தமிழ் மொழியைக் - கற்பிப்பதும் கற்றுக் கொள்வதும் எப்படி?

803 views
Skip to first unread message

T Kumar

unread,
Feb 17, 2010, 8:45:23 AM2/17/10
to mint...@googlegroups.com
தமிழ் மொழியைக்

கற்பிப்பதும் கற்றுக் கொள்வதும் எப்படி?


தமிழ்மொழி கற்பது கடினம் என்பது ஒரு பரவலான எண்ணம் பலரிடம் பரவி இருக்கிறது. தமிழ் கற்பதற்கு அந்த நாட்டிலே வசித்திருக்க வேண்டும் எனவும பலர் கருதுகிறார்கள். தமிழன் அல்லாதோர் தமிழ் கற்பது கடினம் என்பது பலரின் எண்ணம். இந்த எண்ணம் எதற்காக? இது ஒரு மொழியைக் கற்பிப்பது கற்பது பற்றிய முழுச் செயல்பாடுகளை அறியாததன் காரணமே இதற்குக் காரணம் ஆகும்.

வருங்கால நமது சமுதாயம் தொடர்ந்தும் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தமிழை இந்நாட்டில் கற்பிக்கும் வழிமுறைகளை நாம் பல வழிகளில் மாற்றி அமைக்க வேண்டும். ஏனைய ஐரோப்பிய மொழிகளை நம் குழந்தைகள் இங்கு கற்கும் போது நம் தமிழை அவர்கள் கற்கப் பின்வாங்குவதன் காரணம் என்ன? ஆங்கில மொழியை ஏனைய ஐரோப்பிய மொழிகளைக் கற்பிப்பதற்குப் பல புதிய அணுகுமுறைகளை இந்த நாட்டில் கையாளுகிறார்கள். ஆண்டாண்டு புதிய வழிமுறைகளையும் பழையனவற்றை நீக்கியும் நடைமுறைப்படுத்துகிறார்கள். மிக எளிமையாக ஆங்கில ஐரோப்பிய மொழிகளைக் கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் என நான்கு வகையாகப் பிரித்துக் கற்றுக் கொடுக்கிறார்கள். தமிழைக் கற்பிக்கும் வழிமுறைகளை எளிமையாக்கினால் தமிழ் கற்பது ஒரு எளிமையானது எனக் கருதப்படும்.

ஒரு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்கு அதற்கு ஏற்ற சூழ்நிலையை வகுப்பறையில் உண்டாக்க வேண்டும். ஆசிரியரும் மாணவரும் கலந்து பழகும் சூழல் இருக்க வேண்டும். தொடக்கத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் ஆர்வம் ஊற்சாகம் ஊட்டக்கூடிய வகையில் தமிழ்மொழி கற்பிப்பது இருந்திருக்க வில்லை. அப்போதைய பாடத்திட்டத்தில் இலக்கணத்திற்கும், செய்யுளுக்கும் தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மொழியைக் கற்பிப்பதற்கான பயிற்சியைப் பலர் பெற்றிருக்கவில்லை. கற்பிக்கப் பயன்படுத்தப்படும் புத்தகங்களும் அதற்கு ஏற்ற வகையில் இருந்திருக்கவில்லை. இன்று பல வர்ணங்களில் பல தமிழ்ப் பாடப்புத்தகங்கள் தமிழ் கற்பிப்பதற்கு வந்திருக்கின்றன. பல குறுந்தட்டுகள் தமிழ் கற்பிப்பதற்கு இன்று கிடைக்கப்படுகிறது. பல் புதிய தொழில் நுட்ப வழிவகைகள் அவற்றில் கையாளப் பட்டிருக்கிறது. இங்குள்ள வார இறுதித் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியப் பயிற்சிப் பட்டடையில் சேர்ந்து தற்கால இந்நாட்டு மொழி கற்பிக்கும் வழி முறைகளைப் பயில வேண்டும்.

இன்று இணையதளத்தில் தமிழ் பாடம் என்று தேடும் பொழுது வரும் இணைய தளங்கள் பலதைக் காணலாம். அன்று பாரதி கண்ட தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கனவு இன்று உலகின் பல பாகங்களில் வெற்றிகரமாக வந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் பல சர்வகலாசாலைகளில் தமிழ் மொழியை ஏனைய மொழிகள் போல் கற்றுத் தேற வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைக் கல்வி மூலம் கற்கும் வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இங்கிலாந்தில் அவ்வாறு தற்போது இல்லை. ஆனால் இந்த ஆண்டு 2006 செப்டம்பரில் இருந்து தமிழ் மொழிக்கென ஒரு பாடத்திட்டம் ஏனைய ஆசிய ஐரோப்பிய மொழிகளில் இருப்பது போன்று தேசிய மொழிச் சபையால் (National Language Centre) வெளியிடப்பட இருக்கிறது. அத்தோடு - தேர்வுப் பகுதியினரால் முதன் முதலாக Break through level தேர்வும் தயார் செய்யப் பட்டுள்ளது. இதில் கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் ஆகிய நான்கு பகுதிகளிலும் ஒரு மாணவன் தேர்வு எழுதலாம். அத்தோடு இந்த நான்கு பகுதிகளில ஒரு மாணவன் ஒன்றில் ஆற்றல் உள்ளவராக இருந்தால் அதில் மேற்கொண்டு முன்னேற ஆக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. இததமிழ் பாடத்திட்டம் ஏனைய மொழிகளுக்குச் சமமாக உள்ளது. 9 தரமாக இப்பாடத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது, வயதை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட வில்லை.

தரததை அடிப்படையாகக் கொண்டே இது பிரிக்கப்பட்டுள்ளது. எந்த வயதிலும் எந்தத் தரத்திலும் சேர்ந்து அதற்கான பாடத்திட்டத்தை எடுத்துக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தரமும் நிறைவு செய்ததும் அதற்கான தேர்வு உண்டு. அதற்கான தராதரப் பத்திரமும் தேர்வுத் துறையினரால் வழங்கப்படும்.

இந்த நாட்டில் வார இறுதித் தமிழ் பள்ளிகளில் பழைய வழிமுறையினை தமிழ் கற்பிக்கப் பயன்படுத்துவது கவலைக்குரியதாக உள்ளது. இவர்களுக்கு ஏற்ற மொழிகற்பிக்கும் ஆசிரியப் பயிற்சிப் பட்டடைகள் இல்லாதது ஒரு காரணம். இந்நாட்டில் மொழிகற்பிக்கும் வழிமுறைகளைத் தெரிந்திருக்காதது இன்னும் ஒரு காரணம். கற்றுக் கொள்வதில் பல முக்கிய காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தெளிவாக ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.

குழந்தைகளும் தன் தாய்மொழியை எவ்வாறு கற்றுக் கொள்கிறது என்பதையும் ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.

மொழியைக் கற்றுக் கொடுப்பதில் பல நிலைகள் உண்டு.

மொழியில் இருக்கும் சொற்களைப் புரிந்து கொள்ளுதல்

இயல்பாகப் பேசுபவர் போல் அந்த மொழியைப் பேசப் பழக முயற்சிக்க வேண்டும்.

ஓர் எழுத்து, ஈரெழுத்துச் சொற்களை உருவாக்க அடிப்படை இலக்கண விதிமுறைகள் விதிகள் ஆகியவற்றிற்கு ஏற்பக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒரு குழந்தையின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான அறிவினை குழந்தைகளுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எழுத்துக் கூட்டி அந்த எழுத்தின் ஓசையுடன உச்சிரிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.(ஆய்வின்படி இது சிறந்த முறை எனக் காணப்பட்டு தற்பொழுது 2006 இந்நாட்டில் ஒலியுடன் சொற்களை உச்சரித்து எழுத்துக் கூட்டப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது)

எளிமையான சொற்களை எழுதப்பழக்குதல். இந்தச் சொற்களை அவர்கள் அன்றாடம் பேசப்படும் நிகழ்வுகளுக்கு ஏற்ற்தாக இருக்க வேண்டும்.

அதைக் கற்பிக்கும் போது அதற்கான படங்களை அல்லது வீடியோ காட்சி மூலம் காண்பித்துக் காட்டலாம். ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பார்கள். சொற்களைப் படங்களுடன் இணைத்துக் காண்பித்துக் கற்பிக்க வேண்டும். சிறு பத்தியினை வாசித்து அவர்களே கேள்விகளை உருவாக்கி அவர்களே பதில் சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

கற்பிப்பதில் பல அணுகுமுறைகள் உண்டு. ஒவ்வொன்றும் அந்த அந்த வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ப அமைக்க வேண்டியது அந்த ஆசிரியரின் பொறுப்பாகும்.

எமது வார இறுதிப் பள்ளிகளில் தொடர்ந்து ஒரு தமிழ் ஆசிரியர் இருப்பது குறைவு. ஆகையினால் பாடத்திட்டம், தினமும் கற்பிக்கும் நிலை என்பது எமது வார இறுதித் தமிழ்ப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட வேண்டும். இதனால் தொடர்ந்து கற்கும் மாணவர்கள் முன்னேற வசதி உண்டு.

ஒரு மொழியை ஒருவர் அறிந்திருந்தால் அந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த நாட்டில் பிறந்த குழந்தைகள் ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் ஆகையால் அதை அடிப்படையாக வைத்துத் தமிழைக் கற்றுக் கொடுக்கலாம்.

தமிழ் மொழியைக் கற்றுக் கொடுப்பதற்குக் கணினியை உபயோகப் படுத்துவது மிக உதவியாக இருக்கும். முக்கியமாக ஒரு சொல்லின் உச்சரிப்பை அந்த நாட்டில் பிறந்த ஒருவரின் உச்சரிப்புடன் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த உச்சரிப்பை கணிணியில் பதிவு செய்து - சொற்களின் உச்சரிப்பை திரும்பத் திரும்ப குழந்தைகள் கேட்டுப் பழகுவதன் மூலம் சரியான உச்சரிப்பை அந்தக் குழந்தை பெற வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வழிவகை தமிழ் பாடம் இணையதளத்தில் நிறையப் பெறலாம். இல்லையேல் பாட ஆசிரியர் தத்தமது வகுப்பு மாணவர்களுக்குத் தாேம் ஏற்படுத்தி அதை உருவாக்கலாம்.

தற்போது யுனிகோட் மூலம் தமிழ் எழுத்துகள் கணிணியில் பதிவு செய்யும் வசதி இருப்பதால் கணிணியில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பது சுலபமாகிவிட்டது. தமிழ் கற்பிக்கும் இணயை தளங்கள் தற்போது யுனிகோட் முறைக்கு மாறியிருப்பதால் எல்லோரும் பயனடையக் கூடியதாக இருக்கிறது. ஆங்கிலம், தமிழ் சிங்கள அகராதியும் இணையத்தில் இப்போது கிடைக்கப்படுகிறது (http://www.bbc.co.uk/tamil) தமிழ் எழுத்துகளை எழுதிப் பழகுவதைக் காண்பிக்கும் இணையதளங்கள் பல உண்டு (http://www/kalvi.com)

தமிழைப் பாதுகாத்து அதைச் சரியான முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கற்பித்துக் கொடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும். இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள் ஆன்மீக உரைகள் நிறைய தமிழ் மொழியில் உண்டு. உலகளாவிய சந்தையில் தமிழ் தெரிந்தோர்களுக்கே வேலைவாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 

Regards
Kumar.T

N. Ganesan

unread,
Feb 17, 2010, 11:46:37 PM2/17/10
to மின்தமிழ்

நல்ல கட்டுரை, குமார். வாழ்த்துக்கள்.

> உலகளாவிய
> சந்தையில் தமிழ் தெரிந்தோர்களுக்கே வேலைவாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே
> வருகிறது.

செவிக்கினிய செய்தி.


தேவையில்லாமல் வடிவில் ஒழுங்கற்று, கற்கவும், நினைவில் நிறுத்தவும்
இடர்ப்பாடு தந்த எழுத்துக்களைச் சீர்திருத்தினோம்:
http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/S0HCkZwiOQI/AAAAAAAABD4/7favIzI-92I/s320/tamil+eluthu.gif

தமிழ் எழுத்துக்களை இன்னும் எளிமையாக்க இயலும்.
இப்போது ‘பாதிக் கிணறு தாண்டிய நிலை’ என்பார் அறிஞர் வா. செ.
குழந்தைசாமி.

சாதாரணர்களுக்காக ஏன் எளிய மாற்றம்
எழுத்தில் வேண்டும் என்கிறார் வா.செ.கு.:
http://video.google.co.uk/videoplay?docid=-6588419071760471274

இ,ஈ உயிர்மெய் கூட விட்டுவிடலாம். உ,ஊ உயிர்மெய் பிரித்தும்
படிக்க வசதி அரசு செய்யலாம். தமிழ்ப் புத்தாண்டு இரண்டு உள்ளது.
நடைமுறையில் தனித்தமிழ், கிரந்தத் தமிழ் உள்ளது.
இரண்டு விதமாக உ,ஊ உயிர்மெய் ஒரு இடைப்பட்ட காலத்தில்
இயங்கலாம்.

யூனிக்கோடு பற்றி எழுதியிருக்கிறீர்கள். பல்லாண்டுகளுக்கு
முன் அதன் டிசைன் (அடைவு) எனக்குப் பிடித்ததற்கு
சீர்மை முக்கிய காரணம். யூனிக்கோட் என்கோடிங்க்கில்
மட்டும் தான் ஃபாண்ட் மாற்றாமலே உ,ஊ உயிர்மெய்
சீர்மையிலோ, அன்றியிலோ படிக்கமுடியும் (உ-ம்:
குரோம் (அ) நெருப்புநரி உலாவி எக்ஸ்டென்சன் கொண்டு).
துழாவிகளில் சீர்மை (அ) பிணைபட்ட உ,ஊ உயிர்மெய்
இரண்டும் எடுக்கும்.

நா. கணேசன்


On Feb 17, 7:45 am, T Kumar <kumar.t...@gmail.com> wrote:
> தமிழ் மொழியைக்
>
> கற்பிப்பதும் கற்றுக் கொள்வதும் எப்படி?
>

> **

Innamburan Innamburan

unread,
Feb 18, 2010, 4:50:03 AM2/18/10
to mint...@googlegroups.com
மொழி கற்பிப்பதில், நான் சில புதிய முறைகளில் முனைந்திருக்கிறேன். பிறகு எழுதுகிறேன்.


 
2010/2/18 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இன்னம்பூரான்

விஜயராகவன்

unread,
Feb 18, 2010, 5:35:53 AM2/18/10
to மின்தமிழ்
A Tamil learner must first decide whether he wants to learn Spoken
Tamil or Written tamil. These two are different varieties, almost
different languages. Written Tamil has ben hijacked by Classical
Tamil, of Nannul, Tholkappiyam vintage.

Anyone learning only written language can never, never understand what
two Tamils are speaking , much less take part in the conversation


Vijayaraghavan

N. Kannan

unread,
Feb 18, 2010, 5:40:17 AM2/18/10
to mint...@googlegroups.com
To an extend Korean is like that. I struggle to comprehend that language.
Tamil is indeed a complex language, as it is old.
Probably, the foreign scholars of this forum should enlighten us.

Kannan

2010/2/18 விஜயராகவன் <vij...@gmail.com>:

விஜயராகவன்

unread,
Feb 18, 2010, 5:47:33 AM2/18/10
to மின்தமிழ்
On 18 Feb, 10:40, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> To an extend Korean is like that. I struggle to comprehend that language.
> Tamil is indeed a complex language, as it is old.
> Probably, the foreign scholars of this forum should enlighten us.
>
> Kannan

Tamil is no more complex than any other language. The prevailing
'linguistic culture' refuses to recognise that spoken Tamil has it's
own grammer and vocabulary which is far removed from classical Tamil
grammer. As per the prevailing 'linguistic culture', Archaic Tamil is
the True Tamil and the present day spoken Tamil is a corrupt variety
of it. You see the proponents of this backward looking culture at
every step and the Tamil literary and political Establishment keeps
paying obeisance to these proponents .


Vijayaraghavan

Tirumurti Vasudevan

unread,
Feb 18, 2010, 6:17:41 AM2/18/10
to mint...@googlegroups.com
குழந்தை போல கத்துக்கணும்.
முதலில் பேச. அப்புறம் படிக்க. அப்புறம்தான் தேவையானால் எழுத.....

2010/2/18 விஜயராகவன் <vij...@gmail.com>
Anyone learning only written language can never, never understand what

two Tamils are speaking , much less take part in the conversation



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

karthi

unread,
Feb 18, 2010, 6:36:03 AM2/18/10
to mint...@googlegroups.com
அன்பின் நா.க.,

வா.செ.கு. முன்வைக்கும் எழுத்துச் சீர்திருத்தம் எளியதுதான்.
போதனை முனையில் இதனை செயற்படுத்துவது எளிது.
கணினியிலும் புதிய எழுத்துருக்கள், குறியீடுகள் ஏற்படுத்துவது எளிதே.
(ஆனால் "மண்ணில் நடக்கும் தமிழ் விண்ணில் பறப்பதற்கு இறக்கை
கொடுப்பது போன்றது" என்பது மிகை. இது போன்ற மிகைகள் அவருடைய
presentationஇல் சில உள்ளன.)

ஆனால் அச்சுலகில் இது பெரும் traumaவை ஏற்படுத்தும். வழக்கமாகிப்போன
எழுத்துருக்களை மாற்ற அது தயாராய் இராது என்பதே என் ஊகம்.
அச்சிடும் முனையில் எழுத்துக்களை மாற்றுவது பெரிய வேலையில்லை.
வாசகனின் முனையில் ஏற்கா மனப்பான்மைதான் பெரிய தடையாக இருக்கும்.

அதோடு "கற்பது எளிது" என அவர் சொல்லுவது கையெழுத்து சார்ந்தது அல்லவா? ஆனால்
எதிர்காலத்தில் எத்தனை பேர் கையால் எழுதிக் கற்பார்கள்? இணையத்
தமிழ்ப் பலகலைக் கழகம் வழி ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகள்
தட்டச்சுப் பலகையை அல்லவா பயன் படுத்துவார்கள்? கையெழுத்து ஏன்?
ஆங்கிலத்திலேயே கையெழுத்தின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டதல்லவா?

பெரியார் செய்த சீர்திருத்தத்தின் போது கையால் எழுதுவது அதிகமாக
இருந்தது. இப்போது கையெழுத்தின் தேவை மிகவும் குறைந்து விட்டது.
ஆகவே பெரியார் காலத்தில் சீர்திருத்தத்திற்கு இருந்த முக்கியத்துவம் இப்போது
இல்லை.
கையால் எழுதாமல் தட்டச்சில் எழுதும் ஆரம்ப மாணவர்களுக்கு இது பெரும் மாற்றம்
அல்ல. அதிலும் ஆங்கில முறை தட்டச்சுப் பலகைப் பயன் படுத்துவோருக்கு
இது பிரச்சினையே அல்ல.

இரண்டாவதாக வா.செ.கு.வின் முயற்சி தமிழில் உள்ள உச்சரிப்புப் பிரச்சினைகளை
கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் உட்பட சிலரே மீக்குறிகளைப் பற்றிப்
பேசி வருகிறீர்கள். ஆனால் எழுத்துச் சீர்திருத்தத்தை விட இதுவே அவசியத் தேவை
என நான் கருதுகிறேன்.

ஒன்று செய்யுங்களேன். புதிய எழுத்துச் சீர்திருத்தத்தையும் மீக்குறிகளையும்
பழக்கப்
படுத்துவதற்கு சோதனை முறையில் ஒரு வலைத்தளம் உருவாக்குங்கள்.
அதில் தொடர்ந்து நடப்பு விவகாரக் கட்டுரைகளை (கொஞ்சமாகவேனும்) எழுதி
வாருங்கள். ஒரு வேளை பழக்கப்பட பழக்கப்பட மதம் மாறுவோர் எண்ணிக்கை
அதிகரிக்கலாம்.

நான் அப்படி மாற அநேகமாகத் தயாராக இருக்கிறேன்.முக்கியமாக மீக்குறிகளைப்
பயன்படுத்துவதில்.

ரெ.கா.

விஜயராகவன்

unread,
Feb 18, 2010, 7:24:56 AM2/18/10
to மின்தமிழ்
On 18 Feb, 10:40, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> Probably, the foreign scholars of this forum should enlighten us.
>
> Kannan


One scholor who has spent 50 years in Tamil, Dravidian linguistics,
language change, anthropology, diglossia, etc is Harold Schiffman

http://ccat.sas.upenn.edu/~haroldfs/


Vijayaraghavan

N. Ganesan

unread,
Feb 18, 2010, 8:36:37 AM2/18/10
to மின்தமிழ்

Harold Schiffman is Vasu Renganathan's professor when Vasu was a
student in Seattle, WA.
Dr. Vasu is Chair of Conference Program Committee for INFITT Tamil
Internet Conference 2010
at Coimbatore. The final date for receiving paper abstracts fof TIC
2010 is extended up to end
of March. Hope interesting papers are received from colleges, esp. in
Tamil Nadu.

Coming back to Spoken Tamil, Harold will be happy to see diacritic
marks are used
to write whatever is necessary (e.g., enunciative vowels, schwa) in
Tamil script.
If experts like Jean-Luc Chevillard, Vasu R., Harold S., give
guidelines on the
proper diacritics, and how many are essential, Tamil IT community can
proceed.
For example, Renganathan, Jeyakanthan, ... the *e* in the first
syllable is schwa
- there must be papers on schwa in Tamil words & their locations.

N. Ganesan

N. Ganesan

unread,
Feb 18, 2010, 8:59:02 AM2/18/10
to மின்தமிழ்

ரெ. கா.,

(அ) உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன். வாசெகு சொல்லும் இ, ஈ மாற்றம்
தேவையில்லை. எத்தனையோ எழுத்துக்கள் இரண்டு கோடுகளுக்குக் கீழே உள்ளன:
த, ற, ஞ, ந, ழ, ஜ, ஹ, ஷ, ... இதற்கு ஒரு சமனை, இரண்டு கோட்டுக்கு மேலே
உள்ள இ, ஈ உயிர்மெய் கொக்கிகள் அளிக்கின்றன. அவற்றைப் பிரிப்பதால்
வரிநீளம்
அதிகம் ஆவதைத் தவிரப் பலன் காணோம். பெரியார் சொன்னதாலோ என்னவோ
இன்னும் சொல்கிறார். எழுத்துச் சீர்மையை எதிர்க்கும் பலரைப்
பார்த்தீர்களானால்
கிரந்த எதிர்ப்பாளர்கள். அவர்கள் ஜ, ஹ, ஷ, ஸ பயன்படுத்தாதது மாத்திரம்
அல்ல,
அதற்கு எவ்வாறு உ, ஊ உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளன என்றும் பேசுவதில்லை.
33 மெய்யெழுத்துக்கும் அவ்வாறே. எனவே, உ, ஊ உயிர்மெய் உடைத்தல்
தமிழர்க்கு ஒன்றும் புதிதல்ல. தமிழே இதனால் போய்விடும் என்பதெல்லாம்
வெறும் கதை என்று கருதுகிறேன். இரண்டு உபகுறியீடுகளை கற்பது
என்ன பெரிய வேலையா?

கல்வெட்டுக்களில் பார்த்தீர்களானால், நெடுங்காலம் கெ, ஙெ, செ, ...
இவற்றில்
ஒற்றைச்சுழிக் கொம்பு மெய்யுடன் ஒட்டியே கிடந்தது. பிறகுதான்
பிரிக்கப்பட்டது.
காந்தளகம் சச்சிதானந்தம் ஐயா சொல்வதுபோல், இனி உ, ஊ உயிர்மெய்யும்
பிரிக்கலாம்.
ஒற்றைச் சுழிக்கொம்பு, இரட்டைச் சுழிக் கொம்பு மெய்யில் இருந்து
பிரித்தாற்போல.
பழைய சிக்கலான முறைக்குச் செல்லவேண்டும் என்கிறார் ஓகை.
அதற்கு அரசாங்கம் விடாது.

(ஆ) பேச்சுத் தமிழ், வேத சுரக் குறிகள், அயல்மொழி எழுத்துக்களில்
முக்கியமானவற்றைக்
காட்டப் பயன்படும் மீக்குறிகள் ‘எழுத்துச் சீர்திருத்தத்தை’ விட அன்றாட
வாழ்வில்
அவசியமானவை. In mathematics, we always study about the limits:
one limit is to use all Grantha letters (BTW, full Grantha will be
available in computers & web)
for foreign sounds, on the other hand, following Western (& IPA)
diacritics gives another viable
approach to denote foreign sounds, spoken Tamil, etc., is also
possible. Our job is
to enable Tamil script capable of both. Let the user decide. At least
in dictionaries, spoken Tamil teaching manuals,
etc., we need good diacritics on Tamil letters. I will mention all
these in my forthcoming paper
in World Classical Tamil Conference at Kovai. M. Annadurai,
Chandrayaan Proect Director
recently met CM. M. Karunanidhi & MA said to CM about my visit &
paper, he told me.

நா. கணேசன்


> ரெ.கா.
>
>
>
> ----- Original Message -----
> From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
> To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
> Sent: Thursday, February 18, 2010 12:46 PM
> Subject: [MinTamil] Re: தமிழ் மொழியைக் - கற்பிப்பதும் கற்றுக் கொள்வதும்
>
> எப்படி?
>
> > நல்ல கட்டுரை, குமார். வாழ்த்துக்கள்.
>
> >> உலகளாவிய
> >> சந்தையில் தமிழ் தெரிந்தோர்களுக்கே வேலைவாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே
> >> வருகிறது.
>
> > செவிக்கினிய செய்தி.
>
> > தேவையில்லாமல் வடிவில் ஒழுங்கற்று, கற்கவும், நினைவில் நிறுத்தவும்
> > இடர்ப்பாடு தந்த எழுத்துக்களைச் சீர்திருத்தினோம்:

> >http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/S0HCkZwiOQI/AAAAAAAABD4/7favIzI...

> ...
>
> read more »

விஜயராகவன்

unread,
Feb 18, 2010, 9:04:01 AM2/18/10
to மின்தமிழ்
Is HS also taking part in Kovai conference and making a presentation?

Vijayaraghavan

பொள்ளாச்சி நசன் - www.thamizham.net பேச:(04259)221278 அலைபேசி : 9788552061, 9842002957

unread,
Feb 18, 2010, 9:22:10 AM2/18/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பரே 
வணக்கம்
தமிழை எளிமையாகக் கற்பிப்பதற்காக 
அனைத்தையும் உருவாக்கி வைத்துள்ளேன் 
3 மாதத்தில் யார் வேண்டுமானாலும் 
தமிழ் செய்தித்தாளைப் படிக்கலாம்
(தமிழ் பேசத் தெரிந்தவர்களுக்க உதவும்) 
தமிழ் பேசத்தெரியாதவர்களுக்கு அகராதி வழி 
நடத்தி செய்தியை கற்பிக்க வேண்டும் 
கற்போர் அணியமாக இருந்தால் 
கற்பிக்க என்றும் காத்திருக்கிறேன் 
வாழ்த்துகளுடன் 
பொள்ளாச்சி நசன் 

18 பிப்ரவரி, 2010 7:34 pm அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
பொள்ளாச்சி நசன்
பேச: 9788552061 இணையம்: www.thamizham.net

srirangammohanarangan v

unread,
Feb 18, 2010, 9:32:59 AM2/18/10
to mint...@googlegroups.com
வணக்கம்    திரு  நசன்.     நல்ல   எண்ணம்.   மின் தமிழில்   தமிழைக்  கற்பிக்கக்  கேட்கவும்  வேண்டுமா?   செய்யுங்கள்.  காத்திருக்கிறோம்.     ஏற்கனவே     திரு  திருவேங்கடமணி   அவர்கள்    வகுப்பும்  நடந்துகொண்டிருக்கிறது.    ஆம்   அந்த  வகுப்பு  ஏன்     வெகுநாளாகக்  காணவில்லை.     ஐயா  மணி  அவர்களே!     நாங்கள்  எல்லாம்  கொஞ்சம்     விஷமம்   செய்யும்   பையன்கள்.     அவ்வப்பொழுது    வகுப்பைக்   கட்  அடித்துவிட்டு  அங்கு  இங்கு  சுற்றிக்கொண்டு  இருப்போம்.     கோபப்படாம    மீண்டும்     தொடருங்க.    பாருங்க   திரு  நசன்  அவர்களும்     வந்துட்டாங்க.   இருவரும்     ’நற்றமிழை    வித்தி’    என்ற   திருமழிசையாரின்    வாக்கை    நடைமுறையாக்குங்கள். 
:--)))))

 

N. Ganesan

unread,
Feb 18, 2010, 10:09:38 AM2/18/10
to மின்தமிழ்

On Feb 18, 5:36 am, "karthi" <karthige...@gmail.com> wrote:

> அன்பின் நா.க.,
>
> வா.செ.கு. முன்வைக்கும் எழுத்துச் சீர்திருத்தம் எளியதுதான்.
> போதனை முனையில் இதனை செயற்படுத்துவது எளிது.
> கணினியிலும் புதிய எழுத்துருக்கள், குறியீடுகள் ஏற்படுத்துவது எளிதே.
> (ஆனால் "மண்ணில் நடக்கும் தமிழ் விண்ணில் பறப்பதற்கு இறக்கை
> கொடுப்பது போன்றது" என்பது மிகை. இது போன்ற மிகைகள் அவருடைய
> presentationஇல் சில உள்ளன.)
>
> ஆனால் அச்சுலகில் இது பெரும் traumaவை ஏற்படுத்தும்.  வழக்கமாகிப்போன
> எழுத்துருக்களை மாற்ற அது தயாராய் இராது என்பதே என் ஊகம்.
> அச்சிடும் முனையில் எழுத்துக்களை மாற்றுவது பெரிய வேலையில்லை.
> வாசகனின் முனையில் ஏற்கா மனப்பான்மைதான் பெரிய தடையாக இருக்கும்.
>

தமிழ் வள்ளுவர் புத்தாண்டு போன்ற அரசாங்க திட்டங்களைப் பாருங்கள்.
அரசாங்கம் எல்லா ஜாதியாரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிறது.
அவற்றை நடைமுறைப் படுத்தவும் சில குழுக்கள் முனைப்புடன் இயங்குகின்றன.

அரசாங்கம் இவ்வாறும் கற்கலாம், கற்பிக்கலாம் என்னும் நிலையை
ஏற்படுத்த முடியும். உ-ம்: பழைய றா,ணா, ... வடிவங்கள் போனால்
குடிமுழுகிவிடும் என்றனர் சிலர். அதேபோல், மலையாளத்தில்
உ,ஊ உயிர்மெய்யை அரசு சூரநாடு குஞ்ஞன்பிள்ளை பரிந்துரையால்
பிரித்து எழுத ஏற்பாடு செய்தது. இன்றும் பள்ளிகளில், பத்திரிகைகளில்
மலையாளம் அவ்வாறே அச்சாகிறது.

நா. கணேசன்

> அதோடு "கற்பது எளிது" என அவர் சொல்லுவது கையெழுத்து சார்ந்தது அல்லவா? ஆனால்

> >http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/S0HCkZwiOQI/AAAAAAAABD4/7favIzI...

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Subashini Tremmel

unread,
Feb 18, 2010, 11:55:17 AM2/18/10
to mint...@googlegroups.com
ஆமாம் என்று நினைக்கிறேன். இவரது பெயரை அயலக அரிஞர்கள் பட்டியலில் ஒரு செய்தியில் பார்த்த ஞாபகம்.
-சுபா

2010/2/18 விஜயராகவன் <vij...@gmail.com>
Is HS also taking part in Kovai conference and making a presentation?

Vijayaraghavan

Subashini Tremmel

unread,
Feb 18, 2010, 12:05:24 PM2/18/10
to mint...@googlegroups.com
ஐரோப்பாவில் அதிலும் குறிப்பாக புகலிடத் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கல்வி என்பதை தமிழாலயம் மிகச் சிறப்பாக செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் திறமையான பாடத்திட்டம் அர்ப்பணிப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை.  ஆனால் எந்த அளவுக்கு கணினி பயன்பாட்டில் உள்ளது என்பது தெரியவில்லை.   சிவா பிள்ளை(லண்டன்) பள்ளி பாட போதனையின் போதே தமிழ் கற்றுத் தரும் முழு பாடத் திட்டத்தை வகுத்துத் தந்து அது தற்போது இங்கிலாந்தின் ஏற்றுக் கொள்ள்ப்பட்ட பாடத்திட்டமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
மலேசியாவில் முன்னர் நான் கனினி மென்பொருட்களின் வழி தமிழ் என்ற சில முயற்சிகளைச் செய்த அனுபவம் உண்டு. கற்றல் மிக எளிமையாக  நடைபெறுவதையும் மாணவர்கள் தமிழ் எழுத்துக்கள் வார்த்தைகளை ஆர்வத்துடனும் கற்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன்.
 
-சுபா
2010/2/17 T Kumar <kumar...@gmail.com>

N. Ganesan

unread,
Feb 18, 2010, 4:07:10 PM2/18/10
to மின்தமிழ்

On Feb 18, 8:04 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> Is HS also taking part in Kovai conference and making a presentation?
>

For health reasons, Harold is not coming to Kovai.

NG

srikanth

unread,
Mar 5, 2010, 1:23:17 PM3/5/10
to மின்தமிழ்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை

யூனிகோடு மூலம் அறிஞர்கள் வலியுறுத்தும் எழுத்துச் சீர்திருத்தத்தை உடனே
நிறுவ இயலும் என்கிறார் அங்கிங்கு எனாதபடி வலை எங்கும் நிறைந்திருக்கும்
"எலியப்பர் மேல் ஏறிவரும் ஒலியப்பர்" மரபுச்செல்வர்.

http://kural.blogspot.com/2010/03/blog-post.html

மேலே படியுங்கள் மணிவண்ணன் எழுதியிருக்கும் கட்டுரையை

வேடிக்கையான கட்டுரை - ஆனால் மனது எங்கோ பாரமாக இருக்கிறது

CS

Reply all
Reply to author
Forward
0 new messages