nudes in my mail not with reference to Indian art (
> > atleast
> > > of that period). I gave the examples of nudes in our own backyards after
> > > that.
>
> > > However, for argument sake, let me indulge in this
>
> > >http://upload.wikimedia.org/wikipedia/commons/b/be/Chola_fresco.png
>
> > > this is part of the famous chola frescos from the big temple - Raja raja
> > > chola period - say around 1010 AD. Notice the state of the dancers ( The
> > > Temple inscriptions list 400 dancers commissioned for the temple)
>
> > > Now, see this famous panel from mallai, conservative dating to between
> > 630
> > > -730 AD, the milkmaids and common women folk are shown wearing breast
> > bands.
>

> >http://www.poetryinstone.in/lang/en/2009/02/06/govardhana-the-hillock...

> > .
> > >> ..
>
> > >> > my all time favorite has been this sculpture - i dont see the nude in
> > >> this,
> > >> > but just the artistic flair.
>
> > >> >http://farm2.static.flickr.com/1211/531014239_119117f317.jpg
>
> > >> > But to do so when you are carrying a child, maybe is an extension as
> > >> well.
> > >> > we have numerous instances in sculpture where a lady delivering a baby
> > >> > is
> > >> > portrayed in stone. and these are found in our temples.
>

> >www.varalaaru.com/images/jun08/magapperu.jpgwww.varalaaru.com/images/...

> ...
>
> read more »

Tthamizth Tthenee

unread,
Dec 4, 2009, 10:36:05 PM12/4/09
to mint...@googlegroups.com
நிர்வாணம்  என்பது மனதில் ஏற்படவேண்டிய  மாற்றம்
 
ஒரு வகையில்  சரணாகதி தத்துவம்
 
அதைத் தவராகப் புரிந்துகொண்டு
 
உடலி நிர்வாணம் செய்கிறார்களோ  என்று சந்தேகம் எழுகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
5-12-09 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:

N. Kannan

unread,
Dec 4, 2009, 10:42:27 PM12/4/09
to mint...@googlegroups.com
தேனீயாரே, ‘உடல் அல்ல நான்’ என்று நம் தத்துவம் சொல்லும் போது, உடல் ஏன்
நம்மை இவ்வளவு இம்சிக்கிறது? ;-)

க.>

2009/12/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

chithan

unread,
Dec 4, 2009, 11:16:23 PM12/4/09
to மின்தமிழ்
<அது ஒருவகையான விக்டோரியன் தூய்மை கலந்த இந்தியப் பாசாங்குத்தனம் ;-)
வெள்ளையர்கள் இந்தப் பாசாங்கிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.
அங்கு இதையெல்லாம் யாரும் பெரிது படுத்துவதில்லை. காதலர் இருவர்
முத்தமிட்டால்
அது அவர்கள் பாடு என்று போய்கொண்டு இருப்பார்கள். நம்மால் அப்படி இருக்க
முடியாது. அதற்கொரு முதிர்ச்சி வேண்டும்.>

எதுங்கய்யா முதிர்ச்சி? இன்றைய இந்த தமிழ்நாட்டு தமிழச்சியின் வெளிப்பாடு
தான் வெள்ளையர்களின் முதிர்ச்சியோ? என்றால், சீடர்கள் நிறைய
முதிர்ச்சியுடன் தயாராகித்தான் வருகிறார்கள் ! வாசியுங்கள். இந்த அழகில்
இந்த விளக்கம் ஃபேஸ் புக்கில் வேறு இடப்பட்டதாக்கும்.

http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2009/11/16.html

சித்தன்

Tirumurti Vasudevan

unread,
Dec 4, 2009, 11:29:03 PM12/4/09
to mint...@googlegroups.com


2009/12/5 N. Kannan <navan...@gmail.com>

தேனீயாரே, ‘உடல் அல்ல நான்’ என்று நம் தத்துவம் சொல்லும் போது, உடல் ஏன்
நம்மை இவ்வளவு இம்சிக்கிறது? ;-)

ஏன்னா தத்துவம் தத்துவமாவே இருக்கு. நடைமுறையில் வரலை. உடல் நான் இல்லைன்னு பசிச்சா சாப்பிடாம இல்லை. உடலுக்குத்தானே குளிர்ன்னு போத்திக்காம இல்லை.

 நிர்வாண பெண்ணை பாத்து மனக்கிளர்ச்சி வராதுன்னா பிரச்சினையே இல்லை. அப்படியா நாம இருக்கோம்?
திவாஜி
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

N. Kannan

unread,
Dec 5, 2009, 12:17:51 AM12/5/09
to mint...@googlegroups.com
2009/12/5 chithan <chitha...@yahoo.co.in>:

> http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2009/11/16.html
>

சித்தன் பயமாகத்தான் இருக்கு! இந்த வலையுலகம் (bloggosphere) நான் அறியாதது.

இரண்டு வகையில் ஞானம் பிறக்கும்.

ஒன்று எல்லாவற்றையும் அனுபவித்து தீர்த்த பின், பாலும் கசந்ததடி கிளியே!
படுக்கை நொந்ததடி! என்று.

இரண்டாவது, எதையும் அனுபவிக்காமல் உலக நடப்பை கவனித்து வந்தால் பொறி தட்டும்.

உலகம் மிகச்சுருங்கிவிட்டது என்று கூடச் சொல்லத்தோன்றவில்லை. எப்போதும்
உலகம் திறந்த வீடாகத்தான் இருந்திருக்கிறது. கீழுருந்து மேலும்,
மேற்கிலிருந்து கிழக்கிற்குமென்று.

இந்தியா ஒரு முழு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் தொடங்குகிறது.

கைக்கிளை..பெருந்திணை...

க.>

vj kumar

unread,
Dec 5, 2009, 12:25:21 AM12/5/09
to mint...@googlegroups.com
" நிர்வாண பெண்ணை பாத்து மனக்கிளர்ச்சி வராதுன்னா பிரச்சினையே இல்லை. அப்படியா நாம இருக்கோம்?"

அது அப்படி இல்லை - சிற்பக்கலையில் சில விதி முறைகள் உண்டு - like divine proportions. அதன் படி வடித்த சிலைகள் நமது உடலில் உருவாக்கும் தாக்கம் வேறு. கிளர்ச்சி கண்டிப்பாக அல்ல.

என்னுடைய சொந்த அனுபவம்  ...இதோ

கடின உழைப்பின் விளைவு, மரகத வண்ணம் பூசி நம்மை ஆயிரம் ஆண்டுகள் ஒரு நொடியில் பயணித்த சிலை, பத்து நிமிடம் பேச்சு வரவில்லை.

அந்த அழகு , கலை , தெய்வீகம் என்னை மெய் சிலிர்க்க வைத்து. எனது அனைத்து புலன்களும் அடங்கி, கண் முன் நிற்கும் உயிர் சிலையின் தாக்கத்தில் நான் சிலை ஆனேன் - அவள் உயிர் பெற்றாள்.


http://www.poetryinstone.in/lang/ta/2008/09/29/she-came-to-life-and-i-became-metal.html

விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/5 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

N. Kannan

unread,
Dec 5, 2009, 2:50:05 AM12/5/09
to mint...@googlegroups.com
2009/12/5 vj kumar <vj.ep...@gmail.com>:

> அந்த அழகு , கலை , தெய்வீகம் என்னை மெய் சிலிர்க்க வைத்து. எனது அனைத்து
> புலன்களும் அடங்கி, கண் முன் நிற்கும் உயிர் சிலையின் தாக்கத்தில் நான் சிலை
> ஆனேன் - அவள் உயிர் பெற்றாள்.
>

விஜய் எங்கேயோ போயிட்டீங்க :-)

அழகின் மகாரசிகர்கள் இந்தியர்கள்.
ஆனால் நமது அழகியல் கண்ணோட்டம் மிகவும் வக்கிரமாகிவிட்டது இப்போது.
வேதாந்த தேசிகன் ஒரு பாசுரத்திற்கு விளக்கம் தரும் போது
மகாபாரதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். நம்ம பாஞ்சாலி ஜலக்கீரிடை
செய்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு சர்வ லக்ஷணங்களும் பொருந்திய உடல்.
மிகப்பெரிய அழகி அவள். அவளுடன் குளிக்கும் மற்ற பெண்களே இவளைக் கண்டு
பொறாமை கொள்கின்றனராம். அப்படி வருகிறது மகாபாரத ஸ்லோகம்.
அழகை, அழகென்று பார்ப்பதில் என்ன தவறு?
ஆண், பெண் உடல் அழகை முழுவதும் காட்டும் வண்ணம் (நிர்வாணமல்ல) broadway
show உண்டு. மிகவும் அற்புதமாக இருக்கும். இறைவன் படைப்பில் எல்லாமே
அழகுதான்.
நீங்கள் பேசுகின்ற அம்பாள் அழகு பற்றி லா.ச.ரா சொக்கிப்போய் எழுதுவார்.

க.>

Tthamizth Tthenee

unread,
Dec 5, 2009, 6:28:35 AM12/5/09
to mint...@googlegroups.com
தேனீயாரே, ‘உடல் அல்ல நான்’ என்று நம் தத்துவம் சொல்லும் போது, உடல் ஏன்
நம்மை இவ்வளவு இம்சிக்கிறது? ;-)

 
உடலல்ல நான் என்று தத்துவம் பேசுவதே தவறு
உடலும்     காற்றடைத்த பை
ஆத்மாதான் காற்று
 
ஆனாலும் உடலுக்கு உணர்ச்சிகள் உண்டு
 
ஆத்மாவுக்கு  உணர்ச்சிகள்  இருக்கிறதா  ..?
 
ஆதமா  உணர்ச்சி வசப்பட்டாலும்
பாதிக்கப்படுவது  உடல்தானே
 
பக்திப்பெருக்கால்  கண்களில்தானே  ஆனந்த பாஷ்பம் வழிகிறது
பரவசப்படும்போதும் உடல்தானே  சிலிர்க்கிறது
 
புலன்களால்  அனுபவிக்கும்  அத்தனை உணர்ச்சிகளும்  ஆத்மாவைத்தானே  பாதிக்கிறது
 
அத்மா  அடையும்  பலன்களுக்கு  உடல்தானே  காரணமாய்  இருக்கிறது
 
அப்படி இருக்க
 
உடல் அல்ல நான்’ என்று நம் தத்துவம் சொல்லும்  பேதமை  எங்கிருந்து வந்தது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 


 
5-12-09 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
2009/12/5 vj kumar <vj.ep...@gmail.com>:

devoo

unread,
Dec 5, 2009, 6:38:35 AM12/5/09
to மின்தமிழ்
Dec 5, 12:50 pm, "N. Kannan"

> அந்த அழகு , கலை , தெய்வீகம் என்னை மெய் சிலிர்க்க வைத்து. எனது அனைத்து
> புலன்களும் அடங்கி, கண் முன் நிற்கும் உயிர் சிலையின் தாக்கத்தில் நான் சிலை
> ஆனேன் - அவள் உயிர் பெற்றாள்.

//விஜய் எங்கேயோ போயிட்டீங்க :-)


வேதாந்த தேசிகன் ஒரு பாசுரத்திற்கு விளக்கம் தரும் போது
மகாபாரதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். நம்ம பாஞ்சாலி ஜலக்கீரிடை
செய்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு சர்வ லக்ஷணங்களும் பொருந்திய உடல்.
மிகப்பெரிய அழகி அவள். அவளுடன் குளிக்கும் மற்ற பெண்களே இவளைக் கண்டு

பொறாமை கொள்கின்றனராம். அப்படி வருகிறது மகாபாரத ஸ்லோகம்.//

கண்ணன் ஐயா, நீங்களும் எங்கேயோ போயிட்டீங்க !
பெருமாளின் பேராண்மைக்குமுன் அடியார்கள் பெண்களாகி விடுவதை
ஸ்வாமி தேசிகன் விளக்கும் அழகு அது;
‘பக்தி: ச்ருங்கார வ்ருத்யா பரிணமதி’ என்பார்.
ஸ்ரீ ராமாநுஜ தர்சநத்தின் ப்ரதாந ப்ரதிதந்த்ரங்களை அக்கால கட்டத்தில்
அவர் தர்க்கபூர்வமாக நிலைநாட்டியிராவிட்டால் தரை
மட்டமாக்கியிருப்பார்கள்.

தேவ்

Tthamizth Tthenee

unread,
Dec 5, 2009, 6:53:01 AM12/5/09
to mint...@googlegroups.com
ஒதுங்கிப் போகச்சொன்னது என்னையா  என் ஆத்மாவையா  என்று கேட்டாரே
 
அந்த நிகழ்வுதான்  நினைவுக்கு வருகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
5-12-09 அன்று, devoo <rde...@gmail.com> எழுதினார்:

srirangammohanarangan v

unread,
Dec 5, 2009, 7:02:13 AM12/5/09
to mint...@googlegroups.com
On 12/5/09, devoo <rde...@gmail.com> wrote:
Dec 5, 12:50 pm, "N. Kannan"
> அந்த அழகு , கலை , தெய்வீகம் என்னை மெய் சிலிர்க்க வைத்து. எனது அனைத்து
> புலன்களும் அடங்கி, கண் முன் நிற்கும் உயிர் சிலையின் தாக்கத்தில் நான் சிலை
> ஆனேன் - அவள் உயிர் பெற்றாள்.

//விஜய் எங்கேயோ போயிட்டீங்க :-)
வேதாந்த தேசிகன் ஒரு பாசுரத்திற்கு விளக்கம் தரும் போது
மகாபாரதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். நம்ம பாஞ்சாலி ஜலக்கீரிடை
செய்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு சர்வ லக்ஷணங்களும் பொருந்திய உடல்.
மிகப்பெரிய அழகி அவள். அவளுடன் குளிக்கும் மற்ற பெண்களே இவளைக் கண்டு
பொறாமை கொள்கின்றனராம். அப்படி வருகிறது மகாபாரத ஸ்லோகம்.//

கண்ணன் ஐயா, நீங்களும் எங்கேயோ போயிட்டீங்க !
பெருமாளின் பேராண்மைக்குமுன் அடியார்கள் பெண்களாகி விடுவதை
ஸ்வாமி தேசிகன் விளக்கும் அழகு அது;
‘பக்தி: ச்ருங்கார வ்ருத்யா பரிணமதி’ என்பார்.
 
-------------------------------------------------------
 

ஸ்ரீ ராமாநுஜ தர்சநத்தின் ப்ரதாந ப்ரதிதந்த்ரங்களை அக்கால கட்டத்தில்
அவர் தர்க்கபூர்வமாக நிலைநாட்டியிராவிட்டால் தரை
மட்டமாக்கியிருப்பார்கள்.

தேவ்
 
இது  கொஞ்சம்   ஓவர்.  :--)))

 

devoo

unread,
Dec 5, 2009, 7:35:22 AM12/5/09
to மின்தமிழ்
Dec 5, 5:02 pm, srirangammohanarangan v

> இது  கொஞ்சம்   ஓவர்.  :--)))

ஓவராகத் தெரியவில்லை.

இவர் காலத்தில் திருவாய் மொழி உத்ஸவத்திற்குத் தடை நேர்ந்தது;
வாதத் திறமையால் மீண்டும் நிறுவினார்;
ரக்ஷா க்ரந்தங்கள், விரோத பரிஹாரம், பரமத பங்கத்தின் உபோத்காதம்
இவை அக்காலத்தில் நிலவிய ப்ரச்னைகளின் ஆழத்தை நமக்கு உணர்த்துகின்றன.

இவர் வாழ்ந்ததும் ஆராமம் சூந்த அரங்கத்தில் அன்று; வாதத்தினவு மிக்க
மதவாதியர் நிறைந்த காஞ்சீபுரத்தில்.

’வயம் து ஹரிதாஸாநாம் பாதரக்ஷாவலம்பகா:’என்று உடைந்த மரவடிகளைத் தலையில்
தரித்த
பரம ஸாத்விகரான இப்பெருந்தகை ’பரமதப்போர் பூரித்தோமே’என்று கூறக்காரணம்
யாது?

ஒரு புறம் பரமபத ஸோபாநம், கோபால விம்சதி, அச்யுத சதகம்,பாதுகா ஸஹஸ்ரம்
போன்ற ரஸாநுபவம் மிக்க நூல்கள்; மறுபுறம் ரக்ஷா க்ரந்தங்களும், வாத
நூல்களும்.
ஸ்ரீபாஷ்யத்தைப் பலமுறை ப்ரவசநம் செய்து அதில் வல்லவர்களைத் தயார்
செய்யக்காரணமும்
ஸித்தாந்த ஸ்தாபநமேயாக வேண்டும் - த்ரிம்சத்வாரம் ச்ராவித சாரீரக
சாஸ்த்ர:..

‘பரமத பங்கம்’ வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இயற்றியது என்றும்
சொல்கின்றனர்;
அறிஞர்கள் கூறுவதும், நூல்களில் பெறும் அகச்சான்றும் ஒத்திசைந்து
செல்கின்றன.

அடியேன் புரிந்து கொண்டதை எழுதினேன்; இவற்றை மறுத்து நீங்கள்
வேறுவிதமாக நிறுவினால் அப்பீல் ஏது?

தேவ்

Annakannan

unread,
Dec 5, 2009, 1:12:33 PM12/5/09
to மின்தமிழ்
ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'அந்நியன்' படத்தில் ஒரு காட்சி. ஓடும்
தொடர் வண்டி; இரவு நேரம்; விளக்குகள் அணைந்தன; எதிரெதிர் உயர்
படுக்கைகளில் (நடிகர்) விக்ரம், (நடிகை) சதா.

சதாவுக்குத் தன் காதலைத் தெரிவிக்கும் விதமாக விக்ரம் ஒரு பாடலை (மானச
சஞ்சரரே?) பாடுவார். சதா அதைப் புரிந்துகொள்ள மாட்டார். ஆனால், உடன்
அந்தப் பெட்டியில் உள்ள அனைவரும் அதே பாடலைப் பெருங்குழுவாகப் பாடத்
தொடங்கிவிடுவார்கள். காதலுக்காகத் தொடங்கிய பாடல், முரட்டுக் கச்சேரியாக
மாறிவிடும்.

தமிழச்சியின் நிர்வாணத்தை விமர்சிக்கத் தொடங்கிய இந்த இழை, ஆன்மா,
ஆன்மீகம் எனத் திசை மாறியதைக் கண்டதும் எனக்கு 'அந்நியன்' நினைவுக்கு
வந்தான். எந்தத் தலைப்பைத் தொட்டாலும் அதைத் தனக்கு விருப்பமான
திசைக்குத் திருப்புவதற்கு ஒரு தனித் திறன் வேண்டும். :-)

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

devoo

unread,
Dec 5, 2009, 1:20:54 PM12/5/09
to மின்தமிழ்
அண்ணா கண்ணன், நீங்கள் அந்நியர் அல்லர்;
நீங்கள் ஒரு கலக்குக் கலக்கி நிர்வாண திசைக்குத்
திருப்பி விடலாமே.

தேவ்

Satheesh kumar R

unread,
Dec 5, 2009, 2:00:36 PM12/5/09
to mint...@googlegroups.com


5 டிசம்பர், 2009 9:20 pm அன்று, devoo <rde...@gmail.com> எழுதியது:

அண்ணா கண்ணன், நீங்கள் அந்நியர் அல்லர்;
நீங்கள் ஒரு கலக்குக் கலக்கி நிர்வாண திசைக்குத்
திருப்பி விடலாமே.

தேவ்

ஆத்மா, ஆன்மீகம் பற்றி பேசுவதும் ஒரு வகையில் நிர்வாணத்தைப் பற்றி பேசுவதுதானே?

நிர்வாணம் = முத்திநிலை, வீடுபேறு...

சதீஷ்

Annakannan

unread,
Dec 5, 2009, 2:11:56 PM12/5/09
to மின்தமிழ்
நிர்வாணம் என்பது எளிமை - இது ஒரு கோணம்; நிர்வாணமாகப் படம் பிடிக்கப் பல
கோடிகள் சன்மானம் - இது ஒரு கோணம்.

மூடி வைக்க வைக்க, அதன் மீதான ஆர்வம் கூடுகிறது. அதற்காக ஒரேயடியாக
மூடினாலும் ஆர்வம் போய்விடுகிறது.

குழந்தையாக இருக்கும்போது நிர்வாணம் இயற்கை; வளர வளர வளர்கிறது செயற்கை.

அந்தமான் பற்றிய ஒரு பதிவினை அண்மையில் படித்தேன்.

http://andamantamizhosai.blogspot.com/2009/12/blog-post_04.html

/கற்காலத்தினின்று இன்னும் வெளிவராத, உடை பற்றிய எண்ணம் கூட இல்லாத, ஜரவா
என்ற பழங்குடியினர் இங்கு வசிக்கின்றனர். இன்னும் பல பழங்குடியினர் இங்கு
வசித்தாலும் அவர்கள் நம்மைப் போல நாகரீக மனிதர்களாய் வலம் வர, இந்த ஒரு
இனம் மட்டுமே நிர்வாணமாகக் காடுகளில் வசிக்கின்றனர்./ எனக் க.நா.சாந்தி
லெக்ஷ்மணன் எழுதியுள்ளார்.

ஆடை உடுத்துவதே நாகரிகம் எனக் கருத முடியுமா? ஆடை உடுத்தியவர்கள் எல்லாம்
நாகரிகமானவர்களா என்ன?

நிர்வாணம் என்பது ஒரு தத்துவம்; இயக்கம்; வாழ்வியல் முறை. அது தவறாகாது;
வீட்டில் தனியே இருக்கும்போது ஆடையின்றி இருப்போர் உண்டு; வெளியே
செல்லும்போது மட்டும் பிறருக்காக ஆடை அணிவார்கள். இது ஒரு வகையில் வேடம்
தான்.

தந்தை பெரியாரும் நிர்வாணமாகச் செல்லும் துணிவு பெற்றவர்தான்.

/பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும்
துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத்
துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை
பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு
பெரியாரியவாதிகளுக்கு இருந்தது./

http://www.yarl.com/forum3/index.php?showtopic=10028&pid=175095&mode=threaded&show=&st=0

உண்மையில் நிர்வாணத்தைக் கண்டு மனிதன் அஞ்சுகிறான். அது, உண்ணக் கூடாத
உணவு என அவன் தனக்குத் தானே கருதுகிறான்.

புறத்திலிருந்து திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பாக இருக்கும்
நிர்வாணத்திற்கு அழகு அதிகம். நிர்வாணத்தை இயல்பாக எடுத்துக்கொள்ளும்
சமூகமே முதிர்ந்த சமூகம்!

Satheesh kumar R

unread,
Dec 5, 2009, 3:12:45 PM12/5/09
to mint...@googlegroups.com
அழகாய் விளக்கியுள்ளீர்கள் அண்ணாகண்ணன்,

நிர்வாணம் என்பது உடலில் அல்ல, பார்வையிலும் அல்ல நம் மனதில்தான் இருக்கிறது...

மனிதன் நாகரீகப் போர்வையில் தன் இயல்பை இழந்துவிட்டானோ?

சதீஷ்

5 டிசம்பர், 2009 10:11 pm அன்று, Annakannan <annak...@gmail.com> எழுதியது:

Vedaprakash

unread,
Dec 5, 2009, 7:46:39 PM12/5/09
to மின்தமிழ்
குறிப்பு: விவாதங்களில் சில issues, points, facts etc முதலியவற்றை
சுற்றி வளைக்காமல் எடுத்து வைக்கவேண்டுமானால் அல்லது சொல்லவேண்டுமானல்,
நேரிடையாக சொல்லவேண்டியிருக்கும். என்னுடைய நேற்றைய கவிதையிலேயே (அது
கவிதையா இல்லையா என்பது வேறு) என்னால் முடிந்த அளவில் விளக்கி விட்டேன்.
இனி பார்ப்போம்.

1. திக நண்பர்களையேக் கேட்டுவிட்டேன், அவர்கள் அத்தகைய நிர்வாண
புகைப்படத்தைக் காடுவதில்லை [மங்கள முருகேசன் புத்தகத்தில் ஒரு படம்
இருக்கிறது. ஆனால் உடையோடத் தான் இருக்கிறது].

2. ஈரோட்டில் உள்ள நினைவகத்திலும் இல்லை. "பெரியார் படத்திலும்"
காட்டவில்லை! யாரிடமாவது இருந்தால் வெளியிடுங்கள் அவரது "துறவுநிலையை"ப்
பார்த்துவிடுவோம்.

3. நண்பர்களுக்கு இன்னும் புரியாமல் இருப்பது நிர்வாணத்தின் மர்மம்தான்.
பெரியாரைப்பற்றி உதாரணம் கொடுத்துள்ளதால், நான் அதிலேயே அலச
விரும்புகிறேன்.

4. ஈரோட்டில் பலமுறைச் சென்று பெரியாரைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி
இருக்கிறேன்.
i. ஒரு பெரியவர், அவர் ஒரு கவிதை நூலே
வெளியிட்டிருக்கிறார்.
ii. அதில் அவர் குறிப்பிடுவதாவது, பெரியார் பவானி
ஆற்றங்கரையில் பல பெண்களுடன் "அவ்வாறே" இருப்பாராம்.
iii. அந்த நிர்வாணத்தையும் புகைப்படங்களாக
வெளியிடுவதுதானே?
iv. இன்னும் யதார்த்தமாக பல கேள்விகளைக்
கேட்கலாம்.
v. ஆனால், உண்மை / உண்மை நிலை பற்றி பேசும்போது
கோபம் வரும்!

5. உள்ளேயிருக்கவேண்டிய நிர்வாணம் வேறு, வெளியேயிருக்க வேண்டிய நிர்வாணம்
வேறு.

6. இதைப் புரிந்து கொள்ளாமல், புரிந்தும் புரியாதது மாதிரி "நிர்வாண
அத்வைதம்" பேசினால், ஒரு பிரயோஜனமும் இல்லை.

7. அதுதான் முன்பு கேட்டேன் "மலங்கழித்துக் கொண்டே அரசாட்சி செய்ய
முடியுமா?" என்று. பிறகெதற்கு மனிதர்களுக்கு கழிவறை, மறைவு, மறைப்பு
எல்லாம். அதையும் [1, 2, 3, 4.....] எல்லாமே வெளியிலேயே செய்யலாமே?

8. நிர்வாணம் மனத்தில் இருக்கிறது உடலில் இல்லை என்றெல்லாம் வாதம்.
அவ்வாதம் புரிவோர் நிர்வாணமாக உலா வருவார்களா?

9. நிர்வாணம் தத்துவம் என்றெல்லாம் வாதம் கூடுகிறது.
i. ஆனால் மஹாவீரருடைய நிரிரானத்திலும் புத்தருடைய
நிர்வாணத்திலும் வேறுபாடு இருந்தது [நேற்று இதனைக் குறிப்பிட்டுக்
காட்டினேன்].
ii. ஏசுவின் "ஏலி ஏலி! லாமா சபக்தானி" என்ற
அலரலுக்கும், அல்லாவின் மறைப்பிற்கும் அங்குதான் அர்த்தம் உள்ளது.
முதலில் இந்த நிர்வாணங்களைப் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
iii. இங்குதான் மேலைநாடு/கீழைநாடு; இந்தியா/இந்தியா
அல்லாதவர்கள்;
iv. குழந்தைகளுடன் பார்ப்பேன்/ குழநெதகளுக்குத்
தெரியாமல் பார்ப்பேன்;
v. இரவில் காட்டுவார்கள் / பகலில் காட்டமாட்டார்கள்
என்ற வாதங்களுக்குப் பொருள் கிடைக்கும்.

10. நிர்வாண சிற்பங்கள், தெய்வங்கள் பற்றி தனியாக எழுதுகிறேன்.

வேதபிரகாஷ்
06-12-2009

Hari Krishnan

unread,
Dec 5, 2009, 10:49:24 PM12/5/09
to mint...@googlegroups.com


2009/12/5 Vedaprakash <vedamved...@yahoo.com>
நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!



அம்மணத்தில் எம்மணம் பொதுமையானதென ஆயும் கம்யூனிஸ தந்தைல்லை
நிர்வாணத்தில் பகுத்தறிவோடு புகுந்து பார்க்க பெரியாரின் சகோதரனுமில்லை
அம்மணியின் அந்தரங்கங்களைப் பேச நான் மோஹனரங்க புருஷனுமில்லை
இம்மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்றுக்கொண்ட அந்நியன் நான். [6]

அச்சிச்சோ.... மோஹனரங்கன் அந்த விஷயத்திலெல்லாம் பரம சாதுவாச்சே!  நங்கநல்லூரில் 32 அடி வளர்ந்து நிக்கறவர மாதிரியான ஆசாமியாச்சே!   எனக்குத் தெரிஞ்சு அவர் அம்மணியின் அந்தரங்கங்களை எல்லாம் பேசி, எழுதி நான் பாத்ததில்லையே....

இருக்கும் இருக்கும்...வேதம்னா மறை இல்லையா... மறைந்திருக்கும் இடத்தையெல்லாம் பிரகாசிக்க வைக்கிறவருக்கு தெரியுமோ என்னவோ...மோஹனரங்கப்பா.... பாத்துக்கோப்பா... கவிதையா விளாசித் தள்ளியிருக்கார்.  :-))

srirangammohanarangan v

unread,
Dec 5, 2009, 11:22:05 PM12/5/09
to mint...@googlegroups.com
அதானே   எனக்கும்  புரியல்லை.    :--))))   

N. Kannan

unread,
Dec 6, 2009, 2:27:36 AM12/6/09
to mint...@googlegroups.com
2009/12/6 Annakannan <annak...@gmail.com>:

> தந்தை பெரியாரும் நிர்வாணமாகச் செல்லும் துணிவு பெற்றவர்தான்.
>
> /பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும்
> துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத்
> துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை
> பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு
> பெரியாரியவாதிகளுக்கு இருந்தது./
>

ஈ.வே.ரா அவர்கள் அத்துணிவை தமிழகத்தில் காட்டவில்லை. ஜெர்மனியில்தான்
காட்டியிருக்கிறார் ;-) பெர்லின் நகரில் நிர்வாண சபையென்று ஒன்றுண்டு.
அதில் சேர்ந்து ஆண், பெண் என்று எல்லோரும் நிர்வாணமாக எடுத்துக்கொண்ட
புகைப்படமிது. நான் பார்த்திருக்கிறேன்.

அவர் துறவறத்தை எண்ணியெல்லாம் அப்படிச் செய்யவில்லை. ஒரு சமூக
எதிர்ப்பாக. சமூக கட்டுப்பெட்டித்தனத்தை கட்டுடைக்கும் முகமாக அதை
செய்தார்.

ஜெர்மனியில் இதுவொரு பெரிய விஷயமே இல்லை. நாங்கள் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு
செய்திருந்தோம். அதில் பரத நாட்டியம் முடிந்து, பெல்லி டான்ஸ்
ஆரம்பமானது. அதைச் செய்தவர் ஒரு ஜெர்மன் மாது. அவர் இதை பெல்லி டான்ஸ்
என்று சொல்லமாட்டார். அதை கீழத்திய நடனம் என்பார். அது இந்தியாவிலிருந்து
ஜிப்சி எனும் நரிக்குரவர்கள் கொண்டு சென்றது என்பது சரித்திரம்.
எல்லோரையும் ஆடச்சொன்னார். நாகப்பாம்பு போல் நெளியும் புன்னாக வராளி
இசையில் திடீரென்று நடுவில் பார்த்தால் ஒரு ஜெர்மன் முழு நிர்வாணமாக.
பலர் முதலில் கவனிக்கவில்லை. சரி! இப்ப என்ன செய்வது? நம்ம ஊராக
இருந்தால் பிடறியைப் பிடித்துத்தள்ள ரசா, பாசமாகியிருக்கும். ஒன்றும்
சொல்லாமல் பாடல் தொடர்ந்தது. நடனம் முடிந்தது. அவனும் பிறகு போய் உடை
மாட்டிக்கொண்டான். ஏதோ அவனுக்கு அப்படி ஆட வேண்டுமென்று
தோன்றியிருக்கிறது. ஆடினான். அதை ஜெர்மானியர்கள் சமாளித்தவிதம் அபாரம்,
முதிர்ந்த போக்கு.

கவன ஈர்ப்பு என்பது முக்கியம். உலகில் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.
மின்தமிழிலேயே கவனம் செலுத்த ஆயிரம் இழைகள் உள்ளன. நம் கவனம் வக்ரமான
விஷயங்களிலும், பிரச்சனைக்குரிய விஷயங்களிலும் இருந்தால். அதைப்பற்றியே
எண்ணி, அதைப்பற்றியே பேசுகிறோம். மனசு மாசுபடுகிறது.

ஏனிந்த நிலையென்று யோசிக்கிறேன்! இந்தக் கவன ஈர்ப்பு இங்கு
அவசியமில்லையென்று தோன்றுகிறது. (ஐயா சாமி, இது பொதுவான பேச்சு.
அண்ணாகண்ணனுக்கல்ல ;-)

க.>

இமலாதித்தன்

unread,
Dec 4, 2009, 1:46:02 AM12/4/09
to mint...@googlegroups.com
வணக்கம்
கண்ணன் அய்யா,

விழுமியம் என்பதன் சரியான பொருள் என்ன?





தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


2009/12/4 N. Kannan <navan...@gmail.com>
இக்கேள்வியை தமிழகச் சூழலில் இருந்து நேர்கொள்வதற்கும்
ஐரோப்பிய/அமெரிக்கச் சூழலில் இருந்து நேர் கொள்வதற்கும் நிறைய
வித்தியாசங்கள் உள்ளன.

தமிழகச் சூழலில் கூட ஆபிரகாமிய விழுமிய கருத்தாக்கத்தில் இல்லாமல், சங்க
காலத்தமிழ் கண்ணோட்டத்துடன் நோக்கும் போதும் நம் எதிர்கொள்ளல்
வித்தியாசப்படுகிறது.

மீண்டும் ஆசாரமான கண்ணோடத்துடனும், சுயமாக தரித்துக் கொண்டுள்ள 'தனித்த,
சுத்த' விழுமியங்களோடு எதிர்கொள்ளும் போதும் வித்தியாசப்படுகிறது.

மானுடவியல் நோக்கில் பார்த்தால் இவரை தமிழச்சி என்று சொல்ல முடியாத
ஐரோப்பிய முகவெட்டு. மீண்டும் கேள்வி எழுகிறது, 'யார் தமிழன்/தமிழச்சி?'
என்பதை எவ்வகை அலகுகளால் நிர்மாணிப்பது என்று?

கலை நோக்கில் பார்க்கும் போது கேமிரா செய்யும் செப்பிடி வித்தை
ஆச்சர்யமாக இருக்கிறது. இவரது படங்களைப் பார்த்தால் நேரில் பார்க்கும்
போது மிகச் சாதரணமாக இருக்கும் இவர்தானா உலக அழகி மாடல் போல் போஸ் தருவது
என்று இருக்கிறது.

பெண்ணின் உடல் என்பது யாருக்குச் சொந்தம் என்பதொரு பெரிய கேள்வி. இதுவரை
அது ஆணின் உடமையாக உள்ளது. பெரியார் விடுதலையில் பெண் உடல் விடுதலையும்
ஒன்று. அந்நோக்கில் இப்பெண் சொல்வது சரியென்று படுகிறது. அவர் உடல், அவர்
பாடு!

தமிழக சினிமாவை நாம் குடும்பத்தோடு பார்க்கிறோம். ஜெர்மன் விழுமியங்களை
வைத்துப் பார்த்தால் பல படங்கள், பாடல் காட்சியில் 'பெரியவர்க்கு
மட்டும்' எனும் சான்றிதழ் பெறும். ஜெர்மனியில் இருந்தால் இப்படங்கள்
சிறுவர்கள் நோக்க முடியாத பின்னிரவு ஒளிபரப்பாக அமையும் (செமி
போர்னோகிராஃபி வகை). ஆனால் குழந்தை குட்டிகளோடு நடு வீட்டில் உட்கார்ந்து
பார்க்கிறோம்.

உலகம் சுருங்கி எல்லா விழுமியங்களையும் சந்தைப் பொருளாதாரம் கபளீகரம்
செய்து வரும் காலக்கட்டத்தில் பல கேள்விகள் அர்த்தமற்றுப் போகின்றன.

கண்ணன்

2009/12/4 Vedaprakash <vedamved...@yahoo.com>:


butterfly

unread,
Dec 5, 2009, 2:16:19 PM12/5/09
to mint...@googlegroups.com
உண்மையில் நிர்வாணத்தைக் கண்டு மனிதன் அஞ்சுகிறான். அது, உண்ணக் கூடாத
உணவு என அவன் தனக்குத் தானே கருதுகிறான்

புறத்திலிருந்து திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பாக இருக்கும்
நிர்வாணத்திற்கு அழகு அதிகம். நிர்வாணத்தை இயல்பாக எடுத்துக்கொள்ளும்
சமூகமே முதிர்ந்த சமூகம்!//////////////////

இதை ஓஷோவும் பல முறை கூறியுள்ளார். அவரையும் புறம் தள்ளியதே இந்த சமூகம்.

N. Kannan

unread,
Dec 6, 2009, 5:59:28 AM12/6/09
to mint...@googlegroups.com
2009/12/4 இமலாதித்தன் <emalat...@gmail.com>:

> வணக்கம்
> கண்ணன் அய்யா,
>
> விழுமியம் என்பதன் சரியான பொருள் என்ன?
>

விழுமியம் எனும் சொல் Value என்பதைக் குறிக்கிறது.
அப்படித்தான் இதுவரை நான் கேட்டறிந்தது.

க.>

Hari Krishnan

unread,
Dec 6, 2009, 9:33:51 AM12/6/09
to mint...@googlegroups.com


2009/12/6 N. Kannan <navan...@gmail.com>
ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் நான்கூட இப்படித்தான், ‘இதென்ன விழுமியம்’ என்று பே முழி முழிச்சேன்.  நேசமுடன் வெங்கடேஷ்தான் இதை values என்று விளக்கினார்.  இந்தப் பொருள் அண்மைக் கால காய்னேஜ் போலிருக்கிறது.   எனக்கெல்லாம் விழுமம், விழுமியோர், விழுமியது என்றெல்லாம்தான் இந்தச் சொல்லின் வடிவங்கள் தெரியும்.  Excellence, superior, pre-eminent என்றெல்லாம் பொருள்தரும் சொல் இது.

பாரதி பாடறானே,  “.....தாய்த்திரு நாட்டின் பணிக்கெனப் பல்விதத் துழன்ற வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த விழுமியோர் திருப்பெயராணை” அப்படின்னு மாஜினியின் சபதத்தில் அங்க விழுமியோர் அப்படின்னா ரொம்ப பெரியவங்க, ப்ரீஎமினன்ட் என்றெல்லாம் பொருள் வரும்.  

விழுமம் என்றால், துயரம், துன்பம், கஷ்டம் என்றெல்லாமும் பொருள் வரும்.  பரசுராமனை வென்று, ராமன் அவனைத் திருப்பி அனுப்பியதும், தசரதனுடைய துன்பம் எல்லாம் போயிற்று.  கம்பன் சொல்கிறான்:

வெளிப்படும் உணர்வினன் விழும நீக்கியே...

துன்பம் எல்லாம் தீர்ந்து முன்னே அழிந்துபோயிருந்த அறிவு மீண்டும் தோன்றும்படியாக தசரதன் நின்றான் என்பது பொருள்.  அங்கே மட்டுமில்லை, 

உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது 
துன்பம் நீங்கித் துயர்க் கடல் ஒழிக என 
விஞ்சையின் பெயர்த்து விழுமம் தீர்த்த 
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக என

இந்த இடத்திலும் விழுமம் என்றால் துன்பம்தான்.

இந்த excellence என்ற பொருளில் பயன்படும் விழுமம் என்ற சொல்லைக் கொஞ்சம் மாற்றி, விழுமியம் ஆக்கி, வேல்யூவுக்குச் சூட்டியிருக்கிறார்கள்.  ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாடுதான்.  என்ன ஒண்ணு..... என்ன மாதிரி மரபில் ஊறின மண்டையர்களுக்கெல்லாம் புரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது.  புரிந்துகொண்டபின் அல்லாம் சுலப்ஸ்தான்.  

srirangammohanarangan v

unread,
Dec 6, 2009, 10:03:51 AM12/6/09
to mint...@googlegroups.com
கஷ்டப்பட்டு    values   என்பதற்கு   விழுமியம்  என்று  கண்டுபிடிக்கத்  தேவையில்லை.   ஏற்கனவே     சொல்  இருக்கிறது.     திருவள்ளுவர்  
 
ஒழுக்கம்  விழுப்பம்  தரலான்    ஒழுக்கம்
உயிரினும்  ஓம்பப்  படும்     (௧௩௧) 
 
என்னும்  குறளில்     விழுப்பத்திற்குத்  தரும்  பொருளே    values  என்பதுதான்.    பரிமெலழகர்  உரை  அதைத்  தெற்றென விளக்குகிறது.    ”உயிர்  எல்லாப்   பொருளினும்  சிரந்ததாயினும்   ஒழுக்கம்  போல்  விழுப்பம்  தராமையின்,   ’உயிரினும்    ஓம்பப்படும்’    என்றார்.”
 
அதாவது    life   is  the  basic  coommon   value;   but   that  which  adds   value   to  the  life  is  conduct;   hence  conduct  is  deemed    superior    to  the   life   (english trn  mine)       இங்கு   தெளிவாக   விழுப்பம்  என்பது    வால்யூஸ்    என்ற  பொருளில்  ஆளப்பட்டு  அப்படியே    உரையும்  கண்டிருக்கிற்து.     மரபை    அறியாமல்     சொற்களை    உண்டாக்க  முடியாது.
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
 
On 12/6/09, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

N. Kannan

unread,
Dec 6, 2009, 6:10:11 PM12/6/09
to mint...@googlegroups.com
ரங்கன், ஹரிகி:

உங்கள் இருவருக்கும் நன்றி. Value என்பதை `விழுப்பம்` என்றே சொல்லலாம்
என்பது ஒரு பரிந்துரை. நான் சமகால இலக்கியத்தின் மூலமாகவே தமிழுக்குள்
வருகிறேன். எனவே விழுமியம் என்ற பயன்பாடு. எப்படி புதிய, புதிய சொற்கள்
தமிழுக்குள் நுழைகின்றன என்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. விடுதலை என்ற
சொல் பாரதிக்கு முன் கிடையாது என்பார்கள். ஒருமுறை வ.செ.கு அவர்களுடன்
பேசிக்கொண்டிருந்த போது இந்த ‘மற்றும்’ போட்டுப் பேசுவது அண்ணாவிற்குப்
பிறகு வந்தது என்றார். அதற்கு முன்னால் முத்துக்கண்ணப்பனார் விளக்கியபடி,
‘கண்ணனும், ராமனும்’ கோவிந்தனும், என்றுதான் எழுதி வந்தனர்.
அண்ணாவிற்குப் பிறகு கண்ணன், கோவிந்தன் மற்றும் ராமன் வந்தனர் என்று எழுத
ஆரம்பித்தனர். (அதாவது ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதும் போது and
எனும் சொல்லிற்கு தமிழ் தேவைப்படுகிறது. மின்தமிழில் அவ்வப்போது வரும்
மொழிபெயர்ப்பு உதவி சுட்டுவது நாம் இயல்பான தமிழிலிருந்து மெல்ல, மெல்ல
விலகிப்போகிறோம் என்பதே). இப்போது தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள்
புதுவகையான தமிழில் பேசுகின்றனர். நமது பள்ளியில் தமிழ் மொழியின் தரம்
எந்நிலையில் உள்ளது என்பதும் இன்னொரு காரணமாகும்.

மொழி என்பது ஆற்று நீரோட்டம் போல் வேகமும், சுழியும், ஆழமும் கொண்டு
ஓடுகிறது. ’நற்றமிழ்’ இழை போல் ஓரிழை எப்போதும் ஓடிக்கொண்டு இருக்க
வேண்டியதின் அவசியம் புரிகிறது.

கண்ணன்

2009/12/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>:


> கஷ்டப்பட்டு    values   என்பதற்கு   விழுமியம்  என்று  கண்டுபிடிக்கத்

> தேவையில்லை.   ஏற்கனவே     சொல்  இருக்கிறது.  விழுப்பத்திற்குத்  தரும்  பொருளே    values

விஜயராகவன்

unread,
Dec 6, 2009, 6:22:42 PM12/6/09
to மின்தமிழ்
இதைப்போல் தான் இன்னொரு வார்த்தை ஆளுமை. ஆளுமை என்றால் ஆட்சி, அதிகாரம்
சம்பந்தம் என நினைத்தேன். இப்போது பெர்சனாலிடி என்ற அர்த்தத்தில்
வருகின்றது


விஜயராகவன்


On 6 Dec, 23:10, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ரங்கன், ஹரிகி:
>
> உங்கள் இருவருக்கும் நன்றி. Value என்பதை `விழுப்பம்` என்றே சொல்லலாம்
> என்பது ஒரு பரிந்துரை. நான் சமகால இலக்கியத்தின் மூலமாகவே தமிழுக்குள்
> வருகிறேன். எனவே விழுமியம் என்ற பயன்பாடு. எப்படி புதிய, புதிய சொற்கள்
> தமிழுக்குள் நுழைகின்றன என்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. விடுதலை என்ற
> சொல் பாரதிக்கு முன் கிடையாது என்பார்கள். ஒருமுறை வ.செ.கு அவர்களுடன்
> பேசிக்கொண்டிருந்த போது இந்த ‘மற்றும்’ போட்டுப் பேசுவது அண்ணாவிற்குப்
> பிறகு வந்தது என்றார். அதற்கு முன்னால் முத்துக்கண்ணப்பனார் விளக்கியபடி,
> ‘கண்ணனும், ராமனும்’ கோவிந்தனும், என்றுதான் எழுதி வந்தனர்.
> அண்ணாவிற்குப் பிறகு கண்ணன், கோவிந்தன் மற்றும் ராமன் வந்தனர் என்று எழுத
> ஆரம்பித்தனர். (அதாவது ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதும் போது and
> எனும் சொல்லிற்கு தமிழ் தேவைப்படுகிறது. மின்தமிழில் அவ்வப்போது வரும்
> மொழிபெயர்ப்பு உதவி சுட்டுவது நாம் இயல்பான தமிழிலிருந்து மெல்ல, மெல்ல
> விலகிப்போகிறோம் என்பதே). இப்போது தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள்
> புதுவகையான தமிழில் பேசுகின்றனர். நமது பள்ளியில் தமிழ் மொழியின் தரம்
> எந்நிலையில் உள்ளது என்பதும் இன்னொரு காரணமாகும்.
>
> மொழி என்பது ஆற்று நீரோட்டம் போல் வேகமும், சுழியும், ஆழமும் கொண்டு
> ஓடுகிறது. ’நற்றமிழ்’ இழை போல் ஓரிழை எப்போதும் ஓடிக்கொண்டு இருக்க
> வேண்டியதின் அவசியம் புரிகிறது.
>
> கண்ணன்
>

> 2009/12/7 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:


>
>
>
> > கஷ்டப்பட்டு    values   என்பதற்கு   விழுமியம்  என்று  கண்டுபிடிக்கத்
> > தேவையில்லை.   ஏற்கனவே     சொல்  இருக்கிறது.  விழுப்பத்திற்குத்  தரும்  பொருளே    values

> > என்பதுதான்.- Hide quoted text -
>
> - Show quoted text -

இமலாதித்தன்

unread,
Dec 6, 2009, 8:57:16 AM12/6/09
to mint...@googlegroups.com
நன்றி அய்யா.






தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


2009/12/6 N. Kannan <navan...@gmail.com>

இமலாதித்தன்

unread,
Dec 6, 2009, 9:54:48 AM12/6/09
to mint...@googlegroups.com
நன்றி ஹரிகி அய்யா..

என்னை கவர்ந்த விழுமியோர் பட்டியலில் நீங்களும் இருக்கீங்க...
(விழுமியோர் - ரொம்ப பெரியவங்க, ப்ரீஎமினன்ட் என்ற பொருளில்)
என் விழுமம் நீக்கியதற்கும் நன்றி.
(விழுமம் - கவலை/குழப்பம் என்ற பொருளில் )





தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


2009/12/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

Vedaprakash

unread,
Dec 6, 2009, 5:46:40 PM12/6/09
to மின்தமிழ்
அந்த புகைபடத்தைக் கொஞ்சம் எங்களுக்கும் காட்டுங்களேன்!

On Dec 6, 12:27 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/12/6 Annakannan <annakan...@gmail.com>:

karthi

unread,
Dec 6, 2009, 9:08:48 PM12/6/09
to mint...@googlegroups.com
அதுவே. நானும் இப்படி அழகாக ஒலிக்கின்ற புதிய சொற்களை ஏற்றுக் கொள்வதை
என் "விழுமியமாக" கொண்டிருக்கிறேன்.
 
அண்மையில் சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் "குவியம்" எனத் தன் நாவலுக்குத்
தலைப்பிட்டுள்ளார். "குவிமையம்" என்பது இடை குறுகி "குவியம்" ஆகியிருக்கலாம்
என்கிறார் முன்னுரை எழுதியுள்ள பாவண்ணன். அப்போ இனி ஃபோக்கசுக்கு "குவியம்"
வச்சுக்கிடலாமா, ஹரி?
 
ரெ.கா.

karthi

unread,
Dec 6, 2009, 9:20:33 PM12/6/09
to mint...@googlegroups.com
கண்ணன்,

உங்களோடு ஒத்துப் போகிறேன். என்னவெனில் சிலர் சில ஆங்கிலச்
சொற்களுக்கு தமிழ் என்ன என்ற கேள்வியை இணையத்தில் போடுகிறார்கள்.
யார் என்ன சொல் சொன்னாலும் இன்னொருவர் அதில் குறை கண்டு
பிடிப்பார். சிலர் தமிழின் வேருக்கே போய் புதைந்து போன சொற்களைப்
பிடுங்கி எடுத்து அதனை நவீனத் தமிழுக்கு ந்டுவில் வைக்கிறார்கள்.
இந்த விவாத அமளியில் இறுதியில் ஒரு சொல்லும் உருவாவதில்லை.

சிலர் யாரையும் கேட்காமல் தங்களுக்குத் தோன்றியதை தைரியமாகப்
பயன்படுத்தி விடுகிறார்கள். அது பிடித்துக் கொள்ளுகிறது.

விழுமியம் அப்படித்தான் வந்திருக்க வேண்டும்.

ரெ.கா.

----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Monday, December 07, 2009 7:10 AM
Subject: [MinTamil] Re: தமிழச்சி கலக்குகிறாள்!

devoo

unread,
Dec 6, 2009, 9:37:10 PM12/6/09
to மின்தமிழ்
Dec 7, 7:20 am, "karthi"
//சிலர் யாரையும் கேட்காமல் தங்களுக்குத் தோன்றியதை தைரியமாகப்

பயன்படுத்தி விடுகிறார்கள். அது பிடித்துக் கொள்ளுகிறது.
விழுமியம் அப்படித்தான் வந்திருக்க வேண்டும்//

அஞ்சி ஆராய்ந்து அழகான ஒரு சொல்லைத் தேர்வு செய்தால் துவைத்துக்
காயப்போட்டு விடுவார்கள்; அபிஜித் முஹூர்த்தத்தில், கிடைத்த சொல்லைப்
புழக்கத்தில் விட்டால் சிக்கென்று பிடித்துக் கொள்ளும், ஏன் எதற்கு என்று
யாரும் ஆராய மாட்டார்கள்.
இப்படிப் புழக்கத்தில் வந்தவை பல.

அபிஜித் முஹூர்த்தம் எது என்பதைச் சோதிட வல்லுநர்களே அறிவர்.

தேவ்

Innamburan Innamburan

unread,
Dec 6, 2009, 9:45:51 PM12/6/09
to mint...@googlegroups.com
"
சிலர் யாரையும் கேட்காமல் தங்களுக்குத் தோன்றியதை தைரியமாகப்
பயன்படுத்தி விடுகிறார்கள். அது பிடித்துக் கொள்ளுகிறது.

விழுமியம் அப்படித்தான் வந்திருக்க வேண்டும்."

நானும் அவ்வாறு தான் நினைக்கிறேன்; அப்படிப்பட்ட வரவையும் நிராகரிப்பதில்லை.
இன்னம்பூரான்
2009/12/7 devoo <rde...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 6, 2009, 10:00:31 PM12/6/09
to mint...@googlegroups.com


2009/12/7 karthi <karth...@gmail.com>

அதுவே. நானும் இப்படி அழகாக ஒலிக்கின்ற புதிய சொற்களை ஏற்றுக் கொள்வதை
என் "விழுமியமாக" கொண்டிருக்கிறேன்.
 
அண்மையில் சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் "குவியம்" எனத் தன் நாவலுக்குத்
தலைப்பிட்டுள்ளார். "குவிமையம்" என்பது இடை குறுகி "குவியம்" ஆகியிருக்கலாம்
என்கிறார் முன்னுரை எழுதியுள்ள பாவண்ணன். அப்போ இனி ஃபோக்கசுக்கு "குவியம்"
வச்சுக்கிடலாமா, ஹரி?
 
ரெ.கா

என்னா தலைவரே இப்படிக் காலை வாரறீங்க!

இனி என்ன இனி?  குவியம் என்ற சொல்லை எத்தனை வருஷமா நான் பயன்படுத்தி வந்திருக்கிறேன்!  அனுமன் வார்ப்பும் வனப்பும் புத்தகத்தில் ராமனைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு அவ்வப்போது வரும்.  அதிலொன்றில் இப்படி எழுதியிருந்தேன்:

<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>
இராமனை ஒருவிதமான இரட்டைக் குவியத்தில் (double focus) வைத்துக் காட்டுகிறான் கம்பன்.  எல்லா வகையிலும் தன்னை மனிதனாக மட்டுமே உணர்ந்த இராமன் ஒரு குவி மையத்திலும்; அவனை மனிதனாகவும் மனித ஆற்றலை மீறியவனாகவும் உணரும் மக்கள் அவனைப் பார்த்தவிதமும்; தெய்வத்தன்மை வாய்ந்தவனாக அறிந்திருந்து அதை வெளிக்காட்ட இயலாத நிலையில் நின்ற வெகு சிலர் அவனைப் பார்த்த விதம் இன்னொரு குவி மையத்திலுமாக ஒரு சிக்கலான சித்திரத்தை வெகு திறமையாகப் பகுத்துப் பகுத்துக் காட்டுகிறான்.  இராமனின் தெய்வத்தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.
<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>*<><>

குவியம், குவிமையம், குவிப்புள்ளி என்று பலவிதங்களில் பயன்படுத்தியாயிற்று.  வருஷக்கணக்காக.  

Hari Krishnan

unread,
Dec 6, 2009, 10:07:36 PM12/6/09
to mint...@googlegroups.com


2009/12/7 N. Kannan <navan...@gmail.com>

ரங்கன், ஹரிகி:

உங்கள் இருவருக்கும் நன்றி. Value என்பதை `விழுப்பம்` என்றே சொல்லலாம்
என்பது ஒரு பரிந்துரை. நான் சமகால இலக்கியத்தின் மூலமாகவே தமிழுக்குள்
வருகிறேன். எனவே விழுமியம் என்ற பயன்பாடு. எப்படி புதிய, புதிய சொற்கள்
தமிழுக்குள் நுழைகின்றன என்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. விடுதலை என்ற
சொல் பாரதிக்கு முன் கிடையாது என்பார்கள். ஒருமுறை வ.செ.கு அவர்களுடன்
பேசிக்கொண்டிருந்த போது இந்த ‘மற்றும்’ போட்டுப் பேசுவது அண்ணாவிற்குப்
பிறகு வந்தது என்றார். அதற்கு முன்னால் முத்துக்கண்ணப்பனார் விளக்கியபடி,
‘கண்ணனும், ராமனும்’ கோவிந்தனும், என்றுதான் எழுதி வந்தனர்.
அண்ணாவிற்குப் பிறகு கண்ணன், கோவிந்தன் மற்றும் ராமன் வந்தனர் என்று எழுத
ஆரம்பித்தனர். (அதாவது ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதும் போது and
எனும் சொல்லிற்கு தமிழ் தேவைப்படுகிறது.


தோ பார்ரா....அங்க ரெகா காலை வாரினா இங்க நாகா காலை வாருகிறார்!  தலைவரே, மின் தமிழில் சேந்த புதுசுல நான் எழுதின விஷயமே இந்த ‘மற்றும்’ போடறதுக்கு ஒரு முற்றும் போடறதைப் பத்திதான்.  உங்களுக்காக மறுஒலிபரப்பு இங்கே: 



 

2008/10/16 karth...@gmail.com <karth...@gmail.com>

ஹரி,

வணக்கம். உங்களை இங்கு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி

.
 
வணக்கம் ரெகா.  அடுத்த் ஆட்டத்தில் கார்த்திகை ஈசன் என்று உங்களை வம்புக்கிழுப்பதாகத்தான் இருந்தேன்.  இளங்கோவன் என்பதும் இரண்டு பெயர்கள் கூடி ஒன்றான ஒருசொல்தானே!
 

 

1) இந்த சொற்களுக்கிடையில் இடம் விட்டு எழுதுவதற்கு
இலக்கணம் ஏதும் உண்டா? இப்போதைய அச்சுப் பிரதிகளில்
பெரும் குழப்பம் இருக்கும்  போலத் தெரிகிறதே!
 

 
எது முழுச் சொல், எது தொகையால் உருவான சொல் என்பது பற்றிய தெளிவு தற்போதைய தமிழ்ப் பத்திரிகையாளர் யாருக்குமே இல்லை என்பது வருத்தத்துக்கு உரிய ஒன்று.  இதை ஏதோ போகிற போக்கில் சகட்டுமேனிக்கு அடித்துவிடவில்லை.  தமிழில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா வெளிவந்த போது அதன் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவன்; விகடன் அலுவலகத்தில் உள்ள பலநிலை ஆசிரியர்களுடன் ஒன்றரையாண்டுகள் பழகியவன் என்ற விதத்தில் இதைச் சொல்கிறேன்.  
 
ஆங்கிலத்தின் தாக்கத்தால் தமிழைப் போட்டுத் துவைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  உதாரணத்துக்கு இந்த 'மற்றும்'.  ஆங்கிலத்தில் எங்கெல்லாம் and வருகிறதோ அங்கெல்லாம் மற்றும் போட்டுவிடுகிறார்கள்.  A list ends with and என்பது ஆங்கிலத்துக்கு மட்டுமே பொருந்தும் விதி.  தமிழில் அப்படி ஒரு வழக்கம் இல்லை.  எனவே, குறைந்தபட்சம் இந்தத் தமிழ் என்சைக்ளோபீடியாவிலாவது 'மற்றும்' இல்லாமல் எழுதுங்கள் என்று முதல்நாள் அறிமுக உரையின்போது குறிப்பிட்டேன்.  உடனே ஆட்சேபணைக் குரல்கள்.  'அது எப்படி சார் வரும்?  ஒரு மற்றும் கூடவா இல்லாம எழுத முடியும்' என்றெல்லாம்  (வன்ட்டானுவ பாரு.. .இவனயெல்லாம் தூக்கி இந்த எடத்துல வச்சா இப்படித்தான்.. தொனியில்..) எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
 
நிதானமாக சஷ்டி கவசத்தைச் சொல்லத் தொடங்கினேன்.  'ஆறுமுகமும் அணிமுடியாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும், பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும், நன்னெறி நெற்றியில் நவமணிசுட்டியும்' என்று அது ஒரு மிகப் பெரிய லிஸ்ட்.  சொல்லி முடிக்கும் தறுவாயில் (அந்தப் பட்டியலை முடிக்கும் தறுவாயில்) 'ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் மற்றும் பதக்கமும் தரித்து' என்றா எழுதியிருக்கிறது என்று கேட்டேன்.
 
பிறகு இது எண்ணும்மை பயிலும் இடம்.  உம்மைத் தொகை (ம் ம் என்று முடியாமல், தொக்கி நிற்பது) லிஸ்ட் ஒன்று உண்டு என்று பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியை சபைக்கு அழைத்துவரச் சொன்னது பற்றி ஜகத்தில் ஏற்பட்ட அதர்மக் குழப்பம் என்று பாரதி எழுதியிருக்கும் நீண்ட லி்ஸ்ட். 'தருமம் அழிவெய்த, சத்தியமும் பொய்யாக, பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக' என்று தொடங்கி மிக நீளமான பட்டியல் அது.  தருமம் அழிவெய்தவும், சத்தியம் பொய் ஆகவும் என்று வந்திருக்க வேண்டியது.  உம் கெட்ட காரணத்தால் உம்மைத் தொகை.  'குறைந்த பட்சம் இங்கேயாவது, 'ஆக்கம் தானாவாள், அழிவு நிலையாவாள், மற்றும் போக்கு வரவெய்தும் புதுமையெல்லாம் தானாவாள்' என்று இருக்கிறதா' எனக்கேட்டேன்.  பிறகு சிலப்பதிகார மேற்கோள்.  உறைந்துபோய் அமர்ந்துவிட்டார்கள்.  'சார் நீங்க மொதல்லியே எங்க டீமுக்கு வந்திருக்கணும்' என்று அவர்களுடைய அட்டிட்யூட் மொத்தமும் மாறிப் போனது.
 
எதற்குச் சொன்னேன் என்றால், தமிழ்ப் பயிற்சி சற்றும் இல்லாதவர்கள் மொழிபெயர்ப்புக்கு (அதுவும் என்சைக்ளோ மாதிரியான என்ட்ரிக்கு என்ட்ரி சப்ஜெக்ட் மாறக்கூடிய தலைப்புகளுக்கு) மொழிபெயர்க்கிறேன் என்று வந்துவிடுகிறார்கள். பத்திரிகைகாரர்களுக்கும் அவ்வளவு தரம்தான் கிடைக்கிறது.
 
இது ஒரு பக்கம்.  இன்னொரு பக்கத்தில் 'எது முழுச்சொல், ஸ்பேஸ் விடவேண்டும், எது தனித்தனியாக அல்லது எது சேர்த்து எழுதப்படவேண்டும்' என்பது பற்றியான தெளிவு இல்லை.  இந்தப் பத்தியில் நான் எழுதியிருப்பதையே பாருங்கள்.  எழுதவேண்டும், விடவேண்டும் என்பன சேர்த்து.  எனக்கு வேண்டும் என்று வந்தால் பிரித்து.  எழுதவேண்டும், விடவேண்டும் என்பனவற்றில் வேண்டும் is associated with its verb and therfore gives the sense 'need to or have to'.  இரண்டாவது இடத்தில் (எனக்கு வேண்டும்) want என்ற பொருள் தருவது.  பிரித்து எழுதவேண்டும்.  'அப்படிச் செய்தால்தான் கெட்டுப் போகமலிருக்கலாம்' என்ற தொடரில், 'செய்தால்தான்' என்பதைச் சேர்த்து எழுதினால், 'தான்' என்ற emphasis remains bound to its verb.  இதையே 'அப்படிச் செய்தால் தான் கெட்டுப்போகாமலிருக்கலாம்' என்று பிரித்தால், 'அதுபோல் செய்தால் 'தான்' (that is the first person noun) கெட்டுப் போகமலிருக்கலாம்' என்ற பொருள் வரும்.  ஆகவே ஸ்பேஸ் விடுவதைப் பற்றிய அடிப்படை உணர்வு மிக அவசியமானது.

நாம் ஒரு நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்புவரை கவிதையாகவே எழுதிக் கொண்டிருந்தோம்.  இரண்டு விரற்கடை அளவு அகலமுள்ள ஓலைச்சுவடியில் அதிகமான விஷயத்தைத் திணிக்கக் கவிதையால் முடிந்தது.  கவிதையில் சீர் பிரிப்பது யாப்பிலக்கணத்தின் கட்டுக்கு உட்பட்டது.  ஆகவே we really were never conscious about where to split a word while writing.  பிறகு உரைநடை வந்தது.  (கல்வெட்டு உரைநடையெல்லாம் இந்தக் கணக்குக்கு உதவாது.  செதுக்கிய சிற்பி தப்புத் தப்பாக ஸ்பெல்லிங் போட்டுவிடுவான்.  அதுவும் மாற்றம் பெறாமல் அப்படியே இடம்பெற்றுவிடும்.  கம்பராமாயணத்தில் தசரதன் உடலை எரியூட்டிய படலத்துக்கு பள்ளிபடைப் படலம் என்று பெயர்.  கல்வெட்டில் பள்ளிப்படை என்று இருக்கிறது.  இலக்கணப்படி பள்ளிபடை என்று இருக்க வேண்டும்.  வைமுகோ இரண்டு வடிவங்களையும் ஏற்றுக் கொள்ளகிறார்.  இதில் என்ன வேடிக்கை ஆகிவிட்டது என்றால், ப்ப என்ற இரண்டு எழுத்துகளையும் சேர்த்து கூட்டெழுத்தாக எழுதுவார்கள்.  கிட்டத்தட்ட ய மாதிரி இருக்கும்.  ஓலைச்சுவடியில் புள்ளி வைக்க மாட்டார்கள் (பொத்துக் கொள்ளும் என்பதனால்).  பள்ளிப்படை படலம் பள்ளியடைப் படலமாகி விட்டது.

இது பழைய கதை.  தவறுகள் நடந்த விதம்.  இப்போதைய அச்சு வாகனத்தின் டிமான்ட் வேறு விதமாக இருக்கிறது.  நாம் சொற்களைச் சேர்த்தெழுதினால் (இதே சொல்லை பாரதியின் manuscriptல் பார்த்தால் 'சேர்த் தெழுதினால்' என்று எழுதியிருப்பான்) சொல் நீளமாகப் போய்விடுகிறது.  Word wrap இருப்பதனால் column அகலத்துக்குள் அவ்வளவு நீளமான சொல்லை அமுக்க முடிவதி்ல்லை.  ஆகவே தோன்றிய இடங்களிலெல்லாம் தோன்றிய படி பிரிக்கிறார்கள்.  'இவ்வாறிருந்திருக்கலாம்' என்றோ 'இவ்வா றிருந்திருக்கலாம்' என்றோ எழுத நம் இலக்கணம் இடம் தருகிறது.  இப்படி எழுதினால் மக்களுக்குப் புரியாது என்று ஒரு தியரி வைத்திருக்கிறார்கள்.  'இவ்வாறு இருந்து இருக்கலாம்' என்று பிரித்துப் பிரித்து எழுதுகிறார்கள்.  ('இருந்து' என்றால் மலம் கழித்து என்றுவேறு பொருளிருக்கிறது.  'இருந்து இருந்தால்' என்ன அர்த்தம் வரும்!)

ஆகவே, அச்சு சௌகரியத்துக்காக அவர்கள் கண்டபடி பிரிக்கிறார்கள்.  அதற்கும் மேல், அடிப்படை இலக்கண அறிவு இல்லாதவர்கள் எழுதுகிறார்கள்.  அந்த+அளவு அந்த அளவுதான்  அந்தளவு, இந்தளவு என்று புணராது; அந்த+ஆண்டு அந்த ஆண்டுதான்.  அந்தாண்டு, இந்தாண்டு என்று புணராது.  ஜூனியர் விகடனைப் பாருங்கள்.  இப்படித்தான் எழுதுகிறார்கள்.

இன்னொரு வகை இருக்கிறது.  நான் அங்கே பணியாற்றிய ஒன்றரை வருடங்களும் தலைதலையாய் அடித்துக் கொண்டு இன்னமும் திருத்த முடியாத விஷயம்.  எங்கெல்லாம் பெண் வருகிறதோ அங்கெல்லாம் 'பெண்' என்று சொல்லியே ஆகவேண்டும்.  பெண் கவிஞர், கவிதாயினி என்றெல்லாம் சொதப்புகிறார்கள்.  கவிஞர், அமைச்சர் எல்லாம் genderless nouns என்ற அடிப்படை இலக்கணம் தெரிந்தால்தானே!  கவிஞருக்குப் பெண்பால் கவிதாயினி என்றால், அமைச்சருக்குப் பெண்பால் என்ன?  ஏன் ஜெயலலிதாவை முதமைச்சாயினி என்று சொல்லிவில்லை!  பத்திரிகையாளர்கள் யோசிக்கவில்லை.  யோசிக்கச் சொல்பவன் 'பண்டிதன்.  அவனுக்கு இலக்கண சொறி பிடித்திருக்கிறது.'

அதைவிடவும் பெரிய ஜோக் என்னவன்றால் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகளைப் பாருங்கள்.  'பெண் ரசிகைகள்', 'பெண் சிநேகிதிகள்' என்று எழுதுகிறார்கள்.  ரசிகையும் சிநேகிதியும் பெண்ணாக இல்லாமல் பின்ன ஆணாகவா இருக்க முடியும்!  இதையும் சொல்லிப் பார்த்துவிட்டடேன்.  பயன்தான் இல்லை. 

இதெல்லாம் பிரச்சினையின் மிகச் சிறிய பகுதிதான் ரெகா. இன்னும் நிறைய இருக்கின்றன. பேசலாம். 


 

2) "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடலின் இலக்கண வழு பற்றிப்
பெரிதும் பேசப் பட்டிருக்கிறதல்லவா? இது ஆங்கில இலக்கணத்தைச்
சார்ந்த every = singular என்னும் விதிதானே? தமிழில் இப்படி
விதி இருக்கிறதா?
("பூக்களுமே, சொல்கிறதே" என்பதில் உள்ள பிழை தெளிவாக
இருக்கிறது. அதை விடுங்கள்.)

ஒவ்வொரு என்பது ஆங்கிலத்தில் every, அல்லது each and every என்ற ஒருமையைத்தான் குறிக்கிறது.  ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே என்பதுதான் இலக்கணப்படி சரி.  எளிய, அன்றாட இலக்கணத்தைச் சொல்கிறேன்.  யாருக்குமே புரியாது என்று கற்பனை செய்யப்படுகிறதே அதை இல்லை.

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது.  இப்படிப் பிழைபட எழுதினால், I are always correct, you is not correct.  They speaks good English என்று ஆங்கிலத்தில் எழுதிவிடலாம்.  சொல்லப்போனால், They பன்மை, speaks என்ற பன்மைதானே அதைத் தொடரவேண்டும்! :-)))

 

N. Kannan

unread,
Dec 7, 2009, 12:50:56 AM12/7/09
to mint...@googlegroups.com
2009/12/7 Vedaprakash <vedamved...@yahoo.com>:

> அந்த புகைபடத்தைக் கொஞ்சம் எங்களுக்கும் காட்டுங்களேன்!
>


நான் எங்கு போவது இப்போது?

எங்கு பார்த்தேன்?

பாரிசில் நண்பர் புஸ்பராஜா வீட்டில்?
பெர்லினில் சுசீந்தரன் வீட்டில்?

ஞாபகம் இல்லை நண்பரே.
ஆனைமுத்து பதிப்பில் இருக்கிறதா? என்று தெரியவில்லை.

பெரிதாக என்ன? பெரியார் இன்னும் சில கிழங்களுடன் அம்மணமாக நிற்கிறார். அவ்வளவுதான்.
ரசிக்கும் படி ஒன்றுமில்லை. அது வெறும் convention க்கு ஒரு எதிர்ப்புத்தானே?

க.>

karthi

unread,
Dec 7, 2009, 1:44:39 AM12/7/09
to mint...@googlegroups.com
அப்ப பெரிதாக ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறீர்கள்.
நீங்கள் சொன்னால் சரி!

ரெ.கா.

----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Monday, December 07, 2009 1:50 PM
Subject: [MinTamil] Re: தமிழச்சி கலக்குகிறாள்!

N. Kannan

unread,
Dec 7, 2009, 1:51:33 AM12/7/09
to mint...@googlegroups.com
ஹ..ஹா!

ரெ.கா. ஏதோ ஆடை இருப்பதால்தான் ஒளிச்சு மறைச்சு கல்யாணம் கார்த்திகை ஆகிறது.
இவங்க சொல்ற டெக்னில்லாம் ஒண்ணும் ஒத்துவராது.
சிலருக்குத்தான் நிர்வாணம் அழகு. எல்லோருக்குமில்லை ;-)
அந்த வகையில் அந்தப் பெண் கொடுத்து வைத்தவள் (அவள் பெயர் என்ன? ஏதோ ஒண்ணு!)

க.>

2009/12/7 karthi <karth...@gmail.com>:

karthi

unread,
Dec 7, 2009, 1:58:06 AM12/7/09
to mint...@googlegroups.com
சொல்லின் செல்வரே!
 
நீங்கள் சொன்னால் மறுபேச்சு ஏது?
எதோ "மை" போட்டால் அழகாகத் தெரிகிறதே என நான்
இது நாள் வரை மை போட்டுக் கொண்டிருந்தேன். இனி
இந்த மை போட்டுப் பார்க்கும் வேலையை விட்டுவிடுகின்றேன்.
யாராவது கேட்டால் "ஹரி இருக்கிறார் அத்தாரிட்டி! நீர் யாரையா மத்தாரிட்டி"
என்று மடக்கி விடுகிறேன். எல்லாம் உங்கள் உபயமே.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Monday, December 07, 2009 11:00 AM
Subject: [MinTamil] Re: தமிழச்சி கலக்குகிறாள்!



விஜயராகவன்

unread,
Dec 7, 2009, 4:09:38 AM12/7/09
to மின்தமிழ்
On 7 Dec, 05:50, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> பெரிதாக என்ன? பெரியார் இன்னும் சில கிழங்களுடன் அம்மணமாக நிற்கிறார். அவ்வளவுதான்.
> ரசிக்கும் படி ஒன்றுமில்லை. அது வெறும் convention க்கு ஒரு எதிர்ப்புத்தானே?
>
> க.>

It is not. In a nudist's colony, the convention is nudity. E.V.R was a
smart guy. He knew the conevntions of the place and chose the
conventions and places he liked. A kind of moral oppurtunism.

Vijayaraghavan

விஜயராகவன்

unread,
Dec 7, 2009, 4:29:52 AM12/7/09
to மின்தமிழ்
Excellent piece HariKi.

Generally, most people who criticise written Tamil don't focus on
grammer, but only on vocabulary. Even on vocabulary, whether it is
'pure Tamil' or not. So, this diverts all our attention to less
essential aspects of written Tamil.


Vijayaraghavan


On 7 Dec, 03:07, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/12/7 N. Kannan <navannak...@gmail.com>


>
> > ரங்கன், ஹரிகி:
>
> > உங்கள் இருவருக்கும் நன்றி. Value என்பதை `விழுப்பம்` என்றே சொல்லலாம்
> > என்பது ஒரு பரிந்துரை. நான் சமகால இலக்கியத்தின் மூலமாகவே தமிழுக்குள்
> > வருகிறேன். எனவே விழுமியம் என்ற பயன்பாடு. எப்படி புதிய, புதிய சொற்கள்
> > தமிழுக்குள் நுழைகின்றன என்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. விடுதலை என்ற
> > சொல் பாரதிக்கு முன் கிடையாது என்பார்கள். ஒருமுறை வ.செ.கு அவர்களுடன்
> > பேசிக்கொண்டிருந்த போது இந்த ‘மற்றும்’ போட்டுப் பேசுவது அண்ணாவிற்குப்
> > பிறகு வந்தது என்றார். அதற்கு முன்னால் முத்துக்கண்ணப்பனார் விளக்கியபடி,
> > ‘கண்ணனும், ராமனும்’ கோவிந்தனும், என்றுதான் எழுதி வந்தனர்.
> > அண்ணாவிற்குப் பிறகு கண்ணன், கோவிந்தன் மற்றும் ராமன் வந்தனர் என்று எழுத
> > ஆரம்பித்தனர். (அதாவது ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதும் போது and
> > எனும் சொல்லிற்கு தமிழ் தேவைப்படுகிறது.
>
> தோ பார்ரா....அங்க ரெகா காலை வாரினா இங்க நாகா காலை வாருகிறார்!  தலைவரே, மின்
> தமிழில் சேந்த புதுசுல நான் எழுதின விஷயமே இந்த ‘மற்றும்’ போடறதுக்கு ஒரு
> முற்றும் போடறதைப் பத்திதான்.  உங்களுக்காக மறுஒலிபரப்பு இங்கே:
>

> > 2008/10/16 karthige...@gmail.com <karthige...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 7, 2009, 12:47:10 PM12/7/09
to mint...@googlegroups.com
பெரிதாக  ஒண்ணுமே  இல்லை  என்பதை விளக்குகிறது
 
நிர்வாணம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
7-12-09 அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதினார்:

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 8, 2009, 3:36:33 AM12/8/09
to mint...@googlegroups.com
Moral Opportunism -
 
அடடா...  நண்பர்கள் கூட்டத்தில் வேறு  ஒரு விவாதத்தின் போது இந்த அருமையான வார்த்தை அகப்படாது என்னென்னமோ சொல்லி வழிய வேண்டி இருந்தது.  ரொம்ப நன்றி விஜயராகவன்.
 
அப்புறம் கண்ணன் என்ன உம்மைப் பற்றி கிசுகிசுவெல்லாம் வருகிறது? 
 
உமக்கு ஏதோ காதுகளில் புகை என்னும் பொருள் படுகிற மாதிரி ‘மை’ பற்றிப் பேச்சு எழுகிறதே?
 
(இது முழு அய்யம்பேட்டை வேலை)
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/12/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Kannan

unread,
Dec 8, 2009, 4:29:24 AM12/8/09
to mint...@googlegroups.com
2009/12/8 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:
> உமக்கு ஏதோ காதுகளில் புகை என்னும் பொருள் படுகிற மாதிரி ‘மை’ பற்றிப் பேச்சு
> எழுகிறதே?
>  
> (இது முழு அய்யம்பேட்டை வேலை)
 
 
பென்னேஸ்வரன்
 
 
நான் ஒரு பேக்கு.
எனக்கு இந்த சிலேடையெல்லாம் புரியாது.
நேரடியாச் சொன்னாலும் யார் மீதும் கோபம் வராது!
நல்ல வேளை அம்மா குணம் வரலை. வந்திருந்தால் இன்னேரம்
 
க.>
320.gif
Reply all
Reply to author
Forward
0 new messages