தமிழக சமச்சீர் கல்விமுறை பாடதிட்டம்

183 views
Skip to first unread message

Vedaprakash

unread,
Oct 23, 2009, 9:46:33 PM10/23/09
to மின்தமிழ்
தமிழக சமச்சீர் கல்விமுறை பாடதிட்டம்

தமிழக சமச்சீர் கல்விமுறையில் Draft Common Syllabus 2009 என்பதன்கீழ்
"சமூக அறிவியல்" பாடத்தில் கொடுக்கப் பட்டுள்ள சிலவற்றைக் காண்போம்:

முழு விவரங்களுக்கு கீழ்காணும் தளத்தைக் காணவும்:

http://www.pallikalvi.in/Home/pdf/socialscience.pdf

1. Iron Age: myths & quests: Dravidian Cultures, Vedic Age, Epic Age
(social structures and stratification),
Social Science என்று தொடங்குகிறது. இனரீதியிலான சரித்திர விளக்கங்கள்
இருக்கக் கூடாது என்று உலகளவில் ஒப்புக் கொண்டாலும் "திராவிட
கலாச்சாரங்கள்" என்ற தலைப்பு மாணவர்களுக்கு பிரிவினை ஊட்டும் வகையில்
தான் உள்ளது.

2. உடனடியாக, அதன் கீழுள்ளது: "Learning outcomes: Concept of Iron Age;
based on sites and archaeological
patterns; the Aryan settlements, and life in the Early and later Vedic
Periods. Simultaneous cultures in South India"

என்றுள்ளது. இங்கு எப்படி திடீரென்று "ஆரிய குடியிருப்புகள்" வருகின்றன
என்று தெரியவில்லை! அதுவும் அவை ஏன் வடக்கிலிருக்கும் "திராவிட
கலாச்சாரங்கள்" பிறகு தென்னிந்தியாவில் வரவேண்டும் என்று தெரியவில்லை!

3. இத்தகைய "மொழி"வாதம், "இன"வாதமாக மாற்றும் போக்குத் தெரிகின்றது.
இதனின்றி, தேர்ந்தெடுக்கப் படும் ஆசிரியர்கள் விடுபட்டு பாரபட்ச நிலையில்
இப்பொழுது வரை உள்ள நடப்பு சரித்திர விவரங்களைக் குறிப்பிடுவார்களா
அல்லது பழைய "ஆரிய-திடராவிட இனப்போராட்டங்களை"ப் பற்றி எழுதுவார்களா
என்று தெரியவில்லை. தமது திராவிடா எஜமானர்களுக்கு விசுவாசமாகத் தான்
எழுதுவார்கள் எனத் தெரிகிறது [இப்பொழுது மாநாடு நடக்கும் போக்கே
சரித்திரத்திற்கு விரோதமாகத் தான் உள்ளது].

4. பிறகு வருகிறது, "பழங்கால இந்தியா". அதன் கீழ் இருப்பது:
Content: Protest, reform and debate: Rise of Buddhism and Jainism.
Learning Outcomes: Emergence of debates on religion and life; Buddha’s
life and quest; Mahavira’s life and quest;
Teachings of each religion; the formalization of each; the options it
offered; its spread, decline, art and architecture.
ஆகவே, திடீரென்று அத்தகைய மதங்கள் சரித்திர ரீதியாக எப்படி தோன்றியிருக்க
முடியும்? முன்பிருந்ததைப் பற்றி விளக்காமல், எப்படி திடீரென்று இருந்த
மனிதர்களுக்கு அத்தகைய "ஞானோதயம்" ஏற்பட்டிருக்க முடியும்? அதன் மூலம்
என்ன? அதை விளக்குவதற்காக எந்த தலைப்பும் கொடுக்கப் படவில்லையே?

5. பிறகு வந்து விடுகிறது:
Content: Beginning of Empires: · Magadha,· Mauryas,· Sungas,· Sakyas,·
Kushanas,· Guptas,· Harsha
Learning Outcomes: Mahajanapadas, early village republics; maps and
location. Concept of empire; the histories of each of these periods
with focus on Bimbisara and Ajatashatru Chandragupta, Chanakya, Asoka.
Brief histories of Sunga and Sakyas, Kushanas: kanishka, Guptas:
Samudragupta, Chandragupta Vikramaditya, Harsha, என்றெல்லாம்!.

இவர்கள் எல்லாம் எப்படி திடீரென்று முளைக்கிறார்கள்?

இவர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், மூலாதாரங்கள் என்ன?

அவற்றை விளக்குவார்களா?

முன்னமே, "சமூக அறிவியலில்" தாமஸ் கட்டுக் கதை போன்ற சரித்திர ஆதாரங்களே
இல்லாத அபத்தங்களை மாணவர்களுக்கு புரட்டு வரலாறாகக் கொடுத்துள்ளனர்.

இப்பொழுது "சமச்சீர்" என்ற பெயரில் இறங்கியுள்ளனர்.

இந்திய மக்களை ஒற்றுமையாக இருக்க இந்த "சமூகவியல்" எழுதப் படப்போகின்றதா
இல்லை வேற்றுமையைக் குலைக்கப் போகின்றதா என்று புத்தகம் வெளி வந்தபிறகு
தான் தெரியும்!

மேலும் விவரங்களுக்கு:
http://indianhistoriographymethodology.wordpress.com/

விஜயராகவன்

unread,
Oct 24, 2009, 5:17:50 AM10/24/09
to மின்தமிழ்
ஒன்று கவனியுங்கள். http://www.pallikalvi.in என்பது தமிழ்நாடு அரசு
தளம். அதில் 90% விஷயங்கள் ஆங்கிலத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழிலும் சில செய்திகள் பெயருக்கு உள்ளன. ஆனால் கல்வி பற்றிய
விவாதங்கள், கல்வி பற்றிய செய்திகள் ஆங்கிலத்தில் தான் நடக்கின்றன.

சீரிய சிந்தனைகளுக்கு தமிழ்நாடு அரசே தமிழை உபயோகப்படுத்துவதில்லை. 100
வருட தனித்தமிழ் இயக்கமும், அதன் ஆதரவாளரான 40 வருட திராவிட கழகங்கள்
ஆட்சியின் பிறகும் இந்த கதிதான். இதற்கிடையே கிரந்த எழுத்து களைப்பு,
ஆங்கில கலப்பு எதிர்ப்பு, தொல்காப்பிய தமிழ், நன்னுல்ல் தமிழ் , 30
எழுத்து தமிழ் என வேலையற்ற வேலைகள் நடக்கின்றன. தமிழின் தொன்மை பற்றி
எவ்வளவு பீற்றிக் கொண்டாலும், தமிழ் தோற்ற மொழி. உலக அளவில் தமிழ்
எப்பொழுதோ தோற்று விட்டது. அதற்கு compensatory activity தான் தொன்மை
துதி, `செம்மொழி` வழிபாடு.

விஜயராகவன்

Vedaprakash

unread,
Oct 28, 2009, 9:49:02 PM10/28/09
to மின்தமிழ்

வரைவு பாடத்திட்டம் தமிழில் வெளியாகததால் ஏமாற்றம்
அக்டோபர் 29,2009,00:00 IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5445

சமச்சீர் கல்வி வரைவு பாடத்திட்டங்களை, தமிழில் வெளியிடுவதில் கால தாமதம்
ஏற்பட்டுள்ளது. ஆங்கில வழியிலான பாடத்திட்டங்கள் வெளியாகி 10 நாட்கள்
கடந்த நிலையில், இன்னும் தமிழ் வழியிலான பாடத்திட்டம் வெளியாகவில்லை.
இதற்கிடையே, திட்டமிட்டபடி வரும் 31ம் தேதியுடன் கருத்து கேட்பு
நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம்
திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆசிரியர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் அடுத்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது.
முதற்கட்டமாக, முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு பொது பாடத்திட்டம்
அறிமுகமாகிறது. அதற்கு அடுத்த கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு பொது
பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு
வருவதையொட்டி, முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வரைவு
பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை இணையதளத்தில் 10
நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. பொதுமக்கள், ஆசிரியர்கள்,
கல்வியாளர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும், வரைவு
பாடத்திட்டத்தைப் பார்த்து கருத்துக்களைக் கூறலாம் என தமிழக அரசு
தெரிவித்தது.


வரைவு பாடத்திட்டம் ஆங்கிலத்தில் இருப்பதால், அதிகமானவர்கள் கருத்து கூற
முடியாத நிலை இருக்கிறது. தனியார் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள்
போன்றவர்கள் மட்டும், தங்களுடைய கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அரசு
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் அதிகளவில்
கருத்துக்களை முன் வைப்பதற்கு ஏற்ப, தமிழ் வழியிலான வரைவு பாடத்திட்டத்தை
முன்கூட்டியே வெளியிடவில்லை.ஆங்கில வழியிலான வரைவு பாடத்திட்டத்தை
மட்டும் முன்கூட்டியே வெளியிட்டு விட்டனர். அதை தமிழில் மொழிபெயர்த்து,
26 அல்லது 27 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. ஆனால்,
நேற்று வரை தமிழில் வெளியிடவில்லை. இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள்,
பெற்றோர்கள், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


வரைவு பாடத்திட்டம் மீதான கருத்து கேட்கும் நிகழ்ச்சியை, வரும் 31ம்
தேதியுடன் முடித்துக்கொள்ள ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி
நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இம்முடிவிற்கு, ஆசிரியர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் வழியிலான வரைவு பாடத்திட்டத்தை
உடனடியாக வெளியிடுவதோடு, கருத்து கூறுவதற்கு போதிய கால அவகாசம் அளிக்க
வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.கல்வித்துறை சார்பில்,
நேற்று முன்தினம் அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீர் கல்வி குறித்து,
கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கோவை மாவட்டத்தில் நடந்த கருத்து கேட்பு
கூட்டத்தில்,"ஒரு மணி நேரத்தில் வரைவு பாடத்திட்டத்தை படித்து புரிந்து
கொண்டு, கருத்து கூற வேண்டும் என்றால் எப்படி முடியும்? சமச்சீர் கல்வி
முறை குறித்து விளக்காமல், கருத்து கூறுவது சிரமம்' என்றும் ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.


உடுமலை அறிவியல் இயக்கச் செயலர் லெனின் பாரதி கூறுகையில், "பாடத்திட்டம்
குறித்து, கருத்து கூற அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம் போதாது.
வெளியிடப்பட்ட பாடத்திட்ட வரைவு முழுமையாக ஆங்கிலத்தில் உள்ளது. இதனால்,
அனைவரது கருத்துக்களையும் கேட்பதில் சிரமம் உள்ளது. கருத்துக்களைக்
கேட்பதற்கு கால அவகாசத்தை நீட்டிப்பதோடு, செயல்வழி கற்றல் திட்டத்தின்
நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்றார். என்ன நிலையில்
இருக்கும் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்றார்.


தடை விதித்த அதிகாரி : கோவையில் நேற்று முன்தினம், கருத்து கேட்பு
கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்டு பாடத்திட்டம் குறித்து கருத்து
கூறுமாறு பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என
பலர் கலந்து கொண்டனர்.


ம.தி.மு.க., பொறியாளர் பிரிவின் மாநில துணை அமைப்பாளர் ஈஸ்வரன்
பேசுகையில், "ஒரே பாடத்திட்டத்தை அனைவருக்கும் வைத்து விட்டால் சமச்சீர்
கல்வி வந்து விடாது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் திறன்,
எண்ணிக்கை ஆகியவற்றை உயர்த்த வேண்டும்' என்றார்.ஆசிரியர்கள் அல்லாதவர்களை
நீண்ட நேரம் பேச, முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி அனுமதிக்கவில்லை. இதனால்,
கருத்து தெரிவிக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


இது குறித்து அவர்கள் கூறுகையில், "சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை
அரசு ஏற்கனவே முடிவு செய்து விட்டது. கண் துடைப்புக்காக, இது போன்று
கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் எதிர்காலத்தை
நிர்ணயிக்கும் முக்கிய திட்டத்தில், இதுபோல் அவசரம் அவசரமாகச்
செயல்படுவது சரியல்ல' என்றனர்.


முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில், "பாடவாரியாக தேர்வு
செய்யப்பட்ட கல்வியாளர்களின் கருத்துக்களை அறிய மட்டுமே கூட்டம்
நடத்தப்படுகிறது. அனைவரையும் பேச அனுமதிப்பது சாத்தியமில்லை. கருத்து
தெரிவிக்க விரும்புபவர்கள், பள்ளிக்கல்வி இணைய தளத்தில் தெரிவிக்கலாம்'
என்றார்.


-நமது சிறப்பு நிருபர்-


Vedaprakash

unread,
Oct 29, 2009, 8:36:47 AM10/29/09
to மின்தமிழ்

சமச்சீர் கல்வி கருத்துக் கேட்புக் கூட்டம் கண் துடைப்பு – 28-10-2009
http://www.kalvimalar.com/tamil/NewsDetails.asp?id=4952

கருத்தரங்கில் சமூக ஆர்வலர்கள் ஆவேசம் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை
முடிவு செய்து விட்டு, அரசு பெயரளவில் கருத்துக் கூட்டம் நடத்துகிறது.
இது, வேலைக்கு ஆள் தேர்வு செய்து விட்டு தேர்வு வைப்பது போன்றது என
நேற்று நடந்த சமச்சீர் கல்வி கருத்தரங்கில் சிலர் கருத்து தெரிவித்தனர்.
சமச்சீர் கல்வி பற்றி கோவையில் நடந்த கருத்தரங்கில் ஆசிரியர்களைத் தவிர
பிற சமூக ஆர்வலர்களை விரிவாக பேச, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
அனுமதிக்க மறுத்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பாடத்திட்டத்தை
ஏற்கனவே முடிவு செய்து விட்டு, கண் துடைப்புக்காக கருத்துக் கேட்பு
கூட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் ஆவேசமுடன் தெரிவித்தனர்.

கோவையில் நடந்த சமச்சீர் கல்வி கருத்தரங்கில், கல்வி வளர்ச்சியில் அக்கறை
உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என
அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று கருத்து தெரிவிக்க ஆசிரியர்கள்
பலர் வந்திருந்தனர். தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் கிருஷ்ணராஜ்
பேசுகையில், சமச்சீர் கல்வித் திட்டம் வந்தால் வசதி படைத்தவர்கள் தங்கள்
குழந்தைகளை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற்றிக் கொள்வர்.

வசதியற்றவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றிக் கொள்வார்கள். இதனால்
தனியார் பள்ளிகளும் அதில் பணிபுரியும் ஆசிரியர்களும்தான்
பாதிக்கப்படுவர், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு கிராக்கி
ஏற்படும், என்றார்.
ம.தி.மு.க., பொறியாளர் பிரிவின் மாநில துணை அமைப்பாளர் ஈஸ்வரன் என்பவர்


பேசுகையில், ஒரே பாடத்திட்டத்தை அனைவருக்கும் வைத்து விட்டால் சமச்சீர்
கல்வி வந்து விடாது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் திறன்,

எண்ணிக்கையையும் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.எஸ்.சி.,
பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாய் அரசு
செலவிடுகிறது.

தமிழக அரசுப்பள்ளி மாணவனுக்கு 1,100 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
இதை உயர்த்த வேண்டும். கல்விக்கென மத்திய பட்ஜெட்டில் நான்கு சதவீதம்
மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதை எட்டு சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றார்.
கருத்தரங்கில் விரிவாக பேச ஆசிரியர்களைத் தவிர பிறரை மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் ஆனந்தி அனுமதிக்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி
வளர்ச்சியில் அக்கறை கொண்டு கருத்து தெரிவிக்க வந்திருந்தவர்கள் ஏமாற்றம்
அடைந்தனர்.

இது பற்றி அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், சமச்சீர் கல்விக்கான


பாடத்திட்டத்தை அரசு ஏற்கனவே முடிவு செய்து விட்டது. கண் துடைப்புக்காக

இது போன்ற கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது வேலைக்கு ஆளை
தேர்வு செய்து விட்டு தேர்வு வைப்பதைப் போன்றது. மாணவர்களின்
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய விஷயத்தில் இது போல் அவசரம் அவசரமாக
செயல்படுவது சரியல்ல, என்றனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி இது பற்றி கூறுகையில், பாடவாரியாக
தேர்வு செய்யப்பட்ட கல்வியாளர்களின் கருத்துக்களை அறிய மட்டுமே மாநிலம்
முழுவதும் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அனைவரையும் பேச


அனுமதிப்பது சாத்தியமில்லை. கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள்,

பள்ளிக்கல்வி இணையதளத்தில் வரைவு பாடத்திட்டத்தை படித்து அதன் மூலமாகவே
கருத்துக்களை தெரிவிக்கலாம், என முடித்துக் கொண்டார்.

Maravanpulavu Sachithananthan

unread,
Oct 29, 2009, 9:03:11 AM10/29/09
to மின்தமிழ்
1. இந்தியத் தேசிய கீதத்தில் திராவிட என்ற சொல் வருகிறதற்குத் தேவையான
அறிமுகமே திராவிட காலாச்சாரத் தொன்மங்கள் பற்றிய பாடப்பகுதியாக இருக்குமே
அன்றிப் பிரிவினைக்குரியதாக இருக்கும் எனக் கருதலாமா?

3,4. 3இல் வேத காலத்தைச் சொல்லியபின்பே மாணவர்களுக்கு அதிலிருந்து
மாறுபடும் சமண, புத்த நெறிகளை 4இல் கூறுவது பொருத்தமாக இருக்கிறது.

3இல் ஆரிய, திராவிட ஆகிய சொல்லாடலின்றி, இந்திய வரலாறில்லையே!
வரலாற்றாசிரியர்கள், பாசுரங்களிலிருந்து பாரதிவரையான இலக்கியர்கள்
பயன்படுத்தியதைச் சாதிக்கட்டமைப்புகளிலிருந்து புறமாகி,
மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுச் சமூகவியல் கண்ணோட்டத்தில் மாணவர்
பயின்று தெளிவுற இத்தகைய வரலாற்றுப் பின்னணிச் செய்திகள் தேவையல்லவா?

Vedaprakash

unread,
Oct 29, 2009, 11:03:48 PM10/29/09
to மின்தமிழ்

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தமிழ் வழியில் வெளியீடு
அக்டோபர் 30,2009,00:00 IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18348

சென்னை: சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு
வரை தமிழ் வழியிலான வரைவு பாடத்திட்டம் நேற்று வெளியிடப்பட்டது. ஆங்கில
வழியிலான வரைவு பாடத்திட்டம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், தமிழ்
வழியிலான வரைவு பாடத்திட்டம், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் நேற்று


வெளியிடப்பட்டன.


முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு, நேரடியாக அறிவியல்
பாடத்தை வைக்காமல், தாவரங்கள், பூக்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை
பற்றி விளக்கும் வகையில், "சூழ்நிலையியல்' என்ற பாடம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை
அறிவியல் பாடம் உள்ளது. ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல்
தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைகள் இடம் பெற்றுள்ளன.


9ம் வகுப்பு மாணவர்களுக்கு, மன நலன்கள், போதை மருந்துக்கு அடிமையாவதால்
ஏற்படும் பாதிப்புகள், மருந்து பழக்கத்திற்கு அடிமையாவதற்கான காரணங்கள்
போன்றவை விளக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்
திட்டத்தில், தற்போதைய அறிவியல் வளர்ச்சி, விண்வெளி ஆய்வு ஆகியவை குறித்த
பொருள் கள் இடம் பெற்றுள்ளன.


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பருவமடைதல், இனப்பெருக்கத்தில்,
"ஹார்மோன்களின்' பங்கு, ஊட்டச்சத்து ஆகியவை குறித்து பாடங்கள் இடம்
பெற்றுள்ளன. தமிழ் பாடத்தை பொறுத்தவரை, தமிழ் மொழி, தமிழர் வாழ்வு, தமிழ்
மரபு, பண்பாடு, தமிழ் கவிஞர்கள், உலகறிந்த தமிழர்கள், நாட்டுப்புற பாடல்
கள், நாள்தோறும் சந்திக்கும் சமுதாய பிரச்னைகள், பெண்கள் முன்னேற்றம்,
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், மதசார்பற்ற கருத்துக்கள், சிந்தனையைத்
தூண்டும் கதைகள் ஆகியவை பாடப் பொருளாக அமைந்துள்ளன.

Vedaprakash

unread,
Oct 29, 2009, 11:20:33 PM10/29/09
to மின்தமிழ்
1. எப்படி போலியான / சரித்திர ஆதாரமற்ற இனவாதங்கள் வேற்றுமையை வளர்க்கும்
என்பதை 3ல் குறிப்பிட்டுள்ளேன்.

2. "ஆரிய, திராவிட ஆகிய சொல்லாடல்" மொழியியல் ரீதியிலாக இல்லாமல், இல்லாத
"இனவெறி' ரீதியில் ஆடுவதால்தான் பிரச்சினை.

3. NCERT முதல் SERT வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு பாடபுத்தகங்கள்
எழுதும்போது, எப்படி எவ்வாறு எழுத வேண்டும் என்பதில் உள்ள பற்பல தவறுகள்,
பிழைகள், எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. அந்த இணைதளத்தில் விரிவாகக்
காணலாம். "மதசார்பின்மை" / செக்யூலரிஸ ரீதியில் எழுத வேண்டும்
என்பதிலேயே, சரித்திர ஆசிரியர்களுக்கு பாரபட்சம் வந்து விடுகிறது.

4. அவ்வாறு மதசார்பின்மை" / செக்யூலரிஸ "நம்பிக்கை" வரும்போது,
பகுத்தறிவு எங்கே உள்ளது?

5. தாங்கள் குறிப்பிட்டது போல, எங்கே, எப்படி

அ. "சாதிக்கட்டமைப்புகளிலிருந்து புறமாகி,

ஆ. மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுச்

இ. சமூகவியல் கண்ணோட்டத்தில்

ஈ. மாணவர் பயின்று தெளிவுற இத்தகைய வரலாற்றுப்
பின்னணிச் செய்திகள் தேவையுடன் எழுதியுள்ளனர்
என்று விளக்க முடியுமா?

6. அவ்வாறு இல்லை என்றுதான் NCERT வல்லுனர்களே தமக்குள் போரிட்டுக்
கொண்டனர்.

7. உச்ச நீதி மன்றமும் தீர்ப்பளித்தது. ஆனால் அதை புரிந்து
கொள்ளவில்லையே. பழைய பாட்டுதானே, பாடுகின்றனர் எல்லோரும்?

On Oct 29, 6:03 pm, Maravanpulavu Sachithananthan
<tamiln...@gmail.com> wrote:

Vedaprakash

unread,
Oct 30, 2009, 10:33:35 PM10/30/09
to மின்தமிழ்
சமச்சீர் கல்விக்கு கல்வியாளர்கள் ஆதரவு

First Published : 28 Oct 2009 12:26:49 AM IST; Last Updated : 28 Oct
2009 01:30:52 PM IST
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Thirunelveli&artid=145864&SectionID=139&MainSectionID=139&SEO=&Title=

திருநெல்வேலி, அக். 27: பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
சமச்சீர் கல்வி கருத்துக் கேட்புக் கூட்டத்தில், இத் திட்டத்துக்கு
கல்வியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்
சமச்சீர் கல்வி வரைவுப் பாடத் திட்டம் தொடர்பான கருத்துக் கேட்புக்
கூட்டம் பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை தொடங்கி வைத்து முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனத்தின் மிகுராஜ் பாத்திமா பேசியது:

தற்போது மாநில அரசு பாடத் திட்டம், சி.பி.எஸ்.இ., ஓரியண்டல், மெட்ரிக்
என பலவகை பாடத்திட்டங்கள் உள்ளன. சமச்சீர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்
பின், சமச்சீர்கல்வி, சி.பி.எஸ்.இ. என இரு பாடத்திட்டங்கள் மட்டுமே
இருக்கும்.

பாடத் திட்டங்கள் வேறுபடுவதால் உள்ள குறைகளை நீக்கும் விதத்தில்
சமச்சீர் கல்வி வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது
சுதந்திரமான சிந்தனை, தொலை நோக்குப்பார்வை, தரமான கல்வி, நன்றாகக்
கற்பிக்கும் சூழ்நிலையை உருவாக்குதலை நோக்கமாக கொண்டுள்ளது.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை எழுதும் ஆசிரியர்களுக்கு இம் மாதம் 31
ஆம் தேதி திறனாய்வு தேர்வு நடைபெறுகிறது. இந்த பாடத் திட்டத்துக்கு
அரசியல்கட்சிகளிடமும், மக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. இப்
பாடத்திட்டம் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் கற்றுக்கொடுக்கப்படும்
என்றார் மிகுராஜ் பாத்திமா.

பின்னர் கல்வியாளர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மாரியப்பன்:

சமச்சீர் வரைவு பாடத்திட்டத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.
ஒவ்வொரு பாடத்துக்கும் 10 ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாடத் திட்ட மாற்றத்தில் வலுவான கருத்து கூறப்பட்டால், அந்தக் குழுவினர்
மாற்றங்கள் செய்வர்.

தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் அல்போன்ஸ் அம்மாள்:

சமச்சீர் கல்வி திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உயர்கல்வித்
துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆனால் 6 முதல் 12 ஆம் வகுப்பு
வரை ஒரே நேரத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்
என்பது என்னுடைய கருத்து. கிராமப்புற மாணவர்கள் ஐஐடியில் சேர முடியாத
நிலை உள்ளது. கிராமப்புற மாணவர்கள், நகரத்தில் உள்ள மாணவர்களுக்கு இணையாக
தரமான கல்வியைப் பெற சமச்சீர் கல்வித் திட்டம் அவசியம்.

சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயராமன்:

ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைவருக்கும் சீரான கல்வி கிடைக்க இத்
திட்டம் தேவை.

மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பரிமளா:

உலகம் அறிவியல் தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு
ஏற்றார்போல பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அறிவியல் வளர்ச்சியை மையமாக வைத்தே
உருவாக்கப்பட வேண்டும். வகுப்பறையில் மாற்றம் வேண்டும்.

சமச்சீர் கல்வியால் எழுதுவது, கவனிப்பது, கேள்வி கேட்பது, படிப்பது என
அனைத்து திறமைகளும் மாணவர்களுக்கு சமமாக உருவாகும். சமச்சீர் கல்வியின்
மூலம் வருங்கால தலைமுறையினர் அனைத்து வகையிலும் தரமான கல்வியைப் பெற்று
இருப்பார்கள்.

இக் கருத்தரங்கில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

Vedaprakash

unread,
Nov 2, 2009, 7:07:54 PM11/2/09
to மின்தமிழ்

சாத்தியப்படுமா, சமச்சீர் கல்வி : கல்வியாளர்கள் கருத்து
நவம்பர் 03,2009,00:00 IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5502

சமச்சீர் கல்வி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. அடுத்தாண்டு முதல் தமிழகத்தில் அறிமுகமாக உள்ளது. ஒன்றாம்
வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மெட்ரிக், ஸ்டேட் போர்டு என அனைத்து
பள்ளிகளுக்கும் ஒரே வகையான பாடத்திட்டத்தை அமைத்து, பாட நூல்களை அரசு
வழங்குகிறது. முதல்கட்டமாக, ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்புகளுக்கு
பொது பாடத்திட்டம் அறிமுகமாகிறது. அதற்கு அடுத்த கல்வியாண்டில், இதர
வகுப்புகளுக்கு பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.


சமச்சீர் கல்வி என்பது சமத்துவ கல்வி; மாணவர்களின் தரத்தை உயர்த்தும்
கல்வி என ஒருபுறம் ஆதரவு குரல் ஒலிக்கிறது. சமச்சீர் கல்வி வரைவு
பாடத்திட்டம், அரசு பள்ளி மாணவர்களின் நிலைக்கு அதிகமாக உள்ளதால்,
தேர்ச்சி சதவீதம் குறையும் என மற்றொருபுறம் எதிர்ப்புக்குரலும்
எதிரொலிக்கிறது. சமச்சீர் கல்வித்திட்டம் அமலுக்கு வருவதையொட்டி, முதல்
வகுப்பு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, பள்ளி கல்வித்துறை இணைய தளத்தில்
14 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. தமிழ் வரைவு பாடத்திட்டம் சில
நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. பொதுமக்கள், ஆசிரியர்கள்,
கல்வியாளர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரும் வரைவு பாடத்திட்டத்தை
பார்த்து, கருத்துகளை பதிவு செய்யலாம்; அரசுக்கு தெரிவிக்கலாம் என தமிழக
அரசு தெரிவித்தது. அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
கல்வியாளர்கள் வரைவு பாடத்திட்டம் மற்றும் சமச்சீர் கல்வி குறித்து
கருத்து கேட்கும் கூட்டமும், கல்வி துறை சார்பில் நடத்தப்பட்டன. இதில்,
சமச்சீர் கல்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள்,
கூறப்பட்டு வருகின்றன.


திருப்பூர் பகுதி கல்வியாளர்கள் கருத்து:


மாவட்ட கல்வி அலுவலர் (பொ) நடராஜன் (கே.எஸ்.சி., பள்ளி தலைமை ஆசிரியர்):
சமச்சீர் கல்வி என்பது அனைத்து மாணவர்களையும் பொது பாடத்திட்டத்தின் கீழ்
இணைக்கிறது. மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வை போக்கும். ஆரோக்கியமான
சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திடும். கிராமப்புற மாணவர்களின் நிலை
உயரக்கூடும். அதனால், முழு மனதோடு எதிர்பார்க்கிறேன். வணிக ரீதியாக
அமல்படுத்த வேண்டிய ஒன்று. பாடத்திட்டங்கள், தற்போதைய தரத்தை விட
சிறப்பாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை, சுய விருப்பங்களை ஒதுக்கி
விட்டு, பொது நல சிந்தனையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். சில காலங்களுக்கு
தடுமாற்றம், எதிர்ப்புகள் உண்டாகும்; அதை பொருட்படுத்தாமல் செயல்படுத்த


வேண்டும்.


சாமிநாதன் (கே.எஸ்.சி., பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர்): சமச்சீர்
கல்வி என்பது தமிழகத்துக்கு புதிது என்றாலும், மற்ற மாநிலங்களில்
சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. கல்வி சுதந்திரத்தை கொண்டு வர,
எத்தனையோ கல்வியாளர்கள் போராடி வருகின்றனர். சமச்சீர் கல்வி அறிமுகம்
செய்யப்படுவதால், கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என
அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி கிடைக்கும். இதுவே, உண்மையான
கல்வி சுதந்திரம். திட்டத்தையும், புத்தகங்களையும் அறிமுகம் செய்வதோடு
நிறுத்திக் கொள்ளாமல், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த
வேண்டும்; புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ப, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு
பயிற்சி அளிப்பது என அனைத்து தரப்பிலும், தமிழக அரசும், கல்வித்துறையும்
தமிழக கல்வியின் மேல் கவனம் செலுத்தினால், குறுகிய காலத்தில் சிறப்பான
கல்வி பெற்ற மாநிலமாய் தமிழகம் மாற வாய்ப்புத்தரும் சிறப்பான திட்டம்.


விஜயானந்தம் (ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியை): அறிவு திறனுக்கும்,
மதிப்பெண் பெறுவதற்கும் மெட்ரிக் பள்ளி தான் சிறந்தது என்று அனைவரும்
கருதும் நிலை மாறும். சமச்சீர் கல்வி, தேவையான திட்டம்; மிகவும்
மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். தற்போது, அரசு பள்ளிகளை விட மெட்ரிக்
பள்ளிகளே அதிக அளவில் உள்ளன. படிப்புக்காக, அதிக பணத்தை பெற்றோர்
செலவழிக்கின்றனர்; இவை குறையும். கல்வி முறையில் எந்த வேறுபாடும்
இருக்காது. பாடப்புத்தகம், ஏழை குழந்தைகளுக்கு இருக்கும் தாழ்வு
மனப்பான்மையை போக்கும். குழந்தைகள், மாறி வரும் காலத்தை உணர்ந்து படிக்க
வேண்டும். அரசு எவ்வித காரணங்களுக்காகவும் தாமதிக்காமல், அனைவரும்
பயன்பெறும் விதத்தில், விரைந்து செயல்படுத்தினால் சிறப்பாக அமையும்.


ஈஸ்வரன் (மாநில பொதுக்குழு உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழகம்): பல
தரப்பில் இருந்து எதிர்ப்புகள் உருவாகினாலும், தமிழக அரசு விரைந்து
செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது
வரவேற்கத்தக்கது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிற்சி
வகுப்பை அதிகப்படுத்த வேண்டும். வெளியிடப்பட்ட வரைவு பாடத்திட்டத்தை
பார்த்ததில், கணிதத்தில் பெரிதாக மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. ஆங்கில
பாடம் சற்று கடினமாக இருக்கிறது. அறிவியல் பாடம் மாற்றப்பட்டுள்ளது.
குழந்தைகளை மையப்படுத்தி, பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தேக்கடி
படகு விபத்து போன்ற நிஜ சம்பவங்களை கூறி, நீச்சலின் அவசியத்தை பாடத்தில்
அறிவுரையாக கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்வி நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட
வேண்டியது.


மேரி விமலாபாய் (பழனியம்மாள் பள்ளி தலைமை ஆசிரியை): சமச்சீர் கல்வி
என்பது தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பான, பயனுள்ள
திட்டம். இதனால், அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயரும் என்பதில் எந்த
மாற்றுக்கருத்தும் இல்லை. தற்போது, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு
இருப்பதை போல், அனைத்து வகுப்புகளுக்கும் வர இருப்பதால்,
மேல்படிப்புக்குச் செல்லும் போது, மாணவர்களுக்கு பாடம், மொழி போன்ற எந்த
சிரமமும் இல்லாமல் இருக்கும். அரசு பள்ளிகளில் ஆங்கில முறை கல்வியை
ஊக்குவிக்க வேண்டும். இக்கல்விக்கு வேண்டிய வசதிகளை பள்ளிகளில் அமைக்க
வேண்டும். கடந்தாண்டு பத்தாம் வகுப்பு மெட்ரிக் பள்ளிகளுக்கு,
பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்ட போது, எதிர்ப்புகள்
இருந்தாலும், அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதுபோல், இதுவும்
ஏற்றுக்கொள்ளப்படும். அரசு, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால்
நன்றாக இருக்கும்.


சவுகத் அலி (பழனியம்மாள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்):
கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த உதவும்; ஏழை மாணவர்கள்
பயன்பெறுவர். இதன்மூலம் சிறந்ததொரு கல்வி, அரசு பள்ளிகளுக்கு கிடைக்கும்.
மெட்ரிக் பள்ளிகளில் 12, 13 பாடங்கள் உள்ளன; தனித்தனியே ஆசிரியர்கள்,
பயிற்சி வகுப்புகள் உள்ளன. இதனால், சிறந்த கல்வி மெட்ரிக் மாணவர்களுக்கு
கிடைக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இத்தகைய
பாடப்புத்தகங்கள் இல்லை. அதிகமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை; நவீன
பாடத்திட்டமும் இல்லை. மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற மேல்படிப்புக்கு
செல்லும்போது, நகர்ப்புற மாணவர்களே அதிக அளவில் இடம் பெறுகின்றனர்.
மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு கடினமாகத்தான் இருக்கும். அதற்குபின், நல்ல
பயன் கிடைக்கும் என்பது உறுதி.


சக்திதேவி (செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி, தாளாளர்): சமச்சீர்
கல்வி திட்டம், மறைமுகமாக சி.பி.எஸ்.இ., பள்ளிகளை அதிகப்படுத்தும். அரசு
மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் என்று வருவதால்,
மெட்ரிக் பள்ளிகள் தங்களை நிரூபிக்க உழைக்க வேண்டும். இது, சவாலானது.
சிலர், இந்தியை அவசியமாக கருதுகின்றனர். இதில், அந்த குறையுள்ளது. பேங்க்
மற்றும் அடிக்கடி வேலை மாற்றம் பெறும் பணிகளில் உள்ள பெற்றோர்களின்
குழந்தைகளுக்கு, இது ஏற்றதல்ல. எனினும் சிறப்பான கல்வி தான். இது, ஏழை
மாணவர்களுக்கு பயனளிக்கும் என்பது சந்தோஷம் தருகிறது. பாடத்திட்டத்தை
மட்டும் வைத்துக்கொண்டு, மாணவர்களின் தரத்தை உயர்த்த முடியாது. அரசு
பள்ளி ஆசிரியர்கள், இதற்கு உழைக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு தேர்ச்சி
சதவீதம் பாதிக்கப்படும்; பின் சரியாகி விடும்.


ஸ்ரீனிவாசன் (வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்): ஒரே
பாடப்புத்தகம் என்பது சிறப்பான ஒன்று தான். ஆனால், தற்போதுள்ள மெட்ரிக்
பாடத்திட்டத்தின் நிலையை விட குறைவாக இருந்தால், பயனற்றதாகி விடும்.
தமிழகத்தின் கல்வித்தரம் குறையக்கூட வாய்ப்புள்ளது. மெட்ரிக்
பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. ஆனால், அதே சமயம் அரசு
பள்ளி மாணவர்களின் தரம் எந்தளவு உயரும் என்பது தெரியாது. முதலில், பள்ளி
ஆசிரியர்களை, பாடத்திட்டத்துக்கு ஏற்ற விதத்தில், தயார்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களின் தரம் உயர வேண்டும். சில ஆண்டுகளுக்கு தடுமாற்றங்கள்
இருக்கும். சமச்சீர் கல்விக்கு அரசு புத்தகம் வழங்கு வதாக கூறியுள்ளது.
தமிழகத்தில் 4,400 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளுக்கும், மே,
ஜூன் மாதங்களுக்குள் தயார் செய்து, எப்படி புத்தகம் வினியோகிக்கும்
என்பது தெரியவில்லை. இதை அமல்படுத்த நிறைய சிரமங்கள் உள்ளன. ஆனாலும், இது
சிறப்பான திட்டமே.


மதனகோபால் (விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்):
மாணவர்களின் தரம் உயர்த்தப்படுவதும், குறைவதும் பாடத்திட்டத்தின்
தன்மைக்கு ஏற்றவாறே உள்ளது. தற்போது பின்பற்றப்படும் விதிமுறைகள்
பாதிக்கப்படும். மெட்ரிக் பள்ளிகளுக்கு பாதிப்பு வரும் என்று கூறப்படுவது
தவறான கருத்து. எத்தனை பாடங்கள் படிக்கிறோம் என்பது கணக்கில்லை; எப்படி
படிக்க வைக்கிறோம் என்பதே உண்மை. மெட்ரிக் பள்ளி, அரசு பள்ளி என இரு
தரப்பிலும் மாணவர்களின் நிலை மாறும். தரமான கல்வி, புதுமையான கல்வி என்று
அறிமுகப்படுத்தினாலும், கிராமப்புற மாணவர்களுக்கு பயன்பட வில்லை என்றால்,
எந்த பயனும் இல்லை. சிறந்தது, சிறப்பற்றது என்பது இப்போது தெரியாது;
நடைமுறைப்படுத்தி, பயன்படுத்துகையில் மட்டுமே தெரியவரும்.இவ்வாறு,
கருத்து கூறினர்.

Vedaprakash

unread,
Nov 5, 2009, 9:36:15 PM11/5/09
to மின்தமிழ்

வரைவு பொது பாடத்திட்ட கருத்தரங்கம்
நவம்பர் 06,2009,00:00 IST
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18555

சென்னை: "பள்ளிகளுக்கான பாடத்திட்டங்கள் வகுப்பதை அரசியல்வாதிகளிடம்
விடுவது சரியல்ல. அது, எதேச்சதிகார ஆட்சி உணர்வை மாணவர்களிடம் வரவழைத்து
விடும்' என, சமச்சீர் கல்விக் குழுவின் தலைவர் முத்துக்குமரன்


தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பள்ளி கல்வித்துறை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி இயக்ககம் தயாரித்து வெளியிட்ட, "வரைவு பொது பாடத்திட்டம் - 2009'
குறித்த கருத்தரங்கம், சென்னை பல்கலைக்கழகத்தின் மெரீனா வளாகத்தில் உள்ள
பவள விழா அரங்கில் நேற்று நடந்தது. இக்கருத்தரங்கத்தில் சமச்சீர் கல்விக்
குழுத் தலைவர் முத்துக்குமரன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின்
அதிகாரப்பூர்வ வலைதளம் தீதீதீ.ண்ச்ட்ச்ஞிடஞுஞுணூ டுச்டூதிடி.டிண துவங்கி
வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் முத்துக்குமரன் பேசியதாவது: சமச்சீர் கல்வியைப்
பொறுத்தவரை ஐந்து பாடங்களுக்கு மட்டுமே பாடத் திட்டங்களை அறிமுகம்
செய்துள்ளனர். இந்த திட்டத்தில், குழந்தைகளுக்கு தேவையான கதைகள்,
கைத்தொழில், உடற்பயிற்சி, சுகாதாரம் மற்றும் மொழிப்பற்று உள்ளிட்ட
விவரங்கள் இடம் பெறவில்லை. இதில், பாடத்திட்டங்களைத் தவிர்த்து வசதிகள்,
மாணவர் - ஆசிரியர் விகிதம், தேர்வு எழுதும் முறை பற்றிய 144 பக்கங்கள்
ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட மாணவர்களுக்குத் தேவையில்லாத விவரங்கள்
நிறைய உள்ளன.


தமிழுக்கு 40 பக்கங்களும், கணிதத்திற்கு 54 பக்கங்களும் மற்றும்
அறிவியலுக்கு 46 பக்கங்களும் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்த திட்டத்தில்
ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து 40 சதவீதம் இடம்
ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பாடத்திட்டத்தை மாணவன் பார்த்தால் பயந்து
விடுவான். இன்றைய மாணவர்கள் தாய்மொழியை சரியாக கற்றுக் கொள்வதில்லை. ஒரு
மாணவனுக்கு கல்விப் பயிற்சியை துவங்கும் போதே ஆங்கிலத்தை கற்க வேண்டும்
என்ற அவசியமில்லை.


ஒரு புதிய மொழியை கற்பதற்கு 30 முதல் 40 நாட்கள் போதுமானது. ஆங்கிலத்தை
கற்பது தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று பாடத் திட்டத்தில்
கூறப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைப் பாருங்கள், அவர்களது தாய்மொழிக்கே
முக்கியத்துவம் அளிக்கின்றனர். அமெரிக்காவிற்கு சவால் விடும் அளவில்
பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கின்றனர். இதை நாமும் பின்பற்ற வேண்டும்.
தற்போதைய பாடத்திட்டங்கள் மாணவர்கள் படிக்க ஏதுவாக இல்லை.


தமிழ் மொழியின் மேன்மையை குறிக்க கல்வி என்ற சொல்லே போதும். தமிழை எப்படி
கற்பிக்க வேண்டும் என்று திருக்குறள் முதல் பல தொன்மையான நூல்களில்
கூறப்படுகிறது. பள்ளிகளுக்கான பாடத்திட்டங்கள் வகுப்பதை
அரசியல்வாதிகளிடம் விடுவது சரியல்ல, அது எதேச்சதிகார ஆட்சி உணர்வை
மாணவர்களிடம் வரவழைத்து விடும். இதைப் பற்றி கல்வியாளர்கள் சிந்திக்க
வேண்டும்.இவ்வாறு முத்துக்குமரன் பேசினார்.

Vedaprakash

unread,
Dec 2, 2009, 7:54:28 PM12/2/09
to மின்தமிழ்
இதைபற்றி இங்கு மற்றும் கீழ்கண்ட தளத்தில் உள்ள பிரச்சினைகள் அலசப்
பட்டன:
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/ab0f9cddeaa8ad93/adba9a1a3cb51576?#adba9a1a3cb51576

http://indianhistoriographymethodology.wordpress.com/2009/10/24/தமிழக-சமச்சீர்-கல்விமுறை/

24-10-2009 அன்றே http://www.pallikalvi.in/ல் எனது மேற்கண்ட பதிலை
பதிசெய்தேன்.

கார்த்திகேயன் என்பவரும் 01-12-2009 அன்று புதுக்கோட்டையிலிருந்து,
அநத்தகைய பாட-அமைப்பு இந்துமதத்திற்கு எதிராக உள்ளது என்பதனை
உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார்.

உடனே அடுத்த நாளே, அமைச்சர் விளக்கத்துடன் வருகிறார்.

இதிலிருந்தே தெரிகிறது, நாத்திக அரசு படிப்பை அரசியல் ஆக்குகிறது.

இது நிச்சயமாக எல்லா கோணங்களிலும் மக்களுக்கு எதிரானதே, ஆகயால்
எதிர்க்கப்ப்டவேண்டியது ஒன்று.

Geetha Sambasivam

unread,
Dec 3, 2009, 3:59:09 AM12/3/09
to mint...@googlegroups.com
நீங்களும், நானும் எதிர்த்து என்ன ஆகப் போகிறது?? யாருமே எதிலேயும் இது பத்திப் பேசவே இல்லை. இந்தச் செய்திகளைப் படிச்சதிலே இருந்து யாரானும் இது பத்தி விரிவாய்ப் பேசுவாங்க, அரசுக்குப் புரியும்படியானு நினைச்சால், எல்லாக் கல்வியாளர்களும் வாயைத் திறக்காமலே இருக்காங்க. :(

2009/12/3 Vedaprakash <vedamved...@yahoo.com>

Innamburan Innamburan

unread,
Dec 3, 2009, 8:42:35 PM12/3/09
to mint...@googlegroups.com
அரசியல் இப்படித்தான் 

2009/12/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
இன்னம்பூரான்

Vedaprakash

unread,
Dec 3, 2009, 9:26:45 PM12/3/09
to மின்தமிழ்
இந்திய பாடதிட்டங்கள் காவிமயமாக்கப் படுகின்றன (saffronization) என்று
நிறைய படித்தவர்கள், செக்யூலரிஸ்டுகள் என மற்Raவரும் அதிகமாகப் பேசினர்.
விவாதித்தனர். வழக்குகளிம் போட்டனர்.

ஆனால், செப்டம்பர் 12, 2002ல் உச்ச நீதி மன்றத்தில் எல்லா வழக்குகளையும்
தள்ளுபடி செய்து தீர்ப்பளித்ததாவது:

1. சமஸ்கிருத மொழி அறிமுகம்.

2. வேத ஜோதிடம் கற்றல்

3. வேத கணிதம் திணிப்பு

4. ஹிந்து பண்டிகைகள் தேசிய பண்டிககளாகக் கருதப்படுவது.

5. விஞ்ஞான சிந்தனை (scientific temper)

என்ற முக்கியாமான விஷயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அருணா ராய் மற்றும்
மற்றவர்கள் போட்ட வழக்குகளை தள்ளுபடு செய்தது.

அதாவது,

1. சமஸ்கிருத மொழி கற்பது தவறில்லை.

2. கல்வி பாடத்தில் குறிப்பிட பட்டது "வானியல்" என்பது "வேத ஜோதிடம்"
அல்ல, "வானியல்" என்பது விஞ்ஞானம் அது "வேத ஜோதிடம்" என்பதிலிருந்து
வேறுபட்டது என்பது நன்கு தெரிந்ததே [வழக்குத் தொடுத்தவர்கள் அத்தகைய தவறு
செய்து விட்டு ஊடகங்களில் பெரிய பிரமிப்பையும் ஏற்படுத்தினர்].

3. வேத கணிதம் திணிப்பு - இங்கு "வேத" என்ற் அடைச்சொல் காலத்தைக்
குறிப்பதாகிறெதேத் தவிர மதத்தைக் குறிக்கவில்லை. இப்பாடம்
தினிக்கப்படவில்லை, கணினி உதவியுடன் உபயோகிக்கலாம் என்று ஆலோசனையாகத்தான்
குறிப்பிடப்பட்டுள்ளது [ஆனால் படித்தவர்கள் மனுஸ்மிருதி திணிக்கப்
படுகிறது என்றெல்லாம் பிரசாரம் செய்தார்கள்].

4. ஹிந்து பண்டிகைகள் தேசிய பண்டிககளாகக் கருதப்படுவது - இது மிகவும்
திரிக்கப்பட்ட வாதம் ஆகும், ஏனெனில் அந்த பாடதிட்ட புத்தகத்தில் அவ்வாறு
எங்குமே சொல்லப்படவில்லை [இவ்வாறாக பொய் சொல்லியே வழக்குப் போட்டு
ஊடகங்கள் மூலம் பிரச்சரமும் செய்தார்கள் என்றால் அவர்களது பலத்தை /
யோக்கியதைப் பார்த்து கொள்ளுங்களேன்].

5. விஞ்ஞான சிந்தனை - இதுவும் அப்பட்டமான திரிபு வாதமே. "முகலாயர்கள்
இந்த நாட்டின் மீது படையெடுத்தனர், ஆனால் ஆங்கிலேயர்களோ இந்நாட்டை
வெற்றிகொண்டனர்" இவ்வாறு கூறுவதே திரிபுவாதம் தான்.

இந்த மேற்கண்ட புகார் எந்தவிதத்திலும் கவனம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை
அதனால், தள்ளுபடி செய்லிறேன்.

என்று நீதிபதி கூறினார்!

ஆனால் இன்றும் நன்றாகப் படித்தவர், நிறைய படித்து டாக்டர், முனைவர்,
பேராளர் முதலிய பட்டம் பெற்றவர்கள் இந்த உண்மைகளை மறைத்து பொய்கள்
சொல்லியே காலத்தை கடத்துகின்றனர்.

மாணவர்களுக்கு பொய் புகட்டி வெறுப்பு வளர்க்கிறார்கள்.

அந்த தீர்ப்பு தமக்கு சாதகமாக இல்லை என்றதுடன் தீர்ப்பையே மறைக்க முடிவு
கட்டினர்.

அதன் விளைவுதான் இது.

For more details read:

Supreme court of India Judgement (12 September, 2002) in the matter of
the National Curriculim Framework for School Education, 2000 published
by NCERT, New Delhi.

Also available in the NCERT website.

-------------------------------------------------------------------------------------

On Dec 4, 6:42 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> அரசியல் இப்படித்தான் [?][?][?][?]
>
> 2009/12/3 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
>
>
> > நீங்களும், நானும் எதிர்த்து என்ன ஆகப் போகிறது?? யாருமே எதிலேயும் இது
> > பத்திப் பேசவே இல்லை. இந்தச் செய்திகளைப் படிச்சதிலே இருந்து யாரானும் இது
> > பத்தி விரிவாய்ப் பேசுவாங்க, அரசுக்குப் புரியும்படியானு நினைச்சால், எல்லாக்

> > கல்வியாளர்களும் வாயைத் திறக்காமலே இருக்காங்க. :([?][?][?][?]
>
> > 2009/12/3 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>


>
> > இதைபற்றி இங்கு மற்றும் கீழ்கண்ட தளத்தில் உள்ள பிரச்சினைகள் அலசப்
> >> பட்டன:
>

> >>http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/ab0f9cdd...
>
> >>http://indianhistoriographymethodology.wordpress.com/2009/10/24/


> >> தமிழக-சமச்சீர்-கல்விமுறை/
>
> >> 24-10-2009 அன்றேhttp://www.pallikalvi.in/ல் எனது மேற்கண்ட பதிலை
> >> பதிசெய்தேன்.
>
> >> கார்த்திகேயன் என்பவரும் 01-12-2009 அன்று புதுக்கோட்டையிலிருந்து,
> >> அநத்தகைய பாட-அமைப்பு இந்துமதத்திற்கு எதிராக உள்ளது என்பதனை
> >> உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார்.
>
> >> உடனே அடுத்த நாளே, அமைச்சர் விளக்கத்துடன் வருகிறார்.
>
> >> இதிலிருந்தே தெரிகிறது, நாத்திக அரசு படிப்பை அரசியல் ஆக்குகிறது.
>
> >> இது நிச்சயமாக எல்லா கோணங்களிலும் மக்களுக்கு எதிரானதே, ஆகயால்
> >> எதிர்க்கப்ப்டவேண்டியது ஒன்று.
>
> --
> இன்னம்பூரான்
>

>  B06.gif
> < 1KViewDownload
>
>  B09.gif
> < 1KViewDownload
>
>  320.gif
> 1KViewDownload
>
>  B04.gif
> < 1KViewDownload
>
>  B05.gif
> < 1KViewDownload

Reply all
Reply to author
Forward
0 new messages