Fwd: தமிழர்களின் பாராமுகமும் உயர்வு நவிற்சிப் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்- ஐந்தாவது

6 views
Skip to first unread message

gnana bharathi

unread,
Mar 4, 2011, 1:58:01 PM3/4/11
to mint...@googlegroups.com, Muthu Nedumaran, panb...@googlegroups.com

ஐந்தாவது இழப்பு (சூறை அல்லது சுனாமி போன்றது)
இந்திரா காந்திக்கு, அவரின் அரசுக்கு, தமிழகத்தை மேலும் சீரழிக்க வேண்டுமென்று தோன்றியதோ அல்லது வேறு காரணமோ மேலும் ஒரு பெரிய இழப்பை தமிழகத்திற்கு செய்வதாக எண்ணி இந்தியாவிற்கும் செய்தார். 

1976 ஆம் ஆண்டு மேலும் ஒரு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தில் 1974 ல்  வரைந்த எல்லைக்கோட்டை நீட்டிப்பது/ முழுமைப்படுத்துவது என்ற நோக்குடன் நடந்தது. 1974 ல் வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக முதவருடன் பேச வைத்ததை போல இம்முறை செய்யவேண்டுமென்று நினைக்க வில்லை என்று படுகிறது.  ஏனெனில் கடிதம், தந்தி, சட்டசபைத் தீர்மானம் போன்றவை செயவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. தேவை இல்லை என்று நினைத்து விட்டனரோ!

ராமேஸ்வரத்திற்கு தெற்கே நீட்டிக்கப்பட்ட எல்லைக்கோடு மாலத்தீவுடன் எல்லை வரை நீடித்தது. இதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை (கேரள கடற்கரைப் பகுதியும் வந்துவிட்டதென்பதாலோ)  

ஆனால்,
திருமறைக்காட்டிற்கு (வேதாரண்யம்) கிழக்கே தமிழக மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்கக் கூடிய பகுதிகளில் ஏறத்தாழ் 25000 ச.கி.மீ. பரப்பளவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தனர். கடல் வளம் கடலுக்குக் கீழே இருக்கக்கூடிய இயற்கை எரிவாயு எண்ணெய் வளம், கடல் தரைப்பரப்பில் உள்ள கனிம வளம், ......... எல்லாம் போயின.  படம் 1 & 2  

காஷ்மீரில் ஒரு அடி பரப்பைக்கூட பாக்கிஸ்தானுக்கு கொடுக்க விரும்பாதவர்கள், பொதுமக்கள் யாருக்குமே,  இன்றுவரை,  பயன்படாத சியாச்சின் பனிமலைப் பகுதிகளை பத்தாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை, ஆயிரக்கணக்கான கொடிகளை கொட்டி பாதுகாத்துவரும் நாட்டிற்கு கேரளாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட அளவு பரந்த கடற்பரப்பை விட்டுக்கொடுக்க எதனால் மனம் வந்தது?

இம்முறை இந்தியாவில் எங்குமே, தமிழகம் நிச்சயமாக, ஆர்ப்பாட்டமோ, கிளர்ச்சியோ, நகல் எரிப்போ நடைபெறவில்லை. நாடு அவசரகால சட்டத்தின் கீழ் இருந்தது.

தமிழ் நாட்டில்,
கருணாநிதி இந்திராவின் அவசரகால சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  காவிரியில் இழந்ததை ஏற்றுக்கொண்ட மக்கள் இதையெல்லாம் இழப்பாகவா கருதப்போகிறார்கள் என்று நினைத்திருக்கலாம் அல்லது எம்ஜிஆரை வீழ்த்த என்ன செய்ய வேண்டுமென்ற யோசனையில் கண்டுகொள்ளாதிருக்கலாம் 

எம்ஜிஆர், ஆட்சியைப்பிடிக்க, இதுபோன்ற கேடுகள் நிகழாமல் இருக்க,  தமிழ் நாட்டுப்பெண்களின் கவர்ச்சி போதாதென்று பஞ்சாபிலிருந்து ராதா சலுஜாவை வரவழைத்திருந்தார்.  

25,000.ச.கி.மீ. என்பது சரியா? 
இது துல்லியமான அளவு இல்லை. உலகில் நாடுகளுக்கு இடையேயுள்ள கடற்பரப்பு பிரிக்கப்படும்போது வலிமையான நாடு சற்று கூடுதாலப் பெற்றுக்கொள்வதுண்டு.  சரிசம நிலையிலுள்ள நாடுகளில் இருநாடுகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் கடற்பரப்பு பிரிக்கப்படுகிறது.எ.கா. இங்கிலாந்து- ப்ரான்ஸ் கடல் எல்லை. 
இந்திய இலங்கை எல்லைக்கோடு நேர்கூடாக அல்லாமல் ஒரு பெரு வட்டத்தின் கொட்டைப்போல வரையப்பட்டது. மையப்புள்ளி இலங்கைப்பகுதியில் வைத்து வரைந்ததால் தஞ்சை/நாகை மீனவருக்கு கிழக்கு எல்லை நூறு மைல்களுக்குள் வந்துவிடும்.  இலங்கையினருக்கு கிழக்கே எல்லை கிடையாது. யாழ், முல்லைத்தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு செல்லக்கூடிய அளவு தஞ்சை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி மீனவர்களுக்கும் உண்டு என்பதை, சர்வதேச விதிமுறைகளின் படி, நாடுகளிடையே கடல் எல்லை பிரிக்கப்பட்டிருப்பதன்படி பெற முடியும். 

"சர்வே"ஸ்வரர்களைக் கொண்டு துல்லியமாக அளவிடலாம். இழந்தது பத்தாயிரக்கணக்கான ச.கி.மீ. என்பதில் சந்தேகமில்லை

2011/2/6 gnana bharathi <dgbha...@gmail.com>
முதல் இழப்பு ஆங்கிலேயரால் நடந்தது
இரண்டாவது இந்திய தன்னிச்சையான முடிவால் ஏற்பட்டது
மூன்றாவது காங்கிரஸ் ஆட்சியாளர் பாராமுகத்தால் நிகழ்ந்தது
(காமராஜர் ஆட்சியில் நடந்த பெரும் இழப்பு இதுவாகத்தான் இருக்கும். மக்களைவிட கட்சி மேலானது என்று அவர் கருதியதால் ஏற்பட்ட இழப்புகளில் இதுவும் ஒன்று) 
கேரளத்திடம் இழந்தது இந்திய சீன எல்லையை பிரித்தது போல நடந்தது.  மக்மோகன் எல்லை இந்தியர்கள் - சீனர்கள் பிரிந்து வாழும் பகுதிகள் என்றில்லாமல் இமயமலையின் உயரமான சிகரங்களை இணைக்கும் கோடாக அமைந்தது. ஒருவேளை இமயமலை பனிபடர்ந்த மலைத்தொடராக இல்லாது இருந்தால் இக்கோடு இந்தியாவை பாலைவனமாக்கியிருக்கும்.

இக்கூற்றை நிருபிக்கும் விதமாக அமைந்ததே தமிழக-கேரள எல்லைப் பிரிவு. மேற்கு தொடர்ச்சிமலையின் மிகஉயர்ந்த சிகரங்களை, மக்மோகன் எல்லை வகுத்தமுறையின் அடிப்படையில், பிரித்தனர். அவ்வாறு பிரித்தால் தமிழ் நாடு மழைமறைவுப் பகுதியாக அஆகிவிடும் என்று அரசியலர், அலுவலர் ஒருவர் கூட உணராமல் இருந்தனரா என்பது ஆச்சரியம்.   படம் 1

ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களிடம் இழந்ததென்பது ஒரே நாட்டிற்குள் நடைபெற்ற ஒரு ஒருதரப்பு சாதகச் செயல். உண்மையில் நல்ல எண்ணம் கொண்ட மக்களாக இருந்தால் பல சிக்கல்கள் வராது.  

நான்காவது இழப்பு (அடிமையின் இழப்பு)
இந்தியா நடத்திய அணுகுண்டு பரிசோதனையால் உலக நாடுகள் இந்தியாவை புறக்கணித்தபோது, இலங்கை இந்தியாவை ஆதரித்ததால் அந்நாட்டிருக்கு கைம்மாறு செய்ய இந்திராகாந்தி இழக்க விரும்பியது தமிழ் நாட்டின் சொத்துக்களைத் தான் (காங்கிரஸ் தோற்றதால், தனிநாடு கோரிய திராவிடர்களின்  வலுவைத் தெரிந்துகொள்ள விரும்பியதால், காமராஜர் - ராஜாஜி போன்றோர் மீதிருந்த வெறுப்பால்  .............)   
1974 ல் திமுக ஆட்சியில் இருந்தபோது இலங்கை கோரிய கச்சத்தீவை விட்டுக்கொடுத்தகாக் கூறப்படுவதில் இழந்தது கச்சத்தீவை மட்டுமல்ல..  கச்சத்தீவு ஒரு ச.கி.மீ. பரப்பளவு கூட இல்லாத பகுதி.  ஆனால் இழந்தது 700 ச.கி.மீ. கும் மேற்பட்ட பரப்பளவுள்ள கடற்பரப்பை. 
எப்படி?
இரு நாடுகளின் கடற்பரப்பை பிரிக்க அந்தந்த நாடுகளுக்கிடையேயான நிலப்பரப்புகளுக்கு இடையே உள்ள பரப்பை பாதியாகப் பிரித்து எடுத்துக்கொள்வர். ஒருவேளை ஒருநாட்டின் சிறு தீவு மற்றொரு நாட்டின் எல்லைக்கருகில் இருந்தது என்றால், பிரிவு அச்சிறு தீவிற்கும் மற்றொரு நாட்டின் பொது நிலப்பரப்பிற்கும் இடையே வகுக்கப்படும். அதாவது நமது சிறு தீவு ஒன்று அடுத்த நாட்டின் எல்லைக்கருகில் இருந்தால் அந்நாட்டிற்கான கடல் பரப்பளவை பெரிதும் குறைத்து விடலாம்.  அதாவது அந்தமான் தீவு போன்ற தொலைவில் உள்ள ஒரு தீவுக்கூடமோ அல்லது ஒரே ஒரு தீவோ ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பிற்கு அருகில் இருந்திருந்தால், அந்நாட்டிருக்கு அருகில் வேறு நாடெதுவும் இல்லை என்பதால், அந்நாடு தற்பொழுது கொண்டிருக்கும் கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான கி.மீ. பரப்பளவு நமக்குரியதாகியிருக்கும்.

இரண்டாம் படத்தில் இந்தியாவுடனிருந்த கச்சத்தீவும் இலங்கையின் நெடுந்தீவும் குறிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயகா மீது கொண்ட பாசத்தால் கச்சத்தீவை விட்டுக்கொடுத்து கடல் எல்லையை வகுத்தார்.  படம் 3

கச்சத்தீவு நமதென்றால் அத்தீவை இந்தியாவின் எல்லைப்புள்ளியாக வைத்து கச்சத்தீவிற்கும் இலங்கையின் மற்ற பகுதிகளுக்குமிடையே ஆன கடற்பரப்பு பிரிக்கப்பட்டிருக்கும். படம் 4

எனவே இழந்தது தமிழக கட்சிகள் கூறிவரும் கச்சத்தீவு மட்டுமல்ல.  அதைப்போல் 1000௦ மடங்கு கூடுதலான பரப்பளவை. 

உண்மையில் இலங்கையின் தயவால் தான் நம்மால் கச்சத்தீவு வரை மீன்பிடிக்க முடிகிறது. ஒருவேளை அவர்கள் ஐநா போன்ற இடங்களில் முறையிட்டால் அவர்களுக்கு மேலும் பல நூற்றுக்கணக்கான ச.கி. மீ. கடற்பரப்பு உரியதாகிவிடும். படம் 5

ஏன் இவ்வாறு நடந்தது?
ராமநாதபுர சேதுபதி இந்தியாவுடன் சேருவதாக கையெழுத்து போட்டவுடன் அவரிடமிருந்த பத்திரங்கள் அனைத்தும், கச்சத்தீவு சார்ந்தது உட்பட, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. நகல் கூட நாம் எடுத்துக்கொள்ள வில்லை. இந்திராகாந்தி அனுப்பிய வெளிவுரவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங் (சரண் சிங் அல்ல) தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்தினார். உண்மையில் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார் என்று கூறப்படுகிறது.. ஆனால் அவரைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் நகல் எரிக்கப்பட்டது. இதைச் செய்தவர்களில் ஒருவரும் தமிழரில்லை.
 
ஆனால் இதற்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பு இல்லை. ஏன்? 
- தமிழக காங்கிரஸ், பொதுவுடைமை போன்றவை வலு இழந்து விட்டிருந்த்திருந்தன.
- காமராசரும் ராஜாஜியும் உயிருடன் இல்லை.       
- ஈ.வே.ரா., அண்ணா போன்றோரும் இல்லை.
- கருணாநிதி - எம்.ஜி.ஆர் பிரிந்த நேரம்.
கருணாநிதிக்கு எம்ஜிஆரின் வளர்ச்சியைத் தடுக்க தமிழரை விட இந்திரா காந்தி தயவு போதுமென்று பட்டது. எதிர்க்கத் துணிவில்லை (மன்மோகன் சிங் இரண்டாவது முறை பதவி ஏற்ற பொழுதுதான் முதன் முதலாக எதிர்ப்ப்பைக் காட்டினார் என்று நினைக்கிறன்)

எம்கிஆருக்கு ஆட்சியரின் குறைகளை வெளிப்படுத்தி நல்லதொரு வழிப்படி ஆட்சி நடத்துவேன் என்று கூறுவதை விட திரைப்படங்களில் உடல் வெளுத்த பார்ப்பனப் பெண்களின் துகிலுரித்தால் போதுமென்று இருந்தது. 

      
2011/2/6 gnana bharathi <dgbha...@gmail.com>

தமிழர்களின் பாராமுகமும்  உயர்நவிழ் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்
வரலாற்றில் உலகின் பெரும் நிலப்பரப்பை ஆண்ட அரசுகளில் ஒன்றாக விளங்கிய தமிழ் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக அடிமைப் படுத்தப்பட்டு இருந்தது.  பேரரசுகளாக வாழ்ந்தும் சூழ்ச்சிகளாலும் குடும்ப சண்டைகளாலும் அரச பரம்பரைகள் அழிந்துபோனது. தொடர்ச்சியான ஆளுமை இல்லாத சமூகமாக தமிழர்கள் 700 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும் எதிர்ப்புணர்ச்சி அவ்வப்போது பல வழிகளில் வெளிப்பட்டது.  ஆனால் இவைகளில் சூழ்ச்சியில்லை, தந்திரமில்லை தமிழர் என்ற உணரவில்லை.  இதனால் பிறர் சூழ்ச்சிகளுக்கும் தந்திரங்களுக்கும்  மீண்டும் அடிமையானோம். அடிமைத்தனம் நமக்கு எதிலும் பற்று இல்லாத ஒரு தன்மையைக் கொடுத்துவிட்டது. இருப்பினும் புதிய தலைமைகள் உருவானபோது விழிப்புணர்வு போன்ற நிலை ஏற்பட்டாலும் தலைமையின் மேல் கொண்ட அளவுகடந்த நம்பிக்கையால், அவர்களை அவர்களின் திறனுக்கும் மேலாக கருதியதால் வீறுகொண்டு எழுந்தவுடன் மீண்டும் வீழ்ந்தோம், மீண்டும் மீண்டும் வீழ்ந்தோம். 

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறிய மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்.
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயம் என்றேன். சூம்பல் தோளை
வழங்கா தகையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய்
யானும் என்தன் குற்றத்தால் ஏகின்றேனே.
                                                                                                       - ராமச்சந்திரக் கவிராயர் 

முதல் இழப்பு 
1911 ல் சித்தூர் மாவட்டம் என்பது உருவாக்கப்பட்டது. இது ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தை பிரித்து அமைக்கப்பட்டது. மாவட்டத்தின் அளவைப் பெரிதாக்க வடாற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியை சித்தூருடன் இணைத்தனர்.   பின்னாளில் இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஏற்பட்ட மொழிவாரி மாநிலம் என்ற திட்டம் வருவதற்கு முன்னாலேயே பொட்டிஸ்ரீராமுலு (சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்து இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியவர், காமராஜர், அண்ணா போன்ற தமிழர் தலைமை உருவானதும் தனி ஆந்திரம், அதுவும் சென்னையை தலைநகராகக் கொண்டு, வேண்டுமென்று உண்ணாநிலையில் உயிர் விட்டார்) என்பவரின் போராட்டத்தின் விளைவாக சென்னை மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, சித்தூர் மாவட்டத்தின் தமிழ் நாட்டுப்பகுதிகளை நாம் நமதாக்கிக்கொள்ளவில்லை.  

இதனால் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட பொழுது சில பகுதிகளைக் கொடுத்துதான் அதே அளவு பகுதிகளைப் பெறமுடிந்தது (மா.பொ. சி. போன்றோரின் போராட்டத்தால்)

இந்த இழப்பு நடை பெற்றபோது மின்டோ-மார்லி சீர்திருத்தின்படி தேர்தல்கள் ஏதும் நடக்காமல் இருந்தாலும் காங்கிரஸ் தமிழகத்தின், இந்தியாவின் மிகப்பெரியக் கட்சியாக இருந்தது. அங்கு தமிழர் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பில்லை. திராவிடம் என்பது அரசியலாகவில்லை.  தீங்கை மட்டுமே விளைத்த ஆற்காட்டு நவாப் இதில் தலையிட்டிருக்க வேண்டுமென நினைத்துக்கூட இருக்க மாட்டார். 

இரண்டாவது இழப்பு
இந்தியா விடுதலை அடைந்தவுடன் போட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தையடுத்து எவ்வித கொருதலுமின்றி இந்திய அரசு சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திர மாநிலத்தை உருவாக்கியது. 

தமிழர் முதல்வராக (மாகனத்தின் பிரதமராக) இருந்தார். திராவிடம் தளைத்தோங்கி கிளை விட்டு வளர்ந்திருந்தது. தமிழர் பகுதிகளை தக்கவைக்க யாரும் முயற்ச்சிக்க வில்லை - கண்டு கொள்ளவில்லை.

மூன்றாவது இழப்பு (பேரிழப்பு)
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட முடிவு செய்தபோது, மைசூர் அரசும் (கடற்கரை இல்லாத சிறிய பரப்பளவைக் கொண்டது)  கொச்சி-திருவாங்கூர் அரசும் தங்கள் பகுதிகளை விரிவாக்க முயற்சித்தனர்.
கன்னடம் பேசும் இடங்களை ஒருங்கிணைக்க மிகப்பெரும் முயற்சியில் மைசூர் அரசும் இந்தியாவில் உயர்பதவில் இருந்த கன்னடர்களும் பெருமுயற்சி கொண்டனர். எவ்வித பாகுபாடுமின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டதால், கன்னடம் பேசுவோர் பெருவாரியாக வாழ்ந்த பகுதிகளை மட்டுமல்லாமல் அம்மொழி மக்கள் இருந்த இடமெல்லாம் தமது என்று போராடிப் பெற்றனர். மொழிவாரி மாநில அமைப்பில் பெருநன்மை அடைந்தவர் கன்னடர்களே.

தமிழர்கள் கர்நாடகத்தின் கடற்கரை பகுதிகளை தமக்கு வேண்டுமெனக் கேட்டிருந்தால் அதை நியாயப்படுத்தியிருக்க  முடிந்திருக்காது.  ஆனால் கொள்ளேகால், கோலார், மற்றுமிருந்த பல தமிழர் பெருவாரியாக வாழ்ந்தப் புகுதிகளை ஏன் விட்டுக்கொடுத்தார்கள் என்று புரியவில்லை. கோலார் பகுதி கனிவளம் மிக்க பகுதி. கொள்ளேகால் வட்டம் (இப்பொழுது சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் பகுதி) 2789 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது.  காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்பகுதியை நாம் தக்கவைத்திருந்தால் நாம் கோரும் காவிரி நீரின் அளவை கூட்டியிருக்க முடியுமென்பதோடு பெரும் விளைநிலத்தையும் கொண்டிருந்திருக்கலாம். 
Tamil speaking kongu vellala gounders are majority in Kollegal. People in Kollegal speak a variation of Kannada distinct from that spoken in Mysore andBangalore. This dialect of Kannada at times suffixes da when spoken among pals. Kannada as spoken in Kollegal was used in the 2005 film Jogi starring Shivarajkumar.

கொச்சி-திருவாங்கூர் பகுதி மக்களும் மலையாளம் பேசும் பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென்று ஒன்றுகூடி போராடினர். மலபார், காசர்கோடு போன்ற பகுதிகள் கேரளத்துடன் சென்றுவிட்டது. தமிழர் வாழும்  பாலக்காடு போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்கவேண்டுமென்ற நினைப்பு கூட இல்லாமல் இருந்தனர். பல மொழி பேசும் பகுதியான காசர்கோடு பகுதியை பழங்குடியினர் கூடுதலாக வாழும் பகுதி என்று கருதியதால் தமிழர்கள் வேண்டாமென்று இருந்துவிட்டதாகக் கூறுவதுண்டு. கன்னடர்கள் இன்றும் கோரிவரும் சில பகுதிகளையும்  தன்னகத்தே கொண்டிருகின்றனர் 

ஆட்சியில் காங்கிரசும், எதிர்கட்சியாக இருந்த பொதுவுடமைக் கட்சியும் அதன் தலைவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணமில்லாமல், பிற மாநிலத்தினர் தத்தம் மாநிலமே முதன்மை என்றிருந்தபோதும், இந்தியாவின் ஆட்சியாளர் செய்யும் நாட்டுக்குத் தேவையான ஒன்றென்று ஏதும் செய்யவில்லை. 
திராவிடத் தலைவர்  ஈ.வே.ரா., தமிழகத்தின் தலைமேல் இன்றுவரை நிறுத்திவைத்திருக்கும் தலைவர், இனிமேல் திராவிட நாடு என்பது புதிதாக வரையறுத்த புகுதிகளுக்குள் உட்பட்டே செயல்படும்/கோரப்படும் என்ற பகுத்தறிவுக் கருத்தை கூறி தன் கடமையை முடித்துக்கொண்டார். 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணா "சீதையை வேண்டிச் சென்ற ராமனிடம் மற்றொரு பெண்ணைக் காட்டி சீதைக்குப் பதிலாக கூட்டிச்செல்லச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருப்பாரோ" அதுபோல தங்கள் கோரிக்கை, தமிழகப் பகுதிகளை இழந்ததைப் பற்றிக் கவலை கொள்ளாமல், பரந்துபட்ட விந்தியமலைக்குக் தெற்கே உள்ள மொத்த பரப்பையும் திராவிட நாடாக இந்தியாவிடமிருந்து  பிரிப்பதுதான் தம் கொள்கை என்பது போல் பேரறிஞராக  அறிக்கை விடுத்தார்.  மாற்றவர்கள் தங்களைத் திராவிடர்களாக என்றுமே கருதியதில்லை என்றபோதிலும் அவர்களையும் தம்முடன் சேர்த்து தனிநாட்டை உருவாக்கும் நீண்டகாலத் திட்டம் கொண்டிருந்தார்.




1976.jpg
1976 izhappu.jpg
India srilanka agreement.pdf
LKA-IND1974.PDF
Reply all
Reply to author
Forward
0 new messages