காசுமி
--
கடல்வெளி - The Inner Space of Kasumi Chan
http://kasumichan.wordpress.com/
வயிற்றில் சுமக்கும் சிசுவுடன்
வயக்காட்டில் வேலை செய்யும்
குடியானவள் பாவம்தான்.
ஈன்று தொப்புள் கொடி அறுபடும்
முன்னரே, ஓடத்தயாராக இருக்கும்
வனப்பசுவின் கன்றுக்கு ஆறுதல்
யார் சொல்வது?
இயங்கு!
என்பதுதான் ஆணை!
எதிர்ப்பேச்சு கேட்கமுடியாமல்
சுழன்று கொண்டிருக்கும்
மானுட வாழ்வு அலுப்புத்தருகிறது.
இறந்து பட்டுப்போனாலும்
பேயாய் அலையும் கவலை.
இயங்கா இருக்கும் நிலையில்
இந்திரன் இமையாமல் இருப்பான்
எனினும் சலனமுறும் மனது
குறித்து ஆயிரம் கதைகள் அங்கு.
இயக்கமற்ற போதென்று ஏதேனும்
இருந்தால் சொல்லுங்கள்
கொஞ்சம் இளைப்பாற.
காசுமி
> காசுமி! மனத்தின் பழக்கத்தைப் பார்த்தீரா? இயக்கமற்ற போது
> என்று கேட்டுவிட்டு, அங்கும் இளைப்பாற என்று ஒரு இயக்கத்தை
> மூட்டைகட்டிக்கொண்டு போகிறது பாருங்கள்.!!
>
அட! உண்மைதானே! இளைப்பாறுதலும் ஒரு செயல்தானே. அப்போதும் இதயம் `லபக்,
டபக்`, மூச்சு, `உஸ்,புஸ்` ம்ம்ம்
காலம் என்பதுதான் இயக்கத்திற்கு பொருள் தருவதோ?
காலம் என்பதே மனத்தின் செயற்பாடுதானே?
இயற்கையில் மாற்றங்கள் மட்டுமே உள்ளன. அதைப் பகுத்தறியும் மனம்
அதிலிருந்து பருவங்களை உருவாக்கி, ஆண்டுகள், மாதங்கள், நாட்கள்,மணி,
நிமிடம், என்று பகுத்துக்கொண்டே போய் `காலத்தை` ஸ்தூலமாக உருவாக்கி நம்
வாழ்க்கையை கட்டி விடுகிறது. [என்ன செய்வதென்று தெரியவில்லை!
காலத்தைக்கொல்ல சினிமாவிற்கு வந்தேன்!]
காலத்தை எப்படிக் கொல்வது (to kill the time)?
காலம் அழிந்துபட்டால், `இயக்க உணர்வும்` அழிந்து படுமா?
காசுமி
> அதனால்தான் எங்கள் சிரபுரத்தான் வெண்பா கூறுகிறது--
>
> சும்மா இருக்கச் சுகம் உதயம் ஆகுமே;
> இம்மாயா யோகம் இனி ஏதடா? --
> தம்மறிவின் சுட்டாலே ஆகுமோ?
> சொல்ல வேண்டாம்;
> கன்ம நிஷ்டா;
> சிறுபிள்ளாய் நீ1
>
> >
>
--
National Geographic, BBC ஆவணப்படங்கள் பார்த்தால் அடிக்கடி வரும்
காட்சி. திறந்தவெளியில் கன்று ஈனும் காட்சி. திறந்த வெளி என்பதால்
பசியுள்ள மிருகங்கள் உணவுதேடி அலைந்து கொண்டு இருக்கும் வாய்ப்பதிகம்.
எனவே பிறந்த சில நிமிடங்களில் அக்கன்று எழுந்து நின்று தாயுடன்
ஓடத்தயாராக வேண்டும். 'இயங்கு என்பதே ஆணை'. வேறு மாதிரி எப்படியும் இதைச்
சொல்லமுடியாது. ஆங்கிலத்தில் wild beast என்ற பொதுச்சொல்லில்
இம்மிருகங்களை விளிக்கின்றனர்.
வனப்பசு அழகாக உள்ளது.
காசுமி