பெட்ரோல் விலை ஏற்றத்திற்கான மூல காரணம்

12 views
Skip to first unread message

Nakinam sivam

unread,
Jun 26, 2010, 12:52:14 AM6/26/10
to mint...@googlegroups.com

சர்வதேச சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தமாதிரி இனி பெட்ரோலின் விலை இந்தியாவிலும் இருக்கும் என, மத்திய அரசு நேற்று முறைப்படி அறிவித்தது . அதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரையிலும், ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 வரையிலும், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வின் முழுஒத்துழைப்போடு இந்த விலையேற்றம் முடிவு செய்யப்பட்டுள்ளது .


பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படுவது குறித்து கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதுகுறித்து கிரீத்பரீக் கமிட்டி அமைக்கப்பட்டு, விலையேற்றம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகள் குறித்து முடிவெடுக்க அமைச்சரவை கூட்டம் பலமுறை கூடியபோது, முடிவு எடுக்க முடியவில்லை. பல அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. இதனால், முடிவு தள்ளிப்போனது.இந்நிலையில் நேற்று, டில்லியில் உள்ள சவுத் பிளாக் அலுவலகத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் உயர்மட்ட அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா கலந்து கொள்ளவில்லை. ஆனால், தி.மு.க., சார்பில் அமைச்சர் அழகிரி பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மற்றும் பெட்ரோலியத்துறை செயலர் சுந்தரேசன் ஆகியோர் பேசினர். அப்போது விலையேற்றம் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.பெட்ரோலின் விலை இனிமேல், சர்வதேச சந்தைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தமாதிரி இந்தியாவிலும் இருக்கும். பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரை உயர்த்தப்படவுள்ளது.


பெட்ரோல் பயன்படுத்துவோர் இந்த விலையேற்றத்தை தாங்கும் சக்தி உள்ளவர்கள் என்பதாலும், எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டியிருப்பதாலும் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது.சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் டீசலின் விலை, லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்திற்கு பிறகும் ரூ.23 ஆயிரம் கோடி வரை அரசாங்கத்திற்கு மானியச் செலவு வரும்.


ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு மண்ணெண்ணெயின் விலை தற்போது தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை பாகிஸ்தானில் ரூ.36ம்,வங்கதேசத்தில் ரூ.30, நேபாளத்தில் ரூ.31ம், இலங்கையில் ரூ.21ம் ஆக உள்ளது.நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.310 வரை விற்கப்படுகிறது. இனி இதற்கு ரூ.35 வரை விலை அதிகரிக்கும் . தற்போது 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டருக்கு ரூ.262 வரை அரசு மானியம் வழங்குகிறது. இந்த விலையேற்றங்கள் தவிர்க்க இயலாதது. மத்திய அரசின் இந்த விலையேற்ற முடிவுக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவையும் அளித்தன.


ஆதரவு: குறிப்பாக முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க., இந்த விலையேற்ற முடிவின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது முழு ஆதரவையும் அளித்தது. தேசியவாத காங்கிரசும் இதேபோல ஆதரவு தெரிவித்தது. மம்தா பானர்ஜி, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். டில்லியில்தான் இருக்கிறார் . ஆனால், பெட்ரோல் விலை உயர்வு குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. இந்த விலையேற்றம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உறுதியை ஒருபோதும் பாதிக்காது.இவ்வாறு முரளி தியோரா கூறினார்.இக்கூட்டத்தில் பங்கேற்ற சரத் பவார், எக்காரணம் கொண்டும் விலை உயர்வை வாபஸ் பெறக்கூடாது என்று அரசைக் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இந்த ஆண்டில் பெட்ரோல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றம் மொத்த பணவீக்கத்தை 0.9 சதவீதம் அதிகரிக்கும் என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்தார். விலை உயர்வை பா.ஜ., மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்துள்ளன.


-நமது டில்லி நிருபர்-


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26396

                                                                               
இந்த பெட்ரோல் விலை ஏற்றத்திற்கான மூல காரணத்தை ஆராய்ந்தால்
ரிலையன்ஸ் அம்பானி சகோதர்களை, அவர்களின் 
பெட்ரோலிய நிறுவனங்களை  வாழ வைப்பதற்காக 
இந்த மக்கள் விரோத அரசுகளால் உருவாக்கப்பட்டது.
ஒரு பேரால் கச்சா எண்ணெய் 75 டாலருக்கு கிடைக்கிறது.
அதில் பெட்ரோலை பிரித்தெடுக்கும் போது 
அதில் ஒரு சதவீதம் கூட வீணாவதில்லை.
 அப்படி இருக்கும்போது 56 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுவதாகக் 
கூறுவது எப்படி ?
மக்களை முட்டாளாக்கும் 
முதலாளிகளுக்கு கூழை கும்பிடு போட்டுக் கொண்டு 
அவர்களுக்கு லாபம் ஏற்படுத்துவதையே 
கொள்கையாக் கொண்ட முதலாளித்துவ  அரசுகளால் 
போது மக்களுக்கு  எந்த நன்மையையும் ஏற்பட போவதில்லை.

சிவம்

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

செல்வன்

unread,
Jun 26, 2010, 1:03:42 AM6/26/10
to mint...@googlegroups.com
இல்லை ஐயா.இந்தியாவில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 100% மேல் வரி. லிட்டர் 20 ரூபாய்க்கு எண்னை நிறுவனங்கள் பெட்ரோலை வாங்குகின்றன, மத்திய அரசு அதுக்கு கலால்,எக்சைஸ்,சுங்கம், சேல்ஸ் டாக்ஸ் என சுமார் லிட்டருக்கு அதற்கு 30 ரூபாய் வரி போட்டு, கூட மாநில அரசு வரிகளும் சேரும்போது எண்னை நிறுவனங்களுக்கு அசல் விலை 60,70 ரூபாய் வருகிறது.அந்த விலைக்கு விற்றால் பொதுமக்கள் புரட்சி செய்வார்கள் என்பதால் எண்னை நிறுவனங்களை 55 ரூபாய்க்கு விற்க சொல்லுகிறது அரசு.அவர்களுக்கு நஷ்டம் வரும்போது அது வரிப்பணத்தை வைத்து ஈடுகட்டபடும் அல்லது 3 ரூபாய் விலையை ஏற்ர சொல்லுவார்கள்.

2009ல் பெட்ரோல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த வரி Rs. 56,365 கோடி

2009ல் பெட்ரோலுக்கு (டீசல்,காஸ்,மணெண்ணை) அரசு தந்த மானியம் Rs. 14,058 கோடி

அதாவது வாங்கும் வரியில் 25% மானியம்.மீத வரிபணம் எல்லாம் அரசின் ஊதாரிதனமான செலவுகளுக்கும், அரசு ஊழியர் சம்பளத்துக்கும் செலவாகிறது.

அதாவது நீங்கள் போடும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் இந்த உதவாக்கரை அரசுக்கு 25 ரூபாய் தண்டபணம் கட்டுகிறீர்கள் என வைத்துகொள்ளுங்கள்.

அம்பானி பிரதர்ஸ் இந்த பிரச்சனையால் இந்தியாவில் பெட்ரோல் விற்பதை நிறுத்திவிட்டு ஏற்றுமதி செய்வதாக படித்த நினைவு



--
செல்வன்

www.holyox.blogspot.com

அதிகாரத்தை எடுத்து கொள்ள தான் முடியும்.கேட்டு வாங்கி பெற இயலாது.அதிகாரத்தை கேட்டு பெறாமல் தானாக கையில் எடுப்பதன் பெயரே விடுதலை ஆகும்- க்ளோரியா ஸ்டெய்னிம்

Kandavel Rajan

unread,
Jun 26, 2010, 1:09:59 AM6/26/10
to mint...@googlegroups.com

Calculations of Petrol Prices in India

If the cost price of petrol per litre is Rs 58.90, following is the break up of cost calculated by the government.

Basic Price: Rs 28.93
Excise duty: Rs 14.35
Education Tax: Rs 0.43
Dealer commission: Rs 1.05
VAT: Rs 5.5
Crude Oil Custom duty: Rs 1.1
Petrol Custom: Rs 1.54
Transportation Charge: Rs 6.00
Total price: Rs 58.90

Company Basic Price calculation – Considering that the current price of crude oil is $107 (on September 22) per barell, cost of per barrel in RS will be 107*45.40(1$=Rs45.40) = 4858.

One barell consists of approximately 160 litres. So Price of crude oil per litre will be 4858/160 = 30.36.

Now Indian Oil Company loses 1.44 Rs per litre + cost of transportation of crude oil and refining the price.


http://www.kokkada.com/calculations-of-petrol-prices-in-india/



--
அன்போடு அன்புமயமாக இருக்கிற விதத்தில் ஆவேசமில்லை.ஆவேசமில்லாதபோது துக்கமுமில்லை.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

செல்வன்

unread,
Jun 26, 2010, 1:20:20 AM6/26/10
to mint...@googlegroups.com
Today the price per barrel of oil = $78 = 22 RS

Cost of 1 liter of petrol to government is just 22 rs.

Dealer commission = 1.5 rs. rest are taxes. No question of oil company profits.Companies sell it for a loss.







2010/6/26 Kandavel Rajan <kandav...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jun 26, 2010, 1:41:15 AM6/26/10
to mint...@googlegroups.com
எல்லாரும் அலசிட்டீக. செல்வன், அமரிக்காவில் பெட் ரோல் வகயறா விலை எப்டி
நிர்ணயிக்கிற்ஆர்கள் என்றும் சொல்லுங்கள்.
இன்னம்பூரான்

2010/6/26 செல்வன் <hol...@gmail.com>:

செல்வன்

unread,
Jun 26, 2010, 1:47:31 AM6/26/10
to mint...@googlegroups.com
அமெரிக்காவில் பெட்ரோல் விலை அசல்+ லாபம்+ வரி என்ற விதத்தில் நிர்னயமாகிறது.

அமெரிக்காவில் பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் மட்டுமே வரி. 4 டாலர் இல்லை, இந்திய மதிப்பில் 4 ரூபாய்.

இன்று என் வீட்டருகே இருக்கும் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை (இந்திய ரூபாயில்) ரூ 32.73


2010/6/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>

செல்வன்

unread,
Jun 26, 2010, 2:23:12 AM6/26/10
to mint...@googlegroups.com

அனைத்து விலையும் இனி உயரும்-ஏழைகள் வாழ்க்கை நடத்துவதே கஷ்டம்: விஜயகாந்த்

http://thatstamil.oneindia.in/news/2010/06/26/petrol-diesel-price-hike-tamilnadu-leaders.html

சென்னை: டீசல் விலை உயர்வால், பஸ் கட்டணங்கள், லாரி வாடகை, பால், காய்கறி, மளிகை பொருட்கள் விலை என்று பாமர மக்களுக்கு தேவைப்படும் இன்றியமையாப் பொருட்களின் விலை உயரக்கூடும். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களும், நகர்ப்புற ஏழைகளும் பயன்படுத்தும் மண்எண்ணை விலையையும் கூட்டியுள்ளனர். இதனால் சாதாரண மக்கள் வாழ்க்கையை நடத்துவது என்பதே இனி இயலாத காரியம் என்று சாடியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் [^].

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடி வருவதால் பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் என்று இந்திய அரசு விளக்கம் அளிக்கிறது. ஆனால் இதர நாடுகளில் இந்தியா [^] அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகமாக இல்லை. பெட்ரோலியப் பொருட்களின் விலையில் பாதிக்கு மேல் மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பே காரணம். உண்மையில் பெட்ரோலிய விலை உயர்வதால், அதோடு சேர்ந்து வரியும் உயர்வதால் ஆதாயம் அடைவது அரசுகள்தான்.

மக்கள் நலன் கருதி இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசு அடைகின்ற ஆதாயத்தை குறைத்து விலையை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?. இந்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் இந்திய அரசுக்கு ஏற்கனவே பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள வருவாயை விட, இப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எதிர்பாராத அளவிற்கு அரசுகளுக்கு வருவாய் கூடுகிறது.

பெட்ரோல் விலையில் சதவீத அடிப்படையில் வரி விதிக்கப்படுவதால் பெட்ரோல் விலை கூடும்பொழுதெல்லாம் அரசுக்கு வரி மூலம் வரும் வருமானமும் அதிகரிக்கிறது. சதவீத வரிக்குப் பதிலாக, ஒரே சீரான அளவில் அதாவது சமமாக இத்தனை ரூபாய் என்று வரி விதித்தால் அரசுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் வருமானம் மட்டுமே இல்லாமல் போகும்.

ஒரு குறிப்பிட்ட வரியை விதிப்பதற்குப் பதிலாக, சதவீத அடிப்படையில் வரி விதித்து அரசுகள் கொள்ளையடிப்பது என்ன நியாயம்?.

ஏற்கனவே விலைவாசி உயர்வு இரு மடங்கு ஆகியுள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை 17 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அரசின் புள்ளி விவரமே கூறுகின்றது. இப்போது பஸ் கட்டணங்கள், லாரி வாடகை, பால், காய்கறி, மளிகை பொருட்கள் விலை என்று பாமர மக்களுக்கு தேவைப்படும் இன்றியமையாப் பொருட்களின் விலை உயரக்கூடும். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களும், நகர்ப்புற ஏழைகளும் பயன்படுத்தும் மண்எண்ணை விலையையும் கூட்டியுள்ளனர். இதனால் சாதாரண மக்கள் வாழ்க்கையை நடத்துவது என்பதே இனி இயலாத காரியம்.

உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோலியப் பொருட்களின் விலையை உழைக்கும் மக்களின் நலன் கருதி மத்திய அரசு [^] உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Nakinam sivam

unread,
Jun 26, 2010, 3:10:19 AM6/26/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரர் செல்வன் அவர்களுக்கு,

உங்கள் கூற்று உண்மை. 
இந்த அரசுகளுக்கு ஒரு விலை ஏற்றத்தின் பாதிப்பு மற்ற எல்லா பொருட்களின் விலையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது தெரியாதா ?
கேட்டால் நாம் கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதனால் 
அந்நிய செலாவணி இழப்பு ஏற்படுகிறது என்கின்ற நொண்டி சாக்கு வேறு.
அந்நிய செலாவணி கை இருப்பு குறைகிறது என்பதற்காக வரி மூலம் ஈடு கட்டுவது சரியானதாக இல்லை.
அதற்கு ஈடு கட்டும் விதத்தில் ஏற்றுமதியை ஊக்கபடுத்தலாம். 
ஏற்றுமதி விதிகளை சுலபமாக்கலாம்.
அதை விடுத்து போது மக்களின் தலையில் சுமையினை ஏற்றுவது மிக பெரிய கொடுமை.

அன்புடன்
சிவம்


2010/6/26 செல்வன் <hol...@gmail.com>

அனைத்து விலையும் இனி உயரும்-ஏழைகள் வாழ்க்கை நடத்துவதே கஷ்டம்: விஜயகாந்த்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

நண்பன்

unread,
Jun 26, 2010, 3:12:25 AM6/26/10
to mint...@googlegroups.com
அமெரிக்காவில் பெட்ரோல் விலை அசல்+ லாபம்+ வரி என்ற விதத்தில் நிர்னயமாகிறது.

அமெரிக்காவில் பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் மட்டுமே வரி. 4 டாலர் இல்லை, இந்திய மதிப்பில் 4 ரூபாய்.

இன்று என் வீட்டருகே இருக்கும் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை (இந்திய ரூபாயில்) ரூ 32.73


2010/6/26 செல்வன் <hol...@gmail.com>
 பெட்ரோலின்  மீதான  வரியை  குறைத்து  ,எரிபொருட்கள் மான்யத்தை  கொஞ்சம் கொஞ்சமாக  விலகிக்  கொண்டால்
மக்களுக்கு   வலி தெரியாது , அரசுக்கும்  இழப்பிடு  அதிகம் வாராது


--
குற்றம் சொல்லின்
சுற்றம் இல்லை

நன்றியுடன் நாசரு  

Nakinam sivam

unread,
Jun 26, 2010, 10:32:58 AM6/26/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரர் செல்வன் அவர்களுக்கு,

நீங்கள் சொல்வது உண்மைதான்.
அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
இன்றைக்கும் வெள்ளைக்காரன் வைத்து விட்டு போன 
அனுமதி (Licensing) போன்றவற்றை நீக்கலாம்.
நில வரி என்று எதையுமே வசூலிக்காமல் 
நிறைய ஊழியர்களுக்கு தேவையற்ற சம்பளம் 
சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றை அளிப்பதற்கு 
தாலுக்கா அலுவலகம் செல்வதை மாற்றலாம்.
நான் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்கு சென்று வருவது வழக்கம்.
அங்கு நிறைய நாட்களில் அவர்களின் சம்பள பில் டிஎ பில் அரியர்ஸ் பில் பி எப் பார்ட் பைனல்  பில் என மாதத்தில் நிறைய நாட்கள் அவர்களுடைய வேலையை செய்வதற்கே வேலை செய்கிறார்கள். மேலும் அடிக்கடி அவர்களின் சொந்த வேலைக்காக வேலையை விட்டு டிரஷரி சென்று விடுகிறார்கள்.
இது போல ஆட்களால் அரசின் பணம் வீணடிக்கப் படுகிறது.
ஓட்டு பெற வேண்டும் என்பதற்காக அரசியல் வியாதிகளும் அவர்களின் ஆதரவை பெறுவதற்காக அவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகின்றார்கள்.
உண்மையில் ஒரு சில அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்கள். மற்றபடி நிறைய ஊழியர்கள் சரியாக வேலையை செய்யாமல் மக்கள் பணத்தை சம்பளமாக பெறுகிறார்கள்.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அச்சிரபாக்கத்தில் அரசு நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஒரு நாள் அவர் செங்கல்பட்டில் இருந்தார். ஏன் வேலைக்கு நீங்கள் போகவில்லையா ? என்று கேட்டேன். இல்லை அலவலக வேலையாக வந்தேன் என்றார்.
என்ன வேலை என்றேன் எங்கள் அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் இல்லை செங்கல்பட்டு அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுக்க வந்தேன் என்று சொன்னார். 
அவர்க்கு ஒரு நாளைக்கு சம்பளம் ரூ 600 ஜெராக்ஸ் எடுக்க வந்தது வெறும் 20 காப்பி மட்டுமே. இதில் அவர் வந்து போனதற்கு டி எ வேறு. இப்படிதான் உள்ளது அரசு அலவலகங்கள்.
நான் நிறைய விஷயங்களை நேரடியாக பார்ப்பதால் மிகுந்த வேதனை படுகிறேன்.

எந்த அரசும் ஏழைகள் சுயமாக சம்பாதிப்பதற்கான திட்டங்களை செய்வது இல்லை. 
அன்புடன்
 சிவம்
2010/6/26 செல்வன் <hol...@gmail.com>
அரசுகளுக்கு வேறு வழியில்லை சிவம் ஐயா.அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரவும், மானியம் தரவும் அரசுக்கு காசு தேவைபடுகிறது.பெரிய அரசு இருந்தால் நிர்வாகம் செய்ய நிரைய காசு வேண்டும்.ஆக நிறைய வரி அதிக விலைவாசி மூலம் தான் இந்த மாடல் அரசாங்கம் சர்வைவ் ஆகமுடியும்.

அரசின் ஊழியர் எண்ணிக்கை,சம்பளம்,மானியம் ஆகியவை குறைத்தால் மட்டுமே பெட்ரோல் வரியை குறைக்க இயலும்.

2010/6/26 Nakinam sivam <nak...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages